All Activity
- Past hour
-
ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ‘மகிழ்ச்சி அளிக்கவில்லை’ – ட்ரம்ப் கருத்து
அனேகமாக…. இரண்டு, மூன்று நாட்களுக்குள் சண்டை தொடங்கும் போலுள்ளது. யார்… நல்லாய் அடிக்கிறான் என்று, “பொப்கோர்ன்” சாப்பிட்டுக்கொண்டு பார்ப்போம்.
-
பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை
பிரான்ஸ் பாண் தயாரிப்பில்… முதலிடம் பெற்ற ஜெகதீபனுக்கு வாழ்த்துக்கள். முன்பும் ஒரு தமிழர் பாண் தயாரிப்பில் முதல் இடம் பெற்று இருந்தவர். தமிழர்கள் வெளிநாடுகளில்… சிறந்த பாண்களை தயாரித்து பரிசு வாங்க…. உள்ளூரில் நமக்கு சிங்களவன் பேக்கரி நடத்தி பாண் விற்கிறான். இதே… திறமையை, ஊரில் உள்ள தமிழர்களால் ஏன், செய்ய முடியாது உள்ளது. அங்கு பேக்கரி நடத்தினால்…. சனம் “புறணி” கதைக்கும் என்ற பயத்தில், பலரும் பாண் தயாரிக்க பஞ்சிப் படுகிறார்கள் போலுள்ளது.
-
ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம்
ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம் Published By: Vishnu 28 Feb, 2026 | 05:27 AM ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான மோதல் அபாயம் அதிகரித்துள்ள நிலையில், பிரிட்டிஷ் உள்ளிட்ட பல நாடுகள் தங்கள் இராஜதந்திர அதிகாரிகள் மற்றும் குடிமக்களை பிராந்தியத்திலிருந்து திரும்பப் பெற நடவடிக்கை எடுத்துள்ளன. ஈரானிலுள்ள பிரிட்டிஷ் தூதரக ஊழியர்கள் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, அத்தியாவசிய தேவைகளைத் தவிர இஸ்ரேலுக்கு பயணம் செய்ய வேண்டாம் என பிரிட்டன் தனது குடிமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் அவசரகாலம் அல்லாத பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி வழங்கியுள்ளது. மேலும், சீனா, இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளும் பாதுகாப்பு காரணங்களால் ஈரானில் வசிக்கும் தங்கள் குடிமக்களை விரைவில் வெளியேறுமாறு அறிவித்துள்ளது. ஈரான் - இஸ்ரேல் பதற்றம்: பிரிட்டிஷ் உட்பட பல நாடுகளின் தூதரக ஊழியர்கள், குடிமக்கள் வெளியேற்றம்
-
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம் Feb 27, 2026 - 10:19 PM இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, இன்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தின் முன்பாக உள்ள கொடிமரத்தில், புனித அந்தோனியாரின் திருவுருவம் பொறிக்கப்பட்ட கொடி ஏற்றப்பட்டது. நெடுந்தீவு பங்குத்தந்தை பத்திநாதன் கலந்துகொண்டு, திருவிழாக் கொடியினை ஏற்றிவைத்து விழாவைத் தொடக்கி வைத்தார். கொடியேற்றத்தைத் தொடர்ந்து, யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தைகள் கலந்துகொண்டு விசேட கூட்டுப் பிரார்த்தனைகளை முன்னெடுத்து வருகின்றனர். கடல் கடந்த பக்தர்களை ஒன்றிணைக்கும் இந்தத் திருவிழா, இரு நாட்டு மக்களிடையேயான நல்லுறவின் அடையாளமாக இன்றும் போற்றப்படுகிறது. -யாழ். நிருபர் பிரதீபன்- கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பம்
- Today
-
ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ‘மகிழ்ச்சி அளிக்கவில்லை’ – ட்ரம்ப் கருத்து
ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை ‘மகிழ்ச்சி அளிக்கவில்லை’ – ட்ரம்ப் கருத்து February 28, 2026 ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப் கூறியுள்ளார், ஆனால் அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்துவதா என்பது குறித்து தான் இன்னும் முடிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார். “நாங்கள் பெற வேண்டியதை அவர்கள் எங்களுக்கு வழங்கத் தயாராக இல்லை என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. எனவே எனக்கு இதில் ஆர்வமும் இல்லை,” என்று வியாழக்கிழமை (பிப்ரவரி 26) ஒப்பந்தம் ஏதுமின்றி முறிந்த ஜெனீவா பேச்சுவார்த்தைகள் குறித்த தனது கருத்தை டிரம்ப் கூறினார். ஈரானுக்கு எதிராக ராணுவ பலத்தைப் பயன்படுத்த தான் விரும்பவில்லை என்று அமெரிக்க அதிபர் வலியுறுத்தினார், ஆனால் “சில சமயங்களில் நான் அதைச் செய்ய வேண்டிய நிலை வரும்” என்று கூறினார். ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதல்கள் குறித்த கவலை, வெள்ளிக்கிழமை அன்று பல நாடுகள் இப்பகுதியில் உள்ள தங்கள் குடிமக்களுக்கு எச்சரிக்கைகளை வழங்க வழிவகுத்தது. பிரிட்டன் தற்காலிகமாக தெஹ்ரானில் உள்ள தனது தூதரகத்தில் இருந்து பணியாளர்களைத் திரும்பப் பெற்றது மற்றும் இஸ்ரேலுக்கு “அத்தியாவசியப் பயணத்தைத் தவிர மற்ற அனைத்தையும்” தவிர்க்குமாறு பயண வழிகாட்டுதலை வெளியிட்டது. சீனா, இந்தியா மற்றும் கனடா உள்ளிட்ட நாடுகள், நிலைமை மோசமடையக்கூடும் என்பதால் தங்கள் குடிமக்களை ஈரானை விட்டு விரைவாக வெளியேறுமாறு வலியுறுத்தின. ஜெர்மனி இஸ்ரேலுக்கான பயணத்திற்கு எதிரான அறிவுறுத்தல்களை அவசரமாக வழங்கியது. இதற்கிடையில், ஈரானில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அமெரிக்கா வலியுறுத்தியது. இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகமும், அதன் அவசரகால பணியாளர்கள் தவிர்த்து சில பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று கூறியது. இரான் அணுசக்தி திட்டங்கள் குறித்து ஒரு ஒப்பந்தத்தை எட்டாவிட்டால், அதற்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்போவதாக டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். www.ilakku.orgஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை 'மகிழ்ச்சி அளிக்கவில்லை' -...ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்த சமீபத்திய பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, தான் ஈரான் தொடர்பான விவகாரத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்று அதிபர் டிரம்ப்
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் Feb 27, 2026 - 11:08 PM ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவை 90 நாட்கள் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுரேஷ் சலே கடந்த புதன்கிழமை (25) முற்பகல் பேலியகொடையில் அமைந்துள்ள தனியார் நிறுவனம் ஒன்றிற்கு வேலைக்காகச் சென்றுகொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டார். சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்
-
பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை
பாரிஸின் சிறந்த பேக்கர் 2026 : இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட ஜெகதீபன் சாதனை 28 Feb, 2026 | 10:03 AM பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் கடந்த வியாழக்கிழமை (26) நடைபெற்ற 2026-ஆம் ஆண்டிற்கான பாரிஸின் சிறந்த பாரம்பரிய பிரஞ்சு பேக்கர் போட்டியில் இலங்கையில் பிறந்த 43 வயதான பேக்கர் (Baker) சீதம்பரப்பிள்ளை ஜெகதீபன், வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். முதல் முறையாக இப்போட்டியில் பங்கேற்ற அவர், 142 போட்டியாளர்கள் மத்தியில் இந்த சாதனையைப் படைத்துள்ளார். பாரிஸ் துணை மேயர் நிக்கோலஸ் பொன்னட் ஓலால்ட்ஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், மொத்தம் 143 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். பாரிஸின் 14-வது வட்டாரத்தில் (14th arrondissement), 103 ரூ டிடோ (103 Rue Didot) என்ற முகவரியில் அமைந்துள்ள இவரது 'ஃபூர்னில் டிடோ' (Fournil Didot) பேக்கரிக்கு இந்தப் பெருமை கிடைத்துள்ளது. இந்த வெற்றிக்காக அவருக்கு €4,000 (சுமார் 13 இலட்சம் இலங்கை ரூபாய்) பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அத்துடன், அடுத்த ஓராண்டிற்கு பிரான்ஸ் ஜனாதியின் உத்தியோகபூர்வ இல்லமான எலிசி அரண்மனைக்கு (Élysée Palace) பேக்கட் ரொட்டிகளை வழங்கும் கௌரவமான ஒப்பந்தமும் அவருக்கு கிடைத்துள்ளது. வெற்றிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, ஜெகதீபனின் கடைக்கு வாடிக்கையாளர்கள் படையெடுத்து வருகின்றனர். ஒரு புலம்பெயர்ந்த தமிழரின் கடின உழைப்பு, பாரிஸின் பாரம்பரிய அடையாளத்தில் ஒரு காவியமாக மாறியுள்ளதாகப் பாராட்டுகள் குவிகின்றன. இதற்கு முன்னதாக, 2023-ஆம் ஆண்டில், இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா இந்தப் புகழ்பெற்ற போட்டியில் வெற்றி பெற்ற முதல் இலங்கைத் தமிழர் என்ற வரலாற்றைப் படைத்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸின் சிறந்த பேக்கர் 2026
-
கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழா
கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா Feb 28, 2026 - 08:01 AM கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இம்முறையும் கோலாகலமாக கச்சத்தீவில் இன்று (28) நடைபெறுகிறது. இந்தத் திருவிழா இலங்கை மற்றும் இந்திய பக்தர்களின் ஒன்றிணைவுடன் நடத்தப்படுகிறது. புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவிற்கு பொதுவாக 3500-க்கும் மேற்பட்ட இந்திய பக்தர்கள் கச்சத்தீவுக்கு வருகை தருகின்றனர். இக்கொடியேற்ற நிகழ்வில் நெடுந்தீவு பங்குத்தந்தை பத்தினாதன் கலந்துகொண்டதுடன், அவராலேயே திருவிழாக் கொடி ஏற்றி வைக்கப்பட்டு உற்சவ நடவடிக்கைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன. கொடியேற்றத்தைத் தொடர்ந்து யாழ் ஆயர் யாழ் மறைமாவட்ட ஆயர் ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் தலைமையில், பல பங்குத்தந்தையர்களின் பங்களிப்புடன் விசேட ஆராதனைகள் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணத்திலிருந்து தென்மேற்காக சுமார் 64 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள கச்சத்தீவில் நடைபெறும் புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா, நூறு ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டது. சுமார் 1.15 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்ட சிறிய தீவான கச்சத்தீவு, இலங்கைத் தீவுக்கூட்டத்தில் இலங்கையிலிருந்து வெகு தொலைவிலும் இந்தியாவுக்கு மிக அருகிலும் அமைந்துள்ள ஒரு தீவாகும். இதன் உரிமையை முன்னிறுத்தி கடந்த காலத்தில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் அரசியல் ரீதியான முரண்பாடுகள் கூட ஏற்பட்டிருந்தன. எவ்வாறாயினும், 1974 ஆம் ஆண்டில் இரு நாட்டு மீனவர்களும் அதனைப் பயன்படுத்துவது தொடர்பான நிபந்தனைகளுடன் கச்சத்தீவின் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டது. இவ்வாறான பின்னணியிலும் கூட, வருடாந்தம் இரண்டு நாட்கள் அத்தீவில் அமைந்துள்ள புனித அந்தோனியார் ஆலயத் திருவிழா இரு நாட்டு மீனவர்களின் பங்களிப்புடன் கொண்டாடப்படுகிறது. https://adaderanatamil.lk/news/cmm5pffg20006356pewqn4cwu
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு - என்ன செய்ய வேண்டும். இலங்கையை 64 ஓட்டங்களால் வெல்ல வேண்டும், அல்லது 13.1 பந்துப் பரிமாற்றங்களில் துரத்திப் பிடிக்க வேண்டும். எனக்கென்றால், இது நடக்கும் போல் தெரியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பெரும்பாலும் அரை இறுதி போட்டி முடிவில் நான் பின்னுக்கு போவேன். பின்னுக்கு போவதற்கு,அவுஸ்திரேலியா பாகிஸ்தானில் படுதோல்வி அடைந்தது தெரிந்தும் தென்னாபிரிக்காவை தெரிவு செய்யாமல் அவுஸ்திரேலியாவை தெரிவு செய்ததும், இங்கிலாந்திடம் 3-0 க்கு என்ற கணக்கில் இலங்கை தோல்வி அடைந்தது என்பது தெரிந்தும் இலங்கை நியூசிலாந்து போட்டியில் இலங்கையை தெரிவு செய்ததும் முக்கிய காரணங்கள்
-
மெக்சிகோவில் பிரபல போதைப்பொருள் கும்பல் தலைவன் சுட்டுக் கொலை - சுற்றுலா நகரமும் விமான நிலையமும் முற்றுகை!
இளம் காதலியால் சரிந்த பேரரசு லத்தீன் அமெரிக்கப் பிராந்தியம் உலகின் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தலின் முக்கிய மையமாக உள்ளது என்பது ரகசியமல்ல. உலகின் பெரும்பாலான கொக்கைன் உற்பத்தி கொலம்பியா, பெரு மற்றும் பொலிவியாவை மையமாகக் கொண்டு நடக்கிறது. மெக்சிகோவை மையமாகக் கொண்டு ஹெரோயின் மற்றும் செயற்கைப் போதைப்பொருட்களான 'ஐஸ்' (Ice) மற்றும் ஃபெண்டானில் உற்பத்தி அதிகரித்துள்ளது. இப்பிராந்தியத்தில் போதைப்பொருள் கடத்தலை மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் வன்முறை கும்பல்கள் கட்டுப்படுத்துகின்றன. இவை 'கார்டெல்' (Cartel) என்று அழைக்கப்படுகின்றன. மெக்சிகோவில் இத்தகைய கும்பல்கள் சட்டத்திற்கு அஞ்சுவதில்லை. பொலிஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்களைப் பகிரங்கமாக மக்கள் முன்னிலையில் அவர்கள் கொன்று குவிக்கின்றனர். கடத்தல், கப்பம் கோருதல் மற்றும் ஆள் கடத்தல் ஆகியவற்றிலும் இவர்கள் ஈடுபடுகின்றனர். சில நகரங்கள் மட்டுமல்ல, முழு மாகாணங்களே இவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. மெக்சிகோவில் 'சினலோவா கார்டெல்' மற்றும் 'ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல்' (CJNG) ஆகிய இரண்டு முக்கிய கும்பல்கள் உள்ளன. மெக்சிகோவில் பரவிய பீதி கடந்த சில நாட்களாக மெக்சிகோ போர்க்களமாக மாறியுள்ளது. பேருந்துகள், கார்கள் எரிக்கப்பட்டன. அரசு அலுவலகங்கள், எரிபொருள் நிலையங்கள் மற்றும் விமான நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. பல மாகாணங்களில் பயங்கரவாதம் பரவியது. மக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்லாது, இந்தியாவும் மெக்சிகோவில் உள்ள தனது குடிமக்களை உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தியது. இதற்குக் காரணம், ஜாலிஸ்கோ நியூ ஜெனரேஷன் கார்டெல் அமைப்பின் ஆயுதமேந்திய தலைவர் நெமேசியோ ரூபன் ஒசெகுவேரா செர்வாண்டஸ் அல்லது 'எல் மென்ச்சோ'வை மெக்சிகோ இராணுவம் சுட்டுக் கொன்றதாகும். பல தசாப்தங்களாகச் சட்டத்திலிருந்து தப்பித் தலைமறைவாக இருந்து, கொடூரமான குற்றங்களைச் செய்து வந்த 'எல் மென்ச்சோ' இறுதியில் ஒரு பெண்ணால் சிக்கினான். யார் இந்த இளம்பெண்? ஜாலிஸ்கோ மலைப்பகுதியில் மறைந்திருந்த 'எல் மென்ச்சோ'வைத் தேடும் பணியில் மெக்சிகோ மற்றும் அமெரிக்கப் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருந்தன. அவன் இருக்கும் இடத்தை அறிய அவனது நெருக்கமானவர்களைப் புலனாய்வுத் துறையினர் கண்காணித்தனர். அப்போதுதான் அவனது இளம் காதலி குறித்த விபரங்கள் கிடைத்தன. அரசாங்கம் அந்தப் பெண்ணின் பெயரைப் பகிரங்கப்படுத்தவில்லை என்றாலும், ஊடகத் தகவல்களின்படி அவர் மரியா ஜூலிசா (Maria Julissa) எனத் தெரியவந்துள்ளது. 25 வயதான இவர் சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒரு மாடல் அழகி. அவருக்கு 35 இலட்சத்திற்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர். கடந்த வார இறுதியில் அவர் 'எல் மென்ச்சோ'வுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது. அவர் மூலமாகவே 'எல் மென்ச்சோ' இருக்கும் இடத்தை இராணுவம் துல்லியமாகக் கண்டறிந்தது. தற்போது ஜூலிசாவுக்கு கொலை மிரட்டல்கள் வரத் தொடங்கியுள்ளன. தனக்கும் 'எல் மென்ச்சோ'வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என அவர் மறுத்தாலும், அவர் மூலமே இரகசியத் தகவல் கசிந்ததாகக் கூறப்படுகிறது. இறுதி வேட்டை பிப்ரவரி 22-ஆம் தேதி, மெக்சிகோ இராணுவம் ட்ரோன்கள் மற்றும் ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தி 'எல் மென்ச்சோ' மறைந்திருந்த இடத்தை முற்றுகையிட்டது. கார்டெல் உறுப்பினர்களுக்கும் இராணுவத்திற்கும் இடையே பயங்கரமான துப்பாக்கிச் சண்டை நடந்தது. இதில் 22 பாதுகாப்புப் படை வீரர்களும், 30-க்கும் மேற்பட்ட கும்பல் உறுப்பினர்களும் கொல்லப்பட்டனர். சண்டையின்போது பலத்த காயமடைந்த 'எல் மென்ச்சோ', மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தான். அவனது மரணச் செய்தி கேட்டதும் அவனது கும்பல் ஆவேசமடைந்து நகரங்களில் வன்முறையில் ஈடுபட்டது. மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷைன்பாம், நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்தார். அடுத்த தலைவர் யார்? 'எல் மென்ச்சோ'வின் மரணத்திற்குப் பிறகு அந்த கும்பலுக்குள் அதிகாரப் போட்டி ஏற்பட்டுள்ளது. அவனது மகள் ஜெசிகா ஜோனா ஒசெகுவேரா (குற்ற உலகின் ராணி என அழைக்கப்படுபவர்) அடுத்த தலைவராக வரக்கூடும் எனப் பேசப்படுகிறது. அதே நேரத்தில், எதிரி கும்பலான 'சினலோவா கார்டெல்' இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி இடங்களைக் கைப்பற்ற முயல்கிறது. யார் இந்த எல் மென்ச்சோ? 1966-இல் பிறந்த இவன், சிறுவயதில் வறுமை காரணமாக போதைப்பொருள் தோட்டங்களில் வேலை செய்தான். ஒரு காலத்தில் மெக்சிகோவில் பொலிஸ் அதிகாரியாகவும் பணியாற்றினான். பின்னர் போதைப்பொருள் உலகிற்குள் நுழைந்து தனது சாம்ராஜ்யத்தை உருவாக்கினான். அவனது தலைக்கு அமெரிக்கா 15 மில்லியன் டாலர் சன்மானம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/இளம்-காதலியால்-சரிந்த-பேரரசு/50-373063
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
30 வருடத்துக்கு முன்பு இவர்கள் திருமணம் செய்தபோது எவ்வளவு காலம் சேர்ந்து வாழ்வார்கள் என நான் நினைத்ததுண்டு. திரைப்படங்களில் நடிக்கும் பெரும்பாலான நாயகர்களின் ஓழுக்கம் பற்றி சொல்லத்தேவையில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
- கிருபன்
- தமிழனின் சிற்பக் கலை.
தஞ்சை பெரிய கோயில் - தத்ரூபமான யானை போர்கள காட்சி (கிராபிக்ஸ் உதவியுடன்)- மலரும் நினைவுகள் ..
யாரெல்லாம் இந்த மாதிரி படகு உந்துருளியில் பயண அனுபவம் உள்ளவர்கள் ரெல் மீ..!- நான் ரசித்த விளம்பரம் .
- இரசித்த.... புகைப்படங்கள்.
- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- உணவு செய்முறையை ரசிப்போம் !
செஞ்சி கோட்டை - அப்பம்பட்டு முட்டை மிட்டாய்- என்னை மயக்கிய ஜெயச்சந்திரன் பாடல்கள்
கண்ணன் முகம் காண.. படம் : ஆயிரம் ஜென்மங்கள்(1978) இசை: MSV- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
களத்தில் கனபேருக்கு கனபேரைத் தெரிந்திருக்கு.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாஸ்போட் கொப்பி அனுப்புறன் ....இணைத்து விடுங்கோ ரசோ...- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
இளைய தளபதி விஜய் தனது குடும்ப பிரச்சனைகளை சுமுகமாக தீர்த்துவைப்பார் என எதிர்பார்ப்போம். தனுஷ், ஏ ஆர் ரஹ்மான், ஜெயம் ரவி, இமாம் என ஒரு படையே ஒரே விதமான சிக்கலுக்குள் மாட்டியுள்ளது போல் தெரிகின்றதே. இவர்களின் வயதும் கிட்டத்தட்ட ஒரே அளவுதான்.- பொலிஸ் மா அதிபரிடம் நேரடியாக முறைப்பாடு செய்யலாம்: 2026 இல் மேம்படுத்தப்பட்ட ‘‘Tell IGP’ சேவை!
முன்னாள் புலனாய்வு பணிப்பாளர் பயங்கரவாதி எனும் அளவில் இலங்கை நிலமை போகிது. இப்பத்தைய போலிஸ் மா அதிபரை நம்பி தகவல்களை அனுப்பலாமோ? - கிருபன்
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.