Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இதென்ன எல்லாரும் சேர்ந்து ஒரே மாதிரி.... அப்பிடி நடக்கக் கூடாதே.
  3. நாளைக்கு போத்தி மூடிட்டு ப‌டுக்கிற‌து வெட்ட‌ர்😄😛..................
  4. நாளை புதன் 18 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 34) முதல் சுற்று குழு D:புதன் 18 பெப்: 5:30 AM, டெல்லி, தென்னாபிரிக்கா எதிர் ஐக்கிய அமீரகம் SA எதிர் UAE அனைவரும் தென்னாபிரிக்கா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் நிச்சயமாகக் கிடைக்குமா? 35) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 9:30 AM, கொழும்பு (SSC), நமீபியா எதிர் பாகிஸ்தான் NAM எதிர் PAK அனைவரும் பாகிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் நமீபியா அணி பாகிஸ்தானைப் பதம் பார்க்குமா? 36) முதல் சுற்று குழு A:புதன் 18 பெப்: 1:30 PM, அஹமதாபாத், இந்தியா எதிர் நெதர்லாந்து IND எதிர் NED அனைவரும் இந்தியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இப்போட்டியில் இந்தியா அதிகூடிய எண்ணிக்கை எடுக்குமா அல்லது நெதர்லாந்து அதிகுறைந்த எண்ணிக்கை எடுக்குமா?
  5. அடங்கப்பா ...இன்றைக்கும் நாமதானா....கிருபன்சார் ...நன்றி
  6. எதிர்த்து வாக்களித்த அந்த இருவரும் யார், எந்தக் கட்சி என அறிய ஆவலாக உள்ளது.
  7. கனடாவில் மக்களின் சொத்துக்களை வைத்திருக்கும் 25 பேரது பெயர் விபரம் இதோ! பெயர் மற்றும் அவர்கள் வகித்த துறைகள். 1) "தமிழ்" (உலகத்தமிழர் அமைப்பின் பொறுப்பாளர்(WTM) வருடம் 2007 - இன்றுவரை). 2) அருமருகன்(தற்போதைய ஏசியன் புடவைக்கடை உரிமையாளர் / WTM நிர்வாகி). 3) கமலவாசன்(உலகத்தமிழர் பத்திரிகை பொறுப்பாளர் / WTM நிர்வாகி). 4) A1 கண்ணன்(WTM நிதிப்பொறுப்பாளர்). 5) பவளகாந்தன்(வணிகம் & விளையாட்டுத்துறை / WTM நிர்வாகி). 6) உதயன்(விற்கப்பட்ட WTM கட்டிடத்தின் உரிமையாளர் / WTM நிர்வாகி). 7) ரஞ்சன்(சுரபி கடை - முன்னாள் WTM பொறுப்பாளர்). ஸ்ரான் அன்ரனி(CMR & TVI உரிமையாளர்). 9) பிரபா(CMR & TVI முன்னாள் நிர்வாகி). 10) முத்து(கனடா கந்தசுவாமி கோயில் தலைவர்). 11) தவம்(கனடா கந்தசுவாமி கோயில் முன்னாள் நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 12) ரெஜி(முன்னாள் WTM பொறுப்பாளர்). 13) இன்பநாயகம்(அம்பிகா நகைமாடங்களின் உரிமையாளர்). 14) சிவா(பூமிக்காம் தொலைத் தொடர்பு, TVI மற்றும் CMR முன்னாள் நிர்வாகி). 15) சிறீ கண்ணுத்துரை / துரைராஜா (மாக்கோசா வங்கியின் நிர்வாகிகள்). 16) ஆதி கணபதி(பல் வைத்தியர்). 17) சுரேஷ்(ஒட்டாவா WTM பொறுப்பாளர்). 18) சொர்ணலிங்கம்(யாழ் மெட்டல் உரிமையாளர்). 19) கண்ணன்(முன்னாள் WTM நிர்வாகி / ஈழமுரசு - கனடா). 20) சுரேஷ்(முன்னாள் ஏசியன் புடவைக் கடை உரிமையாளர்). 21) சுரேஷ்(spicyland உரிமையாளர்). 22) தவா (வீடு விற்பனை முகவர்)(keel & finch இடத்தில் உள்ள கட்டிடத்தின் உரிமையாளர்). 23) பாலா(கணக்காளர்). 24) செந்தில்(மின்னல்). 25) பாபு(பாபு உணவகம்). பெயர் பட்டியல் தொடரும் ............. https://www.ilankainet.com/2019/02/25.html
  8. மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமையவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் - பிரதமர் 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தால் தான் மக்கள் ஒட்டுமொத்த அரசியல் கட்டமைப்பையும் வெறுக்கிறார்கள்.சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்க புதிய மாற்றங்களை கொண்டு வர வேண்டும். மக்களுக்கு வழங்கிய ஆணைக்கு அமைவாகவே பாராளுமன்ற ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை கொண்டு வந்துள்ளோம் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்வற்காகவோ அல்லது பிரபல்யமடைவதற்காகவோ பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலத்தை கொண்டு வரவில்லை. இந்த சட்டம் 1977 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரையான காலப்பகுதியில் இந்த சட்டம் ஐந்து திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. பாராளுமன்ற ஓய்வூதிய சட்டம் அரசியல்வாதிகளுக்கு ஏற்றாட்போல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.இதனால் மக்களுக்கு எவ்வித பயனும் கிடைக்கவில்லை. 1985 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தில் விரும்பிய ஓய்வூதியத்தை தெரிவு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பிற்பட்ட காலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இரண்டாவது திருமணம் முடித்தால் அவரது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டு மக்கள் முழு அரசியல் கட்டமைப்பையும் இவ்வாறான செயற்பாடுகளினால் தான் மக்கள் எதிர்க்கிறார்கள்.இதனை மாற்றியமைக்க கூடாதா, சிறந்த அரசியல் கலாசாரத்தை உருவாக்கினால் தான் சிறந்தவர்கள் அரசியலுக்கு வருவார்கள். நாடும் முன்னேற்றமடையும். ஊழல்மிக்க அரசியல் கலாசாரத்தினால் ஜனநாயகம் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது.இது இலங்கைக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதொரு விடயமல்ல, ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்.அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்போம் என்றார். https://www.virakesari.lk/article/238908 ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது - தயாசிறி ஜயசேகர 17 Feb, 2026 | 07:56 PM (எம்.ஆர்.எம்.வசீம் , இராஜதுரை ஹஷான்) பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம், சிறப்புரிமைகள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்து தொடர்பில் ஆராய்வதற்கு சித்ரசிறி குழு நியமிக்கப்பட்டது. இந்த குழு 2024.12.02 ஆம் திகதியன்று அறிக்கை சமர்ப்பித்துள்ளது. இந்த குழுவின் பரிந்துரைக்கு அமைவாகவே பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ளது. சித்ரசிறி அறிக்கையை அரசாங்கம் முழுமையாக பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க வேண்டும். அறிக்கையில் முழு உள்ளடக்கத்தை நாங்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும். மக்களுக்கு இல்லாத எதையும் தாங்கள் அனுபவிக்க போவதில்லை என்று ஜனாதிபதி உட்பட 159 உறுப்பினர்களும் குறிப்பிட்டார்கள். ஆனால் இன்று அனைவரும் சுகபோகமாக வாழ்கிறார்கள். அனைவருக்கும் வாகனம் வழங்கப்பட்டுள்ளது. 159 பேர் தற்போது பொது போக்குவரத்து சேவையையா, பயன்படுத்துகிறார்கள். அனைவரும் ஏதாவதொரு வழியில் ஊழல் செய்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 55 ஆயிரம் ரூபா அளவில் தான் சம்பளம் கிடைக்கப்பெறுகிறது. அவ்வாறாயின் மாதாந்தம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபா ஓய்வூதிய கொடுப்பனவே கிடைக்கப்பெறும். பெரும்பாலானவர்கள் எவ்வித தொழிலும் இல்லாமல் இந்த கொடுப்பனவை நம்பியே வாழ்கிறார்கள். பாராளுமன்ற ஓய்வூதியம் (இரத்துச்) சட்டத்தை அரசாங்கம் எதிர்காலத்துக்கு அமுலாகும் வகையில் செயற்படுத்த வேண்டும். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு சலுகை வழங்க வேண்டும். அதனை விடுத்து ஒட்டுமொத்த பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தையும் இரத்துச் செய்வது நியாயமற்றது. தேசிய மக்கள் சக்தியின் 159 உறுப்பினர்களின் மாத சம்பளம், அக்கட்சியின் உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் மாத சம்பளம் மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி நிதியத்துக்கு செல்கிறது. இது முற்றிலும் சட்டவிரோதமானது என்றார். https://www.virakesari.lk/article/238909
  9. ஊழல் அரசியல் கலாச்சாரத்துக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – அமைச்சர் ஆனந்த விஜேபால 17 Feb, 2026 | 04:37 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடாக இலங்கை இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது. அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்து வருகிறோம். இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம் என பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, 'வளமான நாடு அழகான வாழ்க்கை' கொள்கைத் திட்டத்தின் ஊடாக நாட்டு மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியுள்ளோம். அதில் குறிப்பிடப்பட்ட விடயங்களில் பிரதானமாக பொருளாதார ஸ்திரத் தன்மையை குறுகிய காலத்தில் ஏற்படுத்தியுள்ளோம். அதனுடன் அரசியல் கலாச்சார மாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளோம். இந்த பதவியில் இருப்பவர்களுக்கு பல்வேறு சலுகைகளும் சிறப்புரிமைகளும் இருந்தன. ஊழல் மிக்க அரசியலும், ஊழல் மிக்க அரசியல்வாதிகளும் இருந்தனர். ஊழல் மோசடிகளை தடுக்கவே பாராளுமனற் உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் கூறுகின்றார். ஆனால் இந்த ஓய்வூதியம் மூலம் எந்தளவுக்கு ஊழல் நடந்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். தற்போது விசாரணைகள் நடக்கின்றன. எதுவும் இடையில் நிறுத்தப்படாது. சிலரின் வீடுகளில் இராணுவத்தினர் நாய்களை பராமறிக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளனர். இந்தளவுக்கு சிறப்புரிமையை மீறி பயன்படுத்தியுள்ளனர். இந்த சிறப்புரிமை வேண்டுமென்று எதிர்க்கட்சியினர் நினைத்தால் எதிர்காலத்தில் இதற்காக மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டு செயற்படலாம். ஆனால் எங்களுக்கு கிடைத்த மக்கள் ஆணையின்படியே நாங்கள் செயற்படுகின்றோம். இது தொடர்பில் எமது கொள்கைப் பிரகடனத்தில் கூறியவாறு அதனை செயற்படுத்தி வருகின்றோம். ஆனால் எதிர்க்கட்சிக்கு அவசியமென்றால் மக்கள் ஆணையுடன் மீண்டும் அதனை பயன்படுத்த முடியும். நாங்கள் ஊழல் அரசியல் கலாச்சாரத்தை மாற்றியமைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். மக்களிடம் செல்லக்கூடிய மக்களுடன் நெருங்கி செயற்படக்கூடிய பிரதிநிதிகளை உருவாக்கி வருகின்றோம். ஊழல் அரசியல் கலாச்சாரத்தால் ஊழல், மோசடிகள் நிறைந்த நாடே இருந்தது. போதைப்பொருள் மற்றும் அரசியல்வாதிகளும் பாதாள குழுக்களும் ஒன்றாக செயற்பட்ட காலம் இருந்தது. அவற்றுக்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துவருகின்றோம். நாங்கள் இது தொடர்பில் முன்னெடுக்க வேண்டிய சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்போம். இதேவேளை மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளில் ஏனைய விடயங்களையும் நிறைவேற்றுவோம். கல்வி மறுசீரமைப்பு, கிராமிய வறுமை நிலைமை இல்லாமல் செய்வதற்கான வேலைத்திட்டங்கள் போன்றவற்றை நிறைவேற்றி வருகின்றோம். குறுகிய காலத்தில் சமூக மாற்றத்திற்காக நாங்கள் பங்களிப்பை வழங்கி வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/238875
  10. இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி, யுவ்ராஜ் சம்ராவின் செஞ்சுரி விளாசலான 110 (65 பந்துகள்) ஓட்டங்களுடனும், அணித்தலைவர் டில்பிறீட் பஜ்வாவின் நிதானமான 36 (39 பந்துகள்) ஓட்டங்களுடன் விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, கிளென் பிலிப்ஸின் ஆட்டமிழக்காத மின்னல்வேக 76 (36 பந்துகள்) ஓட்டங்களுடனும், ரச்சின் ரவீந்திரவின் ஆட்டமிழக்காத புயல்வேக 59 (39 பந்துகள்) ஓட்டங்களோடும் 15.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்த நிலையில் 176 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. அத்துடன் சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. அனைவரும் நியூஸிலாந்து அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய இரண்டாவது ஸிம்பாப்வே, அயர்லாந்து அணிகளுக்கிடையிலான போட்டி பல்லேகலவில் தொடர்ச்சியான மழை காரணமாக கைவிடப்பட்டதையடுத்து ஏற்கெனவே ஓமான், அவுஸ்திரேலியாவை வென்ற ஸிம்பாப்வே ஒரு போட்டி மீதமிருக்கையிலேயே சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. மறுபக்கமாக ஸிம்பாப்வே, சிறிலங்காவிடம் தோல்வியடைந்திருந்த அவுஸ்திரேலியா அணி தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது! முடிவு: மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது. அயர்லாந்து, ஸிம்பாப்வே அணிகள் தலா ஒரு புள்ளி பெற்றன. ஸிம்பாப்வே அணி சுப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற்றது. யாழ் களப் போட்டியாளார்கள் ஒருவருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஸ்கொட்லாந்து அணி, மைக்கல் ஜோன்ஸ்ஸின் வேகமான 71 (45 பந்துகள்) ஓட்டங்களுடனும், ஜோர்ஜ் முன்சீயின் நிதானமான 27 (29 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 170 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய நேபாளம் அணி திபேந்திரா சிங் ஐரீயின் ஆட்டமிழக்காமல் புயல்வேகத்தில் எடுத்த 50 (23 பந்துகள்) ஓட்டங்களுடனும், குஷால் பூர்டெலின் வேகமான 43 (35 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 171 ஓட்டங்களை எடுத்து வெற்றியிலக்கையடைந்தது. முடிவு: நேபாளம் அணி 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. நேபாளம் அணி வெல்லும் எனக் கணித்த ஆறு பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். ஸ்கொட்லாந்து அணி வெல்லும் எனக் கணித்த 17 பேருக்குப் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்:
  11. பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வான பழங்குடி ஓவியரின் மனைவிக்கு அரசுப்பணி பட மூலாதாரம்,Getty Images நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த குறும்பர் பழங்குடி ஓவியர் கிருஷ்ணன் மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதுக்கு தேர்வாகியுள்ள நிலையில், அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கல்வியைத் தொடரவும் அரசு வழிவகை செய்துள்ளது. கடந்த ஆண்டில் கிருஷ்ணன் மறைந்துவிட்ட நிலையில், அவரின் குடும்பம் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ஒரு மகன், 3 மகள்களுடன், கிருஷ்ணனின் வெள்ளரிக்கோம்பையில் வசித்து வந்தார். கிருஷ்ணன் மறைவுக்குப் பின், பாதுகாப்பு கருதி, கல்லாறு அருகேயுள்ள புளியமரத்தூர் என்ற கிராமத்திற்கு அவரின் குடும்பம் குடிபெயர்ந்தது. சுசீலாவின் தாய், தந்தை, அங்குள்ள ஒரு பாக்குத்தோட்டத்தில் பணியாற்றி வந்தனர். அவர்கள் குடியிருப்பதற்கு அந்தத் தோட்டத்தில் ஒதுக்கப்பட்டிருந்த குடிசை வீட்டில், சுசீலாவும் 4 குழந்தைகளும் வாழ்ந்து வருகின்றனர். சுசீலா அதே தோட்டத்தில் ரூ.300 கூலிக்கு பணியாற்றி வந்தார். இவர்களின் மூத்த மகள் வாசுகி, பிளஸ் 2 முடித்து விட்டு, உதகையிலுள்ள தனியார் பாரா மெடிக்கல் கல்லூரியில் பார்மஸி டிப்ளமோ படித்துவந்தார். ஆனால் அதற்கான கல்விக்கட்டணத்தைச் செலுத்த முடியாமல் வீட்டில் இருந்துவந்தார். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் ராகுல், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளி விடுதியிலும், ஏழாம் வகுப்பு படிக்கும் கீதா, நான்காம் வகுப்பு படிக்கும் கீர்த்திகா ஆகிய இருவரும் நீலகிரியிலுள்ள அரசு உண்டு உறைவிடப்பள்ளியிலுள்ள விடுதியிலும் தங்கிப் படித்து வந்தனர். இந்நிலையில்தான் கிருஷ்ணனுக்கு கடந்த மாதத்தில் பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டது. தங்களின் குடும்ப நிலை குறித்து சுசீலா, பிபிசி தமிழ் உள்ளிட்ட ஊடகங்களிடம் பேசியிருந்தார். தன்னுடைய கல்வித்தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்கவேண்டும், தனது மூத்த மகள் அவள் படித்த அதே கல்லூரியில் படிப்பதற்கும், மற்ற குழந்தைகள் கல்விக்கும் அரசு உதவ வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். அதன் விளைவாக, தமிழக அரசு சார்பில் கிருஷ்ணன் குடும்பத்தினரை நீலகிரி மற்றும் கோவை மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அணுகினர். அவர்களுடைய விருப்பத்தின்பேரில், தற்போது நீலகிரி மாவட்டம் உதகையிலுள்ள அரசு ஏகலைவா உண்டு உறைவிடப்பள்ளியில் தோட்டப்பணியாளர் பணிக்கான ஆணையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா வழங்கினார். அதே பள்ளியில் அவர்கள் குடியிருக்க வீடும் ஒதுக்கப்பட்டுள்ளது. மூத்த மகள் வாசுகி, அவர் படித்து வந்த கல்லூரியில் டிப்ளமோ படிப்பில் தொடரவும், மற்ற 3 குழந்தைகளும் சுசீலா பணியாற்றும் அதே ஏகலைவா பள்ளியில் விடுதியில் தங்கிப்படிக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. பிபிசி தமிழிடம் பேசிய கிருஷ்ணனின் மனைவி சுசீலா, ‘‘எனது கணவர் இறந்தபின்பும் எங்களை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார். அவரால்தான் எனக்கு இந்த பணி கிடைத்துள்ளது. என் மூத்த மகள் வாசுகியை இந்த ஆண்டில் டிப்ளமோ பார்மஸி படிப்பில் தொடரவும், அடுத்த ஆண்டில் அவள் விரும்பியபடி பி.பார்ம் படிப்பில் இணையவும் நீலகிரி ஆட்சியர் ஏற்பாடு செய்திருக்கிறார்.’’ என்றார். மேலும் பேசிய அவர், ‘‘எனக்கு மாதம் ரூ.32 ஆயிரம் ஊதியத்தில் பணி ஆணை தரப்பட்டுள்ளது. இனிமேல் என்னுடைய 3 குழந்தைகளையும் நன்றாகப் படிக்க வைக்க முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது. எங்களுக்கு சொந்தமாக ஒரு வீடு வேண்டுமென்ற கோரிக்கையையும் அரசிடம் வைத்திருக்கிறோம். அதற்கும் ஆவன செய்வதாக ஆட்சியர் கூறியுள்ளார். வரும் 22, 23 ஆகிய நாட்களில் சென்னை ஆளுநர் மாளிகையில் நடக்கும் நிகழ்ச்சியில் 15 பேருடன் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. அங்கே செல்கிறோம். ’’ என்றார். https://www.bbc.com/tamil/live/clyx48qxzddt?post=asset%3A3cb5d876-3db9-425e-bc74-55638be241d8#asset:3cb5d876-3db9-425e-bc74-55638be241d8
  12. புலிகள் - அலைகள் ஓய்வதில்லை புளொட் - விடியும் வரை காத்திரு ரெலோ - நாளை நமதே ஈரோஸ் - தூரத்து இடிமுழக்கம் ஈ.பி.ஆர்.எல்.எப். - பயணங்கள் முடிவதில்லை ----------------------------- ரெலோவை தூறல் நின்னு போச்சு என்றும் பொதுமக்கள் சொல்வதுண்டாம். இவற்றைத் தவிர TEA கும் ஒரு பெயர் இருந்ததாம்.
  13. Today
  14. அந்த காலத்தில் 80 களின் படங்களின் பெயர்களை இயக்கங்களுக்கு மக்கள் வைத்தனர். புலி - அலைகள் ஓய்வதில்லை( எப்போதும் தாக்குதல்) டெலோ - தூறல் நின்னு போச்சு (ஆரம்பத்தில் அடித்தார்கள் பின்னர் இல்லை). ஈரோஸ் - தூரத்து இடி முழக்கம் (தெற்கில் அடிப்பது) ஏனையவை நினைவில் இல்லை.
  15. எல்லாரும் இங்க ஓடி வர …இங்க இருந்து அங்க போயிருக்கிறார்… அதுவும் UoL இன் கல்லூரி ஒன்றில் பொறியியல் படித்த போதும். 🫡
  16. ரி20 உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரில் முன்னிலை வகிக்கும் அணிகளின் பட்டியல்.
  17. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் - சாமர சம்பத் 17 Feb, 2026 | 07:55 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும் என புதிய ஜனநாயக முன்னணியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (17) நடைபெற்ற பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை இரத்துச் செய்யும் சட்டமூலத்துக்கு எதிராக நான் திருத்மொன்றை முன்வைப்பேன். 1994ஆம் ஆண்டில் ஜே.வி.பி கட்சி ஊடாக பாராளுமன்றம் வந்த கலப்பதி உள்ளிட்ட இதுவரையில் 72 பேர் ஓய்வூதியம் பெற்றுள்ளனர். ஆளும் தரப்பில் முன்வரிசையில் இருப்பவர்களில் பலர் ஓய்வூதியத்தை பெற்றுக்கொண்டவர்களே. அப்படியென்றால் அவர்கள் பெற்றுக்கொண்ட ஓய்வூதிய கொடுப்பனவுக்கான பணத்தை அரசாங்கத்திற்கு வழங்குமாறு நான் கோரிக்கை விடுக்கின்றேன். இதேவேளை எங்களை திருடர்கள் என்று குறிப்பிடுகிறார்கள். ஆனால் தேசிய மக்கள் சக்தியில் தலங்கம வட்டாரத்தில் போட்டியிட்ட ஒருவரின் மகன் மற்றும் மருமகள் ஆகியோர் ஜப்பானுக்கு அனுப்புவதாக கூறி நிறுவனமொன்றை நடத்தி அப்பாவி மக்களிடம் பணம் பெற்றுள்ளனர். இவர்களின் திருமணத்தில் ஜனாதிபதி அனுரகுமாரவே கையெழுத்திட்டுள்ளார். இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வீடுகளை அடகு வைத்து அவர்களிடம் பணம் கொடுத்தவர்களும் உள்ளன. இவர்கள் தொடர்பில் முறைப்பாடுகளும் ஏற்றுக்கொள்வதில்லை. இது தொடர்பில் பொலிஸ் அமைச்சர் அவதானம் செலுத்த வேண்டும். பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகிறது. ஆனால் சகல தோட்ட கம்பனிகளும் இந்த சம்பள அதிகரிப்பை வழங்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதிய கொடுப்பனவை இரத்துச் செய்வதாயின் அந்த கொடுப்பனவை பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியமாக வழங்க வேண்டும். மக்கள் விடுதலை முன்னணியின் பெரும்பாலான உறுப்பினர்கள் இன்றும் ஓய்வூதியம் பெறுகிறார்கள். நீதியமைச்சரின் உறவினரான வாசுதேவ நாணயக்கார இன்றும் ஓய்வூதிய கொடுப்பனவை பெறுகிறார். ஆகவே மனதில் வன்மத்தை வைத்துக் கொண்டு அரசாங்கம் செயற்படுகிறது என்றார். https://www.virakesari.lk/article/238907
  18. 10 ல வியாழந்தான் பதிய விட்டு கிளப்புமாம்… நான் 10ம் பக்கத்தில்….செவ்வாய் கிழமை பதிலை பதிந்தாதால் - 9 தில குரு எண்டு எல்லே தப்பா நினைச்சேன்😂
  19. noesprtdoSe2c0tgà4f701hh: imHrl2l69ft l3i1c2gafg10c07tf21,40 · தர்மம் தலையை மட்டுமல்ல...ஒரு நாட்டையே காப்பாற்றும். 1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள். பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ "சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள். பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள். நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராத விதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாக வில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக் கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்துவிடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார். ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, இது தான் மொத்தம் வசூலான தொகை மீதியுள்ள தொகைக்கு பின் தேதியிட்டு செக் கொடுத்து விடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்தி விடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்தப் பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்" என்கிறார். அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர். நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார். பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது. ஆனால் பேட்ரெவ்ஸ்கி, நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்து போகப்போவதில்லை… என்று கருதியே அந்த உதவியை செய்தார். ஆண்டுகள் உருண்டன... பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு... எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.) பேட்ரெவ்ஸ்கி கேட்டுக் கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர். ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி. ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பணிக்க நன்றி தெரிவிக்கிறார். "நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா? அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான் என்கிறார்" ஹெர்பெர்ட் ஹூவர். பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக் கொள்கிறார். காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது. தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா? இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள். ஏனெனில்… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை.. பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே… காலம் குறித்து வைத்துக் கொண்டது.... (உண்மை சம்பவம்) தர்ம சிந்தனையை பற்றி அறம் வழியில் வாழ குழந்தைகளுக்கு சொல்லி கொடுங்கள் . குழந்தைகள் சொல்வதை கேட்பதில்லை ஆனால் செய்வதை பார்ப்பார்கள்......!
  20. பனாகொட மகேஸ்வரன் (தம்பாப்பிள்ளை மகேஸ்வரன்??) என்பவர் தான் TEA இனை ஆரம்பித்தவர். 2024 இல் காலமானார்.
  21. ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரை கொல்ல இந்த 'விஷ தவளை' பயன்படுத்தப்பட்டதா? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, விஷ டார்ட் தவளை தோலின் மீது சுரக்கக்கூடிய எபிபடிடின் விஷம்தான் அலெக்ஸி நவால்னியின் மரணத்திற்கு காரணம் என ஐந்து ஐரோப்பிய நாடுகள் கூறியுள்ளன. ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் தென் அமெரிக்காவில் உள்ள 'விஷ டார்ட் தவளைகளில்' காணப்படும் ஒரு கொடிய நச்சைப் பயன்படுத்தி ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவால்னி கொல்லப்பட்டார் என்று பிரிட்டனும் அதன் சில ஐரோப்பிய நட்பு நாடுகளும் தெரிவித்துள்ளன. "நவால்னியின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில் எபிபடிடின் (epibatidine) தடயங்கள் கண்டறியப்பட்டன. இது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சைபீரிய சிறைச்சாலையில் அவரது மரணத்திற்கு காரணமாக அமைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது" என்று பிரிட்டன் வெளியுறவு அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்த உயிரிழப்பை ஏற்படுத்தும் நச்சை பிரயோகிப்பதற்கான "வழிமுறைகள், நோக்கம் மற்றும் வாய்ப்பு" ஆகியவை ரஷ்ய அரசிடம் மட்டுமே இருந்ததாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் தெரிவித்துள்ளன. ரஷ்யா இந்த ஆய்வு முடிவை "ஒரு தகவல் பிரசாரம்" என்று நிராகரித்ததாக டாஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. அந்த நச்சு எது? எபிபடிடின் என்பது விஷ டார்ட் தவளையின் தோலில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு இயற்கை நியூரோடாக்ஸின் (neurotoxin) நச்சு என்று நச்சுயியல் நிபுணர் ஜில் ஜான்சன் கூறுகிறார். இது மார்ஃபினை விட "200 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது" என்று அவர் பிபிசி ரஷ்ய மொழி சேவையிடம் தெரிவித்தார். எபிபடிடின் இயற்கையாக தென் அமெரிக்காவில் உள்ள காடுகளில் வாழும் விஷ டார்ட் தவளைகளில் காணப்படுகிறது. இதனை, ஒரு ஆய்வகத்திலும் தயாரிக்கலாம். 'பிடிக்கப்பட்ட விஷ டார்ட் தவளைகள் இந்த நச்சுத்தன்மையை உற்பத்தி செய்வதில்லை, இது ரஷ்யாவில் இயற்கையாகக் காணப்படுவதில்லை' என்று ஐரோப்பிய நாடுகள் தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளன. அந்தோணியின் விஷ டார்ட் தவளை மற்றும் பேண்டஸ்மல் விஷத் தவளை என அறியப்படும் இனங்கள் தங்களது தோலில் இந்த நச்சைச் சுரக்கும். வலி நிவாரணி மற்றும் நுரையீரல் அழற்சி நிலைகளில் இருந்து நிவாரணம் பெறுவதற்கு எபிபடிடின் ஆய்வு செய்யப்பட்டிருந்தாலும், அதன் நச்சுத்தன்மை காரணமாக அது மருத்துவ ரீதியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலெக்ஸி நவால்னி தவளை விஷம் எப்படி வேலை செய்கிறது? ஜான்சனின் கூற்றுப்படி, இந்த சக்தி வாய்ந்த ரசாயன கலவை நரம்பு மண்டலத்தில் உள்ள நிகோடினிக் ஏற்பிகளின் மீது செயல்படுகிறது. ஏனெனில் இது இந்த நரம்பு ஏற்பிகளை அதிகப்படியாகத் தூண்டுகிறது, இது சரியான அளவில் செலுத்தப்பட்டால், தசை துடிப்பு, முடக்கம், வலிப்பு, குறைந்த இதயத் துடிப்பு, சுவாச செயலிழப்பு மற்றும் இறுதியில் மரணத்தை ஏற்படுத்தும் என்று அவர் விளக்கினார். பிஏ செய்தி முகமையிடம் லீட்ஸ் பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் நச்சுயியல் பேராசிரியர் அலஸ்டெர் ஹே, ''இதன் விளைவுகள் சுவாசம் தடைபட வழிவகுக்கும். இந்த நஞ்சால் பாதிக்கப்பட்டவர்கள் மூச்சுத் திணறலால் இறக்க நேரிடும்" என்று கூறினார். ஒருவரின் ரத்தத்தில் இந்த நச்சு காணப்படுவது "திட்டமிட்ட முறையில் அது செலுத்தப்பட்டதையே உணர்த்துகிறது" என்று அவர் மேலும் கூறினார். "சில பிற மருந்துகளுடன் சேர்த்துச் செலுத்துவதன் மூலம் எபிபடிடின் நச்சுத்தன்மை அதிகரிக்கப்படலாம், இந்த சேர்க்கைகள் குறித்து ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளன," என்று ஹே கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அலெக்ஸி நவால்னி சிறையில் இருந்தபோது இந்த நச்சு எவ்வளவு அரிதானது? எபிபடிடின் மிகவும் அரிதானது மற்றும் ஒரே ஒரு புவியியல் பிராந்தியத்தில் மட்டுமே மிகக் குறைந்த அளவில் காணப்படுகிறது என்று ஜான்சன் கூறினார். பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிறரால் குறிப்பிடப்பட்ட விஷத் தவளை, ஈக்வடார் மற்றும் பெருவைச் சேர்ந்த 'அந்தோணியின் விஷ டார்ட் தவளை' என்று புரிந்து கொள்ளப்படுகிறது. எபிபடிடினை உருவாக்கும் ஆல்கலாய்டுகளை (ஒரு வகை கரிம கலவை) உற்பத்தி செய்யத் தேவையான சரியான உணவுகளை உண்பதன் மூலம் தவளைகள் இந்த ரசாயனத்தை (எபிபடிடின்) உற்பத்தி செய்து அதைத் தங்கள் தோலில் சேமிக்கின்றன. தவளையின் உணவு மாறினால், அதன் எபிபடிடின் இருப்பு தீர்ந்துவிடும். ''தேவையான ஆல்கலாய்டுகளை உருவாக்க சரியான உணவைத் துல்லியமாக உண்டு கொண்டிருக்கும் ஒரு காட்டு தவளையை சரியான இடத்தில் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட முடியாத விஷயம்'' என்று ஜான்சன் கூறினார். "இது மனிதர்களுக்கு விஷம் கொடுக்கும் ஒரு நம்பமுடியாத அரிதான முறையாகும். எனக்குத் தெரிந்த மற்ற எபிபடிடின் விஷ பாதிப்புகள் ஆய்வகத்தில் ஏற்பட்டவை என்பதுடன் அவை உயிரிழப்பை ஏற்படுத்தாதவை." ரஷ்யா என்ன கூறியுள்ளது? நவால்னி இந்த மர்மமான நச்சால் இறந்ததை ஐரோப்பிய ஆய்வகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகள் சனிக்கிழமை தெரிவித்தன. நவால்னி இயற்கையான காரணங்களால் இறந்ததாக மாஸ்கோ முன்பு கூறியிருந்தது, இருப்பினும் நவால்னியின் மனைவி யூலியா நவால்னாயா தனது கணவர் விஷம் கொடுத்து "கொலை செய்யப்பட்டதாக" தொடர்ந்து வாதிட்டு வருகிறார். லண்டனில் உள்ள ரஷ்ய தூதரகம், நவால்னியின் மரணத்தில் ரஷ்யாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை மறுத்தது மற்றும் இந்த ஆய்வு முடிவுகளை "மேற்கத்திய கற்பனையாளர்களின் உயிரற்ற பிரசாரம்" என்று விவரித்தது. ரஷ்ய அதிபர் மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜாகரோவா ரஷ்ய அரசு செய்தி நிறுவனமான டாஸ்ஸிடம்,"அனைத்துப் பேச்சுக்களும் அறிக்கைகளும் மேற்கின் பிரச்னைகளில் இருந்து கவனத்தைத் திசை திருப்பும் நோக்கில் செய்யப்படும் ஒரு தகவல் பிரசாரமாகும்," என்று கூறினார். முன்னாள் பிரிட்டன் மற்றும் நேட்டோ மூத்த அதிகாரியும், ரசாயன ஆயுத நிபுணருமான ஹமிஷ் டி பிரெட்டன்-கோர்டன், நவால்னியின் மரணம் உட்பட ரஷ்யா எதைச் சொன்னாலும் அதை "சந்தேகத்துடன்தான்" மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றார். அவர் பிபிசி ரேடியோ 4-ன் டுடே நிகழ்ச்சியில் பேசுகையில், நேட்டோ நாடுகள் "நவால்னி அரசால் கொல்லப்பட்டதற்கான சான்றுகள் தங்களிடம் இருப்பதை நிரூபித்துள்ளன" என்று கூறினார். அவர் இறக்கும் போது, நவால்னி மூன்று ஆண்டுகளாகச் சிறையில் இருந்திருந்தார். ரஷ்யாவின் கூற்றுப்படி, 47 வயதான அவர் ஒரு சிறிய நடைப்பயணம் மேற்கொண்டார், தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறினார், பின்னர் சரிந்து விழுந்தவர் மீண்டும் சுயநினைவை பெறவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq6qyr3p596o
  22. இலகு ரயில் போக்குவரத்து திட்டத்துக்கு ஜைகா (JICA)' இன்னும் இறுதி ஒப்புதலளிக்கவில்லை - அமைச்சர் விஜித ஹேரத் Published By: Vishnu 17 Feb, 2026 | 06:31 PM (எம்.மனோசித்ரா) அரசாங்கத்தால் முன்மொழியப்பட்டுள்ள இலகு ரயில் போக்குவரத்து (LRT) திட்டத்திற்கு ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (ஜைகா) இன்னும் இறுதி ஒப்புதல் அளிக்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (17) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அமைச்சர், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் ஏனைய திட்டங்களின் வெற்றிகரமான அமுலாக்கம் மற்றும் மதிப்பீட்டிற்குப் பின்னரே எதிர்கால முடிவுகள் எடுக்கப்படும் என்று ஜைகா அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பல்வேறு போக்குவரத்து முறைகளை இணைக்கும் மையங்களின் கட்டுமானப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எல்.ஆர்.டி. திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ள போதிலும், ஜைகாவிடமிருந்து இன்னும் இறுதி ஒப்புதல் கிடைக்கவில்லை. தற்போது நடைபெற்று வரும் திட்டங்களின் முன்னேற்றத்தைப் பொறுத்தே அடுத்தகட்ட முடிவு அமையும் என்று ஜைகா அரசாங்கத்துக்கு அறிவித்துள்ளது. நாம் ஜப்பானில் ஜைகா அதிகாரிகளைச் சந்தித்தபோது அனைத்து முன்மொழிவுகளையும் முன்வைத்தோம். எவ்வாறிருப்பினும் ஆரம்ப கட்டமாக தற்போதுள்ள திட்டங்களை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அவற்றின் முன்னேற்றத்தின் அடிப்படையில் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர்கள் தெரிவித்தனர் என்றார். இதேவேளை ஜைக்காவின் நிதியுதவியுடன் செயற்படுத்தப்படும் சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இதய சிகிச்சை அலகுகளை நிர்மாணித்தல் மற்றும் மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் ஆகிய பணிகளை மீண்டும் தொடங்குதல் குறித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. சுகாதாரத் துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இலங்கையின் கண்டி, அனுராதபுரம், குருநாகல், பதுளை மற்றும் திருகோணமலை ஆகிய 5 பிரதான வைத்தியசாலைகளில் இதய சிகிச்சை அலகுகளை அமைப்பதற்கும் தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கும் ஜைக்கா 2018ஆம் ஆண்டில் 7,903 மில்லியன் ஜப்பானிய யென் நிதியுதவியை வழங்கியது. இருப்பினும், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மற்றும் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் காரணமாக 2022ஆம் ஆண்டு மே மாதம் முதல் இத்திட்டத்தின் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. தற்போது நாட்டின் பொருளாதார நிலைமை சீரடைந்து வருவதாலும், ஜப்பானிய அரசாங்கத்துடனான இருதரப்பு கடன் மறுசீரமைப்பு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாலும், இத்திட்டத்தை மீண்டும் முன்னெடுப்பதற்கு ஜைக்கா உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய இத்திட்டத்தின் கீழ் எஞ்சியுள்ள பணிகளை பூர்த்தி செய்வதற்காக திட்ட காலப்பகுதியை 2029 டிசம்பர் 31 வரை நீடிப்பதற்கும், நிறுத்தப்பட்டிருந்த கட்டுமானப் பணிகள் மற்றும் உபகரணக் கொள்வனவுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/238901

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.