Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. பனிப்போர் என்ற பதத்தின் பொருள் தெரியாமலா இத்தனை காலம் குப்பை கொட்டுறம்😂 ஆனால் அந்த பனிப்போருக்கு ஈடுபடும் இருதரப்புக்கும் உலகளாவிய ரீச் இருக்க வேண்டும். வலு சமநிலையும் இருக்க வேண்டும். இப்போ ஈரானில் நடப்பது சமச்சீர் அற்ற யுத்தம். Asymmetrical warfare. அதனால்தான் அமெரிக்கா முக்குகிறது. ஆனால் ஈரான் போன்ற ஒரு நாட்டால் பனிப்போர் வலுச்சமநிலையை அமெரிக்காவோடு ஏற்படுத்த முடியாது. அது செத்த கிளியாலும் இனி முடியாது. சீனாவால் மட்டுமே முயற்சிக்க கூடியது. ஆனால் சீனா தனக்கான நேரம் வந்ததாக கருதவில்லை போல் படுகிறது.
  3. தேர்தலுக்கு காசு கொடுப்போர் ஒருவகை, தேர்தலுக்கு காசு வாங்குவோர் ஒருவகை, இரெண்டும் உலகில் சம நீதி😂 -பேராசான் செவத்தி-
  4. உலக நாடுகள் அனைத்தும் - தம்பருக்கு கையை விரித்து விட்டன😂. நல்ல வேளையாக இங்கே கன்சேவேடிவ் கட்சி ஆட்சியில் இல்லை. இல்லாட்டில் எம்மையும் கொண்டுபோய் இதில் மாட்டி விட்டிருப்பார்கள்.
  5. நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் – ட்ரம்ப் எச்சரிக்கை! ஹார்முஸ் நீரிணையை பாதுகாக்க உதவ மறுத்தால் நேட்டோ நட்பு நாடுகள் மிகவும் மோசமான எதிர்காலத்தை எதிர்கொள்ள நேரிடும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும் முக்கிய கடல்சார் வழித்தடத்தை மீண்டும் திறப்பதற்கான அமெரிக்க முயற்சியை ஆதரிக்க ஐரோப்பாவை அவர் வலியுறுத்தினார். ஞாயிற்றுக்கிழமை பைனான்சியல் டைம்ஸுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப், வளைகுடா வழியாக எண்ணெய் ஏற்றுமதியால் பயனடையும் நாடுகள் நீர்வழியைப் பாதுகாக்க உதவ வேண்டும் என்று கூறினார். கடந்த மாத இறுதியில் அமெரிக்காவும் இஸ்ரேலும் ஈரான் மீது போரைத் தொடங்கின. இது தெஹ்ரானில் இருந்து பிராந்திய பழிவாங்கலைத் தூண்டியது. ஈரானிய ஆட்சி பதிலடியாக ஹார்முஸ் நீரிணையை மூட நடவடிக்கை எடுத்துள்ளது. இது உலகம் முழுவதும் எண்ணெய் விலைகளை உயர்த்தியுள்ளது மற்றும் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது பாரிய பொருளாதார அழுத்தத்தை உருவாக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. https://athavannews.com/2026/1468667
  6. Today
  7. வளைகுடா போரின் பின்னர் அமெரிக்க விமானப்படை அழித்த அறிக்கையினடிப்படையில், ஈராக்கின் மீதான யுத்தத்திற்கான யுக்தி கூறப்பட்டுள்ளது. Command, Control, Communication (C3), கட்டளைப்பீடத்திற்கும் படையினருக்கும் இடையேயான தொடர்பாடலை முறித்து ஒரு புலனற தாக்குதல் என்பதே அதன் சாராம்சம், அதில் நாலாவதாக கணனியினையும் இணைத்திருந்தார்கள். அந்த யுத்தத்தில் 300 இலக்குகள் அடையாளங்கண்டு தாக்கப்பட்டிருந்தது, ஈரான் யுத்தத்தில் செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் 2000 இலக்குகள் அடையாளம் காணப்பட்டு தாக்கப்பட்டது இருப்பினும் ஈரான் படையினர் தொடர்பாடல் முறிக்கப்படவேயில்லை, கட்டளைப்பீடமும் படையினரும் தொடர்பிலே காணப்படுகின்றனர், கமேனி கொல்லப்பட்ட பின்னரும் நடவடிக்கையில் தொய்வு ஏற்படவில்லை. ஈராக் போரின் பயன்படுத்தப்பட்ட அமெரிக்க உத்தி மற்றும் இஸ்ரேலின் உத்திகளிற்கு ஏற்ப தமது திட்டங்களை வடிவமைத்துள்ளார்கள். பாதுகாப்பான தொடர்பாடல், குறுக்கீடு செய்ய முடியாத சமிஞ்சைகளை பேணுதல், பல அடுக்கு கொண்ட கட்டளைப்பீடங்கள் தனித்தனியே இயங்க கூடியவாறான கட்டமைப்பு என, இதனை மொசைக் பாதுகாப்பு பொறிமுறை என அழைக்கிறார்கள். தலியினை வெட்டினால் முடிந்துவிடும் எனவும் ஒரே நாளில் 2000 மேலான செயற்கை நுண்ணறிவு துணை தொழில்னுட்ப தாக்குதல்கள் கூட கட்டமைப்பினை அசைக்க முடியவில்லை. பலமான எதிரிக்கெதிராக சம்ச்சீரற்ற தேய்மான போரினை தொடுத்தல், அதற்கு மாசே துங்கின் பலமான எதிரியினை வேகமாக அழிக்க தேவையில்லை அவனது பலத்தினை (Materials) சிறிது சிறிதாக சிதைத்து இறுதியில் தோற்கடித்தல் எனும் அடிப்படையில் யுத்தத்தினை தொடர முயலுகிறார்கள். இந்த போரினை நீண்ட காலத்திற்கு எடுத்து செல்ல திட்டமிட்டுள்ளது போல உள்ளது.
  8. வீதியோரம் . மலர் . .......... 12. தேரர்களின் ஆசிகள் பெற்ற பின்பு அவர்கள் வெளியே வந்து திருமணத்துக்காக தயார் செய்திருந்த தனியான மண்டபத்துக்குள் செல்கின்றனர். வெளியே ஒரு இளைஞர் கூட்டம் மேளதாள வாத்தியங்கள் முழங்க அவர்களது கலாசார ஆடைகள் அணிந்து அவர்களுக்கே உரித்தான நடனங்கள் மற்றும் குத்துக்கரணம் அடித்தல் போன்ற நிகழ்ச்சிகள் செய்கின்றனர். உள்ளே கால் வைக்கும் போதே சில சடங்குகள் செய்து அழைத்துப் போகின்றனர். அங்கு மேடையில் வெள்ளை விரிப்புகளின் மேல் பூக்கள், வெற்றிலை,தேங்காய்,கொடுவாகத்தி மற்றும் ஒரு சாடியில் தென்னம்பாளை எல்லாம் வைத்து பித்தளை லோட்டா செம்பும் இருக்கின்றது. ஒரு வெள்ளித்தட்டின் மேல் இருக்கும் வெள்ளைப் பீங்கான் மேல் இருவரும் புறங்கையால் ஒருவர் கை மீது ஒருவர் வைத்திருக்க ஒரு பெரியவர் வந்து அந்த லோட்டாவில் இருந்த நீரை இவர்களின் கைகளின்மேல் வார்க்கின்றார். பின் இருவரும் மாலை மாற்றிக் கொள்கின்றனர். அதன்பின் எல்லோருக்கும் பந்திவைத்து சாப்பாடு பரிமாறப்படுகின்றது. எல்லாம் முடிந்தபின் அதே மேளதாள வாத்திய வரவேற்புகளுடன் அவர்களுடைய “வீதியோரக்கடைக்கு”அழைத்து வரப்படுகின்றார்கள்.அப்பொழுது அந்த சோடனைகள், அலங்காரங்கள் எல்லாவற்றையும் பார்த்துப் பிரமித்துக் கொண்டே மணமக்கள் இருவரும் வருகிறார்கள். எல்லாம் ஒரு காரணகாரியத்துடன்தான் நடக்கின்றன போலும். இன்று காலை கண்முழிக்கும் போது கூட இப்படியெல்லாம் நடக்கும் என்று நினைக்கவேயில்லை. எதோ பிக்குமாரின் ஆசியுடன் மாலைமாற்றிவிட்டு கடைக்கு வந்து சிறிய கொண்டாட்டம் செய்யலாம் என்றுதான் நினைத்திருந்தார்கள். ஆனால் இன்று நடந்ததோ எந்த ஜென்மத்திலும் மறக்கமுடியாத பெரிய நிகழ்ச்சி. இவற்றின் பெரும் பங்கு பிள்ளைகள் யுகேந்திரனையும் சுஜிதாவையும் சேரும் என்று அவர்களுக்குத் தெரிந்திருந்தது. இவ்வளவுநாட்கள் பட்ட துன்பம் எல்லாவற்றையும் இந்நிகழ்ச்சி மறக்கடித்து விட்டது. இந்த நாளுக்காகத்தானோ இவ்வளவுநாளும் அத்துணை துன்பப் பட்டிருந்தோம் என்று மேகலை கண்ணீர் மல்க விநோத்திடம் சொல்கின்றாள். இருவரும் அங்கு வந்த பிள்ளைகளை அனைத்து உச்சி முகந்து முத்தமிடுகின்றனர். நள்ளிரவுவரை நடந்த கொண்டாட்டம் நிறைவடைகிறது. பின்பு அவர்கள் கடைக்குள் சென்று அந்த இருபெண்களுக்கும் அந்த வாலிபனுக்கும் நன்றி கூறிவிட்டு வீட்டுக்குள் செல்கின்றனர். சில மாதங்கள் வழமைபோல் போயின. கடந்த ஒரு வாரமாக மழை பெய்து ஓய்ந்து விட்டிருந்தது. இன்றுதான் வானம் கொஞ்சம் வெளிச்சிருக்கு. அன்று பின்னிரவு நேரம் ஜீப்புகளும் ட்ரக்குகளும் புழுதிபறக்க வேகமாய் வந்து கடைக்கு முன்னால் நிக்கின்றன.திபு திபுவென போலீசார் இறங்கி வீதிகளை மறித்து நிக்கின்றனர். சிலர் கடைக்குள்ளும் வேறு சிலர் வேகமாய் ஓடி அங்கு நெடுநாளாய் நிக்கின்ற லொறிக்குள் ஏறி உள்ளே செல்கின்றனர். அவர்கள் அங்கு இருந்த பெண்களையும் அவர்களுடன் இருந்த ஆண்களையும் அவர்கள் இருந்த அதே கோலங்களுடன் அரைகுறை ஆடைகளுடன் இழுத்துவந்து வீதியோரத்தில் முட்டிகால் போட்டு இருத்திவிட்டு சிலர் அவர்களுக்கு காவல் இருக்கின்றார்கள்.இரு போலீசார் லாரியின் முன்பக்கத்தில் ஏறி அதனுள் இருந்து சாராயப் போத்தல்கள், சிகரெட்டுகள்,சுருட்டுக்கட்டுகள்,போதை வஸ்துக்கள், பொட்டலங்கள் பணக்கட்டுகள் என்று அள்ளிக் கொண்டு வந்து அங்கே துணியொன்று விரித்து அதில் போடுகிறார்கள்.அங்குதான் அந்தப் பையன் தனது சாமான்களை வைத்திருப்பதும் தங்கிறதுமாய் இருந்தவன்.இப்போது அவனையும் அங்கு காணவில்லை. ஒருவேளை காட்டுக்குள் ஓடியிருக்கலாம். அங்கிருந்து கிளம்பிய வாகனங்களையும் நன்றாக சோதனை செய்துவிட்டு அனுப்பிவிடுகின்றனர்.கடைக்குள் போனவர்களும் வெளியே வந்து அங்கு தப்பாக எதுவுமில்லை என்று சொல்லிவிட்டு மற்றவர்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள். அப்போதுதான் விநோதன் கவனிக்கிறான் அவர்களில் சிலர் பலநாட்களாக கடைக்கு வந்து சகாயமாக சாப்பிட்டு எல்லோருடனும் பழகி அளவுலாவி சென்றிருக்கின்றனர்.அவர்கள் ரகசியப்பொலிஸ் என்று இப்பதான் அவனுக்கு புரிந்தது. நல்லகாலம் நாங்கள் ஒரு தப்பான காரியமும் செய்யவில்லை என்று ஆறுதல் பெருமூச்சு விடுகிறான். கணநேரமாகிவிட்ட படியால் அவர்களில் ஒரு பெண் அதிகாரி கடைக்கு வந்து மணிமேகலையிடம் அங்கு பிடித்து வைத்திருப்பவர்களுக்கு தேநீரும் சிற்றூண்டியும் குடுக்கச் சொல்கிறாள். மேகலையும் யுகேந்திரனும் அவற்றை அங்கு எடுத்து செல்கிறார்கள்.அப்போது நடுவில் இருக்கும் அந்தப் பெண்களில் ஒருத்தி ரகசிமாய் மேகலையிடம் அந்தப்பையனை கவனமாய் பார்த்துக்கொள்.அவன் மிகவும் நல்லவன்.அவன் பிழைப்புக்காக அவற்றை விற்கிறான். ஆனால் அவன் அவை எதையும் பாவிப்பதில்லை. எங்களிடம் கூட ஒரு சகோதரனாகத்தான் பழகி வருகிறான். அவன் குடும்பம் மிவும் எளிமையானது.உன்னால் முடிந்தால் அவனை ஏதாவது ஒரு வேளையில் சேர்த்து விடு என்று துணியால் வாயை மூடிக்கொண்டு சொல்கிறாள்.மேகலையும் அது எனக்கும் தெரியும். அவனை நான் பார்த்துக் கொள்கிறேன். இங்கு அவனைக் காணவில்லை எங்கு போனானோ வரட்டும் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டு உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா என்று கேட்கிறாள். அதுக்கு அவள் அது தேவையில்லை, குற்றத்தை ஒப்புக்கொண்டால் எதாவது தண்டப்பணம் கட்டிவிட்டு போகச்சொல்வார்கள் அவ்வளவுதான். — அப்படியென்றால் உனக்கு திருந்தி வாழுற எண்ணமே இல்லையா....... — சின்ன சிரிப்பு சிரித்தவள், இனி திருந்தி என்ன செய்வது, இது உடம்புக்கும் தேவையாய் இருக்கு அவ்வளவு பழகி விட்டது கூடவே என்னை நம்பி இருக்கிற மூன்று சீவன்களுடைய பசியையும் போக்குது என்கிறாள். யுகேந்திரன் பேணி தட்டுகள் எல்லாம் எடுத்துக் கொண்டு வர இருவரும் கடைக்கு வருகின்றனர்.சிறிது நேரத்தில் அவர்கள் எல்லோரையும் ஏற்றிக்கொண்டு வாகனங்கள் செல்கின்றன. ஒரு ட்ரக் அந்த பழுதடைந்த லொறியையும் கட்டி இழுத்துக் கொண்டு போகிறது.அதன் பின் அந்தப் பெண் அதிகாரி கடைக்கு வந்து சிற்றூண்டிக்கான பணத்தை செலுத்திவிட்டுப் போகிறாள்.................! மலர் . ......... 🫵 12.
  9. மொஜ்தபா கமேனியை, அலி கமேனியே விரும்பவில்லை? Mar 16, 2026 - 09:35 AM ஈரானின் முன்னாள் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி, தனது மகன் தனக்குப் பதிலாகப் பதவியேற்பது குறித்துத் தயக்கங்களைக் கொண்டிருந்ததாக அமெரிக்காவின் புதிய உளவுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவின் சிபிஎஸ் நியூஸ் பல ஆதாரங்களை மேற்கோள் காட்டி இதனைத் தெரிவித்துள்ளது. தனது மகன் மொஜ்தபா கமேனி அதிகாரத்தைக் கைப்பற்றுவது குறித்து கமேனி கவலை கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்படுகின்றது. மொஜ்தபா அதிக புத்திசாலி இல்லை என்றும், தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் கருதப்பட்டதே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. மறைந்த அதி உயர் தலைவர் தனது மகனின் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சினைகள் இருப்பதை அறிந்திருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தகவல்கள் ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அவரைச் சார்ந்த ஒரு சிறிய வட்டத்திற்கு பகிரப்பட்டுள்ளதாக சிபிஎஸ் தெரிவித்துள்ளது. 56 வயதான அயதுல்லா மொஜ்தபா கமேனி, கடந்த வார இறுதியில் ஈரானின் புதிய அதி உயர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmsnor2s0007356p630vuguu
  10. கியூ.ஆர் குறியீடு முறையில் எரிபொருள் விநியோகம் : பொலிஸாரின் விசேட அறிவுறுத்தல் 16 Mar, 2026 | 09:07 AM நாடு முழுவதும் கியூ.ஆர் குறியீடு முறையிலான எரிபொருள் விநியோக முறையை பொதுமக்கள் பயன்படுத்தும் போது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுமாறு அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எவ். யூ வூட்லர் தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், கியூ.ஆர் குறியீடு முறையைத் தவறாகப் பயன்படுத்துபவர்கள், அதில் மோசடி செய்பவர்கள் அல்லது அதன் நடைமுறைப்படுத்தலுக்கு இடையூறு விளைவிப்பவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் சட்ட நடவடிக்கை எடுப்பார்கள். எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் போது பொதுமக்கள் பொறுமையுடனும், பொலிஸாருக்கு ஒத்துழைப்புடனும் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நாடு முழுவதும் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் நடமாடும் ரோந்துப் பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. அத்துடன், ஒழுங்கைப் பராமரிக்கவும் இத்திட்டத்திற்கு ஆதரவளிக்கவும் மேலதிக உத்தியோகத்தர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார். https://www.virakesari.lk/article/241067
  11. ஹோர்முஸ் நீரிணையை திறக்க சீனாவிடம் உதவி கோரிய ட்ரம்ப் Mar 16, 2026 - 07:36 AM ஹோர்முஸ் நீரிணையில் தற்போது கப்பல் போக்குவரத்துக்கு ஏற்பட்டுள்ள தடைகளை நீக்க சீனா உதவும் என தாம் எதிர்பார்ப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால் ட்ரம்ப் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சீனாவின் 90% எண்ணெய் இந்த நீரிணை வழியாகவே வருவதாகவும், அதனால் சீனா இந்த விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் ஊடகங்களுக்கு குறிப்பிட்டார். எதிர்வரும் மார்ச் மாத இறுதியில் திட்டமிடப்பட்டிருந்த சீனா ஜனாதிபதியுடனான சந்திப்பு பிற்போடப்படலாம் என அவர் கூறிய நிலையில் அதற்கான காரணங்களை வௌிப்படுத்தியிருக்கவில்லை. அந்த சந்திப்புக்கு முன்னர் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு சீனா நடவடிக்கை எடுக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சீனா, ஈரானின் எண்ணெய் தயாரிப்புகளில் சுமார் 90 சதவீதத்தை கொள்வனவு செய்கிறது. ஆனால், இது சீனாவின் மொத்த எண்ணெய் கொள்முதலில் சுமார் 12 சதவீதம் மட்டுமே ஆகும். வொஷிங்டனைச் சேர்ந்த உத்தியோகபூர்வ மற்றும் சர்வதேச ஆய்வுகளுக்கான மையம், சீனாவின் எண்ணெய்ப் போக்குவரத்தில் சுமார் 40% மட்டுமே ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதாகத் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmmsjl9s00004356pkmuensmc
  12. பொன் அணிகளின் போர் வெற்றிதோல்வியின்றி முடிவு 15 Mar, 2026 | 01:32 AM (மானிப்பாய் நிருபர்) யாழ். வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் யாழ். சென் பட்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பெருஞ்சமர் 3 நாள் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்வியின்றி நேற்று முடிவடைந்தது. கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட யாழ்ப்பாணம் கல்லூரி முதல் நாள் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 176 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென் பட்றிக்ஸ் கல்லூரி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 40 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த சென் பட்றிக்ஸ் கல்லூரி சகல விக்கெட்களையும் இழந்து 225 ஓட்டங்களைப் பெற்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி 2ஆவது இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 99 ஓட்டங்களை பெற்ற நிலையில் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவடைந்தது. மூன்றாம் நாளான நேற்றைய தினம் (14) தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்த யாழ்ப்பாணம் கல்லூரி 9 விக்கெட்களை இழந்து 246 ஓட்டங்களை பெற்ற நிலையில் துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது. 198 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய சென் பெட்றிக்ஸ் கல்லூரி 4 விக்கெட்களை இழந்து 106 ஓட்டங்களை பெற்றிருந்தபோது ஆட்டம் முடிவுக்கு வந்தது. எண்ணிக்கை சுருக்கம் யாழ்ப்பாணம் கல்லூரி: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 176 (எஸ்.கே. ஹமிஷ் ஹாமிஷன் 61, உதயகுமார் ஜோன்சன் 41, உதயராஜா கென்றிக்சன் 31, மதியழகன் ஸ்டீவ் ஆதித்யா 25 - 4 விக்., ஜெபிசன் கெமிஷன் 29 - 3 விக்.) சென். பட்றிக்ஸ் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 225 (ஜெயராஜரூபன் டினுல்சன் (50), சிவனாதன் ஷெஹான் 45, நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 42, வாசுதேவன் விஷ்ணுகோபன் 82 - 5 விக்.), ஹாமிஷ் ஹாமிஷன் 51 - 3 விக்.) யாழ்ப்பாணம் கல்லூரி 2ஆவது இன்: 246 - 9 விக். டிக்ளயார்ட் (ஹாமிஷ் ஹாமிஷன் 82, சசிகரன் அஷ்மின் 49. கேதீஸ்வரன் ஹரிஷன் 34, பிரேமநாயகம் மதுசன் 46 - 3 விக்., ஜெபின்சன் கெமிஷன் 66 - 3 விக்.),Travel Guides & Travelogues சென். பட்றிக்ஸ் 2ஆவது இன்: - வெற்றி இலக்கு 198 ஓட்டங்கள் - ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 106 - 4 விக். (நிஷாந்தன் ஹரின் ஏட்றியன் 40, சிவநாதன் ஷெஹான் 23, ஹாமிஷ் ஹாமிஷன் 32 - 3 விக்.) சிறப்பு விருதுகள் சிறந்த சகலதுறை வீரர்: ஹமிஷ் ஹாமிஷன் (யா.க.) சிறந்த துடுப்பாட்ட வீரர்கள்: ஹமிஷ் ஹாமிஷன் (யா.க.), ஹரீன் ஏட்றியன் (செ.ப.) சிறந்த பந்து வீச்சாளர்கள்: ஏ. விஷ்ணுகோபன் (செ.ப.), ஜெபிசன் கெமிஷன் (யா.க.) சிறந்த களத்தடுப்பாளர்கள்: அன்ரனி ரித்மன் அபினாஷ் (யா.க.), பிரேமநாயகம் மதுசன் (செ.ப.0) சிறந்த இணைப்பாட்ட ஜோடி: ஹரீன் ஏட்றியன் - சிவநாதன் ஷெஹான் )செ.ப.) ஆட்டநாயகன்: ளு.மு ஹமிஷ் ஹர்மிஷன். (யா.க.) சிறந்த விக்கெட் காப்பாளர்: மு.ஹரிஷன் (யா.க.) ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய வீரர்: டினு லக்ஷன் விசேட விருதுகள்: எஸ். சங்கீத் (யா.க.), ஸ்ரீவ் ஆதித்தியா (செ.ப.) https://www.virakesari.lk/article/240975
  13. உரத்திற்கும் QR குறியீடு அறிமுகமாகும் அச்சம் - சஜித் குற்றச்சாட்டு Mar 15, 2026 - 09:13 PM எதிர்வரும் காலங்களில் விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படும் அச்சம் காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். கேகாலை தேர்தல் தொகுதி அலுவலக திறப்பு விழாவில் இன்று (15) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இதனை கூறினார். நாட்டில் பொருளாதார பிரச்சினைகள் நிலவும் நிலையில் அரசாங்கம் தரமற்ற நிலக்கரியையே இறக்குமதி செய்துள்ளது. நேற்றைய தினம்கூட உற்பத்தி செய்யப்பட வேண்டிய மின்சாரம் 135 மெகாவோட்டால் குறைந்து காணப்படுகின்றன. மின் நிலையத்தின் தரவுகளின்படி அரசாங்கம் இறக்குமதி செய்த நிலக்கரி அனைத்தும் தரமற்றவையாக காணப்படுகின்றன. அரசாங்கத்திற்கு இவை பிரச்சினையாகத் தெரியாவிட்டாலும், நிலக்கரி மின் நிலையத்தால் தேவையான மின்சாரம் உற்பத்தி செய்ய முடியாத நிலை காணப்படுவதனால், எரிபொருள் மின் நிலையங்களை நாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளன. இந்த நிலக்கரி மோசடியால் இறுதியில் மின்சாரப் பயனாளர்களே அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். இதுமட்டுமின்றி தரமற்ற மருந்துகளும் நாட்டிற்கு கொண்டுவரப்படுகின்றன. இவ்வாறு போகும் போக்கைப் பார்த்தால், விவசாயிகளின் உரங்களுக்கும் QR குறியீடு வைக்கப்படுமோ என்று அச்சம் காணப்படுகின்றது. இந்த அரசாங்கத்தின் ஒழுங்கற்ற, திறனற்ற மற்றும் ஊழல் நிறைந்த ஆட்சிக்கு எதிராக மக்கள் அணிதிரள வேண்டும். சுற்றுச்சூழல் பாதிப்பு, தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தியது உண்மையை உணர்த்துவதற்காகவே என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmmrx9rzz001r356pcgdq8xwz
  14. மத்திய கிழக்குப் போரை உடனடியாக நிறுத்துமாறு போப் வேண்டுகோள் விடுத்துள்ளார் Published By: Vishnu 15 Mar, 2026 | 09:30 PM மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் ஈரான்-இஸ்ரேல் மோதலில் ஏராளமான அப்பாவி உயிர்கள் இழக்கப்படுவது மற்றும் பொதுமக்கள் அனுபவிக்கும் துன்பங்கள் குறித்து போப் தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார், மேலும் சண்டையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர அழைப்பு விடுத்துள்ளார். செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் வாராந்திர திருப்பலியின் போது போப் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார், போர் மூன்றாவது வாரத்தில் நுழைந்ததால், ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர், மேலும் பலர் "போரின் பயங்கர வன்முறையால்" இடம்பெயர்ந்துள்ளனர் என்று அவர் கூறினார். "கடந்த இரண்டு வாரங்களாக, மத்திய கிழக்கு மக்கள் போரின் கொடூரமான வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்று போப் கூறினார், மோதலுக்குப் பொறுப்பான அனைத்து தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். "கிறிஸ்தவர்கள் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அனைத்து நல்லெண்ண மக்களின் சார்பாக, இந்த மோதலுக்குப் பொறுப்பான தரப்பினரிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்: தயவுசெய்து போரை நிறுத்துங்கள்!" என்று அவர் கடுமையாக வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/241056
  15. இஸ்ரேலிய தாக்குதலினால் லெபனானில் 850 பேர் பலி Mar 15, 2026 - 08:25 PM இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக லெபனானில் இதுவரையில் 850 பேர் கொல்லப்பட்டுள்ளனர். லெபனான் சுகாதார அமைச்சு வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆம் திகதி முதல் இஸ்ரேல் லெபனானில் தாக்குதல் நடத்தி வரும் நிலையிலேயே குறித்த அறிக்கை வௌியாகியுள்ளது. குறித்த தாக்குல்கள் காரணமாக இதுவரை அங்கு 2,105 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmmrvji2k001p356p26apa47e
  16. 14 மாவட்டங்களுக்கு அதிகளவில் வெப்பம்! Mar 15, 2026 - 06:22 PM நாட்டில் நிலவும் அதிக வெப்பத்துடனான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் மொனராகலை, மன்னார், அநுராதபுரம் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் நாளை (16) வெப்பச் சுட்டியானது மனித உடலுக்கு உணரப்படும் கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் காணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பொதுமக்கள் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த சந்தர்ப்பங்களில் அதிக நீரை அருந்துவது, வயல் வௌிகள் போன்ற இடங்களில் தொழிலில் நீண்ட நேரம் ஈடுபடுதலை தவிர்த்தல், வயோதிபர்கள் மற்றும் நோயாளிகள் வௌியில் செல்வதை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmmrr3nqp001m356py8h4issr
  17. எரிபொருள் நெருக்கடி: நான்கு நாள் வேலை வாரம் குறித்து அரசின் ஆலோசனை Published By: Vishnu 16 Mar, 2026 | 04:49 AM இலங்கையில் நிலவும் எரிபொருள் நெருக்கடிக்கு மாற்று தீர்வாக வாரத்தில் நான்கு நாள் வேலை முறையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான விசேட கலந்துரையாடல் ஜனாதிபதி தலைமையில் திங்கட்கிழமை (16) பிற்பகல் 3.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அரசுத் துறைகளின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், அத்தியாவசிய சேவைகளுக்கான எரிபொருள் விநியோகம் தொடர்பான முன்மொழிவுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நான்கு நாள் வேலை வாரத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படக்கூடியதால், அதற்கான பொருத்தமான பரிந்துரைகளையும் முன்வைக்குமாறு துறைத் தலைவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/241061
  18. பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் - பிரதமர் Published By: Vishnu 15 Mar, 2026 | 10:33 PM பாடசாலைகளில் நடத்தப்படும் விழாக்கள் பெற்றோருக்குப் பொருளாதாரச் சுமையை ஏற்படுத்தாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் எனவும், ஆசிரியர் மற்றும் அதிபர் நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது எவ்விதத் தயக்கமுமின்றி அவற்றை ஏற்றுப் பணிகளைப் பொறுப்பேற்க வேண்டும் எனவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அத்துடன், 2026ஆம் ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலை அபிவிருத்திப் பணிகளுக்காக முறையாகப் பயன்படுத்துமாறும் அவர் அறிவுறுத்தினார். புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து ஹம்பாந்தோட்டை, தங்காலை மற்றும் வலஸ்முல்ல கல்வி வலயங்களைச் சேர்ந்த அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களைத் தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுத் நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை (15) கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர், 2027ஆம் ஆண்டில் 2ஆம் மற்றும் 6ஆம் தரங்களுக்காகப் புதிய கல்விச் சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தவுள்ளோம். தற்போது 6ஆம் தரத்தில் உள்ள மாணவர்களை இப்புதிய பாடத்திட்டத்திற்குள் உள்வாங்குவது குறித்து ஆராய ஒரு குழுவினை நியமித்துள்ளோம். அக்குழுவின் அறிக்கையின்படி எதிர்கால நடவடிக்கைகள் அமையும். வகுப்பறைகளின் அடிப்படை வசதிகள், வகுப்பறைகளை அபிவிருத்தி செய்தல் மற்றும் கல்விச் சீர்திருத்தம் தொடர்பான பணிகளை முன்னெடுத்து வருகின்றோம். ஆரம்பப் பிரிவு வகுப்பறையில் 25-30 மாணவர்களும், இரண்டாம் நிலைப்பிரிவில் 35 மாணவர்கள் வரையும் உள்வாங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். எக்காரணம் கொண்டும் சுற்றறிக்கைகளுக்குப் புறம்பாக மாணவர்களைப் பாடசாலைகளுக்கு இணைத்துக்கொள்ளக் கூடாது. வகுப்பறைகளை அபிவிருத்தி செய்யும்போது, அவை நடைமுறைச் செயற்பாடுகளுக்கு உகந்த வகையில் அமைவதை உறுதிப்படுத்துவதற்கான திட்டங்களைப் பொறியியல் பிரிவினர் தற்போது தயாரித்து வருகின்றனர். பாடசாலைகளில் நிலவும் சில பிரச்சினைகளை மாகாண சபைகள் மற்றும் பிரதேச சபைகள் மட்டத்திலேயே தீர்த்துக்கொள்ளக் கூடியவையாகும். சுகாதார வசதிகளை மேம்படுத்துவது முதல் அனைத்துப் புனரமைப்புப் பணிகளையும் தரமான முறையில் முன்னெடுக்குமாறு நாம் ஆலோசனை வழங்கியிருக்கின்றோம். 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் பாடசாலைகளின் அபிவிருத்திக்கான நிதியினை ஏற்கனவே ஒதுக்கீடு செய்துள்ளோம். எனவே, கட்டமைப்புக் குழுக்களின் ஊடாக முறையான திட்டங்களைத் தயாரித்து, மாவட்ட அபிவிருத்திக் குழுவின் அனுமதியுடன் அவற்றைச் சமர்ப்பியுங்கள். ஒதுக்கப்பட்ட நிதியைப் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளுக்காகச் சரியான முறையில் பயன்படுத்துவதை உறுதிப்படுத்துங்கள். 2026ஆம் ஆண்டில் அனைத்துப் பாடசாலைகளுக்கும் Smart Board மற்றும் இணைய வசதிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ பெற்றோரிடமிருந்து நிதி வசூலிக்க வேண்டாம். ஒவ்வொரு பாடசாலைக்கும் அனுமதிக்கப்பட்ட வருடாந்த நிதி ஒதுக்கீடு இருக்கின்றது. அதற்கு மேலதிகமாகப் பெற்றோர்களிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளாதீர்கள். குறிப்பாகப் பாடசாலை வைபவங்களின் சுமையைப் பெற்றோர் மீது சுமத்தாத விதத்தில் அவற்றை ஏற்பாடு செய்துகொள்ளுங்கள். பல வருடங்களாக ஆசிரியர், அதிபர் வெற்றிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவாகப் பெருமளவு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. விசாரணையில் இருந்த வழக்குகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தற்போது நாம் 23,000 ஆசிரியர்களை முறையாகச் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்கான போட்டிப் பரீட்சைகள் ஏப்ரல் இறுதி அல்லது மே ஆரம்பத்தில் நடைபெறவுள்ளன. அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நாம் அறிவித்தல் விடுத்திருந்த போதிலும், மிகக் குறைந்த எண்ணிக்கையிலானவர்களே விண்ணப்பித்துள்ளார்கள். சம்பளப் பிரச்சினை ஒன்று இருப்பதை நாம் அறிவோம். அதிபர் சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகள் குறித்து ஆராயச் சம்பளக் குழுவிற்குப் பரிந்துரைகளை முன்வைக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். எனினும், பதவி நியமனம் வேண்டிப் போராட்டம் நடத்துபவர்கள், நியமனங்கள் அல்லது இடமாற்றங்கள் வழங்கப்படும்போது அவற்றைப் பொறுப்பேற்கத் தயங்குகிறார்கள். அவர்களுக்குத் தனிப்பட்ட பிரச்சினைகள் இருக்கக்கூடும் என்பதை நாம் அறிவோம்; ஆயினும் பதவியை ஏற்று கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளுங்கள். அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தித் தாம் விரும்பிய இடங்களுக்குச் செல்ல முடியும் என்ற ஒரு கருத்து நிலவி வருகின்றது. இதனால் ஒட்டுமொத்தக் கல்வித்துறையிலும் பாரிய பிரச்சினைகள் உருவாகியுள்ளன. சிலர் அதிபர் சேவையில் நிலவும் வெற்றிடங்களுக்கு விண்ணப்பிக்காது, ஒரே பாடசாலையில் பிரதி அதிபர்களாகவே தொடர்ந்தும் கடமையாற்றும் நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும் அதற்கு இடமளிக்க இயலாது. இது ஒரு கௌரவமான சேவையாகும். ஆகையினால், அதிபர் சேவையின் தொழில்சார் கௌரவத்தை உறுதிப்படுத்துவதற்கான விசேட அறிக்கை பாராளுமன்றக் கல்விச் சபையூடாகத் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கத் தயார்படுத்தப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும்போது, அந்தந்தப் பிரிவுகளில் நிலவும் நிலைமைகளை எதிர்வு கூறி, கட்டமைப்புக் குழுக்கள் ஊடாக அத்திட்டங்களைச் சமர்ப்பிக்குமாறு நாம் முன்மொழிந்துள்ளோம். அத்துடன், மாணவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கத்தின் கொள்கைகள் அல்லது தீர்மானங்கள் அறிவிக்கப்படும் வரை காத்திராது, கோட்ட மட்டத்திலும் மாகாண மட்டத்திலும் துரித தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், எனப் பிரதமர் வலியுறுத்தினார். இந்நிகழ்வில் காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் அரவிந்த செனரத், பாராளுமன்ற உறுப்பினர்களான நிஹால் கலப்பத்தி, அதுல வெலந்தகொட மற்றும் மாகாண, வலயக் கல்வி அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் எனப் பெருமளவிலானோர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/241057
  19. 98வது ஒஸ்கார் விருதுகள்! Mar 16, 2026 - 06:37 AM சினிமா உலகில் தலைசிறந்த விருதாக கருதப்படும் ஒஸ்கார் விருதுகள் அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடைபெறும் உலகப்புகழ்பெற்ற திரைப்பட விருது விழாவாகும். திரைத்துறையில் மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் கலைஞர்கள் மற்றும் படங்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்த விருதினை பெறுவது உலகெங்கும் திரைப்பட கலைஞர்களின் கனவாக உள்ளது. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள் என பல்வேறு பிரிவுகளில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், 98-வது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹொலிவுட்டில் உள்ள டொல்பி தியேட்டரில் இலங்கை நேரப்படி, அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக ஆரம்பமானது. இந்த விழாவை கெனன் ஓ பிரையன் தொகுத்து வழங்குகிறார். போர் சூழலுக்கு மத்தியில் ஒஸ்கார் விருதுகள் விழா நடைபெறும் நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் நகரம் முழுவதும் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. விருந்தினர்கள் பல கட்ட சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ஒஸ்கார் விழாவிற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எதுவும் இல்லை என லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த விழாவின் முதல் விருதாக சிறந்த துணை நடிகைக்கான ஒஸ்கார் விருது, வெப்பன்ஸ் (Weapons) படத்தில் நடித்த ஏமி மெடிகனுக்கு வழங்கப்பட்டது. சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருது கே-பெப் டிமன் ஹண்டர் படத்திற்கும், சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருது தி கேர்ள் ஹூ கிரைட் பியர்ல்ஸ் குறும்படத்திற்கும் வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகருக்கான ஒஸ்கார் விருது சீன் பென் Sean penn) க்கு வழங்கப்பட்டுள்ளது. மைக்கல் பீ. ஜோர்தன் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை சின்னர்ஸ் படத்திற்காக பெற்றுள்ளார். சின்னர்ஸ்' படத்தின் இசைக்காக லுட்விக் கோர்டன்சன் மீண்டும் ஒரு ஒஸ்கார் விருதை வென்று தமது சாதனையை தொடர்கின்றார். சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை வென்ற முதல் பெண்மணி என்ற பெருமையைப் துரால்ட் அர்காபா பெற்றுள்ளார். 'சின்னர்ஸ்' திரைப்படத்தில் படத்தின் ஒளிப்பதிவிற்காக அவருக்கு இந்த ஒஸ்கார் விருது கிடைத்துள்ளது. அதேநேரம் போல் தோமஸ் அன்டர்ஸன் வன் பெட்டல் ஆப்டர் எனத படத்திற்காக சிறந்த இயக்குனராக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் அந்த படம் சிறந்த படத்திற்கான ஒஸ்கார் விருதையும் வென்றுள்ளது. இதுதவிர ஜெஷி பக்லே சிறந்த நடிகைக்கான ஒஸ்கார் விருதை ஹம்நட் திரைப்படத்திற்காக வென்றுள்ளார். https://adaderanatamil.lk/news/cmmsher800001356px5718gxw
  20. ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரான்ஸும் இத்தாலியும் ஈரானுடன் எரிபொருளிற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக கூறுகிறார்கள், சாட்சிக்காரனின் காலில் விழுவதா அல்லது சண்டைக்காரனின் காலில் விழுவதா எனும் நிலை ஏற்பட்டுள்ளது. இது உக்கிரேன் இரஸ்சிய போரில் ஒரு திருப்பு முனையாக அமையலாம். துவிச்சக்கரவண்டி இல்லை. மின்சார கார் வாங்குவதனை பற்றி சிந்திக்கிறேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்......, நீங்கள் துவிச்சக்கரவண்டியா?
  21. Cold war (பனிப்போர்) என்பது இரண்டு எதிரிகள் ஒன்றோடொன்று நேரடியாக மோதாமல் மறைமுக போர், Hot war என்பது நெரடியான போர் எனும் பதத்திலேயே இந்த சொல்லாடல் பயன்படுத்தப்படுகிறது. இரஸ்சியா ஐரோப்பிய நாடுகளிடையே நடைபெறும் தற்போதய பிணக்கு ஒரு பனிப்போராகும். தற்போது ஈரான் இஸ்ரேலிற்கிடையே நிகழும் போர் நேரடி யுத்தம். ஈரான் இதுவரை காலமும் இஸ்ரேலுடன் நேரடியாக மோதாமல் ஈரானிற்கெதிராக ஒரு பலச்சமனிலைகளை உருவாக்கி வைத்திருந்தது, கமாஸ், கிஸ்புல்லா, குத்தீஸ் என, இதனை பயங்கரவாத சமநிலை என கூறுகிறார்கள். இந்த போர் முடிவில் இஸ்ரேலும் அதே போல ஒரு உத்தியினை கையாளக்கூடும் என்பதனையே பனிப்போர் எனும் பதமூலம் குறிப்பிட்டிருந்தேன். பொருளாதாரத்தினை பொருள்கள் சேவைகள் என இரண்டாக பிரிக்கின்றார்கள். இதில் தவறொன்றும் இல்லை, பொதுவாக பயன்படுத்தும் சொல்கள் அதன் பதத்தினூடில்லாமல் அது பயன்படுத்தப்படும் நிகழ்வில் அது தொடர்பான வேறான ஒரு புரிதல் வருவதுண்டு.
  22. ஆனால், அண்ணருக்கு சகல விதமான வாடிக்கையாளர்களிடம் இருந்து payment எல்லாம் சரியாக பைசல் பண்ணப்பட்டதாக book-keeping report வந்தாலே வெற்றிதான். 🤣 ImgBBIMG 7311 hosted at ImgBBBild IMG 7311 gehostet auf ImgBB
  23. ஆம்… நான் கதைத்த பலரும் இப்படித்தான் சொன்னார்கள். டெல்லி விசாரணையின் பின் எவரையும் சந்திக்காமல் இரவே சென்னை திரும்பியுள்ளார் விஜை. எனவே பிஜேபி கூட்டணி என திமுகதான் புரளி கிளப்பி உள்ளது போல் தெரிகிறது.
  24. உங்களால் முடியும் ! சோம.அழகு நானும் வாழ்க்கையில் ‘தன்னம்பிக்கை’ கட்டுரைகள், ‘சுய முன்னேற்ற’ கட்டுரைகள் எல்லாம் வரைவேன் என்று தப்பித்தவறி கூட கனவு கண்டதில்லை. But here we are மக்களே! இக்கட்டுரை விளிம்பு நிலையில் அல்லாத அனைத்து மனித உயிர்களுக்குமானது. ‘வாழ்வில் உருப்பட வேண்டுமா? இக்கட்டுரையை உடனடியாக வாசியுங்கள்’ என்றெல்லாம் கூவி அழைப்பது சற்றே மிகையாக இருக்கும். இக்கட்டுரை சிலரைச் சிந்திக்க வைக்கலாம்; ஆமோதிக்க வைக்கலாம்; இன்னும் சில பெருந்தகைகளைக் கூனிக் குறுகி நாண வைக்கலாம்; வேறு சிலரைத் துணுக்குறச் செய்யலாம்….. அல்லது இதன் சாரத்தைத் தூசியைப் போலத் தட்டி விட்டு மீண்டும் தமது வழக்கத்தைத் தொடரவும் வைக்கலாம். இவற்றில் ஏதோ ஒன்றை நிச்சயமாகச் செய்யும். ஏனெனில்… இவ்வளவுதானே சாத்தியக் கூறுகள்! அதி முக்கியமான பழக்கம் ஒன்றைக் கற்றுக் கொடுப்பதே இவ்வெழுத்தின் நோக்கம் - ஒரு குறிப்பிட்ட பொருளை வாங்குவது, அதுவும் காசு கொடுத்து. அக்’குறிப்பிட்ட’ பொருளை உருவாக்கியவரிடமே நேராகச் சென்று ‘எனக்கு ஒன்று வேண்டும்’ (உட்பொருள் : இலவசமாக) எனக் கூச்சமில்லாமல் மானமில்லாமல் கேட்டு வைப்பதற்குப் பதில் இன்னொரு உன்னதமான மரியாதையான வழியின் மூலம் அப்பொருளை அடையலாம். அதற்கான கையேடுதான் இக்கட்டுரை. இதற்கு இரு வழிகள் உள்ளன. ஒன்று அதற்கே உரித்தான பிரத்யேகக் கடைக்குச் செல்லலாம்; அல்லது இணையத்தில் பணிப்பை(order) கொடுக்கவும் செய்யலாம். அடுத்த கட்ட வழிமுறைகளைப் படிப்படியாகக் கடக்க ஓரளவு என்னால் இயன்ற வரை உதவுகிறேன். ஆரம்பிக்கலாங்களா? வேண்டிய அப்பொருளைத் தேர்வு செய்த பின், (ஆண்கள் எனில்) காற்சட்டையின்/ (பெண்கள் எனில்) கைப்பையின் எந்தப் பகுதியில் பணப்பை(wallet/purse) இருக்கிறது என்று அய்யனாரிலிருந்து அல்லா வரை அனைத்து தெய்வங்களையும் ஒரு முறை கும்பிட்டுவிட்டு இடது வலது மூளைகளைக் கசக்கிப் பிழிந்து யோசிக்கவும். விடையைக் கண்டெடுத்துத் தந்த அதே மூளையிடம் நமது கையை அத்திசையில் கொண்டு செல்ல வேண்டி ஆணையிடவும். பலிக்கவில்லை எனில் இறைஞ்சி மன்றாடவும். அதற்கும் மசியவில்லை எனில், ‘மூளையை மீறிச் செயல்பட முடிகிறதா?’ (overriding brain mechanisms) என்பதைப் பரிசோதித்துப் பார்க்கும் வகையில் கையைப் பணப்பையை நோக்கிக் கொண்டு செல்லவும். பின்னர் ஒரு நொடி நம்மை நாமே ஜெல்லி மீனாக நினைத்து எதையும் யோசிக்காமல் பணப்பையைத் தொட்டு விட வேண்டும். இப்போது உடல் முழுக்க மின்சாரம் பாய்ந்ததைப் போன்றதொரு உணர்வு வரும். அந்தக் கற்பனையான மின் அதிர்ச்சியிலிருந்து மீண்டு அடுத்த கட்டத்துக்கு நகர்வோமாக…. அந்தப் பொருளை…. ஓ! அது எந்தப் பொருள் என்று சொல்லாமலேயே ஊக்கப்படுத்திக் கொண்டிருந்திருக்கிறேனா? அதுதான்…. புத்தகம், நூல், ஏடு எனப் பல பெயர்களில் அழைக்கப்படும் அப்’பொருள்’தான். வழமைக்கு மாறாக அன்றைக்குப் பார்த்து Purseல் இருக்கும் zip கடுமையாகச் சிக்கிக் கொண்டிருக்கும் என்பதால் அதைப் பொறுமையாகத் திறக்க முயல வேண்டும். Walletல் உலகின் சக்தி வாய்ந்த பசை ஒட்டியிருப்பதால் அதுவும் கூட பிரிந்து திறந்து கொள்ள மறுக்கும். இரண்டையும் கிழித்தாவது ‘திறந்திடு சீசே’ செய்ய வேண்டும். பணப்பை கிழிந்தால்தான் என்ன? ‘நூல்’தானே வாங்குகிறோம்? தைத்துக் கொள்ளலாம். விடா முயற்சி விஸ்வரூப வெற்றி! முயற்சி தன் மெய்வருத்தக் கூலியைத் தந்தே ஆக வேண்டும் ஆதலால் நமது இடையராத உழைப்பின் விளைவாக பை தன் வாயைப் பிளந்து நம்மைப் பாவமாகப் பார்க்கும். அல்லது அது அப்படிப் பார்ப்பதாக நமக்குத் தோன்றும். அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் நம் மனதை இரும்பாகவோ டங்க்ஸ்டனாகவோ டைட்டானியமாகவோ மாற்ற வேண்டிய பொழுது இது. நம் மொத்த ஆற்றலையும் பயன்படுத்தி ரூபாய்த் தாள்களை எடுத்துக் கடைக்காரரிடம் நீட்ட வேண்டும். மிகச்சரியாக இத்தருணத்தில் வாதம் தாக்கி கை செயலிழந்தது போகலாம்; நரம்புத் தளர்ச்சியால் கை நடுக்கம் ஏற்படலாம். துவண்டு போய்விடக் கூடாது! Come on, உங்களால் முடியும். உங்களால் நிச்சயம் முடியும். உலகின் சர்வ வல்லமை பெற்றவராக உங்களை இப்போது கருதிக் கொள்ள வேண்டும். கைகளைக் கம்பீரமாக வலுக்கட்டாயமாகப் பிடிவாதமாக நீட்டிக் காசைக் கொடுத்து விடவும். மூச்சுப் பயிற்சியில் ஈடுபட்டு நரம்பு மண்டலத்தை சாந்தப்படுத்தியவாறே பொருளைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் படிநிலைகளும் இன்னல்களும் பணப்பைக்குப் பதில் செயலியின் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய விரும்பும் அலைபேசியினருக்கும் பொருந்தும். ஆயிரக் கணக்கில் செலவழித்து வாங்கிய அலைபேசியில் அப்பொருளுக்கான இருநூறு ரூபாயைச் செலுத்துவதற்கு உண்டாகும் மனத்தடையை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லையென்றாலும் அந்த மனப்போராட்டத்தைப் பச்சாதாபத்தோடு அணுகும் கடமை… அடக் கண்றாவியே! அதுவும் முடியவில்லை. என்ன மாதிரியான மனநிலை அது? என்னவோ ஒண்ணு… நமது மங்காத மனவலிமையினால் அவ்வளவு பெரிய ரொக்கத்தை அனைத்துத் தடுமாற்றங்களையும் தயக்கங்களையும் கடந்து செலுத்திய பின் ‘க்ளியாங்க்’ என்னும் சத்தத்துடன் ‘பெறப்பட்ட தொகை…. இருநூறு ரூபாய்’ என்னும் குரல் நாராசமாய் ஒலிப்பதாகக் கூட உணர வாய்ப்புண்டு. முதல் முறை காசு கொடுத்து வாங்கும் போது அப்படித்தான் இருக்கும். கை கால் வெடவெடவென உதறலெடுக்கும். அவ்வளவு பெரிய தொகை ஒரேடியாகக் கையை விட்டுப் போகிறதே என்ற சோகம் கவிந்து கொள்ளும். இப்படி ஒரு மாபெரும் தெண்டச் செலவு வாழ்க்கையில் செய்தே இருக்க மாட்டோம் ஆகையால் அச்சோகம் நம்முள் ஒரு குமுறலாகக் கூட மாறலாம். கவலை வேண்டாம்! இதுவும் கடந்து போகும். இதிலிருந்து மீள்வதற்கான உள வலிமையை நிச்சயம் அந்த உப்பிலியப்பன் உரித்தாக்குவாராக. உங்கள் துக்கம் சந்தோஷமாய் மாறும் - யோவான் 16:20, சங்கீதம் 30:5, 126:5, ஏசாயா 61:3 ஆகியவையும் அதையே அருளுகின்றன. ********************************** ‘ஒரு (துவக்க நிலை) எழுத்தாளரின் புத்தகத்தை நான் வாசிப்பதே அவருக்குச் செய்யும் பெரிய உபகாரம். நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்கி(!) வாசித்தலை மேற்கொள்வது எனது பெருந்தன்மையை எடுத்துரைக்கிறது’ – இப்படியெல்லாம் அதி மேதாவித்தனமான சிந்தனைகளுடன் வலம் வருவதால்தான் எழுத்தாளரிடமே சென்று “புத்தகம் இன்னும் எனக்கு வரல” என்று தடித்தனமாகக் கேட்க முடிகிறது. “உங்க புத்தகம் எங்கே கிடைக்கும்?” என்று கூட நாகரிகமாகக் கேட்கலாம். நாவுக்கு ஒரு சேதமும் வராது. எழுத்தாளர் அன்பின் மிகுதியாலும் அளவு கடந்த மரியாதையாலும் தமக்கு நெருக்கமான சிலருக்குப் பிரியப்பட்டுத் தாம் எழுதிய புத்தகத்தைத் தருவார்/அனுப்பி வைப்பார். அவ்வாறாக அன்பளிப்பாகப் பெறும் உரிமையைத் தாமாக எடுத்துக் கொள்ளும் இன்னபிற வினோத வினோபா பாவேக்களின் வதனத்திற்கு நேரே ‘சட்டத்தைக் கையில் எடுக்காதீங்க சார்/மேடம்’ என்று ஒரு நாள் சொல்ல ஆசை. இன்னும் சில அரிய பிறவிகள் இருக்கிறார்கள். நேரடியாக எழுத்தாளரிடம் சென்று இலவசமாகக் கேட்கக் கொஞ்சம் வெட்கம் ஒட்டிக் கொண்டிருக்கும் போலும். எழுத்தாளர் யாருக்கெல்லாம் விருப்பப்பட்டுக் கொடுத்தாரோ அவர்களில் ஒருவரைப் பிடித்து அவரிடம் இருந்து வாங்கிக் கொள்வார்கள். பிறகு அந்த மரியாதைக்குரிய நபர் எழுத்தாளரிடம் புது பிரதி ஒன்றை மீண்டும் ‘இனாமாக’ப் பெற்று மரியாதையை அனாமத்தாக இழப்பார். இங்கிதமற்று நடந்து கொள்ளும் ஓசி ஆத்மாக்கள் எல்லாம் நல்ல… நல்ல என்பதை விட பொருளாதாரத்தில் உயர் நிலையில் இருப்பவர்கள். இன்றைய காலத்தில் பதிப்பகம் நடத்துவது எவ்வளவு சவாலான விஷயம் என்பதைப் பெரும்பாலானோர் உணர்வதே இல்லை. தமது எழுத்து அதற்கான தளத்தைச் சென்று அடைய வேண்டுமெனில் ஓர் எழுத்தாளர் இப்படியெல்லாம் செலவு செய்தே ஆக வேண்டும் என எதிர்ப்பார்க்கும் சமூகத்தின் மேல் என்ன மரியாதை வரும்? ************************** திடீரென இதை எழுதுபொருளாகக் கையிலெடுக்கக் காரணம் தேவா அண்ணாவும் அவரது மனைவி சத்யா அக்காவும் (ஒரு தம்பதியை இப்படி உறவுமுறை சொல்லி அழைக்கக் கூடாதுதான். ஆனால் இப்போது இந்த ஆராய்ச்சி இக்கட்டுரைக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதது ஆகையால் கண்டு கொள்ளாமல் கடந்து செல்வீர்களாக!). புத்தகங்களைப் பொறுத்த வரை ‘அன்பின் பொருட்டு’ என்பதைச் சற்றும் ஏற்றுக் கொள்ளாதவர்கள் இவர்கள். “அட பரவாயில்லை! இருக்கட்டும்” என்று எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் பிடிவாதமாகக் காசு கொடுத்துதான் வாங்குவார்கள். போதாக்குறைக்கு தம்மைச் சார்ந்தவர் யாரேனும் நம்மிடம் புத்தகம் கேட்டு நாம் இலவசமாகக் கொடுக்கிறோம் என்றால் அதற்கும் காசு தந்து அநியாயத்திற்கு நியாயமாக நடந்து கொள்வார்கள். கையில் காசு வாங்க மறுத்தால் gpay செய்து நம்மை நெளிய வைப்பார்கள். இப்படிப்பட்ட நல்லோர் வாழும் இதே தொல்லுலகில்தான்….. ஒரு நியாயமான கற்பனை : காசு கொடுத்து புத்தகங்கள் வாங்குவோர், எழுத்தாளர்களிடம் இருந்து உளப்பூர்வமாக இனாமாகப் புத்தகங்கள் கிடைக்கப் பெறுவோர் – இவர்களுக்கு மட்டுமே அப்புத்தகங்களில் உலகின் அத்தனை சுகந்தங்களும் பொதிந்திருக்கக் கடவதாக! மற்றபடி கவர்தல் மூலம் புத்தகம் கிட்டும் அனைவருக்கும் அதிலிருந்து வரும் முடை நாற்றம் மூளையைத் துளைக்கட்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.