Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி விகாரை விடயத்தில் அதை நிறைவேற்றாதது ஏன்? - அருட்தந்தை மா.சத்திவேல் 18 Jan, 2026 | 12:52 PM தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் இன்று (18) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தமிழர் திருநாளில் தமிழர் தாயகத்துக்கு வருகை தந்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அவர்கள் சிங்கள பௌத்த ஆதிக்க இனவாத நோக்கில் கட்டப்பட்ட சட்டவிரோத விகாரை கட்டடத்தின் பிக்குவை தான் கலந்துகொண்ட கூட்டத்தின் முன் வரிசை ஆசனத்தில் அமர்த்தி அழகு பார்த்தவர். இனவாத சட்டவிரோத விகாரை கட்டடத்திற்கு எதிராகவும், இராணுவத்தினரின் தனியார் நிலங்களின் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் போராடுபவர்களை இனவாதிகள் என அடையாளப்படுத்தி தமிழர் தாயக மக்களை அவமானப்படுத்தியுள்ளார். இதுதான் தமிழர் திருநாளில் தமிழர்கள் கொடுத்த பரிசா? என கேட்பதோடு இதற்கான எதிர்ப்பினை தமிழ் தேசப்பற்றாளர் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கின்றோம். தையிட்டி விகாரையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி என்பது சட்டவிரோத விகாரை கட்டிடத்தை அகற்றி மக்களின் காணிகளை மக்களின் கைகளில் கொடுப்பதாகும். அதுவே தமிழர்களுக்கான நீதியாகவும் அமையும். சட்டம் அனைவருக்கும் சமம். தெற்கிற்கும் வடக்கிற்கும் ஒரே சட்டம் எனக் கூறும் ஜனாதிபதி தற்போதைய விகாரை விடயத்தில் அதனை நிறைவேற்றாது நிறைவேற்று அதிகாரத்தை பாவிக்காதிருப்பது ஏன்? சட்ட விரோத விகாரைக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தயங்குவதாகவும், இனவாத சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு பயந்து நிற்பதாகவும் நாக விகாரை பிக்கு ஜனாதிபதி அவரை சந்தித்த பின்னர் ஊடகமொன்றிற்கு கருத்து வெளியிட்டுள்ளார். இனவாதம் மதவாதத்தின் காலடியில் விழுந்து கிடக்கும் ஒருவர் சொந்த காணிகளை கேட்டு நடக்கும் போராட்டத்தினை இனவாதம் என குறிப்பிடுவதில் என்ன நியாயம் உள்ளது? தைப்பொங்கல் என்பது உழைக்கும் வர்க்கத்தின் விழா. மண்ணோடு ஒட்டிய வாழ்வின், வாழ்வு கலாச்சாரத்தின், பண்பாட்டின் விழா மட்டுமல்ல மண் தமது வியர்வை விழுந்த மண்ணின் சுதந்திர வாழ்வுக்கான அரசியல் உரிமைசார் விழாவுமாகும். இதனை கௌரவப்படுத்துவது என்பது மண்ணின் மக்களை சுதந்திரமாக வாழ விடுவதாகும். அதற்கான எந்த உறுதிமொழியையும் ஜனாதிபதி தனது உரையில் வெளிப்படுத்தவில்லை. தேர்தல் காலங்களில் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதாக கூறியவர் அதற்கான எந்த உத்தரவாதத்தையும் கொடுக்கவில்லை. விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாக தெளிவாக இதனை கூறாதவர் தமிழ் மக்களின் மண்ணில் நின்று தம் மக்களை புண்படுத்தியதை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களோடு விழா கொண்டாட வந்த ஜனாதிபதி தமிழர்களின் அரசியல் பண்பாட்டு விழாவினை தமது அரசியல் களியாட்ட விழாவாக்கி மகிழ்ந்துள்ளார். தேசிய மக்கள் சக்தி எதிர்வரும் பெப்ரவரி நான்காம் திகதியும் அவர்களின் சுதந்திர தினத்திலே தமிழர் தாயகத்தில் அவர்களின் களியாட்ட விழாவாக்க திட்டமிட்டிருப்பார்கள். தமிழ் மக்களின் மண் பல்வேறு வடிவங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு பறிபோய்க்கொண்டு இருப்பது போல எமது தேசிய அரசியலும் தேசிய மக்கள் சக்தியின் போலி அரசியல் களியாட்டங்களால் ஆக்கிரமிக்கப்படும் அபாயம் நிலவுகின்றது. இதற்கும் ஜனாதிபதி எமது மண்ணிலிருந்து எம்மை அவமானப்படுத்தியமைக்கும் முழு எதிர்ப்பினை காட்டவும் எதிர்வரும் சுதந்திர தினத்தினை தமிழர் தேசம் தழுவிய கரி நாளாக்க அரசியல் தலைமைகளும், சிவில் சமூக அமைப்புகளும் மக்களை திரட்டுவதற்கான செயல் திட்டத்தினை முன்னெடுக்க வேண்டும். விடுதலையை மையப்படுத்தியது சமயங்கள். எனவே அனைத்து சமய தலைமைகளும், அவர்கள் சமய மையங்களும் அதற்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும் எனவும் கேட்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/236339
  3. ட்ரம்பை எதிர்க்கும் நெதன்யாகு - காசா அமைதி சபையால் சலசலப்பு 18 January 2026 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள காசா அமைதி சபை தொடர்பில் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். ட்ரம்ப் நிர்வாகம் அமைத்துள்ள காசா நிர்வாகக் குழுவில், துருக்கி மற்றும் கட்டார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் சேர்க்கப்பட்டுள்ளதே நெதன்யாகுவின் கோபத்திற்கு முக்கிய காரணமாகும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது தொடர்பில் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அமைதிச் சபையின் உறுப்பினர்கள் குறித்து இஸ்ரேலுடன் முன் கூட்டியே ஆலோசிக்கப்படவில்லை எனவும் இந்த முடிவு இஸ்ரேலின் பாதுகாப்புக் கொள்கைக்கு எதிரானது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்புடன் நெருங்கிய தொடர்புடைய துருக்கி மற்றும் கட்டார் போன்ற நாடுகள் காசாவின் நிர்வாகத்தில் ஈடுபடுவது ஹமாஸ் மீண்டும் வலுப்பெற வழிவகுக்கும் என இஸ்ரேல் அஞ்சுகிறது. நெதன்யாகுவின் அமைச்சரவையில் உள்ள தீவிர வலதுசாரி அமைச்சர்களான இத்தாமர் பென் கிவிர் (Itamar Ben Gvir) மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் (Bezalel Smotrich) ஆகியோரும் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்துள்ளனர். "ஹமாஸை உயிருடன் வைத்திருக்க உதவிய நாடுகள், அந்த இடத்திற்கு மாற்றாக வர முடியாது" என்று அவர்கள் குறிப்பிடுகின்றனர். இஸ்ரேலின் இந்த எதிர்ப்பிற்குப் பதிலளித்துள்ள அமெரிக்க உயர் அதிகாரி ஒருவர், "நாங்கள் பல மாதங்களாகக் காசாவில் யாரும் சாத்தியமில்லை என்று நினைத்த காரியங்களைச் செய்துள்ளோம். இது எங்களது திட்டம், இஸ்ரேல் இதற்கு ஒத்துழைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார். https://hirunews.lk/tm/441345/netanyahu-opposes-trump-gaza-peace-council-causes-uproar
  4. உலகின் மிகப்பெரிய ஊதா நிற மாணிக்கம் இலங்கையில் கண்டுபிடிப்பு இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக பெறுமதி வாய்ந்த அரியவகை ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கல் கொழும்பில் அறிமுகப்படுத்தப்பட்டது. 3,563 கரட் எடையுடைய இந்த அரிய வகை மாணிக்கக்கல், 2023 ஆம் ஆண்டில் இரத்தினபுரி பகுதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது. உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட ஊதா நிற நட்சத்திர மாணிக்கக்கற்களில் இதுவே மிகப்பெரியது எனப் பெயரிடப்பட்டுள்ளதோடு, இது ஒரு இயற்கையான ஊதா நிற மாணிக்கக்கல் என விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. "Star of Pure Land" என இதற்கு பெயரிடப்பட்டுள்ளதோடு, ஆறு கதிர் கொண்ட நட்சத்திர வடிவத்தைக் கொண்டுள்ளது. மற்ற கற்களை விட இது மிகவும் சிறப்பானதாகும் என்றும் கூறப்படுகின்றது. இதன் பெறுமதி 300 முதல் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாகும் என மதிப்பிடப்படபடுவதாக இம்மாணிக்கக்கல்லை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட இலங்கை மாணிக்கக்கல் ஆய்வுகூடத்தின் பிரதம இரத்தினக்கல் ஆய்வாளர் அஷான் அமரசிங்க தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmkjkzlev042wo29n043wb2ly
  5. வடக்கை வெற்றி கொள்வது? – நிலாந்தன். “முன்னர் வடமாகாணத்துக்கு தனி ஆட்சி தேவை என்று வடமகாண மக்கள் கூறினார்கள். ஆனால் முதன்முதலாக யாழ் மக்கள் இன்று எங்களுடைய ஆட்சியை தங்களுடைய ஆட்சி என்று நம்புகிறார்கள்..” இது, அனுர யாழ்ப்பாணத்தில் வைத்துக் கூறியது. அவர் அவருடைய பேச்சின் போக்கில் வடக்கு,யாழ்ப்பாணம் போன்ற வார்த்தைகளை அவற்றுக்குரிய அரசியல் அடர்த்தி விளங்காமல் கதைத்துவிட்டுப் போகிறார் என்று எடுத்துக் கொள்வதா?அல்லது அரசாங்கம் திட்டமிட்டு வடக்கில் தன் கவனத்தைக் குவிக்கிறது என்பதனை இது காட்டுகிறது என்று எடுத்துக்கொள்வதா? ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின் வடக்கிற்கு மிகக்குறுகிய காலத்தில் அதிக தடவை விஜயம் செய்த ஒரே ஜனாதிபதி அனுரதான்.அப்படித்தான் அவருடைய அமைச்சர்களும். அரசாங்கம் வடக்கை நோக்கி தன்னுடைய முழுக் கவனத்தையும் குவிப்பதை இது காட்டுகிறது. இது இயல்பானது அல்ல. ஒப்பிட்டுப் பார்த்தால் இதே அளவு கவனக்குவிப்பு கிழக்கில் இல்லை.வடக்கின் விவகாரங்களைக் கையாள்வதற்கு என்று அமைச்சர் சந்திரசேகரன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.பெரும்பாலான அமைச்சர்கள் அடிக்கடி வடக்குக்கு வருகிறார்கள்.அமைச்சர்கள் அல்லது அரச பிரதானிகள் கலந்துகொள்ளும் அரச நிகழ்வுகள் அடிக்கடி வடக்கில் நடக்கின்றன.இவை யாவும் அரசாங்கம் வடக்கை நோக்கி அதன் கவனத்தைத் திட்டமிட்டுக் குவிக்கிறது என்பதைத்தான் காட்டுகின்றன. “பார்க்காத,பழகாத எங்களை நம்பினீர்கள்.உங்களை நாங்கள் கைவிட மாட்டோம்” இதுவும் யாழ்ப்பாணத்தில் வைத்து அண்மையில் ஜனாதிபதி கூறிய வார்த்தைகள்.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வெற்றியை அவர்களே எதிர்பார்க்கவில்லை என்பதனை அது காட்டுகிறது.அந்த வெற்றியை தொடர்ந்து தக்கவைப்பதற்கும்,அடுத்த மாகாண சபையில் அந்த வெற்றியை மேலும் விஸ்தரிப்பதற்கும் திட்டமிட்டு அரசாங்கம் தன் முழுக் கவனத்தையும் வடக்கின் மீது குவிக்கின்றது. அண்மையில் உத்தியோகப்பற்றற்ற விதமாக கிராமமட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பு ஒன்றின்படி,தேசிய மக்கள் சக்திக்கு கிட்டத்தட்ட முப்பது விகிதமான வாக்கு வங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது. குறிப்பாக கைபேசி செயலிகளின் கைதிகளாகக் காணப்படும் தலைமுறையினர் மத்தியில் அனுரவுக்கு அதிகம் ஆதரவு காணப்படுகிறது. அந்த ஆதரவைத் தக்கவைக்கும் விதத்தில் அரசாங்கத்தின் டிஜிட்டல் புரோமோஷன் அணியானது அனுரவை தொடர்ந்தும் தமிழ்ப் பாடல்களின் பின்னணியில் கதாநாயகராகக் கட்டியெழுப்பி வருகிறது. தற்பொழுது அதிகம் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கும் “பிரஜா சக்தி” என்ற கிராமமட்ட செயல்திட்டமும் அரசாங்கம் அதன் வாக்கு வங்கியை வளர்க்கும் நோக்கிலானது என்று சந்தேகிக்கப்படுகிறது.இதுதொடர்பாக அண்மையில் சுமந்திரன் ஒரு காணொளியில் அரசாங்கத்தை குற்றம் சாட்டுகிறார். அரசாங்கம் அதன் அரச வளங்களை பயன்படுத்தி கிராம மட்டத்தில் பிரஜா சக்தி என்ற கட்டமைப்பை உருவாக்கி வருகிறது.ஆனால் அக்கட்டமைப்பு இறுதியிலும் இறுதியாக தேசிய மக்கள் சக்தி என்ற கட்சிக்கு சேவகம் செய்கின்ற,அந்தக் கட்சியின் ஆதரவுத் தளத்தைக் கட்டிஎழுப்புகின்ற ஒன்றுதான் என்று அண்மையில் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசன், நல்லூர் திவ்யஜீவன சங்க மண்டபத்தில் ஆற்றிய உரை ஒன்றில் தெரிவித்திருந்தார். இது ஏறக்குறைய மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில்,பசில் ராஜபக்ஷவின் பொறுப்பின் கீழ் காணப்பட்ட அரச கட்டமைப்புகளைப் போன்றது என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது.மஹிந்தவின் ஆட்சிக்காலத்தில் சமுர்த்தி உத்தியோகத்தர் உட்பட ஏழு வெவ்வேறு அரசு அலுவலர்கள், அரச சேவை என்ற பெயரில் தாமரை மொட்டுக் கட்சிக்காக கிராம மட்டங்களில் வேலை செய்தார்கள் என்பது பின்னர் தெரியவந்தது. அரச வளங்களைப் பயன்படுத்தி, அரச செலவில், அரச காரியம் என்ற போர்வையில், அவர்கள் கட்சி வேலையைச் செய்தார்கள். கட்சியைக் கட்டியெழுப்ப முயற்சித்தார்கள். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரஜா சக்தியும் அத்தகைய நோக்கத்தைக் கொண்டது என்று தமிழ்க் காட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. அதாவது அரசாங்கம் வடக்கில் அதன் வாக்கு வங்கியைப் பலப்படுத்தும் நோக்கத்தோடு திட்டமிட்டு உழைக்கின்றது.இந்த ஆண்டு அல்லது அடுத்த ஆண்டு மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டி வரலாம் என்று அவர்களுக்குத் தெரிகிறது.தமிழ்த் தேசியக் கட்சிகள் தங்களுக்கு இடையே ஐக்கியப்படும் வாய்ப்புகள் குறைவு என்பதையும் அவர்கள் ஊகிக்கின்றார்கள். குறிப்பாக,உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி இரண்டாக நிற்கின்றது. கட்சிக்குள் காணப்படும் இரண்டு அணிகளும் பகிரங்கமாக ஒருவர் மற்றவரைத் தாக்கி விமர்சித்து வருகின்றன.அரசியலமைப்பு பேரவையில் சிறீதரன் அரசாங்கத்திற்கு ஆதரவாக எட்டு தடவைகள் வாக்களித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மைகள் உண்டு. கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு ஒரு படைப்பிரதானியை நியமிக்க அரசாங்க முயற்சித்தபோது அவர் அதற்கு ஆதரவாக வாக்களித்திருக்கிறார் என்பதும் உண்மை என்று தெரிகிறது. அதுதொடர்பாக அவர் பகிரங்கமாக தன்னிலை விளக்கம் எதையும் இதுவரை தரவில்லை.தனக்கு எதிராக எழுதும் ஊடகங்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கைகளை எடுப்பதாகவுந் தெரியவில்லை. ஆனால் இந்த விடயத்தை குவிமயப்படுத்தி சிறீதரனை கட்சிக்குள்ளும் கட்சிக்கு வெளியேயும் மதிப்பிறக்கம் செய்யும் வேலைகளை சுமந்திரன் அணி மிகவும் கச்சிதமாகச் செய்துவருகிறது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறி சிறீதரன் செயற்படுகிறார் என்று சொன்னால் அதற்கு எதிராக கட்சி உரிய ஒழுங்காற்று நடவடிக்கையை எடுக்கலாம். அது கட்சி விவகாரம். அதனை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். அதுதொடர்பான விடயங்களை ஊடகவியலாளர்களைக் கூட்டிப் பகிரங்கமாகக் கதைக்கவேண்டிய தேவை என்ன? கட்சி விவகாரத்தை கட்சிக்குள்ளேயே தீர்த்துக்கொள்ள வேண்டும். கட்சிக்குள்ளேயே ஒழுங்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.அதைச் செய்யாமல் கட்சிக்கு வெளியே ஊடகங்கள் மத்தியில் அதைச்சொல்ல வேண்டிய தேவை ஏன் வந்தது? ஏனென்றால், கட்சி ஒரு கட்டமைப்பாக பலமாக இல்லை என்பதைத்தான் அது காட்டுகிறது.வீட்டுச் சின்னத்தில் போட்டியிட்டால், வெல்லலாம் என்ற நம்பிக்கையில்தான் பலரும் கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அல்லது கட்சி உயர் மட்டத்தோடும் முரண்படாமல் விசுவாசத்தை வெளிக்காட்டாமல் தந்திரமாக நடந்து கொள்கிறார்கள்.வெல்லக்கூடிய குதிரை என்ற ஒரே ஒரு பலம்தான் இப்பொழுது தமிழரசுக் கட்சிக்கு உண்டு.ஆனால் சுமந்திரனுக்கும் சிறீதரனுக்கும் இடையிலான முரண்பாடுகள் மேலும் கூர்மையடைந்தால், அது கட்சியைப் பாதிக்கும்.இப்போதுள்ள நிலைமைகளின்படி,சுமந்திரன் சிறீதரனை பெருமளவுக்கு கிளிநொச்சிக்குள்ளே முடக்கி விட்டார். ஆனால் கிளிநொச்சியில் சிறீரனின் இடத்தை நிரப்ப வேறு யாரும் கட்சிக்குள் இல்லை. அதுமட்டுமல்ல சிறுதரனை தோற்கடிக்கும் முயற்சியில் கட்சி மேலும் பலவீனமடையும் வாய்ப்புக்களே அதிகமாகத் தெரிகின்றன.மாகாண சபைத் தேர்தல் நடந்தால் அதில் தமிழரசுக் கட்சியின் வெற்றியின் பருமனை அது நிச்சயமாகப் பாதிக்கும். தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள பெரிய கட்சி இவ்வாறு தானே தனக்குள் பிடுங்குபடுவது, தனக்கு அதிகரித்த வெற்றி வாய்ப்புகளைத் திறந்து விட்டிருப்பதாக தேசிய மக்கள் சக்தி நம்புகின்றது.அதனால்தான் தமது கிராமமட்டக் கட்டமைப்பைப் பலப்படுத்துவதன் முலமும் வடக்கை குவிமயப்படுத்தித் திட்டமிட்டு உழைப்பதன் மூலமும் வடமாகாண சபையில் பலமான வெற்றி வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ள அவர்கள் முயற்சிக்கிறார்கள். வடக்கை வெற்றிகொண்டால் கிழக்கு தானாக விழுந்து விடும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள். தமிழ்த் தேசிய கோரிக்கையின் தலை வடக்கில்தான் இருக்கிறது என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.எனவே தலையை நசுக்கி விட்டால், தமிழ்த் தேசியக் கோரிக்கை வலுவிழந்து விடும் என்றும் அவர்கள் நம்பக்கூடும். அந்த நோக்கத்தோடுதான் அவர்கள் வடக்கை குவிமயப்படுத்தி உழைக்கிறார்கள். இது சில தசாப்தங்களுக்கு முன்பு அதாவது 1980களின் தொடக்கத்தில் ஜெயவர்த்தன தமிழ்த் தேசியக் கோரிக்கையை தோற்கடிப்பதற்கு வகுத்த திட்டத்தின் மறுவளமான வியூகந்தான். தமிழ் மக்களின் தாயகத்தை துண்டித்து விட்டால் தமிழீழக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும் என்று ஜெயவர்த்தன நம்பினார்.அதற்கு கிழக்கை,திட்டமிட்ட குடியேற்றங்களின் மூலம் பலவீனப்படுத்துவது, வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் பிரதேசங்களைத் திட்டமிட்ட குடியேற்றங்களின்மூலம் சிங்களபௌத்த மையப்படுத்துவது, அதன் மூலம் வடக்கைத் தனிமைப்படுத்துவது. கிழக்கை இழந்தால் அதாவது தாயகம் துண்டிக்கப்பட்டால், தாயகத்தின் ஒரு பகுதி வெற்றி கொள்ளப்பட்டு விட்டால், தாயகக் கோரிக்கை தோல்வி அடைந்து விடும்.அது இறுதியிலும் இறுதியாக தமிழ்த் தேசிய அரசியலையும் தோற்கடித்துவிடும். முதலாம் கட்ட ஈழப்போரில் இந்த வியூகத்தை வைத்துத்தான் ஜெயவர்த்தன படை நடவடிக்கைகளையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் முன்னெடுத்தார்.இந்த வியூகத்தில் கிழக்கை வெற்றிகொள்வதே முதல் இலக்காக இருந்தது. ஆனால் கிட்டத்தட்ட நான்கு தசாப்தங்களின் பின் தேசிய மக்கள் சக்தியானது அந்த வியூகத்தை மறுவளமாகப் பயன்படுத்துகின்றது. வடக்கை வெற்றி கொண்டால் கிழக்குத் தானாக விழுந்துவிடும். தமிழ்த் தேசியக் கோரிக்கை பலமிழந்து விடும் என்று தேசிய மக்கள் சக்தி திட்டமிடுகின்றதா?அந்த அடிப்படையில்தான் வடக்கை நோக்கி ஜனாதிபதி அடிக்கடி வருகிறாரா? தமிழ் மக்களின் ஒட்டுமொத்த கோரிக்கைகளை வடக்கின் கோரிக்கைகளாகச் சுருக்கிக் கூறுவதும் அதனால்தானா? இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின் தற்காலிகமாக இணைக்கப்பட்டு இருந்த வடக்குக்கிழக்கை,ஒரு வழக்கின் மூலம் பிரித்தது ஜேவிபி. இப்பொழுது கேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது,அந்த வியூகத்தின் இறுதிக்கட்டத்தை நிறைவேற்றுவதற்காக வடக்கை நோக்கி உழைக்கின்றதா? உட்கட்சிச் சண்டைகளை ஊடகங்கள் முன் பகிரங்கமாக விவாதிக்கும் தமிழரசுக் கட்சியும் உட்பட தமிழ்த் தேசியக் கட்சிகள் இந்த ஆபத்தை அதற்குரிய முழுப் பரிமாணத்தோடு விளங்கி வைத்திருக்கின்றனவா? https://athavannews.com/2026/1460334
  6. ‘டித்வா’ புயலை தொடர்ந்து வடக்கில் பாரிய காலநிலை மாற்றம் – பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா! இலங்கையின் ஏனைய கடற்பகுதிகளுடன் ஒப்பிடுகையில், வடக்குப் பிராந்தியக் கடற்பரப்பில் வெப்பநிலை மிக அசாதாரணமாகக் குறைந்துள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் புவியியற்றுறை தலைவர் பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். அது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மைய நாட்களாக வடகடல் பகுதி வழமையை விட அதிக குளிராகக் காணப்படுகிறது. இந்த மாற்றமானது இலங்கையின் ஒட்டுமொத்த வானிலைப் பாங்கிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது. வடக்கிலிருந்து ஆரம்பிக்கும் இந்தக் குளிர்ந்த நீர், கிழக்குக் கரையோரம் வழியாக இலங்கையின் தெற்குப் பகுதிகளுக்கு கடத்தப்படும். இந்த நீரோட்டத்தின் காரணமாக, தெற்குப் பகுதியில் நிலவும் சற்றே அதிகமான கடல் மேற்பரப்பு வெப்பநிலை தற்போது குறைக்கப்பட்டு வருவதாகத் தெரியவருகிறது. ‘டித்வா’ (Ditwah) புயல் மறைந்ததைத் தொடர்ந்து, நிலப்பரப்பில் பதிவாகும் வெப்பநிலையில் பெரும் மாற்றங்கள் தென்படுகின்றன. காலநிலை மாற்றம் இலங்கையின் வானிலைப் பாங்குகளில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது என்பதற்கு இது ஒரு தெளிவான சான்றாகும் என தெரிவித்துள்ளார். https://athavannews.com/2026/1460367
  7. Today
  8. ஜிந்துப்பிட்டி கொலை சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் நால்வர் கைது! கொழும்பு ஜிந்துப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துவடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப் பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்து வந்த நபரை தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த 16 ஆம் திகதி இரவு ஜிந்துப்பிட்டி 125தோட்ட பகுதியிலேயே இந்தத் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதுடன், முச்சக்கர வண்டியில் வந்த குழுவினர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுத் தப்பிச் சென்றிருந்தனர். துப்பாக்கி சூடு நடத்தியவர்களில் ஒருவர் புர்கா அணிந்திருந்தமை சிசிடிவி கெமராக்களில் பதிவாகியிருந்தது இந்தத் துப்பாக்கிச் பிரயோகத்தில் படுகாயமடைந்த கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். சம்பவத்தில் 4 வயதுடைய சிறுவனும், மற்றும் 3 வயதுடைய சிறுமியும் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்ததுடன், அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக 3 பொலிஸ் குழுக்கள் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் சம்பவம் தொடர்பில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் ஜிந்துப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் துப்பாக்கிதாரி மற்றும் புர்கா அணிந்துவந்த நபர் தேடும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இரண்டு பாதாள உலகக் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் விளைவே தாக்குதலுக்கு காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டது திட்டமிடப்பட்ட குற்றக் குழுவைச் சேர்ந்த வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள பழனி ரொமேஷினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://athavannews.com/2026/1460384
  9. 11 பயணிகளுடன் மாயமான விமானத்தின் சிதைவுகள் கண்டெடுப்பு! 11 பயணிகளுடன் நேற்றையதினம் மாயமான இந்தோனேசிய விமானத்தின் சிதைவுகளை அந்த நாட்டு அதிகாரிகள் இன்று கண்டுபிடித்துள்ளனர். அதன்படி, குறித்த விமானத்தின் சிதைவுகள் இந்தோனேசியாவின் தெற்கு சுலாவேசியில் உள்ள புலுசரவுன் மலையிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதேவேளை, விமானத்தின் சிதைவுகள் மீட்கப்பட்ட போதிலும், அதில் பயணித்தவர்கள் குறித்த எந்தவொரு தகவலும் இதுவரை வெளியாகாத நிலையில் அவர்களைத் தேடி இந்தோனேசிய அதிகாரிகள் விசேட தேடுதல் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ATR 42-500 ரகத்தைச் சேர்ந்த இந்த விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்பிடி அமைச்சகத்திற்குச் சொந்தமானது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியாவின் மக்காசர் நகருக்கு அருகாமையில் குறித்த விமானம் நேற்று (17) மாயமான போது அதில் 11 பேர் இருந்துள்ளனர். https://athavannews.com/2026/1460373
  10. K.Deepa joined the community
  11. கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03 விவாகரத்துக்குப் பிறகு, கண்மணி தனது குழந்தையுடன் தனியாக, ஆனால் பெற்றோரின் கண்காணிப்பில் தொடர்ந்து வாழ்ந்தாள். ஒரு ஆசிரியராக மதிக்கப்பாக தன் வாழ்வை நகர்த்தினாள். என் தனிமை, என் குழந்தை, என் சுயமரியாதை - இவை மட்டுமே முக்கியம். நான் அவைகளை மீண்டும் அச்சுறுத்த விடமாட்டேன் என்று பிடிவாதமாக இருந்தாள். எனினும் பெற்றோர்கள், உறவினர்கள், மறு திருமணத்துக்கு கண்மணியை ஒப்புக்கொள்ள முயற்சி செய்தார்கள். “அவர் ஒழுக்கமானவர்.” “அவர் உங்கள் கடந்த காலத்தை ஏற்றுக்கொள்வார்.” “அவர் உங்கள் குழந்தையை ஏற்றுக்கொள்வார்.” இப்படி புது புது வரன் கொண்டுவந்தார்கள். கண்மணி அவர்களின் வேண்டுதலை கேட்டுவிட்டு ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்டாள்: “அவர் என் எல்லைகளை ஏற்றுக்கொள்வாரா? [Will he accept my boundaries?]” யாரும் நேரடியாகப் பதிலளிக்கவில்லை. அவர்கள் அவளை பிடிவாதமானவள் என்று அழைத்தனர். ஆனால், அவள் தான் இப்ப விழித்திருப்பதாகக் கூறினாள். அந்த சூழலில் தான், ஒரு நாள், ஓய்வுபெற்ற அதிகாரி சமூக ஊடகங்கள் மூலம் அவளுடைய வாழ்க்கையில் நுழைந்தார் - அவசரமின்றி, உரிமை கோராமல். அவர்கள் புத்தகங்கள், சமூகம், பெண்கள் கல்வி பற்றிப் பேசினர். அவர் அவளுடைய புத்திசாலித்தனத்தை மதித்தார். படிப்படியாக, உரையாடல்கள் ஆழமடைந்தன. "நீங்கள் உங்கள் பெற்றோர் சொல்வதைக் கேட்க வேண்டும்," என்று அவர் ஒரு முறை அறிவுரை கூறினார். "உங்களுக்கும் உங்கள் மகளுக்கும் ஒரு பாதுகாப்பான நிலை வேண்டும்." அவர் கண்ணியமானவர். சிந்தனைமிக்கவர். மற்றும் பாதுகாப்பானவர் என்ற அவளின், அவர் மேல் உள்ள மதிப்பு, அவளை வாதாட விடவில்லை. என்றாலும் அவள் விளக்கினாள். "கண்ணியமில்லாத நிலைத்தன்மை மற்றொரு வகையான சரிவு. [“Stability without dignity is another kind of collapse.”]" - வெளியில் இருந்து பார்க்கும் போது வாழ்க்கை நிலையானதாகத் தோன்றுவதால் - திருமணம், வீடு, [வழக்கமான] நடைமுறை, நிதிப் பாதுகாப்பு [marriage, home, routine, financial security] - போன்றவை, உண்மையிலேயே ஆரோக்கியமானதாகவோ அல்லது வெற்றிகரமானதாகவோ உள்ளது என்றுஅர்த்தமல்ல. கண்ணியத்தை (சுயமரியாதை, குரல், சம்மதம், அடையாளம் / self-respect, voice, consent, identity) பலிகொடுத்தால் வந்த நிலைத்தன்மை [ஸ்திரத்தன்மை] - உண்மையில் நிலைத்தன்மையே அல்ல. இது வெறுமனே மெதுவாக, ஒவ்வொரு நாளும் நடக்கும் ஒரு அமைதியான சரிவு" என்று அவள் விவரமாக விளக்கினாள். அவளுடைய மீள்தன்மையை அவர் பாராட்டினார். அவர் அவளது அறிவாற்றலை மதித்தார். அவர்களின் உரையாடல்கள் சிந்தனை மிக்கவையாக அளவுடன் இருந்தன. "நீங்கள் தனியாக இருக்கக்கூடாது," என்று அவர் மீண்டும் ஒருமுறை எழுதினார். "நான் தனியாக இல்லை," என்று அவள் பதிலளித்தாள். "நான் என்னுடன் வாழ்கிறேன்." என்றாள். அவர்களின் உரையாடல் எளிமையானதாகவே தொடர்ந்தன. ஒரு முறை, அதிகாரி: “எப்படி இருக்கீங்க?” கண்மணி: “உடம்பு சரியில்லை... வாழ்க்கை சோகமாக இருக்கிறது.” அவர் உடனே ஒரு கவிதையை அவளுடன் பகிர்ந்து கொண்டார்: "In the hidden shadow of your eyes, I burn with the touch of memory, Love arrives, yet never heals, You remain the light of my dreams." "உன் கண்களின் - மறைந்த நிழலில் நினைவின் தீண்டலால் - நான் எரிகிறேன் காதல் வருகிறது - ஆனால் பலனில்லை கனவுகளின் ஒளியாகவே - நீ இருக்கிறாய்." கண்மணி தன் இதயத்திலும் உடலிலும் ஒரு சிறிய பரபரப்பை, உணர்ச்சின் பாச்சலை உணர்ந்தாள். என்றாலும் காதல் என்றுமே தன் வாழ்வில் சாத்தியமற்றது என்று திடமாக இன்னும் நம்பும் அவள், காதல் கவிதை - ஆசையின், காமத்தின் பாதுகாப்பான அனுபவத்தை இன்பத்தை தனக்கு கொடுக்கிறது என்று எனினும் நம்பினாள். அவர் மீண்டும் சில கவிதைகளை அனுப்பினார். அவை நீண்ட காலமாக செயலற்ற நிலையில் அவளிடம் இருந்த ஒன்றைத் தூண்டின - விரக்தியை அல்ல, நினைவை. ஆபத்து இல்லாத ஆசையை. அவள் அதை அனுபவிக்க தன்னை அனுமதித்தாள். வார்த்தைகள் பாதுகாப்பானவை. தூரம் மரியாதைக்குரியது. அவள் அந்த ஓய்வுபெற்ற அதிகாரியிடம் ஒருபோதும் பொய் சொல்லவில்லை. அவரின் எழுத்தை, கவிதையை, கதையை ரசித்து வாசித்தாள். அதில் உள்ள காதலை, காமத்தை, அழகின் வர்ணனைகளை, ஒன்றும் விடாமல் ரசித்தாள். மகிழ்ந்தாள். கொஞ்சம் கொஞ்சமாக உரையாடல்கள் ஆழமடைந்தன. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 04 தொடரும் துளி/DROP: 2001 [கதை - 196 / கண்மணி டீச்சர் / பகுதி : 03 https://www.facebook.com/groups/978753388866632/posts/33341508072164411/?
  12. கொத்மலை மக்களின் துயர்துடைக்க வந்த 2,000 கைகள் Jan 18, 2026 - 12:43 PM 'டித்வா' புயலினால் அதிக பாதிப்புக்குள்ளான கொத்மலை, பனங்கம்மன பகுதி மற்றும் கொத்மலை மகா பீல்ல கால்வாய் ஆகியவற்றைச் சிரமதானப் பணிகள் மூலம் மீண்டும் வழமைக்குக் கொண்டு வரும் நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நேற்று (17) ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பணிகள் நாளை (19) வரை நடைபெறவுள்ளன. கொத்மலை பனங்கம்மன பகுதியில் சுமார் 20 கிராமங்களுக்கான பிரதான வீதி முழுமையாக நிலச்சரிவுக்குள்ளானதால், கடந்த 2 மாதங்களாக அந்த கிராமங்களின் குடியிருப்பாளர்கள் கடும் சிரமங்களை எதிர்நோக்கி வந்தனர். இதனைக் கருத்திற்கொண்டு, அனுராதபுரத்திலிருந்து வருகை தந்த குழுவினர் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மேற்பார்வையின் கீழ் குறித்த வீதியைச் சீரமைக்கும் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். கினிகத்தேன பகுதியிலிருந்து வருகை தந்த மற்றுமொரு குழுவினர், கொத்மலை மகா பீல்ல கால்வாய்ப் பகுதியைச் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக 'அத தெரண' செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்தச் சிரமதானப் பணிகளுக்காக அனுராதபுரம் மற்றும் கினிகத்தேன ஆகிய பகுதிகளிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்டோர் வருகை தந்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmkjeghp0042qo29n5fq3u8pl
  13. ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் இரண்டாம் கட்டம் ஆரம்பம் ; இவ்வருடம் 250 நல்வாழ்வு மையங்கள் நிறுவப்படும் - அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ 18 Jan, 2026 | 11:43 AM (செ.சுபதர்ஷனி) ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் முன்னோடித் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதுடன், இவ்வருடத்துக்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் ஆரோக்யா மையங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாகச் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் வைத்தியர் ஹன்சக விஜேமுனி ஆகியோர் நேற்று (17) கண்டி அஸ்கிரி மகா விகாரையில் அஸ்கிரி பீடத்தின் மகாநாயக்க தேரர் வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரையும், மல்வத்து மகா விகாரையில் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பொட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரையும் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றனர். அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள், மல்வத்து மகாநாயக்க தேரரிடம் அமைச்சின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். இதன்போது அமைச்சர் குறிப்பிடுகையில், கடந்த ஆண்டு முன்னோடித் திட்டமாக ஆரம்பிக்கப்பட்ட ஆரோக்யா நல்வாழ்வு மையங்களின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் கட்டம் வரும் ஜனவரி 24ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது. இவ்வருடத்திற்குள் 250 மையங்களையும், அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் இம்மையங்களை நிறுவவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தொற்றாத நோய்களைக் கட்டுப்படுத்தவும், பிரதான வைத்தியசாலைகளுக்கு வருகை தரும் நோயாளர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கும் எதிர்பார்த்துள்ளோம். கொழும்பு தேசிய வைத்தியசாலை வளாகத்தில் இதய நோயாளர்களுக்காகச் சகல வசதிகளுடன் கூடிய நவீன இதய சிகிச்சை பிரிவுக்கான கட்டுமானப் பணிகள் இவ்வருடம் ஆரம்பிக்கப்படும். சுமார் 12 பில்லியன் ரூபா செலவில் அமையவுள்ள இக்கட்டிடப் பணிகளை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவு செய்வதற்கான அனைத்து திட்டங்களும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. கடந்த காலங்களில் நிதி நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அரச வைத்தியசாலைகளில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த 62 அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தம்புள்ளை ஆதார வைத்தியசாலையை நவீன வசதிகளுடன் வேறொரு இடத்தில் புதிதாக நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல், அண்மையில் ஏற்பட்ட தித்வா சூறாவளியினால் சேதமடைந்த வத்தேகம வைத்தியசாலையையும் புதிய இடத்தில் நிர்மாணிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்தோடு சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட சிலாபம், மஹியங்கனை உள்ளிட்ட 6 அரச வைத்தியசாலைகளை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடன் புனரமைக்க ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் கொண்டுவரப்படவுள்ள புத்தபகவானின்புனித சின்னங்கள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி முதல் கொழும்பு கங்காராம விகாரையில் பொதுமக்களின் தரிசன வழிபாடுகளுக்காக வைக்கப்பட உள்ளன என்றார். https://www.virakesari.lk/article/236331
  14. கிரீன்லாந்து விவகாரம்: ஐரோப்பிய நாடுகள் மீது வரியை அறிவித்தார் டிரம்ப் பட மூலாதாரம்,Getty Images 17 ஜனவரி 2026 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிப்ரவரி 1 முதல் அமெரிக்காவிற்குப் பொருட்களை ஏற்றுமதி செய்யும் ஐரோப்பிய நாடுகளுக்குப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். அமெரிக்காவால் கிரீன்லாந்தை முழுமையாகவும் மொத்தமாகவும் வாங்குவதற்கான ஒரு ஒப்பந்தம் எட்டப்படும் வரை இந்த வரிகள் நடைமுறையில் இருக்கும் என்று டிரம்ப் கூறுகிறார். தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் எழுதியுள்ள டிரம்ப், டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் அமெரிக்காவிற்கு அனுப்பும் 'அனைத்து' பொருட்களுக்கும் '10% வரி விதிக்கப்படும்' என்று கூறியுள்ளார். ஜூன் 1 அன்று இது 25% ஆக அதிகரிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது'- டிரம்ப் டொனால்ட் டிரம்பின் ட்ரூத் சோஷியல் பதிவின்படி,பல ஆண்டுகளாக டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திடம் வரிகளை வசூலிக்காமல் அமெரிக்கா மானியம் வழங்கி வருவதாக அவர் கூறுகிறார். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, 'டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது' என்று டிரம்ப் மேலும் கூறுகிறார். "உலக அமைதி ஆபத்தில் உள்ளது! சீனா கிரீன்லாந்தை விரும்புகிறது, அதைப்பற்றி டென்மார்க்கால் எதுவும் செய்ய முடியாது," என்று கூறும் டிரம்ப், கிரீன்லாந்து இரண்டு நாய்கள் இழுக்கும் பனிச்சறுக்கு வண்டிகளால் மட்டுமே பாதுகாக்கப்படுகிறது என்று விமர்சிக்கிறார். டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் "அறியப்படாத நோக்கங்களுக்காக கிரீன்லாந்திற்குப் பயணம் செய்துள்ளன" என்றும், அவை "மிகவும் ஆபத்தான விளையாட்டை" விளையாடுகின்றன என்றும் அவர் கூறுகிறார். இந்த "சாத்தியமான அபாயகரமான சூழ்நிலை விரைவாகவும் சந்தேகத்திற்கு இடமின்றியும் முடிவுக்கு வர" "கடுமையான நடவடிக்கைகள்" எடுக்கப்பட வேண்டும் என்று டிரம்ப் மேலும் கூறுகிறார். கிரீன்லாந்து அமெரிக்காவுக்கு ஏன் தேவை? காணொளிக் குறிப்பு,காணொளி: கிரீன்லாந்து விரைந்த ஐரோப்பிய படைகள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தனது நாடு கிரீன்லாந்தை கையகப்படுத்த வேண்டும் என்றும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதை நிராகரிக்கவில்லை என்றும் கூறுகிறார். சாத்தியமான கொள்முதல் குறித்தும் பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், தீவை "எளிதான வழியில்" அல்லது "கடினமான வழியில்" கட்டுப்பாட்டில் எடுக்க திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறுகிறார். அவரது கோரிக்கைகளை கிரீன்லாந்தின் தலைவர்களும், நேட்டோ உறுப்பினர் டென்மார்க்கும் நிராகரித்துள்ளனர், அந்தத் தீவு ஒரு பாதியளவு தன்னாட்சி பிரதேசமாகும். வட அமெரிக்காவிற்கும் ஆர்க்டிக்கிற்கும் இடையில் கிரீன்லாந்தின் இருப்பிடம் ஏவுகணைத் தாக்குதல்கள் ஏற்பட்டால் முன்கூட்டியே எச்சரிக்கும் அமைப்புகளுக்கும், பிராந்தியத்தில் கப்பல்களைக் கண்காணிப்பதற்கும் ஏற்றதாக அமைகிறது. "நாம் கிரீன்லாந்தை கைப்பற்றவில்லை என்றால், ரஷ்யா அல்லது சீனா கிரீன்லாந்தை கைப்பற்றும்" என்று டிரம்ப் வாதிட்டு வருகிறார். அதிகாரப்பூர்வ தகவல்களின்படி, கிரீன்லாந்தின் தலைநகரான நூக் நகருக்கு பிரெஞ்சு ராணுவத்தின் ஒரு சிறிய குழு சென்று சேர்ந்துள்ளது. பல ஐரோப்பிய நாடுகள் 'ஆய்வு மற்றும் கண்காணிப்பு' பணிக்காக தங்கள் நாட்டு வீரர்களை அங்கு அனுப்பி வருகின்றன. இந்த சூழ்நிலையில் ஐரோப்பிய நாடுகள் மீது டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார். வரிகள் என்றால் என்ன, அவை எவ்வாறு செயல்படுகின்றன? வரிகள் என்பவை இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரிகள். பொதுவாக, இந்த வரி ஒரு பொருளின் மதிப்பிலான சதவீதமாக இருக்கும். உதாரணமாக, ரூ.10 மதிப்புள்ள ஒரு பொருளுக்கு 10% வரி என்பது கூடுதலாக ரூ.1 வரி என்பதைக் குறிக்கும் - இதனால் மொத்த விலை ரூ.11 ஆகிறது. இந்த வரி வெளிநாட்டுப் பொருட்களை இறக்குமதி செய்யும் நிறுவனங்களால் அரசாங்கத்திற்குச் செலுத்தப்படுகிறது. இந்த நிறுவனங்கள் கூடுதல் செலவில் சில அல்லது அனைத்தையும் தங்கள் வாடிக்கையாளர்களிடம் திணிக்கலாம், அதாவது இந்த விஷயத்தில் சாதாரண அமெரிக்கர்கள் மற்றும் பிற அமெரிக்க வணிகங்கள் இந்தச் சுமையை ஏற்க நேரிடும். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c801g1p55kpo
  15. தமிழர்களின் நிலங்களும் வளங்களும் பறிபோகாமல் பாதுகாக்க ஒன்றிணைய வேண்டியது அவசியம் - வாகரையில் பொதுமக்கள் வலியுறுத்தல் Published By: Vishnu 18 Jan, 2026 | 03:41 AM பறிபோகும் தமிழர்களின் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைந்துசெயற்படுவது அவசியம் என வாகரை பிரதேசத்தில் பொதுமக்களினால் வலியுறுத்தப்பட்டது. உயிர்மை நேய விவசாய பொங்கல் விழா 17ஆம் திகதி சனிக்கிழமை காலை மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாக்கேணி 4ம் கட்டை பகுதியில் நடைபெற்றது. கிழக்கு மாகாண மக்கள் திட்ட வரைபு ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அதன் மாகாண தலைவர் கணபதிப்பிள்ளை இராசலிங்கம் தலைமையிலும் இடம்பெற்ற இந்நிகழ்வில் வாகரை பிரதேச சபை தவிசாளர் தெய்வேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இந்த நிகழ்வில் திட்ட வரைபு ஒன்றியத்தின் உத்தியோகத்தர் ரேணுக, பிரதேச சபை உறுப்பினர் சுவேந்திரன், திட்ட வரைபு ஒன்றியத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளர் அரவிந்தன், ஊவா மாகாண திட்ட வரைபு ஒன்றியத்தின் இணைப்பாளர், கிழக்கு திட்ட வரைபு ஒன்றியத்தின் உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் அதிதிகள் வரவேற்கப்பட்டு மங்கள விளக்கேற்றல் இடம்பெற்று வரவேற்பு நடனம் மற்றும் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவம் தொடர்பான சிறப்பு உரைகள் இடம்பெற்று அதிதிகள் உரையும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் முக்கிய அம்சமாக இயற்கு விவசாயத்தினை முன்னிறுத்தும் முகமாக விவசாய உற்பத்தி பொருட்களை கொண்டு அலங்கரிப்பு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. வாகரை பிரதேசத்தில் கடந்த காலத்தில் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டது.வனஇலாகா,தொல்பொருள் திணைக்களம் என பல்வேறு பகுதிகளினாலும் பல்வேறு பிரச்சினைகள் எதிர்கொள்ளப்பட்டன. அந்தவேளைகளில் அனைவரும் ஒருங்கிணைந்து முன்னெடுத்த செயற்பாடுகள் காரணமாக பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கமுடிந்தது.இதுபோன்ற பல்வேறு பிரச்சினைகளை நாங்கள் முன்னோக்கும் சூழ்நிலைகள் காணப்படுகின்றன.அவற்றினை நாங்கள் எதிர்கொள்வதற்கு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்படுவது அவசியமாகும்.அவ்வாறான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் மூலமே எமது எதிர்காலத்தில் எமது நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கமுடியும் என இதன்போது கிழக்கு மாகாணத்திலிருந்து கலந்துகொண்ட பல்வேறு விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளினாலும் தெரிவிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/236296
  16. "குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! Jan 18, 2026 - 10:21 AM "நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தி. அனுஷ்வரன் (36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பிரகலாதேவி (31) என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை 8.30 மணியளவில் கணவன் - மனைவிக்கு இடையே பண விவகாரம் தொடர்பாகத் தகராறு ஏற்பட்டுள்ளது. இதன்போது வாய்த்தர்க்கம் முற்றிய நிலையில், கணவன் மனைவியின் நடத்தையில் சந்தேகமுற்று, "நீ குற்றமற்றவள் என்பதை நிரூபித்துக் காட்டு" என வற்புறுத்தியுள்ளார். அதன்பின்னர் மனைவியின் உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரே தீ வைக்கத் தூண்டியுள்ளார். இதனால் தீப்பற்றி எரிந்த மனைவி படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு, தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ளார். மனைவியைத் தீக்குளிக்க வைத்த பின்னர், கணவன் தனக்குத் தானே கூரிய ஆயுதத்தால் குத்தி காயப்படுத்திக் கொண்டுள்ளார். இதனையடுத்து, மனைவியைக் கொலை செய்ய முயன்றமை மற்றும் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் கொக்கட்டிச்சோலை பொலிஸார் அவரைக் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று ஞாயிற்றுக்கிழமை (18) நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாகக் கொக்கட்டிச்சோலை பெரும் குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். -மட்டக்களப்பு நிருபர் சரவணன்- https://adaderanatamil.lk/news/cmkj9dnx3042lo29n7tsbsirv
  17. இலங்கையில் அனர்த்தம் நீங்கியும் அவசர கால சட்டத்தை நீட்டிப்பதா? எதிர்ப்பும் அரசு விளக்கமும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஆர்.யசிஹரன் பிபிசி தமிழுக்காக 18 ஜனவரி 2026, 05:47 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை அனர்த்தங்களில் ஒன்றான 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முழுவதும் ஏற்பட்ட பரவலான வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகள் காரணமாக 20 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டதுடன் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்களை பாதுகாக்கவும் அனர்த்தங்களை கையாளவும் திருத்தப்பட்ட பொதுப் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் (அத்தியாயம் 40) கீழ், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் அவசரகாலச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனர்த்தம் ஏற்பட்ட வேளையில், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தி பொதுமக்களை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற அழுத்தம் எதிர்க்கட்சிகளால் கொடுக்கப்பட்டதை அடுத்து, கடுமையான பாதிப்புகளுக்கு மத்தியில், ராணுவத்தினரை மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தவும், நிவாரண நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் மற்றும் அத்தியாவசிய சேவைகளை தடையின்றிப் பேணவும் இத்தகைய அசாதாரண நடவடிக்கைகள் அவசியமானவை என்று அரசாங்கம் ஏற்றுக்கொண்டு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியது. எனினும் அமல்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை நீட்டிப்பதா இல்லையா என்பது குறித்து தற்போது விவாதங்கள் எழுந்துள்ளன. சூறாவளி நாட்டைவிட்டு நகர்ந்து சில வாரங்கள் கடந்துள்ள நிலையில், தற்போது நிவாரண முகாம்கள் மூடப்பட்டு வருகின்றன. போக்குவரத்துத் தொடர்புகள் பெருமளவு சீரமைக்கப்பட்டு, மறுசீரமைப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில், அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்து அமல்ப்படுத்துவது எந்த வகையில் நியாயமானது என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன. இது அனர்த்த கால அவசரத் தேவைகளையும் தாண்டி, அரசாங்கம் தனது அதிகாரங்களைத் தக்கவைத்துக்கொள்ள எடுக்கும் முயற்சியோ என்ற அச்சத்தையும் விமர்சகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது. உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு கரிசனை தற்போதும் தொடரும் அவசரகால வழிகாட்டல்கள் மனித உரிமைகளுக்கு ஒவ்வாத மிகமோசமான கூறுகளை உள்ளடக்கியிருக்கின்றன என உலகளாவிய மனித உரிமைகள் பாதுகாப்பு அமைப்பின் ஆசியப்பிராந்திய ஆய்வாளர் ரொபேர்டா மொய்ஸக் கரிசனை வெளியிட்டுள்ளார். இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டிருந்த அறிக்கையில், தற்போது பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசர கால நிலையின் கீழான விதிகள் இதற்கு முன்னைய சில சந்தர்ப்பங்களில் முன்னைய அரசாங்கங்களினால் பயன்படுத்தப்பட்டதாகவும், அவற்றில் சில விதிகள் நாட்டின் அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான சரத்துக்கும், மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச நியமங்களுக்கும் முரணானவையாகக் காணப்படுவதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. அதுமாத்திரமன்றி ஜனாதிபதியையோ அல்லது அரசாங்கத்தையோ விமர்சிப்போருக்கு எதிராக அவசரகாலப் பிரகடன விதிகள் பிரயோகிக்கப்படும் என அரசாங்கத்தின் பிரதிநிதிகளால் விடுவிக்கப்பட்ட பொது அறிவிப்புகள் குறித்தும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ளது. அத்தோடு அரச அதிகாரிகளுக்கு எதிராக விமர்சனங்களை முன்வைப்பது என்பது அரசியலமைப்பின் 14(1)(ஏ) பிரிவின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் ஓரங்கமாகும் எனவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கிறது - ஐங்கரன் குகதாசன் தற்போது மேலும் ஒருமாத காலத்திற்கு அவசரகால சட்டம் நீட்டிக்கப்பட்டிருப்பது குறித்து மனித உரிமைகள் செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஐங்கரன் குகதாசன் கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவசர கால நிலையைப் பிரகடனப்படுத்துவதற்கான அவசியமே இருக்கவில்லை என்றும், அப்பிரகடனத்தில் மனித உரிமைக் கோட்பாடுகளை மீறுகின்ற, மிதமிஞ்சிய அதிகாரத்தினை வழங்குகின்ற ஏற்பாடுகள் உள்ளன என்றும் கூறப்படுகின்ற சந்தர்ப்பத்தில், அப்பிரகடனம் நீடிக்கப்பட்டிருப்பது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். "எதிர்க்கட்சியாக இருந்தபோது, இவ்வாறான செயற்பாடுகளுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்த அநுரகுமார திசாநாயக்க, இன்று அதனையே செய்வது 'மாற்றம்' தொடர்பில் இருந்த சொற்ப அளவு நம்பிக்கையையும் தவிடுபொடியாக்குகின்றது. அதேபோல் அதிகாரம் அநுரவின் கண்ணை மறைக்கின்றது" எனவும் அவர் கூறியுள்ளார். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பு எதிர்க்கட்சி அரசியல் பிரதிநிதிகளும் அரசாங்கத்தின் இந்த செயற்பாட்டை கண்டித்துள்ளனர். குறிப்பாக இந்த நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்த எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, "அரசாங்கம் தற்போது செயற்படுத்தியுள்ள அவசரகால சட்டமானது, அனர்த்தத்தை கையாள நடைமுறைப்படுத்தியதாக தெரியவில்லை. மாறாக அரசாங்கம் தமக்கு எதிரான விமர்சனங்களை தடுக்க பயன்படுத்தும் கருவியாக இது கையாளப்படுகின்றது" என குற்றம் சுமத்தியிருந்தார். அதேபோல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கூறுகையில், "கடந்த காலங்களில் அவசரகால சட்டத்தின் கீழ் பல ஊடகவியலாளர்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் அல்லது கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு காணாமலாக்கப்பட்ட அல்லது கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு என்ன நடந்தது என்பது கண்டறியப்படவில்லை. பாதிக்கப்பட்ட தரப்புக்கு நீதி கிடைக்கவும் இல்லை. இந்த நாட்டில் நீதி என்பது தகுதி தராதரம் பார்த்தே கையாளப்படுகின்றது. வடக்கு கிழக்கில் இன்றும் இராணுவ அடக்குமுறை நிலைமையே காணப்படுகின்றன. இலங்கையில் வடக்கு கிழக்கு தமிழர் பகுதிகள் எப்போதும் அவசரகால சட்டத்தின்கீழ் தான் உள்ளன. இந்த நிலைமைகளை மாற்றும்வரை தமிழர்களுக்கு விடிவுகாலம் இருக்காது" என்று தெரிவித்தார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கூறுகையில், "அனர்த்தத்தை கையாள நடைமுறைக்கு வந்துள்ள அவசரகால சட்டத்தில் தேடுதல் மற்றும் கைதுகள் என்பன எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளன? தடுப்புக்காவல் என்ற விடயம் எதற்காக உள்வாங்கப்பட்டுள்ளது என்ற கேள்வி எம்மத்தியில் உள்ளது. அனர்த்த முகாமைத்துவத்திற்காக அவசரகால சட்டம் என்றால் அது பொதுமக்களை பாதுகாக்க மட்டுமே கையாள வேண்டும். மாறாக அதனை கையாண்டு யாரையும் கைதுசெய்யவோ அல்லது தண்டிக்கவோ முடியாது. ஆனால் அதனையே அரசாங்கம் செய்ய நினைக்கின்றது" எனக் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்தின் விளக்கம் இந்த குற்றச்சட்டுக்களை முழுமையாக நிராகரிக்கும் அரசாங்க தரப்பினர், அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தியதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ளது. அந்தவகையில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜெயசேகர இது குறித்து தெரிவிக்கையில், "இதற்கு முன்னர் நாட்டில் பல அனர்த்தங்கள் ஏற்பட்டிருந்த போதிலும் அவற்றைவிட மிக மோசமான அழிவொன்றை இம்முறை நாம் சந்தித்துள்ளோம். நாட்டில் 22 மாவட்டங்களிலும் இலட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இன்று வரை முகாம்களில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஆகவே இந்த நிலைமைகளை கருத்தில்கொண்டே அனர்த்த நிலைமைகளை கையாள ஜனாதிபதியினால் நடைமுறைக்கு கொண்டுவந்த அவசரகால சட்டத்தை மேலும் ஒருமாத காலத்திற்கு நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதுகுறித்த நாடாளுமன்ற அனுமதியையும் நாம் பெற்றுக்கொண்டுள்ளோம்" என்றார். "இந்த அவசரகால சட்டத்தை பயன்படுத்தி ஊடக அடக்குமுறைகளை கையாளவோ அல்லது யாரையும் தண்டிக்கவோ அரசாங்கம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் செயற்படாது. மாறாக பொதுமக்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்ய அரசு இயந்திரத்தை விரைவாக பயன்படுத்தி துரிதமாக சேவையாற்றவே கையாளப்படுகின்றது" எனவும் அமைச்சர் தெரிவித்தார். இந்த சட்டம் குறித்து பொதுமக்கள் எந்த விதத்திலும் அச்சம் கொள்ளத்தேவையில்லை-பிரதமர் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இலங்கை பிரதமர் ஹரினி அமரசூரிய அதேபோல் அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தியுள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறுகையில், 'திட்வா' சூறாவளியின் தாக்கத்தினால், நாடு முகங்கொடுத்த அழிவில் இருந்து இன்னமும் மீளவில்லை. மத்திய மலைநாட்டின் பொதுமக்கள் வாழும் பல பகுதிகளில் இன்னமும் அனர்த்த அச்சுறுத்தல்கள் உள்ளன. அவர்களை பாதுகாப்பான பகுதிகளில் மீள் குடியேற்ற வேண்டும். இவற்றை கையாளும் விதமாக அரச அதிகாரிகள் விரைவாக செயற்படவும், அவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கவும் அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது என தெரிவித்தார். பொதுமக்களுக்கான அத்தியாவசிய சேவைகளை முறையாக வழங்கவே அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது எனக் கூறிய அவர் இந்த சட்டத்தை தவறாக ஒருபோதும் கையாள மாட்டோம் என்றார். மேலும், நீண்ட காலத்திற்கு அவசரகால சட்டத்தை நடைமுறைப்படுத்தும் எந்த நோக்கமும் அரசாங்கத்திற்கு இல்லை. நாட்டில் சகல பகுதிகளிலும் பொதுமக்கள் வழமையான சாதாரண வாழ்கையை வாழ வேண்டும் என்பதே எமதும் எதிர்பார்ப்பாகும். அதுவரையில் மிகக்குறுகிய காலத்திற்கு இந்த சட்டம் நடைமுறையில் இருக்கும் எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvg17pzrpeo
  18. "மக்களின் காணிகளை மக்களிடமே கொடுங்கள்" - ஜனாதிபதியிடம் கோரிக்கை Jan 18, 2026 - 07:06 AM தையிட்டி விகாரை அமைந்துள்ள பொதுமக்களின் காணிகளை விரைவாக விடுவிக்குமாறு ஜனாதிபதியிடம் தான் வலியுறுத்தியதாக யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல நாயக்க தேரர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, விகாராதிபதியைச் சந்தித்துக் கலந்துரையாடினார். இச்சந்திப்பு குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்: "வடக்கு மாகாணத்தில் வாழும் தமிழ் மக்களுக்குப் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. அந்த வகையில் தையிட்டி திஸ்ஸ விகாரை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் விளக்கமளித்தேன். குறிப்பாக, அங்குள்ள பொதுமக்களின் காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினேன். ஜனாதிபதியும் அதனை ஏற்றுக்கொண்டதாகவே தெரிகிறது. விகாரைக்கு அருகிலுள்ள மக்கள் மற்றும் காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி, இது குறித்து விரைவாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கும் எனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை, அது நயினாதீவு நாக விகாரை விகாராதிபதியுடனேயே தொடர்புடையது. எனினும், பொதுமக்கள் சார்பாகவே இந்தக் கருத்தை நான் முன்வைத்தேன். மேலும், இப்பகுதியில் போதைப்பொருள் அச்சுறுத்தல் மற்றும் இளைஞர்களின் வேலைவாய்ப்புப் பிரச்சினைகள் அதிகமாகக் காணப்படுகின்றன. எனவே, வடக்கு மாகாணத்தில் புதிய தொழிற்சாலைகளை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் ஜனாதிபதியிடம் முன்வைத்தேன்" என்றார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmkj2fv6x042fo29naid25pme
  19. 7வது முறையாக ஜனாதிபதியான யோவேரி முசவேனி Jan 17, 2026 - 11:37 PM உகாண்டா ஜனாதிபதி தேர்தலில் 81 வயதான யோவேரி முசவேனி ஏழாவது முறையாக வெற்றி பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த 40 ஆண்டுகளாக அந்நாட்டை ஆட்சி செய்து வரும் அவர், இந்தத் தேர்தலில் 71 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். இந்தத் தேர்தலில் பிரதான எதிர்க்கட்சி வேட்பாளரான பாபி வைன் எனப்படும் கியகுலானி சென்டாமு 24 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. National Unity Platform தலைவரான பாபி வைன், இராணுவம் மற்றும் பொலிஸார் தனது வீட்டை முற்றுகையிட்ட போதிலும், தான் அங்கிருந்து தப்பித்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், இந்தத் தேர்தல் முடிவுகள் போலியானவை எனத் தெரிவித்து அவற்றை நிராகரித்துள்ள அவர், அவற்றை அலட்சியப்படுத்துமாறு தனது ஆதரவாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkimddk9042bo29n71nz2g4r
  20. இலங்கையின் ‘Rebuilding Sri Lanka’ மற்றும் ‘Healing Sri Lanka’ செயற்திட்டங்களுக்கு Global Caregiver Forum 2026 இல் உலகப் பாராட்டு Published By: Vishnu 17 Jan, 2026 | 10:06 PM “அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை வழமைக்குத் திரும்புவதற்காக இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) மற்றும் ‘இலங்கையைக் குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) ஆகிய செயற்திட்டங்கள், “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026” இல் (Global Caregiver Forum 2026) உலக நாடுகளின் தலைவர்களால் பாராட்டப்பட்டன.” “இலங்கை தனது அண்மைக்கால வரலாற்றில் மிகப்பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொண்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்க்கையை வழமைக்குக் கொண்டுவருவதற்காக இலங்கை அரசாங்கம் ‘இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்’ (Rebuilding Sri Lanka) எனும் செயற்திட்டத்தின் கீழ் பணியாற்றி வரும் வேளையில், அதற்கு இணையாகப் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் ‘இலங்கையை குணப்படுத்தல்’ (Healing Sri Lanka) எனும் மற்றுமொரு செயற்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியானது, அனைத்துத் தரப்பினரினதும் செயற்திறன்மிக்க ஒத்துழைப்புடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உளசமூக நலனை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் மற்றும் பராமரிப்பாளர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதன் மூலமும், அவர்களது தனிப்பட்ட உள வடுக்களைக் குணப்படுத்துவதற்கு உதவுவதன் மூலமும், நாட்டின் தேசிய முன்னுரிமையாகச் சிறுவர்களுக்குத் தேவையான தரமான பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் போஷாக்கு கிடைப்பதை இச்செயற்திட்டம் உறுதி செய்கிறது.” - சரோஜா சாவித்திரி போல்ராஜ், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் – நேற்று (16), கௌரவ அமைச்சர் ஸ்பெயினின் மெட்ரிட் நகரில் நடைபெற்ற முதலாவது “சர்வதேச பராமரிப்பாளர் மாநாடு 2026”இல் (Global Caregiver Forum 2026) கலந்துகொண்டு தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். ஸ்பெயினின் ராணி லெட்டிசியா (Her majesty Queen Letizia) அவர்களின் அனுசரணையில் கடந்த 15 ஆம் திகதி ஆரம்பமான இந்த இரண்டு நாள் மாநாடு, யுனிசெஃப் (UNICEF), உலக சுகாதார நிறுவனம் (WHO), மற்றும் லெகோ (LEGO) அறக்கட்டளை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்பிள்ளைப் பருவ மேம்பாடு மற்றும் பராமரிப்புக்கான சர்வதேச வரைபடத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, நிபுணர் கலந்துரையாடல்கள் மற்றும் பல செயற்பாடுகள் இம்மாநாட்டில் உள்ளடக்கப்பட்டிருந்தன. “எதிர்கால நோக்கு மற்றும் அடுத்த கட்ட நடவடிக்கைகள்” (Looking Forward and Next Steps) எனும் தலைப்பிலான மாநாட்டின் இறுதி அமர்வில் கௌரவ அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் ஒரு குழு உறுப்பினராகப் பங்கேற்றார். இக்குழுவில் கசகஸ்தான் சுகாதார பிரதி அமைச்சர் கௌரவ அலியா ருஸ்டெமோவா, ட்ரிபிள் பி பாசிட்டிவ் பேரன்டிங் புரோகிராம் (Triple P Positive Parenting Programme) தலைமை நிர்வாக அதிகாரி திரு. மெட் பட்டர்ரி, போவிஸ்டா (Boavista) பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தின் பணிப்பாளர் திருமதி. கதரினா மாகல்ஹேஸ் மற்றும் அயர்லாந்து குடும்ப வள மைய தேசிய மன்றத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. பெர்கல் லேண்டி ஆகியோர் ஏனைய உறுப்பினர்களாகக் கலந்துகொண்டனர். இந்த அமர்வின் போது, முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாடு மற்றும் பராமரிப்புக்காக இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்த மேலதிக தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்பட்டன. அவை பின்வருமாறு: • முன்பிள்ளைப் பருவத்தை இலக்காகக் கொண்டு சிறுவர் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் "ஸ்டெப்-அப்" (Step-Up) தொடர்பாடல் திட்டம். • 2027 ஆம் ஆண்டளவில் நாடு முழுவதும் உள்ள அனைத்து முன்பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான பாடத்திட்டம் மற்றும் 19,000 ஆசிரியர்களுக்கான முறையான பயிற்சி. • முன்பிள்ளைப்பருவ சிறுவர் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டிற்கான தேசிய பல்துறை மூலோபாய செயற்திட்டம் 2025-2029. • ஒட்டிசம் உள்ளிட்ட நரம்பு மண்டல வளர்ச்சி குறைபாடுகள் உள்ள சிறுவர்களுக்கு ஆதரவளிப்பதற்காக மாகாண மற்றும் மாவட்ட மட்டத்திலான ஐந்து ஆண்டு கால திட்டம். அனர்த்தத்திற்குப் பிந்தைய சூழலில் மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்ப இலங்கை அரசாங்கம் முன்னெடுத்த “இலங்கையை மீளக்கட்டியெழுப்புதல்” மற்றும் “இலங்கையை குணமாக்குதல்” ஆகிய திட்டங்கள் இம்மாநாட்டில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டதுடன், உலகத் தலைவர்களின் பாராட்டையும் பெற்றன. இம்மாநாட்டில் கலந்துகொண்ட இலங்கைத் தூதுக்குழுவில் பின்வருவோர் அடங்குவர்: • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர், கௌரவ சரோஜா சாவித்ரி போல்ராஜ் • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் முன்பிள்ளைப்பருவ சிறுவர் மேம்பாட்டிற்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் செல்வி நிலுஷிகா தனசேகர • யுனிசெஃப் இலங்கையின் கல்வி அதிகாரி செல்வி சசிகலா சுமுது குமாரி ரத்நாயக்க https://www.virakesari.lk/article/236294
  21. அந்தம்மா விசுவாசத்தை வெளிப்படுத்தவில்லை. பிரதிபலனையே எதிர்பார்த்தா. ரம் எதுவுமே பேசவில்லை. எதிர்காலத்தில் ஆதரவு கொடுக்கலாம். வரும் தேர்தல் நேரம் தான் தெரியும்.
  22. மீள்வருகை நல்வரவாக அமையட்டும் !!!
  23. Yesterday
  24. இந்த புள்ளி விதிமுறை வீதி விபத்துக்களை குறைக்குமா பார்ப்போம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.