All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
84-6 லிருந்து 168க்கு கொண்டு வந்து விட்டார் அணித்தலைவர். இப்போ இலங்கை அணித்தலைவரின் முறை.
-
ஆசிய நாடுகளில் இணையவழி மோசடி மையங்கள் : ஐ.நா வெளியட்ட அதிர்ச்சி அறிக்கை
தென்கிழக்காசியாவில் செயல்படும் மோசடி கும்பல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை – எஃப்.பி.ஐ. எச்சரிக்கை Published By: Priyatharshan 25 Feb, 2026 | 05:06 PM தென்கிழக்காசியாவில் தொழில்துறை அளவில் செயல்படும் சர்வதேச மோசடி கும்பல்களுக்கு எதிராக அமெரிக்காவின் கூட்டாட்சி விசாரணைப் பணியகம் (FBI) கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதென அந்த அமைப்பின் துணை உதவி பணிப்பாளர் ஸ்கொட் ஷெல்பிள் தெரிவித்துள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறையின் Asia Pacific Media Hub ஏற்பாடு செய்த ஊடகச் சந்திப்பில் உரையாற்றிய அவர், சமீபத்தில் தாய்லாந்து, கம்போடியா மற்றும் வியட்நாம் நாடுகளுக்கு மேற்கொண்ட பயணத்தின் பின்னர் இந்த கருத்தை வெளியிட்டார். தென்கிழக்காசியாவில் சீன அமைப்பு சார்ந்த குற்றச்செயல் கும்பல்கள் நடத்தும் மோசடி மையங்கள் மிகப்பெரிய அளவில் செயல்பட்டு வருவதாகவும், அவை தினமும் அமெரிக்கர்களை குறிவைத்து செயல்படுவதாகவும் அவர் தெரிவித்தார். “இவை தனிப்பட்ட அல்லது சிறிய குற்றச்செயல்கள் அல்ல. நவீன தொழில்நுட்பம், எல்லை தாண்டிய அமைப்பு மற்றும் மனித கடத்தல் உள்ளிட்ட பல கூறுகளை பயன்படுத்தி, மிகப்பெரிய லாபம் ஈட்டும் அமைப்புகளாக செயல்படுகின்றன” என அவர் கூறினார். 2025 ஆம் ஆண்டில் மட்டும், எஃப்பிஐயின் Internet Crime Complaint Center (IC3) மூலம் 80,000-க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பெறப்பட்டதாகவும், மொத்த நிதி இழப்பு 2.9 பில்லியன் அமெரிக்க டொலரை கடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த மோசடி மையங்களில் பணிபுரிபவர்களில் பலர் மனித கடத்தலுக்குள்ளானவர்களாக இருப்பதாகவும், அவர்களை கட்டாயப்படுத்தி மோசடி நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “இவை வெறும் இணைய மோசடிகள் அல்ல; இது அமைப்புசார்ந்த குற்றச்செயல். மனித கடத்தல், பணமோசடி மற்றும் ஊழல் அனைத்தும் இதில் கலந்துள்ளன,” என அவர் தெரிவித்தார். கம்போடியா, தாய்லாந்து அல்லது வியட்நாம் போன்ற நாடுகளில் மட்டும் இந்த பிரச்சினை இருப்பதாக கருத முடியாது என்றும், இது முழு பிராந்தியத்தையும் பாதிக்கும் ஒரு சிக்கலாகும் என்றும் அவர் வலியுறுத்தினார். “ஒரு நாட்டில் அழுத்தம் அதிகரித்தால், இந்த கும்பல்கள் வேறு இடங்களுக்கு இடம்பெயர்கின்றன. எனவே, எல்லை தாண்டிய ஒருங்கிணைந்த நடவடிக்கையே முக்கியம்,” என அவர் தெரிவித்தார். தாய்லாந்து பொலிஸ், கம்போடிய தேசிய பொலிஸ் மற்றும் வியட்நாம் பொது பாதுகாப்பு அமைச்சகம் உள்ளிட்ட அமைப்புகளுடன் எஃப்பிஐ நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருவதாகவும், கூட்டு விசாரணை அணிகள் மூலம் பல வெற்றிகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். அமெரிக்கர்களை குறிவைக்கும் “Pig Butchering” என அழைக்கப்படும் முதலீட்டு மோசடிகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார். குறிப்பாக, அறிமுகமற்ற நபர்களின் முதலீட்டு வாய்ப்புகளை சரிபார்க்காமல் நம்ப வேண்டாம், உண்மையான நிதி நிறுவனங்களைப் போல தோற்றமளிக்கும் போலி இணையதள முகவரிகளை கவனிக்கவும், சந்தேகமான செயலிகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், “அதிக லாபம்” வாக்குறுதி அளிக்கும் திட்டங்களை எச்சரிக்கையுடன் அணுகவும், “உண்மையாக இருக்க முடியாத அளவுக்கு நல்லதாகத் தோன்றினால், அது மோசடியாக இருக்க வாய்ப்பே அதிகம்” என அவர் எச்சரித்தார். குற்றவாளிகள் புவியியல் எல்லைகள் தங்களை பாதுகாக்கும் என நினைக்கக் கூடாது எனவும், அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களைத் தேடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் வலியுறுத்தினார். “இது எஃப்பிஐ மட்டும் செய்யக்கூடிய வேலை அல்ல. சர்வதேச ஒத்துழைப்பே வெற்றியின் விசை,” என அவர் நிறைவுரையில் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239574
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
nerodtSspofhct4m71mm16u9h634 2tfu59m685m3g4281h1ht4050020g50 · எவ்வளவு அட்டூழியம் அராஜகம் இருந்தாலும் வெள்ளையர்களிடம் ஒரு நேர்மை இருந்தது. ஆனால் இன்றைய நம் அரசியல்வாதிகளிடம் அந்த நேர்மை இல்லை. வெள்ளையர்கள் ஆண்ட காலம். #திருநெல்வேலி க்கு அருகே #ரயில்பாதை அமைத்துக்கொண்டிருந்தனர். அதற்காக நிறைய பனைமரங்களை வெட்டவேண்டிய சூழல். அங்கு பனையை நம்பி வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு மிகப்பெரிய வருத்தம். ஆங்கிலேயர்களிடம் சென்று பனையை வெட்டுவதை தடுக்கும் தைரியமில்லை. அதே நேரத்தில் பனைமரங்களை இழக்க மனமும் இல்லை. உச்சிவெயல் மண்டையை பிளக்க பசியோடு ஆங்கிலேய அதிகாரிகள் இருந்த நேரம்பார்த்து அங்கிருந்த மக்கள் மண்பானையில்கொண்டு வந்த ஒரு உணவுப்பொருளை அவர்களிடம் வழங்க ருசித்து சாப்பிட்டு வாழ்த்திச் சென்றனர். மறுநாள் ரயில் பாதை அமைக்கும் இடத்துக்கு வந்த வெள்ளைய அதிகாரிகள், "நேற்று சாப்பிட ஏதோ கொடுத்தீர்களே! என்ன அது? மிகவும் ருசியாக இருந்தது. நீண்ட நேரம் பசியெடுக்கவில்லை. மிகவும் இதமான உணவதை எப்படி தயாரித்தீர்கள்". என கேட்க, அந்த மக்கள் கைகளைகாட்டிய இடம் பனைமர உச்சி. அவர்கள் நம்பமறுக்க, பனையில் இருந்து இளம்பனைநுங்கோடு பதநீர் கலந்து, பனைவெல்லம் சேர்த்து மண்பானையில் சிறிது நேரம் வைத்திருந்து கொடுக்க நேற்று சாப்பிட்ட அதே ருசி. "வாவ்" என வாயை பிளந்த அதிகாரிகள் பனைமரங்களை வெட்டாமல் மாற்றுப்பாதையில் ரயில்பாதை அமைக்க உத்தரவிட்டனர். நுங்கு சீசன் முடியும்வரை அவர்களுக்கு மக்கள் தயாரித்தளித்த பனை உணவே மதிய உணவானது. மக்களின் சாதுர்யத்தால் பெரிய அளவில் பனைமரங்கள் வெட்டுவது தவிர்க்கப்பட்டது. வெள்ளையர்களிடமிருந்து பனைமரங்களை காத்த நம்மால் இன்று ஆளும்வர்க்கம் சாலை விரிவாக்கம் என்றப் பெயரிலும், அறியா மக்கள் பனை எதற்கு என்று முடிவெடுத்து அதை அழிக்கும் முடிவிலிருந்தும் காக்க முடியவில்லை. பனை என்றதும் இன்றைய தலைமுறைக்கு நினைவில் வருவது நுங்கு. வியர்குருக்கு மருந்தான நுங்கை ருசியான பாயசம் வைத்தும் அசத்த முடியும். நுங்கு எடுத்து சாப்பிட்டபின் காயைக் கொண்டு தயாரித்த வண்டி உருவாக்கி விளையாடிய அனுபவம் முன் தலைமுறையோடு பறிபோனது. முற்றிய நிலையில் உள்ள பனம்பழத்தை பறித்து சீவி, அவித்து சாப்பிட்ட ருசி, விழுந்த பழத்தை சுட்டு சாப்பிட்ட ருசி, இன்னும் நாவிலிருந்து அகலவில்லை. அன்றைய கிராமத்துவாழ்க்கையில் பனம்பழம் விழும்காலங்களில் எங்கள் முதல் வேலை பனம்பழம் பொறுக்குவது. பொறுக்கிவந்த பழங்களை ஒரு இடத்தில் குவித்துவைத்திருப்போம். சில வாரங்களில் நன்கு பழுத்து அந்த பகுதியில் செல்லும் போது வாசம் வரும் பக்குவத்தில் அதை தனித்தனி விதைகளாக பிரித்து உலரவிடுவோம். விதைகள் உலரும் அதே நேரத்தில் பனங்கிழங்கு விளையவைக்க இடத்தை தயார்செய்வோம். இரண்டடி ஆழத்திற்கு மண்ணை புரட்டி சாம்பல் மக்கிய உரங்கள் கலந்து நடுமிடத்தை மட்டமாக்கி, உலர்ந்த விதையின் தலைப்பகுதி மேலிருக்குமாறு அடுக்கி மேலே சிறிது மணல் தூவிவிட்டோமென்றால் போதும் 115 லிருந்து 130 நாட்களுக்குள் பனங்கிழங்கு தயாராகிவிடும். அவித்து உண்பதாகட்டும், சுட்டு சாப்பிடுவதாகட்டும் அவ்வளவு ருசி. அதுவும் இரவு படுக்கச் செல்லும்போது, விறகடுப்பு நெருப்பில் புதைத்து வைத்து காலையில் எடுக்கும் பனங்கிழங்கை இலேசாக வளைத்தால் சுருக்கம் சுருக்கமாக வந்தால் அது சரியாக வெந்திருக்கிறது என்பதை உணர்த்தும். சுட்ட பனங்கிழங்கை துருவி அதோடு அப்போது பறித்த தேங்காயின் துருவலை சேர்த்து சாப்பிட்டா..! அடடா பாழாய்போன பணத்தை தேடி நகரத்துக்கு வந்ததால் இழந்தவைதான் எத்தனை.! பனங்கிழங்கை சனி மாலை அறுவடைசெய்து அரையடி நீளத்துக்கு வேரைவிட்டு நறுக்கி விதைகளை நீக்கி தலைப்பு மாற்றி நூறு கிழங்குகளாக கட்டி மறுநாள் ஞாயிறு சந்தைக்கு எடுத்துச்சென்று விற்று வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கிவருவோம். சரியாக கிழங்கு வராத சிறு விழுதுமட்டும் வந்த விதையை குறுக்காக வெட்டினால் உள்ளிருக்கும் பனம்பூவின் ருசிக்கு பனைமரத்தையே எழுதிவெக்கலாம். பனங்கிழங்கு அறுவடை செய்தபின் கிடைக்கும் விதைக்குடுகை அற்புதமான விறகு. பொங்கலுக்கு இருவாரங்களுக்கு முன்னே பனங்குருத்தை வெட்டி, சரியான அளவில் வகுந்து, பனியிலும் வெயிலிலும் பதப்படுத்தி முட்டுமாலை, நெத்திச்சுட்டி, அரிசிமாலை எனச்செய்து மண்பானை ஓட்டில் சாயம் காய்ச்சி, அதில் பனம் ஓலையில் செய்தபொருட்களை முக்கி, சாயமேற்றி மாட்டுப் பொங்கலன்று மாடுகளுக்கு அணிவித்து மகிழ்வோம். • பனை ஓலை காத்தாடி, • பனை ஓலை கொழுக்கட்டை, • பனை ஓலை பாய், • பனை ஓலை பெட்டி, • பனை ஓலை கூடை, • பனை ஓலை குச்சிபெட்டி, • அபூர்வமாய் இருந்த ஒரே மாதுளைச்செடியில் காய்களை அணில் கடிக்காமல் இருக்க அப்பா செய்து கட்டிவிடும் பனை ஓலை பெட்டி, • அக்கினி நட்சத்திரத்தன்று வெட்டி, அழகாய் அடுக்கி, பதப்படுத்திய பனை மட்டையில் வெய்த வீட்டில் கோடையில் குளிர்ச்சியையும், குளிர்காலத்தில் கதகதப்பையும் உணர்ந்த அனுபவம், • அப்பப்பா பனைஓலையில்தான் எத்தனை பரவசம். • பதநீர் குடிக்கவும், சாப்பிடவும் பயன்பட்ட பச்சை பனை ஓலை குடலை. • கால்சியம் நிறைந்த ருசியான பதநீர், அதில் காய்ச்சி எடுத்த நலம்பயக்கும் பனைவெல்லம். பதப்படுத்திய மருத்துவ குணம் கொண்ட பனங்கற்கண்டு. • வீடுகட்ட வாரை, விறகாக மட்டை, மிதியடிசெய்ய சப்பை (ஒரு காலத்தில் கீழ் தஞ்சையில் பலகுடும்பங்கள் பனைமட்டை நார் தயாரித்து கேரளாவுக்கு அனுப்பி அந்த நார் மிதியடியாக தமிழ்நாடு திரும்பும்). • காய்கறி பந்தல் போட நார். • வீடுகட்டவும், கட்டில் தயாரிக்கவும் பயன்படும் அகனி. • முக்கியமாக உடலுக்கு நல்லதா? கெடுதலா? என விவாதத்தில் இருக்கும் கள்ளு. • ஒரு ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிட்ட பனையிலிருந்து தயாரிக்கும் பனை வெல்லத்தோடு ஒப்பிடுகையில் அதே பரப்பில் பயிரிடும் கரும்பிலிருந்து கிடைக்கும் வெல்லத்தின் மதிப்பீடு குறைவு. • ஒருமுறைவிதைத்தால் பத்து ஆண்டுகளில் இருந்து ஒரு நூற்றாண்டுவரை பயன்தரக்கூடியது பனை. • மழைநீரை பூமிக்கடியில் சேகரித்து வெளியே விடாமல் பராமரிப்பது பனை. • தன்னிலிருந்து கிடைக்கக்கூடிய பொருட்களால் மனித வாழ்வை தன்னிறைவாக்கும் பனை. பனையின் பயன்களை இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம். #பனைமரம் #பனை பனை மரத்தின் பெருமையை இதைவிட யாரும் அழகாக சொல்லி விட முடியாது... பனை சார்ந்த வாழ்வியலையும் பனை சார்ந்த உணவுகளையும் ஏனோ மறந்து போனது தமிழ் சமூகம்... 💥"#பனைவிவசாயம் 🌴" #பனை மரத்தை பாதுகாப்போம் 🔥" #palmtrees #Palm #பனைமரம்......!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Sri Lanka vs New Zealand, 46th Match, Super Eights, Group 2 at Colombo, T20 World Cup, Feb 25 2026 - Live Cricket Score Live 46th Match, Super Eights, Group 2 (N), Colombo (RPS), February 25, 2026, ICC Men's T20 World Cup PrevNext New Zealand 168/7 Sri Lanka (2.1/20 ov, T:169) 6/2 Sri Lanka need 163 runs in 107 balls. Current RR: 2.76 • Required RR: 9.14
-
அதிசயக்குதிரை
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
ஆழ்ந்த இரங்கல்கள்.................😢- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
அருமை சுவி ஐயா................❤️.சங்கரி joined the community- Today
- இரசித்த.... புகைப்படங்கள்.
- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
ஐயாவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் ......!- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
தமிழக அரசியலில் இருந்த கடைசி நல்ல உயிரும் விடை பெற்றது. முள்ளிவாய்கால் நேரம் கட்சி கட்டுப்பாட்டுக்கு பணிந்தார் என்ற வருத்தம் இருந்தாலும் - தன் மக்களை முன்னிலை படுத்தி அந்த முடிவை எடுத்தார் என்றே கருதுகிறேன். சென்று வாருங்கள் ஐயா. செவ்வணக்கம் தோழர்!- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
அப்படி ஒன்றும் வெள்ளந்தியாக எனக்கு படவில்லை. இங்கே என்ன நடந்திருக்க கூடும்? இளையராஜ இஸ்டஸ்ரிக்கு வந்த போது இசை உரிமையை இசையமைபாளரிடம் கொடுக்கும் வழக்கம் இல்லை. சில காலத்தின் பின் - உரிமை தனக்கு என்பதாக ராஜா ஒப்பந்தங்கள் போட்டிருக்கலாம். தான் வந்த போதே மாற்றி, தனக்கு உரிமை என்பதாக ரஹ்மான் ஒப்பந்தம் போட்டார். ரஹ்மானை போல தன் அனைத்து பாடல் உரிமையும் தனக்கே வேண்டும் என பேராசைப்பட்ட ராஜா, தன் ஆரம்பகால பாடல்களுக்கும் உரிமை கோர - கேசாகி உள்ளது. இதில் வெள்ளந்தி தனம் ஏதும் இல்லை. மாறாக போட்டு கொண்ட உடன்படிக்கைக்கு மாறாக அனைத்தும் தனக்கே வேண்டும் என்ற பேராசையே முன்நிற்கிறது. ஒரு ராஜசபா சீட், ஒரு பத்மபூசணுக்காக பிஜேபிக்கு கொடி…. பின்னர் திமுகவை சமாதானப்படுத்த விஜை கூட்டம் போட்ட அதே நாளில் திமுக பாராட்டு கூட்டம் என மாறி மாறி நாவிழக்கும் மனிதர் - வெள்ளந்தி இல்லை, கறுப்பாடு.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
என்ன கந்தப்பு நியூசிலாந்து பலவீனமாக இருக்கே?- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
என்ன சுவி ஒரே கிளுகிளுப்பான கவிதையோடு வந்திருக்கிறீர்கள்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூசிலாந்து 34-2- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பலம் வாய்ந்த நியூசிலாந்தினை இன்றைய போட்டியில் நான் தெரிவு செய்து இருக்கவேணும்- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
சரியா தானே இருக்கு.- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
அடப்பாவி ........ நான் பிழையாய் எழுதிப்போட்டன் ........ முதல் சரியாய் இருந்திருக்கு , தவறை சரியாக்க வெளிக்கிட்டு சரியை தவறாக்கியாச்சுது ...... ஏதோ புதிதாய் ஒரு விடயம் கற்றுத்தேர்ந்து விட்டேன் ......! 😂 @ஈழப்பிரியன் இப்ப சரியா ......!- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
கண்ணீர் அஞ்சலிகள்- இளையராஜாவுக்கு இடைக்கால தடை - டெல்லி உயர் நீதிமன்றம்
இளையராஜா வெள்ளந்தியாக எல்லோருக்கும் நல்லவராக இருந்திருக்கின்றார். இது கறுப்பு ஆடுகள் நிறைந்த உலகம் என்பதை இப்போது உணந்திருப்பார் என நினைக்கின்றேன்.- "உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
யாரோ ஒரு ஆசாமி இந்த பெயரில் உள்நுழைந்துள்ளாரோ?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Sri Lanka win the toss and bowl.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
கண்ணீர் அஞ்சலிகள்.🙏- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
நல்லகண்ணு காலமானார்: 24 நாள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை அறிக்கை பட மூலாதாரம்,HANDOUT 25 பிப்ரவரி 2026, 08:56 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், " நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. " என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்," பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது." என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 'அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மு. வீரபாண்டியன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி "தமிழ்நாட்டில் அவர் கண்ட சமதர்ம சமூகத்தை படைக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி வளர்க்கவும் சபதம் ஏற்கிறோம். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். பொதுமக்கள் பார்வைக்காக பிற்பகல் 3 மணி வரை அங்கு வைக்கப்படும். மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் கட்சியினர் அணிவகுப்போடு அவரது உடல் மருத்துவக் கல்லூரியிடம் மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்கப்படும்." தலைவர்கள் இரங்கல் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு மறைந்தார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு." என தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,கோப்புப்படம் கொள்கைக் கனல் அகத்தினில் தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "தோழர் நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்! 'தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்' என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்! மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேர்மையான தலைவர், ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் பார்க்காதவர், சுதந்திர போராட்ட வீரர், இந்திய விடுதலைக்காக தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தவர். 'சுதந்திர போராட்டத்தின் போது என் மீசையை சுட்டதாக' என்னிடம் தெரிவித்துள்ளார். இத்தகைய மாபெரும் தலைவரை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். நல்லகண்ணுவை வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழ்நாடு பாஜக நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் நல்லக்கண்ணு . அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!" என பதிவிட்டுள்ளார். 'நூற்றாண்டு' கண்ட நல்லகண்ணு தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார். நல்லகண்ணுவின் ஆரம்ப கால வாழ்க்கை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர். கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கினார். அதுகுறித்து முன்பு கலந்துரையாடல் ஒன்றில் நினைவுகூர்ந்த நல்லகண்ணு, "என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. '18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்' என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்" என்றார். நல்லகண்ணு தொடர்பாக பிபிசி தமிழின் செய்தியாளர்களிடம் கடந்த காலங்களில் இடது சாரி அமைப்புகளின் நிர்வாகிகள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்த கட்டுரையின் பின்வரும் பத்திகளில் காணலாம். "பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின். நெல்லை சதி வழக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், "இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை" என்றார். இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது. இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது. "நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்" என்கிறார் லெனின். நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார். சாதிக் கலவரத்தைத் தடுத்த நல்லகண்ணு "நல்லகண்ணுவின் பிரதான காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்தான்" எனக் கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 1996ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார். "அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்பதை அவர் நிலை நிறுத்தினார்" என்கிறார் கனகராஜ். மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார். "இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது" என்று விவரித்தார் லெனின். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp32qzz50z1o- இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
வாழ்க்கையின் முழுநீளத் திரைப்படம் கவிதையாய்!ஏராளன் started following இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .- அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி! Feb 25, 2026 - 03:48 PM இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே என்பவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பை முறியடித்தமை, விடுதலைப் புலிகளின் உயர் தலைவர்களை இலக்கு வைத்துப் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தமை மற்றும் 'கே.பி' போன்ற விடுதலைப் புலித் தலைவர்களைக் கைது செய்தமை போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு அதிகாரி என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிற்கு மிகவும் சவாலான காலப்பகுதிகளில் தமது உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றிய அதிகாரிகள், இன்று அரசியல் விவாதங்களுக்குள் இழுத்து வரப்படுகின்றமை பலரையும் கவலையடையச் செய்யும் ஒரு விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறல் என்பது அவசியமானது என்ற போதிலும், அது நியாயமான முறையிலும், எல்லைகளுக்கு உட்பட்டும், நிறுவனத்தின் கௌரவத்தை மதிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொழில்முறை வாய்ந்ததாகவும், சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடாகவும் அமைய வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரு சிக்கலான விசாரணையானது பொதுமக்களுக்கான ஒரு காட்சிப்பொருளாக (Public spectacle) மாற்றப்படுவதையே நாம் அதிகளவில் காணக்கூடியதாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது X பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் லாபங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்துவதானது, இலங்கையின் நம்பகத்தன்மைக்கும் நீண்டகாலப் பாதுகாப்பு நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். தேசியப் பாதுகாப்பானது அரசியல் மோதல்களின் பக்கவிளைவாக மாறிவிடக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை உண்மையையும் நீதியையும் தேடிப் பயணிக்க வேண்டும். ஆனால், அது சட்டம், சாட்சியங்கள் மற்றும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவோ அல்லது திசை திருப்புவதற்காகவோ உருவாக்கப்படும் நாடகத்தனமான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி இறுதியாக வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmm1vq4mk000g356pg7ukef6g பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது: 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை! 25 Feb, 2026 | 03:31 PM அரச புலனாய்வுப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (25) காலை பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்பட்டன: மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கிடைத்துள்ள வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நீண்டகால விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது" எனத் தெரிவித்தார். கைதுக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்காமல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜீவ மெதவத்த, "அவரைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார். சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள 'மகா சூத்திரதாரி' தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கையில், "பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்தால் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். அதன்பின்னர் தேவைப்படின், சாட்சியங்களின் அடிப்படையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக காலம் தடுத்து வைக்கவும் சட்டத்தில் இடமுண்டு" என்றார். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் இதன்போது உறுதியளித்தனர். 'சனல்-4' விவகாரம் மற்றும் அசாத் மௌலானாவின் வாக்குமூலங்கள் பின்னணி 2019 ஏப்ரல் 21 அன்று சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த 10 தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு தினசரி விசாரணை நடைபெற்று வருகின்றது. இத்தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதாக நீண்டகாலமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியது. குறிப்பாக, பிரித்தானியாவின் 'சனல்-4' ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில், சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்தும், ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ளவருமான அசாத் மௌலானா வழங்கிய தகவல்களே சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகளில் திருப்புமுனையாக அமைந்தன. கடந்த காலங்களில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த இரகசிய விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலும், புதிதாகக் கண்டறியப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலுமே இன்றையதினம் இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது. தற்போது சி.ஐ.டி வசம் உள்ள சுரேஷ் சலேவிடம் தாக்குதலின் பின்னாலுள்ள அரசியல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/239555 - இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
Important Information
By using this site, you agree to our Terms of Use.