Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. கண்ணாலே பண்பாடும் . .......! படம் : திரும்பிப்பார் , நரசிம்மபாரதி & கிரிஜா .......! 😍
  3. வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : என் காதலே என் காதலே என்னை என்ன செய்ய போகிறாய் நான் ஓவியன் என்று தெரிந்தும் நீ ஏன் கண்ணிரெண்டை கேட்கிறாய் ஆண் : சிலுவைகள் சிறகுகள் ரெண்டில் என்ன தர போகிறாய் கிள்ளுவதை கிள்ளி விட்டு ஏன் தள்ளி நின்று பார்க்கிறாய் ஆண் : காதலே நீ பூ எறிந்தால் எந்த மலையும் கொஞ்சம் குழையும் காதலே நீ கல் எறிந்தால் எந்த கடலும் கொஞ்சம் கலங்கும் ஆண் : இனி மீள்வதா ஆஅ இல்லை வீழ்வதா.. உயிர் வாழ்வதா ஆஅ இல்லை போவதா.. அமுதென்பதா விஷம் என்பதா.. இல்லை அமுதவிஷமென்பதா ஆண் : காதலே உன் காலடியில் நான் விழுந்து விழுந்து தொழுதேன் கண்களை நீ மூடிக்கொண்டால் நான் குலுங்கி குலுங்கி அழுதேன் ஆண் : இது மாற்றமா ஆஅ தடுமாற்றமா.. என் நெஞ்சிலே ஏ பனி மூட்டமா.. நீ தோழியா… இல்லை எதிரியா என்று தினமும் போராட்டமா…...! --- என் காதலே என் காதலே ---
  4. ஓஓஓஓ இதுவரை காலமும் லக்சபான நீர்வீழ்ச்சியில் இருந்தே முதல் மின்சாரம் பெறப்பட்டதாக நினைத்துக் கொண்டிருந்தேன். நீர்வீழ்ச்சியைக் காட்டியதும் பெரும் ஏமாற்றமாக போய்விட்டது. மலையில் இருந்து கயிறு மூலம் இறங்கியவர்கள் எல்லோருமே பேய் அறைந்தது போல இருந்தார்கள். தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மாட்டவே மாட்டேன் என்று அடம் பிடித்தார். பார்த்துக் கொண்டிருந்த எனக்கும் கால்கள் கூசியது. அங்குள்ளவர்கள் அமைப்பாக பாதுகாப்பான முறையில் வழி நடத்துகிறார்கள். பெரும் தகவலுக்கு மிகவும் நன்றி கோசான். சுவி வழமையில் நீங்கள் இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பார்ப்பதால் ஏற்கனவே பார்த்திருப்பீர்கள் என நினைத்தேன்.
  5. சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலைக் குறைக்க வீட்டுக் காவல்! சிறைச்சாலைகளில் நிலவும் நெரிசலை நிவர்த்தி செய்யும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, சந்தேக நபர்களை காவலில் வைப்பதற்குப் பதிலாக வீட்டுக் காவலில் வைக்க அனுமதிக்கும் சட்டத்தை இலங்கை அரசாங்கம் உருவாக்கி வருவதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார நேற்று (19) தெரிவித்தார். அத்துடன், நாட்டின் சிறைச்சாலைகள் சுமார் 10,500 கைதிகளை அடைக்கும் வகையில் கட்டப்பட்டுள்ளன. தற்போது அவை கிட்டத்தட்ட 39,000 பேரை அடைத்து வைக்கின்றன. இவற்றில் முக்கிய பிரச்சினை என்னவென்றால், தண்டனை விதிக்கப்படாத அதிக எண்ணிக்கையிலான தடுப்புக் கைதிகள். போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக சுமார் 20,000 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை உட்பட, சுமார் 28,000 கைதிகள் தடுப்புக் காவலில் உள்ளனர். இந்த நிலையில், நீதிபதி யசந்த கோடகொடவின் வழிகாட்டுதலின் கீழ் தயாரிக்கப்படும் முன்மொழியப்பட்ட சட்டம், சந்தேக நபர்களை சிறையில் அடைப்பதற்குப் பதிலாக, பொருத்தமான வழக்குகளில் வீட்டுக் காவலில் வைக்க நீதிமன்றங்களை அனுமதிக்கும். இதனால் சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும், ஆயுள் தண்டனை அனுபவிக்கும் அல்லது மரண தண்டனையை எதிர்கொள்ளும் கைதிகளுக்கான தண்டனைகளை மறுபரிசீலனை செய்ய அல்லது குறைக்க தற்போது எந்த கட்டமைக்கப்பட்ட வழிமுறையும் இல்லை. நீண்டகால சிறைவாசிகளுக்கு தண்டனை குறைப்பு கட்டமைப்பை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய நீதிபதி துரைராஜா தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை நீதிமன்றங்கள் சுமார் 1.1 மில்லியன் நிலுவையில் உள்ள வழக்குகளால் நிரம்பியுள்ளது. தற்போதைய தலைமை நீதிபதியின் கீழ் வழக்குகளை தீர்ப்பதற்கான விகிதம் அதிகரித்துள்ளதாகவும், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் மற்றும் இலஞ்ச வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் உட்பட புதிய நீதிமன்றங்கள் நிறுவப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். இதற்கு மேலதிகமாக ஏழு நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அமைச்சர் கூறினார். https://athavannews.com/2026/1465609
  6. அவுஸ்ரேலியா நாண‌ய‌த்தில் வென்று ப‌ந்து வீச்சை தெரிவு செய்து இருக்கின‌ம்.................
  7. Today
  8. ஐக்கிய நாடுகள் சபைக்கு 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ள அமெரிக்கா! ஐக்கிய நாடுகள் சபைக்கு அமெரிக்கா செலுத்த வேண்டிய சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களில் சுமார் 160 மில்லியன் டொலர்களை செலுத்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை வியாழக்கிழமை (19) தெரிவித்துள்ளது. மேலும், ட்ரம்ப் நிர்வாகத்தினால் செலுத்தப்பட்டுள்ள பணம் ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான செயல்பாட்டு வரவு செலவுத் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஐ.நா.வின் செய்தித் தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் (Stéphane Dujarric) குறிப்பிட்டுள்ளார். இதேவ‍ேளை, நிதி நெருக்கடியில் உள்ள உலக அமைப்புக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூடுதல் நிதியை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார். ஐ.நா. பட்ஜெட்டில் அமெரிக்கா மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறது. எனினும், ட்ரம்ப் நிர்வாகத்தின் கீழ் அது வழக்கமான மற்றும் அமைதி காக்கும் பட்ஜெட்டுகளுக்கு பணம் செலுத்த மறுத்துவிட்டது. மேலும் ஐ.நா. நிறுவனங்களுக்கு அவர்களின் சொந்த பட்ஜெட்டுகளுடன் தன்னார்வ நிதியைக் குறைத்துள்ளது. 2026 பெப்ரவரி தொடக்கத்தில் அமெரிக்கா வழக்கமான ஐ.நா. பட்ஜெட்டுக்கு 2.19 பில்லியன் டொலர்கள் கடன்பட்டுள்ளதாக ஐ.நா. அதிகாரிகள் கூறியுள்ளனர். இது உலகளவில் நாடுகள் செலுத்த வேண்டிய மொத்தக் கடனில் 95% க்கும் அதிகமாகும். தற்போதைய மற்றும் கடந்த கால அமைதி காக்கும் பணிகளுக்காக அமெரிக்கா மேலும் 2.4 பில்லியன் டொலர்களையும், ஐ.நா. அமைப்பின் கீழ் இயங்கும் சர்வதேச நீதிமன்றங்களுக்கு 43.6 மில்லியன் டொலர்களும் கடன்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். https://athavannews.com/2026/1465622
  9. கொலைக்கு பாவித்த சிம்மை தலையை சுற்றி கடலுக்குள் எறிவார்களா? அல்லது…. அனுர சொல்லிபோட்டார் என்பதால் மீள பதிந்து, கொலை கேசில் மாட்டி கொள்வார்களா😂. இது கொம்பெனிகளை அல்ல…இந்த கொலைகளை செய்தோரை…ஆதாரம் இல்லை என சொல்லி பாதுகாக்கும் முயற்சி. ஏன் என்றால் இந்த கொலைகள் பல இனவாத நோக்கில் நடந்தவை, அதை அனுரவும், அவர் கட்சியும் அன்றும், இன்றும் ஆமோதித்தன.
  10. தங்கள் ஊழல் அரசியலை தக்க வைக்க, எதிரிகளை அழிக்க பயன்படுத்திய ஆயுதப்படைக்கு கொடுத்த அதிகாரம், அவர்கள் செய்யும் தவறுகளை நிஞாயப்படுத்தியதே இன்று நாட்டை அழிக்கிறது. இராணுவம், போலீஸ், அரசியல்வாதிகள், முன்னைய சில ஜனாதிபதிகள் இதை தொழிலாக செய்தனர், ஊக்கப்படுத்தினர், ஒரு பெண் அரசியல்வாதி வைத்த கருத்துக்களே அதற்கு ஆதாரம். இப்போ அதை தடுக்கும் அனுரவை கவிழ்க்க இல்லாத கதைகளை பரப்புதல், சவால் விடுதல், அச்சுறுத்துதல் நடக்கிறது. மக்கள் ஒத்துழைத்தால் இந்த களைகளை இலகுவாக அகற்றலாம். எதற்காக பயங்கரவாத சட்டத்தை அகற்றாமல் வைத்து வேடிக்கை பார்க்கிறார்கள்? ஒன்று அகற்றவேண்டும் இல்லையேல் இந்த ஊழல்வாதிகளை இந மதவாதிகளை அதன்கீழ் கைது செய்து விசாரிக்க வேண்டும். ஊழல்வாதிகள் தைரியமாக நினைத்ததை சாதித்தார்கள், இவர்கள் அவர்களை தண்டிக்க ஏன் தயங்கவேண்டும்? துணிந்து இறங்கினால் உண்டு இல்லையேல் அவர்கள் கரம் ஓங்கும்.
  11. நீர் வீழ்ச்சியில் மின்பிறப்பாக்கிகள் இல்லை அண்ணை. இந்த நீர்வீழ்ச்சியை சுற்றி, மஸ்கெலிய, ஹட்டன் நகர்களுக்கு அண்மித்து, இரு ஆறுகளை தடுத்து, அணை+மின்பிறப்பாக்கிகள் கட்டப்பட்டுள்ளன. இப்படி மொத்தம் 5 இடங்கள் என நினைக்கிறேன். இவை எல்லாமும் சேர்த்து - லக்சபான நீர்மின் தொகுதி எனப்படும். இலங்கையின் முதல் நீர்மின் பிறப்பாக்கும் முறை என்பதாலும், இதன் பின்ன்னர்தான் தேசிய அளவிலான மின் வழங்கல் நடைமுறைக்கு வந்தது என்பதாலும், சாக்கிலேட்டை கண்டோஸ் என்பது போது, தேசிய மின்வலையமைப்பை (national grid) உங்கள் தலைமுறை லக்சபான கரண்ட் என அழைத்தது. இப்படி ஒரு National grid அமையும் முன், மின்சாரம் உள்ளூரில் இருந்த அனல் மின்நிலையங்கள் மூலம், உள்ளூர் வலையமைப்பில் வந்தது. ஒன்றில் இருந்து ஒன்றை பிரித்து காட்ட, லக்சபான கரண்ட் என்ற பதம் பிரயோகத்யில் இருந்தது. பின்னாளில் யுத்தகாலத்தை தவிர, இப்போ மின்சாரம் தேசிய வலையமைப்பிலேயே வருகிறது. உள்ளூர் மின்நிலையங்களும் இந்த வலையமைப்பில் உப நிலையங்கள் ஆகியுள்ளன. பின்னாளில் இதை விட பெரிய, ரந்தம்பே, ரந்தெனிகல, விக்டோரியா நீர்தேக்கங்கள் கட்டப்பட்டு அவை மூலம் வரும் மின்சாரமே இப்போ நீர் மின்சாரத்தில் கணிசமானதை பிறப்பிக்கிறன. இப்போது குறைந்தளவான பங்களிப்பையே லக்சபான தொகுதி வழங்கிறது. இப்போ யாரும் லக்சபான கரண்ட் என சொல்வதில்லை. ஆனால் நாட்டின் பெரும்பாலான மின்சாரம் இன்னமும் எரிபொரிருட் தகனம் மூலமே பிறப்பாக்கிறது (களனிதிஸ்ஸ, நுரைச்சோலை).
  12. ஹோப், ஃபோர்ட், ஜோசப் ஆகியோர் ஆற்றல்கள்; தோல்வி அடையாத அணியாக சுப்பர் 8க்குள் நுழைந்தது மேற்கிந்தியத் தீவுகள் Published By: Vishnu 19 Feb, 2026 | 10:27 PM (நெவில் அன்தனி) கொல்கத்தா ஈடன் கார்ட்ன்ஸ் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற இத்தாலிக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சி குழு போட்டியில் 165 ஓட்டங்களைத் தக்கவைத்து 42 ஓட்டங்களால் மேற்கிந்தியத் தீவுகள் வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் தோல்வி அடையாத அணியாக முன்னாள் சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் சுப்பர் 8கள் சுற்றுக்கு சென்றது. அதேவேளை, இந்த வருட ரி20 உலகக் கிண்ணத்தில் நேபாளத்துக்கு எதிரான போட்டியில் மாத்திரம் வெற்றி ஈட்டிய இத்தாலி, மறக்க முடியாத நினைவுகளுடன் நாடு திரும்பவுள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 165 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. அணித் தலைவர் ஷாய் ஹோப் மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி 6 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 75 ஓட்டங்களைப் பெற்றார். ஷாய் ஹோப்புடன் ரொஸ்டன் சேஸ் 3ஆவது விக்கெட்டில் 64 ஓட்டங்களைப் பகிர்ந்தார். ஷாய் ஹோப்பை விட ரொஸ்டன் சேஸ் 24 ஓட்டங்களையும் ஷேர்ஃபேன் ரதர்ஃபர்ட் ஆட்டம் இழக்காடமல் 24 ஓட்டங்களையும் மெத்யூ ஃபோர்ட் ஆட்டம் இழக்காமல் 16 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் க்றிஷான் கலுகமகே 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பென் மனென்டி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி 18 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் பென் மமென்டி (26), ஜே.ஜே. ஸ்மட்ஸ் (24), அன்தனி மொஸ்கா (19), க்ரான்ட் ஸ்டுவர்ட் (12) ஆகிய நால்வரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் ஷமர் ஜோசப் 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் மெத்யூ ஃபோர்ட் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குடாகேஷ் மோட்டி 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷாய் ஹோப் https://www.virakesari.lk/article/239098
  13. 99,000-க்கும் அதிகமான சந்தேகநபர்கள் கைது Feb 20, 2026 - 03:56 PM நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை முடக்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்களின் எண்ணிக்கை 99,000-ஐத் தாண்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையில், இந்த நடவடிக்கையின் கீழ் இதுவரை 99,540 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறித்த நடவடிக்கையின் ஊடாக 137 சந்தேகநபர்களுக்கு எதிராக சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அத்துடன் 1,973 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்பு காவல் உத்தரவுகளைப் பெறவும், 1,639 பேரை புனர்வாழ்விற்காக அனுப்பி வைக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதேவேளை, இந்த சுற்றிவளைப்புகளின் போது 524 கிலோ 906 கிராம் ஹெரோயின் மற்றும் 1,416 கிலோ 41 கிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இவை தவிர 11 கிலோ 674 கிராம் கொக்கேய்ன், 199 கிலோ 864 கிராம் குஷ் போதைப்பொருள், 121 கிலோ 962 கிராம் ஹஷீஸ் மற்றும் 932,976 போதைப்பொருள் மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், 100,247 சுற்றிவளைப்புகளின் ஊடாக இந்த சந்தேகநபர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதேவேளை, நேற்றைய தினம் "முழு நாடுமே ஒன்றாக" தேசிய நடவடிக்கையின் கீழ் 764 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 766 சுற்றிவளைப்புகளின் ஊடாகவே இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் ஒழிப்புக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கைத் தொடரின் கீழ் நேற்றைய (19) தினமும் பல சந்தேகநபர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த நடவடிக்கையின் கீழ் 552 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அதில் குற்றங்களுடன் நேரடியாகத் தொடர்புடைய 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 259 பேரும், திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 164 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், மதுபோதையில் வாகனம் செலுத்திய 289 பேரும், கவனக்குறைவாக வாகனம் செலுத்திய குற்றச்சாட்டின் கீழ் 55 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பில் 3,997 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும் பொலிஸார் இதன்போது நடவடிக்கை எடுத்துள்ளனர். https://adaderanatamil.lk/news/cmluqvogo0003356pgwgwl8i5
  14. பிரித்தானியாவின் அதிரடிச் சட்டம்: அனுமதியின்றி பகிரப்படும் படங்களை 48 மணிநேரத்திற்குள் நீக்க உத்தரவு! Published By: Digital Desk 3 20 Feb, 2026 | 12:27 PM இணையதளங்களில் பெண்களின் அந்தரங்கப் படங்களை அவர்களின் அனுமதியின்றிப் பகிர்வதை தடுக்கும் வகையில், சமூக ஊடக நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகளை பிரித்தானிய அரசாங்கம் விதித்துள்ளது. பிரித்தானியப் பிரதமர் சேர் கெய்ர் ஸ்டார்மர் தலைமையிலான அரசாங்கம், 'குற்றவியல் மற்றும் பொலிஸ் சட்டமூலத்தில்' கொண்டு வந்துள்ள புதிய திருத்தத்தின்படி, பாதிக்கப்பட்டவர் முறைப்பாடு அளித்தால், அந்தப் படத்தை அனைத்துத் தளங்களிலிருந்தும் 48 மணித்தியாலங்களுக்குள் தொழில்நுட்ப நிறுவனங்கள் அகற்ற வேண்டும். பாதிக்கப்பட்டவர் ஒவ்வொரு சமூக ஊடகத்தையும் தனித்தனியாகத் தொடர்பு கொள்ளத் தேவையில்லை. ஒருமுறை தளத்தில் முறைப்பாடளித்தால், ஏனைய அனைத்துத் தளங்களிலிருந்தும் அந்தப் படம் நீக்கப்படுவதை நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும். ஒரு முறை நீக்கப்பட்ட படம், மீண்டும் அதே தளத்திலோ அல்லது வேறு தளங்களிலோ பதிவேற்றப்படுவதைத் தொழில்நுட்ப ரீதியாகத் தடுக்க வேண்டும். இந்த விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு அவர்களின் உலகளாவிய மொத்த வருமானத்தில் 10 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். மேலும், விதிகளை மதிக்காத இணையதளங்களை பிரித்தானியாவில் முழுமையாக முடக்குவதற்கும் இச்சட்டம் வழிவகை செய்கிறது. பிபிசி செய்திச் சேவையில் பேசிய பிரதமர் ஸ்டார்மர், "பயங்கரவாதம் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான காணொளிகளை நீக்குவதற்குத் தொழில்நுட்ப நிறுவனங்கள் காட்டும் அதே வேகத்தை, பெண்களின் அந்தரங்கப் படங்களை நீக்குவதிலும் காட்ட வேண்டும். இது பாதிக்கப்பட்டவர்களுக்கு இழைக்கப்படும் பெரும் அநீதி. இதனைத் தடுக்க நிறுவனங்கள் பொறுப்பேற்க வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டில் அந்தரங்கப் படங்கள் தொடர்பான முறைப்பாடுகள் 20.9 சதவீதம் அதிகரித்துள்ளதாக கடந்த மே மாதம் வெளியான பாராளுமன்ற அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. இம் மாத ஆரம்பத்தில் அனுமதியின்றி உருவாக்கப்பட்ட 'டீப்ஃபேக்' படங்களைப் பகிர்வது சட்டவிரோதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த புதிய சட்டமானது குறிப்பாக பெண்கள், சிறுமிகள் மற்றும் எல்ஜிபிடி சமூகத்தினரைப் பாதுகாப்பதில் ஒரு மைல்கல்லாக அமையும் எனப் பெண் உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. https://www.virakesari.lk/article/239141
  15. சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துகள் அரசுடைமை Feb 20, 2026 - 01:37 PM கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இதுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனைகளின் போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட, சட்டவிரோத செயல்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்கள் மற்றும் சொத்துக்களின் விபரங்களை பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று (20) வெளிப்படுத்தினார். பாராளுமன்ற உறுப்பினர் ரவீந்திர பண்டார எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இந்தச் சொத்துக்கள் தற்போது முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர், இதில் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட 'கெஹெல்பத்தர பத்மே' உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளின் பல சொத்துக்களும் அடங்குவதாகக் குறிப்பிட்டார். அமைச்சர் பாராளுமன்றில் சமர்ப்பித்த சட்டவிரோதமாக ஈட்டப்பட்ட சொத்துக்களின் விபரங்கள் வருமாறு, ஹப்புகொட ஆராச்சிகே கங்கானம்கே துமிந்த தில்ருக் முடக்கப்பட்டுள்ள சொத்துக்களின் மதிப்பு 23 மில்லியன் ரூபாய். இதில் ஒரு வேன், ஒரு மோட்டார் சைக்கிள், வீடு மற்றும் ரோலர் கேட் கந்தையா கலாமோகன், சொத்து மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. 2 மோட்டார் படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. திலூம் தாரக பாலசூரிய, 8 இலட்சம் ரூபாய் முகப்பு மதிப்புக் கொண்ட 15 பேர்ச் காணியுடன் கூடிய இரண்டு மாடி வீடு. மொஹமட் ஹரீஷ் மொஹமட் 2026.01.21 முதல் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன, பெறுமதி இன்னும் மதிப்பிடப்படவில்லை. மேலதிகமாக 5 வாகனங்கள் அரசுடமை மொஹமட் ஷியாம், 2026.01.21 அன்று சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. மதிப்பு இன்னும் மதிப்பிடப்படவில்லை. கார் ஒன்று அரசுடமை. விஜேசூரிய மஹதுருகே உதித இரோஷன் விஜேசிறி, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் 1 லொறி. இந்திக பத்மக்குமார, 2.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான கெப் வாகனம் மற்றும் ஒரு மில்லியன் ரூபாய் வைப்புச் செய்யப்பட்ட வங்கி கணக்கு. லஹிரு சம்பத், 1.8 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு முச்சக்கரவண்டி ஹெட்டியாரச்சிகே தோன ஸ்ரீயானி சந்திரலதா, 6 கோடி ரூபாய் பெறுமதியான 14.7 பேர்ச் காணியும் நான்கு மாடி வீடு. கெஹெல்பத்தர பத்மே என்ற மந்தினு பத்மசிறி 30 மில்லியன் ரூபாய் பெறுமதியான பாதி கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களுடன் கூடிய 20 பேர்ச் காணி, 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 6 அறைகளைக் கொண்ட பாதி பூர்த்தியான கட்டிடம். தெஹிபாலா என்ற பட்டபெதிகே மத்துமகெ ஷெஹான் சத்சர 200 மில்லியன் ரூபாய் பெறுமதியான 5 பலநாள் மீன்பிடி படகுகள், 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான 15.8 பேர்ச் காணி மற்றும் இரண்டு மாடி வீடு. ஜயசிங்ககே மதுரங்க சம்பத், 5.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 கெப் வாகனம், 14.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 வேன், 5 வங்கிக் கணக்குகளில் உள்ள 73.03 மில்லியன் ரூபாய், மற்றுமொரு கணக்கில் உள்ள 160,328.88 ரூபாய், 544 அமெரிக்க டொலர் மற்றும் 283 மில்லியன் ரூபாய் பணம். அதிகாரி சமந்த பெரேரா, 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான 10.10 பேர்ச் காணி, 13 மில்லியன் ரூபாய் பெறுமதியான 1 ஏக்கரும் 1.5 பேர்ச் காணி. https://adaderanatamil.lk/news/cmlulu5wg0006356pisiutrnh
  16. ஓ.பன்னீர் செல்வம் ஸ்டாலினை சந்தித்த பின் திமுகவில் இணைவது பற்றி கூறியது என்ன? பட மூலாதாரம்,ANI 20 பிப்ரவரி 2026, 10:01 GMT புதுப்பிக்கப்பட்டது 36 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள் அ.தி.மு.க தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தை நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப்ரவரி 20) தமிழக சட்டப்பேரவை வளாகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். அந்தச் சந்திப்பிற்கு பிறகு, செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "வரவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" எனக் கூறினார். அதற்கு முன்னதாக, இன்று சட்டப்பேரவையில் பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், "எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியோடு, ஸ்டாலின் மீண்டும் தமிழ்நாட்டின் மீண்டும் முதல்வராக வேண்டும்" எனக் கூறினார். அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவு எம்எல்ஏ பேசியது என்ன? சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வந்த நிலையில், அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று பதிலுரை வழங்கினார். அதிமுக உறுப்பினர்கள், அன்புமணி தலைமையிலான பாமக உறுப்பினர்கள் மற்றும் பாஜக உறுப்பினர்கள் இந்தப் பதிலுரையை புறக்கணித்து, வெளிநடப்பு செய்தனர். சட்டப்பேரவையில் இன்று பேசிய உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளருமான ஐயப்பன், "முதல்வரின் காலை உணவு திட்டம் தொலைநோக்கு பார்வையுடன் ஏற்படுத்தப்பட்ட திட்டம். ஆரம்பப் பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு தாயாக இருந்து முதலமைச்சர் உணவு வழங்கி வருகிறார். காலை உணவு திட்டத்துக்காக தமிழ் சமுதாயம் இருக்கும் வரை முதலமைச்சரை பாராட்டிக் கொண்டிருப்பார்கள்." என்று கூறினார். மேலும், "வருகின்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று, தமிழகத்தின் முதலமைச்சராக தலைவர் மு.க.ஸ்டாலின் வர வேண்டும் என்று புரட்சி தலைவர் எம்ஜிஆர் ஆசியோடும், புரட்சி தலைவி அம்மா ஆசியோடும், மீண்டும் மீண்டும் வரவேண்டுமென இந்த நேரத்தில் அவரை வாழ்த்துகிறேன். என் அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் வாழ்த்துகளையும் தெரிவித்து கொள்கிறேன்" என்றும் அவர் கூறினார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது வங்கதேசம்: தாரிக் ரஹ்மானிடம் தாராளம் காட்டும் இந்தியா, முகமது யூனுஸிடம் கசப்பாக நடந்துகொண்டது ஏன்? இந்தியா முதலிடத்தில் இருந்தாலும் சூப்பர்-8ல் கவலை தரும் 3 விஷயங்கள் எவை? மலேசியா வாசுதேவன் பாடிய 'மயங்க வைக்கும்' 10 பாடல்கள் 'மடை திறந்து தாவும் நதியலை நான்' - இளையராஜாவுக்கு தடை விதிக்கப்பட்ட பாடல்களில் 15 பிரபல பாடல்கள் எவை? End of அதிகம் படிக்கப்பட்டது சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன் பேசியதைக் கேட்டு, திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் மேஜையைத் தட்டி தங்களது ஆதரவைத் தெரிவித்தனர். அப்போது ஓ.பன்னீர் செல்வமும் சட்டப்பேரவையில் அமர்ந்திருந்தார். பட மூலாதாரம்,@Udhaystalin/X படக்குறிப்பு,கடந்தாண்டு ஜூலை மாதம், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த ஓ. பன்னீர்செல்வம் (கோப்புப் படம்) 'திமுகவில் இணைவா?' சட்டப்பேரவை நிகழ்வுகளுக்கு பிறகு, ஓ.பன்னீர்செல்வம், முதலமைச்சர் ஸ்டாலினை அவரது அறையில் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர், முதலமைச்சரை சந்தித்தது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், "திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறப்பான ஆட்சிக்கு, முதலமைச்சரை சந்தித்து என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துவிட்டு வந்துள்ளேன்." எனக் கூறினார். அப்போது உசிலம்பட்டி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஐயப்பன், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆதரவாக சட்டப்பேரவையில் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, "தமிழக மக்கள் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறார்களோ, அதை அவர் சொல்லியிருக்கிறார்" என்று கூறினார். "அது பொதுவான கருத்து, இன்றைக்கு இருக்கும் அரசியல் சூழ்நிலை, ஆட்சியின் நிலை, 5 ஆண்டுகள் திமுக செய்த சாதனைகள் மக்கள் மனதில் பதிந்திருப்பது ஆகியவற்றை வைத்துப் பார்க்கும்போது, அவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் கூறினார். திமுகவில் இணையப்போகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "பொறுத்திருந்து பாருங்கள்" என்று மட்டும் ஓ.பன்னீர் செல்வம் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce8n2v3rp2eo
  17. பாராளுமன்ற ஓய்வூதியம் நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் வௌியீடு Feb 20, 2026 - 12:48 PM பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்குதல் சட்டம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. 1977 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்ற ஓய்வூதியச் சட்டம், 1982 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவு அல்லது 1990 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்கச் சட்டத்தின் 09 ஆம் பிரிவின்படி ஓய்வூதியம் பெறுவதற்கு உரிமையுள்ள மற்றும் ஓய்வூதியம் பெற்றுக்கொண்டிருக்கும் எந்தவொரு நபருக்கும், இந்தச் சட்டம் நடைமுறைக்கு வரும் திகதியிலிருந்தும் அதற்குப் பின்னரும் ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என அந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் தொடர்பான பாராளுமன்ற விவாதம் கடந்த 17 ஆம் திகதி நடைபெற்றதுடன், அது பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து, குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்திய நிலையில், தற்போது அது சட்டமாக வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmluk5eak0005356pevq7a4oe
  18. அவுஸ்ரேலியா எதிர் ஓமான் ஜ‌ரோப்பிய‌ நேர‌ம் ம‌திய‌ம் இர‌ண்டு ம‌னிக்கு தொட‌ங்குது................இது தான் ஆர‌ப்ப‌ சுற்று க‌ட‌சி போட்டி..............................
  19. நாட்களை கடத்தும் ஆளும் கட்சியும் இடம் கொடுக்கும் தமிழ்க்கட்சிகளும் February 19, 2026 — கருணாகரன் — இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தேசிய மக்கள் சக்தியும் தீர்வைத் தரப்போவதில்லை என்பது தெளிவாகியுள்ளது. எந்தப் பிரச்சினைக்கும் எந்தப் பதிலையும் உறுதியாகவோ வெளிப்படையாகவோ சொல்லாமல் தந்திரமாக நாட்களைக் கடத்தும் உபாயத்தைக் கையாள்கிறது NPP அரசாங்கம். இனப்பிரச்சினைக்குத் தீர்வு, மாகாணசபைகளுக்கான தேர்தல், வடக்குக்கிழக்கில் பௌத்த சிங்கள விரிவாக்கச் செயற்பாடுகள், பொருளாதார மறுசீரமைப்பு – புதிய பொருளாதார முன்னெடுப்பு, மலையக மக்களின் காணி மற்றும் வீட்டுரிமைப் பிரச்சினைகள் என எதற்கும் பொறுப்பான பதிலை ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்கவோ, பிரதமர் ஹரிணி அமரசூரியவோ சொல்வதில்லை. மட்டுமல்ல, ஒவ்வொரு பிரச்சினையையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் தீர்வு காண்பது என்றும் பேசுவதில்லை. அல்லது ஒவ்வொரு விடயத்தையும் எந்த அடிப்படையில், எவ்வளவு கால எல்லைக்குள் முன்னெடுத்துச் செயற்படுத்துவது என்றும் கூறுவதில்லை. பதிலாக இவை தொடர்பாக பிரதி அமைச்சர்கள், NPP யின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மட்டத்தில் அங்கங்கே சில வார்த்தைகள் சொல்லப்படும். அதாவது அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளில் அக்கறையோடு செயற்படுகிறது. நிச்சயமாக மாற்றங்களை உருவாக்கும் என்று அவர்கள் அங்கங்கே சொல்லி, எல்லாவற்றுக்கும் தீர்வு காணும் அக்கறை அரசாங்கத்துக்குண்டு என்றவொரு தோற்றப்பாட்டை உருவாக்குவதற்கு முயற்சிக்கிறார்கள். இது தேசிய மக்கள் சக்தியின் ஆளும் நிலைப்பாட்டுக்கான உபாயமாகும். இந்த மாதிரியானதொரு உபாயத்தையே முன்பு ரணில் விக்கிரமசிங்கவும் கையாண்டு வந்தார். எதையும் உரத்த குரலிலோ, உறுதிபடவோ ரணில் சொல்வதில்லை. ஆனால், தந்திரமாகக் காய்களை நகர்த்துவார். ஐம்பது ஆண்டுக்கும் அதிகமான அரசியல் வரலாற்றைக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க ஐந்து தடவைக்கு மேல் பிரதமராக இருந்திருக்கிறார். ஒரு தடவை ஜனாதிபதியாகப் பதவி வகித்திருக்கிறார். அரசியல் வாழ்வைத் தொடங்கிய காலத்திலிருந்து பல்வேறு துறைகளின் அமைச்சராகவும் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். இப்படியெல்லாம் இருந்தும் இலங்கையின் எந்த நெருக்கடிக்கும் ரணில் விக்கிரமசிங்க தீர்வைக் கண்டதேயில்லை. ஆனால், வெற்றிகரமாக அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தித் தன்னுடைய அரசியற் காலத்தைக் கடத்திக் கொண்டார். ஏறக்குறைய அநுரகுமார திசநாயக்கவும் இத்தகையதொரு உபாயத்தை – தந்திரத்தைத்தான் கையாள்கிறார். ஆனால், தேசிய மக்கள் சக்தி, இனப்பிரச்சினைக்கு மட்டுமல்ல, இலங்கையின் அனைத்துப் பிரச்சினைக்குத் தீர்வைத் தரும் – தீர்வை எட்டும் என்று சிலர் அடித்துச் சொல்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கைக்கு எதைப் பரிசாகக் கொடுப்பது என்று தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில் தேசிய மக்கள் சக்தியும் அதற்குத் தலைமை தாங்கும் அநுரகுமார திசநாயக்கவும் சர்வரோக நிவாரணிகள். இதொரு முட்டாள்தனமான நம்பிக்கை. அடிப்படைகளற்ற எந்த நம்பிக்கையும் முட்டாள்தனமானதே. தேசிய மக்கள் சக்தி ஆட்சி அதிகாரத்துக்கு வந்து ஓராண்டு முடிந்து விட்டது. அநுரகுமார திசநாயக்க ஜனாதிபதிப் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகளாகிறது. போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் என்றவாறாக நடவடிக்கைகள் அமைந்துள்ளனவே தவிர, பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சியைக் காண்பதற்கான புதிய பொருளாதாரக் கொள்கையோ, திட்டமோ இன்னும் உருவாக்கப்படவில்லை. அதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் தெரியவில்லை. அப்படித்தான் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் முயற்சிகளையும் காணமுடியவில்லை. குறைந்த பட்சம் தீர்வுக்கு முன்னர் நடைமுறைப்படுத்த வேண்டிய மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துவதற்கே அரசாங்கம் பின்னடிக்கிறது. தேர்தல் நடக்கும் என்று NPP யின் ஒரு தரப்புச் சொல்கிறது. தேர்தல் நடத்துவது சாத்தியமில்லை என்று NPP யின் இன்னொரு தரப்பு மறுக்கிறது. இது திட்டமிட்ட ஏய்ப்பு அன்றி, வேறென்ன? அரசியலமைப்பு மாற்றம் நடக்கும் என்று ஒரு தரப்புச் சொல்கிறது. அது இப்போதில்லை என்று இன்னொரு தரப்புக்கூறுகிறது. இதையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்வது? அல்லது இந்த மாதிரிச் செயற்பாடுகளுக்கு என்ன பெயர்? ஏற்கனவே அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பு, ஊழல் தடுப்பு, ஊழல்வாதிகள் கைது, புதிய கல்விக் கொள்கைக்கான ஏற்பாடுகள் போன்றவற்றிலும் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சொல்ல முடியவில்லை. கல்விக் கொள்கையை ஆதரிப்பதா எதிர்ப்பதா என்பதையும் விட அதை நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கும் கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணியை எதிர்த்து முடக்குவதற்கே NPP க்குள்ளும் வெளியிலும் மும்முரமான முயற்சிகள் நடக்கின்றன. ஊழல்வாதிகளைக் கைது செய்வதிலும் பெரிய முன்னேற்றம் எதுவும் இல்லை. அதாவது வெளியே சொல்லப்பட்ட – மக்களுக்கு உறுதி அளித்த அளவுக்கு முந்திய ஆட்சியாளர்களில் (ஊழல்வாதிகளில்) NPP கைவைக்கவில்லை. இதுவரையில் பிடித்து உள்ளே போடப்பட்டிருப்பவர்கள் ஓரத்தில் இருந்த சிறிய எறும்புகளே. என்பதால்தான் NPP யின்மீது கேள்விகளும் சந்தேகமும் வலுக்கிறது. இதேவேளை இலங்கையின் இன்றைய அரசியல் யதார்த்தத்தில் NPP க்குப் பதிலாக – மாற்றாக வேறு தெரிவுகள் இல்லை என்பதையும் நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். NPP யைத் தவிர்த்தால், சஜித் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கலாமா என்றால், சஜித்தான் கடந்த ஆட்சியில் 1000 விஹாரைகள் திட்டத்தை உருவாக்கிய நாயகனாக இருக்கிறார். இலங்கைக்குத் தேவை தொழிற்சாலைகளே தவிர, விஹாரைகளோ, தேவாலயங்களோ, கோயில்களோ, மசூதிகளோ இல்லை. உலகத்திடம் கையேந்தி, கடன்வாங்கி ஆட்சியை நடத்தும் அரசாங்கத்தின் நிதியில் மத நிறுவனங்களை வளர்ப்பது மூடத்தனத்தை வளர்ப்பதாகவே அமையும். அப்படியான ஒருவரை எப்படி நம்பி ஏற்றுக் கொள்வது? அடுத்தது பொதுஜன பெரமுன. இந்த நாட்டைக் கொள்ளையடித்துக் குட்டிச்சுவராக்கியவர்கள் என்று பகிரங்கமாகவே குற்றம்சாட்டப்பட்டிருக்கும் ராஜபக்ஸவினரை எந்த அடிப்படையில் மறுபடியும் அதிகாரத்துக்குக் கொண்டு வருவது? மட்டுமல்ல, அவர்கள் இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு எதிர்வளமாகச் சிந்திப்பவர்கள். ஆகவே அவர்களும் பொருத்தமான தெரிவல்ல. மிஞ்சுவது, சக்குப் பிடித்துப்போன ரணில் தரப்புத்தான். அவர்கள்தானே எதற்குமே பொருத்தமற்றவர்கள் என்று சனங்களால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்கள். என்றால், இனி எந்த அடிப்படையில் அவர்களை அப்படியே ஏற்றுக் கொள்வது? இதுதான் மிகப் பெரிய துயரமும் அவலமுமாகும். இதுதான் NPP க்கும் வாய்ப்பாக உள்ளது. இந்த யதார்த்தப் பின்னணில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எப்படிக் கையாள்வது என்ற கேள்வி எழுகிறது. இதில் ஒவ்வொரு சமூகத்தினரும் ஒவ்வொரு விதமாகச் சிந்திக்கின்றனர். சிங்கள மக்களைப் பொறுத்தவரையில் ஊழல்வாதிகள் தண்டிக்கப்படாமல் விட்டாலும் பரவாயில்லை. புதிய அரசியலமைப்பு வந்தாலென்ன, விட்டாலென்ன? மாகாணசபைத் தேர்தல் நடந்தால் என்ன? நடக்காமல் போனாலென்ன? இனிமேல் ஊழலற்ற, பொருளாதார சுபீட்சத்தை நோக்கிய ஒரு ஆட்சி இருந்தால் போதும் என்றே அவர்கள் சிந்திக்கிறார்கள். இது பெருந்திரள் சிங்கள மக்களை அடிப்படையாகக் கொண்ட அவதானிப்பும் கருத்துமாகும். இதை உள ரீதியாக நிறைவு செய்யக் கூடிய அளவுக்கு அரசாங்கத்தின் எளிமையான நடவடிக்கைகளும் ஜனாதிபதி, பிரதமர் போன்றோரின் தனிப்பட்ட – பகிரங்க நடமாட்டங்களும் அமைகின்றன. மிக எளிமையாக, தாங்கள் நெருங்கிப் பார்க்கக் கூடிய ஒருவராக ஜனாதிபதி இருக்கிறார் என்பது பெரும்பாலான மக்களுடைய எண்ணமாகும். ஆக, அநுரகுமார திசநாயக்க என்ற தங்கக் குதிரை உள்ளவரை தேசிய மக்கள் சக்தியின் கதிரைக்குப் பிரச்சினையில்லை. தமிழ்ச் சமூகத்தில் முக்கியமாக இரண்டு விதமான நோக்குநிலையைக் கொண்ட தரப்புகள் உண்டு. ஒன்று, தேசிய மக்கள் சக்தியை நம்பி, அந்த மாயக்குதிரைக்குப் பின்னால் மகிழ்ச்சியோடு செல்லும் – செல்ல விரும்பும் தரப்பு. மற்றது, NPP யை நம்ப முடியாது என்று வெளியே நிற்கும் தமிழ்த்தேசியவாதத் தரப்பு. இதற்குள் சிறிய – குட்டிக்குட்டி – அணிகள் உண்டு. அடிப்படையில் அவையெல்லாம் ஒரு தரப்பே. ஆனால், இரண்டு தரப்புகளும் இன்றைய நிலையில் அரசியல் வலுவற்றவையே. தேசிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் தரப்பு, எந்த வகையிலும் அரசாங்கத்தில் செல்வாக்கைச் செலுத்த முடியாத ஒன்றாகவே உள்ளது. குறைந்த பட்சம், வடக்குக் கிழக்கில் உள்ள எந்தச் சிறிய – தனித்துவமான எத்தகைய வேலைத்திட்டங்களையும் முன்னெடுக்கக் கூடியதாக இல்லை. இதற்கு இரண்டு எளிமையான உதாரணங்களைச் சொல்ல முடியும். 1. மாகாணசபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள். அது தமிழ்பேசும் மக்களுடைய எதிர்பார்ப்பும் அடிப்படைத் தேவையுமாகும் என்பதை NPP ஐ ஆதரிக்கும் தமிழ் பேசும் ஆதரவாளர்களும் சரி, NPP யில் அங்கத்துவம் வகிக்கும் தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை, மாநகரசபை, பிரதேச சபை உறுப்பினர்கள், தமிழ்பேசும் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் என ஒரு பெரிய குழாத்தினர் இருக்கின்றபோதும் பேசுவதோ, அழுத்தம் கொடுப்பதோ இல்லை. அப்படி அழுத்தம் கொடுக்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல, NPP யும் இடமளிப்பதில்லை. 2. வடக்குக் கிழக்கில் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறைத் துறைமுகம், ஆனையிறவு உப்பளம், கிழக்கில் பிற தொழிற்சாலைகள் உள்ளிட்ட எதையும் சீராக – முழுமையான அளவில் விரிவாக்கம் செய்து வளர்த்தெடுப்பதற்கு அரசாங்கத்தைக் கோரவோ, பொறுப்பெடுத்துச் செயற்படுத்தவோ முடியாதவர்களாகவே உள்ளனர். ஆக இந்தத் தரப்பு நானும் ரவுடிதான் என்று வலுக்கட்டாயமாக பொலிஸ் வண்டியில் அடம்பிடித்து ஏறும் நடிகர் வடிவேலுவின் நகைச்சுவைக் காட்சியையே நினைவூட்டுகின்றனர். இவர்களுடைய பேச்சுகளும் நடவடிக்கைகளும் நமக்குச் சிரிப்பூட்டுகின்றன. ஆனால், நாம் இதையெல்லாம் பார்த்து ரசிக்கும்படியாகவோ சிரிக்கும்படியாகவோதானா வாழ்கிறோம். ஒரு பெரிய போரினால் முற்றாகவே சிதைக்கப்பட்ட சமூகத்தின் மக்களல்லவா! அப்படியென்றால், இந்தக் குறைபாடுகளை நீக்கி, சிதைக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதிகளாக – அல்லது அவ்வாறு தம்மை அடையாளப்படுத்த முற்படும் தமிழ்த்தேசியவாத சக்திகள் இந்த இடத்தில் மிக விழிப்பாகவும் உறுதியாகவும் மிக நுட்பமாகவும் மிகத்தீவிரமாகவும் தொழிற்பட வேண்டும். ஆனால், அதை எந்தக் கட்சியும் செய்யவே இல்லை. தமிழ்த்தேசியவாத அரசியலை மென்நிலையிலும் தீவிர நிலையிலும் முன்னெடுக்கும் இரண்டு போக்குகள் உண்டு. ஒரு போக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன் போன்றோர் பிரதிநிதித்துப்படுத்தும் தீவிர நிலைப்போக்கு. மற்றது சுமந்திரன், ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட தரப்பினர். இந்த இரண்டு தரப்பும் 2009 க்குப் பிறகு, கடந்த 16 ஆண்டுகால அரசியலில் எதையும் சாதிக்கவில்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பாக இருந்தபோதும் எதையும் செய்யவில்லை. அதிலிருந்து முரண்பட்டுப் பிளவுபட்டுப் பிரிந்து நின்றும் சாதிக்கவில்லை. இப்பொழுது கட்சிகளுக்குள்ளேயே குத்துவெட்டுப்பட்டுக் கொண்டிருக்கின்றன. ரெலோ, தமிழரசுக்கட்சி, முன்னணி போன்றவை பிளவுபட்டுள்ளன. உள்முரண்பாடுகளால் தமிழரசுக்கட்சியும் ரெலோவும் நீதிமன்றம் வரை சென்று விட்டன. சனங்கள் இப்பொழுது இந்தக் கட்சிகளின் உள் வீட்டுப் பிரச்சினையைக் கண்டு கொதிப்போராகவும் ரசிப்போராகவும் மாறியுள்ளனர். ஆனால், எல்லோருக்கு மேலும் துயரச் சுமைகளும் அபாயக் கத்திகளுமே அசைந்தாடிக் கொண்டிருக்கின்றன. தெற்கில் பலமான எந்த அரசியற் சக்தியும் இல்லை. ரணில் – சஜித் அணிப்போட்டி முடிவுக்கு வரவில்லை. புதிதாக வேறெந்தக் கூட்டணியோ சக்தியோ உருவெடுக்கவும் இல்லை. இந்த நிலையில் அடுத்து என்ன நடக்கும்? அடுத்தாக என்ன செய்வது என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் NPP சத்தமில்லாமல் தன்னைப் பலப்படுத்துவதில் மிக நுட்பமாகச் செயற்படுகிறது. அரசியல் ரீதியாக சீனா, அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய நாடுகள் என வல்லாதிக்கச் சக்திகளை அது திறமையாக – தனக்கு வாய்ப்பாகக் கையாள்கிறது. புலம்பெயர் சமூகத்தை அநுரகுமார திசநாயக்க, ஹரிணி, ரில்வின் போன்றோர் தனிப்பட வசப்படுத்தி வைத்துள்ளனர். உள்ளுரில் அபிவிருத்திக் குழுக்கள் என்ற பேரில் கிராமியக் கட்டமைப்புகளை விரிவாக்கி, விரைவுபடுத்தித்தன்னைப் பலப்படுத்துகிறது. வெளியே உள்ள எதிர்த்தரப்புகளின் பலவீனத்தையும் NPP தனக்குச் சாதகமாக்கிக் கொண்டிருக்கிறது. மக்கள்? ஆம், மக்கள் எப்போதும் போல இருண்ட பாதையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். https://arangamnews.com/?p=12688
  20. sSdtornoepag1ga686f crh,1eh438hhimtf1 :7uff4r7v817i2uég0186l · " வதந்தி "....ஒரு முதியவர் பணி ஓய்வு பெற்றவர். வீட்டில் தனிமையில் இருந்தார். படித்தவர், மனைவி பிள்ளைகள் இல்லை. ஆனால், கொஞ்சம் 'துடுக்குத்தனம்' நிறைந்தவர். மற்றவர்களை எளிதாகக் குறைகூறுபவர். அவருடைய பக்கத்து வீட்டுக்கு புதிதாக ஒருவன் குடிவந்தான். அவனுக்கு `ஆக்டிங் டிரைவர்’ வேலை. யாராவது தங்கள் காரை ஓட்ட டிரைவர் வேண்டும் என்று அழைக்கும்போது போவான். மற்ற நேரங்களில் வீட்டிலிருப்பான். இவருக்கு அவன் மேல் சந்தேகம். 'திடீரென்று நள்ளிரவில் கிளம்பிப் போகிறான்.. காலை 8 மணிக்கு வீடு திரும்புகிறான்.. சில நாள்களில் மாலையில் போகிறான்.. இரவில் வீடு திரும்புகிறான்.. ஒரு வேளை அவன் திருடனாக இருப்பானோ' என நினைத்தார். இந்த எண்ணம் நாளாக நாளாக வலுப்பெற்றது. தன் நண்பர்களிடம் அவனைப் பற்றிச் சொன்னார்... காய்கறி, பழம் விற்க வருபவர்களிடம் தன் சந்தேகத்தைச் சொன்னார். `அந்த ஆள் திருடன்’ என்கிற வதந்தி மெள்ளப் பரவியது. ஒருகட்டத்தில், போலீஸாரே அவனை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். ஆனால், 'அவன் அப்பாவி' அவன் ஒரு டிரைவர்தான் என்பது நிருபணம் ஆனதும் அவனை விடுவித்து விட்டார்கள்".. ஆனால், அந்த டிரைவருக்கு மன உளைச்சல் அதிகமானது. 'நான் என்ன திருடனா' என்னைப் போய் கைது செய்து விட்டார்களே.. எல்லாம் 'இந்தப் பக்கத்துவீட்டு பெரியவரால் தானே நடந்தது என்கிற கோபமும் ஆற்றாமையும் எழுந்தது. அவன் முதியவரின் மேல் மானநஷ்ட வழக்குத் தொடுத்தான். வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிபதியிடம் முதியவர் சொன்னார்... "நான் யாரையும் காயப்படுத்தவில்லை.. வாய் வார்த்தையாக எதையோ சொன்னேன் அவ்வளவு தான் ". டிரைவரோ, போலீஸால் தான் அலைக் கழிக்கப்பட்டது, அந்த அவமானத்தால் மனது பாதித்தது பெரியவர் பரப்பிய வதந்தியால் தான் என்பதை எடுத்துச் சொன்னான். நீதிபதிக்கு டிரைவரின் நிலையும் பெரியவரின் வீம்பும் புரிந்தது. முதியவரை அழைத்து "நீங்கள் ஒரு காரியம் செய்யுங்கள் உங்கள் பக்கத்து வீட்டுக்காரனைப் பற்றி நீங்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் ஒரு காகிதத்தில் எழுதி அந்த பேப்பரை துண்டு, துண்டாக கிழித்து போகிற வழியெல்லாம் ஒவ்வொரு துண்டாகப் போட்டுக் கொண்டே செல்லுங்கள் நாளை காலையில் வாருங்கள்’’ என்றார். அடுத்த நாள் அந்த முதியவர், டிரைவர் இருவரும் கோர்ட்டில் ஆஜரானார்கள். நீதிபதி முதியவரை அழைத்தார். "நான் சொன்னதுபோலச் செய்தீர்களா"? "ஆமாம் ஐயா"... "நேற்று நீங்கள் வீசியெறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்துக் கொண்டு வாருங்கள்.. அதன் பிறகு தீர்ப்பு சொல்கிறேன் ’’. "அது எப்படி ஐயா முடியும்? அந்தக் காகிதத் துண்டுகள் காற்றில் பறந்து சிதறி இருக்கும் அதைப் போய் எப்படிக் கண்டுபிடிப்பது?" "முடியாதில்லையா? அப்படித் தான் நீங்கள் சொன்ன வார்த்தைகளும் திரும்பப் பெறவே முடியாதவை.. ஒருவரின் வாழ்க்கையையே பாதிக்கும் ஆற்றல் கொண்டவை" என்றார். பகிர்வு பதிவு. #likecommentsharefollowsupport.....!
  21. இவர் என்னத்துக்கு கத்தரி இல்லாமல் ரோசாவை பறிக்கப் போனவர் . ...... பக்கத்தில் மல்லிகை இல்லையா .......! எப்படியோ நலமாக வீடுதிரும்பி வரட்டும் . .........! தகவலுக்கு நன்றி பாஞ்ச் .......!
  22. திருகோணமலை: கடற்கரையில் அமைக்கப்பட்ட சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை அகற்றம் February 20, 2026 திருகோணமலை பிரட்ரிக் கோட்டை டச்பே கடற்கரையோரமாக இயங்கி வந்த சிற்றுண்டிச்சாலையின் சட்டவிரோத கட்டுமானம் அகற்றப்பட்டு தற்காலிக அனுமதிக்கு ஏற்றவாறு கட்டுமானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதி ராஜ விகாரையினுடைய விகாராதிபதியின் கோரிக்கைக்கு அமைவாக 127 சதுர அடியில் தற்காலிக கடை ஒன்றை அமைப்பதற்கு மட்டுமே கரையோர பாதுகாப்பு திணைக்களம் அனுமதி வழங்கி இருந்தது இருப்பினும் குறித்த அனுமதியை பயன்படுத்தி 405 சதுர அடி பரப்பளவு கொண்ட நிரந்தரக் கட்டிடம் மற்றும் மூன்று கூடுதல் குடிசைகள், நிரந்தர வேலி ஆகியவை அனுமதி பெறாது அமைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், இவற்றை அகற்றுமாறு குறித்த திணைக்களத்தினால் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வந்ததுடன் அவற்றை அகற்றுவதற்கான நடவடிக்கையினையும் கடந்த வருடம் நவம்பர் மாதம் 04 ஆம் திகதி மேற்கொண்டிருந்த நிலையில் குறித்த விகாராதிபதி துறைமுக பொலிஸ் நிலையத்திற்கு சென்று அவர்கள் ஊடாக கரையோர பாதுகாப்பு திணைக்களத்திடம் ஒருவாரகால அவகாசம் கேட்டதுடன் அனுமதி இன்றி அமைக்கப்பட்டிருந்த மூன்று கூடுதல் குடிசைகளை அகற்றியிருந்தார்கள். இதன்பின்னர் 19.11.2025 அன்று குறித்த சட்டவிரோத கட்டடம் அகற்ற திட்டமிடப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் நவம்பர் மாதம் 16 மற்றும் 17 ஆகிய திகதிகளில் விகாரைக்கான கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு புத்தர்சிலை வைத்து குறித்த விடயம் சர்ச்சையாகியிருந்ததுடன் குறித்த விடயம் திசைமாற்றப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, குறித்த சட்டவிரோத சிற்றுண்டிச்சாலை தொடர்பில் அன்றைய திருகோணமலை நகரசபையால் திருகோணமலை நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அதன் பின்னர் கொழும்பு நீதிமன்றில் விகாராதிபதியால் கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்த நிலையில் அங்கு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்தது. https://www.ilakku.org/trincomalee-illegal-restaurant-set-up-on-the-beach-removed/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.