Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. இங்கிலாந்தின் ஆரம்பம் நியூசிலாந்தை விட மோசமாக இருக்கின்றது. அணித் தலைவர் மீண்டும் அணியை கரை சேர்ப்பாரா
  3. Today
  4. 159 அடிச்சார்கள். நியுசிலாந்து தோத்தால் பாகிஸ்தானுக்கு மகிழ்ச்சியாய் இருக்கும். பாகிஸ்தான் இலங்கைக்கு எதிராக பெரிய வெற்றி ஒன்றைப் பெறவேண்டும். பாகிஸ்தான் வென்றால், நியுசிலாந்தும் பாகிஸ்தானும் ஒரே புள்ளி. ஓட்ட விகிதம் முக்கியம். நியுசிலாந்து வென்றால், பாகிஸ்தானின் பயணம் முடிவடையும்.
  5. சொல்றேன் கேட்டுகோங்கோ… பெண் என்பதும்… நடிகை என்பதும்தான்… ஏனையவருக்கும் திரிஷாவுக்கும் வித்தியாசம். எம் ஜி ஆர் தாதா தான்… ஆனால் கருணாநிதி, காஞ்சி காம கேடி என பெரிய தலைகளை எல்லாம் தூக்கி உள்ளே போட்ட… படா தாதா ஜெ…. யாருக்குள்ளும் எந்த திறமையிம் இருக்கலாம்…
  6. இங்கிலாந்தின் வில் ஜாக்ஸ் இந்தத் தொடரின் சகலதுறை ஆட்டக்காரன். பந்தப் போடனுமா. போட்டுக்க. பந்தப் பிடிக்கனுமா. பிடிச்சுக்க. பந்த அடிக்கனுமா. அடிச்சுக்க.
  7. நாங்க தான் திரும்ப திரும்ப சொல்கிறோம் இல்லையா எம் ஜி ஆர் வழியில் ஆட்சி அதிகாரத்தை பங்கிடுவோம் என்று....😛
  8. 12வது பரிமாற்றத்திலேயே 100 அடித்துவிட்டார்கள். ஒரு 180 அடிப்பார்களா.
  9. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 117 / பின் இணைப்பு - "புத்தரும் அவரது மகா பரிநிர்வாணமும்" இந்திய மற்றும் பிற ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்ட சில கீழே தரப்பட்டுள்ளது. இந்திய மொழியான சமசுகிருதத்தில் எழுதப்பட்ட அசோகாவதானம் [Ashokavadana], அசோகரின் அருமை, பெருமைகளை விவரிக்கும் நூலாகும். அசோகாவதானத்தின் பல பதிப்புகள் இன்று காணப்படுகின்றன. அவை கி.பி 5 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி 16 ஆம் நூற்றாண்டு வரையிலானவை ஆகும். எனினும் சில பாதிப்புகளின் உரையின் வடிவத்தின் படி, கி.பி 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.இருப்பினும் அதன் வாய்மொழி தோற்றம் கி மு 2 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் எனவும் நம்பப்படுகிறது. இது அசோகரின் வாழ்க்கையைப் பற்றியது. புத்தர் இறந்து நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பாடலிபுத்திரத்தில் அசோகர் மன்னனாக வருவார் என்று புத்தரே தனது முதன்மையான சீடர் ஆனந்தரிடம் முன்னதாகவே கூறியதாக அசோகாவதானத்தில் கூறப்பட்டுள்ளது? இது புத்தர் பிறந்த நாட்டில், அன்று நிலவிய கதைகளினதும் மற்றும் எழுதப்பட்ட செய்திகளினதும் தொகுப்புகளை அடிப்படையாகக் கொண்டது. எனினும் புத்தர் முன்னறிவித்தல் ["to foretell"] போன்றவற்றை நம்பாதவர் அல்லது எதிர்ப்பவர் ஆகும். எனவே, இதன்படி, புத்தர் கி.மு 369 ஆம் ஆண்டு அல்லது அந்த நேரத்தில் மகாபரிநிர்வாணம் அடைந்திருக்க வேண்டும். புத்தரின் மரணத்திற்கும் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கும் இடையிலான காலத்தை 100 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அதாவது அசோகர் கி.மு 269 இல் அரசரானார், எனவே, கி.மு 269 + 100 ஆண்டுகள் = கி.மு 369. இது குறுகிய பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது இலங்கை நாளாகமங்களில் கொடுக்கப்பட்டுள்ள 218 ஆண்டுகளால் கணிக்கப்படும் மகாபரிநிர்வாண காலத்தை விடக் [269 + 218 ஆண்டுகள் = கி.மு 487] குறைவு என்பதால் ஆகும். இது வடக்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் 100 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து, அதாவது இலங்கைக்கு வடக்கே இருந்து வருகிறது. 218 ஆண்டுகள் என்று பயன்படுத்தும்போது, அது நீண்ட பாரம்பரியம் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவின் தெற்கே உள்ள இலங்கையில் இருந்து வந்ததால், நீண்ட பாரம்பரியம், தெற்கு பாரம்பரியம் என்றும் அழைக்கப்படுகிறது. புத்தர் இந்தியாவில் பிறந்ததால், அவர் பிறந்த இடத்திலிருந்து அல்லது பிறந்த மண்ணுக்கு அருகிலுள்ள இந்தியாவின் பகுதிகளிலிருந்து வரும் எந்தத் தகவலையும் அதிகம் நம்பக்கூடியதாக இருக்கும். அதேவேளை, இலங்கை போன்ற தொலைதூர இடத்திலிருந்து அழகாகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாகவும் எழுதப்படுள்ளதால், அதை மிகவும் துல்லியமான செய்தி என்று நாம் முடிவுகட்டிட முடியாது என்பதே உண்மையாகும், காரணம் புத்தர் இந்தியாவை விட்டு எங்கும் போகவில்லை. மன்னர் அசோகரின் முடிசூட்டு விழாவிற்கு 116, 118, 130, மற்றும் 218 என பல தேதிகள் சீனா மொழி நூல்களில் காணக்கூடியதாக உள்ளன. மேலும் 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919' என்ற நூலில் பக்கம் 241 இல் உள்ள அடிக்குறிப்பில் 118 என கொடுக்கப்பட்டுள்ளது என்பதும் கவனிக்கத் தக்கது. இதன் அடிப்படையில் புத்தரின் மரணம் கிமு 387 [269 + 118] இல் இருக்க வேண்டும். சீனாவின் 218 புத்தகோசரின் சமந்தபசாதிகாவின் [Samantapasadika by Buddhaghosa] மொழிபெயர்ப்பை அடிப்படையாகக் கொண்டது ஆகும். இவர் [புத்தகோசர்] கி.பி 5 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு அறிஞர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்த ஞானிகளில் காஞ்சிபுரத்துப் பௌத்த பள்ளியைச் சேர்ந்த புத்தகோசர் குறிப்பிடத்தக்கவர். இளமையில் இவர் வடமொழி வேதங்களை நன்கு கற்று பிறகு பௌத்த மதத்திற்கு மாறினார். மகத நாட்டில் அக்காலத்தில் வழக்கிலிருந்த பாளி மொழியில் இவர் புலமை பெற்றிருந்தார். இந்தியாவிலிருந்து இலங்கைக்குச் சென்றபின் இலங்கையில் உள்ள அநுராதபுரத்தில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.மேலும் அவர் இலங்கைக்கு வந்து விளக்கவுரைகளை மொழிபெயர்த்ததால், இலங்கை பாரம்பரியம் அவரின் செல்வாக்கால் பாதித்திருக்கலாம் என நம்புகிறேன். எனினும் மேற்கூறிய எந்த ஆண்டுகளிலும் அறிஞர்களிடையே ஒருமித்த கருத்து இல்லை. மற்றொரு ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் கோம்ப்ரிச் [Richard Gombrich], கிமு 404 தான் புத்தர் இறந்த ஆண்டாகக் கூறுகிறார், மேலும் அலெக்சாண்டர் வின்னே [Alexander Wynne] தனது "The Historical Authenticity of Early Buddhist Literature” என்ற கட்டுரையில் கிமு 404 ஆம் ஆண்டை புத்தர் இறந்த ஆண்டாக ஏற்றுக்கொள்கிறார் என்று கூறுகிறார். பாளி நூற் சபை [Pali Text Society] தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் [T. W. Rhys Davids] என்பவரால் நிறுவப்பட்டது. அவர் இறந்தபோது, 'நிறுவனர் காலமானார் [‘Passing of the Founder’]' என்ற தலைப்பில் அவரைப் பற்றிய ஒரு கட்டுரை வெளியானது. அதன் 5வது பக்கத்தில் இவ்வாறு உள்ளது: 1877-ல் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸ் Ancient Coins and Measures of Ceylon என்ற புத்தகத்தை எழுதினார். இதில், இலங்கை பழங்காலச் சம்பிரதாயங்களை அடிப்படையாக கொண்டு புத்தரின் இறப்பு ஆண்டு 412 கி.மு. காலமாக இருந்திருக்கலாம் என்று கூறினார். ஆனால், இதை பெரும்பாலும் அறிஞர்கள் ஏற்கவில்லை. பின்னாளில் தாமஸ் வில்லியம் ரைஸ் டேவிட்ஸும் இந்த எண்ணத்தை கைவிட்டு விட்டார். என்றாலும் இதில் அவர் கூறிய 412 கி.மு. ஆண்டு, முன்பு குறிப்பிடப்பட்ட 404 கி.மு. ஆண்டுடன் நெருக்கமாக இருப்பதைக் காண்கிறோம். Part: 117 / APPENDIX – "The Buddha and his Mahaparinirvana" The following are based on the Indian and other sources. Ashokavadana was written in Sanskrit in the second century A.D., and it is about the life of Asoka. It is stated in the Ashokavadana that the Buddha himself predicted to his foremost disciple Ananda that Asoka would become the king in Pataliputra after one hundred years of his, the Buddha’s, death. This is based on the materials written in the country where the Buddha was born. As per this, the Buddha should have attained Mahaparinirvana on the year 369 B.C. or around that time. When 100 years are used for the time elapsed between the death of the Buddha and the coronation of Asoka, it is known as Shorter Tradition, as it is shorter than the 218 years that is given in the Chronicles of Ceylon. It is also known as Northern Tradition, as 100 years is from India, North of Sri Lanka. When 218 years are used, it is called the Longer Tradition. The Longer Tradition is also known as Southern Tradition, as it is from Ceylon which is south of India. Please note that Any information from the Buddha’s birth place should carry more weight. The record in a far away country might not carry more currency merely because it was written long ago in neat book form. Chinese has many dates, 116, 118, 130, and 218 for King Asoka’s coronation. The year 118 for Asoka after the Buddha is given in the footnote on page 241 of Reference 'Asoka the Buddhist Emperor of India, by Vincent A Smith, Third edition 1919'. The Buddha’s death based on this should be about 387 B. C. The Chinese 218 is based on the translation of Samantapasadika by Buddhaghosa, and the Ceylonese tradition might have influenced him as he came to Lanka to translate the commentaries. There is no consensus among scholars regarding any of the above cited years. Another researcher, Richard Gombrich, states 404 B.C. as the probable year of the death of Buddha, and Alexander Wynne says in his essay “The Historical Authenticity of Early Buddhist Literature” that he too accepts the year 404 B.C. as the year on which Buddha died. Pali Text Society was founded by T. W. Rhys Davids. When he died, there was an article on him with the title ‘Passing of the Founder’. One paragraph on the page 5 reads thus, ‘In 1877 he was ready with a treatise on the ‘Ancient Coins and Measures of Ceylon’, in which he endeavoured to fix the date of death of Gotama, by arguments founded on Sinhalese tradition, within a few years of 412 B. C. But this result did not win general acceptance and he himself abandoned it in later life’. This is very close to the year 404 B. C. proposed above, in the previous passage. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 118 தொடரும் / Will follow துளி/DROP: 2062 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 117 https://www.facebook.com/groups/978753388866632/posts/34032940193021192/?
  10. கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 4 பாகம் – 4 / “பாடசாலை மணியும், தேவாலய மௌனமும்” உடப்பு கிராமப் பள்ளியில் ஒவ்வொரு காலையிலும், அந்த நாள் படிப்பு தொடங்க மணி ஒலிக்கும். ஆனால் இன்று காலையில், ஆசிரியர் ஆதனுக்கு அந்த மணி வித்தியாசமாக ஒலித்தது. அந்த பாடசாலை மணி இன்று மாணவர்களை அழைக்கவில்லை, மாறாக ஒரு கடினமான முடிவைச் செய்ய, தன்னை கட்டாயப்படுத்த, அழைப்பது போல் ஆதன் உணர்ந்தான். எனினும் ஆதன் வழக்கம் போல் தனது பாடத்தைத் தொடங்க, கரும்பலகைக்கு முன் நின்றான்.எல்லா மாணவர்களும் ஆசிரியர் ஆதனை நம்பிக்கையுடன் பார்த்தார்கள். அவர்களின் குடும்பங்கள் வெவ்வேறு மதப் பின்னணியைச் சேர்ந்தவர்கள் - சிலர் இந்து கோவிலிலும், மற்றவர்கள் தேவாலயத்திலும் தங்கள் வழிபாடுகளைச் செய்தனர். ஆனால் எல்லா மாணவர்களும், எந்த வேறுபாடும் இன்றி, ஒரு விடயத்தில் ஒன்றாக இருந்தனர் - அது கற்றுக்கொள்ளும் ஆசை அல்லது பசி. அப்போது ஒரு மாணவன் வேதனையுடன் ஒரு கேள்வியைக் ஆசிரியர் ஆதனிடம் கேட்டான்: “சார் [ஐயா] ... நம் பாடம் சிங்களத்தில் மாறுகிறதா?” அவன் பயந்து காணப்பட்டான். அந்தக் கேள்வி அவனுடையது மட்டுமல்ல, ஒரு காலத்தின் இடிபாட்டிலிருந்து வந்தது — தங்கள் மொழி வடக்கு கிழக்குக்கு வெளியே மறைந்து வருவதாக உணர்ந்த பல தமிழ் குழந்தைகளின் பயத்தையும் குழப்பத்தையும் அது பிரதிநிதித்துவப்படுத்தியது. ஆதன் மெதுவாக அறிவுடன் பதிலளித்தார்: “வரலாறு என்பது மொழிகளைப் பற்றியது மட்டுமல்ல. வரலாறு ஒரு கண்ணாடியும் கூட — அது நாம் யார் என்பதைக் காட்டுகிறது.” என்றார். அதன் பின், எல்லோருக்கும் தெளிவாக தெரியும் வகையில் ஆதன் கரும்பலகையில் எழுதினான்: “தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒரு நினைவு.”, அதாவது தமிழ் கதைகள், கலாச்சாரம் மற்றும் மக்களின் அடையாளத்தை அது சுமந்து செல்கிறது என்று ஒரு விளக்கமும் கொடுத்தான். மறுநாள், பிரதேசக் கல்வி அதிகாரி பள்ளிக்கு வந்தார். பலகையை பார்த்தார். “இது தேவையில்லாத அரசியல்.” என்று குற்றம் சாட்டினார். ஆதன் எந்த தயக்கமும் இன்றி, “இது அரசியல் அல்ல. இது நமது வரலாறு.” என்று அவருக்குப் பதிலளித்தான். அதிகாரி கூறினார்: “வரலாறு மக்களைப் பிரிக்கிறது.” ஆதன் அதற்கு, “நாம் அதை மறைக்கும் போதுதான் அது பிரிக்கிறது.” [“It divides only when we hide it.”] என்று விளக்கம் கொடுத்தான். ஆதன் நேர்மையாகப் பேசியதால், அரசாங்கம் அவரது பெயரை ஒரு ரகசியப் பட்டியலில் சேர்த்தது: “கவனிக்கப்பட வேண்டிய ஆசிரியர்கள்.” இது ஆதனை மிகவும் காயப்படுத்தியது - எந்த உடல் காயத்தையும் விட இது அவனுக்கு வேதனை கொடுத்தது, அந்த வார்த்தை வாளை விடக் கூர்மையாக அவனுக்கு இருந்தது. - ஏனெனில் அவன் உண்மையைக் கற்பித்ததற்காக தண்டிக்கப்பட்டான். அன்று மாலை, சிலாபம் மருத்துவமனையில், சமந்தி [செந்தூரி] வழக்கம் போல் தனது நோயாளிகளுக்கு உதவி செய்து கொண்டிருந்தார். அப்பொழுது ஒரு வயதான நோயாளி அவளைப் பார்த்து அன்பாகக் கேட்டார்: "நீங்க ரொம்ப நல்ல நர்ஸ்... ஆனா உங்க பேர்... அது தமிழா?" அவர் கேள்வியை முடிக்கவில்லை. என்ன சொல்ல அவர் வந்தாரோ, அதைப் சமந்தி [செந்தூரி] புரிஞ்சுக்கிட்டார். அவள் அமைதியாகக் கீழே பார்த்தாள், தன் அடையாளத்தின் கனத்தை உணர்ந்தாள். அந்த நாளின் பிற்பகுதியில், சமந்தி, அங்கே இருந்த ஒரு சிறிய தேவாலயத்தின் கடைசி வரிசையில் அமர்ந்தாள். அவளுக்கு முன்னால் சிலுவை இருந்தது. அவள் மனதிற்குப் பின்னால் முன்னேஸ்வரம் கோவிலின் நினைவுகள் இருந்தன - அவளுடைய சிறுவயதில், அம்மம்மாவுடன் அவள் சென்ற இடம் அது. அவளுக்குள், இரண்டு உலகங்கள் அவளை வெவ்வேறு திசைகளில் இழுத்தன. ஆசிரியர் ஆதன் ஒரு முறை கூறிய வாக்கியத்தை அவள் நினைவில் வைத்தாள்: “அமைதி என்பது மிகக் குறைந்த கீழ்படியிலிருந்து தொடங்குகிறது. [“Peace begins from the lowest step.”]” அவள் யோசித்தாள்: “அமைதி என்றால் நான் யார் என்பதை மறைக்க வேண்டுமா? அமைதி என்றால் என் அடையாளத்தை இழப்பதா?” அவள் இதயம் குழப்பத்தால் கனத்தது. இதற்கிடையில், ஆதன் உடப்பு கடற்கரையில் நின்று கொண்டிருந்தான். அங்கே, மீனவர்கள் தங்கள் வலைகளை சரிசெய்து, உடைந்த துண்டுகளை ஒன்றாகக் கட்டிக் கொண்டிருந்தனர் - மக்கள் தங்கள் உறவுகளை சரிசெய்ய வேண்டும் என்று ஆதன் விரும்பியது போல. ஒரு மீனவன் ஆதனிடம் கேட்டான்: “ஆசிரியரே, நீங்கள் ஏதாவது பெரிய திட்டத்தைத் திட்டமிடுகிறீர்களா?” ஆதன் ஒரு சிறிய புன்னகையுடன் தலையை ஆட்டினார்: “இல்லை. நான் பெரிதாக எதுவும் செய்யவில்லை. நான் எங்க இருக்கிறேனோ அங்க தான் நிற்கிறேன், அதில் எள்ளளவும் மாற்றம் இல்லை” என்றான். அதாவது தான் ஒரு போராட்டத்தையோ அல்லது இயக்கத்தையோ தொடங்கவில்லை. ஆனால், எம் வரலாறு மற்றும் அடையாளம் பற்றிய உண்மையை மட்டும் பேசிக் கொண்டு இருப்பேன் என்றான். அன்றிரவு, சமந்தி ஆதனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினாள்: “ஏதோ ஒரு குழப்பம் இருந்திருக்க வேண்டும், இன்று தேவாலயம் … அமைதியாக இருந்தது." ஆதன் அதற்கு உடனடியாக பதிலளித்தான் “இன்று பள்ளி… மணி அடித்தபோதும், என்னால் எழுந்திருக்க முடியவில்லை.” இருவரும் வெவ்வேறு வழிகளில் ஒரே விடயத்தைத் தான் சொன்னார்கள் - உயிர் கொடுக்க வேண்டிய இடங்களான - கோயில்கள், தேவாலயங்கள், பள்ளிகள் - உண்மையும் அடையாளமும் அடக்கப்படுவதால் காலியாகவும் அமைதியாகவும் மாறிக் கொண்டு இருக்கின்றன என்பதைச் சொல்லாமல் சொன்னார்கள் அன்று இரவு அவர்கள் காதலைப் பற்றிப் பேசவில்லை. ஆனால் அவர்கள் ஒருவரையொருவர் ஆழமாகப் புரிந்துகொண்டார்கள். அவர்கள் இருவரும் ஒரே வலியைப் பகிர்ந்து கொண்டனர் - உண்மை மறைக்கப்பட்டு குரல்கள் அடக்கப்படும் போது வரும் வலி அது. அன்றிரவு, சமந்தி [செந்தூரி] தனது பாட்டியின் பழைய பெட்டியை மீண்டும் திறந்தாள். ஆனால் இந்த முறை, அவள் பயப்படவில்லை - உள்ளே இருக்கும் எந்த உண்மையையும் எதிர்கொள்ளத் தயாராக, உறுதியுடன் திறந்தாள் நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 05 தொடரும் துளி/DROP: 2061 [கதை - 200 / “மொழி இழந்த கடற்கரையில் ஒரு காதல்” அல்லது “சிலாபம் – உடப்பு நடுவே சிக்கிய இரண்டு இதயங்கள்” / பாகம் – 4 https://www.facebook.com/groups/978753388866632/posts/34032482543066957/?
  11. நியுசிலாந்து பொறுமையாக ஆரம்பித்துள்ளனர். முதலாவது பந்துப் பரிமாற்றத்தில் ஓட்டமெதுவும் பெறவில்லை. ஆச்சரின் இறுக்கமான பந்து வீச்சு. தொடக்கமே நல்லாருக்கு
  12. த்ரிஷா தான் தமிழகத்தின் எதிர்கால முதலமைச்சர். பொறுத்திருந்து பாருங்கள் .... ஜெயலலிதாவின் இடத்தை பிடிப்பார். Prashanthan Navaratnam
  13. விஜய் தொடர்பு வைத்துள்ள நடிகை யார்? ஏன்…. முள்ளம் பன்றி, மாதிரி… மற்றவர்களின் குடும்பத்துக்குள் புகுந்து, குழப்பம் விளைவிக்கின்றாய் என்று,.. அந்த நடிகையுடனும், ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தினால் சிலவேளை பலன் அளிக்கலாம். பிற்குறிப்பு: இதற்கு எல்லாம்… சினிமாவில் பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்த கருணாநிதி, பாலிடால் உதயநிதி போன்றவர்களே காரணம்.
  14. 50+ likes · 2 weeks ago இந்தியாவில் பதவியில் உள்ள நீதிபதிகளுக்கு எதிராக கடந்த 10 ஆண்டுகளில் 8,630 புகார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அலுவலகத்தில் பெறப்பட்டதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  15. செவ்வணக்கம் தோழர் - சுப.சோமசுந்தரம் பொதுவாழ்க்கைக்குத் தம்மை அர்ப்பணித்த பொதுவுடைமைத் தோழர்களை நினைக்கும்போதெல்லாம் எனக்குப் புறநானூற்றுப் பாடல் ஒன்றே நினைவுக்கு வருவதுண்டு. அவர்களால்தான் இந்த உலகமே இயங்குகிறது என்று அப்பாடல் சொல்வதாய் உணர்கிறேன். இப்போது நம்மைக் கண்ணீர்க் கடலில் ஆழ்த்தி நம்மைப் பிரிந்த தோழர் ஆர்.நல்லகண்ணு பொதுவுடைமையாளராய் வாழ்ந்தவர் என்பதற்கு ஒரு படி மேலாகச் சென்று பொதுவுடைமையாகவே வாழ்ந்தவர் (More than being a communist, he was communism personified) என்பதே பொருத்தம். "உண்டால் அம்ம இவ்வுலகம்" (இவ்வுலகம் உண்டென்றால் - அதாவது இயங்குகிறது என்றால் - யாரால் தெரியுமா ?) என்று தொடங்கும் பாடல் அன்னாரின் பண்பு நலன்களை அடுக்குகிறது. "இந்திரர் அமிழ்தம் இயைவதாயினும் இனிதெனத் தமியர் உண்டலுமிலரே" என்றவிடத்து, இந்திரர் அமிழ்தமே தந்தாலும் அதனை இனிது எனத் தாம் மட்டுமே உண்ண மாட்டார்கள் எனச் சொல்கிறது பாடல். சொந்தக் கட்சி அவரது தன்னிகரற்ற சேவையைப் பாராட்டி ஒரு கோடி ரூபாயும் காரும் தந்த போது அவற்றைக் கட்சிக்கே திருப்பித் தந்த போதும், தமிழக அரசு 'தகைசால் தமிழர்' விருதளித்துக் கொடுத்த பத்து இலட்சம் ரூபாயைக் கூடுதலாக ஐயாயிரம் ரூபாயோடு தமிழக அரசுக்கே தந்த போதும் பாடலின் அவ்வரிக்குப் பொருளானார் தோழர் நல்லகண்ணு. சுதந்திரம் பெற்ற கையோடு அமைந்த இந்திய அரசு கம்யூனிஸ்டுகளை வேட்டையாடி, தேடித் தேடிக் கைது செய்த வரலாறு அறிந்தோர் வெகு சிலரே. தோழர் நல்லகண்ணு, ஜேக்கப் வாத்தியார் என்று அன்போடு அழைக்கப்பட்ட ஆசிரியர் தோழர் ஜேக்கப் போன்றோரைக் காவல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்கவிட்டு மீசையையும் கண்புருவ மயிரையும் பிடுங்கிய (ஒரு பொதுக் கூட்டத்தில் ஜேக்கப் வாத்தியாரே சொல்லக் கேட்டது) கொடுமையிலும் தளராத மனத் திட்பத்தைக் குறிக்கும் வரியை நாம் குறித்த புறநானூற்றுப் பாடலில் தேடியும் கிடைக்கவில்லை. 'அயர்விலர்' என்று பாடலில் வரும் ஒரு சொல்லை ஆறுதலாய்க் கொள்ளலாம். தோழர் நல்லகண்ணுவின் தந்தையார் தம் பிள்ளைகளுக்கு, இருந்த சிறிது சொத்துகளைப் பங்களித்த போது தோழர் பங்கினை மட்டும் இவருக்கு எழுதாமல் மருமகள் பெயருக்கு எழுதி வைத்து விட்டார் - தோழர் தமக்கென வைக்காமல் பொதுக் காரியங்களுக்குக் கொடுத்து விடுவார் என்ற பயம்தான். புறநானூற்றுப் பாடலின் பின்வரும் வரிக்கு இலக்கணமாய்த் தோழர் வாழ்ந்தார் என்பதற்கு அதுவே சான்று : "தமக்கென முயலா நோன்தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே". மேலும், உலகினை இயங்க வைப்போரின் வாழ்நிலை பற்றி மட்டுமே பாடல் பேசுகிறது (அன்னார்க்கு மரணம் இல்லை என்பதாலோ !). அவர்கள் இப்பூலகை விட்டுச் செல்லும் போது அழியும் உடலும் அழியாப் பயன் தரும் என்பதைப் பேசவில்லை. தோழர் மறைவுக்குப் பின் தம் உடலை ஈந்து மருத்துவ மாணாக்கர்க்குப் பாடமானார். எனவே புறநானூறு சொன்ன நல்வினைகளில் வாழ்ந்தார்; அது சொல்லாமல் விட்ட நன்னெறியிலும் வாழ்ந்தார். நாம் குறித்த புறநானூற்றுப் பாடலும் பொருளும் முழுமையாய் அறிய விழைவோர் "உண்டால் அம்ம இவ்வுலகம்" எனும் முதல் வரியை கூகுள் ஆண்டவரிடம் சொல்லிப் பெறலாம். https://www.facebook.com/share/p/1DrAP36SDy/
  16. தான் கேட்டும் விஜை விவாகரத்து தரவில்லை எனவே கோர்ட்டுக்கு வருகிறேன் என்கிறார் சங்கீதா. பேசாமல் கொடுத்து விட்டு போயிருக்கலாம். விஜி அண்ணி விடயத்தில் சீமான் விட்ட அதே தவறை விஜையும் விடுகிறார். தாய்குல வோட்டை லம்பா அள்ளுவார் என்றார்கள். இப்போ அது அம்போ.
  17. "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு! Vishnupriya RUpdated: Friday, February 27, 2026, 17:14 [IST] சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. Also Read இதுகுறித்து சங்கீதா தனது மனுவில் கூறியிருப்பதாவது: எங்களது திருமண வாழ்க்கை தொடக்க காலத்தில் மகிழ்ச்சியாகவே கடந்தது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் எனது கணவர் விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பது எனக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்தேன். பின்னர் கடந்த 2021 செப்டம்பர் டூ 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி கால கட்டத்தில் வழக்கறிஞர் மூலம் விஜய்யிடம் பேசினேன். அப்போது அந்த நடிகையுடனான தொடர்பை துண்டிப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால் அவர் என்னை ஒதுக்கி வைத்துவிட்டு நடிகையுடன் தொடர்பை தொடர்ந்தார். இது எனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியது. திருமணத்துக்கு மீறிய இந்த உறவை நான் தட்டிக் கேட்டதால் பொருளாதார ரீதியாக எனக்கு நிறைய கட்டுப்பாடுகளை விஜய் விதித்தார். Recommended For You குழந்தைகளின் படிப்பு பாதிக்கப்படும், அவர்களின் மனமும் பாதிக்கப்படும் என்பதால் விவாகரத்து கோருவதை தள்ளி வைத்தேன். அந்த நடிகையுடன் பல்வேறு பொது இடங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விஜய் சென்று வருகிறார். அந்த நடிகையுடன் என் கணவருடன் எடுத்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார். அந்த புகைப்படங்களுக்கு விஜய் எப்போதும் எதிர்ப்பு தெரிவித்ததில்லை. இதனால் எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்துக்கான நோட்டீஸ் அனுப்பியும் இரு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் விஜய் ஒத்துழைக்கவில்லை. கவுரவமாக நவம்பர் 9ஆம் தேதி விஜய்யுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகமாக பிரிய விரும்பினேன். ஆனால் அதற்கும் அவர் ஒத்துழைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறு வழியில்லை என்பதை உணர்ந்தேன். You May Also Like அந்த நடிகையின் பெயரை தற்போது குறிப்பிடுவதை தவிர்க்கிறேன். கணவன்- மனைவி உறவில் விஜய் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டார். சென்சிட்டிவான இந்த வழக்கை தனி அறையில் விசாரக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டு முதல் என்னை வார்த்தையால் விஜய் நிறைய முறை அவமானப்படுத்தியுள்ளார். நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் எனது கணவருக்கும் நடிகைக்குமான ஆதாரங்களை வெளியிடுவேன். இவ்வாறு சங்கீதா தனது மனுவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். நடிகர் விஜய்க்கும் சங்கீதாவுக்கும் இடையே 1999 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணமாகி 27 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023 ஆம் ஆண்டு முதலே விஜய்யை சங்கீதா பிரிந்து வாழ்ந்து வருகிறார். https://tamil.oneindia.com/news/chennai/vijay-s-wife-sangeetha-files-for-divorce-in-chengalpattu-family-court-reports-777257.html?ref_source=OI-TA&ref_medium=Home-Page&ref_campaign=News-Cards தவெக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து வேண்டி மனு தாக்கல் செய்துள்ளார். என விகடனும் செய்தி போட்டுள்ளது. டிஸ்கி சோனாமுத்தா…போச்சா…. பின்ன திமுகவை நோண்டினா விட்டுவாங்களா.
  18. யார் முதலமைச்சர் நீதிபதி இளஞ்செழியன், சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், யாழ்.மாநகர சபை உறுப்பினர் கபிலன், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கம்பன் கழகம் ஜெயராஜ், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இவர்கள் வடக்கு மாகாணசபைத் தேர்தலை எதிர்கொண்டால் இவர்களில் யார் முதலமைச்சராகும் தகுதியானவர்? யாழ்ப்பாண புலனாய்வு
  19. போதைப்பொருள் கடத்தல்காரர் “பொடி லெசி” அழைத்துவரப்பட்டார்! இந்தியாவில் வைத்து கைது செய்யப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸாரால் தேடப்பட்டு வந்தவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க இன்று அதிகாலை நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளார். மும்பையில் இருந்து இன்று அதிகாலை 5.56 மணிக்கு வந்த ஶ்ரீ லங்கன் விமான சேவைகளுக்கு சொந்தமான யுல்.எல் 142 என்ற விமானத்தில் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக நாட்டிற்குள் அவர் அழைத்து வரப்பட்டுள்ளார். நீதிமன்றில் பிணை வழங்கப்பட்டதன் பின்னர் தலைமறைவாகியிருந்த பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான ஜனித் மதுசங்க எனப்படும் பொடி லெசி, 2024 ஆம் ஆண்டு பிணையில் விடுவிக்கப்பட்டதும் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466447
  20. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற நேரடி போர் ஆரம்பம் ! பாகிஸ்தான் விமானப்படையினர் இன்று அதிகாலை தொடக்கம் ஆப்கானிஸ்தானின் முக்கியப் பகுதிகளில் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுளுக்கு இடையில் ஓபரேஷன் கசாப் லில் ஹக் என்ற இராணுவ நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல், தலிபான் தலைவர் ஹிபத்துல்லா அகுந்த்ஸாதா வசிக்கும் முக்கிய நகரமான கந்தகார், எல்லைப் பகுதி மாகாணம் பக்தியா ஆகிய பகுதிகளில் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தலிபான் அரசாங்கமும் பாகிஸ்தானின் இந்தத் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிப் சமூக ஊடகத்தில், தங்கள் பொறுமை எல்லையை மீறிவிட்டதாகவும் தற்போது தங்களுக்கும் உங்களுக்கும் இடையே நேரடிப் போர் ஆரம்பமாகிவிட்டதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார். பாகிஸ்தான் இந்த இராணுவ நடவடிக்கைக்கு ‘ஒபரேஷன் கசாப் லில் ஹக்’ என்று பெயரிட்டுள்ளது. முன்னதாக நேற்றிரவு தலிபான் படைகள் பாகிஸ்தான் எல்லைப் படைகள் மீது பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளன. அதில் 55 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகவும், பல இராணுவப் சாவடிகளைக் கைப்பற்றியதாகவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இதேவேளை தனது நாட்டில் நடக்கும் தீவிரவாதத் தாக்குதல்களுக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள குழுக்களே காரணம் என பாகிஸ்தான் குற்றம் சுமத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 பேர் கொல்லப்பட்டதாக தலிபான் அரசாங்கம் தெரிவித்ததுடன் பதில் தாக்குதலையும் ஆரம்பித்துள்ளது. https://athavannews.com/2026/1466484
  21. வேல்ஸ் திருச்சபையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் மூடிமறைப்பு: விசாரணை அறிக்கையில் வெளியான தகவல்கள்! ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) என்ற பாதிரியார், 15 வயது சிறுவன் ஒருவனைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் புகார்களை வேல்ஸ் திருச்சபை சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மூடிமறைத்துள்ளது. இந்த மூடிமறைப்பால், ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) திருச்சபையின் உயரிய பதவிகளுக்கு உயர்ந்து, பின்னர் ஸ்வான்சி மற்றும் பிரெகன் (Swansea and Brecon) பகுதியின் பிஷப்பாக மாற முடிந்தது. இதேவேளை, 85 வயதான பியர்ஸ், மற்றொரு சிறுவனுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்காகக் கடந்த ஆண்டு சிறையிலடைக்கப்பட்டார் . இதேவேளை, கடந்த 1986 முதல் 2010 வரை நான்கு முறை ஆண்டனி பியர்ஸ் (Anthony Pierce) மீது புகார்கள் அளிக்கப்பட்டும், திருச்சபையின் மூத்த அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது. திருச்சபையின் நற்பெயரைப் பாதுகாப்பதற்காக உண்மைகளை “தரைவிரிப்பிற்கு அடியில் தள்ளி மறைக்கும்” கலாசாரம் அங்கு நிலவியதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட சிறுவன் தற்போது உயிருடன் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதேவேளை, 1999-ஆம் ஆண்டு பியர்ஸ் பிஷப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவரது நடத்தை குறித்த வதந்திகள் தெரிந்திருந்தும், அப்போதைய பேராயர் அல்வின் ரைஸ் ஜோன்ஸ் அவற்றை அலட்சியம் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்ட சிறுவன் ஆண் என்பதால் இது “பெடோஃபிலியா” இல்லை என்ற தவறான புரிதலும் திருச்சபையில் நிலவியது கண்டறியப்பட்டுள்ளது. தற்போதைய பேராயர் செர்ரி வான் (Cherry Vann) இந்த அறிக்கையை ஏற்றுக்கொண்டு தனது ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் புகார்களைக் கவனிக்கத் தவறிய வாய்ப்புகள் மற்றும் தவறான அணுகுமுறைகளை இந்த அறிக்கை தெளிவாகக் காட்டுகிறது என அவர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466498
  22. ஸிம்பாப்வேயை வீழ்த்தி தனது அரை இறுதி வாய்ப்பை இந்தியா அதிகரித்துக்கொண்டது Published By: Vishnu 26 Feb, 2026 | 11:10 PM (நெவில் அன்தனி) சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் விளையாட்டரங்கில் இன்று நடைபெற்ற ஸிம்பாப்வே அணிக்கு எதிரான ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண சுப்பர் 8 குழு 1 போட்டியில் 72 ஓட்டங்களால் அமோக வெற்றியீட்டிய நடப்பு சம்பியன் இந்தியா, அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதை அடுத்து குழு 1இல் இலிருந்து தென் ஆபிரிக்கா முதலாவது அணியாக அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. குழு 2இல் இருந்து இங்கிலாந்து ஏற்கனவே அரை இறுதிக்கு தகுதி பெற்றிருந்தது. இந்தப் போட்டி முடிவை அடுத்து மேற்கிந்தியத் தீவுகளும் இந்தியாவும் தலா ஒரு வெற்றியுடன் அணிகள் நிலையில் தென் ஆபிரிக்காவுக்கு அடுத்ததாக முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களில் இருக்கின்றன. இந்த இரண்டு அணிகளுக்கு இடையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் வெற்றிபெறும் அணி அரை இறுதியில் விளையாட தகுதிபெறும். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இந்தியா 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 256 ஓட்டங்களைப் பெற்று சர்வதேச ரி20 கிரிக்கெட்டில் தனது அதிகூடிய மொத்த எண்ணிக்கையைப் பதிவுசெய்தது. ரி20 உலகக் கிண்ண வரலாற்றில் 2007இல் கென்யாவுக்கு எதிராக இலங்கை குவித்த சாதனைமிகு 260 ஓட்டங்ளுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மொத்த எண்ணிக்கை இரண்டாம் இடத்தில் இருக்கிறது. இன்றைய போட்டியில் கணிசமான மொத்த எண்ணிக்கையைப் பெற்று மிகப் பெரிய ஓட்ட வித்தியாசத்தில் வெற்றிபெற்றால் மாத்திரமே அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாயில் திறக்கப்படும் என்பதை அறிந்திருந்த இந்தியா, ஆரம்பத்திலிருந்தே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த வண்ணம் இருந்தது. இந்திய வீரர்கள் அனைவருமே 160.00 க்கு குறையாத ஸ்ட்ரைக் ரேட்டைப் பதிவுசெய்திருந்தனர். ஆரம்ப விக்கெட்டில் சஞ்சு செம்சனுடன் 22 பந்துகளில் 48 ஓட்டங்களைப் பகிர்ந்த அபிஷேக் ஷர்மா, இரண்டாவது விக்கெட்டில் இஷான் கிஷானுடன் 42 பந்துகளில் மேலும் 72 ஓட்டங்களைப் பகிர்ந்தார். சஞ்சு செம்சன் 15 பந்துகளில் 25 ஓட்டங்களையம் இஷான் கிஷான் 24 பந்துகளில் 38 ஓட்டங்களையும் அபிஷேக் ஷர்மா 30 பந்துகளில் 55 ஓட்டங்களையும் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 13 பந்துகளில் 33 ஓட்டங்களையும் பெற்றனர். (172 - 4 விக்.) இதனைத் தொடர்ந்து ஹார்திக் பாண்டியா 23 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 50 ஓட்டங்களையும் திலக் வர்மா 16 பந்துகளில் ஆட்டம் இழக்காமல் 44 ஓட்டங்களையும் பெற்றதுடன் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 84 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை மிகவும் பலமான நிலையில் இட்டனர். மிகவும் கடினமான 257 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. ப்றயன் பெனெட், தடிவனாஷே மாருமணி ஆகிய இருவரும் ஆரம்ப விக்கெட்டில் 44 ஓட்டங்களைப் பகிர்ந்து ஓரளவு சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். மாருமணி 20 ஓட்டங்களைப் பெற்றார். அடுத்து களம் நுழைந்த டியொன் மயர்ஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறினார். (72 - 2 விக்.) ப்றயன் பெனெட், அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 72 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சிக்கந்தர் ராஸா 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ரெயான் பேர்ல் (0), டஷிங்கா முனியொங்கா (11), முசேக்கிவா (7) ஆகியோர் சீரான இடைவெளியில் ஆட்டம் இழந்தனர். ப்றயன் பெனெட் 20 ஓவர்களும் தாக்குப் பிடித்து 97 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் அர்ஷ்திப் சிங் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/239676

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.