Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!! இஸ்ரேல் நடத்திய தொடர் வான் தாக்குதல்களில், ஈரான் இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் அமீர் ஹடாமி கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும், குறித்த செய்தி தொடர்பில் ஈரானிய தரப்பில் இருந்து இதுவரை எந்த உத்தியோகபூர்வ பதிலும் வழங்கப்படவில்லை. இன்றையதினம் ஈரான் மீது தொடங்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கையில், ஈரான் தலைநகர் தெஹ்ரான் உள்ளிட்ட பல இடங்கள் குறிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. வெடிப்பு சத்தங்கள் நகரம் முழுவதும் வெடிப்பு சத்தங்கள் கேட்டதாகவும், நாட்டின் பிற பகுதிகளிலும் தாக்குதல்கள் நடந்ததாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடன் இணைந்து அமெரிக்காவும் இந்த தாக்குதல்களை மேற்கொண்டுள்ள நிலையில், “ஈரான் ஆட்சி ஏற்படுத்தும் உடனடி அச்சுறுத்தல்களை நீக்கி, அமெரிக்க மக்களை பாதுகாப்பதே எங்கள் குறிக்கோள்,” என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். கடுமையான பதிலடி அதன்போது, மேற்படி தாக்குதல்கள் ஈரானின் ஏவுகணை தொழில் மற்றும் கடற்படை திறன்களை தகர்க்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இதற்கு பதிலளித்த ஈரான் அதிகாரிகள், விரைவில் கடுமையான பதிலடி வழங்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஈரானிய இராணுவத்தின் முக்கிய தலையை வீழ்த்தியது இஸ்ரேல்!!
  3. இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை பட மூலாதாரம்,Getty Images 28 பிப்ரவரி 2026, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் (இந்தச் செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) இரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதலைத் தொடங்கியுள்ளன, 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகள்' நடைபெற்று வருவதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தியுள்ளார். இரான் மீது தங்களது நாடு முன்னெச்சரிக்கை தாக்குதலைத் தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் கூறுகிறார். தலைநகர் தெஹ்ரான் உட்பட இரானின் இஸ்ஃபஹான், கோம், கரஜ் மற்றும் கெர்மான்ஷா ஆகிய ஐந்து நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டன - அங்கிருந்து புகை மூட்டம் எழுவதை புகைப்படங்கள் காட்டுகின்றன. இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக இரான் ஏவுகணைகளை வீசியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவிக்கிறது. படக்குறிப்பு,தெஹ்ரானின் ஜோம்ஹோரி சதுக்கம் தங்கள் மீதான ஏவுகணை தாக்குதலை முறியடித்ததாக கத்தார் தகவல் டேவிட் கிரிட்டன் பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு கத்தார் தலைநகர் தோஹாவில் வெடிப்புச் சத்தங்கள் மற்றும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் கேட்டன. "நாட்டின் எல்லையை குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களை வெற்றிகரமாக முறியடித்ததாக" கத்தார் பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட, எதிரி ஏவுகணைகளை இடைமறித்து தாக்கும் பேட்ரியாட் அமைப்பு, இரானிய ஏவுகணையை இடைமறித்ததாக கத்தார் அதிகாரி ஒருவர் ஏ.எஃப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்காவின் மிகப்பெரிய விமானப்படை தளமான அல் உதெய்த் விமான தளம் கத்தாரில் உள்ளது. பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? டேவிட் கிரிட்டன் பிபிசி நியூஸ் மத்திய கிழக்கு அமெரிக்க கடற்படையின் 5வது பிரிவின் தாயகமான பஹ்ரைன் தலைநகரில் வெடிப்புகள் பதிவாகியுள்ளன அவசர கால எச்சரிக்கை ஒலி அடுத்தடுத்து எழுந்ததைத் தொடர்ந்து, பஹ்ரைன் உள்துறை அமைச்சகம் தனது எக்ஸ் பக்கத்தில் இதுகுறித்து தொடர்ச்சியாக பதிவிட்டுளள்து. மக்கள் அமைதி காப்பதுடன் அருகிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் செல்லுமாறும் அது கேட்டுக் கொண்டுள்ளது. படக்குறிப்பு,பஹ்ரைனில் எழும் புகை பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படை சேவை மையம் 'ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானது' என்று பஹ்ரைன் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பஹ்ரைனின் தேசிய தொடர்பு மையத்தை மேற்கோள் காட்டி அந்த ஊடகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தாக்குதலுக்கு எந்த நாட்டையும் காரணம் கூறாமல், "கூடுதல் விவரங்கள் சரியான நேரத்தில் வழங்கப்படும்," என்று அந்த செய்தி மேலும் கூறுகிறது. "சம்பந்தப்பட்ட அதிகாரப்பூர்வ அதிகாரிகளால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றவும், அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு வழிகளில் இருந்து மட்டுமே தகவல்களைப் பெறவும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." என்றும் அது கூறுகிறது. பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் 5வது கடற்படை பிரிவின் தலைமையகத்தின் பொறுப்பில் வளைகுடா, செங்கடல், அரபி கடல் மற்றும் இந்தியப் பெருங்கடலின் சில பகுதிகள் உள்ளன. பஹ்ரைனுக்கு ஏவுகணை மற்றும் டிரோன் அச்சுறுத்தல்கள் இருப்பதாக கூறப்பட்ட நிலையில், அமெரிக்க தூதரகம் தங்களது குடிமக்களை பாதுகாப்பான இடத்தில் தஞ்சமடையுமாறு ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனாலும், இந்த தாக்குதல் செய்தி குறித்து அமெரிக்க இராணுவத்திடமிருந்து உடனடி கருத்து எதுவும் இல்லை. டிரம்ப் கூறியது என்ன? அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது சமூக ஊடக தளமான ட்ரூத் சோஷியலில் வெளியிட்ட காணொளியில், அமெரிக்கா இரானில் 'பெரிய அளவிலான போர் நடவடிக்கைகளை' தொடங்கியுள்ளதாகக் கூறியுள்ளார். "நாங்கள் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்க பலமுறை முயன்றோம். நாங்கள் அவர்களின் ஏவுகணைகளை அழித்து, அவர்களின் ஏவுகணைத் துறையை தரைமட்டமாக்கப் போகிறோம். அது முற்றிலுமாக…அழிக்கப்படும்" என்று டிரம்ப் கூறுகிறார். பெஞ்சமின் நெதன்யாகு கூறியது என்ன? பட மூலாதாரம்,EPA/Shutterstock இரான் மீதான தாக்குதல் குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "இஸ்ரேல் குடிமக்களே, சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் உள்ள பயங்கரவாத ஆட்சியால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை அகற்றுவதற்கான நடவடிக்கையில் இஸ்ரேலும் அமெரிக்காவும் இறங்கியுள்ளன" என கூறியுள்ளார். மேலும், "எமது சிறந்த நண்பர் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு, அவரது வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமைத்துவத்திற்காக நான் நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 47 ஆண்டுகளாக, ஆயத்துல்லா ஆட்சி 'இஸ்ரேலுக்கு அழிவு', 'அமெரிக்காவிற்கு அழிவு' என்று கூச்சலிட்டு வருகிறது." "அது எங்களது ரத்தத்தைச் சிந்த வைத்துள்ளது, பல அமெரிக்கர்களைக் கொலை செய்துள்ளது மற்றும் தனது சொந்த மக்களையே படுகொலை செய்துள்ளது. இந்த பயங்கரவாத ஆட்சி, ஒட்டுமொத்த மனிதகுலத்தையே அச்சுறுத்த அனுமதிக்கும் அணு ஆயுதங்களைக் கொண்டிருக்கக் கூடாது. எங்களது கூட்டு நடவடிக்கை, தைரியமான இரானிய மக்கள் தங்கள் விதியைத் தங்கள் கைகளில் எடுத்துக்கொள்வதற்கான சூழலை உருவாக்கும்." "இஸ்ரேல் குடிமக்களாகிய உங்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், ஹோம் ஃபிரண்ட் கமாண்டின் (Home Front Command) உத்தரவுகளைக் கவனமாகக் கேளுங்கள். வரும் நாட்களில், 'சிங்கத்தின் கர்ஜனை' (The Roar of the Lion) என்ற இந்த நடவடிக்கையில், நாம் அனைவரும் சகிப்புத்தன்மையுடனும் மன உறுதியுடனும் இருக்க வேண்டியது அவசியமாகும்." என அவர் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு,இரானின் இஸ்ஃபஹான், கோம், கராஜ் மற்றும் கெர்மன்ஷா நகரங்களில் வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக ஃபார்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது. 'இரானின் பதிலடி தாக்குதல்' "சிறிது நேரத்திற்கு முன்பு, இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டின் எல்லையை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் ராணுவம் அடையாளம் கண்டுள்ளது" என்று இஸ்ரேல் ராணுவம் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவ அறிக்கையில், "இரானில் இருந்து இஸ்ரேல் நாட்டை நோக்கி ஏவப்பட்ட ஏவுகணைகள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பல பகுதிகளில் சைரன்கள் ஒலிக்கப்பட்டன. ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிமுறைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்." "இந்த நேரத்தில், இஸ்ரேலிய விமானப்படை அச்சுறுத்தலைத் தடுத்து நிறுத்தவும், தேவையான இடங்களில் தாக்குதல் நடத்தவும் செயல்பட்டு வருகிறது. பாதுகாப்பு என்பது காற்று புகாத அமைப்பு அல்ல, எனவே பொதுமக்கள் ஹோம் ஃப்ரண்ட் கமாண்டின் வழிகாட்டுதல்களை தொடர்ந்து கடைப்பிடிப்பது அவசியம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,Fars படக்குறிப்பு,தெஹ்ரானில் இரண்டு இடங்களில் வெடிச்சத்தங்கள் கேட்டதாக இஸ்லாமிய குடியரசு செய்தி முகமை தெரிவித்துள்ளது. இஸ்ரேல் முழுவதும் ஒலித்த சைரன் ஹ்யூகோ பச்சேகா பிபிசி செய்தியாளர், மத்திய கிழக்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் இன்று (பிப்ரவரி 28) காலை வெளியிட்ட அறிக்கையில், "இஸ்ரேல் முழுவதும் ஒரு சிறப்பு மற்றும் நிரந்தர அவசரநிலையை" அறிவித்துள்ளார். உள்ளூர் நேரப்படி சுமார் 08:15 மணிக்கு இஸ்ரேல் முழுவதும் சைரன் ஒலிகள் கேட்டன, இது சாத்தியமான ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தல் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. இரானின் அணுசக்தித் திட்டத்தைக் கட்டுப்படுத்தவும், போரைத் தவிர்க்கவும் அமெரிக்க மற்றும் இரானிய அதிகாரிகளுக்கு இடையே ஒரு ஒப்பந்தத்திற்கான ராஜதந்திர முயற்சிகளுக்கு மத்தியில் இந்த இஸ்ரேலியத் தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளன. மேலும் பேச்சுவார்த்தைகள் அடுத்த வாரம் தொடரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பேச்சுவார்த்தையில் இரான் சில சலுகைகளை அளித்திருந்தது, இருப்பினும் ஒரு ஒப்பந்தத்தை ஏற்குமாறு அதன் தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்க முன்னதாக இரான் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியிருந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "பேச்சுவார்த்தைகள் நடக்கும் விதம் குறித்து நேற்று தான் 'மகிழ்ச்சியடைவில்லை'" என்று கூறினார். 2003-இல் அமெரிக்கா தலைமையிலான இராக் மீதான படையெடுப்பிற்குப் பிறகு மத்திய கிழக்கில் மிகப்பெரிய அமெரிக்க ராணுவக் குவிப்பிற்கு டிரம்ப் உத்தரவிட்டுள்ளார், ஆனால் இப்போது ராணுவ நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏன் ஏற்படக்கூடும் என்பதை விளக்க அவர் அதிகம் எதையும் செய்யவில்லை. இதற்கிடையில், அத்தகைய தாக்குதலுக்கு முழு பலத்துடன் பதிலடி கொடுப்போம் என இரான் கூறியுள்ளது. பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,வெடிப்புச் சத்தங்கள் கேட்டதால், தெஹ்ரானில் பதற்றம் நிலவுகிறது. இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ், "இந்த 'முன்னெச்சரிக்கை தாக்குதல்' (pre-emptive strike) இஸ்ரேல் நாட்டிற்கு எதிரான அச்சுறுத்தல்களை அகற்றுவதற்காக" என்று கூறினார். கடந்த ஜூன் மாதம், இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்தியது, இது 12 நாள் போருக்கு வழிவகுத்தது. அமெரிக்காவும் இறுதியில் மோதலில் இஸ்ரேலுடன் இணைந்து கொண்டு, இரானின் அணுசக்தி நிலையங்களை இலக்கு வைத்தது. சமீபத்தில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இரானின் பாலிஸ்டிக் ஏவுகணைகளால் தனது நாட்டிற்கு ஏற்படும் அச்சுறுத்தல் குறித்து எச்சரித்திருந்தார், மேலும் இரானின் அணுசக்தித் திட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்தும் ஒப்பந்தத்திற்குத் தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். இரான் தனது ஏவுகணைத் திட்டத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து விவாதிப்பதையும், காஸாவில் ஹமாஸ், லெபனானில் ஹெஸ்பொலா, இராக்கின் போராளிகள் மற்றும் ஏமனில் ஹூத்திகள் உள்ளிட்ட பிராந்தியத்தில் உள்ள அமைப்புகளுக்கான ஆதரவை முடிவுக்குக் கொண்டுவருவதையும் நிராகரித்தது, அந்தக் கோரிக்கைகள் அதன் இறையாண்மையை மீறுவதாகக் கூறியது. பட மூலாதாரம்,Ehsan / Middle East Images / AFP via Getty படக்குறிப்பு,இரானின் தலைநகர் தெஹ்ரான் உட்பட பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இஸ்ரேலில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் எச்சரிக்கை இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் வசிக்கும் இந்தியக் குடிமக்கள் விழிப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறும், தூதரகத்துடன் தொடர்பில் இருக்குமாறும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. டெல் அவிவ் நகரில் உள்ள இந்தியத் தூதரகம் இது தொடர்பான ஆலோசனையை வெளியிட்டுள்ளது. "இப்பகுதியில் நிலவும் தற்போதைய பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, இஸ்ரேலில் உள்ள அனைத்து இந்தியக் குடிமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புடனும் இருக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்," எனத் தெரிவித்தது. இத்துடன், இஸ்ரேலிய அதிகாரிகள் மற்றும் ஹோம் ஃபிரண்ட் கமாண்ட் (Home Front Command) மூலம் வெளியிடப்பட்ட பாதுகாப்பு வழிகாட்டுதல்களை முழுமையாகப் பின்பற்றுமாறு குடிமக்களைத் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. அனைத்துக் குடிமக்களும் பாதுகாப்புப் புகலிடங்களுக்கு அருகிலேயே இருக்குமாறும், தங்களது வீடுகள் அல்லது அலுவலகங்களுக்கு அருகிலுள்ள பாதுகாப்பான இடங்கள் குறித்துத் தெரிந்து வைத்திருக்குமாறும் தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது. "மறு அறிவிப்பு வரும் வரை இஸ்ரேலுக்குள் அவசியமற்ற அனைத்துப் பயணங்களையும் தவிர்க்குமாறு இந்தியக் குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. இத்துடன், இந்தியத் தூதரகம் குடிமக்களுக்காக 24x7 உதவி எண் மற்றும் மின்னஞ்சலை வெளியிட்டுள்ளதுடன், அவசர காலங்களில் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது. உதவி எண்: +972-54-7520711 மின்னஞ்சல்: cons1.telaviv@mea.gov.in படக்குறிப்பு,இரானின் ஹசன் அபாத் சதுக்கம் வான் பரப்பை மூடிய இரான், இஸ்ரேல் சனிக்கிழமை காலை இரான் மீதான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்களுக்கான விமானங்களுக்கு மூடியுள்ளது என்று இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இஸ்லாமிய புரட்சிகர காவல்படையுடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி முகமை, இரானின் வான்வெளியும் மூடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் - கத்தார், பஹ்ரைனுக்கும் மோதல் பரவுகிறதா? நேரலை
  4. இந்த தாக்குதல் ஆரம்பித்ததின் பின்னர் யாழ்ப்பாண மக்கள் பெற்ரோலுக்கு வரிசைக்கு நிக்கிறார்கள்.
  5. ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம் 28 Feb, 2026 | 12:58 PM ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் போர் பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், சனிக்கிழமை (28 ) ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரான் தலைநகர் தெஹரானில் பல்வேறு முக்கிய இடங்களை இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இன்றுவரை ஈரானில் குறைந்தது 30 முக்கிய இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தாக்குதல்களில் ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம் உள்ளிட்ட முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக கட்டிடங்களும் உள்ளடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்களையும் இலக்குவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. “The Shield of Judah” என்ற பெயரில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டதாக சர்வதேச ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும், இதுகுறித்து அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை. இந்நிலையில், ஈரானில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் அயதுல்லா அலி கமேனி பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஈரானின் பதிலடி தாக்குதல் ஏற்படக்கூடும் என்ற அச்சத்தினால், இஸ்ரேலில் வான்வெளி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கை சைரன்கள் ஒலிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே, அமெரிக்கா தனது படைகளை மத்திய கிழக்கில் குவித்து வரும் நிலையில், இந்த தாக்குதல் பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள அமெரிக்கர்கள், பிரித்தானியர்கள் மற்றும் இந்தியர்களை பாதுகாப்பாக வெளியேறுமாறு அந்தந்த நாடுகளின் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஈரான் – இஸ்ரேல் மோதல் மத்திய கிழக்கில் பரவலான போராக மாறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. சர்வதேச சமூகம் தீவிரமாக கவனித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்கள் நிலைமையை தீர்மானிக்கும் முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது. ஈரான் மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – மத்திய கிழக்கில் உச்சக்கட்ட போர் பதற்றம்
  6. வானில் இன்று 6 கோள்களின் அணிவகுப்பு - இந்தியாவில் எப்போது காணலாம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் பிப்ரவரி 28 அன்று வானில் ஒரு அரிய விண்வெளி நிகழ்வைக் காணலாம். புதன், வெள்ளி, சனி, நெப்டியூன், யுரேனஸ், வியாழன் ஆகிய ஆறு கோள்களும் வானில் நிலைகொள்வது போன்ற காட்சியை காண முடியும். இதனுடன் கூடுதலாக நிலவும் வானில் தென்படும். இந்தியாவைப் பொறுத்தவரை, அடிவானத்திற்கு அருகே புதன், வெள்ளி, சனி, நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களும் ஏறக்குறைய நேர்கோட்டில் நிலைபெறும். சூரியன் மறைந்த பின்னர் சில நிமிடங்கள் மட்டுமே இந்த கோள்கள் புலப்படும். அதன் பின்னர் இந்த நான்கு கோள்களும் மறைந்துவிடும். எனவே, மேற்கு அடிவான திசையில் மரங்கள், வீடுகள், குன்றுகள் அற்ற இடத்தைத் தேர்வு செய்ய வேண்டும். உயரமான கட்டடம் அல்லது மலை உச்சியில் நின்றுகொண்டு பார்ப்பது சிறந்தது. வியாழன் மற்றும் யுரேனஸ் கோள்கள் வானில் தலைக்கு மேலே இருப்பதால், அவற்றை சில மணி நேரங்கள் காண முடியும். எப்போது, எங்கே காணலாம்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் மதுரையை எடுத்துக்கொண்டால், பிப்ரவரி 28 மாலை சூரியன் மறையும் நேரமான சுமார் 6:28 மணி முதல் மேற்கு அடிவானத்தை கூர்ந்து கவனிக்கத் தொடங்க வேண்டும். அதேபோல நம்மிடத்தில் சூரியன் மறையும் நேரம் நாம் மேற்கு அடிவானத்தை உற்றுநோக்கவேண்டும். சூரிய ஒளி மங்கி இருட்டு பரவும்போது முதலில் வெள்ளிக் கோள் பிரகாசமான ஒளிப்புள்ளியாக தென்படும். அதைத் தொடர்ந்து, இருட்டு அதிகமாகும்போது சற்று மேலே சனிக் கோள் காட்சி தரும். சனிக் கோளுக்கு அருகில்தான் நெப்டியூன் இருக்கும். ஆனால் இது வெறும் கண்களுக்குத் தென்படாது. இதைக் காண ஆற்றல் வாய்ந்த தொலைநோக்கி தேவைப்படும். ஒளி மங்கி இரவாகும் போது, சில நிமிடங்கள் மட்டுமே புதன் கோள் அடிவானத்துக்கு அருகே தென்படும். இவை அனைத்தும் 6:45 மணிக்குள் நடந்து முடிந்துவிடும். வெள்ளி மற்றும் புதன் கோள்கள் 6:55 மணிக்குள் மேற்கில் மறைந்துவிடும். 7:20 மணியளவில் சனிக் கோளும் மறைந்துவிடும். இவையெல்லாம் அடிவானுக்கு மிக நெருக்கமாக புலப்படும். இந்த மூன்று கோள்களை இனம் காண முயன்ற பிறகு, தலையை உயர்த்திப் பார்த்தால் நிலவும் அதன் அருகே வியாழன் கோளும் தென்படும். வளர்பிறை நாள் என்பதால், நிலவின் 92% பகுதி ஒளிபெற்று காட்சியளிக்கும். பைனாகுலர் உதவியுடன் நிலவு நிலைகொண்ட பகுதிக்கு அருகே கூர்ந்து கவனித்தால், 'பீ ஹைவ்' (தேன்கூடு) விண்மீன் தொகுப்பு தென்படும். இது மிகவும் கவர்ச்சிகரமான விண்மீன் தொகுப்புகளில் ஒன்றாகும். இதில் 1000க்கும் மேற்பட்ட விண்மீன்கள் உள்ளன. இந்தத் தொகுப்பு சுமார் 577 ஒளியாண்டு தொலைவில் உள்ளது. நிலவுக்கு அருகே சுமார் நான்கு டிகிரி தொலைவில் வியாழன் கோளைக் காணலாம். கையை நீட்டி நான்கு விரல்களையும் சேர்த்துப் பிடித்தால் உருவாகும் கோணம்தான் நான்கு டிகிரி ஆகும். அதாவது, நிலவுக்கும் வியாழனுக்கும் இடையே உள்ள இடைவெளியை சேர்த்துப் பிடித்த நான்கு விரல்களால் மூடிவிட முடியும். நிலவுக்கும் வியாழனுக்கும் சற்று தொலைவில் கார்த்திகை விண்மீன் தென்படும். அதன் அருகில்தான் யுரேனஸ் கோள் இருக்கும். யுரேனசும் வெகு தொலைவில் இருப்பதால் வெறும் கண்களால் காண முடியாது. தொலைநோக்கி வழியாக மட்டுமே தென்படும். செவ்வாய் கோள் சூரியன் மறைவதற்கு சற்று முன்னரே மறைந்துவிடும். எனவே, அன்று வானில் அதைக் காண முடியாது. எட்டு கோள்களில் பூமியைத் தவிர்த்து ஆறு கோள்கள் அன்றிரவு வானில் நிலைகொள்ளும். நிலவும் அவற்றுடன் இணைந்துகொள்ளும். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வியாழன் (விளக்கப்படம்) கோள்கள் அணிவகுப்பு என்றால் என்ன? வெறும் கண்களுக்குப் புலப்படும் புதன், வெள்ளி, சனி ஆகிய மூன்று கோள்களும், தொலைநோக்கி வழியே தென்படும் நெப்டியூனும் சேர்ந்து மொத்தம் நான்கு கோள்கள் அடிவானில் அருகருகே நிலைகொள்வதைத் தான் 'கோள்கள் அணிவகுப்பு' என்கிறார்கள். ஆனால், இது ஒரு காட்சித் தோற்றம் மட்டுமே. மெய்யான அணிவகுப்பு இதில் இல்லை. கோள்கள் ஒன்றையொன்று நெருங்குவதும் இல்லை. இதை ஓர் எடுத்துக்காட்டுடன் புரிந்துகொள்ளலாம். ஓட்டப்பந்தய மைதானத்தின் நடுவே நாம் நிற்பதாகக் கற்பனை செய்துகொள்வோம். ஒவ்வொருவருக்கும் ஒதுக்கப்பட்ட ஓடுபாதையில் ஓட்டப்பந்தய வீரர்கள் மைதானத்தைச் சுற்றி வருகின்றனர். வேகமாக ஓடும் வீரர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயல்வார்கள். அவ்வாறு முந்திச் செல்லும்போது, அவர்கள் இருவரும் ஏறக்குறைய நேர்கோட்டில் இருப்பது போன்ற தோற்றம் நமக்கு ஏற்படும். அதுபோலவே, சூரியனையும் கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருகின்றன. எனவே, சில சமயம் ஒரு கோள் மற்றொரு கோளை முந்திச் செல்லும். அந்தக் கட்டத்தில், வானில் அந்தக் கோள்கள் அருகருகே அணிவகுத்து நிற்பது போன்ற காட்சித் தோற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக சூரியனுக்கு அப்பால் சுற்றிவரும்போது இந்தத் தோற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது வெறும் தோற்ற மயக்கமே தவிர, பார்வைக்கு ஒரே கோட்டில் இருப்பது போலத் தோன்றினாலும், மெய்யாக விண்ணில் அவை ஒரே நேர்கோட்டில் இருப்பதில்லை. அனைத்துக் கோள்களும் ஒரே சமதளத்தில் சுற்றி வருவதில்லை; மேலும், ஒப்பிட்டளவில் வெள்ளிக் கோள் நமக்கு அருகில் இருக்கும்போது, சனிக் கோள் மிகமிகத் தொலைவில் இருக்கும். எட்டு கோள்களும் எப்போது அணிவகுக்கும்? முன்னதாக, வெறும் கண்களுக்குப் புலப்படும் புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகிய ஐந்து கோள்களும் கடந்த 2022 ஜூன் மாதம் அணிவகுத்துக் காட்சியளித்தன. அடுத்த முறை 2040ஆம் ஆண்டில் மட்டுமே வானில் இந்த ஐந்து கோள்களும் மீண்டும் அணிவகுத்துத் தென்படும். கடந்த 2020 ஜூலை 4 அன்று அனைத்து எட்டுக் கோள்களும் அணிவகுக்கும் அரிதான நிகழ்வு ஏற்பட்டது. அதற்கு முன்னர் இதேபோன்ற எட்டுக் கோள்களின் முழு அணிவகுப்பு நிகழ்வு 1982ஆம் ஆண்டில் ஏற்பட்டது. அடுத்த முறை இவ்வாறான முழு அணிவகுப்பு 2161ஆம் ஆண்டில்தான் நடைபெறும். (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1wz1rg1eo
  7. தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்! Feb 28, 2026 - 08:33 AM இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும். இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை. பதவி விலகல் தீர்மானம் குறித்து 'அத தெரண' விடுத்த வினவலுக்குப் பதிலளித்த அவர், தனது தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தக் காலம் மேலும் எஞ்சியிருந்த போதிலும், அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறியுள்ளார். 2024 ஜூலை மாதம் இந்தியாவிற்கு எதிரான தொடரின் போது இடைக்காலப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளன. தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!
  8. இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம் Courtesy: பிரியங்கன் இலங்கை அரசியல் வரலாற்றை குருதிக் கறையால் எழுதிய 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்பு இன்று வரை ஒரு பெருந்துயராகவே பார்க்கப்படுகிறது. ஆனால் அது வெறும் மதத் தீவிரவாதத்தின் விளைவு என கூறி தம்மை தற்காத்துக்கொள்ள ஒரு பெரும் இரகசிய சதி நகர்வு நகர்த்தப்பட்டது. உண்மையில் அது மதவாதத்தின் வெளிப்பாடு மட்டுமல்ல, பின்புலத்தில் ஒரு சர்வதேச அரசியல் சதுரங்க காய் நகர்த்தல் இருந்தது என்பது இப்போது அடுக்கடுக்கான ஆதாரங்கள் மூலமாக அம்பலமாகி வருகிறது. இந்தச் சதிநடவடிக்கையின் மூளை என கருதப்படும் மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, அவருக்குப் பின்னால் இருந்த ராஜபக்சக்களின் அதிகாரத் தாகம் இவற்றோடு பலரும் அறியாத இன்னுமொரு இரும்புக்கரமென்றின் பங்குபற்றியும் இடைக்கிடை பேசப்படுகிறது. அது சிறிலங்காவின் மிகநெருங்கிய ராஜதந்திர பங்காளரான ஒரு அயல்நாட்டின் புலனாய்வுப்பிரிவு என வெளியாகும் சில இரகசியங்களால் இப்போது உலக அரசியல் அரங்கில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது. சுரேஷ் சலே ராஜபக்சக்களின் நிழல் தளபதி சிறிலங்காவின் இராணுவப்புலனாய்வுப்பிரிவின் முன்னாள் பிரதானியான மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே என்ற நபர் வெறும் இராணுவ அதிகாரி மட்டுமல்ல அவரே ராஜபக்ச குடும்பத்தின், மிகக்குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவின் மிக நெருங்கிய நம்பிக்கைக்கு பாத்திரமான ஏவலாளியுமாவார். கடந்த 2019ல் அப்போதைய மைத்திரி - ரணில் கூட்டின் நல்லாட்சி என்று சொல்லிக்கொண்ட அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் அதிருப்தியில் இருந்தபோது, அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி நாட்டைப் பாதுகாக்க ஒரு இரும்புக்கரம் கொண்ட தலைவர் ஒருவர் தேவை என்ற பிம்பத்தை உருவாக்க ராஜபக்சக்களுக்கு ஒரு பாரிய சதி நடவடிக்கை அல்லது அதற்கு மேலான ஒன்று தேவைப்பட்டது. அசாத் மௌலானாவின் வாக்குமூலத்திற்கமைய இந்த சுரேஷ் சலே தாக்குதல் இடம்பெற முன்பிருந்தே தற்கொலைதாரிகளுடன் நேரடித் தொடர்பில் இருந்தாகவும் இந்தத் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள் முன்கூட்டியே கிடைத்தும் அவை திட்டமிட்டே கண்டுகொள்ளப்படவில்லை அல்லது உரிய தரப்புகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்படவில்லை என பதிவாகிறது. ராஜபக்சக்களை மீண்டும் நாட்டின் அரியணையில் ஏற்ற உருவாக்கப்பட்ட ஒரு 'உள்வீட்டுச் சதி' என்பதற்கு, கோட்டாபய ஆட்சிக்கு வந்தவுடன் வழமையான பதவி உயர்வு படிமுறைகளுக்கு மாறாக சுரேஷ் சலேவுக்கு பதவி உயர்வு வழங்கிய ஒன்றையே போதுமான சாட்சியாக பதிவுசெய்ய முடியும். தாஜ் சமுத்ரா மர்மம் இது இப்படி இருக்க இந்த உள்வீட்டுசதியின் பின்புலத்தில் அயல் நாடொன்றின் கரம் இணைந்திருப்பதான சந்தேகங்களும் கேள்விகளும் கொழும்பின் 'தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவத்திலிருந்து ஆரம்பமாகிறது. சிறிலங்கா தலைநகரில் ஏனைய நட்சத்திர விடுதிகளில் தற்கொலைதாரிகள் குண்டுகளை வெடிக்கச்செய்தபோது தாஜ் சமுத்ரா'வில் மட்டும் குண்டுதாரி அப்துல் லத்தீப் ஜமீல் குண்டை வெடிக்கச் செய்யாமல் வெளியேறியது ஒரு திட்டமிடப்பட்ட நகர்வு என்பதை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியது. அங்கு தங்கியிருந்த ஒரு முக்கியமான 'இந்தியப் பிரஜையை'க் காப்பாற்றும் பொருட்டு, இறுதிநேரத்தில் கட்டளை மீளப்பெறப்பட்டதாகவும் சுரேஷ் சலே அதனை அறிவுறுத்தியதாகவும் சந்தேகங்கள் இரகசிய தரவுகளின் கசிவுகளால் வெளிக்கிழம்பியது. குறித்த சமகாலத்தில் சிறிலங்கா அரசு அமெரிக்காவின் 'சோபா' (SOFA) மற்றும் 'மிலேனியம் சேலஞ்ச்' (MCC) போன்ற உடன்படிக்கைகளை நோக்கி தன்னை நகர்ந்துகொண்டிருந்தது. இது பிராந்தியத்தில் அந்த அயல் நாட்டின் பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு தலையீடு போன்றவற்றில் பெரும் சவாலாக அமையும் என அதன் உயர்பீடம் கருதியது. எனவே அமெரிக்கச் சார்பு அரசாங்கத்தை வீழ்த்தி, தமக்கு இணக்கமான ஒரு தேசியவாத ஆட்சியை இலங்கையில் நிலைநிறுத்த நினைத்த போது அதற்கு ராஜபக்சக்களின் அதிகாரப் பசியை அந்த நாடு தனது நலனுக்காகப் பயன்படுத்தியிருக்கலாம் என்ற பலமான சந்தேகம் இப்போது அரசியலாளர்களை ஆட்கொண்டிருக்கிறது. பாதுகாப்பில் உள்ள ஒரு 'உயிருள்ள சாட்சி' ஒரு அரசாங்கத்தையே உலுக்கிப்போட்ட இந்த கொடூரமான சதி நடவடிக்கையில் மிக முக்கியமான ஒருவராக பயன்படுத்தப்பட்ட சாரா ஜஸ்மின் என அறியப்பட்ட (புலஸ்தினி ராஜேந்திரன்) குண்டுவெடிப்பின் பின் கடல் மார்க்கமாக அண்டை நாடொன்றிற்கு தப்பிச் சென்றதாகவும், தற்போது அவர் அந்த நாட்டின் உலகளாவிய செல்வாக்கு மிக்க புலனாய்வுப் பிரிவின் நேரடிப் பாதுகாப்பில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூட அடிக்கடி சில தகவல்கள் உலாவருகின்றன. இந்த குற்றச்சாட்டு சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூட அரசல் புரசலாக பேசப்பட்டுள்ளது. சாரா ஜஸ்மின் இலங்கை அதிகாரிகளிடம் அகப்பட்டால் அது இந்த சதி நடவடிக்கையில் சுரேஷ் சாலே, ராஜபக்சக்கள் மற்றும் அந்த அயல்நாட்டின் முக்கோணத் தொடர்புகள் சர்வதேச அரங்கில் அம்பலப்பட்டு விடும் எனவும் எனவேதான் அவர் திட்டமிட்டே மறைத்து வைக்கப்பட்டுள்ளார் எனவும் கருத்துக்கள் சந்தேகங்களாக முன்வைக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. இரு நாடுகளின் நலன்களும் பலியான அப்பாவி உயிர்களும் குறிப்பிட்டு சுருக்கமாகச் சொன்னால், சுரேஷ் சலே என்பவர் சமகாலத்தில் அதாவது ஒரு நேரத்திலையே இரண்டு முதலாளிகளுக்கு ஏவல் புரிந்த ஒரு 'இரட்டை முகவர்' (Double Agent). எனக்கொள்ளமுடியும். ஒருபுறம் ராஜபக்சக்களின் அதிகார மீட்ப்புக்கான களப்பணிகளைச் செய்த அவர், மறுபுறம் மேற்சொன்ன அயல்நாட்டின் புவிசார் அரசியல் நலன்களைப் பாதுகாக்க ஒரு 'கருவியாகச்' செயற்பட்டுள்ளார். இந்த தாக்குதலுக்குப் பின் தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்துன் பெயரில் கைது செய்யப்பட்ட ஒரு அயல்நாட்டு பிரஜையை எவ்வித விசாரணையுமின்றி அந்த நாட்டின் புலனாய்வாளர்களிடமே சுரேஸ் சலே கவனமாக கையளித்தார் என்ற குற்றச்சாட்டு, இந்த இருதரப்புகளுக்கிடையிலான இரகசிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்துகிறது. எனவேதான் 269 அப்பாவி உயிர்களைப் பலிகொடுத்து தமது சுய லாபங்களுக்காக அரங்கேற்றப்பட்ட இந்த 'அரசியல் நாடகத்தின்' சூத்திரதாரிகள் அனைவரும் பாகுபாடின்றி சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட வேண்டியது ஒன்றே. இப்போதைக்கு காலத்தின் தேவையும் அப்பாவிகளாகக் கொல்லப்பட்ட மனிதர்களுக்கான நீதியுமாகும்...... இலங்கையை உலுக்கிய உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பின்னணியில் இருந்த இரும்புக்கரம்
  9. ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு! Published By: Digital Desk 1 28 Feb, 2026 | 01:43 PM அமெரிக்க இராணுவமும் ஈரான் மீது “பாரிய போர் நடவடிக்கைகளை” ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் தனது ‘Truth Social’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ பதிவின் மூலம் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், அமெரிக்க இராணுவம் ஈரானின் ஏவுகணைத் திட்டங்களை இலக்காகக் கொண்டு தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் வலுப்படுத்த முயற்சிப்பதாகவும், அமெரிக்காவையும் அதன் நட்பு நாடுகளையும் அச்சுறுத்தும் வகையில் நீண்ட தூர ஏவுகணைகளை உருவாக்கி வருவதாகவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். “ஈரானின் ஏவுகணை கட்டமைப்புகளை முற்றாக அழித்து, அதன் இராணுவ தொழில்துறையை முடக்கப் போகிறோம்” எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ஈரானிய இராணுவத்தினர் தங்களது ஆயுதங்களை கைவிட வேண்டும், இல்லையெனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு சர்வதேச அரசியல் அரங்கில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வந்த பதற்றம் இன்று (28) திறந்த மோதலாக வெடித்துள்ளது. இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரான் மீது வான்வழி தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் தலைநகர் தெஹ்ரானில் பல்வேறு இடங்களில் சக்திவாய்ந்த வெடிச்சத்தங்கள் கேட்கப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, இந்த நடவடிக்கை “The Shield of Judah” என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்த கூட்டு ராணுவ நடவடிக்கை (Joint Military Operation) என விவரிக்கப்பட்டுள்ளது. தெஹ்ரானில் உள்ள முக்கிய இராணுவ தளங்கள் மற்றும் அரசியல் மையங்கள் இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வரை ஈரானில் 30 முக்கிய இடங்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக கூறப்படுகிறது. அவற்றில், ஈரான் ஜனாதிபதியின் வாசஸ்தலம், புலனாய்வுத்துறை அமைச்சகம், முக்கிய அரசியல் தலைவர்களின் இருப்பிடங்கள், உச்ச தலைவர் ஆயதுல்லா அலி கமேனி அலுவலகத்திற்கு அருகிலுள்ள பகுதிகள் உள்ளடங்குகின்றன. ஈரானின் ஆன்மீகத் தலைவர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பாதுகாப்பு பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளும் தங்களது வான்வெளியை மூடியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சனிக்கிழமை (28) அதிகாலை ஈரான் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேல் தனது வான்வெளியை பொதுமக்கள் விமானப் போக்குவரத்துக்காக மூடியுள்ளது. அதேவேளை, இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (IRGC) உடன் தொடர்புடைய தஸ்னிம் செய்தி நிறுவனம், ஈரானும் தனது வான்வெளியை மூடியுள்ளதாக அறிவித்துள்ளது. வான்வெளி மூடப்பட்டுள்ளதால் மத்திய கிழக்கு வழியாகச் செல்லும் சர்வதேச விமானப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல சர்வதேச விமானங்கள் திசை மாற்றப்பட்டுள்ளதுடன், சில விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
  10. நான் என்னைவிட அதிகம் இந்தியா பற்றி தெரிந்தவரிடம் விஜய்யிடம் சங்கீதா விவாகரத்து கேட்டதை பற்றி சொன்ன போதும் அவரும் இதையே சொன்னார் . ஆனால் அந்த திரைப்படங்களில் நடிப்பவர் தமிழ்நாட்டை ஆளவேண்டும் என்பதற்காக அவர் இரசிகர்கள் அவர்கள் கொள்கை குண படி சங்கீதாவை மோசமாக தூற்ற தொடங்கிவிட்டனராம். London காரி சங்கீதா வுக்கு divorce எல்லாம் மிக சாதாரணம் இப்படியாக
  11. எல்லாம் சரி தான் ராசாக்கள் திரிஷாவின் லட்சியம் முதல்வர் பதவி என்றால் விஜயின் ஆயுள் எவ்வளவு காலம்???? 🤫
  12. 27 வருடமாக இவர் இரவு பகலாக சூட்டிங் போய்விட, இரெண்டு பிள்ளைகளின் நல்வாழ்வை கவனித்கவ்ர் யார்? நீங்களா? சங்கீதாதானே? அது உழைபில்லையா? உழைப்பில்லாத ரெஹ்மான் மனைவியை ரெஹ்மான் பிரிவின் போதும் கண்ணியமாக நடத்தினாரே? நல்லவேளை வழக்கு மேற்கு நாட்டு நீதிமன்றில் இல்லை - வினையின் சொத்தை பாதிக்கு கிட்ட சங்கீதாவுக்கு கொடுத்திருப்பார்கள். தனக்கு திரிஷா தேவை. நம்பி வந்து 27 வருடத்தை கழித்த பெண்ணுக்கு ஒரு படத்தில் வரும் காசில் அரைவாசியை கொடுக்க மனமில்லை என்றால்? இல்லை. முயல்வோர் பலர் உளர்.
  13. Today
  14. நீங்கள். சொல்வது. சரி தான். அப்படி. நடந்தால். எவரும். கதைக்கப்போவதில்லை. இன்றைக்கு. அனைத்து. ஊடகங்களும். கதைக்கிறது. அது. தான் விஷய். விரும்புவது. அவர். ஒரு. கிசு. கிசு. பிரியர். தனுஷ. விடயத்தில். இரு. தரப்பும். உழைப்பாளிகள். ஆகவே. பணம். பற்றி. கவலையில்லை. அவர்களுக்கு. இருவருக்கும். தேவை. புதிய. நபரின். ஸ்பரிதம். உறவு ஆகவே. இருவரும். புதிய. உறவைத். தேடிக். கொண்டார்கள். சங்கீதா. உழைப்பு. அற்றவர். இல்லையா. ? அல்லது. லண்டனின். வருமானம். வருகிறதா. தொடர்ச்சியாக ?
  15. என்ஜோய் ஜி. அப்படியே ஒரு எட்டு தெஃரானுக்கும் போட்டு வாறது😂.
  16. இதை எல்லாம் பெண்களை வெறும் போக பொருளாக, கொலுப் பொம்மைகளாக, பிள்ளை பெறும் அல்லது சண்டை பிடிக்கும் இயந்திரங்களாக பார்க்க பழகியோர் சர்வ சாதாரணம் என கடந்து போகலாம். ஆனால் ஒரு வலு சமநிலை அற்ற இது போன்ற திருமணத்தில் ஒரு பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியை ஒரு நல்ல ஆண்மகன் கண்டும் காணாமல் போக முடியாது. இந்த தொகைக்குத்தான் சங்கீதாவை கோர்ட் படியேற விஜை விட்டார் என்றால் - அவரை போல் ஒரு அடிமுட்டாள் இந்த உலகில் இருக்க முடியாது. ஜனநாயகன் அவசரமாக வழக்கு போட்டு வாபாஸ் வாங்கியது. பேசாமால் அபராததை கட்டிபோட்டு போகாமல், இன்கம்டக்ஸ் விடயத்தில் கோர்ட்டுக்கு போய் குட்டு வாங்கியது. இப்படி பலதில் விஜைக்கு மிக மோசமான சட்ட ஆலோசனை வழங்கப்படுகிறது என நினைக்கிறேன். சிவகார்த்திகேயன் இந்த வகுப்பில் இல்லையே?
  17. இன்று (28 / 02/ 2026) UK நேர அதிகாலையில் காகுத்தல் தொடங்கி நடந்து கொண்டு இருக்கும் போதே பாய்ந்து தரவேற்ற (வேறு வேலையும் இருணஹட்டால்) மறந்த்து விட்டேன் (அதில் சொல்லியது அடுத்து வரும் 24 - 48 மணி நேரத்தில் தாக்குதல் தொடடங்கும் சத்திய கூறுகள் மிக அதிகம் என்று. அப்படி தொடங்கா விட்டால் பங்குனி 14- 15 அளவிலேயே தாக்குதல் நடப்பதற்கு அதிக சந்தர்ப்பம் என்று ) இரானின் மீது தாக்குதல் அணுத்துறையால் அல்ல. இரான் இறமை கொண்ட தனியரசாக இருப்பதை அழிப்பதற்கும், இப்பொது ஈரானின் நிலைப்புலத்தை 2-3 பொம்மை அரசுகளாக உடைப்பதற்கும். உண்மையில் இரானே அதன் சுதந்திரத்தை பாதுகாக்க, அதன் காலில் நின்னு போராடுகிறது. மேற்கின், அமெரிக்காவின், இஸ்ரேல் நீண்ட காலா எண்ணமும் திட்டமுமமான அகன்ற இஸ்ரேல் இப்பொது வெளியில் வந்து இருக்கிறடது, அமெரிக்காவின் இஸ்ரேல் தூதுவரால் 1) அகன்ற இஸ்ரேல் ஐ தாபிப்பது - இதில் இரானி முட்டுக்கட்டை. 2) இஸ்ரேல் எந்த நாட்டின் மீதும் விரும்பியவாறு, விரும்பிய வேளை தாக்க கூடிய நிலையில் இருப்பதும்,அப்பை தாக்கினால் மற்ற நாடுகள் ஹிரியூபி தாக்கும் திறன், வ\சாதிகள் அற்று இருப்பது. 3) இவ்வ்வளவு பொறுளார த்தார்கள் இருந்தும் இரான் விஞ்ஞானத்தில் தொழில்நுட்பத்தில்முன்னேறி இருப்பது, அமெரிக்காவின் இராணுவ பலத்தின் சிறிய பிம்பமாக இருக்கும் இஸ்ரேல், 2025 இல் இரான் கொடுத்த அடியாலேயே சனை நிறுத்தத்தை முதலில் கேட்டது 4) சீனாவுக்கான என்னை, சக்தி விநியோகத்தை அமெரிக்கா / மேற்றுகின் கட்டுப்பாட்டில் கொன்டு வருவது. 5) BRICS மற்றும் BRI வழங்கல் பாதை மற்றும் அபிவிருத்தி திடத்தை குழப்புவது. அத்துடன் 6) அத்துடன் மத்தியகிழக்கை கட்டுப்படுத்த கூடிய அதிகார பீடத்துக்கு , உலக கட்டுப்படுத்துவக்கு மிகவும் எதுவாக இருக்கும் என்ற நம்பிக்கையும், அனுபவமும் 7) இதுக்கு எல்லாம் இரானில் பொம்மை ஆட்சியில் இருக்க வேண்டும் முன்பு சொல்லி இருந்தேன் சீன, ரசிய அமெரிக்கா உள்நுழைந்து சிக்கிய பின்பே, ஈரானுக்கு பின்புலத்தில் நேரடியாக இறங்காத எல்லாவற்றையும் செய்யும். அதில் முக்கியமாக அவரின் நம்பிக்கை, ஒவ்வொரு நாடும் அவற்றின் பலத்தில் நிற்கவேண்டும். (உள்ளே இறங்குவது என்பது இறங்குவது தரைப்படை அல்ல. பதிலுக்கு பதில் தாக்குதலில் இருந்து மெரிக்கா விலத்த முடியாத நிலை ) 40 வருடங்களுக்கு மேல் பொருளாதார தடைக்குள் இருக்கும் இரான் , அமெரிக்காவின் வெற்று வேட்டு வாய்சவாலத்தை (bluff) வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது. ராஜதந்திரத்தில். அமெரிக்கா / மேற்கை இரான் பச்சடி போடு உள்ளது. ஆனால், மறுவளமாக, எந்த விதமாக பாத்தாலும் , அமெரிக்கா / மேற்கு பொறியின் விளிம்பில், ஒரு கால் பொறிக்குள் சரிந்து நிற்கிறது. (அமெரிக்காவிடம் எஞ்சி இருப்பது பூரணம் இல்லாத இராணுவ பலம், அதை கூட ஈரான் சமாளிக்கும், சாமாளிப்போம் என்ற நம்பிக்கை, போய் வேறு எவரிடமும் ஒழிய விரும்பாத தன்னம்பிக்கை) எந்தா விதமாக பார்த்தாலும், அமெரிக்கா தாக்கினாலும், யுத்தத்தை வென்று விட்டே இரான் சண்டையை ஆரம்பிக்கும், சீன இராணுவ கேந்திர தளபதி / சிந்தனையாளர் Sun Tzu வகுத்தது போல. ஆனாலும். அமெரிக்கா தாக்கும் வ்வாய்ப்புகளே அதிகம் கரணம், இங்கே சொல்லப்படும் டிரம்ப் இன் அந்தரங்க எஸ்பெட்டின் படங்கள் (அபய் இருந்தால்), இஸ்ரேல் இடம் இருக்கும் வாய்ப்புகளே அதிகம். புடின் கூட டிரம்ப் இவ்வளவுக்கு இரங்கி போகவில்லை. இங்கே சிலர் சொலவது போல, எவர் முல்லா(ட்டா)கள்? அமெரிக்கா. மேட்ற்கு வாலுகள் எதை செய்ய சாத்திய கூறுகள் இருக்கிறது என்பதை சொல்லும் பேட்டி. ( இருந்து கொல்லும் துரோகமே. வெனிசுலாவிக்காவிலும் நாந்ததுஅதுவே) யதார்த்தை சொல்லும் பேட்டி.
  18. 2026 ஜனவரியில் சரிந்த இலங்கை ஆடை ஏற்றுமதி! இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2025 ஜனவரியில் 437.07 மில்லியனாக இருந்த நிலையில், 2026 ஜனவரியில் 2.66 சதவீதம் சரிந்து 425.44 மில்லியன் டொலர்களாக குறைந்துள்ளதாக ஒரு தொழில்துறை அமைப்பு தெரிவித்துள்ளது. இது நாட்டின் முக்கிய ஏற்றுமதி சந்தைகளில் தொடர்ச்சியான அழுத்தத்தை பிரதிபலிக்கிறது. அதன்படி, ஜனவரி செயல்திறன் சீரற்ற உலகளாவிய தேவையை எடுத்துக்காட்டுவதுடன், பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலுப்படுத்துகிறது என்று கூட்டு ஆடை சங்க மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கான ஆடை ஏற்றுமதி 2.73 சதவீதம் குறைந்து 165.11 மில்லியன் டொலர்களாக உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஏற்றுமதி (இங்கிலாந்து தவிர்த்து) 1.93 சதவீதம் குறைந்து 126.99 மில்லியன் டொலர்களாக உள்ளது. இங்கிலாந்துக்கான ஏற்றுமதி நிலையாக இருந்தது, 0.23 சதவீதம் அதிகரித்து 61.71 மில்லியன் டொலர்களாக இருந்தது. அதே நேரத்தில் ஏனைய சந்தைகளுக்கான ஏற்றுமதி 6.07 சதவீதம் குறைந்து 71.63 மில்லியன் டொலர்களாக இருந்தது என்று JAAF தெரிவித்துள்ளது. ஜனவரி மாத முடிவுகள் சீரற்ற உலகளாவிய தேவையைக் குறிக்கின்றன என்றும், நாட்டின் ஆடைத்துறையின் பன்முகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன என்றும் JAAF கூறியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் இங்கிலாந்தின் ஓரளவு வளர்ச்சி, 2026 ஜனவரி 1, முதல் அமுலுக்கு வந்த திருத்தப்பட்ட வளரும் நாடுகளின் வர்த்தகத் திட்டத்தின் (DCTS) கீழ் வர்த்தக சீர்திருத்தங்களுடன் ஒத்துப்போகிறது. இந்த மாற்றங்கள் மூலத் தேவைகளுக்கான விதிகளைத் தளர்த்தியுள்ளன, இப்போது இலங்கை உற்பத்தியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிய நாடுகளிலிருந்து மட்டுமல்லாமல் உலகளவில் மூலப்பொருட்களை வாங்கும்போது கூட, வரியின்றி ஐக்கிய இராஜ்ஜியத்துக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கிறது. மேலதிகமாக, சீரான 10% தற்காலிக அமெரிக்க வரியை அறிமுகப்படுத்துவது, முன்னர் இருந்த அதிக நாடு சார்ந்த விகிதங்களை மாற்றியுள்ளது மற்றும் இலங்கை ஏற்றுமதியாளர்களுக்கு அதிக குறுகிய கால விலை நிர்ணய உறுதிப்பாட்டை வழங்குகிறது என்றும் JAAF தெரிவித்துள்ளது. https://athavannews.com/2026/1466585
  19. ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்! ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் இன்று காலை ஒரு தடுப்பு ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் சனிக்கிழமை (28) தெரிவித்தார். இஸ்ரேலை நோக்கி ஏவுகணைகள் ஏவப்படுவதற்கான சாத்தியக்கூறுகளுக்கு பொதுமக்களை தயார்படுத்துவதற்காக நாடு முழுவதும் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்காக வான்வழித் தாக்குதல் சைரன்களை ஒலித்ததாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதனிடையே, இஸ்ரேல் முழுவதும் அரசு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் குறிப்பிட்டுள்ளார். தாக்குதலுக்குப் பின்னர் ஈரானின் தலைநகரான தெஹ்ரான் நகர மையத்தில் ஏற்பட்ட வெடிப்பிலிருந்து அடர்ந்த புகை எழுந்தது. ஈரானிய அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை ஒப்புக்கொண்டது, எனினும் மேலதிக விவரங்களை வழங்கவில்லை. ஏற்கனவே அதிகமாக இருந்த ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பதட்டங்கள், கடந்த ஆண்டு இறுதியில் நாடு தழுவிய போராட்டங்களை ஈரான் ஒடுக்கத் தொடங்கியதிலிருந்து அதிகரித்து வருகின்றன. ஈரான் தனது அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று ட்ரம்ப் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார், ஆனால் அந்த நாடு அதை மறுத்துள்ளது. மாறாக அமைதியான நோக்கங்களுக்காக யுரேனியத்தை செறிவூட்டுவதாக வலியுறுத்துகிறது. அமெரிக்கா பல வாரங்களாக இப்பகுதியில் ஏராளமான விமானங்கள் மற்றும் போர்க்கப்பல்களை நிலைநிறுத்தி வருகிறது. வெள்ளிக்கிழமை தாக்குதல்கள் அச்சுறுத்தல் அதிகரித்ததால், இஸ்ரேலை விட்டு வெளியேறுமாறு அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தியது. ஈரானும் அமெரிக்காவும் இந்த வாரம் ஜெனீவாவில் தெஹ்ரானின் அணுசக்தி திட்டம் குறித்து பல மணி நேரம் மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தின, ஆனால் ஒரு ஒப்பந்தம் இல்லாமல் வெளியேறியமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2026/1466607
  20. அனேகமாக…. இரண்டு, மூன்று நாட்களுக்குள் சண்டை தொடங்கும் போலுள்ளது. யார்… நல்லாய் அடிக்கிறான் என்று, “பொப்கோர்ன்” சாப்பிட்டுக்கொண்டு பார்ப்போம்.
  21. பிரான்ஸ் பாண் தயாரிப்பில்… முதலிடம் பெற்ற ஜெகதீபனுக்கு வாழ்த்துக்கள். முன்பும் ஒரு தமிழர் பாண் தயாரிப்பில் முதல் இடம் பெற்று இருந்தவர். தமிழர்கள் வெளிநாடுகளில்… சிறந்த பாண்களை தயாரித்து பரிசு வாங்க…. உள்ளூரில் நமக்கு சிங்களவன் பேக்கரி நடத்தி பாண் விற்கிறான். இதே… திறமையை, ஊரில் உள்ள தமிழர்களால் ஏன், செய்ய முடியாது உள்ளது. அங்கு பேக்கரி நடத்தினால்…. சனம் “புறணி” கதைக்கும் என்ற பயத்தில், பலரும் பாண் தயாரிக்க பஞ்சிப் படுகிறார்கள் போலுள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.