All Activity
- Past hour
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
யாரோ ஒரு ஆசாமி இந்த பெயரில் உள்நுழைந்துள்ளாரோ?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Sri Lanka win the toss and bowl.
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
கண்ணீர் அஞ்சலிகள்.🙏
- Today
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
நல்லகண்ணு காலமானார்: 24 நாள் சிகிச்சை அளித்த அரசு மருத்துவமனை அறிக்கை பட மூலாதாரம்,HANDOUT 25 பிப்ரவரி 2026, 08:56 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் (இந்த செய்தி புதுப்பிக்கப்பட்டு வருகிறது) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இரா.நல்லகண்ணு காலமானார் அவருக்கு வயது 101. சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில், " நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 24 தினங்களாக சிகிச்சையின் போது அவரது உடல் நிலையில் ஏற்றதாழ்வுகள் இருந்து வந்தன. " என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்," பல்துறை மருத்துவக்குழு தீவிர சிகிச்சையையும், அதிதீவிர கண்காணிப்பையும் தொடந்து வந்தனர். இன்று அதிகாலை முதல் மருந்துகளை ஏற்கும் தன்மை படிப்படியாக குறைந்து, அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்தது." என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 'அதிதீவிர சிகிச்சையில் இருந்தபோதும் முக்கிய உடலுறுப்புகள் அனைத்தும் செயல் இழந்ததால், நல்லக்கண்ணு 25. 02. 2026 அன்று பிற்பகல் 1. 55 மணியளவில் காலமானார்.' என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மு. வீரபாண்டியன், மாநில செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி "தமிழ்நாட்டில் அவர் கண்ட சமதர்ம சமூகத்தை படைக்கவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை கட்டி வளர்க்கவும் சபதம் ஏற்கிறோம். சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் இன்று மாலை 5 மணிக்கு அவருடைய உடல் அஞ்சலிக்காக வைக்கப்படும். பொதுமக்கள் பார்வைக்காக பிற்பகல் 3 மணி வரை அங்கு வைக்கப்படும். மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் கட்சியினர் அணிவகுப்போடு அவரது உடல் மருத்துவக் கல்லூரியிடம் மருத்துவ ஆய்வுக்காக ஒப்படைக்கப்படும்." தலைவர்கள் இரங்கல் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு மறைந்தார் என்ற செய்தி நம்மையெல்லாம் கடும் துயரத்திற்கு ஆளாக்கியுள்ளது. நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்! கொள்கை உறுதி குலையாமல் குன்றமென நிமிர்ந்து நின்ற பண்புக்குரியவர் தீரமிகு தோழர் நல்லகண்ணு." என தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு,கோப்புப்படம் கொள்கைக் கனல் அகத்தினில் தீயாய் மூண்டு தகிக்க, முகத்திலே புன்னகையுடன் அமைதியாக வலம் வந்த அரசியல் எரிமலை அவர் எனவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். "தோழர் நல்லகண்ணு வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோம் என்பது நமக்குப் பெருமை. அவர் பெற்ற விருதுகள், பரிசுகள் எவையானாலும், அவற்றோடு தொகை அனைத்தையும் கட்சிக்காகவும், மக்கள் நலனுக்காக அரசிடம் ஒப்படைத்த அப்பழுக்கற்ற தலைவர் அவர்! 'தான் வேறு, இயக்கம் வேறு என்று பிரித்துப் பார்க்காமல், இயக்கத்திற்காக இயக்கமாகவே வாழ்ந்தவர்' என்று அவரது நூற்றாண்டு விழாவில் நான் குறிப்பிட்டது இன்றும் நினைவலைகளாக வந்து என் நெஞ்சில் மோதுகிறது. தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்! மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும்! பாட்டாளி மக்களுக்காகவே வாழ்ந்து நிறைந்த பகட்டில்லாத் தோழர் நல்லகண்ணுவின் நினைவும், புகழும் என்றென்றும் காலத்தால் அழியாத கல்வெட்டாக மக்கள் மனதில் நிலைத்திருக்கும்! தமிழ்நாட்டின் உயரிய விருது பெற்ற நம் தகைசால் தமிழரை - இனிய தோழரை முழு அரசு மரியாதையுடன் செவ்வணக்கம் செலுத்தி வழியனுப்பி வைப்போம்!" என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செல்வப்பெருந்தகை, தலைவர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களிடம் பேசுகையில், "நேர்மையான தலைவர், ஏற்றத்தாழ்வும் பாகுபாடும் பார்க்காதவர், சுதந்திர போராட்ட வீரர், இந்திய விடுதலைக்காக தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தவர். 'சுதந்திர போராட்டத்தின் போது என் மீசையை சுட்டதாக' என்னிடம் தெரிவித்துள்ளார். இத்தகைய மாபெரும் தலைவரை தமிழ்நாடு இழந்திருக்கிறது. அவருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்க வேண்டும். நல்லகண்ணுவை வருங்கால தலைமுறையினர் தெரிந்துகொள்ளும் வகையிலான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார். நயினார் நாகேந்திரன், தலைவர், தமிழ்நாடு பாஜக நயினார் நாகேந்திரன் தன் எக்ஸ் பக்கத்தில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான நல்லக்கண்ணு, உடல்நலக்குறைவு காரணமாக தமது 101-வது வயதில் இயற்கை எய்தினார் என்ற தகவல் மிகுந்த மன வேதனையளிக்கிறது. அன்னாரின் குடும்பத்தாருக்கும் சுற்றத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்களைக் கனத்த இதயத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன். மிக இளம் வயதிலேயே அரசியலில் அடியெடுத்து வைத்து, நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அனைத்துத் தரப்பு மக்களின் உரிமைகளுக்காகவும் நூற்றுக்கணக்கான போராட்டங்களை முன்னெடுத்ததோடு, வாழும் வரை எளிமையின் அடையாளமாகவே அறியப்பட்டவர் நல்லக்கண்ணு . அன்னாரின் பொதுச்சேவையும் அர்ப்பணிப்பும் மக்கள் மனதிலும் அரசியல் வரலாற்றிலும் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும்!" என பதிவிட்டுள்ளார். 'நூற்றாண்டு' கண்ட நல்லகண்ணு தமிழ்நாட்டுக்கும் தமிழின் வளர்ச்சிக்கும் பாடுபட்டதாகக் கூறி கடந்த 2022ஆம் ஆண்டு தகைசால் தமிழர் விருதை, முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். இதற்காகத் தனக்குக் கொடுக்கப்பட்ட 10 லட்ச ரூபாய் பரிசுத் தொகையுடன் தன்னுடைய பணமான 5,000 ரூபாயையும் சேர்த்து முதலமைச்சரின் நிவாரண நிதிக்கே நல்லகண்ணு வழங்கினார். நல்லகண்ணுவின் ஆரம்ப கால வாழ்க்கை ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் விவசாயக் குடும்பத்தில் 1925 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி ராமசாமி-கருப்பாயி தம்பதியின் மூன்றாவது மகனாக நல்லகண்ணு பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்தில் உள்ள காரனேஷன் உயர்நிலைப் பள்ளியில் படித்த நல்லகண்ணுவுக்கு பொதுவுடைமைக் கருத்துகளை பள்ளி ஆசிரியராக இருந்த பலவேசம் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டம், விவசாயிகள் போராட்டம், தீண்டாமைக்கு எதிரான போராட்டம், கனிமவளக் கொள்ளைக்கு எதிரான போராட்டம் எனத் தனது வாழ்நாளில் குறிப்பிட்ட பகுதியை போராட்டம், சிறை வாழ்க்கை என வாழ்ந்தவர் நல்லகண்ணு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மட்டுமன்றி இதர கட்சிகளின் தலைவர்களும் 'தோழர் ஆர்.என்.கே' என்ற அடைமொழியோடு அவரை அழைக்கின்றனர். கடந்த 1943ஆம் ஆண்டில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த நல்லகண்ணு, இன்றுவரை அதே கட்சியில் 80 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கினார். அதுகுறித்து முன்பு கலந்துரையாடல் ஒன்றில் நினைவுகூர்ந்த நல்லகண்ணு, "என்னுடைய 16 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயன்றேன். அவர்கள் என்னைச் சேர்க்கவில்லை. '18 வயது ஆகட்டும், சேர்த்துக் கொள்கிறோம்' என்றனர். 18 வயது வந்ததும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்தேன்" என்றார். நல்லகண்ணு தொடர்பாக பிபிசி தமிழின் செய்தியாளர்களிடம் கடந்த காலங்களில் இடது சாரி அமைப்புகளின் நிர்வாகிகள் பகிர்ந்து கொண்ட கருத்துக்களை இந்த கட்டுரையின் பின்வரும் பத்திகளில் காணலாம். "பள்ளிப் பருவத்தில் காந்தியவாதியாக நல்லகண்ணு இருந்தார். அதன்பிறகு கம்யூனிஸ்ட்டாக மாறினார். 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் மாணவர்களைத் திரட்டி போராட்டம் நடத்தினார். திருநெல்வேலியில் நடந்த சுதந்திர போராட்டங்களில் அவர் பங்கெடுத்தார்" என்கிறார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் லெனின். நெல்லை சதி வழக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த சில ஆண்டுகளில் நல்லகண்ணுவுக்கு கிளைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 'உழுபவனுக்கே நிலம் சொந்தம்' என்ற போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்தது. ஆயுதம் தாங்கிய போராட்டமாக இது இருந்ததாகக் கூறும் லெனின், "இந்திய அரசுக்கு எதிராகச் செயல்பட்டதாகத் தொடரப்பட்ட நெல்லை சதி வழக்கில் நல்லகண்ணு சேர்க்கப்பட்டார். அவரது மீசையை போலீஸ்காரர்கள் சுருட்டை வைத்துப் பொசுக்கினர். ஆனாலும், சக தோழர்களை அவர் காட்டிக் கொடுக்கவில்லை" என்றார். இந்த வழக்கில் ஏழு ஆண்டுகள் நல்லகண்ணு சிறையில் இருந்துள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த அவருக்கு அன்னசாமி என்பவர், தனது மகள் ரஞ்சிதத்தை திருமணம் செய்து கொடுத்தார். இந்தத் திருமணம் 1958ஆம் ஆண்டு நடந்தது. இதே காலகட்டத்தில் மாநிலம் முழுவதும் நிலச்சுவான்தார்களின் கைகளில் நிலம் இருந்துள்ளது. அன்றைய காலகட்டத்தில் தலித் மக்கள் வீடுகளையோ நிலங்களையோ வைத்துக்கொள்ள முடியாத நிலை இருந்துள்ளது. "நிலையான வீடு இல்லாததால் தலித் மக்களை 'ஓடும் குடிகள்' என அழைத்தனர். இதற்கு எதிராக தலித் மக்களைத் திரட்டிப் போராடி அவர்கள் குடியிருப்பதற்கான மனை உரிமையை நல்லகண்ணு பெற்றுத் தந்தார்" என்கிறார் லெனின். நல்லகண்ணுவின் அரசியல் பயணத்தில் விவசாய சங்கத்தின் பணிகளே பிரதானமாக இருந்துள்ளது. 1970 ஆம் ஆண்டில் நடந்த நில மீட்சிப் போராட்டத்தில் ஒரு சிலரின் கைகளில் இருந்த நிலங்களை மீட்பதற்காக இந்தியா முழுவதும் போராட்டம் நடந்தது. அப்போது தமிழ்நாட்டில் மடங்களின் கட்டுப்பாட்டில் இருந்த நிலங்கள் தொடர்பான விவரங்களைத் தொகுத்து சிறிய நூல் ஒன்றை நல்லகண்ணு வெளியிட்டார். சாதிக் கலவரத்தைத் தடுத்த நல்லகண்ணு "நல்லகண்ணுவின் பிரதான காலகட்டம் என்பது விடுதலைப் போராட்டமும் அதற்குப் பிந்தைய காலகட்டமும்தான்" எனக் கூறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், 1996ஆம் ஆண்டு நடந்த சாதிக் கலவரத்தைக் குறிப்பிட்டு பிபிசி தமிழிடம் சில தகவல்களைத் தெரிவித்தார். தென் மாவட்டங்களில் 1996ஆம் ஆண்டு முக்குலத்தோர் மற்றும் தலித் மக்களுக்கு இடையே சாதிக் கலவரம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக நல்லகண்ணுவின் மாமனார் அன்னசாமி கொல்லப்பட்டார். "அது கொந்தளிப்பான நேரம். சற்று பிசகினாலும் அசம்பாவிதம் நடந்திருக்கும். ஆனால் அமைதியை ஏற்படுத்தும் பணியில் நல்லகண்ணு ஈடுபட்டார். 'சிலர் செய்த தவறுக்காக ஒரு சமூகத்தையே குற்றவாளியாக்க முடியாது' என்பதை அவர் நிலை நிறுத்தினார்" என்கிறார் கனகராஜ். மதுரையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஆகிய ஊராட்சிகளில் தலித் ஊராட்சித் தலைவர்கள் பதவியேற்க முடியாத சூழல் நிலவியது. இதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக இருந்த நல்லகண்ணு, சுமார் நான்காயிரம் பேரைத் திரட்டி மாபெரும் உண்ணாவிரதம் இருந்தார். "இந்தப் போராட்டம் மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தியது. 2006ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி தலைமையிலான அரசு, தேர்தலை நடத்தியே தீருவது என முடிவெடுத்து தேர்தலை நடத்தியது" என்று விவரித்தார் லெனின். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp32qzz50z1o
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
வாழ்க்கையின் முழுநீளத் திரைப்படம் கவிதையாய்!
-
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் அலி சப்ரி! Feb 25, 2026 - 03:48 PM இன்று இலங்கை இராணுவத்திற்கும் அதன் புலனாய்வுப் பிரிவிற்கும் ஒரு கவலைக்குரிய நாளாகும் என முன்னாள் வெளிவிவகார மற்றும் நீதி, சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் கைது தொடர்பில் தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே என்பவர் விடுதலைப் புலிகளின் புலனாய்வு வலையமைப்பை முறியடித்தமை, விடுதலைப் புலிகளின் உயர் தலைவர்களை இலக்கு வைத்துப் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்தமை மற்றும் 'கே.பி' போன்ற விடுதலைப் புலித் தலைவர்களைக் கைது செய்தமை போன்ற முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஒரு அதிகாரி என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டிற்கு மிகவும் சவாலான காலப்பகுதிகளில் தமது உயிரைப் பணயம் வைத்துச் சேவையாற்றிய அதிகாரிகள், இன்று அரசியல் விவாதங்களுக்குள் இழுத்து வரப்படுகின்றமை பலரையும் கவலையடையச் செய்யும் ஒரு விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் கீழ் பொறுப்புக்கூறல் என்பது அவசியமானது என்ற போதிலும், அது நியாயமான முறையிலும், எல்லைகளுக்கு உட்பட்டும், நிறுவனத்தின் கௌரவத்தை மதிக்கும் வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொழில்முறை வாய்ந்ததாகவும், சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடாகவும் அமைய வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக, ஒரு சிக்கலான விசாரணையானது பொதுமக்களுக்கான ஒரு காட்சிப்பொருளாக (Public spectacle) மாற்றப்படுவதையே நாம் அதிகளவில் காணக்கூடியதாக உள்ளதாக முன்னாள் அமைச்சர் தனது X பதிவில் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியல் லாபங்களுக்காக உயிர்த்த ஞாயிறு தாக்குதலைப் பயன்படுத்துவதானது, இலங்கையின் நம்பகத்தன்மைக்கும் நீண்டகாலப் பாதுகாப்பு நலன்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார். தேசியப் பாதுகாப்பானது அரசியல் மோதல்களின் பக்கவிளைவாக மாறிவிடக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கை உண்மையையும் நீதியையும் தேடிப் பயணிக்க வேண்டும். ஆனால், அது சட்டம், சாட்சியங்கள் மற்றும் பொறுப்புள்ள தலைமைத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னெடுக்கப்பட வேண்டுமே தவிர, மக்களைப் பிளவுபடுத்துவதற்காகவோ அல்லது திசை திருப்புவதற்காகவோ உருவாக்கப்படும் நாடகத்தனமான நடவடிக்கைகளின் அடிப்படையில் அமையக் கூடாது என முன்னாள் அமைச்சர் அலி சப்ரி இறுதியாக வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmm1vq4mk000g356pg7ukef6g பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் சுரேஷ் சலே கைது: 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை! 25 Feb, 2026 | 03:31 PM அரச புலனாய்வுப் பிரிவு முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை 72 மணிநேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸார் தீர்மானித்துள்ளனர். முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று புதன்கிழமை (25) காலை பேலியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான மீள் விசாரணைகளின் ஒரு கட்டமாகவே இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இன்று பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது இது தொடர்பான மேலதிக விபரங்கள் வெளியிடப்பட்டன: மேற்கு மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த கருத்துத் தெரிவிக்கையில், "உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாகக் கிடைத்துள்ள வலுவான சாட்சியங்களின் அடிப்படையிலேயே சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுள்ளார். இது குறித்து நீண்டகால விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால், மேலதிக தகவல்களை இப்போதைக்கு வெளியிட முடியாது" எனத் தெரிவித்தார். கைதுக்கான காரணத்தை உடனடியாக அறிவிக்காமல் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டமைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் முன்னெடுக்கப்படும் பிரசாரங்கள் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சஜீவ மெதவத்த, "அவரைக் கைது செய்யாமல் இருந்திருந்தால் தான் பொலிஸாருக்கு எதிராக பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டிருக்க வேண்டும். பொலிஸார் தமது கடமையைச் சரியாகச் செய்துள்ளனர்" எனக் குறிப்பிட்டார். சுரேஷ் சலேவிடம் முன்னெடுக்கப்படவுள்ள விசாரணைகளின் ஊடாக, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னால் உள்ள 'மகா சூத்திரதாரி' தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். சட்டப்பிரிவுக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜாலிய சேனாரத்ன தெரிவிக்கையில், "பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஒருவரைக் கைது செய்தால் 3 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்ய முடியும். அதன்பின்னர் தேவைப்படின், சாட்சியங்களின் அடிப்படையில் தடுப்புக்காவல் உத்தரவைப் பெற்று மேலதிக காலம் தடுத்து வைக்கவும் சட்டத்தில் இடமுண்டு" என்றார். பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் பொலிஸார் இதன்போது உறுதியளித்தனர். 'சனல்-4' விவகாரம் மற்றும் அசாத் மௌலானாவின் வாக்குமூலங்கள் பின்னணி 2019 ஏப்ரல் 21 அன்று சஹ்ரான் ஹாஷிம் தலைமையிலான குழுவினர் முன்னெடுத்த 10 தற்கொலைத் குண்டுத் தாக்குதல்களில் 273 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக பாராளுமன்ற தெரிவுக்குழு மற்றும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுக்கள் மூலம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு, நௌபர் மௌலவி உள்ளிட்ட 25 பேருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டு தினசரி விசாரணை நடைபெற்று வருகின்றது. இத்தாக்குதலுக்குப் பின்னால் அரசியல் சக்திகள் இருப்பதாக நீண்டகாலமாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் விசாரணைகளைத் தீவிரப்படுத்தியது. குறிப்பாக, பிரித்தானியாவின் 'சனல்-4' ஊடகம் வெளியிட்ட ஆவணப்படத்தில், சுரேஷ் சலே மற்றும் தவ்ஹீத் ஜமாத் உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்தும், ராஜபக்ஷவினரை மீண்டும் அதிகாரத்திற்குக் கொண்டுவர நாட்டில் பாதுகாப்பற்ற சூழலை உருவாக்கத் திட்டமிட்டதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டது. பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனின் முன்னாள் ஊடகப் பேச்சாளரும், தற்போது சுவிட்சர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்துள்ளவருமான அசாத் மௌலானா வழங்கிய தகவல்களே சுரேஷ் சலேவுக்கு எதிரான விசாரணைகளில் திருப்புமுனையாக அமைந்தன. கடந்த காலங்களில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சமர்ப்பித்த இரகசிய விசாரணை அறிக்கைகளின் அடிப்படையிலும், புதிதாகக் கண்டறியப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையிலுமே இன்றையதினம் இந்த அதிரடி கைது இடம்பெற்றுள்ளது. தற்போது சி.ஐ.டி வசம் உள்ள சுரேஷ் சலேவிடம் தாக்குதலின் பின்னாலுள்ள அரசியல் தொடர்புகள் குறித்து தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/239555
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
இருந்தா போடு ........! 😍
-
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் வடக்கிற்கு விஜயம்
சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் திருக்கோணேஸ்வர ஆலயத்துக்கு விஜயம் 25 Feb, 2026 | 03:16 PM (துரைநாயகம் சஞ்சீவன்) இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாஷானந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் புதன்கிழமை (25) காலை திருக்கோணேஸ்வர ஆலயத்திற்கு வருகை தந்திருந்தனர். நேற்றைய தினம் விசேட உலங்கு வானூர்தி மூலம் திருகோணமலைக்கு வருகை தந்த குழுவினர் இன்றைய தினம் காலை ஆலயத்திற்கு விஜயம் மேற்கொண்டு விசேட பூஜை வழிபாடுகளில் கலந்துகொண்டார். அத்துடன் திருக்கோணேஸ்வர ஆலயத்தின் சுற்றுப்புறங்களையும் பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/239553
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் ........! இசையமைப்பாளா் : அனிருத் ரவிச்சந்தா் ஆண் : வாழ்க்கையை தேடி நானும் போறேன் காண்டுல பாடும் பாட்டுக்காரன் போதையில் பாடும் சோகப்பாட்ட சோடாவ கலந்து பாடப்போறேன் ஆண் : மாமன் ஓட்டாண்டி பொிய லூசாண்டி அடிவாங்கியே நா ஸ்ட்ராங்கான மாயாண்டி ஆனேன் நான் போண்டி அதையும் தான் தாண்டி போராடுவேன் நா வெறியான விருமாண்டி ஆண் : { அட ஊதுங்கடா சங்கு நா தண்டச்சோறு கிங்கு தமிழ் ஸ் மை மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு } (2) ஆண் : ஊது சங்கு நான் தான்கிங்கு ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு சங்கு நான் தான்கிங்கு மதா் டங் ஐ எம் சிங்கிள் அன்ட் ஐ எம் யங்கு ஆண் : எருமைக்கு கூட புளுக்ராஸ் இருக்கு எனக்காக யோசிக்க உயிரா இருக்கு மரத்த சுத்தி டூயட் பாடி லவ் பண்ண எனக்கும்தான் ஆச இருக்கு மானம் ரோசம்லாம் டீல்ல விட்டாச்சுடா பிளாஸ்டிக் பூ கூட வாடி போயாச்சுடா வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா வெள்ள மனசெல்லாம் இங்க கணக்கில்லடா.......! --- வாழ்க்கையைத் தேடி ---
-
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை
இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி இலங்கை வருகை Published By: Priyatharshan 25 Feb, 2026 | 01:59 PM ( வீ. பிரியதர்சன் ) இந்திய கடற்படையின் “நட்புப் பாலங்கள்” (Bridges of Friendship) திட்டத்தின் தொடர்ச்சியாக, பயிற்சி பாய்மரக் கப்பல் ஐ.என்.எஸ். தரங்கினி (INS Tarangini ) இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்கிறது. இந்திய கடற்படையின் பயிற்சி பாய்மரக் கப்பலான INS Tarangini, 2026 பெப்ரவரி மாதம் 27 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுகத்திலும், மார்ச் மாதம் 6 ஆம் திகதி முதல் 9 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திலும் தரித்து நிற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடல் பயணப் பயிற்சி மற்றும் அனுபவப் பகிர்வை நோக்கமாகக் கொண்டு இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. துறைமுகக் கட்டத்தில் மற்றும் கடல் பயணக் கட்டத்தில் இலங்கை கடற்படையின் பயிற்சி அதிகாரிகளுக்கு கடல் பயிற்சி வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன. Commander Nitin Gajjar தலைமையில் வரும் இந்த பாய்மரக் கப்பல், விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற International Fleet Review 2026 நிகழ்வில் பங்கேற்ற பின்னர் திரும்பும் பயணத்தின் ஒரு பகுதியாக இலங்கை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவீன இயந்திர மற்றும் வாயு டர்பைன் தொழில்நுட்பங்கள் பரவலாகப் பயன்படுத்தப்படும் இன்றைய காலகட்டத்தில், பாய்மரப் பயிற்சிக் கப்பல்களை இயக்கும் உலகின் சில கடற்படைகளில் இந்தியாவின் கடற்படையும் ஒன்றாக விளங்குகிறது. INS Tarangini கப்பல் பிரபல யாட்ச் வடிவமைப்பாளர் Colin Mudie இனால் வடிவமைக்கப்பட்டு, இந்தியாவின் Goa Shipyard Limited நிறுவனத்தில் உள்நாட்டில் கட்டமைக்கப்பட்டது. சுமார் 54 மீற்றர் நீளமுடைய இந்த பாய்மரக் கப்பல், சுமார் 500 மெட்ரிக் தொன் இடப்பெயர்ச்சித் திறனைக் கொண்டுள்ளது. 20 பாய்மரங்கள் மற்றும் 10,000 சதுர அடிக்கும் அதிகமான பாய்மரப் பரப்பையும், 20 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுள்ள கயிறு அமைப்புகளையும் கொண்டுள்ளது. மூன்று மாஸ்டுகளை கொண்ட பார்க் வகை பாய்மரப் பயிற்சிக் கப்பலான INS Tarangini, Indian Navy இன் முதல் பயிற்சிப் படையின் ஒரு பகுதியாக செயல்பட்டு வருகிறது. இந்த விஜயத்தின் போது, திருகோணமலையில் மூன்று அதிகாரிகளும் 25 இலங்கை கடற்படை பயிற்சி அதிகாரிகளும் கடல் பயணப் பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகள் இருந்தாலும், பாய்மரக் கப்பலில் பயிற்சி பெறுவது கடல், காற்று மற்றும் கடற்பயண அடிப்படைத் திறன்களை கற்றுக்கொள்ள சிறந்த வாய்ப்பாகும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விஜயம், இரு நாடுகளுக்கும் இடையிலான கடல் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/239545
-
சுன்னாகத்தில் கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு : சந்தேகநபர் கைது
சுன்னாகத்தில் கத்தி முனையில் முச்சக்கர வண்டி பறிப்பு : சந்தேகநபர் கைது 25 Feb, 2026 | 12:16 PM யாழ். சுன்னாகம் பகுதியில் மீட்டர் வட்டி பிரச்சினையால் முச்சக்கர வண்டி ஒன்று கத்தி முனையில் பறிக்கப்பட்ட சம்பவம் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில், மீட்டர் வட்டிக்கு பணத்தை வழங்கும் ஒருவர் மற்றைய ஒருவருக்கு மீட்டர் வட்டிக்கு பணத்தை கொடுத்துள்ளார். இந்நிலையில் வாங்கிய பணத்திற்கு மேலாக வட்டி செலுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் தொடர்ச்சியாக வட்டி செலுத்தாத காரணத்தால் வட்டிக்கு பணத்தை கொடுத்தவர் நேற்றிரவு கத்தி முனையில் வட்டிக்கு பணத்தை பெற்றவரது 17 இலட்சம் ரூபா பெறுமதியான முச்சக்கர வண்டியை கத்தியை வைத்து மிரட்டி பறித்து சென்றுள்ளார். பாதிக்கப்பட்ட நபர் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.நிதர்சன் தலைமையிலான குழுவினர் இன்று அதிகாலை குறித்த சந்தேகநபரை கைது செய்ததுடன் முச்சக்கர வண்டியையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். யாழில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பல பகுதிகளில் மீட்டர் வட்டி பிரச்சினை தலைவிரித்து ஆடுகின்ற நிலையில் ஏற்கனவே தற்கொலைகள், அச்சுறுத்தல் சம்பவங்கள், வன்முறை சம்பவங்கள் என்பன இடம்பெற்றுள்ளன. இந்த சூழ்நிலையில் புதிதாக பதவியேற்றுள்ள தமிழ் பொறுப்பதிகாரி மீட்டர் வட்டி வன்முறை சம்பவம் குறித்து அதிரடி நடவடிக்கையில் ஈடுபடுவதை மக்கள் பாராட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/239532
-
அஸ்வெசும கொடுப்பனவு நாட்களில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு
அஸ்வெசும கொடுப்பனவு நாட்களில் மலையகத்தில் மதுபான விற்பனை அதிகரிப்பு 25 Feb, 2026 | 01:11 PM மலையகத்தின் பல பகுதிகளில் அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகள் வழங்கப்படும் நாட்களில், ஏனைய நாட்களை விட மதுபான விற்பனை பாரியளவில் அதிகரித்துள்ளதாக மதுபானசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மலையகத்தின் நகர்ப்புறங்கள் மட்டுமன்றி கிராமப்புறங்களிலும் உள்ள மதுபான சாலைகளில் அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் தினங்களில் விற்பனை அதிகரித்து காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அஸ்வெசும கொடுப்பனவு கிடைக்கப்பெற்றவுடன், பலர் அதனைப் பெற்றுக்கொண்டு நேரடியாக மதுபானசாலைகளுக்கே செல்வதாகக் கூறப்படுகிறது. வறுமைக் கோட்டின் கீழ் உள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் வழங்கப்படும் இக்கொடுப்பனவை, அதன் நோக்கத்திற்குப் பயன்படுத்தாமல் பலர் மதுபானத்திற்காகச் செலவிட்டு வருகின்றனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த சமூக ஆர்வலர்கள், குடும்பப் பொறுப்புகளை மறந்து இவ்வாறான பணத்தை மதுவிற்காகச் செலவிடுவது கவலைக்குரிய விடயம் எனச் சுட்டிக்காட்டியுள்ளனர். இது குறித்து கருத்துத் தெரிவித்த மதுபானசாலை உரிமையாளர்கள், "அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படும் நாட்களில் எமது விற்பனை முன்பை விட அதிகரிக்கின்றது. எனினும், அவர்கள் எமது வாடிக்கையாளர்கள் என்பதால் நாம் யாரிடமும் முறைப்பாடு செய்ய முடியாது. அவர்கள் கொண்டு வரும் பணம் எதிலிருந்து கிடைத்தது என்பது எமது வியாபாரத்திற்கு முக்கியமில்லை" எனத் தெரிவித்துள்ளனர். அரசாங்கம் வறுமையை ஒழிக்க வழங்கும் நிதி, மீண்டும் மதுபானம் ஊடாக அரசாங்கத்தின் வரி வருமானத்திற்கே செல்வதாக சமூக ஆய்வாளர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/239537
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
கைதான சுரேஷ் சலே தடுத்து வைத்து விசாரிக்கப்படுகிறார் Feb 25, 2026 - 02:28 PM முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதானி, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கமைய 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரிக்கப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் காணப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே கைது செய்யப்பட்டதாக மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த தெரிவித்தார். பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், இது தொடர்பில் நீண்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளதால் அது குறித்த தகவல்கள் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றார். கைதுக்கான காரணத்தை சில மணி நேரங்களுக்குள் வெளிப்படுத்துவது கடினம் எனக் குறிப்பிட்ட சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, பொலிஸார் தமது கடமையை முறையாகச் செய்துள்ளதாகவும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmm1swzdq000d356p0n8srrqy
-
பெண்ணின் கைகள், கால்களை அகற்றிய மருத்துவர்கள் - 'காயத்தில் நாய் நக்கியது' காரணமா?
பெண்ணின் கைகள், கால்களை அகற்றிய மருத்துவர்கள் - 'காயத்தில் நாய் நக்கியது' காரணமா? படக்குறிப்பு,ஏழு மாத கால சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய மஞ்சித் சங்கா, செப்சிஸ் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த விரும்புகிறார். கட்டுரை தகவல் ஜோஷ் சாண்டிஃபோர்டு, வுல்வர்ஹாம்ப்டன் பிபிசி 25 பிப்ரவரி 2026, 02:13 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் சில வாசகர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்தக்கூடிய படங்கள் உள்ளன. பிரிட்டனைச் சேர்ந்த மஞ்சித் சங்கா மருத்துவமனையில் 32 வாரங்கள் கழித்த பிறகு, இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்களை இழந்து, வீடு திரும்பியுள்ளார். 56 வயதான அவர் உயிர் பிழைப்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லை என மருத்துவர்கள் நினைத்த போதிலும், அவர் சில தினங்களுக்கு முன்பு பர்மிங்ஹாமில் உள்ள மோஸ்லி ஹால் வார்டு 9-ல் இருந்து வீடு திரும்பினார். வுல்வர்ஹாம்ப்டன்/ஸ்டாஃபோர்ட்ஷையர் எல்லையில் உள்ள பென்னில் வசிக்கும் அவரது குடும்பத்தினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு சிறிய வெட்டு அல்லது சிராய்ப்பின் மீது அவரது நாய் நக்கியது போன்ற ஒரு சாதாரண விஷயம் அவரது செப்சிஸுக்கு காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். அவர் குணமடைந்து தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கும் நிலையில், செப்சிஸ் "யாருக்கு வேண்டுமானாலும் ஏற்படலாம்" என்று அவர் நம்புவதால், இப்போது மற்றவர்களுக்கு அதன் ஆபத்து குறித்து எச்சரிக்க விரும்புகிறார். "இந்த அனுபவத்தை விளக்குவது கடினம்," என்று அவர் கூறினார். "குறுகிய காலத்தில் உங்கள் கால்களையும் கைகளையும் இழப்பது என்பது மிகப் பெரிய விஷயம்." "இது மிகவும் தீவிரமானது மற்றும் இதை எளிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது." படக்குறிப்பு,புதன்கிழமை அன்று மஞ்சித் சங்கா வெளியேறிய மோஸ்லி ஹால் மருத்துவமனையில் இருந்தபோது எடுத்த படம். செப்சிஸ் என்பது ஒரு அரிய, ஆனால் தீவிரமான மருத்துவ நிலை. நோய் மற்றும் தொற்றுக்கு எதிராகப் போராட வேண்டிய உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம், உடலின் சொந்த திசுக்கள் மற்றும் உறுப்புகளையே தாக்கத் தொடங்கும்போது இது நிகழ்கிறது. இது உயிருக்கு ஆபத்தானது மற்றும் இதைக் கண்டறிவது கடினம் என்று தேசிய சுகாதார சேவை (NHS) கூறுகிறது. அதே சமயம், பிரிட்டனில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 செப்சிஸ் தொடர்பான இறப்புகள் ஏற்படுவதாக யுகே செப்சிஸ் டிரஸ்ட் கூறுகிறது. பெரியவர்களில், அறிகுறிகளில் தெளிவற்ற பேச்சு, தீவிர நடுக்கம் அல்லது தசை வலி, கடுமையான மூச்சுத்திணறல் மற்றும் தோல் நிறமாற்றம் அல்லது புள்ளிகளுடன் காணப்படுதல் ஆகியவை அடங்கும். ஆனால் இவை மட்டுமே அறிகுறிகள் அல்ல. பட மூலாதாரம்,Kam Sangha படக்குறிப்பு,தற்போது குணமடைந்து வரும் மஞ்சித் சங்கா, ஒரு வார இறுதி நேரத்துக்குள் தனது வாழ்க்கை மாறிவிட்டதாகக் கூறினார். தனது உடல்நலக் குறைவு ஏற்படும் முன் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்து வந்த மஞ்சித் சங்கா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் உடல்நிலை சரியில்லாமல் வீட்டுக்குத் திரும்பினார். அடுத்த நாள் காலையில், அவர் நினைவு இழந்த நிலையில் இருந்தார். அவரது கைகளும் கால்களும் பனிக்கட்டி போல் குளிர்ந்து போயிருந்தன, அவரது உதடுகள் ஊதா நிறமாக மாறியிருந்தன மற்றும் அவர் சுவாசிக்க சிரமப்பட்டார். பாதிக்கப்பட்டவருக்கு " மனம் தெளிவின்றி இருக்கும்," என்று அவரது கணவர் காம் சங்கா கூறினார். "24 மணி நேரத்துக்குள் இது எப்படி நடக்கும் என்று நீங்கள் யோசிப்பீர்கள்?" என்று அதன் தீவிரத்தை அவர் விளக்குகிறார். மேலும் தொடர்ந்த அவர், "ஒரு சனிக்கிழமை அவர் நாயுடன் விளையாடிக்கொண்டிருக்கிறார், ஞாயிறு வேலைக்குச் சென்றார், திங்கள் இரவு அவர் கோமா நிலைக்குச் சென்றுவிட்டார்." என்று கூறினார். படக்குறிப்பு,இப்போது மீண்டும் வீடு திரும்பியுள்ள மஞ்சித் சங்காவுக்கு, அவரது கணவர் காம் உறுதுணையாக இருக்கிறார், அவர் முழுவதும் மஞ்சித் உடனேயே இருந்தார். வுல்வர்ஹாம்ப்டனில் உள்ள நியூ கிராஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்தபோது மஞ்சித் சங்காவின் இதயம் ஆறு முறை நின்றது. பின்னர் அண்டை ஊரான டட்லியில் உள்ள ரசல்ஸ் ஹால் மருத்துவமனையில் இருந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள், நோயின் பரவல் காரணமாக அவரது முழங்காலுக்குக் கீழே இரு கால்களையும், அதேபோல் இரு கைகளையும் அகற்ற வேண்டியிருந்தது. முன்னாள் மருந்தக ஊழியரான இவர் தனது மண்ணீரலையும் இழந்தார், நிமோனியாவுடன் போராடினார் மற்றும் பித்தப்பைக் கற்களும் உருவானது. இதற்கு மேலும் அறுவை சிகிச்சை தேவைப்படலாம் என்று அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. "என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை," என்று அவர் விளக்கினார். "முதல் ஒரு மாதம் எனக்கு எதுவும் நினைவில் இல்லை." என்கிறார் மஞ்சித். பட மூலாதாரம்,Kam Sangha படக்குறிப்பு,தன் கைகள் அகற்றப்படுவதற்கு முன்பு, மருத்துவமனையில் இருந்த முதல் ஒரு மாதம் தனக்கு நினைவில் இல்லை என்று மஞ்சித் கூறினார். ஸ்க்ரூஃபிக்ஸ் நிறுவனத்தில் விநியோக ஊழியராகப் பணிபுரியும் 60 வயதான காம் சங்கா, தனது மனைவிக்கு ஆதரவாக ஏழு மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை, மேலும் அவர் தனது மனைவியை நினைத்துப் பெருமைப்படுவதாகக் கூறினார். "அவர் மிகவும் வலிமையானவர்," என்று அவர் மேலும் கூறினார். "ஒவ்வொரு நாளும் 'அவர் இன்று போய்விடுவார்' என்பது போலவே இருந்தது, ஆனால் அவர் கடந்து வந்த விஷயங்களின் மூலம் ஒவ்வொரு நாளும் நாங்கள் நினைத்தது தவறு என்று அவர் நிரூபித்தார்."என்கிறார் காம் சங்கா. இந்தத் தம்பதியினர் தங்களது 37-வது திருமண ஆண்டு விழாவையும், கிறிஸ்துமஸ் சமயத்தில் வந்த மஞ்சித் சங்காவின் பிறந்தநாளையும் மருத்துவமனையிலேயே கழித்தனர். பட மூலாதாரம்,Kam Sangha படக்குறிப்பு,மஞ்சித் சங்கா தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தொடங்கும் நிலையில், நலவிரும்பிகள் அவருக்காக 20,000 பவுண்டுகளுக்கும் மேல் திரட்டியுள்ளனர். ரோபோடிக் கைகள் உட்பட மேம்பட்ட செயற்கை உறுப்புகளுக்காக இந்தத் தம்பதியினர் இப்போது நிதி திரட்டி வருகின்றனர், இதற்குப் பல்லாயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகும் என்று அவர்கள் கூறினர். இதுவரை அவர்கள் GoFundMe இணையப்பக்கம் மற்றும் ஸ்க்ரூஃபிக்ஸ் மூலம் நிதி திரட்டியதன் மூலம் 22,000 பவுண்டுகள் திரட்டியுள்ளனர். மஞ்சித் சங்கா தனது மருந்தகப் பணியுடன் வார இறுதி ஷிப்டுகளில் ஸ்க்ரூஃபிக்ஸ் நிறுவனத்தில் பணியாற்றியிருந்தார். தன் முன்னால் ஒரு கடினமான பாதை இருப்பதை அவர் அறிந்திருந்தாலும், தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பத் தீர்மானமாக இருப்பதாக அவர் கூறினார். "நான் நடக்க விரும்புகிறேன்," என கூறும் மஞ்சித் . "நான் எனது செயற்கை உறுப்புகளைப் பெற்றுக்கொண்டு மீண்டும் வேலைக்குச் செல்ல விரும்புகிறேன்." என்கிறார். "நான் நாற்காலியிலும் படுக்கையிலும் போதுமான அளவு அமர்ந்திருந்து விட்டேன். இப்போது நடப்பதற்கான நேரம் வந்துவிட்டது." என்கிறார் மஞ்சித். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c62g0g33gz5o
-
பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் - 2026
இலங்கை - இங்கிலாந்து போட்டியுடன் 2026 மகளிர் ரி20 உலகக் கிண்ணம் ஆரம்பம் 25 Feb, 2026 | 03:18 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்தில் இந்த வருடம் நடைபெறவுள்ள பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எஜ்பெஸ்டனில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த வருடம் 12 அணிகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றவுள்ளன. அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகியன ஒரு குழுவிலும் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியன மற்றைய குழுவிலும் விளையாடவுள்ளன. இரண்டு குழுக்களுக்குமான முதல் சுற்று லீக் போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும். லீக் போட்டிகள் ஜூன் 12 முதல் ஜூன் 28 வரை நடைபெறும். முதலாவது அரை இறுதிப் போட்டி தி ஓவல் மைதானத்தில் ஜூன் 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 2ஆம் திகதியும் நடைபெறும். இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதி தி லோர்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும். இலங்கையின் போட்டி விபரங்கள் ஜுன் 12: எதிர் இங்கிலாந்து - எஜ்பெஸ்டன் ஜூன் 16: எதிர் நியூஸிலாந்து - ஹெம்ப்ஷயர் பௌல் ஜூன் 21: எதிர் மேற்கிந்தியத் தீவுகள் - ப்றிஸ்டன் கவுன்டி மைதானம் ஜூன் 23: எதிர் அயர்லாந்து - ப்றிஸ்டன் கவுன்டி மைதானம் ஜூன் 26: எதிர் ஸ்கொட்லாந்து - ஓல்ட் ட்ரஃபர்ட் https://www.virakesari.lk/article/239554
-
டிரம்பின் புதிய 10% உலகளாவிய வரி எப்படி செயல்படும்? - 4 கேள்விகள், பதில்கள்
உலக நாடுகளுக்கான சுங்கவரியை நியாயப்படுத்திய ட்ரம்ப்! Feb 25, 2026 - 11:57 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இன்று (25) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், உலக நாடுகளிடமிருந்து சுங்கவரி வசூலிப்பதை நியாயப்படுத்தியுள்ளார். இந்தச் சுங்கவரி வசூல் மூலம் ஈட்டப்படும் வருமானத்தைக் கொண்டு, தனது நாட்டு மக்கள் செலுத்தும் வருமான வரியை இலகுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இது அமெரிக்க மக்களுக்குப் பெரும் சாதகமாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சுமார் 1 மணித்தியாலம் 48 நிமிடங்கள் நீடித்த இந்த உரையில், "யுகத்திற்கு ஏற்ற ஒரு புரட்சிகர மாற்றத்திற்கு" தாம் பொறுப்பேற்பதாக ஜனாதிபதி தெரிவித்தார். முன்னதாக விதிக்கப்பட்டிருந்த கடுமையான இறக்குமதி வரிகளை நீக்குவதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ட்ரம்ப் இதன்போது மீண்டும் கடுமையாக விமர்சித்தார். அமெரிக்க ஜனாதிபதியால் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் நாட்டின் தற்போதைய நிலை குறித்து விளக்கமளிப்பதற்காக நிகழ்த்தப்படும் 'அரசின் நிலை' உரையாக இது அமைந்திருந்தது. ட்ரம்பின் கருத்துப்படி, அமெரிக்கப் பொருளாதாரத்தின் தற்போதைய எழுச்சிக்குச் சுங்கவரி வசூலிப்பதே பிரதான காரணமாகும். https://adaderanatamil.lk/news/cmm1mrfb80006356p0znd3y6v
-
"உருட்டு" என்றால்... இது தான், உருட்டு.
@தமிழ் 31 @ போட்டுப் பார்த்தேன் வந்திருக்கு ......!
-
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு Published By: Digital Desk 3 25 Feb, 2026 | 04:06 PM இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு (101) இன்று மதியம் காலமானார். இன்று மதியம் 1.55 மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக சென்னை ராஜிவ் காந்தி அரச மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நீண்டகாலமாக அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வந்த நல்லகண்ணு, இந்திய இடதுசாரி அரசியலில் முக்கியமான குரலாக விளங்கியவர். தொழிலாளர் உரிமைகள், விவசாயிகள் பிரச்சினைகள் மற்றும் சமூக நீதி தொடர்பான பல்வேறு போராட்டங்களில் அவர் முன்னணியில் செயல்பட்டுள்ளார். அவரது மறைவு செய்தி அரசியல் வட்டாரங்களிலும், சமூக செயற்பாட்டாளர்களிடையிலும் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நல்லகண்ணுவின் அரசியல் பயணம் பல தசாப்தங்களை கடந்தது. நேர்மையான அரசியல் நடைமுறை, எளிமையான வாழ்க்கை முறை மற்றும் மக்கள் நலக் கண்ணோட்டம் ஆகியவற்றின் மூலம் அவர் பரவலாக மதிப்பிற்குரிய தலைவராக விளங்கினார். அவரது இறுதிச்சடங்கு தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/239561
-
ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்துவதற்கான ஐ.நா சபை தீர்மானத்துக்கு 107 நாடுகள் ஆதரவு
உக்ரைன் அமைதித் தீர்மானம்: ஐ.நா வாக்கெடுப்பைப் புறக்கணித்த இலங்கை! Feb 25, 2026 - 07:30 AM ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ரஷ்ய - உக்ரைன் போர் தொடர்பில் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துள்ளன. "உக்ரைனில் நிலையான அமைதிக்கான ஆதரவு" என்ற பெயரிலான இந்தத் தீர்மானம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்புக்கு நான்கு ஆண்டுகள் நிறைவடையும் தருணத்தில் முன்வைக்கப்பட்டிருந்தது. 193 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில், 107 நாடுகள் ஆதரவாகவும், 12 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், 51 நாடுகள் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நிலையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை, இந்தியா ஆகியவற்றுக்கு மேலதிகமாக பஹ்ரைன், பங்களாதேஷ், பிரேசில், சீனா, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளும் வாக்கெடுப்பைப் புறக்கணித்த நாடுகளுள் அடங்குகின்றன. இந்தத் தீர்மானத்தில், சர்வதேச சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைய நீதியான, முழுமையான மற்றும் நிலையான அமைதியை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், போருடன் தொடர்புடைய அனைத்துப் போர்க் கைதிகளையும் முழுமையாகப் பரிமாற்றம் செய்தல், சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுவித்தல் ஆகியன ஒரு முக்கியமான படியாக இந்தத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட எல்லைகள் உட்பட உக்ரைனின் சுதந்திரம், இறையாண்மை மற்றும் ஆட்புல ஒருமைப்பாடு ஆகியவற்றிற்கான வலுவான அர்ப்பணிப்பும் இதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmm1dw0z90019356p6o2v3azf
-
கறையான் புற்று
தன் சொந்த சொத்தை, நேரத்தை, புகழை போராட்டத்துக்கு பிரதிபலன் பாராமல் கொடுத்தவர் டாக்டர் சத்யமூர்த்த்தி. அவர், நீங்கள் உட்பட இப்படி பலர் வெளிநாட்டில் செய்தவேலைகள் போற்றப்பட வேண்டியன, எதிர்கால சந்ததிக்கு எடுத்து சொல்லபட வேண்டியன. அந்த வகையில் இந்த பகிர்வுக்கு நன்றி. நான் கெளரவ பட்டங்களை இனி பாவிக்க கூடாது என நினைப்பதன் முதன்மை காரணம் - அதை பெறும் தகுதி எவருக்கும் இல்லை என்பதல்ல, மாறாக அதை கொடுக்கும் தகுதி எவருக்கும் இல்லை என்பதே. போராட்டமும், இயக்கமும் வேரோடும், வேரடி மண்ணோடும் அழிக்கப்பட்டதன் பின் விழைவுகளில் இதுவும் ஒன்று.
-
மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
ஆகட்டும் பார்க்கலாம் ஆட்டத்தின் முடிவிலே😂 நீங்கள் கொலிடே ல வந்து தங்கினவர். வீடு என்ர பரம்பரை வீடு😂 அப்ப நான் டீ ஆர் 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
வாற சனிக்கிழமை.. இவரை கறி வைக்க வேணும். பிடிச்சு கட்டி வையுங்கோ. 😂
-
இரகுவரனும் இரவிக்கை நாடாவும் .
- மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
சே சே அதெல்லாம் உறுதியாய் சொல்ல முடியாது .......நாமிருவர் அங்கேதான் இருக்கிறோம் . ....... ஏற்கனவே அந்த வீட்டில் வாழ்ந்த அனுபவம் நமக்கு உண்டு என்பதை நீங்கள் கவனத்தில் கொள்வது நன்று . .....! 😂 அது இருவரையும் நேரில் பார்த்தால்தான் சொல்ல முடியும் . .......முடியை சிலுப்புபவர் டீ .ஆர் . .......... அதை ஹங்கரில் மாட்டுபவர் கமல் . .......! 😂- கறையான் புற்று
எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டிருக்கின்றார்கள் ....... அவர்களை வணங்குவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் . .......! தகவல்களுக்கு நன்றி கவி . அருணாசலம் அவர்களே .......! - மிச்ச சொச்சம் - ஒரு நிமிடக் கதை
Important Information
By using this site, you agree to our Terms of Use.