All Activity
- Past hour
-
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம்
இன்றைய நாஜிகளின் சர்வதேச காடைத்தனம் Veeragathy Thanabalasingham on March 10, 2026 Photo, REUTERS மத்திய கிழக்கில் ஈரானுக்கு எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் நடத்திவரும் போர் மத்திய கிழக்கைச் சூழ்ந்துகொண்டிருப்பது மாத்திரமல்ல, இந்து சமுத்திரப் பிராந்தியத்துக்கும் பரவும் ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவின் விசாகபட்டினத்தில் சர்வதேச கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற பின்னர் நாடு திரும்பிக்கொண்டிருந்த ஈரானிய போர்க்கப்பல் ஒன்று கடந்த வாரம் மத்திய கிழக்கில் இருந்து 2000 மைல்கள் தொலைவில் இந்து சமுத்திரத்தில் இலங்கையின் தென்கரையோரத்தில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால் அமெரிக்க நீர்மூழ்கியின் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு ஈரானியக் கப்பலை இலங்கை கடற்படை மனிதாபிமான அடிப்படையில் திருகோணமலை துறைமுகத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது. அண்மைய தசாப்தங்களில் வெள்ளை மாளிகையில் பதவியில் இருந்த ஜனாதிபதிகளில் படுமோசமான போர்வெறியராக விளங்கும் டொனால்ட் ட்ரம்பும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் இனப்படுகொலைச் சந்தேகநபராக அறிவிக்கப்பட்ட இஸ்ரேலிய பிரதமர் நெதான்யாகுவும் ஈரானுக்கு எதிராக விரைவாகப் போரைத் தொடங்கியிருக்கலாம். ஆனால், அந்தப் போருக்கு விரைவான முடிவு கிட்டப்போவதில்லை. போர் தொடங்கிய முதல்நாளன்றே ஈரானின் அதியுயர் ஆன்மீகத் தலைவர் அயத்தொல்லா அலி காமெனி குண்டுவீச்சில் கொல்லப்பட்டது குறித்து கொண்டாடிக் கொண்டிருக்கும் ட்ரம்ப் ஈரானின் அடுத்த ஆன்மீகத் தலைவரைத் தெரிவு செய்வதில் தன்னை ஈடுபடுத்த வேண்டும் என்று அறிவித்திருக்கிறார். புதிய ஆன்மீகத் தலைவராக கொலையுண்ட தலைவரின் மகன் மொஜ்ராபா காமெனி தெரிவாவதை அனுமதிக்க முடியாது என்பதே ட்ரம்பின் நிலைப்பாடாக இருக்கிறது. ஈரானில் அமையக்கூடிய அடுத்த அரசாங்கம் தனது பொம்மையாக இருப்பதை உறுதி செய்வதே அவரது நோக்கம். ஜனவரியில் வெனிசூலா ஜனாதிபதி நிக்கலஸ் மதுரோவை அமெரிக்கப் படைகள் நியூயோர்க்கிற்கு கடத்திச் சென்றதைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட துணை ஜனாதிபதி டெல்சி றொட்ரிகஸைப் போன்று வாஷிங்டனின் விருப்பங்களை நிறைவேற்றக்கூடிய ஒருவரை ஈரானில் பதவியில் அமர்த்துவதே ட்ரம்பின் திட்டம். அயத்தொல்லா காமெனியின் கொள்கைகளைப் பின்பற்றும் புதிய ஈரானியத் தலைவரை தன்னால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் அறிவித்திருக்கிறார். ஆனால், அத்தகைய ஒரு கையாளை இன்றைய ஈரானிய அரசாங்கத் தலைவர்கள் மத்தியில் கண்டுபிடிப்பது சாத்தியமில்லை என்றே தோன்றுகிறது. அயத்தொல்லா காமெனியின் மறைவையடுத்து ஈரானிய அரசு நிலை குலைந்து விடும் என்று எதிர்பார்த்த அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் இதுவரையில் ஏமாற்றமே கிடைத்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுவீச்சுக்களை நடத்தி ஈரானில் அழிவுகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் ட்ரம்ப் அதேவேளை, அரசாங்கத்தைத் தூக்கியெறியுமாறு அந்த நாட்டு மக்களை கேட்கிறார். பாதுகாப்பு அமைச்சர் மற்றும் படைத்தளபதிகள் பலர் கொல்லப்பட்ட போதிலும் ஈரான், இஸ்ரேல் மீதும் அயல் அரபு நாடுகளில் உள்ள அமெரிக்கப் படைத் தளங்கள், சொத்துக்கள் மற்றும் தூதரகங்கள் மீது தொடர்ச்சியாக ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆசியாவுக்கான வர்த்தகம் உட்பட உலகின் 20 சதவீதமான எண்ணெய் விநியோகத்துக்கு முக்கியமானதாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடிவிட்டது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு சில நாடுகள் மத்தியஸ்த முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஸ்கியான் கடந்த வெள்ளிக்கிழமை கூறிய அதேவேளை, ட்ரம்ப் ஈரான் நிபந்தனையற்ற முறையில் சரணடைய வேண்டும் என்று கூறினார். நிபந்தனையற்ற சரணாகதியைத் தவிர, ஈரானுடன் வேறு எந்த உடன்பாட்டுக்கும் இடமில்லை என்பது அவரது நிலைப்பாடு. பாரிய தாக்குதல்களை நடத்துவதற்கு ஈரான் தீட்டிக்கொண்டிருந்த திட்டத்தை முறியடிப்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே தாக்குதல்களை தொடங்கியதாகக் கூறும் அமெரிக்காவும் இஸ்ரேலும் அவற்றின் குற்றச்சாட்டை நிரூபிக்க எந்தவொரு சான்றையும் உலகின் முன்வைக்கவில்லை. கடந்த வருடம் ஜூனில் நடத்திய குண்டுவீச்சுத் தாக்குதல்களில் ஈரானின் சகல அணுவசதிக் கட்டமைப்புக்களும் நிர்மூலம் செய்யப்பட்டு விட்டதாகவும் அதற்குப் பிறகு ஈரான் எந்த அணுத் திட்டத்தையும் கொண்டிருக்க முடியாது என்று கூறிய ட்ரம்ப், ஈரான் அணுவாயுதங்களை தயாரிப்பதை தடுக்கவே தாக்குதல்களை மீண்டும் ஆரம்பிக்க வேண்டியிருந்ததாக குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் சாசனத்தின் பிரகாரம் எந்தவொரு நாடும் அதற்கெதிராக உடனடியாக மேற்கொள்ளப்படக்கூடிய தாக்குதலுக்கு எதிராக தற்காப்புக்குப் படைபலத்தைப் பயன்படுத்துவது சட்டபூர்வமானது. அல்லாவிட்டால் பாதுகாப்புச் சபையின் அங்கீகாரத்துடன் மாத்திரமே தாக்குதலை நடத்த முடியும். அதேவேளை, அமெரிக்க ஜனாதிபதி போரைப் பிரகடனம் செய்வதற்கு காங்கிரஸின் அனுமதியைப் பெறவேண்டும். இந்த நிபந்தனைகளில் எந்தவொன்றையும் ட்ரம்ப் நிறைவேற்றவில்லை. ட்ரம்பின் போர் ஈரானை அழித்துக் கொண்டிருப்பது மாத்திரமல்ல இன்றைய பிரச்சினை. உலகின் உறுதிப்பாட்டுக்கு ஆதாரமாக இருக்கும் சட்ட முறைமைகள் சகலதையும் அவர் பலவீனப்படுத்திக் கொண்டிருக்கிறார். வெனிசூலாவின் இறைமையை மீறி மதுரோவை கடத்திச் சென்றது குறித்து கண்டனங்கள் கிளம்பியபோது சர்வதேச சட்டங்களைப் பற்றி தனக்கு கவலையில்லை என்றும் இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட உலக ஒழுங்கு (ஐக்கிய நாடுகள்) அமெரிக்காவுக்கு அநாவசியமான சுமையாக இருக்கிறது என்றும் அவர் கூறியது கவனிக்கத்தக்கது. முன்னெச்சரிக்கையாக படைபலத்தைப் பயன்படுத்துவது என்பது வழமையானதாக்கப்பட்டுவிட்டால், எந்தவொரு அரசும் தனக்கு நீண்டகால நோக்கில் அச்சுறுத்தலாக அமையக் கூடியது என்று சந்தேகிக்கும் எந்தவொரு நாட்டின் மீதும் விரும்பிய நேரத்தில் படை பலத்தைப் பிரயோகிக்கக்கூடும். இது பேராபத்தான ஆயுதங்கள் புழக்கத்தில் இருக்கின்ற இன்றைய யுகத்தில் பயங்கரமான முன்னுதாரணமாகிவிடும். சட்டவிரோதமான போர்கள் சர்வசாதாரணமாகிவிடும். தற்போதைய உலகை பல்துருவமயப்பட்டது என்ற ஒரு மாயையில் நாம் வாழ்ந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது. அதாவது, பல நாடுகள் பொருளாதார மற்றும் இராணுவ ரீதியில் ஒப்பீட்டளவில் பலம்பொருந்தியவையாக வளர்ந்துவிட்டதால் அமெரிக்கா போன்ற தனியொரு வல்லரசின் மேலாதிக்கத்தின் கீழானதாக உலக ஒழுங்கு இனிமேல் இருக்காது என்று நம்பினோம். எவ்வாறு, எந்த நேரத்தில் நடந்துகொள்வார் என்று முன்கூட்டியே கூறமுடியாத ட்ரம்பின் தலைமையின் கீழ் கடந்த ஒரு வருடத்துக்கும் அதிகமான காலமாக சர்வதேச சட்டங்களை மதிக்காமல் அமெரிக்கா செய்துவருகின்ற அடாவடித்தனங்களுக்கு எதிராக எதையும் செய்ய முடியாதவையாக உலக நாடுகள் பரிதாபகரமான ஒரு நிலையில் இருக்கின்றன. இரு மாதகால இடைவெளியில் அமெரிக்கா சீனாவின் நெருங்கிய இரு நேசநாடுகளில் ஆக்கிரமிப்பைச் செய்திருக்கிறது. வெனிசூலாவில் இருந்து மதுரோ கடத்திச் செல்லப்பட்டதையும் கடந்தவாரம் குண்டு வீச்சுக்களில் ஈரானிய ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதையும் சர்வதேச சட்டமீறல் என்று கண்டனம் செய்யச் சீனாவினால் முடிந்ததே தவிர, வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியவில்லை. ரஷ்யாவின் நிலையும் அதுவே. இரு நாடுகளும் ஈரானுக்கு ஆதரவாக இராணுவ ரீதியான தலையீடுகளைச் செய்ய முடியாதவையாக இருக்கின்றன. ஒரு வாரம் கடந்துவிட்ட நிலையிலும் கூட, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஈரானுக்கு எதிரான அமெரிக்க — இஸ்ரேலிய போரை கண்டனம் செய்ய முன்வரவில்லை. அயத்தொல்லா காமெனியின் மறைவுக்கு காலந்தாழ்த்தியே இந்தியா அனுதாபம் தெரிவித்திருக்கிறது. புதுடில்லியில் உள்ள ஈரானியத் தூதரகத்துக்குச் சென்ற இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அனுதாபப் புத்தகத்தில் கைச்சாத்திட்டார். ஈரானியத் தூதரகங்களுக்குச் சென்று அனுதாபப் புத்தகங்களில் கைச்சாத்திட வேண்டாம் என்று உலக நாடுகள் பலவற்றின் தலைநகரங்களில் உள்ள இந்தியத் தூதுவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கின்ற அளவுக்கு அமெரிக்காவைப் புண்படுத்தக்கூடாது என்பதில் மோடி அரசாங்கம் கடுமையான கரிசனையுடன் இருக்கிறது. இலங்கையின் கரையோரத்துக்கு அப்பால் ஈரானியப் போர்க்கப்பல் அமெரிக்க நீர்மூழ்கியினால் மூழ்கடிக்கப்பட்ட சம்பவம் இந்து சமுத்திரத்தில் செல்வாக்கைச் செலுத்துவதில் இந்தியாவுக்கு இருக்கும் வல்லமை குறித்து கேள்விகளை எழுப்பியிருக்கிறது. கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்ற ஈரானியப் போர்க்கப்பல் விசாகபட்டினத்தில் இருந்து புறப்பட்ட நேரத்தில் இருந்து அதை அமெரிக்க நீர்மூழ்கி கண்காணித்துக் கொண்டிருந்தது என்பது தெளிவானது. தனது செல்வாக்குப் பிராந்தியம் என்று இந்தியா உரிமை கோருகின்ற – கிரமமாக இந்தியக் கடற்படை ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற கடற்பிராந்தியத்தில் வெளிநாட்டு நீர்மூழ்கி ஒன்றின் பிரசன்னத்தை கண்டுபிடிக்கவும் தனது அழைப்பின் பேரில் பயிற்சிக்கு வந்த நேசநாடொன்றின் போர்க்கப்பலின் பாதுகாப்பை உறுதி செய்யவும் இந்தியாவினால் இயலவில்லை என்பது கோடிப்புறத்தில் இந்தியாவின் அதிகாரம் தொடர்பில் அசௌகரியமான கேள்விகளைக் கிளப்புகிறது. இது இவ்வாறிருக்க, கிறீன்லாந்து தீவை அமெரிக்காவுக்கு சொந்தமாக்கப் போவதாகவும் அதற்காக தேவையானால் படைபலத்தைப் பிரயோகிக்கவும் தயங்கப்போவதில்லை என்றும் ட்ரம்ப் அச்சுறுத்தியபோது அவர் சர்வதேச சட்டங்களை அவமதிக்கிறார் என்று குற்றஞ்சாட்டிய ஐரோப்பிய நாடுகள் பலவற்றின் தலைவர்கள் ஈரான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைக் கண்டனம் செய்யவோ அல்லது ஆன்மீகத் தலைவர் கொல்லப்பட்டதற்கு அனுதாபம் தெரிவிக்கவோ முன்வரவில்லை. இன்றைய ‘நாஜி’களான ட்ரம்பும் நெதான்யாகுவும் செய்யும் சர்வதேச காடைத்தனத்துக்கு எதிராக எதையும் செய்ய முடியாமல் உலக நாடுகள் பரிதாபகரமாக கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கின்றன. மத்திய கிழக்கின் புவிசார் அரசியல் முற்றுமுழுதாக இஸ்ரேலின் நலன்களினால் வடிவமைக்கப்படக்கூடிய சூழ்நிலையை தற்போதைய போர் ஏற்படுத்தக்கூடிய பேராபத்து இருக்கிறது. அதேவேளை, ட்ரம்ப் ஏற்கெனவே அச்சுறுத்திவருவதைப் போன்று வளங்களைச் சூறையாடுவதற்காக பல நாடுகளில் இராணுவத் தலையீடுகளைச் செய்வதைத் தடுக்க முடியாமலும் போகலாம். உலக நாடுகள் ட்ரம்பின் போர்வெறிக்கு எதிராக அணிதிரள வேண்டிய நேரம் வந்துவிட்டது. தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும் மனித குலத்தை அழிவை நோக்கி நகர்த்திச் செல்லும். வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/12620
-
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை
யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை adminMarch 10, 2026 சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது. அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது. விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட 30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில், இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர். காவல்துறையினா் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றும் போது எடுக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நேரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/230304/
-
புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா
புத்துயிர் பெறவுள்ள கிட்டு பூங்கா adminMarch 10, 2026 யாழ்ப்பாணம் கிட்டு பூங்காவை புனரமைப்பு செய்யும் முகமாக , பூங்காவை துப்புரவு செய்யும் பணிகள் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முன்னெடுக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவத் தளபதியான கேணல் கிட்டு என அழைக்கப்படும் சதாசிவம்பிள்ளை கிருஷ்ணகுமார் உள்ளிட்ட புலிகளின் 10 போராளிகள் பயணித்த கப்பலை சர்வதேச கடற்பரப்பினுள் இந்திய கடற்படையினர் வழிமறித்து சரணடைய கோரிய நிலையில் ,16.01.1993 அன்று கப்பலுடன் வெடித்து சிதறி வீரகாவியமானார்கள். இந்நிலையில் கேணல் கிட்டுவின் நினைவாக யாழ்பாணத்தில் முத்திரை சந்தி பகுதியில் 1994ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் ” கிட்டு பூங்கா” திறந்து வைக்கப்பட்டது. யுத்தம் தீவிரமடைந்து 1995 ஒக்டோபர் 30ஆம் திகதி மக்கள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் , கிட்டு பூங்கா முற்றாக அழிக்கப்பட்டது. அதனை அடுத்து “கிட்டு பூங்கா” புனரமைக்கப்பட்ட வேண்டும் என பல்வேறு தரப்பினராலும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வந்த போதிலும் , 2010ஆம் ஆண்டு கால பகுதியில் கிட்டு பூங்காவை , சங்கிலியன் பூங்கா என பெயர் மாற்றம் செய்து புனரமைக்க முயற்சிகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் பின்னர் அவை முழுமை பெறாது கைவிடப்பட்டது. பின்னர் பூங்கா புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படாத போதிலும் , பூங்கா அமைந்திருந்த பகுதியில் அரசியல் பிரச்சார கூட்டங்கள் , கண்காட்சிகள், கூட்டங்கள் என்பன நடைபெற்று வந்தன. இந்நிலையில் தற்போது கிட்டு பூங்காவை புனரமைக்கும் பணிகளை மாநகர சபை முன்னெடுக்கவுள்ள நிலையில் , முதல்கட்டமாக பூங்காவை சுற்றி சுற்று மதில் கட்டி , அதனை பாதுகாப்பும் நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. அதனை முன்னிட்டே யாழ். மாநகர சபை உறுப்பினர்கள் , ஆணையாளர் , உள்ளிட்ட மாநகர சபை அதிகாரிகள் கலந்து கொண்டு துப்பரவு பணிகளை முன்னெடுத்தனர். https://globaltamilnews.net/2026/230307/
-
ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படும் – ஐநா கடும் எச்சரிக்கை
ஹோமுஸ் நீரிணை மூடல்: சர்வதேச ரீதியில் உணவு நெருக்கடி மற்றும் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு ஏற்படும் – ஐநா கடும் எச்சரிக்கை 11 Mar, 2026 | 09:22 AM மத்திய கிழக்கு போரினால் ஹோமுஸ் நீரிணை மூடப்பட்டுள்ளமை, சர்வதேச ரீதியில் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்தி, மக்களின் வாழ்க்கைச் செலவை பாரியளவில் அதிகரிக்கும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் அபிவிருத்தி சபை (UNCTAD) எச்சரிக்கை விடுத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (10) வெளியிடப்பட்ட புதிய ஆய்வறிக்கையில், இந்தப் பாதிப்பு குறிப்பாக ஆசிய நாடுகளையும் வறிய மக்களையும் மிகக் கடுமையாகத் தாக்கும் எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி போர் ஆரம்பித்தது முதல், ஹோமுஸ் நீரிணை ஊடாகப் பயணிக்கும் கப்பல்களின் எண்ணிக்கை 97 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. சர்வதேச ரீதியில் மசகு எண்ணெயில் 38 சதவீதமும், எரிவாயுவில் 29 சதவீதமும், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவில் 19 சதவீதமும் இந்த நீரிணை ஊடாகவே கொண்டு செல்லப்படுகின்றன. தற்போது இது தடைப்பட்டுள்ளதால் எரிசக்தி விலைகள் (பெற்றோல், டீசல், எரிவாயு) அதிரடியாக அதிகரித்துள்ளன. சர்வதேச ரீதியில் கப்பல் மூலம் கொண்டு செல்லப்படும் உரங்களில் மூன்றில் ஒரு பங்கு (33%) இந்த நீரிணை ஊடாகவே விநியோகிக்கப்படுகிறது. இது முடங்கியுள்ளதால் உலகளாவிய உணவு உற்பத்தி பாதிக்கப்பட்டு, உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஹோமுஸ் நீரிணை ஊடாக அனுப்பப்படும் மொத்தப் பொருட்களில் 84 சதவீதம் ஆசிய நாடுகளையே சென்றடைகின்றன. இதனால் இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட ஆசிய நாடுகள் எரிபொருள் மற்றும் உணவுப் பொருட்களுக்காகப் பாரிய விலை உயர்வைச் சந்திக்க நேரிடும் என ஐக்கிய நாடுகளின் வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி குறிப்பிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/240685
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
18 நாள்தான் இருக்குது ...எப்ப கேள்வி வாறது ..நாங்கள் கொப்பியடிச்சு போட்டிக்கு போறது ...முடியல
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
அந்த திரியில் நிங்கள் கூறிய கருத்து👇 அதற்கு எனது அந்த திரியில்👇 IAEA ஈரான் அணுகுண்டை தயாரிப்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என கூறிய செய்தியினையும் அந்த திரியிலேயே இணைத்துள்ளேன் https://www.middleeastmonitor.com/20260304-iaea-says-no-evidence-iran-is-building-a-nuclear-bomb/ IAEA துறைசார் வல்லுனர்களின் கருத்தினடிப்படையில் அணுகுண்டு தயாரிக்காவில்லை என கூறும் நிலையில் நீங்கள் 60% செறிவூட்டப்பட்ட யுரேனியம் அணுகுண்டிற்கு மட்டும்தான் பயன்படுத்தப்படுவது (90% செறிவூட்டலின் பின்னரே அணுகுண்டு தயாரிப்பினை மேற்கொள்ளலாம் என கூறுகிறார்கள், நான் துறைசார் நிபுணன் இல்லை) எனும் உங்கள் கருத்திற்கான பதிவினை நீங்கள் இப்போதும் எவ்வாறு புரிந்து கொண்டுள்ளீர்களோ தெரியவில்லை. நான் வெளிநாடு வந்த காலத்தில் என்னை பார்க்க வந்த ஒருவர் என்னை காரில் அழைத்து சென்றார், நாங்கள் மொத்தம் 5 பேர் அந்த காரில் பயணித்தோம், நகரத்திற்கு செல்லும் ஒரு குறுகலான இரு வழிப்பாதையில் போக்குவரத்து நெரிசல் மிகுந்த மாலை நேரமாக நினைவுள்ளது. காரினை ஒரு "U" வடிவ திருப்பம் ஒன்றினை அந்த நெரிசலில் மிகவும் சிரமப்பட்டு எடுத்தார், அது இலகுவாக இருக்கவில்லை, துரதிர்ஸ்டவசமாக எங்கிருந்தோ திடீரென காவல் துறை வாகனம் (சாதாரண கார் போல) வந்து எமக்கருகில் நிறுத்தி விசாரணையில் ஈடுபட்டார், காரை ஓட்டினவர் பயிலுனர் அனுமதி அட்டை மட்டுமே வைத்திருந்தார் (காரில் வெளிப்புறத்தில் பயிலுனர் எனும் இலச்சினை வைத்திருந்தாரா என்பது நினைவில்லை). காவல் துறையில் இருந்த பெண்மணியிடம் காரை ஓட்டினவர் நான் நீண்டகாலமாக கார் ஓட்டுகிறேன் என அவரது பேச்சிற்கு எதிர் பேச்சாக பேசிக்கொண்டிருந்தார், உள்ளே இருந்த எனக்கு இவர் எதற்காக அந்தப்பெண்மணியிடம் வம்பிழுக்கிறார் என திகைப்பாக இருந்தது, காரை ஓட்டியவரரது சாரதி அனுமதி பத்திரத்தினை வாங்கிக்கொண்டு காருக்கு வந்து சாரதி ஆசனத்திற்கு அருகில் அமர்ந்திருந்தவரிடம் உனக்கு சாரதி முழு அனுமதி பத்திரம் உள்ளதா? என கேட்டார், அதற்கு அவர் இல்லை என கூறினார். பயிலுனர் சாரதி அனுமதிப்பத்திரத்துடன் சரியான மேற்பார்வையின்றி வாகனம் செலுத்தியமை, போக்குவரத்து நெரிசல் உண்டாக்கியமை என இரு அபராதங்களை விதித்து விட்டு சென்றார்கள் (ஆனால் தொடர்ந்து பயணிக்க அனுமதித்தார்கள்?) நான் முதலில் இவர் வம்பிழுத்ததாக நினைத்தேன் பின்னர் அவரரது ஆங்கில புலமை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலே இருந்ததால் அவர் தனது வாகன செலுத்தும் திறமையின்மையினாலே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல் துறை நினைத்திருக்க கூடும் என நினைத்து அவ்வாறு கூறினாரோ தெரியவில்லை என நினைக்கிறேன். IAEA தெரியாத விடயம் ஜஸ்ரினிற்கு தெரிகிறது என்பதால் எனக்கு முரண்பாடெதுவும் இல்லை (இப்படியும் இருக்குமோ என்பதே எனது அபிப்பிராயம்).
-
விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது!
அதுசரி பிரியன் சார் ....பில்லியன் , மில்லியன் , லட்சக் கணக்கா உந்த சாமானுகளை பிடிக்கினம் ...எங்கைய்யவது நாட்டுக்கு இரகசியமா வித்து ...கடனில்லாமல் இருக்கலாமே
-
மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல்
மின்சார சபை ஊழியர்களை உடனடியாக பணிக்குத் திரும்புமாறு அறிவுறுத்தல் 11 Mar, 2026 | 10:27 AM நாட்டின் தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பைப் பராமரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். அவ்வாறு பணிக்கு வரத் தவறினால் அது கடும் ஒழுக்காற்று குற்றமாகக் கருதப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேஷனல் டிரான்ஸ்மிஷன் நெட்வொர்க் சர்வீஸ் புரொவைடர் (பிரைவேட்) நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி என். எஸ். வெத்தசிங்க வெளியிட்ட அறிவிப்பில், நாட்டின் மின்சார பரிமாற்ற அமைப்பின் தொடர்ச்சியான செயல்பாட்டை எந்தவித தடையும் இன்றி பராமரிப்பது அவசியம் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டின் 36 ஆம் எண் இலங்கை மின்சாரச் சட்டத்தின் (திருத்தப்பட்டபடி) கீழ், இலங்கை மின்சார சபையின் முக்கிய செயல்பாடுகள் 2026 மார்ச் 9 முதல் அமுலுக்கு வரும் வகையில் நான்கு வாரிசு நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Beaches & Islands அறிக்கையின்படி, பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி அன்று வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி எண் 2477/47 இன் கீழ் மின்சாரம் தொடர்பான அனைத்து சேவைகளும் ஏற்கனவே அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆரம்ப இடமாற்றத் திட்டத்தின் அடிப்படையில், தற்போதுள்ள மின்சார சபையின் அனைத்து ஊழியர்களும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் என தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார். புதிய நிறுவனங்களின் கீழ் ஊழியர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்குவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வரும் நிலையில், தடையற்ற மின்சார விநியோகத்தை உறுதி செய்வதற்காக ஊழியர்கள் வழக்கம்போல தங்களது கடமைகளை தொடர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அத்தியாவசிய சேவை விதிமுறைகளை மீறி சில ஊழியர்கள் பணிக்கு வரத் தவறியதுடன், தொழிற்சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளதாக அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “அத்தகைய செயல்பாடுகள் கடும் குற்றமாகக் கருதப்படும். அதற்கேற்ப ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்,” என அந்த அறிவிப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, தேசிய மின்சார பரிமாற்ற அமைப்பின் தடையற்ற செயல்பாட்டை உறுதி செய்வதற்காக அனைத்து ஊழியர்களும் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/240688
- Today
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
வீட்டில் குழந்தைகள் சிறியவர்களாக இருக்கும் போது கிறிஸ்மஸ் தினத்திற்கு முதல் நாள் இரவில் வந்து அவர்கள் வைக்கும் பாலையும், பிஸ்கட்டினையும் குடித்து, உண்டுவிட்டு அவர்களுக்கு சான்டா பரிசில்கள் வைத்துவிட்டு போகும் நடைமுறையினை நம்பியிருந்த காலகட்டத்தில்; அது பெற்றோரே அதனை செய்கிறார்கள் என்ற உண்மையினை சொன்னபோது குழந்தைகள் அதனை விரும்பவில்லை, குறிப்பாக எனது மகன் நான் பொய் சொல்வதாக கூறினார், நான் செய்த அந்த செயல் சிறிய குழந்தைகளை எவ்வளவு மோசமாக பாதித்தது என உணர்ந்த போது கடினமான மன உணர்வு ஏற்பட்டது. சில நம்பிக்கைகளுக்கு அளவு கடந்த சக்தி உண்டு, அந்த விம்பம் உடைக்கப்படும்போது ஏற்படும் ஏமாற்றம், மறுதலிப்புகள் ஒரு தற்காலிக மன ஆறுதலை வழங்குகிறது, ஆனால் அவர்கள் எப்படியோ எது உண்மை என தாங்களாகவே ஒரு கட்டத்தில் உணர்ந்து விடுவார்கள்.
-
விமான நிலையத்தில் போதைப்பொருள் மீட்பு: கனடா தம்பதியினர் கைது!
இதுவே அமெரிக்கா என்றால் எங்கிருந்து பெற்றார்கள் யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் என முழு விபரமும் அறிந்த பின்பே விடயம் வெளியே வந்திருக்கும். இப்போது வெளியே உள்ளவர்கள் உசாராகி இருப்பார்கள்
-
வீதியோரம்.
வெயிட்டிங் மலர் 2.
-
சமூகப் பார்வை (பயம்)??¿
விசுகு இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாமே?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அமைதி,அமைதி,அமைதி.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மேற்கு சார்பு கட்டுரைகளும், செய்திகளும் சத்திய வாக்கியங்களா கோசான்?
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
கடவுள் என்பதை விட இயற்கை என்பதே சரியாக இருக்கும்.இயற்கையை வழிபடும் மக்கள் உலகில் ஏராளமான இனங்கள், தனி நபர்கள் என பல பிரிவுகள் உள்ளன.இயற்கை என் கடவுள். அதை மீறி யாரும் எதுவும் செய்ய முடியாது. நான் தமிழன். நான் சைவன். இங்கு நான் இந்து என்ற அசட்டு எடுபிடிகளை ஏற்பதில்லை.பார்ப்பனியன் கொண்டு வந்த நடைமுறைகளை நீங்களும் அரசுகளும் ஏற்றுக்கொண்டால் அது மூட நம்பிக்கை இல்லை என்பதாகி விடாது. நம்பிக்கை இல்லாதவன் ஏன் நம்பிக்கை இல்லாத விடயங்களை செய்ய வேண்டும்? பயமா செல்லம்😎 இதென்ன புதினமான பித்தலாட்டமாய் கிடக்கு!. சடங்கு........ நம்பிக்கை????? ஏதாவது ஒரு முடிவுக்கு வாங்கப்பா. 😂🤣😋 சடங்கு எங்கிருந்து உருவாகியது?🙃
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
யாரை நினைத்து வெறும் உரலை இடிக்கின்றீர்கள் என தெரியவில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது சம்பந்தமாக நான் ஒரு விசாரணை கொமிசன் கோரி இருப்பேன்…. ஆனால் பும்ராவை தேர்ந்த எனக்கு புள்ளிகள் கிட்டி உள்ளதால்….. அங்கால திரும்பி பராக்கு பார்கிறேன்😂
- Yesterday
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
கிறிஸ்தவர், சன்னி, சியாக்கள், யூதர் என சேர்ந்து வாழ்ந்த, கிழக்கின் பாரிஸ் என போற்றப்பட்ட பெய்ரூட்டும், லெபனானும் 1979 இல் முல்லாக்கள் ஈரானில் ஆட்சிக்கு வந்ததுடன் நாசமானது. ஈரான் யாசிர் அரபாத்துக்கு எதிராக ஹமாசை கொம்பு சீவி, அவரின் பட்டா இயக்கத்தை காசாவை விட்டு கொலைகள் மூலம் அடித்து விரட்டியது. பலஸ்தீன பிரச்சனை தீரக்கூடாது என்பதில் வலதுசாரி யூதர்கள் போல் அழுங்கு பிடியாக நிற்பவர்கள் ஈரானிய முல்லாக்கள். என்ன காரணம் ? தீர்ப்பு நாளில் என்ன நடக்கும் என குரான் சொன்னது போல் நடக்கும், நடக்க வேண்டும் என்ற அடிப்படை வாத நம்பிக்கை. இது வேற பிரச்ச்னை…. 8 க்கும் 5 க்கும் வித்தியாசம் தெரியாத நுனிப்புல் மேய்தல்+சதிக்கோட்பாட்டு மனநிலை+ அரைகுறை ஆங்கிலத்தினூடு விளங்கி கொள்ளமுனைதல்+வேற்று கிரக மொழியாளுமை எல்லாமும் சேர்ந்த ஒரு வித மாய உலகத்தில் வாழ்வதன் பிரதிபலன். And you translate, cut and paste what you want us to see 😂
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
எப்பொருள் யார்…யார் வாய் கேட்பினும், அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு (ரிது).
-
சமூகப் பார்வை (பயம்)??¿
மாதவிடாயை தடுக்க அல்லது பிற்போட ஊசி எடுப்பது மாத்திரை எடுப்பது பிள்ளைகளின் உடல்நலத்தை பாதிக்காதா?
-
சமூகப் பார்வை (பயம்)??¿
எமது சமுதாயம் சில உளநம்பிக்கைகள் அல்லது பயங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இவற்றில் இருந்து மீள்வதற்கு முயலாமல் ஒன்றின் தார்ப்பரியத்தை கேள்விக்குட்படுத்தாமல் அல்லது அதனால் ஏற்பட்டுக் கூடிய விளைவுகளை சீர்தூக்கிப் பார்க்காமல் அல்லது அதனையும் மீறிய சமுதாய பயம் காரணமாக பல தலைமுறைகளாக சிலவற்றை தலைமுழுகி விடாமல் தொடர வேண்டும் என்பதற்காகவே தாமும் வாழ்ந்து கொண்டிருப்பது மட்டுமல்லாமல் தமது அதிகாரத்தை பயன்படுத்திக்கூட தமது சந்ததியினரையும் அதனை பின்பற்றி நடக்க செய்து கொண்டு வருகிறது. அதிலும் பெண்பிள்ளைகள் சார்ந்து கேட்கவே தேவையில்லை. இதனடிப்படையில் எமது தமிழ் பெற்றோர்கள் தமது பெண்பிள்ளைகள் சார்ந்து இன்னமும் கொண்டிருக்கும் பயம் அல்லது சந்தேகம் அல்லது அடக்குமுறை சார்ந்த பதிவே இது. பெண் பிள்ளைகள் சார்ந்த மாதவிடாய் சுழற்சிக்காலம் 28 நாட்கள் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த கால சுழற்சியில் மாற்றங்கள் நிகழும் போது அதன் விளைவுகள் அவர்களது அன்றாட வாழ்வில், மனதளவில், உடல் நலத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவை. அவர்களது எதிர்காலம் சார்ந்த எத்தனிப்புக்களை நாசமாக்கக்கூடியது என்பதை பெற்றோர்கள் அறிந்துள்ள போதும் அதற்கான மருந்தான கருத்தடை மாத்திரைகளை எடுத்துக் கொள்ள எமது தமிழ் பெற்றோர்கள் மறுக்கின்றனர். 28 நாட்களில் ஒழுங்காக வரவழைக்ககூடிய மாத்திரைகளை உடலுறவுக்கான பாதுகாப்பு மாத்திரைகள் என்று புரிந்து கொண்டு அதனை திருமணமாகாத கன்னிப் பெண்கள் பாவிப்பது அப்பெண் பிள்ளைகளின் கன்னித்தன்மை சார்ந்ததாக அல்லது அவர்களை சந்தேகிப்பதாக அல்லது தாமே அவர்களுக்கு பிழையான வழியை திறந்து விடுவதாக பார்க்கப்படுகிறது. ஒரு சில பெற்றோர்களாவது இதை உணர இப்பதிவால் முடிந்தால்..... நன்றி.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
விக்கெட்டுகளின் எண்ணிக்கை சமமாக இருந்தாலும், economy, strike rate இல் பும்ரா முன்னணியில் நிற்பதால் பும்ராதான் சிறந்த பந்துவீச்சாளர். அத்துடன் பும்ரா எட்டு மட்ச்களிலும், வருண் ஒன்பது மட்சுகளிலும் விளையாடியிருந்தனர். குறைந்த மட்சுகளில் பும்ரா விளையாடி ஒரே எண்ணிக்கையான விக்கெட்டுகளை வீழ்த்தியதும் இன்னோர் காரணம்.
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
இதுதான் அந்த திரி! "You see what you want to see"
-
அண்டை நாடுகளிடம் பகிரங்க மன்னிப்பு கோரினார் ஈரானிய ஜனாதிபதி!
மத பயங்கரவாதத்தை sponsor பண்ணி உலகிற்கு பரப்பிய மோசமான நாடு ஈரான். ஹமாஸின் இஸ்லாமிய மத அடிப்படை வாதத்திற்கும் லெபனான் நாசமானதிற்கும் இதுவோ காரணம். முல்லாக்களின் கொடுங்கோல் மத ஆட்சி ஒழிந்து ஈரானிய மக்களும் மேற்குலகில் வாழ்கின்ற ஈரானியர்கள் தமிழர்கள் போன்று சுதந்திர வாழ்க்கையை வாழவேண்டும். ஈரானியர்கள் மகிழ்ச்சியை நேரிலே பார்க்கின்றோமே. புலம்பெயர் தேசத்தில் வசிக்கின்ற சில தமிழர்களுக்கு என்ன பிரச்சனையாம்
-
வீதியோரம்.
வீதியோரம் ( சாம்பலில் பூத்த மலர்கள் ) அந்தத் தார் வீதியில் மிக வேகமாய் வந்த ஜீப் வண்டி வீதியோரத்தில் இருந்த வாகன தரிப்பிட தார் பொட்டலில் அரை வட்டமடித்து நிக்கிறது. அதில் இருந்து ஒரு இளைஞனைத் தள்ளி விட்டுவிட்டு தொடர்ந்து ஒரு பெண்ணையும் இரண்டு பிள்ளைகளையும் சப்பாத்து காலால் உதைத்து தள்ளி விழுத்தி விட்டு நிக்காமல் வந்தவழியே செல்கின்றது.அப்போது அதிகாலை நான்கு மணி இருக்கும் கருக்கல் கலைந்து பறவைகளின் ஒலியோடு விடியல் தொடங்குகின்றது. அந்த இளைஞன் எழும்பத் திராணியின்றி வீதியில் கிடக்கிறான். பகல்பொழுதில் காய்ந்த தார் வீதியின் வெப்பம் அவனது வெற்றுடலுக்கு ஒத்தடம் கொடுப்பது போல் தேகத்தின் வலிகளைக் குறைக்கின்றது. அது அவனது உடம்புக்கு தேவையாய் இருப்பதால் அப்படியே கிடக்கிறான். சற்று தூரத்தில் அந்தப் பெண்ணும் சுயநினைவின்றிக் கிடக்கிறாள். தோசைக்கல்லில் இருந்து வராமல் அடம்பிடிக்கும் தோசை தோசைக் கரண்டியால் நிறைய குத்து வாங்கி உருண்டு பிரண்டு வந்து சட்டியில் விழுந்ததுபோல் கிடக்கிறாள் . கால்கள்வழியே ஒழுகிய ரத்தம் ஆடைகளில் சிந்தி உறைந்துபோய் இருக்கு. சிறுவர்களின் நிலைமையும் கவலைக்கிடமாய் இருக்கு. இருந்தும் அவர்கள் பசிமயக்கத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நிக்கின்றனர் . அப்போது தூரத்தே ஒரு வண்டி வருவதை அதன் வெளிச்சம் தெரிவிக்கின்றது.அது மிக நெருங்கி அவர்களின் அருகில் வந்து நிக்கின்றது. அது ஒரு பாரவூர்தி.அதிலிருந்து இறங்கிய சாரதியும் உதவியாளரும் கிட்ட வந்து இவர்களின் நிலமையைக் கண்டு நடந்திருக்கும் சம்பவத்தை ஒருவாறு ஊகித்துக் கொள்கிறார்கள்.பின் இருவரும் சேர்ந்து இவர்களைக் கரையோரமாய் தூக்கி வந்து பெரிய கல்லுகளின் அருகில் சாய்த்து இருத்திவிட்டு தண்ணீரால் முகத்தில் அடித்து முதலுதவிகள் செய்து அவர்களின் மயக்க நிலைமையைப் போக்கி விடுகின்றனர். அண்ணை இப்ப எங்களைக் கடந்துபோன ஜீப்பில் இருந்தவங்கள்தான் இந்த அநியாயத்தை செய்திட்டுப் போறாங்கள் போலக் கிடக்கு என்று கிளீனர் ரமேஷ் சொல்கிறான்.அதை சாரதி அண்ணாத்துரையும் ஆமோதித்தபடி இரண்டு பிள்ளைகளுக்கும் தங்களிடம் இருந்த சாப்பாட்டில் பாதியை பகிர்ந்து குடுத்துவிட்டு மீதியை அவனுக்கும் அவளுக்கும் பிரித்துத் தருகிறார்.அவள் சிறிது தண்ணீரைக் குடித்து ஒருவாய் உணவை சாப்பிடுகிறாள். அவன் அதுவும் சாப்பிடவில்லை. இப்ப இருக்கும் நாட்டு நிலைமையில் யாரையும் மட்டுக்கட்ட முடியவில்லை. இயக்கங்களா , இராணுவமா என்று தெரியாது. ஓமண்ணை அவர்கள் எல்லோரும் ஒரேமாதிரியான உடுப்புகள் போடுகினம் அப்படியே ஜீப்புகள், ட்ரக்குகளில் வருகினம். சரி விடு ரமேஷ் , விடியுது நேரத்துக்கு மார்கெட்டுக்கு போகாவிடில் மீன் நாறிடும்.இனி நிறைய வாகனங்கள் வந்து விடும் அவர்களும்கூட இவர்களுக்கு உதவிசெய்யலாம் என்று சொல்லி தம்மிடம் இருந்த சில உடுப்புகள் மற்றும் கையில் கொஞ்சம் பணம் எல்லாம் எடுத்து குடுத்துவிட்டு வரும்போது பார்க்கலாம் என்று சொல்லிப் போகிறார்கள். விடியலின் பனிப்புகை மூட்டத்தில் தூரத்தே ஒரு பௌத்த விகாரையின் விமானமும் கோபுரமும் தெரிகின்றன.......! மலர் .......1.🌻