All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@Ahasthiyan முதல்வர் நாற்காலியை மயிரிழையில் கைப்பற்றியுள்ளார்!5 ஆம் இடத்துக்கு எப்படி வந்தேன் என்று என்னால் நம்ப முடியாமல் இருக்கிறது. அவுஸ்தான் கழுத்தறுத்து விட்டது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- Today
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
(பதில் என்றாலும், எல்லோருக்குமான பதிவு.) எந்தவித ஆய்வும் இல்லாமல் உணர்ச்சியின் அடிப்படையில் (முஸ்லிம்கள் பற்றி) அடைந்த முடிவை தெட்டம்தெளிவாக வெளிப்டுத்தியதற்கு நன்றி,, வெட்டிய குழியிலே விழுந்து இருப்பது தெரியாது. இந்த இரான் / சொறி சிங்கள வியாபாரம உறவு, பொருளாதார வசதிக்காக. இரான் / சொறி சிங்கள தேயிலை - எண்ணை வியாபார உறவை பின் இருந்து வசதிப்படுத்தியதே US என்பதை கூட அறியாதவர்களை என்னவென்று சொல்வது? US சொறிசிங்களத்துக்கு -இரான் வர்த்தகத்தில் பொருளாதார தடை உள்ளது / இல்லாதது என்ற தெளிவற்ற வலயத்தை (grey zone) கூட நீக்கியது. இந்த சொறிசிங்களத்துக்கு -இரான் வர்த்தக உறவில் எந்தவித தத்துவ புரிவோ அல்லது பரிதாபமோ அல்லது கரிசனையோ இல்லை. அந்த நேரத்தில் தேவையால் ஏற்பட்ட வர்த்தக உறவு - சொறிசிங்களடம் பணப் பற்றாக்குறை, எண்ணெய் தேவை, பெரும் பகுதி தேயிலைக்கு - எண்ணெய் பண்டமாற்றும் , மற்ற பகுதி பண வர்த்தகமும். அனால் , இஸ்ரேல் - சொறி சிங்களம் இன் வகிபாகம் பற்றி சொல்ல முடியுமா? ஏன் மற்ற பகுதிகளில் எல்லாம் துப்பாக்கி, ஷெல், குண்டு வீச்சு என்று பாவிக்க, தென் தமிழீத்தில் வெட்டுதல், கொத்துதல் பாவிகப்பட்டது? இதை ஆலோசனை, பயிற்சி என்று சொல்லி கொடுத்தது இஸ்ரேல். இது தான் இஸ்ரேல் - சொறி சிங்கள உறவின் இரகசியம். இஸ்ரேல் - சொறி சிங்கள உறவு தத்துவத்தின் (கிட்டத்தட்ட ஒரே தன்மையின்) பாற்றப்பட்டது, அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தத்துவ ஒரே தன்மை - விவிலியம், மகாவம்சத்தின் அடிப்படையில் - அந்தந்த வரலாற்றுக்கான காலத்தை, சில குறிப்பிட்ட வேறுபாடுகளை தவிர இவை ஒரே தன்மையானவை. தென்தமிழீழ கொலைகள் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை என்று சொல்லி, என்ன தெரியும்கிராமம் கிராமமாக வெட்டி, கொத்தி கொலைகள் செய்யப்பாட்டத்துக்கு என்பபதைத் தவிர ? இப்படி (முஸ்லிம்களை பாவித்து) வெட்டி, கொலை செய்யுமாறு ஆலோசனை, பயிற்சி கொடுத்தது இஸ்ரேல். முதலில் stf க்கே பயிற்சி கொடுக்கப்பட்டது. இஸ்ரேல் எங்கிருந்த்து இந்த (வெட்டி, கொத்தி) அனுபவத்தை பெற்றது என்பதாவது தெரியுமா? இங்கே ஒருவர் சொல்லுவார் இஸ்ரேல் / யூதர் கெட்டித்தனமாக நிலத்தை பிடித்தனர் என்று. பல பதிவுகளில் சொல்லி உள்ளார் (ஒன்றில் அவர் அறியவில்லை, அல்லது அறிந்தும் சொல்ல விருப்பம் இல்லை, ஏனெனில் இஸ்ரேல் ன் தீவிர அபிமானி) இரு விடயங்கள் நடந்தது. பிரித்தானியர் 2 சட்டம் கொண்டுவந்தனர் Balfour declarationபற்றி சிந்திக்க தொடங்கம் போது. ஒன்று, ஒரே வேலைக்கு, யூதருக்கு மிக கூடிய சம்பளம் (ஏனெனில் யூதரின் வாழ்கைதரம் கூட என்ற (புரட்டு) விளக்கத்தை சொல்லி), அதே வேலைக்கு பலஸ்தீரியருக்கு மிக குறைந்த சம்பளம். இது பலஸீனியரை செயற்கை வறுமைக்குள் தள்ள, யூதரின் பணம் / செல்வதை உயர்த்தியது.பலஸ்தீனினியர் சொத்த்துக்களை விற்க தூண்டியது, பகுதி பலஸ்தீனியர் அறாவிலையில் காணிகளை / சொத்துக்களை யூதருக்கு விற்றனர், ஏனெனில் யூதருக்கு மட்டுமே விற்கமுடியும். இன்னொரு சட்டம் - எல்லோரும் கத்தி கொண்டு செல்வது / திரிவது அங்கெ முதலில் அனுமதி இருந்தது. ஆங்கிலேயர் / பிரித்தானியர் பலஸ்தீனியர் கத்தி கொண்டு திரிவது / செல்வதை தடை செய்தனர். இதை பாவித்து, யூதர் மாறும் சியோனிஸ்ட் கும்பல்கள் இரவோடு இரவாக (விற்காத) பாலஸ்தீனிய கிராமங்களில் புகுந்து வெட்டியும், கொத்தியும் கொலை செய்தனர். (அதாவது பிரித்தானியர் தெரிந்தே கொலைகளை, கிராமங்களின் அழிவை வசதிப்படுத்தியது) (இந்த யூத / zionist குழுக்களே மொசாட்டின் தொடக்கம்) இதில் இருந்த வந்த அனுபவத்தையே, இஸ்ரேல் சொறி சிங்களத்துக்கு சொல்லி கொடுத்தது. (ஈழத்தமிழர் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டாலே சமாதானம் உருவாகும் என்பதே இஸ்ரேல் வெளியே சொல்லாக நிலைப்பாடு. இஹை இஸ்ரேல் இந்த coin / வரலாறு ஆய்வாளர் பேட்டியில் Tamilnet இல் யுத்தம் முடிந்த கால பகுதியில் சொல்லி இருந்தார். இப்போதும் Tamilnet இல் இருக்கிறதோ தெரியாது. ) மறுவளமாக, பல்தெனியர் இப்படி யூத/ zionist கிராமங்களுக்கு கும்பலாகவோ, தனியாகவோ சென்று தாக்க முடியாது, சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் / படை அதிகாரம் பாவிக்கப்பட்டு முடக்கப்பட்டது.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் உள்நாட்டில் பலவீனமான நிலையில் உள்ளதாக ஊடகங்கள் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இது வரை ஈரான் NPT ஒப்பந்தத்தினை மீறாத நிலையில் ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதனான கருத்திற்கு இதுவரையும் எந்தவித ஆதார பூர்வமான விடய்ங்களையும் ஈரானிற்கெதிராக முன்வைக்க முடியவில்லை. பேச்சுவார்த்தையூடாக அனைத்துலக அணுசக்தி ஆனையமூடாக முழுமையான தங்குதடையற்ற பரிசோதனைகளை நடத்த முன்வரவேண்டும், அதன் மூலம் தேவையற்ற ஒரு இரத்தக்களரியினை தடுக்கலாம். பல மத்திய கிழக்கு நடவடிக்கைகள் (ஈராக், லிபியா, ஆப்கன், சிரியா) அங்கு ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பதிலாக புதிய புதிய தலைவலிகளையே ஏற்படுத்தியுள்ள வரலாறாக உள்ள நிலையில் இன்னுமொரு அதிகார வெற்றிடம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பின்விளைவுகள் இனிவரும் காலங்களில் உணரப்படலாம். பொதுவாக கணிகப்படும் சாதக பாதக கணிப்புகளிற்கப்பால் உள்நாட்டு அரசியல் இலாபங்கள் மேலோங்கும் போது அவை சில தனிமனித நலனிற்காக உலக பாதிப்புகளிற்கு ஆடிப்படையாகிவிடுகிறது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் 1983 ஜன் 1 க்கு முதல் இதை Citizen of UK and Colonies என்பார்கள். உதாரணமாக மலேயா, கென்யா, அவுஸ் நாட்டில் பிறந்தோர் எல்லாரும்CUKC ஸ் நேரடியாகவே. அதேபோல் 1948 இன் பின் குடியரசாகி விட்ட சகல கொமன்வெல்த் நாட்டு பிரசைகளுக்கும் (இந்தியா, இலங்கை) 01-01-1983 வரை பிரித்தானியாவில் வந்து எந்த அனுமதியும் இன்றி வாழ முடிந்தது. அனைவரும் British Subjects. ஆனால் 1960, 70 களில் வந்த வவுச்சர் நடைமுறை இந்த உரிமையை மழுங்கடித்தது. வெள்ளை நிறத்தோருக்கு சார்பாக மாற்றியது. இதை விட பகிடி….1948 க்கு முன் பிரித்தானியா சாம்ராஜ்யத்தின் பிரசைகள் அனைவரும் அது இலண்டனில் பிறந்த வெள்ளை எண்டாலும், இத்தாவிலில் பிறந்த மண்நிறம் எண்டாலும் ஒரே தகுதிதான் - British Subject.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனது தந்தையாரின் தாயாரிற்கு இலங்கை குடியுரிமை இருந்தது, அவரது தந்தைக்கு இங்கிலாந்து குடியுரிமை இருந்தது, எனது தந்தைக்கு இலங்கை குடியுரிமை நீண்டகாலமாக கிடைக்கவில்லை அதனால் அரச வேலைகளை இலங்கையில் பெறமுடியாது என கேள்விப்பட்ட நினைவுள்ளது.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குவைத் 3 அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக? சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது போரிற்கான ஏற்பாடு 4 வாரங்களிற்கானது என கூறப்படுகிறது (செய்திகளில் கூரப்படுபவை இந்த போர் 4 வாரங்களுக்கு மேலாகவும் நீடிக்கலாம்).- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓ… அப்படியா …. ஒரே ஆட்களை பற்றித்தான் கதைகிறமோ?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனது தந்தையார் பிறந்தது பர்மாவிலே, இது போன்ற கதையினை கேள்விப்பட்டுள்ளேன்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சங்கீதா போட்ட வெடியிலை... திரிசாவுக்கு, லக் அடித்த மாதிரி... நமக்கும்... நல்ல காலம் பிறக்கும் தானே. 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அண்ணை மார்ச் மாதம் சனி மாற்றம் கொஞ்சம் அப்பிடி இப்பிடிதான் போல? தேவையில்லாத சச்சரவில் மாட்டி அவஸ்தைபடுவீர்கள் எண்டு வாசிச்ச நியாபகம் 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஏன் என்றால் நீங்கள் இணைப்பது முழுக்க யூடியூப் குப்பை, அல்லது முகபுத்தகத்தில் வெட்டி ஒட்டுவது. அதுவும் பச்சை பொய்களை அல்லது பிரச்சார வீடியோக்களை. ஒழுங்கா இரெண்டு பந்தி சொந்தமா கருத்து எழுத பஞ்சி - இதுகுள்ள நிர்வாகம் மேல முறைப்பாடு வேற 😂 அவரால் ஓடுதோ இல்லையோ… கிரிகெட் திரிக்கு மட்டும் வந்துவிட்டு போவபர்களால் ஓடவில்லை என்பது நிசம்😂. முன்பே எழுதியுள்ளேன் நீங்களும், பேர்த்தில் இருந்து வருபவரும் இப்ப ஒரு 5 வருசமா யாழுக்கு வாறதே நிர்வாகத்தை குறை சொல்லத்தான்😂.- சிரிக்கலாம் வாங்க
இன்று எனது நண்பன் செய்த வேலை. 😂- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது எகிப்தின் லக்சோர் பிரமிட்டு கல்லறைகளில் சிகை கொற்றன் எழுதிய காலத்து தமிழ் என நினைக்கிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சொன்னான் எல்லே எல்லாமும் 2,3ம் தடவையில்தான் சரி வரும். டிசைன் அப்படி😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மன்னிக்கவும் பிராமணர் அல்லாத தமிழர் என எழுதி இருக்க வேண்டும். ரெட்டி, பதானி தமிழ்நாட்டுக்கு விளையாடிவர்கள். பாலாஜி, வாஷிங்டன் பிராமணர் என நினைக்கிறேன். நட்டு தமிழ் ஆனால் டெஸ்ட் விளையாடினாரா? இனத்தூய்மைவாதம் பேசவில்லை, ஆனால் தமிழ் நாட்டு கிரிகெட் சபையில் பிராமணர் ஆதிக்கம் மிக அதிகம். அதை அரிதாக தெலுங்கர் உடைப்பார்கள். ஏனையோருக்கு சான்ஸ் இல்லை. 2ம் உலக யுத்தகாலத்தில் எனது உறவினர் குடும்பம் ஒண்டு பர்மாவில் இருந்து கால் நடையாக இந்தியா வந்து பின் இலங்கை வந்தார்கள். ரங்கூனில் குதிரை அது இது எண்டு வசதியாய் இருந்த ஆட்களை கொண்டு வந்து யாழில் விட்டு விட்டார்கள். அப்போ அவர்கள் பாடுவார்களாம்…. வீடு நோக்கி ஓடி வந்த நம்மையே… நாடி நிற்குதே அநேக தீமையே… சோப்பும் இல்லை சீப்பும் இல்லை யாழ்ப்பாணத்திலே😂- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
படிக்கல்ல, படிக்கல்ல என்று 100 எடுத்து விட்டார் அவர்....................🤣.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நியாயமான கேள்வி. ஆனால், இந்தியாவுக்கும் பாக்கிஸ்த்தானிற்கும் இடையே போர்கள் இவ்விரு நாடுகளும் அணுவாயுதத்தினை வைத்திருக்கின்றன என்று தெரிந்தபின்னரும் ஆரம்பிக்கப்படவில்லையா? ரஸ்ஸியா இரண்டாவது மிகப்பெரிய அணுவாயுத வல்லரசு என்று தெரிந்த பின்னரும் பனிப்போரோ அல்லது நேரடியான போர்களை அந்நாடு முகங்கொடுக்கவில்லையா? இரு அணுவாயுத வல்லரசுகளான இந்தியாவும் சீனாவும் எல்லைகளில் இன்றுவரை மோதியே வருகின்றன. அணுவாயுதம் வைத்திருக்கும் நாடொன்றின்மீது தாக்குதல் நடத்துமுன்னர் ஒன்றிற்கு இருமுறை சிந்திப்பது அவசியம்தான். ஆனால் அதுவே போரினைத் தடுக்குமா என்பது கேள்விக்குறியே.- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
சுமந்திரன் மைண்ட் வாய்ஸ்... சிற்றுவேஷன் சாங்க். என்னை மதுரையில கேட்டாக… மன்னார்குடியிலும் கேட்டாக… அந்த மாயவரத்தில கேட்டாக.... அனுரா மாத்தையாவும் கேட்டாக.....- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கோசான் எல்லோ உங்கள விட மேல போட்டார். அதுதான்......😁- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
சுத்துமாத்து சுமந்திரனுக்கு.... தேர்தலில் வென்று பாராளுமன்ற உறுப்பினராகக் கூட முடியவில்லை. இதற்குள் நீதி அமைச்சர் ஆகின்ற ஆசையும்... எட்டிப் பார்க்குது. 😂 பேசாமல்... ஜனாதிபதி கதிரையில் போய் உட்க்கார வேண்டியதுதான். அப்பதான்... இந்த நோய், குணமாகும். 🤣 கேட்கிறவன் கேனையன் என்றால்.... எருமை, ஏரோப்பிளேன் ஓட்டுமாம். 😂 🤣- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கந்தப்புவ பிடிக்கேலாது என்று நினைத்தேன். அப்பிடியே மேல வந்திட்டியல்.- ஈரானுக்கு எதிராக ஓரணியில் உலக நாடுகள்!
இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் பிரித்தானியா இணையவில்லை Mar 2, 2026 - 09:43 PM - அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புத் தாக்குதல்களில் பிரித்தானியா இணையவில்லை என பிரித்தானிய பிரதமர் கீயர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். ஈரானின் அதி உயர் தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டமையானது, அந்தப் பிராந்தியத்தில் உள்ள இராணுவ மற்றும் பொருளாதார இலக்குகள் மீது ஈரான் மிகவும் துணிகரமான முறையில் தாக்குதல்களை நடத்த வழிவகுத்துள்ளதாக பிரித்தானிய பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். பாராளுமன்றில் இன்று (2) உரையாற்றிய ஸ்டார்மர் இது குறித்து மேலும் கூறியுள்ளதாவது, கமேனியின் மரணம் இவ்வாறான தாக்குதல்களை நடத்துவதிலிருந்து ஈரானை நிறுத்தாது என குறிப்பிட்டுள்ளார். உண்மையில், அவர்களின் அணுகுமுறை முன்னரை விட மிகவும் துணிகரமானதாகவும், பொதுமக்களுக்கு அதிக ஆபத்தை விளைவிக்கக்கூடியதாகவும் மாறி வருகின்றது எனவும் பிரித்தானிய பிரதமர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - அமெரிக்க தாக்குதலில் பிரித்தானியா இணையவில்லை- ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்
ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன் 02 Mar, 2026 | 06:50 PM (நா.தனுஜா) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே ஜனாதிபதி வெறும் 'கண்காட்சியை' விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் என தமிழ் முற்போக்குக்கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன் வலியுறுத்தியுள்ளார். தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியமும் லண்டன் மற்றும் இலங்கை தமிழ் இலக்கிய நிறுவனமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த மறைந்த மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் ஓராண்டு நினைவஞ்சலிக் கூட்டம் மற்றும் நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை (1) கொழும்பு தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றுகையிலேயே மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது : ஊடகத்துறையில் எனது நல்ல நண்பரான பாரதியும் நானும் இணைந்து எவ்வளவோ விடயங்களைச் செய்திருக்கிறோம். அவரது மிகப்பெரிய பலம் அவரது மௌனம் தான். நாமனைவரும் இணைந்து பேசிக்கொண்டிருக்கும்போது, பாரதி மாத்திரம் மௌனமாக இருப்பார். ஆனால் பேசி முடித்த பின்னர் தான், நாம் பேசிய சகல விடயங்கள் தொடர்பிலும் முகத்திலேயே பாவனைகளை வெளிப்படுத்தி அவர் தான் அதிகம் பேசியிருக்கிறார் என்று எண்ணத்தோன்றும். தமிழ்த்தேசியக்கட்சிகளின் ஒற்றுமை என்பது பாரதிக்கு எப்போதுமே இருந்த கனவாகும். அவர் எத்தகைய கனவு, நம்பிக்கை மற்றும் இலக்கில் விடாப்பிடியாக இருந்தார் என்று நினைத்துப்பார்க்கையில், இன்று வட, கிழக்கு தமிழ்த்தேசியக்கட்சிகள் மத்தியில் நிலவும் முரண்பாடுகள் கவலையளிக்கின்றன. மலையகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று கட்சிகளை உள்ளடக்கிப் பதிவுசெய்து சுமார் 12 வருடங்களாக தமிழ் முற்போக்குக்கூட்டணியாக இயங்கிவரும் நாம் இந்த ஒற்றுமை விடயத்தில் ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறோம். அந்த ஐக்கியம் வட, கிழக்கைப் பிரதிநிதித்துவப்படும் கட்சிகள் மத்தியிலும் ஏற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உண்டு. மறுபுறம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க என்ற ஒற்றைச் சில்லை வைத்துத்தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடுகிறது. அவர் யாழ்ப்பாணத்துக்குச் செல்கிறார். அங்கு நடைப்பயிற்சி செய்கிறார். மலையகத்துக்குச்சென்று பெருந்தோட்டத்தொழிலாளர்களின் கைகளைப்பிடித்துப் பார்க்கிறார். ஆனால் பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், காணி விடுவிப்பு, அரசியல்கைதிகள் விடுதலை, மலையக மக்களுக்கான காணி உரித்து என்பன உள்ளடங்கலாக தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. எனவே இப்போது வெறுமனே காண்பிக்கப்படும் கண்காட்சியை விடுத்து, ஏற்கனவே அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி செயலில் காண்பிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறோம் என்றார். ஜனாதிபதி வெறும் கண்காட்சியை விடுத்து செயலில் முன்னேற்றத்தைக் காண்பிக்கவேண்டும் - மனோகணேசன்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிறந்த வீட்டுக்கு வந்து சேர்ந்து விட்டோம் போல...................🤣. 'வீடு நோக்கி ஓடி வந்த என்னையே நாடி நிற்குதே அநேக நன்மையே..........................'
Important Information
By using this site, you agree to our Terms of Use.