Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்துள்ள நன்கொடை விபரம் Jan 23, 2026 - 01:34 PM அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். அதன்படி, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்காக இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளினால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகை 8.5 பில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியும் தற்போது அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு நிதியின் அளவு தற்போது 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடந்துள்ளதாகத் தெரிவித்தார். நிதி உதவி வழங்கிய நாடுகளுள் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான நிதி கிடைத்துள்ளதாகவும், அந்தத் தொகை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர, முறையே அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் அதிக நிதி உதவி வழங்கிய முதல் 10 நாடுகளாக உள்ளதாக ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். மேலும், இந்நாடுகளைத் தவிர பல வெளிநாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகவும், அதன்படி அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மொத்தம் 47 வெளிநாடுகள் உதவி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பணமாகப் பெறப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக, இலங்கைச் சுங்கத்திற்குப் பெருமளவிலான பொருட்களும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை சுங்கத்திற்கு கிடைத்துள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 2.3 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkqlgyt404b1o29ngyj4bx1o
  3. Today
  4. நான் அறிந்த வரை இவர் ஒன்றும் தான் தமிழர் என்பதற்காக ஒதுக்கபட்டதாக குறை சொல்லவில்லை. மதத்தை முன்நிறுத்தி தான் ஒரு முஸ்லிம் ஹிந்தி பட உலகம் இந்து மத சார்பாக மாறிவிட்டது என்று குற்றம் சொல்லி இருந்தார்.அது உண்மை இல்லை முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் பலர் அங்கே உச்சத்தில் உள்ளனர் என்று பலர் விளக்கம் அளித்தனர். இந்தியாவில் ஆக கூடிய பணம் வாங்கும் இசையமைப்பாளர் இவர் தானாம்.
  5. அதற்கு காரணம் அமெரிக்க பொருளாதாரம், பிரித்தானியாவின் இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னான நிகழ்வுடன் அமெரிக்க பொருளாதாரம் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியுடன் ஒப்பிட்டு விவாதங்கள் நடைபெற்ற நினைவுள்ளது.
  6. இது அந்த போரினால் ஏற்பட்ட மாற்றம் என்படில் இப்போதும் உடன்பாடில்லை. இது டிரம்ப் வருகையால் ஏற்பட்ட மாற்றம். டிரம்ப் மீள வன்டால் இது நடக்கும் என்படும் அப்போதே எதிர்வு கூறப்பட்டது.
  7. Keeravani has earned several national and international accolades, including an Academy Award, a Golden Globe Award, a Critics' Choice Movie Award, two National Film Awards, eleven Nandi Awards, eight Filmfare Awards, and a LAFCA Award. In 2023, the Government of India honoured him with the Padma Shri for his contributions towards Indian cinema. ஒஸ்கார் இல்லை என நினைக்கிறேன்.
  8. ஈரானை நோக்கி அமெரிக்கக் கடற்படை சென்று கொண்டிருப்பதாக ட்ரம்ப் தெரிவிப்பு! ஈரானை நோக்கி ஒரு பிரம்மாண்டமான அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று நம்புகிறேன் என டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே நிலவி வரும் போர் பதற்றத்துக்கு மத்தியில் ன அமெரிக்கக் கடற்படை சென்றுகொண்டிருப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் இந்த நகர்வை உலக நாடுகள் அச்சத்துடன் உற்று நோக்குவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஈரான் நாட்டின் நிதி நிலைமை மோசமாகி பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் ‛முல்லா கண்டிப்பாக போ’ என்ற கோஷத்துடன் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்துக்கு ஈரானின் பரமஎதிரிகளாக உள்ள இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஈரானின் அண்மையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களில் 3,117 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது ஆர்ப்பாட்டங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை குறித்து வெளியிடப்பட்ட முதல் அதிகாரபூர்வ அறிவிப்பாக இது அமைந்துள்ளது. நேற்று ஈரான் மீது ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால், அதற்கு முழு சக்தியுடன் பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் வெளியுறவு அமைச்சர் முதன்முறையாக அமெரிக்காவுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருந்தார் இவ்வாறான பின்னணியில், எதிர்வரும் நாட்களில் விமானம் தாங்கி போர்க்கப்பல், பல ஏவுகணை அழிக்கும் போர்க்கப்பல்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லுமெனவும் கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பில் பரசீலிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://athavannews.com/2026/1461114
  9. உக்ரைன்-ரஷ்யா-அமெரிக்கா இடையே முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஐக்கிய அரபு அமீரகத்தில் சந்திப்பு உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் முதல் முறையாக நடைபெற உள்ளது. உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான அரசு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதம் அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரடியாக சந்தித்து போர் நிறுத்தம் தொடர்பாக டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இருப்பினும் தீர்வுகள் எதுவும் எட்டப்படாத நிலையில், நேற்று சுவிட்சர்லாந்தின் தவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி சிறப்பு நேரடி சந்திப்பு ஒன்றை நடத்தினர். முதல் முத்தரப்பு பேச்சுவார்த்தை இந்நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா - அமெரிக்கா இடையே முதல் முறையாக முத்தரப்பு பேச்சுவார்த்தை ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று தொடங்க இருப்பதாக உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம் அமெரிக்கா, உக்ரைன், ரஷ்யா ஆகிய மூன்று நாடுகளை சேர்ந்த அதிகாரிகள் முதன்முறையாக நேரடியாக அமர்ந்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் இருவர் மாஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர். முன்னதாக பொருளாதார மாநாட்டில் பேசிய ஜெலென்ஸ்கி, உக்ரைன் ஒரு சுழற்சியில் சிக்கி இருப்பதாகவும், ஐரோப்பிய நாடுகள் பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டுகிறதே தவிர வேறு எந்தவொரு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டியுள்ளார். https://news.lankasri.com/article/trilateral-talks-for-ukraine-war-in-saudi-1769139699
  10. அஸ்வத்தாமனின் கோபம் மூலம் : யமுனா ஹர்ஷவர்தனா தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மத்ஸ்ய தேசத்தை கௌரவர்கள் தாக்கிய சமயத்தில் அவர்களை எதிர்கொள்ள மத்ஸய தேசத்துப் படைகளோ தளபதிகளோ அங்கே இல்லை. தேசத்தின் மற்றொரு எல்லையில் பகைவனை எதிர்த்து சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். எனவே அனுபவமற்ற இளவசரன் உத்திரகுமாரனே போர்க்களத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. ஒரு அலியாக உருமாறி அரசவை பெண்டிருக்கு நாட்டியம் கற்பித்துக் கொண்டிருந்த அர்ஜுனன் அவனுக்கு ரதமோட்டினான். உத்திரகுமாரனுக்கு தைரியம் ஊட்ட தான் யார் என்பதை அவனுக்கு கூறினான் அர்ஜுனன். அதன்பின், தான் மறைத்து வைத்திருந்த தேவதத்தம் என்ற தன் சங்கை எடுத்து சங்கநாதம் முழங்கி, தன் வில்லான காண்டீபத்தை நாணை சுண்டினான். இரு சப்தங்களையும் கேட்ட துரோணர் உடனடியாக அவற்றை கண்டுகொண்டார். துரியனை நோக்கி “துரியோதனா! நாம் கைப்பற்றிய கால்நடைகளை பாதுகாப்பாக ஒட்டிக்கொண்டு நாடு திரும்புவது நல்லது. இல்லையனில் அர்ஜுனன் நம்மை தோற்கடித்து இவற்றை மீண்டும் கைப்பற்றி சென்றுவிடுவான்” என்றார். “ஆச்சார்யரே! படையினரை மனம் தளர வைக்குமாறு ஏன் இப்படி பேசுகிறீர்கள்? கால்நடைகளைக் கைப்பற்றுவது நம் நோக்கமில்லை என்பது உங்களுக்கு தெரியும். முடிவதற்குள் நாம் அம்பலப்படுத்தினாலும் அவர்களை மீண்டும் பன்னிரெண்டு வருடம் வனவாசம் அனுப்பிவிடுவேன் . எனவே எதிர்காலத்தை உத்தேசித்து இப்பொழுது அர்ஜுனனை அவர்களை தாக்குவோம்” என துரியோதனன் வேண்டினான். அவர்களை இடைமறித்த கர்ணன் “வேண்டுமானாலும் ஆச்சார்யரின் வார்த்தைகளை கேட்டு மனம் தளரலாம். ஆனால், நான் பயப்படவில்லை. எதிரே இருப்பது இந்திரனாக இருந்தாலும் நான் தயாராக இருக்கிறேன். இந்த தருணத்திற்காக கடந்த பதிமூன்று வருடங்களாகக் காத்திருக்கிறேன். என் வில்லில் இருந்து அலையென கிளம்பும் அம்புகள் அவர்களை துளைக்கப் போவதை பார்க்கக் காத்திருங்கள்” என கர்வத்துடன் கூறினான். “போர் இன்றி நல்லது நடக்க வாய்ப்பிருக்கும் பொழுது, சண்டையிட நீ ஏன் இவ்வளவு ஆர்வமாக இருக்கிறாய்? தனி ஒருவனாக அர்ஜுனன் எதிரிகளை பலரை தோற்கடிக்க இயலும் என்பதும் உன்னால் அது இயலாது என்பதும் அனைவரும் அறிந்த ஒன்றே. கந்தர்வர்கள் துரியோதனனை பிடித்து சென்றபொழுது யார் விட்டுவிட்டு ஓடினார்கள் என்பதும் யார் அவனை காப்பாற்றினார்கள் என்பதும் உள்ளதா? நாம் அனைவரும் சேர்ந்து அவனை எதிர்ப்பதே வெற்றியை தரும்” என க்ருபாச்சாரியார் கூறினார். இது கர்ணனை கோபத்திற்குள்ளாகியது. “துரியோதனா! அர்ஜுனனை கண்டு க்ருபாச்சார்யார் பயந்து விட்டார் போல. சடங்குகளை செய்யும் பொழுதும், தானங்கள் கொடுக்கும் பொழுதும் மட்டுமே ப்ராமணர்களிடம் ஆலோசனை கேக்க வேண்டும். போரின் பொழுது ஆலோசனை கேக்கக் கூடாது !” என துரியனிடம் கர்ணன் கூறினான். இதை கொண்டிருந்த அஸ்வத்தாமன் மிகுந்த கோபத்திற்கு உள்ளானான். “துரியோதனா! பசுக்களை காக்க நீ எதுவும் செய்யவில்லை. கர்ணா! வெட்டி பேச்சு பேசாதே! ப்ரமாணர்கள் நல்லறிவும், அடக்கமும் கொண்டவர்கள். எனவே அவர்கள் தம்பட்டம் அடித்துக் கொள்வதில்லை. நீ இதுவரை என்ன செய்துவிட்டாய் என இப்படி பேசுகிறாய்?” “துரியோதனன் ராஜ்யத்தை என்ன போரிலா வென்றான்? தர்மரை பகடையில் சூழ்ச்சி செய்து வென்றான். அதுவும் அவன் ஆடவில்லை . அவனுக்கு பதில் சகுனி ஆடினார். அது சத்ரியனுக்கு அழகா? இப்பொழுது “அவன் ராஜ்ஜியம்” என பேசுகிறான்.” “எதிரிகளின் வலிமையை அங்கீகரிக்கக் கற்றுக் கொள். பாண்டவர்கள் உண்மையில் வலிமையானவர்கள்தான். மற்ற எவரின் துணையும் இன்றி, இந்திரனின் சேனையைக் கூட எதிர்கொள்ளக் கூடியவர்கள். அர்ஜுனனைப் பற்றி சொல்ல புதிதாய் ஒன்றுமில்லை. உனக்கே தெரியும் அவனை உன்னால் தோற்கடிக்க இயலாதென. வெறும் வாய்ச்சவடால் விடுவதை நிறுத்து!” “என் தந்தையும், மாமாவும் சொன்னது பயத்தினால் அல்ல. அவர்களின் வலிமையை அறிந்ததால். ஒருவரை புகழ வேண்டிய சமயத்தில் புகழ்வது தவறல்ல. கர்ணா! அவன் மேல் உனக்கு இருக்கும் பொறாமை அவனை சிறியவனாக்காது” என கோபத்துடன் கூறிய அஸ்வத்தாமன் வில்லைக் கீழே எறிந்து விட்டு ரதத்தில் அமர்ந்து கொண்டான். இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பீஷ்மர் தலையிட்டு “துரியோதனா! துரோணரும், க்ருபாச்சார்யரும் கூறியதெல்லாம் உண்மைதான்.அர்ஜுனனை தோற்கடிப்பது என்பது மிகக் கடினமான ஒன்றாகும். அஸ்வத்தாமனின் கோபமும் சரியான ஒன்றாகும். ஆனால், அஸ்வத்தாமா! படையினரை உற்சாகமூட்டவே கர்ணனும், துரியனும் அவ்வாறு பேசினார்கள். அதனால் கோபம் கொள்ளாதே! நாம் அனைவரும் இணைந்து போரிடுவோம்” என அனைவரையும் சமாதானப்படுத்தினார். இதனால் ஓரளவு சமாதானம் அடைந்த அஸ்வத்தாமன் “துரியோதனுனும், கர்ணனும் தன் தந்தையிடமும், மாமாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்” என வலியுறித்தினான். சூழ்நிலையின் அவசியத்தை உணர்ந்த துரியோதனனும், கர்ணனும் ஆச்சார்யர்கள் இருவரின் மன்னிப்பை வேண்டினார்கள். “பீஷ்மர் பேசியபொழுதே என் கோபம் போய்விட்டது. நாம் இப்பொழுது செய்யவேண்டியது அனைவரும் இணைந்து அர்ஜுனன் துரியோதனனை தாக்காமல் பார்த்துக் கொள்ளவேண்டியது அவசியம். ஏனென்றால், தற்பொழுது அவன் மேல் அர்ஜுனனின் கோபம் கட்டுக்கடங்காமல் இருக்கக் கூடும். அதேபோல் , அவர்கள் தலைமறைவாய் இருக்கவேண்டிய காலம் முடிந்துவிட்டது. எனவே , அவர்களை வெளிப்படுத்தினாலும் நாம் ஒன்றும் செய்ய இயலாது” என துரோணர் கூறினார். இதைக் கேட்டு குழப்பம் அடைந்த துரியன் பீஷ்மரை பார்த்தான். அவரும் துரோணர் கூறியதை ஆமோதித்தார். அத்துடன் துரியனின் படையெடுப்பின் நோக்கம் ஒன்றுமில்லாமல் ஆனது. கண் திறந்த தருணம் . .. பிறப்பிலேயே குருடனாக பிறந்த திருதராஷ்டிரனுக்கு மனைவியாக காந்தாரா நாட்டு இளவரசி காந்தரியை கேட்டு தூது அனுப்பினார் பீஷ்மர். காந்தார அரசனுக்கு தன் மகள் ஒரு குருடனுக்கு இல்லை. ஆனால், காந்தாரியோ குரு வம்ச இளவரசனான திருதராஷ்டிரனனை மனப்பூர்வமாக சம்மதித்தாள். திருமணம் முடிந்தவுடன் தன் கணவனின் கஷ்டத்தில் தானும் பங்கு கொள்ளவேண்டி தன் கண்களையும் துணியால் கட்டிக்கொண்டாள். அதன் பின், ஒரே ஒரு முறை மட்டுமே தன் கண் கட்டை அவிழ்த்தாள் . அவளுடைய இந்த தவத்தினால் அவளுடைய கண்களுக்கு விசேஷ சக்தி கூடியது. குருஷேத்திர போரின் பொழுது, துரியன் பீமனால் கொல்லப்பட்டுவிவிடுவானோ என்ற பயத்தில் அவனைக் காப்பாற்ற தன் சக்தியை உபயோகிக்க முடிவு செய்தாள். அவனை சந்திக்க முடிவு செய்து, கங்கையில் குளித்து ஈர உடலுடன் பிறந்தமேனியாக தன்னை சந்திக்க அனுப்பினாள். அந்த கோலத்தில் துரியனை காந்தாரி சந்தித்தால், துரியன் வீழ்த்தப்பட முடியாத அளவிற்கு பலம் பெற்றுவிடுவான் என ஊகித்த கிருஷ்ணன், கங்கையில் குளித்து அன்னையை சந்திக்க சென்றுக் கொண்டிருந்த துரியனை வழிமறித்தான். “துரியோதனா! உன் ஆடை எங்கே? ஆடைகளுடன் உன் வெட்கத்தையும் கழற்றி எறிந்து விட்டாயா? பிறந்தமேனியாக எங்கே சென்றுக் கொண்டிருக்கிறாய்?” “கிருஷ்ணா! என் அன்னையை காண அவர் இட்ட கட்டளைப்படி நிர்வாணமாக செல்கிறேன். அன்னை முன் நான் நாண வேண்டும்?” “துரியோதனா! நீ இப்பொழுது வளர்ந்த மனிதன். அன்னையே என்றாலும், அவள் முன் நிர்வாணமாக இருக்க முடியும்?” இதைக் கேட்ட துரியோதனனுக்கு வெட்கம் தோன்றியது. அருகே இருந்த வாழை மரத்தில் இருந்து வாழை இலையை வெட்டி, தன் இடுப்பை சுற்றிக் கட்டிக்கொண்டான். அவன் தொடைகளையும் அது மறைத்தது. தன் முன் துரியோதனன் வந்து நின்றவுடன் தன் கண் கட்டை அவிழ்த்து அவனைப் பார்த்த காந்தாரி, இடையில் அவன் வாழை இலை அணிந்து வந்ததால் அதிர்ச்சி அடைந்தாள். மேலும் , பீமன் துரியனின் தொடை பிளந்து கொல்வேன் என சபதம் எடுத்ததையும் அவள் அறிவாள். துரியனின் இந்த செய்கை, அவளது சக்தியை முறியடித்தது. இனி, தன் சக்தியால் அவனை காப்பாற்ற என்பதை புரிந்து கொண்டாள். https://solvanam.com/2025/09/15/அஸ்வத்தாமனின்-கோபம்/
  11. கல் வியாபாரத்திற்காக அழிக்கப்படும் காதலியார் சமளங்குளம் கட்டுரை | North East Narrative படம் | T.Ravikaran முல்லைத்தீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் இருக்கிறது காதலியார் சமளங்குளம் எனும் கிராமம். வன்னிப் பெருநிலப் பரப்பிலிலிருந்து ஆங்கிலேயர்களோடு போரிட்டு வீரமரணமடைந்த குலசேகரம் வைரமுத்து பண்டாரவன்னியனின் வரலாற்றோடு தொடர்புபடும் இந்தக் கிராமானது விவசாயத்திற்கும், கால்நடை வளர்ப்பிற்கும் பெயர்பெற்றதாகும். இலங்கையின் வடமாகாணத்தில் இருக்கின்ற வன்னிப் பெருநிலப் பரப்பு இயற்கை வளங்களால் நிரம்பப்பெற்றது. வனமும் நிலமும், கடலும் குளமும், மணலும் மலையும், பெருநிலத்தின் அடையாளங்களாக இருக்கின்ற இயற்கை வளங்கள். வன்னிப் பெருநிலப் பரப்பை இலங்கை அரச படைகள் கைப்பற்றுவதற்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளே நிர்வாகம் செய்தனர். அக்காலப் பகுதியில் வன்னி பெருநிலப்பரப்பிலிருந்து அனைத்துவிதமான இயற்கை வளங்களும் எதிர்கால சந்ததிக்காகப் பாதுகாக்கப்பட்டன. வன்னிப் பெருநிலத்தின் பெரும்பகுதியை நிரப்பியிருக்கும் காட்டிலிருந்து ஒரு சிறு மரத்தைத் வெட்டுவதாயினும் புலிகளின் வனவளப் பிரிவினரிடம் அனுமதி பெறவேண்டியிருந்தது. அனுமதி பெறாது மரங்களை வெட்டியோர் சிறைத்தண்டனை வரை அனுபவிக்கவேண்டியுமிருந்தது. 2009 ஆம் ஆண்டில் போர் முடிவுக்கு வந்த காலத்திலிருந்து இற்றைவரைக்கும் வன்னி பெருநிலத்திலிருந்து அனைத்து இயற்கை வளங்களும் சூறையாடப்பட்டு வருகின்றன. அந்நிலத்தின் சுற்றுச்சூழல் அடையாளமே மாறிப்போகும் அளவிற்கு இயற்கை வள அழிப்பு இடம்பெற்று வருகின்றது. இப்பின்னணியில்தான் வன்னி பெருநிலத்தின் பல பாகங்களிலும் காணப்படுகின்ற சிறு மலைக் குன்றுகளும், பாறை மேடுகளும் கிரனைற் வியாபாரிகளால் அகழப்பட்டு வருகின்றன. உதாரணத்திற்கு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலயச்சூழலில், பண்டைய கால இராசதானியொன்றின் கட்டட எச்சங்கள் காணப்பட்ட வாவெட்டி மலை சட்டவிரோமான முறையில் கிரனேற் வியாபாரிகளால் அழிக்கப்பட்டது. தொல்லியல் திணைக்களத்தினால் பாதுகாக்கப்பட்டிருக்க வேண்டிய வாவெட்டி மலை அழிக்கப்பட்டதோடு, அங்கிருந்த தமிழர்களது வரலாற்றைக்கூறும் தொல்லியல் எச்சங்களும் அழிக்கப்பட்டன. வாவெட்டி மலைக்கு அடுத்தபடியாகத்தான், அம்மலைப் பகுதிக்கு அண்மித்த கிராமமான காதலியார் சமளங்குளத்தில் காணப்பட்ட கருங்கல் பாறை மேடும் 2018 ஆம் ஆண்டிலிருந்து கிரனேற் வியாபாரிகளால் அகழப்பட்டது. ஊர் மக்களின் எதிர்ப்பையடுத்து 2022ஆம் ஆண்டில் அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனாலும் அகழ்வின்போது ஏற்பட்ட பாரிய குழி மண்ணிட்டு நிரப்பப்படாமல் இன்றும் அப்படியே இருப்பதை அவதானிக்கமுடியும். தற்போது மீண்டும் அவ்விடத்தில் கிரனேற் அகழ்விற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்கு காதலியார் சமளங்குள மக்கள் தம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த காதலியார் சமளங்குளப் பெண்ணொருவர், ”2018ஆம் ஆண்டின்ர ஆரம்பத்தில ஏஜிஏ (பிரதேச செயலாளர்) மட்டத்தில முடிவெடுத்த பிறகு நிற்பாட்டினது. நிம்மதியா இருந்தம். சரியான டஸ்ட் (தூசி). எங்கட வீடு இதிலயிருந்து நூறு மீற்றர் தூரத்திலதான் இருக்குது. நாங்கள் எங்கட வீட்டு யன்னலுகளுக்கு கண்ணாடி போட்டிற்றம். எங்கட வீட்டிலயும் கல் உடைக்கிற அதிர்வினால ரெண்டு யன்னல் கண்ணாடியளும் வெடிச்சி, சுவருகளும் வெடிச்சது. எங்களுக்குப் பக்கத்து வீட்டில இன்றை வரைக்கும் கண்ணாடியும் போடேல்ல. சுவருகளும் வெடிச்ச படியேதான் கிடக்கு”. என கல் உடைக்கும் நிறுவனத்தினால் தங்கள் கிராமம் எவ்வளவுதூரம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை விபரித்தார். “..போனகிழமை ரெண்டு வாகனங்களில ஆக்கள் வந்து இறங்கினவ. நாங்கள் றோட்டில வந்து நின்றிட்டம். யாரையும் கல்லுடைக்கிற இடத்துக்கு போக விடேல்ல. வந்த முழுப்பேரும் சிங்கள ஆக்கள். பிரதேச சபை ஆள் ஒருத்தரும் வந்தவர். ஜீ.எஸ்ம் (கிராம சேவையாளர்) வந்தவர். இன்னொரு தமிழ் பெடியனும் வந்தவர். தாங்கள் இடத்தைப் பார்க்க வந்ததாக சொல்லிச்சினம். நாங்கள் இடத்தைப் பார்க்க போக வேண்டாம் என்று சொல்லீற்றம். நாங்கள் எங்கட ஊருக்க கல்லெடுக்க விடமாட்டம். எங்களுக்கு இதால நிறையப் பாதிப்பு. எங்கட மாடுகளுக்கு மேய்ச்சல் நிலம் இல்ல. அந்த மாடுகளக் கொண்டுவந்து இந்தக் காடுகரம்பையாத்தான் மேய்க்கிறனாங்கள். இங்க மாடுகள் மேய்க்க வேற இடமே இல்ல. இந்தக் குழிகளுக்குள்ள மாடுகள் விழுந்து செத்தால் யார் பொறுப்பு? இதுக்க கொண்டுவந்து கல்லுக் கிரேசரைப் போட்டால் மாடுகளை நாங்கள் கட்டித்தூக்கிறதோ? மாடுகள விடுங்கோ. எங்கட வாழ்க்கையப் பாருங்கோ. இதுக்க கிரேசர் போட்டால் அதில இருந்து வாற டஸ்ட் எங்க போகும். 100 மீற்றருக்குள்ள தான் எங்கட வீடுகள் இருக்கு. ஏற்கனவே இருந்த கிரேசரால வீடுகள் உடைஞ்சு போய்தானே கிடக்கு. அதைத் திருத்தவே வழியக் காணேல்ல. இதில இருக்கிற மிச்சசொச்சத்தையும் இடிச்சழிக்க திருப்பி வருகினம்..” என்றார் மிகுந்த கோபத்தோடு. அக்கிராமத்தில் வசித்துவரும் இன்னொரு கிராமவாசி குறிப்பிடுகையில், ”உண்மையிலயே இங்க நிறைய வருத்தக்காரர் இருக்கினம். இதய வருத்தக்காரர், கிட்னி பெய்லியர் ஆகின ஆக்கள் இங்க அதிகம். இங்க கல்லுகள உடைக்கும்போது கேட்கிற சத்தம் அவையளப் பாதிக்கும். அதவிடவும் எங்கட வீடுகளுக்கு சரியான சேதம். சுவருகள், யன்னலுகள் எல்லாம் வெடிச்சிற்று. அதைத் திருப்பி எப்பிடி ஒட்டவைக்கிறது? கல்லுகள் உடைக்கும்போது வாற சத்தத்துக்கு சின்னப் பிள்ளையள் சரியா பயப்பிடுதுகள். எங்கட வீடுகள் கிரேசருக்குப் பக்கத்தில இருக்கிறதால சத்தம் காதைக் கிழிக்கும். எங்களுக்கு இந்தக் கிரேசர் வேண்டாம். ஏற்கனவே இதனால பட்டபாடுகள் போதும். திருப்பியும் யாரும் வந்தால் நாங்கள் போராட்டம்தான் செய்யவேண்டிவரும்” – என்றார். அக்கிராமத்தில் விவாசயத்தோடு கால்நடையும் வளர்த்து வருகின்ற ஒருவர் குறிப்பிடுகையில், ”கிணறுகளில தண்ணீர் இல்ல. குழாய்க்கிணறு கிண்டியும் பார்த்தம், அதிலயும் தண்ணியில்ல. ஆனால் அவையள் கிண்டின கல் குவாரியில பெரிய குளம் போல தண்ணி நிற்குது. எங்கட கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் போனதுக்கு அதுவும் காரணமோ தெரியேல்ல – என்கிற சந்தேகத்தையும் அவர் வெளியிட்டார். இந்தக் குரல்கள் சொல்லுவதெல்லாம் ஒன்றைத்தான். ”இயற்கையை நீ அழித்தால் இயற்கையால் நீ அழிவாய்” https://nenarrative.com/கல்-வியாபாரத்திற்காக-அழி/
  12. தமிழர் மரபுரிமை சுற்றுலா கட்டுரை மற்றும் படம்| North East Narrative நமது கடந்த காலத் தலைமுறைகள் நமக்காக விட்டுச்சென்றவைகள் மரபுரிமைகள் ஆகும். அவை நிகழ்காலத்திலும், எதிர்காலத்திலும் மதிப்புமிக்கவையாக இருக்கும். இதனைத் தொட்டுணரக்கூடிய மரபுரிமைகள் (Tangible Heritage) எனவும், தொட்டுணர முடியாத மரபுரிமைகள் (Intangible Heritage) எனவும் இரண்டாக வகுப்பர். நினைவுச்சின்னங்கள், பண்டைக்கால கட்டடங்கள், கலைப்பொருட்கள் போன்றன தொட்டுணரக்கூடிய மரபுரிமைகளாகவும், பண்டைக்கால தொழில்நுட்ப நுணுக்கங்கள், கலைநிகழ்ச்சிகள், சடங்குகள், பழக்கவழக்கங்கள், நாட்டார் கதைகள், மரபுவழிப் பாடல்கள் போன்றன தொட்டுணரமுடியாத மரபுரிமைகளாகவும் கொள்ளத்தக்கன. மரபுரிமைகள் என்ன செய்யும்? இத்தகைய மரபுரிமைகள், எதிர்கால சந்ததியினருக்கு வரலாற்றைக் கடத்தும் பணியை செவ்வனே செய்கின்றன. குறித்தவொரு பிராந்தியத்தின் வாழும் மக்களின் தனித்துவமான அடையாளக்கூறுகளைக் கட்டிக்காக்கின்றன. இனம்சார் உணர்வு மேலிடவும், தக்கவைக்கவும் உதவுகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக குறித்தவொரு மரபுரிமைச் சின்னம் காணப்படுகின்ற பிராந்தியத்தின் சுற்றுலாத்துறை விருத்தியடையவும், அதன்விளைவாக அப்பிராந்தியத்தின் வரலாறு உள்ளிட்ட பண்பாட்டுக்கூறுகள் உலகத்தவர்களுக்கு எடுத்துச்செல்லப்படவும், பொருளாதாரம் மேம்படவும் உதவுகின்றன. ஈழத்தமிழர் மரபுரிமைகள் எத்தகையன? இலங்கையின் வடக்கு கிழக்கு பாகங்களில் வாழுகின்ற ஈழத்தமிழர்களிடம் இருக்கின்ற மரபுரிமைகளை எந்த வகைக்குள் உள்ளடக்குவது என்கிற கேள்வி எழுவது இயல்பானது. இப்பிராந்தியத்தில் போரில் அழிக்கப்பட்டவைபோக, தற்போது எஞ்சியிருக்கின்ற மரபுரிமைகளுக்குள் அனேகமானவை பண்பாட்டு மரபுரிமைகள் (Cultural Heritage) என்கிற வகையறாவுக்குள்ளேயே உள்ளடக்கத்தக்கவை. அவற்றுள் தொட்டுணரக்கூடியவையும், தொட்டுணரமுடியாதவையும் அடங்கும். அண்மையில், சர்வதேச சுற்றுலாப் பயணங்களுக்கான விபரிப்பு சஞ்சிகையான Lonely Planet இவ்வருடத்தில் (2026) சுற்றுலாப் பயணிகள் உலகளவில் பயணம் செய்வதற்கெனத் தெரிவுசெய்யக்கூடிய சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாண நகரத்தைத் தெரிவுசெய்திருந்தது. அச்சஞ்சிகையில், யாழ்.நகரானது தமிழ் கலாசார விழுமியங்களைக் கற்க விரும்புபவர்களுக்குப் பொருத்தமான நகரம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச சுற்றுலா தொடர்பான பார்வையில் இப்படியோர் அடையாளத்தைப் பிடித்திருக்கும் யாழ்ப்பாணத்தைத் தமிழர் பண்பாட்டு மரபுரிமைசார் இடமாகக் காட்டுவது எப்படி என்பதற்கான எழுத்துவடிவிலான சுற்றுலா வழிகாட்டியாக இந்தக் கட்டுரைத்தொடர் அமையும். கீரிமலை யாழ்.குடாநாட்டில் இருக்கின்ற மிக முக்கியமான பண்பாட்டு மரபுரிமை மையங்களில் கீரிமலையும் ஒன்றாகும். யாழ்ப்பாண நகரிலிருந்து வடக்கே 19 கிலோமீற்றர்கள் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. ஆழமற்ற, சுண்ணக்கற்பாறைகளால் சூழ்ந்த அழகிய கடற்கரையும், யாழ்ப்பாண பாரம்பரிய கட்டடக் கலைமரபில் அமைந்த கட்டடங்களும் இந்தக் கிராமத்திற்கு எல்லையிட்டு நிற்கின்றன. கீரிமலையை அடைவதற்கான இலகு பயணம் யாழ்ப்பாண நகர மத்திய பேரூந்து நிலையத்திலிருந்து இக்கிராமத்திற்கு அரச மற்றும் தனியார் பேரூந்துகள் மூலமாகப் பயணம் செய்யலாம். அதேபோல தனியார் முச்சக்கர வண்டிகள் மூலமாகவும் பயணிக்கலாம். அரச, தனியார் பேரூந்துகளின் கட்டணம் 200 ரூபாவுக்குட்பட்டதாகவும், முச்சக்கரவண்டிகளின் கட்டணம் 2500 ரூபாவுக்குட்பட்டதாகவும் காணப்படும். யாழ்.நகரிலிருந்து புறப்பட்டால் 45 நிமிட நேரத்திற்குள் இவ்விடத்தினை அடையலாம். கீரிமலையில் பார்க்கவேண்டிய இடங்கள் கீரிமலையின் என்கிற இந்தக் கடற்கரை கிராமத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானது நகுலேச்சரம் சிவன் கோயில் ஆகும். இலங்கையில் உள்ள மிகத் தொன்மையான ஐந்து சிவன் கோயில்களில் ஒன்றாக நகுலேச்சரம் காணப்படுகின்றது. இக்கோயிலின் வரலாறானது இராமயணக் காலத்திலிருந்தே ஆரம்பிப்பதாகக் குறிப்புகள் உண்டு. இறந்தோருக்கான பிதிர்க்கடன் ஆற்றுவதற்குப் பிரசித்தி பெற்ற நகுலேச்சர கோயிலின் உருவாக்கம் தொடர்பில் ஐதீகக் கதையொன்று உண்டு. 15ஆம் நூற்றாண்டில் இலங்கையைத் தம் காலனியாத்திக்கத்தின் கீழ் வைத்திருந்த போத்துக்கேயர்கள் மிகத் தொன்மையான இக்கோயிலை முதலில் அழித்தனர். பின்னர் ஆறுமுகநாவலர் எடுத்த முயற்சியின் பலனாக 1894 ஆம் ஆண்டில் மீண்டும் புனருத்தானம் செய்து திறக்கப்பட்டது. 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரை இலங்கை அரச படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த நகுலேச்சரம் முற்றாக சேதமடைந்தது. தற்போது மீளவும் புதுப்பொலிவுடன் கட்டியமைக்கப்பட்டு, வர்ணமிகு புதிய கோயிலாக நகுலேச்சரம் காட்சிதருகின்றது. நகுலேச்சரத்தின் வரலாறு முன்பொரு காலத்தில் சுதாமா எனும் முனிவர் மேரு மலையில் தவம் செய்துகொண்டிருந்தபோது, அவரின் தவத்தை குழப்பிய குற்றத்திற்காக யமத்கினி எனும் வேடன் முனிவரின் சாபத்திற்குள்ளானார். அச்சாபத்தினால் அவர் கீரி முகம் அமையப்பெற்றார். கீரிமுகம் பெற்ற வேடன் தற்போதைய நகுலேச்சரத்தை அண்மித்த கடலில் நீராடி தன் கீரிமுகத்தை நீங்கப் பெற்றமையால் அவர் நகுல முனிவர் என அழைக்கப்பட்டார். அதனால் அந்தக் கடற்கரை கிராமத்திற்கு கீரிமலை என்றும், நகுலகிரி என்றும் பெயர்பெற்றது. பின்னாளில் நகுல முனிவர் வழிபட்ட இடம் ஆனபடியால், அங்கு அமைந்த சிவ ஆலயமும் நகுலேச்சரம் எனப் பெயர்பெற்றது. கீரிமலை நகுலேச்சரம் கோயில் கீரிமலை தீர்த்தக் கேணி கீரிமலைக்கு வருகின்ற பக்தர்களையும், சுற்றுலாப் பயணிகளையும் அதிகம் கவருகின்ற இடமாக நீள்வட்ட வடிவான அழகிய தீர்த்தக்கேணி காணப்படுகின்றது. எக்காலத்திலும் நீர் வற்றாத, உப்புத் தன்மையற்ற இத்தீர்த்தக்கேணியில் பகல் வேளைகளில் நீராடுவது, உடலில் உள்ள நோய்களைத் தீர்க்கும் என நம்பப்படுகின்றது. கீரிமலை தீர்த்தக்கேணி சிறாப்பர் மடம் கீரிமலையில் அமைந்துள்ள சிறாப்பர்மடமானது யாழ்ப்பாணத்து பாரம்பரிய சமயம்சார் கட்டடக் கலை மரபின் எச்சமாக காணப்படுகின்றது. 1870ஆம் ஆண்டில் சுப்பிரமணியம் கதிரவேல் என்பவர் ”நகுலேசுவர சுவாமிகள் தண்ணீர் பந்தல்” எனும் பெயரில் இம்மடத்தினை அமைத்தார். அவர் அக்காலத்தில் பிரபலமான ”சிறாப்பர்” பதவியைப் பெற்றிருந்தமையால், பின்நாட்களில் சிறாப்பர் மடம் என அழைக்கப்பட்டது. கீரிமலைக்கு வருகின்ற யாத்திரிகர்கள் தங்கிநின்று ஓய்வு எடுக்கவும், தியானம் செய்யவும், சமயத் தேவைகளுக்காகவும் இந்த மடம் பயன்படுத்தப்பட்டு வந்தது. இதுபோல கீரிமலையை அண்மித்த பகுதிகளில் 13 மடங்கள் இருந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. அவை அனைத்தும் இன்று அழிவடைந்துவிட்டன. சிறாப்பர் மடமும் போர்க்காலத்தில் மோசமாக சிதைவடைந்த போதிலும், அதன் கட்டட அமைப்பை இப்போதும் பார்வையிடலாம். மன அமைதி தரும் தியான மண்டபம் கீரிமலையின் கடற்கரையோரமாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான மண்டபம் தியானம் செய்வதற்கு மிகப் பொருத்தமான இடமாகும். வெளிநாட்டுப் பயணிகளும், உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை வேளையில் இந்த மண்டபத்திற்கு வருகைதந்து, மெல்லிய கடல் அலையின் ஓசையைக் கேட்படி மனதுக்கு அமைதி தரும் தியானத்தை மேற்கொள்ளக்கூடிய வகையில் தியான மண்டபமும், தியானம் மேற்கொள்வதற்கான கோயிலும் கீரிமலையில் அமைக்கப்பட்டுள்ளது. கீரிமலை கடற்கரையில் அமைந்துள்ள யாத்திரிகர்களுக்கான மண்டபம் கீரிமலையில் பார்க்கக்கூடிய சடங்கு கீரிமலை ஆலயச்சூழலில் இறந்தோர்க்கு பிதிர்க்கடன் செய்யும் வகையிலான சடங்குகளும் இடம்பெறும். அதிகாலை 3 மணி தொடக்கம் சூரிய உதயம் நிகழும் வரைக்கும் இந்தச் சடங்கினைப் பார்க்க முடியும். சைவ சமயத்தைப் பின்பற்றுகின்ற தமிழ் மக்கள் தம் குடும்பத்தில் இறந்த ஒருவரின் 16ஆம் நாள் கீரிமலைக்கு அதிகாலை வேளை வருகைதந்து, சமய முறைப்படி, இறந்தவர் குறித்த சடங்குகளைச் செய்வதோடு, இறந்தவரை எரித்த பின் எஞ்சிய சாம்பலையும் அக்கடலில் கரைத்துச் செல்வர். இதனைவிட இறந்தவர்களின் ஆத்ம ஈடேற்றத்திற்காக ஒவ்வொரு வருடமும் ஆடி மாதம் இடம்பெறும் ஆடி ஆமாவாசை வழிபாட்டு நிகழ்வுகளும் இங்கு சிறப்பாக இடம்பெறும். நாடு முழுவதுமிருந்து பெருமளவிலான பக்தர்கள் இவ்விடத்திற்கு வருகைதந்து சடங்குகளைச் செய்வர். உணவு மற்றும் தங்குமிடம் கீரிமலைக்கு அண்மித்த தெல்லிப்பளை, காங்கேசன்துறை போன்ற இடங்களில் அதிகளவான தங்ககங்கள் உள்ளன. அதேபோல யாழ்ப்பாணத்தின் உணவுகளைப் பரிமாறும் உணவகங்களும் கீரிமலைக்குப் பயணிக்கும் சாலை ஓரங்களில் உள்ளன. கீரிமலையில் ”அம்மாச்சி உணவகம்” என அழைக்கப்படுகின்ற மலிவு விலை பாரம்பரிய உணவகமும் இயங்கிக்கொண்டிருக்கின்றது. அந்த உணவகத்தில் யாழ்ப்பாணத்தின் உணவுகளை சமைத்து, சுடச்சுட பெண்கள் வழங்குவர். அவ்வுணவுகளின் விலை மலிவானதாகவும் சுகாதாரமானதாகவும் காணப்படுகிறது. இது தவிர ஞாயிற்றுக் கிழமைகளிலும், விசேட தினங்களிலும் கீரிமலையில் அமைந்துள்ள சிவபூமி அறக்கட்டளை என்கிற அமைப்புக்குரிய அன்னதான மடத்தில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. கீரிமலைக்கு சுற்றுலா வரும் பயணிகள்கூட குறித்த இந்த அன்னதான மடத்தில் உணவருந்தமுடியும். அன்னதானத்தைத் தாம் வழங்க விரும்பினாலும் அதனைச் செய்ய இயலும். முடிவாக, யாழ்ப்பாண பண்பாட்டின் மரபுரிமைகளைத் தரிசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் – மனதுக்கு அமைதியைத் தரக்கூடிய இடமொன்றைப் பார்வையிட விரும்பும் சுற்றுலாப் பயணி ஒருவர் தெரிவுசெய்யவேண்டிய முதன்மையிடம் கீரிமலை ஆகும். https://nenarrative.com/தமிழர்-பண்பாட்டு-மரபுரிம/
  13. டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய அமைப்பில் இணைய சீனா மறுப்பு Nishanthan SubramaniyamJanuary 22, 2026 6:54 pm 0 அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடங்கிய ‘போடர் ஒப் பீஸ்’ Board of Peace என்ற அமைப்பில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பை சீனா நிராகரித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையை உறுதியாக ஆதரிப்பதாகவும் சீனா தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீன வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட தகவலை இந்தியாவுக்கான சீன தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், ‘அமைதி வாரியத்தில் இணைவதற்கான அமெரிக்காவின் அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. சீனா எப்போதுமே உண்மையான பலதரப்பு வாதத்தைப் பின்பற்றுகிறது. சர்வதேச சூழல் எவ்வாறு மாறினாலும், ஐ.நாவை மையமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு, சர்வதேச சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கு, ஐ.நா சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளைப் பாதுகாப்பதில் சீனா உறுதியாக இருக்கும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் , உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவதில் தீவிரம் காட்டி வருகிறார். இந்நிலையில், அந்த வாரியத்தில் இணையப் போவதில்லை என்ற முடிவை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் சீனா அறிவித்திருக்கிறது. சீனாவின் இந்த முடிவு, ட்ரம்ப்பின் முயற்சிகளுக்கு மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. https://oruvan.com/china-refuses-to-join-the-organization-launched-by-donald-trump/
  14. கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக பாரிய போராட்டம்; சுமந்திரன் தெரிவிப்பு கிவுல் ஓயா திட்டத்தை இலங்கை தமிழ் அரசுக் கட்சி வன்மையாக எதிர்த்து பாரிய போராட்டத்தை நடத்தும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அரசுக் கட்சி வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை 20ஆம் திகதி அமைச்சரவை மாகாவலி கிபுல் ஓயா திட்டத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது. இத் திட்டம் எப்படியாக இனப்பரம்பலை மாற்றி அமைக்கும் என்றும் தமிழ் மக்களின் உரிமைகளை எந்த அளவுக்குப் பாதிக்கும் என்பதையும் எமது பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் சத்தியலிங்கம் பாராளுமன்றத்தில் தெளிவாக விளக்கியுள்ளார். இந்த திட்ட அமுலாக்கலை தடுக்கும் வகையில் பாரிய எதிர்ப்புப் போராட்டங்களை நாம் நடத்த உள்ளோம். இந்தப் போராட்டங்களில் எம்மோடு இணைந்து கொள்ளுமாறு மற்றைய கட்சிகளையும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம். அடுத்தடுத்த நாட்களில் இது சம்பந்தமான கலந்துரையாடல்கள் வவுனியாவிலும் நாம் நடாத்த உள்ளோம். இவற்றிலும் கலந்து கொண்டு உங்களது கருத்துக்களையும் பகிர்ந்து இப் போராட்டங்களுக்கு வலுச் சேர்க்குமாறு சகலரையும் அன்பாக கேட்டுக்கொள்கிறோம் – என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=357104
  15. அனுமதியின்றி வைக்கப்பட்ட தொல்பொருள் அடையாளப் பலகைகளை அகற்ற தீர்மானம் January 23, 2026 மட்டக்களப்பு ஏறாவூர் பற்று செங்கலடி சபை பிரிவிற்குட்பட்ட பகுதிகளில், பிரதேச சபையின் எந்தவித அனுமதியுமின்றி தொல்பொருள் திணைக்களம் தன்னிச்சையாக அடையாளப் பலகைகளை நாட்டி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அனுமதிபெறப்படாமல் நடப்பட்ட பதாகைகளை சட்டத்தின் கீழ் அகற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழுள்ள செங்கலடி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வியாழக்கிழமை (22) தவிசாளர் மு.முரளிதரன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது வீதிப்பிரச்சினை, வடிகான் பிரச்சினை, தொல்பொருள் பொயர்ப்பலகை உனவிவகாரம் மற்றும் பன்குடாவெளி வட்டாரப்பகுதியில் சூரிய மின்சக்தி திட்டம் அமைத்தலுக்கான அனுமதியை மீள் பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பிரச்னைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது. இதன்போது முக்கிய பிரச்சனைகள் மற்றும் குற்றச்சாட்டுகள் சபை அமர்வின் போது உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டன. அனுமதியற்ற செயற்பாடு 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்கச் சட்டத்தின்படி, உள்ளூர் அதிகார சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள பிரதேச சபையின் அனுமதி அவசியம். ஆனால், தொல்பொருள் திணைக்களம் எவ்வித ஆலோசனையுமின்றி இப்பணிகளை மேற்கொண்டுள்ளது. தொல்பொருள் இடங்களாகக் கூறி மக்களின் விவசாய நிலங்கள் மற்றும் பொதுச் சந்திகளிலும் பலகைகள் நாட்டப்பட்டுள்ளன. இதனால் 56 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும், இது மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் சபையில் சுட்டிக்காட்டப்பட்டது. தொல்பொருள் திணைக்களத்தினால் நாட்டப்பட்டுள்ள அடையாளப் பலகைகளில் தமிழ் மொழி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. வடக்கு-கிழக்கில் நிர்வாக மொழியாக தமிழ் முதன்மையாக இருக்க வேண்டும் என்ற விதியை மீறி, மொழி உரிமை மீறப்பட்டுள்ளதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் செ.நிலாந்தன் கடும் கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக தொடர்பாக மேலும் தெரிவித்த நிலாந்தன் நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது . மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. 1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றிய வர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். மேலும் இதன்போது இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் வ.வவாநந்தன் தமது கடும் கண்டனமான முறையில் தனது வாதத்தை அரசின் செயற்பாட்டிற்கு எதிராக முன்வைத்தார். மேலும் சபையில் தொல்பொருட்களைப் பாதுகாப்பதாகக் கூறிக்கொண்டு, நுணுக்கமான முறையில் நில ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், இது இனங்களுக்கிடையிலான ஒற்றுமையைச் சீர்குலைக்கும் செயல் என்றும் இதன்போது விமர்சிக்கப்பட்டது. முறையான வர்த்தமானி அறிவித்தல் மற்றும் ஆவணங்களின்றி நாட்டப்பட்ட பலகைகள் குறித்து விளக்கம் அளிக்க தொல்பொருள் திணைக்களத்திற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக் செங்கலடி பிரதேச சபையின் தவிசாளர் மு.முரளிதரன் தெரிவித்தார். வழங்கப்பட்ட காலக்கெடுவிற்குள் உரிய ஆவணங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், பிரதேச சபைக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த அடையாளப் பலகைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சபையில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக மத்திய அரசிற்கும் சம்பந்தப்பட்ட திணைக்களங்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிப்பதோடு, தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் சபை தீர்மானித்துள்ளது. தொல்பொருட்களைப் பாதுகாப்பதில் தங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் அவை சட்ட ரீதியாகவும், மக்களின் உரிமைகளை பாதிக்காத வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சபையின் நிலைப்பாடாக உள்ளது என்றார். இதன் போது சட்ட ரீதியாக பெயர்ப்பலகைகளை அகற்றுவது தொடர்பாக உறுப்பினர்களது ஆதரவுடன் பிரேரணையும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மூன்று உறுப்பினர்கள் நடுநிலை வகித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.ilakku.org/resolution-to-remove-archaeological-signs-placed-without-permission/
  16. அனைத்து நாடுகளும் அமைதி வாரியத்தில் இடம்பெற விரும்புவதாக டிரம்ப் கருத்து January 23, 2026 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ள ‘அமைதி வாரியம்’ (Board of Peace) அமைப்பிற்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் நிகழ்வு, (ஜனவரி 22) ஸ்விட்சர்லாந்தின் டாவோஸில் நடைபெற்றது. அப்போது பேசிய டிரம்ப், “இது மிகவும் உற்சாகமான நாள், இதற்காக நீண்ட காலமாக திட்டமிடப்பட்டது” என்று கூறினார். “எல்லோரும் எனது அமைதி வாரியத்தில் ஒரு பகுதியாக இருக்க விரும்புகிறார்கள். ஐக்கிய நாடுகள் சபை உட்பட பலருடன் தொடர்ந்து பணியாற்றுவேன்” என்றும் அவர் தெரிவித்தார். ‘அமைதி வாரியம்’ உருவாக்கப்பட்டவுடன், “நாம் செய்ய விரும்புவதை ஓரளவிற்குச் செய்ய முடியும். அமைதி வாரியம் மற்றும் ஐ.நா-வின் முயற்சிகளை இணைப்பது உலகிற்கு மிகவும் தனித்துவமானதாக அமையும். இது மத்திய கிழக்குப் பிராந்தியத்தின் ஒரு பிரகாசமான எதிர்காலத்திற்கான முதல் படி” என்றும் டிரம்ப் கூறுகிறார். தனது உரையை நிறைவு செய்யும் விதமாக, அமைதி வாரியத்திற்கான ஆவணத்தில் கையெழுத்திடுமாறு பஹ்ரைன் மற்றும் மொராக்கோ பிரதிநிதிகளுக்கு டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்தார். வாரியத்தின் மற்ற உறுப்பினர்கள் கையெழுத்திட அழைக்கப்படுவதற்கு முன்பு, அவர்கள் மூவரும் சிரித்துக் கொண்டே ஆவணங்களை உயர்த்திப் பிடித்தனர். டிரம்ப் தனது உரையின் போது, காஸாவைப் பற்றியும் பேசினார். அங்கிருந்துதான் அமைதி வாரியத்திற்கான திட்டம் தொடங்கியதாக அவர் கூறுகிறார். “ஹமாஸ் அமைப்பு அவர்கள் செய்வதாக உறுதியளித்ததை ‘அநேகமாகச் செய்வார்கள்’. அவர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட வேண்டும், அதைச் செய்யவில்லை என்றால், அது அவர்களின் முடிவாக அமையும்” என்றார் டிரம்ப். ஹமாஸால் நடத்தப்படும் சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி, அக்டோபர் 10 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடங்கியதில் இருந்து காஸாவில் குறைந்தது 466 பாலத்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். https://www.ilakku.org/trump-says-all-countries-want-to-be-on-the-peace-council/
  17. மட்டக்களப்பில் போலி வைத்தியர் கைது! Vhg ஜனவரி 23, 2026 வைத்தியர் என தன்னை அடையாளப்படுத்தி வீடு ஒன்றில் மருத்துவ கிளினிக் நிலையம் ஒன்றை கடந்த 3 வருடங்களாக நடத்தி வந்த போலி வைத்தியர் ஒருவர் நேற்று(23.01.2026) வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள செம்மண் ஓடை பிரதேசத்தில் வைத்து மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர். மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து குறித்த கிளினிக் முற்றுகையிடப்பட்டது. இதன்போது குறித்த வைத்தியசாலை அனுமதி பத்திரம் மற்றும் வைத்தியர் அடையாள அட்டைகளை கேட்டு சோதனையில் ஈடுபட்ட போது அவரிடம் எந்தவிதமான பத்திரங்களும் வைத்தியராக அடையாளப்படுத்தும் காணப்படவில்லை என தெரிய வந்துள்ளது. குறித்த நபர் க.பொ.தர உயர் தரத்தில் மருத்துவ துறையில் கல்வி கற்று வந்துள்ளதாகவும் போதிய புள்ளிகள் இல்லாமல் மருத்துவ துறைக்கு தெரிவு செய்யப்படாமல் உள்ள நிலையில் கண்டிக்கு சென்று அங்கு மருத்துவ துறைக்கு கல்வி கற்று வந்த நிலையில் தனது சொந்த ஊரான செம்மண் ஓடையில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பி வந்து வைத்தியசாலையில் சத்திரசிகிச்சையில் ஈடுபடும் போது வைத்தியர்கள் அணியும் ஆடை போல உடையை அணிந்து கொண்டு தன்னை தானே புகைப்படம் எடுத்துக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது. பின்னர் அதனை தொடர்ந்து போலியாக முகநூல் கணக்கு ஒன்றை ஆரம்பித்து அதில் கண்டி பல்லேகல பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவன் போல போலியான தரவுகள் மற்றும் வைத்தியர் போல உடையணிந்த படங்களை தரவேற்றம் செய்து வீட்டில் ஒரு தனியார் வைத்திய கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 3 வருடங்களாக நோயாளிகளுக்கு மருந்துகளை வழங்கி இயங்கி வந்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து குறித்த போலி வைத்தியரைக செயற்பட்டு வந்த 33 வயதுடையவரை கைது செய்ததுடன் அங்கிருந்த சான்று பொருட்களை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினர் மீட்டு ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை உடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு மற்றும் வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.battinatham.com/2026/01/blog-post_23.html
  18. நாட்டின் இரண்டாவது மிகப்பெரிய வனப்பகுதியாக 'நீல்கல' உத்தியோகபூர்வமாக பிரகடனம் -அதிவிசேட வர்த்தமானி வெளியீடு 23 Jan, 2026 | 12:08 PM இலங்கையின் இரண்டாவது பெரிய வனப்பகுதியான 'நீல்கல' (Nilgala Forest) காப்பகம் உத்தியோகபூர்வமாக பாதுகாக்கப்பட்ட வன ஒதுக்கீடாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் தற்போது வெளியிடப்பட்டுள்ளதாக சுற்றாடல் அமைச்சு அறிவித்துள்ளது. சுமார் 40,684.99 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட இந்த வனப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வலயமாக்கும் நடவடிக்கை, 2025ஆம் ஆண்டு உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு தேசிய வனப்பரிபாலன திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டதாக சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி தெரிவித்துள்ளார். இந்த பிரகடனத்தின் முக்கியத்துவம் குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்: நாட்டின் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதற்கும் சுற்றாடல் சீர்கேட்டைக் குறைப்பதற்கும் எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இது அமையும். இலங்கை போன்ற வெப்பமண்டல நாடுகளுக்கு இவ்வாறான வனப்பகுதிகளைப் பாதுகாப்பது சுற்றாடல் சமநிலைக்கு மாத்திரமன்றி, வனவிலங்குகளுக்கான நிலையான வாழ்விடங்களை உருவாக்குவதற்கும் அவசியமானதாகும். மனிதர்களும் இயற்கையும் இணைந்து வாழக்கூடிய பசுமையான தேசத்தை நோக்கிய பயணத்தை இது மேலும் வலுப்படுத்துகிறது. எதிர்கால சந்ததியினருக்காக பசுமையான சூழலை உருவாக்குவதற்கும், நிலையான உயிர்ச்சூழலை கட்டியெழுப்புவதற்கும் இலங்கை கொண்டுள்ள அர்ப்பணிப்பை இந்த தீர்மானம் மீள உறுதிப்படுத்துவதாக அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மேலும் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/236780

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.