All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நபீயா அணியின் பந்து வீச்சுக்கு அமெரிக்கா அணி வீரர்கள் நல்லா சாத்தினம்......................
- Today
-
புலிகளின் பணம் கனடாவில் யார் யாரிடம் உள்ளது? சம்பவம் அம்பலமானது!
"எடுத்தவனுக்கு ஒரு பாவம், கொடுத்தவனுக்கு பல பாவம்."
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
உண்மை. அலைச்சல், நேரமினக்கேடு, நட்டம் இதனால் கேட்டதை கொடுத்துவிட்டு போய்விடுகிறார்கள். அதையே சாதகமாக வைத்து துரத்துகிறார்கள். ஒருநாளைக்கு கொடுக்க முடியவில்லையென்றால் கதையையே முடித்து விடுகிறார்கள். இவர்களோடு பழக்கம் வைப்பது, கொடுப்பது, நன்மை பெறுவது, உதவி செய்வது எல்லாமே ஒருநாள் ஆபத்திற்தான் முடியும். பொதுவாக இளைஞர்களையே இவர்கள் சிநேகிதம் பிடிப்பார்கள். முன்பெல்லாம் கொழும்புக்கு பயணிகளை ஏற்றிச்செல்லும் சாரதிகளின் நிலை கவலையாக இருக்கும். ஒவ்வொரு செக் பொயிண்ட்டிலும் கொடுக்க வேண்டும். வாகனத்திற்கு பெற்றோல், அதற்குரிய ஒயில், சேவிஸ், செலவு, சாரதி சம்பளம் இப்படி எவ்வளவோ செலவு. சில நேரம் அவர்களிடம் கொடுக்க முடியாவிட்டால் நீதிமன்றம் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் கதையை கேட்கும்போது கவலையாக இருக்கும். இப்போ எப்படியென்று தெரியவில்லை. தமிழ்ப்பிரதேசத்தில் வேலை செய்வதென்றால் அவர்களுக்கு அவ்வளவு குஷி. மாற்றம் வந்துவிட்டால் தங்களுக்கு தெரிந்த கூலிகளை கொண்டு மாற்றவேண்டாம் என்று கோரிக்கை கடிதம் அனுப்பச்சொல்வார்கள். இங்கே வேலை செய்தால் சம்பளம் கூட, அதைவிட மேலதிக வருமானம். தமிழரில் வாழ்ந்து கொண்டு அவர்களுக்கே வினை செய்வது.
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
தில்லை அம்பல நடராஜா .........! 🙏
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! கங்கை அணிந்தவா கண்டோர் தொழும் நிலாசா சதங்கை ஆடும் பாத விநோதா லிங்கேஸ்வரா நின்தாள் துணை நீதா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா அல்லல் தீர்த்தாண்டவா வா வா அமிழ்தானவா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா எங்கும் இன்பம் விளங்கவே எங்கும் இன்பம் விளங்கவே அருள் உமாபதி எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா எளிமை அகல வரம் தா வா வா வளம் பொங்க வா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் பலவித நாடும் கலையேழும் பணிவுடன் உனையே துதிபாடும் கலையலங்கார பாண்டியராணி நேசா கலையலங்கார பாண்டியராணி நேசா மலைவாசா மங்கா மதியானவா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா தில்லை அம்பல நடராஜா செழுமை நாதனே பரமேசா .........! --- தில்லை அம்பல நடராஜா ---
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பிரம்ம ரிஷியார் · poedonstSrgcllre8c0H:8 2t5m83ic020 1ià59c80a2,1lf561545ii210 · காதல்கள் பலவகை ஒவ்வொன்றும் ஒருவகை , அந்த உணர்வு தெய்வீகமானது அல்லது அற்பமானது என்பதெல்லாம் அவரவர் கர்மவினை பொருத்தது பாரதம் எவ்வளவோ காதல் கதைகளை கொண்டிருந்தாலும் உன்னத காதல் , உருக்கமான காதல் நேதாஜியுடையது, அவரின் காதலை கடமை வென்றது, கடமைக்காக காதலை வெல்லும் அளவு அவரின் தாய்நாட்டு பற்று இருந்தது வரலாற்றில் நெப்போலியன் போனபார்ட்டின் காதல் விஷேஷமானது ஆனால் அவளா? பிரான்ஸ் தேசமா? என முடிவு செய்யும் நேரம் வந்தபொழுது என் தாய்நாடே எனக்கு முக்கியம் என நாட்டை நேசித்து அவளை கண்ணீருரன் பிரிந்தான் அந்த மாவீரன் அவன் காதலுக்கு சற்றும் குறையாதது நேதாஜியின் காதல் நேதாஜி என்பவர் நாட்டுக்காய் வாழ்ந்து, நாட்டிற்கு போராடி, நாட்டுக்காகவே செத்தவர். அவரின் பரபரப்பான வாழ்வில் தன் சொந்த வாழ்க்கைக்காக ஏதும் செய்தாரா? அவருக்கும் தனிபட்ட விருப்பங்கள் இருந்ததா என்றால் மகா விசித்திரமான சம்பவங்கள் எல்லாம் உண்டு காந்தி வழியில் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்து சிறையில் இருந்த நேதாஜிக்கு உடல்நிலை மோசமானது, ஆங்கில அரசு உயர் சிகிச்சைக்காக ஐரோப்பா செல்ல அனுமதித்தது ஆம், காந்தியின் சீடனாய் இருக்கும் எல்லோருக்கும் அச்சலுகை உண்டு, ஏன் என்றால் அதுதான் பிரிட்டிசார் தந்திரம்,காந்தி இருக்கும்வரை யாரும் ஆயுதம் ஏந்தமாட்டார்கள் என நம்பினான் பிரிட்டிஷ்காரன் 1934 ஆம் ஆண்டின் இடைப்பகுதிலிருந்து 1936 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வியன்னாவில் அவர் தங்கி இருந்தபொழுது "இந்திய துயரம்" எனும் புத்தகம் எழுதி ஐரோப்பாவில் இந்திய ஆதரவு திரட்ட தீர்மானித்தார், அதற்கு தட்டச்சு செய்ய ஒரு பெண் தேவைபட்டார் அந்த பணிக்கு வந்தவள்தான் எமிலி , 23 வயதுதான் ஆகியிருந்தது. மொழிவளம் அவளுக்கு அபரிமிதமாக இருந்தது நேதாஜி 38 வயதை எட்டியிருந்தார், அதுவரை அவர் தேசம் என்பதை தவிர ஒன்றையும் சிந்தித்தவர் அல்ல ஆனால் பெண் எனும் சக்தி சாதாரணம் அல்ல, இந்திரனை விடுங்கள், விசுவாமித்திரர் முதல் ஏன் சிவனிடமே உடலில் பாதியினை கேட்டு அமர வைத்த பெண்ணுக்கான சக்தி நேதாஜியினை விடுமா? உலகில் ஏன் எதற்கு என தெரியாத ஒரு ஈர்ப்பே பெண் மேலான ஒருவகை ஈர்ப்பு, அதற்கு காதல், காமம், பெண் பொறுக்கிதனம் என எத்தனை பெயர்கள் வைத்தாலும் அதன் ஒரே பெயர் ஈர்ப்புதான் 38 வயதில் நேதாஜிக்கு அந்த சோதனை வந்தது, சட்டென காதலில் விழுந்தார் , அவரின் வரிகளே அந்த காதலை சொன்னது "மலை உச்சியின் பனி சூரிய வெளிச்சம் கண்டதும் உருகுவது போல, என் இரும்பு மனம் உன்னிடம் உருகிவிட்டது" எந்த பராமக்கிரசாலியும் காதலில் விழுவான், ஆனால் மறுநிமிடமே உறுதியான கொள்கையாளன் அதிலிருந்து எழும்பிவிடுவான், அதிலிருந்து வெளிவரமுடியாதவனால் சாதிக்க முடியாது நேதாஜி இனி அவ்வளவுதான் என்றார்கள், நேதாஜியின் காதலால் ஒன்றே அவரின் போராட்ட வாழ்வினை முடிக்கும் சக்தி கொண்டது என்றார்கள் ஆனால் நேதாஜி நாட்டை மறக்கவில்லை எமிலி போஸை முழுக்க புரிந்திருந்தார் அதனால் முழு அரணாக இருந்தார், பலமாக இருந்தார் இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் அனிதா, இத்தாலியின் புரட்சிகர தலைவர் கேரிபால்டியின் மனைவியான பிரேசிலை பூர்விகமாக கொண்ட அனிதா கேரிபால்டி நினைவாக அந்த பெயரிடப்பட்டது. ஆம் வரலாற்றின் மிகபெரும் பெண் போராளியின் பெயரைத்தான் தன் மகளுக்கு சூட்டினார் போஸ், இந்தியாவிற்கு அவள் அப்படி போராட வெண்டும் என்ற கனவு இருந்தது திருமணம் செய்து போஸும் எமிலியும் சேர்ந்திருந்தது வெறும் 3 ஆண்டுகளே, 1942ல் கடைசியாக தன் குடும்பத்தை சந்தித்தார் நேதாஜி அதன் பின் யுத்தம் நேதாஜி மறைவு என காட்சிகள் வந்தன ஆனால் எமிலி நேதாஜி நினைவோடே வாழ்ந்தாள், அவருக்காகவே வாழ்ந்தாள் அவளின் பிற்கால பல தசாப்த வாழ்வு அந்த 3 ஆண்டு நினைவுகளிலேதான் கழிந்தது நினைத்திருந்தால் இந்தியா வந்திருக்கலாம், நேதாஜிக்கு இருந்த பெரும் ஆதரவினை பெற்று பெரும் அரசியல் சக்தியாக வளர்ந்திருக்கலாம் சோனியா போன்றவர்களே அரசியல் செய்யும் இந்தியாவில் அவளுக்கு எல்லா வாய்ப்பும் இருந்தது, ஆனால் அந்த புண்ணியவதி ஒதுங்கி இருந்தாள் என் கணவனின் கனவுபடி இந்தியா சுதந்திரமடைந்துவிட்டது அது போதும் என ஐரோப்பாவிலே இருந்தாள் தன் மகளை, ஆம் நேதாஜியின் ஒரே மகளை மிக சிரமபட்டு தனியாகவே வளர்த்தாள் இந்தியாவில் இருந்தோ இல்லை போஸின் குடும்பத்திடமிருந்தோ ஒரு காசும் அவள் பெறவில்லை, இந்திய காங்கிரஸ் அரசும் அக்குடும்பத்தை ஏறேடுத்தும் பார்க்கவில்லை பலமுறை எமிலியினை ஏராளமானோர் வற்புறுத்தியும் அவள் இந்திய அரசியலுக்கு வரவில்லை, தன் மகளை இந்தியா பக்கம் விடவுமில்லை ஏன் என கேட்டால் கனத்த மவுனமே அவளிடமிருந்து வந்தது "நான் இந்திய அரசியலில் பங்குக்கு வந்தால் நான் நேதாஜியினை காதலித்தது அரசியலுக்காக என்பது போல் ஆகிவிடுமல்லவா? அது அவருக்கு களங்கம் அல்லவா" என மிக நெருக்கமானவர்களிடம் சொன்னார் எமிலி என்பார்கள் எப்படி ஒரு உயர்ந்த உள்ளம் அவருக்கு இருந்திருக்கின்றது? நேதாஜி அவளை ஊர் அறிய திருமணம் செய்யவில்லை, காதல் ரசம் சொட்ட சொட்ட எழுதிய கடிதங்களை கூட கிழித்து போட சொல்லியிருக்கின்றார் ஆனால் அவள் செய்யவில்லை, நேதாஜியின் கடிதங்களோடே வாழ்ந்த அவள் 1996ல் இறந்தாள் நேதாஜி எந்த அளவு எமிலியினை நேசித்தார் என்பதற்கு அந்த கடிதத்தின் வரிகளில் சில “நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்” “ இம்முறை எனது இதயம் உருகுவதை போன்று உணருகிறேன். நான் உன்னை எவ்வளவு விரும்புகிறேன் என்பதை உனக்கு கடிதங்கள் மூலமாக தெரிவிப்பதை நாம் நேரில் உரையாடுவதை போல என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. என் அன்பே, எனது இதயத்தின் ராணி நீதான். ஆனால், நீ என்னை விரும்புகிறாயா?.” “எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஒருவேளை நான் எனது மீதி வாழ்க்கையை சிறையில் செலவிட நேரிடலாம், நான் சுட்டுக் கொல்லப்படலாம் அல்லது தூக்கில் தொங்கவிடப்படலாம். அதனால், நான் உன்னை நேரில் சந்திக்க முடியாமல் போக நேரிடலாம் அல்லது மீண்டும் கடிதத்தை எழுத முடியாமலும் போகலாம். இருப்பினும், நீ எப்போதுமே எனது இதயத்திலும், எண்ணத்திலும், கனவிலும் நிறைந்திருப்பாய். இந்த ஜென்மத்தில் நாம் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழமுடியாவிட்டாலும், அடுத்த ஜென்மத்தில் உன்னுடன்தான் இருப்பேன்" மிக மிக உருக்கமான வரிகள்.. அந்த அப்பழுக்கற்ற போராளி தேச கடமைக்கும் தன் காதலுக்கும் இடையே போராடி இருக்கின்றான், பரிதாபம் எமிலி ஒரு மாவீரனால் காதலிக்கபட்டிருக்கின்றாள் அதுவும் உருகி உருகி காதலிக்கபட்டிருக்கின்றாள், அந்த பெருமையில் காலமெல்லாம் தனியாகவே வாழ்ந்திருக்கின்றாள் நேதாஜி வாழ்க்கையில் மிக குறிப்பிடவேண்டிய பெண் எமிலி, ஒருவகையில் தியாக தலைவி நேதாஜியின் மகள் இன்று ஜெர்மனில் பொருளியல் மேதை இந்நாட்டில் ராகுல் காந்தி போல, உதயநிதி போல, அகிலேஷ் யாதவ் போல இருக்க வேண்டிய அனிதா மகா அமைதியாக ஒதுங்கி வாழ்கின்றார் அட ராகுல் என்ன? சோனியாவின் இடத்தையே பிடித்திருக்கலாம். பெரும் சக்தியாய் உருவாகி இருக்கலாம் காலம் எவ்வளவு விசித்திர விளையாட்டுக்களை எல்லாம் ஆடுகின்றது. கணவனின் கட்சியினை காப்பேன் என வந்து நின்ற சோனியா ஒருவகை, என் கணவன் இல்லா இந்தியாவில் காலடி எடுத்து வைக்க மாட்டேன் என நின்ற எமிலி இன்னொரு வகை பெண்களில்தான் எத்தனை வகை? என் கணவன் கட்சி இது , என் மாமியார் கட்சி இது, எங்கள் குடும்ப கட்சி என கட்சியினை கட்டுபடுத்தும் பெண்களும் இந்தியாவில் இருக்கின்றார்கள் என் காதல் கணவன், என் மாமனார் என் மாமியார் வரிசையில் என் மகனும் பேரனும் இக்கட்சியில் தலைசூடி பின் நாட்டில் முடிசூட வேண்டும் என தவமிருக்கும் பெண்களும் இந்தியாவில்தான் இருக்கின்றார்கள் ஆனால் "நான் நேதாஜியினை காதலித்தேன், அந்த பரிசுத்தமான காதலை அரசியல் முதலீடாக என்னால் செய முடியாது, அவர் பெயரை கொண்டு நான் ஏதும் பெற்றால் அது என் காதலுக்கே களங்கம்" என சொன்ன எமிலியின் அருகில் கூட இந்த பெண்களெல்லாம் வரமுடியாது உலகின் அதிசுத்தமான காதல் எமிலியுடையது, எந்த காதலையும் அதற்கு ஈடாக சொல்லவே முடியாது நிபந்தனையே இல்லா அன்புதான் காதல், அதனை மிக அதிகமாக பெற்றிருக்கின்றார் நேதாஜி ஆனால் வெறும் 3 ஆண்டுகள்தான் அது நிலைத்திருக்கின்றது நேதாஜி கடிதத்தின் அந்த வரியினை பாருங்கள், எவ்வளவு அழகாக எழுதபட்ட வரி “நான் உன்னுள் இருக்கும் பெண்ணையும், ஆன்மாவையும் காதலிக்கிறேன். ஆத்மார்த்தமாக என் ஆத்மாவில் இருந்து நான் நேசிக்கும் முதல் பெண்மணி நீதான்” இந்த வரிக்காகத்தான் கடைசி வரை தனியாகவே இருந்து மகளை வளர்த்து அவருக்காகவே வாழ்ந்தாள் எமிலி இந்நாட்டிற்காக வாழ்க்கையினை தொலைத்த தம்பதிகளில் நேதாஜிக்கும் எமிலிக்கும் நிச்சயம் இடம் உண்டு நேதாஜியினை முழுக்க புரிந்த பெண் காதலியாய் மனைவியாய் அவருக்கு கிடைத்தது ஒருவரம், தன் வாழ்நாளில் அந்த மாவீரன் கண்ட நிம்மதியும் மகிழ்வும் இது ஒன்றுதான், தன் வாழ்வில் சில நிமிடங்கள் மட்டும் அவன் நிம்மதியாக இருக்கட்டும் என தெய்வம் அனுப்பிய பெண் அந்த எமிலி நேதாஜியின் நாளில் "என் காதல் புனிதமானது, அவர் பெயரை கொண்டு அரசியல் செய்து அதற்கு களங்கம் கற்பித்து, நான் அரசியல்வாதியாகவே காதலித்தேன் எனும் அவப்பெயரை என் கணவனின் வரலாற்றில் பதிவு செய்ய நான் விரும்பவில்லை ஐரோப்பிய அந்நியரை எதிர்த்து ஆயுதம் ஏந்திய அவரின் நாட்டில் ஒரு ஐரோப்பிய பெண்மணியான நான் அரசியலுக்கு வந்தால் அது சரியல்ல, நான் அவரின் மனைவி என்பதால் அவர் கனவுகளை சிதைக்கமுடியாது அது இந்திய மக்களுக்கும் அவருக்கும் செய்யும் துரோகம், என் மனசாட்சி என்னை மன்னிக்காது" என சொல்லி பெரும் அரசியல் எதிர்காலத்தை தவிர்த்த அந்த புண்ணியவதிக்கு டெல்லியில் சிலை வைக்க வேண்டும் அதை எங்கே வைக்கவேண்டும், யார் வீட்டு முன்னால் வைக்க வேண்டும் என்பது சொல்லி தெரியவேண்டியதில்லை தமிழகத்தில் எமிலிக்கு ஒரு அடையாளம் வேண்டுமென்றால் அச்சிலை எங்கே நிறுவபடவேண்டும் என்பதை நீங்களே சொல்வீர்கள் எமிலி போஸ் ஒரு தியாக தலைவி, உண்மை காதலின் சுடர், நேதாஜி உள்ளளவும் அவள் புகழும் அவள் காதலும் தியாகமும் வாழ்ந்து கொண்டே இருக்கும் அருமையான காதலி, தங்க அருமையான தேசம், சுகவாழ்வு , பெரும் எதிர்காலம் என எல்லாவற்றையும் நாட்டுக்காக துறந்து செல்ல அந்த நேதாஜிக்கு எப்படிபட்ட தேசபற்று இருந்திருக்க வேண்டும்? நினைத்தாலே நெஞ்சம் கசியும் அர்பணிப்பு அது எமிலிக்கு பின்னும் ஏராளமான பெண்களை சந்தித்தாலும் அவரின் மனம் காதலில் ஏன் விழவில்லை என் என்றால் அதுதான் அவர் சொன்னபடி "ஆன்மாவில் இருந்து உதித்த காதல்" அப்படிபட்ட காதலைத்தான் இங்கு நினைத்து பார்த்தல் அவசியம், தேசத்துக்கும் கடமைக்கும் காதல் தடையாக இருக்குமென்றால் அதை தள்ளிவைத்த நேதாஜியின் தியாகம் எவ்வளவு பெரிதாக இருந்திருக்க வேண்டும்? கடைசிவரை கஸ்தூரிபாயினை இன்னும் சிலரை தன்னோடு வைத்த காந்தி, ஐரோப்பிய ரோஜாவை சுமந்த நேருவோடு நேதாஜியினை ஒப்பிடுங்கள் அந்த மாமனிதன் நாட்டுக்காக காதலை துறந்தான் என்பதும், அந்த காதலி கடைசிவரை அவன் நினைவில் அவன் புகழை காத்து நின்றாள் என்பதும், சல்லி காசுக்கும் சிறிய புகழுக்கும் ஆசைபட்டாலும் அவன் பெயருக்கு ஆபத்து என ஒதுங்கி நின்றாள் என்பதும் நினைக்க நினைக்க கண்ணீர் விடவைக்கு நெகிழ்ச்சி பாரதம் கண்ட காதலர்களில் நாட்டுக்காய் போராடிய காதலர்களான சாஸ்திரி லலிதா காதல் உள்பட பல காதல்கள் உண்டு அதனில் முதல் இடத்தில் நிற்பவர் நேதாஜி அவரோடு சரிக்கு சமமாக நிற்பவர் அந்த எமிலி தேசிய கீதம் ஒலிக்கும் பொழுதெல்லாம் ஓரத்தில் இந்த காதலர்களின் தியாக கீதமும் ஒலிக்கத்தான் செய்யும், தேசத்துக்காய் இணைந்த காதல் அது, தேசத்துக்காய் எரிந்த காதலும் அதுவே.......!
-
கருத்து படங்கள்
- நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!
நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை! நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் ஒன்றை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த பகுதியில் அநாதரவாக நின்ற சொகுசு கார் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்தனர். இதேவேளை நீர்கொழும்பு பொலிஸார் குறித்த காரினை காணவில்லை என விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் கார் யாழ்ப்பாண பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளமையை அறிந்து , யாழ்ப்பாணம் வருகை தந்து காரினை மீட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நீர்கொழும்பில் வாகனங்களை வாடகைக்கு விடும் நிறுவனம் ஒன்றில் கார் ஒன்றினை வாடகைக்கு பெற்ற நபர் , சில நாட்கள் காரினை செலுத்திய பின்னர் , அதன் தடம் அறி (GPS) கருவியை செயலிழக்க வைத்துள்ளார். அதனை அடுத்து , வாகனம் வாடகைக்கு கொடுத்தவர் நீர்கொழும்பு பொலிசாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். அதன் பிரகாரம் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்துள்ளனர். அதே நேரம் , காரினை வாடகைக்கு பெற்றவர், யாழ்ப்பாணத்தில் ஒரு நபரிடம் காரினை அடமானமாக வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று சென்றுள்ளார். இந்நிலையில், அடமானம் வைத்த கார் , நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற கார் எனவும் , கார் தொடர்பில் நீர்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதனையும் அறிந்த , காரினை அடமானமாக வைத்து பணம் கொடுத்த நபர் , பொலிஸ் விசாரணைகளுக்கு பயந்து காரினை வீதியில் அநாதரவாக விட்டு தப்பி சென்றுள்ளார். இதேவேளை, காரினை அடமானம் வைத்து பணத்தினை பெற்று சென்ற நபரை கைது செய்வதற்கு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavannews.com/2026/1464869- உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது.
உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் கைது. பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இறந்த இக்கோழிகளை விலங்கு உணவிற்காகக் கொண்டு செல்வதாகக் கூறி, அவற்றை மனித நுகர்விற்காக (உணவுக்காக) விற்பனை செய்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது. கிடைத்த தகவலொன்றின் அடிப்படையில், ஆனமடுவ சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகக் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை ஆனமடுவ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. https://athavannews.com/2026/1464896- தன்னைத் தானே தோற்கடிப்பது? - நிலாந்தன்
தன்னைத் தானே தோற்கடிப்பது? - நிலாந்தன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவியில் இருந்து சிறீதரன் நீக்கப்பட்டு சாணக்கியன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அதை ஒரு வெற்றியாக சாணக்கியனின் ஆதரவாளர்கள், சுமந்திரன் அணியைச் சேர்ந்தவர்கள் ஆங்காங்கே கொண்டாடினார்கள். உலகமே வியக்கும் வெற்றிகளைக் கொண்டாடிய தமிழ் மக்கள் இப்பொழுது இப்படிப்பட்ட அற்ப வெற்றிகளைக் கொண்டாடும் மக்களாக சிறுத்துப் போய்விட்டார்கள்? தமிழரசுக் கட்சி என்பது 75 வயதான ஒரு கட்சி. தனது உட்கட்சிப் பகையை பிரதிபலிக்கும் ஒரு வெற்றியைக் கொண்டாடக்கூடாது என்று தனது தொண்டர்களுக்குச் சொல்லும் மாண்பை அந்தக் கட்சி இழந்து விட்டதா? ஏற்கனவே மாவையின் இறுதி நாள் நிகழ்வில் சுடலை வரை மோதல் வந்தது. அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு நாளிலும் அந்த மோதல் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தியது. நாடாளுமன்றக் குழுத் தலைவர் பதவிக்கு சாணக்கியன் நியமிக்கப்பட்டதை கிழக்கில் உள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் வரவேற்கவில்லை என்று தெரிகிறது. மூத்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கத்தக்கதாக இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சிறீதரனை அகற்றும் பொழுது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் முக்கியமானது, அவர் அரசியலமைப்பு பேரவையில் ஒரு படை அதிகாரிக்கு ஆதரவாக வாக்களித்தார் என்பதுதான். ஆனால் சாணக்கியன் யார்? யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ராஜபக்சக்களோடு நின்றவர். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னரும் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக அவர்களோடு காணப்பட்டவர். அவர்களுடைய கட்சியின் அமைப்பாளராகச் செயல்பட்டவர். அவருடைய ஆதரவாளர்கள் உட்கட்சி மோதலில் கிடைத்த வெற்றியை வெடி கொளுத்தி, இனிப்புக் கொடுத்து,பனர் கட்டி கொண்டாடியிருக்கிறார்கள். இந்த கொண்டாட்டங்கள் நமக்கு உணர்த்துவது எதை என்றால், உட்கட்சிப் பகை எந்த அளவுக்கு கூர்மையானதாக இருக்கிறது; எந்த அளவுக்கு நாகரீகமற்றதாக மாறியிருக்கிறது என்பதைத்தான். அது தவறு என்று சாணக்கியனுக்கோ அல்லது தொண்டர்களுக்கோ சொல்லக்கூடிய மூப்பும் முதிர்ச்சியும் உள்ள ஆட்கள் கட்சிக்குள் இல்லை என்று தெரிகிறது. 75 வயதான கட்சிக்குள் முதன் முதலாக தலைவர் தெரிவிற்காக நடந்த ஒரு தேர்தல். அதில் தெரிவு செய்யப்பட்டவர்,கடந்த இரண்டு ஆண்டுகளாக தலைமைப் பொறுப்பை ஏற்கவிடாமல் தடுக்கப்பட்டு வருகிறார். படிப்படியாக கட்சிக்குள்ளேயே முடக்கப்பட்டு வருகிறார். 75 வயதான ஒரு கட்சியின் உட்கட்சி ஜனநாயகத்தை விளங்கிக் கொள்ள இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா ? இதன் பொருள்,சிறீதரன் கிளிநொச்சியில் ஜனநாயகச் செழிப்பான ஒரு சூழலைப் பேணி வருகிறார் என்பதல்ல. அங்கே அவர் தன்னுடைய அரசியல் எதிரிகளை அணுகும் விதமும், அவருடைய ஆதரவாளர்கள் அரசியல் எதிரிகளை விமர்சிக்கும் விதமும் பண்பானவைகளோ அல்லது அரசியல் நாகரீகத்தைப் பேணுகின்றவையோ அல்ல. தன்னுடைய எதிரிகளை மேடைகளில் பகிரங்கமாக பெயர் சொல்லி விமர்சிக்கிறார். அவருடைய அணியைச் சேர்ந்தவர்கள் சமுக வலைத் தளங்களில், முகத்தைக் காட்டியும், முகத்தைக் காட்டாமலும் வந்து, தமது அரசியல் எதிரிகளின் குடும்பத்தை இழுத்து, சகோதரர்களை இழுத்து விமர்சிக்கிறார்கள். தமிழரசுக் கட்சியின் உட் கட்சி ஜனநாயகத்தில் குற்றம் காண்பது என்பது அதன் ஒரு பகுதியாக கிளிநொச்சியில் காணப்படும் அரசியல் விமர்சனச் சூழலையும் சுய விமர்சனத்திற்கு உட்படுத்துவதுதான். எந்தத் தேசியவாதத் தராசில் வைத்து சிறீதரன் தனது எதிரிகளை நிறுத்தாரோ, அதே தேசியவாதத் தராசில் வைத்து சுமந்திரன் அணி அவரை நிறுக்கிறது. அதன்மூலம் அவருடைய வாக்காளர்கள் மத்தியில் அவரை மதிப்பிறக்கம் செய்வதே அவர்களுடைய நோக்கம். அதை கஜேந்திரக்குமார் அணி செய்தால் அதற்கு ஒரு பொருள் இருக்கும். ஆனால் சுமந்திரன் செய்தால் அதற்குப் பொருள் இருக்காது. ஏனென்றால் சுமந்திரன் ஏற்கனவே தமிழ்த் தேசிய நீக்கத்துக்கு தலைமை தாங்குகிறார் என்ற குற்றச்சாட்டுக்கு இலக்காகியுள்ளார். அவர் எவ்வளவு கெட்டிடித்தனமானவராக இருந்த போதிலும்,எத்தனை சதி சூழ்ச்சிகளைச் செய்த போதிலும்,கட்சியை முழுமையாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியாதிருப்பதற்கு இதுவும் ஒரு காரணம். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக முடக்கப்பட்டு வரும் சிறீதரனும் தனது தலைமைத்துவத்தை நிரூபிக்க தவறிவிட்டார். அவரை நம்பி வாக்களித்த கட்சிக்காரர்களுக்கும் அவர் தலைமை தாங்கவில்லை. மக்களுக்கும் நம்பிக்கையூட்டும் விதத்தில் அவர் நடந்து கொள்ளவில்லை. அண்மையில் யாழ்ப்பாணம் வைஎம்சிஏ மண்டபத்தில் நடந்த பெப்ரவரி நான்கு நிகழ்வின் போது, தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் ஐங்கரநேசசன் சிறீதரனை குறித்து உள்ளூர் பழமொழி ஒன்றை எடுத்துக் காட்டினார். ”பனங்கிழங்கு முத்தினால் நாராகிவிடும்” என்பதே அந்தப் பழமொழி. சிறீதரனின் தலைமைத்துவத்தின் நிலைமையும் அப்படித்தானா? தனது கடைசிக் கட்டத்தில் மாவை சேனாதிராஜாவும் அப்படித்தான் காணப்பட்டார். நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர் கட்சிக்குள் பலமாக இருக்க முடியாது என்ற வாதம் சரியாக இருந்தால்,சுமந்திரன் எப்படி கட்சிக்குள் தீர்மானிக்கும் சக்தியாக மேலெழ முடிந்தது? அண்மையில் மாவையின் முதலாம் ஆண்டு நினைவு அனுஷ்டிக்கப்பட்டது. அங்கேயும் உட்கட்சிப் பூசல்கள் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தின. மாவை துணிச்சலாகவும் மிடுக்காகவும் முடிவுகளை எடுக்கத் தவறியதன் விளைவாக, தானும் தோற்று கட்சியையும் தோற்கடித்து விட்டார். அவர் இறந்து ஓராண்டின் பின்னரும் கட்சி ஒரு சீருக்கு வரவில்லை என்பதைத்தான் அண்மையில் அவருடைய முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் நமக்கு உணர்த்தின. மாவையோடு ஒப்பிடுகையில் சிறிதனிடம் தலைமைப் பண்பு அதிகம். மாவை அளவுக்கு அவர் நசிய மாட்டார். தனது மாவட்டத்தில் கட்சிக் கட்டமைப்பை பலமாகக் கட்டி எழுப்பி வைத்துள்ளார். அவருடைய வாக்கு வங்கி போரால் பாதிக்கப்பட்டவர்களை அதிகம் பிரதிபலிப்பது. அதைவிட மேலகமாக, தீவு மைய, கிளிநொச்சி மைய வாக்குகளும் அங்கே உண்டு.கட்சியை விட்டு நீங்கினாலும் கிளிநொச்சியில் சிறீதரன் ஒரு பலமான சவாலாக இருப்பார். ஆனால் இங்கே பிரச்சனை அதுவல்ல. தமிழ்த் தேசிய அரசியலின் பிரதான இலக்கு தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டி,பலமான பேரம் பேசும் சக்தியாக கொழும்பிலும் உலக சமூகத்தின் முன்னும் முன்னிறுத்துவதுதான். அதை சிறீதரன் செய்வார் என்று நம்பத்தக்கதாக கடந்த இரண்டு ஆண்டுகளும் அமையவில்லை. அண்மையில் ஒரு காணொளி ஊடகத்துக்கு வழங்கிய நேர்காணலில் அவர் பொறுமைக்கும் சகிப்புத் தன்மைக்கும் முன்னுதாரணமாக கட்சிக்குள் தொடர்ந்தும் இருக்கப்போவதாக பொருள் கொள்ளத்தக்க விதத்தில் பதில் கூறியிருந்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கட்சிக்குள் ஒட்டிக் கொண்டிருப்பதனால் அவர் தன்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை மட்டுந்தான் தக்கவைத்துக் கொண்டார். கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் தனது தலைமைத்துவத்தை எந்தளவுக்கு ஸ்தாபித்திருக்கிறார்? சுமந்திரனைப் பொறுத்தவரை இப்பொழுதும் கட்சியை முழுமையாக அவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. சிறீதரனை கட்சிக்குள் இருந்து அகற்றினால் மட்டும்தான் அவருக்கு முழு வெற்றி. ஆனால் அதை அவரால் இன்றுவரை செய்ய முடியவில்லை. சிறீதரன் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகித்து, அவமானப்படுத்தி அவராக கட்சியை விட்டு விலகும் அளவுக்கு நிர்பந்திப்பது என்று சுமந்திரன் சிந்திக்க கூடும். ஏனென்றால் இதே விதமான உத்தியைத்தான் அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருந்த போது பங்காளிக் கட்சிகள் மீதும் பிரயோகித்தார். பங்காளிக் கட்சிகளுக்கு நெருக்கடியைக் கொடுத்து அவர்களாக விலகப் பண்ணினார். அப்படித்தான் விக்னேஸ்வரனின் விடையத்திலும். ஆனால் அவருடைய உத்திகளின் விளைவுகள் என்ன? முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சிதைக்கப்பட்டது. இப்பொழுது தமிழரசுக் கட்சியும் சிதைக்கப்படுகிறது. கடந்த இரண்டு ஆண்டு கால கயிறு இழுத்தல் போட்டியில் யாரும் முழு வெற்றி பெறவில்லை. இது 75 வயதான கட்சியின் உள்விவகாரங்களை முழுமையாக தனது கைக்குள் கொண்டு வரத்தக்க தலைவர் யாரும் இப்பொழுது கட்சிக்குள் இல்லை என்பதைத்தான் காட்டுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவும் சுமந்திரனால் கட்சியை முழுமையாக தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. 2024 இல் கட்சிக்குள் நடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதையும் அதே ஆண்டின் இறுதியில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டதையும் அவரால் ஜீரணிக்க முடியவில்லை. கொழும்பில் அவர் சவால்கள் மிகக் குறைந்த ஒரு சட்டவாளராகக் காணப்படுகிறார். ஆங்கிலம் பேசும் உயர் குழாத்தின் மத்தியிலும், அரசியல் சமூகம்,ராஜதந்திர சமூகம், ராணுவ சமூகம் மற்றும் சிவில் சமூகங்களின் மத்தியிலும் மதிக்கப்படும் தமிழ் அரசியல்வாதியாக அவர் காணப்படுகிறார். தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்று கொழும்பில் ஒரு தீர்மானகரமான சக்தியாக அவர் வலம்வந்தார். 2024 அவரைப் பொறுத்த வரை ஒரு கெட்ட ஆண்டு. தோல்விகரமான ஆண்டு. அந்த ஆண்டில் கிடைத்த தோல்விகளால் கொழும்பில் அவருடைய மதிப்பு குறைந்து போய் விடக்கூடாது என்று அவர் அந்தரப்படுகிறார். ஆனால் அவருடைய தந்திரமான, புத்திசாலித்தனமான நடவடிக்கைகளின்மூலம் கட்சியை அவருடைய முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இன்றுவரை முடியவில்லை. சிறீதரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சிக்குள் காணப்படும் சுமந்திரன் எதிர் அணி ஒரு புதிய அணியாக மேலெழக்கூடும். தமிழரசுக் கட்சியானது வெல்லும் கட்சி என்ற நம்பிக்கை உடைக்கப்படுமாக இருந்தால் அக்கட்சிக்குள் இப்பொழுது ஒட்டிக் கொண்டிருக்கும் பலரும் கழண்டு போய் விடுவார்கள். அந்த நம்பிக்கை கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குறிப்பிடத்தக்க அளவுக்கு உடைக்கப்பட்டது. தேசிய மக்கள் சக்திக்கும் தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்ப் பகுதிகளில் ஒரே எண்ணிக்கையான ஆசனங்கள்தான். இப்பொழுதும் தமிழரசுக் கட்சிக்குள் காணப்படும் தீராத உட் பகையை தேசிய மக்கள் சக்தி நம்பிக்கையோடு பார்த்துக் கொண்டிருக்கிறது, மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இடைப்பட்ட காலத்தில் தனக்கு புதிய வாய்ப்புகள் திறக்கப்படுமா என்று எதிர்பார்ப்போடு. https://www.nillanthan.com/8134/- தலங்கம -அக்குரேகொட பகுதியில் துப்பாக்கிச் சூடு-இருவர் உயிரிழப்பு!
தலங்கம துப்பாக்கிச்சூடு – கரந்தெனிய சுத்தாவின் வழிநடத்தலாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம்! தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரையும் அவரது மனைவியையும் கொலை செய்ய துப்பாக்கிதாரிகள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் கார், காலி – அகலிய, குட்டியாவத்தை பகுதியில் உள்ள வீதியொன்றில் கைவிடப்பட்டிருந்த நிலையில் நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த கார் கண்டெடுக்கப்பட்ட போது அது தீப்பற்றி எரிந்துகொண்டிருந்ததாக அந்தப் பணியகம் தெரிவித்துள்ளதுடன் கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பொலிஸார் அங்கு விரைந்த சந்தர்ப்பத்தில் எரியூட்டப்பட்ட நிலையில் கார் காணப்பட்டதாக குறிப்பிட்டனர். இதேவேளை, இந்தக் கொலையானது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் குழு உறுப்பினரான “கரந்தெனிய சுத்தா” எனப்படும் ஜயலத் சில்வா என்பவரால் வழிநடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். குறித்த சட்டத்தரணி முன்னர் கரந்தெனிய சுத்தாவின் வழக்குகளுக்காக ஆஜராகி வந்ததாகவும், பின்னர் அவரது எதிரியான “லோகு பெட்டி” எனப்படும் குற்றவாளியின் வழக்குகளுக்காக ஆஜராகியுள்ளதாகவும் தெரியவந்துள்ளதுடன் இதன் காரணமாக, கரந்தெனிய சுத்தா தொடர்பான தகவல்களை லோகு பெட்டிக்கு வழங்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், சுத்தாவின் தரப்பினரால் இந்த கொலைச் சம்பவம் அரங்கேற்றப்பட்டிருக்கலாம் என பொலிஸார் முன்னர் தெரிவித்திருந்தனர். இதேவேளை, சம்பவம் தொடர்பாக நுகேகொடை பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது. https://athavannews.com/2026/1464893- கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு!
கேரளாவில் 10 மாத பெண்குழந்தையின் உடல் உறுப்புகள் தானம் – 4 பேருக்கு மறுவாழ்வு! கேரளாவில், சாலை விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மனைவி ஷெரின் அன்ஜான் ஆகியோருக்கு அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற 10 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. , கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் தாய்வழி பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது சாலை விபத்தில் படுகாயம் அடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள அம்ரிதா மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இதையடுத்து, பெற்றோர் ஒப்புதலுடன் குழந்தையின் உறுப்புகள் தானம் பெறப்பட்டன. இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன. குழந்தையின் இதயம் திருவனந்தபுரத்தில் உள்ள சித்திரை திருநாள் மருத்துவமனைக்கும், கல்லீரல் கிம்ஸ் மருத்துவமனைக்கும், சிறுநீரகங்கள் அரசு மருத்துவக் கல்லுாரிக்கும் எடுத்துச் செல்லப்பட்டு, நான்கு பேருக்கு பொருத்தப்பட்டன. கண்கள் கண் வங்கிக்கு தானமாக தரப்பட்டன. மறுவாழ்வு பெற்ற நான்கு பேரின் குடும்பத்தினர் பெண் குழந்தையின் பெற்றோருக்கு நன்றி தெரிவித்தனர். இந்த உடலுறுப்பு தானம் மூலம், கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார். https://athavannews.com/2026/1464878- உக்ரைனுக்கு மாத்திரம் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!
உக்ரைனுக்கு மாத்திரம் அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு! ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல் எங்களுக்கு மட்டும் அமெரிக்கா அழுத்தம் தருகிறது என உக்ரைன் ஜனாதிபதி வோளடிமீர் ஜெலன்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார். சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றிலேயே ஜெலனஸ்கி இதனை கூறியுள்ளார். இதேவேளை, அதில் , பேச்சுவார்த்தையில் ரஷ்யா என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை எனவும் ரஷ்யாவின் பிடிவாதத்தைப் பற்றி விவாதிக்காமல், உக்ரைனை மட்டும் குறிவைப்பது முறையல்ல.எனவும் ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையில் உக்ரைன் மட்டுமே தொடர்ந்து சமரசம் செய்ய வேண்டும் என அமெரிக்கா அழுத்தம் தருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், உக்ரைன் மட்டும் விட்டுக்கொடுக்க வேண்டுமா? ஜெனீவாவில் பெப்ரவரி 17,18ம் திகதி நடக்க உள்ள முத்தரப்பு அமைதிப் பேச்சுவார்த்தை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது எனவும் ஜெனீவாவில் நடைபெற உள்ள முத்தரப்பு கூட்டங்களுக்கு முன்னதாக, ஜனாதிபதி டிரம்பின் தூதர்களுடன் உரையாடியதாகவும் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவுடனான சந்திப்பு குறித்தும் தான் பேசியதாகவும் ஜெலனஸ்கி கூறியுள்ளார். https://athavannews.com/2026/1464860- பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்த காணொளிக்கு ஒபாமா பதிலடி
பொது வாழ்வில் கண்ணியம் மறைந்துவிட்டது ; டொனால்ட் ட்ரம்ப் பகிர்ந்த காணொளிக்கு ஒபாமா பதிலடி 15 Feb, 2026 | 11:24 AM அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் அவரது மனைவி மிச்செல் ஒபாமாவை இனவெறியைத் தூண்டும் வகையில் சித்தரித்த காணொளிவை தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக ஊடகத்தில் பகிர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ட்ரம்ப்பின் 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் பகிரப்பட்ட அந்த காணொயில், 2020 தேர்தல் முறைகேடுகள் குறித்த ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருந்தன. அதன் இறுதியில், ஒபாமா மற்றும் மிச்செல் ஒபாமாவின் முகங்களை குரங்குகளின் உடலுடன் இணைத்து மிகவும் இழிவாகச் சித்தரிக்கும் ஒரு பகுதி இடம்பெற்றிருந்தது. பின்னணியில் 'The Lion Sleeps Tonight' என்ற பாடல் ஒலிக்கப்பட்டது. இந்த காணொளிக்கு ஜனநாயகக் கட்சியினர் மட்டுமன்றி, ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சியினரே கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். குடியரசுக் கட்சியின் ஒரே கறுப்பின செனட்டரான டிம் ஸ்காட், "இந்த வெள்ளை மாளிகையில் இருந்து நான் பார்த்த மிக மோசமான இனவெறிச் செயல் இது" என சாடினார். முதலில் இதனை சாதாரண 'மீம்' (Meme) ஒன்று என நியாயப்படுத்திய வெள்ளை மாளிகை, பின்னர் எழுந்த எதிர்ப்பால் அந்தப் பதிவை நீக்கியது. இது ஒரு ஊழியரால் தவறுதலாகப் பகிரப்பட்டது என்று விளக்கம் அளித்தது. பிரையன் டெய்லர் கோஹன் என்பவரின் பொட்காஸ்ட் நிகழ்ச்சியில் பங்கேற்ற பராக் ஒபாமா, ட்ரம்ப்பின் பெயரை நேரடியாகக் குறிப்பிடாமல் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்: "பொது வாழ்வில் இருக்க வேண்டிய வெட்கம் மற்றும் கண்ணியம் தற்போது தொலைந்து போய்விட்டது. சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் ஒருவிதமான 'கோமாளிக்கூத்து' நடந்து கொண்டிருக்கிறது. ஆனால், அமெரிக்க மக்கள் இன்னும் நேர்மை மற்றும் இரக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர்." இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, "நான் அந்த வீடியோவின் ஆரம்பப் பகுதியை மட்டுமே பார்த்தேன். இறுதியில் இருந்த அந்தப் படத்தை நான் பார்க்கவில்லை. நான் எந்தத் தவறும் செய்யவில்லை, அதனால் மன்னிப்பு கேட்கத் தேவையில்லை," என ட்ரம்ப் பதிலளித்தார். இந்த விவாதங்களுக்கு மத்தியில், சிக்காகோவில் அமைக்கப்பட்டு வரும் தனது ஜனாதிபதி நூலகம் (Obama Presidential Library) தொடர்பில் ஒபாமா உற்சாகமாக உரையாற்றினார். இது வரும் ஜூன் 2026-இல் பொதுமக்கள் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238684- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நடப்பு ரி20 உலகக் கிண்ணத்தில் 3ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய முதலாவது அணி தென் ஆபிரிக்கா Published By: Vishnu 14 Feb, 2026 | 11:17 PM (நெவில் அன்தனி) நியூஸிலாந்துக்கு எதிராக அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் சனிக்கிழமை (14) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண டி குழுப் போட்டியில் 7 விக்கெட்களால் தென் ஆபிரிக்கா வெற்றியீட்டியது. இதன் மூலம் இந்த வருட ரி20 உலகக் கிண்ண போட்டியில் 3ஆவது நேரடி வெற்றியை ஈட்டிய முதலாவது அணி என்ற பெருமையை தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்டது. இந்த வெற்றியுடன் தென் ஆபிரிக்கா சுப்பர் 8 சுற்றில் விளையாட பெரும்பாலும் தகுதிபெற்றுக்கொண்டுள்ளது. அப் போட்டியில் மாக்கோ ஜென்சனின் 4 விக்கெட் குவியல், அணித் தலைவர் ஏய்டன் மார்க்ராமின் ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன தென் ஆபிரிக்காவின் வெற்றியை இலகுவாக்கின. முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 175 ஓட்டங்களைப் பெற்றது. மார்க் செப்மன் 48 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 32 ஓட்டங்களையும் பின் அலன் 31 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மாக்கோ ஜென்சன் 40 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றினார். சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் மாக்கோ ஜென்சன் பதிவு செய்த முதலாவது 4 விக்கெட் குவியல் இதுவாகும். 176 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 17.1 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வருட ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் அதிகூடிய வெற்றி இலக்கை விரட்டிக் கடந்த அணி என்ற பெருமையை தென் ஆபிரிக்கா பெற்றுக்கொண்டது. ஏய்டன் மார்க்ராம் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய 44 பந்துகளில் 8 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 84 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். குவின்டன் டி கொக் (20), ரெயான் ரிக்கெல்டன் (21), டிவோல்ட் ப்ரவிஸ் (21), டேவிட் மில்லர் (24 ஆ.இ.) ஆகியோரும் துடுப்பாட்டத்தில் சிறப்பான பங்களிப்பை வழங்கினர். குவின்டன் டி கொக்குடன் ஆரம்ப விக்கெட்டில் 62 ஓட்டங்களைப் பகிர்ந்த ஏய்டன் மார்க்ராம், 2ஆவது விக்கெட்டில் ரெயான் ரிக்கெல்டனுடன் 40 ஓட்டங்களையும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் டேவிட் மில்லருடன் 47 ஓட்டங்களையும் பகிர்ந்தார். ஆட்டநாயகன்: மாக்கோ ஜென்சன் https://www.virakesari.lk/article/238666- ரஷ்யா வட்ஸ்அப் சேவையை முழுமையாக முடக்க முயற்சி - மெட்டா நிறுவனம் குற்றச்சாட்டு
ரஷ்யாவில் வட்ஸ்அப் செயலிக்கு தடை Published By: Digital Desk 3 15 Feb, 2026 | 11:17 AM ரஷ்யாவில் வட்ஸ்அப் மீதான தடை உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக கிரெம்ளின் மாளிகை உறுதிப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கிரெம்ளின் ஊடகப் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ், இந்த தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டு தற்போது முழுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தேசிய சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறை விதிகளைப் பின்பற்ற வட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து மறுத்து வருகிறது. பயங்கரவாதம் மற்றும் குற்றச் செயல்களைத் தடுக்க, அரசு கோரும் தகவல்களை வழங்க 'மெட்டா' (Meta) நிறுவனம் மறுப்பு தெரிவிக்கிறது. ரஷ்ய சட்டப்படி, ஒரு வெளிநாட்டுத் தொழில்நுட்ப நிறுவனம் அங்கு செயல்பட வேண்டுமெனில், உள்ளூரில் ஒரு பிரதிநிதி அலுவலகத்தைத் திறக்க வேண்டும். வட்ஸ்அப் இதனைச் செய்யத் தவறியுள்ளது. வட்ஸ்அப்பிற்குப் பதிலாக ரஷ்யாவிலேயே உருவாக்கப்பட்ட 'MAX' என்ற தேசியச் செயலியைப் பயன்படுத்த மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். "MAX செயலி ஒரு சிறந்த தேசிய மாற்றாகும். இது குடிமக்களின் தினசரி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது" என அவர் வலியுறுத்தியுள்ளார். ரஷ்யாவில் சுமார் 10 கோடி பயனர்கள் வட்ஸ்அப்பை பயன்படுத்தி வந்தனர். தற்போது நேரடி அணுகல் தடை செய்யப்பட்டுள்ளதால், பயனர்கள் இதனைப் பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், பலர் 'விபிஎன்' (VPN) சேவைகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்தத் தடை ரஷ்யாவின் "டிஜிட்டல் இறையாண்மையை" பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை என்று அந்நாட்டு அரசாங்கம் கருதுகிறது. https://www.virakesari.lk/article/238687- நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு
நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் பயங்கரவாத எதிர்ப்பு சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ளது - விஜேதாச ராஜபக்ஷ தெரிவிப்பு 15 Feb, 2026 | 12:06 PM (எம்.மனோசித்ரா) நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது அறிமுகப்படுத்தப்பட்ட பயங்கரவாத ஒழிப்பு சட்டத்தை விட, நிறைவேற்றதிகாரத்துக்கு அதி உச்ச அதிகாரங்கள் கொண்டதாக தற்போதைய அரசாங்கத்தால் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் எதிர்காலத்தில் ஊடகங்கள் மாத்திரமின்றி, மக்கள் தமது எண்ணங்களை வெளிப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்படுமென முன்னாள் நீதி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் தெளிவுபடுத்துகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், 1979இல் அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன அப்போதைய கால கடத்தில் காணப்பட்ட மிகப் பயங்கரமான நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தினார். அது அந்த காலகட்டத்துக்கு அவசியமாக இருந்தது. இந்த சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதன் காரணமாகவே ஆட்சியாளர்களுக்கு அன்று விடுதலைப்புலிகள் அமைப்பை கட்டுப்படுத்தி யுத்தத்தில் வெற்றி பெற முடிந்தது. எவ்வாறிருப்பினும் யுத்தம் நிறைவடைந்த பின்னர் ஆட்சியாளர்களால் அந்த சட்டம் ஊடகங்களையும் எதிர்ப்பாளர்களையும் ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். தற்போதைய அரசாங்கமும் அதற்கான நடவடிக்கைகளையேமுன்னெடுத்துள்ளது. யுத்தம் நிறைவடைந்ததிலிருந்து உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்ற வரை இந்த சட்டத்தின் கீழ் எவரும் கைது செய்யப்படவில்லை. இந்நிலையில் 2015ஆம் ஆண்டு அதில் திருத்தங்களை மேற்கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலம் தயாரிக்கப்பட்டது. ஆனால் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்றமையால் அதனை நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாய தேவை காணப்பட்டது. அதற்கமைய உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு புதிய சட்ட மூலம் உருவாக்கப்பட்டது. அந்த சட்ட மூலத்துக்கு சமூகத்தில் பல்வேறு தரப்பினராலும் எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்டன. அவற்றைக் கருத்திற் கொண்டு அந்த சட்ட மூலம் இரத்து செய்யப்பட்டு, மற்றொரு புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. நிறைவேற்றதிகாரத்தால் தன்னிச்சையாக பயன்படுத்த முடியாதவாறு அந்த சட்டம் உருவாக்கப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் எமக்கு சர்வதேசத்தின் ஒத்துழைப்பு தவிர்க்க முடியாததாகக் காணப்பட்டதால், சகல தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் அழைக்கப்பட்டு அவர்களுடனும் அது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இவ்வாறு அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால் அந்த சந்தர்ப்பத்தில் ஜே.வி.பி.யினரால் அதற்கு கடுமையான எதிர்ப்பு வெளியிடப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில் நாட்டில் யுத்த நிலைமை இல்லை என்பதால் இந்த சட்டம் தேவையற்றது என ஜே.வி.பி. எதிர்ப்பினை வெளிப்படுத்தியது. இவ்வாறு எம்மால் உருவாக்கப்பட்ட சட்ட மூலம் தற்போதும் பாராளுமன்றத்தில் உள்ளது. அதனை நிறைவேற்றுவதில் எவ்வித சிக்கலும் இல்லை. ஆனால் அதற்கு அப்பால் ஆட்சியாளர்களுக்கு அதி உச்ச அதிகாரங்கள் கிடைக்கும் வகையில் தற்போதைய சட்ட மூலம் தயாரிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில் மக்கள் கருத்தாடல்கள் எவையும் மேற்கொள்ளப்படவில்லை. சட்டத்துறையில் நிபுணர்களும் அதில் இணைத்துக் கொள்ளப்படவில்லை. யாரோ ஒருவரால் எழுதப்பட்ட சட்ட மூலமாகவே அது காணப்படுகிறது. மக்களின் சுதந்திரம் பறிக்கப்படும் போது அதில் முதலாவது இலக்கு ஊடகங்களாகும். முதலில் ஊடகங்கள் ஒடுக்கப்பட்ட பின்னரே ஏனையோர் தாக்கப்படுவர். ஊடகங்களை முடக்கினால் ஏனையோரை முடக்குவது இலகுவானதாகும். அதற்கான ஏற்பாடுகள் அந்தசட்ட மூலத்தில் காணப்படுகின்றன. இதற்கு மக்கள் எதிர்ப்பினை வெளியிட வேண்டும். அவ்வாறில்லை எனில் எதிர்காலத்தில் மக்கள் தமது எண்ணங்களைக் கூட வெளிப்படுத்த முடியாத ஜனநாயகமற்ற சூழல் ஏற்படும் என்றார். https://www.virakesari.lk/article/238692- உலகமே வியக்கும் சாமுராய் வீரர்களின் வரலாறு!
சாமுராய் என்றால் அச்சமற்ற போர் வீரன் என்பது உண்மையா? உலகமே வியக்கும் ஜப்பான் வீரர்களின் வரலாறு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மேத்யூ வில்சன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் இடைக்காலத்தின் தொடக்கத்தில் இருந்து, ஷோகன் முதல் ஸ்டார் வார்ஸ் வரை கலை, புனைகதை, திரைப்படங்கள் என சாமுராய்கள் பல வகைகளில் காட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் உண்மை கதை நாம் அறிந்ததைவிட மிகவும் சிக்கலானது, ஆச்சரியம் நிறைந்தது. கலாசார வரலாற்றில், சாமுராய்களின் நீடித்த மரபு ஒரு தனித்துவமான நிகழ்வாக அறியப்படுகிறது. 18ஆம் நூற்றாண்டின் உக்கியோ-இ அச்சுகள் முதல் சமகால வீடியோ கேம்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் வரை வேறு எந்த இடைக்கால சமூகக் குழுவும் இவ்வளவு பிரபலமாக, இடைவிடாமல் கொண்டாடப்பட்டதாக இருக்கவில்லை. பிரபலமான கதைகள் பெரும்பாலும் காலப்போக்கில் மிகைப்படுத்தப்படுகின்றன. சாமுராய்கள் விஷயத்திலும் இதுவே நடந்துள்ளது. இந்தப் பழங்கால போர்வீரர்கள் எப்போதும் அச்சமற்றவர்கள், விசுவாசமானவர்கள், ஒழுக்கமானவர்கள், பிறரிடம் இருந்து உண்மையிலேயே வேறுபட்டவர்கள் என்று மக்கள் நம்பினர். ஆனால், பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் நடக்கும் ஒரு புதிய கண்காட்சி இந்தக் கருத்துகளில் பலவும் கட்டுக்கதைகள் என்பதைக் காட்டுகிறது. இந்தக் கண்காட்சி கற்பனைகளை அகற்றி, சாமுராய்களின் உண்மையான, சுவாரஸ்யமான வரலாற்றை வெளிப்படுத்த முயல்கிறது. சாமுராய் என்பவர்கள் உண்மையில் யார்? அவர்களின் கதை தொடங்கியது எப்படி? "அவர்கள் ஒன்றும் வரலாறு முழுவதும் ஒரே மாதிரியாக இருந்த தனித்துவமான மக்கள் குழு இல்லை" என்று கண்காட்சியின் கண்காணிப்பாளர் ரோசினா பக்லேண்ட் பிபிசியிடம் கூறுகிறார். "மேற்கத்திய நாடுகளில் சாமுராய்கள் போர்வீரர்கள் என்பதுதான் பொதுக் கருத்தாக உள்ளதாக நினைக்கிறேன். அவர்கள் போர் வீரர்கள்தான். இடைக் காலத்தில் அவர்கள் அப்படித்தான் தோன்றி அதிகாரப் பதவிக்கு உயர்ந்தார்கள். ஆனால், அது மட்டுமே முழு கதை இல்லை." சாமுராய்களின் தோற்றம் 10ஆம் நூற்றாண்டில், அவர்கள் முதன்முதலில் ஏகாதிபத்திய அரசவைகளுக்கு கூலிப் படையினராக ஆள் சேர்ப்பு செய்யப்பட்ட போதுதான் தொடங்கியது. அவர்கள் படிப்படியாக கிராமப்புற பிரபுக்களாக பரிணமித்தனர். ஆனால் பின்னர் மக்கள் நினைப்பதுபோல், அவர்கள் காலங்காலமாக மதிக்கப்படும் வீரமிக்க போர் வீரர்களாக இருக்கவில்லை. போரில் அவர்கள் பதுங்கியிருந்து ஏமாற்றுதல் போன்ற சந்தர்ப்பவாத தந்திரோபாயங்களைப் பயன்படுத்த முனைந்தனர். அவர்கள் பெரும்பாலும் மரியாதை அல்லது தன்னலமற்ற கடமை உணர்வைவிட நிலம் மற்றும் அந்தஸ்தின் வெகுமதிகளால் அதிகமாக உந்தப்பட்டனர். அவர்களின் தகவமைப்புக் கண்ணோட்டம், அவர்கள் பன்முக கலாசார தாக்கங்களையும் வெளிநாட்டு தொழில்நுட்பத்தையும் ஏற்றுக்கொண்டதைக் காட்டுகிறது. இது சாமுராய் அடையாளத்தின் மற்றோர் ஆச்சரியமான அம்சம். கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு சாமுராய் உடையின் மார்புக் கவசம் போர்த்துகீசிய கவசத்தை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒன்றாக உள்ளது. இது கூர்மையான முன்பக்கத்தையும் தோட்டாக்கள் பட்டுச் சிதற உதவும் சாய்வான பக்கங்களையும் கொண்டுள்ளது. 1542ஆம் ஆண்டு ஐரோப்பிய துப்பாக்கிகள் ஜப்பானுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு இந்த அம்சங்கள் அவசியமாயின. பட மூலாதாரம்,The Trustees of the British Museum படக்குறிப்பு,கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள ஒரு கவச உடை, துப்பாக்கி குண்டுகளை திசைதிருப்ப கூர்மையான முன்பக்கத்தையும் கோணலான பக்கங்களையும் கொண்டுள்ளது 'கலாசாரமே அதிகாரம்' ஏகாதிபத்திய வாரிசுரிமை தொடர்பான குழப்பமும் சண்டையும் நிலவிய காலத்தில் சாமுராய்கள் அரசியல் அதிகாரத்தைப் பெற்றனர். பின்னர் ஒரு வலுவான வம்சமான மினாமோட்டோ வம்சம், 1185இல் கட்டுப்பாட்டைக் கைப்பற்றி ஒரு புதிய அரசாங்கத்தை அமைத்தது. அதேநேரத்தில், பேரரசரின் ஏகாதிபத்திய அரசவை இன்னும் இருந்தது. காலப்போக்கில், வெவ்வேறு போர்வீரர் குடும்பங்கள் வம்சத் தலைவர்களுக்கு இடையிலான பல போர்களில் எழுச்சி பெற்று வீழ்ச்சியடைந்தன. ஆனால், வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் விளக்குவது போல, அந்த நேரத்தில்கூட கலாசாரம் மிகவும் முக்கியமானதாக இருந்தது. ஏனெனில், கலாசாரமே மக்களுக்கு அதிகாரத்தை வழங்கியது. ஷோகன்கள் என்று அழைக்கப்படும் ராணுவ தலைவர்கள், பழங்குடி போர்வீரர்களின் கண்ணோட்டம் மற்றும் மனநிலையை வைத்துக்கொண்டு அதிகாரத்தை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியாது என்பதை உணர்ந்தனர். எனவே, அவர்கள் தங்கள் ராணுவ வலிமையை அரசவை சமூகத்திற்குள் மிகவும் நுட்பமான, அதிநவீன அதிகாரத் தரகு முறைகளுடன் கூடுதலாக வழங்குவதற்கான வழிகளைக் கண்டறிந்தனர். அவர்களது அரசியல் கலைக்கான திட்டமிடுதல்கள் சீன தத்துவத்தை, முக்கியமாக கன்ஃபூசியஸின் கருத்துகளை, அடிப்படையாகக் கொண்டிருந்தது. "நியோ, கன்ஃபூசிய சிந்தனையில், ராணுவ சக்திக்கும் கலாசார திறனுக்கும் இடையே சமநிலையைக் கொண்டிருக்க வேண்டும்" என்கிறார் பக்லேண்ட். பட மூலாதாரம்,The Trustees of the British Museum இதன் விளைவாக, அரசவையில் இருந்த மக்கள், தூபத்தால் நிரப்பப்பட்ட ஆடம்பரமான அரண்மனை அறைகளுக்குள் கலாசார செல்வாக்கு மற்றும் கண்ணியமான ராஜதந்திரத்தின் அடிப்படையில் அதிக முயற்சிகளை எடுக்கத் தொடங்கினர். போர்க் கலையில் திறமையானவர்களாக இருப்பதுடன், சாமுராய்கள் ஓவியம், கவிதை, இசை நிகழ்ச்சி, நாடகம், தேநீர் விழாக்கள் போன்ற நுட்பமான கலைகளில் தேர்ச்சி பெற்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக கண்காட்சியில் இருக்கும், 19ஆம் நூற்றாண்டில் ஒரு சாமுராய் கலைஞரால் வரையப்பட்ட, ஆர்க்கிட் பூக்களைக் காட்டும் ஒரு ரசிகரின் ஓவியம் மிக அழகான, ஆச்சரியமான பொருட்களில் ஒன்றாக உள்ளது. தற்போது தயாரிப்பில் இருக்கும் டிஸ்னி/எஃப்எக்ஸ் தொடரான ஷோகன், சாமுராய் வரலாற்றில் நிகழ்ந்த ஒரு திருப்புமுனையின் கற்பனையான அணுகுமுறையை வழங்குகிறது. 1500களில், ஒரு வம்சத் தலைவரான டோகுகாவா இயாசு (தொடரில் கற்பனையான யோஷி டோரனாகாவால் குறிப்பிடப்படுகிறார்), 250 ஆண்டுகள் நீடித்த ஒரு வெற்றிகரமான அரசாங்கத்தை நிறுவினார். இதன் பொருள் ஜப்பானுக்குள் பெரிய போர்கள் எதுவும் இல்லை, சாமுராய்கள் வேறு புதிய பாத்திரங்களை வகிக்கத் தொடங்கினர் என்பதாகும். போர்க்களத்தை ஒழுங்கமைப்பதற்குப் பதிலாக, அவர்கள் அரசை நிர்வகித்தனர். "அவர்கள் அமைச்சர்கள், சட்டம் இயற்றுபவர்கள், வரி வசூலிப்பவர்களாக செயல்பட்டனர்" என்று பக்லேண்ட் கூறுகிறார். அவர்கள் அரசவை முழுவதும் பரவியிருந்த, "கோட்டை வாயில்களில் காவலர்களாக இருப்பது வரை" பல வேலைகளை ஏற்றுக்கொண்டனர். பட மூலாதாரம்,The Trustees of the British Museum படக்குறிப்பு,சாமுராய்களின் தோற்றம் 10ஆம் நூற்றாண்டில் தொடங்கியது. ஆனால் அவர்களைப் பற்றிய புராணக் கதைகள் பல நூற்றாண்டுகளாக நீடித்தன பெண் சாமுராய்கள் டோகுகாவா ஷோகுனேட் என்று அழைக்கப்படும் இந்தப் புதிய ஆட்சியின்போது, டைமியோக்களின் (ஜப்பானின் பிராந்திய பிரபுக்கள்) குடும்பங்கள் அவரது அதிகாரத் தளமான எடோ (டோக்கியோ) நகரில் வாழ வைக்கப்பட்டனர். "அவர்கள் ஒருவிதத்தில் பணயக் கைதிகளைப் போன்றவர்கள். ஷோகனுக்கு அருகில் இருப்பதால், அவரால் அவர்களைத் தொடர்ந்து கட்டுப்படுத்த முடியும்" என்று பக்லேண்ட் கூறுகிறார். இது சாமுராய்களின் கீழ்ப்படிதலையும் விசுவாசத்தையும் செயல்படுத்துவதற்கான ஒரு வழி. "உங்கள் மனைவியும் வாரிசும் எடோவில் இருந்தால் நீங்கள் பிராந்தியங்களில் எந்தச் சதியையும் செய்ய முடியாது. ஏனெனில், நீங்கள் அவர்களைப் பார்க்கும் வாய்ப்பை இழக்க நேரிடும் அல்லது அவர்கள் தூக்கிலிடப்படலாம்." இதன் விளைவாக, பக்லேண்டின் கூற்றுப்படி, சாமுராய் வட்டாரங்களில் பெண்களின் பங்கின் முக்கியத்துவம் அதிகரித்தது. "பெண்கள் தங்கள் கணவர்கள் இல்லாத நேரங்களில் இல்லங்களுக்கு தலைமை ஏற்று நடத்துகிறார்கள். ஒரு உயர் பதவியில் இருக்கும் சாமுராய் என்றால், அவரது வீட்டில் 40 முதல் 50 பேர் வரை இருக்கலாம். இதுவொரு சிறு தொழிலையே நடத்துவதைப் போன்றது." ஊழியர்கள், வர்த்தகர்களை மேற்பார்வை செய்வதோடு, அவர்கள் தங்கள் குழந்தைகளின் கல்வியையும் நிர்வகித்து, விருந்தினர்களுக்குத் தேவையான சடங்குகள், நடைமுறைகளைப் பராமரித்தனர். பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தின் கண்காட்சியில் உள்ள பல்வேறு பொருட்களான அங்கி, ஆசார கையேடுகள், அணிகலன்கள், இந்த சாமுராய் பெண்களின் வாழ்க்கைக் கதைகளை எடுத்துரைக்கின்றன. பட மூலாதாரம்,John C Weber collection/ Photo: John Bigelow Taylor படக்குறிப்பு,ஒரு பெண்ணின் ஆடம்பரமான தீயணைப்பு ஜாக்கெட் போன்ற பொருட்கள் சாமுராய் பெண்களின் வாழ்க்கைக் கதைகளைச் சொல்கின்றன டோகுகாவா ஷோகுனேட் ஆட்சிக் காலத்தில், நாடகங்கள், கவிதைகள், கலைப் படைப்புகள் கடந்த கால சாமுராய்களை சிறந்த நாயகர்களாகக் காட்டின. அவை அவர்களின் துணிச்சல், விசுவாசம் ஆகியவற்றை எடுத்துக் காட்டுகின்றன. பெரும்பாலான கதைகள் ஆண் போர் வீரர்களைப் புகழ்ந்தன. சில பெண் சாமுராய்களைப் பற்றிய கதைகளையும் கூறின. கடந்த 1852ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட உக்கியோ-இ அச்சு இத்தகைய பெண்களில் ஒருவரைக் காட்டுகிறது. மினாமோட்டோ வம்சத்தைச் சேர்ந்த ஒரு தளபதியின் மனைவியான டோமோ கோசனின் கதைதான் அது. இது 1184இல் நடந்த அவாசு போரில் அவரின் பங்கைக் காட்டுகிறது. அங்கு அவர் அச்சுறுத்தும் போர்வீரன் ஹச்சிரோ மோரிஷிகேவை கண்டுபிடித்து, அவரது குதிரையில் இருந்து கீழே தள்ளி, தலையை வெறும் கைகளால் துண்டித்ததாகக் கூறப்படுகிறது. இறப்பும் மறுபிறப்பும் மெய்ஜியின் ஆட்சிக் காலத்தில் (1868-1912), ஜப்பான் தனது எல்லைகளை சர்வதேச வர்த்தகத்திற்காகத் திறந்து, அதன் தொழில்கள், ராணுவம் மற்றும் சமூகத்தை நவீனமயமாக்கத் தொடங்கியது. அப்போது நடந்த ஒரு பெரிய மாற்றம் என்னவெனில், 1869இல் அதிகாரபூர்வமாக சாமுராய் வர்க்கம் முடிவுக்கு வந்தது. இது சாமுராய்களின் வரலாற்றில் ஒரு முக்கியமான திருப்புமுனையாகும். இதற்குப் பிறகு, சாமுராய் உருவம் புனைகதை போல மாறியதாக வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார். மக்கள் சுமார் 25 ஆண்டுகளாக சாமுராய் உருவத்தை நிராகரித்தனர், ஆனால் பின்னர் கடந்த காலம் குறித்தான ஏக்கம் மக்களிடையே மீண்டும் அதன் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது. பட மூலாதாரம்,Courtesy of Lucasfilm படக்குறிப்பு,டார்த் வேடாரின் உடைகள் உள்பட, அசல் ஸ்டார் வார்ஸ் படத்திலுள்ள பல உடைகள் சாமுராய் கவசத்தால் ஈர்க்கப்பட்டவை ஜப்பானுக்கு வெளியிலும், மக்கள் சாமுராய்கள் மீது மிகுந்த ஆர்வம் காட்டினர். 1899ஆம் ஆண்டு நிட்டோப் இனாசோ எழுதிய புஷிடோ: தி சோல் ஆஃப் ஜப்பான் போன்ற புத்தகங்கள் பிரபலமடைந்தன. இந்தப் புத்தகம் பரவலாக வாசிக்கப்பட்டதாக வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார். "தியோடர் ரூஸ்வெல்ட் கூடத் தனது நண்பர்களுக்குக் கொடுக்க சில பிரதிகளை வாங்கினார். முதல் சீன-ஜப்பானிய போரில் ஜப்பான் வெற்றி பெற்ற பிறகும், பின்னர் போரில் ரஷ்யாவை தோற்கடித்த பிறகும் ஜப்பானின் வெற்றியை விளக்க மக்கள் இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தினர்." 20ஆம் நூற்றாண்டில், ஜப்பானுக்குள் சாமுராய்களின் உருவம் மாற்றப்பட்டு, ராணுவ பிரசாரம் மற்றும் தேசத்தின் சின்னம் உள்படப் பல்வேறு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, சாமுராய்களின் கதைகள் மீண்டும் மறுபிறவி எடுத்தன. இந்த முறை அவை திரைப்படங்களின் கருப்பொருளாக உருவெடுத்தன. இந்தப் படங்களின் பின்னால் இருந்த இயக்குநர்களில் மிகவும் பிரபலமானவர் அகிரா குரோசாவா. அவரது காட்சிக் கதை சொல்லல் மற்றும் அதிரடி காட்சிகளைக் கையாளும் திறமை அமெரிக்க சினிமாவில் தீர்க்கமான தாக்கத்தை ஏற்படுத்தியது. குரோசாவாவின் செவன் சாமுராய் (1954), தி மேக்னிஃபிசென்ட் செவன் (1960) என்ற பெயரில் மீண்டும் உருவாக்கப்பட்டது. மேலும் யோஜிம்போ(1961), எ ஃபிஸ்ட்ஃபுல் ஆஃப் டாலர்ஸ் (1964) உருவாவதற்கான ஊக்கத்தை அளித்தது. பின்னர், தி லாஸ்ட் சாமுராய் (2003), 47 ரோனின் (2013) போன்ற தனது சொந்த சாமுராய் திரைப்படங்களையும் ஹாலிவுட் தயாரித்தது. சாமுராய்களின் பிரபலத்தன்மை மிகச் சமீபத்தில் மேற்கூறிய ஷோகன் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் வெற்றியால் உறுதி செய்யப்பட்டது. இது ஆங்கிலேயே எழுத்தாளர் ஜேம்ஸ் கிளாவெல் எழுதிய 1975 நாவலை அடிப்படையாகக் கொண்டது. கண்காட்சியில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது போல, அசல் ஸ்டார் வார்ஸ் திரைப்படமான எ நியூ ஹோப் (1977) அகிரா குரோசாவாவின் தி ஹிடன் ஃபோர்ட்ரஸ் (1958) திரைப்படத்தால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது. டார்த் வேடார் கதாபாத்திரத்தின் கவச உடை உள்படப் பல உடைகள் சாமுராய் கவசத்தின் தாக்கத்தைக் கொண்டிருந்தன. சாமுராய்களின் உண்மையான வரலாறு, மாற்றம் மற்றும் தழுவலை அடிப்படையாகக் கொண்ட கதையாகும். அவர்கள் இடைக் காலத்தில் கூலிக்குப் பணியாற்றும் வீரர்களாகத் தொடங்கி, பின்னர் படித்த அதிகாரிகளாகவும் கலையை ஆதரிப்பவர்களாகவும் உருவெடுத்தனர். ஆனால், சாமுராய்களின் கதை பல ஆண்டுகளாக கலை, திரைப்படங்கள், வீடியோ கேம்கள், கதைகள் மூலம் மக்களிடையே அவர்கள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. "சாமுராய்களை பற்றிய புதிய யோசனைகள் மற்றும் கதைகளை உருவாக்கப் பார்வையாளர்கள் உத்வேகம் பெறுவார்கள் என்று பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நம்புகிறது" என்று வரலாற்று ஆசிரியர் பக்லேண்ட் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpv8n3xp41eoஏராளன் started following உலகமே வியக்கும் சாமுராய் வீரர்களின் வரலாறு!- வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர்
வலி.வடக்கில் பாதுகாப்பு தரப்பின் வசமுள்ள காணிகளில் ஒரு தொகுதியை சித்திரை புத்தாண்டுக்கு முன்விடுவிக்க நடவடிக்கை - அமைச்சர் சந்திரசேகர் 15 Feb, 2026 | 11:38 AM யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு தொகுதி தனியார் காணிகளை சித்திரை புத்தாண்டுக்கு முன்னர் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் , வடக்கின் அபிவிருத்தியில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருவதாகவும் , கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பில் தொடர்பு கொண்டு கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் என்ற வகையில் மக்களுடைய காணிகளை மக்களுக்கே பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். நாட்டில் ஏற்பட்ட அசாதாரண நிலைமை காரணமாக குறிப்பாக வட மாகாணத்தில் மக்களுடைய தனியார் காணிகள் பாதுகாப்பு தேவைக்காக பாதுகாப்பு தரப்பினரில் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. யுத்தம் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த நிலையில் மக்களுடைய காணிகள் இன்னும் விடுவிக்கப்படாமல் இருப்பது தொடர்பில் அரசாங்கம் என்ற வகையில் கரிசனை கொண்டுள்ளோம். வலி வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள தனியார் காணிகளை படிப்படியாக உரியவர்களுக்கு பெற்று கொடுக்கும் வேலை திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் அளவில் வலி வடக்கின் சில பகுதிகளை மக்களிடம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அறிவுறுத்தலுக்கு அமைய பாதுகாப்பு அமைச்சு மேற்கொண்டு வருகிறது. அதேவேளை வடக்கின் அபிவிருத்தி தொடர்பில் ஜனாதிபதி கூடிய கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக யாழ்ப்பாண விமான நிலையம், காங்கேசன் துறைமுக அபிவிருத்தி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்படும், நிலையில் வடபகுதி கிராமப்புற வீதிகளை புனரமைப்பதற்காக விசேட நிதி ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டு வீதி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரங்களை கருத்தில் கொண்டு இறங்கு துறைகளை புனரமைப்பதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்தி வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆகவே அரசாங்கம் என்ற வகையில் மக்களின் அபிவிருத்தி மற்றும் வாழ்வாதார பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதற்காக பல்வேறு சவால்களையும் தாண்டி பயணித்துக் கொண்டிருக்கிறோம் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/238691- சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு
சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு 15 Feb, 2026 | 11:29 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் கோரிக்கைவிடுத்து கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவினால் எழுதப்பட்ட கடிதம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு மரணதண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவியான எஸ்.சி.விஜேவிக்ரம கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9 ஆம் திகதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதனையடுத்த இதுபற்றிய மேலதிக விபரங்களைக் கேட்டறியும் நோக்கில் கடந்த ஆண்ட ஓகஸ்ட் மாதம் 18 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் அதிகாரிகள், மீண்டும் இரண்டாம் கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 9 ஆம் திகதி சோமரத்ன ராஜபக்ஷவை சந்தித்தனர். இச்சந்திப்பு தொடர்பான விபரங்களை தனது மனைவி ஊடாக எழுத்துமூலம் வெளிப்படுத்திய சோமரத்ன ராஜபக்ஷ, காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தினர் செம்மணி படுகொலை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளாமல், காணாமல்போனோரில் சிலரது குடும்பங்களுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கி, அவ்விவகாரத்தை முடிவுக்குக்கொண்டுவந்து, கைகழுவி விடுவதற்கே முயற்சிப்பதாகக் குற்றஞ்சாட்டியிருந்தார். அதேவேளை இச்சந்திப்பின்போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கான கடிதமொன்றும் சோமரத்ன ராஜபக்ஷவினால் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டது. அக்கடிதத்தில் செம்மணி மனிதப்புதைகுழி மற்றும் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தில் நிகழ்த்தப்பட்ட மீறல்கள் தொடர்பில் தான் ஏற்கனவே அனுப்பிவைத்திருந்த கடிதத்தின் ஊடாகவும், அதன் பின்னரும் பல்வேறு உண்மைகளை வெளிப்படுத்தியிருந்த போதிலும், அவை குறித்து தற்போதுவரை எந்தவொரு ஆக்கபூர்வமான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், இவ்விடயம் தொடர்பில் சுயாதீன குழுவொன்றை நியமித்து முறையான விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் சோமரத்ன ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருப்பதாக அறியமுடிகிறது. இவ்வாறானதொரு பின்னணியில் அக்கடிதம் காணாமல்போனோர் பற்றிய அலுவலக அதிகாரிகளால் ஜனாதிபதி செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/238685- பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன்
பயங்கரவாதத்தடைச்சட்டத்தை பதிலீடு செய்யும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ; ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் எடுத்துரைத்த அம்பிகா சற்குணநாதன் 15 Feb, 2026 | 12:06 PM (நா.தனுஜா) பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசியமக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து அவ்வதிகாரிகளுக்கு விரிவாகத் தெளிவுபடுத்தியுள்ளார். கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் - இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 27 ஆவது கூட்டத்தில் பங்கேற்பதற்காக நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் குழுவுக்குத் தலைமை தாங்கிய அதன் வெளிவிவகார சேவைப்பிரிவின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பதில் முகாமைத்துவப்பணிப்பாளர் பாவோலா பம்பலோனிக்கும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் உறுப்பினரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான அம்பிகா சற்குணநாதனுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது. இச்சந்திப்பின்போது பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதனைப் பதிலீடு செய்யும் நோக்கில் பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்ட வரைவை முன்மொழிந்திருப்பதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் தீவிர கரிசனையை வெளிப்படுத்திய அம்பிகா சற்குணநாதன், அச்சட்ட வரைவின் மிகமோசமான உள்ளடக்கம் குறித்து விரிவாகத் தெளிவுபடுத்தினார். அதேபோன்று நாடளாவிய ரீதியில் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை அவற்றின் இயலுமையை விட பன்மடங்கு உயர்வாகக் காணப்படுவதாகவும், அதன் விளைவாக சிறைக்கைதிகள் மத்தியில் ஏற்படக்கூடிய தாக்கங்கள் பற்றியும் அவர் எடுத்துரைத்தார். அதேவேளை மரணதண்டனை வழங்கலை முடிவுக்குக்கொண்டுவருவதாக அரசாங்கங்கள் வாக்குறுதி அளித்த போதிலும், அது இன்னமும் தொடர்வதாக ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடம் அதிருப்தி வெளியிட்ட அம்பிகா சற்குணநாதன், போதைப்பொருள் பாவனை சார்ந்த குற்றங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் கொண்டுவரப்படவிருக்கும் சட்டமூலம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து விளக்கமளித்தார். https://www.virakesari.lk/article/238697- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, நான் வேறு சிலரிடமும் 1 மலசலகூடம் கட்டுவதற்கான செலவுத் திட்டம் கேட்டுப் பார்க்கிறேன். காரைநகர் கொட்டப்புலம் பகுதி சற்று கல் உள்ள பகுதியாம், வேறு இடங்கள் மணல் தரை என கூறுகிறார்கள். 4 லட்சம் லாபம் உழைப்பதற்காக கேட்கிறார்கள், 2 லட்சம் தொடக்கம் 2.5 லட்சம் போதும் என பல தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் தெரிவித்தவர்கள். பிரதேச செயலக திட்டமிடல் உத்தியோகத்தர் வீட்டு உரிமையாளர்களிடம் 2 லட்சம் ரூபா(படிப்படியாக) தந்தால் அவர்களே ஆள் பிடித்து பொருட்கள் வாங்கி கட்ட முடியுமா எனக்கேட்டபோது சம்மதித்தவர்களாம். ஏனைய ஒப்பந்தகாரர்களின் விபரங்களைப் பார்த்தபின் வரும் வாரத்தில் ஒரு தெளிவான முடிவை எடுத்து பணிகளைத் தொடங்கலாம். @வாத்தியார் அண்ணை, @goshan_che அண்ணை, @குமாரசாமி அண்ணை, @Kavi arunasalam ஐயா உங்கள் கருத்துகளையும் சொல்லுங்க.- ’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ - ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் சிவராத்திரி வாழ்த்து செய்தி
’’இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும்’’ மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது சிவராத்திரி வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். மேலும், இருள் நீங்கி ஞான ஒளி பிரகாசிக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் மிகுந்த பக்தியுடன் மகா சிவராத்திரி தினத்தை இன்று கொண்டாடுகின்றனர். மகா சிவராத்திரி தினம் என்பது உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானை வழிபடுவதற்குரிய மிக உன்னதமான நாளாக கருதப்படுகிறது. இது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சங்கமத்தையும், சிவபெருமான் தனது தெய்வீக நடனமான தாண்டவத்தை நிகழ்த்துவதையும் நினைவுகூறும் விதமாக அமைந்துள்ளது. இது உலகம் மற்றும் வாழ்க்கையின் 'இருளை வெல்வதை' குறிக்கிறது. அனைத்து மனித உறவுகளையும் மதிக்கும், ஒழுக்கநெறியுள்ள மற்றும் கருணையுள்ள சமூகத்தை உருவாக்குவதில் இதுபோன்ற மத மற்றும் கலாசார நிகழ்வுகள் மிக முக்கியமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அகங்காரத்தை நீக்கி, உள்ளங்களில் ஆன்மீக உயிர்ப்பை ஏற்படுத்தும் மகா சிவராத்திரி சமய சடங்குகள், நேர்மை, தாராள மனப்பான்மை மற்றும் மன்னிப்பு போன்ற உண்மைப் பண்புகளின்படி வாழ நம்மை நெறிப்படுத்துக்கின்றதுடன், மகா சிவராத்திரியின் ஆன்மீக செய்தி நமது சமூக உணர்வை மேலும் வலுப்படுத்தும் ஒரு வாய்ப்பாகவும் நான் பார்க்கிறேன். அண்மைக்கால நினைவுகளில் மிக மோசமான இயற்கை பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொண்ட பின்னர், உறுதியுடனும் திட்டமிடலுடனும் மீண்டெழுந்து, அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றத்துடன் புதிய மறுமலர்ச்சியின் சகாப்தத்தை நோக்கி நாம் இப்போது பயணிக்கிறோம். மகா சிவராத்திரி இரவில் ஏற்றப்படும் விளக்குகளின் ஒளியுடன் நம் இதயங்களை ஒன்றிணைத்து, நாம் தேர்ந்தெடுத்த பாதையை மேலும் வலுப்படுத்த எம்முடன் இணையுமாறு அனைவருக்கும் ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். மகா சிவராத்திரியை கொண்டாடும் இலங்கையில் உள்ள இந்து பக்தர்கள் உட்பட உலகெங்கிலும் உள்ள இந்து மக்களின் நல்லெண்ணங்கள் நிறைவேறும் அர்த்தமுள்ள மகா சிவராத்திரி தினமாக அமைய பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். https://www.tamilmirror.lk/செய்திகள்/இந்து-மக்களின்-நல்லெண்ணங்கள்-நிறைவேறும்/175-372517- உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு!
உக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவித் திட்டம் அறிவிப்பு! adminFebruary 14, 2026 உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல் எரிசக்தி உதவித் திட்டத்தை (Energy Aid Package) வழங்க சீனா முன்வந்துள்ளது. ஜெர்மனியின் மியூனிக் நகரில் நடைபெற்று வரும் பாதுகாப்பு மாநாட்டின் (Munich Security Conference) ஒரு பகுதியாக, உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹா மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ ஆகியோருக்கு இடையே நடைபெற்ற ஆலோசனையில் இந்த முடிவு எட்டப்பட்டது. ரஷ்யாவின் தாக்குதல்களால் சேதமடைந்துள்ள உக்ரைனின் மின் விநியோகக் கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான மின்சாரம் மற்றும் வெப்பத்தை உறுதி செய்யவும் இந்த மனிதாபிமான உதவி வழங்கப்படுகிறது. உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீதான தாக்குதல்கள் மற்றும் அதனால் அங்குள்ள சீன நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வாங் யீ-யிடம் ஆண்ட்ரி சிபிஹா விளக்கமளித்தார். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதித்தல் போன்ற அம்சங்களும் விவாதிக்கப்பட்டன. உக்ரைனில் நிலவி வரும் கடும் குளிர்காலச் சூழலில், மின் தடையால் தவிக்கும் லட்சக்கணக்கான மக்களுக்கு சீனாவின் இந்த உதவி பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. Global Tamil Newsஉக்ரைனின் எரிசக்தி துறைக்கு கைகொடுக்கும் சீனா: புதிய உதவி...உக்ரைனின் மின்சாரம் மற்றும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், அந்த நாட்டுக்குத் தேவையான கூடுதல்…- திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு.
திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட ‘அன்னபூரணி’ கலாசார மண்டபம் திறந்து வைப்பு. adminFebruary 14, 2026 மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்ட அன்னபூரணி கலாசார மண்டபம் இன்று சனிக்கிழமை (14) மாலை 3.30 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது. குறித்த மண்டபத்தை அகில இலங்கை இந்து மாமன்றத்தின் தலைவர் அபிராமி கைலாசபிள்ளை கலந்து கொண்டு திறந்து வைத்தார். இதன் போது திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் தலைவர் ராமகிருஷ்ணன்,திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணி சபையின் செயலாளர்,பொருளாளர்,உறுப்பினர்கள், பாடசாலை மாணவர்கள்,அப்பகுதி மக்கள், என பலரும் கலந்து கொண்டு இருந்தனர். இதன் போது அன்ன பூரணி மட நிர்வாக உறுப்பினர்களும்கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது https://globaltamilnews.net/2026/229059/ - நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரினை யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர் குறித்து தீவிர விசாரணை!
Important Information
By using this site, you agree to our Terms of Use.