All Activity
- Past hour
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஏன் இந்த சோதனை. வேண்டாம் கோபால் வேண்டாம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் புலவர் அண்ணா.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
"நீங்கள் வச்சதுதான் சட்டம். இல்லாட்டி அடி உதை. நீங்கள் கூப்பிட்டால் எல்லாரும் முன்னால வந்து நிற்க வேண்டும்." இந்தப் படம் முழுக்கவே இப்படியான பல காட்சிகள். எத்தினை தடவை இந்தப் படத்தப் பாத்திருப்பன். கண்ணீர் வராமல் படம் முடிஞ்சதில்லை. 🎉
-
அதிக ஆபத்தான 4 நச்சுப் பாம்புகளை கண்டதும் அடையாளம் காண்பது எப்படி?
கொம்பேறிமூக்கன் பாம்பு. யாழ்ப்பாணத்தின் தென்மராட்சிப் பகுதியில் உள்ள அந்தச் சிறிய கிராமத்தில் உச்சி வெயில் மண்டையைப் பிளந்து கொண்டிருந்தது. செல்லையா, தனது வீட்டுத் தோட்டத்திலிருந்த பலா மரத்தின் காய்ந்த கிளைகளை வெட்டுவதற்காகக் கையில் வீச்சரிவாளுடன் மரத்தில் ஏறிக் கொண்டிருந்தார். செல்லையாவுக்கு வயது ஐம்பதைக் கடந்திருக்கும். "மரமேறிக் கைத்தழும்பு ஏறிய உடம்பு" என்று ஊருக்குள் சொல்வார்கள். பலா மரத்தின் ஒரு கிளை வீட்டின் கூரைக்கு மேலே நீண்டுகொண்டு தொல்லையாக இருந்தது. "டேய் ரகு, அந்தக் கயிற்றை இங்க எறிடா" என்று கீழே நின்ற மகனிடம் கத்தினார். கயிற்றைப் பிடித்துக்கொண்டு அந்தக் கிளையின் நுனிப் பகுதிக்கு நகர்ந்தார். அப்போதுதான் அந்தச் சலசலப்பு கேட்டது. பலா இலைகளுக்கு நடுவே பழுப்பும் மஞ்சளும் கலந்த நிறத்தில் நீண்ட ஒரு பாம்பு பதுங்கியிருந்தது. செல்லையா உற்றுப் பார்த்தார். அவரது நெஞ்சு 'திக்' என்றது. "அடக் கடவுளே! இது சாரைப் பாம்பின்ரை ஆண் வர்க்கம்! கொம்பேறி மூக்கன்!" கிராமத்துப் பெரியவர்கள் சொல்வது செல்லையாவின் நினைவுக்கு வந்தது. ‘கொம்பேறி மூக்கன் கடிச்சால் கொல்லாம விடாது. அது கடிக்கிற வேகத்தில மரத்து உச்சிக்கு ஏறும். அது ஏற ஏற விஷம் தலைக்கு ஏறும். கடைசியில பிணத்தை எரிச்சாத்தான் கீழ இறங்கும்.’ செல்லையா சுதாரிப்பதற்குள் அந்தப் பாம்பு மின்னல் வேகத்தில் பாய்ந்தது. செல்லையாவின் வலது கையில் மணிக்கட்டுக்கு மேலே 'நறுக்'கென்று கொத்தியது. அடுத்த நொடியே அந்தப் பாம்பு செல்லையாவை விட்டு விலகி மரத்தின் உச்சிக்கிளையை நோக்கிச் சரசரவென்று ஏறத் தொடங்கியது. "ஐயோ! அப்பா!" என்று கீழே நின்ற ரகு அலறினான். செல்லையா நிலைகுலைந்தார். விஷம் ஏறுகிறதோ இல்லையோ பயம் அவரை ஆட்கொண்டது. மரக்கிளையைப் பிடித்துக்கொண்டே கீழே பார்த்தார். கண்கள் இருட்டின. பிடி தளர்ந்தது. "தொப்"பென்று கீழே மணலில் வந்து விழுந்தார். சத்தம் கேட்டு வீட்டிலிருந்தவர்களும், அயலவர்களும் ஓடி வந்தார்கள். செல்லையாவின் கையில் இரண்டு பற்கள் பதிந்த அடையாளம். ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. ஊர்ப் பெரியவர் கனகசபை ஓடி வந்தார். மரத்தை அண்ணாந்து பார்த்தார். மரத்தின் மிக உயரமான, மெல்லிய கிளையின் நுனியில் அந்தப் பாம்பு சுருண்டு உட்கார்ந்து கீழே விழுந்து கிடக்கும் செல்லையாவையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தது. "மாட்டிட்டியே செல்லையா, அது கொம்பேறி மூக்கன்டா! கடிச்சிட்டு உச்சிக்கு ஏறிட்டு. இனி அது இறங்க மாட்டுது. அது மேல இருக்கிற வரைக்கும் இவன் ஒடம்பில விஷம் ஏறிக்கொண்டே தான் இருக்கும்." என்றார் கனகசபை பீதியுடன். செல்லையாவுக்கு வாய் நுரைக்கத் தொடங்கியது. உடல் வெட்டி இழுத்தது. விஷத்தின் வேலையா அல்லது மரண பயமா என்று தெரியவில்லை. "ஆஸ்பத்திரிக்குத் தூக்குங்கோ!" என்று ரகு கத்தினான். "தம்பி, இது சாதாரண பாம்பு இல்லை. ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போற நேரத்துக்குள்ள கதை முடிஞ்சிடும். அந்தப் பாம்பு கீழ இறங்கினாத்தான் உன்ரை அப்பா பிழைப்பான். ஆனால் உன்ரை அப்பாவை எரிச்சுக் கருமாதி செய்யுற புகை வந்தாத்தான் அது இறங்கும்." என்றார் பெரியவர். ரகுவுக்குக் கோபம் வந்தது. "என்ன லூசுத்தனமா கதைக்கிறீங்கள்? அப்பாவைக் காப்பாத்த வழியைப் பாருங்கோ!" அப்போது கூட்டத்திலிருந்த ஒரு இளைஞன் "பெரியவரே அந்தப் பாம்புக்குச் செல்லையா செத்துப்போனது தெரியோணும். அவ்வளவு தானே?" என்றான். "ஓம். அவன் எரிஞ்ச புகை அதுக்குத் தெரியோணும்." என்றார் பெரியவர். "அப்ப ஒரு காரியம் செய்வம். செல்லையாவைத் தூக்கிட்டுப் போய் ஒரு ஓரமா வையுங்கோ. உடனை கொஞ்சம் பச்சை ஓலையளையும், பழைய பாயளையும் போட்டு மரத்துக்குக் கீழ எரிப்பம். அந்தப் புகை மண்டலத்தில பாம்பு ஏமாந்தாலும் ஏமாறும்." என்றான் அவன். வேறு வழியில்லை. செல்லையா மயக்க நிலையில் இருந்தார். உயிர் ஊசலாடிக் கொண்டிருந்தது. ரகுவும் நண்பர்களும் வேகமாகச் செயல்பட்டார்கள். பலா மரத்தின் அடியில் காய்ந்த சருகுகள், பழைய பனையோலைகள் எல்லாவற்றையும் குவித்தார்கள். நடுவே கொஞ்சம் பச்சை இலைகளையும் போட்டார்கள். "நெருப்பை வைடா!" என்றார் பெரியவர். நெருப்பு கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது. பச்சை இலைகள் எரிந்ததில் கரும்புகை குப்பென்று கிளம்பியது. அந்தப் புகை நேராக மரத்தின் உச்சியை நோக்கிச் சென்றது. கீழே அனைவரும் மூச்சடக்கிக் காத்துக்கொண்டிருந்தார்கள். மரத்தின் உச்சியில் இருந்த கொம்பேறி மூக்கன் அந்தப் புகையை உணர்ந்தது. கீழே ஏதோ எரிகிறது; புகை வருகிறது என்பதை அது பார்த்தது. "எரிச்சுட்டாங்க போல" என்று நினைத்ததோ என்னவோ அந்தப் பாம்பு மெதுவாக நகரத் தொடங்கியது. "இறங்குது! பாம்பு இறங்குது!" என்று கூட்டத்தில் ஒருவர் கிசுகிசுத்தார். பாம்பு ஒவ்வொரு கிளையாக இறங்க இறங்க ஓரமாகப் படுத்திருந்த செல்லையாவின் இழுபறி கொஞ்சம் குறைவது போலத் தோன்றியது. பாம்பு பாதி மரத்தைத் தாண்டி கீழே வந்து கொண்டிருந்தது. திடீரென்று காற்று திசைமாறி வீசியது. புகை கலைந்து சென்றது. பாம்பு சட்டென்று நின்றது. கீழே எரிவது மனித உடல் அல்ல, குப்பைகள் என்பதை அது கவனித்துவிட்டதோ? அல்லது கீழே சலசலக்கும் மனிதர்களின் சத்தத்தைக் கேட்டுவிட்டதோ? அது மீண்டும் மேலே ஏறத் திரும்பியது. "ஐயோ! அது ஏமாறல! திரும்பவும் ஏறுது!" என்று ரகு கதறினான். அப்போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது. பக்கத்து வீட்டில் வசிக்கும் ராமு தன் கையில் வைத்திருந்த 'கவணை'(கெற்றப்போல்) எடுத்தான். சின்ன வயதில் குருவி, ஓணான் அடித்த கை பழக்கம். தரையில் கிடந்த ஒரு கூர்மையான கல்லை எடுத்துக் கவணில் பொருத்தினான். குறி தவறக்கூடாது. தவறினால் பாம்பு உச்சிக்குப் போய்விடும்; செல்லையா கதை முடிந்துவிடும். மூச்சிரைக்கக் குறி பார்த்தான். பாம்பு மேல் கிளைக்குத் தாவத் தயாரானது. ‘விர்ர்ர்’ கவணில் இருந்து புறப்பட்ட கல் காற்றைக் கிழித்துக்கொண்டு சென்றது. சரியாகப் பாம்பின் தலைப்பகுதிக்குக் கீழே அதன் கழுத்தில் 'நச்'சென்று தாக்கியது. பாம்பு நிலைதடுமாறியது. பிடி நழுவியது. சுமார் முப்பது அடி உயரத்தில் இருந்து ஒரு கயிறு அறுந்து விழுவது போல அந்தப் பாம்பு தொப்பென்று கீழே விழுந்தது. விழுந்த வேகத்தில் அது சுதாரிப்பதற்குள் சுற்றி நின்றவர்கள் கம்பு, தடிகளால் அதை அடித்தார்கள். அதே நேரம் அங்கே ஓரமாகப் படுத்திருந்த செல்லையா ஒரு நீண்ட பெருமூச்சுடன் கண்களைத் திறந்தார். "அப்பா!" என்று ரகு ஓடிப் போய்க் கட்டிக்கொண்டான். பாம்பு செத்துவிட்டது. அதன் உடல் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டது. பெரியவர் கனகசபை செல்லையாவின் கையைப் பிடித்துப் பார்த்தார். நாடித் துடிப்பு சீராக இருந்தது. "தப்பிச்சுட்டான். அந்தப் பாவி கீழ இறங்கினதால தான் இவன் பிழைச்சான். ஆனா அதுவா இறங்கேல்லை. நாங்கள் இறக்கினோம்!" என்றார். செல்லையா மெதுவாக எழுந்து உட்கார்ந்தார். அவர் கண்கள் அந்தப் பலா மரத்தின் உச்சிக்கிளையையே பார்த்துக்கொண்டிருந்தன. மருத்துவ ரீதியாக அது பயத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியாக இருக்கலாம். அல்லது அந்தப் பாம்பு குறைந்த அளவு விஷத்தையே கக்கியிருக்கலாம். ஆனால் அந்த ஊர் மக்களுக்கு இன்றும் ஒரு நம்பிக்கை உண்டு. "கொம்பேறி மூக்கன் ஏறினால் விஷம் ஏறும்; அது இறங்கினால் தான் உயிர் தங்கும்." அன்று முதல் அந்தப் பலா மரத்தில் யாரும் ஏறுவதில்லை. காற்றில் அதன் இலைகள் அசையும்போதெல்லாம் அந்தப் பாம்பின் ஆவி இன்னும் அங்கே உச்சிக்கிளையில் உட்கார்ந்து யாராவது கடி வாங்குவார்களா என்று பார்த்துக்கொண்டிருப்பதாக ஒரு பயம் அந்த ஊரில் இன்றும் இருக்கிறது. நண்பனின் முகநூலிருந்து.....
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை கீழே இருப்பவர்கள் மேலே போகவும் மேலே இருப்பவர்கள் கீழே போகவும் வாய்ப்பு இருக்கிறது.
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
இதுக்கு பிறகு வாறன்
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
கொல்லபட்டவரின் சித்தி கவலை தெரிவித்து பேசியதால் அவாவையும் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்று ஜேவிபி தமிழ் ஆதரவாளர்கள் எழுதுகின்றனராம் .
-
“தமிழ்த் தேசியவாத அரசியலில் அணுகுமுறை மாற்றங்கள் வேண்டும்”(சுமந்திரன் நேர்காணல்)
அப்ப யாழை மூடி விடுவோம் என்கிறீர்களா?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தேவராஜ் ரசோ அண்ணா, சூர்யா கோஷான் அமுல் பேபி கலெக்டர் - வசி😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சக்தி கொடு….😂
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சிம்பாவேயிடம் இலங்கை பல வாட்டி தோத்து இருக்கு.................சொந்த மண்ணில் சிம்பாவேயிடம் தொடரையே தோத்தவை ஜயசூரியா கொச்சா இருப்பதால் இலங்கை அணிய சூப்பர்8க்கு எப்படியாவது ஆலோசனை சொல்லி அணிய வெல்ல வைக்க பாப்பார்.................................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ரசோ அண்ணா நவ் 😂👇 பிந்திய தகவல்களின் படி கிரிகெட் அணிதான் இறங்குமாம்😂
-
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
அவுஸ்திரேலியா பட்டதாரி. சேவைக்காக ராஜபக்சாக்கள் வரவளைத்தார்கள்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இலங்கை அணி விளையாடும் குறூப்பில் அவுஸ்ரேலியா உள்ளடங்கலாக அனைத்து அணிகளும் மோசமான அணியாக இருக்கின்றது, ஆப்கானிஸ்தானுக்கு நியுசிலாந்து, தென்னாபிரிக்கா என நல்ல அணிகளுடன் போட்டியினை வைத்து ஒரு நல்ல அணியினை சுப்பர் 8 முன்னமே கழட்டி விடப்போகிறார்கள், இன்றைய போட்டி தென்னாபிரிக்காவுடன் ஆப்கானிஸ்தானுக்கு, இந்திய பிட்ச் மோசமான பிட்ச் இந்த் மோடி பிட்ச் ஒன்றுக்கும் உதவாத செத்த பிட்ச், போட்டி வேறு காலையில் நடக்கவுள்ளது 250 ஓட்டங்கள் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இலங்கை அணி சுப்பர் 8 க்கு தகுதியான அணியே இல்லை, சிம்பாவேயிடம் தோற்றால் சிம்பாவே சுப்பர் 8 க்கு போய்விடும் என நினைக்கிறேன். கோசான், எனது இடத்தினை தற்காலிகமாக கைப்பற்றியுள்ளார் அவ்வளவே!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
முதலமைச்சர் @ஏராளன் க்கு வாழ்த்துக்கள். முதலமைச்சராக இருந்த @செம்பாட்டான் ஊழல் காரணமாக பதவியைவிட்டு ஓடப்போய் எங்கோ ஒழிந்து கொண்டார். மிகவும் பலசாலியான @goshan_che எல்லோரையும் தனது தோளில் சுமக்கிறார்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தென் ஆபிரிக்கா வீரர்கள் நாளைக்கு அப்கானிஸ்தான் வீரர்களை விரட்டி அடிக்க போகினம்............ அந்த குருப்பில் நியுசிலாந் மற்றும் தென் ஆபிரிக்கா சூப்பர்8க்கு போகும் அப்கானிஸ்தான் மீதம் இருக்கும் இரண்டு போட்டிய விளையாடி போட்டு நாடு திரும்ப சரி...........................
-
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English
"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 100 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 100 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை சில நூற்றாண்டுகளாக யாழ்ப்பாணம் சிங்கள மன்னர்களால் ஆளப்பட்டது. 8 மற்றும் 16 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் யாழ்ப்பாண இராச்சியம் செழித்தது. இந்தக் காலம் இலங்கைத் தமிழர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள அனைவருக்கும் மறக்கமுடியாத ஒன்றாகும். யாழ்ப்பாணத்தின் ஆரம்பகால மன்னர்கள் தங்களை ஆரிய சக்கரவர்த்திகள் என்று அழைத்துக் கொள்ளவில்லை என்றாலும், 12 ஆம் நூற்றாண்டில் இந்தப் பெயர் பயன்பாட்டுக்கு வந்தது. இத்தாலிய வணிகரான மார்க்கோ போலோ (Marco Polo) என்பவர் 1254 ஆம் ஆண்டு முதல் 1324 வரை வாழ்ந்த ஒரு வெனிசு நகரத்தை சேர்ந்த வர்த்தக பயணி ஆவார். இவருடைய பயண அனுபவங்களை ஒரு நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இவர் தாம் பயணித்த பாதையில் வட இலங்கை, தென் இந்தியா போன்ற தென் ஆசிய நாடுகளையும் தரிசித்தார். மேலும் பல சுவாரசியமான பல அரிய தகவல்கள் மார்க்கோ போலோவின் குறிப்புகளில் விரவிக் கிடக்கின்றன என்பதும் குறிப்பிடத் தக்கது. அந்தமானில் இருந்து புறப்பட்டு, ஜைலன் (சிலோன்-இலங்கை) / SEILAN] என்ற இலங்கை தீவின் வட பகுதியை அடைந்தான். அங்கு தமிழ் அரசன் செண்டெமைன் [SENDEMAIN / probably a corruption of the Tamil word ‘Sandamann’ or யாழ்ப்பாணத்தை ஆட்சி செய்த சந்திரபானுவின் மகன் சாவகன்மைந்தன்] அரசாட்சி செய்தான். அங்குள்ள மக்கள் சிலைகளை வணங்கினர். அது எந்த ஒரு நட்டையும் சாராத சுதந்திர நாடு. ஆடவரும் பெண்டீரும் ஒரே ஒரு துணியை உடலில் சுற்றி இருப்பார்கள். அரிசி மற்றும் எள்ளு அங்கு விளைகின்றன பால், அரிசி, இறைச்சி இவர்களின் உணவு. எள்ளில் இருந்து எண்ணெய் எடுக்கிறார்கள். [பனை] மரங்களில் இருந்து கள்ளு எடுக்கிறார்கள் என்கிறார். இவைகள் எல்லாம் தமிழும் தமிழரும், சைவமும் இலங்கையில் தொடர்ந்து வாழ்ந்ததை எடுத்து காட்டுகின்றன. குறைந்தது பதினெட்டிற்கு மேற்படட பயணிகள், உதாரணமாக ஒரு ரோமன், ஒரு கிரேக்கம், இரண்டு சீனர்கள், நான்கு இத்தாலியர்கள். ஒரு வடமேற்கு மொராக்கோவில் உள்ள ஒரு நகரமான டன்கிரில் வசித்த சோனகர், ஒரு போர்த்துகீசிய சிப்பாய்-வரலாற்றாசிரியர், இரண்டு டச்சுக்காரர்கள், ஒரு ஜெர்மன், ஒரு பிரஞ்சு கோமகன், ஒரு டச்சு கடற் படை அதிகாரி, ஐந்து பிரித்தானியர்கள் [a Roman, a Greek, two Chinese, four Italians, a Moor from Tangier, a Portuguese soldier-historian, two Dutchmen , a German, a French Count, a Dutch admiral and five Britons.] ரோமன் காலத்தில் இருந்து பிரிட்டிஷ் காலம் வரை இலங்கைக்கு வந்து, இலங்கையைப் பற்றி தமது குறிப்புகளில் எழுதியுள்ளார்கள். அவர்களில் சிலரை நாம் இங்கு சுட்டிக்காட்டி உள்ளோம். . இந்த நவீன காலத்தில் பல்வேறு வகைப்பட்ட திராவிட மொழிகளை பேசும் மக்கள் இந்தியாவின் தென் பகுதியிலும் இலங்கையின் வட-கிழக்கு பகுதியிலும் பெரும்பாலாக இருந்தாலும்,ஆதிகாலத்தில் திராவிடர்களின் மூதையார்களின் அதிகார எல்லை / வாழ்விடம் சரியாக அறியப்படவில்லை. எது எப்படியாயினும் மிகவும் நன்றாக உறுதிபடுத்தப்பட்ட கருது கோள் [அனுமானம்], இந்திய-ஆரிய இனத்தவர்களின் இடப் பெயர்ச்சிக்கு முன்பு, திராவிடர்கள் இந்திய துணைக் கண்டம் முழுவதுமே பரந்து இருந் தார்கள் என உத்தேசமான முடிவுக்கு வருகிறார்கள். [Although in modern times speakers of the various Dravidian languages have mainly occupied the southern portion of India & north & east of Srilanka, nothing definite is known about the ancient domain of the Dravidian parent speech. It is, however, a well-established and well-supported hypothesis that Dravidian speakers must have been widespread throughout the Indian subcontinent before a series of Indo-Aryan migrations]. மேல் கூறப்பட்ட பயணிகளின் குறிப்புகளுடனும், புத்தரின் மூன்று இலங்கை வருகையை சித்தரிக்கும் கதைகளுடனும், இதையும் [மேலே கூறியவற்றையும்] நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று கருதுகிறேன். முதலியார் செ இராசநாயகம் 'எலு' என்று இக்காலத்தில் பிழையாக வழங்கப் படும் 'ஈழு' என்னும் நிறைவற்ற மொழியை அங்கு வசித்த நாகரும் இயக்கரும் பேசியதால், இலங்கைக்கு ஈழம், ஈழமண்டலம் போன்ற பெயர்கள் உண்டாயிற்று என்கிறார். உதாரணமாக, பட்டினப் பாலை "ஈழத்துணவும் காழகத்து ஆக்கமும் " என்ற வரியையும், பூநகரியில் கண்டு பிடிக்கப்படட இரண்டு மட்பாண்ட பிராமி சாசனத்தின் முதலாவதின் முதல் இரண்டு எழுத்தும் 'ஈழ' என்றும் இரண்டாவது சாசனம் 'ஈலா' என்றும் புஸ்பரட்ணம் குறிப்பிடுகிறார். மேலும் இயக்கர், நாகர் இனத்தவர்கள் திராவிடர்கள் என்பது, அதிகமாக, 1] ஈமச் சின்னங்கள், 2] ஆதிப் பிராமிக் கல்வெட்டுகள், 3] ஆதி மக்களது சமய வழிபாடு போன்றவை எடுத்துக் காட்டுகின்றன என கலாநிதி க குணராசா அவர்கள் தனது 'ஈழத்தவர் வரலாறு' என்ற நூலில் கூறுகிறார். அத்தியாயம் 37: ஜேத தீசனுடைய மரணத்துக்குப் பின்னர் அவனுடைய தம்பி மகாசேனன் இருபத்தேழு வருட காலம் ஆட்சி செய்தான். அவனை அரசனுகப் பட்டாபிஷேகம் செய்வதற்கு மறு கரையிலிருந்து சங்கமித்தா தேரர் இங்கு வந்தார். "மகா விகாரை பிக்குகள் உண்மையான வினயத்தைப் போதிப்பது இல்லை. நாங்கள் தான் உண்மையான வினயத்தைப் போதிப்பவர்கள்." இவ்வாறு கூறி சங்கமித்தா தேரர், அரசனைத் தம் வசப்படுத்திக் கொண்டான். இதன் விளைவாக, அரசன் ‘மகா விகாரையில் வசிக்கும் பிக்குகளுக்கு யார் உணவு அளித்தாலும் அவர்களுக்கு நூறு பணம் அபராதம் விதிக்கப்படும்’ என்று கட்டளை பிறப்பித்தான். மகா விகாரையில் வசித்த பிக்குகளுக்கு இதனால் பஞ்சம் ஏற்பட்டது. அதனால், அவர்கள் அதை விட்டுவிட்டு மலை நாட்டுக்கும் உருகுணைவுக்கும் [Malaya and Rohana] சென்று விட்டனர். இதனால் மகாவிகாரை ஒன்பது ஆண்டுகள் பாழடைந்தது. உரிமையாளர் இல்லாத அனைத்து நிலங்களும் ராஜாவுக்குச் சொந்தமானது என்றும் தேரர் மன்னரை நம்ப வைத்தார். பின்னர், பிரிட்டிஷ் காலனித்துவ காலத்தில், இதே போன்ற அரச நில ஆணை இயற்றப்பட்டது, இது, அரசாங்கத்திற்கு தமிழர்களின் பாரம்பரிய தாயகங்களை, சிங்களவர்களைக் கொண்டுவந்து குடியேற்ற உதவியது [Later, during the British colonial period, similar Crown land ordinance was enacted which helped post State Council government to colonize the Tamil’s traditional homelands with the Sinhalese.]. மன்னன் மற்றும் தேரர் சங்கமித்தவுக்கு நெருக்கமான சோனா [Sona] என்ற அமைச்சர் இருந்தார். சோனாவும் பல பிக்குகளும் லோகபாசாதா கட்டிடத்தை [Lohapasada building] இடித்து, இடிக்கப்பட்ட பொருட்களை அபயகிரி விகாரைக்கு எடுத்துச் சென்று அபயகிரி விகாரையில் புதிய கட்டிடங்களை அமைத்தனர். என்றாலும் மகாவிகாரை இடிப்பை ஏற்காத மற்றொரு மந்திரி மேகவர்ண அபயனும் [Meghavannabhaya] அங்கு இருந்தார். Part: 100 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 36 – 133 says ‘Thus, reflecting that sovereignty, being the source of manifold works of merit, is at the same time the source of many an injustice, a man of pious heart will never enjoy it as it were sweet food mixed with poison’. In Silapathikaram, Vanjikaandam – Kaadchik Kaathai, verses 93 to 106, says similar sentiments that the royal life is full of tragedy. The English abstract of the above verses are given below: ‘When he heard the cruel deed of the king of the Pandyan country, the Cera, the king of kings, was anguished and said: ‘Before these words, which well deserve condemnation from any monarch of our status, reached our ears, it is good that the Pandyan laid down his life. For it is the departing soul of the King, that has straightened the sceptre, which was bent by this irrestible act of destiny. ‘If rains fail, great havoc is caused (to the country). If living beings suffer unrighteousness, widespread fear is caused. Paying due regards to the welfare of his subjects, wary of tyrannical rule, a protecting king born of a noble line occupies a position which is suffering and is not to be sought after’.’ The above is the opinion from one of the very few great Tamil kings. The last portion clearly resonates with above quoted Mahavamsa verse 38 – 133. Chapter 37: After Jetthatissa’s death, his younger brother Mahasena came to power, and ruled for twenty-seven years. Thera Samghamitta came from the further coast to consecrate him. This Thera was able to convince the new king Mahasena that the Mahavihara Bhikkhus do not teach the true Vinaya. The king, in consequence, issued an order proscribing anyone from giving food to the bhikkhus in the Mahavihara. The bhikkhus of the Mahavihara left for Malaya and Rohana. The Mahavihara thus became desolate for nine years. The thera also convinced the king that all the ownerless land belong to the king. Later, during the British colonial period, similar Crown land ordinance was enacted which helped post State Council government to colonize the Tamil’s traditional homelands with the Sinhalese. There was a minister, Sona, close to the king and the Thera Samghamitta. Sona and many bhikkhus destroyed the Lohapasada building, and took the demolished materials to the Abhayagiri-Vihara to put up new buildings in Abhayagiri-Vihara. There was another minister Meghavannabhaya who did not approve the demolition of the Mahavihara. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 101 தொடரும் / Will follow துளி/DROP: 2028 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 100 https://www.facebook.com/groups/978753388866632/posts/33743366815311866/?
-
சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" [மூன்று பகுதிகள்]
சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1 அன்று இலண்டன் பல்கலைக்கழக வளாகத்தில், கடுமையான குளிர் காற்று, மனிதர்களின் முகங்களை சிவப்பாக்கியிருந்தது. குளிர் வெறும் உடலுக்கு மட்டும் அல்ல; அந்த நாளில் மனங்களுக்குள் கூட ஒரு எதிர்பார்ப்பு நடுங்கிக் கொண்டிருந்தது. அது 14.02.2025, காதலர் தினம் [வாலண்டைன் டே]. உலகம் முழுக்க காதல் ஒரு நாளுக்குள் அடைக்கப்பட்டு கொண்டாடப்படும் நாள். வேடிக்கையாக இல்லையா? தந்தையர் தினம், தாயார் தினம் எனற வரிசையில், இன்று காதலர் தினம். "நாளைத் தேர்ந்து எடுத்து அன்பு செய்தோரல்ல அவர்கள்; நாம் பிறந்த நொடியிலே அன்பு நம்மோடு பிறந்தது! நன்றி சொல்லாத நாளிலும் தாயின் கரம் குறையாது; நினைவு மறந்த காலத்திலும் தந்தையின் நிழல் விலகாது! நாட்காட்டி எண்ணும் உறவு அல்ல நாடிதுடிக்கும் உயிர் உறவு அது; 'ஒரு நாள் கொண்டாடலாமா?' எனில் — ஒவ்வோர் நாளும் அவர்தம் திருநாளே! " அம்மா, அப்பா— இவர்கள் நாள் தேர்வு செய்து நம்மை நேசிக்கவில்லை. நாம் அவர்களை நாள் தேர்வு செய்து நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை. அம்மாவின் அன்பு – நாம் நன்றி சொல்லாத நாளிலும் தொடர்கிறது. அப்பாவின் பொறுப்பு – நாம் மறந்த நாளிலும் நின்று கொண்டே இருக்கிறது. அவர்கள் உறவு நாட்காட்டியில் [காலண்டரில்] அல்ல, உயிரில் எழுதப்பட்ட உறவு. அதனால் “ஒரு நாள் மட்டும் கொண்டாடலாமா?” அவ்வாறே காதல் – ஏன் ஒரு “தினம்” ஆனது? இங்கேதான் வேடிக்கை தொடங்குகிறது. காதல்— ஒரு காலத்தில் வாழ்க்கை முறை. இன்று அது ஒரு நிகழ்ச்சி. சங்கக் காலத்தில் காதல் என்பது கண்களில் தொடங்கி மனதில் பதிந்து வாழ்க்கையோடு கலந்து விடும் ஒன்று. அப்போது “காதலர் தினம்” என்று ஒன்றே இல்லை; ஏனெனில் ஒவ்வொரு நாளும் காதலின் நாளே! அப்படி என்றால், இன்று காதலர் தினம் ஏன்? ஏனெனில் இன்று காதல் நிலைக்காத ஒன்றாக மாறிவிட்டது. நிலைக்காததை நினைவூட்ட ஒரு நாள் தேவைப்படுகிறது. மறந்துபோகும் ஒன்றுக்கு நாள்காட்டி வேண்டும். அதனால்த் தான்— "காதல் நினைவு நாள்", "பரிசு பரிமாறும் நாள்", "பொதுவெளியில் காட்சிபடுத்தும் நாள்" என்று காதல் ஒரு காலண்டர் நிகழ்வாக [“Love reminder day” , “Gift exchange day”, “Public display day” என்று காதல் ஒரு calendar event] மாறிவிட்டது. இங்கேதான் உண்மையான வேடிக்கை ஆரம்பிக்கிறது. அம்மாவுக்கு ஒரு நாள். அப்பாவுக்கு ஒரு நாள். காதலுக்கும் ஒரு நாள். ஆனால் யோசித்துப் பாருங்கள்— அம்மா, அப்பா நம்மை விட்டு போக முடியாத உறவுகள். காதல்? போய்விடக்கூடிய உறவு. அப்படியிருக் போகக்கூடிய உறவுக்குத்தான் அதிக விளம்பரம். அதிக நிகழ்ச்சி. அதிக அலங்காரம். இதுதான் வேடிக்கை. சங்கத் தலைவி இப்படிச் சொல்வாள்: “அறத்தோடு நிற்றல் காதல்.” அதாவது— காதல் என்பது ஒரு நாள் உணர்ச்சி அல்ல, ஒரு நெறி. நாள் வேண்டிய காதல்— அதிகம் நீடிக்காது. நெறியாக வாழும் காதல்— நாள் தேவைப்படாது. அதனால்… காதலர் தினம் தவறில்லை. கொண்டாடுவதும் தவறில்லை. ஆனால் கேள்வி இது: நீ காதலை கொண்டாடுகிறாயா? அல்லது காதலை மறக்காமல் இருக்க ஒரு நாள் வைத்திருக்கிறாயா? இதற்குப் பதில்தான் நீ காதலன்தானா அல்லது காதலின் பயனாளியா என்று தீர்மானிக்கிறது. அதனால்த்தான்— இது சற்றே வேடிக்கையாக இருக்கிறது. யாழினியன் — அந்த வளாகத்தின் ஓரத்தில் தனியாக நின்றபடி காதலர் தினம் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்தான். “யாழினியன்… நீ ஏன் இப்படி தனியா நிற்கிற?” என்று ஒரு நண்பன் சிரித்துக் கொண்டே கேட்டபோது, “காதலைத் தேட வரல; நடக்குது என்றா நடக்கட்டும்,” என்று அமைதியாகச் சொன்னான். அப்போதுதான் கூட்டத்துக்குள் ஒரு வெண்ணிலா, தரையில் நகர்ந்து வந்தது போல, அவன் உணர்ந்தான். அவள் வந்தாள். இதழினி — அவள் பெயர் என்று சொல்லப்படும் முன்பே, அவள் இருப்பு யாழினியனின் மனதில் பதிந்துவிட்டது. “Hi… I’m Idhazhini.” [ஹாய், நான் இதழினி] என்றாள் அவள். அவள் சொன்ன அந்த வாக்கியம் சாதாரணமாக இருந்தாலும் அந்தச் சிரிப்பு… அழகுக்காக அல்ல. நேர்மைக்காக இருந்தது போல் அவன் மனது கருதியது. அதனால்த்தான் அவனுக்கு அவளை உடனே பிடித்தது. யாழினியன் உடனே, எந்தத் தாமதமும் இன்றி: “நான் யாழினியன்.” என்றான். அந்தச் சொல்லில் பெருமை இல்லை. மறைவும் இல்லை. ஒரு மனிதன் தன்னை வெளிப்படுத்தும் அளவுக்கு மட்டும் இருந்தது. “Are you doing PhD?” ["நீங்க முனைவர் பட்டம் படித்துக் கொண்டிருக்கிறீர்களா?"] அவள் கேட்டாள். “Just started.” (இப்பொழுது தான் ஆரம்பித்தேன்) அவன் பதிலளித்தான். அவள் கண்களில் ஒரு மெல்லிய மரியாதை தெரிந்தது. அந்த மரியாதைதான்— அவர்களுக்குள் வந்த முதல் நெருக்கம். அன்று Valentine Day [காதலர் தினம்] கொண்டாட்டம். இசை, விளக்குகள், சிரிப்புகள். சிவப்பு நிறம் எல்லா இடங்களிலும். யாரோ யாரையோ கட்டிப் பிடித்திருந்தார்கள். யாரோ யாருக்கோ காதலை அறிவித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதழினியும் யாழினியனும் அதிகம் பேசவில்லை. பேசாத அந்த இடைவெளியே அவர்களை அருகில் வைத்திருந்தது. பிரிய மனம் வரவில்லை. அதனால் அவர்கள் அருகில் அருகிலேயே இருந்தார்கள். வார்த்தைகள் தோற்றுப்போகும் இடத்தில், நம் மௌனம் பேசத் தொடங்குகிறது... சிவப்பு நிறம் சூழ்ந்த இந்த இரவில், உன் அருகாமை தரும் கதகதப்பில் காலம் உறைந்து நிற்கிறது. யாரோ யாருக்கோ காதல் சொல்லட்டும், யாரோ யாரையோ கட்டிப் பிடிக்கட்டும்... ஆனால், நம் இதயங்களின் துடிப்பு இந்த நிசப்தத்தில் தான் ஒன்றாகச் சங்கமிக்கிறது. பிரிய மனம் இல்லை நமக்கு, பேசத்தான் அவசியம் இல்லை... அருகில் அமர்ந்திருக்கும் இந்த மௌனமே, ஆயிரம் கவிதைகளைவிட அழகாக நமக்குள் காதல் சொல்கிறது! யாழினியன் அவளைப் பார்க்கும்போது, அவன் நினைவில் ஒரு சங்கத் தலைவி வந்தாள். “காமம் கலந்த காதல் உண்டு எனின், நன்றுமன்.” வெறும் காமமல்ல— காதல் கலந்த காமம் என்றால் அது நன்று என்று சொன்ன அந்தப் பெண், இன்றைய இந்தக் கொண்டாட்டத்தைப் பார்த்திருந்தால் என்ன சொல்வாளோ? அவன் மனம் உடனே மறுத்தது. “அது எல்லாம் உறுதியான பிணைப்பு வந்த பின்பே,” என்று அவன் உள்ளம் அவனுக்குச் சொன்னது. ஆனால் மற்றவர்களின் கவனம் அவர்களிடமிருந்து விலகிய ஒரு நொடி— இதழினி அவன் கையை மெல்ல வருடினாள். அது பிடித்தல் அல்ல. ஒரு அழைப்பும் அல்ல. “நான் இங்கே இருக்கிறேன்” என்ற அமைதியான உறுதி. அவள் தன்னுடன் அவனை மெல்லக் கட்டிப்பிடித்தாள். அவனின் காதருகே ஏதோ கிசுகிசுத்தாள். அந்தச் சொற்கள் தெளிவாகக் கேட்கவில்லை. ஆனால் அவனின் மனம் முழுவதும் அது கேட்டது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி 2 தொடரும் துளி/DROP: 2027 [சிறு கதை - 198 / "காதலர் தினம் [VALENTINE DAY]" / பகுதி 1 https://www.facebook.com/groups/978753388866632/posts/33739053352409879/?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கோஷான் சொன்னபடியே சாதித்து விட்டார்............. சுவி ஐயா கூட்டிலிருந்து பறந்து விட்டார்............. நந்தனை வரவேற்கின்றோம்...................🤣.
-
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
தமிழரசு கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களில், இருக்கும் ஏழு பேரில்... இரண்டு பேர் மட்டுமே வாயை திறப்பார்கள். மற்ற ஐந்து பேரும்... கொட்டாவி விடக் கூட, வாயை திறக்காமல், பம்மிக் கொண்டு இருப்பார்கள். 😂 பாராளுமன்றத்தில் வாயை திறப்பவர்கள்... ஸ்ரீதரனும், சாணக்கியனும் மட்டுமே. ஸ்ரீதரன் பாடசாலை அதிபராக இருந்த படியால், அவர் பள்ளிக்கூடம் போயிருப்பார். பள்ளிக்கூடம் போகாத ஆள்... சாணக்கியனாகத்தான் இருக்கும். 🤣
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அதோட ஆப்கானிஸ்தானின் ஆட்டத்த நாளைக்குப் பார்ப்பியல். சுழல் பந்த வைச்சு சுழல விடுறம்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
மேற்கிந்தியத் தீவுகள் செம்பாட்டான் வாத்தியார் வீரப் பையன்26 சுவி ரசோதரன் இந்த பரிட்சை மிகவும் கடினமானது.................நாளை பிழை விடக் கூடும்................... பந்து வீச்சு தான் சுதப்பல் மட்டையடி வீரர்கள் தங்களின் கடமையை சரியாக செய்யினம்💪.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நாளை புதன் 11 பெப் பிரித்தானிய நேரப்படி மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 13) முதல் சுற்று குழு D:புதன் 11 பெப்: 5:30 AM, அஹமதாபாத், ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா AFG எதிர் SA 05 பேர் ஆப்கானிஸ்தான் அணி வெல்வதாகவும் மற்றைய 18 பேர் தென்னாபிரிக்கா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஆப்கானிஸ்தான் செம்பாட்டான் நியூ பலன்ஸ் வாத்தியார் வாதவூரான் சுவி இப்போட்டியில் போட்டியில் யாருக்கு புள்ளிகள் கிடைக்கும்? 14) முதல் சுற்று குழு B:புதன் 11 பெப்: 9:30 AM, கொழும்பு (RPS), அவுஸ்திரேலியா எதிர் அயர்லாந்து AUS எதிர் IRE அனைவரும் அவுஸ்திரேலியா அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர். இந்தப் போட்டியில் எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டைகள் பரிமாறப்படுமா? 15) முதல் சுற்று குழு C:புதன் 11 பெப்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் மேற்கிந்தியத் தீவுகள் ENG எதிர் WI 18 பேர் இங்கிலாந்து அணி வெல்லும் எனவும் 05 பேர் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனவும் கணித்துள்ளனர். மேற்கிந்தியத் தீவுகள் செம்பாட்டான் வாத்தியார் வீரப் பையன்26 சுவி ரசோதரன் இந்தப் போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்?
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவுஸ்ரேலியாவின் முதலாவது போட்டி. என்ன மாதிரியான அணி இறங்கும் என்று தெரியேல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
4நாள் பரிட்சை வெற்றி கரமாய் முடிந்தாலும் நாளைக்கு தான் உண்மையான பரிட்சை😁😛.......................