All Activity
- Past hour
-
பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
குருவி சுடுவது போல் சுட்டு பொசுக்கி உள்ளார்கள். சோசல் மீடியாவில் போலீசுக்கு முண்டு கொடுத்து துப்பாக்கி சூட்டை நியாயப்படுத்தி உள்ளார்கள். இலங்கையில் கொலை குற்றம் செய்து மரண தண்டனை தீர்ப்பு கொடுக்கப்பட்டவர்களுக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது இல்லை. ஆனால், போலிசார் நடுத்தெருவில் சிறுவனுக்கு மரண தண்டனை கொடுத்துள்ளார்கள். போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டால் திருப்பி சுடுவதை நியாயப்படுத்தலாம். இலங்கையில் தமிழ் பகுதியில் நிராயுதபாணி மீது துப்பாக்கி சூடு செய்யும் அதிகாரம் எதை குறிக்கின்றது? போலிசார் மறிக்கும்போது வாகனத்தை நிறுத்தாவிட்டால் மரண தண்டனை வழங்கப்படவேண்டும் என இலங்கை சட்டம் கூறுகின்றதா?
-
இரகசிய அணு ஆயுத சோதனைகள்; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு
இரகசிய அணு ஆயுத சோதனைகள் ; அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளுக்கு சீனா மறுப்பு Published By: Digital Desk 3 10 Feb, 2026 | 02:30 PM இரகசியமாக அணு ஆயுதச் சோதனைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா சுமத்தியுள்ள குற்றச்சாட்டுகளை சீனா திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது அமெரிக்கா தனது சொந்த அணு ஆயுதச் சோதனைகளைத் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சாக்குப்போக்குகளை கூறிவருவதாக சீனா விமர்சித்துள்ளது. ஜெனீவாவில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை மாநாட்டிலேயே இந்த குற்றச்சாட்டுக்களை சீனா மீது அமெரிக்கா முன்வைத்துள்ளது. 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22 ஆம் திகதி நடந்த சோதனைகள் உட்பட, சீனா இந்த சோதனைகளை நடத்தியதாகவும், மேலும் அதிக வினைத்திறன் மிக்க சோதனைகளை நடத்த தயாராகி வருவதாகவும் அமெரிக்க ஆயுதக் கட்டுப்பாட்டு துணை செயலாளர் தாமஸ் டினானோ குற்றம் சாட்டினார். அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை மற்றும் அப்பட்டமான பொய்கள். அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அமெரிக்கா சாக்குப்போக்குகளை புனைய முயற்சிக்கிறது. அமெரிக்கா அதன் பொறுப்பற்ற செயல்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என சீனாவின் வெளிவிவகார அமைச்சு திங்கட்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அக்டோபரில், ரஷ்யாவும் சீனாவும் அணு ஆயுதச் சோதனைகளைச் செய்து வருகின்றன. எனவே அமெரிக்காவும் அவர்களுக்குச் சமமான அளவில் அணு ஆயுதச் சோதனைகளைத் ஆரம்பிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே அணு ஆயுதக் கட்டுப்பாட்டிற்காக இருந்த கடைசி முக்கிய ஒப்பந்தமான 'நியூ ஸ்டார்ட்', கடந்த வியாழக்கிழமையுடன் காலாவதியானது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த நிலையில், சீனா-ரஷ்யா-அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளையும் உள்ளடக்கிய புதிய அணு ஆயுதக் கட்டுப்பாடு ஒப்பந்தத்தைக் கொண்டுவர டிரம்ப் நிர்வாகம் முயன்று வருகிறது. ஆனால், தற்போதைய நிலையில் இத்தகைய பேச்சுவார்த்தைகளில் ஈடுபடப் போவதில்லை என சீனா ஏற்கனவே மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொடர் குற்றச்சாட்டுகளால் சர்வதேச அளவில் ஒரு புதிய அணு ஆயுதப் உருவாகுமோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே எழுந்துள்ளது. https://www.virakesari.lk/article/238278
-
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் பிரகாசிக்க நமிபியாவை இலகுவாக வெற்றிகொண்டது நெதர்லாந்து 10 Feb, 2026 | 03:46 PM (நெவில் அன்தனி) நெதர்லாந்துக்கும் நமிபியாவுக்கும் இடையில் டெல்லி அருண் ஜெய்ட்லி விளையாட்டரங்கில் இன்று செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்ற பத்தாவது ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் நெதர்லாந்து 7 விக்கெட்களால் இலகுவாக வெற்றியீட்டியது. இந்த வருட ரி20 உலகக் கிண்ண ஆரம்பப் போட்டியில் பாகிஸ்தானுக்கு சவால் விடுத்து தோல்வி அடைந்த நெதர்லாந்துக்கு இந்த வெற்றி உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. 26 வயதான பாஸ் டி லீட் சகலதுறைகளிலும் வெளிப்படுத்திய ஆற்றல்கள், லோகன் வென் பீக்கின் துல்லியமான பந்துவீச்சு என்பன நெதர்லாந்தை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இந்தப் போட்டி முடிவு எத்தகையதாக இருந்தாலும் இரண்டு அணியினரும் 150 ஓட்டங்களுக்கு மேற்பட்ட மொத்த எண்ணிக்கையைப் பெற்றமை விசேட அம்சமாகும். இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நமிபியா 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 156 ஓட்டங்களைப் பெற்றது. நமிபியா சார்பாக நால்வர் 15 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். அவர்களில் லொவ்டி-ஈட்டன் மாத்திரமே கணிசமான எண்ணிக்கையைப் பெற்றார். அவர்களைவிட மற்றைய ஐந்து வீரர்கள் ஒற்றை இலக்க எண்ணிக்கைகளையே பெற்றனர். ஜான் ப்ரைலின்க் (30), ஜான் நிக்கல் லொவ்டி-ஈட்டன் (42) ஆகிய இருவரும் நிதானம் கலந்த வேத்துடன் துடுப்பெடுத்தாடி இரண்டாவது விக்கெட்டில் 50 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு தெம்பைக் கொடுத்தனர். தொடர்ந்து அணித் தலைவர் ஜேர்ஹார்ட் இரேஸ்மஸ் 18 ஓட்டங்களையும் ஜே.ஜே. ஸ்மித் 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் லோகன் வென் பீக் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பாஸ் டி லீட் 20 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 157 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 18 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. எவ்வாறாயினும் நெதர்லாந்தின் ஆரம்பம் எதிர்பார்த்தவாறு சிறப்பாக அமையவில்லை. ஆரம்ப வீரர் மெக்ஸ் ஓ'தௌத் 7 ஓட்டங்களை மாத்திரம் பெற்றதுடன் மற்றைய ஆரம்ப வீரர் மைக்கல் லெவிட் 28 ஓட்டங்களைப் பெற்றார். (46 - 2 விக்.) இதனைத் தொடர்ந்து பாஸ் டி லீட், கொலின் அக்கமன் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 70 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் கொலின் அக்கமன் 32 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் பாஸ் டி லீட், அணித் தலைவர் ஸ்கொட் எட்வேர்ட்ஸ் (18 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து வெற்றியை உறுதிசெய்தனர். பாஸ் டி லீட் 5 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட 72 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். ஆட்டநாயகன்: பாஸ் டி லீட். https://www.virakesari.lk/article/238321
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவால் என்றும் மாற்றலாம் போலிருக்கே.....மைதானத்தை..சுற்றி பச்சை மயம் ..ஒரே ஜிந்தாபாத்...4 பில்லியன் அள்ளிக்கொடுத்த மோடிஜிக்கு அலுவாதான் ...
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
உந்த பெரிய ஸ்கோரை அமெரிக்கா வீரர்களால் அடிச்சு வெல்ல முடியாது..........................
- Today
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் தொடக்க வீரர்கள் அதிரடியாட்டம் பாராட்ட தக்கது...............மற்ற அணிகளுக்கும் இதே மாதிரி அடிப்பினம் என நம்புகிறேன்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்குப் பாத்திருப்பியல். உங்களின் ஏக்கம் தீர்ந்ததா.
-
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
யாரை குறிப்பிடுகின்றார்?
-
1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
மிகவும் மகிழ்ச்சியான செய்தி. ஆனாலும் கம்பனிகள் கூடுதல் வேலைவாங்க முயற்சி செய்வதாகவும் ஒரு செய்தி வந்தது. அதையும் அரசு கவனத்தில் எடுக்க வேண்டும்.
-
1750 பெற்றுக்கொண்டமைக்கு பெருந்தோட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி!
மிக மகிழ்ச்சியான செய்தி. மாதத்தில் 22 நாட்களாவது இவர்களுக்கு வேலை கிடைப்பதையும் உறுதி செய்ய வேண்டும். அனுர அரசு, வடக்கில் தமிழ் கட்சிகளுக்கு மட்டுமல்ல, மலையக தமிழ் கட்சிகளுக்கும் ஆப்பு அடித்துக் கொண்டு இருக்கின்றது. மனோ, இராதாகிருஷ்ணன் போன்ற பம்மாத்து அரசியல்வாதிகளுக்கு இனி கடின காலம் தான்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பாக்கிஸ்தான் அணி அமெரிக்காவை வென்று விடும்.......................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் நெற்றி முழுக்க நீறு பூசி முதல்வாங்கில் அமர்ந்து கரிசனையாக படிக்கும் மாணவர் … நாங்கள் நோட்ஸ் எடுக்க கொப்பி கூட கொண்டுபோகாமல் பின்வாங்கில் இருந்து கலாட்டா பண்ணும் ஆட்கள். பெண்கள் கவனம் முழுக்க எம்மீது இருப்பது வழமைதானே வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா ….. இன்னும் ஒரு போட்டி உள்ளது. பொறுமை பொறுமை பொறுமை.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உடன்படுகின்றேன் இப்போது நேரம் குறைவாக இருப்பதால் அதிகம் எழுத முடியவில்லை மன்னிக்கவும்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
வார கிழமையோட ஆரம்ப சுற்று போட்டி முடிந்து விடும் அதுக்கு பிறக்கு தான் விளையாட்டு விறுவிறுப்பாய் இருக்கும்............. நியுசிலாந் அல்லது பாக்கிஸ்தான் அல்லது தென் ஆபிரிக்கா இந்த மூன்று அணிகளில் ஒன்று வென்றால் மகிழ்ச்சி............................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூசிலாந்து 10 விக்கட்டுகளால் uae யை வென்று விட்டது ....... அபாரமான வெற்றி .......!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் தொடக்க வீரர்கள் அசத்திட்டினம் நியுசிலாந் அணிக்கு வாழ்த்துக்கள்.........................
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
அவர் சென்னை அணிக்கு விளையாட தகுதியான வீரர் மதிச்ச பத்திரானாவை விட இவர் நல்ல வேகப் பந்து வீச்சாளர்........................................
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியூசிலாந்து ஆரம்ப சுற்று போட்டிகளில் 4 இல் 3 இனை சென்னை மைதானத்தில் விளையாடுகிறது. CSK இல் வரும் ஐபிஎல்லில் விளையாடவுள்ள Matt ஹென்றி இன்று 2 விக்கெட் எடுத்து இருக்கிறார்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சென்னை மைதானத்தில் ஜபிஎல் விளையாட்டின் போது ரன்ஸ் அடிப்பது சிரமம் சின்ன அணிகளே 170தாண்டுகினம் என்றால் பிச்சில் மாற்றம் போல் தெரியுது...........................- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
நியுசிலாந் பவர் பிலே ஓவருக்கை நல்ல ரன்ஸ் அடிச்சு விட்டினம் இப்படியே போனால் கூடுதல் ஓவர் இருக்க தக்க விளையாட்டை முடித்து விடுவினம்...............இன்று பெரிய வெற்றி நியுசிலாந் அணிக்கு.............................- SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி!
SJP மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையா? பிமல் ரத்நாயக்க கேள்வி! இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். இன்று கூமாங்குளம் அலகரை வீதியினை புனரமைப்பதற்கான ஆரம்ப வேலையினை ஆரம்பித்து வைத்த பின்னர் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், நாங்கள் தேர்தலிற்காக வீதியினை செய்து தரவில்லை, மாறாக மக்களின் போக்குவரத்திற்காகவே செய்துதரவுள்ளோம். நாம் கிராமிய வீதி அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும் என அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளோம். இவ்வமைப்பானது குறித்த வீதி உரிய முறையில் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை பார்வையிடுவதே பிரதான பணியாக இருக்கும். எனவே இக்கிராமத்திலும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலில் விரைவாக அவ்வமைப்பை உருவாக்கவும். மிகவும் பழுதடைந்த நிலையில் காணப்பட்ட வீதிகளையே நாம் அமைக்கின்றோம். முப்பது வருடம் யுத்தத்திலே பாதிப்படைந்த மக்கள் என்ற ரீதியில் வடமாகாணத்திற்கு ஜனாதிபதி அதிகளவான நிதியினை ஒதுக்கியுள்ளார். டித்வா புயலினை காரணமாக அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ள முடியாது என்ற காரணத்தை நாம் கூறியிருக்கலாம். ஏழை எளிய மக்களிற்கு உதவி செய்வதற்காகவே ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசினை அமைத்துள்ளோம். மேலும் நாம் வழங்கிய வாக்குறுதிகளை முழுமையாக செய்து வருகின்றோம். திருட்டு, கொள்ளை, மோசடிகளை இல்லாது அழிப்பதாக அரசியல் ரீதியாக தெரிவித்திருந்தோம். இவ்வாறான மோசடிகளில் நூறு வீதம் அரசோ, அரச அமைச்சர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ ஈடுபடவில்லை. இருந்தாலும் கூட எதிர்க்கட்சித்தலைவர் நாடாளுமன்றத்தில் பல போலியான குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றார். இது தொடர்பாக எங்களுக்கு எதிராக வழக்கோ அல்லது பிரேரணையோ கொண்டு வாருங்கள் என தெரிவித்தோம், ஆனால் எதையும் அவர் செய்யவில்லை. குறிப்பாக நாடாளுமன்றத்தில் கூறும் பொய்களிற்கு நாம் வழக்கு தாக்கல் செய்ய முடியாது. நாம் மோசடி மற்றும் வீன் விரயத்தை இல்லாது ஒழிப்போம். குறிப்பாக கடந்த காலங்களில் ஒரு நிகழ்விற்கு அதிகளவான செலவு மேற்கொள்ளப்படும். ஆனால் நாம் அவ்வாறான செலவுகளை குறைத்து மிச்சப்படுத்தியுள்ளோம். மேலும் கடந்த காலங்களிலே உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டவர்கள் தங்களது உறவுகள் அனைவருக்கும் வேலையை பெற்றுக்கொடுப்பார்கள். ஆனால் நாங்கள் அவ்வாறு வழங்கவில்லை. கடந்த காலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ் ஒப்பந்த வேலைகளை மேற்கொண்டனர். இவ்வீதியானது 550 இலட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு செய்து கேள்வி கோரல் பத்திரம் தாக்கல் செய்திருந்தோம். குறித்த ஒப்பந்தத்தை 385 இலட்சம் ரூபாய்க்கு ஒரு ஒப்பந்தகாரர் எடுத்துள்ளார். இதன் மூலமாக 165 இலட்சம் ரூபாய் மிச்சப்படுத்தியுள்ளோம். மொட்டுக்கட்சி அரசோ அல்லது SJP அரசாங்கமாக இருந்திருந்தால் குறித்த 165 இலட்சம் ரூபாயும் பைகளிற்குள் சென்றிருக்கும். இதேபோன்று வடக்கு மாகாண சபையிலும் பெரிய மாற்றமென்பதற்கு இல்லை. குறிப்பாக கடந்த மாகாண சபையிலே இரு அமைச்சர்களை வடமாகாண முதலமைச்சர் நீக்கியிருந்தார். இனவாதம் இல்லாத அரசினை உருவாக்குவோம் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். நீங்கள் தமிழர் என்பதால் இந்த அரசினால் அநீதி இழைக்கப்பட்டு உள்ளதா என கேட்கிறேன். பல வருட காலமாக இந்நாட்டிலே ஒரு பிரச்சனை ஒன்று இருக்கின்றது என்று எங்களுக்கு தெரியும். அதனை தீர்த்து வைக்க வேண்டிய தேவை இருக்கின்றது. பெரும்பாலான பிரச்சினைகள் தமிழ், சிங்கள, முஸ்லீம்கள் என்ற ரீதியில் இல்லை. குறிப்பாக பணம் இருந்தால் மூவினத்தவர்களும் சந்தோசமாக உள்ளனர். ஆனால் பணம் இல்லை எனின் இது கஷ்டமாகும். வாக்குறிதி வழங்கிய விடயங்களை ஒவ்வொன்றாக அரசாங்கம் என்ற ரீதியில் மேற்கொள்ள வேண்டும். கல்வி சீர்திருத்தம் தொடர்பாக தெரிவித்திருந்தோம், அதனை தற்போது ஆரம்பித்துள்ளோம். இங்குள்ள ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாடசாலைக்கு செல்லவில்லையோ என தோன்றுகிறது. குறிப்பாக தமிழரசுக் கட்சியில் ஒருவரே அப்படி இருக்கின்றார், மற்றவர்கள் கொஞ்சம் பரவாயில்லை. நாம் மேற்கொண்ட கல்வி சீர்திருத்த விடயத்தில் இவர்கள் மேற்கொண்ட செயலினால் தரம் 06 இற்கான வகுப்பினை இவ்வருடம் ஆரம்பிக்க முடியாமல் போய்விட்டது. இருந்த போதும் நாம் கல்வி சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்கு ஆரம்பித்தோம். நாம் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் அரசினை அமைத்துள்ளோம். கடந்ந நாட்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் போராட்டம் இடம்பெற்றது. இந்நிலையில் ஜனாதிபதிக்கும் அவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் போது அவர்களை ஆசிரியர்களாக உற்வாங்குவதற்கான பிரமானத்தின் அடிப்படையில் ஜனாதிபதி சம்மதம் தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலே படையினர் மற்றும் அரசின் கீழ் உள்ள காணிகளை தேவையின் அடிப்படையில் பாதுகாப்பு படையினரின் சம்மதத்துடன் மீளவும் பொதுமக்களுக்கு வழங்கவுள்ளோம். 60 மாதங்கள் பணியாற்றுவதற்காக எமது அரசாங்கம் அமைக்கப்பட்டுள் ளது. கடந்த காலங்களிலே அரசாங்கங்கள் வழங்கிய நிதியை விட தற்போது டித்வா சூறாவளியால பாதிக்கப்பட்ட மக்களிற்கு பெருமளவான நிதியினை வழங்கியுள்ளோம். குறிப்பாக எமது அரசாங்கத்தினால் பணத்தினை மிதப்படுத்தியமையாலே வழங்க முடிந்தது. மேலும் வறுமைக்குட்பட்ட மக்களின் தன்மையை அறிந்து கொள்ளக்கூடிய ஜனாதிபதி இருப்பதனால் இது நடந்தது. குறிப்பாக டித்வா புயலில் அழிவடைந்த வீடுகளிற்கு ஐம்பது இலட்சம் வழங்கவுள்ளார் என்பதை எங்களால் கூட நம்ப முடியாது இருந்தது. ஒரு வீட்டினை மட்டும் உள்ளவர்களின் வீடுகள் அழிவடையும் போது அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும் என்று எங்களிற்கு புரியும். இது வவுனியாவில் ஒரு வீடு, கொழும்பில் ஒரு வீடு மற்றும் இலண்டனில் ஒரு வீடு இருப்பவர்களிற்கு தெரியாது. இதன் காரணமாகவே அழிவடைந்த வீட்டிற்கு ஐம்பது இலட்சம் ரூபாவும், அதற்கு மேலேயும் வழங்குவதற்கு தீர்மானித்தோம். மேலும் டித்வா சூறாவளி காலத்திலேயே சம்பளத்தையும் அதிகரித்திருந்தோம். அத்தோடு மலையக தொழ்லாளர்களுக்கு 200 ரூபாய் அரசாங்கம் வழங்கியதன் ஊடாகவே 1700 ரூபாய் வழங்கப்படவுள்ளது. குறிப்பாக எங்களுடைய நாட்டை நாங்கள் தான் கட்டியெழுப்ப முடியும் மாறாக வேறு யாரும் அதனை செய்ய முடியாது. இலங்கையை கட்டியெழுப்ப யாருமே பெரிய அளவில் உதவி செய்ய போவதில்லை. சில நாடுகள் குறிப்பிட்டளவு நிதியினை வழங்கிய போதும் முழு நாட்டையும் கட்டியெழுப்ப போதுமானதாக இருக்காது. நீங்கள் அனைவரும் இணைந்து 75 வருடகால மோசடியான அரசினை இல்லாது செய்துள்ளீர்கள். அத்தோடு நான்கு திசையை உள்ளடக்கிய நல்ல கட்டமைப்பை கொண்ட அரசாங்கத்தை உருவாக்கியுள்ளீர்கள். அதிகளவான மக்கள் எங்கள் அரசின் மீது ஆர்வமாக உள்ளனர். ஆனால் இவ் அரசை யார் எதிர்க்கின்றனர். குறிப்பாக கடந்த காலத்தை போல் சௌகரியமாக இருக்க முடியாத ராஜபக்ஷக்கள், ஐக்கிய மக்கள் சக்தியினரே. குறிப்பாக ஒரு குடும்பமே ராஜபோக வாழ்க்கை வாழ்ந்தார்கள் அது தற்போது முடியாது உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியினர் பொய் கூறுவதோடு எங்களையும் பேசுகின்றார்கள். இவ்வாறானவர்களிற்கு உடந்தையாக இருந்த சிறு தொகை அதிகாரிகளும் எதிர்க்கின்றனர். இருந்த போதும் இனவாதம் இல்லாமல் இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் எமக்கு எதிராக இல்லை. கொழும்பு, காலியிலும், பருத்தித்துறையிலும் இருந்து வலைப்பந்து விளையாட்டு போல் இனவாத விளையாட்டை விளையாடுவார்கள். இதன் மூலமாக அவர்களிற்கு ஒரு செய்தி உள்ளதுடன், அவர்களிடம் ஏமாந்து வாக்கும் போடப்படும். தெற்கில் இனவாதம் இல்லாமல், வடக்கிலும் இனவாதம் இருக்காது. ராஜபக்ஷ சரியான பசியுடன் உள்ளார். அவர்களின் உணவு இல்லை. கம்மன்பில, வீரவன்ச ஆகியோருக்கு இனவாத உணவு இல்லாமல் மெலிந்துள்ளனர். அமைச்சு பதவி இன்றி வாக்குகள் இன்றி தற்போது இவர்கள் இனவாதம் எங்குள்ளது என தேடுகின்றனர். இவர்களை போன்றவர்களே யாழிலும் உள்ளதுடன், அவர்களிற்கு அமைச்சு பதவி இல்லாமல் போய்விட்டது. அத்தோடு வடக்கில் உள்ள இவர்களும் இனவாதத்தை தேடி திரிகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களுக்கு இனவாத உணவை வழக்கம்போவது இல்லை. அவர்களிற்கு இரண்டை தெரிவதற்கான சந்தர்ப்பம் தற்போது உள்ளது. ஒன்று இனவாதம் இல்லாமல் அப்படியே இல்லாமல் போவது. இரண்டாவது இந்த நாட்டிலே ஒற்றுமையாக ஒன்றாக சேர்ந்து பயணிக்கத்தக்க வகையில் அவர்கள் செய்வதன் மூலம் அவர்கள் தப்பிக்கொள்வார்கள். தற்போது இனவாத செயற்பாட்டை தேடுபவர்கள் இரு பக்கமும் இருந்து குரைக்கின்றனர் என தெரிவித்தார். https://athavannews.com/2026/1464113- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைக்காவது Finn Allen இன் அடி பார்க்கலாமா?- பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு: சிறுவன் உயிரிழப்பு
வட்ஸப்பில் இருந்து.. தற்போது மாடு களவில் ஈடுபடும் குழுவினர் சொகுசு கார்கள் மற்றும் வேன்களை அதிகம் பயன்படுத்துகின்றனர்... நள்ளிரவு 1.18 மணியளவில் வயல் அரிவு வெட்டுக்கு ஆட்களை ஏற்ற சீட்கள் இல்லாத வாகனத்தில் சென்றார்கள் எனும் கதை சிறு பிள்ளையும் ஏற்றுக்கொள்ளாது. வடக்கில் சட்டவிரோத தொழில்கள் இளவயதினர் அதிகம் ஈடுபட்டு வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கிறது. குடும்பத்தினர் எவ்வளவு பணம் சம்பாதிக்கின்றனர் என்று பார்க்கின்றனரேயொழிய எவ்வகையில் சம்பாதிக்கின்றனர் என்று பார்ப்பதில்லை. ஒரு குடும்பத்தின் ஜீவனோபாயமாக இருக்கும் ஒரு மாட்டினை களவெடுத்து சென்று இறைச்சிக்காக விற்பவர்கள் அறிவதில்லை அந்த மாட்டை நம்பி இருக்கும் குடும்பத்தின் வலியினை. சாதாரணமாக மாட்டை கடத்தி பிடிபட்டால் நீதிமன்றம் ஊடாக கிடைக்கும் தண்டனை மிகவும் சொற்பமானது. கடத்தலில் ஈடுபட்டவர் அன்றே பிணையில் வெளியே வரலாம் குற்றக்காசும் மிகவும் குறைவே. இவ்வாறான சட்ட நிலைமை இருப்பதால்தான் துணிவாக மாடுகளை திருடி இறைச்சிக்கு விற்பனை செய்கின்றனர். இந்த துப்பாக்கிச்சூடு எந்தளவுக்கு ஏற்றுக்கொள்ளமுடியாதோ அந்தளவுக்கு இவர்கள் செய்த சட்டவிரோத செயலும் ஏற்றுக்கொள்ள முடியாததே... தகவல் சுப்பிரமணிய பிரபா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
173 நல்ல ஸ்கோர்............. - யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
Important Information
By using this site, you agree to our Terms of Use.