All Activity
- Past hour
-
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
என்னப்பா காதல் படத்தில வாற பரத் மாதிரி கிடக்கு..🤣
-
திமுகவால் நீட் விலக்கை சாத்தியமாக்க முடியாதது ஏன்?
நா த க தனது தேர்தல் அறிக்கையில் அடித்து விடும் கஞ்சா கப்ஸா வாக்குறுதிகள் போன்றதே…இந்த நீட் தேர்வை ஒழிக்கும் வாக்குறுதியும். இதை மத்திய அரசு தமிழ் நாட்டு கட்சி ஒன்றில் தங்கி இருக்கும் நிலை வரும்போதுதான் சாதிக்க முடியும். அதிமுக கேட்கலாம். ஆனால் மாட்டார்கள்.
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : விஸ்வாதன் – ராமமூர்த்தி ஆண் : உள்ளம் என்பது ஆமை அதில் உண்மை என்பது ஊமை சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி சொல்லில் வருவது பாதி நெஞ்சில் தூங்கிக் கிடக்குது மீதி ஆண் : தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் தெய்வம் என்றால் அது தெய்வம் அது சிலையென்றால் வெறும் சிலைதான் உண்டென்றால் அது உண்டு இல்லையென்றால் அது இல்லை இல்லையென்றால் அது இல்லை ஆண் : தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் தண்ணீர் தணல் போல் எரியும் செந்தணலும் நீர் போல் குளிரும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நண்பனும் பகை போல் தெரியும் அது நாள்பட நாள்படப் புரியும் நாள்பட நாள்படப் புரியும்.......! ...... உள்ளம் என்பது ஆமை .....
-
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
இராணுவ தளபதியை நீக்கிற அளவுக்கு ஈரான் பெரியம் சம்பவம் செய்திருக்கு.....😂
-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
என்னை அழைத்தது யாரடி கண்ணே ...........! 😍
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
கோவையில் ஒரு தொகுதியில் போட்டியிட மலையார் விரும்பினவராம். ஆனால் நயினார் கோவை வடக்கை தவிர வேறு எந்த தொகுதியையும் திட்டமிட்டே கேட்டு பெறவில்லையாம். இது எடப்பாடி+நயினானார் ஜாயிண்ட் ஆப்பரேசனாம். கோவை வடக்கில் வானதி சிட்டிங் எம் எல் ஏ, அவரை தூக்கி விட்டு தன்னை போடும் படி மலையார் கேட்க, இல்லை என வானதி மறுக்க —-பட்டியல் வெளி வர தாமதம் ஆகியதாம். அண்ணாமலை போன்ற ஒருவரை சட்டசபைக்குள் வராமல், கட்சியில் மாநில பதவியில் இல்லாமல் ஆக்கியதன் மூலம், தேர்தலுக்கு பின்னாக தனக்கு வரக்கூடிய இடைஞ்சலை கணிசமாக குறைத்துள்ளார் எடப்பாடி.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
மோடியும் வரணாசி, குஜராத் என இரு தொகுதியில் போட்டி போட்டவர். டான்சி தீர்ப்புக்கு பின் ஜெயலலலிதா 4 தொகுதியில் வேட்புமனு செய்து, 4ம் தள்ளுபடியானது என நினைக்கிறேன். 2க்கு மேல் போட்டியிட முடியாது.
-
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
தம்பர் 3ம் தரம் ஜனாதிபதியாக, தேர்தல்களை தள்ளிவைக்க தேவையானது செய்யப்படுகிறதோ?
-
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
இளநிலை பிக்குகள்... விகாரையில் பயிற்சி எடுக்க வரும் போதே.. ஆண்மை நீக்கம் செய்து (நலம் எடுத்து) சேர வேண்டும் என்ற சட்டத்தை, அரசு உடனடியாகயாக அமுல் படுத்த வேண்டும். அத்துடன்... இதுவரை, நலம் எடுக்கப் படாத... கிழட்டுப் பிக்குகளுக்கும் நலம் எடுக்க வேண்டி உள்ளது. ஊருக்குள் இவங்கள் தொல்லை தாங்க முடியவில்லை. @Kandiah57
- Today
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. அண்ணாமலைக்கு வாய்ப்பு மறுப்பு 3 Apr 2026, 1:59 PM தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் 27 தொகுதிகள் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இன்று (ஏப்ரல் 3) வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைமை அறிவித்துள்ளது. இதில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. https://minnambalam.com/bjp-candidate-list-released/
-
பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும் — அ. வரதராஜா பெருமாள் —
பெரும்பான்மை சிங்கள மக்கள் விரும்பினாலேயே இலங்கையில் சமஸ்டி முறை சாத்தியமாகும் April 2, 2026 — அ. வரதராஜா பெருமாள் — இலங்கையின் அரசியல் கட்டமைப்பு சமஸ்டி முறையைக் கொண்டதாக அமைய வேண்டுமானால், அதனை பெரும்பான்மையான சிங்கள மக்கள் விரும்பி ஏற்றுக் கொள்கிறபோதே – அதற்கு பெரும்பான்மையான மக்கள் சட்டபூர்வமாக ஒப்புதல் அளிப்பதனை சாத்தியமாக்கின்ற போதே, அது இலங்கையின் அரசியலில் நடைமுறையாகும். சமஸ்டிதான் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கான தீர்வாக அமைய வேண்டும் என தமிழர்கள் தங்களுக்குள்ளேயே மட்டும் பேசிக் கொள்வதாலோ அல்லது தமிழ் ஊடகங்களில் மட்டும் விவாதங்களை நடத்துவதாலோ சமஸ்டி தொடர்பாக இலங்கையின் அரசியலை இஞ்சியளவு கூட நகர்த்த முடியாது. சிங்களவர்கள் ஏற்காமல் சமஸ்டி சாத்தியமில்லை சமஸ்டிக் கோரிக்கையை பிரிவினைக் கோரிக்கையாக பார்க்கிற சிங்கள இனம் சமஸ்டியை ஏற்காதே? சிங்கள பௌத்த பேரினவாதிகளின் செல்வாக்குக்கு உட்பட்டவர்களாக இருக்கின்ற சிங்கள மக்கள் தமிழர்களின் கோரிக்கையை எப்படி ஏற்பார்கள்? பெரும்பான்மையான சிங்களவர்கள் அதனை ஏற்கும் வரை தமிழர்கள் காத்திருக்க வேண்டுமா? சமஸ்டி அமைப்பு முறையை சிங்களவர்கள் ஏற்பதென்பது இன்னும் பல தலைமுறைகளுக்குக் கூட நடக்கக் கூடிய காரியமில்லையே? இப்படி பல கேள்விகளை தொடராக கேட்டு அடுக்கிக் கொண்டே போகலாம். இப்படியாக கேள்விகளை எத்தனை விதமாகத்தான் கேட்டுப் பார்ததாலும், யதார்த்தத்தில் சிங்கள மக்களிற் பெரும்பான்மையானவர்கள் விரும்பி அதனை ஏற்றுக் கொள்ளாதவரை சமஸ்டி முறையை இலங்கையில் சட்டபூர்வமாக ஏற்படுத்த முடியாது. சிங்கள மக்கள் மத்தியில் உள்ள அரசியல் சமூக சக்திகளை மிரட்டி, சிங்கள மக்களின் எதிர்ப்பைப் பொருட்படுத்தாது இலங்கையில் சமஸ்டி ஆட்சிமுறையை எந்தவொரு வெளிநாட்டு சக்தியாலும் திணித்து விட முடியாது. 1983ம் ஆண்டுக்கும் 1989ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்திய அரசு மேற்கொண்ட செயற்பாடுகளை மனதில் வைத்துக் கொண்டு இனியும் இந்தியாவோ அல்லது வேறு எந்தவொரு வெளிநாட்டு சக்தியுமோ செயற்படும் என எதிர்பாரத்து தமிழர் எவரும் தமது அரசியலை மேற்கொண்டால் அது படு முட்டாள்த்தனமாகும். இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்த வேண்டுமானால், இலங்கையின் பாராளுமன்றம் ஓர் அரசியல் யாப்பு திருத்தத்தின் மூலமாகவோ அல்லது ஒரு புதியதொரு அரசியல் யாப்பு பிரேரணையில் அதனை உள்ளடக்கிய விதமாகமோ கொண்டு வருவதன் மூலமாகவேதான் ஆக்க முடியம் – பாராளுமன்றத்தில் அந்த பிரேரணையை (நகல் வரைவை அல்லது மசோதாவை) பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் ஏற்க வேண்டும், மேலும், அதனை நாட்டு மக்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதனால், நாடு முழுவதற்குமாக நடத்தப்படும் சர்வசன வாக்கெடுப்பில் வாக்களிபபவர்களில் பெரும்பான்மையானோர் அதற்கு சாதகமாக வாக்களிக்க வேண்டும். இதுவே இலங்கையின் சட்டம். இதனை இலங்கையின் அனைத்து சட்டத்தரணிகளும் மற்றும் அரசியல் யாப்பு அறிவுடைய அனைவரும் அறிந்திருக்கக் கூடிய – மனதில் கொள்ள வேண்டிய முதலாம் பாடம். 2000மாம் ஆண்டே சந்திரிகாவின் பிரேரணை எரிந்து சாம்பலாகி காற்றில் கலந்து விட்டது இன்று ஆட்சியில் இருக்கும் மக்கள் விடுதலை முன்னணியினர் உட்பட தென்னிலங்கையின் கட்சியினர் எவரும் சமஸ்டிக்கான அரசியல் யாப்பு திருத்தக் கோரிக்கையை பாராளுமன்றத்தில் முன் வைக்க மாட்டார்கள் என்பது தெரிந்த விடயமே. சமஸ்டியே இல்லாமல் வெறுமனே ‘பிராந்தியங்களின் ஒன்றியம் என பெயரை மட்டுமே வைத்து முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கா பாராளுமன்றத்துக்கு கொண்டு வந்த புதிய அரசியல் யாப்பு பிரேரணை பாராளுமன்றத்துக்கு உள்ளும் புறமும் எரிக்கப்பட்டதை இங்கு நினைவுபடுத்துவது அவசியமாகும். அதே சந்திரிகா பண்டாரநாயக்கா கூட அதே வகைப்பட்ட ஒரு பிரேரணைக்கு இன்றைய சூழ்நிலையில் சிங்கள மக்கள் மத்தியில் ஆதரவு கேட்கத் தயாராக இல்லை என்பதை அவரே அண்மையில் கூறியிருக்கிறார். ரணில் விக்கிரமசிங்கா எந்தவொரு அரசியற் தீர்வும் ஒற்றையாட்சிக்கு உள்ளேதான் என்று கூறி விட்டார். யுத்தம் நடந்து கொண்டிருந்த போது 13 பிளஸ் என்று கூறிய ராஜபக்சாக்கள் பின்னர் 13ஐயும் இல்லாமற் செய்யவே முயற்சித்தார்கள். மக்கள் விடுதலை முன்னணியினரின் வரலாறு சொல்லவே வேண்டியதில்லை. இவ்வாறான நிலைமைதான் சிங்கள அரசியல் சமூக சக்திகள் மத்தியில் இருக்கிறதென்றால், இப்படிப்பட்ட சிங்களவர்களோடு எப்படி தமிழர்கள் ஒற்றையாட்சி அமைப்பில் ஒன்றிணைந்து வாழ முடியும் என்று எந்தத் தமிழரும் முக்கி முறுகுவதில் எந்தவித பிரயோசனமுமில்லை. முதலில் உண்மைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். இலங்கையின் இன்றைய அரசியல் சூழ்நிலையையும், இந்து சமுத்திரப் பிராந்திய நாடுகள் உலக அளவில் கொண்டிருக்கும் அரசியல் பொருளாதார உறவுகளையும்; புரிந்து கொண்டே தமிழர்கள் தங்களுடைய அரசியல் கோரிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். இலங்கையின் அரசியல் யாப்பைப் பொறுத்த வரையில், ஒற்றையாட்சி என்ற சொல் இடம் பெற்றிருக்கின்ற பந்தியில் ஒரு எழுத்தை மாற்றுவதாக இருந்தாலென்ன அல்லது அரசியல் யாப்பில் வேறொரு உறுப்புரையில் ஒற்றையாட்சிக்கு வேறோரு விளக்க வரைவிலக்கணத்தை கமுக்கமாக அமுக்கி புகுத்தி விடலாம் என முயன்றாலென்ன, அதற்காக பாராளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு தொகையினரின் ஆதரவையும் சர்வசன வாக்கெடுப்பில் பெரும்பான்மையான வாக்குகளையும் பெற்றேயாக வேண்டும். அதை விடுத்து ‘ஒற்றையாட்சியை ஏற்க மாட்டோம்’, ஒற்றையாட்சிக்குள் இனப் பிரச்சினைக்கு தீர்வு ஏற்பட முடியாது’ என தமிழர்கள் மத்தியில் எத்தனை விதமாக உரத்த குரலில் பேசினாலென்ன அல்லது தமிழ் ஊடகங்களில் எத்தனை விதமாக அறிக்கைகள் விட்டாலென்ன அவை சபைக்குதவமாட்டா என்பதனை சாதாரணமாக அரசியல் அறிவுடைய எவராலும் தெரிந்து கொள்ள முடியும். இதில் உணர்ச்சி வசப்படுவதற்கு எதுவுமேயில்லை. தமிழர் விடுதலைக் கூட்டணி சமஸ்டியை கோரவில்லை இந்தியா சமஸ்டியை பேச தயாராக இல்லை 1983ம் ஆண்டு ஜூலையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி தமிழர்களுக்கெதிராக நடத்திய படுகொலைகளயும் பேரழிவுகளையும் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் நிலைமைகளின் காரணமாக திருமதி இந்திரா காந்தி அவர்களின் தலைமையில் இருந்த இந்திய அரசாங்கம் இலங்கையின் இன முரண்பாடு தொடர்பில் ஓர் அரசியற் தீர்வுக்கான பேச்சுவார்த்தை முன் முயற்சியை ஆரம்பித்தது. அதன்படி இந்தியப் பிரதமர் தமது விசேட பிரதிநிதியாக திரு. ஜி பார்த்தசாரதி அவர்களை இலங்கை ஜனாதிபதியுடன் பேசுவதற்கென அனுப்பி வைத்தார். அவர் முதலாவது தடவையாக 1984 ம் ஆண்டு ஆகஸ்டில் இலங்கை வந்த போது, இலங்கையில் இந்தியாவில் அமைந்திருப்தைப் போல ஓர் அரை சமஸ்டி – அதாவது ஒற்றையாட்சியும் இல்லாமல் சமஸ்டியும் இல்லாமல் இந்தியாவில் இருப்பது போன்ற மாநில ஆட்சி அமைப்பையும் அதிகாரப் பகிர்வையும் ஏற்படுத்துவதற்கான குறிப்புகளோடுதான் வந்திறங்கினார். ஆனால் அது தொடர்பாக கொழும்பில் சந்திப்புகளை நடத்திக் கொண்டிருந்த ஒரு சில நாட்களுக்குள்ளேயே இலங்கையில் ஒற்றையாட்சி முறைக்குள்ளேதான் அரசியல் தீரவு சாத்தியம் என்பதை கண்டு கொண்டார். ஆனபடியாற்தான், 1983ம் ஆண்டு டிசம்பரில் டெல்லியில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் மாநாட்டுக்கு ஜே. ஆர். சென்ற போது ஒற்றையாட்சிக்குள் ஓர் அரசியற் தீர்வைக் காண்பது பற்றியே இந்திய அரசாங்கம் ஜே.ஆருடன் பேசியது. ஒற்றையாட்சிக்குள் மாகாண ஆட்சி பற்றி ஜே.ஆர். அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. சுமார் ஓராண்டு நடைபெற்ற அந்த பேச்சுவார்த்தைகளின் போது வடக்கு கிழக்கு இணைப்பை கோரிய போதிலும் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையிலான அதிகாரப் பகிர்வுகள் பற்றியே தமிழர் விடுதலைக் கூட்டணி பேசியது. சமஸ்டி பற்றி எந்த விவாதமும் இடம் பெறவில்லை. பின்னர் 1986 ஜனவரி தொடக்கம் 1986 டிசம்பர் வரையான காலகட்டத்தில் இலங்கை அரசுடன் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளில் தமிழர் விடுதலைக் கூட்டணி பங்குபற்றியிருக்கிறது. ஆனால் அது சமஸ்டிக் கோரிக்கையை எந்த சந்தர்ப்பத்திலும் முன் வைக்கவில்லை. திம்புப் பேச்சுவார்த்தையிலும் சமஷ்டி கோரப்படவில்லை 1985ல் பூட்டான் நாட்டின் தலைநகரமான திம்புவில் இலங்கை அரச பிரதிநிதிகளுடன் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர்களும் ஆயுதம் தாங்கிப் போராடிய தமிழர் இயக்கங்களின் பிரதிநிதிகளும் பேச்சுவார்த்தை நடத்திய போதும் கூட, இலங்கை அரசின் தீரவுப் பிரேரணைகளை விமர்சித்ததுவும், போர்க் குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை முன் வைத்ததுவும் நடந்தனவே தவிர தமிழர் தரப்பில் இருந்து எவரும் சமஸ்டி முறையின் அடிப்படையில் அரசியற் தீர்வு முன் வைக்கப்பட வேண்டுமென்று திட்டவட்டமாக கோரவில்லை. மேலும், இன்றைக்கு தமிழர்கள் மத்தியில் அவ்வப்போது பேசப்படுகிற திம்புப் பிரகடனம் என்று சொல்லப்படுகிற நான்கு பந்திகளில், தமிழர்கள் தேசிய இனம், தமிழர் தாயகம், தமிழர்களின் சுயநிர்ணய உரிமை என்ற சொற் தொடர்கள் உள்ளனவே தவிர திட்டவட்டமாக அந்த பிரகடனத்திற் கூட சமஸ்டி அரசாட்சி முறையில்தான் அரசியற் தீர்வு அமைய வேண்டும் என வெளிப்படையாக கூறப்படவில்லை. அந்த மூன்று சொற் தொடர்களும் சமஸ்டியையே பூடகமாக குறிக்கிறது என்று யாராவது சொல்ல முற்பட்டால் அது சரியல்ல. ஏனெனில், திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்ட எந்த தமிழ் அமைப்பிடமும் சமஸ்டி அமைப்பு முறை பற்றிய எண்ணம் கிஞ்சித்தும் இருக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. 1926 – 27ல் சிங்களவர் சமஸ்டி கோரியபோது அதனை கிண்டலடித்ததே தமிழர்களின் அரசியல் இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை ஏற்படுவதற்கான அரசியலை மிக வலுவாக நகர்த்துவதற்கான சந்தர்ப்பம் தமிழர்களுக்கு 1920 களில் கிடைத்தது. அப்போது அதனை தீரமானகரமாக கோரியது கண்டிய தேசியப் பேரவையே. திரு. S.W.R.D. பண்டாரநாயக்கா அதனைத் தாங்கிய படி தமிழர்களின் ஆதரவைக் கேட்டு யாழ்ப்பாண அரசியல் சமூக பிரமுகர்களை தேடித்தேடி சந்தித்தார் – சமஸ்டிக்கு ஆதரவு கேட்டார். அப்போது அதனை தமிழர்களின் அனைத்து பிரிவினரும் தத்தமக்குரிய வெவ்வேறு நியாயங்களைக் கூறி நிராகரித்தார்கள். 1930களின் இறுதிப் பகுதியில் இருந்து 1945 வரை இலங்கையில் நிலவிய அரசியற் சூழ்நிலையில் தமிழர்கள் சமஸ்டி ஆட்சி முறையைப் பெறுவதற்கு வேண்டிய அரசியலை நகர்த்துவதற்கான வாய்ப்பு நன்றாகவே நிலவியது, அப்போது தமிழர் சமூகத்தின் அனைத்து பிரமுகர் கூட்டமும் திரு ஜி.ஜி. பொன்னம்பலத்தை தலைவராக நிறுத்தி ‘பாராளுமன்றத்தில் ஐம்பதுக்கு ஐம்பது ஆசனங்கள்’ எனும் கோரிக்கையை முன் வைத்தார்களே தவிர சமஸ்டி ஆட்சி முறையை கேட்கவே இல்லை. ‘ஐரோப்பியர் இலங்கையை கைப்பற்றுவற்கு முதலில் இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் தமிழ் ராஜ்ஜியமாக இருந்தது’ என்றோ, எனவே ‘அந்த தமிழ் ராஜ்ஜியத்தை தனி ராஜ்ஜியமாக ஆக்கி சுதந்திரம் தர வேண்டும்’ என்றோ அல்லது அதனடிப்படையில் சமஸ்டி ஆட்சி முறையை ஏற்படுத்தும்படியோ எந்தச் சந்தர்ப்பத்திலும் எந்தத் தமிழ்த் தலைவரும், இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னர் பிரிட்டிஸாரிடம் பேசியதே இல்லை. அப்போது பாட்டன்மார் கசக்கி நாசமாக்கியதை இப்போது ஆக்கித்தா என பேரன்மார் கேட்கினம் 1930களின் இறுதி ஆண்டுகள் மற்றும் 1940களின் ஆரம்ப ஆண்டுகளின் போது உள்ளுராட்சி அமைச்சராக இருந்த பண்டாரநாயக்காவும் ஏனைய சில சிங்களத் தலைவர்களும் இலங்கையில் மூன்று மாகாணங்கள் கொண்ட தமது பழைய சமஸ்டிக் கோரிக்கை பற்றி தமிழ்த் தலைவர்களுடன் பேசினார்கள். ஆனால் அப்போது யாழப்பாண தலைப்பா கட்டி மேட்டுக்குடியினரின் பென்னம் பெரிய தலைவராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தார், அது தனது ஐம்பதுக்கு ஐம்பது (50 க்கு 50) கோரிக்கைக்கு எதிரான சதித் திட்டம் என்றார், அத்துடன் சமஸ்டி என்பது ‘இலங்கைக்கு கூடாத ஒன்று என்பதோடு, தமிழர்களுக்கு மிக மோசமான ஒன்று’ என முழக்கங்கள் இட்டு, யாராவது சமஸ்டி பற்றி பேசினால் அது தமிழினத் துரோகம் என்று பட்டம் தெளிக்கும் கட்டத்தில் தமிழர்களை நிறுத்தினார். அவர் அப்போது மட்டுமல்ல, சந்தனப் பொட்டு பொன்னம்பலத்தார் 1970ம் ஆண்டு தேர்தலில் தோற்று மலேசியா போகும் வரை சமஸ்டி கேட்ட செல்வநாயகத்தை திட்டித் தீர்ப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்தார். தமிழரசார் வீட்டு சமஸ்டி பூனை எலி பிடிக்க எழும்பியதே இல்லை 1949ம் ஆண்டு தொடங்கிய தமிழரசுக் கட்சி தனது கட்சியின் அறிக்கையில் இலட்சியமாக சமஸ்டி ஆட்சி முறையைக் குறிப்பிட்ட போதிலும், எந்தக் கட்டத்திலும் சிங்களத் தலைவர்களிடம் சமஸ்டியை வலியுறுத்தும் அரசியற் கோரிக்கையை முன் வைத்ததில்லை. ● வடக்குக்கும் கிழக்குக்கும் தனித்தனியான பிரதேச சுயாட்சி ஏற்பாட்டுக்கே 1957ல் பிரதமர் S.W.R.D. பண்டாரநாயக்காவுடன் தமிழரசார் உடன்பாடு கண்டனர். ● 1960ம் ஆண்டு சிறி லங்கா சுதந்திரக் கட்சி ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு கேட்ட போது தமிழரசுக் கட்சியினர் திரு. பண்டார நாயக்காவோடு செய்து கொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டுமென்றே கேட்டார்கள். ● 1965ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியோடு கூட்டுச் சேரும்படி டட்லி சேனநாயக்கா கேட்டபோது, அவரோடு வெறுமனே மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சபைகளை அமைப்பதையே, தமிழரசுக் கட்சியினர் கனவான் ஒப்பந்தம் என செய்து கொண்டார்கள். சமஸ்டி என்பதனை கட்சியின் கொள்கை அறிக்கையில் இலட்சியமாக வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதனை சட்டபூர்வமான முறைகள் மூலம் அடைய இலங்கையில் வாய்ப்புகள் இல்லை என்பதுதான் தமிழரசுக் கட்சித் தலைவர்களின் அரசியற் புரிதலாக இருந்ததென்று உறுதியாகவே கூறலாம். கைக்கு எட்டியதை வாய்க்கு எட்ட விடாமல் தட்டி விட்ட தமிழீழ தேசியப் புலி இலங்கை அரச படைகளுக்கு எதிரான யுத்த வல்லமையை புலிகள் கொண்டிருந்த 2001 – 2003ம் ஆண்டு கால கட்டத்தில் அமெரிக்கா, யப்பான் மற்றும் பிரதானமான ஐரோப்பிய நாடுகள் கூட்டாக நோர்வேயை முன்னுக்கு விட்டு நேரடியாக இலங்கையின் அரசியலில் தலையிட்டு, இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறையைக் கொண்டு வர முற்பட்டன. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கா அதற்கு விரும்பியோ விரும்பாமலோ தலையாட்டினார். அப்போது சிங்கள மக்களிற் பெரும்பான்மையினர் தங்களது அரச படையினர் யுத்தத்தில் வெல்லுவார்கள் என்று நம்பவில்லை. அதனால் நாட்டைப் பிரிக்காமல் வேறு எதைக் கொடுத்தாயினும் சமாதானத்தை அடைய விரும்பியிருந்தனர். இந்தியாவும் அந்த முயற்சிக்கு மறைமுகமாக ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதியாக இருந்த சந்திரிகா அப்போது அவரிருந்த நிலையில் அதனை மௌனமாக ஏற்றவராகவே இருந்தார். அப்போது பிரபாகரன் சமஸ்டியை ஏற்கத் தயாராக இருந்திருந்தால் கிளிநொச்சியில் இருந்தபடியே ஒருங்கிணைந்த வடக்கு கிழக்குக்கு சமஸ்டி அமைப்பைப் பெற்றிருக்கலாம். ஆனால் தமிழீழக் கனவில் மிதந்து கொண்டிருந்த பிரபாகரன் அதனை நிராகரித்ததால் அந்த வாய்ப்பு தமிழர்களால் தமிழர்களுக்கு இனிமேல் இல்லை என்றாகியது. 2009ம் ஆண்டுக்குப் பின்னர் சமஸ்டிக்கான எந்தச் சூழலும் இல்லை. ● அவ்வப்போது, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென இந்தியா சொல்லும். ● ஆண்டுக்கொருமுறை, மேலைத் தேச நாடுகள் ஜெனீவாத் தீர்மானத்தில் ‘இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தின் படி மாகாண ஆட்சி முறையை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்’ என ஒரு பந்தியை சேர்த்துக் கொள்வார்கள். ● இலங்கையின் அரசியல் யாப்பின் ஒற்றையாட்சிக்கு உட்பட்ட வகையில் சட்டபூர்வமாக ஆக்கப்படக்கூடிய உச்சபட்ச அரசியற் தீர்வொன்றை அடைவதற்கு இலங்கை வாழ் தமிழ்ப் பேசும் மக்களின் அரசியற் கட்சிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் முழு மூச்சாக செயற்பட்டு, தமிழக அரசியலை சாதகமாக செயற்பட வைத்தால் இந்திய அரசை காத்திரமாக செயற்பட வைக்கலாம். அப்போதும் கூட இலங்கை அரசாங்கத்துடன் இந்திய அரசு மென்மையாகவேதான் – ராஜதந்திர வரையறைகளுக்கு உட்பட்டேதான் பேசும் என்பது தெளிவான ஒரு விடயம். ● இந்தியாவை மீறி வேறெந்தவொரு நாடும் இலங்கையில் சமஸ்டி என்ற ஒன்று பற்றி பேச மாட்டார்கள் என்பதும் மிகத் தெளிவானது. ● இலங்கையில் சமஸ்டி அமைப்பு என்றாலே சிங்கள மக்கள் அஞ்சுகிறார்கள் என்பது மிகவும் வெளிப்டையான ஒன்று. ● முஸ்லிம் மக்களது பிரதிநிதிகளோ அல்லது மலையக தமிழ் மக்களது பிரதிநிதிகளோ சமஸ்டியைப் பற்றி இப்போது பேசுவதே முட்டாள்த்தனமானது என்ற அபிப்பிராயத்தை உறுதியாகவே கொண்டிருக்கிறார்கள். ● தமிழர்களிடையே கூட, அரசியல் யாப்பில் இருக்கின்ற 13வது திருத்தப்படியான அதிகாரங்களையே முழுமையாக பெற முடியாமல் இருக்கின்ற நிலைமையில் சமஸ்டியைப் பற்றி பேசுவது மடமைத்தனமானது என்பதே அறிவார்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானவர்கள் மத்தயில் நிலவுகின்ற அபிப்பிராயம். பல்லாயிரம் தியாகங்களால் கிடைத்த தோண்டியை கூத்தாடி கூத்தாடி போட்டுடைத்து விடாதீர்கள்! இப்படியாக நிலவும் யதார்த்தங்கள் மத்தியிலும், சமஸ்டிதான் சரியானது – அதுதான் நிரந்தரமானதொரு அரசியற் தீரவைத் தரும் – அந்த சுலோகத்தை தாங்கிய அரசியலை மட்டும்தான் தங்களால் மேற்கொள்ள முடியும் என்று இன்னமும் பிடிவாதமாகக் கருதுவோர் செய்ய வேண்டியது என்னவென்றால், பெரும்பான்மையான சிங்கள மக்களை, சமஸ்டி அமைப்பு முறையை விரும்பி ஏற்றுக் கொள்ள வைப்பதற்கான – சமஸ்டி ஏற்பாட்டிற்கு சிங்களவர்களின் ஆதரவையும் புரிந்துணர்வையும் பெருக்குவதற்கான வேலைத் திட்டங்களை சிங்கள மக்கள் மத்தியில் மேற்கொள்வதுதான். அதற்கு மாறாக குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டுவது போல தமிழர்கள் மத்தியிலிருந்து சமஸ்டிக்கான ஆதரவைத் திரட்ட முயற்சிப்பது – சமஸ்டிக்கான பட்டி மன்றங்களை நடத்துவது ஆக்கபூர்வமான நல்ல பயனெதனையும் தராது. மாறாக தமிழர்கள் மத்தியில் குழப்பங்களையும் பிளவுகளையுமே அதிகரிக்கும். இது இலங்கையின் அரசியல் யாப்பில் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முறையாகவும் முழுமையாகவும் அமுல்படுத்தி மாகாண ஆட்சி முறையை காத்திரமாக செயற்பட வைப்பதற்கான தமிழ்ப் பேசும் மக்களின் இயக்கத்தை – அபிலாசையை – ஒற்றுமையை பலயீனப்படுத்துவதாகவே அமையும். இதனையே சிங்கள பௌத்த பேரின மேலாதிக்கவாதிகள் விரும்புகிறார்கள். இது இலங்கைவாழ் தமிழ்ப் பேசும் மக்கள், எந்தவொரு வடிவிலும்; எந்தவொரு அளவிலும் பல தேசிய இனங்கள் வாழுகின்ற ஒரு நாட்டிற்கு அவசியமான குறைந்தபட்ச அரசியற் கட்டமைப்பொன்றினையாவது கொண்டிருப்பதற்கான அனைத்து சாத்தியங்களையும் இல்லாதொழித்து விடும். முதலில் இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ளபடி முறையாகவும் முழுமையாகவும் மாகாண ஆட்சி முறை மக்களாட்சி கொண்டவையாக, காத்திரமான ஆற்றல்களுடன் செயற்படட்டும். தொடரந்து காலம் கனியும் போது இலங்கையில் சமஸ்டி ஆட்சி முறை மலரட்டும். https://arangamnews.com/?p=12798
-
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி
இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு கப்பலில் வந்திறங்கிய துவிச்சக்கர வண்டி அணி வெள்ளி, 03 ஏப்ரல் 2026 05:06 AM இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தும் வகையிலும், வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தும் நோக்கிலும், இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்து வருகை தரும் ''Team Bison'' அணியினரின் விசேட துவிச்சக்கரவண்டிப் பயணம் (Sail & Ride - Tour of Jaffna) யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்படவுள்ளது. 'போதைப்பொருளுக்கு முற்றுப்புள்ளி வைப்போம்' மற்றும் 'ஆரோக்கியத்துக்காகத் துவிச்சக்கரவண்டி' ஆகிய தொனிப்பொருள்களை முன்னிறுத்தி இந்தப் பயணம் அமையவுள்ளது. துவிச்சக்கரவண்டிப் பயன்பாட்டை அதிகரிப்பதன் ஊடாக மக்களின் தேக ஆரோக்கியத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்தப் பயணத்தில், உள்ளூர் துவிச்சக்கரவண்டிப் பயண அணியினரும் இணைந்து கொள்ளவுள்ளனர். அதில் கலந்து கொள்வதற்காக தமிழ்நாட்டிலிருந்து துவிச்சக்கர வண்டி அணி ஒன்று நேற்றைய தினம் வியாழக்கிழமை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. அவ்வணியினரை , நாடாளுமன்ற உறுப்பினர்களான ச ஸ்ரீபவானந்தராசா , க.இளங்குமரன் உள்ளிட்ட குழுவினர் பலத்த வரவேற்பளித்தனர் குறித்த குழுவினர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மண்டபத்திலிருந்து குறிகட்டுவான் நோக்கிய தமது துவிச்சக்கரவண்டிப் பயணத்தை ஆரம்பித்து, மதியம் நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் இடம்பெறவுள்ள சிறப்புப் பூசை வழிபாடுகளிலும் கலந்துகொள்ளவுள்ளனர். இந்திய அணியினரைக் கௌரவிக்கும் விசேட நிகழ்வு நாளை சனிக்கிழமை இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணம் வலம்புரி விடுதியில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது https://jaffnazone.com/news/56017
-
ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை
ஈரான் மின்சாரக் கட்டமைப்பு, பாலங்களைத் தகர்க்கப்போவதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை Published By: Digital Desk 3 03 Apr, 2026 | 12:28 PM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஈரான் மீதான போர் தொடர்பில் வெளியிட்டுள்ள புதிய எச்சரிக்கைச் செய்தி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்கள் இன்னும் தீவிரமடையும் என்பதை உணர்த்தும் வகையில் ட்ரம்ப், "அழிவு இன்னும் ஆரம்பிக்கவில்லை": ஈரானில் எஞ்சியுள்ள பகுதிகளை அழிக்கும் வேலையை அமெரிக்க இராணுவம் இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என அவர் பதிவிட்டுள்ளார். வியாழக்கிழமை தெஹ்ரானையும் காரஜையும் இணைக்கும் முக்கிய B1 பாலத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, மேலும் பல பாலங்களை அழிக்கப் போவதாக அவர் அச்சுறுத்தியுள்ளார். ஈரானின் மின்சார விநியோகக் கட்டமைப்புகளையும் இலக்கு வைக்கப் போவதாக அவர் மறைமுகமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது பதிவின் இறுதியில், "புதிய ஆட்சியின் தலைமை என்ன செய்ய வேண்டும் என்பது அவர்களுக்குத் தெரியும், அதனை அவர்கள் மிக விரைவாக செய்ய வேண்டும்!" என ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் அல்லது அமெரிக்காவின் கோரிக்கைகளை உடனடியாக ஏற்க வேண்டும் என அவர் அழுத்தம் கொடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/242634
-
அமெரிக்காவின் சட்டமா அதிபர் பதவி நீக்கப்பட்டார்
சுயநலவாதிகள் இப்படி மாற்றி மாற்றி பேசுவதும் புகழ்வதும் இயல்பு.
-
அமெரிக்க இராணுவத் தளபதி பதவி நீக்கம்: பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் உத்தரவு
தங்கள் தாளத்திற்கு ஆடாத அதிகாரிகளை பதவி நீக்கம், பதவியிறக்கம், இடமாற்றம் செய்வது சர்வாதிகாரிகளின் இயல்பு. சானி அபயசேகரவை பதவி இறக்கியதும், இப்போ அவரை கண்டு நடுங்குவதும் அதே காரணத்தாற்தான்.
-
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல்
குவைத் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ட்ரோன் தாக்குதல் குவைத் பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் (Kuwait Petroleum Corporation) இயக்கப்படும் அல்-அஹ்மதி (Al Ahmadi) பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் மீது, வெள்ளிக்கிழமை அதிகாலை ட்ரோன் (Drone) மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக குவைத் நாட்டின் உத்தியோகபூர்வ செய்தி முகமை அதன் 'X' (முன்னர் ட்விட்டர்) தளத்தில் தெரிவித்துள்ளது. இந்த ட்ரோன் தாக்குதலால் சுத்திகரிப்பு நிலையத்தின் "பல செயல்பாட்டுப் பிரிவுகளில்" (Operational Units) தீ விபத்து ஏற்பட்டதாக அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், இந்த விபத்தில் ஊழியர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கைகள்: சம்பவ இடத்திற்கு அவசர கால மீட்புப் படையினரும், தீயணைப்புப் பிரிவினரும் உடனடியாக விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, குவைத் மீது "பகைமை நாடுகளின் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள்" நடத்தப்பட வாய்ப்புள்ளதாக 'X' தளத்தில் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/குவைத்-எண்ணெய்-சுத்திகரிப்பு-நிலையம்-மீது-ட்ரோன்-தாக்குதல்/50-375033
-
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
கிழக்கு மாகாணத்தின் முதலமைச்சராக... ராஜ வாழ்க்கை, வாழ்ந்த நான்... இப்போ பிச்சைக்காரன் மாதிரி இப்படியாயிட்டேன். 😂 🤣 நீண்ட நாட்களுக்குப் பின் வெளியில் வந்த பிள்ளையான் கைவிலங்குடன் அழைத்து வரப்பட்டு, மீண்டும் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
நாவற்குழியில் சிறுமியிடம் அத்துமீறிய பிக்கு விளக்கமறியலில்
சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றம் - நாவற்குழி பிக்குவின் விளக்கமறியல் நீடிப்பு adminApril 3, 2026 சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நாவற்குழி விகாரையின் இளநிலை பிக்குவின் விளக்கமறியலை நீதிமன்று நீடித்துள்ளது. நாவற்குழி விகாரைக்கு அருகில் வசிக்கும் சிறுமி விகாரை வளாகத்தில் வடிகட்டிய (பில்டர்) நீரினை பெறுவதற்காக கடந்த 28ஆம் திகதி சென்ற வேளை விகாரைக்கு புதிதாக வந்த இளநிலை பிக்கு சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளனர். இது தொடர்பில் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்த நிலையில் , தாயாரால் சாவகச்சேரி காவல்நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினா் குறித்த இளநிலை பிக்குவை கைது செய்து 29ஆம் திகதி சாவகச்சேரி நீதவான் நீதிமன்ற நீத்தவனின் முன் முற்படுத்தியவேளை பிக்குவை நேற்றைய தினம் வியாழக்கிழமை வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை குறித்த வழக்கு மன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட வேளை, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பிக்கு மன்றில் முற்படுத்தப்பட்டார். அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, பிக்குவின் விளக்கமறியலை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் நீதிமன்று நீடித்துள்ளது. https://globaltamilnews.net/2026/231394/
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண்
காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண் adminApril 3, 2026 யாழ்ப்பாணத்தில் காவல்துறை அதிகாரியை உழவு இயந்திரத்தால் மோதி கொலை செய்ததுடன் , மற்றுமொரு காவல்துறை உத்தியோகஸ்தருக்கு படுகாயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் 5நாட்களின் பின்னர் சட்டத்தரணி ஊடாக சாவகச்சேரி நீதவான் நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , குறித்த சந்தேக நபரை 09 ஆம் திகதி வரையில் வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்ட மன்று , அன்றைய தினத்தில் அடையாள அணிவகுப்பினை நடத்தவும் திகதியிட்டுள்ளது. கொடிகாமம், கெற்பேலி பகுதியில் , சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக கொடிகாமம் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் ,கடந்த 28ஆம் திகதி சம்பவ இடத்திற்கு இரண்டு காவல்துறை உத்தியோகஸ்தர்கள் விரைந்துள்ளனர். காவல்துறையினரை கண்டதும், உழவு இயந்திரத்தை செலுத்தி வந்தவர், தான் தப்பிப்பதற்காக அதன் வேகத்தை அதிகரித்து காவல்துறையினர் இருவர் மீதும் மோதி விட்டு தப்பி சென்றுள்ளார். உழவு இயந்திரம் மோதியதில் கொடிகாமம் காவல்நிலையத்தில் கடமையாற்றும் காவல்துறை சார்ஜெண்ட் தர அதிகாரியான ஹெட்டியாராட்சி அல்பேட் (வயது 50) என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார். அவருடன் சென்ற மற்றைய காவல்துறை உத்தியோகஸ்தர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், உழவு இயந்திரத்தின் உரிமையாளர் மற்றும் சாரதிக்கு உதவியாளராக சென்ற இளைஞன் ஆகியோரை கைது செய்து , நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , அவர்கள் இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் உழவு இயந்திரத்தை செலுத்திய பிரதான சந்தேக நபர் 5 நாட்கள் தலைமறைவாக இருந்த நிலையில் நேற்றைய தினம் வியாழக்கிழமை சட்டத்தரணி ஊடாக நீதிமன்றில் சரணடைந்த நிலையில் , சந்தேகநபரை 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது https://globaltamilnews.net/2026/231397/- யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை
யாழில். விரிவுரையாளர் படுகொலை - விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை காவல்துறையினரிடம் சமர்ப்பிக்க நடவடிக்கை adminApril 3, 2026 படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளர் தன் கைப்பட எழுதிய சில ஆவணங்கள் உள்ளிட்ட தடய பொருட்களை நீதிமன்றம் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராக உள்ளோம் என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் தனது சமர்ப்பணத்தில் தெரிவித்திருந்தார். யாழ்.பல்கலைக்கழக சித்த மருத்துவபீட விரிவுரையாளர் கொலை வழக்கு நேற்றைய தினம் யாழ் . நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் குடும்பத்தினரின் நலன்சார்ந்து மன்றில் தோன்றி தனது சமர்ப்பனங்களை முன் வைக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் குறிப்பிடுகையில், சந்தேகநபர்கள் சார்பில் மன்றில் நான் முன்னிலையாகவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் தரப்பினர் சார்பில் தான் முன்னிலையானேன். அது தொடர்பில் நீதிமன்ற வழக்கேடுகளில் கூட தெளிவாக உள்ளது. ஆனால் நான் சந்தேகநபர் சார்பில் முன்னிலையானதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இது தொடர்பில் ஊடகங்களுக்கு நீதிமன்று பொதுவான எச்சரிக்கையை விடுக்க வேண்டும். அத்துடன் உயிரிழந்த விரிவுரையாளரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட விரிவுரையாளர் கைப்பட எழுதிய ஆவணங்கள் , சிலவற்றையும் அவர் இறுதி வரையில் பயன்படுத்திய கையடக்க தொலைபேசி உள்ளிட்ட சில தடய பொருட்களை நீதிமன்றத்தின் ஊடாக காவலதுறையினரிடம் ஒப்படைக்க தயாராகவுள்ளோம். அத்துடன் முதலாம் சந்தேக நபருக்கு எதிராக விரிவுரையாளர் மேற்கொண்ட காவலதுறை முறைப்பாடுகள் தொடர்பிலும் , நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பிலும் ,நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என தனது சமர்ப்பனத்தில் குறிப்பிட்டார். விரிவுரையாளரின் படுகொலை வழக்கில் அவரது மகள் இரண்டாவது சந்தேகநபராகவும் , மகளின் கணவன் முதலாவது சந்தேக நபராகவும் உள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து , படுகொலையான விரிவுரையாளர் சார்பில் முன்னிலையான எம்.ஏ சுமந்திரனை 2ஆம் சந்தேக நபரான கொலையான விரிவுரையாளரின் மகள் சார்பில் முன்னிலையானர் என சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://globaltamilnews.net/2026/231401/- குருக்கள்மடம் மனிதப் புதைகுழியில் முதற்கட்ட அகழ்வுப் பணிகள் மார்ச் 30 ஆரம்பம் - சட்டத்தரணி றாஸீ முஹம்மத் தெரிவிப்பு
புலிகள் 150 முஸ்லீம்களை... படு கொலை செய்து, குருக்கள்மடம் பகுதியில்.. புதைத்த மாதிரி கனவு கண்டோம். - காட்டான்குடி பாய்ஸ்.-- யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2026
- கருத்து படங்கள்
- பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!
பிள்ளையானை மீண்டும் தடுப்புக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு! தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொறுப்பில் இருந்த பிள்ளையான் என்ற சிவநேசத்துரை சந்திரகாந்தன் என்பவரை , மீண்டும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கல்கிசை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண பல்கலைக்கழக உபவேந்தர் ஒருவர் காணாமல் போனமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகள் குறித்து, சட்ட மா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை இவ்வாறு அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். https://athavannews.com/2026/1470794 - காவல்துறை உத்தியோகஸ்தரை வாகனத்தால் மோதி கொலை செய்த குற்றம் - பிரதான சந்தேகநபர் 05 நாட்களின் பின் சரண்
Important Information
By using this site, you agree to our Terms of Use.