All Activity
- Past hour
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
திருமாவளவன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்ததும் அடுத்த சில நாட்களில் பின்வாங்கியதும் ஏன்? பட மூலாதாரம்,THIRUMA OFFICIAL FACEBOOK page கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 6 ஏப்ரல் 2026, 08:08 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த விசிக தலைவர் தொல். திருமாவளவன், அடுத்த சில தினங்களிலேயே பின்வாங்கியுள்ளார். திருமாவளவனின் இந்த முடிவு திமுகவின் கடும் அழுத்தத்தாலேயே எடுக்கப்பட்டது என அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்துள்ளன. திருமாவளவனின் முடிவுகளுக்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறது திமுக. திருமாவளவனின் இத்தகைய முடிவுகள் அதிர்ச்சியளிப்பதாகவும் அவரது "தடுமாற்றத்தை" வெளிப்படுத்துவதாகவும் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதுதொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களை புறந்தள்ளியுள்ள விசிக எம்.எல்.ஏ. எஸ்.எஸ்.பாலாஜி, 'திருமாவளவன் தேர்தலில் போட்டியிட தீர்மானித்தது, பின்னர் அதனை கைவிட்டது ஆகிய இரு முடிவுகளுமே சுதந்திரமாக எடுக்கப்பட்டதுதான்' என்று கூறியுள்ளார். என்ன நடந்தது? தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு திமுக கூட்டணியில் 8 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில், விசிக சார்பில் ஏற்கெனவே சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ள 4 பேரில் மூன்று பேருக்கு (ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ். பாலாஜி, பனையூர் பாபு) மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை. சிந்தனை செல்வனுக்கு மட்டுமே மீண்டும் சீட் கிடைத்தது. காட்டுமன்னார்கோவில் தொகுதியில் தானே போட்டியிடுவதாக திருமாவளவன் அறிவித்தார். அப்போது இதுதொடர்பாக காணொளி வெளியிட்ட திருமாவளவன், "பல வருத்தங்கள் நமக்கு இருந்தாலும்கூட, அதாவது கூடுதல் தொகுதிகளை கேட்டுப்பெற முடியவில்லை. குறிப்பாக அரூர் தொகுதியைக் கேட்டுப்பெற முடியவில்லை. இன்னும் பல வருத்தங்கள், வலிகள் நமக்கு உண்டு. ஆனால், இதுதான் தேர்தல் அரசியல். இந்தத் தேர்தல் அரசியலை நாம் எதிர்கொண்டாக வேண்டும். இன்னும் நாம் ஒரு மகத்தான அரசியல் சக்தி என்பதை உறுதிசெய்தாக வேண்டும் என்ற பொறுப்புணர்வோடு இந்த தேர்தலில் களமிறங்கியிருக்கிறோம்." என தெரிவித்தார். தான் போட்டியிடுவது குறித்து பேசிய திருமாவளவன், "தமிழக அரசியலில் நான் கவனம் செலுத்த வேண்டியிருக்கிறது. இந்த சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்குப் பிறகு சட்டமன்ற அரசியல் சூழல் வெகுவாக மாற இருக்கிறது. இந்த நிலையில் காட்டுமன்னார்கோவிலில் நான் வேட்பாளராக போட்டியிடுகிறேன்" என்றார். இதையடுத்து, 'திமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் போகலாம்', 'தொங்கு சட்டமன்றம் அமையலாம்' அல்லது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் ஆகிய சில காரணிகளை மனதில் வைத்தே திருமாவளவன் இத்தகைய முடிவை எடுத்ததாக தமிழக அரசியல் அரங்கில் பேசப்பட்டது. இந்நிலையில், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடும் முடிவை கைவிடுவதாக திருமாவளவன் ஏப்ரல் 4-ஆம் தேதி அறிவித்தார். பட மூலாதாரம்,Aloor Sha Navas/Facebook படக்குறிப்பு,ஆளூர் ஷாநவாஸ் திருமாவளவன் கூறியது என்ன? இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், "சிதம்பரம் மக்களவை தொகுதி எம்.பியாக இருந்தாலும் சட்டப்பேரவைக்கு செல்ல வேண்டும் என விரும்பினேன். சட்டப்பேரவையில் விளிம்புநிலை மக்களுக்கான அரசியலை பேச வேண்டும் என, கடந்த 25 ஆண்டுகளாகவே எண்ணி வந்திருக்கிறேன். 2001-ல் (அப்போதைய) மங்களூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்று, இரண்டரை ஆண்டுகளில் என் பதவியை ராஜினாமா செய்தேன். மற்றொரு தேர்தலில் தற்போதைய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகைக்காக தொகுதியை விட்டுக் கொடுத்திருக்கிறேன். பதவியில் எனக்கு பெரிய பிடிப்பு இல்லை என்பதை இவை காட்டுகின்றன." என்றார். ஆனாலும் தமிழ்நாட்டில் வலதுசாரியின் கைகள் ஓங்கிவருவதாக கூறிய அவர், "அவர்கள் திட்டமிட்டு காய் நகர்த்துகின்றனர். முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை சங் பரிவாரங்கள் மேற்கொண்டன. என்னை அந்த கூட்டணியில் இருந்து நயவஞ்சகமாக பிரிக்க முயற்சி செய்தனர். தற்போது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்டுக்கோப்பாக இருக்கிறது என்றால் அதற்கு விசிகவும் குறிப்பாக திருமாவளவனும் காரணம் என்பதை பெருமிதத்துடன் சொல்வேன். எந்த ஆசை வார்த்தைக்கும் இணங்காமல் உறுதியாக நின்று, கூட்டணிக்கு பெரும் பங்களிப்பு செய்திருக்கிறேன்." என்றார். ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை இந்த தேர்தலில் கோருவீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட போது கூட, அதனை திட்டவட்டமாக மறுத்ததாகவும் திருமாவளவன் தெரிவித்தார். "கூட்டணி பலவீனப்படக் கூடாது என்பதால் அப்படி கூறினேன். ஆனால், ஏதேதோ ஊகங்களை யார் யாரோ கட்டமைத்திருக்கின்றனர். திருமாவளவன் கூட்டணி ஆட்சிக்கு முயற்சிக்கிறார், துணை முதலமைச்சராக ஆசைப்படுகிறார், தொங்கு சட்டமன்றம அமையப் போகிறது என்று தான் ஊகிப்பதாகவும் கூறுகின்றனர். ஏற்கெனவே எம்எல்ஏக்களாக உள்ள மூன்று பேருக்கு வாய்ப்பளிக்கவில்லை என்பது அவர்கள் திமுகவுக்கு ஆதரவான நிலைப்பாடு கொண்டவர்கள் என்பதனால்தான் என்று மிக தவறாக பரப்புகின்றனர்." என கூறினார் திருமாவளவன். காங்கிரஸ்காரரை வேட்பாளராக அறிவித்தது ஏன்? அத்துடன், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் மறைந்த தலைவர் இளையபெருமாளின் இளைய மகன் ஜோதிமணி போட்டியிடுவார் என்ற திருமாவளவனின் அறிவிப்பும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகளுக்காக போராடிய இளையபெருமாள் சுதந்திர இந்தியாவில் 1952-இல் நடந்த முதல் பொதுத் தேர்தலிலேயே காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு சிதம்பரம் மக்களவை தொகுதி உறுப்பினராக இருந்தவர். அவருடைய இளைய மகன் ஜோதிமணி தற்போது காங்கிரஸ் கட்சியில் உறுப்பினராக உள்ளார். எனவே, காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரை வேட்பாளராக அறிவித்தது ஏன் என்ற கேள்விக்கும் திருமாவளவன் பதிலளித்துள்ளார். "எங்களுக்கு முன்பே அந்த மண்ணில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் இளையபெருமாள். தேசிய அளவிலான தலைவர் அவர். அப்படிப்பட்ட தலைவர் பிறந்த மண் காட்டுமன்னார்கோவில். திருமாவளவன் மீது அந்த மக்கள் காட்டும் பேரன்புக்கு இதுவும் ஒரு காரணம். இளையபெருமாளின் குடும்பத்தில் எங்கள் கட்சியை சேர்ந்த நந்தகுமார் காலமாகிவிட்டார். அவருடைய துணைவியார் ரூபி எஸ்தர் வேறொரு சமூகம் என்பதால் அவரால் தனி தொகுதியில் நிற்க முடியாது. அதனால் அவரை தேர்வு செய்ய முடியவில்லை. அக்குடும்பத்தில் எஞ்சியிருப்பவர் ஜோதிமணி. அவருக்கு ஒரு வாய்ப்பு தருவோம் என்பதன் அடிப்படையில் அவரை நிறுத்தியிருக்கிறோம். அவரின் குடும்பத்தை கௌரவிப்பதற்காக அறிவித்திருக்கிறேன்" என்றார். படக்குறிப்பு,திருமாவளவனால் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜோதிமணி ஜோதிமணி செய்தியாளர்களிடம் பேசுகையில், தான் காங்கிரஸ் கட்சி சேர்ந்தவர் என்றும் , காங்கிரஸ் கட்சியின் சார்பில் வேட்புமனு அளித்ததாகவும் தெரிவித்தார். தொல் திருமாவளவன் தன்னை வேட்பாளராக அறிவித்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறிய ஜோதிமணி, அவருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். காங்கிரஸ் தலைவரும், விசிக தலைவரும் ஒன்றாக சேர்ந்து என்ன சொல்கிறார்களோ அதன்படி செயல்படுவேன் என்றும் அவர் கூறினார். படக்குறிப்பு,திமுக அழுத்தத்தாலேயே திருமாவளவன் போட்டியிடுவதில் இருந்து பின்வாங்கியிருப்பதாக எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். திருமாளவன் முடிவை விமர்சிக்கும் எதிர்க்கட்சிகள் திருமாவளவன் தேர்தலில் போட்டியிடாமல் பின்வாங்கியதை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் விமர்சித்துள்ளனர். குறிப்பாக, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "திமுக அழுத்தத்தின் காரணமாகவே திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் போட்டியிடவில்லை" என்று விமர்சித்தார். தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர் சந்திப்பில், "உதயநிதிக்காக மட்டுமே மாநில அரசியலுக்கு திரும்ப கூடாது என திருமாவளவனுக்கு சொன்னவர் முதலமைச்சர் ஸ்டாலின். சபரீசன் உள்ளிட்ட மொத்த குடும்பமும் பேசி திருமாவளவனை இந்த முடிவை எடுக்க வைத்துள்ளனர்." என்று குற்றம்சாட்டினார். திமுக அழுத்தம் தான் இதற்கு காரணம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாசும் விமர்சித்தார். விமர்சனங்களுக்கு பதிலளித்த திருமாவளவன், "அதீதமான, ஆதாரமில்லாத கற்பனை. என் கட்சியில் ஏற்கெனவே எம்எல்ஏக்களாக உள்ள மூவர் திமுகவுக்கு ஆதரவாக இருப்பதால் அவர்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என பலரும் கூறினர். இதில், திருமாவளவன் நெருக்கடிகளுக்கு அடிபணியமாட்டார் என்ற தொனியும் இருக்கிறது. இப்போது, நான் போட்டியிடாமல் இருப்பதற்கு திமுகவின் அழுத்தம் காரணம் என்கின்றனர். இரண்டுமே ஒன்றுக்கொன்று முரணாக இருக்கின்றன." என்றார். பட மூலாதாரம்,Getty Images பிபிசி தமிழிடம் பேசிய பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஜெயராணி, "கூட்டணிக்குள் இருப்பதால் திமுகவுக்கு சாதகமான முடிவுகளை திருமாவளவன் எடுக்கிறாரா என்பது தெரியவில்லை. தனக்கு தேவையான விஷயங்களுக்கு கூட சமரசம் செய்துகொள்கிறாரோ என வெளியில் இருந்து பார்க்கும்போது தோன்றுகிறது." என்றார். "இப்போது விசிகவுக்கு கடும் நெருக்கடியான சூழல்தான். தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாத நிலையில் திருமாவளவன் இருக்கிறார். வலுவான தலைவராக அறியப்படும், விளிம்புநிலை மக்களுக்கான தலைவராக அறியப்படும் ஒருவரை அவர் என்ன நினைக்கிறாரோ, அதை செய்ய விடாமல் திமுக ஆக்குகிறது. சமரசமான மனநிலையில் தான் விசிக இருக்கிறது. விசிகவுக்கு திமுகவின் கூட்டணியில் பொதுவான நோக்கங்கள் என்பது, சமூகநீதி, மாநில உரிமை, வலதுசாரி அரசியல் எதிர்ப்பு ஆகியவை. ஆனால், தனிப்பட்ட நோக்கம் என்பது ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளை பெற்றுத் தருவது, அரசியல் அதிகாரத்தை போராடி பெறுவது. திமுகவுடனான சமரசத்தில் இவற்றை முற்றிலுமாக ஓரமாக தள்ளிவிட்டு, வலதுசாரி அரசியலை மட்டும் ஒரே நோக்கமாக கையிலெடுத்தால் திமுகவும் விசிகவும் ஒரே கட்சியாகிவிடும்." என்கிறார் ஜெயராணி. படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... திமுக கூறியது என்ன? திமுக அழுத்தம் கொடுத்ததாக கூறப்படுவதை முற்றிலும் மறுக்கிறார் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளரும் எம்.பியுமான கான்ஸ்டன்டைன் ரவீந்திரன். "விசிகவுக்கு 8 தொகுதிகள் கொடுப்பது வரைதான் திமுகவின் முடிவு. அதில் யார் நிற்கிறார்கள் என்பது திமுகவின் முடிவு அல்ல. நாங்கள் அழுத்தம் கொடுத்து திருமாவளவன் நிற்கவில்லையென்றால் அதனால் திமுகவுக்கு என்ன லாபம்? தங்களுடைய வேட்பாளர்கள் குறித்து முடிவெடுப்பதில் அவருக்கு முழு சுதந்திரம் இருக்கிறது." என்றார். உதயநிதி அரசியலுக்காக இவ்வாறு அழுத்தம் கொடுக்கப்பட்டதாக கூறப்படும் விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், "திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்பவில்லையென்றால் அவர் டெல்லியிலேயே தான் இருப்பாரா? நாங்கள் தமிழ்நாட்டுக்கு வர வேண்டாம் என கூறிவிடுவோமா? உதயநிதியை நாங்கள் கொண்டு வருவதற்கும் திருமாவளவனுக்கும் என்ன சம்பந்தம்?" என்றார். 'திமுக எதிர்ப்பாளர்களுக்கு திருமாவளவன் தீனி போட்டுவிட்டார்' திருமாவளவன் குறுகிய காலத்தில் எடுத்த இந்த மாறுபட்ட முடிவுகளை தவிர்த்திருக்கலாம் என்கிறார், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். "திருமாவளவன் தேர்தலில் போட்டியிடுவதில் என்ன தடுமாற்றம், குழப்பம் இருந்ததோ, இப்போது அவர் விலகியபோதும் அவை இருக்கின்றன. தேர்தலை நோக்கி போகும் போது இந்த விஷயங்கள் நல்லதல்ல. விசிகவுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகள் என்பதில் அவருக்கு வருத்தம் இருக்கலாம். கட்சிக்குள் இருப்பவர்கள் அழுத்தம் கொடுத்ததால் காட்டுமன்னார்கோவிலில் தானே போட்டியிடுவதாக அவர் கூறியிருக்கலாம். இப்போது போட்டியிடவில்லை என்கிறார். ஆனால், அதற்கு அவர் சொன்ன காரணங்கள் அப்படியேதான் இருக்கின்றன." என்கிறார் ப்ரியன். தன்னுடைய இந்த மாறுபட்ட முடிவுகளால் திமுக எதிர்ப்பாளர்களுக்கு திருமாவளவன் "தீனி போட்டுவிட்டதாக" கூறுகிறார் ப்ரியன். படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் விசிக எம்.எல்.ஏ. பதில் திருமாவளவன் போட்டியிடுவதில் இருந்து விலகியது தொடர்பாக எழும் விமர்சனங்கள் குறித்து விசிக எம்எல்ஏ எஸ்.எஸ். பாலாஜி பிபிசி தமிழிடம் பேசுகையில், "இந்த கூட்டணியை பலவீனப்படுத்துவதற்கான ஒரே வழியாக எதிர்தரப்பினர் கையாள்வது திருமாவளவனுக்கு இடையூறு தருவதுதான். இந்த முயற்சி தொடர்ந்து நடைபெறுகிறது. விசிக இந்த கூட்டணியிலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்கான முயற்சிகள் ஒவ்வொரு கட்டத்திலும் நடைபெறுகிறது." என்றார். "வேட்பாளர் தேர்வில் திமுகவின் நெருக்கத்தால் மூன்று எம்எல்ஏக்களுக்கு வாய்ப்பளிக்கவில்லை என கூறியவர்கள், இப்போது அதற்கு நேர்மாறாக விமர்சிக்கின்றனர். அப்போது துணிச்சலாக முடிவெடுத்தவர், இப்போது ஏன் துணிச்சல் இல்லாமல் முடிவெடுக்க போகிறார்? இரு முடிவுகளுமே சுதந்திரமானதுதான்." என்கிறார் எஸ்.எஸ். பாலாஜி. தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து திருமாவளவன் சமூக ஊடகங்களில் பேசுவதும் அக்கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனத்திற்கும் அவர் பதிலளித்தார். "சமூக ஊடகங்கள், இன்ஃப்ளூயென்சர்களின் காலகட்டத்தில் எல்லாவற்றையும் வெளிப்படையாக விளக்கம் கூறுவதற்கான தேவை இருக்கிறது" என்றார் எஸ்.எஸ். பாலாஜி. படக்குறிப்பு,உங்களுக்கோ அல்லது உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கோ பாதுகாப்பு தொடர்பாக எங்கள் செய்தியாளர்களுடன் பகிர விரும்பும் தனிப்பட்ட அனுபவம் ஏதேனும் உள்ளதா? - பகிர இங்கே கிளிக் செய்யவும் Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj0v78peg59o
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தூக்கி?😂
-
-
அதிவேக நெடுஞ்சாலை விபத்து: உயிரைக் காக்க 2 மணிநேரம் போராடிய மருத்துவ தம்பதி!
அதிவேக நெடுஞ்சாலை விபத்து: உயிரைக் காக்க 2 மணிநேரம் போராடிய மருத்துவ தம்பதி! Published By: Digital Desk 1 06 Apr, 2026 | 03:23 PM (இணையத்தள செய்திப் பிரிவு) தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் சிக்கியவர்களை மீட்பதற்காக, அந்த வழியாகச் சென்ற மருத்துவ தம்பதியினர் மேற்கொண்ட மனிதாபிமான முயற்சி அனைவரினதும் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. இந்த விபத்தில் காயமடைந்த நால்வர் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் தொடங்கொட மற்றும் வெலிப்பென்ன நுழைவாயில்களுக்கு இடையில் இன்று அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த கொள்கலன் லொரி ஒன்றுடன், சிமெந்து ஏற்றிச் சென்ற மற்றுமொரு வாகனம் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில், அந்த வழியாகப் பயணித்த கம்பூருபிட்டிய ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர் மற்றும் அவரது கணவரான தெனியாய தேரங்கல ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ஆகியோர் உடனடியாகச் செயற்பட்டுள்ளனர். அவர்கள் சம்பவ இடத்திலேயே சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக தங்கியிருந்து, பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து காயமடைந்தவர்களுக்கு அவசர சிகிச்சைகளை வழங்கியுள்ளனர். டயர்கள் தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை ஏற்றிச் சென்ற கொள்கலன் லொரியின் பின்சக்கரம் காற்றிறங்கியதால், அதனை மாற்றுவதற்காக வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதன்போது அதே திசையில் பயணித்த சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனம், கட்டுப்பாட்டை இழந்து கொள்கலன் லொரியின் பின்புறத்தில் மோதியுள்ளது. இந்த விபத்தில் சிமெந்து ஏற்றிச் சென்ற வாகனத்தின் முன்பகுதியில் பயணித்த மூவர் மற்றும் கொள்கலன் லொரியின் சாரதி என நால்வர் வாகனத்திற்குள் சிக்கி காயமடைந்தனர். வாகனத்திற்குள் சிக்கியிருந்த சாரதியை மீட்பதற்கு சுமார் மூன்று மணிநேரம் போராட வேண்டியிருந்தது. அவருக்கு வாகனத்திற்குள்ளேயே ஒட்சிசன் வழங்கப்பட்டு, மருத்துவ ஆலோசனையின் கீழ் மிகக் கவனமாக மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காரணமாக தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு வழித்தடம் இரண்டு மணிநேரமும், மீட்புப் பணிகளின் போது வீதி முழுமையாகவும் சுமார் அரை மணிநேரம் மூடப்பட்டிருந்தது. காயமடைந்தவர்கள் தற்போது களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/242877
-
நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா...
நாலு பேருக்கு நல்லது செய்யுறதுன்னா... ஜெயமோகன் அரவிந்தனுக்கு எழுதிய இழிவான அஞ்சலியைப் படித்தேன். இதைவிட இழிவான அஞ்சலியை க்ரியா ராமகிருஷ்ணனுக்கு எழுதியவர் அவர். இவர்தான் தமிழையும் தமிழ் எழுத்தாளர்களையும் வாழ வைக்க அவதாரம் எடுத்தவர் என்ற பிம்பத்தை உருவாக்கிக்கொண்டிருக்கிறார். அவருக்கு முட்டுக் கொடுப்பவர்களும் பெருகிவிட்டார்கள். வைரமுத்துவைப் போலவே இலக்கியத்துக்கு ஆபத்தானவர் ஜெயமோகன். அவருடைய முன்னெடுப்புகளால் எவ்வளவுதான் அனுகூலங்கள் இருந்தாலும் தமிழ் இலக்கியத்தில் மடாலய முறையை, குருகுல முறையைக் கட்டமைக்கத்தான் பெரிதும் உதவும். அதனால்தான் அவரை எதிர்க்க வேண்டியிருக்கிறது. தன்னை நிலைநிறுத்த, அதன் உப விளைவாகத் தன்னைச் சார்ந்தோரையும் நிலைநிறுத்த அவர் முன்னெடுக்கும் விஷயங்களை விமர்சனம் செய்தால் உடனே அவர்களைக் கையாலாகாதவர்கள், சோம்பேறிகள் என்பதற்குச் சிலர் கிளம்பிவிடுகிறார்கள். அம்பானி, அதானியும் பல நலத்திட்டங்கள் செய்யவே செய்கிறார்கள். அதற்காக அவர்களுடன் நம்மை ஒப்பிட்டு நம்மைக் கையாலாகாதவர்கள் என்று சொல்ல முடியுமா? ஜெயமோகனின் முன்னெடுப்புகளால் நாலு பேருக்கு நல்லது நடந்தால் சரி என்ற வகையில் மட்டும் அவற்றை வரவேற்கிறேன். மற்றபடி தமிழ் இலக்கியத்துக்கு அவரது முன்னெடுப்புகளால் நன்மையை விட தீமைகளே அதிகம். பன்மைத்தன்மை, விமர்சன மனப்பான்மை போன்றவை அழிந்து ஒருபடித்தான நிலைக்கு இலக்கியம் செல்லக் கூடும். எதிர்க் குரல்கள் குறையக் கூடும். துதிபாடும் மனநிலை அதிகரிக்கக் கூடும். இலக்கியம் நிறுவனமயமாதலைவிட ஆபத்தானது மடாலயமயமாவது. அந்த ஆபத்து ஜெயமோகனால் நடக்கிறது. அதற்காகவே அவரை எதிர்க்க வேண்டும். - கவிஞர் ஆசைத்தம்பி Asaithambi Desigamani எனக்கு ஜெயமோகனின் நண்பர்கள் அவரது 'நற்பணிகளைப்' பாராட்டி அவரது கெடுதிகளை நியாயப்படுத்திப் பேசும்போதும் "நாயகன்" படத்தில் "நாலு பேருக்கு நல்லது பண்ணனும்னா எதையும் செய்யலாம்" என்று வேலு நாயக்கராக கமல் சொல்வது நினைவுக்கு வரும். நாயக்கர் இப்படிச் சொல்லிச் சொல்லி கொலை, கைகால் ஒடிப்பது, பொருட்களைக் கடத்துவது எனப் பம்பரமாகச் செயல்படுவார். தான் கொலை செய்த போலீஸ்காரரின் மகனை வேறு எடுத்து வளர்ப்பார். ஜெயமோகன் ஒரு இலக்கிய வேலு நாயக்கர் என்று சொல்லாமல் சொல்கிறார்களோ? - ஆர். அபிலாஷ் https://www.writerabilash.in/2026/04/blog-post_18.html
-
நிதியியல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றில் உள்ளக மோசடி !
நிதியியல் துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள தனியார் வங்கியொன்றில் உள்ளக மோசடி ! Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 01:47 PM (இணையத்தள செய்திப் பிரிவு) தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) பெரும் நட்டத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு உள்ளக மோசடி கண்டறியப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தியோகபூர்வ ஊடக அறிக்கையை மத்திய வங்கியின் தொடர்பாடல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பான விபரங்களை தேசிய அபிவிருந்தி வங்கியானது மத்திய வங்கிக்குத் தெரிவித்துள்ளது. எனினும், இந்தச் சம்பவத்தால் வாடிக்கையாளர்களின் எந்தவொரு கணக்குகளோ அல்லது வைப்புக்களோ பாதிக்கப்படவில்லை என வங்கி நிர்வாகம் உறுதியளித்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது. வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் நிதியியல் தாக்கம் குறித்த ஆரம்பகட்ட மதிப்பீட்டை மத்திய வங்கி மேற்கொண்டுள்ளது. இதன்படி, கணிசமான நட்டம் ஏற்பட்டிருந்த போதிலும், வங்கியின் மூலதனப் போதுமை மற்றும் திரவத்தன்மை தொடர்பான விகிதங்கள் திருப்திகரமாக உள்ளன. குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேலான மட்டத்திலேயே வங்கியின் நிதி நிலைமை தொடர்ந்தும் காணப்படுகிறது. இலங்கை மத்திய வங்கி இந்த நிலைமைகளைத் தொடர்ந்தும் உன்னிப்பாக அவதானித்து வருவதோடு, தேவையெனில் அவசியமான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் எனத் தெரிவித்துள்ளது. மேலும், ஏற்கனவே நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக, வங்கியின் தற்காலிகத் திரவத்தன்மைத் தேவைகளுக்காக மத்திய வங்கியின் உதவிகளை அணுகுவதற்கும் NDB வங்கிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் வங்கி மேற்பார்வைத் திணைக்களத்தினால் இந்த விபரங்கள் பொதுமக்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. மோசடி குறித்து தேசிய அபிவிருந்தி வங்கி தெரிவித்துள்ளதாவது, தேசிய அபிவிருந்தி வங்கியில் (National Development Bank PLC) அண்மையில் கண்டறியப்பட்ட உள்ளக மோசடி சம்பவத்தினால் சுமார் 13.2 பில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளமை மதிப்பிடப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக குறித்த வங்கி அறிவித்துள்ளது. எனினும், வாடிக்கையாளர்களின் வைப்புக்கள் எவ்விதத்திலும் பாதிக்கப்படவில்லை என்றும், வங்கியின் செயற்பாடுகள் வழமை போல் தடையின்றி முன்னெடுக்கப்படுவதாகவும் வங்கி நிர்வாகம் மேலும் உறுதியளித்துள்ளது. வங்கி வெளியிட்டுள்ள கூட்டாண்மை வெளிப்படுத்தலின் (Corporate Disclosure) படி, இந்த மோசடியானது வங்கியின் ஒரு குறிப்பிட்ட செயல்பாட்டுப் பிரிவுக்குள் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து ஊழியர்களும் உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களின் கணினி அணுகல் வசதிகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. மோசடியுடன் தொடர்புடைய நபர்கள் சட்ட அமுலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரிவானது தற்போது விசேட கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அணுகல் கட்டுப்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இந்த மோசடிக்கான காரணங்களைக் கண்டறியவும், உள்ளகக் கட்டுப்பாடுகளை மீளாய்வு செய்யவும் ஒரு சுயாதீன தடயவியல் கணக்காய்வாளரை (Forensic Auditor) நியமிக்க பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது. 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த காலாண்டில், இந்த மோசடிக்கான முழுமையான ஒதுக்கீடுகளைச் செய்த பின்னர், வங்கிக்கு சுமார் 4.0 பில்லியன் ரூபா வரிக்குப் பிந்திய நட்டம் ஏற்படக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மார்ச் 31 நிலவரப்படி வங்கியின் மொத்த சொத்துத் தளமான 990 பில்லியன் ரூபாயில், இந்தச் சம்பவம் சுமார் 0.7 சதவீத தாக்கத்தையே ஏற்படுத்தும். இந்த பாதிப்பு இருந்தபோதிலும், வங்கியின் மூலதனப் போதுமை விகிதங்கள் (Tier I மற்றும் Total Capital Adequacy Ratios) மத்திய வங்கி நிர்ணயித்துள்ள குறைந்தபட்ச அளவுகளுக்கு (முறையே 8.5% மற்றும் 12.5%) மேலதிகமாகவே காணப்படுகின்றன. இலங்கை மத்திய வங்கி இந்த நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதுடன், வங்கியின் திரவத்தன்மை மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தத் தேவையான ஆதரவை வழங்கி வருகிறது. மத்திய வங்கியின் அறிவுறுத்தலின் பேரில், 2026 ஏப்ரல் 6 ஆம் திகதி பங்குதாரர்களுக்கு வழங்கப்படவிருந்த பணப்பரிமாற்ற பங்குலாபம் (Cash Dividend) இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், 'ஸ்கிரிப்' பங்குலாபம் (Scrip Dividend) திட்டமிட்டபடி தொடரும். வாடிக்கையாளர்களின் கணக்கு மீதிகள் பாதுகாப்பாக இருப்பதாகவும், வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் தேசிய அபிவிருந்தி வங்கி (National Development Bank PLC) கேட்டுக்கொண்டுள்ளது. மேலதிக விளக்கங்களுக்கு அருகிலுள்ள கிளைகளையோ அல்லது 011 744 8850 என்ற துரித அழைப்பிலக்கத்தையோ தொடர்புகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/242871
-
சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
இனம் இனத்தை நாடும். நாடுகிறது. 😎 தமிழினத்திற்கு தலைவர்களாக வருவோர், இந்தியாவில் கூட்டிக் கொடுப்பார்கள். இலங்கையில் காட்டிக் கொடுப்பார்கள்.😲
-
Paanch started following சிரித்துக் கொண்டே அழுகிறோம்!- தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க புலம்பல்!
-
ஐபிஎல் டி20 கிரிக்கெட் 2026 - செய்திகள்
டி20யில் வெற்றியை கணிக்கும் சூத்திரம் By ஆர். அபிலாஷ் April 05, 2026 ஐ.பி.எல் போட்டிகளைத் தீர்மானிப்பது சிக்ஸர்களின் எண்ணிக்கையே. எல்லா போட்டிகளிலும் 10-18 சிக்ஸர்களை அடிக்க ஒவ்வொரு அணியும் உத்தேசிக்க வேண்டும். கூடுதலாக 8-10 பவுண்டரிகளும் வந்துவிடும். அதாவது 3.2 ஓவர்களில் 100 ஓட்டங்கள். மீத 16.4 ஓவர்களில் ஒரு அணி 100 ஓட்டங்கள் ஓடியே எடுத்தாலும் 200 ஓட்டங்கள் கிடைத்துவிடும். இதைக் கேட்க மலைப்பாக இருக்கும். ஆனால் 3.2 ஓவர்களை 20 ஓவர்களாகப் பரப்பினால் இரண்டு ஓவர்களுக்கு ஒரு சிக்ஸர்தான் தேவை. சில போட்டிகளில் கூடுதலாக 4-5 சிக்ஸர்க்ள் அடித்தாலே அந்த அணி சுலபமாக தகுதிப் போட்டிக்குச் சென்றுவிடும். ஓட்ட விகிதம் (நெட் ரன் ரேட்) மற்றும் சில வெற்றிகள் அதற்கு உதவும். இதைச் செய்யாத அணிகள் - பவுண்டரி அடிப்பது, ஒற்றை ஓட்டம் எடுக்கிற, கடைசி 5 ஓவர்களில் சிக்ஸர் அடிக்க உத்தேசிக்கிற அணிகள் - சில வெற்றிகளை ஈட்டினாலும் சராசரி ஓட்ட விகிதம் காரணமாக வெளியேறி விடும். இதுதான் நவீன டி20 போட்டியின் பார்முலா. இந்த சூட்சுமத்தை உணர்ந்த அணிகள் நல்ல பந்து வீச்சையும் கொண்டிருந்தால் நிச்சயமாகக் கோப்பையை அடிக்கும். ஒரு பார்வையாளராகவும் ஒரு அணி வெல்லுமா எனப் பார்க்க சிறந்த வழி அது எவ்வளவு சிக்ஸர்களை அன்று அடிக்கிறது என்பதை கவனிப்பதுதான். முதல் பத்து ஓவர்களில் 10 சிக்ஸர்களை அடித்துவிட்டால் அந்த அணி வெற்றியை நோக்கிப் போகிறது. அடுத்த பத்து ஓவர்களில் அதன் பிறகு 5 சிக்ஸர்களாவது கிடைத்தால் 240 நிச்சயம். வெற்றி மடியில் விழும். அல்லாவிட்டால் விரட்டி ஆடும் அணி எத்தனை சிக்ஸர்களை பவர் பிளேயில் அடிக்கிறது, முதல் 15 ஓவர்களில் எவ்வளவு சிக்ஸர்கள் அடிக்கிறது எனப் பார்த்தாலே போதும். நான் இன்னிங்ஸில் எவ்வளவு ஓட்டங்கள் எனப் பார்க்கவே மாட்டேன். அது ஒரு பழைய அணுகுமுறை. https://www.writerabilash.in/2026/04/20.html
-
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் அரசாங்கம்; - வசந்த முதலிகே காட்டம்
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் அரசாங்கம்; இரகசிய இராணுவ ஒப்பந்தங்களை உடனடியாக பகிரங்கப்படுத்துக - வசந்த முதலிகே காட்டம் Published By: Vishnu 06 Apr, 2026 | 04:14 AM (க.சிவலிங்கமூர்த்தி) அமெரிக்காவின் ஏகாதிபத்தியத் தேவைகளுக்காக உலக நாடுகளின் இறையாண்மை சிதைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் மேற்கொண்டுள்ள இரகசிய இராணுவ ஒப்பந்தங்களை நாட்டு மக்களுக்கு மறைத்து, அந்நாடுகளுக்கு அடிபணிந்து செயற்படுகின்றது என மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்குழு உறுப்பினர் வசந்த முதலிகே குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பு, கொள்ளுப்பிட்டியிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக ஞாயிற்றுக்கிழமை (5) முன்னெடுக்கப்பட்ட கண்டனப் போராட்டத்தின் போது, ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்; அமெரிக்கா தனது ஏகாதிபத்திய ஆதிக்கத்தை நிலைநாட்டவும், பிற நாடுகளின் வளங்களைச் சுரண்டவும் உலகெங்கும் குண்டுத் தாக்குதல்களையும் ஆக்கிரமிப்புகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. கடந்த காலங்களில் வெனிசுலா ஜனாதிபதி மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவரைத் தூக்கிச் சென்ற அமெரிக்கா, இன்று அந்நாட்டைத் தனது விருப்பத்திற்கு ஏற்பச் சிதைக்கின்றது. மறுபுறம், ஈரானின் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காக அந்நாட்டு மக்கள் மீதும், பல்கலைக்கழகங்கள் மற்றும் பாடசாலைகள் மீதும் குண்டுகளை வீசி பாரிய அழிவுகளை அமெரிக்கா ஏற்படுத்தி வருகின்றது. கிரீன்லாந்து மற்றும் கியூபா போன்ற நாடுகளையும் அச்சுறுத்தி வருகின்றது. உலகிற்குப் பாரிய அளவில் ஜனநாயகம் பேசும் அமெரிக்கா, நடைமுறையில் பிற நாட்டு மக்களின் தலைகள் மீது குண்டுகளை வீசி அழிப்பதையே தனது கொள்கையாகக் கொண்டுள்ளது. இலங்கை அரசாங்கம் தன்னை ஒரு சார்பற்ற நாடாகக் காட்டிக்கொண்டாலும், அமெரிக்காவுடன் பல்வேறு இரகசிய உடன்படிக்கைகளை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக, கடந்த ஆண்டு ஏப்ரல் 5 ஆம் திகதி, இந்தியாவுடன் ஏழு பாதுகாப்பு உடன்படிக்கைகளை இந்த அரசாங்கம் இரகசியமாகச் செய்துகொண்டது. இன்று அந்த கறுப்பு தினத்தின் முதலாம் ஆண்டு நிறைவாகும். அந்தப் பாதுகாப்பு, சுகாதார மற்றும் எரிசக்தி உடன்படிக்கைகளின் உள்ளடக்கங்களை அரசாங்கம் இதுவரை நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. அதேபோல், கடந்த ஆகஸ்ட் 13 ஆம் திகதி ஜப்பானுடன் மேற்கொள்ளப்பட்ட இராணுவ ஒப்பந்தம் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ள இராணுவ இணக்கப்பாடுகள் தொடர்பிலும் அரசாங்கம் மௌனம் காக்கின்றது. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக அமெரிக்க - இந்திய உடன்படிக்கைகளை எதிர்ப்போம் என்றும், ஏகாதிபத்தியத்தை முறியடிப்போம் என்றும் முழக்கமிட்ட தேசிய மக்கள் சக்தி, இன்று அமெரிக்கா, இந்தியா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கொண்டு ஏகாதிபத்தியத்தின் விருப்பத்திற்கு ஏற்ப மண்டியிட்டுச் செயற்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உடனடியாக இந்த அனைத்து இரகசிய உடன்படிக்கைகளையும் பகிரங்கப்படுத்த வேண்டும். அத்துடன் இந்த ஆபத்தான ஒப்பந்தங்களைக் கிழித்தெறிய வேண்டும் என நாம் வலியுறுத்துகின்றோம். அத்துடன் ஏகாதிபத்திய நாடுகள் முன்னெடுக்கும் இந்த அழிவு யுத்தங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என அமெரிக்காவிற்கும் நாம் அழுத்தம் கொடுக்கின்றோம். இலங்கை வாழ் முற்போக்குச் சிந்தனையுள்ள மக்களிடம் நாம் ஒன்றைக் கேட்டுக்கொள்கின்றோம் யுத்தம் நமக்குத் தொடர்பில்லாதது என்று வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்காதீர்கள். உலகில் எங்கு நடக்கும் யுத்தமும் நமது வாழ்க்கை, எதிர்காலம் மற்றும் நாட்டின் இறையாண்மையோடு நேரடியாகத் தொடர்புடையது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராகவும், அரசாங்கத்தின் அடிபணிவு அரசியலுக்கு எதிராகவும் மக்கள் வீதிக்கு இறங்கிப் போராட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/242831
-
ஏராளன் started following இலங்கையைச் சேர்ந்த 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு : உயிர்மாய்ப்பு எனச் சந்தேகம்! , அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு மண்டியிடும் அரசாங்கம்; - வசந்த முதலிகே காட்டம் , இரான் குறித்து கெட்ட வார்த்தை - அமெரிக்காவிலேயே டிரம்ப் எதிர்கொள்ளும் விமர்சனம் and 2 others
-
புதன்கிழமை அரச விடுமுறையில் ஏற்படவுள்ள மாற்றம்!
இந்த வாரம் முதல் புதன்கிழமை அரச விடுமுறை இரத்து Apr 6, 2026 - 05:00 PM இந்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும் வகையில், புதன்கிழமைகளில் வழங்கப்பட்ட அரச விடுமுறையை இரத்து செய்யத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம், அதாவது ஏப்ரல் 8ஆம் திகதி புதன்கிழமை முதல் இந்த புதிய தீர்மானம் நடைமுறைக்கு வரும் என அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் பிரபாத் சந்திரகீர்த்தி தெரிவித்தார். மேலும், இது தொடர்பான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டில் நிலவிய நெருக்கடி நிலைமையின் போது எரிபொருள் இருப்பைச் சேமிக்கும் நோக்கில், ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையை அரச ஊழியர்களுக்கான விடுமுறை தினமாக அறிவித்து கடந்த மார்ச் 17ஆம் திகதி அரச நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmnn3y2g70006356p5ymi0i5r
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
அமெரிக்காவின் போர் நிறுத்த முன்மொழிவை நிராகரித்த ஈரான்! Apr 6, 2026 - 09:26 PM ஐந்து வாரங்களாக நீடித்து வரும் மோதலை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்புத் திட்டம் குறித்து அமெரிக்காவும் ஈரானும் இன்று (06) ஆலோசித்தன. இதன்போது, போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், தற்காலிக போர்நிறுத்தத்தின் கீழ் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) விரைவாகத் திறக்கக் கோரும் அழுத்தங்களுக்கு ஈரான் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் தெஹ்ரான் கூறியுள்ளது. போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்காவின் முன்மொழிவு குறித்து, பாகிஸ்தான் ஊடாக ஈரான் தனது பதிலை வழங்கியுள்ளது. அதில் தற்காலிக போர்நிறுத்தத்தை நிராகரித்துள்ளதுடன், போருக்கு நிரந்தரமான தீர்வு அவசியம் என்பதை ஈரான் வலியுறுத்தியுள்ளதாக ஐ.ஆர்.என்.ஏ (IRNA) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பிராந்தியத்தில் நிலவும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருதல், ஹோர்முஸ் நீரிணை ஊடாக பாதுகாப்பான பயணத்திற்கான நெறிமுறை, தடைகளை நீக்குதல் மற்றும் புனரமைப்பு உள்ளிட்ட 10 சரத்துகளை ஈரானின் பதில் உள்ளடக்கியுள்ளதாக அந்த நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளது. உலகளாவிய எரிசக்தி விநியோகத்திற்கான முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை ஊடாக போக்குவரத்தை மீண்டும் தொடங்குவதற்கு அனுமதிக்கும் வகையில், செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணிக்குள் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், தெஹ்ரான் மீது கடும் தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் எச்சரித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmnndg77f000d356pzz56eb2o
-
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே கைது!
கைதினை சவாலுக்கு உட்படுத்தி சுரேஷ் சலே மனுத் தாக்கல் Apr 6, 2026 - 03:16 PM பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் (CID) தான் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமையை சவாலுக்கு உட்படுத்தி, அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது சட்டத்தரணிகள் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவின் பிரதிவாதிகளாக பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, அருட்தந்தை ரொஹான் சில்வா மற்றும் சட்டமா அதிபர் உள்ளிட்டோர் பெயரிடப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmnn0a2qe0002356p34zy1jaa
-
இரான் குறித்து கெட்ட வார்த்தை - அமெரிக்காவிலேயே டிரம்ப் எதிர்கொள்ளும் விமர்சனம்
இரான் குறித்து கெட்ட வார்த்தை - அமெரிக்காவிலேயே டிரம்ப் எதிர்கொள்ளும் விமர்சனம் என்ன? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்துக்கு அமெரிக்கத் தலைவர்கள் கடும் எதிர்வினை ஆற்றியுள்ளனர் (இடமிருந்து: குடியரசுக் கட்சித் தலைவர் மார்ஜரி டெய்லர் கிரீன், ஜனநாயக கட்சி செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் மற்றும் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் அன்சாரி) 6 ஏப்ரல் 2026, 12:37 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் இரானுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட பதிவில், இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக அச்சுறுத்தியுள்ளார். அவர் இரானை ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்குமாறு வலியுறுத்தினார், அப்படிச் செய்யாவிட்டால் மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரித்தார். அச்சுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் அவர் முன்பும் விடுத்துள்ளார். ஆனால் இந்த முறை டொனால்ட் டிரம்ப் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகள் குறித்து உலகம் முழுவதும் விவாதம் தொடங்கியுள்ளது. ஓர் அதிபர் இத்தகைய மொழியைப் பயன்படுத்துவது 'வெட்கக்கேடானது' என்று மக்கள் கூறி வருகின்றனர். இரான் அவரது இந்த கருத்தை விமர்சித்துள்ளது. இரான் மத்திய ராணுவ கட்டளை மையத்தின் அப்தொல்லாஹி அலியாபாதி, டிரம்பின் அச்சுறுத்தல் குறித்துக் கூறுகையில், "இது விரக்தி நிறைந்த, சமநிலையற்ற மற்றும் முட்டாள்தனமான செயல்" என்றார். இரான் அதிபர் அலுவலக செய்தித் தொடர்பாளர் மெஹதி தபாதபாய் கூறுகையில், "கப்பல்களிடம் வசூலிக்கப்படும் போக்குவரத்து சுங்கக் கட்டணத்தின் ஒரு பகுதி, போரில் ஏற்பட்ட சேதங்களை ஈடுகட்டப் பயன்படுத்தப்படும் போது ஹோர்மூஸ் நீரிணை மீண்டும் முழுமையாகத் திறக்கப்படும்" என்றார். பட மூலாதாரம்,ANDREW CABALLERO-REYNOLDS / AFP via Getty Images படக்குறிப்பு,நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஜனநாயக கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மெலனி ஸ்டான்ஸ்பரி 'டிரம்ப் அர்த்தமற்ற பேச்சுகளைப் பேசுகிறார்' இரானில் மட்டுமல்ல, அமெரிக்காவிற்குள்ளும் டிரம்பின் இந்த கருத்துக்கும் அதில் பயன்படுத்தப்பட்ட வார்த்தைக்கும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. வெர்மான்ட் செனட்டரும், ஜனநாயக கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராவதற்கு இரண்டு முறை போட்டியிட்டவருமான பெர்னி சாண்டர்ஸ் எக்ஸ் தளத்தில், "இரான் போர் தொடங்கி ஒரு மாதத்திற்குப் பிறகு, ஈஸ்டர் ஞாயிறு அன்று அமெரிக்க அதிபர் இத்தகைய கருத்தை வெளியிடுகிறார். இது மனநிலை சரியில்லாத ஒரு நபர் பேசும் அர்த்தமற்ற பேச்சு. நாடாளுமன்றம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தப் போரை உடனே முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்," என பதிவிட்டுள்ளார். நியூ மெக்சிகோவைச் சேர்ந்த ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மெலனி ஸ்டான்ஸ்பரி, "அவர் உண்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறார். 25-வது திருத்தச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாடாளுமன்றம் மற்றும் அமைச்சரவை இப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார் அமெரிக்க அரசியலமைப்பின் 25-வது திருத்தச் சட்டத்தில், அதிபரைப் 'பதவிக்குத் தகுதியற்றவர்' எனக் கருதி, அவரது அதிகாரங்களை துணை அதிபரிடம் ஒப்படைப்பதற்கான வழிவகை உள்ளது. மற்றொரு ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எமி பெரா, "எனது குடியரசுக் கட்சி நண்பர்களுக்கும் இது தெரியும். இப்போது அவர்கள் கொஞ்சம் துணிச்சலைக் காட்டி, இந்த அரசியலமைப்பிற்கு விரோதமான போரைத் தொடுக்கும் அவரது திறனைக் கட்டுப்படுத்த எங்களுடன் இணைய வேண்டிய நேரம் இது." என குறிப்பிட்டுள்ளார். மாசசூசெட்ஸைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜிம் மெக்கவர்ன் இதை ''மனநலப் பிறழ்வு'' என்று குறிப்பிட்டார். "அமெரிக்க அதிபருக்கு உதவி தேவை. அவரது நடத்தை முற்றிலும் கட்டுப்பாட்டை மீறியது மற்றும் மிகவும் ஆபத்தானது," என அவர் எழுதினார். பட மூலாதாரம்,Alexi Rosenfeld/Getty Images படக்குறிப்பு,டெல் அவிவ் நகரில் இரான் போருக்கு எதிராக ஒரு போராட்டத்தில் பங்கேற்கும் மக்கள் (படம்: ஏப்ரல் 4). அடிக்கடி காலக்கெடுவை மாற்றும் டொனால்ட் டிரம்ப் தனது சமீபத்திய பதிவில், டொனால்ட் டிரம்ப் இரானை செவ்வாய்கிழமைக்குள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்குமாறு கூறியுள்ளார். ஆனால் இரான் போரின் போது அவர் பலமுறை தனது காலக்கெடுவை மாற்றியுள்ளார். மார்ச் 21 அன்று, அவர் 48 மணி நேரத்திற்குள் ஹோர்மூஸ் நீரிணையைத் திறக்க வேண்டும் என்று இரானை அச்சுறுத்தினார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையே "மிகவும் நல்ல மற்றும் பயனுள்ள பேச்சுவார்த்தை" நடந்ததாக அவர் கூறினார், மேலும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மீதான தாக்குதல்களை ஐந்து நாட்களுக்கு ஒத்திவைத்தார். இருப்பினும், அத்தகைய பேச்சுவார்த்தை எதையும் இரான் மறுத்தது. மார்ச் 27 அன்று, அவர் மின் உற்பத்தி நிலையங்கள் மீதான தாக்குதலை 10 நாட்களுக்கு ஒத்திவைப்பதாகக் கூறினார். 'இரான் அரசு இதைக் கோரியது' என்று அவர் கூறினார். இதன் மூலம் அவரது புதிய காலக்கெடு ஏப்ரல் 6-ஆக நீட்டிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Matt McClain/Getty Images படக்குறிப்பு,மேரிலாந்தின் ஜனநாயகக் கட்சி செனட்டர் கிறிஸ் வான் ஹோலன், டொனால்ட் டிரம்பை அதிபர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று கூறினார். 'அதிபர் பதவிக்குத் தகுதியற்றவர்' அமெரிக்காவின் மூத்த ஜனநாயக கட்சி செனட்டர் பேட்டி முர்ரே, "இவர் ஒரு தீவிரமான மனநலப் பாதிப்பு கொண்ட நபர், அதிகார மமதையில் ஆபத்தான போர் குற்றங்களைச் செய்யப் போவதாக அச்சுறுத்துகிறார். அமெரிக்க அதிபர் நமது வீரர்களை ஆபத்தில் தள்ளுவது குறித்து இத்தகைய மொழியில் பேசக்கூடாது. குடியரசுக் கட்சித் தலைவர்கள் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து இந்தப் போரை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்," என எக்ஸ் தளத்தில் எழுதினார். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஓரிகான் செனட்டர் ஜெஃப் மெர்க்லி "அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈஸ்டர் சமயத்தில் விடுத்த இந்த கெட்ட வார்த்தைகள் நிறைந்த அச்சுறுத்தல் மற்றும் இரானின் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பாலங்கள் போன்ற உள்கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்துவது பற்றி பேசியிருப்பது ஒரு விரக்தியடைந்த மற்றும் தார்மீக ரீதியாகச் சிதைந்த ஒரு நபரின் வார்த்தைகள். சர்வதேச சட்டத்தின்படி இத்தகைய தாக்குதல்கள் போர்க்குற்றங்களாகக் கருதப்படலாம் என்று பல நிபுணர்கள் கருதுகின்றனர். நமது ராணுவத் தலைவர்களிடம் நான் கேட்டுக்கொள்வது இதுதான் - போர்க்குற்றங்களைச் செய்யச் சொல்லும் உத்தரவுகளுக்குக் கீழ்ப்படிய மறுப்பது உங்கள் சட்டப்பூர்வப் பொறுப்பாகும்." என குறிப்பிட்டுள்ளார். மேரிலாந்தின் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் கிறிஸ் வான் ஹோலன், டொனால்ட் டிரம்பை அதிபர் பதவிக்குத் தகுதியற்றவர் என்று கூறினார். அதே சமயம், அரிசோனாவின் ஜனநாயகக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் யாஸ்மின் அன்சாரி, "அமெரிக்க அதிபரின் நடத்தை சமநிலையற்ற ஒரு நபரைப் போல உள்ளது, மேலும் அவர் நமது நாட்டிற்கும் ஒட்டுமொத்த உலகிற்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறிவிட்டார்," என எழுதியுள்ளார். ஜனநாயக கட்சி மட்டுமல்லாது, டிரம்பின் சொந்த குடியரசுக் கட்சியிலிருந்தும் அவருக்கு எதிராகக் குரல்கள் எழுந்துள்ளன. டிரம்பின் முன்னாள் கூட்டாளியும் குடியரசுக் கட்சித் தலைவருமான மார்ஜரி டெய்லர் கிரீன், அதிபர் டிரம்பைக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஒரு நீண்ட எக்ஸ் தள பதிவில் அவர், "ஈஸ்டர் காலை அதிபர் டொனால்ட் டிரம்ப் இதைப் பதிவிட்டுள்ளார். அவரது நிர்வாகத்தில் தங்களை கிறிஸ்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் எவரும், மண்டியிட்டு கடவுளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும், அதிபரை வணங்குவதை நிறுத்த வேண்டும் மற்றும் டிரம்பின் இந்த ஆவேசப் போக்கில் தலையிட வேண்டும். உங்கள் அனைவரையும் மற்றும் அவரையும் எனக்குத் தெரியும். அவர் தனது மனநிலையை இழந்துவிட்டார், இதில் உங்கள் அனைவருக்கும் சம பங்கு உண்டு."என குறிப்பிட்டுள்ளார் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c20qveyzv30o
- Today
-
சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்தான்!"- நீதிமன்றம் தீர்ப்பு
இவர்களைத் தூக்கிலிடும் நாளைக் காண ஆவலாயிருக்கின்றேன். ஆனால் செந்தமிழன் சீமான் அண்ணா வழியில் விஜி அண்ணி வழக்கில் செய்தது போன்று பாஜகவைப் பிடித்து நீதித்துறையை வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கையும் உள்ளது! ஜீசஸ் லவ்ஸ் யூ! பட் வாலி ஒப்போஸஸ் விக்கட்னஸ்!
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
அமைதி ஒப்பந்தம் தொடர்பில் ஈரான் - அமெரிக்கா பேச்சு Apr 6, 2026 - 01:20 PM ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான திட்ட வரைபு ஒன்றைப் பெற்றுள்ளதாகவும், அது இன்று முதல் நடைமுறைக்கு வந்து ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்றும் தகவலறிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரொயிட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி, மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஒரு கட்டமைப்பைப் பாகிஸ்தான் தயாரித்துள்ளது. இது நேற்றிரவு ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு வழங்கப்பட்டது. இந்தத் திட்டம் இரண்டு கட்ட அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டது என்றும், முதலில் உடனடி போர்நிறுத்தமும் அதைத் தொடர்ந்து ஒரு விரிவான உடன்படிக்கையும் எட்டப்படும் என்றும் விளக்கப்பட்டுள்ளது. ஆரம்பகட்ட புரிந்துணர்வு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தமாக வடிவமைக்கப்படும் என்றும், பேச்சுவார்த்தைகளின் ஒரே தகவல் தொடர்பு ஊடகமாக இருக்கும் பாகிஸ்தான் ஊடாக இது இறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளதாக ரொயிட்டர்ஸ் தெரிவித்துள்ளது. பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கும், முடக்கப்பட்ட வெளிநாட்டுச் சொத்துக்களை விடுவிப்பதற்கும் ஈடாக, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்று ஈரான் உறுதியளிப்பதை இந்த ஒப்பந்தம் உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எவ்வாறாயினும் ரொய்ட்டர்ஸ் வௌியிட்டுள்ள இந்த செய்தி இருநாடுகள் ஊடாகவும் இதுவரை உத்தியோகப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் 15 கப்பல்கள் ஈரானின் அனுமதியுடன் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவற்படைப் பிரிவுடன் தொடர்புடைய ஃபார்ஸ் (Fars) செய்தி நிறுவனம் இந்த தகவலை வௌியிட்டுள்ளது. யுத்தம் தொடங்குவதற்கு முன்பிருந்த நிலையை விட தற்போது கப்பல் போக்குவரத்து 90% குறைவாகவே உள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி உட்பட சில அதிகாரிகள், இந்த முக்கியமான கடல்வழிப்பாதை மூடப்படவில்லை என்றும், அது எதிரி நாடுகளுக்கு மட்டுமே மூடப்பட்டுள்ளதாகவும் பலமுறை கூறியுள்ளனர். உதாரணமாக, ஈரான் விதிக்கும் எந்தவொரு கட்டுப்பாடுகளிலிருந்தும் ஈராக் விலக்களிக்கப்படுவதாக ஈரானின் காதம் அல்-அன்பியா மத்திய தலைமையகத்தின் ஊடகப்பேச்சாளர் நேற்று அறிவித்திருந்தார். இதேவேளை, ஹோர்முஸ் நீரிணையைப் பயன்படுத்தும் கப்பல்களுக்கு சுங்க வரி விதிக்கும் சாத்தியக்கூறுகள் குறித்தும் ஈரானிய அதிகாரிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். யுத்தத்தினால் ஏற்பட்ட அனைத்து சேதங்களையும் ஈடுசெய்ய, கப்பல் போக்குவரத்து மூலம் கிடைக்கும் சுங்க வரியின் ஒரு பகுதி பயன்படுத்தப்படும் போது ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறக்கப்படும் என்று ஈரானிய ஜனாதிபதி அலுவலகத்தின் உதவியாளர் ஒருவர் முன்னதாகத் தெரிவித்திருந்தார். https://adaderanatamil.lk/news/cmnmw3nrq000j356p4vap7ocf
-
சூரியன் இலங்கைக்கு நேரே உச்சம் கொடுக்கும் காலம் ஆரம்பம்
நாட்டில் சூரியன் உச்சம் கொடுக்கும் இடங்கள் அறிவிப்பு! Apr 6, 2026 - 06:16 AM வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மாகாணத்திலும் புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும் காலை வேளையில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்தின் சில இடங்களிலும் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதேவேளை சூரியனின் வடதிசை நோக்கிய நகர்வின் காரணமாக, ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இலங்கைக்கு நேர் உச்சியில் சூரியன் நிலைபெறுகின்றது. அதன்படி, இன்று (06) நண்பகல் 12:13 மணியளவில் பேருவளை, குருலுபெத்த, ரக்வானை, கொடகவெலை, உடவலவை மற்றும் தனமல்வில ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமான காலநிலை என்பதால் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருப்பதோடு, அதிகளவில் நீரை அருந்துவது உள்ளிட்ட சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். https://adaderanatamil.lk/news/cmnmgyw7k0003356pzgql9gqi
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
அமெரிக்காவும் ஈரானும் சமாதானத் திட்டத்தைப் பெற்றுள்ளன.
திட்டம் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை.
-
"மூன்று கவிதைகள் / 37"
"மூன்று கவிதைகள் / 37" 'தீக்குள் விரலை வைத்தால் கண்ணம்மா' தீக்குள் விரலை வைத்தால் கண்ணம்மா தீய எண்ணங்கள் வெந்து கருகுதடா காதல் நெருப்பில் உள்ளம் வேகுதடா காலம் கடத்தாமல் வந்து அணைப்பாயோ? சுட்டெரிக்கும் வெப்பம் சுகமாய் மாற, நட்ட நடுநிசி நிலவாய் வீச, கண்ணின் மணிபோல் உனைக் காக்க, மண்ணில் என்றும் துணை நிற்க, உந்தன் நினைவே உயிர்மூச்சாய் வரட்டும், எந்தன் வாழ்வின் ஒளிவீச்சாய் மலரட்டும்! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ............................................................ 'அன்பின் நினைவுகள்' [புகைப்படக் கவிதை] அன்புச் சகோதரி அருமை மனைவி, இன்று நிழலாய் மறைந்து போனாலும் எந்தன் நெஞ்சில் என்றும் வாழும் உந்தன் இனிய நினைவுகள் உயிருடனே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] ................................................................................................................. 'வானப்பாதைக்கு வழிவிட்டு நிற்கும் மரங்கள்!' கிளைகள் விரித்துக் கைகள் உயர்த்தி வண்ணப் பறவை வாழ்விடம் ஆகி மண்ணின் ஆழம் வேர்கள் பாய்ச்சி மகிழ்வாய் வாழும் கானகச் சோலைகளே! நீல முகில்கள் நீந்திக் களிக்க கோல மேகங்கள் ஊர்ந்து செல்ல காலம் தோறும் வளைந்து கொடுத்து வானப்பாதைக்கு வழிவிட்டு நிற்கும் மரங்களே! [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] துளி/DROP: 2139 ["மூன்று கவிதைகள் / 37" https://www.facebook.com/groups/978753388866632/posts/34751782077803663/?
-
சாத்தான்குளம் கொலை வழக்கு: கைது செய்யப்பட்ட 9 காவலர்களும் குற்றவாளிகள்தான்!"- நீதிமன்றம் தீர்ப்பு
'மன்னிக்க வேண்டியதில்லை' - சாத்தான்குளம் வழக்கில் 9 போலீசாருக்கும் மரண தண்டனை விதித்த நீதிபதி கூறியது என்ன? படக்குறிப்பு,ஜெயராஜ், பென்னிக்ஸ் 6 ஏப்ரல் 2026, 13:38 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தாக்கப்பட்டு தந்தையும் மகனும் கொல்லப்பட்ட வழக்கில், சம்பந்தப்பட்ட 9 பேருக்கும் மரண தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது தவிர, குற்றம்சாட்டப்பட்ட அனைவருக்கும் கடுமையான அபராதங்களும் விதிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வர்த்தகர் ஜெயராஜும் அவரது மகன் பென்னிக்ஸும் கடந்த 2020-ஆம் ஆண்டு ஜூன் 19-ஆம் தேதி கொரோனா காலகட்டத்தில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்டனர். இதற்குப் பிறகு இவர்கள் இருவரும் 21-ஆம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஜூன் 22-ஆம் தேதி இரவு ஒன்பது மணியளவில் பென்னிக்ஸ் உயிரிழந்தார். அவரது தந்தை ஜெயராஜ் அடுத்த நாள் அதிகாலையில் உயிரிழந்தார். இந்த விவகாரம் மிகப் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்குப் பிறகு, இந்த விவகாரத்தைத் தானாகக் கையில் எடுத்த மதுரை உயர் நீதிமன்றக் கிளை, இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட காவல்துறைக்கு உத்தரவிட்டது. இதற்குப் பிறகு இந்த வழக்கு மத்தியப் புலனாய்வுத் துறையின் வசம் ஒப்படைக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட முதல் நபராக சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் இடம்பெற்றார். மேலும், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ், தலைமை காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜா, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ், வெயிலுமுத்து, பால்துரை ஆகியோர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவர்கள் பத்துப் பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில், பால்துரை 2020, ஆகஸ்ட் மாதமே கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்தார். படக்குறிப்பு,தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2026, தொடர்பான செய்திகள், காணொளிகள், நேர்காணல்களை படிக்க, பார்க்க... படக்குறிப்பு,ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன் மற்றும் ரகு கணேஷ் 'மனித கண்ணியத்தை மீறும் செயல்' இந்த வழக்கில் இரு கட்டங்களாக 2,427 பக்கங்களைக்கொண்ட குற்றப் பத்திரிகையை மத்தியப் புலனாய்வுத் துறை தாக்கல் செய்தது. மதுரையில் உள்ள முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்துமே தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த நிலையில், இந்த வழக்கில் விசாரணைகள் முடிவடைந்து வழக்கின் தீர்ப்பு மார்ச் 23-ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் குற்றவாளிகள் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார். இவர்களுக்கான தண்டனை விவரங்கள் ஏப்ரல் 6ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முத்துக்குமரன், தண்டனையை அறிவிக்கும் முன்பாக பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். "இருவரையும் கொல்லும் நோக்கத்தில் இதைச் செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் எதுபோன்ற தண்டனை அளிக்கலாம் எனக் கேட்டபோது, உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென மத்திய அரசு கூறியது. அதேபோல, தமிழக அரசும் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டுமென கூறியது.'' என நீதிபதி கூறினார் இது முழுக்க முழுக்க மனித கண்ணியத்தை மீறும் செயலாக அமைந்திருக்கிறது என்றார் நீதிபதி. ''இதனை நீதிமன்றம் சாதாரணமாக கடந்துசொல்ல முடியாது. அவர்கள் திருந்துவதற்கான வாய்ப்பு கிடைத்தும் திருந்தவில்லை. கொரோனா காலகட்டத்தில் கடையைத் திறந்து வைத்தார்கள் என்பதற்காக இப்படித் தாக்கியிருக்கிறார்கள். இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தானாக விசாரித்திருக்காவிட்டால், அவர்களது உடலை அடக்கம் செய்வதற்கு முன்பாகவே, இந்த வழக்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும்.'' ''நிராயுதபாணியாக நின்றவர்களை இவர்கள் தாக்கியுள்ளனர். இவர்களை மன்னிக்க வேண்டியதில்லை. வயது, குடும்ப சூழலை காரணம் காட்டி இவர்களுக்கு குறைந்த தண்டனை விதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. எதிரிகள் நல்ல மன நிலையில் இதனைச் செய்திருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் கல்வியறிவு பெற்றவர்கள். வேலியே பயிரை மேய்ந்ததுபோல மக்களைக் காக்க வேண்டிய காவல்துறை அவர்களைத் தாக்கியுள்ளது.'' என நீதிபதி கூறினார் இந்தச் செயலைப் பார்க்கும்போது மனம் வெந்து போகிறது என கூறிய அவர், ''பென்னிக்சின் தாயாரின் துக்கத்தை யாரும் தீர்க்க முடியாது. ஒரு குடும்பத்தின் ஆணி வேரே பிடுங்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு ஆயுள் தண்டனை போதுமானதாக இருக்காது.'' என்றார் இது அரிதினும் அரிதான வழக்கு என நீதிபதி கூறினார் ''இப்படி ஒரு குற்றத்தைச் செய்துவிட்டு, 14 வருடங்களில் வெளியில் வந்துவிடலாம் என எதிரிகள் நினைக்கலாம். ஆனால், அப்படி விட்டுவிட நீதிமன்றம் தயாராக இல்லை" என்று தெரிவித்த நீதிபதி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனை விவரங்களை அறிவித்தார். பட மூலாதாரம்,Handout படக்குறிப்பு,பென்னிக்சின் தாய் மற்றும் சகோதரி தண்டனை விவரங்கள் என்ன? அதன்படி முதல் குற்றவாளி ஆய்வாளர் ஸ்ரீதருக்கு இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது தவிர, பல சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, 3 ஏழாண்டு சிறை, மூன்றாண்டு சிறை தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 24,10,000 ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இரண்டாவது குற்றவாளி, பாலகிருஷ்ணனுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழே ஒராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை மரண தண்டனையும் 16,80,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மூன்றாவது குற்றவாளி ரவி கணேஷுக்கு பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஓராண்டு, ஏழாண்டு சிறை தண்டனையும் இரட்டை தூக்கு தண்டனையும் 5,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. நான்காவது குற்றவாளியான தலைமைக் காவலர் முருகனுக்கு இரட்டை தூக்கு தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 10,10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஐந்தாவது குற்றவாளி சாமிதுரைக்கு இரட்டை மரண தண்டனையும் சில சட்டப் பிரிவுகளின் கீழ் ஓராண்டு மற்றும் ஏழாண்டு சிறை தண்டனையும் 5,60,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஆறாவது குற்றவாளி முத்துராஜாவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை தண்டனை, மூன்று ஏழாண்டு சிறை தண்டனை, ஒரு மூன்றாண்டு சிறை தண்டனை, இரட்டை மரண தண்டனை ஆகியவை விதிக்கப்பட்டன. இது தவிர, 3,20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஏழாவது குற்றவாளி செல்லதுரைக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 14,40,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. எட்டாவது குற்றவாளி தாமஸ் பிரான்சிஸிற்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. ஒன்பதாவது குற்றவாளி வெயில் முத்துவுக்கு வெவ்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் ஒராண்டு சிறை, ஏழாண்டு சிறை தண்டனைகளும் இரட்டை மரண தண்டனையும் 10,54,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. Get in touch பிரச்னைகளைப் பேசுவோம் - 2 | பெண்கள் பாதுகாப்பு Contact form பென்னிக்சின் சகோதரி கூறியது என்ன? ''2020-ஆம் ஆண்டு விசாரனை என்ற பெயரில் என் தந்தை மற்றும் சகோதரனை அழைத்து சென்று கொடூரமாக படுகொலை செய்தனர். இவை நடந்து 6 வருடம் ஆகியுள்ளது இருந்தாலும் நீதிமன்றம் எங்களுக்கான நீதியை வழங்குவார்கள் என நாங்கள் நம்பியிருந்தோம், இன்று அதற்கான நீதியை வழங்கியுள்ளனர்.'' என பென்னிக்சின் சகோதரி செய்தியாளர்களிடம் கூறினார். இன்று கிடைத்த நீதி அனைத்து பாமர மக்களுக்கும் கிடைத்த நீதி என்று அவர் குறிப்பிட்டார். ''இனி இதுபோல எந்த குடும்பமும் பாதிக்கப்படக்கூடாது என நாங்கள் நினைத்தோம் இன்று வந்த தீர்ப்பு அப்படிப்பட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. குற்றவாளிகள் மேல் முறையீடு சென்றாலும் நாங்களும் நீதிமன்றம் செல்வோம், கடைசி மூச்சு வரை நாங்கள் இதற்காக போராடுவோம். பாதிக்கப்பட்ட எங்களுக்கான நீதியை எங்கு சென்றாலும் வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்'' இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்ககூடாது என நீதிபதி தீர்ப்பில் கூறியுள்ளார். இது போல மீண்டும் நடக்காது என்று நம்புகிறோம் என்றார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c17v9z8wzqro
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நாங்க இந்தவாட்டி தேர்தல் களத்தை தட்டித் தூக்கிறம்! 🤣
-
இலங்கையைச் சேர்ந்த 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு : உயிர்மாய்ப்பு எனச் சந்தேகம்!
இலங்கையைச் சேர்ந்த 'கயல்' சீரியல் நடிகை சுபாஷினி சென்னையில் சடலமாக மீட்பு : உயிர்மாய்ப்பு எனச் சந்தேகம்! Published By: Digital Desk 3 06 Apr, 2026 | 05:45 PM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்திய தொலைக்காட்சியின் முன்னணித் தொடரான 'கயல்' மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை வம்சாவளி நடிகை சுபாஷினி, இன்று (ஏப்ரல் 6) சென்னையில் உள்ள குடியிருப்பொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். வளர்ந்து வரும் இளம் நடிகையின் மரணம் சின்னத்திரை வட்டாரத்திலும், அவரது ரசிகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஐயப்பன்தாங்கலில் உள்ள தனது இல்லத்தில் சுபாஷினி சடலமாக மீட்கப்பட்டார். இது குறித்த தகவலறிந்த பொலிஸார் விரைந்து சென்று அவரது சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அவர் உயிரை மாய்த்திருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. எனினும், அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் குறித்துப் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட சுபாஷினி, தமிழ் திரையுலகில் சாதிக்க வேண்டும் என்ற பெரும் கனவோடு சென்னைக்கு சென்றார். ஆரம்பத்தில் பல சவால்களை எதிர்கொண்ட அவர், தனது விடாமுயற்சியால் சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்தார். சன் டிவியின் மெகா ஹிட் தொடரான 'கயல்' அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. தனது யதார்த்தமான நடிப்பால் குறுகிய காலத்திலேயே இல்லத்தரசிகள் மற்றும் இளைஞர்களின் மனதைக் கவர்ந்தார். திரையுலகில் அடுத்தடுத்த கட்டங்களுக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது வாழ்வு இவ்வளவு சீக்கிரம் முடிவுக்கு வந்தது சக கலைஞர்களை துக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. சுபாஷினியின் மறைவுச் செய்தி வெளியானதிலிருந்து சமூக வலைதளங்களில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். "உங்களுடைய நடிப்பு மிகவும் உண்மையானது, எங்களால் இதை நம்ப முடியவில்லை" என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு திறமையான கலைஞராகவும், போராட்டங்களைக் கடந்து வந்த ஒரு பெண்ணாகவும் சுபாஷினி எப்போதும் 'கயல்' தொடரின் வழியாகவும், அவரது யதார்த்தமான நடிப்பின் மூலமாகவும் நினைவு கூரப்படுவார். மன உளைச்சலோ அல்லது தற்கொலை எண்ணமோ மேலோங்கும்போது, முறையான ஆலோசனையும் உதவியும் பெறுவது அவசியம். இதற்கான அரசாங்கம் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிக்கான தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளலாம். சுமித்ரயோ அமைப்பு வருடத்தில் 365 நாட்களும் மு.ப 9.00 மணி தொடக்கம் பி.ப 8.00 மணிவரைத் திறந்திருக்கும்.(விடுமுறை நாட்கள் உட்பட) தொடர்பு எண்: சுமித்ரயோ - 011-2692909,011- 2683555,011- 269666 முகவரி : 60பி, ஹோட்டன் பிலேஸ், கொழும்பு 7 (சுமித்ரயோ) மின்னஞ்சல்: sumithra@sumithrayo.org / sumithrayo@sltnet.lk இணையத்தளம்: www.sumithrayo.org https://www.virakesari.lk/article/242898
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
(பொதுவான பதிவு) இந்த போக்கை ஈரானுக்கு தட்டில் வைத்து விவிலிய பிரளய விசாக கிருமிகள் கொடுத்து, அவர்களின் விடத்தை அவர்களுக்கு உள்ளேயே பாய்ச்சி உள்ளார்கள் என்பது. நேட்டோ தொடர்ந்தாலும், இந்த போக்கு வளர்ச்சி, விருத்தி அடையும். அல்லது (அமெரிக்கா அரசாங்கம் ,படைகளுக்கு இவற்றை ஆய்வு செய்து கேந்திராவான் பல பிரோயோகம் பற்றி பாடம் எடுத்த / ஆலோசனை கொடுத்த) இந்த பேராசியர் மொக்கு தனம்.
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
நீங்கள் விஜை தேர்தலுக்கு பின் படம் நடிக்க போய்விடுவார் என்கிறீர்கள். சீமானோ…. தேர்தலுக்கு முன்பே அதையே செய்கிறார்… ஏப்ரல் 10 வெளிவருகிறது… சீமான் துக்கடா வேடத்தில் நசித்த LIK திரைப்படம்…. நடிகர் நாடாளக்கூடாது என மேடையில் முழங்கும் சீமான் நடிகர் இல்லையா? ஏன் ஆங்கில தலைப்பு வைத்த தமிழ் படத்தில் நடித்தார்? இது மொழியை அழிப்பது அல்லவா?
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
தவெக குழறுபடிகளை பார்த்து, பல தேர்தல் பிராச்சார வியூகங்களை எம்ஜிஆர், ஜெ க்கு வகுத்த செங்கோட்டையன் மூளை வெந்து போயுள்ளாராம் 😂.
-
அமெரிக்காவின் 2ஆவது F-35 ரக அதிநவீன போர் விமானம் ஈரானால் சுட்டு வீழ்த்தப்பட்டது
சிலருக்கு இங்கே எரிகிறது இரான் அதன் சொந்த தொழில்நுபத்ஹில் நின்று சண்டைபிடிக்கிறது என்று அனால் , US / மேற்கு விவிலிய பிரளய விஷக்கிருமிகளுக்கும் இதுவே இரத்தத்தை கக்க வைக்கிறது ஈரான் இதுவரை நடந்த தாக்குதலில் ஈட்டுட்ட விமான பறப்பை வைத்து AI model ஒன்றை கட்டி எழுப்பி இருப்பதாக. (விமான பறப்பில் பெரும் தொகை தரவு பள்ளிகளை உருவாக்கும்) அது எந்த விமானம் தாக்கப்பட்டால், எந்த புள்ளியில் அடிப்பதற்கு சாத்திய கூறுகள் அதிகம் என்பது போன்ற எதிர்வுகூறலை கொடுப்பதாக தகவல்.