All Activity
- Past hour
-
ஆமென்! - மத்திய கிழக்கு போர்க் குறிப்பு
புதிய பார்வை. பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
-
-
ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
ஈரான் விடயத்தில் அதன் உச்சபட்சத் தலைவரை மட்டுமல்ல, படைத்துறை சார்ந்த மற்றும் பாராளுமன்றம் சார்ந்த 40 க்கு மேற்பட்ட தலைவர்களையும் கொன்றொழித்திருக்கிறது. ஓர் அரச கட்டமைப்பினை ஆட்டம் காணச் செய்யக்கூடிய இந்தக் கூட்டுப் படுகொலைகூட ஈரானில் ஆட்சிமாற்றத்தை நிகழ்த்த முடியாமல் போனது அமெரிக்காவுக்கு கிடைத்திருக்கிற மிகப் பெரும் அதிர்ச்சி. அந்தளவுக்கு கமெய்னி அவர்கள் ஏகாதிபத்தியத்தின் தன்மையை புரிந்துகொண்டு அரச கட்டமைப்பிலுள்ள தலைவர்களை தாமதமின்றி பிரதியீடு செய்யக் கூடிய வகையில் ஒரு பன்முகப்பட்ட அமைப்புமுறையை உருவாக்கியிருக்கிறார். இது சர்வாதிகாரியாக இருக்கும் ஒருவரின் பண்புநிலைகளுக்கு முரணானது. சர்வாதிகாரிகள் தன்னைத் தவிர ஒருவரையுமே நம்புவதில்லை. இரண்டாம் கட்டத் தலைமையைக்கூட வளர விடுவதில்லை. இந்தத் தன்மைகளை கமெய்னி அவர்கள் கொண்டிருந்திருந்தால் அவரின் திடீர் மரணத்தோடு, ஈரானின் ஆட்சி பொலபொலவென உதிர்ந்து கொட்டுண்டு, ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும். 46 வருடமாக ஈரானைவிட்டு அமெரிக்காவில் வசிக்கும் அமெரிக்க எடுபிடி ஷா மன்னின் வாரிசு கறள்பிடித்த அரசமுடியோடு மீண்டும் பதவிக்கு வந்திருக்கவும் முடிந்திருக்கும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் இங்கே இனம் மதம் சார்ந்து தூவும் விசம் கண்டிக்கத்தக்கது 😡
-
ஏறாவூரில் கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்
கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம் 05 Mar, 2026 | 06:42 PM மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் இருந்து சட்டவிரோதமாக ஆற்று மணல் ஏற்றிச் சென்ற கனகர வாகனம், பொலிஸாரின் தடையை மீறி நிறுத்தாமல், தப்பிச் சென்றுள்ளது. அந்த வாகனத்தை துரத்திச் செல்லும் முயற்சியில், பொலிஸாரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் வைத்து, வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டபோது 6600 மில்லி கிராம் ஹெரோயினுடன் வாகன சாரதி மற்றும் உதவியாளர் என இருவர் புதன்கிழமை (4) கைது செய்யப்பட்டதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு 10.30 மணியளவில் கரடியனாறு கித்துள் பகுதியில் இருந்து செங்கலடி பகுதியை நோக்கி மண் ஏற்றிக்கொண்டு பயணித்த கனரக வாகனம் ஒன்றை கரடியனாறு கறுத்தபாலம் பகுதியில் உள்ள வீதியில் வைத்து நிறுத்துமாறு பொலிஸார் பணித்தனர். இதன்போது அதனை மீறி கனகர வாகனம் செங்கலடி பகுதியை நோக்கிச் சென்றதையடுத்து அவர்களை பின்தொடர்ந்து பொலிஸார் துரத்திச் சென்று பிடிக்க முயன்றுள்ளனர். இதன்போது பொலிஸார் தப்பிச் சென்ற வாகனம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்துக்கு தெரியப்படுத்தியதையடுத்து, அவர்கள் அங்கு வீதி சோதனைத் தடையை அமைத்து, வாகனத்தை நிறுத்துமாறு பணித்தபோது அந்த தடையையும் மீறி கனரக வாகனம் மட்டக்களப்பு நகரை நோக்கிச் சென்றுள்ளது. வாகனத்தை நிறுத்துவதற்காக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த கனரக வாகனத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். அதனையும் மீறி வாகனம் தப்பிச் சென்று மட்டக்களப்பு நகரை நோக்கிப் பயணித்துள்ளது. இந்நிலையில், மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நகரின் திருகோணமலை வீதியில் சந்தி பகுதியில் வீதித் தடை விதித்து, குறித்த கனரக வாகனத்தை நிறுத்திப் பிடித்துள்ளனர். அதன் பின்னரே சாரதியும் உதவியாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 25 வயதுடைய கரடியனாறு கித்துல் பகுதியைச் சேர்ந்த சாரதியிடம் இருந்து 3180 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளையும் 22 வயதுடைய ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த உதவியாளரிடம் இருந்து 3420 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை மீட்டு ஏறாவூர் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். குறித்த சாரதி கரடியனாறு பகுதியில் 8 மாடுகளை திருடிய மற்றும் வீடு உடைத்து திருடிய சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்பதும் அவர் சில காலமாக தலைமறைவாகி வந்துள்ளதும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர். கனரக வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸார் - இதுதான் காரணம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
- ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
(இது பொதுவான பதிவு) தனிப்பட்ட அடிப்படையில் எனக்கு ஒரு பாதிப்பும் இல்லை. நீங்கள் கவனிக்கவில்லை போலும். என்னுடைய எல்லா பதிவுகளிலும் ஒரு பக்கம் பார்ப்பது இல்லை. மற்ற பக்கத்தையும் பார்த்தே. மற்றது, உணர்ச்சிகள் அற்ற ஆய்வின் / தரவின் அடிப்படையிலேயே எனது பதிவுகள். அந்த தலைவரை பற்றி சொல்வதற்கு இங்கே எவருக்கு என்ன தகுதி இருக்கிறது? அது சரி, ஹாமெனி கிருமி என்றால், உங்களக்கு ஏதாவது தீங்கு செய்தாரா? ( மேற்கு சொல்லும் எள் என்பதற்கு எண்ணையாக ஹாமெனி மாறி இருந்தால், ஹாமெனியின் வழியாக அல்லா இரான் மக்களுக்கு தேனும், பாலும் கொடுத்து , காணாது என்று அல்லா அமிர்தம் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று மேட்ற்குபிரச்சாரம் செய்து இருப்பார்கள். (அனால், அதையும் கூட நான் ஏற்றுக்கொண்டு இருக்க மாட்டேன்)) எங்களுக்கு இல்லாமல் இருக்கலாம், ஆனால், அவர்களு க்கு அவர் உயரானவர். உ.ம். இரானின் இறந்த ஹாமெனி நீங்கள் சொல்லும், மேற்கு பிரச்சாரம் சொல்லும் கிருமி என்றால், எப்படி குண்டு வீச்சுக்கு மத்தியிலும் 1000 கணக்கில், பல்வேறு நகரங்களில் கூடுகிறது அஞ்சலி, இறுதி மரியாதைக்காக? அனால், படத்தை பார்த்தால் அது 50, 000 கணக்கில். இதுவே தகுதி அவர் தலைவர் என்பதற்கு. உங்களின் பதிவு, மேற்கு பிரச்சாரத்தை பொதுவாக ஏற்றுக்கொள்ளும், அல்லது அதனை கேள்விக்கு உள்ளாக்காதது நீங்கள் சொல்வதின் படி, மேற்றகில் உள்ள, வேறு நாடுகளுக்கு'பிடிக்காத தலைவர்களை போட்டு தள்ளலாம் என்ற கருத்தும் உருவாக இடம் இருக்கிறது. விவிலிய பிரளய கிருமி என்பது கூட ஆய்வு / தரவின் அடிபடையில் அமைந்தது.- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
இன்று காரைநகர் ஊரி, கொட்டப்புலம் திரு அப்புத்துரை செல்லத்தம்பி அவர்களின் வீட்டிற்கு எமது யாழிணைய உறவு @வாத்தியார் அண்ணை நேரடியாக சென்று பார்வையிட்டிருந்தார். சிறிய தற்காலிக குடிசை போன்ற வீட்டில் வசிக்கிறார்கள். எதிர்காலத்தில் வீட்டுத்திட்டம் வழங்கப்படும் என்று திட்டமிடல் அபிவிருத்தி உத்தியோகத்தர் கூறினார். தற்போது 2009 முன் திருமணம் முடித்தவர்களுக்கு 20 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டமும் பின்பு திருமணம் முடித்தவர்களுக்கு 10 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டமும் கிடைக்கும். 10 லட்ச ரூபாய் வீட்டுத்திட்டத்தை அந்தப்பணத்தில் வீட்டுத்திட்டத்தை முடிக்கமுடியாது என்பதால் பலரும் வேண்டாம் என மறுக்கிறார்களாம். வாத்தியார் அண்ணை கிராமசேவகரிடம் மேலதிக தகவல்களைப் பெற்ற பின்னர் கதைப்பதாக கூறினார்.- Today
- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா இன்று வெல்லும் 😀 ஆனால் இறுதிப் போட்டியில் சறுக்கும்🤪- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
India vs England, 2nd Semi-Final at Mumbai, T20WC, Mar 05 2026 - Live Scorecard Innings break 2nd Semi-Final (N), Wankhede, March 05, 2026, ICC Men's T20 World Cup PrevNext India (20 ov) 253/7 England England chose to field.Stats view Current RR: 12.65 • Last 5 ov (RR): 76/4 (15.20)- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்த மைதானத்தில் இங்கிலாந்து 229 ஓட்டங்களை கலைச்சுப் பிடிச்சிருக்காம்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்னும் 30 பந்து இருக்கு. 240 அடிப்பார்களா- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சாஞ்ஜு ஆடிவிட்டுப் போட்டார். என்ன ஒரு ஆட்டம். அடி பொலி.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தேவதைகள் இறக்கைகளோடேயே நம் மத்தியில் இருக்கிறார்கள். சில வேளை நமக்குத்தான் அந்த இறக்கைகள் தெரிவதில்லை.- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
Necrophilia- இதைப் பற்றி நிழலி பல வருடங்கள் முன்னர் ஒரு திரியில் குறிப்பிட்ட தகவல் நினைவுக்கு வருகிறது. இலங்கையில் இப்படி நடப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால் தான் பிண அறைகள் நோயாளிகள் விடுதிகளை விட பாதுகாப்பாகப் பேணப் படுகின்றன. உரிய அனுமதியில்லாத எவரும் உள் நுழைய முடியாது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
111-1 சாஞ்ஜு ஆடிக்கொண்டிருக்கிறார். ஆடியேகொண்டிருக்கிறார்.- சர்வதேச கடற்பரப்புக்கு செல்ல வேண்டாம் - இலங்கை மீனவர்களுக்கு அறிவுறுத்தல்
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: சர்வதேச கடல் எல்லைகளைத் தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்! 05 Mar, 2026 | 05:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியுள்ளோம். எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு மீனவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம் என கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற சர்வதேச மகளிர் தினம் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இலங்கையின் கடல் எல்லை மற்றும் சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் தற்போது இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி சில விடயங்களை கூற வேண்டியுள்ளது. நாங்கள் எமது மீனவர்களை பாதுகாக்க வேண்டும். இது எமது அரசாங்கத்தின் கடமையாகும். இதனால் இந்த பிரச்சினைகள் முடியும் வரையில் எமது கடல் எல்லையை தாண்டிச் சென்று மீன் பிடிப்பதை தவிர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இதேவேளை காங்கேசன்துறை பிரதேசத்தில் இருந்து கடலுக்கு சென்ற இரண்டு மீனவர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் கடந்த 6 நாட்களாக தேடப்பட்டனர். இந்நிலையில் இந்திய கரையோர பாதுகாப்பு படையினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த பல நாட்களாக இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டன. இந்த மீனவர்களின் தற்போதைய நிலைமை என்ன? ஏன் அவர்கள் கைது செய்யப்பட்டனர்? என்ற விடயங்கள் தெரியவந்த பின்னர் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைளை இந்திய அரசாங்கத்துடன் இராஜதந்திர ரீதியில் முன்னெடுப்போம் என்றார். மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை: சர்வதேச கடல் எல்லைகளைத் தவிர்க்குமாறு அமைச்சர் அறிவுறுத்தல்!- "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு
பண்டைய மூளை அறுவை சிகிச்சை முதல் நவீன நரம்பியல் வரை: இலங்கையின் 3500 ஆண்டுகால வைத்திய வரலாறு ; சராஜி விஜேசேகர 05 Mar, 2026 | 01:52 PM அபிலாஷனி லெட்சுமன் நரம்பியல் துறை பற்றிய உலகளாவிய குறிப்புகள் 3,500 ஆண்டுகளுக்கு முந்தைய 'எட்வர்ட் ஸ்மித் பாபிரஸில்' (Edward Smith Papyrus) காணப்பட்டாலும், இலங்கையர்கள் பண்டைய காலத்திலிருந்தே இது குறித்த ஆழமான அறிவைக் கொண்டிருந்ததாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர தெரிவித்தார். இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19-வது வருடாந்த மாநாட்டில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் சிறுவர் நரம்பியல் துறைப் பேராசிரியர் சராஜி விஜேசேகர இலங்கையின் நரம்பியல் துறை கடந்து வந்த வியக்கத்தக்க வரலாற்றுப் பாதை குறித்து விசேட உரை நிகழ்த்திய போதே இதனை தெரிவித்தார். மனித மூளையை "சிக்கல்களின் பேராலயம்" (Cathedral of Complexities) என வர்ணித்துத் தொடங்கிய அவரது உரை, இலங்கையர்களின் பண்டைய வைத்திய அறிவை உலகிற்குப் பறைசாற்றியது. 4-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ்பெற்ற வைத்தியரான மன்னர் புத்ததாச, 'சாரார்த்த சங்கிரஹ' எனும் விரிவான மருத்துவ நூலைத் தொகுத்தார். 6-ஆம் நூற்றாண்டின் வரலாற்று ஆவணமான மகாவம்சத்தில், மன்னர் புத்ததாசவினால் மேற்கொள்ளப்பட்ட நுணுக்கமான மூளை அறுவை சிகிச்சை பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. 9-ஆம் நூற்றாண்டில் மிகிந்தலையில் (Meen Kale) அமைக்கப்பட்டிருந்த வைத்தியசாலையின் இடிபாடுகள், அங்கு பக்கவாதம் (Paralysis) போன்ற நோய்களுக்குச் சிகிச்சைகள் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்துகின்றன. அங்கு கண்டறியப்பட்ட மருந்துத் தோணிகள் (Medicinal Troughs) இதற்குச் சான்றாக அமைந்துள்ளன. இலங்கையில் நவீன நரம்பியல் துறைக்கான உத்தியோகபூர்வமான ஆரம்பம் 1951-ம் ஆண்டு ஏற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். 1951-ம் ஆண்டு இலங்கையின் முதல் நரம்பியல் நிபுணராக வைத்தியர் ஜோர்ஜ் செல்வராஜன் அட்னவெல் (Dr. George Selvarajan Atnavel) நியமிக்கப்பட்டார். கொழும்பு பொது வைத்தியசாலையின் 44-வது வார்டில் அவர் தனது பணிகளைத் தொடங்கினார். அக்காலத்தில் நரம்பியல் சோதனைகளுக்காக 'நீ ஹேமர்' (Knee hammer) மற்றும் 'ஒப்தல்மோஸ்கோப்' (Ophthalmoscope) போன்ற கருவிகளைப் பயன்படுத்துவதற்கு அவர் கையாண்ட தனித்துவமான கை சமிக்ஞைகள் பற்றித் தாதியர்கள் இன்றும் நினைவு கூர்வதாக பேராசிரியர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். வைத்தியர் அட்னவெல் 1972-ல் ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து, வைத்தியர் ஜகத் பி. ஜே. செகல் (Dr. Jagat P. J. Sehgal) நரம்பியல் ஆலோசகராகப் பொறுப்பேற்றார். அவர் வார்டுகளைப் புனரமைத்து, நரம்பியல் துறைக்கான பிரத்தியேக கட்டமைப்பை உருவாக்கினார். அவரைத் தொடர்ந்து வைத்தியர் பி. டி. டி. செகல் உள்ளிட்ட பல நிபுணர்கள் இத்துறையை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் சென்றனர். பண்டைய மன்னர்களின் மருத்துவச் சாதனைகள் முதல் நவீன நிபுணர்களின் அர்ப்பணிப்பு வரை, இலங்கையின் நரம்பியல் துறை உலகத்தரம் வாய்ந்த ஒன்றாக வளர்ந்துள்ளதை பேராசிரியர் சராஜி விஜேசேகர தனது உரையில் உறுதிப்படுத்தினார். பண்டைய மூளை அறுவை சிகிச்சை முதல் நவீன நரம்பியல் வரை: இலங்கையின் 3500 ஆண்டுகால வைத்திய வரலாறு ; சராஜி விஜேசேகர- பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெற்றதா?; டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு முன்பாக மக்கள் ஆர்ப்பாட்டம்
பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் ; யுவதிக்கு நீதிக்கோரி இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம் Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 05:16 PM டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்ட யுவதியின் சடலத்திற்கு பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறி இரண்டாவது நாளாகவும் நீதிக்கோரி இன்று வியாழக்கிழமை (05) ஆர்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் எபோட்ஸ்லி,புலோரன்ஸ்,மாஸ்க்,மொன்டிபெயார்,லெதண்டி மற்றும்பன்முர் ஆகிய தோட்டங்களை சேர்ந்த 500கும் மேற்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். டிக்கோயா நகரில் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட ஆர்ப்பாட்டம், டிக்கோயா நகரிலிருந்து டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலை வரை பேரணியாக முன்னெடுக்கப்பட்டது. பதாதைகள் ஏந்தியவாறு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வைத்தியசாலையை முற்றுகையிட்டதால் வளாகத்தில் பதற்றமான நிலை ஏற்பட்டது. அட்டன் ஏபோட்ஸ்லீ தோட்டப் பகுதியில் கடந்த மாதம் 23ஆம் திகதி 23 வயதுடைய யுவதி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தையடுத்து, அவரது சடலம் அதே நாளில் மாலை டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டு பிரேத அறையில் வைக்கப்பட்டது. பின்னர், பிரேத அறையில் வைக்கப்பட்டிருந்த யுவதியின் சடலத்தின் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்ததைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமையும் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இந்நிலையில், வைத்தியசாலையில் பணிபுரியும் மூன்று சிற்றூழியர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்றையதினம் மீண்டும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வைத்தியசாலையின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொலிஸார் வளாகத்தில் குவிக்கப்பட்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்களின் நடவடிக்கையால் தங்களது சேவைகள் பாதிக்கப்பட்டதாகக் கூறி டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள் மற்றும் ஏனைய பணியாளர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர். இதனால் வைத்தியசாலையின் வழமையான சேவைகளும் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்து சம்பவ இடத்திற்கு வந்த உதவி பொலிஸ் அத்தியட்சகர் நிஸ்ஸங்க கொடமுன தெரிவிக்கையில், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு பதிவு செய்யப்படவில்லை என குறிப்பிட்டார். மேலும், மக்களின் ஆர்ப்பாட்டத்தை கருத்தில் கொண்டு அட்டன் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மக்களிடையே பரவியுள்ள தவறான தகவல்களால் இந்த நிலைமை உருவாகியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார். நீதிமன்றத்தின் அனுமதியுடன் வைத்திய பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, சம்பவம் தொடர்பான சாட்சிகள் கிடைத்தால் சட்டத்தின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுத்து சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இதன் பின்னர் வைத்தியசாலை வளாகத்தைச் சூழ்ந்திருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பிரேத அறையில் பாலியல் துஷ்பிரயோகம் ; யுவதிக்கு நீதிக்கோரி இரண்டாவது நாளாகவும் ஆர்ப்பாட்டம்- காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!
காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்! சர்வதேச ‘அரசியல்’ பின்புலம் பாரதி ஆனந்த் Updated on: 04 Mar 2026, 6:54 pm 3 min read “ஒரு வெளிநாட்டு தலைவர் கொல்லப்பட்டது குறித்து, இறையாண்மை அடிப்படையிலும், சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலும் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தி இருக்க வேண்டும். ஆனால், அப்படி ஒரு தெளிவான நிலைப்பாடு இந்திய அரசிடம் இருந்து வெளிப்படவில்லை. இது நமது வெளிநாட்டுக் கொள்கையின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்குகிறது. இந்தச் சூழலில் மவுனம் என்பது நடுநிலையல்ல. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியா, கொள்கை அளவிலான எதிர்ப்பை வெளிப்படுத்தாவிட்டால், சர்வதேச நெறிமுறைகள் சீரழிவதை அது எளிதாக்கும். சர்வதேச ஒழுங்கு சீர்குலைந்துள்ள இந்த நிலையில், மவுனம் என்பது பொறுப்பைத் துறப்பதாகும்.” - இது காமேனி படுகொலை தொடர்பாக இந்திய அரசுக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி எழுப்பிய கேள்வி. இந்தியாவின் இந்த மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள் இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. அவற்றை சற்று தெளிவாகப் பார்ப்போம். 1. முதல் காரணமாக, இஸ்ரேலுடனான இந்தியாவின் நெருக்கத்தைக் குறிப்பிடலாம். இந்தியா பல ஆண்டுகளாகவே இஸ்ரேலுடன் நட்புறவில் இருக்கிறது. இந்த உறவு சமீப ஆண்டுகளில் பன்மடங்கு வலுப்பெற்றுள்ளது. 2017-ல் இஸ்ரேலுக்கு மோடி சென்றார். அதேபோல், 2018-ல் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை மோடி இந்தியாவுக்கு வரவேற்று உபசரித்தார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேல் சென்ற பிரதமர் மோடி, “இஸ்ரேலுடன் இந்தியா எப்போதும் உறுதிபட நிற்கும்.” என்று பேசினார். அந்த அடிப்படையில் பார்த்தால், பிராந்திய ஸ்திரத்தன்மையை வலியுறுத்தும் வழக்கத்திலிருந்து விடுபட்டு இஸ்ரேலுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது எனலாம். இஸ்ரேல் தாக்குதல், ஈரானின் பதில் தாக்குதலுக்குப் பின்னர், இஸ்ரேல் பிரதமர் மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் தலைவர்களிடம் பேசிய மோடி, ஈரான் தலைவர்களிடம் பேசவில்லை. மேலும், “இந்த இக்கட்டான சூழலில் இஸ்ரேல், யூதர்களுக்கு ஆதரவாக மோடி இருப்பதற்கு நன்றி” என்று மோடி தொலைபேசி உரையாடலுக்கு ரியாக்ட் செய்திருந்தார் நெதன்யாகு. 2. இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையேயான உறவு மங்கி வருவதும், இந்தியாவின் மவுனத்துக்குக் காரணமாகக் கூறப்படுகிறது. ஈரான் மீது அமெரிக்க பல்வேறு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. இதனால் 2018 முதலே இந்தியா ஈரானில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்வது பூஜ்ஜிய நிலைக்கு வந்துவிட்டது. 2018-ல் இந்தியா - ஈரான் இடையேயான வர்த்த மதிப்பு 17 பில்லியன் டாலர் என்றளவில் இருந்து 2025-ல் இது வெறும் 1.68 பில்லியன் என்றளவுக்கு சரிந்துள்ளது. ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயு வயல்களில் முதலீடு செய்வதையும் இந்தியா கைவிட்டுவிட்டது. சபாஹர் துறைமுகம் மேலும், ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகப் பணிகளை இந்தியா மேற்கொள்ள அமெரிக்க அளித்த தற்காலிக தடை நீக்கமானது ஏப்ரலுடன் முடிவடைகிறது. அதனால் அங்குள்ள ஷாஹித் பெஹெஸ்தி முனையத்தை கையாள்வதை இந்தியாவும் அத்துடன் முடித்துக் கொள்ளும். இப்போது ஏற்பட்டுள்ள மோதலில், சபாஹர் துறைமுகத்தின் கோனார்க் விமான நிலையத்தை இஸ்ரேலிய ஏவுகணைகள் பதம்பார்த்துள்ளன. இத்தகைய சூழலில், ஈரானுடனான கடைசி பிணைப்பைக் கூட இந்தியா துறக்கும் நிலையில்தான் இருக்கிறது. 3. மூன்றாவது, இந்தியா - ஈரான் இடையேயான அரசியல் பிணக்குகளைக் காரணமாக சுட்டிக் காட்டலாம். 1994-ல், ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் காஷ்மீர் பற்றி இந்தியா கொண்டுவந்த தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை பாகிஸ்தான், அரபு நாடுகளுடன் சேர்ந்து ஈரானும் புறக்கணித்தது. 2017-ல் மத்திய அரசின் காஷ்மீர் கொள்கையைப் பற்றி காமேனியின் விமர்சனம் அரசு விரும்பத்தக்கதாக அமையவில்லை. அதேபோல், 2019-ல் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்தான பின்னர் டெல்லியில் 2020-ல் நடந்த கலவரத்தை, ‘இந்தியாவில் முஸ்லிம்கள் படுகொலைகளுக்கான சாட்சி’ என்று காமேனி விமர்சித்திருந்ததும் ஒரு கசப்பனுபவம். 4. காமேனி படுகொலை மீது இந்தியாவின் மவுனத்துக்கு, வளைகுடா உறவில் இந்தியா சமரசம் செய்து கொள்ள விரும்பாததையும் பட்டியலிடலாம். ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. அங்குள்ள எண்ணெய் வளங்கள் சார்ந்த கட்டுமானங்களை குறிவைத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில், யுஏஇ அதிபர் முகமது பின் ஜாயத் குறுகிய பயணமாக டெல்லி வந்தார். அப்போது இரு நாடுகளுக்கும் இடையே வலுவான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தச் சூழலில் ஈரானை ஆதரிப்பது என்பது வளைகுடா நாடுகளில் வேலை செய்யும் சுமார் 1 கோடி இந்தியர்கள் பாதுகாப்பை இழக்க முடியாது. ஈரானில் வெறும் 5000 இந்தியர்களும், இஸ்ரேலில் 20 ஆயிரம் இந்தியர்களுமே உள்ளனர். இந்த ஒப்பீட்டை இந்தியா கருத்தில் கொண்டுள்ளது. மேலும், ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை குறைத்ததால், இந்தியா கடந்த சில மாதங்களாக வளைகுடா ஒத்துழைப்பு நாடுகளைத்தான் நம்பியிருக்கிறது. இப்போது ஈரானை ஆதரிப்பது எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். 5. கடைசியாக, நடுவில் கொஞ்சம் வாடிப்போய் மீண்டும் துளிர்க்கத் தொடங்கியுள்ள இந்திய - அமெரிக்க உறவு. இந்தியாவுக்கு விதித்த இறக்குமதி வரிகளை அமெரிக்கா தளர்த்தியுள்ளது. இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தமும் முடிவாகியுள்ளது. மேலும், அமெரிக்கா தனது பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) தொழில்நுட்ப விநியோகச் சங்கிலியில் இந்தியாவைச் சேர்த்துள்ளது. இது தொடர்பான ஆலோசனைகளுக்காக அமெரிக்க அதிகாரிகள் குழு இந்தியாவுக்கு வந்து சென்றுள்ளது. இருப்பினும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகள் பல வாரங்களுக்கு தொடரக்கூடும் என்றும், தேவைப்பட்டால் அமெரிக்கப் படைகளை ஈரானுக்கு அனுப்புவதற்குத் தயாராக இருப்பதாகவும் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளதால், ஈரானுக்கு ஆதரவாக இந்தியா பேசுவதில் அதை கடினமான சூழலுக்குத் தள்ளியுள்ளது. அதேவேளையில், உலகளாவிய தெற்கு கொள்கையிலும் இந்தியா கவனம் செலுத்த வேண்டியுள்ளது. இந்த ஆண்டு புதுடெல்லி பிரிக்ஸ் மாநாட்டை தலைமையேற்று நடத்துகிறது. இதில் ஈரானும், ஐக்கிய அரபு அமீரகமும் இருக்கின்றன. இப்போதைய சூழலில் இந்த இரு நாடுகளும் எதிரெதிராக உள்ளன. இந்தச் சூழலில் யார் பக்கம் பேசுவது என்பது இந்தியாவுக்கு நெருக்கடி. ஆகவே, இஸ்ரேலுடனான நெருக்கம், ஈரானுடனான மங்கிப்போன உறவு, அமெரிக்காவின் அழுத்தங்கள், காமேனியின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் வளைகுடா நாடுகள் உடன் இந்தியா வலுப்படுத்தி வரும் உறவு ஆகியனவற்றை காமேனி படுகொலையில் இந்தியா காட்டும் மவுனத்தின் காரணிகளாக புரிந்துகொள்ளலாம். உறுதுணைக் கட்டுரை: ‘தி இந்து’ ஆங்கிலம் காமேனி படுகொலையும் ஈரான் போரும்: இந்திய மவுனத்தின் பின்னணியில் 5 காரணிகள்!- "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு
"இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு": நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன் 05 Mar, 2026 | 01:44 PM அபிலாஷனி லெட்சுமன் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாட்டில் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட உலக பக்கவாத அமைப்பின் (WSO) தலைவர் பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன், இலங்கைக்கும் தனக்குமான உறவு மற்றும் பக்கவாத நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நெகிழ்ச்சி தெரிவித்தார். இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாடு, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "இலங்கைக்கு வரும்போதெல்லாம் எனது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வே எனக்கு ஏற்படுகிறது. என்னிடம் பலர் இதுதான் உங்களது முதல் வருகையா எனக் கேட்கிறார்கள். ஆனால், எத்தனை முறை இங்கு வந்துள்ளேன் என்பதை எண்ணுவதே எனக்குக் கடினமாக உள்ளது. அவுஸ்திரேலியாவை எனது இரண்டாவது வீடாகக் கருதினேன், ஆனால் கடந்த 8 ஆண்டுகளில் நான் அங்குச் சென்றதை விட அதிகமுறை இலங்கைக்கு வந்துள்ளேன். இப்போது அவுஸ்திரேலியாவை விட இலங்கையே எனது இல்லமாகத் தோன்றுகிறது மாநாட்டின் கருப்பொருளான "ஒருங்கிணைந்த நரம்பியல்" (Integrated Neurology) குறித்துப் பேசினால், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ விதிமுறைகளைத் தாண்டி, நோயாளிகளிடம் காட்டும் மனிதாபிமானமும் அனுதாபமுமே (Empathy) மிக முக்கியமானது. நரம்பியல் துறையானது தற்போது டிஜிட்டல் சுகாதாரம் மற்றும் துல்லியமான மருத்துவம் (Precision Medicine) ஆகியவற்றின் சந்திப்பில் உள்ளது. உலகளவில் பக்கவாதத்தினால் ஏற்படும் இறப்புகள் மற்றும் ஊனங்களில் மூன்றில் இரண்டு பங்கு குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நிகழ்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், மிக இளம் வயதிலேயே மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகின்றனர். இது குடும்பங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பெரும் சுமையாக அமைகிறது. இலங்கை நரம்பியல் நிபுணர்களுடன் இணைந்து முன்னெடுக்கப்படும் சில முக்கிய திட்டங்களாக ஆறு நாடுகளில் முன்னெடுக்கப்படும் பக்கவாத சிகிச்சை திட்டங்களுக்கு உலக பக்கவாத அமைப்பு நிதியுதவி வழங்கி வருகிறது. நரம்பியல் துறையில் அடுத்தகட்டத் தலைவர்களை உருவாக்கும் நோக்கில், சுமார் 100 நிபுணர்களுக்கு இரண்டு ஆண்டுகால தீவிரப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. நோய்த் தடுப்பு, அவசர சிகிச்சை மற்றும் நீண்டகாலப் புனர்வாழ்வு (Rehabilitation) ஆகிய மூன்று நிலைகளிலும் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதே தமது அமைப்பின் நோக்கம். உலகத்தரம் வாய்ந்த நரம்பியல் சேவைகளை இலங்கையில் வழங்க அர்ப்பணிப்புடன் செயல்படும் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கு (ASN) தனது பாராட்டுகளைத் தெரிவிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். "இலங்கை எனது இரண்டாவது தாய்நாடு": நரம்பியல் மாநாட்டில் இந்திய பேராசிரியர் ஜெயராஜ் துரை பாண்டியன்- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியா 24-1 24-2 ஆக இருந்திருக்கும். சாம்சன் தப்பிட்டார்.- ஈரானிய கடற்படைக் கப்பலே விபத்து : 35 பேர் மீட்பு
தாக்கப்பட்ட ஈரானிய கப்பல் இலங்கையில் தரிக்க 11 மணி நேரமாக அனுமதி கேட்டும் இலங்கை இழுத்தடித்தது என்கிறார் முஜிபுர் ரஹ்மான். இலங்கையில் அமெரிக்க அல்லது ஈரான் குண்டுகள் வீழாமல் முஜுபிர் ஓயமாட்டார் போலயே😂- இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்?
இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்? பட மூலாதாரம்,@IN_HQENC படக்குறிப்பு,ஐஆர்ஐஎஸ் தேனா ஒரு மணி நேரத்துக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள் புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா நீர்மூழ்கி ஏவுகணை ஏவி மூழ்கடித்தது. இது தொடர்பாக, இந்தியாவின் எதிர்க்கட்சிகள் மோதி அரசாங்கத்தின் மீது கேள்விகளை எழுப்பி வருகின்றன. அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு இரான் இப்போது எதிர்வினையாற்றியுள்ளது. இந்தச் சம்பவம் மார்ச் 4-ஆம் தேதி நடந்தது. அந்தப் போர்க்கப்பலின் பெயரை அமெரிக்கா குறிப்பிடவில்லை. ஆனால், இரானியப் போர்க்கப்பலான 'தேனா' உதவி கோரி தங்களுக்கு சிக்னல் அனுப்பியதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்ததையடுத்து, அமெரிக்காவின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தாக்குதலுக்காக இரானிய வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி அமெரிக்காவை விமர்சித்துள்ளார். "இரான் கரையிலிருந்து இரண்டாயிரம் மைல் தொலைவில் அமெரிக்கா, கடலில் ஒரு குற்றத்தைச் செய்துள்ளது. இந்திய கடற்படையின் விருந்தினராக இருந்த, 130 கடற்படையினரை ஏற்றிச் சென்ற 'தேனா' எனும் போர்க்கப்பல், சர்வதேச எல்லைக்குள் எச்சரிக்கையின்றி தாக்கப்பட்டது. அமெரிக்கா தான் உருவாக்கியுள்ள இந்த சூழ்நிலைக்காக கடுமையான விலையைச் செலுத்த வேண்டியிருக்கும்" என்று அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த இரானியப் போர்க்கப்பல், சமீபத்தில் இந்தியா நடத்திய சர்வதேச கடற்படைக் கண்காட்சி 2026-ல் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,AP மோதி அரசு பற்றி கேள்வி எழுப்பப்படுவது ஏன்? இந்தத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் பிரதமர் மோதியை விமர்சித்துள்ளனர் இதுகுறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், "இந்த இரானிய மாலுமிகள் ஒரு நிகழ்ச்சிக்காக இந்தியா வந்திருந்தனர். நாம்தான் அவர்களை அழைத்தோம், அவர்கள் நமது விருந்தினர்கள். அவர்கள் திரும்பிச் செல்லும்போது, ஓர் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அவர்கள் கப்பலைத் தாக்கி அவர்களைக் கொன்றுள்ளது," என்று சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார். மேலும் , "ஆனால் பிரதமர் மோதியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லை. இந்த கோழைத்தனம் ஏற்றுக்கொள்ள முடியாதது. பிரதமர் மோதியின் சமரசம் இந்தியாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்துகிறது," என்றும் அவர் பதிவிட்டுள்ளார். ஆம் ஆத்மி கட்சி எம்.பி சஞ்சய் சிங், இரானியக் கப்பலின் வீடியோவைப் பகிர்ந்து இந்தச் சம்பவத்திற்கு எதிர்வினையாற்றியுள்ளார். "இந்தியாவின் அழைப்பின் பேரில் இரான் தனது கப்பலை அனுப்பியது. அமெரிக்காவால் இந்தக் கப்பல் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்ட மாலுமிகள் கொல்லப்பட்டனர். நமது விருந்தினர்கள் கொல்லப்பட்டனர், ஆனால் மோதி அமைதியாக இருக்கிறார்," என்று சஞ்சய் சிங் பதிவிட்டுள்ளார். ராஷ்டிரிய ஜனதா தள செய்தித் தொடர்பாளர் பிரியங்கா பாரதியும் அரசாங்கம் மீது கேள்விகளை எழுப்பியுள்ளார். பிரியங்கா பாரதி எக்ஸ் தளத்தில், "முழுமையாக ஆயுதம் ஏந்திய அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல், போர் அல்லாத நடவடிக்கையிலிருந்து திரும்பிக் கொண்டிருந்த ஒரு போர்க்கப்பலை தாக்கியுள்ளது. இந்தியா ஏன் இதற்குப் பதிலளிக்கவில்லை?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கியதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது. மோதி அரசின் நிலைப்பாடு குறித்த விவாதம் அதே நேரத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் சில செய்திகளை இந்திய அரசாங்கம் 'தவறானவை' என்று குறிப்பிட்டுள்ளது. "அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு சேனலில், முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரி கர்னல் டக்ளஸ் மெக்ரிகோர், இரான் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா இந்தியக் கடற்படைத் தளத்தைப் பயன்படுத்துவதாக கூறினார். இந்தக் கூற்று முற்றிலும் தவறானது" என்று அரசாங்கத்தின் பத்திரிகை தகவல் பணியகத்தின் உண்மை கண்டறியும் குழு எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. ஆனால் பல நிபுணர்களும் முன்னாள் ராஜீய அதிகாரிகளும் இந்த விஷயத்தில் இந்திய அரசாங்கம் காட்டும் மௌனம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் ராஜீய அதிகாரி கே சி சிங், அராக்சியின் பதிவைப் பகிர்ந்து எக்ஸ் தளத்தில் "மௌனம் என்பது ராஜீய நடவடிக்கை அல்ல. இந்தியா தொடர்ந்து மூலையில் தள்ளப்படுகிறது. இந்தியாவின் மறைமுக ஆதரவை அமெரிக்கா மதிக்கும் என்று பாஜக நினைத்தால், நேட்டோ அமெரிக்காவுக்கு ஒருபோதும் உதவவில்லை என்று டிரம்ப் கூறியதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். பல நேட்டோ உறுப்பு நாடுகள் ஆப்கானிஸ்தானில் போரிட்டுத் தங்கள் வீரர்களை இழந்த பிறகும் இது சொல்லப்பட்டது," என்று எழுதியுள்ளார். "நமது 'மிலன்' பயிற்சியில் பங்கேற்க இரானியக் கப்பலை நாம் அழைத்திருக்காவிட்டால், அது அங்கு இருந்திருக்காது. இந்தப் பயிற்சியின் நெறிமுறைகளின்படி, கப்பல்கள் எந்த வெடிமருந்துகளையும் எடுத்துச் செல்ல முடியாது என்று எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் இரானியக் கப்பல் ஆயுதம் ஏந்தியிருக்கவில்லை. இரானியக் கடற்படை வீரர்கள் நமது குடியரசுத் தலைவர் முன்னிலையில் அணிவகுப்பு கூட நடத்தினர். இரானியக் கப்பல் பயிற்சியில் பங்கேற்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்ததால் இந்தத் தாக்குதல் திட்டமிடப்பட்ட ஒன்றாகும்" என்று முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், இந்தியாவின் உணர்வுகளை அமெரிக்கா புறக்கணிப்பதாக கன்வல் சிபல் குற்றம் சாட்டியுள்ளார். பட மூலாதாரம்,Reuters படக்குறிப்பு,அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் என்ன நடந்தது? புதன்கிழமையன்று, இந்தியப் பெருங்கடலில் நீர்மூழ்கி ஏவுகணை பயன்படுத்தி இரானியப் போர்க்கப்பல் ஒன்றை அமெரிக்கா மூழ்கடித்ததாக அமெரிக்கப் பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹெக்செத் தெரிவித்தார். இருப்பினும், மூழ்கடிக்கப்பட்ட இரானியக் கப்பலின் பெயரை ஹெக்செத் குறிப்பிடவில்லை. முன்னதாக, 'ஐ.ஆர்.ஐ.எஸ் தேனா' இந்தியப் பெருங்கடலில் மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த மொத்தம் 180 பேரில் சுமார் 140 பேர் காணாமல் போயுள்ளதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்திருந்தது. இந்தியப் பெருங்கடலில் மூழ்கிய இரானியக் கப்பலில் இருந்த 80 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகோந்தா பிபிசி சிங்களாவிடம் தெரிவித்தார். "இந்தச் சம்பவம் எங்களது கடல் எல்லைக்கு வெளியே நடந்தது. ஆனால் எங்களது தேடுதல் மற்றும் மீட்பு மண்டலத்திற்குள் நடந்தது. எனவே எங்களது சர்வதேச கடமைகளின்படி நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டியிருந்தது," என்று இலங்கை கடற்படை செய்தித் தொடர்பாளர் புத்திக சம்பத் பிபிசி செய்தியாளர் யோகிதா லிமாயிடம் தெரிவித்தார். "தண்ணீரில் மிதந்து கொண்டிருந்தவர்களை மீட்டோம். பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் இரானியக் கப்பலைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது," என்றார் அவர். செய்தித் தொடர்பாளரின் கூற்றுப்படி, கப்பலின் ஆவணங்களில் சுமார் 180 பேர் இருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது, இருப்பினும் காணாமல் போனவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரான் போர்க்கப்பலை அமெரிக்கா மூழ்கடித்த பின் மோதி அரசு மீது கேள்வி எழுவது ஏன்?- வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு
வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு Published By: Digital Desk 3 05 Mar, 2026 | 05:07 PM வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல இன்று வியாழக்கிழமை (05) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். நாடளாவிய ரீதியில் போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் மற்றும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களை ஒடுக்குதல் ஆகிய பணிகளுக்காக விசேட அதிரடிப்படையுடன் இணைந்து செயற்படும் இந்த விசேட பிரிவுக்கு அவர் தலைமை தாங்கவுள்ளார். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளராக உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஒலுகல கடமையேற்பு- "மாற்றத்தக்க தாக்கத்திற்கான ஒருங்கிணைந்த நரம்பியல்" - இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19 வது வருடாந்த மாநாடு
"இலங்கை மருத்துவத் துறையுடனான உறவு என்றும் நிலைத்திருக்கும்" - பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத் தலைவர் 05 Mar, 2026 | 01:43 PM அபிலாஷனி லெட்சுமன் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் 19வது வருடாந்த மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றிய பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ABN) தலைவர் பேராசிரியர் நீல் ராபர்ட்சன், இலங்கைக்கும் தனக்குமான நீண்டகாலத் தனிப்பட்ட பிணைப்பைப் பற்றி மிகவும் நெகிழ்ச்சியுடன் உரையாற்றினார். இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்தின் (ASN) 19வது வருடாந்த மாநாடு, கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் கடந்த வெள்ளிக்கிழமை (27ஆம் திகதி) இடம்பெற்றது. இதன்போதே இதனை தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 80களின் முற்பகுதியில் தனது மருத்துவப் படிப்பின் இறுதியாண்டில் ஒரு மாணவனாக கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற காலத்தை அவர் நினைவுகூறவேண்டும். "கொழும்பிலிருந்து கண்டிக்குச் செல்லும் புகையிரதத்தின் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு பயணம் செய்தது, கண்டி ஏரிக்கரையில் தங்கியிருந்த போது வாரந்தோறும் வளர்ப்பு யானை ஒன்று வீட்டிற்கு வந்த நினைவுகள் மற்றும் பேராதனை தாவரவியல் பூங்காவில் கழித்த மதிய நேரங்கள் என இலங்கை எனக்கு என்றும் மறக்க முடியாத ஒரு நாடு". இலங்கையின் நட்புணர்வு, ஆர்வம் மற்றும் கற்கும் திறன் ஆகியவை ஒரு இளைஞனாக தன் மீது நீங்காத தாக்கத்தை ஏற்படுத்தியது. பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கும் இலங்கை நரம்பியல் நிபுணர்கள் சங்கத்திற்கும் இடையில் கல்வி மற்றும் மருத்துவ ரீதியான நீண்டகால ஒத்துழைப்பு காணப்படுகின்றது. கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக பிரிட்டிஷ் மருத்துவக் குழுவினர் இந்த வருடாந்த மாநாட்டில் கலந்துகொண்டு அனுபவங்களைப் பகிர்ந்து வருவதாகவும், 2017 ஆம் ஆண்டுக்குப் பிறகு தாம் இரண்டாவது முறையாக இலங்கைக்கு வருகை தந்துள்ளேன். உலக அரங்கில் இலங்கை நரம்பியல் துறையின் அண்மைக்கால வளர்ச்சி வியக்கத்தக்கது . ஆராய்ச்சி, சமூக சேவை மற்றும் கல்வி ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான மேலதிக ஒத்துழைப்புகள் குறித்து எதிர்காலத்தில் விரிவாகக் கலந்துரையாடப்படும். பிரித்தானியாவின் கடும் குளிரான காலநிலையிலிருந்து தப்பி, இலங்கையின் அன்பான வரவேற்பிலும் இதமான காலநிலையிலும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வது தமக்கும் ஏனைய பிரிட்டிஷ் பிரதிநிதிகளுக்கும் மகிழ்ச்சியளிப்பதாக மேலும் தெரிவித்தார். "இலங்கை மருத்துவத் துறையுடனான உறவு என்றும் நிலைத்திருக்கும்" - பிரிட்டிஷ் நரம்பியல் நிபுணர்கள் சங்கத் தலைவர் - ஈரானிய உயர் தலைவர் ஆயத்துல்லா அலி காமேனி பலி : ஈரானிய அரச தொலைக்காட்சி உறுதி செய்தது
Important Information
By using this site, you agree to our Terms of Use.