All Activity
- Past hour
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்களது போராட்டத்திற்கு எதிராக ஈரான் செயற்பட்டது, அதனால் அது அழிய வேண்டும் என்று நினைப்பது எந்த வகையிலும் பொருட்படுத்தக்க ஒரு நிலைப்பாடு அல்ல. ஈழத் தமிழ் மக்களுக்கும், அவர்களது போராட்டத்திற்கும் எதிராக பலமான, பலமில்லாத நாடுகள் என்று ஏராளமானவை செயற்பட்டன, அத்துடன் இலங்கை அரசுக்கும் அந்த நாடுகள் உதவிகள் செய்தன. இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, பாகிஸ்தான், மத்திய கிழக்கு நாடுகள், மேற்கு ஐரோப்பிய நாடுகள், கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று எத்தனை, எத்தனை. இஸ்லாமியர் என்ற அடையாளத்துக்காக ஒரு தொகுதி மக்கள் மேல் காட்டப்படும் வெறுப்பும் பூமராங் போன்றதே. எங்களை எங்கள் அடையாளத்துக்காக வெறுத்து ஒதுக்கும் நிலை இருந்தது. அது இன்றும் கூட இலைமறை காயாக அங்கங்கே இருக்கலாம். அதிபர் ட்ரம்ப் அவரசரப்பட்டு எடுக்கும் முடிவுகள், நடவடிக்கைகள் போன்றவற்றுக்கும், சாதாரண தனிநபர் ஒருவர் காட்டும் இந்த வகையான வெறுப்புகளுக்கும் இடையே, அவருக்கு அதிகாரமும் பலமும் இருக்கின்றது, சாதாரண மனிதனுக்கு அவை இல்லை என்பதை விட வேறு ஏதாவது வித்தியாசம் இருக்கின்றதா.......... ஈரான் ஆட்சியாளர்கள் போன்ற அடிப்படைவாதிகள், ரஷ்யாவின் அதிபர், வட கொரியாவின் அதிபர் போன்ற சார்வாதிகாரிகள், மாஃபியா அரசாங்கம் நடத்தும் தலைவர்கள் போன்றவர்கள் அகற்றப்பட வேண்டும் என்பதில் எனக்கும் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அடுத்த கட்டம் என்னவென்ற ஓரளவேனும் உறுதியான திட்டங்கள் இல்லாத நடவடிக்கைகளால் பயன்களை விட அதிக பாதிப்புகள் உண்டாகின்ற என்பதே வரலாறு. மிக முக்கியாக அடிப்படை உரிமைகள் இன்றி அடக்குமுறைக்குள் வாழும் அந்த மக்கள் மீண்டும் மீண்டும் அதை விட சிக்கலான நிலைக்குள்ளேயே தள்ளப்படுகின்றார்கள். சமீப காலங்களில் ஈரான் எந்த விதத்திலும் ஒரு பலமான நாடு அல்ல என்றே மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கப்படுகின்றது. இயற்கை ஒரு பக்கம், அமெரிக்கா இன்னொரு பக்கம் ஈரானை வலுவிழக்கச் செய்துவிட்டன. எங்களின் யூ டியூப்பர்களும், கருத்தாளர்களும் அமெரிக்கா வலுவிழந்து விட்டது என்றும், ஈரான் ரஷ்யா போன்றன வலுவாக உள்ளன என்றும் மீண்டும் மீண்டும் சொல்வதன் அல்லது எழுதுவதன் பிரதான காரணம் அவர்களின் அமெரிக்க வெறுப்பே. நீண்ட ஒரு தொடராக எவரின் கருத்துகளையும் வாசித்து, கிரகித்து, நினைவில் வைத்திருந்தால் இதை இலகுவாகப் புரிந்து கொள்ளலாம். அமெரிக்கா நேரடியான இராணுவ தாக்குதல்கள் அன்றி, ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்துக்கு இன்னும் பலமான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான அழுத்தங்களை பிரயோகித்து இருக்கலாம் என்றே தோன்றுகின்றது. ஈரானின் சுப்ரீம் லீடர் மற்றும் முக்கியஸ்தர்கள் இறந்தது போனது பற்றி என் மனதில் எந்த உணர்வுமே இல்லை. ஆனால் கடந்த வருடம் மனநோயாளி என்று ஈரான் அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்பட்ட அந்தப் பெண் உயிருடன் இருக்கின்றாரா, இப்போதாவது வெளியில் வருவாரா, அவருடைய மண்ணில் அவர் சுதந்திரமாக நடமாடுவாரா என்ற நினைப்பே ஈரான் என்னும் பெயரைக் கேட்டவுடன் மனதில் வருகின்றது.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எதுக்கும் நல்ல நியாபக சக்தி வைத்தியரை நாடவும்😂. ஆறுமாதமும் இராது. நானும் இன்னும் சில உறவுகளும், இதை வன்மையாக கண்டித்து எழுதினோம். உங்களுக்கு நல்ல நிர்வாக குட்டும் கிடைத்தது. ஒன்றில் திமுகவை, அதிமுகவை ஆதரிக்க வேண்டும். அல்லது சீமான், விஜை என புதிதாக வருபவர் நல்லது செய்வார்களா என பார்க்க வேண்டும். அவர்களும் வேலைக்கு ஆகாது என்றால் அடுத்து யார் வருகிறார்கள் என பார்க்க வேண்டும். போலிகளை தொடர்ந்தும் நம்பி, நமபவைத்து ஏமாற நான் என்ன தமிழ் சினிமாவில் காட்டும் பெண்டாட்டியா😂? அதெல்லாம் மிசின் வச்சுதான் புடுங்குவோம்😂
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே.....👍 எல்லாம் சினிமா அரசியலாக போகின்றது. இதை இப்படியே விட்டால் அடுத்தது பிக்பாஸ் அரசியல்தான் தமிழ்நாட்டிற்கு வரும் போல் தெரிகின்றது. சினிமா அரசியலையும் பிக்பாஸ் அரசியலையும் உள் வாங்க பெரும் அரசியல் கட்டமைப்பு தமிழ்நாட்டில் உள்ளது என்பது வேறு விடயம். பொழுது போக்குகள் மக்கள் வாழ்வாதாரத்தையும்,மக்கள் பிரச்சனைகளையும் தீர்ப்பவர்களாக வருவது தமிழ்நாட்டிற்கான அவலத்தில் ஒன்று. தமிழ்நாட்டு பாமர மக்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். 😧
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இது 10வது T20 உலகக் கிண்ணம். பாகிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா, இம்மூவரும்தான் ஆறு தடவைகள் அரை இறுதிக்குப் போயிருக்கினம்.
- Yesterday
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இந்தியாவத் தெரிவு செய்து இருக்கமாட்டியல் என்று நினைக்கிறேன். உங்களின் கணிப்புப் படி, இந்தியா சூப்பர் 8க்கே வந்திருக்கப் படாது. 😁 வந்திட்டாங்கள். பாவம். விட்டுடுங்க. 😉
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
எங்கும் எதிலும் களை புடுங்க நினைக்கின்றீர்கள். நாளை நிலைமைகள் மாறலாம். மாறும். அல்லது மாற்றப்படும். எனவே குனிந்து, தொடர்ந்து புடுங்க நினைக்காதீர்கள். முதுகெலும்பு தாக்கு பிடிக்காது.🤣 ஏனென்றால் இந்த உலகு நீதி நியாயமற்ற உலகு👈. சந்தர்ப்ப சூழ்நிலைக்கேற்ப மாற்றமடைந்து கொண்டிருக்கின்றது. பலம் எங்கிருக்கின்றதோ அங்கேதான் நீதியும் நியாயங்களும் இருக்கும்.😎
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
நான் அவனைப்போல் இருந்தால் அவனுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம் என பல கேள்விகள் வரும். உக்ரேன் பிரச்சனைகளை இதற்குள்ளும் திணிக்காத வரைக்கும் சந்தோசம்.🙏 ஐ மீன் ஆக்கிரமிப்பு.😎
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
முன்னாள் விஜய் ஆதரவாளராக மாறாமல் இருந்தால் சரி. அவi ஆதரித்தேன் அவர் சரியில்லை இவரை ஆரித்தேன் இவர் சரியில்லை இப்படியே போகவேண்டியதுதான். தேரான் தெளிவும் தெளிந்தான் கண் ஐயுறவும் தீரா இடும்பைத்தரும்.
-
"நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் குறிப்பிட்ட அந்தச் சொல்லை நான் பாவித்தாக ஞாபகமில்லை.அந்த அளவுக்கு எழுதும் ஆள்நான் இல்லை. திராவிடியா ஊடகம் என்றே எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.சிலவேளை அந்தச் சொல்லை மென்பொருள் தானாக தெரிவுசெய்ததோ நான் அறியேன். அப்படி எழுதியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன் திராவிட விடியா அரசின் ஊடகங்களைக் குறிப்பிடவே அந்தச் சொல்லைப் பாவித்தேன் நீங்கள் தவறாகப் புரிந்து கொண்டு நீக்கியுள்ளீர்கள் என்றே நினைக்கிறேன். முடிந்தால் அந்தப்பதிவைச் சரிபார்க்கவும்.(திமுக தமது அரசை விடியல் அரசு என விளிப்பது அறிந்ததே).கட்சி சார்பான ஊடகங்களின் பதிவை நீக்குவதாகக் கூறும் நீங்கள் ஓரு குறிப்பிட்ட கட்சியை கடுமையாக எதிர்க்கும் ஊடகங்களில் வரும் பதிவை அனுமதிப்பது எப்படி நியாயமாகும். நான் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்தும் இதுவரை நான் நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டவனல்ல.இப்போது அண்மைக்காலமாக (2009 பின்)பல ஆரோக்கியமான கருத்தாளர்கள்(உதாரணம் நெடுக்காலபோவான்)இப்போது கருத்துக்களை எழுதுவதை குறைத்துக் கொண்டார்கள். இதற்கு மட்டுறுத்தினர்களின் தன்னிச்சையான முடிவுகளே காரணம்.மட்டிறுத்தினரின் மனநிலைக்கு ஏற்ப கருத்தாளர்கள் கருத்துக்களை எழுத முடியாது. மட்டுறுத்தினர்களின் சார்பு நிலையில் எழுதும் இடம் கருத்துக்களமாக இருக்க முடியாது. அது ஜால்ரா களமாகத்தான் இருக்கும்.
-
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
கிந்தியா அரையிறுதியில் தோற்கும் என்றால் எல்லோரையும் எனது தோள்களில் சுமப்பது சுகமே.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@Ahasthiyan முதல்வர் நாற்காலியை மயிரிழையில் கைப்பற்றியுள்ளார்!5 ஆம் இடத்துக்கு எப்படி வந்தேன் என்று என்னால் நம்ப முடியாமல் இருக்கிறது. அவுஸ்தான் கழுத்தறுத்து விட்டது.
-
ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
(பதில் என்றாலும், எல்லோருக்குமான பதிவு.) எந்தவித ஆய்வும் இல்லாமல் உணர்ச்சியின் அடிப்படையில் (முஸ்லிம்கள் பற்றி) அடைந்த முடிவை தெட்டம்தெளிவாக வெளிப்டுத்தியதற்கு நன்றி,, வெட்டிய குழியிலே விழுந்து இருப்பது தெரியாது. இந்த இரான் / சொறி சிங்கள வியாபாரம உறவு, பொருளாதார வசதிக்காக. இரான் / சொறி சிங்கள தேயிலை - எண்ணை வியாபார உறவை பின் இருந்து வசதிப்படுத்தியதே US என்பதை கூட அறியாதவர்களை என்னவென்று சொல்வது? US சொறிசிங்களத்துக்கு -இரான் வர்த்தகத்தில் பொருளாதார தடை உள்ளது / இல்லாதது என்ற தெளிவற்ற வலயத்தை (grey zone) கூட நீக்கியது. இந்த சொறிசிங்களத்துக்கு -இரான் வர்த்தக உறவில் எந்தவித தத்துவ புரிவோ அல்லது பரிதாபமோ அல்லது கரிசனையோ இல்லை. அந்த நேரத்தில் தேவையால் ஏற்பட்ட வர்த்தக உறவு - சொறிசிங்களடம் பணப் பற்றாக்குறை, எண்ணெய் தேவை, பெரும் பகுதி தேயிலைக்கு - எண்ணெய் பண்டமாற்றும் , மற்ற பகுதி பண வர்த்தகமும். அனால் , இஸ்ரேல் - சொறி சிங்களம் இன் வகிபாகம் பற்றி சொல்ல முடியுமா? ஏன் மற்ற பகுதிகளில் எல்லாம் துப்பாக்கி, ஷெல், குண்டு வீச்சு என்று பாவிக்க, தென் தமிழீத்தில் வெட்டுதல், கொத்துதல் பாவிகப்பட்டது? இதை ஆலோசனை, பயிற்சி என்று சொல்லி கொடுத்தது இஸ்ரேல். இது தான் இஸ்ரேல் - சொறி சிங்கள உறவின் இரகசியம். இஸ்ரேல் - சொறி சிங்கள உறவு தத்துவத்தின் (கிட்டத்தட்ட ஒரே தன்மையின்) பாற்றப்பட்டது, அந்த அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தத்துவ ஒரே தன்மை - விவிலியம், மகாவம்சத்தின் அடிப்படையில் - அந்தந்த வரலாற்றுக்கான காலத்தை, சில குறிப்பிட்ட வேறுபாடுகளை தவிர இவை ஒரே தன்மையானவை. தென்தமிழீழ கொலைகள் பற்றி ஒருவருக்கும் தெரியவில்லை என்று சொல்லி, என்ன தெரியும்கிராமம் கிராமமாக வெட்டி, கொத்தி கொலைகள் செய்யப்பாட்டத்துக்கு என்பபதைத் தவிர ? இப்படி (முஸ்லிம்களை பாவித்து) வெட்டி, கொலை செய்யுமாறு ஆலோசனை, பயிற்சி கொடுத்தது இஸ்ரேல். முதலில் stf க்கே பயிற்சி கொடுக்கப்பட்டது. இஸ்ரேல் எங்கிருந்த்து இந்த (வெட்டி, கொத்தி) அனுபவத்தை பெற்றது என்பதாவது தெரியுமா? இங்கே ஒருவர் சொல்லுவார் இஸ்ரேல் / யூதர் கெட்டித்தனமாக நிலத்தை பிடித்தனர் என்று. பல பதிவுகளில் சொல்லி உள்ளார் (ஒன்றில் அவர் அறியவில்லை, அல்லது அறிந்தும் சொல்ல விருப்பம் இல்லை, ஏனெனில் இஸ்ரேல் ன் தீவிர அபிமானி) இரு விடயங்கள் நடந்தது. பிரித்தானியர் 2 சட்டம் கொண்டுவந்தனர் Balfour declarationபற்றி சிந்திக்க தொடங்கம் போது. ஒன்று, ஒரே வேலைக்கு, யூதருக்கு மிக கூடிய சம்பளம் (ஏனெனில் யூதரின் வாழ்கைதரம் கூட என்ற (புரட்டு) விளக்கத்தை சொல்லி), அதே வேலைக்கு பலஸ்தீரியருக்கு மிக குறைந்த சம்பளம். இது பலஸீனியரை செயற்கை வறுமைக்குள் தள்ள, யூதரின் பணம் / செல்வதை உயர்த்தியது.பலஸ்தீனினியர் சொத்த்துக்களை விற்க தூண்டியது, பகுதி பலஸ்தீனியர் அறாவிலையில் காணிகளை / சொத்துக்களை யூதருக்கு விற்றனர், ஏனெனில் யூதருக்கு மட்டுமே விற்கமுடியும். இன்னொரு சட்டம் - எல்லோரும் கத்தி கொண்டு செல்வது / திரிவது அங்கெ முதலில் அனுமதி இருந்தது. ஆங்கிலேயர் / பிரித்தானியர் பலஸ்தீனியர் கத்தி கொண்டு திரிவது / செல்வதை தடை செய்தனர். இதை பாவித்து, யூதர் மாறும் சியோனிஸ்ட் கும்பல்கள் இரவோடு இரவாக (விற்காத) பாலஸ்தீனிய கிராமங்களில் புகுந்து வெட்டியும், கொத்தியும் கொலை செய்தனர். (அதாவது பிரித்தானியர் தெரிந்தே கொலைகளை, கிராமங்களின் அழிவை வசதிப்படுத்தியது) (இந்த யூத / zionist குழுக்களே மொசாட்டின் தொடக்கம்) இதில் இருந்த வந்த அனுபவத்தையே, இஸ்ரேல் சொறி சிங்களத்துக்கு சொல்லி கொடுத்தது. (ஈழத்தமிழர் சிங்களத்தால் இனப்படுகொலை செய்யப்பட்டாலே சமாதானம் உருவாகும் என்பதே இஸ்ரேல் வெளியே சொல்லாக நிலைப்பாடு. இஹை இஸ்ரேல் இந்த coin / வரலாறு ஆய்வாளர் பேட்டியில் Tamilnet இல் யுத்தம் முடிந்த கால பகுதியில் சொல்லி இருந்தார். இப்போதும் Tamilnet இல் இருக்கிறதோ தெரியாது. ) மறுவளமாக, பல்தெனியர் இப்படி யூத/ zionist கிராமங்களுக்கு கும்பலாகவோ, தனியாகவோ சென்று தாக்க முடியாது, சட்டத்தின் அடிப்படையில் போலீஸ் / படை அதிகாரம் பாவிக்கப்பட்டு முடக்கப்பட்டது.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
ஈரான் உள்நாட்டில் பலவீனமான நிலையில் உள்ளதாக ஊடகங்கள் கூறப்பட்டுள்ள நிலையில் இந்த யுத்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, இது வரை ஈரான் NPT ஒப்பந்தத்தினை மீறாத நிலையில் ஈரான் அணுவாயுதம் தயாரிப்பதனான கருத்திற்கு இதுவரையும் எந்தவித ஆதார பூர்வமான விடய்ங்களையும் ஈரானிற்கெதிராக முன்வைக்க முடியவில்லை. பேச்சுவார்த்தையூடாக அனைத்துலக அணுசக்தி ஆனையமூடாக முழுமையான தங்குதடையற்ற பரிசோதனைகளை நடத்த முன்வரவேண்டும், அதன் மூலம் தேவையற்ற ஒரு இரத்தக்களரியினை தடுக்கலாம். பல மத்திய கிழக்கு நடவடிக்கைகள் (ஈராக், லிபியா, ஆப்கன், சிரியா) அங்கு ஒரு நல்ல மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கு பதிலாக புதிய புதிய தலைவலிகளையே ஏற்படுத்தியுள்ள வரலாறாக உள்ள நிலையில் இன்னுமொரு அதிகார வெற்றிடம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இதன் பின்விளைவுகள் இனிவரும் காலங்களில் உணரப்படலாம். பொதுவாக கணிகப்படும் சாதக பாதக கணிப்புகளிற்கப்பால் உள்நாட்டு அரசியல் இலாபங்கள் மேலோங்கும் போது அவை சில தனிமனித நலனிற்காக உலக பாதிப்புகளிற்கு ஆடிப்படையாகிவிடுகிறது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓம் 1983 ஜன் 1 க்கு முதல் இதை Citizen of UK and Colonies என்பார்கள். உதாரணமாக மலேயா, கென்யா, அவுஸ் நாட்டில் பிறந்தோர் எல்லாரும்CUKC ஸ் நேரடியாகவே. அதேபோல் 1948 இன் பின் குடியரசாகி விட்ட சகல கொமன்வெல்த் நாட்டு பிரசைகளுக்கும் (இந்தியா, இலங்கை) 01-01-1983 வரை பிரித்தானியாவில் வந்து எந்த அனுமதியும் இன்றி வாழ முடிந்தது. அனைவரும் British Subjects. ஆனால் 1960, 70 களில் வந்த வவுச்சர் நடைமுறை இந்த உரிமையை மழுங்கடித்தது. வெள்ளை நிறத்தோருக்கு சார்பாக மாற்றியது. இதை விட பகிடி….1948 க்கு முன் பிரித்தானியா சாம்ராஜ்யத்தின் பிரசைகள் அனைவரும் அது இலண்டனில் பிறந்த வெள்ளை எண்டாலும், இத்தாவிலில் பிறந்த மண்நிறம் எண்டாலும் ஒரே தகுதிதான் - British Subject.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனது தந்தையாரின் தாயாரிற்கு இலங்கை குடியுரிமை இருந்தது, அவரது தந்தைக்கு இங்கிலாந்து குடியுரிமை இருந்தது, எனது தந்தைக்கு இலங்கை குடியுரிமை நீண்டகாலமாக கிடைக்கவில்லை அதனால் அரச வேலைகளை இலங்கையில் பெறமுடியாது என கேள்விப்பட்ட நினைவுள்ளது.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
குவைத் 3 அமெரிக்க போர் விமானங்களை தவறுதலாக? சுட்டு வீழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது போரிற்கான ஏற்பாடு 4 வாரங்களிற்கானது என கூறப்படுகிறது (செய்திகளில் கூரப்படுபவை இந்த போர் 4 வாரங்களுக்கு மேலாகவும் நீடிக்கலாம்).- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
ஓ… அப்படியா …. ஒரே ஆட்களை பற்றித்தான் கதைகிறமோ?- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
எனது தந்தையார் பிறந்தது பர்மாவிலே, இது போன்ற கதையினை கேள்விப்பட்டுள்ளேன்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சங்கீதா போட்ட வெடியிலை... திரிசாவுக்கு, லக் அடித்த மாதிரி... நமக்கும்... நல்ல காலம் பிறக்கும் தானே. 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
அண்ணை மார்ச் மாதம் சனி மாற்றம் கொஞ்சம் அப்பிடி இப்பிடிதான் போல? தேவையில்லாத சச்சரவில் மாட்டி அவஸ்தைபடுவீர்கள் எண்டு வாசிச்ச நியாபகம் 😂- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
ஏன் என்றால் நீங்கள் இணைப்பது முழுக்க யூடியூப் குப்பை, அல்லது முகபுத்தகத்தில் வெட்டி ஒட்டுவது. அதுவும் பச்சை பொய்களை அல்லது பிரச்சார வீடியோக்களை. ஒழுங்கா இரெண்டு பந்தி சொந்தமா கருத்து எழுத பஞ்சி - இதுகுள்ள நிர்வாகம் மேல முறைப்பாடு வேற 😂 அவரால் ஓடுதோ இல்லையோ… கிரிகெட் திரிக்கு மட்டும் வந்துவிட்டு போவபர்களால் ஓடவில்லை என்பது நிசம்😂. முன்பே எழுதியுள்ளேன் நீங்களும், பேர்த்தில் இருந்து வருபவரும் இப்ப ஒரு 5 வருசமா யாழுக்கு வாறதே நிர்வாகத்தை குறை சொல்லத்தான்😂.- சிரிக்கலாம் வாங்க
இன்று எனது நண்பன் செய்த வேலை. 😂- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
இது எகிப்தின் லக்சோர் பிரமிட்டு கல்லறைகளில் சிகை கொற்றன் எழுதிய காலத்து தமிழ் என நினைக்கிறேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சொன்னான் எல்லே எல்லாமும் 2,3ம் தடவையில்தான் சரி வரும். டிசைன் அப்படி😂 - ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
Important Information
By using this site, you agree to our Terms of Use.