Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. புங்குடுதீவில் கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய நபர் 6 மதத்திற்கு பின்னர் கைது! யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் நபர் ஒருவரை வெட்டி கொலை செய்ததுடன் , நால்வருக்கு கடும் காயங்களை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் சந்தேகநபர்களில் ஒருவர் சுமார் 06 மாத கால பகுதியின் பின்னர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். புங்குடுதீவு பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ஆம் திகதி நடைபெற்ற கத்தி குத்து தாக்குதலில் புங்குடுதீவு முதலாம் வட்டாரத்தை சேர்ந்த 40 வயதுடைய அற்புதராசா அகிலன் என்பவர் படுகொலை செய்யப்பட்டார். தாக்குதல் சம்பவத்தினை தடுக்க முற்பட்ட இரண்டு பெண்கள் உள்ளிட்ட நால்வர் மீதும் தாக்குதலாளிகள் தாக்குதலை மேற்கொண்டதில் அவர்களும் படுகாயமடைந்திருந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிசார் சம்பவத்துடன் தொடர்புடைய நால்வரை அடையாளம் கண்டு , அவர்களை கைது செய்வதற்கான நடவாடிக்கைகளை முன்னெடுத்த வேளை நால்வரும் தலைமறைவாகியிருந்தனர். தலைமறைவானவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளில் பொலிஸார் ஈடுபட்ட வேளை, சந்தேகநபர்களில் ஒருவர் முல்லைத்தீவு காட்டு பகுதியை அண்மித்த பகுதியில் நடமாடுவதாக அறிந்து , அங்கு விரைந்த பொலிஸார் கடந்த செப்டெம்பர் மாதம் குறித்த நபரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் ஏனைய மூவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வந்த நிலையில் ,06 மாத கால பகுதிக்கு பின்னர் மற்றுமொரு சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அதேவேளை ஏனைய இருவரில் ஒருவர் வெளிநாடொன்றுக்கு தப்பி சென்றுள்ளதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாகவும் , மற்றைய நபரை கைது செய்வதற்கு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2026/1465786
  3. அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்புக்கு நீதி கோரி யாழில் போராட்டம்! அல்லைப்பிட்டியில் பொலிசாரால் சுட்டுக்கொ*லை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதி கோரி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. சிவில் அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்று(22) காலை 10 மணியளவில் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திற்கு முன்பாக இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அல்லைப்பிட்டி பகுதியில் ஹயஸ்வாகனத்தில் பயணித்த வேளை பொலிசாரால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட அல்வினோ அருள்பயாஸ் (வயது 17) இவரின் குடும்பத்தாருக்கு பொலிசாரால் தொடர்ச்சியான அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும், பொலிஸ் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல் காணப்படுவதாகவும் பொலிஸார் தம்மை கண்காணித்து வருகின்றதாகவும் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர். இதுவரை சுட்டுக் கொலை செய்த பொலிஸார் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர். https://athavannews.com/2026/1465793
  4. உத்தரபிரதேசத்தில் சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய தம்பதியருக்கு மரண தண்டனை! உத்தர பிரதேசத்தில், 10 ஆண்டுகளாக, 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதை இணையதளத்தில் பதிவேற்றிய தம்பதிக்கு, ‘போக்சோ’ நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் நீர்ப்பாசன துறையில், இளநிலை பொறியாளராக பணிபுரிந்தவர் ராம்பவன் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கே இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இருவரும் 2010 – 20 வரை சித்ரகூட் மற்றும் பாண்டா பகுதியைச் சேர்ந்த சிறுவர்களை, பாலியல் வன்கொடுமை செய்ததுடன், அதை வீடியோ எடுத்து சட்ட விரோத இணையதளங்களுக்கு விற்றுள்ளனர். சிறுவர் ஆபாச வீடியோ தொடர்பாக, உத்தர பிரதேச சைபர் கிரைம் பொலிஸார் நடத்திய சோதனையில், குறித்த தம்பதியின் கொடூர செயல் வெளிச்சத்துக்கு வந்தது. உத்தர பிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 3 – 16 வயது வரையிலான சிறுவர்களை, இவர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. ஆன்லைன் கேம் விளையாட வைப்பது, சாக்லேட், இனிப்புகள் உள்ளிட்ட பரிசுப் பொருட்களை தருவது என, பலவிதமாக ஆசைக்காட்டி சிறுவர்களை இருவரும் இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை சந்தேகநபர்கள் சிறுவர்களின் பாலியல் வீடியோக்கள் வெளிநாட்டுக்கும் விற்கப்பட்டதும் தெரிய வந்தது. இவர்களால் பாதிப்படைந்த சிறுவர்கள் இன்றும் அவதிப்பட்டு வருகின்றனர். இது குறித்து, 2020ல் வழக்குப்பதிவு செய்த குற்றப்புலனாய்வு துறையினர் குறித்த தம்பதியின் வீட்டில் சோதனை நடத்தியது. இதில், 8 லட்சம் ரூபாய், 12 மொபைல் போன்கள், இரண்டு மடிக்கணினிகள் , ஒரு ஹார்ட் டிஸ்க், ஆறு பென் டிரைவ்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில் இருவர் மீதும் போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பாண்டா போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. ஆறு ஆண்டுகளாக நடந்த வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் உட்பட, 74 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டன. இதையடுத்து குறித்த தம்பதி செய்த குற்றங்கள் அரிதிலும் அரிதானவை எனவும் மிகவும் ஒழுக்கக்கேடானது எனவும் இதுபோன்ற குற்றங்கள், குழந்தைகளின் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்லாமல், சமூகத்தின் தார்மீக அடித்தளத்தையும் உலுக்குகின்றன எனவும் தெரிவித்து குற்றங்கள் உறுதி செய்யப்பட்டதால், போக்சோ சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, அவர்கள் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட பணம் பாதிக்கப்பட்டவர்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் எனவும் மத்திய – மாநில அரசுகள் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு, தலா, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார். https://athavannews.com/2026/1465778
  5. விழியை பறித்த கடவுள் வழியை கொடுக்க மறக்கவில்லை; யாழ்.பல்கலை பட்டமளிப்பில் நெகிழ்ச்சி! Published By: Digital Desk 3 22 Feb, 2026 | 09:25 AM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவானது தொடர்ச்சியாக மூன்று தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த பட்டமளிப்பு விழாவில் சுன்னாகம் வாழ்வகத்தை சேர்ந்த விழிப்புலனற்ற மாணவர்களான துரைராசா அருண்குமார், சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுக்கொண்டனர். பார்வை இழந்தும், கல்வியில் சாதிக்த வேண்டும் என்ற அவாவில் கல்வி பயின்று, இவ்வாறு பட்டம் பெற்ற பட்டதாரிகளை பலரும் பாராட்டி வருகின்றனர். https://www.virakesari.lk/article/239257
  6. இந்தியாவில் ரயில்களில் 'பயணிக்கும்' ராஜநாகங்கள் - புதிய ஆபத்து பற்றி எச்சரிக்கும் விஞ்ஞானிகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். கட்டுரை தகவல் ஜெய் சுக்லா பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 6 நிமிடங்கள் இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடர்ந்த காடுகள் ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடமாக உள்ளன. ராஜநாகம் பொதுவாகக் காடுகளில் வாழ்கிறது, ஏனெனில் அங்கு அதற்குத் தேவையான இரை, நீர் மற்றும் பாதுகாப்பான இடம் கிடைக்கிறது. காடுகளில் வாழும் ராஜநாகங்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சூரத்தைச் சேர்ந்த விஞ்ஞானியும், ஊர்வன ஆராய்ச்சியாளருமான திகான்ஷ் பார்மர் ஒரு தனித்துவமான ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளார். இவரது ஆய்வின் மூலம் இந்தியாவில் ராஜநாகங்கள் ரயில்களில் பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பது தெரியவந்துள்ளது. காடுகளில் வாழும் ராஜநாகங்கள் எப்படி ரயில் தண்டவாளங்கள் அல்லது ரயில்களை வந்தடைகின்றன? கோவா செல்லும் பல ரயில் பாதைகள் அடர்ந்த காடுகளின் வழியாகச் செல்கின்றன. ராஜநாகங்கள் சில நேரங்களில் உணவு அல்லது தங்குமிடம் தேடி தண்டவாளங்கள் அல்லது ரயில்களுக்கு அருகில் வருவதாக விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இதன் மூலம், அவை இயற்கையிலிருந்து வெகு தொலைவில் உள்ள பகுதிகளுக்குச் சென்றடைகின்றன, அங்கு அவற்றுக்கு உணவோ அல்லது பாதுகாப்பான தங்குமிடமோ இருப்பதில்லை. இவரது ஆராய்ச்சி, அமெரிக்காவின் சூழலியல் மற்றும் அதன் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை தலைப்புகள் குறித்த ஆராய்ச்சிகளை வெளியிடும் புகழ்பெற்ற 'பயோட்ரோபிகா' இதழிலும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, உலகின் மிக நீளமான விஷப்பாம்பான ராஜநாகம் (ஓபியோபாகஸ் காலிங்கா), தவறுதலாக நீண்ட தூர ரயில்களில் சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த இதழில் ஆராய்ச்சி வெளியிடப்படுவதற்கான வாய்ப்பு விகிதம் 36 சதவீதம் மட்டுமே என்பதால், அதில் ஆராய்ச்சி வெளியிடப்படுவது விஞ்ஞானிகளுக்கு முக்கியமான ஒன்று. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது புனித தீவில் கிடைத்த கூழாங்கல்லில் பதிந்திருந்த 'சிரிக்கும்' உருவம் "யார் ஹீரோ" மீண்டும் இணையும் ரஜினிகாந்த் , கமல் ஹாசன் - இருவரும் சேர்ந்து நடித்த படங்களின் பட்டியல் பாகிஸ்தானில் இந்திய தேசிய கீதம் பாடிய 4 மாணவர்களுக்கு என்ன நேர்ந்தது? ராஜேந்திர சோழன் கடல் கடந்து தென்கிழக்கு ஆசிய நாடுகள் மீது படையெடுத்தது ஏன்? என்ன கிடைத்தது? End of அதிகம் படிக்கப்பட்டது ராஜநாகத்தின் பரவல் மாறிவரும் விதம், அந்தப் பாம்பு இனத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. திகான்ஷ் பார்மர், சர்வதேச விஞ்ஞானிகள் குழுவுடன் இணைந்து கோவாவில் 47 ராஜநாகங்கள் கண்டறியப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். இதற்காக, அவர்கள் கோவாவின் விலங்குகள் மீட்புப் படையின் உதவியையும் பெற்றனர். இந்த மீட்புப் படை பல ஆண்டுகளாக பாம்புகள் உள்ளிட்ட வனவிலங்குகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. கோவாவில் 5 ரயில் நிலையங்களுக்கு அருகில் ராஜநாகம் கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,Sourabh Yadav படக்குறிப்பு,கோவாவின் சந்தோர் ரயில் நிலையம் அருகே கண்டெடுக்கப்பட்ட ராஜ நாகத்தை கோவா விலங்கு மீட்புப் படை உறுப்பினர் ரிங்கு காப்பாற்றுகிறார். கோவாவின் விலங்குகள் மீட்புப் படையினரால் ராஜநாகங்கள் மீட்கப்பட்ட 47 இடங்களை திகான்ஷ் பார்மர் ஆய்வு செய்தார். இதில் 18 இடங்கள் வட கோவாவிலும், 29 இடங்கள் தெற்கு கோவாவிலும் இருந்தன. தனது ஆய்வு குறித்து பிபிசி குஜராத்தியிடம் திகான்ஷ் பர்மர் கூறுகையில், "ராஜநாகம் இந்தியாவின் தேசிய ஊர்வன இனமாக அறியப்படுகிறது. இந்தியா முழுவதும் காணப்படும் ராஜநாகங்களின் உடலில் உள்ள வரிகள் மாறுபட்டிருந்தாலும், அது ஒரே இனமாகவே கருதப்பட்டது. தனி இனமாகப் பார்க்கப்படவில்லை. அதில் வேறு இனங்களும் இருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் சந்தேகித்தனர். எனவே, குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலையில் காணப்படும் இந்த நாகத்தை 'ஓபியோபேகஸ் காலிங்கா' என்று அவர்கள் அங்கீகரித்தனர். இந்தப் பாம்பு பாதுகாக்கப்பட்ட பிரிவின் கீழ் வருகிறது"என்றார். இந்தப் பாம்பு ஒருவரைக் கடித்தால், அவர் தண்ணீர் கூட கேட்க முடியாது, உடனடியாக இறந்துவிடுவார் என்று அவர்கள் கூறுகிறார்கள். இந்த ஆய்வில், அந்த இடங்கள் அனைத்தும் ரயில் நிலையத்திற்கு அருகிலோ அல்லது ரயில் பாதைக்கு அருகிலோ இருந்தது கண்டறியப்பட்டது. இதுகுறித்து அவர் கூறுகையில், "கோவா விலங்குகள் மீட்புப் படை 2002 முதல் 2024 வரை மொத்தம் 120 ராஜநாகங்களை மீட்டது. அந்த இடங்களை நாங்கள் ஆய்வு செய்தபோது, அவற்றில் 47 இடங்கள் ரயில்வேயை பகுதியைச் சுற்றியே இருந்தன. ஒரு பாம்பு கோவாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்தின் தண்டவாளத்திற்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது" என்றார். பட மூலாதாரம்,Mehul Thakur படக்குறிப்பு,ராஜநாகத்தின் பரவல் மாறிவரும் விதம், அந்தப் பாம்பு இனத்தின் பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்பிற்கு ஒரு சவாலாக இருப்பதாக இந்த ஆய்வு தெரிவிக்கிறது. கோவா விலங்குகள் மீட்புப் படையின் தலைவர் அம்ரித் சிங் பிபிசி குஜராத்திடம் கூறுகையில், "தெற்கு கோவாவில் உள்ள 'சந்தோர்' என்ற ரயில் நிலையத்தில் ராஜநாகம் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. நாங்கள் அதை மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தோம். அது காயமடைந்த நிலையில் இருந்தது. பொதுவாக இதுபோன்ற பாம்புகள் காணப்படாத இடம் அது" என்றார். "சந்தோர் ரயில் நிலையத்தில் ராஜநாகம் கண்டறியப்பட்ட விவகாரம், இத்தகைய சூழலியல் ரீதியாகத் தொடர்பில்லாத இடத்திற்கு இந்தப் பாம்பு எப்படி வந்திருக்கக் கூடும் என்பதைத் தீவிரமாக ஆராய எங்களைத் தூண்டியது" என்று அந்த ஆராய்ச்சி விவரங்கள் குறித்து அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பயோட்ரோபிகா' இதழில் வெளியாகியுள்ளது. இந்த வகை ராஜநாகங்கள் கர்நாடகாவின் காசில் ராக் மற்றும் தண்டேலி புலிகள் காப்பகத்தில் காணப்படுகின்றன. இந்த ரயில்கள் கோவாவிற்குள் நுழையும் போது, பாம்புகள் இந்தப் பகுதியில் தங்கிவிடுகின்றன. செப்டம்பர் 2021-இல், கோவா விலங்குகள் மீட்புப் படை வாஸ்கோடகாமா அருகே ஒரு ராஜநாகத்தை மீட்டது. அது ரயில் நிலையத்திலிருந்து வெறும் 200 மீட்டர் தொலைவில் கண்டெடுக்கப்பட்டது. லோலிம், பாலோலெம் மற்றும் பெட்னே ரயில் நிலையங்களைச் சுற்றியும் மற்ற மூன்று ராஜநாகங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த ஐந்து இடங்களுமே ராஜநாகத்தின் இயற்கையான வாழ்விடங்கள் அல்ல. இதுவே பாம்பிற்கும் ரயில்வேக்கும் இடையே உள்ள இந்த 'வியத்தகு தொடர்பை' விஞ்ஞானிகள் கவனிக்கக் காரணமாக அமைந்தது என்கிறார் திகான்ஷ் பார்மர். 'இந்த ராஜ நாகம் ரயிலில் பயணித்திருக்க வேண்டும்' பட மூலாதாரம்,AMRUT SINGH படக்குறிப்பு,கோவா விலங்கு மீட்புப் படையைச் சேர்ந்த அம்ரித் சிங், ராஜ நாகத்தை மீட்கிறார். இந்த ஆராய்ச்சியின் முதன்மை ஆராய்ச்சியாளரும் விஞ்ஞானியுமான திகான்ஷ் பார்மர், பிபிசி குஜராத்திடம் பேசுகையில், "அந்தப் பாம்பு எப்படி ரயில் நிலையத்திற்கு வந்தது என்பது குறித்து நாங்கள் ஆய்வு செய்தோம். கர்நாடகாவிலிருந்து கோவாவிற்குச் செல்லும் ரயில்கள் பெரும்பாலும் கர்நாடகாவின் காசில் ராக் பகுதியிலிருந்தே வருகின்றன. இந்தப் பகுதிகள் அடர்ந்த காடுகளைக் கொண்டவை. அங்கு ராஜநாகங்கள் அதிகளவில் காணப்படுகின்றன." என்றார். "ஆராய்ச்சியின் அடிப்படையில், எங்கள் குழு ஒரு புதிய 'ரயில்வே பரவல் கருதுகோளை' முன்மொழிந்துள்ளது. இதன்படி, காடுகள் நிறைந்த மலைப்பகுதி ரயில் நிலையங்களில் எலிகள் அல்லது பிற உயிரினங்களை வேட்டையாடும் போது, ராஜநாகங்கள் சில நேரங்களில் சரக்கு அல்லது பயணிகள் ரயில்களில் ஏறியிருக்க வேண்டும். பின்னர் என்ன நடக்கிறது என்பது தெரியாமலேயே பல கிலோமீட்டர் தொலைவில், தங்களுக்கு முற்றிலும் ஒவ்வாத சூழல் உள்ள இடத்தில் இறங்கியிருக்க வேண்டும் என இது குறிப்பிடுகிறது"என்று திகான்ஷ் பர்மர் கூறுகிறார். இந்த ஆராய்ச்சிக்கு இந்தியா முழுவதும் சமூக ஊடகங்கள் மற்றும் பிற செய்திகளில் வெளியான தகவல்கள் வலுசேர்ப்பதாக திகான்ஷ் கூறுகிறார். அதன்படி , ராஜநாகங்கள் உள்ளிட்ட பாம்புகள் ரயில்கள் அல்லது ரயில் நிலையங்களைச் சுற்றி காணப்படுகின்றன. "நாங்கள் ஆராய்ச்சி செய்த இடங்கள் பொதுவாக பாம்புகளின் வாழ்விடம் இல்லை. ஆனால் வெகு தொலைவில் உள்ள கர்நாடகாவிற்கு அருகிலுள்ள காடுகளில் இந்த பாம்பு இனங்கள் காணப்படுகின்றன. நாங்கள் பார்த்த ராஜநாகங்கள் அனைத்தும் ரயில் நிலையங்களைச் சுற்றியே இருந்தன. எனவே, அவை ரயில் வழியாக இங்கு வந்திருக்க வேண்டும் என்று முடிவு செய்யலாம்." என்றும் என்று திகான்ஷ் பர்மர் விவரிக்கிறார். இதற்கு முன்னதாக, 2017-ஆம் ஆண்டு வாக்கில், திகான்ஷ் பார்மர் சூரத் ரயில் நிலையத்தில் இதே போன்ற முறையில் ஒரு பாம்பை மீட்டிருந்தார். 'பாம்பின் பயணம்' தற்செயலா அல்லது உணவுக்கான தேடலா? பட மூலாதாரம்,DIKANSH PARMAR படக்குறிப்பு,சூரத் விஞ்ஞானி திகான்ஷ் பர்மருடன் இந்த ஆராய்ச்சியில் பங்கேற்கும் மற்ற ஆராய்ச்சியாளர்கள் கலிபோர்னியாவின் விக்டர் வேலி கல்லூரியின் உயிரியல் துறை பேராசிரியர் முனைவர் ஹென்ரிச் கைசர் மற்றும் ஜெர்மனியின் பான், பல்லுயிர் மாற்றம் ஆய்வுக்கான லீப்னிஸ் நிறுவனத்தின் இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் ஆவர். ராஜநாகங்கள் ரயில் நிலையங்களைச் சுற்றி காணப்படுவதற்கான காரணம் நடைமுறை ரீதியானது என்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு கூறுகிறது. தானியங்கள், பழங்கள் அல்லது இதர பொட்டலமிடப்பட்ட உணவுப் பொருட்களின் கழிவுகள் காரணமாக, ரயில்வே பகுதிகளில் எலிகள் அதிகளவில் கூடுகின்றன. எலிகள் அங்கேயே தங்கள் வாழிடங்களை அமைத்து வாழ்கின்றன. இவை பாம்புகளுக்கு உணவாக அமைகின்றன. மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது, பாதுகாப்பான தங்குமிடத்தைத் தேடி அவை ரயில்களில் தஞ்சம் புகக்கூடும். இந்த ஆராய்ச்சியில் கலிபோர்னியாவில் உள்ள விக்டர் வேலி கல்லூரியின் உயிரியல் பேராசிரியர் முனைவர் ஹென்ரிச் கைசர் மற்றும் இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் (பல்லுயிர் மாற்றம் ஆய்வுக்கான லீப்னிஸ் நிறுவனம் (எல்ஐபி), பான், ஜெர்மனி) ஆகியோரும் ஈடுபட்டனர். முனைவர் ஹென்ரிச் பிபிசி குஜராத்திடம் கூறுகையில், "பொதுவாக சாலைகளையும் ரயில் பாதைகளையும் வனவிலங்குகளுக்கான தடைகளாகவோ அல்லது அவற்றிற்கான மரணப் பொறிகளாகவோ நாம் கருதுகிறோம். ஆனால் இந்த விரைவுப் பாதைகள் கவனக்குறைவாக அவற்றின் போக்குவரத்துப் பாதைகளாகச் செயல்படக்கூடும் என்று இந்த ஆராய்ச்சி தெரிவிக்கிறது." என்றார். "இந்த ராஜநாகம் தற்செயலாக ரயிலுக்குள் சென்றிருக்கலாம் அல்லது உணவு தேடியோ அல்லது வேறு ஏதேனும் காரணத்திற்காகவோ ரயில் பாதையை அணுகியிருக்கலாம்" என்று அவர்கள் கூறுகின்றனர். அதனைத் தொடர்ந்து, இணைப் பேராசிரியர் முனைவர் டென்னிஸ் ரோடர் பிபிசி குஜராத்திடம் பேசுகையில், "மனிதர்களின் இந்த உள்கட்டமைப்புகள், இந்த வேட்டையாடும் உயிரினத்தின் நடமாட்டத்தை எப்படித் தற்செயலாகப் பாதிக்கின்றன என்பதை இந்த ஆராய்ச்சி காட்டுகிறது." என்றார். இது அறிவியல் பூர்வமான ஆராய்ச்சி என்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது என்றும் கூறும் அவர்கள், "உண்மைகளும் தர்க்கங்களும் ஆதாரங்களுடன் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன" என்று குறிப்பிட்டனர். பட மூலாதாரம்,DIKANSH PARMAR படக்குறிப்பு,மழைக்காலங்களில் வெள்ளம் ஏற்படும் போது, பாதுகாப்பான தங்குமிடத்தைத் தேடி அவை ரயில்களில் தஞ்சம் புகக்கூடும். பாம்புகள் பற்றிய இந்த ஆராய்ச்சி ஏன் முக்கியமானது? இந்தக் கேள்விக்கு பதிலளித்த முனைவர் ரோடர், "ராஜநாகத்தின் பாதுகாப்பு மிகவும் அவசியமானது. அவை சரக்கு அல்லது பயணிகள் ரயில்கள் மூலம் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்றால், அது மனித உயிருக்கும் அவற்றிற்கும் ஆபத்தானது. எனவே, இந்த ஆராய்ச்சியின் மூலம், மனித உயிருக்கு ஏற்படும் அபாயங்களைத் தவிர்க்க பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் மற்றும் ராஜநாகத்தையும் பாதுகாக்க வேண்டும்" என்றார். "ராஜநாகம் அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பு. அதனால் தான் மக்கள் அதைப் பார்த்தவுடன் பெரும்பாலும் கொன்றுவிடுகிறார்கள். அது மனித குடியிருப்புகளில் வசிப்பிடத்தை அமைத்துக் கொண்டால், அது மனித உயிருக்கு ஆபத்தானது. எனவே, காட்டின் சமநிலையை பேணவும், பல்லுயிர் பெருக்கத்திற்காகவும் அதன் பாதுகாப்பு அவசியமானது. இந்த ஆராய்ச்சி அதை வலியுறுத்துகிறது," என்று திகான்ஷ் பர்மர் விளக்குகிறார். வனப்பகுதிகளில் தேவையில்லாமல் ரயில்களை நிறுத்தக் கூடாது என்றும், ரயில் பெட்டிகளில் மீதமுள்ள உணவுகளை வைக்கக் கூடாது என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். இது எலிகளைக் கவர்ந்திழுக்கக்கூடும். அத்துடன், பாம்புகள் போன்ற வன உயிரினங்கள் ரயில் தண்டவாளங்களுக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகாதபடி காடுகள் அழிக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். "ரயில்கள் அல்லது பிற வழிகள் மூலம் இதுபோன்ற மனித குடியிருப்புகளுக்கு அவை வந்தாலும், அவை உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் குறைகின்றன. எனவே, அவை பாதுகாக்கப்பட வேண்டும்" என்கிறார் திகான்ஷ் . அவரது கூற்றுப்படி, மனித குடியிருப்புகளில் ராஜநாகங்கள் இருப்பது மனித-பாம்பு மோதலுக்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இத்தகைய இடங்களை வந்தடையும் பாம்புகள் பசி, மன அழுத்தம் மற்றும் இறப்பு அபாயத்தை எதிர்கொள்கின்றன. "இந்த ஆராய்ச்சி வெறும் சுவாரஸ்யமான சூழலியல் கதை மட்டுமல்ல, இது வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் பொதுப் பாதுகாப்புக்கான எச்சரிக்கையும் கூட. ரயில்கள் தற்செயலாக விஷப்பாம்புகளை ஏற்றிச் செல்கின்றன என்றால், இந்த விஷயத்தில் விழிப்புணர்வும் தெளிவான வழிகாட்டுதல்களும் தேவை," என்கிறார் முனைவர் ரோடர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0k1305k4mxo
  7. Today
  8. அரசாங்கத்திற்கு எதிரான மக்களின் ஜனநாயக போராட்டங்களை ஒடுக்கவே "பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம்" - சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் Published By: Digital Desk 3 22 Feb, 2026 | 10:02 AM அரசாங்கத்திற்கு எதிரான மக்கள் போராட்டங்களை கட்டுப்படுத்த பயங்கரவாத தடை சட்டத்தில் ஏற்பாடுகள் போதாமையாக இருப்பதானல் தான் பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தில் மக்கள் போராட்டங்களை ஒடுக்கும் ஏற்பாடுகளுடன் அதனை கொண்டுவர முயல்கின்றனர் என முன்னிலை சோசலிசக் கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்னம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கத்தில் சனிக்கிழமை (21) நடத்திய ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், பயங்கரவாத தடை சட்டத்திற்க்கு எதிராக மக்கள் போராடிய போதும் , அதனையும் மீறி அந்த சட்டத்தை அமுல் படுத்தினர். பின்னர் அந்த பயங்கரவாத தடை சட்டத்தால் தற்போது ஆட்சியில் உள்ளவர்களும் பல இன்னல்களை எதிர்கொண்டனர். பயங்கரவாதத்தை இல்லாதொழிப்போம் என வாக்குறுதி வழங்கி தற்போது ஆட்சி அமைத்துள்ளார். பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதாக கூறி , தற்போது பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தை அமுல் படுத்த முயல்கின்றனர். இது மிகவும் பயங்கரமான சட்டமாக வரவுள்ளது. அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்களை முன்னெடுக்கும் போது . பயங்கரவாத தடை சட்டத்தினால் தடுக்க முடியாது. அதற்கு அந்த சட்டத்தில் உள்ள ஏற்பாடுகள் போதாமையால் உள்ளதால் தற்போது, பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்தின் ஊடாக அந்த போராட்டங்களை கட்டுப்படுத்தவே புதிய சட்டமூலத்தை கொண்டு வருகின்றனர்.என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239264
  9. இருளை வென்ற அறிவு ஒளி! யாழ். பல்கலைக்கழக பட்டமளிப்பில் நெகிழ்ச்சி! Feb 22, 2026 - 12:28 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40ஆவது பட்டமளிப்பு விழாவில், வாழ்வகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் சாதனை படைத்துள்ளனர். மூன்றாம் நாளான நேற்று (21) நடைபெற்ற ஒன்பதாம் அமர்வில், வாழ்வக மாணவர்களான துரைராசா அருண்குமார் மற்றும் செல்வி. சிவபாதசுந்தரம் அனந்தினி ஆகியோர் பொதுக் கலைமாணிப் பட்டங்களைப் பெற்றுக்கொண்டனர். இவர்களுள் துரைராசா அருண்குமார், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்று, க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் 3A, 3B, 2C, 1S பெறுபேறுகளைப் பெற்றதோடு, க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் 3A சித்திபெற்றுப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவானவர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மாத்திரமன்றி, வாழ்வக வரலாற்றில் புலமைப்பரிசில் பரீட்சையில் ஏனைய மாணவர்களுக்கு இணையான புள்ளிகளைப் பெற்றுச் சித்திபெற்ற ஒரேயொரு மாணவன் என்ற பெருமையும் இன்றுவரை இவருக்கே உரித்தாகின்றது. பார்வைத்திறனற்ற இந்த இரு மாணவர்களும், தமது வாழ்வில் எதிர்கொண்ட பல்வேறு சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் மத்தியில் தமது பட்டங்களைப் பெற்றுக்கொண்டமை அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlxe43pw0003356pl60yv84b
  10. எல்லை தாண்டும் இந்திய மீனவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது: மன்னாரில் ஆலம் கடும் எச்சரிக்கை! 21 Feb, 2026 | 04:36 PM இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள், கைது செய்யப்பட்ட பின்னர் தங்களுக்கு நியாயம் கோரிப் போராடுவது எந்த விதத்திலும் நியாயமற்றது என வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சமீபத்தில் காரைக்கால், பாண்டிச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த 47 மீனவர்களும் அவர்களது 6 படகுகளும் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளன. நூற்றுக்கணக்கான படகுகள் எல்லை தாண்டி வரும் நிலையில், ஓரிரு படகுகள் மட்டுமே கைது செய்யப்படுவது எமது நீண்டகாலப் பிரச்சினைக்கு ஒரு சிறிய தீர்வாகவே அமைகிறது. இது குறித்து அரசாங்கத்திற்கு நாங்கள் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வருகிறோம். இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்தால் கைது செய்யப்படுவோம் என்று தெரிந்தே தமிழக மீனவர்கள் இக்குற்றச்செயலைச் செய்கிறார்கள். ஒரு நாட்டின் இறையாண்மையையும் எல்லையையும் மீறுகிறோம் என்ற குற்ற உணர்ச்சி கூட அவர்களுக்கு இல்லை. வடபகுதி தமிழ் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்பதோடு மட்டுமல்லாமல், எமது கடல் வளங்களைச் சூறையாடி, மீன்பிடி உபகரணங்களையும் அவர்கள் சேதப்படுத்துகிறார்கள். குற்றச்செயலில் ஈடுபட்டுவிட்டு, பின்னர் படகுகளை விடுவிக்கக் கோரியும் மீனவர்களை விடுதலை செய்யக் கோரியும் தமிழகத்தில் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்களை நடத்துவது வேடிக்கையானது. தவறு செய்துவிட்டு அதை நியாயப்படுத்த எவருக்கும் உரிமையில்லை. இந்திய மத்திய மற்றும் தமிழக அரசுகள் தமது மீனவர்கள் இலங்கை எல்லைக்குள் நுழைவதைத் தடுக்க நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். கடற்றொழில் அமைச்சர் இந்திய மீனவர் விவகாரத்தில் அசமந்தப் போக்கைக் கடைப்பிடிப்பதாக நாங்கள் கருதுகிறோம். வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்த விவகாரத்தில் அவர் மௌனம் சாதிப்பதை ஏற்க முடியாது. இதற்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், அமைச்சருக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுக்கவும் நாங்கள் தயாராக இருக்கிறோம். இந்திய மீனவர்களின் வருகையை முற்றாகக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும். எமது கடல் பரப்பில் அவர்களை ஒரு வினாடி கூட அனுமதிக்க முடியாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். தொடர்ச்சியான கைதுகள் மற்றும் கடுமையான சட்ட நடவடிக்கைகள் மூலம் மட்டுமே இந்த அத்துமீறலைத் தடுக்க முடியும்." என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/239236
  11. யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு எதிராகக் கொதித்தெழுந்த மக்கள்! Feb 22, 2026 - 11:47 AM யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சிறுவனுக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக இன்று (22) இப்பொராட்டம் நடைபெற்றது. அல்லைப்பிட்டி பகுதியில் பயணித்த ‘ஹயஸ்’ ரக வாகனத்தை தாம் மறித்தபோது, அதனை நிறுத்தாது சென்றமையால் வாகனத்தின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதில் வாகனத்தைச் செலுத்திய சிறுவன் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். எனினும், நிறுத்தாமல் சென்ற வாகனத்தைப் பொலிஸார் வழிமறித்த பின்னரே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இது பொலிஸாரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட படுகொலை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்நிலையிலேயே, உயிரிழந்த சிறுவனுக்கு நீதி கோரி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதேவேளை, இச்சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை என்பதும், சம்பவம் தொடர்பான அடுத்தகட்ட வழக்கு விசாரணை நாளை மறுதினம் (24) ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmlxct9bf0001356pwu9kcdvd
  12. இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி தமிழக மீனவர்கள் ஆர்ப்பாட்டம் 21 Feb, 2026 | 02:50 PM இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் சனிக்கிழமை (21) காலை மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மற்றும் மண்டபம் மீன் பிடி துறைமுகங்களில் இருந்து கடந்த புதன்கிழமை மீன்பிடிக்க சென்ற நான்கு படகுகளையும் அதிலிருந்த 22 மீனவர்களையும் வியாழக்கிழமை அதிகாலை இலங்கை கடற்படையினர் நெடுந்தீவு மற்றும் மன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 22 மீனவர்களும் வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலைகளில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையை கண்டித்தும், இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 22 மீனவர்களை உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வலியுறுத்தியும், ஏற்கனவே இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இலங்கை சிறையில் உள்ள 50 க்கும் மேற்பட்ட மீனவர்களையும், விடுதலை செய்யப்படாமல் உள்ள 100க்கும் மேற்பட்ட விசைப் படகையும் விடுவிக்க கோரி தங்கச்சிமடம் வலசை பேருந்து நிலையத்தில் மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாநில அரசுகள் இலங்கை அரசிடம் வலியுறுத்தி சிறையில் உள்ள மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் மற்றும் இலங்கை கடற்படைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. https://www.virakesari.lk/article/239231
  13. மன்னாரில் உணவகங்கள் மீது தொடரும் சட்ட நடவடிக்கை Feb 22, 2026 - 10:51 AM மன்னார் நகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள உணவகங்கள், தொடர்ச்சியாக பல்வேறு சுகாதாரக் குறைபாடுகளுடன் இயங்கி வருவதாகப் பொதுமக்களால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, அடையாளப்படுத்தப்பட்ட சில உணவகங்கள் மீது சுகாதாரத் துறையினர் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். கடந்த வாரம், மன்னார் நகரசபை சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை சுகாதாரப் பரிசோதகர்கள் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது, உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாது இயங்கி வந்த 3 உணவகங்கள் மற்றும் ஒரு சிற்றுண்டிச்சாலை மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, மன்னார் தாழ்வுபாடு பிரதான வீதி, வைத்தியசாலைப் பகுதியை அண்டியுள்ள இரண்டு உணவகங்கள் மீதும், மன்னார் உப்புக்குளம் மற்றும் பள்ளிமுனை வீதிப் பகுதிகளில் அமைந்துள்ள இரு உணவகங்கள் மீதும் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. உரிய சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமை, கழிவகற்றல் செயற்பாடுகள் ஒழுங்குபடுத்தப்படாமை, அதிக அளவு இலையான்கள் காணப்பட்டமை, கையுறை பயன்படுத்தாமை, சுகாதாரமற்ற முறையில் உணவுகளைக் களஞ்சியப்படுத்தி வைத்திருந்தமை மற்றும் சுகாதாரமற்ற முறையில் உணவு தயார் செய்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை அடிப்படையாகக் கொண்டு இவ்வுணவகங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmlxas09q0001356pwlqy3vwn
  14. அமெரிக்க உயர் நீதிமன்றத்தின் தடையை மீறி 15 சதவீத உலகளாவிய வரியை அறிவித்தார் : அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் Published By: Digital Desk 1 22 Feb, 2026 | 09:00 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்திருந்த பரவலான இறக்குமதி வரிகள் சட்டவிரோதமானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்த 24 மணித்தியாலத்திற்குள், அவர் புதிய வரி உயர்வை அறிவித்துள்ளார். உலகளாவிய இறக்குமதி வரியை 10 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்துவதாக நேற்று சனிக்கிழமை (21) தனது ட்ரூத் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த 'அவசரகால அதிகாரங்களுக்கு' பதிலாக, 1974 வர்த்தகச் சட்டத்தின் பிரிவு 122-ன் கீழ் இந்த வரிகளை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ளார். இந்த அதிகாரத்தின் கீழ் விதிக்கப்படும் வரிகள் அதிகபட்சமாக 150 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அதற்கு மேல் நீடிக்க பாராளுமன்றத்தின் அனுமதி அவசியம் என தெரிவிக்கப்படுகிறது. எனினும், நீதிமன்றத்தின் தீர்ப்பை "வேடிக்கையானது" மற்றும் "அமெரிக்காவிற்கு எதிரானது" என அமெரிக்க ஜனாதிபதி; கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். எவ்வாறாயினும், இந்த 15 சதவீத வரி உயர்வு இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் ஏற்றுமதியைப் பாதிக்கும். இருப்பினும், கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்குஇதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக குறித்த பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/239252
  15. உதிரி பாகங்களை கோர்த்து ஸ்டிக்கர் அடிக்க உலகில் யாரும் போட்டி போடவே முடியாது ..
  16. --கொழும்பில் நடந்த பெளத்த மாநாடு-- சிங்கள அரசியல் தலைவர்களுக்கு வழங்கிய செய்தி! --- --- *வடக்கு கிழக்கு உட்பட இலங்கை முழுவதும் பெளத்த தொல்லியல் ஆய்வுகளுக்கு முக்கியத்துவம். தடை விதிக்க முடியாது. *பௌத்த சமயம் தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடிகளுக்கு அநுர பொறுப்புக் கூற வேண்டும்... *பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்தப்படுவதாக குற்றச்சாட்டு ---- ----- ----- இலங்கைத்தீவில் பௌத்த சமயத்திற்கும் பௌத்த தேரர்களுக்கும் ஏற்படும் அழுத்தங்கள், புத்த சாசனம் மற்றும் வடக்கு கிழக்கு உள்ளிட்ட இலங்கைத் தீவின் தற்போதைய நிலைமை குறித்த கவலைகளை வெளிப்படுத்தி நடைபெற்ற பௌத்த மகா சங்க மாநாடு, சிங்கள அரசியல் தலைவர்களுக்கு பலவிதமான செய்திகளை வழங்கியுள்ளன. வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மாநாட்டில், அரசாங்கம் பௌத்த சமயவிதிகளின் பிரகாரம் எவ்வாறு செயற்பட வேண்டும் என்ற போதனைகள் முன்மொழியப்பட்டன. பேராசிரியர் கோட்டாபிட்டியே ராகுல தேரர், அநுர அரசாங்கத்தின் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து உரையாற்றினார். தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் பௌத்த சமயத்தை மதிக்கவில்லை எனவும் குறை கூறினார். அதேவேளை -- இலங்கையின் அரசியல் யாப்பில் உள்ள பௌத்த சமய முன்னுரிமையின் போதாமைகளை நிவர்த்தி செய்தல், பௌத்த மரபுரிமைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாநாட்டில் வலியுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பு பொரளையில் உள்ள இலங்கை பௌத்த மகா சம்மேளன மண்டபத்தில் இடம்பெற்ற மாநாட்டில், ஆயிரத்துக்கும் அதிகமான பௌத்த தேரர்கள் பங்குபற்றியிருந்தனர். ஆனாலும் -- இந்த மாநாடு அஸ்கிரிய, மல்வத்த மற்றும் அமரபுர பௌத்த பீடங்களின் உத்தியோகபூர்வ பங்கேற்பு இன்றி தனிப்பட்ட தேரர்களின் பங்கேற்புடன் நடைபெற்றதாகவே உள்ளகத் தகவல்கள் கசிந்துள்ளன. முத்தெட்டுவே ஆனந்த தேரர் முக்கிய உரையாற்றினார். இலங்கைத்தீவைப் பாதுகாப்பது மற்றும் பௌத்த சாசனம், கலாசாரம் மற்றும் தேசிய மரபுரிமைகளுக்கு எதிராக எழுந்துள்ள சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில், அரசியல் - பொருளாதார நலன்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆனந்த தேரர் மாநாட்டில் வலியுறுத்தினார். அதேவேளை, பௌத்த மகா சங்க மாநாடு எந்த ஒரு அரசியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டது அல்ல, இலங்கையின் கலாசாரம், மொழி மற்றும் நாகரிகத்தைப் பாதுகாப்பது பிரதான நோக்கம் என மிகிந்தலை விகாராதிபதி மாநாட்டில் நிகழ்த்திய விளக்கவுரையில் சுட்டிக்காட்டினார். குறிப்பாக -- மிஹிந்து தேரர் கொண்டு வந்த பௌத்த விழுமியங்கள் தற்போது சிதைந்து வருகிறது. அதனைத் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் ஏனைய சிங்களத் தலைவர்களுக்கு சுட்டிக்காட்டவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும் தேரர் விளக்கினார். பௌத்த மதத்தையோ அல்லது பௌத்த கலாசாரத்தையோ அழித்துவிட்டு எவராலும் இந்த நாட்டில் ஆட்சி செய்ய முடியாது என மிகிந்தலை விகாராதிபதி இடித்துரைத்தார். அத்துடன்--- தொல்பொருள் பெறுமதிமிக்க இடங்கள் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தும், பௌத்த உரிமைகள் பறிபோவது குறித்தும் பௌத்த தேரர்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்துவதாகவும், கடந்த காலங்களில் சீகிரியா போன்ற இடங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது, மகா சங்கத்தினர் தலையிட்டுப் பாதுகாத்ததாகவும் விகாராதிபதி சுட்டிக்காட்டினார். சமூக ஊடகங்களில் பௌத்த மதத்திற்கு எதிராகவும், புத்தர் சிலைகளை அவமதிக்கும் வகையிலும் வெளியாகும் பதிவுகள் குறித்து தமது கடும் அதிருப்தியை வெளியிடுவதாகவும், இத்தகைய செயல்களைப் பார்த்துக் கொண்டு மகா சங்கத்தினர் அமைதியாக இருக்க முடியாது என்றும் உரத்துக் கூறிய தேரர், ஜனாதிபதி அநுரவும் அவரது அரசாங்கமும் பொறுப்புக் கூற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இது பற்றிய அறிக்கைப் பிரகடனம் ஒன்றும் மாநாட்டில் வெளியிடப்பட்டுள்ளது. பௌத்த சமயத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக ஜனாதிபதி அநுர பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேநேரம் -- சட்ட நடவடிக்கைகள் மூலமாகவோ அல்லது அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலோ, பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கான தேரர்களின் பயணத்தில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று அரசாங்கத்துக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. அதேவேளை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் எதிர்கொள்ளும் அரசியல் சிக்கல்கள் பற்றி எடுத்துக் கூறியதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மாநாட்டில் பகிரங்கமாகக் கூறினார். அதாவது -- இந்த பௌத்த மாநாட்டை நிறுத்துங்கள் என்ற தொனியில் அநுர பேசியதாகவும், பௌத்த சமய முன்னுரிமைக்கு இடமளிப்பதாக அநுர உறுதியளித்தார் என்றும் தெரிவித்த ஆனந்த தேரர், எக் காரணம் கொண்டும் இந்த மாநாட்டை நிறுத்தப் போவதில்லை என தான் பதிலுக்குக் கூறியதாகவும் விபரித்தார். 'தன்னையும் திட்டுகிறார்கள்' என்று அநுர தொலைபேசியில் கூறியதாகவும், “உங்களைத் திட்டினால் எனக்கு பிரச்சனை இல்லை” என தான் பதிலளித்தாகவும் தனது உரையில் விபரித்த ஆனந்த தேரர், இந்த மாநாட்டை நிறுத்தி தனது அரசாங்கத்துக்கான அழுத்தத்தை குறைப்பதே ஜனாதிபதி அநுரவின் நோக்கமாக இருந்தது என்றும் ஆனந்த தேரர் மேலும் சுட்டிக்காட்டினார். அநுர அரசாங்கம் பௌத்த சமயத்திற்கு எதிராக நடக்கும் அநீதிகளுக்கு பொறுப்புக் கூற வேண்டும் என பௌத்த தேரர்கள் ஒருமித்த குரலில் கருத்துரைத்தனர். அதேவேளை -- திரி-நிகாய மகாநாயக்க தேரர்கள் உட்பட மூன்று பிரிவுகளின் உயர் சங்க சபைகள் இந்த மகா சங்க மாநாட்டில் பங்கேற்க அதிகாரப்பூர்வமாக அழைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அவர்கள் சமூகமளிக்கவில்லை எனவும் இருந்தாலும், ஆசிச் செய்தியை அவர்கள் அனுப்பியதாகவும் தினியாவெல பாலித தேரர் மாநாட்டில் தெரிவித்தார். சமூக ஊடகங்கள் மூலமாகவும் சில குழுக்களாலும் பௌத்த பிக்குகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதால், இந்த மாநாட்டின் தேவை எழுந்துள்ளதாக சுட்டிக்காட்டிய தேரர், தசராஜ தர்மத்தின்படி இலங்கைத்தீவை ஆளும் எந்தவொரு தலைவரும் மகா சங்கத்தினரின் ஆசிகளைப் பெறுவார்கள் என்றும் விளக்கமளித்தார். பௌத்த மகா சம்மேளனம், கொழும்பு இளைஞர் பௌத்த சங்கம் மற்றும் தாய்நாடு பாதுகாப்பு அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புகளின் பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் உரையாற்றினர். பிரதானமாக நான்கு அம்சங்களை இந்த மாநாட்டில் நிகழ்த்தப்பட்ட உரைகளில் இருந்து அறிய முடிகிறது. ஒன்று - தொல்லியல் ஆராய்ச்சிகள், தொல்பொருள் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் போது பௌத்த தேரர்களுக்கு முக்கிய இடமளிக்கப்பட வேண்டும். இரண்டாவது - பௌத்த தேரர்களின் செயற்பாடுகளில் அரசாங்கம் தலையிடக் கூடாது. ஆனால் அரசாங்க விதிமுறைகள் சட்டங்கள் போன்றவற்றுக்கு பௌத்த தேரர்கள் மதிப்பளித்து செயற்படுவர். அத்துடன் பொலிஸாரின் ஒத்துழைப்பு கோரப்படும். மூன்றாவது – அரசியல் தலைவர்கள் பௌத்த தேரர்களின் பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதாவது தசராஜ தர்மத்தின்படி செயற்பட வேண்டும். ஆசியும் பெற வேண்டும். நான்காவது - நிதியுதவிகள் என்ற பெயரில் வல்லாதிக்க நாடுகள் இலங்கையின் இறைமையில் தலையிட அனுமதிக்க முடியாது. இந்த நான்கு அம்சங்களும் பௌத்த தேரர்களின் உரைகளிலும் பிரகடனத்திலும் தென்பட்டதாக மாநாட்டில் பங்கு பற்றிய சில சிங்கள செய்தியாளர்கள் தெரிவித்தனர். அதேவேளை --- இந்த பௌத்த மாநாட்டுக்குத் தேவையான ஒத்துழைப்புகள் அனைத்தையும் அரசாங்கம் செய்து கொடுத்ததாக ஜனாதிபதி அநுரவின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க தெரிவித்தார். அதேவேளை மெதகொட அபயதிஸ்ஸ தேரர், அமெரிக்க - இந்திய அரசுகள் தொடர்பாக மாநாடு ஆரம்பமாவதற்கு முன்னர் கடும் விமர்சனங்களை செய்தியாளர்களிடம் வெளியிட்டார். குறிப்பாக -- மாகாண சபை தேர்தல் நடைபெற்றால்,தேர்தல் நடைபெற்று முடிந்த அடுத்த நாள் வடக்கு கிழக்கில் அமெரிக்க - இந்திய அரசுகளின் தலையீட்டில் மீண்டும் தமிழ்ப் பிரிவினைக்கு சார்பான திட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என மெதகொட அபயதிஸ்ஸ தேரர் எச்சரிக்கை விடுத்தார். அதேவேளை, இந்த மாநாட்டின் எதிரொலியாக அதாவது அரசாங்கத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மாற்றீடாக ஒன்பது ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெறவுள்ள இலங்கை அமரபுர மகா நிக்காயத்தின் உபசம்பத விநாயக நிகழ்வுக்கு, அனுசரணை வழங்க அநுர அரசாங்கம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக சென்ற வியாழக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி அநுரவின் செயலாளர் கலாநிதி சனத் குமநாயக்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது. இலங்கை அமரபுர மகா நிகாயத்தின் பிரதான செயலாளர், ராஜகாய பண்டித தர்ஷனபதி பலபிட்டியே சிறிசீவலி தேரர் ஆகியோர் சந்திப்பில் பங்குபற்றினர். எதிர்வரும் ஜூலை 9 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை களுத்துறை போதி மரத்திற்கு அருகில் அமைந்துள்ள சீமா மலகாவில் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட புதிய பௌத்த துறவிகள் பங்கேற்கும் வகையில் நிகழ்வு நடைபெற உள்ளது. ஜனாதிபதி அநுர தலைமை தாங்குவார் என சிறிசீவலி தேரர் வெள்ளிக்கிழமை காலை ஊடகங்களுக்கு அறிவித்தார். அரச நிறுவனங்கள், முப்படைகள் மற்றும் பொலிஸார் மற்றும் பல தனியார் நிறுவனங்களின் ஆதரவுடன் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது இலங்கை அரசின் நிகழ்வு என சிறிசீவலி தேரர் கூறினார். ஆனால் --- இதனை அரச நிகழ்வாக நடத்துவதால், அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் அநுர அரசாங்கத்துடன் முரண்படக்கூடும் என எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் கருத்து வெளியிட்டுள்ளனர். மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலங்களிலும் அமரபுர மகா நிக்காயத்திற்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அ.நிக்ஸன்- பத்திரிகையாளர்-
  17. இவர் தனியாவா? பரமேஸ் கோணேஸ் என்று இருவர் தான் இந்த இசை நிகழ்ச்சி செய்ததாக ஞாபகம். யாராவது இதை உறுதிப்படுத்த முடியுமா?
  18. மலரும் கொடியும் பெண்ணென்பார்.. படம்: எல்லாம் உனக்காக ( 1961 ) இசை : K.V மகாதேவன் வரிகள்: கண்ணதாசன் பாடியோர் : TMS & P.சுசீலா
  19. எல்லா காட்டுமிராண்டி அடாவடி வேலைகளையும் செய்துவிட்டு காவியை போர்த்து பதுங்கிக்கொள்வது, அரசியல் செய்வது, பின் அரசியல் பழிவாங்கல் என்று முறையிடுவது அசிங்கம்! பௌத்தனாக இருந்து கடமையை செய். பல்மதம், இனம் கொண்ட நாட்டில் ஜனாதிபதியாக கனவு காணாதே. இந்தியாவுக்கு போய் சைவ ஆலயங்களில் வழிபடுவது, இங்கு சைவ ஆலயங்களை இடிப்பது, பௌத்தம் பாதுகாப்பது சுத்த பச்சோந்தித்தனம். இவரது பெற்றோர் இந்தியாவுக்கு சென்றவேளை குருவாயூர் ஆலயத்தில் விசேட வழிபாடு நடத்தப்பட்டதாம், சைவர்கள் இந்தியாவில் பௌத்தர்களை கோயிலுக்குள் வழிபாட்டில் அனுமதிப்பார்கள், ஆனால் ஏனைய மதத்தவருக்கு அப்படியல்ல. ஷிரந்தி அந்தக்கோயிலில் வழிபாட்டில் கலந்து கொண்டதால் அவர் பௌத்தத்தை சாராதவர் என்றும் அந்தக்கோயிலை புனிதப்படுத்தும் செயல் நடைபெற்றதாக அண்மையில் தெரிந்து கொண்டேன். இவரோ தான் ஒரு பௌத்தன் என்று அறிக்கையிடுகிறார். இவர் தந்தை குடும்பமே சுத்த பௌத்தமில்லையாம், அரசியலுக்காக பௌத்தத்தை பயன்படுத்துகின்றனர், அதனால் அவர்களது தேவைக்கேற்ப மத கொள்கைகளை, போதனைகளை மாற்றுகின்றனர். இவர்களுக்கு படிப்பறிவுமில்லை, பகுத்தறிவுமில்லை, மத அறிவோ, கொள்கையோ இல்லை. மக்கள் இந்த ஏமாற்று நரிகளை புரிந்து கொள்ளாத வரை இவர்களையும் இவர்களின் பொய்களையும் அகற்ற முடியாது. அனுராவுக்கு இது ஒரு பெரும் சவால், இதை கடந்துவிட்டால் நாடு முன்னேறும், திரும்ப எழாதபடி அகற்றப்படவேண்டும். பௌத்தத்திற்கு முன்னுரிமை அளித்ததாலேயே இந்தப்பிரச்சனை, அது அகற்றப்படவேண்டும். நாட்டில் எல்லோரும் சமம் என்றால்; எல்லா மதத்திற்கும் சமஉரிமை அளிக்கப்படவேண்டும் பாதுகாக்கப்படவேண்டும். நாட்டின் அமைதியை சமாதானத்தை சீர்குலைக்கும் சட்டம் நீக்கப்படவேண்டும். பயங்கரவாதச்சட்டம் நீக்கப்படவேண்டுமென எவ்வளவு குரல் கொடுக்கப்படுகிறதோ அவ்வாறே பௌத்தத்திற்கு முன்னுரிமை என்பதும் நீக்கப்படவேண்டும். அதை நீக்கினால் பயங்கரவாத சட்டத்திற்கு இடமேயில்லை. நாட்டில் எத்தனையோ பிரச்சனை, இருக்கிறது அதை விட்டு மதமும் இனமுந்தான் அரசியல் பிரச்சனை என்று அலையுது ஒரு கூட்டம், அதற்கு பின்னால் இந்த சோம்பேறி மொட்டைக்கூட்டம். இங்கு உள்ள சிறுவர்களை பிரித்து நல்ல விடுதிகளில் சேர்த்து கல்வியறிவை ஊட்டுங்கள், தங்களுக்கு எது சிறந்தது என தெரிவு செய்ய முடியாத வயதில் அவர்களை வற்புறுத்தி அல்லது வறுமை காரணமாக இந்த மாதிரி கொலை கொள்ளைக்கூட்டத்தில் சேர்த்து அவர்களது எதிர்காலத்தையும் கேள்விக்குறியாக்காமல். அவர்களது சிறுவர் பராயத்திற்கு தகுதியில்லாத காவிப்பாரம், போதனை. அவர்கள் விரும்பாமலே அவர்கள்மேல் திணிக்கப்படுகிறது.
  20. அந்த கால சிவனடியார் - இது பணம் வைக்கும் பையா அல்லது திருநீரு பையா ? ரெல் மீ கிளியர்லி..! ஆரண்யேஸ்வரர் கோயில் - திருவலங்காடு
  21. அந்த நாளில் எங்களுடைய Mixed Fruit Jam இலந்தை பழ கூழ்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.