All Activity
- Past hour
-
அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை, மத்தியகிழக்கில் இருக்கும் வேற்றின முஸ்லீமிற்கும் எங்கோ ஒரு ஓரத்தில் வாழும் இலங்கை முஸ்லீம்களுக்கும் இடையே இருக்கும் தொடர்பென்ன? மத்திய கிழக்கில் வாழும் அரபு முஸ்லீம்கள், மற்றைய முஸ்லீம்களை, குறிப்பாக ஆசிய முஸ்லீம்களை தமக்கு நிகராகக் கருதுவதில்லை. இரண்டாம் மூன்றாம் தர நிலை கூட அவர்களுக்குக் கொடுப்பதில்லை. ஆனால், இவர்களோ அவர்களைக் கடவுள்கள் போலக் கொண்டாடுகிறார்கள். சொந்த நாட்டில் வாழும் சகோதர இனத்திற்கெதிராக கொலைகளையும், இன்னொரு இனத்துடன் கூட்டுச் சேர்ந்து இனவழிப்பையும் மேற்கொள்வார்கள்.
-
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
இத்தாக்குதலைப் பார்க்கும்போது செஞ்சோலைதான் மனதில் வருகிறது. இஸ்லாமியப் புரட்சிகர ராணுவ முகாமிற்கு அருகில் பாடசாலை இருந்தது, அதனாலேயே தவறுதலாக தாக்கப்பட்டிருக்கிறது என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால் இஸ்ரேலின் அபிமானிகளோ ஈரானின் ஏவுகணையொன்று இலக்கை விட்டு விலகிச் சென்று சொந்த நிலப்பகுதியில் வீழ்ந்தபோதே இது நடந்திருக்கிறது என்று கூறுகிறார்கள். இது இஸ்ரேலின் தாக்குதலலாகத்தான் இருக்கும் என்பதில் ஐய்யமில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்.
-
தெற்கு ஈரானில் ஆரம்பப் பாடசாலை மீது இஸ்ரேல் தாக்குதல்: 40 மாணவிகள் பலி – பலர் காயம்
ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி! Mar 3, 2026 - 04:57 PM அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களால் ஈரானுக்கு இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்த விபரங்களை ஈரான் செஞ்சிலுவை சங்கம் புதுப்பித்துள்ளது. இந்த தாக்குதல்களால் 787 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அவர்களில் 176 பேர் சிறுவர்கள் எனவும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய தாக்குதல்களால் நாடு முழுவதும் குறைந்தது 153 நகரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதுவரை அமெரிக்க - இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு இலக்கான மொத்த இடங்களின் எண்ணிக்கை 504 என குறிப்பிடப்பட்டுள்ளது. பதிவான தாக்குதல்களின் எண்ணிக்கை 1,039 ஆக அதிகரித்துள்ளது. மீட்புப் பணியாளர்கள் தேடுதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருவதாகவும், இடிபாடுகளை அகற்றுதல், காயமடைந்தவர்களை வைத்தியசாலைகளுக்கு மாற்றுதல் மற்றும் மருத்துவ சிகிச்சைகளை வழங்குதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீதான தாக்குதல்: 787 பேர் உயிரிழப்பு; 176 சிறுவர்கள் பலி!
-
இஸ்ரேல் - கட்டார் - துபாய் - அபுதாபி மீது ஈரான் தாக்குதல்
இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது கடற்படை தலைமையகத்தை குறிவைத்து இரான் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது. கட்டுரை தகவல் ஜோனாதன் பீல் பிபிசி பாதுகாப்பு செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படைத் தளத்தை இரான் குறிவைத்து தாக்குதல் நடத்தியிருப்பது அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பில் உள்ள பலவீனங்களை அம்பலப்படுத்தியது. வெளிப்படையாக, இது அமெரிக்காவிற்கும் பிராந்தியத்தில் உள்ள அதன் கூட்டாளி நாடுகளுக்கும் கவலை அளிக்கும் செய்தியாக இருக்கும். பஹ்ரைனில் உள்ள அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படை பிரிவின் தலைமையகத்தைச் சுற்றி ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் தாக்குதல் நடத்தும் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த செய்தி எழுதும் நேரம் வரை, இந்த தாக்குதலில் எந்த உயிரிழப்புகளும் ஏற்பட்டதாக எந்த தகவலும் இல்லை. இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்க இராணுவத்திற்கு சில எச்சரிக்கைகள் கிடைத்திருக்கலாம். முன்னெச்சரிக்கையாக, இங்கிருந்து அதன் பணியாளர்களை வெளியேற்றியிருக்கலாம். ஒப்பீட்டளவில், பஹ்ரைனின் மோசமான வான் பாதுகாப்பு காரணமாக, இரான் அதை ஒரு முக்கிய இலக்காகக் கண்டிருக்கலாம் என்று பிரிட்டிஷ் ராயல் கடற்படையின் முன்னாள் தளபதி டாம் ஷார்ப் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவு தலைமையகம் மீதான இரானிய தாக்குதலுக்குப் பிறகு மேலெழும் புகை அமெரிக்க வான் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிப்பு மெதுவாக நகரும் இரானின் ஷாஹெட் ட்ரோன் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பை தாண்டிச் செல்வதை ஒரு காணொளி காட்டுகிறது. யுக்ரேனில், இதுபோன்ற டிரோன்களை சாதாரண இயந்திர துப்பாக்கியால் சுட்டு வீழ்த்த முடியும். கடந்த சில வாரங்களாக, அமெரிக்கா இந்தப் பகுதிக்கு அதிகமான வான் பாதுகாப்பு அமைப்புகளை அனுப்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, இதில் நவீன THAAD மற்றும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளும் அடங்கும். இவற்றால் பாலிஸ்டிக் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்த முடியும், ஆனால் அவை மிகவும் அதிக மதிப்பு மிக்கவை. அவற்றின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. யுக்ரேனிடம் 10க்கும் குறைவான பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்ளன. யுக்ரேன் தலைநகர் கீவை பாதுகாக்க அவை இன்னும் போராடி வருகின்றன என்பதன் மூலமும் இதைப் புரிந்து கொள்ளலாம். மத்திய கிழக்கில் உள்ள அனைத்து ராணுவ தளங்களையும் பாதுகாக்க போதுமான அளவு அவற்றை வைத்திருப்பது அமெரிக்காவிற்கு இன்னும் எளிதானது அல்ல. அமெரிக்க கடற்படை வளைகுடா மற்றும் கிழக்கு மத்திய தரைக் கடலில் சுமார் ஒரு டஜன் ஆர்லீ பர்க் வகை போர்க் கப்பல்களை (Arleigh Burke-class destroyers) நிறுத்தியுள்ளது. அவற்றில் உள்ள வான் பாதுகாப்பு அமைப்புகளால் டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளையும் சுட்டு வீழ்த்த முடியும். ஏமனில் இரான் ஆதரவு பெற்ற ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக செங்கடலில் அவை ஏற்கனவே திறம்பட செயல்பட்டுள்ளன. 2024 மற்றும் 2026 க்கு இடையில், அமெரிக்கா சுமார் 400 ஹூதி டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறித்தது. இந்தப் பகுதியில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க போர் விமானங்கள், டிரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இடைமறிக்கும் திறன் கொண்டவை. அமெரிக்கா தற்போது இந்தப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட போர் விமானங்களை நிலைநிறுத்தியுள்ளது. ஆனால் இந்த பெரிய திறன்களால் கூட இரான் சில இலக்குகளை வெற்றிகரமாக தாக்குவதைத் தடுக்க முடியவில்லை. இந்தப் புதிய அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு முன்பு, இரான் சுமார் 2,000 குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கொண்ட ஆயுதக் களஞ்சியத்தைக் கொண்டிருந்திருக்கலாம். மேலும் பல ஒருவழி தாக்குதல் டிரோன்களையும் அது கொண்டுள்ளது. இரானின் ஷாஹெட் டிரோன் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு யுக்ரேன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. ரஷ்யா இப்போது ஒவ்வொரு மாதமும் இதுபோன்ற ஆயிரக்கணக்கான டிரோன்களை உற்பத்தி செய்து வருகிறது. இரானின் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் ரஷ்யா உதவியிருக்கலாம். ஷாஹெட் டிரோனால் யுக்ரேனில் பேரழிவு பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு, இரானின் ஷாஹெட்-136 ட்ரோன் குறைந்த உயரத்தில் பறக்கிறது மற்றும் இதனை ரேடார் மூலம் கண்டறிவது கடினம். இது அதிகபட்சமாக 2,500 கிலோமீட்டர் தூரம் வரை பறந்து செல்லும். பிரிட்டிஷ் ராயல் கடற்படையில் தான் பணியாற்றிய காலத்தில், மத்திய கிழக்கில் உள்ள ஒரு ராணுவத் தளத்தின் மீது இரானிய தாக்குதலை உருவகப்படுத்தி போர் பயிற்சிகளை நடத்தியதாக ஷார்ப் கூறுகிறார். இந்தக் காலகட்டத்தில் ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் பெரும்பாலும் வரையறுக்கப்பட்ட வான் பாதுகாப்புப் பகுதிகள் வழியாகச் சென்றன. ஆட்சி அச்சுறுத்தப்படுவதாக உணர்ந்து விரைவாகத் தாக்கினால், அமெரிக்கா இறுதியில் தாட் (THAAD) மற்றும் பேட்ரியாட் (Patriot) வான் பாதுகாப்பு அமைப்புகளை இழந்துவிடும் என்று அவர் கூறுகிறார். இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை திறன்கள் "மிகவும் விரிவானவை" என்றும் ஷார்ப் கூறினார். ஆனால், அமெரிக்க வெளியுறவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனமான ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான அறக்கட்டளை (Foundation for Defense of Democracies) மூத்த உறுப்பினரான எட்மண்ட் ஃபிட்டன்-பிரவுன், "இரான் பதிலடி கொடுக்க விரும்புகிறது என்பதற்கான சான்றுகள் இருக்கலாம், ஆனால் அதை ஒரு பெரிய மோதலாக விரிவாக்க விரும்பவில்லை" என்று கூறுகிறார். கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய தாக்குதல்கள் இரானின் சில ராணுவத் திறன்களுக்கு எவ்வளவு சேதத்தை ஏற்படுத்தியுள்ளன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். "இரானின் பதிலடி மிகவும் லேசானதாக இருந்ததற்கான அறிகுறிகள் உள்ளன. யேமனில் ஹூதி கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் திறனை அமெரிக்கா சேதப்படுத்தினாலும் அவற்றை முற்றிலுமாக அழிக்கவில்லை என்பதை நினைவில் கொள்வது உகந்தது" என்று அவர் மேலும் கூறுகிறார். அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் போர்க்களம் உள்ளது பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இரானின் ஷாஹெட் டிரோன்கள் யுக்ரேன் முழுவதும் பேரழிவை ஏற்படுத்துகின்றன (கோப்புப் படம்) வான்வழியே மட்டுமே நடத்தப்படும் போர்கள் அரிதாகவே வெற்றியையோ அல்லது அரசாங்கத்தை மாற்றுவதற்கான வாய்ப்பையோ அளிக்கின்றன. 2011-இல் லிபியாவிற்கு எதிரான நேட்டோ தலைமையிலான தாக்குதல் நடவடிக்கை ஒரு பெரிய விதிவிலக்காக இருக்கலாம். இருப்பினும் அது கணிசமான குழப்பத்தை அது ஏற்படுத்தியது. இரானின் தாக்குதல் வரம்புக்குள் அமெரிக்க கடற்படை வந்தால் அதைத் தாக்கும் திறன் இரானுக்கு உள்ளது. அது கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளின் பெரிய தொகுப்பையும், சிறிய, வேகமான, ஆளில்லா தாக்குதல் படகுகளையும் கொண்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சீனா இரானுக்கு இராணுவ ஆதரவை வழங்கியிருக்குமா என்பது இன்னும் பதிலளிக்கப்படாத மற்றொரு கேள்வியாகும். "ஆரம்ப தாக்குதல்கள் இரானின் தலைமையையும் இராணுவ சொத்துகளையும் சேதப்படுத்தக் கூடும், ஆனால் அமெரிக்கா தனது நடவடிக்கையைத் தொடர போராட வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இரான் அரசு தனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்ள தன் நிலையை வெறுமனே தக்கவைத்துக் கொள்வதே போதுமானது" என்று அமெரிக்காவின் மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வு மையத்தின் டேனியல் பைமன் கூறினார். வான் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை யுக்ரேன் தெளிவாக நினைவூட்டுகிறது. அதிபர் ஸெலென்ஸ்கி தனது கூட்டாளிகளுக்கு விடுக்கும் மிக முக்கியமான கோரிக்கையாக இது இன்னும் உள்ளது. நூற்றுக்கணக்கான டிரோன்கள் மற்றும் டஜன்கணக்கான ஏவுகணைகளை உள்ளடக்கிய பல, சிக்கலான தாக்குதல்களுக்கு எதிராக பாதுகாத்துக் கொள்வது எவ்வளவு கடினம் என்பதையும் யுக்ரேன் நிகழ்வுகள் நிரூபிக்கின்றன. அமெரிக்காவிடம் அதிக வலிமையும் வளங்களும் உள்ளன. அத்துடன் இஸ்ரேலுடன் இணைந்து இரானின் டிரோன் மற்றும் ஏவுகணை தொழிற்சாலைகளையும் ஏவுதளங்களையும் அமெரிக்கா குறிவைத்து தாக்கலாம். ஆனால் அந்த அச்சுறுத்தலை முற்றிலும் அகற்றுவது எளிதல்ல. நீடித்த போர் இரானுக்கு மட்டுமல்ல, அமெரிக்க ஆயுத இருப்பு மற்றும் சப்ளைக்கும் ஒரு சவாலாக இருக்கும். ஏனெனில் இது அமெரிக்காவிலிருந்து வெகு தொலைவில் நடத்தப்படும் ஒரு போர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு இரானின் பதிலடி தாக்குதல் அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்பின் திறன் பற்றி எழுப்பும் கேள்விகள்
-
சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு
மத்திய கிழக்கில் பயங்கர சண்டை நடந்து கொண்டிருக்கு. இவங்கள் வேறை... குறுக்க, மறுக்க ஓடிக் கொண்டு இருக்கிறாங்கள். குண்டு அடிபட்டு சாகப் போறீங்கள். போய்.. ஓரமா விளையாடுங்க(டா) 😂
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
நான் இங்கே தொடர்ந்து சொல்வது தான். நாங்கள் இவரை தாரை வார்க்கும் வேலையை செய்யவே கூடாது. இவர் வெளியே போனால் இப்பொழுது இருப்பதைவிட மேலோங்கியே இருப்பார். அது எமக்கு இப்போது இருப்பதை விட அதிக இடைஞ்சல்களை தரும்.
-
புதிய உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை
கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி Mar 3, 2026 - 04:00 PM கொழும்பு பங்குச் சந்தை வரலாற்றில் ஒரே நாளில் ஏற்பட்ட மிகப்பெரிய புள்ளி வீழ்ச்சியை இன்று (03) சந்தித்தது. இதன்படி அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 1,290.68 புள்ளிகள் அல்லது 5.44 சதவீதத்தால் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் முடிவில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் 22,443.38 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது. மேலும், இன்றைய மொத்தப் புரள்வு 9.56 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொழும்பு பங்குச்சந்தையில் வரலாறு காணாத வீழ்ச்சி
-
சர்வதேச போர்க்கப்பல் அணிவகுப்பு: இந்திய கடற்படைத் தளபதியுடன் இலங்கை கடற்படைத் தளபதி பங்கேற்பு
இந்திய கடற்படையின் ஏற்பாட்டிலான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு மற்றும் MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி நிறைவடைந்து 'சாகர', 'நந்திமித்திர' கப்பல்கள் இலங்கையை வந்தடைந்தன 03 Mar, 2026 | 07:19 PM இந்தியாவின் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கிழக்கு இந்தியப் பெருங்கடல் கடற்கரையை மையமாக கொண்டு பெப்ரவரி 18 முதல் 26 வரை நடைபெற்ற MILAN - 26 பலதரப்பு கடற்படைப் பயிற்சி மற்றும் சர்வதேச போர்க்கப்பல்சள் கண்காணிப்பில் இலங்கை கடற்படையைப் பிரதிநிதித்துவப்படுத்திய இலங்கை கடற்படைக் கப்பல்களான சாகர மற்றும் நந்திமித்திர ஆகிய கப்பல்கள், பயிற்சி வெற்றிகரமாக முடிவடைந்த பின்னர், பெப்ரவரி 27ஆம் திகதி இலங்கையை வந்தடைந்ததுடன் இலங்கை கடற்படையினர் குறித்த இரண்டு கப்பல்களையும் கடற்படை மரபுப்படி கொழும்பு துறைமுகத்தில் வரவேற்றனர். பிராந்திய மற்றும் உலகளாவிய பங்குதாரர்கள் பங்குபற்றிய (United Through Oceans) என்ற கருப்பொருளின் கீழ் நடைப்பெற்ற சர்வதேச கடற்படை கண்காணிப்பிலும், (Camaraderie Cohesion Collaboration) என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்ற MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியிலும் இலங்கை கடற்படை பங்கேற்றதன் மூலம், பரஸ்பர புரிதல் மூலம் கடல்சார் பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பை வளர்ப்பதற்கும், கூட்டு அணுகுமுறை மூலம் கடல்சார் அபிலாஷைகள் மற்றும் சவால்களை நிவர்த்தி செய்வதற்கும் பதிலளிப்பதற்கும் இலங்கையின் அர்ப்பணிப்பு பிரதிபலித்தது. அதன்படி, துறைமுக அத்தியாயம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு துறைகளில் நிபுணத்துவத்தைப் பரிமாறிக் கொள்ளவும், சர்வதேச கடல்சார் மாநாட்டில் பங்கேற்கவும் தரப்பினருக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது. சாகர மற்றும் நந்திமித்திர கப்பல்களின் அங்கத்துவ குழுவினர்கள், கலாச்சார நடவடிக்கைகள், தொழில்முறை தொடர்புகள், போர்க்கப்பல்களின் செயல்பாட்டுத் தயார்நிலை குறித்த கண்காணிப்பு சுற்றுப்பயணங்கள், சர்வதேச நகர அணிவகுப்பு மற்றும் உணவு கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இந்தப் பயிற்சி, இரு தரப்பினருக்கும் இடையிலான ஒத்துழைப்பையும் நட்பையும் மேலும் மேம்படுத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை கடற்படை இசைக்குழு மற்றும் நடனக் குழுவும் இந்த வண்ணமயமான நிகழ்விற்கு பங்களித்தன. MILAN-26 பலதரப்பு கடற்படைப் பயிற்சியின் சமுத்திரஅத்தியாயம், கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையேயான இயங்குதன்மை மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும், அறிவைப் பரிமாறிக் கொள்வதையும் நோக்கமாகக் கொண்ட சிக்கலான கடற்படைப் பயிற்சிகளைக் கொண்டிருந்ததுடன், நட்பு நாடுகளைச் சேர்ந்த 18 போர்க்கப்பல்கள் மற்றும் 29 விமானங்கள் உட்பட 42 நீர்மூழ்கிக் கப்பல்கள் பங்கேற்ற இந்தப் பயிற்சியில், போர் அமைப்புகளில் கப்பல்கள் நகருதல், துப்பாக்கிச் சூடு பயிற்சிகள், நீருக்கடியில் போர் பயிற்சிகள் மற்றும் கப்பல்களில் உலங்கு வானூர்திகளை தரையிறக்குதல் உள்ளிட்ட பல பயிற்சிகளும் இடம்பெற்றன. மேலும், பல பிராந்திய மற்றும் உலகளாவிய கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படையினர் பங்கேற்கும் இத்தகைய கடற்படைப் பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம், கடல்சார் பாதுகாப்பு தொடர்பான பிராந்திய மற்றும் உலகளாவிய தரப்பினருடன் ஒரு கூட்டு அணுகுமுறையில் பணியாற்றுவதில் தேவையான பரஸ்பர ஒத்துழைப்பை வளர்ப்பது, கடல்சார் செயல்பாடுகள் தொடர்பான புதிய அறிவு, திறன்கள், சிறந்த நடைமுறைகள், மூலோபாய உத்திகள் மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வது, புதிய சவால்களைக் கண்டறிதல் மற்றும் அவற்றுக்கான தீர்வுகளை கூட்டாகக் கண்டறிய முடிவது போன்ற பல நன்மைகள் உள்ளன. இந்திய கடற்படையின் ஏற்பாட்டிலான சர்வதேச கடற்படை மதிப்பாய்வு
- Today
-
மத்தியகிழக்கின் போர் நிலைமை காரணமாக கொழும்பில் இன்றும் 57 விமானங்கள் ரத்து!
இலங்கையை விட்டு வெளியேறமுடியாமல் அகப்பட்டுள்ள வெளிநாட்டவர்களின் இலங்கை வீசா இலவசமாக இரண்டு கிழமைகளுக்கு நீடிக்கப்படுவதாக ஒரு தகவல் அறிந்தேன்.
-
தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
MP ஆகாமல் மக்களால் நிராகரிக்கப்பட்டவருக்கு, அமைச்சராக ஆசை. 😂
-
இரசித்த.... புகைப்படங்கள்.
- ரோஜா முள்.
முன்பு போல்... பொறுமையாக இருந்து, கோர்வையாக எழுதுவதற்கு நேரம் கிடைத்தாலும்... ஏனோ தெரியவில்லை, மனம் ஒன்றிப் போக மறுக்கின்றது. கூடிய விரைவில்.... இரண்டாம் பாகத்தை எழுத முயற்சிக்கின்றேன். அதுவரை பொறுமை காக்கவும் நண்பர்களே... ❤️- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
சுத்துமாத்து சுமந்திரனை இப்போது எவரும் கணக்கில் எடுப்பதில்லை. அந்தளவுக்கு மக்களின் வெறுப்பை சம்பாதித்து வைத்துள்ளார். சமூக ஊடகங்களில்... இவருக்கு விழும் பேச்சுக்களை காத்து கொடுத்து கேட்க முடியாத அளவிற்கு திட்டித் தீர்க்கிறார்கள். இவர்.... பல தோல்விகளை சந்தித்ததால், மனதளவில் மிகவும் பாதிக்கப் பட்டு, வைத்திய சிகிச்சை எடுக்க வேண்டிய நிலையில் உள்ளதாக பலரும் சொல்கிறார்கள்.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
சாதிய ஒடுக்குமுறையும் 1948 உடன் ஒப்பிடும் போது மிக, மிக, மிக முன்னேற்றமான நிலையில்தான் உள்ளது. இரெட்டை டம்ளர் முறை பரவலாக இருந்தது, பெயர்களுக்கு பின்னால் சாதி போடும் பழக்கம், ஆண்டுக்கொரு சாதிக்கலவரம் என இருந்த நிலை இப்போ இல்லை. இன்னமும் கனதூரம் இருக்கு, ஆனால் கடந்து வந்த தூரமும் கொஞ்சமல்ல. பொருளாதர, கல்வி, உள்கட்டுமான, சுகாதார வளர்ச்சி…சாதாரண வளர்ச்சி இல்லை. அசுர வளர்ச்சி. அதுவும் எம்முடன் ஒப்பிடும் போது.- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
ஈரானை அண்மித்து 32 முஸ்லீம் நாடுகள். அதில் 20 நாடுகள் தங்களது விமான படைத் தளத்தையும், கப்பல் படைத் தளத்தையும்... ஈரானுக்கு அடிக்க, அமெரிக்காவுக்கு கொடுத்துள்ளார்கள். இது எல்லாம்... நம்ம ஊர் **** முஸ்லீம்களுக்கு தெரிந்தும், தெரியாத மாதிரி... நடிப்பார்கள். நம் ஊர் முஸ்லீம்கள்.... தமிழனை, சிங்களவன் அடித்தால்... வெடி கொளுத்தி கொண்டாடுவார்கள். இவ்வளவுக்கும் அவர்கள் பேசுவதும் தமிழ். ஆனால்... தமிழனை சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சிங்களவனுடன் சேர்ந்து கொலை செய்து வந்தவர்கள். சக தமிழனின் இறப்பில் மகிழ்ச்சி அடைந்தவர்கள்.... எங்கோ பல ஆயிரம் கிலோ மீற்றருக்கு அப்பால் இருக்கும்... 80 வயது கிழவன் செத்ததுக்கு துக்கம் கொண்டாடுகின்றார்கள். இந்த முஸ்லீம்களால்... உலகமே நிம்மதி இன்றி தவிக்கின்றது. நேர்மையும், அறமும்... அறவே அற்ற இனம் இது.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
உக்ரெய்ன் ரஷ்ய போர் ஆரம்பித்தபின் மரபுவழிப் போரில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இராணுவ வீரர்கள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. ட்றோன்கள்தான் இராணு வீரர்களின் எதிரி. ரஷ்யா இதுவரை ஸ்ரார்லிங்கை (அமெரிக்கத் தொழில்நுட்பம்) களமுனையில் அதிகம் நம்பியிருந்தத. ட்றோன்கள், கண்காணிப்பு, களமுனைத் தொடர்பாடல்கள் எல்லாவற்றிற்கும் இது அவசியமாக இருந்தது. கடந்த ஒரு மாதமாக ஸ்ரார்லிங்க் மட்டுப்படுத்தப்பட்டபோது களாமுனையில் மாற்றங்கள் தெரிகின்றன. ரஷ்யாவின் Yamal-602 அதிக பலன் தரவில்லை. இந்த ஒரு மாதத்தில் குண்டுவீச்சுக்களையே அதிகம் நம்பியுள்ளதால் போர் ஆரம்பித்ததிலிருந்து காணாத அளவு மிக மந்தமாக ரஷ்யா முன்னேறியுள்ளதது. ஈரானுக்கு இத்தகைய தொழில்நுட்பம் இல்லாவிட்டால் மரபுவழிப் போரை முன்னெடுக்க முடியாது. இக் கருத்து, அமெரிக்கா தரைவழித் தாக்குதலில் குதிக்கும் என்ற அர்த்தத்தில் எழுதவில்லை.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
பிரித்தானிய நேரப்படி நாளை புதன் (04 பெப்), நாளை மறுதினம் வியாழன் (05 பெப்) இரண்டு அரையிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன. புள்ளிகள் பின்வருமாறு வழங்கப்படும். போட்டியில் வெற்றிபெறும் அணியை ஏதாவது ஒரு அரையிறுதிப் போட்டியில் சரியாகக் கணித்திருந்தால் மூன்று புள்ளிகள் வழங்கப்படும். போட்டியில் ஈடுபடும் அணிகளைச் சரியாகக் கணித்திருந்தும், வெல்லும் எனக் கணித்த அணி தோற்றால் புள்ளிகள் கிடைக்காது அரையிறுதிப் போட்டிகளுக்கு தகுதியடையாத அணிகளை வெல்லும் எனக் கணித்திருந்தால் புள்ளிகள் கிடையாது போட்டி மழை காரணமாகக் கைவிடப்பட்டால் ஒருவருக்கும் புள்ளிகள் கிடையாது. யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: புதன் 04 மார்ச்: 1:30 PM, ஏடென் கார்டன்ஸ், தென்னாபிரிக்கா எதிர் நியூஸிலாந்து SA எதிர் NZ போட்டியாளர் பதில் செம்பாட்டான் AUS ஏராளன் IND வசீ AUS புலவர் AUS சுவைப்பிரியன் AUS அல்வாயன் AUS ஈழப்பிரியன் IND நியூ பலன்ஸ் IND வாத்தியார் AUS கறுப்பி AUS வாதவூரான் IND வீரப் பையன்26 PAK சுவி IND கிருபன் SA கோஷான் சே SA அஹஸ்தியன் IND கந்தப்பு IND நியாயம் AUS எப்போதும் தமிழன் IND ரசோதரன் IND பிரபா IND நிலாமதி IND நந்தன் AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் 05 மார்ச்: 1:30 PM, வாங்கெடே, இங்கிலாந்து எதிர் இந்தியா ENG எதிர் IND போட்டியாளர் பதில் செம்பாட்டான் IND ஏராளன் AUS வசீ IND புலவர் IND சுவைப்பிரியன் ENG அல்வாயன் IND ஈழப்பிரியன் ENG நியூ பலன்ஸ் ENG வாத்தியார் IND கறுப்பி IND வாதவூரான் SL வீரப் பையன்26 IND சுவி ENG கிருபன் IND கோஷான் சே ENG அஹஸ்தியன் SA கந்தப்பு AUS நியாயம் IND எப்போதும் தமிழன் SA ரசோதரன் AUS பிரபா ENG நிலாமதி AUS நந்தன் IND இரு அரையிறுதிப் போட்டிகளிலும் உள்ள தெரிவுகளின்படி: தென்னாபிரிக்கா அணி வெல்லும் 04 பேர் கணித்துள்ளனர். நியூஸிலாந்து அணி வெல்லும் என எவரும் கணிக்கவில்லை. இங்கிலாந்து அணி வெல்லும் என 06 பேர் கணித்துள்ளனர். இந்திய அணி வெல்லும் என 21 பேர் கணித்துள்ளனர். இரு அரையிறுதிப் போட்டிகளிலும் எவருக்குப் புள்ளிகள் கிடைக்கும்?- அயத்துல்லா அலி காமெனி மறைவு: சம்மாந்துறையில் துக்கக் கொடியேற்றம்!
சென்ற ஞாயிற்றுக்கிழமை இரவு நான் வேலை செய்யும் உணவகத்தில் ஈரானியர்களால் நிரம்பி வழிந்தது.கிட்டத்தட்ட 50,60 பேர் வரும். சிலர் இனிப்புகளை பரிமாறிக்கொண்டார்கள். எல்லோரும் ஆட்டு இறைச்சி,கோழி,வாத்து இறைச்சியென ஒரு புடி புடித்தார்கள். சாப்பாட்டின் பின்னர் பழங்கள் கலந்த ஐஸ்,தனி ஐஸ் என ஒரே அமர்க்களப்படுத்தி விட்டார்கள். எங்களுக்கு அந்தமாதிரி வருமானம்.😂 இப்பிடி நாளுக்கொரு அயத்துல்லா போனால்........😎- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் சொல்வது போல் வளர்ச்சியடைந்து என்ன பிரயோசனம்? சாதி கொடுமைகளும் சாதி கொலைகளும் குறைந்தபாடில்லை.தமிழ் மக்களுக்குள் பல இனக்குழுக்கள்.சாதிக்கொரு கட்சி. இனக்குழுக்களுக்கென ஏராளமான கட்சிகள்.பிச்சைகாரர்களும் குறைந்தபாடில்லை. உலகில் ஓரளவிற்கு எல்லா இடங்களும் வளர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
கண்ணிலே இருப்பதென்ன ........! 😍- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
வணக்கம் வாத்தியார் . ........! இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் ஆண் : { உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி } (2) ஆண் : என் கண்ணில் பாவை அன்றோ கண்ணம்மா என்னுயிர் நின்னதன்றோ ஆண் : { உன்னை கரம் பிடித்தேன் வாழ்க்கை ஒளிமயம் ஆனதடி } (2) ஆண் : உன்னை மணந்ததனால் சபையில் புகழும் வளர்ந்ததடி ஆண் : கால சுமைதாங்கி போலே மார்பில் எனை தாங்கி வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் இன்னல் தணியுமடி ஆண் : { ஆழம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்தும் என்ன } (2) வேர் என நீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன் ஆண் : முள்ளில் படுக்கையிட்டு இமையை மூடவிடாதிருக்கும் பிள்ளை குலமடியோ என்ன பேதமை செய்ததடி ஆண் : { பேருக்கு பிள்ளை உண்டு பேசும் பேச்சுக்கு சொந்தமுண்டு } (2) { என் தேவையை யார் அறிவார் } (2) உன்னை போல் தெய்வம் ஒன்றே அறியும் .........! --- உன் கண்ணில் நீர் வழிந்தால் ---- தமிழர்களின் அபிலாசைகளை முன்னிறுத்தி நீதியமைச்சர் பதவி அழைப்பை நிராகரித்தேன்; ஒருபோதும் சுயதேவைகளின் அடிப்படையில் செயற்படவில்லை - சுமந்திரன்
உண்மையாவா.?🤭- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
கடந்த காலங்களில் ஈராக், அப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளுக்குள் அமெரிக்கா மரபுவழியாகத் தலையிட்டு ஈற்றில் முடிவின்றி வெளியேறியது போல ஈரானிலும் நடந்துவிடக்கூடாதென்ற காரணத்தினாலேயே அமெரிக்கத் துருப்புக்களை ஈரானிற்குள் இறக்கும் நோக்கம் அதற்கு இல்லை என்று கூறப்படுகிறது. இப்படிச் சொல்வதால் அமெரிக்கா ஈரானிடம் தோற்றுவிடும் என்பதல்ல, மாறாக நீண்டகாலமாக இப்போர் தொடருமாக இருந்தால், அமெரிக்காவிற்கு ஏற்படக் கூடிய ஆள்ப்பல இழப்பு, பணவிரயம் ஆகியவற்றை கருத்திற்கொண்டே இதனைத் தவிர்க்க விரும்புகிறார்கள். நீங்கள் ஈராக் மற்றும் அப்கானிஸ்த்தான் மீதான போர்களை பார்த்தாலும், இவ்விரு போர்களிலும் முற்றான ராணுவ வெற்றியை ஆரம்பத்தில் அமெரிக்க ஈட்டியிருந்தது. இந்த நாடுகளை தனது பூரண கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்கா கொண்டுவந்திருந்தது. ஆனால் "அதன்பின்னர் என்ன எனும் கேள்வியில்த்தான்" இப்போர்கள் முற்றான மூலோபாய வெற்றியை கொடுத்தனவா இல்லையா என்கிற பேச்சு எழுகிறது.- ஈரான் மீது பாரிய இராணுவ நடவடிக்கை ஆரம்பம் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு!
தற்போதைய நிலையில் அமெரிக்கா பலமான நாடாகத் தெரியவில்லை என்றால், இப்போதிருக்கும் பலமான நாடு எதுவாக இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? ரஸ்ஸியாவா அல்லது சீனாவா? மரபுவழிச் சமர் ஒன்றினை ஈரானுடன் நடத்த முடியாது என்று எதனை வைத்து அளவிடுகிறீர்கள்? The United States could overwhelmingly defeat Iran in a conventional military confrontation (meaning a straightforward fight between regular armies and forces) because of the huge gap in resources, technology, and global power-projection capabilities. 🇺🇸 U.S. Military Advantages The U.S. has vastly more manpower, advanced aircraft, naval power, missiles, and global logistics than Iran. Analysts rank the U.S. as the world’s most powerful military and Iran as a strong regional power, but not one that can match U.S. forces head-to-head. In a pure conventional fight — large-scale air strikes, naval blockades, missile barrages — American forces could destroy or neutralize many of Iran’s military assets. The U.S. also has far greater capacity to project force globally (aircraft carriers, long-range bombers, satellites, advanced cyber capabilities). 🇮🇷 Iran’s Strategy and Limits Iran’s strength is not in conventional forces aimed at defeating a superpower on the battlefield; it has focused instead on asymmetric tools: ballistic missiles, drones, cyber tactics, naval mines, fast attack boats, and regional proxy militias. These capabilities would not enable Iran to win a direct conventional war, but they could impose significant costs, disrupt U.S. operations, and complicate the conflict.- "நடிகையுடன் தொடர்பு! மன உளைச்சல்!" விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா மனு!
நீங்கள் எங்கே எழுதுவது, என்ன எழுதுவது என்பது உங்கள் இஸ்டம்தான். ஆனால் - நிர்வாகத்கை விமர்சிக்க மட்டுமே எழுதுகிறீர்கள் என்பதை சுட்டிகாட்ட வேண்டிய தேவை இருக்கிறது. அதன் அடிப்படையில் மேலே உள்ள விமர்சனங்களை வாசககள் எடை நிறுத்து கொள்ளட்டும். அதேபோல் அரசியல்வாதிகள், பணமுதலைகள் நடத்தும் ஊடகங்களுக்கு மத்தியில் இன்றளவும் நம்பகமான ஒரே தமிழ் ஊடக பரப்பாக இருப்பது யாழ் மட்டுமே. அதையும் இன்னொரு குப்பை ஊடகம் என்பது போல் சிருஸ்டிக்க முனையிம் போது அதையும் சுட்டி காட்ட வேண்டியதாகிறது. #காரணமாய்தான் வேர்கிறது😂 1948 இல் இருந்து தமிழ் நாடு அடைந்த வளர்சியையும்… அதே காலப்பகுதியில் ரிவேர்ஸ் கியரில் மட்டுமே போய் கொண்டிருக்கும் நம்மையும் ஒப்பிட்டால்… யார் பாமர முட்டாள் வாக்காளர் என்பது புரியும்😂 - ரோஜா முள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.