All Activity
- Past hour
-
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு ; மூன்று பேர் உயிரிழப்பு
அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு; மூன்று பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 03:52 PM அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இரண்டு பெண்களும் ஆணொருவருமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் கார்கெல்லிகோ வாவி அமைந்துள்ள நகரில் இன்று வியாழக்கிழமை (22) அந்நாட்டு நேரப்படி சுமார் 4:40 மணிக்கு இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த நபரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் நிலை கவலைக்கிடமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் எனவும், உள்ளூர்வாசிகள் உள்ளேயே இருக்க வேண்டும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தலைமறைவாகியுள்ளதோடு, பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த சம்பவம் குடும்ப வன்முறையால் இடம்பெற்றிருக்கலாம் இருக்கலாம் என நம்பப்படுவதாக சிட்னி மார்னிங் ஹெரால்டு செய்தி வெளியிட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் உள்ளூர் கவுன்சிலுக்குச் சொந்தமான வாகனத்தில் சம்பவ இடத்திலிருந்து தப்பிச் சென்றதாக செவன் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸின் மாநிலத்தின் மத்தியில் அமைந்துள்ள கார்கெல்லிகோ வாவி நகரத்தில் சுமார் 1,500 பேர் வசிக்கின்றனர். கடந்த மாதம் சிட்னியின் போண்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னரல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/236716
-
-
📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
கீழே உள்ள தலைப்பிற்கும், தொடர்பு இருப்பதால்... இங்கே இணைத்துள்ளேன்.
-
📢 “மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை ஓரங்கட்டி, கட்சிப் பிரதிநிதிகளை நியமிப்பது சட்டவிரோதமானது!” சுரேஷ் பிரேமச்சந்திரன் கண்டனம்!
கருத்து... கந்தசாமிகளை, இந்தப் பக்கம் காணோம். 😂 ஓ... எந்த முகத்துடன் இந்தப் பக்கம் வருவது என்ற கூச்சம் இருக்கத்தானே செய்யும். கீழே உள்ள தலைப்பிற்கும், தொடர்பு இருப்பதால்... இங்கே இணைத்துள்ளேன்.
-
நாட்டை கட்டியெழுப்பும் தேசிய நிதியத்திற்கு ‘Rebuilding Sri Lanka’ பல்வேறு அமைப்புகள் நன்கொடை
‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு COLOMBO STOCK EXCHANGE (GL 12) இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை Published By: Vishnu 22 Jan, 2026 | 07:41 PM ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு COLOMBO STOCK EXCHANGE (GL 12) இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை COLOMBO STOCK EXCHANGE (GL 12) தலைவர் திமுது அபேசேகர, பிரதான நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க மற்றும் சிரேஷ்ட உப தலைவர் குசல் நிசங்க ஆகியோர், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளித்தனர். https://www.virakesari.lk/article/236731 ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் நிதி நன்கொடை Published By: Vishnu 22 Jan, 2026 | 07:58 PM ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு CORZENT EDGE (PVT) LTD இனால் 25 இலட்சம் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை, CORZENT EDGE (PVT) LTD இன் பிரதம நிறைவேற்று அதிகாரி சமீர குணசிங்க மற்றும் Cato Eliassen (Managing Director, Contracting Works) ஆகியோர் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் அண்மையில் கையளித்தனர். https://www.virakesari.lk/article/236732
-
சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா? நிபுணர்கள் விளக்கம்
சென்னையில் இயல்புக்கு மாறான குளிர் நிலவுகிறதா? நிபுணர்கள் விளக்கம் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சாலைகளில் தற்போது பகல் வேளையிலும் பலர் ஸ்வெட்டர் அணிந்துகொண்டு செல்வதை பார்க்க முடிகிறது. அதேபோன்று, ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் புல்வெளிகளில் பனி போர்த்தியது போன்று உறைபனியை காண முடிகிறது. ஜனவரி மாதம் முடிய இன்னும் 8 தினங்களே உள்ள நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் குளிர் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருப்பதை உணர முடிகிறது. ஜனவரி 18ம் தேதி சென்னை விமான நிலையத்தில் பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை 19 டிகிரி செல்சியஸ். இது கடந்த சில தினங்களில் சென்னையில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலை. அதே பகுதியில் ஜனவரி 20 அன்று குறைந்தபட்ச வெப்பநிலை 19.3 டிகிரி செல்சியஸ். இப்படி, கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை சென்னையின் குறைந்தபட்ச வெப்பநிலையை எடுத்துக்கொண்டால், சில மாறுபாடுகள் இருந்தாலும் சராசரியாக 19-20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டியே உள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சென்னை கூவம் ஆறு '20 டிகிரி அல்லது அதற்கும் கீழே' சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தில் பரவலாகவே இத்தகைய குளிரான வானிலை நிலவிவருகிறது. ஜனவரி 20ம் தேதி நிலவரப்படி, குறைந்தபட்ச வெப்பநிலை வேலூரில் 15.8, தருமபுரியில் 16.5, கோயம்புத்தூர் 18.8, திருச்சி 19, சேலத்தில் 18.4 டிகிரி செல்சியஸாக இருந்தது. மலைப்பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஊட்டியில் 6.8, கொடைக்கானலில் 6, குன்னூரில் 9 டிகிரி செல்சியஸாக உள்ளது. கடலோர மாவட்டங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை நாகப்பட்டினத்தில் 19, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 19.4, சென்னை மீனம்பாக்கத்தில் 19.3 டிகிரி செல்சியஸாக உள்ளது. இந்த எண்களை உற்றுநோக்கினால், மலைப்பகுதிகள் மட்டுமல்லாமல் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை சராசரியாக 20 டிகிரி அல்லது அதற்கும் கீழே இருப்பதைக் காணலாம். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த டிசம்பர் மாத இறுதியில் சென்னை புறநகர் பகுதியில் எடுக்கப்பட்ட படம். ஜனவரி 20 அன்று மதியம் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட 24 மணிநேரத்திற்கான வானிலை அறிவிப்பின்படி, சமவெளி பகுதிகளில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் குறைந்தபட்ச வெப்பநிலை 15.2 டிகிரி செல்சியஸ். மலைப்பகுதிகளில் கொடைக்கானலில் 6 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியிருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது டி20 உலகக் கோப்பை - 'இந்தியாவில் விளையாடப்போவதில்லை' என வங்கதேசம் அறிவிப்பு எல்ஐசி அலுவலகத்தில் 'தீ வைத்து கொல்லப்பட்ட' மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர் உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? பாகிஸ்தான் - சௌதி பாதுகாப்பு கூட்டுக்கு பதிலடியாக இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்று சேர்கிறதா? End of அதிகம் படிக்கப்பட்டது தமிழகத்தில் கடந்த பத்தாண்டு காலத்தில் ஜனவரி மாதத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை என்னவாக இருந்தது என்பதை சென்னை வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் உள்ள தரவுகளை வைத்து ஒப்பிட்டோம். உதாரணமாக, சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த பத்தாண்டு கால குறைந்தபட்ச வெப்பநிலை எப்படி இருந்தது என்பதை கீழே உள்ள படத்தில் அளித்துள்ளோம். என்ன காரணம்? சென்னை உட்பட தமிழகம் முழுவதும் குளிர்ந்த வானிலை தொடர்வது ஏன் என, தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜானிடம் கேட்டோம். "மேகமூட்டம் குறைவாக இருக்கும்போது தரையின் வெப்பநிலை குறைந்து குளிர் அதிகமாக இருக்கும். தமிழகத்தில் தற்போது நிலவும் குளிர் அசாதாரணமானது அல்ல, பொதுவான ஒன்றே. ஆனால், கடந்த 5 ஆண்டு கால தரவுகளை பார்த்தால், இப்போது குளிர் அதிகமாக இருக்கிறது. அதற்கு முன்பு சென்னை உட்பட பல மாவட்டங்களில் இதைவிட குளிர் இருந்திருக்கிறது. வேலூர், தருமபுரியில் கடந்த சில ஆண்டுகளைவிட குளிர் அதிகமாக இருக்கிறது." என தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஊட்டி இது இயல்புக்கு மாறான குளிர் என கூற முடியாது என்ற பிரதீப் ஜானின் கருத்தையே மற்றொரு தனியார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்தும் கூறுகிறார். "இதை இயல்புக்கு மாறான குறைந்த வெப்பநிலை என சொல்ல முடியாது. ஆனால், இரவு நேர வெப்பநிலை சற்று குறைவாகத்தான் இருக்கிறது. ஆனால், இது புதிதல்ல. தமிழகத்தை பொருத்தவரை வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தான் எப்போதும் குளிர் அதிகரிக்க ஆரம்பிக்கும். வடகிழக்கு பருவமழை காலத்தில் கிழக்கு திசையிலிருந்து காற்று வரும். கிழக்கு திசை காற்றில் எப்போதும் ஈரப்பதம் இருக்கும். அப்போது மேகமூட்டமான சூழல் நிலவும் என்பதால், இரவு நேர வெப்பநிலை குறைவாக இருக்காது. இப்போது வடகிழக்கு பருவமழை கிட்டத்தட்ட விடைபெற்றுவிட்டது. ஆனால் மேகமூட்டம் இல்லாததால் இரவு நேர வெப்பநிலை குறைவாக இருக்கிறது." என்றார் இதே நிலை தொடருமா? ஜனவரி 22ம் தேதி வரையில் தமிழகம், புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவும் என்றும் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜனவரி 25, 26 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளிலும் புதுவை, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த சமயத்தில் லேசான மழை அல்லது மேகமூட்டம் ஏற்படும்போது, இயல்புநிலையிலோ அல்லது அதற்கு சற்று அதிகமான வெப்பநிலையோ நிலவும் என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,கடந்த வார வியாழக்கிழமை டெல்லியில் குறைந்தபட்சமாக 2.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவியது. வீடற்றவர்கள் நெருப்பு மூட்டி குளிர்காய்கின்றனர். "மழை முடிந்த பிறகு வடதிசையிலிருந்து காற்று வீசும் என்பதால் இரவு நேர வெப்பநிலை மீண்டும் குறைய ஆரம்பிக்கும். இதன் போக்கு இப்படித்தான் இருக்கும்." என்கிறார் வானிலை ஆர்வலர் ஸ்ரீகாந்த். இதையே பிரதீப் ஜானும் கூறுகிறார். "ஜனவரி 25ம் தேதி வாக்கில் தமிழ்நாட்டில் பரவலாக ஓரிரு தினங்களுக்கு லேசான மழை பெய்யக்கூடும்" என தெரிவித்த பிரதீப் ஜான், "அப்போது, இரவு நேர வெப்பநிலை அதிகரித்து பின்னர் மீண்டும் குறையக்கூடும்" என கூறியுள்ளார். என்றாலும், அடுத்தடுத்த ஆண்டுகளில் டிசம்பர்-ஜனவரி மாதங்களில் இப்படியே வெப்பநிலை குறைந்துகொண்டே போகும் என சொல்ல முடியாது எனக்கூறுகிறார் அவர். சென்னை வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றிய பாலச்சந்திரன் பிபிசியிடம் பேசுகையில், "வடக்கு திசையிலிருந்து வரும் காற்றின் காரணமாக குளிர் அதிகமாக இருக்கிறது. உதாரணமாக, 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை நிலவுகிறது என்றால், வடதிசை காற்றுடன் சேர்ந்து அது 10 டிகிரி செல்சியஸாக இருக்கும்." என்றார். தமிழகத்தில் குளிர் அலைகளின் தாக்கமா? பொதுவாக, குளிர் அலைகள் வட இந்தியாவின் சில மாநிலங்கள் மற்றும் மத்திய இந்தியாவின் சில பகுதிகளில் நிலவும். குளிர் அலை என்றால் என்ன என்பதற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு வரையறையை வைத்துள்ளது. அதன்படி, மனித உடல் தாங்க முடியாத அளவிலான மிகக் குறைந்த வெப்பநிலையே குளிர் அலைகள் எனப்படுகிறது. அதன்படி, சமவெளி பகுதிகளில் 10 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையும் மலைப்பகுதிகளில் 0 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கும் கீழான வெப்பநிலையும் நிலவும்போது அவை குளிர் அலைகள் என வரையறுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால், தமிழகத்தில் தற்போது நிலவுவது குளிர் அலைகள் அல்ல. தமிழகத்தில் குளிரான வானிலை தற்போதுவரை தொடர்வதற்கும் காலநிலை மாற்றத்திற்கும் தொடர்பு உண்டா என பாலச்சந்திரனிடம் கேட்டோம். "காலநிலை மாற்றம் காரணமாக பல விஷயங்கள் நடக்கின்றன. 40-45 ஆண்டுகளில் இருந்த சூழல் இப்போது இல்லை. எனவே, வானிலை மாற்றத்தில் அதன் தாக்கம் இருக்கலாம். எனினும், பல ஆண்டுகளாக நிலையாக வானிலை மாறிவரும்போதுதான் அதை அறுதியிட்டு கூற முடியும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rm3k7nmvxo
-
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன்
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு நீதி அவசியம் - பிரித்தானிய தைப்பொங்கல் நிகழ்வில் உமா குமரன் Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 04:06 PM பிரித்தானியாவில் வாழும் தமிழர்களின் சமூக, பொருளாதார மற்றும் பண்பாட்டு பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், லண்டனில் உள்ள பிரதமரின் உத்தியோகபூர்வ இல்லமான நம்பர் 10 டவுனிங் ஸ்ட்ரீட்டில் வெள்ளிக்கிழமை (16) தைப்பொங்கல் வரவேற்பு நிகழ்வு நடைபெற்றது. பிரித்தானிய வசிக்கும் சமூகங்களுக்கான செயலாளர் ஸ்டீவ் ரீட் மற்றும் இலங்கை தமிழ் வம்சத்தைச் சேர்ந்த முதல் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினரான உமா குமரன் ஆகியோர் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். பிரித்தானியாவில் தொழிற்கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக டவுனிங் ஸ்ட்ரீட்டில் தைப்பொங்கல் கொண்டாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. முன்னதாக கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சிக் காலத்திலும் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்ததுடன், தற்போது இது பிரித்தானிய அரசியல் நாட்காட்டியில் ஒரு வருடாந்த நிகழ்வாக நிலைபெற்றுள்ளது. இந்த வரவேற்பு நிகழ்வில் பிரித்தானிய தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரதிநிதிகள், சமூக தலைவர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள், அரச பணியாளர்கள் மற்றும் வணிகத் துறையைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தலைமுறை தாண்டி பல துறைகளில் பிரித்தானிய சமூக வளர்ச்சிக்கு தமிழர்கள் வழங்கி வரும் பங்களிப்பை இந்த நிகழ்வு பிரதிபலித்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உமா குமரன் தனது உரையில், இந்த நிகழ்வு அங்கீகாரத்தையும் புதுப்பிப்பையும் குறிக்கும் ஒன்றாகும் என தெரிவித்தார். “பிரித்தானிய தமிழர் சமூகத்தின் வெற்றி, நவீன பிரித்தானியாவின் வாக்குறுதியையும் தமிழ் புலம்பெயர் சமூகத்தின் திடநம்பிக்கையையும் உறுதியையும் வெளிப்படுத்துகிறது,” என அவர் கூறினார். தனது பெற்றோர் இலங்கையில் இழந்த வாய்ப்புகளை மீண்டும் கட்டியெழுப்ப பிரித்தானியாவில் கடினமாக உழைத்ததாகவும், அந்தக் கதையே லண்டன் முழுவதும் மற்றும் பிரித்தானியாவின் பல பகுதிகளில் வாழும் தமிழர்களுக்குப் பொதுவான ஒன்றாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். தைப்பொங்கல் அறுவடையையும் நம்பிக்கையையும் குறிக்கும் திருநாளாகும் என அவர் குறிப்பிட்டதுடன், “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற தமிழ் பழமொழி புதிய ஆண்டிற்கான புதுமையும் முன்னேற்றத்தையும் குறிக்கிறது என்றார். மேலும், இலங்கையில் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் பெருந்தொகை மனித உரிமை மீறல்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற தனது அரசின் நிலைப்பாட்டையும் அவர் வலியுறுத்தினார். இதன் ஒரு பகுதியாக, போர் குற்றவாளிகளுக்கு எதிராக பிரித்தானிய வெளிவிவகார அலுவலகம் விதித்துள்ள தண்டனைகளையும் அவர் சுட்டிக்காட்டினார். https://www.virakesari.lk/article/236721
-
ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் - தயாசிறி
ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் - தயாசிறி Jan 22, 2026 - 05:00 PM அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுபான்மை கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரன் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார். எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை தூக்கி ஆதரவு வழங்குகின்றார். அவர் தவறான நபர்களை பதவியில் நியமிப்பதற்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளார். தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது ஶ்ரீதரன் ஆதரவு வழங்குகிறார். அவர் அதற்கான நியாயப்பாடுகளையும் அறிவிக்கவில்லை. சூரிய மின் சக்தி வேலைத்திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு விடயத்துடன் தொடர்புப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து தற்போது ஶ்ரீதரன் சாரங்கனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது. பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சிக் கூட அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த பேரவைக்கு நியமிக்கப்பட்ட அவர், அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்கிறார். அது மாத்திரமல்ல அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. கணக்காய்வாளர் நியமனம், இழப்பீட்டு அலுவலகங்களுக்கான நியமனத்தில் இராணுவ பின்புலம் கொண்ட இருவரது நியமனத்திற்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. வடக்கு மக்களின் வாக்கில் பாராளுமன்றம் வந்த அவர், அவர்களுக்கு எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது. எனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்து எஸ்.ஶ்ரீதரன் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmkpdeulv049ro29n5yxymq64
-
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
ஓம்.... இது, "மிக்சர்" தின்னுகிற சபை.
-
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
முன்பும் ஒரு நீலக்கல், 600 கோடி ரூபாய் பெறுமதி என்று, சுவிற்சலாந்துக்கு, கொண்டு போய் விற்கப் போனால், அதை சாதாரண கல் என்று, திருப்பி அனுப்பி விட்டார்கள். விசேட விமானத்தில் அதை கொண்டு போன காசும் நட்டமாகி. இப்போ... அந்தக் கல்லில் யார், துணி துவைக்கின்றார்களோ... 😂
-
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
காணியா? செல்பியா? செல்பி முக்கியம் குமாரூ.
-
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து உத்தியோகபூர்வமாக வெளியேறியது அமெரிக்கா Published By: Digital Desk 3 22 Jan, 2026 | 02:59 PM உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அமெரிக்கா இன்று வியாழக்கிழமை (ஜன 22) உத்தியோகபூர்வமாக வெளியேறுகிறது. இது உலகளாவிய ரீதியிலும் அமெரிக்காவிலும் சுகாதாரப் பாதுகாப்பில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் 2025 ஆம் ஆண்டில் தனது பதவிக்காலத்தின் முதல் நாளிலேயே, ஒரு நிர்வாக உத்தரவின் மூலம் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து தாம் விலகப்போவதாக அறிவித்தார். அமெரிக்க சட்டப்படி, விலகுவதற்கு ஒரு ஆண்டுக்கு முன்னரே அறிவிக்க வேண்டும் மற்றும் நிலுவையில் உள்ள அனைத்துக் கட்டணங்களையும் செலுத்த வேண்டும். அமெரிக்கா செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் நிலுவைத் தொகையை வழங்காமல் விலகுவது சட்ட மீறல் என்று சட்ட நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். உலக சுகாதார ஸ்தாபனம் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதில் தோல்வியடைந்ததால் அமெரிக்காவிற்கு டிரில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறி, நிதி வழங்கலை நிறுத்துவதாக அமெரிக்க வெளிவிவகாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா வெளியேறுவதால் உலக சுகாதார ஸ்தாபனம் தனது முகாமைத்துவக் குழுவைப் பாதியாகக் குறைத்துள்ளதுடன், இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் கால்வாசி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளது. "அமெரிக்கா தனது தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்து மீண்டும் இணைய வேண்டும். இந்த வெளியேற்றம் அமெரிக்காவிற்கும் உலகிற்கும் ஒரு இழப்பு" என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை பணிப்பாளர் வைத்தியர் டெட்ரொஸ் அதனொம் கேப்ரியஸஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்கா விரைவில் மீண்டும் அமைப்பில் இணையும் என தான் எதிர்பார்க்கவில்லை எனவும், ஆனால் உலகிற்கு உலக சுகாதார ஸ்தாபனம் அவசியமானது எனவும் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். புதிய நோய்த்தொற்றுகளைக் கண்டறிவதற்கும், தடுப்பதற்கும் உலகம் சார்ந்துள்ள கூட்டுமுயற்சிகளை இந்த விலகல் பலவீனப்படுத்தும் என பொதுச் சுகாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236709
-
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
ஒரு நாட்டுக்கும் உதவாத இந்த சபையையும் கலைக்க வேண்டும்.
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
- Today
-
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
என்ன கோப்பாலு இப்புடி கவுத்து புட்டீங்க? அடே இந்த கல்லுக்கு எத்தனை பூச்சியம் வரப் போகுது என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன். 00 இப்படியா முடியணும்.
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
நல்ல முடிவு.
-
கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
- முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது - ஆளுநரிடம் சர்வதே இந்துமத பீடம் முறைப்பாடு
22 Jan, 2026 | 03:53 PM பிரசித்தி பெற்ற முறிகண்டி விநாயகர் ஆலய பகுதியில் அமைந்துள்ள புனிதமான இடத்தில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வது அனைவரும் அறிந்தது. இந்த நிலையில் முறிகண்டி ஆலய பொது நிதியின் பங்களிப்புடன் புது குடியிருப்பு பிரதேச செயலகத்தின் ஊடாக சுமார் 80 இலட்சம் ரூபா நிதி செலவழிக்கப்பட்டு பயணிகளின் வசதிக்காக கழிப்பறை அமைக்கப்பட்டது. ஆனால் புது குடியிருப்பு பிரதேச சபையின் கவனயீனத்தால் அங்கு முறையான கழிவறை பராமரிக்கப்படாமல் பயணிகளுக்கு சுகாதார சீர்கேடான நிலையில் இருப்பது பலரால் விமர்சிக்கப்பட்டு ஆலயத்தில் வசிப்பவர்கள் மீதும் விமர்சனம் முன்வைக்கப்பட்டு வருகின்றது. உண்மையில் புது குடியிருப்பு பிரதேச செயலகமே இதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் . பிரதேச செயலாளர் இதற்கான நடவடிக்கையை குறிப்பாக அதற்கான ஒரு சுத்திகரிப்பாளர் நியமித்து அதற்கான சுகாதாரங்களுக்குரிய வளங்களை கொடுத்து சுத்திகரிப்பு செய்வது பயணிகளுக்கும் சிறப்பு அதேசமயம் இது சம்பந்தமாக ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களுக்கு சர்வதேச இந்து மத பீடத்தின் செயலாளர் கலாநிதி சிவ ஸ்ரீ ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா தொலைபேசி மூலம் இது பற்றி முறைப்பாடு ஒன்றை தெரிவித்திருந்தார். அத்துடன் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி ரஜீவன் அவர்களிடமும் தெரியப்படுத்தினார். எனவே புது குடியிருப்பு பிரதேச செயலகம் இதற்கான நடவடிக்கையை மக்களின் சுகாதாரத்தை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அல்லது முறிகண்டி ஆலய நிர்வாகத்திடம் அந்த பொறுப்பை ஒப்படைப்பது சிறப்பு எனவும் பாபு சர்மா தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது - ஆளுநரிடம் சர்வதே இந்துமத பீடம் முறைப்பாடு | Virakesari.lk- கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
கொப்பிகடைக்குள் புத்தர் சிலையை வைத்து புத்த மடாலயம் ஆக்குவதை போல் வெறும் கல்லை ரெத்தின கல்லாக்கி பார்த்து இருக்கினம் புத்த மதவெறியால் கடைசியில் nauru தீவு மக்களை விட உலகில் மோசமான பஞ்ச பராரிகளாக மாற போகினம் சிங்களவர்கள் .- உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா!
உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகும் அமெரிக்கா! அமெரிக்க சுகாதாரம், உலக சுகாதாரம் இரண்டையும் பாதிக்கும் என்ற எச்சரிக்கைகளுக்கு மத்தியில், அமெரிக்கா வியாழக்கிழமை (22) உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து (WHO) அதிகாரப்பூர்வமாக வெளியேற உள்ளது. மேலும். மேலும், வொஷிங்டன் ஐக்கிய நாடுகள் சபையின் சுகாதார ஸ்தாபனத்துக்கு செலுத்த வேண்டிய 260 மில்லியன் டொலர் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்ற அமெரிக்க சட்டத்தையும் இது மீறுகிறது. 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற முதல் நாளிலேயே ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமெரிக்கா உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து வெளியேறும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்தார். அமெரிக்க சட்டத்தின் கீழ், ஒரு வருட அறிவிப்பு கொடுத்து வெளியேறுவதற்கு முன் அனைத்து நிலுவையில் உள்ள கட்டணங்களையும் செலுத்த வேண்டும். WHO தகவல்களைக் கட்டுப்படுத்த, நிர்வகிக்க மற்றும் பகிர்ந்து கொள்ளத் தவறியதால் டிரில்லியன் கணக்கான டொலர்கள் இழப்பு ஏற்பட்டதாகவும், எதிர்காலத்தில் எந்தவொரு அமெரிக்க அரசாங்க நிதி, ஆதரவு அல்லது வளங்களையும் WHOக்கு மாற்றுவதை இடைநிறுத்த ஜனாதிபதி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தியதாகவும் வியாழக்கிழமை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார். இந்த நிலையில் உலக சுகாதார ஸ்தாபனத்தில் இருந்து விலகுவது அமெரிக்காவிற்கு ஒரு இழப்பு, மேலும் இது உலகின் பிற பகுதிகளுக்கும் ஒரு இழப்பு என்று WHO கூறியுள்ளது. 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டுகளுக்கான கட்டணங்களை அமெரிக்கா இன்னும் செலுத்தவில்லை என்றும் WHO கூறியது. அமெரிக்கா வெளியேறுவது மற்றும் அந்த விடயத்தை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பெப்ரவரியில் WHO-வின் நிர்வாகக் குழுவில் உறுப்பு நாடுகள் விவாதிக்க உள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். https://athavannews.com/2026/1460992- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
அதே சீனா ஒரு துருவமாவது தவிர்க்க முடியாது. செத்த கிளியின் ஆட்டம் தம்பர் இருக்கும் மட்டும்தான். பிறகு இத்துபோன அனுகுண்டை வைத்து நானும் ரவுடிதான் என காமெடி மட்டுமே பண்ணலாம். ஐரோப்பா தனி வழியே பயணிக்க, ஈயூ ஆர்மியை உருவாக்க காலம் கனிந்து விட்டது. ஜேர்மனி ஆயுதமயப்பட்டால் -ஈயுவும் ஒரு தன்னிறைவுள்ள இராணு சக்தியாகிவிடும்.- வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
அநுரகுமார திசாநாயக்கவை தரிசித்ததில் அவருடன் செல்பி எடுத்த மகிழ்ச்சியில் யாழ்பாண தமிழர்கள் திளைத்து கொண்டிருக்கிறார்கள்.- வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
காலைச் சுற்றிய பாம்பு கடிக்காமல் விடாது. இலங்கையில் சிங்கள இனம் தமிழினத்தைச் சுற்றியுள்ளது. சுற்றுமுன் அடித்து விரட்ட சுள்ளித்தடி தேடவேண்டும், அது இன்று உலகெங்கும் பரந்திருக்கும் தமிழரிடம் இருக்கிறது. இந்தத் தமிழர் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. இதனைத்தான் தலைவனும் உணர்ந்து பொறுப்பை அங்கு கொடுத்து உணர்த்தினார்.- வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி
வவுனியா மாவட்டத்தில் அரசு முன்னெடுக்கவுள்ள கிவுல் ஓயா திட்டம் தமிழருக்கு ஆபத்து; பல்லாயிரம் ஏக்கர் காணிகளைப் பறித்து சிங்களக் குடியேற்றத்துக்கு முயற்சி SONY DSC வவுனியா மாவட்டத்தில் அரசாங்கத்தினால் முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ள கிவுல்ஓயா திட்டத்தால் பூர்விகமாக வாழும் எமது மக்களே அதிகளவில் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த நடவடிக்கை அரசாங்கத்தின் மீதான எமது மக்களின் நம்பிக்கையும் இல்லாமல் போகச் செய்யும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற டித்வா புயலின் பின்னரான நாட்டில் தற்போதைய நிலவரம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கோடீஸ்வரன் எம்.பி இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், வவுனியா மாவட்டத்தில் கிவுல்ஒயா திட்டத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 1983ஆம் ஆண்டில் மகாவலி எல் வலயம் என்று சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டனர். இந்த பிரதேசத்திற்கு மகாவலி நீரை கொண்டுவர முடியாது என்பதனால் ‘என்பிசி கெனல்’ ஊடாக மகாவலியை கொண்டு வருவதாகக் கூறி 2 இலட்சம் ஹெக்டேயர் நிலங்களை அபகரித்து அங்கு மக்கள் குடியேற்றப்பட்டனர். இப்போது அங்கு மக்கள் தொகை அதிகரித்து நீர்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அந்த நீர்பற்றாக்குறையை தீர்ப்பதற்காக 2011ஆம் ஆண்டில் இந்த கிவுல்ஓயா திட்டத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டது. ஆனால் இப்போது இந்த அரசாங்கம் 27,000 மில்லியன் ரூபாவை செலவிட்டு இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிடப்படுகின்றது. இதன்படி புதிதாக வயல் நிலங்களை உருவாக்கவும் இதன்போது இன்னும் மக்களை குடியேற்றவும் திட்டமிடப்படுகின்றது. இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இது எமது பிரதேசத்திற்கு பாதிப்பாக அமையும். வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரதேசத்திற்குள் இது வருகின்றது. இதற்காக 2021ஆம் ஆண்டில் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலப்பகுதிக்கு மேலதிமாக 13,000 ஏக்கர் நிலத்தை வனபாதுகாப்பு திணைக்களம் இதற்காக வழங்குகின்றது. ஆனால் எமது மக்களின் பூர்விக நிலங்களை பயன்படுத்த வனபாதுகாப்பு திணைக்களம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் வவுனியா மற்றும் முல்லைதீவில் பூர்விகமாக வாழும் மக்களுக்கு நீரில்லை. இதனை கவனிக்க எவருமில்லை. கடந்த அரசாங்கத்தை போன்று சிறுபான்மையினவரின் வாழ்வுரிமையை பறிக்க நீங்களும் முயற்சிக்கின்றீர்களா? பாரிய நீர்பாசன திட்டங்கள் முன்னெடுக்கப்படும் போது சிறுபான்மை மக்கள் புறக்கணிக்கப்படுவதும், பெரும்பான்மை மக்கள் அங்கு குடியேற்றப்படுவதையும் தொடர விரும்புகின்றீர்களா? இனவாதம், மதவாதம் அற்ற அரசாங்கத்தை கொண்டுவருவீர்கள் என்ற நம்பிக்கையை நீங்கள் வீணடிக்கப் போகின்றீர்களா? என்று அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றேன் என்றார். https://akkinikkunchu.com/?p=356989- கருத்து படங்கள்
- கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை
கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு சந்தை பெறுமதி இல்லை. கண்டி, கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி (commercial or market value) இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை அறிவித்துள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அந்த அதிகார சபை, குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியத்தின் சிறிய அளவு படிந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. லெப்ரடோரைட் கனியம், ஒரு வகையிலான அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் பாறையாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும், குறித்த பாறைக்கு அதிக வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்னர், கண்டி – கலஹா, தெல்தோட்டை தோட்டத்திலுள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இருந்த கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக செய்திகள் வெளியாகியிருந்தன. அதற்கமைய, அந்தப் பாறையை பரிசோதிப்பதற்காக நேற்று இரவு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு விஜயம் செய்திருந்தனர். பின்னர் அவர்கள் அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தனர். அதனடிப்படையிலேயே அது தொடர்பான அறிக்கை இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2026/1460938 - முறிகண்டி கழிப்பிடம் சுகாதார சீர்கேடு நிலையில் பயணிகளுக்கு உள்ளது - ஆளுநரிடம் சர்வதே இந்துமத பீடம் முறைப்பாடு
Important Information
By using this site, you agree to our Terms of Use.