Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

All Activity

This stream auto-updates

  1. Past hour
  2. யாழ்பாண தமிழ் வெகுசனங்களிடம் எங்கள் தெய்வம் அநுரகுமார திசாநாயக்க சாதரணமாக வீதியில் நடந்து போகின்றதே என்று வாக்கிங் போவதை சொல்லி பெருமைபடுகின்ற மாற்றம் தான் வந்திருக்கின்றது அய்யா
  3. என்ன வாத்தியார் திருப்பதிக்கே லட்டா? போன தேர்தலிலேயே அவரை தூக்கி எறிய ஆயத்தம். ஆனால் மனிசன் 25000-30000 வாக்குகளை இறுக அணைத்தபடி உள்ளாரே?
  4. சரி பிழைக்கு அப்பால்…. புலம்பெயர் புஸ்வாணங்கள் என்ன குத்தி முறிந்தாலும்…. தமிழரசு கட்சியின் அதிகாரம் மிக்க குழுக்கள் எல்லாமும் சுமனிடமே என்பதுதான் உண்மை. கட்சியில் ஆதரவு இல்லை எனில் எப்போதோ சுமனை தூக்கி கடாசி இருப்பார்கள். சும்மா புலம்பாமல் - முடிந்தால் சுமனை கட்சியால் வெளியேற்ற பாருங்கள். பார் விவகாரம் வெளிவரக்கூடாது என்பதால் பார் சிறி அனுரவுக்கு நிபந்தனை அற்ற ஆதரவு கொடுத்த விவகாரத்தில் அவரே கட்சியை விட்டு தூக்கி அடிக்கப்படக்கூடும். இதுதான் கட்சி தலைவர் என சொல்லி கொள்ளும் “செயலற்ற தலைவர்” பார் சிறியின் தலைமைதுவ இலட்சணம்😂. ஊழல் செய்வதை தவிர வேறு எந்த திறமையும் இல்லாத ஈழத்து மிக்சர் மாமா தான் பார் சிறி.
  5. எந்த ஆதாரமோ, முகாந்திரமோ இல்லாத கூற்று. தம்பரின் கருத்து அப்படியே ஒப்புவிக்கப்பட்டுள்ளது. கிரீன்லாந்து நேட்டோவின் அங்கம். அதை சீனா தொட்டால் அமேரிக்கா உட்பட முழு நேட்டோவையும் தொட்டதுக்கு சமன். அப்படியும் சீனா கிரீன்லாந்த்தை தொடுமாயின் - அது அமெரிக்காவிடம் இருந்தாலும் தொடும். தம்பர் முதல் டேர்மில் நேட்டோவை உடைக்க பார்த்தார். நேட்டோ தலைவர்கள் சரி நாமும் 3% ஜிடிபியை பாதுகாப்புக்கு செலவழிக்கிறோம் என்றதும் - அவரால் அதை சாட்டி நேட்டோவை உடைக்க முடியவில்லை. இப்போ கிரீன்லாந்தை ஆக்கிரமித்து அதன் மூலம் நேட்டோவை உடைக்க முயல்கிறார். பாதுகாப்பு கனிம வளம் டிரம்பின் குடும்பத்துக்கு பணம் இவை எவையும் அல்ல கிரீன்லாந்தை கேட்க காரணம். ஒரே காரணம் நேட்டோவில் இருந்தும் பயனில்லை எனும் நிலைக்கு ஐரோப்பிய நாடுகளை தள்ளி, அதன் மூலம் நேட்டோவை உடைப்பது மட்டுமே. கனடாவை மாநிலம் ஆக்குவோம் என்ற கதையும் இந்த நோக்கிலேயே. இதன் பின்னால் இருப்பது முழுக்க, முழுக்க புட்டின் தம்பருக்கு கொடுத்துள்ள ஏவல். இதுவரை ரஸ்யா எதிர்ப்பு, உக்ரேன் பாதுகாப்பு என இருந்த நேட்டோ, ஈயூ நாடுகளை - கிரீன்லாந்தின் பாதுகாப்பு, நேட்டோவின் எதிர்காலம் என யோசிக்க வைத்துள்ளார் புட்டின், தம்பர் வாயிலாக. கார்னி ஒரு படி மேலே போய் சீனாவை கட்டியணைத்தே விட்டார்.
  6. Yesterday
  7. புரிந்து கொண்டேன் அண்ணா. எனது பதில் ஓம்.
  8. கோஷன் அராலியிலும் பொன்னாலையிலும் நடக்கும் வேலைகளின் அடுத்த கட்டம் என்பதைக் கூறினேன் அராலியில் குழி வெட்டப்பட்டுள்ளது அதைக் கட்டி முடிக்க வேண்டும் பொன்னாலையில் பிளாற் மட்டுமே போட்டப்பட்டுள்ளது . கொமட் பொருத்த வேண்டும் ......அவர்கள் பிடித்துச் செல்வதற்காக வெள்ளிரும்பு குழாய்கள் இணைக்க வேண்டும்...... இதைத்தான் அடுத்த கட்டம் என்று நான் கூறியது
  9. அமெரிக்க இராஜாங்கத்தின் உள் மனதிற்குள் இருந்த திட்டங்களை டொனால்ட் ரம்ப் அவர்கள் வெளியே கொண்டு வருகின்றார் என நான் நினைகின்றேன். பொதுவாக ஐரோப்பிய ஒன்றியம் அதன் வளர்ச்சி என்பது அமெரிக்காவின் சர்வதேச அதிகாரத்திற்கு பெரிய இடையூறாக இருக்கின்றது. உதாரணத்திற்கு எண்ணை உற்பத்தி நாடுகளின் ஈரோ நாணய நாட்டங்கள். பிரச்சனைகள் எங்கேயோ இருக்க..... தேவையில்லாத இடங்களில் நின்று சண்டை பிடிக்கும் நிகழ்வுகள் இன்று நேற்றல்ல. அன்று தொடக்கம் நடக்கும் நிகழ்வுதான்.... இதை எம்மவர்களின் குடும்ப சண்டைகளிலும் நன்கு அவதானிக்கலாம். நிற்க.... அமெரிக்க ஆதிக்கத்தையும் ரஷ்ய ஆதிக்கத்தையும் மாறி மாறி கடிந்து கொள்பவர்கள்.....கறையான் போல் உலகையே அரித்துக்கொண்டுவரும் சீன ஆதிக்கத்தை கண்டு கொள்வதில்லை. சொல்ல வருவது சீனாவின் பட்டுச்சாலை திட்டம். இன்றைய காலத்தில் சீனாவின் பொருளாதார ஆதிக்க விளைவுகளை உலகின் சகல நாடுகளும் அனுபவிக்கின்றன.சீனாவின் ஒரு சில மூலப்பொருட்கள் இல்லையெனின் ஐரோப்பாவின் பல தொழிற்சாலைகள் முடங்கு நிலைக்கு வருவது நல்ல உதாரணம். கிரீன்லாந்தை அமெரிக்கா கையகப்படுத்துவதை எதிர்த்தால் நாளை சீனா வந்து கையகப்படுத்தும். அதை யாரிடமும் எங்கேயும் எதிர்ப்புகளை காட்ட முடியாது.
  10. இன்னும் ஒரு மலசல கூடத்தை கட்டும் காசு இருப்பில் உள்ளதா? குறைந்த பட்சம் ஒவ்வொரு கூடத்துக்கான காசை சேர்த்த பின் ஆரம்பிப்போமா? இல்லாட்டில் வேலை அரைகுறையில் நிற்க வேண்டி வரலாம் - அல்லது ஏலவே பங்களித்தோர் மீள அளிக்க வேண்டி வரும், ஏராளன், ஏனையோரும் கருத்தை பகிரவும்.
  11. அரியநேந்திரன் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தற்போதுதான் உத்தியோகபூர்வமாக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படியிருக்க, ஜோசவ் பரராஜசிங்கத்தின் நினைவு கூரல் கூட்டத்திற்கு அரியநேந்திரனை அழைத்தமைக்காக நீங்களும் சுமந்திரனால் கட்சியிலிருந்து நீக்கவுள்ளதாக கூறுகிறார்களே, அதெப்படி? முதலில் உறுப்பினரை கட்சியிலிருந்து நீக்குவது, பின்தான் காரணம் தேடிக் கண்டுபிடிப்பதா? அரசியல் அறிவு, ஒழுக்கம் இல்லாதவர்களின் செயற்பாடு இப்படித்தான் இருக்கும். கட்சிக்காகவே மக்கள் என்பது இவர்களின் முட்டாள்த்தனமான வாதம். கட்சி உறுப்பினர் யாவரும் சேர்ந்து, சுமந்திரன் கட்சியை விட்டு நீங்கினால் கட்சி கூடுவோமென போராடுங்கள், இல்லையேல் எல்லோரும் கட்சியை விட்டு வெளியேறுங்கள். எப்படியிருந்தாலும் சுமந்திரன் உங்கள் எல்லோரையும் வெளியேற்றி வீட்டைப்பூட்டி திறப்பை எடுப்பார். ஆனால் யாரிடம் கொடுப்பது என்பதே கேள்வி. அவருக்கு இந்தப்பணியை பூர்த்தி செய்யச்சொல்லி அமர்த்தியவர்கள் இப்போ அரசியலில் கேள்விக்குறியாக உள்ளார்கள். இப்போ அறிவற்ற சுமந்திரனின் நிலைதான் தொங்குபொறி!
  12. அது மட்டும் அல்ல. நேட்டோவுக்கு சமாந்தரமாக அமரிக்கா-டென்மார்க் பாதுகாப்பு உடன்படிக்கை இப்பவே அமெரிக்கா கிரீன்லாந்தில் என்ன வேணும் எண்டாலும் செய்யும் உரிமையை கொடுக்கிறது. பனிப்போர் காலத்தில் 17 தளங்களை அமெரிக்கா கிரீன்லாந்தில் வைத்திருத்து பின்னர் தேவை இல்லை என மூடியது. எனவே இராணுவ நலனுக்கு கிரீன்லாந்தை எடுக்க எந்த அவசியமும் இல்லை. இது தனியொருவரினால் மடைமாற்ற கூடிய விடயம் என நான் நினைக்க இல்லை. தம்பரை போல அல்லாமல், சிறுவயது முதல் வலதுசாரியாக இருக்கும் மலோனி, அமெரிக்காவின் சின்னதம்பி பிரிட்டன் என அனைவரும் ஒன்றாக எதிர்க்கும் அளவுக்கு ஐரோப்பாவிக்கு இது பாரிய விடயம்.
  13. ரஸ்யாவினால் அமெரிக்காவிற்கு கிறீன்லாந்து ஊடாக இத்தனை வருடங்கள் வரை எந்த ஆபத்தும் இருக்கவில்லை அல்லது இருப்பதாக எந்த அறிக்கையை ஒன்று கூட வரவில்லை ட்ரம்பின் வியாபாரத்திற்காக அந்த இடம் இன்று தேவைப்படுகின்றது
  14. அடுத்த கட்டத்திற்கான செயற்பாடுகளை தொடர்வது நல்லது என நினைக்கின்றேன் தேவைக்கு அதிகமான மூலப்பொருட்களை அடுத்த கட்ட வேலைகளுக்குப் பாவிக்கலாம் தானே
  15. எனக்கொரு சந்தேகம். ஒரு அமைப்பிலோ அல்லது கட்சியிலோ பதில் பொறுப்பில் இருக்கும் ஒருவரோ அல்லது பதில் பொறுப்பில் உள்ளவரின் கீழ் உள்ள பிரதிநிதிகளின் ஆதரவுடனோ அந்த அமைப்பின் அல்லது கட்சியின் அதி முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு சட்டத்தில் இடம் உள்ளதா? இது பொதுவானதொரு கேள்வி . தமிழரசுக் கட்சி யாப்பு என்ன சொல்கின்றது என்பது தெரியவில்லை . அந்த யாப்பின் பிரகாரம் கட்சி இப்போது செயற்பட்டாலும் நாட்டு சட்டங்களுக்கு அந்த யாப்பு அமைவானதாக இருக்கின்றதா? இந்த சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் வரை அரியநேந்திரன் கட்சியில் தொடர்ந்து இருக்கும் வாய்ப்பை வழக்குத் தாக்கல் செய்யும் பட்சத்தில் நீதிமன்றம் அளிக்குமா ?
  16. ஐரோப்பா 2.34 ட்ரில்லியன் அமெரிக்க பணமுறிகளை வத்துள்ளது என இந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. https://economictimes.indiatimes.com/news/international/us/is-europe-ready-to-pull-the-trigger-officials-whisper-about-dumping-us-treasuries-if-trump-cuts-ukraine-deal/articleshow/125871003.cms?from=mdr ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கெதிராக ட்ரம்ப் ஒரு போரினை தொடுத்துள்ளார், அதற்கு ஐரோப்பா அமெரிக்கா போல பதிலளித்தால் அமெரிக்க பொருளாதாரம் 2008 இனை விட அதிகமான பாதிப்பினை ஏற்படுத்தும் என கூறப்பட்டுள்ளது அந்த கட்டுரையில், ஆனால் ஐரோப்பாவின் கடந்த கால வரலாற்றினை பார்க்கும் போது ஐரோப்பா இவ்வாறான முடிவுகளை எடுக்க கூடியதாக தெரியவில்லை. வொன்டர்லேயன் அம்மையார் ஸ்கொட்லன்டில் (ஸ்கொட்லன்டா என சரியா நினைவில்லை) ட்ரம்பினை சந்தித்து ஐரோப்பாவிற்கே ஆப்படித்த வரலாறு உண்டு. நான் உறுதியாக நம்புகிறேன் இந்த கிறீன்லண்ட் விவகாரத்திலும் அம்மையார் ஐரோப்பாவிற்கு ஆப்படிப்பார் என, காரணம் இந்த விவகாரத்தினால் பலன் பெறுவது பெரு நிறுவன்மாக இருக்கலாம் என கருதுகிறேன்.
  17. ஐரோப்பாவால் இராணுவ ரீதியில் எதும் செய்ய முடியாது. ஆனால் - ரிப்பப்ளிகன் கட்சியை நெருக்குவதன் மூலம், அங்கே இருந்து டிரம்புக்கு எதிர்ப்பை உருவாக்கினால் சாதிக்கலாம். இப்போதே சில ரிபப்ளிகண்ஸ் எதிர்க்க ஆரம்பித்து விட்டனர். உச்ச நீதிமன்றம் வரி விதிப்புக்கு எதிராக தொடர்ந்த வழக்கு…அதில் என்ன தீர்ப்பு…என்பது முக்கியமானது. இது டிரம்புக்கு பாதகமானால்- கிரீன்லாந்து விடயம் கொஞ்சம் லேட்டாகும்… அதற்குள் நவம்பர் மிட்டேர்மில் டிரம்ப் கட்சி அடிவாங்கினால்…தம்பர் அடக்கி வாசிப்பார். இல்லாட்டில் குதியாட்டம்தான்😂
  18. டிரம்பின் புதிய வரிகளால் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது ரியான் மான்சினி - 01/17/26 6:52 PM ET 2 தி ஹில்ஸ் தலைப்புச் செய்திகள் - ஜனவரி 16, 2026 ஒலியை இயக்கு தற்போதைய நேரம் 0:59 / கால அளவு 1:00 தலைப்புகள் முழுத்திரைபகிர் Replayதி ஹில்ஸ் தலைப்புச் செய்திகள் - ஜனவரி 16, 2026 UP NEXT IN 10 தி ஹில்ஸ் தலைப்புச் செய்திகள் - ஜனவரி 13, 2026 பணவீக்கம் குறித்து டிரம்ப், ஜெரோம் பவல் டிரம்பின் போர் சக்தியைக் கட்டுப்படுத்தக்கூடிய போர் தீர்மான மசோதாவை செனட் பின்னுக்குத் தள்ளுகிறது | டிரெண்டிங் கொடிய ஐஸ் துப்பாக்கிச் சூடு போராட்டங்களைத் தூண்டி அரசியல் பிளவை ஆழப்படுத்துகிறது - 12:30 அறிக்கை | ட்ரெண்டிங் 'சுதந்திர ஆயுதக் களஞ்சியம்' சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக விரைவான ஆயுத உற்பத்திக்கு ஹெக்ஸெத் அழுத்தம் கொடுக்கிறார் | ட்ரெண்டிங் உணவு பிரமிடுக்கான புதுப்பிப்பில் அமெரிக்கர்களின் உணவுமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை RFK ஜூனியர் மாற்றுகிறார் — 12:30 அறிக்கை | ட்ரெண்டிங் மினியாபோலிஸ் மேயர் ஐஸ் கொடுக்கிறார்: 'மினியாபோலிஸை விட்டு வெளியேறு' | ட்ரெண்டிங் கிரீன்லாந்தை கையகப்படுத்துவதில் ஜனாதிபதி டிரம்பின் நீண்டகால ஆர்வத்தை ரூபியோ உறுதிப்படுத்துகிறார் | ட்ரெண்டிங் இடைக்காலத் தேர்தலில் சுகாதாரப் பராமரிப்பில் கவனம் செலுத்துமாறு ஹவுஸ் குடியரசுக் கட்சியினரிடம் டிரம்ப் கூறுகிறார் | ட்ரெண்டிங் தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து தேவை என்று டிரம்ப் கூறுகிறார் கிரீன்லாந்தை கையகப்படுத்துவது தொடர்பான தனது வளர்ந்து வரும் பேச்சு வார்த்தைகளுக்கு எதிராக டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது புதிய 10 சதவீத வரிகளை ஜனாதிபதி டிரம்ப் அறிவித்ததை அடுத்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான வர்த்தக ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய தலைவர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர் . ஐரோப்பிய மக்கள் கட்சியின் (EPP) தலைவர் மன்ஃப்ரெட் வெபர், வர்த்தக ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் இருந்தாலும், "கிரீன்லாந்து தொடர்பான டொனால்ட் டிரம்பின் அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு" அது அங்கீகரிக்கப்படாது என்று கூறினார் . "அமெரிக்க தயாரிப்புகள் மீதான 0% வரிகள் நிறுத்தி வைக்கப்பட வேண்டும்" என்று வெபர் சமூக தளமான X இல் எழுதினார் . ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், கட்டணங்கள் "அட்லாண்டிக் கடல் கடந்த உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன, மேலும் ஆபத்தான கீழ்நோக்கிய சுழற்சியை ஆபத்தில் ஆழ்த்துகின்றன" என்று கூறினார். ஐரோப்பா அதன் இறையாண்மையை நிலைநிறுத்தி "ஒற்றுமையாக இருக்கும்" என்று அவர் X இல் எழுதினார் . "பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை ஆகியவை சர்வதேச சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகள்" என்று அவர் எழுதினார். "அவை ஐரோப்பாவிற்கும் ஒட்டுமொத்த சர்வதேச சமூகத்திற்கும் அவசியமானவை. நேட்டோ மூலம் உட்பட ஆர்க்டிக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பில் எங்கள் பகிரப்பட்ட அட்லாண்டிக் கடல்கடந்த ஆர்வத்தை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். கூட்டாளிகளுடன் நடத்தப்பட்ட முன் ஒருங்கிணைந்த டேனிஷ் பயிற்சி, ஆர்க்டிக் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை பூர்த்தி செய்கிறது மற்றும் யாருக்கும் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது." "ஐரோப்பிய ஒன்றியம் டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து மக்களுடன் முழு ஒற்றுமையுடன் நிற்கிறது" என்று வான் டெர் லேயன் தொடர்ந்தார். "உரையாடல் இன்றியமையாததாகவே உள்ளது, மேலும் டென்மார்க் இராச்சியத்திற்கும் அமெரிக்காவிற்கும் இடையே கடந்த வாரம் ஏற்கனவே தொடங்கப்பட்ட செயல்முறையை கட்டியெழுப்ப நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்." ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் ஸ்வீடிஷ் உறுப்பினரான கரின் கார்ல்ஸ்போரோ, வரிகளுக்குப் பழிவாங்கும் விதமாக தண்டனை நடவடிக்கைகளைத் தள்ளுவதற்கு "பஸூக்கா" அல்லது வற்புறுத்தல் எதிர்ப்பு கருவியைப் பயன்படுத்துவதை சட்டமியற்றுபவர்கள் நிராகரிக்கவில்லை என்று பொலிட்டிகோவிடம் தெரிவித்தார். "புதன்கிழமை நாம் ஒரு முடிவை எடுக்கும்போது, ஐரோப்பிய பாராளுமன்றம் கட்டண ஒப்பந்தத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கு பச்சைக்கொடி காட்டுவதற்கான எந்த சாத்தியத்தையும் நான் காணவில்லை," என்று அவர் ஊடகத்திடம் கூறினார். "மாறாக, ஸ்வீடனை குறிவைத்தவை உட்பட, ஜனாதிபதி டிரம்பின் கட்டண தாக்குதல்களுக்கு பதிலளிக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக வேண்டும்." கடந்த ஜூலை மாதம், வான் டெர் லேயன், டிரம்ப்புடன் ஐரோப்பிய பொருட்களுக்கு 15 சதவீத வரிகளை நிர்ணயிக்கும் ஒப்பந்தத்தை மேற்கொண்டார், அதே நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்காவிலிருந்து $750 பில்லியன் மதிப்புள்ள எரிசக்தியை வாங்கும், அதே போல் மற்ற பொருட்களுக்கான தற்போதைய முதலீடுகளை விட $600 பில்லியன் அதிகமாக முதலீடு செய்யும். "இது இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தம் என்று நான் நினைக்கிறேன்," என்று டிரம்ப் ஸ்காட்லாந்தின் டர்ன்பெரியில் உள்ள தனது கோல்ஃப் மைதானத்தில் வான் டெர் லேயனுடனான சந்திப்பில் கூறினார். இந்த ஒப்பந்தம் "ஸ்திரத்தன்மையைக் கொண்டுவரும், அது கணிக்கக்கூடிய தன்மையைக் கொண்டுவரும்" என்று வான் டெர் லேயன் பாராட்டினார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக உறவை மறுசீரமைக்க விரும்புவதாக அவர் கூறினார். டென்மார்க், ஸ்வீடன், பிரான்ஸ், யுனைடெட் கிங்டம், ஜெர்மனி, பின்லாந்து, நார்வே மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு பிப்ரவரி 1 முதல் புதிய வரிகள் அமலுக்கு வரும் என்று டிரம்ப் அறிவித்தார். "கிரீன்லாந்தை முழுமையாகவும் முழுமையாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை வரிகள் செலுத்தப்பட வேண்டும்" என்று அவர் ட்ரூத் சோஷியலில் எழுதினார். "டென்மார்க் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனைத்து நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும், பல ஆண்டுகளாக நாங்கள் வரிகள் அல்லது வேறு எந்த வகையான ஊதியத்தையும் வசூலிக்காமல் மானியம் வழங்கியுள்ளோம்," என்று டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டுள்ளார். "இப்போது, பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, டென்மார்க் திருப்பித் தர வேண்டிய நேரம் இது - உலக அமைதி ஆபத்தில் உள்ளது! சீனாவும் ரஷ்யாவும் கிரீன்லாந்தை விரும்புகின்றன, மேலும் டென்மார்க் அதைப் பற்றி எதுவும் செய்ய முடியாது." தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு கிரீன்லாந்து தேவை என்று டிரம்ப் கூறியுள்ளதோடு, தீவுப் பகுதியைக் கைப்பற்ற இராணுவப் படையைப் பயன்படுத்துவதாகவும் அச்சுறுத்தியுள்ளார் . இந்த அச்சுறுத்தல் டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் கூட்டுப் பயிற்சிகளுக்காக கிரீன்லாந்திற்கு துருப்புக்களை அனுப்ப வழிவகுத்தது. டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சனை சந்தித்து ஜனாதிபதிக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் காட்ட முயன்ற இரு கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் குழுவில் இருந்த குடியரசுக் கட்சியினர் புதிய வரிகளை கடுமையாக விமர்சித்தனர் . செனட்டர் தாம் டில்லிஸ் (RN.C.), வரிகள் "அமெரிக்காவிற்கும், அமெரிக்க வணிகங்களுக்கும், அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும் மோசமானதாக இருக்கும்" என்று எச்சரித்தார். "இந்த நடவடிக்கைகளின் விளைவுகளை நாம் ஏற்கனவே நிகழ்நேரத்தில் பார்த்து வருகிறோம்: நமது நேட்டோ நட்பு நாடுகள் கவனத்தையும் வளங்களையும் கிரீன்லாந்தின் பக்கம் திருப்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளன, இது உலகம் இதுவரை கண்டிராத வலுவான ஜனநாயக கூட்டணியின் ஸ்திரத்தன்மையை அச்சுறுத்துவதன் மூலம் புடினின் கைகளில் நேரடியாக விளையாடும் ஒரு இயக்கவியல்," என்று செனட்டர் லிசா முர்கோவ்ஸ்கி (ஆர்-அலாஸ்கா) X இல் பதிவிட்டுள்ளார் . https://thehill.com/policy/international/5694469-european-union-trade-deal-trump-tariffs/
  19. கிரீன்லாந்து மீதான டிரம்பின் புதிய வரிகளுக்கு 'உறுதியான' பதிலை ஐரோப்பா சபதம் செய்கிறது. கிரீன்லாந்து மீதான தனது திட்டங்களை எதிர்க்கும் நட்பு நாடுகள் மீது 10 சதவீத வரிகளை டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து, அதற்கான பதிலை திட்டமிடுவதற்காக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அவசர ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இணைப்பை நகலெடு கிரீன்லாந்துக்கு எதிரான தனது நடவடிக்கையை எதிர்த்த நேட்டோ நட்பு நாடுகள் மீது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் 10 சதவீத வரி விதித்தது, கடந்த ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் தவிர்க்கப்பட்டதாக ஐரோப்பிய தலைநகரங்கள் நினைத்த அட்லாண்டிக் கடல்கடந்த பிளவை மீண்டும் திறக்கிறது. | ஜோ ரேடில்/கெட்டி இமேஜஸ் ஜனவரி 17, 2026 மாலை 7:52 CET கேப்ரியல் கவின் மற்றும் கிறிஸ் லண்டே மூலம் கிரீன்லாந்தை தனது கட்டுப்பாட்டில் கொண்டுவருவதற்கான பிரச்சாரத்தை வெள்ளை மாளிகை முடுக்கிவிட்ட நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உறுப்பு நாடுகள் மீது விதித்த புதிய வரிகளுக்கு "உறுதியான" பதிலிறுப்பை ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. கிரீன்லாந்துக்கு எதிரான தனது நடவடிக்கையை எதிர்த்த நேட்டோ நட்பு நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி, டென்மார்க், நெதர்லாந்து, இங்கிலாந்து, நோர்வே, சுவீடன் மற்றும் பின்லாந்து உள்ளிட்டவற்றுக்கு 10 சதவீத வரி விதிக்கும் டிரம்ப்பின் அறிவிப்பு, கடந்த ஆண்டு கையெழுத்தான ஒப்பந்தத்தின் மூலம் தவிர்க்கப்பட்டதாக தலைநகரங்கள் நினைத்த அட்லாண்டிக் கடல்கடந்த வர்த்தக பிளவை மீண்டும் திறக்கிறது . ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா, டிரம்பின் தந்திரோபாயங்களை "செழிப்புக்கு" அச்சுறுத்தலாக விமர்சித்தார், "நாம் சந்தைகளைத் திறக்க வேண்டும், அவற்றை மூடக்கூடாது. நாம் பொருளாதார ஒருங்கிணைப்பு மண்டலங்களை உருவாக்க வேண்டும், கட்டணங்களை அதிகரிக்கக்கூடாது" என்று கூறினார். "சர்வதேச சட்டத்தை பாதுகாப்பதில் ஐரோப்பிய ஒன்றியம் எப்போதும் மிகவும் உறுதியாக இருக்கும், அது எங்கிருந்தாலும், நிச்சயமாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் எல்லைக்குள் தொடங்கும்," என்று சனிக்கிழமை பராகுவேயில் EU மற்றும் தென் அமெரிக்க நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு கோஸ்டா கூறினார். "இந்தப் பிரச்சினையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாடுகளின் கூட்டு பதிலை நான் ஒருங்கிணைத்து வருகிறேன்," என்று கோஸ்டா மேலும் கூறினார். நிலைமையை மதிப்பிடுவதற்கும், பதிலைத் திட்டமிடுவதற்கும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தூதர்களின் அசாதாரணக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர், மேலும் நாடுகளின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் ஏற்கனவே நேரடித் தொடர்பில் உள்ளனர். சனிக்கிழமை தனது உண்மை சமூக தளத்தில் ஒரு பதிவில் டிரம்ப் புதிய கட்டணங்களை அறிவித்தார் , இலக்கு வைக்கப்பட்ட நாடுகள் சமீபத்திய நாட்களில் "தெரியாத நோக்கங்களுக்காக" கிரீன்லாந்திற்கு இராணுவ வீரர்களை அனுப்பியதாகக் கூறினார். உளவு மற்றும் ஆதரவு பணியின் ஒரு பகுதியாக நேட்டோ துருப்புக்களின் ஒரு சிறிய எண்ணிக்கையிலான படைகள் வியாழக்கிழமை கிரீன்லாந்தின் தலைநகரான நூக்கில் தரையிறங்கின. "டென்மார்க் மற்றும்/அல்லது இவ்வளவு ஆபத்தை ஏற்படுத்திய இந்த நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா உடனடியாகத் திறந்துள்ளது" என்று டிரம்ப் கூறினார், வாஷிங்டன் கிரீன்லாந்தை கையகப்படுத்துவதை முடிக்கும் என்று வலியுறுத்தினார். பிப்ரவரி 1 முதல் 10 சதவீத வரி விதிக்கப்படும், ஜூன் 1 முதல் 25 சதவீதமாக அதிகரிக்கப்படும், மேலும் "கிரீன்லாந்தை முழுமையாகவும் முழுமையாகவும் வாங்குவதற்கான ஒப்பந்தம் எட்டப்படும் வரை" அமல்படுத்தப்படும் என்று டிரம்ப் கூறினார். "ஜனாதிபதியின் அறிக்கை ஆச்சரியத்தை அளிக்கிறது," என்று டென்மார்க் வெளியுறவு அமைச்சர் லார்ஸ் லோக்கே ராஸ்முசென் ஒரு அறிக்கையில் தெரிவித்தார். "ஜனாதிபதி குறிப்பிடும் கிரீன்லாந்தில் அதிகரித்த இராணுவ பிரசன்னத்தின் நோக்கம், ஆர்க்டிக்கில் பாதுகாப்பை மேம்படுத்துவதாகும்," என்று அவர் கூறினார். "ஆர்க்டிக் இனி குறைந்த பதற்றப் பகுதியாக இல்லாததால், நாம் இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும் என்ற அமெரிக்காவின் கூற்றுடன் நாங்கள் உடன்படுகிறோம். அதனால்தான் நாங்களும் நேட்டோ கூட்டாளிகளும் எங்கள் அமெரிக்க நட்பு நாடுகளுடன் முழு வெளிப்படைத்தன்மையுடன் முன்னேறி வருகிறோம்," என்று ராஸ்முசென் கூறினார். "இந்த விவகாரத்தில் ஐரோப்பிய ஆணையத்துடனும் எங்கள் பிற கூட்டாளர்களுடனும் நாங்கள் நெருங்கிய தொடர்பில் இருக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார். ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் அவர்களது உயர் ஆலோசகர்களுடன் கோஸ்டா, சனிக்கிழமை பராகுவேயில் மெர்கோசூர் நாடுகளுடனான வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். மெர்கோசூர் ஒப்பந்தம் முடிவடைய கால் நூற்றாண்டுக்கும் மேலாகிவிட்டது, மேலும் டிரம்ப் சுதந்திர வர்த்தகத்திற்கு எதிரான அழுத்தத்தின் பின்னணியில் வர்த்தக உறவுகளை பன்முகப்படுத்துவதற்கான ஒரு பெரிய முயற்சியாக இது முன்வைக்கப்படுகிறது. "நட்பு நாடுகளுடன் நடத்தப்பட்ட முன் ஒருங்கிணைந்த டேனிஷ் பயிற்சி, ஆர்க்டிக் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தை பூர்த்தி செய்கிறது மற்றும் யாருக்கும் எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது" என்று கூறி, ஐரோப்பிய இராணுவ வீரர்களின் நிலைநிறுத்தலைப் பாதுகாக்க வான் டெர் லேயன் நகர்ந்தார். "கட்டணங்கள் அட்லாண்டிக் கடல்கடந்த உறவுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் மற்றும் ஆபத்தான கீழ்நோக்கிய சுழலை ஏற்படுத்தும்" என்று வான் டெர் லேயன் X இல் ஒரு பதிவில் கூறினார் . "சீனாவும் ரஷ்யாவும் ஒரு கள நாளைக் கொண்டிருக்க வேண்டும் ," என்று EU வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் X இல் ஒரு பதிவில் கூறினார் . "நேச நாடுகளுக்கு இடையேயான பிளவுகளால் அவர்கள்தான் பயனடைகிறார்கள். கிரீன்லாந்தின் பாதுகாப்பு ஆபத்தில் இருந்தால், அதை நேட்டோவிற்குள் நாம் தீர்க்க முடியும்," என்று அவர் கூறினார். "கட்டணங்கள் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் ஏழ்மையாக்கும் அபாயம் உள்ளது, மேலும் நமது பகிரப்பட்ட செழிப்பையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும்" என்று கல்லாஸ் கூறினார். டிரம்பின் புதிய கட்டணங்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத் தலைமை இப்போது ஐரோப்பிய தலைநகரங்களைத் தீவிரமாக அணுகி வருவதாக இரண்டு அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், கிரீன்லாந்திற்கான ஆதரவை உக்ரைனின் பாதுகாப்போடு ஒப்பிட்டு, பாரிஸ் அதன் கூட்டாளிகளின் "இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்கு" பின்னால் நிற்கும் என்றார். "எந்தவொரு மிரட்டலும் அல்லது அச்சுறுத்தலும் எங்களை பாதிக்காது, உக்ரைனிலோ, கிரீன்லாந்திலோ, அல்லது உலகில் வேறு எங்கும் இதுபோன்ற சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும்போது," என்று மக்ரோன் X இல் ஒரு பதிவில் கூறினார் . "கட்டண அச்சுறுத்தல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை, இந்த சூழலில் அவற்றுக்கு இடமில்லை. ஐரோப்பியர்கள் அவற்றுக்கு ஒன்றுபட்ட மற்றும் ஒருங்கிணைந்த முறையில் பதிலளிப்பார்கள்" என்று மக்ரோன் கூறினார். பிரிட்டிஷ் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் புதிய வரிகளை "முற்றிலும் தவறு" என்று சாடினார் , மேலும் இந்த விஷயத்தை வெள்ளை மாளிகையில் எழுப்புவதாகவும் கூறினார். அமெரிக்காவின் புதிய வரிகள் "எங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்" என்று சீர்திருத்த UK தலைவர் நைகல் ஃபராஜ் கூறினார். "நாங்கள் எப்போதும் அமெரிக்க அரசாங்கத்துடன் உடன்படுவதில்லை, இந்த விஷயத்தில் நாங்கள் நிச்சயமாக உடன்படுவதில்லை," என்று ஃபரேஜ் X இல் ஒரு பதிவில் கூறினார். "கிரீன்லாந்து தீய தாக்கங்களுக்கு ஆளாகக்கூடியதாக இருந்தால் , டியாகோ கார்சியாவைப் பற்றி மீண்டும் பாருங்கள்," என்று அவர் மேலும் கூறினார், இந்தியப் பெருங்கடலில் உள்ள ஒரு தீவில் உள்ள அமெரிக்க-இங்கிலாந்து விமானத் தளத்தைக் குறிப்பிடுகிறார். ஸ்வீடன் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் ஒரு அறிக்கையில் , ஐரோப்பிய நாடுகள் "நம்மை மிரட்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம். ... இது ஒரு ஐரோப்பிய ஒன்றியப் பிரச்சினை, இது இப்போது தனிமைப்படுத்தப்பட்ட நாடுகளை விட பல நாடுகளைப் பாதிக்கிறது. ஒருங்கிணைந்த பதிலுக்காக ஸ்வீடன் இப்போது மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகள், நோர்வே மற்றும் ஐக்கிய இராச்சியத்துடன் தீவிர விவாதங்களை நடத்தி வருகிறது." ஐரோப்பிய ஒன்றியம் "டென்மார்க்கையும் கிரீன்லாந்து மக்களையும் ஆதரிக்கிறது" என்று ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ராபர்ட்டா மெட்சோலா கூறினார். " இன்று அறிவிக்கப்பட்ட நேட்டோ நட்பு நாடுகளுக்கு எதிரான நடவடிக்கைகள் ஆர்க்டிக்கில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு உதவாது" என்று மெட்சோலோ X இல் ஒரு பதிவில் கூறினார் . "அவர்கள் எதிர்மாறான ஆபத்தை எதிர்கொள்கின்றனர், நமது கூட்டு எதிரிகளையும் நமது பொதுவான மதிப்புகள் மற்றும் வாழ்க்கை முறையை அழிக்க விரும்புவோரையும் தைரியப்படுத்துகிறார்கள்." "கிரீன்லாந்து மற்றும் டென்மார்க் இரண்டும் தெளிவுபடுத்தியுள்ளன: கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை, அதன் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும். வரிவிதிப்பு அச்சுறுத்தல் அந்த உண்மையை மாற்ற முடியாது அல்லது மாற்றாது," என்று அவர் கூறினார். ஃபெலிசியா ஸ்வார்ட்ஸ் அறிக்கையிடலுக்கு பங்களித்தார். https://www.politico.eu/article/eu-vows-response-to-new-trump-tariffs-over-greenland/
  20. ட்ரம்பின் முதலாவது ஆட்சிக்காலத்தில் 2017 கொண்டுவரப்பட்ட பொருளாதாரத்தடையால் நாளொன்றிற்கு 70 மில்லியன் என நினைவுள்ளது (சரியாக தெரியவில்லை) இழப்பு வெனிசுலாவிற்கு ஏற்பட்டது, பொதுவாக பொருளாதார தடை அரசுகளுக்கானதாக கூறப்பட்டாலும் மக்களை வாட்டி அரசிற்கெதிராக கலம் செய்ய தூண்டும் முயற்சி என கூறுகிறார்கள். எதிர்கட்சி தலைவி தனது நோபல் பரிசினை வழங்கி ட்ரம்பிற்கு ஆதரவழித்துள்ளதனை அந்த நாட்டு மக்கள் எவ்வாறு பார்க்கிறார்கள் என தெரியவில்லை.
  21. நான் நினைக்கிறேன் எனது கருத்தினை இன்னொரு கோணத்தில் பார்க்கிறீர்களோ என கருதுகிறேன். ஐரோப்பிய நாடுகள் இரஸ்சிய உக்கிரேன் போரின் போது ஒரு பக்கமாக நிலைப்பாடெடுத்து முற்றாக இரஸ்சியாவினுடனான தொடர்பாடலை முடிவிற்கு கொண்டு வந்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்த திசையில் நிகழ்வுகள் இடம்பெறாமல் போய்விட்ட நிலையில் மீண்டும் இரஸ்சியாவினுடனான உறவினை ஏற்படுத்த தொடர்பாடலை ஏற்படுத்த முற்படுகின்றனர், இது அவ்வளவு இலகுவான காரியமாக தற்போது இல்லாமல் இருப்பதற்கான காரணம் ஒரு பக்க நிலைப்பாட்டின் விளைவாக இருக்கும் என கருதுகிறேன். பொதுவாக அனைத்து தெரிவுகளையும் தயாராக வைத்திருக்கும் நிலையே காணப்படும், ஆனால் இரஸ்சியா விடயத்தில் மட்டும் இவ்வாறான நிலை எடுப்பதற்கு வேறு ஒரு காரணம் இருக்கும் என நம்புகிறேன். இந்தியா எமது போராட்டத்தினை முடிவிற்கு கொண்டுவருவதில் உறுதியாக இருந்த வேளையில், முற்று முழுதாக ஈழத்தமிழர்களை புறக்கணிக்கவில்லை, (புகலிட அனுமதி, போரின் பின்னர் வட கிழக்கில் வீடு கட்டுதல் போன்ற விடயங்களினூடாக) தொடர்ச்சியாக ஒரு தொடர்பில் இருந்த நிலை காணப்பட்டுள்ளது. நாம் போய் பேசுவதால் இந்தியா எதுவும் செய்துவிடாது, இந்திய நலன் பேணப்படுவதனை பற்றியே இந்தியா சிந்திக்கும் எமது நலன் பற்றி யாருக்கும் அக்கறை இல்லை, இந்திய தரப்புக்கு எமது நலன் பேணப்படுவதன் மூலம் அவர்களுக்கு நலன் ஏற்படும் நிலையே இங்கு பேரம் பேசும் நிலையாகும். வெளிநாட்டில் உள்ள தமிழர்கள் இந்தியாவுடன் பேச வேண்டிய தேவை இல்லை என கருதுகிறேன், ஆனால் சில செயற்பாடுகளால் எங்களையறியாமலே இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு நாம் நெருக்கடியினை உருவாக்கிவிடுகிறோம். இந்தியா மட்டுமல்லாமல் சீனாவுடனும் தொடர்பில் இருக்கவேண்டும், ஆனால் உக்கிரேன் செய்த தவறினை நாம் செய்யக்கூடாது. இலங்கையிலுள்ள தமிழர்களின் ஒரே பிரதிநிதிகள் அங்குள்ள அரசியல்வாதிகள்தான், அவர்கள்தான் தமிழ் மக்களுக்கான பேரம் பேசலை இந்தியாவுடன் தேவைப்படும் போது செய்வார்கள். தற்போது பேரம் பேசும் ஆற்றல் தமிழர்களுக்கு இல்லை, இலங்கையிலுள்ள தமிழ் கட்சிகள் ஒரு அணியாக மீண்டும் திரள வேண்டும் அதே போல் வெளிநாட்டில் உள்ள பல அமைப்புக்கள் ஒருங்கிணைந்து எதிர்கால திட்டமிடல் (5 வருட பகுதிகளாக) செயல்படவேண்டும். புலிகள் காலத்தில் அரசியல், பாதுகாப்பு, பேரம் பேசல், வெளிநாட்டு ஒருங்கிணைப்பு இருந்தது தற்போது பல வழிகளிலும் சிதறுண்ட நிலையே காணப்படுகிறது. யாழ்கள இந்த திரி எமது சமூக அளவில் ஒரு பேசு பொருளாக மாறியுள்ளதற்கு இந்த காணொளி உதாரணமாக உள்ளது.
  22. "அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 93 [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 93 / பின் இணைப்பு – மகாவம்சத்தின் சுருக்கம் / அத்தியாயம் 01 முதல் அத்தியாயம் 37 வரை வட்டகாமினி மீண்டும் அரசனாக திரும்பிய உடனே நிகந்தர்களுடைய ஆராமாவை [கோயில்கள்] அழித்து விட்டு அங்கு பனிரெண்டு அறைகளுடன் ஒரு விகாரை கட்டினான் என்று 79 ஆவது வசனம் சொல்லுகிறது. அது ஒரு சமணக் கோயிலாக இருக்க வேண்டும்; அத்தியாயம் 10 இன் 97 ஆம் வசனத்தின் அடிக்குறிப்பின்படி நிகந்தர் என்பது சமணத் துறவிகள் ஆகும். அதேசமயம் களப்பிரர் என்ற தமிழகத்தை ஆண்ட மன்னர்களும் சைன சமயத்தையே ஆதரித்தனர். அதேவேளை, 33 ஆம் அத்தியாயத்தின் 43 ஆம் வசனத்தின் [அரசன் தப்பியோடுவதைக் கண்ட கிரி என்னும் பெயருடைய ஒரு நிகந்தர்* ‘கருப்புச் சிங்கம் ஓடுகிறது" என்று உரக்கக் கத்தினான்] அடிக்குறிப்பின்படி, நிகந்தர் என்றால் பௌத்தர் அல்லாத துறவிகள் என்று பொருள். சந்திரகுப்த மௌரியரின் ஆட்சியின் பிற்பகுதியில், கங்கை சமவெளியில் (வடக்கு இந்தியா) கடுமையான வறட்சி மற்றும் பஞ்சம் ஏற்பட்டது. இதன் காரணமாக, பல சமணர்கள் இந்தியாவின் தெற்குப் பகுதிக்கு குடிபெயர்ந்தனர் என நம்பப்படுகிறது. உதாரணமாக, சந்திர குப்த மௌரியர் (கி.மு. 321–297 ஆட்சி) தனது கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார் என்றும், துறவியாக வாழ்ந்து இன்றைய கருநாடக மாநிலத்தில் இருக்கும் சரவணபெலகுளாவிற்கு [Shravanabelagola] அருகில் உள்ள சந்திரகிரியில் பத்திரபாகு [Bhadrabahu] முனிவர் உட்பட பலருடன் மோட்ச நிலையை அடைந்தார் என சமண நூல்கள் கூறுகின்றன. இது வடக்கில் ஏற்பட்ட கடுமையான பஞ்சத்தின் காரணமாக இருக்கலாம். கி.பி 600 வரை தமிழ்நாட்டில் அமைதியாக இருந்த பல மதங்களில் சமண மதமும் புத்த மதமும் ஆகிய இரண்டும் அடங்கும். இருப்பினும், 6 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சமணர்களும் பௌத்தர்களும் கடுமையான துன்புறுத்தல்களை எதிர்கொண்டனர், ஒருவேளை ஆதி சங்கராச்சாரியாரின் போதனைகளின் செல்வாக்கின் காரணமாகவோ அல்லது பிற காரணங்களாலோ இருக்கலாம். இதன் விளைவாக, பல சமணர்களும் பௌத்தர்களும் பாதுகாப்புக்காக இலங்கைக்கு குடிபெயர்ந்திருக்கலாம்? உதாரணமாக, சில வரலாற்றுக் குறிப்புகளும் கல்வெட்டுகளும், குறிப்பாக பல்லவ மற்றும் பாண்டிய ஆட்சியாளர்களின் கீழ் சமணர்கள் துன்புறுத்தலை எதிர்கொண்டதாகக் கூறுகின்றன. மன்னவன் மாறன் கண்டு மந்திரி யாரை நோக்கித் "துன்னிய வாதி லொட்டித் தோற்றவிச் சமணர் தாங்கள் முன்னமே பிள்ளை யார்பா லநுசித முற்றச் செய்தார் கொன்னுனைக் கழுவி லேற்றி முறைசெய்க" வென்று கூற எனும் பெரியபுராணப் பாடல் சமணர் கழுவேற்றம் குறித்துச் சொல்கிறது. மன்னர் வட்டகாமினி நிகந்தர்களுடைய ஆராமாவை இடித்தது மட்டுமல்லாமல், அந்த இடங்களில் பௌத்த விகாரையையும் கட்டினான். அத்தியாயம் 33 இன் 81 வது வசனத்தின் அடிக்குறிப்பு 1 இன் படி, வட்டகாமினி நிகந்தர்களுடைய கோவிலை இடித்த இடத்தில் அபயகிரி விகாரையைக் கட்டினான். மன்னர் வட்டகாமினி பௌத்த நியதிகளை வருங்கால சந்ததியினருக்காக எழுத்து வடிவில் இருக்க உத்தரவிட்டார். இது இதுவரை வாய்மொழியாக மட்டுமே வழங்கப்பட்டது ஆகும். சைவ கோயில்கள் ஆண்டு ஆண்டாக பண்டைய காலத்தில் இருந்தே , கிருஸ்துக்கு முன்பே இருந்தே, தமிழர்களின் தேசிய பாரம்பரியமாக, பெருமையாக இருந்து வருகிறது. ஆனால், தற்போதைய தொல்பொருள் துறையால் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் அகழ்வாராய்ச்சி என்ற பெயரில் புனிதமான சைவத் தலங்கள் படிப்படியாக தரைமட்டமாக்கப் படுகின்றன. ஆனால் உண்மையில் இந்தப் பிரச்சினை, புனிதமான கோயில்களை அழிப்பதை விட, அங்கு சிங்கள பௌத்த குடியேற்றமும் அதற்காக புத்தர் விகாரை அமைப்பதுமே முதன்மையாகத் தெரிகிறது .தமிழ் பேசும் மக்கள், நாட்டில் சிறுபான்மையினராக இருந்தாலும், இவர்கள் பண்டைய காலம் தொடங்கி, வடக்கு மற்றும் கிழக்கில் பெரும்பான்மையாக உள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. அது மட்டும் அல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து அங்கு தமிழ் பேசும் முஸ்லிம்கள் வாழ்வதும் இன்று குறிப்பிடத் தக்கது. தமிழர்கள் பெரும்பான்மையாக உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில், இராணுவம், சிங்கள - பௌத்த நிறுவனத்துடன் சேர்ந்து, அதிகமான புத்த கோயில்கள் மற்றும் புத்த சிலைகளை நிறுவுவதன் மூலம் நிலப்பரப்பை மாற்றி வருவதுடன் இந்தப் பகுதிகளில் நிலத்தையும் பலவந்தமாக கையகப்படுத்துகிறது. இந்தப் பகுதிகளில் தொல்பொருள் துறையின் செயல்பாடுகள் குறித்து சந்தேகத்திற்குரிய தகவல்கள் வந்துள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள குருந்தூர்மலையில் நிலவும் சூழ்நிலை ஒரு குறிப்பிடத்தக்க உதாரணம் என்று எண்ணுகிறேன். மற்றது தையிட்டியில் மக்கள் காணியில் பலவந்தமாக, அவர்களின் காணியை பறித்து, போலீஸ் [காவல்துறை / Police] காவலுடன் இராணுவம் அமைத்துள்ள சட்டவிரோத தையிட்டி விகாரையையும் கூறலாம். இவை இரு உதாரணங்கள் மட்டுமே, அங்கு இதைவிட பல இடங்களில் இப்படி நடக்கிறது. இவைக்கு இலங்கை அரசும் நீதித்துறையும் கண்மூடி இருப்பது கேவலமான காட்சி ஆகும். குருந்தூர்மலையை எடுத்துக் கொண்டால், பிப்ரவரி 2021 இல், இந்த இடத்தில் ஒரு இந்து ஆலயத்தை இராணுவ வீரர்கள் அழித்ததாகக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, ஜூன் 2021 இல், அதே இடத்தில் ஒரு புதிய புத்த கோவிலுக்கு அடித்தளம் அமைக்கும் விழாவிலும் இராணுவம் பங்கேற்றது மட்டும் அல்ல, நீதிமன்ற உத்தரவுகளை மீறி கட்டுமானப் பணிகளையும் தொடர்ந்தது. இந்த நடவடிக்கைகள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மக்கள் தொகை மற்றும் கலாச்சார நிலப்பரப்பை மாற்றுவதற்கான ஒரு பரந்த மூலோபாயத்தின் ஒரு பகுதியாக பலரால் கருதப்படுகின்றன, இது பெரும்பாலும் "சிங்களமயமாக்கல்" என்று குறிப்பிடப்படுகிறது. இந்த சொல் பாரம்பரியமாக சிறுபான்மை சமூகங்கள் வசிக்கும் பகுதிகளில் சிங்கள பௌத்த கலாச்சாரத்தை மேம்படுத்துவதை விவரிக்கிறது. இதற்கு ஒரு சிறந்த உதாரணம் 'நீர்கொழும்பு சிலாபம் புத்தளம் தமிழர்கள்', முதலில் கிருஸ்துவத்துக்கு மாற்றப்பட்டு, பின் அவர்கள் சிங்களவர்களாக மாற்றப்பட்ட அண்மைய வரலாறு ஆகும். மேலே கூறிய அத்தனையும் தமிழ் மற்றும் முஸ்லிம் அடையாளங்களை ஓரங்கட்டுவதற்கு வழிவகுக்கும் என திட்டவட்டமாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறுகிறது. இந்த செயல்முறைகளில் தொல்பொருள் துறையின் ஈடுபாடு குறிப்பாக சர்ச்சைக்குரியதாக உள்ளது. சைவ [இந்து] கோயில்களை பௌத்த தலங்களாக மறுவடிவமைப்பு செய்வதில் இந்தத் துறை முக்கிய பங்கு வகித்துள்ளதாகவும், இதன் மூலம் சைவ [இந்து] வழிபாட்டாளர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதாகவும், இந்த இடங்களில் பௌத்த கட்டமைப்புகளைக் கட்டுவதற்கு வசதி செய்வதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது மத சமூகங்களுக்கு இடையே பதட்டங்களுக்கு பங்களித்துள்ளது மற்றும் சிறுபான்மை கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மீண்டும் கூறுகிறது. Part: 93 / Appendix – Summary of the Mahavamsa / Chapter 01 to Chapter 37 Soon after his return he demolished the arama of the Niganthas (temples of Niganthas), must be a Jain temple; as per footnote on 10- 97 Nigantha means Jain monks. As per footnote on the 33- 43, Nigantha means non-Buddhist monks. Tamil epic Mannimeghalai denote Samana Kutta as Samana (Jain) Malai (hill). There was a drastic drought and famine during the latter part of the reign of Chandragupta Maurayan in the Gangetic plain. Quite a lot of Jains moved to south during that time. Jainism and Buddhism were two of the many religions prevailed and peacefully co-existed in Tamil Nadu until about 600 A.D. It could be due to the preaching of Aadi Sangarar or otherwise, Jains and Buddhists were in severe persecution after sixth century A.D. Both Jains and Buddhist moved to Ceylon. The king Vattagamani not only demolished the Aarama of the Nigantha’s but also built Buddhist Viharas on those places. As per footnote 1, Abhayagiri Vihara was built on the site where Vattagamani, 33-81, demolished the Nigantha temple. The king Vattagamani ordered the Buddhist canons to be in written form for posterity which was earlier orally handed down நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 94 தொடரும் / Will follow துளி/DROP: 2002 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 93 https://www.facebook.com/groups/978753388866632/posts/33350022154646336/?
  23. அதிர்ச்சியாகவும் நம்பமுடியாமலும் இருக்கிறது! ஆழ்ந்த இரங்கல்கள் என்று வெற்று வார்த்தைகளை மட்டும் எழுதிவிட்டு செல்லவும் விருப்பமில்லை. மேற்கொண்டு எதுவும் செய்ய முடியாது என்ற உண்மையை புரியாமல் இருப்பதிலும் அர்த்தம் இல்லை. காலம் தானே தந்த இந்த கொடிய துயரை தாண்டியும் மோகன் அண்ணாவையும் பிள்ளைகளையும் கூட்டி செல்லும் என்ற சிறு நம்பிக்கையை மட்டும் விட்டு செல்கிறேன்
  24. எங்கு எங்கு எல்லாம் சுற்றி சுழன்றாலும் இறுதியில் சேர வேண்டிய இடம் சேர்ந்ததில் மிக்க மகிழ்ச்சி ! தலைவன் 8 மேற்படட போர்களை முடிவுக்கு கொண்டுவந்து இருக்கிறார் உக்ரைனுக்கும் ரசியாவிற்கும் கொடுக்க வேண்டியதை கொடுத்து மிக விரைவில் உக்ரைன் போறும் முடிவுக்கு வரும் என்பது என்னுடைய நம்பிக்கை. கூடிய விரைவில் கிரீன்லாந்து மக்களுக்கும் விடுதலை கிடைக்கும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.