All Activity
- Past hour
-
புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்டமாதிரி சிங்களவருக்கு தலைவரின்ட பெயர்மொழியைக் கொண்ட எவரும் "கொட்டியா" தான். நல்ல காலம் தப்பிற்றியள். இல்லையென்டால் காணாமல் போனோர் தான், நீங்களும்!- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இன்றைய முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட மேற்கிந்தியத் தீவுகள் அணி, அணித்தலைவர் ஷாய் ஹோப்பின் அபாரமான 75 (46 பந்துகள்) ஓட்டங்களுடன் 6 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இத்தாலி அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 123 ஓட்டங்களையே எடுக்க முடிந்தது. ஷாமர் ஜோசப் 4 விக்கெட்டுகளைச் சாய்த்திருந்தார். முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் அணி 42 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்த 22 பேருக்குத் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இத்தாலி அணி வெல்லும் எனக் கணித்த @goshan_che க்குப் புள்ளிகள் கிடையாது. இன்றைய இரண்டாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சிறிலங்கா அணி, பதும் நிஸங்கவின் அதிரடியான 62 (41 பந்துகள்) ஓட்டங்களுடனும், பவன் ரத்னாயக்கவின் வேகமான 44 (25 பந்துகள்) ஓட்டங்களுடனும் 7 விக்கெட்டுகளை இழந்து 178 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஸிம்பாப்வே அணி, பிரயன் பென்னிட்டின் ஆட்டமிழக்காத புயல்வேக 63 (48 பந்துகள்) ஓட்டங்களுடனும், சிகண்டர் ராசாவின் அபாரமான 45 (26 பந்துகள்) ஓட்டங்களுடனும் 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 182 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஸிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது. ஸிம்பாப்வே அணி வெல்லும் எனக் கணித்த @vasee க்கு மாத்திரம் இரு புள்ளிகள் கிடைக்கும்!. சிறிலங்கா அணி வெல்லும் எனக் கணித்த மற்றைய 22 பேருக்கும் புள்ளிகள் இல்லை. இன்றைய மூன்றாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடப் பணிக்கப்பட்ட ஆப்கானிஸ்தான் அணி, இப்ராஹிம் ஸட்ரானின் ஆட்டமிழக்காத புயல்வேக 95 (56 பந்துகள்) ஓட்டங்களுடனும், செதிகுல்லா அடலின் வேகமான 44 (32 பந்துகள்) ஓட்டங்களோடும் 4 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை அள்ளிக் குவித்தது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கனடா அணியின் வீரர்கள் நிலைத்து ஆடமுடியவில்லை. தொடர்ச்சியாக விக்கெட்டுகளைப் பறிகொடுத்து இறுதியில் 8 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 118 ஓட்டங்களை எடுத்து தோல்வியைத் தழுவியது. முடிவு: ஆப்கானிஸ்தான் அணி 82 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. அனைவரும் ஆப்கானிஸ்தான் அணி வெல்லும் எனக் கணித்தமையால் எல்லோருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கும். இன்றைய மூன்று போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: @vasee நான்குபடிகள் மேலே ஏறியுள்ளார்!- ஆடுகளம்
- றோசா முள்ளா? மலரா??
றோசா என்றாலே அது மனதுக்கு மென்மையை உணர்த்தி நறுமணத்தையும் அள்ளி வீசும். ஆனால் தமிழ்சிறி தம்பிக்கு முள்ளாக குத்தி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைத்துள்ளதே.😳 தம்பி தற்போது வைத்தியசாலையில் தங்கிச் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் நலம்பெற்று வர இறைவனை வேண்டுகிறேன். மேலும் உறவுகளுக்கு விபரங்களை அறியத்தந்து அவர்களின் மனங்களை ஆறுதல்படுத்துமாறு தம்பியைத் தயவுடன் வேண்டிக் கொள்கிறேன்.🙏Paanch started following றோசா முள்ளா? மலரா??- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
சுகவீனம் காரணமாக வேலைக்கு செல்லவில்லை முழுப்போட்டியினையும் பார்த்துவிட்டேன். இல்லை! சிம்பாவே வேகப்பந்து வீச்சாளர்கள்தான் அதிக ஓட்டங்களை விட்டுக்கொடுத்தனர் 7 ஓவர்களுக்கு 73 ஓட்டங்கள் சராசரி 10.42 இலங்கை வேகப்பந்து வீச்சாளர்கள் 8 ஓவர்களுக்கு 69 ஓட்டங்களை விட்டுக்குகொடுத்தனர் சராசரி 8.6. https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-2025-26-1502138/sri-lanka-vs-zimbabwe-38th-match-group-b-1512756/full-scorecard அதுதான் கவலையாக இருக்கின்றது, இலங்கை இரசிகர்கள் ஆட்டம் பாட்டமாக இருந்தவர்கள் போட்டியின் போக்கு மாறியது மயான அமைதி, பின்னர் விக்கெட்டுக்கள் விழ மீண்டும் ஆர்ப்பாட்டம் இறுதியில் அதுவும் ஓய்ந்து போய்விட்டது, எனது நினைவில் முன்பு இலங்கை இரசிகர்கள் தோற்றாலும் வென்றாலும் சந்தோசமாக இருப்பார்கள், தற்போது இந்திய இரசிகர்கள் போல மாறிவருகிறார்கள்! விளையாட்டினை விளையாட்டாக பார்க்கும் நிலை மாறிவருகிறது.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
தனிய நின்று சாதித்து விட்டீர்களே...................👍.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
இஸ் சோதி மணிக்கட்டு சுழல் பந்து வீச்சாளர், மைக்கல் பிராஸ்வெல் ஒரு சுழல் பந்து வீச்சாளரும் 5 ஆம் நிலை துடுப்பாட்டக்காரரும் கூட, யாரை நியுசிலாந்து பயன்படுத்தும் என்பது ஆடுகளத்தின் தன்மையில் இருக்கும், சுப்பர் 8 போட்டிகள் அனைத்தும் பகல் இரவு போட்டியாக வேறு நடைபெறுகிறது.- புடினுடனான தொடர்பை மீட்டெடுப்பதற்கான முயற்சிகளில் ஐரோப்பிய தலைவர்களை ஈடுபடுத்துவதாக மக்ரோன் கூறுகிறார். Olha Kovalchuk, Anastasia Protz - 10 பிப்ரவரி, 15:00
இவ்விடயம் பற்றி வேறு திரிகளில் பலதடவைகள் யாழ்களத்தில் கூறியுள்ளார்கள் என நினைவுள்ளது. ஒரு துருவ உலக ஒழுங்கின்(Unipolar world order) அழுக்கான கை (Dirty hand) கோட்பாடாக கூறுகிறார்கள், அதாவது உலக அமைதியினை முதன்மை படுத்தி மனித அறத்திற்கு விரோதமான விடயங்களை சில செயற்பாட்டாளர்கள் மூலமாக பின் கதவு வழியாக செயற்படுகின்ற வேலை, அதனை வெளி உலகின் முன்பாக பெயரளவில் கண்டிப்பதோடு அந்த விடயத்தினை தடைப்படுத்தாமல் தொடர்வது, பாதிக்கப்படும் தரப்பு தமக்கு பெரும் கையே ஆதரவாக இருக்கின்றது எனும் நம்பிக்கையில் இருக்க விளைவுகள் பாதகமாகிவிடும். அதிசக்தி வாய்ந்த நாட்டின் கண்ணசைவில் உலகம் நகரும் காலப்பகுதியில் அது கண்டிக்கும் ஒரு விடயம் எந்த தடங்கலின்றி நடந்து முடிவதன் சூட்சுமம் அதுவாக இருக்கின்றது.- Today
- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சில மாதங்களுக்குப் பின்னர், ஒரு நாள் இரவு வேலை. நானும், நீர் கொழும்பைச் சேர்ந்த கத்தோலிக்கச் சிங்களவரான பெர்னாண்டோ எனும் பொறியியலாளரும் பணியில் இருந்தோம். தொழிற்சாலையில் இயந்திரங்கள் சரிவர இயங்குகின்றனவா, தொழிலாளர்கள் சரியாக பணியாற்றுகிறார்களா என்று பார்த்துவிட்டு இரவு 9 மணிக்கு இரவு உணவு அருந்துவதற்காக அன்று பணியில் இருந்த நாம் இருவரும் எமது அலுவலக அறைக்குச் சென்றோம். உணவருந்திக் கொண்டிருக்கும்போது பெர்ணான்டோவின் தகப்பனார் தொலைபேசியில் அவனுடன் உரையாடத் தொடங்கினார். அவனது முகத்தில் கலவரம். அவன் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்தபொழுது எங்கோவொரு இடத்தில் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டிருப்பது புரிந்தது. ஆனாலும் அதனைக் கேட்கும் திராணியில்லை. வெகுநேரமாகத் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு இணைப்பைத் துண்டித்துக்கொண்டதும் பேசத் தொடங்கினான். "கட்டுநாயக்கவில் விமானப்படையினரின் விமானங்களைப் புலிகள் தகர்த்துக்கொண்டிருக்கிறார்கள்" என்று ஆரம்பித்தவன், "இத்தாக்குதல் குறித்து உனது கருத்து என்ன? இவ்விமானங்கள் எமது சொத்துக்கள் அல்லவா? எமது நிதியில்த்தானே இதனை வாங்கியிருக்கிறது அரசாங்கம், அப்படியிருக்க இவற்றை அழிப்பது சரியா?" என்று என்னைப்பார்த்துக் கேட்டான். அழிக்கப்பட்டிருப்பது விமானப்படை விமானங்களா அல்லது ஏர் லங்கா விமானங்களா என்றுகூட எனக்குத் தெரியாது. அப்படியிருக்க அழிக்கப்பட்டது சரியா தவறா என்று என்னால் எப்படிக் கூறமுடியும். நான் பதிலளிக்காது பேசாமல் இருக்கவே, "உனக்குச் சந்தோசமாக இருக்கலாம்" என்று சட்டென்று கூறினான். இருப்பதோ நூறுவீதம் சிங்களவர்களைக் கொண்ட இடம். தொழிற்சாலையில் என்னைத்தவிர இன்னொரு தமிழர் மருந்துற்கேனும் இல்லை. எனக்கு என்ன நடந்தாலும் எவராலும் தடுத்துவிடமுடியாது, அப்படியிருக்க நடந்தது குறித்து சந்தோசப்படுகின்றேன் என்று எப்படிக் கூறமுடியும்? ஆகவே, "இல்லையில்லை, அவர்கள் ஏன் இப்படிச் செய்கிறார்களோ தெரியவில்லை" என்று வேண்டுமென்றே பொய்கூறினேன். சிறிது நேரத்திலேயே கட்டுநாயக்காத் தாக்குதல் குறித்த செய்தி தொழிற்சாலையெங்கும் பரவிவிடவே, நான் அலுவலகத்தை விட்டு வெளியே செல்வதை முற்றாகத் தவிர்த்து விட்டேன்.- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
https://www.espncricinfo.com/series/icc-men-s-t20-world-cup-2025-26-1502138/stats முன்னணி வீரர்கள்.- மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன்
மன்னார் - புத்தளம் வீதியை திறந்து தாருங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள்; இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் போராட்டம் மேற்கொள்வோம் - ரிஷாத் பதியுதீன் 19 Feb, 2026 | 07:10 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) 100 வருடங்கள் பழைமை வாய்ந்த மன்னார் புத்தளம் வீதியை திறந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமைத்துத் தாருங்கள். இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) இடம்பெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள் அபின் மற்றும் அபாயகரமான அவுடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், மன்னாரில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை புத்தளத்தில் இருந்து வாக்களிக்க பஸ்ஸில் கொண்டுசென்ற வழக்கில் நான் 3மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் 6 மாதங்களில் அந்த வழக்கில் இருந்து நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன். ஆனால் எனக்கு உதவி செய்த சிலரின் வழக்கு விசாரணைகள் பல வருடங்களாக இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன. சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் இதுதாெடர்பான அறி்கையை வழங்காதமமையால் வழக்கு விசாரணையை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இருப்பதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவிக்கின்றனர். அதனால் சட்டமா அதிபர் திணைக்களம் தற்போதாவது இவ்வாறான நடவடிக்கைகளில் இருந்து திருந்தி, இந்த வழக்கை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மேலும் மன்னார் போன்ற இடங்களில் இருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை அரசாங்கம் நினைத்தால் நிறுத்தலாம். அதற்கு கடற்படை அதிகாரிகளை நீண்டகாலத்துக்கு அங்கு நிறுத்தக்கூடாது. பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவர் போதைப்பொருள் கடத்தலுன் தொடர்பு பட்டிருப்பதாக நான் இந்த சபையில் தெரிவித்தபோது, அவருக்கு எதிராகநடவக்கை எடுக்கப்படுவதாக பிரதி பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார். ஆனால் அவரை இடமாற்றம் செய்ததே தவிர வேறு எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை. அதேபோன்று தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் மன்னாருக்கு சென்றால், கடத்தல் காரர்கள் சாப்பாடு கொடுக்கிறார்கள். இவ்வாறு செயற்படும்போது எப்படி அந்த பகுதியில் இருந்து போதைப்பொருள் கடத்தலை நிறுத்த முடியும்? அதனால் மன்னாருக்கு செல்லும் அமைச்சர்கள் புத்தியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். அதேபோன்று அதிகமான பள்ளிவாசல்களில் அல் குர்ஆனுக்கு தட்டுப்பாடு இருந்து வருகிறது. குர்ஆன் விளக்க புத்தகங்கள் இறக்குமதி செய்வதற்கு இருந்துவரும் தடையே இதற்கு காரணமாகும். ஏனைய மத புத்தகங்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்ய எந்த தடையும் இல்லை. ஆனால் இஸ்லாமிய புத்தகங்கள் கொண்டுவருவதாக இருந்தால், பாதுகாப்பு அமைச்சில் அதற்கான அனுமதியை பெறவேண்டி இருக்கிறது. இது இந்த அரசாங்கத்தின் நடவடிக்கை அல்ல. இது கோட்டா என அராஜகன் போட்ட தடை. ஆனால் அது இந்த அரசாங்கத்திலும் தாெடர்கிறது. ஏன் அநுர அரசாங்கத்துக்கு அதனை மாற்ற முடியாதா? துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் குர்ஆன் பிரதிகளை விடுவிக்குமாறு25 பாராளுமன்ற உறுப்பினர்கள் கைச்சாத்திட்டு அனுப்பியபோதும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதனால் ஆளும் தரப்பில் இருக்கும் முஸ்லிம் எம்.பிக்கள் இதுதொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மஹர பள்ளிவாசல் இன்னும் மூடப்பட்டே இருக்கிறது. மதத்த்துக்கு பொறுப்பான பிரதி அமைச்சருக்கும் பல தடவைகள் இதுதொடர்பில் தெரிவித்து வந்தபோதும் நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கிறார். ஆனால் எதுவும் இடம்பெறவில்லை. அதனால் ரமழான் காலத்தில் அந்த மக்கள் வழிபாடுகளில் ஈடுபட மஹர பள்ளிவாசலை திறந்துவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். மேலும் மன்னார் புத்தளம் வீதியை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தபோது பொய்யான கருத்துக்கள் இந்த சபையில் தெரிவிக்கப்பட்டது. அதனால் 100 வருடம் பழைமைவாய்ந்த இந்த வீதியை திற்ந்து தாருங்கள் அல்லது அதற்கு மாற்று பாதையை கடல் ஓரமாக அமைத்துத்தாருங்கள் இல்லையெனில் ரமழானுக்கு பின்னர் மக்களை ஒன்றிணைத்து போராட்டம் மேற்கொள்வோம்.இந்த பாதை கம்பஹாவிலோ அம்பாந்தோட்டையிலோ இருந்தால் இவ்வாறு மூடி வைத்திருப்பீர்களா? அந்த பாதையை அதிகம் தமிழ், முஸ்லிம் மக்கள் பயன்படு்த்துவதாலே உங்களது கண்கள் இந்த விடயத்தில் குருடாக இருக்கின்றன. அத்துடன் வில்பத்துவில் காடுகள் அழிக்கப்பட்டதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க பெரிய அறிவாளி போன்று பேசுகிறார். அவர் தெரிவிக்கும் விடயங்கள் அனைத்தும் பொய்யான கருத்தாகும். வில்பத்துவில் ஒரு அங்குலம்கூட காடு அழிக்கப்படவில்லை. விரட்டப்பட்ட முஸ்லிம்கள் அவர்களின் சொந்த மண்ணிலேயே குடியமர்த்தப்பட்டிருக்கிறார்கள். 20 வருடங்களுக்கு பின்னர் அந்த காணிகள் காடாக இருந்தன. அதனால் அந்த மக்களை குடியேற்ற காடுகளை அழிக்க வேண்டி ஏற்பட்டது. அதனையும் சட்ட ரீதியிலே மேற்கொண்டிருந்தேன். அவ்வாறு இல்லை என்றால் முடிந்தால் அதனை நிரூபியுங்கள். மன்னாரில் அந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக இந்த காடுகளை அழித்ததாக தெரிவித்து, மன்னார் புத்தளம் வீதியை திறக்காமல் இருப்பதற்கு இந்த சபையில் பொய் குற்றச்சாட்டுக்களை தெரிவிக்க வேண்டாம் என்றார். https://www.virakesari.lk/article/239077ஏராளன் started following அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை , மன்னார் - புத்தளம் வீதியை திறவுங்கள்; அல்லது மாற்றுப் பாதையை கடல் ஓரமாக அமையுங்கள்; - ரிஷாத் பதியுதீன் , பிரபாகரன் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை, துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை; இன்று நிலைமை தலைகீழ்! - இராதாகிருஷ்ணன் and 1 other- அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை
பாதுகாப்புச் செயலாளர் சம்பத் தூயகொந்தாவை சந்தித்தார் அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் Published By: Vishnu 19 Feb, 2026 | 07:51 PM ( வீ.பிரியதர்சன்) இறையாண்மையைப் பாதுகாத்து பிராந்தியப் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், இலங்கையின் பாதுகாப்புச் செயலாளரான (ஓய்வுபெற்ற) எயார் வைஸ் மார்ஷல் சம்பத் தூயகொந்தாவை, அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கேலர் வியாழக்கிழமை (19) சந்தித்தார். இந்த சந்திப்பில், நடைமுறை ரீதியிலான இராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல், இந்தோ-பசிபிக் பிராந்திய ஸ்திரத்தன்மையை வலுப்படுத்துதல், கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் எனும் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவான கலந்துரையாடல் நடைபெற்றது. மேலும், தொழில்வாண்மைத்துவ திறன்களை வளர்த்தல், நாடுகடந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள ஒருங்கிணைந்த செயற்பாடு, பாதுகாப்பான இந்து சமுத்திரத்திற்கான நீண்டகால ஒத்துழைப்பு ஆகிய விடயங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. இச்சந்திப்பு, இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான பாதுகாப்பு கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தும் முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது. https://www.virakesari.lk/article/239091- அன்பு ௐ
வணக்கம், நான் சுத்து மாத்து இல்லை பொய்யும் இல்லை. உங்கள் புது கருத்துக்களை நான் ஒத்துழைக்க வில்லை. ஒப்பந்தமும் வேணாம் எமக்குளை. நீயும் ௐ நானும் ௐ. சிவ சிவ ஹர ஹர வாழ்க வளமுடன் மிக்க நன்றி சகோ! நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க சிவ சிவ ஹர ஹர- பிரபாகரன் காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை, துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை; இன்று நிலைமை தலைகீழ்! - இராதாகிருஷ்ணன்
பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை, துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை ; ஆனால் இன்று நிலைமை தலைகீழ்! - இராதாகிருஷ்ணன் 19 Feb, 2026 | 07:08 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) பிரபாகரன் இருந்த காலத்தில் வடக்கில் போதைப்பொருள் பாவனை மற்றும் துஸ்பிரயோகங்கள் இருக்கவில்லை. ஆனால் இன்று அங்கு நிலைமை தலைகீழாக காணப்படுகிறது. மலையகத்திலும் அவ்வாறான தன்மையே காணப்படுகிறது. இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள் மற்றும் துஸ்பிரயோகங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த தண்டனைகளை இங்கும் வழங்க வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என மலையக மக்கள் முன்னணி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்ற நீதித்துறை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் நஞ்சுகள், அபின் மற்றும் அபாயகரமான ஒளடதங்கள் (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த திருத்தச் சட்டமூலங்களுக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம். போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாவதால் குடும்பமே இல்லாமல் போகின்றது. இவ்வாறான நிலைமையில் இதற்காக உரிய சட்டங்கள் அவசியமாகும். இதனால் இந்த சட்டமூலத்தின் நோக்கம் மிகவும் வரவேற்கத்தக்கது. கடந்த காலங்களில் நாட்டில் பல்வேறு கொலைகள் நடந்துள்ளன. இதில் அதிகமானவை போதைப் பொருளுடன் தொடர்புடையதாகவே இருக்கின்றது. இது தொடர்பில் அதிகபட்ச தண்டனையை வழங்கி இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் கருத்தாக உள்ளது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை குன்றவைப்பது போதைப்பொருள் விநியோகமும் போதைப் பொருள் பாவனையும் பிரதான பங்கு வகிக்கிறது. வடக்கு மற்றும் கிழக்கை எடுத்துக்கொண்டால் பிரபாகரன் இருந்த காலத்தில் அங்கு போதைப் பொருள் பாவனையோ , துஷ்பிரயோகங்களோ இருந்ததே இல்லை. ஆனால் இப்போது நிலைமை தலைகீழாக காணப்படுகிறது.சட்டம் ஒழுங்கு முறையாக செயற்படாமையால் போதைப்பொருள் பாவனை தீவிரமடைந்துள்ளது. மலையகத்திலும் இப்போது அவ்வாறான நிலைமையே உள்ளது. எவ்வாறாயினும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த ஜனாதிபதி நடவடிக்கை எடுத்து வருகின்றார். இது பாராட்டத்தக்க விடயமே. ஆனால் இந்த அரசாங்கம் வந்த பின்னரே தினமும் எங்கேயாவது கொலை நடக்கும் நிலைமை காணப்படுகின்றது. இவ்வாறான கொலை சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். போதைப்பொருள் தொடர்பான பிரச்சினைகளே இந்த கொலைகளுக்கு காரணமாக இருக்கின்றன. இதனால் இதனை கட்டுப்படுத்த முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு நாங்கள் ஆதரவளிப்போம். போதைப்பொருள் பாவனை மற்றும் பாதாளக்குழுக்கள் தொடர்புப்பட்டதாக காணப்படுகிறது.இதனால் முழு நாடும் இன்று அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளது. இதனால் தான் கொலைகள், துஸ்பிரயோகங்கள் இடம்பெறுகின்றன. இஸ்லாமிய நாடுகளில் போதைப்பொருள், துஸ்பிரயோகங்கள் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. அந்த சட்டங்களை இங்கு அமுல்படுத்த வேண்டும். தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் என்றார். https://www.virakesari.lk/article/239081- பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு!
பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்த அமைச்சர்கள் குழு! Published By: Vishnu 19 Feb, 2026 | 06:58 PM யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நடைபெறவிருக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பிரதி அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் அமைச்சின் பிற தலைவர்கள் 19ஆம் திகதி வியாழக்கிழமை பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு விஜயம் செய்தனர். https://www.virakesari.lk/article/239088- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
பிறப்பதற்கும் இறப்பதற்கும் நடுவிலே மனம் பெரிய பெரிய கனவு கண்டது முடியல வாழ்வதற்கும் வாழ்வதற்கும் நடுவிலே விதி வருவது எந்த உருவத்திலோ தெரியல. இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையிலே நடக்கும் ரகசியத்தை இன்னும் எவரும் அறியவில்லை பெருகிவரும் மனிதகுலம் உலகிலே எதற்கு பிறக்கிறது என்று இதுவரைக்கும் புரியலை பெற்றவரும் மற்றவரும் பிரிவு தானம்மா நீ பெற்றெடுத்த பிள்ளைகளும் வேறு தானம்மா உற்ற பொருள் செல்வம் எல்லாம் சொந்தம் ஏதம்மா இந்த உலகத்திலே எல்லாம் உனக்கு இரவல் தானம்மா- அமெரிக்க பசிபிக் கடற்படை தளபதி இலங்கை வருகை
பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து உயர்மட்ட சந்திப்புகள் – அமெரிக்க கடற்படை தளபதி இலங்கை வருகை Published By: Priyatharshan 19 Feb, 2026 | 04:54 PM ( வீ. பிரியதர்சன் ) உலகின் மிகப்பெரிய கடற்படை கட்டளைப்பிரிவுகளில் ஒன்றான அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ளார். அமெரிக்க பசிபிக் கப்பற்படையின் கட்டளைத் தளபதியான அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கேலரை அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் வரவேற்றனர். அவர் இன்று 19 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து பல்வேறு முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். இவ்விஜயத்தின் போது, கடல்சார் பாதுகாப்பு, பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகிய விடயங்கள் தொடர்பாக இலங்கை அரச அதிகாரிகளுடனும், இராணுவத்தின் உயர் அதிகாரிகளுடனும் அட்மிரல் கேலர் கலந்துரையாட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, ஒருவரோடொருவர் தொடர்பு கொண்டு இணைந்து இயங்கும் திறன் (Interoperability), மற்றும் பிராந்திய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் கூட்டாண்மை ஆகிய விடயங்களிலும் கவனம் செலுத்தப்படவுள்ளது. மேலதிக செய்திகளுக்கு https://www.virakesari.lk/article/239027 https://www.virakesari.lk/article/239066- யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
😁🫢🤣- டெல்லி ஏஐ மாநாட்டின் தொடக்க நாள் 'குழப்பம்' - சர்வதேச ஊடகங்கள் விவாதிப்பது என்ன?
செயற்கை நுண்ணறிவு குறித்த விழுமியங்களைப் பகிர்ந்து ஒன்றிணைந்து முன்னோக்கிச் செல்ல இலங்கை தயார் - AI Impact மாநாட்டில் ஜனாதிபதி Published By: Digital Desk 3 19 Feb, 2026 | 03:42 PM எவரையும் கைவிடாத வகையில் மற்றும் நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த பொதுவான விழுமியங்களைப் பகிர்ந்து கொண்டு பரஸ்பரம் கற்றுக்கொள்வதற்கும் கூட்டு முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதற்கும் இலங்கை தயாராக இருப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். புதுடெல்லியில் நடைபெற்று வரும் AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் இன்று வியாழக்கிழமை (19) கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவு குறித்த இலங்கையின் நோக்கம் என்பது தனித்து வெற்றியைப் பெறுவது அல்ல எனச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, தனது நாடு AI உட்கட்டமைப்பை பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாகப் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். எனவே, பின்வரும் 04 அடிப்படை விடயங்களை மையமாகக் கொண்ட பிராந்திய ஒத்துழைப்பை இலங்கை முன்மொழிவதாக ஜனாதிபதி தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவை மனிதகுலத்தின் நலனுக்காகப் பொறுப்புடன் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு 'AI Impact 2026' மாநாடு புதுடெல்லியில் நடைபெறுகிறது. இதன் அரச தலைவர்கள் அமர்வின் ஆரம்ப நிகழ்வு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை நடைபெற்றது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் (Emmanuel Macron), அபுதாபி முடிக்குரிய இளவரசர் ஷேக் காலித் பின் முகமது பின் சயீத் அல் நஹ்யான் (Sheikh Khaled bin Mohamed bin Zayed Al Nahyan), பிரேசில் ஜனாதிபதி லூலா டி சில்வா (Lula de Silva) மற்றும் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே (Tshering Tobgay) உள்ளிட்ட அரச தலைவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டுடன் இணைந்ததாக புதுடில்லி பாரத் மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கண்காட்சியையும் அரச தலைவர்கள் பார்வையிட்டனர். அத்துடன், மாநாட்டில் கலந்துகொண்ட அனைத்து அரச தலைவர்களும் பிரதிநிதிகளும் குழுவாக புகைப்படம் எடுக்கும் நிகழ்விலும் இணைந்து கொண்டனர். AI Impact 2026 மாநாட்டின் தலைவர்கள் அமர்வில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை வருமாறு: செயற்கை நுண்ணறிவானது பொருளாதாரங்கள், அரச நிர்வாகக் கட்டமைப்புகள் மற்றும் சமூகங்களை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் இந்தச் சிறப்பான தருணத்தில், புதுடில்லியில் உங்களுடன் இணைந்துகொள்வதை நான் கௌரவமாகக் கருதுகிறேன். கடந்த நூற்றாண்டுகளில் தொழில்மயமாக்கல் ஏற்படுத்தியதைப் போலவே, தேசிய வளர்ச்சிப் பாதையில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு மாற்றத்தக்க சக்தியாக AI தொழில்நுட்பம் விளங்குகின்றது. எவ்வாறாயினும், AI தொழில்நுட்பத்தில் வலுவடைந்துள்ள நாடுகளுக்கும் அத்தகைய வசதியற்ற நாடுகளுக்கும் இடையில் அதிகரித்து வரும் இடைவெளியானது, பல நாடுகளின் டிஜிட்டல் பொருளாதாரத்தில் பாரிய ஆபத்தை உருவாக்குகிறது. இவ்வாறு பின்தள்ளப்படும் நாடுகள் உலகளாவிய வளர்ச்சி மற்றும் நவீன பொருளாதார வாய்ப்புகளிலிருந்து மேலும் பல்வேறு பக்கவிளைவுகளுக்கு உள்ளாக நேரிடும். இதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் அனைவரையும் உள்ளடக்கிய, நீதியான மற்றும் நிலையான அபிவிருத்தி இலக்குகளும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றன. பல வளர்ந்து வரும் பொருளாதாரங்களைப் போலவே இலங்கையும் AI தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே, சரியான நோக்கம் மற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் நாம் நம்பிக்கையுடனும் தயக்கமின்றியும் செயற்பட வேண்டிய தீர்மானமிக்க தருணம் வந்துள்ளது. தொழில்நுட்ப அறிவு கொண்ட இளம் மனித வளம் இலங்கையில் உள்ளது. மேலும், வலுவான சட்டக் கட்டமைப்பு மற்றும் சர்வதேச கூட்டாண்மைகளுடன் இணைக்கப்பட்ட பொருளாதார கலாசாரமும் எம்மிடம் உள்ளன. நாம் தனிப்பட்ட தரவுப் பாதுகாப்பு மற்றும் சைபர் பாதுகாப்பிற்கான சட்டக் கட்டமைப்புகளை நவீனமயப்படுத்தி, டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகளுக்கு தொடர்ந்து முதலீடு செய்வதுடன், புத்தாக்கங்களை ஊக்குவிக்கக்கூடிய பொதுமக்களின் நம்பிக்கையை பாதுகாக்கக்கூடிய நிறுவனங்களை வலுப்படுத்துகிறோம். AI தொழில்நுட்பத்தின் நோக்கங்கள், உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்து உலகம் விவாதித்து வருகிறது. ஆனால் இதுவரை கவனிக்கப்படாத ஒரு முக்கியமான அம்சத்தை நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுதான் கலாசார பொருத்தப்பாடு. இந்த தொழில்நுட்பங்கள் மனிதகுலத்தின் கலாசார மதிப்புகள் மற்றும் திறன்களை மேலும் மேம்படுத்த உதவ வேண்டும். உலகத்தரம் வாய்ந்த AI தொழில்நுட்பம் ஒரு சில மொழிகள் மற்றும் கருத்தியல்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்டால், நமது தனித்துவமான கலாசார பன்முகத்தன்மையை இழக்கும் அபாயம் உள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளுக்கு, தமது மொழி மற்றும் கலாசாரம் மரியாதை மற்றும் நம்பிக்கையின் அடிப்படையாகும். அத்தகைய கலாசார பொருத்தப்பாடுகளை அடைய, விரிவான ஒருங்கிணைப்பு மற்றும் பாதுகாப்பும் அவசியம். இதன்போது, நமது உள்ளூர் மொழிகளையும் கலாசார அறிவையும் டிஜிட்டல் மயமயப்படுத்தி, அவற்றை செயற்கை நுண்ணறிவு கட்டமைப்புகளில் ஒருங்கிணைக்க வேண்டும். அத்துடன், பாதுகாப்பில் அதிகளவில் கவனம் செலுத்துவதும் முக்கியம். AI இன் பாதகமான விளைவுகளிலிருந்து நமது கலாசார விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளை நிறுவ வேண்டும். தனித்து வெற்றியை அடைவது எமது தொலைநோக்குப் பார்வை அன்றி ஒருங்கிணைவதாகும். பொருளாதார மற்றும் கலாசார ஒத்துழைப்பின் அடுத்த எல்லையாக AI உட்கட்டமைப்பு வசதிகளை நாம் பார்க்கிறோம். எனவே, இலங்கை ஒரு பிராந்திய ஒத்துழைப்பை முன்மொழிகிறது. இதன்போது, குறைந்த விலையில் பெறக்கூடிய மையப்படுத்தப்பட்ட கட்டுப்பாட்டைக்கொண்ட மொழி தரவுத்தொகுப்புகள், பொதுவான மதிப்பீட்டு முறைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் மற்றும் கூட்டு திறன் மேம்பாடு ஆகிய 04 பிரதான விடயங்களை அடிப்படையாகக் கொண்டமைவது மிகவும் முக்கியம் ஆகும். இந்த முயற்சி, AI இன் நன்மைகளை பரந்த மற்றும் சமமான முறையில் அணுகுவதற்கு நம் அனைவருக்கும் உதவும் என்று நான் நம்புகிறேன். இந்த நிலைமையில், தேசிய மற்றும் பிராந்திய தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய AI திறனுடன் கூடிய தரவு உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதை இலங்கை ஆராய்ந்து வருகிறது. டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தொழில்நுட்ப திறன்களில் உலக அளவில் தலைமையை அடைந்து வருகின்ற இந்தியா மற்றும் ஏனைய நாடுகளுடன் நெருக்கமாக செயற்பட்டு, நிலைபேறான, பாதுகாப்பான மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக உள்ள பிராந்திய AI தரவு மைய திறன்களை நிறுவுவதற்கு இலங்கைக்கு பெரும் ஆற்றல் உள்ளது. எந்தவொரு நாட்டுக்கும் தனியாக AI இற்கு தயாரான எதிர்காலத்தை உருவாக்க முடியாது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். உலகம் மற்றும் இந்தப் பிராந்தியத்தியத்தில் உள்ள நாடுகளின் கருத்துக்களையும் ம் கவனத்தில் கொண்டு, புது டில்லியில் நாம் இணங்கிய கூட்டு அறிக்கையில் இந்த ஒத்துழைப்பின் முக்கியத்துவம், சிறப்பம்சமாக நோக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. எனவே, யாரையும் கைவிடாத வகையிலும் நெறிமுறைகளின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு குறித்து பொதுவான மதிப்புகளைப் பகிர்ந்து கொண்டு, ஒருவருக்கொருவர் கற்றுக் கொள்ளவும், கூட்டாக முன்னோக்கிச் செல்லவும் இலங்கை தயாராக உள்ளது என்பதை தெரிவிக்க விரும்புகிறேன்'' எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://www.virakesari.lk/article/239059- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
சுமார் ஒருவருடம் முடிவடைந்த பின்னர் என்னுடன் பல்கலைக்கழகத்தில் கல்விபயின்ற நண்பனான பிரபாகரனையும் அவ்வேலைத்தளத்தில் இணைத்துவிட்டேன். இயல்பாகவே அதிகம் பேசத் தயங்கும் அவன், அத்தொழிற்சாலையில் எவருடனும் அதிகம் பேச்சுக்கொடுப்பதில்லை. தனது வேலையில் கண்ணும் கருத்துமாக இருந்துவிடுவான். இதனாலேயே அவன் மீது அங்கு பணியாற்றிய சில சிங்களப் பொறியியலாளர்களும், பெரும்பாலான தொழிலாளர்களும் சந்தேகப் படத் தொடங்கினர். அவனது பெயரும் பிரபாகரன் என்று தெரிந்துவிடவே ஏதோ விடுதலைப் புலிகளின் தலைவரே அங்கு வேலைக்கு வந்து இணைந்திருப்பதாக அவர்கள் நினைத்திருப்பார்களோ என்னவோ? அவன் குறித்து என்னிடம் தொடர்ச்சியாக கேள்விகேட்கத் தொடங்கினார்கள். அவனை எப்படி உனக்குத் தெரியும்? ஏன் எம்முடன் பேசமாட்டேன் என்கிறான்? ஏன் எப்போது பார்த்தாலும் கண்களை முழுசுவது போல வைத்திருக்கிறான்? இவனுக்கும் புலிகள் இயக்கத்திற்கும் தொடர்பு இருக்கின்றதா? என்பதே அவர்களின் கேள்விகளாக இருந்து வந்தது. சிலர் வெளிப்படையாகவே அவனைக் கொட்டியா என்று அழைக்கத் தொடங்கினார்கள். சிலவேளைகளில் மனமுடைந்து பேசுவான். எதுக்கடா இங்கே வந்தேன் என்று இருக்கிறது என்றும் கூறுவான். அந்தச் சூழலில் அவனால் நெடுநாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை. "உனக்குச் சிங்களம் தெரியும், அதனால சமாளிக்கிறாய், என்னால முடியாது" என்று சொல்லிக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவனது சகோதரியொருவர் ஜேர்மனியிலிருந்து அவனை அழைப்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தார். சில மாதாங்களிலேயே அவனுக்கான விசா கிடைத்தவுடன், எதுவுமே கூறாது வேலையை விட்டு விட்டுச் சென்றுவிட்டான். அவன் அவ்வாறு வேலையினை உதறித்தள்ளிவிட்டுச் சென்றமையானது நிர்வாகத்தில் அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக எனது நண்பன் என்றபடியினால் என்மீதே அவர்களின் கேளவிக்கணைகள் வந்து வீழ்ந்தன. சிலர் அவனைப் புலிகளின் உறுப்பினர் என்று நம்புமளவிற்கு வதந்திகள் பரவத் தொடங்கியிருந்தன.- ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ஷிவம் டுபேயின் சகலதுறை ஆட்டம், வருண் சக்ரவர்த்தியின் பந்துவீச்சு என்பன இந்தியாவை வெற்றி பெறச் செய்தன Published By: Vishnu 18 Feb, 2026 | 11:33 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் அஹமதாபாத் நரேந்த்ர மோடி விளையாட்டரங்கில் புதன்கிழமை (18) நடைபெற்ற ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் இந்தியா 17 ஓட்டங்களால் வெற்றிபெற்றது. இந்தப் போட்டி முடிவுடன் தென் ஆபிரிக்காவைத் தொடர்ந்து நான்கு வெற்றிகளுடன் இணை வரவேற்பு நாடும் நடப்பு சம்பியனுமான இந்தியா சுப்பர் 8 சுற்றில் விளையாடவுள்ளது. ஷிவம் டுபேயின் அதிரடி அரைச் சதத்துடன் கூடிய சகலதுறை ஆட்டமும் வருண் சக்ரவர்த்தியின் துல்லியமான பந்துவீச்சும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்றது. நெதர்லாந்தின் பந்துவீச்சில் திக்கமுக்காடிய இந்தியாவின் ஆரம்ப விரர்கள் அபிஷேக் ஷர்மா ஓட்டம் பெறாமலும் அதிரடி வீரர் இஷான் கிஷான் 18 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து திலக் வர்மா 31 ஓட்டங்களுடனும் அணித் தலைவர் சூரியகுமார் யாதவ் 34 ஒட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். ஷிவம் டுபே, ஹார்திக் பாண்டியா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களைப் பகிர்ந்து இந்தியாவை சிறந்த நிலையில் இட்டனர். ஷிவம் டுபே 31 பந்துகளில் 4 பவுண்டறிகளையும் 6 சிக்ஸ்களையும் விளாசி அடித்து 66 ஓட்டங்களைக் குவித்தார். இதில் 52 ஓட்டங்கள் பத்து பந்துகளில் பவுண்டறிகள் வாயிலாக பெறப்பட்டது. ஹார்திக் பாண்டியா 30 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் லோன் வென் பீக் 56 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஆரியன் டட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 194 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. நெதர்லாந்து துடுப்பாட்டத்தில் ஆறு வீரர்கள் 20 அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டங்களைப் பெற்று பலம்வாய்ந்த இந்தியாவுக்கு ஒரளவு ஈடுகொடுக்க முடியம் என்பதை நிரூபித்தனர். பாஸ் டீ லீட் (33), ஸக் லயன்-கெச்சட் (26), நோவா க்ரோஸ் (25 ஆ.இ.), மைக்கல் வெலிட் (24), கொலின் அக்கமன் (23), மெக்ஸ் ஓ'தௌத் (20) ஆகியோர் துடுப்பாட்டத்தில் தங்களாலான அதிகபட்ச பங்களிப்பை வழங்கினர். பந்துவீச்சில் வருண் சக்ரவர்த்தி 14 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷிவம் டுபே 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: ஷிவம் டுபே. https://www.virakesari.lk/article/239005- அன்பு ௐ
புதிய உறுப்பினர் நமச்சிவாயம் வருக! நல்வரவாகுக- விடுதலைப் புலிகளின் தலைவர்களை சரணடைய வைக்க ராஜபக்ச முயற்சி – பொன்சேகா குற்றச்சாட்டு
இந்த பரதேசிக்கு வாக்களிக்க சொல்லி மக்களுக்கு வழிகாட்டிய "அவியல் அரசியல் வியாதிகளை" என்ன சொல்லலாம்.- தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம் : அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம்
தலைமன்னார் இறங்குதுறையை அபிவிருத்தி செய்யப் புதிய திட்டம் : அமைச்சர் அநுர கருணாதிலக்க நேரடி விஜயம் 19 Feb, 2026 | 05:48 PM துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அநுர கருணாதிலக்க தலைமன்னார் இறங்குதுறையின் (Jetty) தற்போதைய நிலைமைகளைக் கண்டறிவதற்கும், அங்கு முன்மொழியப்பட்டுள்ள புதிய அபிவிருத்தித் திட்டங்களை ஆராய்வதற்கும் விசேட கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார். இந்த விஜயத்தின் போது, அமைச்சருடன் பிரதி அமைச்சர் ஜனித ருவன் கொடித்துவக்கு, அமைச்சின் செயலாளர் டபிள்யூ.டபிள்யூ.எஸ். மங்கள, அமைச்சின் உயர் அதிகாரிகள் மற்றும் மன்னார் மாவட்ட தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் உள்ளிட்ட குழுவினர் கலந்துகொண்டனர். தலைமன்னார் இறங்குதுறையானது இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையே நீண்டகாலமாக வரலாற்றுச் சிறப்புமிக்க கடல்வழிப் போக்குவரத்துத் தொடர்பைப் பேணி வந்த ஒரு முக்கிய தளமாகும். முன்னதாக இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே வாரத்திற்கு மூன்று முறை பயணிகள் மற்றும் வர்த்தகப் போக்குவரத்துச் சேவைகள் இடம்பெற்று வந்தபோதிலும், 1984ஆம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட போர்ச் சூழல் காரணமாக இந்தப் போக்குவரத்துச் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. தற்போதுள்ள இறங்குதுறையின் கான்கிரீட் தூண்கள் மற்றும் உருக்குக் கட்டமைப்புகள் மிகவும் சிதைவடைந்து காணப்படுவதுடன், அதன் மரப்பலகை நடைபாதைகளும் பாவனைக்கு உதவாத நிலையில் சேதமடைந்துள்ளன. இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள புவியியல் ரீதியான முக்கியத்துவம் காரணமாக, தலைமன்னார் பிரதேசம் குறைந்த செலவில் பயணிகள் மற்றும் பொருட்களைப் பரிமாற்றம் செய்யக்கூடிய ஒரு சிறந்த நுழைவாயிலாகக் கருதப்படுகிறது. இங்கிருந்து ரயில் நிலையம் மிக அருகில் அமைந்துள்ளமையால், நாட்டிற்குள் சரக்குக் கையாளுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மிகவும் இலகுவாகவும் குறைந்த செலவிலும் முன்னெடுக்க முடியும். இலங்கை துறைமுக அதிகார சபையினூடாக இங்கு மீளவும் போக்குவரத்தை ஆரம்பிப்பதன் மூலம் பாரிய பொருளாதார வருவாயை ஈட்ட முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்டுள்ள அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், வடக்கு இறங்குதுறையை பல கட்டங்களாக நவீனமயப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதுடன் முதற்கட்டமாக 310 மீட்டர் நீளமும் 7 மீட்டர் அகலமும் கொண்டதாக இந்த இறங்குதுறை நிர்மாணிக்கப்படவுள்ளதோடு, பிரதான வீதியிலிருந்து கப்பல்கள் நங்கூரமிடும் பகுதி வரை பயணிகள் மற்றும் வாகனங்கள் தடையின்றிச் செல்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்படும். அத்துடன், இரவு நேரப் போக்குவரத்துக்கான நவீன மின்விளக்கு வசதிகள், பயணிகள் முனையக் கட்டிடங்கள் மற்றும் வாகன தரிப்பிடங்கள் உள்ளிட்ட அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னதாக அதன் தொழில்நுட்பம், சந்தை வாய்ப்பு, பொருளாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் ரீதியான சாத்தியக்கூறுகள் குறித்த ஆய்வுகள் (Feasibility Study) தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/239074 - ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
Important Information
By using this site, you agree to our Terms of Use.