அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3266 topics in this forum
-
ஐ.போனுக்கு மென்பொருள் தயாரித்து 9 வயது ப்ரோம்டன் சிறுவன் சாதனை!! Mar 01 2013 10:27:00 http://ekuruvi.com/Brampton%20boy%20develops%20app%20for%20iPhone
-
- 0 replies
- 395 views
-
-
பிரதமர் நரேந்திர மோடி மிகுந்த ஆர்வம் காட்டும் திட்டமான, கங்கை நதியை சுத்தம் செய்யும் திட்டத்துக்கு இஸ்ரேல் உதவ முன்வந்துள்ளது. மாசுபட்டுள்ள கங்கை நதியை தூய்மைபடுத்தும் திட்டத்தை 3 ஆண்டுகளில் நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக ‘நமாமி கங்கா’ என்ற ஒருங்கிணைந்த திட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் இந்தியா வந்துள்ள இஸ்ரேலிய பொருளாதார மற்றும் வர்த்தகக் குழுவின் தலைவர் யோனாதன் பென் ஜேகன் டெல்லியில் செவ்வாய்க்கிழமை நிருபர்களிடம் கூறும்போது, “இத்திட்டம் தொடர்பாக இந்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதி மற்றும் அத்துறையின் செயலாளரை நாங்கள் ஏற்கெனவே சிலமுறை சந்தித்து பேசியுள்ளோம். இத்திட்டத்தில் நாங்களும் பங்கேற்க விரும்புகிறோம். இத்திட்டத்துக்காக எங்களின் அனுபவம்…
-
- 1 reply
- 395 views
-
-
அதிக சத்துகளும், இயற்கையாகவே நறுமணமும், அதிக சுவையும் கொண்ட இந்தியாவின் பாரம்பரிய அரிசி வகை. இதர அரிசி ரகங்களை விட இரண்டு, மூன்று மடங்கு அளவு பெரியது. இந்தியத் துணைக் கண்டத்தில் இமயமலை அடிவாரப் பகுதிகளில் பல நூற்றாண்டுகளாகவே பயிரிடப்பட்டு வருகிறது. இதர பாரம்பரிய அரிசி ரகங்களை விடவும் பாஸ்மதி அரிசி தனிச் சிறப்பு கொண்டது. புவியியல் ரீதியாக இந்த குறிப்பிட்ட பகுதிகளில் தகுந்த பருவ நிலையில் மட்டுமே சாகுபடி செய்ய முடியும். பிரியாணி மற்றும் புலாவ் உணவுக்கு பொருத்தமான அரிசி வகை என்பதால் அரபு நாடுகள் அதிக அளவு இறக்குமதி செய்கின்றன. பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே பண்டமாற்று முறையிலான வர்த்தகத்தில் முக்கிய பங்கு வகித்தது. தற்போது கமாடிட்டி சந்தையிலும் பாஸ்மதி அரிசி வர்த்த…
-
- 0 replies
- 394 views
-
-
கட்டமுடியாத' கைக்கடிகாரத்தின் விலை 9 மில்லியன் டாலர் இதுவரை தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரங்களிலேய மிகவும் நுட்பமான பாகங்களைக் கொண்டு சுவிஸில் உருவாக்கப்பட்ட வாட்ச் ஒன்று கடந்த செப்டெம்பரில் விற்பனைக்காக வெளியிடப்பட்டிருந்தது. மொத்தம் 2826 பாகங்களுடனும் 57 விசேட தொழில்நுட்ப நுணுக்கங்களுடனும் உருவாக்கப்பட்ட அந்தக் கைக்கடிகாரத்தின் மணியோசை, உலக அளவில் புகழ்பெற்ற லண்டனின் பிக் பென் கோபுரத்தின் கடிகார மணியோசையை நினைவூட்டுகிறது. அதிசயிக்க வைக்கும் வகையில் உருவாக்கப்பட்ட 9 மில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான இந்த வாட்ச்சுக்கு சொந்தக்காரர் அமெரிக்காவின் நியு யார்கைச் சேர்ந்தவர் என்பது மட்டும் தெரியுமே தவிர, அவரது பெயர் விபரங்கள் வெளியாகவில்லை. இதில் சுவாரஷ…
-
- 0 replies
- 394 views
-
-
நமது பிரபஞ்சத்தின் வயது முந்தைய ஆய்வுகளின் படி கணிக்கப்பட்டதைவிட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கலாம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு பிரபஞ்சத்தின் வயதை மதிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும் தற்போதைய பிரபஞ்சவியல் மாதிரிக்கு சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில், விஞ்ஞானிகள் நமது பிரபஞ்சத்தின் வயதை ‘பிக் பேங்’ எனப்படும் பெருவெடிப்பிலிருந்து காலத்தை அளவிடுவதன் மூலமும், தொலைதூர விண்மீன் திரள்களிலிருந்து ஒளியின் சிவப்பு மாற்றத்தின் (Redshift) மூலம் பழமையான நட்சத்திரங்களைப் ஆய்வு செய்வதன் மூலமும் மதிப்பிட்டு வந்தனர். கடந்த 2021ஆம் ஆண்டில், தற்போது நடைமுறையில் உள்ள லாம்ப்டா-சிடிஎம் ஒத்திசைவு மாதிரியின் மூலம் பிரபஞ்சத்தின் வயது 13.797 பில்லியன் …
-
- 0 replies
- 394 views
- 1 follower
-
-
நிறுவனம் டிரைவர் இல்லாத காரை சோதனை ரீதியில் அறிமுகப்படுத்தி இரண்டு ஆண்டுகளாகிவிட்டது. ஆனால் இன்னமும் அமெரிக்காவில் இது நடைமுறைக்கு வரவில்லை. ஆனால் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. உலகிலேயே டிரைவர் இல்லாத இத்தகைய சேவை முதன் முதலில் அறிமுகமாவது சிங்கப்பூரில்தான். கூகுள் நு டோனோமி (Nu Tonomy) என்ற பெயரிலான ஸ்டார்ட் அப் நிறுவனம் சிங்கப்பூரில் டிரைவர் இல்லாத டாக்சி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி வாடிக்கையாளர்கள் இந்நிறு வன செயலியை (App) பயன்படுத்தி இந்த டாக்சி சேவையை பயன்படுத்திக் கொள்ள முடியும். முதல் கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு குறிப் பிட்ட வழித்தடத்தில் இந்தக் கார் சேவையை இயக்குகிறது. தொடக்கத்தில் இந்த கார் பய…
-
- 0 replies
- 394 views
-
-
சூரியனின் செயல்பாடு பற்றி நாசா விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் சூரியனின் பூமியை விட 20 மடங்கு பெரிய அளவிலான கருமையான பகுதி தென்படுவதை நாசா விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். இது ‘கொரோனல் ஓட்டை’ என்று விஞ்ஞானிகள் அழைக்கப்படுகிறது. பார்ப்பதற்கு சூரியனின் ஒரு பகுதி காணாமல் போனது போன்று காட்சி அளிக்கிறது. இந்த கொரோனல் ஓட்டையை சூரியனின் தென் துருவ பகுதி அருகே கடந்த 23ஆம் திகதி நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகம் கண்டறிந்துள்ளது. கொரோனல் ஓட்டை தோன்றியதால் புவி காந்த புயல்கள் அல்லது சூரிய காற்று ஏற்படக்கூடும் என அமெரிக்காவின் தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாக அமைப்பான என்.ஓ.ஏ.ஏ. எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏனெனில் கொரோனல் ஓட்டையில் இர…
-
- 0 replies
- 393 views
- 1 follower
-
-
புதன் கிரகத்தின் மர்மங்களை ஆராயத் தயாராகும் பிரித்தானிய விண்கலம் புதன் கிரகத்தின் இரகசியங்களை அறிவதற்கான ஐரோப்பாவின் முதலாவது ஆராய்ச்சித்திட்டத்தின் ஒரு அம்சமாக அக்கிரகத்துக்கு அதிநவீன விண்கலமொன்று அனுப்பிவைக்கப்படவுள்ளது. பிரித்தானியாவில் உருவாக்கப்பட்ட இவ்விண்கலம் சூரியனுக்கு மிக அருகாமையில் அமைந்துள்ள வெப்பம் கூடிய புதன் கிரகத்துக்கு பூமியிலிருந்து ஏவப்படவுள்ளது. புதன் கிரகத்துக்கான ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் முதல்த்திட்டத்தின் ஒரு முயற்சியாக 450 செல்சியஸ் மேற்பரப்பு வெப்பநிலையைக் கொண்ட இக்கிரகத்தின் மேல் BepiColombo எனப்படும் இந்த விண்கலம் இரண்டு ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது. பிரெஞ்ச் கயானாவின் (French Guiana) கவுரோவில் (Kourou) அமைந்துள்ள ஐரோப…
-
- 1 reply
- 393 views
-
-
பூமியை சுற்றும் குறுங்கோள் கண்டுபிடிப்பு! நிலவைப் போலவே பூமியை சுற்றி வரும் மற்றுமொரு கோளினை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஒரு கார் அளவே கொண்ட குறித்த குறுங்கோளை அமெரிக்காவின் நாசா உதவியுடன் செயல்படும் காடலினா ஸ்கை சர்வே அமைப்பின் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘2020 சிடி3’ எனப் பெயரிடப்பட்டுள்ள குறித்த குறுங்கோள், 3 ஆண்டுகளுக்கு முன்னர் புவி வட்டப் பாதையை அடைந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், குறித்த குறுங்கோள் பூமியை தற்காலிமாகவே சுற்றி வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே, ‘2006 ஆர்ஹெச்120’ என்ற குறுங்கோள் பூமியைச் சுற்றி வரும் நிலையில், தற்போது அதே போன்ற 2-ஆவது குறுங்கோள் கண்டறியப்பட்டுள்ளது. http://athavannews.…
-
- 1 reply
- 393 views
-
-
பட மூலாதாரம்,NASA 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி வீரர் சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி நடையில் புதிய சாதனை படைத்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ், ஜனவரி 30ஆம் தேதி, அதிக நேரம் விண்வெளி நடை மேற்கொண்டவர் என்ற சாதனையைச் செய்துள்ளார். விண்கலத்தை விட்டு வெளியேறி, பிரத்யேக பாதுகாப்பு உடையை அணிந்துகொண்டு, விண்வெளியில் பணிகளை மேற்கொள்வதே விண்வெளி நடை எனப்படுகிறது. சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து வெளியே வந்து 5 மணிநேரம் 26 நிமிடங்கள் இதைச் செய்துள்ளார். இதன் மூலம், மொத்தமாக 60 மணிநேரம் 21 நிமிடங்கள் விண்வெளி நடை மேற்கொண்ட முன்னாள் விண்வெளி வீரர் பெக்கி விட்சனியின் சாதனையை, 62 மணிநேரத…
-
-
- 1 reply
- 393 views
- 1 follower
-
-
இதய அறுவைசிகிச்சை செய்ய உகந்த நேரம் எது? புதிய ஆய்வில் தகவல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionபிற்பகலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டால் அந்த இதயம், நீடித்த தன்மையுடனும் வலிமையுகவும் இருக்கும். பிற்பகலில் மேற்கொள்ளப்படும் இதய அறுவை சிகிச்சை பாதுகாப்பானது. ஏனென்றால், உடலின் உயிரோட்ட நேர சுழற்சியே அதற்குக் காரணம் என்று விஞ்ஞா…
-
- 0 replies
- 392 views
-
-
வானில் இன்று நிகழும் அரிய நிகழ்வு – ஒரே நேர்கோட்டில் வியாழன், வெள்ளி…! இன்று வானில் மிக அரிதான நிகழ்வாக, மிக அருகில் வெள்ளி, வியாழன் கோள்களை காணலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரிய குடும்பத்தில் சூரியனை சுற்றும் ஒவ்வொரு கோள்களும் அதற்கே உரித்தான கோணங்களில் சாய்ந்து, நீள் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. அப்படி சுற்றும் போது கோள்கள் ஒரே நேர்க்கோட்டில் வருவது வழக்கமானது. அந்த வகையில் கடந்த 21, 22 ஆம் திகதிகளில் வானில் வெள்ளி, வியாழன் மற்றும் நிலவு ஒரே நேர்கோட்டில் சந்தித்த அரிய நிகழ்வை காண முடிந்தது. அந்தவகையில் இன்று (புதன்கிழமை) வானில் வெப்பமான கோளான வெள்ளியும், இராட்சத கோளான வியாழனும் மிக அருகில் வருவதை காண முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ள…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
செவ்வாய் கிரகத்திற்கு விண்கலம் அனுப்பி சாதனை புரிந்த ஐக்கிய அரபு அமீரகம் டோக்கியோ அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இந்தியா ஆகியநாடுகள் மட்டுமே விண்வெளிக்கு விண்கலங்களை ஆய்வுக்கு அனுப்பி சாத்னை புரிந்து உள்ளன. முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பி சாதனை புரிந்து உள்ளது. கடந்த வாரமே இந்த விண்கலம் ஏவப்பட திட்டமிடப்பட்டிருந்தது ஆனால் மோசமான வானிலையால் விண்ணில் செலுத்தப்படவில்லை. ஜப்பானில் உள்ள தனேகஷிமா என்னும் இடத்திலிருந்து ஏவப்பட்ட இந்த விண்கலம் எச்-2 ஏ ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இது செவ்வாய் கிரகத்தின் காலநிலை மற்றும் பருவநிலைகளை ஆராயும். அமெரிக்க நிபுணர்களிடம் பயிற்சி ப…
-
- 0 replies
- 392 views
-
-
Published By: DIGITAL DESK 3 07 FEB, 2025 | 05:21 PM சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான ஆய்வுகளில் முதன்முறையாக ஒட்சிசன் மற்றும் ரொக்கெட்டுக்கு தேவையான எரிபொருளுக்கான பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்த ஆய்வு மனிதர்கள் உயிர்வாழ்வதற்கும் விண்வெளியின் எதிர்கால ஆய்வுக்கும் இன்றியமையாததாகக் கருதப்படுகிறது. முதல் முறையாக பூமியின் கீழ் சுற்றுப்பாதையில் செயற்கை ஒளிச்சேர்க்கை தொழில்நுட்பம், ஒட்சிசன் மற்றும் ரொக்கெட் எரிபொருளுக்கு தேவையான பொருட்களை உருவாக்கி டியாங்காங் விண்வெளி நிலையத்தில் உள்ள Shenzhou-19 குழுவினர் 2030 க்கு முன் நிலவில் தரையிறக்கம் உட்பட நீண்ட கால விண்வெளி ஆய்வுக்கு வழி வகுத்துள்ள…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
பூமியை போன்ற கிரகத்தை சுற்றி தடிமனான வளிமண்டலம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANA BERRY Image captionஅந்த பூமிக்கு விஞ்ஞானிகள் வைத்து பெயர் ஜி ஜே 1132பி நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படு…
-
- 1 reply
- 392 views
-
-
எச்சரிக்கை !! பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் கவனம் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது. பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன. …
-
- 0 replies
- 392 views
-
-
லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி - முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை…
-
- 0 replies
- 392 views
- 1 follower
-
-
காய்ச்சலைக் கண்டறிய சன் கிளாஸ்... AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் சீனா! சீனாவின் வுஹான் மாவட்டத்தில் ஆரம்பித்த கொரோனா வைரஸ், இப்போது உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இந்த வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் பாதிக்கப்பட்டுள்ளன. தற்போது வரை உலகம் முழுவதும் ஒன்பது லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்தத் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த நாடான சீனாவில், தற்போதுதான் படிப்படியாக ஊரடங்கு விலக்கப்பட்டு மக்கள் பொது இடங்களுக்குச் செல்ல தொடங்கியுள்ளனர். இந்நிலையில், சீனாவில் காய்ச்சலைக் கண்டுபிடிக்க செயற்கை நுண்ணறிவுக் கருவி ஒன்றைப் பயன்படுத்துகின்றனர். செயற்கை நுண்ணறிவு நிறுவனமான 'ரோகிட்' காய்ச்சலை இரண்டே நிமிடங்களில் கண்டறியும் கருவி…
-
- 0 replies
- 391 views
-
-
செவ்வாயில் ஆஒக்ஸிஜன் இருப்பதை கண்டுபிடித்தது நாசா செவ்வாய் கிரகத்தில் உள்ள உப்பு நீரில் நுண்ணியிரிகள் வாழ்வதற்கான ஒக்ஸிஜன் இருப்பதாக நாசா கண்டறிந்துள்ளது நாசா கடந்த 2012 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் கியூரியாசிட்டி என்ற நடமாடும் ஆய்வுக்கூடம் ஒன்றை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மணிக்கு சராசரியாக சுமார் 30 மீட்டர் பயணிக்கக் கூடிய கியூரியாசிட்டி ரோவரின் இலக்கு செவ்வாய் கிரகத்திலுள்ள மண் மற்றும் பாறைகளைக் குடைந்து எடுக்கப்பட்ட மாதிரிகளில், அவற்றின் தோற்றம், அமைப்பு மற்றும் ரசாயன மூலக்கூறுகள் ஆகியவற்றை ஆய்வு செய்வது. இதன் மூலம், செவ்வாய் கிரகத்தின் தற்போதைய மற்றும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சுற்றுச்சூழல் எப்படி இருந்…
-
- 0 replies
- 391 views
-
-
ஹெலன் பிரிக்ஸ் பிபிசி படத்தின் காப்புரிமை ANNA DENIAUD, FONDATION TARA OCÉAN உலகம் முழுவதும் கடல் பகுதிகளில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட வகைகளை சேர்ந்த வைரஸ்கள் உள்ளது சமீபத்திய ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இந்த வைரஸ்க…
-
- 0 replies
- 391 views
-
-
கொசுகள் நம்மில் ஒரு சிலரை மட்டுமே கடிக்கும் - அது ஏன்? ரவுல் ரிவாஸ் கோன்சாலஸ் தி கன்வெர்சேஷன் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கொசுக்கள் உங்களை கடித்தால், அது நிச்சயம் பெண் கொசுவாகத்தான் இருக்கமுடியும். ஏனென்றால் ஆண் கொசுகள் கடிக்காது. கொசுக்களும் அவை பரப்பும் நோய்களும் வரலாற்றில் நடந்த அனைத்துப் போர்களையும் விட அதிக மக்களைக் கொன்றுள்ளன. உண்மையில், புள்ளிவிவரங்களின்படி, கொசுதான் மனிதர்களுக்கு ஆபத்து விளைவிக்கும் உலகின் மிகக் கொடிய உயிரினம். 2018ல் மட்டும் சுமார் 7 லட்சத்து 25 ஆயிரம் இறப்புகளுக்கு இந்த கொசு…
-
- 1 reply
- 390 views
- 1 follower
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் திடீர் தீ: என்ன நடந்தது என அமெரிக்கா, ரஷ்யா தகவல் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,NASA சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ஐ.எஸ்.எஸ்) புதிதாக அனுப்பப்பட்ட ரஷ்ய கலன் (module) ஒன்றில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது என்று அதை நிர்வகிப்பவர்கள் தெரிவித்துள்னர். இந்தக் கோளாறு கட்டுப்பாட்டுக் குழுவினரால் சரிசெய்யப்பட்டது என்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள அனைத்து அமைப்புகளும் நன்றாக இயங்குவதாகவும் அமெரிக்க விண்வெளி ஆய்வு முகமையான நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்த வேறு ஒரு கலனில் இருந்த உந்துகை கருவிகள் இ…
-
- 0 replies
- 390 views
- 1 follower
-
-
இணைய உலகில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இல்லை என்றால் மோசடிகளுக்கும், ஏமாற்று வேலைகளுக்கும் இலக்காக வேண்டியிருக்கும். வைரஸ் தாக்குதலும், தாக்காளர்கள் (hackers) கைவரிசையும், ஊடுருவு மென்பொருள் (malware) பாதிப்புகளும் மட்டுமல்ல, வைரலாகப் பரவும் பொய்யான தகவல்களும் கூட இணையவாசிகளை ஏமாற்றக் காத்திருக்கின்றன. இதற்கு சமீபத்திய உதாரணமாக, ஃபேஸ்புக்கில் பயனாளிகளின் தனியுரிமையைப் பாதுகாப்பது தொடர்பாகப் பரவிய அறிவிப்பைச் சொல்லலாம். தகவல்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஃபேஸ்புக்கில் நிலைத்தகவலாக இந்த அறிவிப்பைப் பார்த்தவர்கள் திடுக்கிட்டுப் போயிருப்பார்கள். ஏனெனில், ஃபேஸ்புக்கில் பயனாளிகள் பகிர்ந்துகொள்ளும் தகவல்கள் மற்றும் ஒளிப்படங்கள் அனைத்தும் பொதுவெளியில் வர உள்…
-
- 0 replies
- 390 views
-
-
ஆப்பிள் பே கேஷ், வேகமான வயர்லெஸ் சார்ஜிங் அம்சங்களுடன் ஐ.ஓ.எஸ். 11.2 வெளியானது ஆப்பிள் நிறுவன சாதனங்களில் ஏற்பட்ட பிழைகளை சரி செய்யும் நோக்கில் ஐ.ஓ.எஸ். 11.2 இயங்குதள அப்டேட்டை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சான்பிரான்சிஸ்கோ: ஆப்பிள் நிறுவன சாதனங்களில் திடீரென ஏற்பட்ட ரூட் லாக்-இன் எனப்படும் பாதுகாப்பு பிழை அனைத்து பயனர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. ஐபோன், ஐபேட், ஐபாட் உள்ளிட்ட சாதனங்களில் ஏற்பட்ட பிழை அடிக்கடி சாதனத்தை ரீபூட் செய்தது. டிசம்பர் 2-ம் தேதி அதிகாலை சரியாக 12.15 மணிக்கு ஏற்பட்ட பிழை அனைத்து சாதனங்களையும் பயன்படுத்த விடாமல், ரீஸ்டார்ட் செய…
-
- 0 replies
- 389 views
-
-
திருச்செந்துறை ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன அறை | படம்: ஆர்.எம்.ராஜரத்தினம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பில், தமிழகத்திலேயே முதன்முதலாக குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. வாழைத்தார்கள் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாபாரிகள் மத்தியில் பொது ஏலம் விடப்படும். ஏலத்தில் விலை குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், இந்த குளிர்விப்பு நிலையத்தில் 21 நாட்கள்வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக மாதம் ஒன்றுக்கு கிலோவுக்கு ரூ.1 செலுத்த வேண்டும். இந்த வசதியின் காரணமாக வாழை அ…
-
- 0 replies
- 389 views
-