அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
வாஷிங்டன்: இதுவரை நாம் பார்க்க முடியாத நிலவின் கருமையான மறுபக்கத்தை, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான - நாசா வெளியிட்டுள்ளது. பூமியின் மேற்பரப்பில் உள்ள, 'ஓசோன்' படலம், வளிமண்டலத்தில் காணப்படும் துாசு, தாவர உயிரிகள், மேகக் கூட்டங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதற்காக, 'டி.எஸ்.சி.ஒ.வி.ஆர்' என்ற செயற்கைக் கோளை, நாசா, விண்ணிற்கு அனுப்பியுள்ளது. பூமியில் இருந்து, 10 லட்சம் மைல்களுக்கு அப்பால் உள்ள இந்த செயற்கை கோளில், 'எபிக்' என்ற கேமராவும், தொலைநோக்கியும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமரா, பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள நிலவின் மறுபுறத்தை, படம் எடுத்து அனுப்பியுள்ளது. அந்த படத்தில், பூமிக்கும், செயற்கைக் கோளுக்கும் நடுவே உள்ள, நிலவின் பின்பக்கம், சூரிய ஒளியில் ஒளிர்கி…
-
- 0 replies
- 530 views
-
-
பாதரசம் என்னும் உயிர்க்கொல்லி கிருஷ்ண பிரபு குழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பியவை. அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோ…
-
- 0 replies
- 1.1k views
-
-
2015ம் ஆண்டின் சூரியனின் முதல் சூரிய கிளரொளி காணப்பட்டது என்று நாசா நிறுவனம் தெரிவித்துள்ளது. சூரியனின் மேற்பரப்பில் சக்தி வாய்ந்த கதிர்வீச்சு வெடித்து சிதறிய நிகழ்வினை நாசா படம்பிடித்துள்ளது-. இந்த சூரிய கிளரொளி வெடித்து சிதறுவதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது, ஆனால் இந்த கதிர்வீச்சு இன்னும் பலமாய் வெடித்துச் சிதறுவதை தடுத்து நிறுத்தவும் முடியாது. இந்த படம், சூரியனை தொடர்ந்து கண்காணிக்கும் நாசாவின் சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரியால் எடுக்கப்பட்டது. இந்த குறிப்பிட்ட நிகழ்வை M5.6 வகுப்பு கிளரொளி என்று வகைப்படுத்தியுள்ளதனர். X வகுப்பு சூரிய கிளரொளி போன்ற மிக தீவிரமான சூரிய கிளரொளியின் அளவை விட பத்து மடங்கு பெரியதாகும் இந்த M வகுப்பு கிளரொளி. அந்…
-
- 0 replies
- 408 views
-
-
இலத்திரனியல் கழிவுகள் & முகமைத்துவம் மின்னணுக் குப்பை மின்னணுக் குப்பை எனப்படுவது பயன்படுத்தப்படாமல் எறியப்படும் மின்சார மற்றும் மின்னணுக் கருவிகள் மற்றும் அவற்றின் உதிரிப்பாகங்களைக் குறிக்கும். இத்தகைய கருவிகள் பொதுவாக பழையதாகி கோளாறாகி விடுவதன் காரணமாகவோ அல்லது அவற்றை விட திறன்மிக்க கருவிகளைப் பயனர்கள் வாங்குவதாலோ இவை எறியப்படுகின்றன. இவ்வாறு எறியப்படும் கருவிகள் பல நச்சுத்தன்மை கொண்ட பாகங்களைக் கொண்டுள்ளன. இவை சுற்றுச்சூழக்கு ஊறு விளைவிக்கின்றன. பாதரசம், காரீயம், போன்ற உலோகங்களை இவை கொண்டுள்ளன. இவ்வாறு எறியப்படும் கருவிகள்: துவையல் எந்திரம் போன்ற பெரிய கருவிகள் மின்னல…
-
- 0 replies
- 7.7k views
-
-
Getty Images ஒருவகை காட்டு தக்காளியில் இருந்து பரிணாம வளர்ச்சியடைந்தது உருளைக் கிழங்கு என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கட்டுரை தகவல் டலியா வென்சுரா பிபிசி முண்டோ 10 செப்டெம்பர் 2025, 04:52 GMT புதுப்பிக்கப்பட்டது 10 செப்டெம்பர் 2025, 06:02 GMT சுமார் 90 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, பின்னாளில் தென் அமெரிக்கா என்று அழைக்கப்படும் பகுதியில், ஆண்டிஸ் மலைத்தொடர் இன்னமும் உருவாகிக்கொண்டிருந்தபோது, தாவரங்கள் இயற்கையாக வளர்ந்திருந்தன. அப்போது மனிதர்கள் இருந்திருக்கவில்லை. அப்போது இரண்டு தாவரங்கள் "உண்மையில், இரண்டு தாவர இனங்கள்" அருகருகே வாழ்ந்து வந்தன "அவை இன்று நாம் காணும் தக்காளிகளின் (சோலனம் லைகோபெர்சிகம்- Solanum lycopersicum) முன்னோடிகள் மற்றும் சோலனம் எட்யூபெரோசம்(Solan…
-
- 0 replies
- 299 views
- 1 follower
-
-
நாசாவின் முன்னாள் அதிகாரிகள் சிலர் இணைந்து நிலவுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் பொருட்டு நிறுவனமொன்றினை ஆரம்பித்துள்ளனர். அந்நிறுவனத்திற்கு அவர்கள் 'கோல்டன் ஸ்பைக்' எனப் பெயரிட்டுள்ளனர். எனினும் இப் பயணத்திற்கான கட்டணம் தான் வாயை பிளக்கவைக்கின்றது. ஆம் இதற்காக அறிவிக்கப்பட்டுள்ள கட்டணம் 1.5 பில்லியன் அமெரிக்கடொலர்களாகும். இது இருவருக்கான கட்டணமாகும். நாடுகள் மற்றும் அரசாங்கங்களை குறிவைத்தே இதனை ஆரம்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கின்றது. மற்றைய நாடுகள் ஆராய்ச்சி நோக்கத்திற்காக அல்லது தேசத்தின் பெருமைக்காக அங்கு செல்லலாம் எனவும் குறிப்பிடுகின்றது. இந் நீண்ட தூர சவால் மிக்க பயணத்திற்கான உடைகள் மற்றும் சில உபகரணங்களைவேறு நிறுவனங்களிடம் தயாரிக…
-
- 0 replies
- 471 views
-
-
மனிதர்களின் விண்வெளி பயணத்தில் முதன்முறையாக பெண் ஒருவரை தலைமை அதிகாரியாக நாசா நியமித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு சந்திரனுக்கு மனிதனை அனுப்ப தயாராகி வரும் நிலையில், மனித விண்வெளி ஆய்வு மற்றும் செயல்பாட்டு மிஷன் இயக்குநரகத்தை வழிநடத்த கேத்தி லூடர்ஸ் என்ற பெண் அதிகாரி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக நாசா தலைவர் ஜிம் பிரிடென்ஸ்டைன் ட்விட்டரில் அறிவித்தார். 1992 ஆம் ஆண்டு நாசாவில் சேர்ந்த கேத்தி லூடர்ஸ், கடந்த மாதம் தனியார் குழுவின் விண்வெளி பயணத்தை திறன்பட நிர்வகித்ததால் பதவி உயர்வு பெற்றுள்ளார். ஸ்பேஸ்எக்ஸ், போயிங் மற்றும் நாசாவுடன் கூட்டு சேர்ந்துள்ள பிற நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட ராக்கெட்டுகளை சோதனை செய்து மனிதர்களை பாதுகாப்பாக விண்வெளிக்கு அனுப்பும் பணியை பல ஆ…
-
- 0 replies
- 418 views
-
-
இயற்பியலும் தத்துவமும் இளையா 100 ஆண்டுகளுக்கு முன் முதன்முறையாக 1911-ல் சால்வே மாநாடு பெல்ஜியத்தில் நடந்தது. எர்னெஸ்ட் சால்வே என்பவர் பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர். தொழிலதிபர். பல கல்வி நிறுவனங்களைத் தோற்றுவித்தவர். அவர் அழைப்பின் பேரில் ஐரோப்பாவின் மிகச்சிறந்த விஞ்ஞானிகள் பலர் மாநாட்டில் கலந்துகொண்டனர். இயற்பியலில் உள்ள சிக்கலான விஷயங்களைப் பற்றிப் விவாதித்தனர். இந்த மாநாடு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை இன்றும் நடத்தப்படுகிறது. கடைசியாக 2011-ல் நடைபெற்ற மாநாட்டின் கரு ‘குவாண்டம் உலகின் கோட்பாடு- The theory of Quantum world’. இந்தக் கரு அதன் குழந்தை நிலையில் கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்னரே 1927-ல் விவாதிக்கப்பட்டது. 1927-ல் நடைபெற்ற ஐந்தாவது …
-
- 0 replies
- 6.2k views
-
-
8 கோள்களுடன் நட்சத்திரத் தொகுதி சூரிய மண்டலத்துக்கு வெளியே 8 கோள்களுடன் காணப்படும் நட்சத்திரமொன்றை நாசா விண்வெளி நிலையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எமது சூரிய மண்டலத்தையொத்த அதிகளவான கோள்களைக் கொண்ட நட்சத்திர முறைமையொன்று கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும். எமது சூரிய மண்டலத்திலிருந்து 2,545 ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள கெப்லர்- –90 என்ற இந்த நட்சத்திரமானது எமது சூரியனை விடவும் பெரியதும் சிறிது சூடானதுமாகும். அந்த நட்சத்திரத்தைச் சுற்றி எமது பூமியிருக்கும் நிலையில் வலம் வரும் கெப்லர் -–90i என்ற கோளானது எமது பூமியை விட சிறி…
-
- 0 replies
- 310 views
-
-
மேலும் ஒரு புதிய கிரகம் கண்டுபிடிப்பு நியுயார்க், நவ. 17- நமது சூரிய குடும்பத்தில் ஏராளமான சிறு கிரகங்கள் உள் ளன. இதுவரை 250 கிரகங்கள் சூரிய குடும்பத்துக்கு வெளியே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. `கான்கிரி 55' என்ற நட்சத் திரத்தை சுற்றி ஏற்கனவே 4 கிரகங்கள் இருப்பது சமீபத்தில் தெரிய வந்தது. இப்போது 5-வதாக மேலும் ஒரு புதிய கிரகம் அந்த `கான்கிரி 55' நட்சத்திரத்தின் சுற்றுப்பாதை யில் இருப்பதை அமெரிக்க வான இயல் நிபுணர்கள் கண்டு பிடித்துள்ளனர். அந்த கிரகத்தில் நமது பூமியை விட 5 மடங்கு அதிக வாயுக்கள் உள்ளன. இந்த புதிய கிரகம் பூமியில் இருந்து 41 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. அந்த புதிய கிரகத்தில் பாறைகள் நிறைந் துள்ளன. தண்ணீர் இருக்கவும் வாய்ப்பு உள்ளதாக நிபு…
-
- 0 replies
- 1.2k views
-
-
அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்: ஆப்பிள் திட்டம் ஐ-போன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள், அதிவேக ஒயர்லெஸ் ஐ-போனை, நடப்பாண்டின் 2ம் காலாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாக பேங்க ஆஃப் அமெரிக்கா தெரிவித்துள்ளது. மூன்றாம் தலைமுறை ஐ-போன் தயாரிப்பில் இறங்கியுள்ள ஆப்பிள் நிறுவனம், நடப்பாண்டின் 3ம் காலாண்டில் 8 மில்லியன் அதிவேக ஒயர்லெஸ் ஐ-போன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளதாவும் பேங்க் ஆஃப் அமெரிக்கா கூறியுள்ளது. இத்தகவல் வெளியானதும் பங்குச்சந்தையில் ஆப்பிள் நிறுவன பங்குகளின் விலை இன்று 2.76 டாலர் உயர்ந்து 143 டாலராக அதிகரித்துள்ளது. அதேசமயம் அமெரிக்காவின் முன்னணி தகவல்தொடர்பு நிறுவனமான ஏடி&டி பங்குகளின் மதிப்பு 38.39 டாலர் என்ற அளவில் இருந்து 37.66 ஆக குறைந்துள்ளதாக தகவல்கள் தெரி…
-
- 0 replies
- 1.5k views
-
-
-
இத்தாலி செயற்கைக்கோளுடன் விண்ணில் சீறி பாய்ந்தது பி.எஸ்.எல்.வி., ராக்கெட் * "இஸ்ரோ'வின் வர்த்த ரீதியான முதல் செயல்பாட்டுக்கு வெற்றி சென்னை: சென்னை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி., சி8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இத்தாலி நாட்டின் "ஏஜைல்' செயற்கைக் கோளை, நமது ராக்கெட் மூலம் வர்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தும் இஸ்ரோவின் முதல் முயற்சியே மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் வருங்காலத்தில் வர்த்தக ரீதியாக இஸ்ரோவிற்கு அதிக வாய்ப்புகள் கிடைக்கும் என்று அதன் தலைவர் மாதவன் நாயர் பெருமையுடன் கூறினார். விண்வெளி ஆய்வில் இஸ்ரோ ( இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம்) தொடர்ந்து பலசாதனைகளை நிகழ்த்தி வருகிறது. ஏற்கனவே பல வகையான …
-
- 0 replies
- 1.3k views
-
-
அமெரிக்காவில் உயரிய விருது பெற்ற, மலேசியத் தமிழர்! மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் பெர்னார்ட் அருளானந்தம் அமெரிக்காவில் உயரிய விருதினைப் பெற்றுள்ளார். தொற்று நோய்களுக்கான புதிய தடுப்பு மருந்துகளைக் கண்டு பிடிக்கும் பணியில் சிறந்த பங்காற்றியமைக்காகவே அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதன்போது அவர் அமெரிக்காவில் புதிய கண்டு பிடிப்பாளர்களுக்கான தேசிய அகாடமி விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மலேசியாவின் ஈப்போவினைச் சேர்ந்த தமிழரான வைத்தியர் அருளானந்தம், கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். தற்போது அவர் செண் அந்தோனியாவிலுள்ள டெக்சாஸ் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி, பொருளாதார மேம்பாடு அறிவாக்கத் துறையின் துணைத் தலை…
-
- 0 replies
- 601 views
-
-
பேராசிரியர் சுல்தான் இஸ்மாயில் மண்புழு என்றால் இளக்காரமாகப் பார்க்கும் பார்வை ஒன்று உண்டு. அதை மாற்றி மண்புழுக்களின் மீது மக்களுக்கு மரியாதை பிறக்கச் செய்த மனிதர் அவர். "நான் இருக்கும் வரை மண்புழுக்களுக்கு இடையே எனது வாழ்க்கை. நான் இறந்த பிறகு என் மீது மண்புழுக்களின் வாழ்க்கை!" - இதுவே, பேராசிரியர் சுல்தான் அகமது இஸ்மாயில் கூறும் எளிய வாழ்க்கைத் தத்துவம். இந்தியாவில் 80-களுக்குப் பிறகு பிறந்த குழந்தைகளுக்கு 'வெர்மிடெக்' என்ற வார்த்தை அறிமுகமாகியிருக்கும். மண்புழுக்களைக் கொண்டு உரம் தயாரிக்கிற பேராசிரியருடைய கண்டுபிடிப்பு, இந்திய விவசாயத்தில் மிக முக்கியமான புரட்சி. 'உலகச் சுற்றுச்சூழல் நாளை' ஒட்டி அவரை சந்தித்து உரையாடியதில் இருந்து... சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்றா…
-
- 0 replies
- 991 views
-
-
சென்ற வாரம் நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளில் ஒரு கட்டுரை வந்திருந்தது. வேலை செய்யும் இடங்களில் நிலவும் பகை, எரிச்சல், கடுமை, மரியாதையின்மை, மன அழுத்தம் என்று பலவித எதிர்மறை மனோபாவங்கள் பற்றியும் அவை நம் உடல் நிலையை எப்படி பாதிக்கின்றன என்பது பற்றியும் அந்தக் கட்டுரை விரிவாக எழுதப்பட்டிருந்தது. கட்டுரை எழுதியவரின் அப்பா ஒரு ஆஸ்பத்திரியில் மூக்கிலும் வாயிலும் டியூப்கள் பொருத்தப்பட்டு படுக்கையில் இருந்ததைப் பார்த்து மனம் நொந்து அவர் எழுதுகிறார். “எப்படி கம்பீரமாக, சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்த என் அப்பா இந்த நிலைக்கு தள்ளப்பட்டார்? நிச்சயமாக அலுவலகத்தில் அவருக்கு ஏற்பட்ட மன அழுத்தம்தான் காரணம் என்று எனக்குப் புரிகிறது. இப்போதெல்லாம் வேலை செய்யும் இடங்களில் நிலவும் போட்ட…
-
- 0 replies
- 725 views
-
-
எதிர்காலத்தின் நடுங்கும் குரல் நம் எல்லோர் மீதும் பெரும் குற்றச்சாட்டுக்களை அந்தச் சிறுமி சுமத்தி இருக்கிறாள். புவிப் பாதுகாப்பு குறித்து பெரும் விவாதங்களும், வினைகளும் எழும்பியிருக்கும் இந்த நேரத்தில், இந்தக் குரலை நாம் மறந்துவிட முடியாது. 1992ல் நடந்த முதல் புவிப் பாதுகாப்பு மாநாட்டில் கனடாவைச் சேர்ந்த 12 வயது சிறுமி செரன் சுசுகி அனுமதி வாங்கி பேசிய வார்த்தைகள் இவை. இங்கு ஒலிப்பது ஒரு குழந்தையின் குரல் . எதிர்காலத்தின் நடுங்கும் குரல். முழுமையாகவும், பொறுமையாகவும் உற்றுக் கேளுங்கள். —————————————————— “ஹலோ…. நான் செரன் …சுசுகி… இ.சி.ஓ.. அதாவது சிறுவர்களுக்கான சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பான என்வைரோன்மெண்டல் சில்ரன்ஸ்…
-
- 0 replies
- 444 views
-
-
ஈடு இணையற்ற அறிவியலாளரான சார்ல்ஸ் ராபர்ட் டார்வின் பிறந்து இன்றுடன் இருநூறு வருடங்களாகின்றன. நாமறிந்த அறிவியலாளர்களில் முதன்மையானவர்களுள் ஒருவராக அறியப்படுகிறார் டார்வின். பொதுப்புத்தியையும் புகட்டப்பட்ட (மதம் சார்ந்த) அறிவையையும் கடந்து சிந்தித்தவர் டார்வின். இன்று தொடங்கி, வரும் நாட்களில் டார்வினின் அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கொண்டாடவும், அந்த மாமேதைக்கு புகழஞ்சலி செலுத்து முகமாகவும் அறிவியல் இணையதளத்தில் தொடர்ச்சியாக பரிணாமம், மரபியல் போன்றவை குறித்த கட்டுரைகளையும் தகவல்களையும் இயன்ற அளவுக்குத் தர முயற்சிப்போம். சார்ல்ஸ் டார்வின் இங்கிலாந்திலுள்ள ஸ்ரிவ்ஸ்பரி (Sherwsbury) என்ற ஊரில் 10 பெப்ருவரி 1809 அன்று பிறந்தார். அவர் குடும்பத்தினர் பரம்பரைப் பணக்காரர்கள்; தா…
-
- 0 replies
- 2.5k views
-
-
சமுத்திரங்களின் இரகசியங்களை ஆராய்ச்சி செய்தவதற்காக பல்வேறு வசதிகளைக்கொண்ட மிதக்கும் ஆய்வுகூடமொன்றினை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கட்டுமான நிபுணர் ஜெக்ஸ் ரோஜரி என்பவர் வடிவமைத்துள்ளார். ஸீ ஓபிடெர் என அழைக்கப்படும் இந்த ஆய்வுகூட கப்பல் கட்டுமானப் பணிகள் 2014ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளன. 1000 தொன் நிறையுடைய இக்கப்பலின் 170 அடிகள் உயரமான முக்கால்வாசிப் பகுதி நீரில் அமிழ்ந்து காணப்படும். இதன் மூலம் கடலின் ஆழத்திலுள்ள நீர் வாழ் உயிரினங்கள் மற்றும் சூழல் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ள முடியுமாம். வாழ்விடம் மற்றும் சமையலறை வசதிகள் கொண்ட இந்த மிதக்கும் ஆய்வுகூடத்தில் ஒரே நேரத்தில் 22 பேர் வரையில…
-
- 0 replies
- 649 views
-
-
லாரா ஷெப்பர்ட்: 74 வயதில் விண்வெளிக்குச் சென்ற மூதாட்டி - முதல் அமெரிக்க விண்வெளி வீரரின் மகள் 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இடது பக்கம் நிற்கும் லாரா ஷெப்பர்ட் அமெரிக்காவின் முதல் விண்வெளி வீரரான ஆலன் ஷெப்பர்ட்டின் மகள், தன் 74ஆவது வயதில் விண்வெளிக்குச் சென்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தொடங்கிய ப்ளூ ஆரிஜின் என்கிற வணிக ரீதியிலான விண்வெளி நிறுவனத்தின் விமானத்தில் லாரா ஷெப்பர்ட் சர்ச்லே இந்த விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டார். இப்பயணத்தில் ஆறு பேர் கலந்து கொண்டனர். பயணிகள் சில நிமிடங்களுக்கு புவியீர்ப்பு விசையற்ற நிலையை…
-
- 0 replies
- 382 views
- 1 follower
-
-
100 முதன்நிலையிலுள்ள அறிவுசார்ந்த நிறுவனங்கள் (100 Smartest Companies) தற்போதைய முன்னணிப் பொருளாதாரங்களை அறிவு சார்ந்த பொருளாதாரங்கள் என்று அழைப்பார்கள். அறிவு சார்ந்த பொருளாதாரத்தின் முன்னணி 100 நிறுவனங்கள் மேலே தரப்படுத்தப்பட்டிருக்கு. அறிவு சார்நிறுவனங்கள் தமது மனிதவளத்தை மூலதனமாக கொண்டு முன்னணிநிலை வந்தவர்கள். தமது மனிதவளத்தின் கண்டுபிடிப்புகள் என்ற மூலதனத்தை (Interlectual Property Rights) காப்புரிமைகளை பெற்று பாதுகாத்து சந்தைப்படுத்துகிறார்கள். Qualcomm என்ற நிறுவனம் CDMA சார்ந்த IPR இற்கு புகழ்பெற்றது. http://www.baselinemag.com/article2/0,1540...,1947524,00.asp
-
- 0 replies
- 1.2k views
-
-
60 நொடிகளில் உங்களால் என்ன எல்லாம் செய்யமுடியும்? சராசரியாக 100 மீட்டர் நடக்க முடியும். ஒரு வாழைப்பழத்தை உரித்து சாப்பிட முடியும். சரி தானே…? ஆனால், இதே 60 நொடிகளில் இணையத்தில் (Internet) என்னவெல்லாம் நடக்கிறது தெரியுமா…? தற்போது இணையத்தில் கிட்டத்தட்ட 2.700.000.000 பேர்கள் இணைக்கப் பட்டிருக்கின்றனர். இந்த எண்ணிக்கை ஒவ்வொரு நிமிடமும் 150 பேர்களால் அதிகரித்துக்கொண்டிருக்கிறது. நீங்கள் எல்லோருமே Skype ஊடாக உங்கள் உறவுகளுடன் பேசியிருப்பீர்கள். இதில் 60 நொடிகளில் மட்டும் 1.400.000 உரையாடல்கள் நடைபெறுகின்றன. இதுவே ஜெர்மனியில் இருக்கும் மிகப் பெரிய நகரங்களில் ஒன்றான மியூனிக்கில் வாழும் அனைவருமே, ஒரே நெரத்தில் பேசுவது போல் இருக்கும். மேலும் 60 நொடிகளில் 204.000.000 மின்னஞ்ச…
-
- 0 replies
- 564 views
-
-
சதாதான நீதவான்கள் என்றால் யார்? அவர்களின் பணி என்ன?? சமாதான நீதவான் பற்றி அறியாதவர்கள் இச் சமூகத்தில் மிகக் குறைவு. சாதாரண மக்களுக்கு ஏதாவதொரு ஆவணம் அல்லது சத்தியக்கூற்று போன்றவற்றினை அத்தாட்சிப்படுத்த வேண்டுமானால் உடனே ஞாபகத்தில் வருபவர் சமாதான நீதவான் ஆகும். இச் சமாதான நீதவான் எனப்படுபவர் சமூகத்தில் நல்ல குணங்களையும் மதிப்பினையும் உடைய நபர்களாக காணப்படுவதுடன் மரியாதைக்குரிய நற்பிரஜைகளாகவும் காணப்படுவார்கள். இவ்வாறமைந்த சமாதான நீதவானின் வரலாற்றுப் பிண்ணனியை நோக்கினால், வரலாற்றுப் பிண்ணனி இப் பதவி நிலையானது இற்றைக்கு 12ம் நூற்றாண்டிலிருந்து தோற்றம் பெற்றதொன்றாகும். இது 1195ம் ஆண்டில் முதலாம் றிச்சார்ட் மன்னன…
-
- 0 replies
- 1k views
-
-
ஆங்கிலம் தமிழ் இதழ்களை இலவசமாக படிக்க சிறந்த இணையத்தளம் , உங்களுக்கு விருப்பிய பாடங்களை தேடிப்படியுங்கள் , http://issuu.com/
-
- 0 replies
- 922 views
-
-
9 ஆண்டுக்கு பின் நாசா வெளியிட்ட புளூட்டோவின் பிரமிப்பு படங்கள்! நியூ ஹாரிசான்ஸ் விண்கலம் எடுத்த புளூட்டோ கிரகத்தின் தெள்ளத் தெளிவான முதல் புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது. சூரிய மண்டலத்தில் உள்ள 9 கிரகங்களில் ஒன்று புளூட்டோ. சிறிய கிரகமான புளூட்டோவை ஆராய, அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவால் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பப்பட்டது நியூ ஹாரிசான்ஸ் என்ற விண்கலம். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் புளூட்டோவிற்கு மிகவும் அருகில் சென்று அதனை புகைப்படங்கள் எடுத்தது நியூ ஹாரிசான்ஸ். இந்நிலையில், தற்போது முதல்முறையாக நியூஹார்சான் விண்கலத்தால் எடுக்கப்பட்ட மிகத் தெளிவான புகைப்படங்கள் அடங்கிய முதல் தொகுப்பை நாசா வெளியிட்டுள்ளது. http://w…
-
- 0 replies
- 470 views
-