அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3256 topics in this forum
-
பெண்ணொருவரின் கணினியில் தானாக விண்டோஸ் 10 தரவிறக்கம்; 15 இலட்சம் ரூபா நஷ்டஈடு செலுத்த மைக்ரோசொப்ட் நிறுவனம் இணங்கியது 2016-06-30 12:10:05 அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவரின் கணினியில் தானாக விண் டோஸ் 10 மென்பொருள் தரவிறக்கம் செய்யப்பட்டதால் அப் பெண்ணுக்கு 10,000 டொலர் (சுமார் 15 இலட்சம் ரூபா) நஷ்ட ஈடு வழங்குவதற்கு மைக்ரோ சொப்ட் நிறுவனம் இணங்கியுள்ளது. டெரி கோல்ஸ்டெய்ன் எனும் இப் பெண்ணின் கணினியில் விண் டோஸ் 7 பதிப்பு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தனது அனுமதியின்றி அக் கணினி யில் தானாகவே விண்டோஸ் 10 பதிப்பை தறவிறக்கம் செய்யும் முயற்சி இடம்பெற்று தோல்வியடைந்ததாக அப் பெண் தெரிவித்துள்ளார்…
-
- 2 replies
- 365 views
-
-
மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் 2 அடுக்குமாடி அதிநவீன விமானம் தயாரிக்கப்படுகிறது.தற்போது ஒரு அடுக்கு விமானம் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் 2 அடுக்கு மாடிகளை கொண்ட அதிநவீன விமானம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்த விமான மாதிரியை ஆஸ்கர் வினல்ஸ் என்பவர் வடிவமைத்துள்ளார். இந்த விமானத்தில் 250 பேர் பயணம் செய்யலாம். அதிநவீன இந்த விமானத்தில் சூப்பர் சோனிக் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அது மணிக்கு 2300 மைல் வேகத்தில் பறக்கும் திறன் படைத்ததாக இருக்கும். லண்டனில் இருந்து நியூயார்க் நகருக்கு வழக்கத்தை விட 3 மணிநேரத்துக்கு முன்னதாக சென்றடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.seithy.com/breifNews.php?newsID=160488&categor…
-
- 2 replies
- 468 views
-
-
எச்சரிக்கை !! பேஸ்புக்கில் நோட்டிபிகேஷன் வந்தால் கவனம் பேஸ்புக்கில் உங்கள் நண்பர்களிடமிருந்து நோட்டிபிகேஷன் வந்தால் அது வைரஸாகவும் இருக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உலகில் இன்று அதிகம் பேரால் பயன்படுத்தப்படும் சமூகவலைதளமாகவுள்ள பேஸ்புகில் கருத்துகள், புகைப்படங்கள் மற்றும் செய்திகள் உலக அளவில் உடனுக்குடன் பதிவிடப்படுகின்றன. ஆனால் இதுவே ஹேக்கர்களுக்கு வசதியாகவும் அமைந்துள்ளது. பேஸ்புக்கில் பகிரப்படும் செய்திகள் மூலம், புகைப்படங்கள் வாயிலாக வைரஸ்கள் அதிகமாக பரவிவருகின்றன. நண்பர்கள் பெயரில் நம் பக்கத்திற்கு வரும் நோட்டிபிகேஷன்களால் நமது மடிக்கணனி, கையடக்கதொலைபேசி மற்றும் கணனிகளுக்கு வைரஸ்கள் பரவுகின்றன. …
-
- 0 replies
- 385 views
-
-
ஆப்பிள் நிறுவனம் வெளியிடும் ஐ-போன் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அனைவராலும் விரும்பிப் பயன்படுத்தப்படும் ஐ-போனை மேலும் மூன்று மாதிரிகளாக செப்டம்பரில் வெளியிட ஆப்பிள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஐ-போன் 6, 6 ஸ்யை ஆகியவற்றைத் தொடர்ந்து ஐ-போன் 7, ஐ-போன் 7 ப்ள்ஸ், ஐ-போன் 7 ப்ரோ ஆகிய மாடல்கள் வர்த்தக சந்தைக்கு வெளிவர தயாராக உள்ளது. இதனுடைய கூடுதல் அம்சங்களை பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. ஆனாலும் இது டுயல் கேமரா [Dual Camera] மற்றும் வயர்லெஸ் சார்சர் [Wireless charger] , ( ஐ-பேட் ப்ரோ போன்று) 4.7, 5.5 அங்குலம் அகலங்கள் உள்ள திரை [Display] பெற்றிருக்கும் என கூறப்படுகிறது. இதன் விலை, மற்ற ஐ-போன்களைவிட 150 டாலர் கூடுதலாக இருக்கக்கூடும்…
-
- 0 replies
- 329 views
-
-
வாஷிங்டன், புதிய கிரகங்கள், நட்சத்தி ரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக் காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாயந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 150,000 நட்சத்திரங்களை மேற்பட்ட கண்காணித்து வருகிறது.சமீபத்தில் 4 ஆயிரத்துக்கும் மேல் முக்கிய கிரகங்களாகக வகைபடுத்தப்பட்டு உள்ளது. . தற்போது கெப்லர் விண்கலம் சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமியை விட 5 மடங்கு பெரிய அளவிலான ஆனால் பூமியை விட இளமையான கிரகம் ஒன்றை கண்டு பிடித்து உள்ளது.இதற்கு கே2-33 பி என பெயரிடப்பட்டுள்ளனர். இது பூமியில் இருந்து 470 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இந…
-
- 0 replies
- 353 views
-
-
நாம் பயன்படுத்தும் மணிபர்ஸ் மூலம், செல்போனை சார்ஜ் செய்யும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சிலர் செல்போனை அதிகமாக பயன்படுத்தும் போது அதிலிருக்கும் சார்ஜ் இறங்கிவிடுவதால் செல்லும் இடங்களில் சிரமப்படுகின்றனர். இதனால், செல்லும் இடமெல்லாம் சார்ஜரை எடுத்து செல்ல வேண்டியிருக்கிறது. தற்போது ஐபோன்களை சார்ஜ் செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. அதாவது சார்ஜ் செய்யும் பவர் பேங்க், மணி பர்ஸுக்குள் நிரந்தரமாக பொருத்தப்படும். அவற்றுடன் மின்சார கேபிள் மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி ஆகியவை மூலம் ஐபோனுக்கு சார்ஜ் ஏற்றப்படும். இதன் மூலம் ஊர் ஊராக சுற்றி வருபவர்கர்கள், தங்கல் செல்போனுக்கு தேவைப்படும் போது சார்ஜ் ஏற்றிக் கொள்ளலாம். அந்த வசதி தற்போத…
-
- 0 replies
- 392 views
-
-
ஃபேஸ்புக்கில் புதுவரவு: 360 டிகிரி கோணத்தில் புகைப்படங்களை காண வசதி பிரபல சமூக வலைதளமான ஃபேஸ்புக், 360டிகிரி கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படங்களை பயனர்கள் பதிவேற்றவும், பார்க்கவும் புதிய வசதியை ஏற்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் பயனர்களைக் கவரும் வகையில் அவ்வபோது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வரிசையில், தற்போது, 360 டிகிரி கோணத்தில் எடுக்கப்படும் படங்களை பதிவேற்றவும், பார்க்கவும் ஏற்ற வசதியை ஏற்படுத்தியுள்ளது. பனோரமா 360 போன்ற ஆண்ட்ராய்ஸ் செயலிகள் மூலம் எடுக்கப்படும் 360டிகிரி புகைப்படங்களை எடுத்து பதிவேற்றலாம். பதிவேற்றியவுடன் அந்தப் படம் பயனர்களது கணிணி திரைக்கு ஏற்றவாறு, அல்லது ஸ்மார்…
-
- 1 reply
- 328 views
-
-
உலகை முதன் முறையாக சுட்டெரித்த சூரியன்! உலகம் முழுவதும் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவு மே மாதத்தில் வெயில் கொளுத்தியதாக நாசா தெரிவித்துள்ளது. சர்வதேச வானிலை மைய நிறுவனம் (டபிள்யூஎம்.ஓ.) சர்வதேச அளவில் கடந்த ஆண்டு நிலவிய தட்ப வெப்ப நிலை குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. சமீபத்தில் நாசாவின் தட்ப வெப்பநிலை கணக்கெடுப்பின் அடிப்படையில் இது வெளியிடப்பட்டது. அதன்படி 50 ஆண்டுகளில் இல்லாத அளவு கடந்த மே மாதத்தில்தான் கடுமையான வெப்பத்துடன் வெயில் கொளுத்தியுள்ளது. அதற்கு பருவ நிலை மாற்றம் காரணமாக வடபுலத்தில் உள்ள ஆர்டிக்கடல் பகுதியில் முன்னதாகவே ஐஸ்கட்டிகள் உருகியதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா கண…
-
- 0 replies
- 441 views
-
-
சூரியன்களுடன் புதிய கிரகம் கண்டுபிடிப்பு (வீடியோ) புதிய கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பால்வெளி மண்டலத்தை ஆய்வு மேற்கொள்ள அமெரிக்காவின் ‘நாசா’ மையம் ‘கெப்லர்’ விண்கலத்தில் சக்தி வாய்ந்த டெலஸ்கோப்பை பொருத்தி விண்வெளியில் பறக்க விட்டுள்ளது. கெப்லர் விண்வெளி தொலைநோக்கி தொடர்ந்து, சூரிய மண்டலத்திற்கு அப்பாற்பட்ட 1,50,000 நட்சத்திரங்களை கண்காணித்து வருகிறது. தற்போது 2 சூரியன்களுடன் வியாழன் போன்ற புதிய கிரகத்தை கெப்லர் கண்டுபிடித்துள்ளது. அதற்கு கெப்லர் 1647பி என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புதிய கிரகம் தற்போதுள்ள வியாழன் போன்று உள்ளது. இதன் அருகே 2 நட்சத்திரங்கள் உள்ளன. அவை சூரியன் போன்ற தோற்றத்தில் உள்ளது. அதில் ஒரு சூரியன் பூமியில் இருப்பதைவிட பெரி…
-
- 0 replies
- 507 views
-
-
முட்டை ஓடு இல்லாமலும் கோழிக் குஞ்சு பொரியும்! ஜப்பான் மாணவிகளின் கண்டு பிடிப்பு. முட்டை கருவில் இருந்து கோழி குஞ்சுகள் உருவாவதற்கு ஓடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். முட்டையின் ஓடுதான் அந்த கோழி குஞ்சுக்கு கருப்பையைப் போன்றது என காலகாலமாக மக்களிடையே நீடித்து வந்த நம்பிக்கையை, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள சிபா அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் உயிரியல் பிரிவு மாணவிகள் உடைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் கிராமங்களில் கோழி வளப்பவர்கள், முட்டை போட்ட உடன் பாதுகாத்து வைத்து அடை காக்க வைத்து உற்பத்தியை பெருக்குவார்கள். இன்றைக்குகோழி முட்டைகளை அடைகாக்க வைப்பது என்பது, இன்று இந்தியாவில் உள்ள கிராமங்களில்கூட வழக்கொழிந்துகொண்டிருக்கிறது. கோழிகள் தானாக ஒரு பாத…
-
- 2 replies
- 555 views
-
-
கரியமில வாயுவைப் பிடித்து அதை கல்லாக மாற்றுவதன் மூலம், பூமியை வெப்பமடையச் செய்யும் வாயுக்கள் வெளிவருவதைக் குறைக்கலாம் என்று நம்புவதாக ஐஸ்லாந்தில் ஒரு அறிவியல் சோதனையை நடத்திவரும் ஆய்வாளர்கள் நம்புகிறார்கள். 'கார்ப்ஃபிக்ஸ்' என்ற இந்த சோதனைத் திட்டத்தை நடத்திவரும் விஞ்ஞானிகள் கரியமில வாயுவை தண்ணீரில் கரைத்து , அந்த நீரை பூமிக்கடியில் ஆழமான இடத்தில் செலுத்தினார்கள். அப்போது அந்த வாயு, அந்த ஆழத்தில் இருந்த எரிமலை தாதுக்களுடன் ரசாயன மாற்றம் பெற்று திடமான சாக்பீஸ் போன்ற ஒரு பொருளாக மாறியது. இந்த வழிமுறை விரைவாக செய்யக்கூடியதாக இருப்பது என்பதாலும், இது போன்று ரசாயன மாற்றத்தை விளைவிக்கும் எரிமலைப் பாறைகள் உலகெங்கிலும் உள்ளன என்பதாலும், இது புவி வெப்…
-
- 0 replies
- 285 views
-
-
காகிதத்தைப் போல் சுருட்டி எடுத்துச் செல்லக்கூடிய கணினியை உருவாக்குவதற்கான தொழில்நுட்பத்தை தென் கொரிய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.இதுகுறித்து அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "நேச்சர் கம்யூனிகேஷன்ஸ்' அறிவியல் இதழில் வெளியான தகவல்:தென் கொரியாவின் கொரிய அறிவியல் கழகத்தை (கே.ஏ.ஐ.எஸ்.டி.) சேர்ந்த சேயுன்குயப் யூ, போஹாங் அறிவியல் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை (போஸ்டெக்) சேர்ந்த டே-வூ லீ ஆகியோர் தலைமையில், கணினி, தொலைக்காட்சி, செல்லிடப் பேசி ஆகியவற்றின் திரைகளை உருவாக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அந்த ஆய்வில், திரைகளை உருவாக்கத் தேவையான "ஆர்கானிக் லைட்-எமிட்டிங் டையோடு' தயாரிப்பில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி தென் கொரிய விஞ்ஞானிகள் வெ…
-
- 0 replies
- 290 views
-
-
பாதி உலகை ஆளும் “வட்ஸ் எப்” :ஆய்வில் தகவல் உலகின் பிரபல குறுந்தகவல் செயலிகளின் வரிசைப்பட்டியலில் “வட்ஸ் எப்” முதலிடம் பிடித்துள்ளது. சுமார்ட் ஸ்மாட் கையடக்கத் தொலைபேசிகளில் பயன்படுத்தப்படும் (எப்ஸ்)செயலிகள் தொடர்பன வரிசைப்பட்டியலை வெளியிடும் “சிமிலர்வெப்” இணையத்தளம் இந்த செய்தியினை வெளியிட்டுள்ளது. 187 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் 109 நாடுகளில் வட்ஸ் எப் செயலி பயன்படுத்தப்பட்டு வருவதாக இந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. “வட்ஸ் எப்” பிரேசில், இந்தியா, மெக்ஸிகோ, ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் அதிகம் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “வட்ஸ் எப்” இந்தியாவில் பயன்படுத்தப்படும் 94 சத…
-
- 0 replies
- 529 views
-
-
30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் வளர்ப்பது எப்படி? நன்றி, அர்ஜூன் (9790395796, 9500378441, 9500378449) . இயற்கை விவசாயத்தில் ஒரு புதுமை, இயற்கை விவசாயத்தில் ஒரு புரட்சி. இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் அய்யா மறைந்து விட்டார் என்று யார்? சொன்னது. அவர் இன்றும் பலரிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய ஒருவர் தான் விவசாயி அர்ஜூன் அவர்கள். அவரை தொடர்புகொள்ள (9790395796, 9500378441, 9500378449) ஆம். விவசாயத்தில் மிகப்பெரிய புரட்சி செய்த இரண்டாம் GD நாய்டு. 30 ஆண்டுகள் வளர கூடிய மரத்தை கூட வெறும் மூன்று மாதங்களில் நீங்களும் வளர வைக்கலாம். அது எப்படி? என்பதை பார்போம். . “இன்ஸ்டன்ட்” மரம் வளர்ப்பு! அரசாங்கம் / பொறுப…
-
- 3 replies
- 3.3k views
-
-
செவ்வாய் கிரகத்தில் தற்போது கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவன பகுதிகளும், பாறைப்படிவங்களும் உள்ளன. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இது வாழத்தகுதியுள்ள கிரகமாக இருந்தது. அங்கு திரவநிலையில் தண்ணீர் இருந்துள்ளது.அங்கு இரும்பு மற்றும் கால்சியமும் அத்துடன் கார்பனேட்ஸ் எனப்படும் கார்பன் படிமங்களும் புதைந்து கிடக்கின்றன. அதுவே தண்ணீர் இருந்ததற்காக அடையாளமாக கருதப்படுகிறது. பருவநிலை மாற்றம் காரணமாக தற்போது அங்கு கடும் குளிரும், வறட்சி மிகுந்த பாலைவனபகுதிகளும் ஏற்பட்டுள்ளன என அமெரிக்க நிபுணர் ஜானிஷ் பிஷப் ஆய்வில் தெரிவித்துள்ளார். http://www.seithy.com/breifNews.php?newsID=158330&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 326 views
-
-
கருவில் இருக்கும் குழந்தையின் இதய துடிப்பை அறியும் வின்செங்கா என்ற மொபைல் ஆப்பை உகாண்டாவை சேர்ந்த கல்லூரி மாணவர் கண்டுபிடித்துள்ளார். தென் ஆப்பிகாவிலுள்ள உகாண்டா உலகின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றாகும். இங்கு உள்ள பொருளாதார நெருக்கடியும், போதிய அளவில் மருத்துவக் கருவிகள் இல்லாமையும், பிரசவத்தின் போது பிறக்கும் குழந்தைகளும், தாய்மார்களும் இறந்து போவதற்கு காரணமாய் அமைகின்றன. பிரசவ காலத்தில் குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ளும் 'அல்ட்ராசவுண்ட்' எனப்படும் இயந்திரத்தினை வாங்கும் அளவிற்கு, உகாண்டாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு நிதி இல்லை. இதனால், பல ஆண்டு காலமாக, கருவில் உள்ள குழந்தையின் இதயத்துடிப்பை தெரிந்து கொள்ள, 'பி…
-
- 0 replies
- 711 views
-
-
தேவையான பொருட்கள்: நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் சாணம் 5 கிலோ (அ) நாட்டு எருமைமாட்டுச்சாணம் 5 கிலோ) நாட்டு பசுங்கோமியம் 5 முதல் 10 லிட்டர் (அல்லது நாட்டு பசுங்கோமியம் பாதி அளவு + (அ) நாட்டு காளைமாட்டு கோமியம் (அ) நாட்டு எருமைமாட்டு கோமியம், வெல்லம் (கருப்பு நிறம்) 2 கிலோ (அ) கரும்புச்சாறு 4 லிட்டர், இரு விதை இலைத் தாவரங்களின் தானிய மாவு 2 கிலோ (தட்டைப்பயறு (அ) துவரை (அ) கொள்ளு (அ) கொண்டைக் கடலை (அ) உளுந்து) பண்ணைகளின் வரப்பிலிருந்து எடுக்கப் பட்ட காட்டின் (ஜீவனுள்ள) மண் கையளவு மற்றும் தண்ணீர் 200 லிட்டர் (குளோரின் கலக்காதது) தயாரிப்பு முறை நாட்டு பசுஞ்சாணம்-10 கிலோ, (அல்லது நாட்டு பசுஞ்சாணம் 5 கிலோ + நாட்டு காளைமாட்டுச் …
-
- 5 replies
- 803 views
-
-
இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியானது கெப்பளர் தொலைநோக்கி இதுவரை கண்டுபிடித்துள்ள 1284 கிரகங்களை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்துள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியின் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தந்துள்ளார். “இதுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள கிரகங்களில் பலவும் பூமியைப் போன்றே உயிர்வாழக் கூடியதாக இருக்கின்றது” என்ற தகவல், இது தொடர்பான ஒரு ஆய்வினை மேற்கொள்வதற்கு தூண்டுதலாக இருந்துள்ளது. இது பற்றி ஆய்வாளர் சுரேஸ் தர்மா விளக்கமளித்துள்ளார். மேலும் இயற்கை மனிதர்களுக்கு அல்லது பூமிக்கு ஏற்படுத்தும் அழிவுகள் எதிர்பார்க்கப்படாத ஒன்றாக உள்ளது. இதற்கான சிறந்த எடுத்துக்காட்டாக அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்த…
-
- 0 replies
- 312 views
-
-
பல கோடி ஆண்டுகளுக்கு முன் புவியைத் தாக்கிய இராட்சத விண்கல் புவியை இராட்சத விண்கல் ஒன்று தாக்கியதற்கான ஆதாரத்தை ஆஸ்திரேலியாவிலுள்ள விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். புவியின் மீது விண்கல் மோதுவதால் பெரும் அதிர்வுகள் ஏற்படுகின்றன அந்த விண்கல் சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் புவியில் மோதியுள்ளது என ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். அப்படி மோதிய விண்கல் 20-30 கிலோமீட்டர் அகலம் கொண்டது என்றும், அது பூமியின் மீது மோதியதில் நூற்றுக்கணக்கான கிலோமீட்டர் நீள அகலம் கொண்ட பெரும்பள்ளத்தை ஏற்படுத்தியிருக்கும் எனவும் அந்த ஆய்வை நடத்தியவர்கள் கூறுகின்றனர். ஆய்வின் பல ஆச்சரியகரமான தகவல்கள் தெரியவந்துள்ளன …
-
- 0 replies
- 322 views
-
-
பணப்பட்டுவாடா செய்யும் வங்கி ஏ.டி.எம்.கள் போல முதலுதவிச் சிகிச்சைக்கு உதவும் மருந்துப் பொருள்களை வழங்கும் இயந்திரத்தை ரெய்லர் ரோஸன்தால் என்கிற 14 வயதுச் சிறுவன் உருவாக்கினான். அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்த இந்த சிறுவன் உருவாக்கிய இயந்திரத்தில் தீக்காயம் உள்ளிட்ட காயங்களுக்கான முதலுதவி மருந்து, பிளாஸ்திரி, பேண்டேஜ் துணி, இறப்பர் கையுறை ஆகியவற்றை பணம் செலுத்திப் பெறலாம். பேஸ்போல் விளையாட்டின்போது தனது நண்பர்கள் காயமடைவதைப் பார்த்ததும் இது போன்ற இயந்திரத்தை உருவாக்கி, விளையாட்டு மைதானங்களில் வைப்பது குறித்த யோசனை அச்சிறுவனுக்கு எழுந்தது. காசு போட்டால் முதலுதவி சாதனங்கள் அளிக்கும் இயந்திரத்துக்கான வடிவத்தை தனது வகுப்பில் செயல்முறைப் பாடத்தின் கீழ் அளித்தான். பின்னர…
-
- 0 replies
- 354 views
-
-
வாட்ஸ் ஆப் செயலியில் இதை அவதானித்தீர்களா? வாட்ஸ் ஆப் செயலியின் குறுஞ்செய்திச் சேவையினை அண்மையில் மேம்படுத்தினர். இந்தப் புதிய பதிவேற்றலின் மூலம் ஒரு புதிய வசதியையும் சேர்த்துள்ளனர். இனி செய்திகளை எழுதும்போது வேண்டிய சொற்களைத் தங்களின் விருப்பங்களுக்கு வடிவமைத்து கொள்ள முடியும். இது ஐ-போன்களில் வழக்கமான மேம்பாட்டுக்குப்பின் இந்த வசதி இயல்பாகவே தோன்றுகின்றியுள்ள நிலையில் அன்ரொய்டில் இன்னும் இது தேர்வு முறையிலேயே இருக்கின்றது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்ஸ் ஆப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. ஆனால் செய்திகளை எழுதும்போது சொற்களுக்கு முன்னும் பின்னும், குறியீடுகளைக் கொண்டு, எழுத்துக்களின் தன்மையை மாற்றியமைக்கலாம். அந்தக் குறிய…
-
- 0 replies
- 455 views
-
-
பூமிக்கு சமமான 550 புதிய கோள்கள் கண்டுபிடிப்பு : நாசா தகவல் பூமிக்கு போலவே அளவு மற்றும் பாறைகள் நிறைந்த 550 கோள்களை நாசா நிறுவனம் கண்டுபிடித்துள்ளது. கெப்ளர் என்னும் விண்வெளி தொலைநோக்கியின் மூலம் கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி இவ்வாறான கோள்கள் இனங்காணப்பட்டுள்ளது. சூரிய மண்டலத்தை விட்டு தொலைவில் பயணிக்கும் 1 284 புதிய கோள்களை தொலைநோக்கியின் உதவியுடன் கண்டறிந்துள்ளனர். அதேவேளை, பூமியை ஒத்த அளவுடையதும் மிக அருகில் உள்ளதுமான கோள்கள், பூமியை விட்டு 11 ஒளி ஆண்டுகள் தொலைவில் காணப்படுவது தெரியவந்துள்ளது. அத்துடன், 9.5 டிரில்லியன் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கோள்களின் பயணித்தை அவதானிக்க, போதியளவு வசதியுடைய விண்கலங்கள் இதுவரை க…
-
- 0 replies
- 547 views
-
-
உலகிலுள்ள 4 லட்சம் தாவர இனங்களில் 10% அழிவின் விளிம்பில் ------------------------------------------------------------------------------------------------------------ உலக தாவரங்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் இன்றைய நிலைமைகள் குறித்த முதலாவது விரிவான கணக்கெடுப்பின் முடிவுகளை விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ளனர். தற்போதுள்ள தாவரங்களில் ஐந்தில் ஒருபகுதி தாவரங்கள் பலவகையான ஆபத்தை எதிர்நோக்குவதாகவும் இவற்றில் சில தாவர இனங்கள் இல்லாமலே அழிந்துபோகக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். லண்டனில் உள்ள ராயல் பொடானிக் கார்டன்ஸ் இந்த ஆய்வை மேற்கொண்டது. இந்த கணக்கெடுப்பின் முடிவுகள் உலகத் தாவரங்கள் குறித்த நம் புரிதலின் போதாமையை எடுத்துக்காட்டுவதாக தா…
-
- 0 replies
- 271 views
-
-
இணையதள தொலைக்காட்சி! யூடியூப் நிறுவனம் திட்டம்! [Friday 2016-05-06 11:00] உலகின் முன்னணி கணொளி பகிர்வு இணையதளமான யூடியூப் தளத்தில், இணையதள தொலைக்காட்சி சேவையை அறிமுகம் செய்ய யூடியூப் நிறுவனம் திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யூ டியூப் தளத்தில் மாதந்த பணம் செலுத்தி கேபிள் தொலைக்காட்சி சேவையைப் பெறும் வகையில் அடுத்த ஆண்டு தொடக்கம் முதல் இத்திட்டம் அறிமுகமாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திட்டத்திற்காக யூடியூப் நிறுவனம் பல முன்னணி ஊடகம் நிறுவனங்களான வயாகாம், என்பிசி யுனிவர்சல், டுவெண்டி பர்ஸ்ட் சென்சுரி ஃபாக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதன்மூலம், டிடிஹெச், கேபிள் இணைப்ப…
-
- 0 replies
- 584 views
-
-
புதன் கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு 9ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெறவுள்ளது. ஒரு நூற்றாண்டுக்கு 8 முறை புதன் கிரகம் சூரியனை கடந்து செல்லும். 2006ஆம் ஆண்டு நடந்த இந்நிகழ்வு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நடக்கிறது. இந்நிகழ்வை வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அவுஸ்திரேலியா, இந்தியா,இலங்கை போன்ற நாடுகளில் காணலாம். இலங்கை நேரப்படி மாலை 4.15 மணிமுதல் 6.20 மணிவரை நடக்கும் இந்நிகழ்வை வெறும் கண்ணில் பார்க்ககூடாது என விஞ்ஞானிகள் அறிவுறுத்தி உள்ளனர். அடுத்து 2019ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி, 2032ஆம் ஆண்டு நவம்பர் 13ஆம் திகதி ஆகதி தினத்தன்றே புதன்கிரகம் சூரியனை கடக்கும் அரிய நிகழ்வு நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/ar…
-
- 0 replies
- 405 views
-