அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3257 topics in this forum
-
வீடியோ விளையாட்டுக்களும் கணினி இணையாளலும் ரவி நடராஜன் எனக்கு தெரிந்த பெரியவர் ஒருவர், தன் மகன் மூலம், நான் அனிமேஷன் கட்டுரைகள் எழுதியதை அறிந்து, சில ஆண்டுகள் முன்பு, இப்படி அலுத்துக் கொண்டார்: “பொம்மை படம் பற்றி எல்லாம் கட்டுரை எழுதறயாமே!” (இவருக்கு, மனிதர்கள் நடிக்காத படங்கள் எல்லாமே பொம்மைப் படங்கள்) “ஆமாம்” “இந்த சின்ன பசங்க தொல்லை தாங்க முடியலப்பா. எப்பப் பாரு வீடியோ விளையாட்டு என்று எதையாவது திருகிகிட்டே இருக்காங்க” ”அவங்க சுறுசுறுப்புக்கு அது ஒரு நல்ல வடிகால் தானே. உங்க பேரங்க எல்லாம் நல்லாத்தானே படிக்கிறாங்க” “அதெல்லாம் சரிதான். அதென்ன 4,500 டாலருக்கு கம்ப்யூட்டர்? 600 டாலருக்கு பிரமாதமான கம்ப்யூட்டர் கிடைக்கறப்ப எதுக்கு இந்த வீண் செலவு?” …
-
- 3 replies
- 942 views
-
-
https://www.youtube.com/watch?v=xw9LH_Dp2eM சந்தைக்கு வருகிறது, புதிய... "BlackBerry Passport" உலகத்தரம் வாய்ந்த ஸ்மார்ட் கைப்பேசிகளை உற்பத்தி செய்யும் BlackBerry நிறுவனம் BlackBerry Passport எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை வடிவமைத்துள்ளது. இக்கைப்பேசியானது 4.5 அங்குல அளவு உடையதும், 1440 x 1440 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், 2.5GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய Quad Core Snapdragon 801 Processor, பிரதான நினைவகமாக 3GB RAM, 32GB சேமிப்பு நினைவகம் ஆகியவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. இவை தவிர 10 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 3.7 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பவற்றினையும் கொண்டுள்ளது. எதிர்வரும…
-
- 0 replies
- 444 views
-
-
செல்போன் வரலாற்றில் இன்று முக்கிய தினம் (ஆகஸ்ட் 16) என்பது உங்களுக்குத்தெரியுமா? என்ன தினம் என்கிறீர்களா? உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமான நாள் ! ஆம், 1994 ம் ஆண்டு இன்றைய தினம் தான் உலகின் முதல் ஸ்மார்ட் போன் அறிமுகமானது. இதில் ஆச்சர்யம் என்ன தெரியுமா? இந்த போனை அறிமுகம் செய்தது நீங்கள் எதிர்பார்க்ககூடியது போல நோக்கியாவோ ,மோட்டோரோலோவோ அல்ல. ஆப்பிளும் அல்ல; பிலாக்பெரியும் கிடையாது. முதல் ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது, ஒரு காலத்தில் மெயின்பிரேம் கம்ப்யூட்டர்களின் மகாராஜாவாக திகழ்ந்த ஐ.பி.எம் நிறுவனம் தான். ஐபிஎம் பரசனல் கம்ப்யூட்டர்களின் முன்னோடி என்பது தெரியும். ஆனால் அது ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது பலருக்கு ஆச்சர்யமாக இருக்கலாம். ஆனால் ஐபிஎம் அறிமுகம் செய்த சை…
-
- 4 replies
- 821 views
-
-
திருச்செந்துறை ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிர்பதன அறை | படம்: ஆர்.எம்.ராஜரத்தினம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை மூலம் தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராமத்தில் ரூ.4 கோடி மதிப்பில், தமிழகத்திலேயே முதன்முதலாக குளிரூட்டப்பட்ட ஒருங்கிணைந்த வாழை வணிக வளாகம் அமைக்கப் பட்டுள்ளது. வாழைத்தார்கள் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, வியாபாரிகள் மத்தியில் பொது ஏலம் விடப்படும். ஏலத்தில் விலை குறைவாக இருப்பதாக விவசாயிகள் கருதினால், இந்த குளிர்விப்பு நிலையத்தில் 21 நாட்கள்வரை இருப்பு வைத்துக் கொள்ளலாம். இதற்கு கட்டணமாக மாதம் ஒன்றுக்கு கிலோவுக்கு ரூ.1 செலுத்த வேண்டும். இந்த வசதியின் காரணமாக வாழை அ…
-
- 0 replies
- 386 views
-
-
அடுத்தக் கட்டம் நோக்கி 'மான்சான்டோ'... அமெரிக்கப் பயண அனுபவம்! மரபணு மாற்றுப் பயிர்களுக்கு, உலகம் முழுவதும் கிளம்பியுள்ள எதிர்ப்பு காரணமாக மிரண்டு போயிருக்கும், மரபணு விதை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களுக்காக குரல் கொடுப்பவர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும், எதிராகக் குரல் கொடுப்பவர்களை சமாதானப்படுத்தவும் பல்வேறு உபாயங்களைக் கையில் எடுத்துள்ளன. அந்த வகையில் இந்தியாவிலிருந்து விவசாயப் பிரதிநிதிகள், விஞ்ஞானிகள், பத்திரிகையாளர்கள், விதை நிறுவனங்கள், அரசியல்வாதிகள் அடங்கியக் குழுவை, அமெரிக்காவில் உள்ள தங்களது ஆய்வகங்களைப் பார்வையிடுவதற்காக சமீபத்தில் அழைத்துச் சென்றது மான்சான்டோ நிறுவனம். அந்தக் குழுவில் நானும் ஒருவன். அமெரிக்காவின் அயோவா மாநிலத்திலுள்ள மான்சான்டோவின் …
-
- 0 replies
- 487 views
-
-
வறுவல், பொரியல் என எண்ணெய்யில் செய்யும் உணவு அயிட்டங்கள் அனைத்திற்கும் நம்மவர்கள் அடிமை. நம்முடைய தினசரி சமையலில் எண்ணெய் கலக்காத உணவு என்று எதுவுமில்லை. தோசையில் ஆரம்பித்து பூரி, சப்பாத்தி வரை அனைத்தையும் ஏதாவது ஒரு எண்ணெய்யில் செய்து சாப்பிட்டால் மட்டுமே நம்மவர்களுக்கு திருப்தி. தேங்காய் எண்ணெய், கடலை எண்ணெய், நல்லெண்ணெய், பாமாயில் என பலவகையான எண்ணெய் அயிட்டங்கள் நம்மூரில் இருக்கிறது. நிலக் கடலை, சோயா பீன்ஸ், தேங்காய், எள் போன்ற மூலப் பொருட்களிலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. How to start oil mill Business: எண்னை மில் தொடங்குவது எப்படி சந்தை வாய்ப்பு! உணவுப் பொருட்களுக்கான தேவை இருக்கும் வரை எண்ணெய்க்கான தேவையும் இருக்கும். வீடுகள், ஓட்டல்கள், சாலையோர உணவகங்களில் எண…
-
- 0 replies
- 14k views
-
-
Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்! நம்மில் பலருக்கு வாழ்க்கையில் முதல்முறையாக புதிய தொழில் தொடங்கி ஜெயிக்க ஆசை. இன்னும் சிலர், ஏற்கெனவே ஒரு தொழிலை வெற்றிகரமாக செய்துகொண்டு இருப்பார்கள். ஆனாலும், அதிக லாபம் தரக்கூடிய புதிய தொழில் ஏதேனும் தொடங்க வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்த்துவிடத் துடிப்பார்கள். இந்த இரண்டு வகையினருக்கும், அதிக ரிஸ்க் இருந்தாலும் அதிக லாபம் தரக்கூடிய புதிய பொருளாதாரத் தொழில்கள் ஏற்றவை. அது என்ன புதிய பொருளாதாரத் தொழில்கள் என்று கேட்கிறீர்களா..? Start New Business and Win Easily: புதிய தொழில்களை உருவாக்குங்கள்! எளிதாய் வெற்றி பெறுங்கள்! 1990-ல் நம் பொருளாதாரம் தாராளமயமாக்கப்பட்டபோது…
-
- 1 reply
- 2.5k views
-
-
'பணத்தோட்டம்' என்ற பெயரில் உங்கள் முன் விரியும் இந்தத் தொடர், பெரிதான ஒரு விவசாய புரட்சியை நோக்கி உங்களை இழுத்துச் செல்வதற்காக எழுதப்படுகிறது. 'விவசாயமும் லாபகரமான விஷயம்தான்' என்பதை உரக்கச் சொல்லப்போகும் இந்தத் தொடர் ஒருவழிப் பாதையல்ல... அதனால்தான் விவாதத் தொடர் என்றே பெயர் சூட்டியிருக்கிறோம். இங்கே நாங்கள் முன் வைக்கும் விஷயங்கள்... திட்டங்கள் எல்லாம் முடிந்த முடிவல்ல. இந்தத் விவசாய புரட்சி திட்டத்தை மேலும் செம்மைப் படுத்தும் வகையில் உங்களுக்கு தோன்றும் கருத்துக்களை எழுதலாம். எதிர்கருத்துக்கள் இருந்தாலும் எழுதலாம். எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து கடைசியில் வெற்றிகரமான ஒரு தீர்வை காண வேண்டும் என்பதுதான் முக்கியம். எந்த வகையிலாவது விவசாயம் தூக்கி நிறுத்தப்பட வேண்டும் என்…
-
- 1 reply
- 2.9k views
-
-
வணக்கம் கள உறவுகளே !! ஒரு சிறு அறிவியல் தொடர் ஊடாக உங்களைத் தொடுகின்றேன் . எங்கள் மனமானது இரவில் தெளிவான நீல வானில் தெரியும் பௌர்ணமி நிலவையும் , அதன் தொடர்ச்சியான நட்சதிரங்களையும் பர்த்து பல கற்பனைகளையும் மேற்கொள்ளும் . ஏன் இவைகளையெல்லாம் நேரில் போய் பார்க்க முடியாதா ?? என்றுகூட சில வேளைகளில் எமது மனம் நினைக்கத் தோன்றும் . எமது பால்வெளியில் உள்ள கிரகங்களுக்கோ அதற்கும் அப்பால் விரிந்து கொண்டிருக்கும் பிரபஞ்ச வெளிக்கும் மனிதன் பயணம் செய்யமுடியுமா ?? என்ற அறிவியல் கேள்விக்கு இந்த தொடர் விடையளிக்கும் என்றே நினைக்கின்றேன் . வழமை போல் உங்கள் ஆதரவையும் கருத்துகளையும் நாடி நிற்கின்றேன் . நேசமுடன் கோமகன். ******************************************************************…
-
- 44 replies
- 14.1k views
-
-
வானிலிருந்து கரியமிலவாயுக் கணக்கெடுப்பு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் கார்பன் டையாக்சைட் வாயு (கரியமில வாயு) காற்று மண்டலத்தில் கலந்து வருகிறது. உலகிலுள்ள சுமார் 700 கோடிப் பேரும் ஓயாத துருத்தி போல சுவாசித்துக் கொண்டிருக்கின்றனர். விலங்குகளும் சுவாசிக்கின்றன. தாவரங்களும் தான் எதை எரித்தாலும் கார்பன் டையாக்சைட் வாயு காற்றில் கலக்கிறது. கார், லாரி, ரயில் எஞ்சின், விமானம், கப்பல் என எண்ணற்ற வாகனங்கள் பெட்ரோல், டீசல், விசேஷ வகை கெரசின், எரிவாயு என ஏதாவது ஒரு வகை எரிபொருளைப் பயன்படுத்துகின்றன. எந்த எரிபொருளானாலும் அது எரிவதற்கு ஆக்சிஜன் வாயு தேவை. ஆக்சிஜனை எடுத்துக் கொண்டு எரியும் போது கார்பன் டையாக்சைட் தோன்றுகிறது. வீடுகளுக்கும் அலுவலகங்களுக்கும் ஆலைகளுக்கும்…
-
- 0 replies
- 365 views
-
-
Rosetta has caught up with 67P/Churyumov-Gerasimenko ஐரோப்பிய விண்வெளி அமைப்பு அனுப்பிய ரொசெட்டா வின்கலம், சி ஜி என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஒரு வால் நட்சத்திரத்தை அணுகி, அதையொட்டிய தனது பயணத்தை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. நீள்வட்டப் பாதையில், இந்த விண்கலம், அந்த வால் நட்சத்திரத்தைச் சுற்றிவந்து பலவிதமான ஆய்வுகள மேற்கொள்ளவுள்ளது. அந்த வால் நட்சத்திரம் மணிக்கு 1.35 மில்லியன் கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கிறது. ரொசெட்டா விண்கலம் அதன் அருகில் செல்வதற்கு பத்தாண்டுகள் ஆகியுள்ளன. வால் நட்சத்திரங்கள் நம்முடைய சூரியக் குடும்பம் ஆரம்பித்த காலம்தொட்டே தோன்றியவை என்றும், அவ்வகையில் இவற்றை ஆய்வு செய்யும்போது, புவியில் எவ்வாறு உயிர்கள் தோன்றின என்பது உட்பட பல விஷயங்களை அறிந்த…
-
- 1 reply
- 669 views
-
-
உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடும் எண்ணெய் அரசியல் காலகட்டத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இதனால் இன்றைய தேவை மாற்று எரிபொருள்தான் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. மாற்று எரிபொருளைக் கண்டுபிடிக்க அறிவியலாளர்கள் பெரும்பாடு பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். சிகாகோவில் உள்ள இல்லினோய்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு ஆய்வாளர்கள் குழுவினர் நெருப்புக்கு விரோதியான கரியமில வாயுவையே எரிபொருளாக மாற்றும் அரிய முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்று செய்திகள் கூறுகின்றன. அவர்கள் ஒரு கிரியா ஊக்கியை உருவாக்கியுள்ளார்கள். அந்த கிரியா ஊக்கி வீணாகும் கரியமில வாயுவை ஒரு சின்கேஸ் ஆக மாற்றுகிறது. இந்த சின்கேஸ் என்பதுதான், பெட்ரோல் உ…
-
- 0 replies
- 643 views
-
-
சாலையில் பயணிக்கும் போது துடிப்பான பையனோ, பரிவை எதிர்நோக்கும் வயதானவரோ கையை காட்டி லிப்ட் கேட்கும் அனுபவம் உங்களுக்கு இருக்கலாம். இதே போல திடிரென சாலை நடுவே ஒரு ரோபோ நின்று கொண்டு ‘லிப்ட் பிளிஸ்’என்று கேட்டால் எப்படி இருக்கும்? கனடா நாட்டில் இருப்பவர்கள் இந்த இந்த வியப்பான நம்ப முடியாத அனுபவத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டிருக்கிறது. ஆம் அந்நாட்டில் ரோபோ ஒன்று லிப்ட் கேட்டபடி வலம் வந்து கொண்டிருக்கிறது. சும்மா இல்லை, கடற்கரை ஓரமாக நாட்டை வலம் வந்துவிட வேண்டும் எனும் இலக்கையும் கொண்டிருக்கிறது. இந்த ரோபோ லிப்ட் கேட்பது மட்டும் அல்ல, அந்த பயணத்தை டிவிட்டரிலும் பகிர்ந்து கொள்கிறது. லிப்ட் தரும் நண்பர்களுடன் பெருமையாக சுயபடமும் எடுத்துக்கொள்கிறது. இந்த ரோபோவுக்கு பெயரும் இருக…
-
- 2 replies
- 727 views
-
-
மலேரியா எச்சரிக்கை மருந்துகளுக்குக் கட்டுப்படாத மலேரியா ஒட்டுண்ணிகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் எல்லைகளுக்குப் பரவி, இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுவரும் முயற்சிகளுக்கு அச்சுறுத்தலைத் தோற்றுவித்திருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்திருக்கின்றனர். கம்போடியா, பர்மா ,தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் சுமார் 1,000 நோயாளிகளுக்கும் மேற்பட்டோர் மீது நடத்தப்பட்ட ஆய்வுகள் , மலேரிய எதிர்ப்பு மருந்துகளில் மிகவும் சக்தி வாய்ந்த மருந்தான, ஆர்டெமிஸ்னின் என்ற மருந்தால்கூட கொல்லப்பட முடியாத அளவுக்கு ஒட்டுண்ணிகள் வளர்ந்திருப்பதைக் காட்டின. இந்த ஒட்டுண்ணிகள் மருந்துகளுக்கு எதிராக பலம்பெறுவது , ஆசியா மற்றும் ஆப்ரிக்கா ஊடாகப் பரவுவதைத் தடுக்க , நோய் தோன்றிய …
-
- 0 replies
- 286 views
-
-
சிவகாசி : ""விருதுநகர் மாவட்டத்தில் 1100 ஏக்கரில் கூட்டு பண்ணை விவசாயம் திட்டம் செயல்படுத்த உள்ளதாக,'' எக்ஸ்னோரா நிறுவனம்இன்டர் நேஷனல் சேர்மன் நிர்மல் தெரிவித்தார். சிவகாசி வேலாயுதம் ரஸ்தா சிவிக் எக்ஸ்னோரா, ராஜபாளையம் ரவுண்ட் டேபிள், இன்னர் வீல் கிளப் மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில்சிவகாசியில் நடந்த "எக்ஸ்னோரா கோ ஆர்கானிக் எக்போ 2011' கருத்தரங்கில் அவர் பேசியதாவது: வெப்பமயமாதலால் உலகம் மோசமான நிலைக்கு செல்கிறது. கடல் உள்வாங்கி, நிலத்தில் கடல் நீர் புகுந்து, விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். 2016-2018ல் பீக் ஆயில் காலமாக மாறும். ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.1000,2000க்கு விற்பனையாகும். இதற்கு தீர்வு, விவசாய நிலத்தை கண் இமைபோல் காக்க வேண்டும். வெளிநாடுகள் ஐந்து ஆண்டுகளில் வ…
-
- 0 replies
- 698 views
-
-
வருகிற ஆகஸ்ட் 10 ஆம் தேதி பௌர்ணமி நாள். வழக்கம் போல வருகிற பௌர்ணமிதான். ஆனால் ஒரு வித்தியாசம். அன்று இரவு முழு நிலவானது வழக்கத்தை விட சற்றே பெரியதாகத் தெரியும்.ஒப்பு நோக்குகையில் சந்திரன் நமக்கு சற்றே பக்கத்தில் இருக்கும் என்பதே அதற்குக் காரணம். அன்றைய தினம் நிலவு வழக்கத்தை விட சுமார் 14 சதவிகித அளவுக்குப் பெரிதாக இருக்கும். நிலவின் பிரகாசம் வழக்கத்தைவிட 30 சதவிகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே அன்றைய முழு நிலவை சூப்பர் நிலா என்று வருணிக்கலாம். பூமியை சந்திரன் சுற்றிச் சுற்றி வருகிறது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை மிகச் சரியான வட்டமாக இருப்பது கிடையாது . அதுங்கிய வட்டமாக உள்ளது. ஆகவே சந்திரன் சில சமயங்களில் பூமிக்கு அருகில் இருக்கிறது.வேற…
-
- 1 reply
- 492 views
-
-
மைன்கிராஃப்ட்: கற்பனைக்கலையா, கணினி விளையாட்டா? பாஸ்டன் பாலா | இதழ் 110 | 01-08-2014| அச்சிடு மேற்கத்திய உலகில் இருக்கும் அனேக இந்தியர்கள் கணினித்துறையில் இருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் நிரலி எழுதுகிறார்கள். ஐ-போன் வைத்திருக்கிறார்கள். பி.எம்.டபிள்யூ போன்ற கார் ஓட்டுகிறார்கள். கூகுள் தொலைக்காட்சிப் பெட்டி உபயோகிக்கிறார்கள். முதல் நாள், முதல் காட்சியில், நெடிய வரிசையில் கால்கடுக்க நின்று எக்ஸ் மென், அயர்ன் மென், போன்ற ஹாலிவுட் படங்கள் பார்க்கிறார்கள். சாதாரணமாக கீக் (geek) என்று சொல்ல இவை போதுமானவை. ஆனால், உண்மையான கீக் என்பதற்கு சில சாமுத்ரிகா லட்சணங்கள் இருக்கின்றன. அறிவியல் புனைவுகளை அதிகம் படிப்பது முதல் தகுதி. எச்.பி.ஓ.வில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் (Game o…
-
- 0 replies
- 740 views
-
-
மனிதனை கொஞ்சம் கொஞ்சமாக கொல்லப்போகும் கோழி: ஆய்வில் அதிர்ச்சி தகவல். டெல்லி: கறிக்கோழி சாப்பிடுவோருக்கு நோய் எதிர்ப்பு மருந்துகள் வேலை செய்யாது, இது மிகப்பெரிய ஆபத்தில் போய் முடியும் என்று எச்சரிக்கிறது இந்திய விஞ்ஞானம் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (சி.எஸ்.இ) நடத்திய ஆய்வு. இதற்கு காரணம் கோழி இறைச்சியில் அதிக அளவு ஆன்ட்டி பயாடிக் இருப்பதுதானாம். இயற்கை விவசாயம் எங்கே? இயற்கைக்கு முரணாக மனிதன் எதை செய்தாலும் அது மனிதனுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்பதற்கு பல உதாரணங்கள் கொட்டி கிடக்கின்றன. இயற்கை விவசாயத்தை விடுத்து, பூச்சிக்கொல்லி, உரம் என செயற்கையை திணிக்க தொடங்கியதால்தான் புற்றுநோய் பெருகியது என ஆய்வுகள் சுட்டிக் காட்டியுள்ளன. வாரந்தோறும் சிக்கன் அவசியமா? …
-
- 5 replies
- 1.4k views
-
-
கல்யாணம் தொடங்கி கட்சி பொதுக்கூட்டம் வரை அனைத்திற்குமே பத்திரிக்கை அடிக்கும் கலாச்சாரம் உருவாகிவிட்டது...இன்றைய சூழலில் ஆப்செட் பிரிண்டர்ஸ்,டிஜிட்டல் பிரிண்டர்ஸின் அதிவேக வளர்ச்சியில் தன் முகவரியை இழந்து- வருகிறது பழைய ட்ரடில் பிரிண்டிங் மிஷின் அச்சகங்கள் இன்னமும் அந்த முறையில் பிரிண்ட் செய்யும் சில அச்சகங்களை இன்னமும் நாம் காணலாம்.இதில் அச்சடிக்கப்படும் பத்திரிக்கைகள் காலத்தால் அழியாதவை காரணம் அதில் பயன்படுத்தப்படும் மை யின் தரம் அப்படிபட்டது...இப்போது உள்ள மையில் எல்லாம் அப்படிபட்ட தரம் இல்லை என கூற ஆரம்பித்தார் இன்னமும் பழைய அச்சுமுறையை பயன்படுத்தி புதுக்கோட்டையில் அச்சகம் நடத்தி வரும் அம்பாள் அச்சக உரிமையாளர் இராமையா. முன்னாடியெல்லாம் நிறைய பிரிண்டிங் பிரஸ்கள் இந்…
-
- 0 replies
- 2.5k views
-
-
தற்போது மைக்ரோமேக்ஸ் மொபைல்களுக்கான வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையானது எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துவிட்டது எனலாம். அந்தவகையில் விரைவில் மைக்ரோமேக்ஸ் வெளியிட இருக்கும் ஒரு மொபைலுக்கு அமோகமான எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது. அதன் பெயர் மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் L A108 என்பதாகும் இதோ அந்த மொபைலை பற்றி தெரிந்துகோள்ள சில குறிப்புகள். மைக்ரோமேக்ஸ் விரைவில் வெளியிட இருக்கும் புது மொபைல்....! ADVERTISEMENT 5.5 இன்ச் டிஸ்பிளேயுடன் வெளியாக இருக்கும் இந்த மொபைலில் 8GB க்கு இன்பில்ட் மெமரியும் 1GB Ram ம் உள்ளது. மேலும் இந்த மொபைலில் ஆண்ட்ராய்டின் லேட்டஸ்ட் வரவான கிட்கேட் ஓ.எஸ் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைலில் 8MP க்கு கேமரா மற்றும் 2MP க்கு பிரன்ட் கேமரா ஆகியவற்…
-
- 0 replies
- 639 views
-
-
)Last updated : 18:04 (29/07/2014) 90களில் பிறந்தவர்கள் வருங்காலத்துக்கும், கடந்த காலத்துக்கும் இடையே பாலமாக விளங்குகின்றார்கள். பழையதை விட முடியாமலும், புதியதை பிடித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கும் உள்ளாக்கப்படுகிறவர்கள். 90களில் பிறந்தவர்களைப் பற்றி மேலே எழுதியிருப்பது கொஞ்சம்தான். இன்னும் நிறைய எழுதலாம். உலகிலேயே மிக வேகமாக வயதாகுவது யாருக்குத் தெரியுமா? 90களில் பிறந்த ஜெனரேஷன் Y மக்களுக்குத்தான். உத்தேசமாக 1985 முதல் 1995 வரை பிறந்த இவர்கள்தான் மிக வேகமாக வயதாகுபவர்கள். இங்கு வயது என்பது உடலளவில் அல்ல. மனதளவிலும், தாங்கள் சந்திக்கும் அனுபவங்களையும் குறிக்கிறது. 90களில் பிறந்தவர்களுக்கு என சில சிறப்புகள் இருக்கின்றன. சில விஷயங்களில் இவர்கள் கொடுத்து …
-
- 3 replies
- 1.4k views
-
-
நாம் ஒருவரின் உயிரைக் காப்பாற்றினோம் என்பது நமக்கு மனமகிழ்ச்சியையும் மனநிறைவையும் தரக்கூடியது, அதற்கு இணையாக வேறெதையும் ஒப்பிட இயலாது. ஸ்டெப்ஃபெனி கோலக் ஸ்டெப்ஃபெனி கோலக் (Stephanie Louise Kwolek, ஜூலை 31, 1923 - ஜூன் 18, 2014) தனது கண்டுபிடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான மனித உயிர்களைக் காத்திருக்கிறார். உலகப் புகழ் பெற்ற நிறுவனமான 'டூபாண்ட்' (DuPont) நிறுவனம் வெறும் 500 மில்லியன் டாலர்களை ஒரு செயற்கை இழை ஆராய்ச்சியில் முதலீடு செய்து, பின்னர் அதன் மூலம் பில்லியன் பில்லியன்களாக டாலர்களில் பொருள் ஈட்டியது. அதற்கு அடிப்படைக் காரணம், ஸ்டெப்ஃபெனி கோலக் கண்டுபிடித்த ஒரு செயற்கை இழை. இன்று உலகெங்கிலும் குண்டு துளைக்காத கவச ஆடை அணிந்ததால் உயிர் பிழைத்தோரின் உயிர்க…
-
- 0 replies
- 583 views
-
-
தொழில்நுட்பத்தின் வழியே கொள்ளும் உறவில் மொழிக்கு இடமேது? வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது தொழில்நுட்பம் என்னும் அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனித இனங்கள், பேச்சையும் செவித்திறனையும் இழந்துபோனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு, ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய்ச் சிதிலமடைந்துவிட்டது. 'குயின்'ஸ் இங்கிலீஷ்' என்ற பெருமை கொண்ட ஆங்கில மொழி, சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து, நான்கு எழுத்து வார்த்தைகளெல்லாம் ஒற்றை எழுத்துக்களாகச் சுருங்கி நிற்கும் வாக்கியங்களுக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம். தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட…
-
- 1 reply
- 566 views
-
-
புவி வெப்பமயமாதல், உலகையே அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் போராடி வருகிறார்கள். அப்படி இருக்கையில், நம் காலடியில் நடமாடும் எறும்புகள், புவி வெப்பமயமாதலை தடுத்து, புவியை குளிர வைப்பதாக அமெரிக்காவில் அரிசோனா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். எறும்புகள், மண்ணில் உள்ள கால்சியம், மக்னீசியம் சார்ந்த மணற்சத்துகளை சிதைக்கின்றன. இதனால், காற்றில் கலந்துள்ள கார்பன் டைஆக்சைடு படிப்படியாக குறைகிறது. இதன்மூலம், புவி வெப்பமயமாதல் குறைந்து, புவி குளிரும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். http://www.seithy.com/breifNews.php?newsID=114064&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 340 views
-
-
நாசாவின் காஸினி விண்கலம், சனிக் கிரகத்தின் பனி நிலாவான என்சிலேடஸில் 101 தனித்துவ வெந்நீர் ஊற்றுகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது. அந்த நிலாவின் அடிநிலப்பகுதியில் இருந்து திரவ நிலை நீர் மேலே வந்திருப்பதற்கான சாத்தியக் கூறு இருப்பதாக இந்தத் திட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆய்வாளர்கள் கருதுகின்றனர். கடந்த 7 ஆண்டுகளாக காஸினியின் கேமரா, இந்தச் சிறிய நிலாவின் தெற்கு முனைப் பகுதியில் படங்களை எடுத்து ஆராய்ந்து வருகின்றது. காஸினி ஹைஜன் மிஷன், நாஸா, ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் மற்றும் இத்தாலி விண்வெளி நிறுவனம் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த ஆராய்சித் திட்டம். http://www.seithy.com/breifNews.php?newsID=114085&category=WorldNews&language=tamil
-
- 0 replies
- 473 views
-