அறிவியல் தொழில்நுட்பம்
அறிவியல் | ஆய்வுகள் | விண்வெளி | தொழில்நுட்பத் தகவல்கள் | ஆலோசனைகள் | உதவிகள்
அறிவியல் தொழில்நுட்பம் பகுதியில் அறிவியல், விண்வெளி ஆய்வுகள், வேகமாக மாறிவரும் தொழில் நுட்பங்கள் பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், ஆலோசனைகள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் தகவல் தொடர்பாடல் தொழில் நுட்பம், கணிணி, திறன் கருவிகள் தொழில் நுட்பம் போன்றவை பொருத்தமான பகுதிகளில் இணைக்கப்படுதல் வேண்டும்.
அத்துடன் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3265 topics in this forum
-
விண்வெளியை பற்றி ஆராய நாசா ஏவிய நியோவைஸ் என்ற செயற்கைகோள் பூமியை சுற்றிவந்து விண்வெளியை பற்றிய அறிய புகைப்படங்களை அனுப்பி வருகிறது. இது, கடந்த மாதம் 29-ம் திகதி அன்று பூமியில் இருந்து 43 மில்லியன் மைலுக்கு அப்பால் சுற்றிவரும் விண்பாறை பற்றிய புகைப்படத்தை அனுப்பி வைத்துள்ளது. 2013 ஒய்.பி. 139 என்றழைக்கப்படும் இந்த விண்பாறையானது நிலையான நட்சத்திரங்களின் பின்னணியில் நகர்ந்து செல்வதை இந்த விண்கலம் படம்பிடித்துள்ளது. அரிசோனா பல்கலைக்கழகம் பயன்படுத்தும் விண்வெளியை படம் பிடிக்கும் டெலெஸ்கோப்பும் இந்த விண்பாறை சுற்றுவதை உறுதிப்படுத்தியுள்ளது. 650 மீட்டர் விட்டத்துடன் நிலக்கரி போன்று கருப்பாக இருக்கும் இந்த விண்பாறையின் அளவு, வெளிச்சம் மற்றும் நடவடிக்கைகள் குறித்து …
-
- 0 replies
- 410 views
-
-
புவி வெப்பமடைவதற்கு மனிதர்களே காரணம். பாரிஸ் நகரில் நடக்கும், காலநிலை மாற்றங்கள் குறித்த அரசுகளுக்கு இடையிலான குழுவின் கூட்ட அறிக்கையும் இதனையே வலியுறுத்துகிறது. புவி வெப்பமடைவதால் ஏற்படக் கூடிய தாக்கங்கள் பல நூற்றாண்டுகளுக்குத் தொடரலாம் என்றும் இந்த அறிக்கை எச்சரிக்கிறது. புவி வெப்பமடைவதால், கடல் மட்டம் அதிகரித்தல், துருவப் பனி உருகுதல், அதிக வெப்பநிலையால் சூறாவளிகளின் தாக்கம் அதிகரித்தல் போன்ற விளைவுகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை கூறுகிறது. இன்றுள்ள நிலையில், இந்த அறிக்கை வந்ததன் பின்னர் புவி வெப்பமடைவதற்கான காரணம் என்ன என்பதற்கான விவாதங்களில் கவனத்தைச் செலுத்தாமல், அதனை எவ்வாறு தடுக்கலாம் என்பது குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தப்பட வேண்டு…
-
- 0 replies
- 1.5k views
-
-
உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் சீனா அதிகாரபூர்வமாக தொடங்கி வைத்துள்ள உலகின் மிகப் பெரிய வானொலி தொலைநோக்கி, தனது முதல் கவனிப்பாய்வு பணியினை செய்துள்ளது. உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி தொடக்கம் பூமியிலிருந்து ஆயிரம் ஒளி ஆண்டுகளுக்கு மேலான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தில் இருந்து இந்த தொலைநோக்கி தகவல்கள் பெற்றுள்ளது. அண்டம் குறித்து விஞ்ஞானிகள் மேலும் புரிந்து கொள்வதற்கும், வேற்றுலக உயிர்கள் குறித்த புரிதல் மற்றும் பார்வைக்கும் இந்த தொலைநோக்கி உதவியாக இருக்கும். உலகின் மிகப் பெரிய தொலைநோக்கி அதிகாரபூர்வமாக துவக்கி வைக்கப்பட்ட நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான வானியலாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இத்திட்டம் செயல்படுத்…
-
- 1 reply
- 1.5k views
-
-
துகளுக்குரிய கடவுள் பெயரால்..! இவ்வருடத் தொடக்கத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலர் விநோதமான ஆய்வு ஒன்றினைச் செய்யப்போவதாக சர்வதேச ஊடகங்கள் பரபரத்தன! அதற்கு 'கடவுளின் இருப்பைக் கண்டுபிடிக்கும் ஆய்வு' என்று நாமகரணம் சூட்டப்பட்டதாலேயே அந்தப் பரபரப்பு! நமது பிரபஞ்சம் (UNIVERSE) எப்படி உருவானது?, பிரபஞ்சத்துக்கு நிறை (MASS) எங்கிருந்து வந்தது?, பிரபஞ்சத்தின் அடிப்படை என்ன? ஆகியவற்றை அறிய பிரான்ஸ்-சுவிஸர்லாந்த் எல்லையில் ஜெனீவாவுக்கு அருகே ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம்(CERN) அமைத்துள்ள லார்ஜ் ஹாடரோன் கொலைடெர் (Large Hadron Collider) என்ற உயர் ஆற்றல் புரோட்டான் மோதல் கருவியில் அபாயகரமானது என பீதி கிளப்பிய 'Higgs Boson'! ஆய்வு தொடங்கியது. சுமார் 400 ட்ரில்லியன் புரோட்டான்களை எ…
-
- 1 reply
- 809 views
-
-
வியக்க வைக்கும் மனித உடல் நாம் தட்டில் உணவை வைத்து, அதை ஒரு ஸ்பூனில் எடுக்கும்போது, உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன. வியக்க வைக்கும் மனித உடல் * மனித உடலின் மூலப் பொருட்களாக, 58 வகையான தனிமங்கள் இருக்கின்றன. அவற்றில் ஆக்சிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர மற்ற தனிமங்கள் அனைத்தும் மண்ணில் இருந்து கிடைத்தவை. மீண்டும் மண்ணோடு கலப்பவை. * மனித உடலின் வளர்ச்சி, 21 வயதோடு நின்று போய்விடும். ஆனால் மனிதர்களின் ஆயுள் முடியும் வரை வளர்வது காது மட்டும்தான். ஒரு மனிதன் ஆயிரம் ஆண்டுகள் வாழ்வதாக வைத்துக்கொண்டால், …
-
- 0 replies
- 620 views
-
-
தமிழால் இணைவோம் அணு உலைக்கு மாற்றாக மிதக்கும் சூரிய மின்சக்தி தீவுகளை உருவாக்குகிறது சுவிட்சர்லாந்து ! சுவிஸ் நாட்டில் உள்ள ஏரியில் மூன்று மிதக்கும் சூரிய ஒளித் தீவுகளை உருவாக்கி வருகிறது இரு தனியார் நிறுவனங்கள். இத்தீவுகள் செயற்கையாக உருவாகப்படுபவை. ஒவ்வொரு சூரிய தீவுகளிலும் 100 சூரிய தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். ஒவ்வொரு மிதக்கும் தீவும் 25 மீட்டர் குறுக்களவு கொண்டது . இவைகள் சூரிய ஒளியை மின்னாற்றலாக மாற்றும் சோதனைக் கூடமாக செயல்படும் . இதில் உள்ள சூரியத் தகடுகளில் படும் ஒளி அருகில் உள்ள வெந்நீர் தொட்டிக்கு அனுப்பப்படும். அதிலிருந்து உருவாகும் நீராவியை குழாய்கள் வழியாக கரையில் இருக்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கு அனுப்பப்படும். அங்குள்ள நீராவியால் இயங்கும் …
-
- 0 replies
- 389 views
-
-
பூமியை போன்ற கிரகத்தை சுற்றி தடிமனான வளிமண்டலம் : விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு பூமியைப் போன்ற கிரகத்தை சுற்றி முதல்முறையாக வளிமண்டலத்தை கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். படத்தின் காப்புரிமைDANA BERRY Image captionஅந்த பூமிக்கு விஞ்ஞானிகள் வைத்து பெயர் ஜி ஜே 1132பி நன்கு தடிமனான படலம் ஒன்று அந்த வளிமண்டலத்தை சுற்றி இருப்பதாகவும், அது நீராவியாகவோ அல்லது மீத்தேனாகவோ இருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். பூமியின் வளிமண்டலத்தை கண்டறிந்து அதன் தன்மைகளை ஆராய்வது என்பது நமது சூரிய குடும்பத்தை தாண்டி வேறு உயிரினங்கள் இருக்கின்றனவா என்ற தேடுதலில் முக்கியமான படியாக பார்க்கப்படு…
-
- 1 reply
- 390 views
-
-
ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழ்வார் என்பதை அறிய புதிய தொழில்நுட்பம் கண்டுபிடிப்பு ஒருவர் எத்தனை ஆண்டு காலம் உயிர் வாழப்போகிறார் என்பதைக் கண்டுபிடிக்க ஒரு புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை (Artificial intelligence – AI) ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தெற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், இந்த புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளார்கள். இந்த தொழில்நுட்பமானது, மனித உறுப்புகளை சி.டி.ஸ்கேன் மூலம் புகைப்படம் எடுத்து வைத்து அதை ஆராய்ந்து, அவர் இன்னும் எத்தனை ஆண்டுகாலம் உயிருடன் இருப்பார் என்பதைக் கணக்கிட்டு கூறுகிறது. இந்த செயற்கை நுண்ணறிவ…
-
- 0 replies
- 415 views
-
-
நியூட்ரினோ ஆய்வில் கிடைத்த முடிவு: இயற்பியலில் புதிய அத்தியாயம் தொடக்கம் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,FERMILAB/REIDAR HAHN படக்குறிப்பு, மைனஸ் 186 டிகிரி செல்ஷியஸ் அதி உறை தட்ப நிலையில் 150 டன் ஆர்கன் நீர்மம் வைக்கப்பட்டுள்ள கிரையோஜெனிக் தொட்டியில் 12 மீட்டர் நீளமுள்ள மைக்ரோபூன் டிடெக்டர் வைக்கப்பட்டுள்ளது. இந்த உலகத்தில் நாம் காணும் பொருட்களுக்கு எல்லாம் அடிப்படையாக விளங்கக்கூடியது என்று யூகித்து விஞ்ஞானிகள் தேடிவந்த ஓர் அணுவடித் துகளை கண்டறிய முடியாமல் போனது. இதையடுத்து இயற்பியலில் புதிய அத்தியாயம் ஒன்று பி…
-
- 0 replies
- 266 views
- 1 follower
-
-
ஒரு அறிவியல் அணுகுமுறை TVP என்றால் என்ன? சோயா என்பது சோயாபீன்ஸ் போன்ற பருப்பு வகைகளில் இயற்கையாகக் காணப்படும் ஒரு புரதமாகும். நீங்கள் டோஃபு, சோயா பால், சோயா சோஸ், மிசோ, டெம்பே மற்றும் பிற உணவுகளில் சோயாவைக் காணலாம். கடினமான சோயா புரதம் TVP (Textured Vegetable Protein) என்றும் அழைக்கப்படுகிறது. இதன் உண்மையான பெயர் Total Soy Protein அல்லது TSP. இது உண்மையில் மிகவும் துல்லியமான விளக்கமாகும், ஏனெனில் இது உண்மையான காய்கறிகளை விட சோயாபீன்களில் அதிகளவு ஆற்றலைக் கொண்டுள்ளது. TVP பெரும்பாலும் இறைச்சிக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் இது துண்டு துண்டாக வெட்டப்பட்ட மாட்டிறைச்சியைப் போன்றது மற்றும் ஒரு சிறந்த இறைச்சி மாற்றீடாகும். TVP…
-
- 0 replies
- 487 views
-
-
விண்ணில் உள்ள செயற்கைக்கோள் தொகுப்புகளுக்கு எதிராக வானியலாளர்கள் குரல் கொடுப்பது ஏன்? ஜோனதன் அமோஸ் அறிவியல் நிருபர் 16 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MIKE LEWINSKI/CC படக்குறிப்பு, ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள்கள் அவற்றை செலுத்தும் ஏவுகணையின் உச்சியில் இருந்து பிரிந்த பிறகு, மங்கிய ஒளியில் மிகவும் தெளிவாக தெரியும். ஆயிரக்கணக்கான செயற்கைக்கோள்கள் வானில் இருக்கும் நிலையில், வானியல் துறை இறுதியாக வானின் நலன்களைப் பாதுகாக்க ஓர் ஒருங்கிணைந்த போராட்டத்தைத் தெரிவித்துள்ளது. அங்கு அதிகப்படியான விண்கலங்கள் ஏவப்படுகின்றன. அவை அண்டம் குறித்து தெளிவான பார்வைய…
-
- 0 replies
- 248 views
- 1 follower
-
-
30 லட்சம் ஒளியாண்டு தூரத்தில் ஓர் அதிவேக நட்சத்திர 'தொழிற்சாலை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைISRO Image captionபால்வழி மண்டலத்தைவிட பல்லாயிரம் மடங்கு நிறை குறைந்ததாக இந்த நட்சத்திர மண்டலம் உள்ளது. இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வு செயற்கைக் கோள் 'ஆஸ்ட்ரோ சாட்' 30 லட்சம் ஒளியாண்டு தூரத்துக்கு அப்பால் உள்ள ஒரு நட்சத்திர மண்டலத்தைப் படம் பிடித்துள…
-
- 0 replies
- 534 views
-
-
100 ரூபா நாணயத் தாளில் காந்தி தாத்தா சிரிக்கிறதா.. சிங்கக் கொடி பறக்கிறதா.. 50 பவுன் நோட்டில்.. கவுன்சிலரா.. சேர்சிலா இருக்கிறது என்ற சண்டை எனி வரப்போறதில்லை. என்ன ஆச்சரியமா பார்க்கிறேள். அதுதாங்க வேர்ச்சுவள் பணப் பரிமாற்றம் ஆரம்பமாகிட்டுது. நாணயத் தாளாகவோ.. குற்றியாகவோ எனி வரும் காலத்தில் காசைப் பார்க்க முடியாமல் போகலாம். உங்கள் சம்பளம்.. ஒரு மொபைல் அப்ஸில் அல்லது ஒரு எலெக்ரானிக் காட்டில்.. வெறும் இலக்கமாக அமுக்கப்பட்டிருக்கும். நீங்க அதனை ஸ்கான் பண்ண வேண்டிய இடத்தில்.. பண்ணிட்டு....செலவு பண்ணுற இடத்தில செலவு தொகையை கழிக்கப் பண்ணிக்கிட்டு நடையக் கட்ட வேண்டியான். காசு தொலைஞ்சிட்டு.. காசில சிங்கக் கொடி பறந்திட்டு.. காசு இல்லை.. பொக்கட் கனக்குது.. என்ற …
-
- 0 replies
- 812 views
-
-
கடந்த,1920முதல் இன்று வரை, வரலாற்று ஆய்வாளர்களுக்கு சவாலாக இருப்பது சிந்து சமவெளி நாகரிகம் வேர்கொண்ட, ஹரப்பா, மொகஞ்சதாரோ தான். ஐராவதம் மகாதேவனின் ஆராய்ச்சியை தொடர்ந்து, சிந்து சமவெளி குறித்து, சென்னை, ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன, இயக்குனர், ஜி.சுந்தர் மற்றும், ஆய்வாளர் ச.சுப்பிரமணியன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். அவர்களிடம் பேசியதில் இருந்து... * ரோஜா முத்தையா சிந்துவெளிப் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பற்றி? ஜி.சுந்தர்: சென்னையில், 1994ல் துவக்கப்பட்டது, ரோஜா முத்தையா நூலகம். அதில், 2007ல் துவக்கப்பட்டதுதான், ரோஜா முத்தையா சிந்துவெளி பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம். இந்நிறுவனத்தின் முதல் மதிப்புறு ஆலோசகராக, ஐராவதம் மகாதேவன் இருந்தார். அவரை தொடர்ந்த…
-
- 0 replies
- 596 views
-
-
செவ்வாயில் நில நடுக்கங்களை ஆராயும் செயற்கை கோளை ஏவியது 'நாசா' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க செவ்வாய்க் கோளின் உள் அமைப்புகளை ஆராய்வதற்காக 'இன்சைட்' என்ற செயற்கைக் கோளை சனிக்கிழமை ஏவியது அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா. படத்தின் காப்புரிமைNASA இந்த செயற்கைக் கோள் வரும் நவம்பர் மாதம் செவ்வாயில் தரையிறங்கும். பிறகு செவ்வாயின் தரைப்பரப்பில் சீஸ்மோமீட்டர் எனப்படும் …
-
- 0 replies
- 558 views
-
-
''அறிவியலில் மாணவர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும்,'' என நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட அமெரிக்காவில் வசிக்கும் தமிழரான விஞ்ஞானி ராமமூர்த்தி ரமேஷ் கேட்டுக்கொண்டார். சென்னையை சேர்ந்த ராமமூர்த்தி ரமேஷ், பி.எஸ்சி., இயற்பியல் முடித்து, பெங்களூரு ஐ.ஐ.எஸ்.,சில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ்) படித்தவர். 1987ம் ஆண்டு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் மெட்டீரியல் சயின்ஸ் பிரிவில் பிஎச்.டி., படிப்பை மேற்கொண்டார். 1995 முதல் 2003 வரை வாஷிங்டன் மேரிலேண்டு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். 2004 முதல் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.இவரது பெயர் இந்த ஆண்டு இயற்பியல் துறையில் நோபல் பரிசு பெறுவதற்கு பரிந்துரைக்கப்பட்டது. "காம்ப்ளக்ஸ் ஆக…
-
- 1 reply
- 487 views
-
-
செயற்கை ஒளி செடிகளுக்கு நல்லதா? வீட்டில் வைக்கப்படும் செடிகளை வெளிச்சம் அதிகம் உள்ள அறையில் வைக்குமாறு அடிக்கடி பரிந்துரைக்கிறோம்; அதாவது, சூரிய ஒளி எளிதாக உள்ளே நுழையும் ஜன்னல்கள் உள்ளன. மேலும் அவை அனைத்தும் ஒளிச்சேர்க்கையை மேற்கொள்வதற்கு ஒளி தேவை, எனவே, அவற்றின் உணவை உற்பத்தி செய்து வளர முடியும். ஆனால், செயற்கை ஒளியுடன் ஆரோக்கியமான தாவரங்கள் இருக்க முடியுமா? குறுகிய பதில் ஆம், உங்களால் முடியும்.. இப்போது, செடிகளுக்கு செயற்கை ஒளியைத் தேர்ந்தெடுப்பது முக்கியம், ஏனென்றால் அவை அனைத்தும் வேலை செய்யாது. உண்மையில், நாம் வழக்கமாக வீட்டில் வைத்திருக்கும் பல்புகளின் வெளிச்சம் நல்ல வளர்ச்சிக்கு உத்தரவாதம் அளிக்க போதுமானதாக இல்லை. இதைச் செய்ய, நாம் குறிப்பிட்ட விளக்குகள் அ…
-
- 1 reply
- 720 views
-
-
வேற்றுலக உயிரினங்களும் டிராக் சமன்பாடும் எழுதியது: சிறி சரவணா நாமறிந்து, இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை உயிரினம் என்று ஒன்று இந்தப் பூமியில் மட்டும்தான் உண்டு. அதாவது எம்மைப் போல, நம் உலகில் இருக்கும் உயிரினங்களுக்கு என்று ஒரு அடிப்படிக் கட்டமைப்பு மற்றும் பண்புகள் உண்டு, அவற்றை வைத்துத்தான் நாம் ‘உயிரினம் என்ற ஒன்றை வரைவிலக்கணப் படுத்தியுள்ளோம். சரி உயிரினம் என்றால் என்ன என்று உயிரியல் எப்படி வரைவிலக்கணப் படுத்தியுள்ளது என்று பார்க்கலாம். எதோ ஒன்று உயிருள்ளது என்று கருத அது பின்வரும் பண்புகளைக் கொண்டிருக்கவேண்டும் என்று உயிரியல் கூறுகிறது. ஒரு ஒழுங்கான கலக்கட்டமைப்பு கொண்டு உருவாக்கி இருக்கவேண்டும். ஒரு கலமோ அல்லது பல கலங்கலாகவோ இருக்கலாம். தன் நிலையைப் பேன சக்தி…
-
- 1 reply
- 705 views
-
-
பாகிஸ்தானில் தலீபான்களின் கொள்கைகளுக்கு எதிராக, பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர் மலாலா. இதற்காக அவர் கடந்த 2012-ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 9-ந் தேதி, பள்ளிக்கு சென்று வரும்போது தலீபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் லண்டன் நகரில் சிகிச்சை பெற்று குணம் பெற்றார். தற்போது இங்கிலாந்தில் வசித்து வரும் அவருக்கு கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு, இந்தியரான கைலாஷ் சத்யார்த்தியுடன் இணைந்து வழங்கப்பட்டது. இப்போது விண்ணில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ‘316201’ எரிகல்லுக்கு மலாலாவின் பெயரை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவின் ஜெட் உந்துவிசை ஆய்வுக்கூட வானியல் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆமி மைன்ஸர் சூட்டி உள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், “எரிகல்லுக…
-
- 1 reply
- 569 views
-
-
* சூரிய மண்டலத்தில் உள்ள ஒரே பெரிய துணைக்கோள் நிலவாகும். * நிலவின் விட்டம் 3,475 கி.மீ. * நிலவு, பூமியிலிருந்து 3,84,403 கி.மீ. தூரத்தில் உள்ளது. * நிலவு, பூமியைச் சுற்றும் வேகம் மணிக்கு 3,680 கி.மீ. * நிலவு ஒளி பூமிக்கு வர எடுக்கும் நேரம் 1.3 நொடி. * நிலவின் படத்தை முதலில் வரைந்தவர் வில்லியம் கில்பெர்ட். * நிலவை முதலில் டெலஸ்கோப் வழியாக பார்த்தவர் கலிலியோ. * தீப்பெட்டியைக் கண்டுபிடித்தவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜான் வாக்கர். ஆண்டு 1826. * நியான் விளக்கைக் கண்டுபிடித்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஜார்ஜ் கிளாட். ஆண்டு 1910. * நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் பஷ்னல். ஆண்டு 1776. …
-
- 1 reply
- 1.4k views
-
-
பட மூலாதாரம்,NASA/GETTY IMAGES படக்குறிப்பு,அமெரிக்காவை சேர்ந்த ஃபிராங்க் ரூபியோ 371 நாட்கள் விண்வெளி பயணத்தை மேற்கொண்டு சாதனை படைத்துள்ளார். கட்டுரை தகவல் எழுதியவர், ரிச்சர்ட் கிரே பதவி, பிபிசி 18 ஜூன் 2024 விண்வெளியில் அமெரிக்காவை சேர்ந்த விண்வெளி வீரர் ஒருவர், 371 நாட்கள் பயணம் செய்து சாதனை நிகழ்த்தியுள்ளார். ஆனால், நீண்ட காலத்திற்கு சுற்றுப்பாதையில் இருப்பது, விண்வெளி வீரர்களின் தசைகள், மூளை, குடல் பாக்டீரியா ஆகியவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தி, அவர்களின் உடலை சில ஆச்சர்யகரமான வழிகளில் மாற்றும். சில கைகுலுக்கல்கள், சின்ன ஃபோட்டோஷூட் மற்றும் கையசைத்தலுடன், 371 நாட்கள் தனக்கு வீடாக விளங்கிய, அமெரிக…
-
- 0 replies
- 324 views
- 1 follower
-
-
சர்வதேச அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனை, அமெரிக்க தொலை தொடர்பு சேவை நிறுவனமான ஏடி&டி வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்கிறது. விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள், போட்டி போட்டு கொண்டு மொபைல் சந்தைகளில் விற்பனை செய்யயப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன்களுக்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் லுமியா-920 ஸ்மார்ட்போன், வரும் நவம்பரில் விற்பனைக்கு வருவதாக தெரிவித்திருக்கிறது அமெரிக்க ஏடி&டி நிறுவனம். லுமியா-920 ஸ்மார்ட்போன் மட்டும் அல்லாது, குறைந்த விலையில் லுமியா-820 ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் கூறுகின்றன. ஏடி&டி நிறுவனம் லுமியா வரிசை ஸ்மார்ட்போன்க…
-
- 0 replies
- 917 views
-
-
கொலம்பியா விண்கலம் வெடித்து சிதறும் என்பது நாசாவுக்கு முன்பே தெரியும்! நியூயார்க்: பிப்ரவரி 1- ந் தேதி...2003-ம் ஆண்டு! அமெரிக்காவின் நாசா மையத்தில் அந்த 7 விஞ்ஞானிகளின் உறவுகளும் காத்திருக்கின்றனர்.. வெற்றிகரமான விண்வெளிப் பயணத்தை முடித்துவிட்டு இன்னும் சிறிது நேரத்தில் உறவுகள் வந்துவிடுவர் எனக் காத்திருந்த அவர்களுக்கு மட்டுமே உலகமே அப்படி ஒரு கோர விபத்தை கேள்விப்பட்டு அதிர்ச்சியில் உறைந்து போயினர்...ஆனால் ஒரு உண்மை இப்போது வெளியாகியுள்ளது.. கொலம்பியா விண்கலம் வெடித்துச் சிதறிவிடும் என்பது நாசா விஞ்ஞானிகளுக்கு முன்பே தெரியும் என்பதுதான் அது! 2003-ம் ஆண்டு ஜனவரி 16-ந் தேதி விண்வெளி ஆராய்ச்சிக்காக அமெரிக்காவின் கென்னடி நிலையத்திலிருந்து கொலம்பியா விண்கலம் அனுப்பி வைக…
-
- 1 reply
- 752 views
-
-
திங்கட்கிழமை வானில் மோதிர வடிவில் சூரிய கிரகணம் வீரகேசரி இணையம் 1/24/2009 11:55:40 AM - எதிர்வரும் திங்கட்கிழமை 26 ஆம் திகதி வானில் அதிசய காட்சி ஒன்று தென்படும். சிறிய மோதிர வடிவிலான சூரிய கிரகணமே அது. இது இந்தியா, அந்தமான்தீவு, நிக்கோபர் தீவுகள், லட்சத்தீவுகள் போன்ற பகுதிகளில் இந்தச் சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியுமென கூறப்படுகின்றது. தெற்கு அத்திலாந்திக் கடலில் நமீபியாவுக்கு அருகே இந்திய நேரப்படி 10.27 மணிக்கு ஆரம்பமாகும் இந்தச் சூரிய கிரகணம், தெற்குச் சீனக் கடலில் கம்போடியாவுக்கு தெற்கே 4.31 மணிக்கு முடிவடையும். தமிழகமெங்கும் பிற்பகல் சுமார் 2.16 முதல் மாலை சுமார் 4.05 வரை சூரிய கிரகணத்தைப் பார்க்க முடியும். அதே வேளை எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி இந்த…
-
- 0 replies
- 1.3k views
-
-
கடந்த பெப்ரவரி மாதம் பூமியை அச்சுறுத்திய இராட்சத எரிகல் ஒன்று பூமியை மிக அருகில் கடந்து சென்றது. இதன் அதிர்ச்சி அலைகளால் ரஷ்யாவில் 1000 பேர் படுகாயமடைந்தனர். மின்சார வழங்கல் நின்று போனது. பல கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்து சிதறியது. அதைப்பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தபோது அந்த இராட்சத எரிகல்லினால் ஏற்பட்ட அதிர்ச்சி அலைகள் இரண்டு முறை பூமியை சுற்றிவந்துதான் பிறகு மறைந்துள்ளது என்ற அதிர்ச்சி தரும் தகவலை விஞ்ஞானிகள் நேற்று வெளியிட்டுள்ளனர். அணுகுண்டு சோதனை செய்தால் அதன் விளைவுகளைத் துல்லியமாக கண்டறியும் சென்சார்கள் உள்ளது. அந்த சென்சார்களைக் கொண்டு இது கண்டறியப்பட்டது என்றும், இந்த வலைப்பின்னலில் பதிவான மிகவும் சக்திவாய்ந்த நிகழ்வு இது என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். …
-
- 2 replies
- 623 views
-