செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7094 topics in this forum
-
மதுபானத்தை திருடிக் குடிக்கும் குரங்குகள் Freelancer / 2025 ஜனவரி 30 , மு.ப. 08:49 கண்டியில் உள்ள பிரபல ஹோட்டல் ஒன்றில் குரங்குகள் கூட்டம் புகுந்து, ஒரு அறையில் இருந்து படுக்கை விரிப்பையும், சிற்றுண்டிப் பொருட்களையும், உள்நாட்டு மதுபானம் ஒன்றையும் திருடிச்சென்றுள்ளன. திருடிய பொருட்களை ஹோட்டலின் கூரையில் இருந்து உணண்பதையும், அவை செய்யும் சேட்டைகளையும் அங்கிருக்கும் மக்கள் தங்கள் கெமராக்களில் படம்பிடித்துள்ளனர். அந்தப் புகைப்படங்களில் ஒரு குரங்கு மதுபானத்தை ஊற்றுவதையும், மற்றொரு குரங்கு சிந்திய மதுபானத்தை குடிப்பதையும், அருகில் இருந்த மற்றொரு குரங்கு சாப்பி…
-
-
- 2 replies
- 196 views
-
-
ஒரே மாதிரியான இலக்கத் தகடுகள் கொண்ட இரு கார்கள் மீட்பு! தெஹிவளை மற்றும் தலுகம பகுதியில் ஒரே மாதிரியான இலக்கத்தகடு கொண்ட இரண்டு கார்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பாணந்துறை, வலானாவில் உள்ள மத்திய ஊழல் தடுப்புத் தாக்குதல் படையின் (CACAF) பொலிஸ் புலனாய்வு அதிகாரிகளால் நேற்று (13) கார்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணைகளைத் தொடர்ந்து, ஒரு வாகனம் தெஹிவளை சீ வீதியில் இருந்தும் மற்றைய வாகனம் தலுகம முதியன்சே வத்தையிலிருந்தும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் தெஹிவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், உண்மையான காரை இனங்கண்டு கொள்வதற்காக அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தினால் வாகனங்களை சோதனையிடுவதற்கு நீதிமன்ற உத்தரவு பெற்றுக் …
-
- 0 replies
- 143 views
-
-
கல்கிஸை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் துப்பாக்கி மற்றும் பல தோட்டாக்களுடன் தப்பிச் சென்றுள்ளார். மேலும், குறித்த கான்ஸ்டபிள் நேற்று (08) இரவு வீதி சோதனை நடவடிக்கைக்காக சென்றபோது மேற்படி துப்பாக்கியையும் 30 தோட்டாக்களையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இருப்பினும், சம்பந்தப்பட்ட அதிகாரி வீதி சோதனை நடவடிக்கைக்கு சமூகமளிக்காததால், அவரைத் தொடர்பு கொண்டபோது அவரது கையடக்க தொலைபேசி நிறுத்தப்பட்டுள்ளது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணைகளில், சந்தேக நபர் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து டுபாய்க்கு சென்றுள்ளமை தெரியவந்தது. அதன்படி, சந்தேகத்திற்குரிய பொலிஸ் அதிகாரியை மீண்டும் நாட்டுக்கு அழைத்து வருவத…
-
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
மனைவியை கொலை செய்த கணவன் கைது. வாத்துவை, வேரகம பகுதியில் கணவர் ஒருவர் தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார். கொலை செய்யப்பட்டவர் வாத்துவ, வேரகம பகுதியைச் சேர்ந்த இஷாரா நிஷாதினி சல்காது என்ற 29 வயதுடைய பெண் ஆவார். உயிரிழந்த பெண்ணுக்கு 6 மாதம் , 3 வயது மற்றும் 6 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்தக் கொலை தொடர்பாக அவரது 37 வயது கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கூரிய ஆயுதத்தையும் பொலிசார் மீட்டுள்ளனர். வாக்குவாதத்தைத் தொடர்ந்து சந்தேக நபர் இந்தக் கொலையைச் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1420321
-
- 1 reply
- 159 views
-
-
வட இந்தியாவில் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் நோய் குணமாகும் என வதந்திச் செய்திகள் வைரலாகி வரும் நிலையில், சீனாவில் புலியின் சிறுநீரைப் பருகினால், முடக்குவாதம், தசைவலி போகும் எனச் சொல்லி அவை விற்பனை செய்யப்படுவது பேசுபொருளாகி உள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Yaan Bifengxia என்ற வனவிலங்கு உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சைபீரிய புலிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இவ்வகை புலியின் சிறுநீரை ஒயினுடன் கலந்து குடித்தால் முடக்குவாதம், தசை வலி, சுளுக்கு போன்ற நோய்கள் குணமாகும் என அந்தப் பூங்காவிற்குள் பாட்டிலில்கள் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இதன்மூலம் ஒவ்வாமை ஏற்பட்டால் அதை நிறுத்த வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டிருந்தது. மேலும், சைபீரியன் புலியின் 250 கிர…
-
-
- 1 reply
- 281 views
- 1 follower
-
-
மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும் என அறிய முயன்ற மாணவி உயிரிழப்பு. ‘மரணத்துக்கு பிறகு என்ன நடக்கும்?’ என்பதை இணையதளத்தில் தேடிய ரிசர்வ் வங்கி உயர் அதிகாரியின் ஒரே மகளான பிளஸ்-2 படிக்கும் மாணவி கழுத்தை அறுத்து தனது உயிரை மாய்த்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் 2-வது நிர்வாக தலைநகராக கருதப்படும் நாக்பூரிலேயே 17 வயது மாணவி ஒருவர் இவ்வாறு தனது உயிரை மாய்த்து செய்துகொண்டுள்ளார். கற்றல் செயற்பாடுகளில் சிறந்து விளங்கிய மாணவி இந்தி, மராத்தி, ஆங்கிலம், ஜெர்மன் என 12 மொழிகளை கற்று தேர்ந்தவராக இருந்து இருக்கிறார். நேற்று அதிகாலை மாணவியின் தாய் அவரது படுக்கை அறைக்கு சென்ற போது மாணவி ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந…
-
-
- 1 reply
- 223 views
-
-
சீனாவின் ஜின்ஸி பகுதியில் நெடுஞ்சாலை அமைக்க அரசு திட்டமிட்டது. அதற்காக நிலம் கையகப்படுத்தப்பட்டது. நெடுஞ்சாலை அமைக்கும் இடத்தில் வசித்த மக்கள், அரசு அளித்த பெருந்தொகையை பெற்றுகொண்டு காலி செய்தனர். ஆனால், ஹுவாங் பிங் என்ற தாத்தா மட்டும் தன்னுடைய 2 மாடி வீட்டை அரசுக்கு விற்க மறுத்துவிட்டார். தன்னுடைய 11 வயது பேரனுடன் கடைசி காலம் வரை அந்த வீட்டில்தான் இருப்பேன் என்று கூறிவிட்டார். அரசு அதிகாரிகள் பல முறை தாத்தா விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ரூ.2 கோடி வரை அந்த வீட்டுக்கு நஷ்ட ஈடு தருவதாகவும், வேறு இடத்தில் வீடு கட்ட நிலம் ஒதுக்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அவர்கள் கூறிய எதையும் காதில் வாங்கிக் கொள்ளவில்லை தாத்தா. கடைசி வரை பிடிவாதம் பிடித்தார். வேறு வழியில…
-
-
- 2 replies
- 244 views
- 1 follower
-
-
மயக்கமருந்து தெளித்து 12 பவுண் நகைகள் கொள்ளை! adminJanuary 28, 2025 சூரிய மின்கலம் திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி , வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுண் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றுக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை (27.01.25) சென்ற இருவர் , வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தினை (சோலார் ) பழுது பார்க்க வந்துள்ளதாக கூறி பாசாங்கு செய்து , வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தினை தெளித்து , அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர் சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில் காவற்துறையினர் விசாரணைகளை ம…
-
- 0 replies
- 170 views
-
-
ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 9 ஆகக் குறைக்கத் தீர்மானம்! ஈராக்கில் பெண்களின் திருமண வயதெல்லையை 18 இலிருந்து 9 ஆகக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் பெண்கள் அமைப்பினர், சமூக அமைப்பனர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்து வருகின்றன. மேற்காசிய நாடான ஈராக் நாடாளுமன்றத்தில், ஷியா முஸ்லீம் பழமைவாத குழுவினர் பெரும்பான்மை வகிக்கின்றனர். முகமது ஷியா அல் சுடானி பிரதமராக உள்ள அந்த நாட்டில், பெண்களுக்கான திருமண வயது வரம்பு 18 ஆக உள்ளது. கடந்த 1950 ஆம் ஆண்டில் குழந்தை திருமணம் அங்கு தடை செய்யப்பட்டாலும், 28 வீத பெண்கள் 18 வயதுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்வதாக 2023 ஆம் ஆண்டுக்கான ஐ.நா., ஆய…
-
- 1 reply
- 381 views
- 1 follower
-
-
சமூக வலைத்தள மோகம் – மூக்கில் பாம்பிடம் கடி வாங்கிய இளம் பெண். சமூக வலைதளங்களில் ஆர்வம் காட்டும் இளைஞர்கள், இளம்பெண்கள் பலரும் தங்கள் வாழ்வில் நடைபெறும் செயல்களை வீடியோ எடுத்து பதிவிடும் போக்கு அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ரஷ்யாவை சேர்ந்த ஷ்கோடலேரா என்ற இளம்பெண் பாம்பை கையில் வைத்து விளையாடிய காட்சிகளை வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவர் கையில் பாம்பை பிடித்து கொண்டு போஸ் கொடுப்பது போன்று வீடியோ தொடங்குகிறது. உற்சாகமிகுதியில் ஷ்கோடலேரா பாம்பை மேலே தூக்கிய போது திடீரென பாம்பு அவரின் மூக்கை கடித்தது. இதனால் வலியில் துடித்த ஷ்கோடலேரா பாம்பை தரையில் வைத்துவிட்டு தப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி 5 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றது. நெட்டிசன…
-
-
- 2 replies
- 327 views
- 1 follower
-
-
பிகார்: சிறுமி வயிற்றில் இருந்த ஒரு கிலோ முடி - வெளியே எடுத்த மருத்துவர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,VIVEK படக்குறிப்பு,சிறுமி குணமடைய இன்னும் சில காலம் எடுக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர்,சிது திவாரி பதவி,பிபிசி செய்தியாளர் பிகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில், ஒன்பது வயது சிறுமியின் வயிற்றில் இருந்து, பெரிய முடிக் கொத்து ஒன்றை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். சுமார் இரண்டு மணிநேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு வெளியில் எடுக்கப்பட்ட இந்த முடிக் கொத்தின் எடை ஒரு கிலோ. அதைத் தொடர்ந்து, முசாபர்பூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைய…
-
- 0 replies
- 192 views
- 1 follower
-
-
காதலனை கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை: நீதிமன்றம் தீர்ப்பு திருவனந்தபுரம்: காதலனை விஷம் கொடுத்து கொன்ற கேரள பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து கேரளாவின் நெய்யான்றின்கரை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கரீஸ்மா கொலை குற்றவாளி என கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவருக்கான தண்டனை விவரம் இன்று (ஜன.20) அறிவிக்கப்படுள்ளது. கன்னியாகுமரியில் வசித்த இளம் பெண் கரீஸ்மா. இவர் கடந்த 2021-ம் ஆண்டு முதுநிலை பட்டப்படிப்பு படித்தபோது, இளநிலை 3-ம் ஆண்டு படித்த ஷரோன் ராஜ் என்ற மாணவருடன் நட்பு ஏற்பட்டது. இவர் திருவனந்தபுரம் பாரசாலா பகுதியைச் சேர்ந்தவர். இருவரும் காதலர்களாக இருந்தனர். இந்நிலையில் கரீஸ்மாவுக்கு, ராணுவ அதிகாரி மாப்பிள்ளை…
-
-
- 3 replies
- 283 views
-
-
பட மூலாதாரம்,KAIKYOKAN படக்குறிப்பு, இந்த நடவடிக்கை சூரிய மீனின் உடல்நலப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான 'கடைசி முயற்சி' காட்சிசாலை நிர்வாகம் கூறுகிறது கட்டுரை தகவல் எழுதியவர், கோ ஈவ் பதவி, பிபிசி நியூஸ் ஜப்பானில் ஒரு மீன் காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டபோது, அங்கு இருந்த ஒரு சூரிய மீனுக்கு (Sunfish) அது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. காரணம், வழக்கம்போல மனித முகங்களை அல்லது பார்வையாளர்களை அதனால் பார்க்க முடியவில்லை என்பதால். இப்போது அந்த மீனுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், வழக்கத்திற்கு மாறான ஒரு புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் யமகுச்சி மாகாணத்தின் ஷிமோனோசெகியில் உள்ள கைக்யோகன் மீன் காட்சியகம் வெளியி…
-
- 0 replies
- 119 views
- 1 follower
-
-
23 JAN, 2025 | 11:03 AM பாடசாலை மாணவிகள் மத்தியில் மனநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக கண்டி தேசிய வைத்தியசாலையின் விசேட வைத்தியர் பாலித பண்டார சுபசிங்க தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் தெரிவிக்கையில், ஓரினச்சேர்க்கை உறவுகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி பாவனைகள் அதிகரித்தல் உள்ளிட்ட காரணங்களினால் அதிகளவான பாடசாலை மாணவிகள் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான மாணவிகள் போதைப்பொருட்களுக்கு அடிமையாகுதல் மற்றும் உயிரை மாய்த்துக் கொள்ளுதல் போன்ற தவறான வழிகளுக்கு உள்ளாகுகின்றனர். இதனால் பாடசாலை மாணவிகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகின்றது. ஆண்கள் பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் மகளிர் பாடசாலை…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
புதிதாக பிறந்த சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு! ஹம்பாந்தோட்டை ரிதியகம சபாரி பூங்காவில் புதிதாகப் பிறந்த ஆறு சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பூங்கா நிர்வாகத்தின் கூற்றுப்படி, டோரா மற்றும் லாரா ஆகிய சிங்கங்கள் கடந்த மாதம் தலா மூன்று சிங்கக் குட்டிகளைப் பெற்றெடுத்தன. சிங்கம் டோராவுக்கு 3 பெண் குட்டிகளும், லாராவுக்கு இரண்டு பெண் குட்டிகளும் ஒரு ஆண் குட்டியும் பிறந்தன. ஏறக்குறைய மூன்று மாதங்களே ஆன சிங்கக்குட்டிகள் பெப்ரவரி மாதம் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க தயாராகி வருகிறது. இந்நிலையில், ரிதியகம சபாரி பூங்கா நிர்வாகம், சிங்கக் குட்டிகளுக்கு பெயர் வைக்க பொதுமக்களுக்கு வாய்ப்பினை ஏற்படு…
-
-
- 2 replies
- 175 views
-
-
நாய்க்கும் தெரிந்திருக்கின்றது அவசர உதவியை எங்கே பெற்றுக் கொள்ளலாம் என்று அதற்குத் தெரிந்திருக்கிறது. துருக்கி நாட்டின் தலைநகரமான இஸ்ரான்புல்லில் ஒரு தெருநாய், இறக்கும் தறுவாயில் இருந்த தனது குட்டியை சிகிச்சைக்காக கால்நடை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றிருக்கிறது. தெருநாய்களை அழிக்க வேண்டும் என்று நாங்கள் பேசிக் கொண்டிருக்கும் போது தனது குட்டியை காப்பாற்ற ஒரு தெரு நாய் முயன்றதைப் பார்க்கையில் மனது சிரமப்படுகிறது. அந்த நாய் ஈன்ற குட்டிகளில், இரண்டு குட்டிகளைத் தவிர மற்றையவை இறந்து விட்டன. அதில் ஒன்றைத்தான் இப்பொழுது அந்தத் தாய் நாய் தனது வாயில் கவ்வியபடி கால்நடை மருத்துவமனைக்கு வந்திருக்கிறது. “தாய் நாய் தனது குட்டியை கொண்டு வந்து எங்கள் கதவின் மு…
-
- 1 reply
- 364 views
-
-
நானுஓயாவில் மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி விபத்து - ஒருவர் காயம்; இரண்டு மாடுகள் மாயம் 18 JAN, 2025 | 11:50 AM நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று சனிக்கிழமை (18) அதிகாலை மாடுகளை ஏற்றிச் சென்ற லொறியில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தின் போது லொறியின் உதவியாளர் பலத்த காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். வெலிமடை பகுதியில் இருந்து நுவரெலியா வழியாக ஹட்டன் பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குறித்த மாடுகளை ஏற்றிச்சென்ற போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. …
-
- 0 replies
- 184 views
- 1 follower
-
-
கண்டியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி கண்டுபிடிப்பு! கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் வைத்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இன்று காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்தபோது, கடத்தலை மேற்கொண்ட நபரையும், சம்பந்தப்பட்ட பாடசாலை மாணவியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக பொலிஸ்சார் தெரிவித்துள்ளனர் அத்துடன் நேற்று இரவு அம்பாறை பகுதியில் உள்ள ஒரு இரவு விடுதியில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளதுடன் அந்த இளைஞன் தற்போது கைது செய்யப்பட்டு, பெண்ணை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேவேளை கண்டி – தவுலகல பகுதியில் தனது தோழியுடன் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த போது கடந்த சனிக்கிழம…
-
-
- 17 replies
- 644 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் முக்கிய நாளிதழ்கள் மற்றும் ஊடக இணையதளங்களில் இன்று (ஜனவரி 16) வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து இங்கே வழங்கியுள்ளோம். கேரள மாநிலத்தில் 350 கிராம் மட்டுமே எடையுள்ள ஆண் குழந்தை பிறந்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அக்குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். தெற்கு ஆசியாவிலேயே குறைந்த எடையுடன் பிறந்த குழந்தையாக அந்த குழந்தை பார்க்கப்படுவதாக அச்செய்தி குறிப்பிடுகிறது. "கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பிரசவத்துக்காக சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது. …
-
- 0 replies
- 218 views
- 1 follower
-
-
யாழ் – நாகர்கோவில் பகுதியில் கரை ஒதுங்கிய படகு! யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் இன்று படகு ஒன்று கரை ஒதுங்கி உள்ளது அண்மைக்காலமாக கடல் நிலையில் மாற்றங்களினால் கடல் சீற்றங்கள் சூறாவளி புயல் நிலநடுக்கம் போன்றவை பல தென் கிழக்கு ஆசியா நாடுகளில் ஏற்பட்டது அதன் போது மியன்மார், தாய்வான், தாய்லாந்து, மலேஷியா, இந்தியா, போன்ற நாடுகளிலிருந்து வந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. குறித்த படகில் பௌத்த சமயத்தினை தாங்கிய பல மரபு அம்சங்கள் இருப்பதாகவும் தெரியவருகிறது https://athavannews.com/2025/1416338
-
- 1 reply
- 148 views
-
-
பெண் பயணி மீது பாலியல் துஷ்பிரயோகம்; அவுஸ்திரேலியாவில் இலங்கையர் மீது குற்றச்சாட்டு! அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில் பயணித்த பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் இலங்கையர் ஒருவருக்கு எதிராக நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருக்க நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியா பயணித்த விமானத்தில் 41 வயதான குறித்த சந்தேக நபர் தன்னை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பெண் பயணி ஒருவர் விமான ஊழியர்களிடம் முறைப்படு அளித்திருந்தார். இதையடுத்து டிசம்பர் 18 ஆம் திகதி மெல்பேர்ன் விமான நிலையத்லை் வைத்து சந்தேக நபரான இலங்கையர் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் அவருக்கு எ…
-
-
- 26 replies
- 1.1k views
-
-
பிரபல ஐரோப்பிய நாட்டின் பிரதமர் : கொச்சியில் சும்மா சுற்றி திரிந்தது ஏன்? Kumaresan MJan 10, 2025 14:40PM கடந்த ஜனவரி 4 ஆம் தேதி கொச்சியிலுள்ள டல்க் டல்க் ஹோட்டலில் இருந்து கொச்சி போர்ட் பகுதி ஆட்டோ ஓட்டுநரான சித்திக் ஹூசைனுக்கு போன் அழைப்பு வந்துள்ளது. ஆட்டோவில் ஒரு விவிஐபி பயணித்து நகரை சுற்றி பார்க்க ஆசைப்படுகிறார். அதற்காக, 4 ஆட்டோக்கள் வேண்டும் என்று கேட்டுள்ளனர். இதையடுத்து, சித்திக் தனது ஆட்டோவுடன் மேலும் 3 ஆட்டோக்களுடன் அந்த ஹோட்டலுக்கு சென்றுள்ளார். பின்னர், ஆட்டோக்கள் முற்றிலும் சோதனையிடப்பட்டுள்ளன. இதை பார்த்ததும் சித்திக்கிற்கு யார் அந்த விவிஐபி என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. கொஞ்ச நேரத்தில் சாதாரண சட்டை போட்டுக்கொண்டு ஒருவர் வந்துள்ளார்…
-
- 0 replies
- 142 views
-
-
Published By: DIGITAL DESK 3 09 JAN, 2025 | 05:07 PM வாரியப்பொல பகுதியில் ஜோனி என்ற மோப்ப நாய் 4 கிலோ மீற்றர் பயணித்து மின்கலம் திருடனை தேடிப்பிடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரியவருவதாவது, வாரியப்பொல மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குச் சான்றுப் பொருட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களில் மின்கலங்களை திருடி சென்றுள்ளனர். மின்கலங்கள் திருடப்பட்ட இடத்தில் சொகுசு பஸ் உட்பட பல வாகனங்கள் வாரியபொல நீதவான் நீதிமன்றினால் நிறுத்தப்பட்டிருந்துள்ளது. திருட்டு சம்பவம் தொடர்பில் தடயங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் குருணாகலில் உள்ள பொலிஸ் கெனல் பிரிவிலுள்ள பயிற்சி பெற்ற மோப்ப நாயான ஜோனியை…
-
- 1 reply
- 167 views
- 1 follower
-
-
பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 சகோதரர்கள் இன்னொரு குடும்பத்தில் உள்ள 6 சகோதரிகளை ஒரேநேரத்தில் திருமணம் செய்துள்ளனர். வரதட்சணை வாங்காமல் மிக எளிமையான முறையில் இந்த திருமணங்கள் நடைபெற்றது. தங்களது கடைசி தம்பிக்கு 18 வயது ஆகும் வரை காத்திருந்து 6 சகோதரர்களும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துள்ளனர். இந்த திருமணத்தில் 100க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் கலந்துகொண்டனர். இந்த திருமணம் தொடர்பாக மூத்த சகோதரர், “இஸ்லாம் மதத்தில் திருமண வாழ்வு அடக்கத்தையும் எளிமையையும் எடுத்துரைக்கிறது. அதன்படி, நாங்கள் மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருக்க விரும்பினோம். பல சமயங்களில், திருமணச் செலவுகளுக்காக மக்கள் தங்கள் நிலத்தை விற்கிறார்கள். திருமணங்கள் எளிமைய…
-
- 2 replies
- 362 views
- 1 follower
-
-
முடியைத் தொட்டாலே கையோடு வந்து விடுகிறது…மராட்டியத்தில் பரவும் மர்ம நோய் January 9, 2025 12:35 pm மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்திலுள்ள கல்வாட், பாண்ட்கான், ஹிங்னா ஆகிய கிராமங்களில் வசிக்கும் ஆண், பெண், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கடந்த ஒரு வாரத்தில் திடீரென முடி கொத்து கொத்தாக உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றது. முதலில் உச்சந் தலையில் சிறிது அரிப்பு ஏற்பட்டு சில நாட்களில் ரோமத்தின் தன்மை சொரசொரப்பாக மாறி 72 மணித்தியாலத்துக்குள் முடி தானாக உதிர்ந்து வழுக்கையாகிவிடுவதாக கூறப்படுகிறது. தலைமுடியை மெதுவாக வருடி விட்டால் கூட கையோடு வந்து விடுவதாகவும் இதுவரையில் அந்தக் கிராமத்தில் சுமார் 50 பேர் வரை இந்த மர்ம நோயினால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்…
-
- 0 replies
- 229 views
-