செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7096 topics in this forum
-
யால தேசிய வனத்துக்குப் பயணித்த ஜேர்மன் தம்பதியினரின் 2 லட்சம் ரூபா பணம் கொண்ட பையை விழுங்கியது யானை: காட்சிகள் பதிவான வீடீயோவை சமர்ப்பித்து தம்பதி முறைப்பாடு (ரெ.கிறிஷ்ணகாந்) யால தேசிய பூங்காவில் வைத்து வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பயணித்த ஜீப் ஒன்றை வழிமறித்த யானை ஜீப்பின் கண்ணாடி ஊடாக தும்பிக்கையை நுழைத்து பெறுமதியான பொருட்களும் பணமும் கொண்ட பயணப் பையை எடுத்து விழுங்கியுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. யால - கதிர்காமம் வீதியின் ஊடாக சஃபாரி ஜீப் ஒன்றில் யால தேசிய பூங்காவைப் பார்வையிடுவதற்கு நேற்றுமுன்தினம் ஜேர்மனிய தம்பதி ச…
-
- 3 replies
- 282 views
-
-
105 வயது முதியவர் ஒருவர் சுமார் 23 கிலோ மீற்றர் தொலைவுக்கு சைக்கிளைச் செலுத்தி புதிய சாதனை படைத்துள்ளார். ரொபர்ட் மார்ச்சண்ட் என்பவர் பிரான்ஸைச் சேர்ந்தவர். இவருக்கு வயது 105. வயது முதிர்ந்தாலும் உடல் வலு குறையாத இந்த முன்னாள் தீயணைப்புப் படை வீரர், தனது ஆரோக்கியத்தை வித்தியாசமான முறையில் நிரூபித்தார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஒரு உள்ளக விளையாட்டரங்கில் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் மத்தியில் சைக்கிளைச் ஆரம்பித்த இவர், ஒரு மணி நேரத்திற்குள் 22.528 கிலோ மீற்றரைக் கடந்து புதிய சாதனை படைத்தார். இந்த வயது எல்லையில் உள்ள ஒருவர் இந்தச் சாதனையைப் படைத்திருப்பது இதுவே முதல்முறை! சாதனை படைப்பது ஒன்றும் இவருக்குப் புதிதல்ல. தனது நூறாவ…
-
- 1 reply
- 228 views
-
-
வயிற்றில் சிக்கிய கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு வெளியேற்றம் வியட்நாம் நாட்டில் வயிற்றில் சிக்கி கொண்ட கத்தரிக்கோல் 18 ஆண்டுகளுக்கு பிறகு அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. ஹனோய்: வியட்நாம் நாட்டில் 54 வயது மிக்க முதியவர் ஒருவர் கடந்த மாதம் சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அப்போது அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எடுத்தனர். அந்த ஸ்கேனில் அவரது வயிற்றின் இடது புறத்தில் கூர்மையான ஆயுதம் இருப்பது கண்டறியப்பட்டது. மீண்டும் சோதனை செய்ததில் கத்திரிக்கோல் இருப்பது மருத்துவர்களுக்கு தெரியவந்தது. அந்த கத்திரிக்கோல் 15 …
-
- 0 replies
- 292 views
-
-
20 வருடங்களாக மனைவியுடன் பேசுவதை தவிர்த்த நபர் 18 வயது மகனின் முயற்சியால் மீண்டும் உரையாடுகிறார் 2017-01-02 13:39:42 ஜப்பானைச் சேர்ந்த நபர் ஒருவர், 20 வருடங்கள் தனது மனைவியுடன் பேசுவதை தவிர்த்து வந்தநிலையில், அண்மையில் மீண்டும் பேச ஆரம்பித்துள்ளார். ஒட்டோவ் கேட்டேயமா எனும் இந் நபர் தனது மனைவியுடன் தொடர்ந்து வசித்து வந்தார். ஆனால், 20 வருட காலமாக இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் எதுவும் நடக்கவில்லை. யுமி கூறிய ஏதோ ஒரு விடயம் தன்னை வெகுவாக பாதித்ததால் அவருடன் பேசுவதை கேட்டேயமா நிறுத்தினாராம். அவரின் மனைவி கேட்டேயமாவுடன பேசுவதற்கு முற்பட்டபோ…
-
- 8 replies
- 575 views
-
-
குப்பையில் வீசப்பட்ட அதிர்ஷ்டச் சீட்டுக்கு ஒன்றே கால் கோடி ரூபா பரிசு குப்பையில் வீசப்பட்ட லொத்தர் சீட்டு ஒன்றுக்கு இலங்கை மதிப்பில் ஏறக்குறைய ஒன்றே கால் கோடி ரூபா பரிசு விழுந்த சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. ஜோவேன் ஜொனிசன் (37) என்ற பெண் லொத்தர் சீட்டு வாங்கும் பழக்கம் உடையவர். சிறு சிறு பரிசுகளும் அவருக்குக் கிடைத்திருக்கின்றன. கடந்த 28ஆம் திகதி அவர் வாங்கிய ஒரு சீட்டுக்கு பரிசு எதுவும் கிடைக்காததால் அதைக் குப்பையில் வீசிவிட்டார். ஆனால், மூன்று நாட்களின் பின் கடந்த 31ஆம் திகதி, புதிய சீட்டொன்றை வாங்கச் சென்றவருக்கு ஆச்சரியம் + அதிர்ச்சி காத்திருந்தது. ஆறுதல் பரிசுக்குரிய டிக்கெட்டுகள் குறைவாக இருந்தமையால் ஒட்டு மொத்த ஆறுத…
-
- 1 reply
- 208 views
-
-
சேலை அணியும் கணவனிடமிருந்து விவாகரத்து கோரிய மனைவி 2016-12-30 13:37:47 தனது கணவன் இரவு வேளைகளில் சேலை அணிவதால் அவரிடமிருந்து மனைவி விவாகரத்து கோரிய வினோத சம்பவம் பெங்களூரில் நிகழ்ந்துள்ளது. பெங்களூர் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் அனிதா (29). பெங்களூரின் பன்னர்கட்டா பகுதியில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனமொன்றில் அனிதா பணி புரிந்து வருகிறார். இவருக்கும் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரியும் ராஜேஷ் என்பவருக்கும் கடந்த வருடம் திருமணம் நடைபெற்றது. திருமணமாகி ஒரு வருடம் கடந்த நிலையில் தனது கணவனிடமிருந்து விவாகரத்து கோரி பெங்களூர் பொலிஸ் நிலையத்தில் அனிதா புகா…
-
- 3 replies
- 484 views
-
-
ரஷ்ய சர்வதேச விமான நிலைய கட்டடத்துக்குள் வேகமாக புகுந்த கார் : காதலியை வரவேற்பதற்குச் செல்வதாக மதுபோதையிலிருந்த சாரதி கூறினார் 2016-12-26 12:05:19 சர்வதேச விமான நிலையமொன் றின் கதவுகளை உடைத்துக்கொண்டு கார் ஒன்று வேகமாக விமான நிலையத்துக்குள் நுழைந்த சம்பவம் ரஷ்யாவில் இடம்பெற்றுள்ளது. கஸாந் நகரிலுள்ள கஸான் சர்வதேச விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகளை தகர்த்துக்கொண்டு இக்கார் உள்ளே நுழைந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமான நிலைய கட்டடத்துக்குள் நுழைந்தவுடன் கார் நிறுத்தப்படவில்லை. அந்நபர் தொடர்ந்தும் காரை செலுத்திக் கொண்டிருந்தார். …
-
- 0 replies
- 249 views
-
-
கஞ்சா செடியால் அலங்கரிக்கப்பட்ட நத்தார் மரம் ; சந்தேக நபர்களை மடக்கி பிடித்த பொலிஸார் கென்னாபீஸ் எனப்படும் கஞ்சாவகை செடியை கொண்டு தமது நத்தார் மரத்தை அலங்கரித்திருந்த குற்றத்திற்காக இருவர் கைதான சம்பவம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, இங்கிலாந்தின் ஜெல்டன்ஹாம் நகரப்பகுதியிலுள்ள வீடொன்றை பொலிஸார் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இந்நிலையில் வீட்டில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு வண்ணக் காகிதங்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்த மரத்தை உன்னிப்பாக அவதானித்த பொலிஸார் அது அடர்த்தியாக வளர்ந்த கென்னாபீஸ் எனப்படும் கஞ்சா வகை போதை செடி என்பதை கண்டு பிடித்துள்ளனர். குறித்த சம்பவம் தொட…
-
- 0 replies
- 209 views
-
-
விலங்குகளை வீட்டிற்கு அனுப்பிவிட்டு அவற்றின் கூட்டிற்குள் மனிதர்களின் கொண்டாட்டம்.! கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களை மேற்கொண்ட விலங்குகள் காப்பக ஊழியர்கள். தாம் பராமரித்த நாய்கள் யாவும் தத்தெடுக்கப்பட்ட நிலையில், தாங்களே கூடுகளுக்குள் சென்று கிறிஸ்மஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளனர். அமெரிக்காவின் கொலராடோ பகுதியில் உள்ள பைக் பீக்ஸ் மானுட அமைப்பானது விலங்குகளை வருமானம் தரும் நோக்கத்திற்காக பராமரித்து வராத ஒரு அமைப்பாக செயற்பட்டுள்ளது. குறித்த அமைப்பில் பராமரிப்பிற்குட்பட்டு வந்த அனைத்து நாய்களும் கிறிஸ்மஸ் விடுமுறையை களிக்க வீடுகளுக்கு சென்ற நிலையில் காப்பக ஊழியர்கள் விலங்குகளை அடைத்து வைக்கும் கூடுகளுக்குள் சென்று தமது பண்டிகை கொண்டாட்டத்தை வெளிப்பட…
-
- 0 replies
- 280 views
-
-
கடைவீதியில் உலாவந்த பொப் பிரான்சிஸ் போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்தார். அவருடன் பொதுமக்கள் போட்டிபோட்டு ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர். உலக கத்தோலிக்க மத கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவருக்கு எப்போதுமே அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும். எனவே போப் ஆண்டவராக இருப்பவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் தான் வெளியே வருவது வழக்கம். சாதாரணமாக மற்ற இடங்களில் அவர்களை பார்க்க முடியாது. ஆனால் தற்போது உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதில் வித்தியாசமானவராக இருக்கிறார். அவர் மக்கள் முன்பு சாதாரணமாக தோன்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் போப் ஆண்டவர் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்த சம்பவம் நடந்துள்ளது. தனது அரண்மனையில் இருந்து பி…
-
- 0 replies
- 350 views
-
-
சொந்த முடியால் அவதிப்பட்ட செல்லப்பிராணி – மீள்வதற்கு போராடிய தருணங்கள் (படங்கள்) பென்சுவெலியாவின் பிட்ஸ்பேர்க் நகரில் அமைந்துள்ள மிருக வைத்திசாலையில் மிகவும் அபூர்வமான முடியமைப்பைக்கொண்ட பூனை அதன் இயல்பான நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரியவந்ததாவது, போல் ரொஸல் என்பவரின் அயலவரான அல்செய்மர் தான் வளர்த்த ஹய்டே எனும் பூனையை ரொஸலிடம், விட்டுவிட்டு தனது வேலைக்காக இடமாறி சென்றதால் மிக நீண்டகாலமாக வீட்டிற்குள் மறைந்து வாழ்ந்த குறித்தப் பூனையின் உடலில் சுமார் இரண்டு கிலோகிராம் அளவில் முடி வளர்ந்துள்ளது. முடியானது சிக்கல் மிகுந்த பிடிகளாக இருந்ததால் அது வேறு ஒரு மிருகம் என எண்ணும் அளவில் பார்வைக்…
-
- 0 replies
- 327 views
-
-
சைக்கிள் திருடிய அவுஸ்திரேலிய ஜோடிக்கு இந்தோனேஷியாவில் விசித்திர தண்டனை 2016-12-19 12:23:21 இந்தோனேஷியாவில் துவிச்சக்கரவண்டியொன்றை திருடியதாக குற்றம் சுமத்தப்பட்ட அவுஸ்திரேலிய ஜோடியொன்று, தமது குற்றத்தை ஒப்புக்கொள்ளும் வாசகம் அடங்கிய பதாகையுடன் வீதியில் வலம்வந்தனர். இந்தோனேஷியாவின் பிரபல சுற்றுலாத் தலமான பாலி தீவுக்கு அருகிலுள்ளகிலி ட்ரவான்கான் எனும் தீவில் துவிச்சக்கர வண்டியொ ன்றைத் திருடியதாக அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் குற்றம் சுமத்தப்பட்டனர். இவர்கள் சைக்கிளொன்றை திருடுவது கண்காணிப்பு கெமராவில் பதிவு செய்யப்பட்டுள்ள…
-
- 5 replies
- 760 views
-
-
இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டு ஜெயில் இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. லண்டன்: இங்கிலாந்து நாட்டில் பாலியல் பலாத்கார வழக்கில் 101 வயது முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனை பெற்றவரின் பெயர் ரால்ப் கிளார்க். இவர் முன்பு லாரி டிரைவராக இருந்த போது 1970-ம் ஆண்டு வாக்கில் சகோதரிகளான 4 வயது மற்றும் 13 வயது சிறுமிகள் இருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவர்களுடைய சகோதரனை தாக்கியதாகவும் கூறப்பட…
-
- 2 replies
- 372 views
-
-
ஆணுறுப்பு கறியால்: திக்குமுக்காடிபோன பெண் ஆணுறுப்பு சாப்பாட்டை கண்டதும் மத்தியதர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் திக்குமுக்காடிபோன சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, க்யூண்டாஸ் என்ற விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில், வர்த்தக வகுப்பில் சிட்டினியிலிருந்து பிரிஸ்பேன் வரையிலும் பயணித்த பெண்ணொருவர், மரக்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஒருவேளை உணவை கேட்டுள்ளார். விமானம் பறந்துகொண்டிருக்க, பசியை கட்டுப்படுத்தி கொண்ட அப்பெண்ணுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர், உணவு கிடைத்துள்ளது. தேங்ஸ் சொல்லிவிட்டு, சாப்பாட்டை பார்த்ததும் அப்…
-
- 4 replies
- 555 views
-
-
பல கோடி சொத்துக்களை நிர்வகிக்க மறுத்துவிட்ட மகன்: பொருத்தமான வாரிசைத் தேடிவரும் கோடீஸ்வர தந்தை தனது மகன் தனக்கு சொத்துக்கள் வேண்டாமென புறக்கணித்துவிட்டதால், சீனாவில் உள்ள கோடீஸ்வர தொழிலதிபர் ஒருவர் தனது சொத்துக்களை நிர்வகிக்கப் பொருத்தமான வாரிசைத் தேடி வருகின்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் டாலியன் வான்டா குழுமத்தின் தலைவராக 62 வயதான வாங் ஜியான்லின் உள்ளார். இவரது குழுமம், வணிக வளாகங்கள், உல்லாசப் பொழுதுபோக்கு பூங்காக்கள், ஸ்போர்ட்ஸ் கிளப், திரையரங்குகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளது. இவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் 92 பில்லியன் டொலர்களாகும். வாரிசு அடிப்படையில் சொத்தை நிர்வகிக்க அவரது மகன் வாங் சிகாங் மறுத்துவிட…
-
- 1 reply
- 289 views
-
-
நீச்சலுடை மாத்திரம் அணிந்து விமானம் ஏறுவதற்கு வந்த இளைஞர் 2016-12-19 11:45:35 இளைஞர் ஒருவர் நீச்சலுடை மாத்திரம் அணிந்த நிலையில் விமானம் ஏறுவதற்காக விமான நிலையத்துக்கு வந்த சம்பவம் ஆபிரிக்க நாடான மாலாவியில் அண்மையில் இடம்பெற்றுள்ளது. இவர் மாலாவி விமான நிலையத்திலுள்ள சௌத் ஆப்ரிகன் எயார்வேஸ் நிறுவன கருமபீடத்தில் ஊழியர்களுடன் உரையாடிக் கொண்டிருப்பதை பலர் படம்பிடித்துள்ளனர். மேற்படி இளைஞர் தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த கிறேக் பெனட்டின் என இனம்காணப்பட்டுள்ளார். இவர் தொண்டர் நிறுவனமொன்றுக்கு நிதி சேகரிப்பதற்காக மாலாவி ஏரியில் நடைபெற்ற நீச்ச…
-
- 0 replies
- 268 views
-
-
முகவரி எழுதப்படாத தபாலைக் கொண்டு சேர்த்த பிரித்தானிய தபால் ஊழியர்கள் 2016-12-18 11:21:19 பிரிட்டனைச் சேர்ந்த தபால் ஊழியர்கள் முகவரி எழுதப்படாத தபால் ஒன்றை உரியவரிடம் வெற்றிகரமாக சேர்த்துள்ளனர். இங்கிலாந்தின் சஃபோல்க் பிராந்தியத்தைச் சேர்ந்த அன்தனி ரென் என்பவரின் வீட்டுக்கே இக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அன்தனி ரென்னுடன் பல வருடங்களுக்கு முன்னர் பணியாற்றிய சகா ஒருவர், அன்தனி ரென்னின் வீட்டு முகவரி விபரங்களை மறந்து விட்டார். இந்நிலையில், முகவரிக்குப் பதிலாக somewhere near the sea in Suffolk’ (சஃபோக் கடற்கரைக்கு அருகில் எங்கோ ஓரிடத்தில்) என குறிப்பிட்டு தனது நத்த…
-
- 0 replies
- 226 views
-
-
'நன்றி மாத்திரம் போதாது' ஜப்பான் நாட்டிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த ஜப்பான் நாட்டு பெண்ணொருவரின் மார்பகங்களை தடவிய ஹொட்டல் பணியாளர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 26 வயதுடைய குறித்த பெண்ணால், காலி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே, ஹொட்டல் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். காலியிலுள்ள உல்லாச விடுதியொன்றின் குளியளறை வெளிப்புறத்தில் இருப்பதனால், அங்கு தங்கியிருந்த ஜப்பான் பெண், குளியளறைக்குச் சென்றுள்ளார். எனினும், தனது அறைக் கதவின் சாவியை, கதவின் உள்புறத்திலேயே வைத்துவிட்டு கதவை மூடியுள்ளார். குளித்து விட்டு வந்து பார்த்த போது, தனது கதவு மூடியிருப்பதைக் கண்டுள்ளார். கதவின் சா…
-
- 1 reply
- 356 views
-
-
மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணப் பரிசாக வீடற்ற 90 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார். 2 ஏக்கர் பரப்பளவில் நகரம் ஒன்றை உருவாக்கி அதில் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார். ஆடைத் தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபரான அஜய் முனாத் என்பவர் தனது மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார். அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி ரூபா செலவில் 90 வீடுகளை கட்டி வீடில்லாதவர்களுக்கு பரிசாக வழங்கி உள்ளார். வீடுகளை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் தனிநபர் ஏழையாக இருக்கவேண்டும்,…
-
- 22 replies
- 1k views
-
-
திருமணத்தில் விசித்திர சம்பவம்..! : காதலிக்காக காதலன் செய்த தியாகம் காதலர்கள் தங்களின் உண்மையான காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை செய்வது வழமையான ஒன்றாகும். அதில் ஒரு புது முயற்சியாக சீனாவில் காதல் திருமணம் செய்த ஒரு காதல் ஜோடி தமது காதலை உடைகளை மாற்றி அணிந்து தமது அன்பை வெளிபடுத்தியுள்ளது. சீனாவின் சன்ஜிங் மாவட்த்தில் நான்சோங் நகரில் வசிக்கும் ஓ கியான் என்பவருக்கும் தன் கதலியான வூ சுவாய் ஆகியோருக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காதலியின் உடையலங்காரம் அவரை உடல் பருமன் மிக்கவராக காட்டும் என்பதால் ஓ கியான் தனது உடையை தனது காதலிக்கு அணிய செய்து காதலியின் உடையை தான் அணிந்து தனது காதலிக்கு ஏற்படவிருந்த தர்ம சங்கடமான ந…
-
- 6 replies
- 392 views
- 1 follower
-
-
வங்கிக் கடனை அறவிடுவதற்கு சென்ற முகவரை விளக்குமாறினால் அடித்து பல்லை உடைத்த பெண்! (ரெ.கிறிஷ்ணகாந்) மாவனல்ல நகரிலுள்ள வங்கி ஒன்றில் கடனை பெற்றுக் கொண்டு ஒரு வருட காலமாக அதனை மீளச்செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை வங்கி முகவர் தேடிச்சென்ற போது அந்தப் பெண் குறித்த வங்கி முகவர் மீது விளக்குமாறினால் தாக்கி காயமடையச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒன்றிலிருந்து கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை தேடி வங்கி முகவரொருவர் தனது உதவியாளரொருவருடன் அரனாயக்க, வெலிமன்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் கடன் தவணைப்பணம் செலுத்த தவறி…
-
- 4 replies
- 506 views
-
-
சட்டம் என்னும் கழுதை சட்டம் சில நேரங்களில் தேமே என்று கழுதையாகும் (அவிஞ்சு போகும்) சில விடயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். பிரித்தானியாவில் கணவன், மனைவி காரில் பயணிக்கிறார்கள். வேகமாக செல்லும் போது, கமரா படம் பிடித்து விடுகிறது. அக்கணத்தில் யார் கார் ஓடியவர் என்று சொல்ல வேண்டியது காரின் சொந்தக் காரரின் சட்ட பூர்வ கடமை. ஒருவரை ஒருவர் காக்க முடிவெடுத்த தம்பதிகள், மாறி, மாறி ஓடினோம்.... கமரா அடித்த அந்தக் கணத்தில் யார் ஓடினார் என்று சொல்ல முடியவில்லை என்று சொல்ல, சட்டம் கழுதை போல விழித்து, இனி கவனமாக ஓடுங்க மக்கா என்று சொல்லி அனுப்பியது. ஏனெனில் யார் மேல் பிழை இருக்கும் என, சட்டம் சுஜமாக தெரிவு செய்ய முடியாது. அதே போன்ற ஒரு ஆவுஸ்திரேலியரின் கதை தான் இ…
-
- 17 replies
- 1.3k views
-
-
சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மூதாட்டி தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான மூதாட்டி ஒருவரும் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார். மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்று க்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார். …
-
- 3 replies
- 330 views
-
-
துபாய் நோக்கி பறந்த எமிரேட்ஸ் விமானத்தில் மேலாடையை கழற்றிவிட்டு சிகரெட் பற்ற வைத்த பயணி; விமானத்துக்குள் இருப்பதை மறந்துவிட்டாராம் துபாய் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் பயணியொருவர் தனது மேலாடையை கழற்றிவிட்டு, சிகரெட் ஒன்றையும் பற்றவைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மது போதையிலிருந்த அந் நபர், தான் விமானத்தில் இருப்பதை மறந்துவிட்டாராம். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிளைட் ஈகே 020 எனும் இவ் விமானம், கடந்த வெள்ளிக்கிழமை இங்கி…
-
- 0 replies
- 162 views
-
-
நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் ஒருசில பெண்களின் உடல் பாகங்கள் விசித்திரமாகவும், அளவுக்கு அதிகமாக பெரியதாகவும் இருக்கும். மேலும் ஒரு பெண் மிகவும் நீளமான கூந்தலையும், பொம்மை போன்று தன்னையும் பராமரித்து வருகிறார். இவர்களைப் பார்க்கும் போது, அனைவரது புருவங்களும் நிச்சயம் மேல் எழும். சரி, இப்போது அனைவரது புருவங்களையும் மேல் எழச் செய்யும் உலகில் இருக்கும் விசித்திரமான பெண்களைப் பற்றி பார்ப்போமா!!! அபிகாயில் மற்றும் பிரிட்டானி ஹென்ஸ் இரண்டு மூளை, இரண்டு இதயம், ஆனால் ஓர் உடல் கொண்டவர்கள் தான் இந்த அபிகாயில் மற்…
-
- 0 replies
- 930 views
-