செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
மகளின் திருமணப் பரிசாக வீடில்லாத 90 பேருக்கு வீடு வழங்கும் தொழிலதிபர் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் தொழிலதிபர் ஒருவர் தன்னுடைய மகளின் திருமணப் பரிசாக வீடற்ற 90 பேருக்கு வீடுகள் அமைத்துக் கொடுத்துள்ளார். 2 ஏக்கர் பரப்பளவில் நகரம் ஒன்றை உருவாக்கி அதில் வீடுகளை அமைத்துக் கொடுத்துள்ளார். ஆடைத் தொழிற்சாலை நடத்திவரும் தொழிலதிபரான அஜய் முனாத் என்பவர் தனது மகள் ஸ்ரேயாவின் திருமணத்தை வித்தியாசமான முறையில் நடத்த திட்டமிட்டார். அதன்படி சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் 1.5 கோடி ரூபா செலவில் 90 வீடுகளை கட்டி வீடில்லாதவர்களுக்கு பரிசாக வழங்கி உள்ளார். வீடுகளை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் தனிநபர் ஏழையாக இருக்கவேண்டும்,…
-
- 22 replies
- 1.1k views
-
-
திருமணத்தில் விசித்திர சம்பவம்..! : காதலிக்காக காதலன் செய்த தியாகம் காதலர்கள் தங்களின் உண்மையான காதலை வெளிப்படுத்துவதற்கு பல்வேறு செயற்பாடுகளை செய்வது வழமையான ஒன்றாகும். அதில் ஒரு புது முயற்சியாக சீனாவில் காதல் திருமணம் செய்த ஒரு காதல் ஜோடி தமது காதலை உடைகளை மாற்றி அணிந்து தமது அன்பை வெளிபடுத்தியுள்ளது. சீனாவின் சன்ஜிங் மாவட்த்தில் நான்சோங் நகரில் வசிக்கும் ஓ கியான் என்பவருக்கும் தன் கதலியான வூ சுவாய் ஆகியோருக்கும் திருமணம் இடம்பெற்றுள்ளது. இதன்போது காதலியின் உடையலங்காரம் அவரை உடல் பருமன் மிக்கவராக காட்டும் என்பதால் ஓ கியான் தனது உடையை தனது காதலிக்கு அணிய செய்து காதலியின் உடையை தான் அணிந்து தனது காதலிக்கு ஏற்படவிருந்த தர்ம சங்கடமான ந…
-
- 6 replies
- 396 views
- 1 follower
-
-
வங்கிக் கடனை அறவிடுவதற்கு சென்ற முகவரை விளக்குமாறினால் அடித்து பல்லை உடைத்த பெண்! (ரெ.கிறிஷ்ணகாந்) மாவனல்ல நகரிலுள்ள வங்கி ஒன்றில் கடனை பெற்றுக் கொண்டு ஒரு வருட காலமாக அதனை மீளச்செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை வங்கி முகவர் தேடிச்சென்ற போது அந்தப் பெண் குறித்த வங்கி முகவர் மீது விளக்குமாறினால் தாக்கி காயமடையச் செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி ஒன்றிலிருந்து கடன்பெற்று அதனை திருப்பி செலுத்தாமல் இருந்த பெண் ஒருவரை தேடி வங்கி முகவரொருவர் தனது உதவியாளரொருவருடன் அரனாயக்க, வெலிமன்ன பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று அவரிடம் கடன் தவணைப்பணம் செலுத்த தவறி…
-
- 4 replies
- 516 views
-
-
சட்டம் என்னும் கழுதை சட்டம் சில நேரங்களில் தேமே என்று கழுதையாகும் (அவிஞ்சு போகும்) சில விடயங்களில் எனக்கு ஆர்வம் அதிகம். பிரித்தானியாவில் கணவன், மனைவி காரில் பயணிக்கிறார்கள். வேகமாக செல்லும் போது, கமரா படம் பிடித்து விடுகிறது. அக்கணத்தில் யார் கார் ஓடியவர் என்று சொல்ல வேண்டியது காரின் சொந்தக் காரரின் சட்ட பூர்வ கடமை. ஒருவரை ஒருவர் காக்க முடிவெடுத்த தம்பதிகள், மாறி, மாறி ஓடினோம்.... கமரா அடித்த அந்தக் கணத்தில் யார் ஓடினார் என்று சொல்ல முடியவில்லை என்று சொல்ல, சட்டம் கழுதை போல விழித்து, இனி கவனமாக ஓடுங்க மக்கா என்று சொல்லி அனுப்பியது. ஏனெனில் யார் மேல் பிழை இருக்கும் என, சட்டம் சுஜமாக தெரிவு செய்ய முடியாது. அதே போன்ற ஒரு ஆவுஸ்திரேலியரின் கதை தான் இ…
-
- 17 replies
- 1.3k views
-
-
சாதாரண பரீட்சைக்கு தோற்றிய மூதாட்டி தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு 73 வயதான மூதாட்டி ஒருவரும் தோற்றியுள்ளார். மாத்தறை நாதுகல பிரதேசத்தை சேர்ந்த என்.என்.எஸ். கல்யாணி என்ற 73 வயதான பெண்மணி சாதார தரப்பரீட்சையில் தகவல் தொழிநுட்ப பாடத்திற்கான பரீட்சையில் தோற்றினார். மாத்தறை இல்மா கல்லூரியின் பரீட்சை மண்டபத்தில் அவர் பரீட்சைக்கு தோற்றியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு மொத்த விற்பனை கூட்டுத்தாபனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றுள்ள கல்யாணி, காலத்திற்கு ஏற்ப புதிய தொழில்நுட்ப அறிவை பெற்று க்கொள்வது தனது நோக்கம் எனக் கூறியுள்ளார். …
-
- 3 replies
- 338 views
-
-
துபாய் நோக்கி பறந்த எமிரேட்ஸ் விமானத்தில் மேலாடையை கழற்றிவிட்டு சிகரெட் பற்ற வைத்த பயணி; விமானத்துக்குள் இருப்பதை மறந்துவிட்டாராம் துபாய் நோக்கி பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் பயணியொருவர் தனது மேலாடையை கழற்றிவிட்டு, சிகரெட் ஒன்றையும் பற்றவைத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றுள்ளது. மது போதையிலிருந்த அந் நபர், தான் விமானத்தில் இருப்பதை மறந்துவிட்டாராம். ஐக்கிய அரபு எமிரேட்ஸை தளமாகக் கொண்ட எமிரேட்ஸ் நிறுவனத்தின் விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிளைட் ஈகே 020 எனும் இவ் விமானம், கடந்த வெள்ளிக்கிழமை இங்கி…
-
- 0 replies
- 170 views
-
-
நீங்கள் உலகிலேயே மிகவும் குட்டியான பெண்மணியையோ அல்லது பெரிய இடுப்புள்ள பெண்ணையோ பார்த்துள்ளீர்களா? இங்கு உலகில் அசர வைக்கும் படியான சில பெண்மணிகள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இப்பட்டியலில் ஒருசில பெண்களின் உடல் பாகங்கள் விசித்திரமாகவும், அளவுக்கு அதிகமாக பெரியதாகவும் இருக்கும். மேலும் ஒரு பெண் மிகவும் நீளமான கூந்தலையும், பொம்மை போன்று தன்னையும் பராமரித்து வருகிறார். இவர்களைப் பார்க்கும் போது, அனைவரது புருவங்களும் நிச்சயம் மேல் எழும். சரி, இப்போது அனைவரது புருவங்களையும் மேல் எழச் செய்யும் உலகில் இருக்கும் விசித்திரமான பெண்களைப் பற்றி பார்ப்போமா!!! அபிகாயில் மற்றும் பிரிட்டானி ஹென்ஸ் இரண்டு மூளை, இரண்டு இதயம், ஆனால் ஓர் உடல் கொண்டவர்கள் தான் இந்த அபிகாயில் மற்…
-
- 0 replies
- 943 views
-
-
விநோத உலகம் சிவப்புக் கடற்கரை! உலகின் மிக அழகான, கண்கவர் கடற்கரை எது தெரியுமா? சீனாவின் பன்ஜின் கடற்கரைதான்! கண்களுக்கு எட்டிய தூரம் வரை சிவப்புக் கம்பளத்தால் போர்த்தப்பட்டிருப்பதுபோல இந்தக் கடற்கரை காட்சியளிக்கும்! இதற்குக் காரணம், கடற்கரை முழுவதும் வளர்ந்திருக்கும் சிவப்புக் கடற்பாசிகள். பன்ஜின் நகரில் 'லியாவோஹி' ஆறு கடலில் கலக்கும் இடத்தில் கழிமுகம் உள்ளது. தண்ணீருடன் கூடிய சதுப்பு நிலப் பகுதியாக இது இருக்கிறது. ஜனவரி முதல் மார்ச் வரை மற்ற கடற்கரைகள் போலவே காட்சியளிக்கும். ஏப்ரல் இறுதியில் வசந்த காலத்தில் பச்சை வண்ணத்தில் கடற்பாசிகள் முளைக்கின்றன. 3 மாதங்களுக்குப் பிறகு, கோடைக்காலத்தில் பாசிகள் அடர் சிவப்பு வண்ணமாக மாறிவிடுகின்றன. ஆகஸ்ட் முதல் அக்டோபர…
-
- 0 replies
- 377 views
-
-
'SEX' தேடலில் இலங்கை தொடர்ந்து முதலிடம் இணையத்தளத்தில் SEX என்ற வார்த்தையை அதிகமாக தேடும் நாடுகளில் இலங்கை முதலிடத்தில் உள்ளதாக கூகுல் தெரிவித்துள்ளது. இதன்படி 2011, 2012, 2013, மற்றும் 2014ஆம் 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் கூகுல் இணையத்தளத்தில் SEX சொல்லை அதிகமான தேடிய நாடு இலங்கையாகும். இலங்கையின் மேல் மாகாணத்தில் ஹோமாகம நகரத்தில் இருந்தே இந்த சொல் அதிகளவில் தேடப்பட்டுள்ளது. அதிலும், பாடசாலை விடுமுறை காலங்களான ஓகஸ்ட் மற்றும் டிசெம்பர் மாதங்களிலேயே SEX என்ற வார்த்தை அதிகளவில் தேடப்பட்டுள்ளது. - See more at: http://www.tamilmirror.lk/187688/-SEX…
-
- 10 replies
- 2.5k views
- 1 follower
-
-
மனிதர்களை தின்னும் கொடூர மிருகம்: ஏலியனா இது? – (காணொளி இணைப்பு) கர்நாடகாவில் விலங்குகள் மற்றும் மனிதர்களை தின்னும் கொடூர விலங்கு ஒன்று பிடிபட்டுள்ளதாக கூறி வீடியோ ஒன்று தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. கர்நாடகாவின் எல்லைப் பகுதியில் கடந்த 30 ஆம் திகதி விசித்திரமான மிருகம் ஒன்று பிடிபட்டுள்ளது. இதை சமூகவலைத்தளங்களில் இது ஒரு கொடூரமான விலங்கு என்றும் விலங்குகள் மற்றும் மனிதர்களை உண்ணும் ஏலியன் என குறிப்பிட்டுள்ளனர். இதனால் கர்நாடகாவின் எல்லைப் பகுதி வழியே செல்பவர்கள் பார்த்து கவனமாக செல்லுங்கள் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோவும் தற்போது இணையத்தில் உலா வரத் தொடங்கியுள்ளது. …
-
- 0 replies
- 459 views
-
-
ஆண் அழகன் போட்டியில் பறிபோனது வெற்றி வாய்ப்பு ; நடுவரை தூக்கி வீசிய போட்டியாளர் (வீடியோ இணைப்பு) கிரேக்கத்தின் எதன்ஸ் நகரில் இடம்பெற்ற ஆண் அழகன் போட்டியின் போது வெற்றி வாய்ப்பை தவரவிட்ட போட்டியாளர் ஒருவர் கோபத்தில் நடுவரை தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதன்ஸ் நகரில் இந்த ஆண்டுக்கான வைர கிண்ண ஆண் அழகன் போட்டி நடைபெற்றது. இதில் கிரேக்கத்தின் பிரபல ஆண் அழகர்களில் ஒருவரான கியான்னிஸ் மேகோஸ் என்பர் 100 கிலோவுக்கான போட்டியாளர்களில் முதலிடத்தை பிடித்துள்ளார். தொடர்ந்து நடைபெற்ற போட்டிகளிலும் வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் இருந்துள்ளார். ஆனால் நடுவர்கள் வெற்றியாளராக…
-
- 0 replies
- 346 views
-
-
நபா சிறையில் இருந்தபடியே பேஸ்புக்கில் போட்டோ போட்டு 900 லைக் வாங்கிய பயங்கரவாதி சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் நபா சிறைச் சாலையை தகர்த்து காலிஸ்தான் பயங்கரவாதத் தலைவர் உட்பட 6 பேர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தப்பினர். இந்த சம்பவத்தில் சிறைச்சாலையில் பாதுகாப்புக் குறைபாடு இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் பலத்த பாதுகாப்பு நிறைந்த நபா மத்திய சிறைக்குள் போலீஸ் சீருடையில் ஆயுதங்களுடன் வந்த கும்பல் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் அதிரடியாகத் தாக்குதல் நடத்திவிட்டு, சிறைக்குள் புகுந்து "காலிஸ்தான் விடுதலை முன்னணி' பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஹர்மீந்தர் மின்டூ உள்பட 6 குற்றவாளிகளை மீட்டுச் சென்றுள்ள சம்பவம் பெ…
-
- 0 replies
- 298 views
-
-
வறுமை எனக் கூறிக்கொண்டு சோம்பேறிகளாக வாழ்வது மூடத்தனமாகும் - அச்சாறு விற்கும் மொஹமட் சாஜகான் சிலாபம் திண்ணனூரான் பயனற்ற காரியங்களில் நாம் தடம் பதிக்கின்ற நாட்டத்திற்குத்தான் ஆசை என்று பெயர். பயனுள்ள செயல்களில் நாம் கொள்கின்ற நாட்டத்திற்குக் குறிக்கோள் என்று பெயர். இவ்வாறான ஒரு குறிக்கோளுடன் வாழும் ஒருவரையே இன்று நாம் சந்திக்கிறோம். “மாங்காய், அன்னாசி, அம்பரெல்லா, கொய்யாக்காய் ஆகிய அச்சாறு வகைகளுக்கு என்றும் நல்ல கிராக்கி உள்ளது. இதன் விசேடம், என்னவெனில் அச்சாறு வகைகளை சின்னஞ்சிறு வாண்டுகளில் இருந்து முதியோர் வரை வயது வித்தியாசமின்…
-
- 0 replies
- 483 views
-
-
பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஒளிபரப்பப்பட்ட ஆபாசப்படம் அமெரிக்காவின் பிரபல தொலைகாட்சி அலைவரிசையில் 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தொலைகாட்சியான சி.என்.என் இல் இவ்வாறு ஒளிப்பரப்பப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போஸ்டன் நகர மக்களுக்கான வழக்கமான நிகழ்ச்சிக்கு பதிலாக 30 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பப்பட்டுள்ளது. குறித்த ஆபாசப்படத்தினால் வழக்கமான நிகழ்ச்சி என காத்திருந்த மக்கள் பேரதிர்ச்சியடைந்துள்ளனர். இது குறித்து சி.என்.என் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, போஸ்டன் நகரில் தங்களது சேனலை ஒளிப்பரப்பபும் ஆர்.சி.என் கேபிள்…
-
- 0 replies
- 1.1k views
-
-
பிருடங்களை வெட்டும் பித்தன் பிடிபட்டான் மஹரகம நகரத்தில், பஸ்ஸுக்காகக் காத்திருக்கும் பெண்களின் பிருடத்தை பிளேடால் வெட்டிப் பதம்பார்க்கும் குடும்பஸ்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 119 ஆம் இலக்க பஸ்ஸுக்காகக் காத்திருந்த ஆறு மாத கர்ப்பிணியின் பிருடத்தை (பின்பகுதி) வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச்சென்றச் ஒருவரை, அங்கிருந்தவர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம், நேற்றுப் புதன்கிழமை காலைவேளையில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்த கர்ப்பிணிப் பெண், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய பின்பக்கத்துக்கு ஆறு தையல்கள் போடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன. தெஹிவளையில் உள்ள நிறுவன…
-
- 4 replies
- 648 views
-
-
திருமணத்திற்கு பிறகு கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் வெளியீடு! [Saturday 2016-11-19 15:00] சர்வதேச அளவில் திருமணத்திற்கு பிறகு கணவன் மற்றும் மனைவிக்கு தெரியாமல் மற்றவர்களுடன் கள்ள தொடர்பில் ஈடுப்பட்டு வரும் நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.பிரித்தானிய நாட்டை சேர்ந்த Durex ஆணுறை தயாரிப்பு நிறுவனம் ‘உலகளவில் தன்னுடைய துணைக்கு தெரியாமல் அல்லது துணைக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவரிடம் கள்ள தொடர்பு வைத்துக்கொள்வதில் எந்த நாடு முன்னணியில் உள்ளது’ என ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில் ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்நாட்டில் 51 சதவிகித தம்பதிகள் திருமணத…
-
- 5 replies
- 1.6k views
-
-
கன்றுக்குட்டியை விழுங்கிய பாம்பு! வயிற்றை கிழித்து சோகத்தில் ஆழ்ந்த மக்கள்!! on: நவம்பர் 11, 2016 நைஜீரியாவில் பாம்பு ஒன்று கால்நடையை விழுங்கியுள்ளது என்ற சந்தேகத்தில் பாம்பை கொன்று வயிற்றை கிழித்து பார்த்த கிராம மக்கள் அதிர்சசியில் உறைந்துள்ளனர். நைஜீரியாவில் உள்ள ஒரு கிராமத்தில் பாம்பு ஒன்று பெரிதாகப் புடைத்த வயிறுடன் காணப்பட்டுள்ளது. இதை கண்ட உள்ளுர் மக்கள் பாம்பு கால்நடையை விழுங்கியதால் தான் அதன் வயிறு பெரிதாக உள்ளது என சந்தேகமடைந்துள்ளனர். பின்னர், பாம்பை கொன்று அதன் வயிற்றை கிழித்து பார்த்து கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பாம்பின் வயிற்றில் சுமார் 100ற்கும் மேற்பட்ட முட்டைகள் இருந்துள்ளது. தற்போது குறித்த புகைப்படம் …
-
- 9 replies
- 757 views
-
-
650 கோடி செலவில் இந்திய தொழிலதிபர் மகளின் திருமணம்; திருமண சேலைக்கு 17 கோடி! 2016-11-17 12:05:28 முன்னாள் கர்நாடக அமைச்சரும் சுரங்கத் தொழிலதிபருமான காளி ஜனார்த்தனரெட்டியின் மகள் திருமணம் நேற்று பெங்களூரில் மிக பிரமாண்டமான முறையில், 650 கோடி இந்திய ரூபா (சுமார் 1,430 கோடி இலங்கை ரூபா) செலவில் நடைபெற்றது. ஆந்திர மாநிலம் சித்தூரில் செங்கா ரெட்டி என்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு மகனாகப் பிறந்தவர் ஜனார்த்தன ரெட்டி. பின்னர் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வளர்ந்தவர்கள். கடந்த 1999ஆம் ஆண்டு தான் ஜனார்த்தன ரெட்டியும் அவரது சகோதரர்களான கருணாகர ர…
-
- 2 replies
- 674 views
-
-
பிள்ளையாராக உருமாறிய கண்ணாடி போத்தல் ; மட்டக்களப்பில் அதிசயம் (சசி) மட்டக்களப்பு, வாழைச்சேனை சுங்காங்கேணி எழுச்சி கிராமத்தில் கிராமவாசியொருவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடி போத்தலொன்று பிள்ளையார் உருவமாக மாறிய அற்புத நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது. சுங்காங்கேணி கிராமத்தைச் சேர்ந்த க.யோகராணி என்பவரின் வீட்டின் சுவாமி அறையில் வைக்கப்பட்ட கண்ணாடிப் போத்தலே பிள்ளையார் உருவமாக மாறியுள்ளது. இச் சம்பவம் பற்றி வீட்டின் உரிமையாளர் க.யோகராணிதெரிவிக்கையில், கடந்த 27 வருடங்களாக கேராத கௌரி விரதம் அனுஷ்டித்துவருகின்றேன். ஒவ்வொரு வருடமும் கௌரி விரதம் முடிந்ததும் ஆலயத்தி…
-
- 1 reply
- 439 views
-
-
'இப்போதைக்கு இதுதான் மொய்!' திருமண விழா சுவாரஸ்யங்கள் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்ததால் திருமண நிகழ்ச்சிகளில் 'ஸ்வைப் மிஷின்' மூலம் அன்பளிப்பு (மொய்) பெறும் நடைமுறை வந்துள்ளது. கரூரில் நடந்த திருமண விழாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இந்த முறையை திருமண வீட்டினர் பின்பற்றி வருகின்றனர். 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்பதால் நாடு முழுவதும் பணத்தட்டுபாடு தலைவிரித்தாடுகிறது. ரூபாய் நோட்டுக்களை மாற்ற மக்கள் மணிக்கணக்கில் வங்கிகள் முன்பு காத்திருக்கின்றனர். பணத்தேவையை சந்திக்க முடியாமல் மக்கள் சிரமப்படுகின்றனர். சுப நிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறும் இந்த மாதத்தில் திருமணங்கள், பிறந்தநாள் விழா ஆகியவ…
-
- 0 replies
- 440 views
-
-
நிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணி; அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம் !! 2016-11-14 11:58:39 பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. கோண்டோர் நிறுவனத்தின் இவ் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் ஒருவரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்பவர் தனது ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக தோன்றியதுடன் பணிக…
-
- 0 replies
- 221 views
-
-
இந்தியாவில் பயன்பாட்டிலிருந்த 500 மற்றும் 1000 ரூபா நாணயத்தாள்கள் மீள பெறப்பட்டதை அடுத்து ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி குறித்து ஆராய்வதற்கான பிரதமர் நரேந்திர மோடி அவசர கூட்டமொன்றை நடாத்தியுள்ளார். வங்கிகளிலிருந்து பொதுமக்கள் மீளப் பெற்றுக் கொள்ளும் நிதியின் தொகையை அதிகரிக்க இந்திய அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதேபோன்று நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை அத்தியாவசிய சேவை கட்டணம், வரிகள், எரிப்பொருள் மற்றும் பயணங்களுக்கு பொதுமக்கள் பழைய நாணய தாளை பயன்படுத்த முடியும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது. திடீரென நாணயத்தாள்கள் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டமையினால், மக்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர். நாடு முழுவதிலும்…
-
- 0 replies
- 268 views
-
-
68 வருடங்களின் பின்னர் சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலவை பார்வையிடும் சந்தர்ப்பம் இலங்கை வாழ் மக்களுக்கு கிட்டியுள்ளது இதன்போது நிலா 14 மடங்கு பெரியதாக கட்சியளிக்கும் என ஆர்தர் சி கிளார்க் நிலையத்தின் நவீன தொழில்நுட்ப பிரிவின் சிரேஷ்ட விஞ்ஞானி சராஜ் குணசேகர தெரிவித்தார். இதற்கு முன்னர் 1948 ஆம் ஆண்டிலேயே சூப்பர் மூன் எனும் பெரு முழு நிலா தோன்றியிருந்தது. இத்தகைய பெரு முழு நிலாவை மீண்டும் 2034 ஆம் ஆண்டின் நவம்பர் மாதம் 25 ஆம் திகதியே காண்பதற்கான வாய்ப்பு கிட்டவுள்ளது. மேலும் 2034 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் திகதி இவ்வாறான சுப்பர் மூனை பார்வையிட முடியும். இன்றைய தினம் நிலவை புவிக்கு அண்மையில் காண்பதற்குரிய சந்தர்ப்பம் ஏற்படவுள்ளது. இந்த சந்…
-
- 0 replies
- 471 views
-
-
காலத்தால் அழியாத காதல் 65 ஆண்டுகளுக்கு முன்னர் நடைபெற இருந்த நிச்சயதார்த்தத்தை நிறுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிரிட்டன் ஜோடி ஒன்று இறுதியில் திருமண பந்தத்தில் இணைந்திருக்கிறது. 65 ஆண்டுகளாக பிரிந்திருந்த பிறகு வெள்ளிக்கிழமை திருமணத்தில் இணைந்த ஜோடி குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் இப்போது 82 வயதாகும் டாவி மோவாகெஸூக்கும் 86 வயதான டெர்பிஷீருக்கும் 1951 ஆம் ஆண்டு திருமணம் நடக்காமல் போயிற்று. அன்ரெவின் மகள் டெபியே வில்லியம்ஸ், மோவாக்கெஸை தேடிக் கண்டுபிடித்து மீண்டும் ஒன்றிணைத்து வைக்கப்பட்ட இந்த ஜோடி "தீவிர காதலில்" திழைத்திருக்கிறது. அவர் ஓவிய கலைஞராக இருந்ததால் மணமகளின் தாய் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளாததால், அந்த ஜ…
-
- 1 reply
- 471 views
-
-
"டிரம்ப் ஒரு முஸ்லீம்" (video) நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் எனவும் அவரது உண்மையான பெயர் தாவூத் இப்ராஹிம் கான் எனவும் பாகிஸ்தான் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தானியர்களின் எதிரியாக பார்க்கப்படும் டொனால்ட் டிரம்ப் தங்கள் ஊரை சேர்ந்தவர் என நியோ நியூஸ் என்ற தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தானில் பிறந்த டிரம்ப் குழந்தையாக இருந்தபோது அவரது உண்மையான பெற்றோர் 1954 ஆம் ஆண்டு ஒரு வீதி விபத்தில் இறந்துள்ளனர். பின்னர் டிரம்பை புதிய பெற்றோர்கள் தத்தெடுத்ததாகவும் அதற்கு ஆதாரமாக சிறிய வயது புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்ப…
-
- 2 replies
- 522 views
-