செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7088 topics in this forum
-
சவுதி அரேபியாவின் மிகப்பெரிய கோடீசுவரர் இளவரசர் துர்கி பின் அப்துல்லா. இவர் தங்க தகடுகளால ஆன காரில் வலம் வருகிறார். இவர் லண்டனில் தனது ஆடம்பரகார்களான பென்ட்லி, மெர்சிடஸ், லாம்கினி ரோல்ஸ் ராய்ஸ் கார்களில் தங்க தகடுகள் பொருத்தி வலம் வருகிறார். அவரது ஆடம்பர வாழ்க்கையை அவரது சமூக வலைதள பதிவுகளில் இடம் பெறும் புகைப்படங்கள், வீடியோக்கள் தெரிவித்து வருகின்றன. லண்டனில் உள்ள அவரது வீட்டில் மட்டும் ரூ.10 கோடி மதிப்புள்ள தங்க கார்கள் இருப்பதாக இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. http://tamil.webdunia.com/article/world-news-in-tamil/gold-car-saudi-arabia-rich-prince-turki-bin-abdullah-…
-
- 0 replies
- 270 views
-
-
இராவணனை நினைவு திரும்பச் செய்ய சென்ற மந்திரவாதிப்பெண் எல்ல வெல்லவாய கரந்தகொல்ல பிரதேசத்திலுள்ள இராவண எல்ல கற்குகை ஒன்றினுள் சுயநினைவிழந்து காணப்படுவதாகக் கூறப்படும் இராவணனை நினைவு திரும்பச் செய்வதாகத் தெரிவித்து மொறட்டுவ பிரதேசத்திலுள்ள மந்திரவாதி பெண்ணொருவர் உட்பட 18 பேர் நேற்றுமுன்தினம் அக்குகையினுள் சென்றிருந்த போது தாக்குதலுக்கு உள்ளாகினர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சம்பவ தினத்தன்று இக்குகையினுள் வழமைக்கு மாறாக ஏதாவது ஒரு சம்பவம் இடம்பெறுவதாக அப்பிரதேச மக்கள் மத்தியில் தகவல் பரவியதையடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் அங்கு குழுமியிருந்ததனால் பாதுகாப்புக்…
-
- 4 replies
- 381 views
-
-
அமெரிக்காவில் இருந்து ஜப்பான் சென்ற விமானத்தில் பயணம் செய்த பயணி, இருக்கையில் அமராமல் யோகாசனம் மற்றும் தியானம் செய்து அமர்க்களம் செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஹவாய் மாநிலம் ஹானலூலு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஜப்பானின் நாரிடா விமான நிலையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு பயணிகள் விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் பயணம் செய்த பயணி ஒருவர், சாப்பாடு வழங்கப்படும் நேரத்தில் திடீரென இருக்கையைவிட்டு எழுந்து விமானத்தின் பின்பகுதிக்குச் சென்று யோகாசனம் மற்றும் தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். இதனை அவரது மனைவியும், விமான ஊழியர்களும் தடுத்து அவரது இருக்கையில் அமரும்படி கூறியதால் கடும் ஆத்திரம் அடைந்தார். பின்னர் அதே விமானத்தில் பயணம் செ…
-
- 1 reply
- 283 views
-
-
துபாயில் உள்ள, இத்தாலியை சேர்ந்த உணவகம் ஒன்று ஏன் சரியான லாபத்தை கண்டடைய முடியவில்லை என்பதை முகநூலில் ஒருவர் நகைச்சுவையாக பதிவு செய்துள்ளார். http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html http://tamil.webdunia.com/article/funny-humour-video/why-italian-restaurants-failed-in-dubai-116033100053_1.html
-
- 0 replies
- 247 views
-
-
கொலம்பியாவில் ஆணாகப் பிறந்து பெண்ணாக மாறிய ஒருவர், உடலின் பின்னழகை அதிகரித்துக் கொள்வதற்காக செய்துகொண்ட சட்டவிரோத சத்திரசிகிச்சையில் கோளாறு ஏற்பட்டதால் உயிரிழந்துள்ளார். 25 வயதான யெசிக்கா ஹில்டன் எனும் இவர், தனது உடலின் பிருஷ்டப் பகுதியை பிளாஸ்திக் சத்திரசிகிச்சை மூலம் பெரிதாக்கிக்கொள்ள விரும்பினார். இதற்காக அவரின் பிருஷ்டப் பகுதியில், பொலிமர் வகைப் பொருட்களை வைத்து சத்திரசிகிச்சை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டது. இந்த சட்டவிரோத சத்திரசிகிச்சை வாகனத் தரிப்பிடமொன்றில் வைத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆனால், மேற்படி பொலிமர் பொருட்களிலுள்ள இரசாயனங்கள் கசிந்து அவரின் உடலில் பரவ ஆரம்பித்தன. இப் பாதிப்பினால் அவர் உயிரிழந்துள்ளார். …
-
- 7 replies
- 660 views
-
-
கோலிக்கு புகைப்படத்தை பரிசளித்த பூணம் பாண்டே மொடல் அழகியும், நடிகையுமான பூணம் பாண்டே இந்திய வீரர்களுக்கு பரிசளிப்பதாக கூறி அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். உலகக்கிண்ண டி20 தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா ஒரு ஓட்டத்தால் வெற்றி பெற்றது. அப்போது அணியை உற்சாகப்படுத்தும் நோக்கில், தனது அரை நிர்வாண புகைப்படத்தை டுவிட்டரில் பதிவேற்றியிருந்தார் பூணம் பாண்டே. இதேபோன்று நேற்று மொகாலியில் நடந்த அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் கோலி அதிரடி காட்ட இந்தியா அசத்தல் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது. இந்நிலையில் டுவிட்டரில் பூணம் பாண்டே, “இந்திய அணி எப்போதும் சிறப்பாக செயல்படுகிறது. என்னுடைய ஸ்டைலில் உங்களுக்கு…
-
- 5 replies
- 702 views
- 1 follower
-
-
இப்படம்.. தற்கொலை குண்டுதாரின்னு டம்மி பாமை வைச்சு விளையாட்டுக்காடியவருடன் பயணி ஒருவர் (பெயர் Ben Innes.. ஸ்காட்லாந்தில் வசிப்பவர்... இங்கிலாந்தைச் சேர்ந்தவர்) எடுத்துக் கொண்ட செல்பி. செல்பி எடுத்தவர் விமானப் பணியாளராம். பார்க்க எல்லாருமே சேர்ந்து போட்ட நாடகம் போல் தெரிகிறது. ஒருவேளை எகிப்த் விமான நிலையங்களில் உள்ள பாதுகாப்பு ஓட்டைகளை இனங்காட்ட கூட இது நடத்தப்பட்டிருக்கலாம். என்ன நாடகமோ..?! A man who posed for a picture with an alleged hijacker wearing a suspected suicide belt has said he was trying to get a better look at the device. The image of Ben Innes, grinning next to his captor on the Egyptair flight, has gone viral on social media. Mr Inn…
-
- 1 reply
- 364 views
-
-
‘குண்டு யானை’ என்று மனைவி திட்டியதால் விவாகரத்து - டில்லி மேல்நீதிமன்றம் தீர்ப்பு கணவனை, ‘குண்டு யானை’ என்று சொல்லி மனைவி இழிவுபடுத்தியுள்ளார். எனவே, அவர்களுக்கு விவாகரத்து அளித்தது செல்லும் என டில்லி மேல்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 2012ஆம் ஆண்டு குடும்பநல நீதிமன்றம் விவாகரத்து அளித்த தீர்ப்பை எதிர்த்து மனைவி தரப்பில் டில்லி மேல்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது. மனைவியால் அடக்குமுறைக்கு ஆளானதாகவும், தன்னால் தாம்பத்ய உறவில் திருப்தியளிக்க முடியவில்லை என மனைவி குற்றம்சாட்டுவதாகவும் கணவன் தரப்பில் புகார் தெரிவிக்கப்பட்டிருந்தது. …
-
- 5 replies
- 563 views
-
-
தனது பிள்ளை விளையாடுவதற்காக, கடற்கரையில் ஊர்ந்து சென்ற சிறிய ஆமையைப் பிடித்துக் கொடுத்த தந்தைக்கு, 100 மணித்தியாலங்கள் சமுதாய சீர்திருத்த பணியில் ஈடுபடுமாறு, பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் நேற்று தீர்ப்பளித்தார். அத்துடன், ஆமையைக் கடலில் விடுமாறும் பருத்தித்துறை பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார். கற்கோவளம் புனித நகரைச் சேர்ந்த மேற்படி நபர், கடற்கரையில் சென்ற ஆமையைப் பிடித்து தனது பிள்ளைக்கு விளையாடக் கொடுத்துள்ளார். இது தொடர்பில் தகவல் அறிந்த பருத்தித்துறை பொலிஸார், குறித்த குடும்பஸ்தரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட நபரை பருத்தித்துறை மாவட்ட நீதவான் பெ.சிவகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோது, குறித்த குடும்பஸ்தர…
-
- 0 replies
- 246 views
-
-
மதுரை மாவட்டம் பெருமாள்பட்டியில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டவர், இறுதிசடங்கின் போது உயிர் பிழைத்துள்ளார். பாண்டித்துரை என்பவர் நெஞ்சு வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இறுதிசடங்கு நடைபெற்ற போது, உறவினர்கள், பாண்டித்துரையின் மார்பில் பலமாக அடித்து அழுதுள்ளனர். அப்போது, பெரு மூச்சு விட்ட பாண்டித்துரை உயிருடன் எழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிச்சைக்கு அனுமதித்துள்ளனர். http://www.seithy.com/breifNews.php?newsID=154351&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 295 views
-
-
மாத்தறை மிரிஸ்ஸ கடலில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக படகில் சென்ற இளைஞர் குழுவொன்று வலையில் சிக்குண்டிருந்த திமிங்கிலமொன்றினை காப்பாற்றும் துணிகர செயலில் ஈடுபட்டு இறுதியில் ஆபத்துக்கு முகம் கொடுத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் சிலர் படகில் கடலுக்குள் சென்றிருந்த போது இவ்வாறு திமிங்கிலமொன்று வலையில் சிக்கியிருந்ததாகவும் அவ்விடத்துக்கு வருகை தந்த மற்றைய படகுகள் ஆபத்திலிருந்த திமிங்கிலத்தை கண்டும் காணாதவாறு சென்றதாகவும் தெரிவித்த இந்த இளைஞர்கள் தங்களோடு படகில் வந்திருந்த அனைவரும் திமிங்கிலத்தை காப்பாற்றுவதற்கு சம்மதம் தெரிவிக்கவே திமிங்கிலத்தை காப்பாற்றும் நோக்கில் அனைவரும…
-
- 0 replies
- 272 views
-
-
அந்தரங்க உறுப்பை கடித்த இருவர் கைது கொஸ்கொட துவேமோதர எனுமிடத்தில் உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாகவும், பொது இடத்தில் இவ்விருவரும் மதுபானம் அருந்திகொண்டிருந்துள்ளனர். அதனை, அந்த உப-பொலிஸ் பரிசோகர் கண்டித்துள்ளார். இதனையடுத்தே இவ்விருவரும் சேர்ந்து, உப-பொலிஸ் பரிசோதகரின் அந்தரங்க உறுப்பை கடித்து காயப்படுத்தியுள்ளனர். காயங்களுக்கு உள்ளான அவர், பலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். - See more at: http://www.tamilmirror.lk/168930/%E0%AE%85%E0%AE%A8-%E0%AE%A4%E0%AE%B0%E…
-
- 0 replies
- 302 views
-
-
நமக்கு தேவையான பொருட்களெல்லாம் ஆட்டோல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க, இல்ல கொரியர்ல டெலிவரி ஆகிப் பாத்திருப்பீங்க. வானம் வழியா டெலிவரி ஆகறதப் பாத்துருக்கீங்களா? இனிமேல் பார்ப்பீங்க. ஆம். அமெரிக்காவின் நெவாடாவில் ஆகாய வழியாக நீர், உணவு மற்றும் முதலுதவிப் பொருட்களை டெலிவரி செய்துள்ளது டுரோன் எனப்படும் பறக்கும் ரோபாட். டுரோன் என்பது வேறொன்றுமல்ல. நண்பன் திரைப்படத்தில் விஜய், ஒரு கருவியை பறக்கவிட்டு சத்யனின் அறையை கேமரா மூலம் பார்ப்பார் அல்லவா, அதுதான் டுரோன். முதலில் மீட்புப் பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த டுரோன்களை, பொருட்களை டெலிவரி செய்யப் பயன்படுத்த நினைத்தார்கள். அதன் வடிவமைப்பை சற்று மாற்றி, பொருட்களை கவனமாக தாங்கிச் செல்லும் வகைய…
-
- 0 replies
- 269 views
-
-
தரையை காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆந்திர மாநிலத்தின் அனந்தபூர் மாவட்டத்தில் உலக பிரசித்தி பெற்ற, லேபாக் ஷி கோவிலில் உள்ள, 70க்கும் மேற்பட்ட துாண்கள், தரையை தொடாமல், அந்தரத்தில் காற்றில் அசைவதைக் காணும் சுற்றுலா பயணிகள் ஆச்சரியம்அடைகின்றனர். தலபுராணம்: பகவான் ராமன், லட்சுமணன் மற்றும் சீதை ஆகியோர் வனவாசத்திற்காக வந்தபோது, இலங்கை அரசன் ராவணன், சீதையை சிறைபிடித்து கடத்தி சென்றான். அப்போது, இந்த பகுதியை கடக்கும்போது, பறவையினத்தைச் சேர்ந்த, ஜடாயு, ராவணனுடன் போரிட்டு காயமடைந்து கீழே விழுந்தது. சீதையை கடத்தி செல்லும் ராவணன் குறித்த தகவலை கூறிய ஜடாயு, ராமனுக்கு வழிகாட்டியது. பின்னர் இலங்கையில் சிறை வைக்…
-
- 0 replies
- 401 views
-
-
நூலகத்தில் பெற்ற புத்தகத்தை 49 வருடங்களின் பின் ஒப்படைத்த நபர் 2016-03-24 12:11:22 அமெரிக்காவைச் சேர்ந்த நபர் ஒருவர் நூலகமொன்றில் இரவல் வாங்கிய புத்தகமொன்றை 49 வருடங்களின் பின்னர் திருப்பிக் கொடுத்துள்ளார். ஜேம்ஸ் பிலிப்ஸ் எனும் இவர், ஒஹையோ மாநிலத்திலுள்ள டேய்ட்டன் பல்கலைக்கழக நூலகத்திலிருந்து 1967 ஆம் ஆண்டு இப் புத்தகத்தை இரவல் வாங்கியிருந்தார். அப்போது மேற்படி பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட மாணவராக அவர் இருந்தார். இப் புத்தகம் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டிய நாள் கடந்து, வருடங்களும் கடந்து கொண்டிருந்தபோதிலும் அதை ஜேம்ஸ் பிலிப்ஸ…
-
- 4 replies
- 424 views
-
-
நாய் நன்றியுள்ளது என்பார்கள் - ஆனால் அந்த நன்றி அதனை வசனமாகவே மட்டும் கூறும் மனிதர்களிடம் அறவே இல்லாமல் போனது வருத்தற்குரிய விஷயமாகியுள்ளது. பெங்களூருவில் கிருஷ்ணா நகரில் வசிக்கும் பொன்னம்மா என்ற பெண் எட்டு நாய்க்குட்டிகளை கொடூரமாக கொன்றுள்ளார். அம்மு என்ற நாய் பொன்னம்மா வீட்டின் கதவருகே 8 குட்டிகளை ஈன்றது. இதனால் ஆத்திரமடைந்த பொன்னம்மா அந்த நாய்க்கு தக்க பாடம் கற்பிப்பதாக எண்ணி அம்மு ஈன்ற 8 நாய்க்குட்டிகளையும் மனசாட்சியே இல்லாமல் பாறாங்கற்கள் மீது தூக்கி போட்டு கொன்றுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், பொன்னம்மா மீது போலீசில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்கக் கூடும். இ…
-
- 15 replies
- 888 views
-
-
இறந்தோர் பட்டியலில் மஹிந்தவை இணைத்து பரீட்சை வினாத் தாள் தாயரித்த வடமேல் மாகாண கல்வி திணைக்களம் இறந்தவர்களின் பட்டியலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை விடைகளில் உள்ளடக்கி பரீட்சை வினாத் தாள் தயாரிக்கப்பட்ட சம்பவமொன்று வடமேல் மாகாண கல்வித் திணைக்களத்தில் பதிவாகியுள்ளது. வட மேல் மாகாண கல்வித் திணைக்களத்தினால் நடத்தப்பட்டு வரும் முதலாம் தவணைப் பரீட்சையில் தரம் 10க்கான பரீட்சை வினாத்தாளில் இவ்வாறான ஓர் கேள்வி உள்ளடக்கப்பட்டுள்ளது. தம்மால் மேற்கொள்ளப்பட்ட அனைத்து நல்ல காரியங்களையும் தனது புண்ணிய புத்தகத்தில் குறித்து தான் மரணிக்கும் தருவாயில் அதனை வாசித்து, தன்னால் நிர்மானிக்கப்பட்ட விஹாரை ஒன்றை பார்த்துக் கொண்டே இறுதி மூச்சைத் த…
-
- 0 replies
- 219 views
-
-
சிறையிலிருந்து விடுதலையான 80 வயதான பெண்ணுடன் காதல் கொண்டு மோசடிக்குள்ளாக வேண்டாமென கனேடிய பொலிஸார் ஆண்களுக்கு எச்சரிக்கை 2016-03-22 16:23:30 கனடாவில் எண்பது வயதான பெண்ணொருவர் சிறையிலிருந்து விடுதலையாகியுள்ள நிலையில், அவருடன் காதல் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ள முற்படும் ஆண்களுக்கு கனேடிய பொலிஸாரும் முன்னாள் காதலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இப் பெண் பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர் என்பதே இதற்குக் காரணம். மெலிஸா ஆன் ஷெப்பர்ட் எனும் இப் பெண், 1992 ஆம் ஆண்டு தனது இரண்டாவது கணவரான கோர்டன் ஸ்டுவர்ட்டுக்கு போதைமருந்து கொடுத்து அவர்மீது காரை ஏற்றி கொலை செய்தமை தொடர்பில் குற்றவாளியாக காணப்…
-
- 8 replies
- 648 views
- 1 follower
-
-
'மீன்களை பாதுகாப்போம்' : மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்கள் கடல் உயிரினங்களை பாதுகாக்க வேண்டும் என்ற தொனிப்பொருளில் மக்களுக்கு விழிப்புனர்வை ஏற்படுத்தும் நோக்கில் போர்த்துக்கல் நாட்டில் உள்ள தம்பதியினர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாண புகைப்படங்களை எடுத்து வெளியிட்டுள்ளனர். அதாவது மீன் இனங்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே எம்மா தோம்சன் மற்றும் அவரின் கணவர் கிரெக் வைஸ் ஆகியோர் இறந்த மீன்களை கொண்டு நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்து இவ்வாறு ஒரு முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். http://www.virakesari.lk/article/4480
-
- 0 replies
- 395 views
-
-
'விடா முயற்சி விஸ்வரூப வெற்றி' : ஆனந்த் அம்பானியின் புதிய தோற்றம் ஆனந்த் அம்பானி பெயர் பலருக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால் இவரது முகமும், உருவமும் பலரது மனதில் பதிந்து போன ஒன்று. ஆம், ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி - நீதா அம்பானியின் பருமனான உடல்வாகு கொண்ட மூத்த மகன் தான் இவர். ஐபிஎல் போட்டிகளில் இவர் உட்கார்ந்திருப்பதை வைத்து சமூக வலைத்தளங்களில் பலர் கேலி செய்து வந்தனர். ஆனால் இன்று பலரும் வியக்கும் வண்ணம் தனது உடல் எடையில் 70 கிலோவைக் குறைத்து அழகாக தோற்றமளிக்கின்றார். ஆனந்த் அம்பானியா இவர்? என்று ஆச்சரியப்படும் வகையில் தோற்றத்தில் மாற்றமடைந்துள்ளார். அவரது உடல் மெலிந்த புதிய புகைப்படம் தற்போது சமூக வலைதளங…
-
- 0 replies
- 343 views
-
-
ஆண்களின் உள்ளாடைகளை குறிவைக்கும் பெண் (வீடியோ இணைப்பு) நியூஸிலாந்தில் ஹமில்டன் நகரைச் சேர்ந்த சாராஹ் நாதன் என்ற பெண்ணுக்குச் சொந்தமான பூனை நள்ளிரவு வேளைகளில் அயல் வீடுகளுக்குச் சென்று அங்குள்ள ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் காலுறைகள் என்பவற்றை திருடும் விநோத பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று செய்திகளை வெ ளியிட்டுள்ளன. 6 வயதான பிறைட் என்றழைக்கப்படும் இந்தப் பெண் பூனையால் கடந்த இரு மாத காலப் பகுதியில் 11 ஜோடி ஆண்களின் உள்ளாடைகள் மற்றும் 50 க்கு மேற்பட்ட ஆண்களின் காலுறைகள் என்பன களவாடப்பட்டுள்ளதாக சாராஹ் தெரிவிக்கிறார். அந்தப் பூனை தன்னால் களவாடப்பட்டவற்றை சாராஹின் வீட்டின் பின்பத்திலிருந்த மறைவான ப…
-
- 1 reply
- 482 views
-
-
கடல் சிங்க குட்டி ஒன்று இறந்தே பிறந்த நிலையில் அந்த குட்டியின் தாய் சோகத்தில் கண்ணீர் விட்டு சத்தமிடும் உணர்வுபூர்வமான காணொளியை வெளிநாட்டு ஆங்கில ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த காணொளியை பார்க்கும் எவராக இருந்தாலும் உணர்ச்சிவசப்படுவார்கள். காரணம் பெற்ற குழந்தையை தூக்கி குப்பை தொட்டியில் எறிந்து விடும் இந்த காலக்கட்டத்தில் ஒரு கடல் சிங்கம் தன் குட்டியை இழந்து கண்ணீர் விடும் காட்சி அனைவர் மனதையும் நெகிழச் செய்கின்றது. குறித்த கடல் சிங்கம், தனது குட்டி இறந்த சோகத்தில் கண்ணீர் விடும் காட்சியையும் இந்த காணொளியில் காண முடிகிறது. http://www.tamilwin.com/show-RUmuyDRVSXms0F.html
-
- 0 replies
- 468 views
-
-
கன்றுக்குட்டியுடன் காதல்? கொண்டையா என்றழைக்கப்படும் துனேஷ் பிரியந்த என்பவர், பெண் கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாகக் கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரியொருவரின் வீட்டில் வளர்க்கப்படும் பெண் கன்றுக்குட்டிக்கு அருகிலேயே அவர், கடந்த சனிக்கிழமை இவ்வாறு நிர்வாணமாக படுத்திருந்துள்ளார் என்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கன்றுக்குட்டி, கயிற்றினால் கட்டியிருக்கின்றதா என்பதனை அறிவதற்காக அவ்வதிகாரி, அன்றிரவு 10 மணியளில் டோர்ச்சை அடித்துள்ளதார். இதன்போதே, கன்றுக்குட்டிக்கு அருகில், நிர்வாணமாக படுத்திருந்ததாக கூறப்படும் கொண்டையா, அவ்விடத்திலிருந்து தப்பியோடியுள்ளார். …
-
- 3 replies
- 719 views
-
-
டெல்லியில் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி ஒருவர் தன்னுடைய குழந்தையின் அழுகையை நிறுத்த முடியாமல் ஆத்திரத்தில் குழந்தையை சப்பாத்தி உருட்டும் கட்டையால் அடித்துக் கொன்றுள்ளார். டெல்லி சாஸ்திரி நகரின் குடிசை பகுதியை சேர்ந்தவர் ரிக்ஷா ஓட்டும் தொழிலாளி நரிஸ் ஷேக். இவருக்கு ராகுல் என்ற 9 வயது சிறுவனும், சவுரயா என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். நேற்று மாலை 11 மணியளவில் அவரது மனைவி வீட்டில் இல்லாத போது 2 வயது குழந்தை சவுரயா விடாமல் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகையை நிறுத்த நரிஸ் முயற்சி செய்தும் முடியவில்லை. இதனால ஆத்திரமடைந்த நரிஸ் முதலில் குழந்தையை கையால் அடித்துள்ளார். இதனால் வலி தாங்க முடியாத குழந்தை மேலும் …
-
- 0 replies
- 320 views
-
-
ஏன் என்னை ஏமாற்றி விட்டாய் அப்ரிடி? புலம்பும் நடிகை (வீடியோ) பாகிஸ்தான் நாட்டு தொலைக்காட்சி நடிகையான குவான்டீல் பலூச் என்பவர் அடிக்கடி அதிரடியாக ஏதாவது செய்து, தலைப்புச் செய்திகளில் தனது பெயர் தலைகாட்ட வேண்டும் என்பதில் அதிக விருப்பம் கொண்டவராக விளங்கி வருகிறார். முன்னர், ஆசிய கிண்ணப் போட்டியில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோற்றதால் பாகிஸ்தான் அணியின் தலைவர் சாஹித் அப்ரிடியை பைத்தியம் என்று திட்டி இருந்தார். இந்த மாதிரி பைத்தியத்தை தலைவராக வைத்துக் கொண்டு நாம் எதையுமே வெல்ல முடியாது என கூறி இருந்த குவான்டீல் பலூச், அதற்கும் முன்னதாக இந்திய நாட்டின் பிரதமர் நரேந்திர மோடியை அவமரியாதையாகப் பேசிய வீடியோ பேஸ்புக்கில் முன்னர் வைரல் ஆகி பெரும் பரபரப்பை ஏற்படுத…
-
- 7 replies
- 717 views
- 1 follower
-