செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7111 topics in this forum
-
வீட்டின் கூரையில் ஏறிய கார் அமெரிக்காவிலுள்ள ஒரு தம்பதியினர் தமது வீட்டின் கூரையில் காரொன்று நிற்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது. தான் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தபோது கூரையில் சத்தமொன்று கேட்டதாகவும் வெளியே சென்று பார்த்தபோது வீட்டின் கூரையில் காரொன்று இருப்பதைக் கண்டு தான் வியப்புற்றதாகவும் 83 வயதான பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். மேற்படி காரின் சாரதி சுகவீனமுற்றதால் கட்டுப்பாட்டை இழந்தபோது அக்கார், வீட்டின் கூரை மீது ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=13020#sthash.PpAGt59Z.dpuf
-
- 1 reply
- 450 views
-
-
சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி வழக்கு ! அந்த காலத்தில் இருந்து இந்த காலம் வரை சர்தார்ஜி ஜோக்குகள் தமிழகம் உள்பட இந்தியாவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் ஃபேமசாக வலம் வந்தன. இந்திய பத்திரிகைகளில் குறிப்பாக ஆங்கில பத்திரிகைகள் மற்றும் வட இந்திய ஏடுகளில் இடம்பெறும் சர்தார்ஜி ஜோக்குகள் ரொம்பவே பாப்புலர்! இந்நிலையில் சர்தார்ஜிக்களை முட்டாள்களாகவும், அறிவற்றவர்களாகவும் சித்தரிக்கும் இந்த சர்தார்ஜி ஜோக்குகளுக்கு தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் இன்று பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. ஹர்வீந்தர் சவுத்ரி என்பவரால் தொடரப்பட்ட இந்த பொதுநல வழக்கினை, உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. கடந்த 2007-ம் ஆண்டு மும்பையில் சர்தார்ஜிகளை கிண்டல் அடித்து 'ச…
-
- 1 reply
- 364 views
-
-
ஆடியே கலவரத்தை அடக்கிய பெண் பொலிஸ் அதிகாரி (வீடியோ) அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டனில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையே தகராறு ஏற்பட்டிருப்பதாக வந்த தகவலின் பேரில், பொலிசார் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அந்தக் குழுக்களுக்கிடையேயான சண்டையை நிறுத்தி அங்கே குழுமியிருந்த கூட்டத்தைக் கலைக்கும் முயற்சியில் ஒரு பெண் பொலிஸ் அதிகாரி ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த இளைஞர் கூட்டத்தில் இருந்த ஒரு 17 வயது பெண், பொலிசாரை வெறுப்பேற்றும் விதமாக ‘வாட்ச் மீ’ (சைலண்ட்டோ) என்கிற பிரபலப் பாடலைப் போட்டு திடீரென ஆடத் தொடங்கினார். இதற்கு பதிலளிக்கும் விதமாக பொலிஸ் அதிகாரி அந்தப் பெண்ணின் மீது மிளகு தெளிப்பானையோ, தடியடியையோ பயன்படுத்த முயற்சிக்காமல், அவருக்கு இணையாக இன்னும் சிறப்பாக …
-
- 1 reply
- 463 views
-
-
48,000 செல்லிடத் தொலைபேசிகளை பழுதுபார்த்த சவூதி அரேபியாவின் முதலாவது பெண் தொலைபேசி திருத்துனர் 2015-10-29 09:05:32 சவூதி அரேபியாவைச் சேர்ந்த பெண்ணொருவர், செல்லிடத் தொலைபேசி பழுது பார்க்கும் தொழிலை ஆரம்பித்து, 48,000 இற்கும் அதிகமான தொலைபேசிகளை பழுதுபார்த்துள்ளார். மரியம் அல் சுபேய் எனும் இப்பெண், சவூதி அரேபியாவில் செல்லிடத் தொலைபேசி திருத்துனராக பணியாற்றும் முதலாவது பெண் எனத் தெரிவிக்கப்படுகிறது. சவூதி அரேபிய தலைநகர் றியாத்தில், மரியம் அல் சுபேயின் தொலைபேசி பழுதுபார்க்கும் நிலையம் அமைந்துள்ளது. இவர் பெண்களுக்கு மாத்திரமே இச்சேவையை வழங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. தினமும் 90 முதல் 120 வரையி…
-
- 0 replies
- 351 views
-
-
ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததால் புது மனைவியை விவாகரத்துச் செய்த கணவன் தமது வீட்டின் ஜன்னல் திரைச்சீலை கழன்று விழுந்ததை அபசகுனமாகக் கருதி தனது புது மனைவியை திருமணமாகி இரண்டே நாட்களில் கணவர் ஒருவர் விவாகரத்துச் செய்த சம்பவம் சவூதி அரேபியாவில் இடம்பெற்றுள்ளது. திருமணமாகி புதுமணத் தம்பதிகளாக அவர்கள் இருவரும் தமது வீட்டில் பிரவேசித்த வேளை, அந்த வீட்டின் ஜன்னல் திரைச்சீலை தானாக கழன்று விழுந்துள்ளது. அத்துடன் அவர்களுக்கு உணவு பரிமாற வந்த ஊழியரும் அவர்களுக்கு உணவைப் பரிமாறிய வேளை கால் தடுக்கி விழுந்துள்ளார். மேலும் அந்தக் கணவர், தனது கையிலிருந்த வாசனைத் திரவிய போத்தல் குறித்து தனது மனைவி விமர்சித்த வேளை அந்தப் போத்தலை அவர் கைதவறி கீழே நழுவவிட நேர்ந்துள்ளது. இதனைய…
-
- 3 replies
- 429 views
-
-
நடிகை அனுஷ்காவை திருமணம் செய்ய மறுத்த கோஹ்லி மும்பை: நடிகை அனுஷ்கா சர்மாவை இந்த ஆண்டே திருமணம் செய்து கொள்ள கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி மறுத்துள்ளார். கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லியும், பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. தங்களின் காதலை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைத்திருந்த அவர்கள் அண்மையில் தான் அதை வெளிப்படையாக தெரிவித்தனர். அனுஷ்காவும், கோஹ்லியும் அவர்களின் காதலை ரகசியமாக வைத்திருந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் காதலிக்கத் துவங்கியதுமே அந்த விஷயம் பாலிவுட் முழுவதும் பரவிவிட்டது. பின்னர் மீடியாவுக்கும் அந்த செய்தி கசிந்துவிட்டது. அனுஷ்காவுக்கு இந்த ஆண்டே கோஹ்லியை திருமணம் செய்து செட்டிலாக ஆசை. ஆனால் கோஹ்லியோ திருமணத்த…
-
- 2 replies
- 401 views
-
-
ஊழியர்களுடன் தகராறு செய்ததால் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பாடகி 2015-10-27 16:30:14 பிரிட்டனின் பிரபல பாடகியும் முன்னாள் மொடலுமான சமந்தா பொக்ஸ், தகராறு செய்ததால் விமானமொன்றிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். 49 வயதான சமந்தா பொக்ஸ், கடந்த வாரம் லண்டனிலிருந்து லித்துவேனியாவின் வில்னியுஸ் நகருக்கு செல்லும் விமானமொன்றில் ஏறியிருந்தார். ஆனால், விமான ஊழியர்களுடன் அவர் தகராறு செய்ததால் விமானத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டார். இசை நிகழ்ச்சியொன்றை நடத்துவதற்காகவே லித்துவேனியாவுக்கு சமந்தா பொக்ஸ் புறப்பட்டார். இதற்காக, அவர் விஸ் எயார் விமானமொன்றில் ஏறியிருந்தபோதே தகராறு செய்ததாகத் தெரிவிக்க…
-
- 0 replies
- 243 views
-
-
விமான நிலைய தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பு விமான நிலையமொன்றை சென்றடைந்த விமானப் பயணிகள் தமது பொதிகளைப் பெற்றுக்கொள்ள சென்றபோது, அங்குள்ள தொலைக்காட்சியில் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சம்பவம் போர்த்துகலில் இடம்பெற்றுள்ளது. போர்த்துகலின் தலைநகர் லிஸ்பனில் உள்ள விமான நிலையமொன்றில் கடந்த திங்கட்கிழமை இச்சம்பவம் இடம்பெற்றது. அதிகாலை 3.00 மணியளவில் பயணிகள் பொதிகளை எடுக்கச் சென்றபோது, ஆபாசப்படமொன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்தது. சுமார் 7 நிமிடங்கள் ஆபாசப்படம் ஒளிபரப்பாகியதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக லிஸ்பன் விமான நிலைய பேச்சாளர் ஒருவர் கூறுகையில், “அவ்வேளையில் மேற்படி தொலைக்காட்சி போர்த்துகல் அலைவரிசையொன்…
-
- 4 replies
- 1.2k views
- 1 follower
-
-
பறக்கும் விமானத்தில் 'குவா குவா'! சீனாவில் இருந்து லாஸ்ஏஞ்சல்ஸ் நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில், சீன பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்துள்ளார். விமானம் பறந்து கொண்டிருக்கும்போது, விமானத்தில் நிறை மாத கர்ப்பிணியாக இருந்த ஒரு சீன பெண்ணுக்கு வயிறு வலிக்க ஆரம்பித்தது. இதையடுத்து அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் ஒருவர், அந்த பெண்ணுக்கு பிரவசம் பார்த்தார். குழந்தை சுகப்பிரவசமாக பிறந்தது. தொடர்ந்து அலாஸ்காவில் விமானம் தரையிறக்கப்பட்டது. அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் தாயும் சேயும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.vikatan.com/news/article.php?aid=53736
-
- 3 replies
- 1k views
-
-
அரேபியர்களும் யூதர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி கட்டணம் மாத்திரம் அறவிடும் இஸ்ரேலிய உணவகம் இஸ்ரேலிலுள்ள உணவகமொன்று யூதர்களும் அரேபியர்களும் இணைந்து உணவு உட்கொண்டால் பாதி விலைக்கு உணவு வழங்குவதாக அறிவித்துள்ளது. இஸ்ரேலியர்களுக்கும் அரேபியர்களுக்கும் இடையிலான பதற்றத்தை தணிப்பதற்காக இந்தத் தீர்மானத்தை தான் மேற்கொண்டதாக இஸ்ரேலிய உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் தெரிவித்துள்ளார். உணவகத்தின் உரிமையாளர் கோபி ஸப்ரிர் .................................................................................. “அரேபியர்களைக் கண்டு பயப்படுகிறீர்களா? யூதர்களைக் கண்டு அஞ்சுகிறீர்களா? எம்மைப…
-
- 6 replies
- 471 views
-
-
நிர்வாணமாக நின்ற பயணி : விமானம் அவசரமாக தரையிறக்கம் போர்த்துக்கல் நாட்டு விமானத்தில் நடுவானில் பயணி ஒருவர் மது போதையில் ஆடைகளை களைந்து விட்டு, விமானப் பணிப் பெண்ணிற்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சன் எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம் ஒன்று போர்த்துக்கல் நாட்டின் டப்ளின் விமான நிலையத்தில் இருந்து துருக்கி நோக்கி பயணித்தபோதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. விமானம் நடுவானில் பறக்கத் தொடங்கியதும், அதில் பயணித்த நபர் ஒருவர் மது போதையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில், தனது ஆடைகளைக் களைந்து, விமானப் பணிப்பெண் ஒருவரிடம் தகாத முறையில் நடக்கத் தொடங்கியுள்ளார். இதனையடுத்து, விமானம் அவசரமாக பெல்கிரேடில் தரையிறக்கப்பட்டு குறித்த பயணி விமான நிலைய பாதுகாப்பு அத…
-
- 1 reply
- 532 views
-
-
ஒரே செடியில் பூத்த 1,500 பூக்கள் 1,500 பூக்களைக் கொண்ட பூச்செடியொன்று கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. செவ்வந்தி (கிரிஷாந்திமம்) இனத்தைச் சேர்ந்த இந்த பூச்செடி, சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ளது. நான்கு வருட கால முயற்சியினால் உருவாக்கப்பட்ட இந்த மலர்ச்செடி 3.8 மீற்றர் விட்டத்தைக் கொண்டுள்ளது. இதில் 641 வகையான 1500 மலர்கள் பூத்துள்ளன. உலகில் ஒரே தடவையில் மிக அதிக மலர்களைக் கொண்டிருந்த பூச்செடியாக கடந்த கின்னஸ் சாதனை நூல் வெளியீட்டாளர்களால் இச்செடி அங்கீகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இதற்கான சான்றிதழ் கையளிக்கப்பட்டது. - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12857#sthash.KweES7ap.dpuf
-
- 0 replies
- 323 views
-
-
ஒபாமாவே அதிர்ச்சி : கடிகாரம் கண்டுபிடித்த முஸ்லிம் மாணவனை வெடிகுண்டு செய்ததாக கைது செய்த போலீஸ்! அறிவியலில் ஆர்வம் உள்ள எந்த மாணவனும் செய்யக்கூடிய ஒரு விஷயத்தை தான் அமெரிக்காவின் 14 வயது மாணவரான அகமதுவும் செய்தார். ஆனால் அகமது உருவாக்கிய மின்னணு கடிகாரம் அவர் கைது செய்யப்பட்டு கைவிலங்கு மாட்டப்படும் சூழலை உருவாக்கியது. இப்போது அகமதுவுக்காக இணையம் குரல் கொடுத்து வருவதோடு, அமெரிக்க அதிபர் ஒபாமா, பேஸ்புக் நிறுவனர் ஜக்கர்பர்க் ஆகியோரின் ஆதரவும் கிடைத்திருக்கிறது. மாணவர் அகமது நிச்சயம் கடிகாரத்தை உருவாக்கியதற்காக கைது செய்யப்படுவோம் என எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால் அது தான் நடந்தது. அகமது முகமது அவரது முழுப்பெயர் .அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாண புறநகர் பகுதியான இர்விங்க…
-
- 8 replies
- 1.4k views
-
-
நீச்சலுடைகளுடன் வருபவர்களுக்கு இலவசமாக எரிபொருள் யுக்ரைனிலுள்ள எரிபொருள் நிலையமொன்றுக்கு நீச்சலுடைகளுடன் வருபவர்களுக்கு இலவசமாக எரிபொருள் வழங்கப்படும் என எரிபொருள் நிலைய நிர்வாகம் அண்மையில் அறிவித்திருந்தது. அதையடுத்து பெரும் எண்ணிக்கையானோர் மேற்படி நீச்சலுடைகளுடன் எரிபொருள் நிலையத்துக்குச் சென்றனர். யுக்ரைனின் தலைநகர் கீவிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமே கோடைக்கால வேடிக்கையாக இந்த அறிவிப்பை விடுத்திருந்தது. ஆனால், பெரும்பாலானோர் வேடிக்கையைவிட, பணத்தை சேமிப்பதற்காகவே இதில் பங்குபற்றினர் என தாம் கருதுவதாக வாடிக்கையாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர். - See more at: http://www.metronews.lk/article.php?category=lifestyle&news=12833#sthash.ZhkUq4RQ.dpuf
-
- 3 replies
- 394 views
-
-
எங்கள் நாட்டை மீள எடுத்துக்கொள்ளுங்கள்! இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சும் அமெரிக்கர் அரசியல்வாதிகளின் பேச்சை சகிக்கமுடியாத ஒரு அமெரிக்கர் ’தயவு செய்து எங்கள் நாட்டை மீண்டும் எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று இங்கிலாந்து ராணியிடம் கெஞ்சி கடிதம் எழுதியுள்ளார். அடுத்த ஆண்டு அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட நடந்துவரும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக அக்கட்சியை சேர்ந்த 11 வேட்பாளர்கள், சமீபத்தில் ஒரு தொலைக்காட்சியில் விவாதத்தில் ஈடுப்பட்டனர். இவர்களின் விவாதத்தை பார்த்து கடும் வெறுப்படைந்த ஒரு அமெரிக்கர், இங்கிலாந்து ராணிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் அதில் ”பிரிட்டனின் அரசாட்சிக்கு கீழ் அமெரிக்காவை மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள் என்ற…
-
- 4 replies
- 398 views
-
-
20 ஆண்டுகளாக பஞ்சுகளை மட்டுமே உண்டு வாழும் வினோத பெண் (வீடியோ) சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சுகளை சுவைத்து சாப்பிடும் வினோத பழக்கத்துக்கு பெண் ஒருவர் அடிமையாக உள்ளார். இங்கிலாந்தின் வால்சென்ட் பகுதியில் குடியிருந்து வரும் 23 வயதான எம்மா தாம்சன் என்ற இளம்பெள் நாள் ஒன்றுக்கு 20 பஞ்சுகளை சுவைத்து சாப்பிடுகிறார். தனது 3-வது வயதில் குளியலறை பஞ்சை முதன் முறையாக சுவைத்து பார்த்த எம்மா, அதைத் தொடர்ந்து சமையலறையில் பயன்படுத்தும் பஞ்சை சாப்பிடத் துவங்கியுள்ளார். பீகா (Pica) எனப்படும் ஒருவித நோயால் பாதிக்கப்படுபவர்கள் இதுபோன்று சத்துக்கள் எதுவும் இல்லாத பொருட்களை உணவாக உட்கொள்வதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாத்திரம் துலக்கும் திரவத்தில் ஏற்கெனவே ஊறப்போட்டு வைத்திருந்த…
-
- 4 replies
- 1.1k views
-
-
ஓநாய் போல ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த இங்கிலாந்து ஆர்வலர்கள்! (வீடியோ) லண்டன்: இங்கிலாந்தில் ஓநாய் ஆர்வலர்கள் ஓநாய் போலவே ஊளையிட்டு கின்னஸ் சாதனை படைத்த சுவாரஸ்ய நிகழ்வு நடந்துள்ளது. இங்கிலாந்தின் லெய்டன் புசார்ட் நகரின் பூங்காவில் கடந்த சனிக்கிழமை, ஓநாய் பற்றாளர்கள் 464 பேர் ஒன்றுதிரண்டு, ‘ஒரே வார இறுதியில் அதிகம் பேர் ஊளையிட்டதற்கான’ கின்னஸ் சாதனையை நிகழ்த்தி அசத்தியுள்ளனர். இதில் பலர் தமக்கு விருப்பமான ஓநாய்களைப் போல அலங்காரத்துடன் வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது, வித்தியாசமான உடை அலங்காரங்களுடன் மக்களால் கொண்டாடப்படும் ஹாலோவீன் பண்டிகையை வரவேற்கும் விதத்திலும் அமைந்திருந்தது. ஏற்கெனவே கடந்த 2013-ம் ஆண்டு, அமெரிக்காவின் மின்னசோட்டா மாநிலத்தின் செயின்…
-
- 1 reply
- 313 views
-
-
இலங்கையில் பளகோல்ல போலீஸ் பகுதியில் வசிக்கும் 2 பிள்ளிகளின் தாய் மனோஹரி ச்சாமரி ஹேவகே தனது தந்தையாரை பல வருடங்களாக நாய்கள் வளர்க்கும் நாய்கூட்டில் சங்கிலியால் பிணைத்து பராமரித்து / கஷ்டப்படுதிய கொடுமைக்காய் விசாரணை செய்யப்பட்டார். https://youtu.be/bqufmUUAF9g https://youtu.be/bqufmUUAF9g
-
- 0 replies
- 314 views
-
-
அணிந்திருந்த ஆடைகளை கலைந்து எலும்புக்கூடு ஆடைகளுடன் கற்பித்த ஆசிரியை நெதர்லாந்தில் ஆசிரியை ஒருவர் மாணவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நினைவிருக்கும்படி வினோதமான முறையில் உயிரியல் பாடம் எடுத்துள்ளார். நெதர்லாந்தின் க்ரோயன் ஹார்ட் ரிஜ்ன்வூட் என்ற பள்ளியில், டெபி என்பவர் கடந்த 7 ஆண்டுகளாக உயிரியல் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் தனது இளமையான யோசனையால் மாணவர்களின் மனதைத் தொட்டிருக்கின்றார். இவர் ஒரு நாள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மனித உடற்பாகங்கள் சம்பந்தப்பட்ட பாடம் நடத்திக்கொண்டிருக்கையில் இவருக்கு வித்தியாசமான ஒரு யோசனை தோன்றியுள்ளது. அதாவது தனது நகரில் எலும்புக்கூடைப்போல வடிவமைக்கப்பட்ட ஆடைகளை பெண்கள் அணிந்துபோவதை, டெபி என்ற குறித்த ஆசிரியை அவ்வப்போது கவனித…
-
- 2 replies
- 560 views
-
-
ரூ.21 லட்சம் பணத்துடன் சீனரின் சடலம் எரிப்பு: மகன்கள் கைவிட்டதால் கடைசி ஆசை சீனாவில், ஒரு மனிதரின் கடைசி ஆசைப்படி அவர் சேமித்து வைத் திருந்த சுமார் ரூ.21 லட்சம் அவரின் உடலுடன் சேர்த்து தகனம் செய்யப் பட்டது. அவரின் இரு மகன்கள் அவரைப் புறக்கணித்ததால், பணத்தையும் தன்னுடன் சேர்த்து எரிக்க வேண்டும் என அவர் தனது கடைசி ஆசையை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார். கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தைச் சேர்ந்த விவசாயி தாவோ. இவர் தனது சேமிப்பான ரூ.21 லட்சத்தை தனது மகன் களுக்கு கொடுக்க விரும்ப வில்லை. அவரின் இறுதிக்காலத் தில் இரு மகன்களும் அவரைக் கவனித்துக் கொள்ளாதது அவ ருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் தன் விவசாய நிலத்ததை இரு மகன்களுக்கும் பகிர்ந்து கொடுத்துவ…
-
- 3 replies
- 477 views
-
-
வை-பை அலர்ஜியால் பிரெஞ்சு அரசிடமிருந்து நஷ்ட ஈடு பெற்ற பெண் தனக்கு வைபை (WiFi) சூழலில் இருப்பது அலர்ஜியானது எனக்கூறிய பிரான்ஸை சேர்ந்த பெண்ணொருவருக்கு நஷ்ட ஈடு வழங்குமாறு அந்நாட்டு அரசாங்கத்துக்கு நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது. மார்ட்டினி ரிச்சர்ட் எனும் இப்பெண்ணுக்கு 800 யூரோ (சுமார் 124,000 ரூபா) நஷ்ட ஈடு வழங்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. வைபை சூழல் தனக்கு அலர்ஜியானது என மார்டடினி கூறுகிறார். இந்நிலையில், தனது நகரம் வைபை மயமாக்கப்பட்டுள்ளதால் வேலைக்குச் செல்லமுடியாமல் ராஜினாமா செய்ததாகவும் வைபை இல்லாத கிராம மொன்றுக்கு தான் இடம்பெயர வேண்டியிருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், மார்ட்டினி ரிச்சர்ட்ஸுக்கு 800 யூரோ நஷ்டஈட…
-
- 2 replies
- 435 views
- 1 follower
-
-
வீதியில் சென்ற வாகனங்களுக்கு சில யார்கள் உயரத்தில் விமானம் பறந்து சென்றதால் பரபரப்பு கொஸ்தாரிக்காவில் பயணிகள் விமானமொன்று வீதியொன்றில் சென்ற வாகனங்களுக்கு சில யார் கள் உயரத்தில் பறந்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினின் மட்றித் நகரிலிருந்து கொஸ்தா ரிக்காவிலுள்ள சான் ஜோஸ் நகருக்கு பயணித்த எயார்பஸ் 340 விமானமே இவ்வாறு பறந்துள்ளது. இந்த விமானம் சான் ஜோஸ் நகரிலுள்ள ஜுவான் சாந்த மரியா விமான நிலையத்தில் தரையிறங்கத் தயாரான நிலையில் கடும் காற்று காரணமாக அந்த விமானத்தின் இயக்கத்தில் மாற்றம் ஏற்பட்டமை காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. http://www.virakesari.lk/articles/2015/10/10/வீதியில்-சென்ற-…
-
- 0 replies
- 368 views
-
-
வலைத்தளங்களில் வைரலான ராஜீவ் காந்தி- சோனியா திருமண வீடியோ! புதுடெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோரின் திருமண வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. கருப்பு வெள்ளையில் பதிவு செய்யப்பட்ட இந்த அரிதான வீடியோ எதற்காக வெளியானது என்பது குறித்த காரணங்கள் தெரியவில்லை. முன்னாள் இந்திய பிரதமர் இந்திராகாந்தியின் மூத்த மகனான ராஜீவ் காந்தி, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகத்தில் படித்தபோது இத்தாலி நாட்டைச் சேர்ந்த சோனியாவை சந்தித்தார். இருவரின் நட்பும் காதலாக மலர்ந்தது. இது அப்போது இந்திய அரசியலில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. பின்னர் கடந்த 1968 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 ஆம் தேதி, இருவருக்கும் திருமணம் டெல்லியில் நம்பர் 1 சப்தர்ஜுங் சாலையில் உள…
-
- 0 replies
- 439 views
-
-
ஜெர்மனியில் நடந்த ‘குண்டு’ பூசணிக்காய் போட்டி.... பரிசைத் தட்டிச் சென்ற 812.5 கி பூசணி! லுட்விக்ஸ்பர்க், ஜெர்மனி: ஜெர்மனியில் நடந்த பிரமாண்ட பூசணிக்காய்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியில் ராபர்ட் ஜேசர் என்பவருடைய பூசணிக்காய் சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளது. இந்தப் பூசணிக்காயின் எடை 812.5 கிலோவாகும். இதுவரை நடந்த போட்டிகளிலேயே மிக அதிக எடை கொண்ட பூசணிக்காய் என்ற புதிய சாதனையையும் ஜேசரின் பூசணிக்காய் படைத்துள்ளது. ஆண்டுதோறும் ஜெர்மனியில் நடந்து வரும் பூசணிக்காய் போட்டியாகும் இது. லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழா... இந்தப் போட்டி, லுட்விக்ஸ்பர்க் பூசணித் திருவிழாவின் ஒரு பகுதியாகும். இந்தத் திருவிழாவானது ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் தொடங்கி நவம்பர் மாதம் வரை நடைபெற…
-
- 1 reply
- 467 views
-
-
கொடிய உயிர்க்கொல்லியான ‘எபோலா’ நோயினால் குடும்பத்தை இழந்து பிரித்தானியாவில் அடைக்கலம் புகுந்துள்ள வாலிபர் ஒருவரை உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று சிரா லியோன். 2013ம் ஆண்டு உலகையே உலக்கிய ‘எபோலா’ நோய்க்கு இந்த நாட்டில் வசிப்பவரே அதிக எண்ணிக்கையில் பலியாகியுள்ளனர். இதே நாட்டை சேர்ந்த ஜிம்மி தொரோன்கா(20) என்பவர் அந்நாட்டில் தடகள விளையாட்டு போட்டியில் முன்னணியில் உள்ள ஒரு வாலிபர் ஆவர். ஆனால், துரதிஷ்டவசமாக எபோலா நோய் தாக்கியதில் அவரது குடும்பத்தை சேர்ந்த 8 நபர்கள் பரிதாபமாக பலியாகினர். இந்நிலையில், கடந்த 2014ம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற கொமன்வெல்த் விளையாட்டு போட்…
-
- 0 replies
- 179 views
-