Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தென் கொரியாவில் அரசு ஊழியராக பணியாற்றிய ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனடிப்படையில், தற்கொலை செய்து கொண்ட உலகின் முதல் ரோபோ இது என தெரிவிக்கப்படுகின்றது. தென் கொரியாவின் குமி நகர சபையில் அரசு ஊழியராக குறித்த ரோபா பணியாற்றி வந்துள்ளது. ஆவணங்களை எடுத்துச் செல்லும் அலுவலக உதவியாளராகப் பணியாற்றிய ரோபோ, தான் பணிபுரிந்த கட்டிடத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையே உள்ள படிக்கட்டுகளில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சந்தேகிக்கப்படுவதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவ்வாறு தற்கொலை செய்த ரோபோவை நகர அதிகாரிகள் எட…

  2. திருமணத்திற்கு மறுத்த காதலன் : பிறப்புறுப்பை வெட்டிய காதலி. பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் பெண் மருத்துவர் ஒருவர் தனது காதலனின் அந்தரங்க உறுப்பை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அப்பெண்ணின் மீது கொலை முயற்சி ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர். காதலன் சிகிச்சைக்காக பாட்னா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவரின் காதலன் மதுரா தொகுதியில் உள்ள கவுன்சிலர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவருக்குமிடையில் , கடந்த 5 ஆண்டுகளாக தொடர்பு இருப்பதாகவும் ஆனால் அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்து வருவதாக குறித்த பெண் மருத்துவர் தெரிவித்துள்ளார். எனினும், பின்னர் பதி…

  3. 02 JUL, 2024 | 10:29 AM இந்தியர்கள் அதிகபட்சமாக உணவு மற்றும் கல்வியை விட திருமணத்திற்காக அதிக அளவில் செலவு செய்வதாக அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உணவு மற்றும் மளிகை பொருட்களுக்கு அடுத்தபடியாக, ஆண்டிற்கு சுமார் ரூ.10 லட்சம் கோடி செலவிடப்படுவது திருமணத்திற்கு தான் என்று நிறுவனம் ஒன்று நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சராசரியாக ஒரு இந்தியர், கல்வியை விட திருமணத்திற்காக இரண்டு மடங்கு செலவு செய்கிறார்கள் என்று அதிர்ச்சி தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப்ரிஸ் (Jefferies) என்பது பன்னாட்டு முதலீட்டு மற்றும் நிதி நிறுவனம். இந்த நிறுவனம் நியூயார்க்கைத் தலைமையிடம…

  4. பிரபல மொடல் அழகியான பியுமி ஹன்ஸ்மாலி இன்று (01) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். சந்தேகத்திற்கிடமான முறையில் பல கோடி ரூபாய் சொத்துக்களை சம்பாதித்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே பியுமி ஹன்ஸ்மாலி குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவுக்கு சென்றுள்ளார். ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர், தான் எந்த தவறும் செய்யவில்லை எனவே பயப்பட அவசியம் தனக்கு இல்லை என கூறினார். ''எனக்கு வாக்கு மூலம் ஒன்றை வழங்க வரசொல்லியிருக்கிறார்கள். கடந்த வாரம் வரச்சொல்லி இருக்கிறார்கள், ஆனால் எனக்கு சனிக்கிழமை…

  5. மாலைத்தீவு ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு கடந்த ஆண்டு மாலைத்தீவில் ஜனாதிபதியாகப் பதவியேற்றார். பதவியேற்றதிலிருந்து இந்தியப் படைகளை வெளியேற்றியது உட்படப் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் ஜனாதிபதி முய்சு, சீன ஆதரவாளராகப் பார்க்கப்படுகிறார். இந்நிலையில் ஜனாதிபதி முய்சுவிற்கு எதிராக ப்ளக் மெஜிக் (Black Magic) மூலம் பில்லிசூனியம் வைக்க முயன்றதாகத் தெரிவித்து அவரது கட்சியைச் சேர்ந்த 2 அமைச்சர்கள் அந்நாட்டுக் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சுற்றுச்சூழல் துறை அமைச்சராகப் பதவி வகிக்கும் ஷாம்னாஸ் சலீம் மற்றும் ஜனாதிபதி அலுவலகத்தில் அமைச்சராகப் பணியாற்றிவரும் அவரது கணவர் ஆதம் ரமீஸ் ஆகிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். இந்த இருவரும் அமைச்சர் பொற…

  6. Published By: DIGITAL DESK 3 28 JUN, 2024 | 11:13 AM யாழ்ப்பாணம் செல்வ சந்நிதி ஆலய சூழலில் விற்கப்பட்ட மிக்ஸரில் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டமை தொடர்பில் நடைபெற்ற வழக்கு விசாரணையில், மிக்ஸரை விற்பனை செய்த நபருக்கு 15ஆயிரம் ரூபாய் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது. சந்நிதி ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை இரவு, ஆனிப்பொங்கல் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன. இந்நிலையில் ஆலயத்திற்கு வருகை தந்த ஒருவர், ஆலய சூழலில் உள்ள இனிப்பு கடை ஒன்றில் மிக்ஸரை வாங்கிய போது, அதனுள் பொரித்த நிலையில் பல்லி ஒன்று காணப்பட்டுள்ளது. அது தொடர்பில் அப்பகுதி பொது சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, பல்லியுடன் காணப்பட்ட…

  7. 26 ஜூன் 2024, 07:41 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆண் பாம்பு என தவறுதலாக கருதப்பட்ட பெண் பாம்பு ஒன்று 14 குட்டிகளை ஈன்றுள்ளது. இந்த பெண் பாம்பு கருத்தரிப்பதற்காக ஆண் பாம்புடன் இணை சேரவில்லை. 13 வயதான, ரொனால்டோ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த போவா கன்ஸ்ட்ரிக்டர் வகை பாம்பு, பிரிட்டனின் சிட்டி ஆஃப் போர்ட்ஸ்மவுத் கல்லூரியில் அண்மையில் சில குட்டிகளை ஈன்றது. போவா கன்ஸ்ட்ரிக்டர், மலைப்பாம்பு வகையைச் சேர்ந்தது. இது மத்திய மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். இது குறித்து பேசிய அந்த கல்லூரியின் விலங்குகள் பராமரிப்பு நிபுணரான…

  8. பெண் ஒருவரால் பேய் வீட்டில் பிசாசுகள் ஆட்டம் பொசன் போயா தினத்தன்று நாட்டின் பல பிரதேசங்களிலும் தானசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன. அத்துடன் பேய் வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டிருந்தன. ஆங்காங்கே தோரணங்களும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவ்வாறு, நவகமுவ பிரதேசத்தில் பேய் வீடு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அங்கு பெண்ணொருவர், மற்றுமொரு நபருடன் சென்றிருந்துள்ளார். எனினும், அங்கிருந்த சவப்பெட்டியில் படுத்திருந்தவர், தன்னுடைய கணவர் என்று அப்பெண்ணுக்கு தெரியாது. எனினும், மற்றுமொரு நபருடன் வந்திருக்கும் பெண், தன்னுடைய மனைவி என்பதை அறிந்துகொண்ட சவப்பெட்டியில் படுத்திருந்த நபர், மனைவியுடன் வந்திருந்த நபரையும் அப்பெண்ணையும் (மனைவியையும்) தாக்கியுள்ளார். எனினும், பேய்தான் நண்பனை…

  9. 23 JUN, 2024 | 12:21 PM பிரபல வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் வீடியோ பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் இந்த வர்த்தகர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு நேற்று (22) அழைக்கப்பட்டு, அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. அதனையடுத்து, அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/186758

  10. பட மூலாதாரம்,BIERBATH கட்டுரை தகவல் எழுதியவர், நார்மன் மில்லர் பதவி, பிபிசி 22 ஜூன் 2024 ஐஸ்லாந்து, ஸ்பெயின் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் சமீபகாலமாக 'பீர் ஸ்பாக்கள்' திறக்கப்பட்டுள்ளன. 'பீர் தேசம்' என்று கருதப்படும் செக் குடியரசின் முந்தைய வழக்கத்திலிருந்து உத்வேகம் பெற்று உருவாக்கப்பட்டது தான் இந்த 'பீர் ஸ்பாக்கள்'. 1,000 லிட்டர் தண்ணீர் நிரம்பிய மிகப்பெரிய மரத்தினாலான குளியல் தொட்டியில் (oak tub) இறங்க நான் தயாரானபோது, வரலாற்றின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரான 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த டேனிஷ் வானியலாளர் டைகோ ப்ராஹேவின் கறை படிந்த கண்ணாடி ஓவியம் என்னை உற்று நோக்கி கொண்டிருந்தது. …

  11. 4 வயது சிறுவனை கொடூரமாக தாக்கி மனைவிக்கு வீடியோ அனுப்பிய தந்தை கைது. ஊவா- பரணகம பகுதியில் அமைந்துள்ள கம்பஹா தோட்டத்தில் தனது 4 வயது மகனைக் கொடூரமாகத் தாக்கிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரின் மனைவி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் வெளிநாடு சென்றிருந்த நிலையில், மனைவி தனக்கு தொலைபேசியில் அழைப்பை ஏற்படுத்தாத காரணத்தினால் தான், மகனை தாக்கும் காட்சியை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பி வைத்துள்ளார் என பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. இந்தக் காணொளியை சந்தேக நபரின் மனைவி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதையடுத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா தோட்டம், மேல் பிரிவு – உடுபுஸ்ஸல்ல…

    • 1 reply
    • 178 views
  12. முல்லைத்தீவு வான் பரப்பில் இரண்டு மர்ம வெளிச்ச உருவங்கள் தென்பட்டதாக மக்கள் தெரிவிக்கின்றனர். தற்பொழுது நிலவி வரும் சீரற்ற காலநிலையினையடுத்து கடந்த செவ்வாய்க்கிழமை (18) இரவு முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த மர்ம வெளிச்சங்கள் தோன்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. வானில் தொடர்ச்சியாக நீல நிறமாக ஒரு உருவம் ஔிர்ந்து கொண்டிருக்க அதனை சுற்றி வேறு நிற ஒளி உருவம் விட்டு விட்டு ஔிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனை அவதானிக்த மக்கள். இயற்கை மாற்றம் ஏற்படுமா என்ற நிலையில் அச்சமடைந்துள்ளனர். https://thinakkural.lk/article/304171

  13. நாடுமுழுவதும் பதிவு செய்யப்படாத சுமார் 5,000 ஆயுர்வேத வைத்தியர்கள் இருப்பதாக சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று (18) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். இதேவேளை நாட்டில் பதிவு செய்யப்பட்ட 19,000 பாரம்பரிய வைத்தியர்களும், 4,500 பதிவு செய்யப்பட்ட பட்டதாரி ஆயுர்வேத வைத்தியர்களும், 3,000 டிப்ளோமா ஆயுர்வேத வைத்தியர்களும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு வருடமும் ஆயுர்வேத திணைக்களம் மற்றும் ஆயுர்வேத வைத்திய சபைக்கு பதிவு செய்வதற்கு கிட்டத்தட்ட 1,000 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்படுவதாகவும் பாரம்பரிய வைத்திய முறையை முறைப்படுத்தும் வகையில், உள்ளுர் மருத்துவ அமைச்சு மற்றும் ஆயுர்வேத த…

  14. நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்த நால்வர் கைது! நேரலை ஆபாச வீடியோக்களை சீன நிறுவனமொன்றுக்கு விற்பனை செய்த குற்றச்சாட்டில் தம்பதியினர் உட்பட நால்வரை பிலியந்தலை, படகெத்தர பிரதேசத்தில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசியத் தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட 22, 23, 26 மற்றும் 27 வயதுடைய சந்தேகநபர்கள் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொலிஸாரின் விசாரணையில் ” குறித்த சீன நிறுவனத்திற்கு தரம் மற்றும் செயல்திறனைப் பொறுத்து ஒரு வீட…

  15. வேறொரு இளைஞனுடன் நடனமாடிய மனைவியைப் படுகொலை செய்த கணவன் கைது! களுத்துறை மாவட்டத்தின் கமகொட பிரதேசத்தில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது இளைஞர் ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் 20 வயதுடைய இளைஞன் படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலையைச் செய்த சந்தேகநபர் அப்பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து கொண்டதாகவும், எனினும் சில நாட்களுக்கு முன்னர் அவரை விட்டு பிரிந்து வாழ்ந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. களுத்துறையில் இசை நிகழ்ச்சியை பார்வையிடுவதற்கு வந்திருந்த யுவதி, தான் பணியாற்றிய ஆடைத்தொழிற்சாலையின் இளைஞர் ஒருவருடன் நடனமாடியுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். …

  16. June 14, 2024 01:10 pm கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 வீதி கந்தசுவாமி கோவிலுக்கு முன்பாக ஒரு மில்லியன் அமெரிக்க டொலருடன் மூன்று பேர் நேற்று (13) இரவு பொலிஸார் கைது செய்துள்ளனர். ஒரு மில்லியன் அமெரிக்க டொலர் நாணயத்தாள் மற்றும் அதனை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான ஆவணங்கள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. கிளிநொச்சி இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து நேற்று இரவு 8.00 மணியளவில் உந்துருளியில் பயணித்த இருவரை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து பொலிஸார் சோதனையிட்ட போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த அமெரிக்க நாணயத்தாளை இலங்கை ரூபாவாக மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுப்பட்டிருந்த போதே இவர்கள் கைத…

  17. காத்தான்குடியில் பெண் மீது துப்பாக்கிச்சூடு. காத்தான்குடியில் பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளதுடன் குறித்த துப்பாக்கி தாரி தப்பி சென்ற நிலையில் காத்தான்குடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் லேனில் நேற்று (14) முற்பகல் இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த துப்பாக்கி சூட்டில் வீட்டில் வசித்த இளம் பெண் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் வீட்டு…

  18. கின்னஸ் உலக சாதனை அமைப்பு குறிப்பிடத்தக்க சாதனைகளை அங்கீகரித்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் அந்த அமைப்பு, உலகின் குள்ளமான ஜோடியின் திருமணத்தை அங்கீகரித்திருப்பது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரேசிலை சேர்ந்த பவ்லோ கேப்ரியல் டி சில்வா- கட்யூசியா லி ஹோஷினோ ஜோடி உலகின் மிகவும் குள்ளமான ஜோடி என பெயர் பெற்றவர்கள். பவ்லோவின் உயரம் 90.28 சென்டி மீற்றர் (35.54 அங்குலம்) ஆகும். கட்யூசியாவின் உயரம் 91.13 சென்டி மீற்றர் (35.88 அங்குலம்) ஆகும். இருவருமே எலும்பு வளர்ச்சி குறைபாடு கொண்டவர்கள் . சமூக வலைதளம் மூலம் நட்பான இவர்கள் கடந்த 2006-ம் ஆண்டு சந்தித்து கொண்டனர். அதன்பிறகு 15 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு முறை சந்தித்து பே…

  19. Published By: DIGITAL DESK 3 12 JUN, 2024 | 10:27 AM உறங்கிக்கொண்டிருந்த காட்டு யானையை இளைஞர் ஒருவர் தொடும் காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுவருகிறது. இது தொடர்பில் அநுராதபுரம் வனவிலங்கு உதவிப் பணிப்பாளரினால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்த காணொளி அநுராதபுரம் ரணஜயபுர காட்டுப் பகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ரணஜயபுர காட்டுப்பகுதிக்குள் சென்ற மூன்று இளைஞர்களில் ஒருவர் உறங்கிக்கொண்டிருந்த யானையின் அருகில் மெதுவாகச் சென்று அதைத் தொட்டுவிட்டுவரும் காட்சி காணொளியில் பதிவாகியுள்ளது. காட்டு யானையை எப்படி நெருங்குவது என்பதை காண்பிக்க, ஒரு சாகச செயலாக இந்த காணொளியை இளைஞர்கள் பதிவு செய்து சமூக ஊடகங்களி…

  20. Published By: DIGITAL DESK 3 11 JUN, 2024 | 10:31 AM ஒஸ்திரியா விமானச் சேவைக்கு சொந்தமான ஏர்பஸ் ஏ320-200 என்ற விமானத்தின் முன்பகுதி மற்றும் ஜன்னல்கள் ஆலங்கட்டி மழையால் பலத்த சேதமடைந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை (09) இந்த விமானம் ஸ்பெயினின் பால்மா டி மெலியோர்காவிலிருந்து ஒஸ்திரியாவின் தலைநகர் வியன்னாவிற்கு 173 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் பயணித்துள்ளது. அப்போது, இடியுடன் கூடிய ஆலங்கட்டி மழையில் விமானம் சிக்கியுள்ளது. இதன்போது, விமானத்தின் முன்பகுதி ஆலங்கட்டி மழையால் நொறுங்கி பலத்த சேதம் அடைந்ததோடு, விமானி அறையின் மேற்பகுதி வளைந்ததோடு, ஜன்னல்களிலுள்ள கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளன. ஆன…

  21. Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 04:11 PM அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகருக்கு தனது குடும்பத்தாரை பார்க்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் சதையை உண்ணும் அரியவகை கிருமியின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டு அவரது கையை இழந்துள்ளதாக அவுஸ்திரரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதான கார்மெல் ரோட்ரிகோ என்ற வயோதிப பெண் இவ் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள மகளை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். இந்த வயோதிப பெண் அங்கு பல மாதங்கள் மகளுடன் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு இடது கையில் துப்பாக்கியால் சுடப்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கத்தியுள்ளார். அவர் …

  22. எம்மை பிரிக்க முடியாது. நாம் இருவரும் ஒரே வீட்டில் தான் ஒன்றாக வாழ்வோம்...’’ என கூறியத்துடன் பிள்ளைகள் மற்றும் கணவரிடம் செல்ல மறுத்த இரண்டு பெண்கள் குறித்த செய்தியை கண்டி பொலிஸார் தெரிவித்தனர் இருபத்தி ஒன்பது வயது மற்றும் முப்பத்தைந்து வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாய்மார்களே இவ்வாறு கதறி அழுது தம்மை பிரிக்க வேண்டாம் என கோரியுள்ளனர். இந்த இரண்டு பெண்களுக்கும் தலா பதினைந்து வயதுக்குட்பட்ட இரண்டு குழந்தைகள் இருப்பதாகவும், கணவர்கள் மற்றும் குழந்தைகள் வந்து பெண்களை ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றதாகவும் போலீசார் தெரிவித்தனர். அப்போது, வீட்டுக்கு செல்ல மறுத்த இந்த பெண்கள், தனித்தனியாக செல்ல முடியாது என போலீசாரிடம் கதறி …

  23. 13 முதல் 15 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளதாக சிறுவர் வைத்திய நிபுணர் டொக்டர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். நாளை (31ஆம் திகதி) அனுஷ்டிக்கப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கொழும்பில் நேற்று (29ஆம் திகதி) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பதின்ம வயதினரிடையே புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரித்துள்ளதாக கணக்கெடுப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக நிபுணர் தெரிவித்துள்ளார். இந்த கணக்கெடுப்பில், 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களில் 5.7% பேர் ஒரு முறையாவது புகைபிடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த மாணவர்களில…

  24. இன்றைய நவீன காலகட்டத்தில் ‘சும்மா தான் இருக்கேன்’ என்று சொன்னால் கூட கையில் ஃபோன் வைத்துக்கொண்டு இன்ஸ்டாகிராம், யூடியூப் என்று எதையாவது பார்த்துக் கொண்டோ அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டோ தான் இருக்கிறார்கள். உலகில் என்னென்னவோ போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் தென்கொரியா வித்தியாசமாக “ஸ்பேஸ்- அவுட்” என்ற போட்டியை நடத்தியது. அதாவது 90 நிமிடங்கள், எந்த வேலையும் செய்யாமல், தூங்காமல், ஃபோன் பார்க்காமல், அமைதியாக அமர்ந்திருக்க வேண்டும். இவ்வளவு தானே என்று ஈசியாக எண்ணிவிட முடியாது. போட்டியாளர்களின் இதய துடிப்பு சீராக இருக்கிறதா என்று கண்காணிக்கப்படுகிறது. …

  25. ரெ.ஜாய்சன் 28 May, 2024 10:04 PM தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் மீனாட்சிபுரம் கிராமத்தில் வாழ்ந்து வந்த ஒரே ஒரு மனிதரான முதியவர் கந்தசாமி உயிரிழந்தார். தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி ஊராட்சியில் உள்ளது மீனாட்சிபுரம் கிராமம். இந்த கிராமம் நெல்லை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இருந்து 13 கிலோ மீட்டர் தொலைவில் மேல செக்காரக்குடிக்கு அடுத்து அமைந்துள்ளது. 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மீனாட்சிபுரத்தில் வாழ்ந்த மக்களின் எண்ணிக்கை 1,269. படிப்படியாக இந்த ஊரின் மக்கள் தொகை குறைந்தது. இந்த ஊரில் இருந்த மக்கள் அனைவரும் பிழைப்புக்காக ஊரை காலி செய்து விட்டு வெளியூருக்கு சென்று விட்டனர். இவ்வூரில் நிலவிய தண்ணீர் தட்டுப்பாட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.