செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7156 topics in this forum
-
மகள், பேரக்குழந்தைகள் என 4 பேருக்காக 180 சீட் கொண்ட விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர் 80 இருக்கைகள் கொண்ட விமானத்தை தனது குடும்பத்தினர் 4 பேர் மட்டுமே பயணிக்க ரூ. 20 லட்சத்திற்கு வாடகைக்கு ஒரு தொழில் அதிபர் எடுத்துள்ளார். 4 பேருக்காக விமானத்தை வாடகைக்கு எடுத்த தொழில் அதிபர் கொரோனா வைரஸ் ஊர்டங்கு காரணமாக கிட்டத்தட்ட இரண்டு மாத இடைவெளிக்குப் பிறகு, உள்நாட்டு வணிக விமான சேவைகள் திங்கட்கிழமை முதல் மீண்டும் தொடங்கப்பட்டன. மத்திய பிரதேசம் போபாலைச் சேர்ந்த மதுபான தொழிற்சாலை அதிபரின் குடும்பம் போபாலில் சிக்கி கொண்டது. கடந்த இரண்டு மாதங்களாக போபாலில் சிக்கிக்கொண்டிருந்த தனது மகள…
-
- 0 replies
- 422 views
-
-
வீடுகளை உடைத்த களவெடுக்கப்பட்ட புகையிரதம் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் ரெயில் பணிமனை உள்ளது. இங்கு வேலை செய்த துப்புரவு பெண் பணியாளர் இன்று காலியாக நின்றிருந்த பயணிகள் ரெயிலை புறநகர் பகுதிக்கு திடீரென ஓட்டிச் சென்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அந்த பெண்ணுக்கு சரியாக ரெயிலை ஓட்டத் தெரியாததால் சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் தடம் புரண்டது. பின்னர் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் மோதி நின்றது. ரெயிலை கடத்திச் சென்ற பெண் பலத்த காயம் அடைந்து ஸ்டாக்ஹோம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அடுக்குமாடி குடியிருப்பில் 3 குடும்பத்தினர் இருந்தனர். ஆனால், அதிர்ஷ்டவசமாக அவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து …
-
- 0 replies
- 440 views
-
-
பிரேசிலில் எடுக்கப்பட்ட சிலந்தி மழை காணொளி.. http://youtu.be/UPujnYOX9dc மேலதிக தகவல்:http://www.thestar.com/news/world/2013/02/11/its_raining_spiders_in_southern_brazilian_town.html
-
- 0 replies
- 657 views
-
-
அமெரிக்காவில் உள்ள 44 வயது பெண் ஒருவர் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களை மேலாடையாக அணிந்து நடனம் ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த 44 வயது பெண் Sara Mapelli என்பவர். இவர் ஒரு யோகா ஆசிரியையாகவும் பணிபுரிந்து வருகிறார். இவர் சமீபத்தில் மேலாடை அணியாமல் சுமார் 12000 தேனீக்களையே மேலாடையாக அணிந்து சிறிய அசைவுகளுடன் கூடிய நடனம் ஒன்றை ஆடி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். நடனத்தின் இடையிடையே சில தேனீக்களை வெளியே எடுத்து பறக்கவிட்டார். இவர் ஆடிய இந்த நடனத்தை மிகவும் அற்புதமக பிரபல போட்டோகிராபரான Holly Wilmeth என்பவர் அற்புதமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த சாதனையை செய்த Sara Mapelli அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியபோது, “தேனீக்கள் எனது உட…
-
- 0 replies
- 2.8k views
-
-
உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. முதியவர்களுக்கான ஐ.நா. சர்வதேச தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உயர்ந்த தகுதிகளையும் ஆப்கானிஸ்தானிற்கு கடைசி இடத்தையும் வழங்குகின்றது. நார்வேக்குப் பிறகு ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறந்த இடங்கள் வரிசையைப் பெறுகின்றன. வருமான பாதுகாப்பு, சுகாதாரம…
-
- 0 replies
- 584 views
-
-
சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு காபி தயாரிக்கும் இயந்திரம் ஒன்று இந்த வார இறுதியில் கொண்டு செல்லப்படுகிறது. இந்த காபி தயாரிக்கும் கருவியை விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு எடுத்துச் செல்லும் முதல் இத்தாலிய பெண் விண்வெளி வீராங்கனையான, சமாந்தா க்ரிஸ்டொஃபொரெட்டியால், இந்த இயந்திரத்திலிருந்து தயாரிக்கப்படும் எஸ்பிரஸ்ஸோ காபியை முதன் முதலாக விண்வெளியில் சுற்றுப்பாதையில் அனுபவிக்க முடியும். சமாந்தா கிரிஸ்டொஃபொரெட்டி, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை ரஷ்ய ராக்கெட் ஒன்றின் மூலம் இந்த சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு செல்லும் மூன்று விண்வெளிவீரர்களில் ஒருவர். இந்த 20 கிலோகிராம் எடையுள்ள காபி தயாரிக்கும் இயந்திரத்தில் உள்ள எஃகுப் பாகங்கள் பெரும் அழுத்தங்களைச் சமாளிக்க வல்லவை. அதில…
-
- 0 replies
- 406 views
-
-
சீனாவில் மிரர் என்ற பெண்ணின் கண்களில் இருந்து சுமார் 60 உயிருள்ள புழுக்களை அறுவை சிகிச்சையின் மூலம் அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர். ஆனால், இது வினோதமான அறுவை சிகிச்சை என்றும் அவர்கள் தெரிவித்தனர். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கண்களில் அடிக்கடி அரிப்பு ஏற்பட்டுள்ளது. பிறகு, கூச்ச உணர்வைப் போக்க அவர் கண்களைத் தேய்த்தபோது கண்ணில் இருந்து ஒரு ஒட்டுண்ணிப் புழு வெளியே வந்து விழுந்துள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சிடையந்த அந்த பெண் பயந்துபோய் உடனடியாக சீனாவின் குன்மிங்கில் உள்ள மருத்துவமனையை அணுகியுள்ளார். ஆனால், அந்த பெண்ணை சோதனை செய்த மருத்துவருக்கும் அதிர்ச்சி காத்திருந்தது. பெண்ணின் கண்களை சோதனை செய்தபோது, இரு கண்களிலும் கருவிழியில் உயிருள்ள புழுக்கள் இருப்பது தெர…
-
- 0 replies
- 178 views
- 1 follower
-
-
எனது புகைப்படம் நன்றாக இல்லை, வேறு படம் மாற்றுங்கள்; தேடப்படும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கோரிக்கை சந்தேக நபர் ஒருவரை கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவியைக் கோரி, பேஸ்புக் பக்கத்தில் சந்தேக நபரின் புகைப்படத்துடன் பொலிஸார் தகவல் வெளியிட்டனர். "இப்புகைப்படம் நன்றாக இல்லை, வேறு அழகான படம் போடுங்கள்" என சந்தேக நபரே பதில் அளித்த சம்பவம் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில பொலிஸார், டேனியல் டொமோன் எனும் சந்தேக நபரை தேடிவந்தனர். அந்நபர் மீது போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டேனியலின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதற்காக பொதுமக்…
-
- 0 replies
- 768 views
-
-
நம் வரலாற்றை தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துக்செல்லவிருக்கிறேன், என்னுடன் சேர்ந்து பயணிக்க உங்களின் பொன்னான 5 நிமிடங்களை ஒதுக்குங்கள் ,இங்கு தான் உலகின் முதல் மனிதன் பிறந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள், இங்கு தான் நம் மூதாதையர் வாழ்ந்தனர்.இங்கு தான் நாம் இன்று பேசிக்கொண்டிருக்கும் நம் தமிழ் பிறந்தது.இங்கு தான் இன்னும் பல வரலாற்று அதிசயங்கள் நிகழ்ந்துள்ளது,ஆம் இது தான் " நாவலன் தீவு " என்று அழைக்கப்பட்ட " குமரிக்கண்டம். கடலுக்கடியில் இன்று அமைதியாக உறங்கிக்கிகொண்டிருக்கும் இது,ஒரு காலத்தில் பிரம்மாண்டமாக இயங்கிக்கொண்டிருந்த ஒரு தமிழ் கண்டம் !!. இன்று தனித்தனி நாடுகளாக உள்ள ஆஸ்திரேலியா, தென் ஆப்ரி…
-
- 0 replies
- 3.4k views
-
-
ஊழலை தடுக்க AI அமைச்சரை பணியமர்த்திய அல்பேனியா! அல்பேனியா அரசு உலகத்திலேயே முதன்முறையாக செயற்கை நுண்ணறிவு அமைச்சரை (AI Minister) பணியமர்த்தியுள்ளனர். AI மூலம் உருவாக்கப்பட்ட இந்த அமைச்சரின் பெயர் டியல்லா (Diella). அல்பேனியாவில் அதிகம் ஊழல் நடப்பதாக வந்த புகாரையடுத்து, ஊழலை தடுக்க அல்பேனியா பிரதமர் எடி ராமா (Edi Rama) செயல்படுத்தியிருக்கும் புதிய யோசனைதான் இந்த AI அமைச்சர். அமைச்சர் என்றால் ஏதாவது துறையை ஒதுக்க வேண்டும். அதனால் அரசு திட்டங்களை தனியாரிடம் கொடுத்து செயல்படுத்தும் பொது கொள்முதல் (Public Procurement) துறையை டியல்லாவிடம் ஒதுக்கியுள்ளனர். இதேவேளை, அல்பேனிய அரசின் ஒப்பந்தங்களை மதிப்பீடு செய்து அந்த துறை 100 சதவிகிதம் ஊழல் இல்லாமல் செயல்பட AI அமைச்சர் டியல்லா உதவி…
-
- 0 replies
- 101 views
-
-
நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்கள் வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளதால் காட்டு விலங்குகள் ஊர்களுக்கு ஜாலியாக விசிட் அடித்து வருகின்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் பெரும்பாலும் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இந்நிலையில் காட்டுப்பகுதியை ஒட்டியுள்ள கிராமம் மற்றும் நகரங்களில் பல காட்டு விலங்குகள் தென்படும் சம்பவங்கள் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதிலுமே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. இப்படி திடீரென ஊருக்குள் வரும் விலங்குகளின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் சுற்றுலா…
-
- 0 replies
- 313 views
-
-
விபுலானந்தரின் நினைவு தினம் அனுஷ்டிப்பு! முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்தரின் 73வது நினைவு தினம் வவுனியா – கண்டி வீதியில் உள்ள அவரது சிலைக்கு முன்பாக இன்று (19) காலை இடம்பெற்றது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்பின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சந்திரகுமார் கண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில். அடிகளாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதனையடுத்து, விபுலானந்தர் தொடர்பான நினைவு பேருரையினை வவுனியா தமிழ்சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமாரன் ஆற்றியிருந்தார். அவர் தனது உரையில் இசை, அறிவியல், கலை இலக்கியம் என பல்துறைகளிலும் புலமையாளராக விபுலானந்தர் விளங்கியதாக தெரிவித்தார். …
-
- 0 replies
- 250 views
-
-
பிள்ளையானுக்கு அமைச்சர் பதவி? July 31, 2020 தேர்தலில் வெற்றிபெற்றால் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன உறுதியளித்துள்ளது என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது சிறையில் உள்ள பிள்ளையான்; தேர்தலில் போட்டியிடுகின்றார். பிள்ளையான் தேர்தலில் வெற்றிபெற்றால் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன வாக்குறுதியளித்துள்ளதாக பிள்ளையானுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன என டெய்லிமிரர் செய்தி வெளியிட்டுள்ளது. எனினும் சிறையிலிருந்து பிணையில் விடுதலையானால் மாத்திரமே அமைச்சர் பதவியை வழங்கமுடியும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன தெரிவித்துள்ளதாக பிள்ளையா…
-
- 0 replies
- 502 views
-
-
யாழ் பருத்தித்துறை பகுதியில் கடலட்டை வாடி தீக்கிரை யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியில் வாடி அமைத்து தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபடுவோரது நான்கு வாடிகள் விசமிகளால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.குறித்த கடலட்டை வாடியில் இரண்டு மாதங்களுக்கு மேலாக தங்கியிருந்து கடலட்டை பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தவர்கள் அண்மையில் தமது சொந்த இடமான சிலாவத்தை பகுதிக்கு தமது ஊர் தேவாலயம் ஒன்றின் திருநாளுக்காக சென்றிருந்தனர்.இந்நிலையில், அவர்கள் செல்லமுன்னர், தமது தொழில் உபகரணங்களை பாதுகாப்பாக ஒருவரது வீட்டில் வைத்துவிடுட்டுச் சென்றுள்ள நிலையிலேயே இந்த தீக்கிரையாக்கும் சம்பவம் இடம்பெற்…
-
- 0 replies
- 268 views
-
-
30 வருடங்களாக வீட்டுக்கு வெளியே செல்லாத 43 வயதான ஜேர்மனிய நபர் 2016-10-09 10:32:39 ஜேர்மனியைச் சேர்ந்த 43 வயதான நபர் ஒருவர் 30 வருடங்களாக ஒரு போதும் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை என்ற தகவல் குறித்து அந்நபரின் பெற்றோரிடம் பொலிஸார் விசாரணை நடத்துகின்றனர். ஜேர்மனியின் பவேரியன் பிராந்தியத்திலுள்ள பேய்ரூத் எனும் நகருக்கு அருகிலுள்ள பிரெயன்பெல்ஸ் எனும் கிராமத்தில் இத்தம்பதியினர் வசிக்கின்றனர். இத் தம்பதியின் மகனுக்கு தற்போது 43 வயதாகிறது. அந்நபர், 13 வயதில் பாடசாலைக்குச் செல்வதை நிறுத்தியிருந்தார். அதன்பின் ஒருபோதும் அவர் வீட்டிலிருந்து வெளியே செல்லவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 280 views
-
-
"பூமி அழிவிற்கு ஆயத்தமாகியுள்ளது" இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் அடுத்தடுத்து தொடர்ந்தும் பல நில நடுக்கங்களை பூமி சந்தித்து வருகிறது. 2018 ஆம் ஆண்டுக்குள் உலகம் நிலநடுக்கங்களினால் பல அழிவைச் சந்திக்கும் என அமெரிக்க விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந் நிலையில் உலக அழிவு ஆரம்பித்துவிட்டது என சதியாலோசனைக் கோட்பாட்டாளர்கள் செய்திகளைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். சதியாலோசனை (Conspiracy theory) கோட்பாடு என்பது யூகத்தின் அடிப்படையில் ஒரு தனி நபர் அல்லது ஒரு தனிப்பட்ட நிறுவனத்தினால் முன்வைக்கப்படும் கோட்பாடு ஆகும். அதன்படி பூமியின் அழிவுக்கு வித்திடும் நிரூபு கிரகம் தற்போது பூமியை நெருங்கி விட்டதாகவும் அதன் அறிகுறியே தற்போத…
-
- 0 replies
- 358 views
-
-
யாழ்.குடாநாட்டில் மாணவர்களிடம் போதையூட்டப்பட்ட பாக்கு பாவனை அதிகரிப்பு! [ சனிக்கிழமை, 30 மே 2015, 03:44.08 PM GMT ] யாழ்.குடாநாட்டில் போதையூட்டப்பட் ட பாக்கு விற்பனை அதிகரித்திருக்கும் நிலையில். குறித்த பாக்கு பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் அதிகம் பயன்படுத்தப்படுவதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். யாழ்.மாநகரசபை எல்லைக்குள் குறித்த பாக்கு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதும் மற்றைய இடங்களில் குறித்த பாக்கு விற்பனை அதிகளவில் நடைபெற்று வருகின்றது. ஒரு பொட்டலம் 50 ரூபா என்ற விலையில் விற்பனை செய்யப்படும் நிலையில் பாடசாலை மாணவர்களால் இந்த பாக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றது. இந்த பாக்கு செய்வதற்காக சீவப்பட்ட பாக்கு சுண்ணாம்பில் ஊற வைக்கப்படுவதுடன்,…
-
- 0 replies
- 270 views
-
-
ஐஸ்கிறீமைத் திருடிய சிறுவர்களுக்கு 8 வருடங்கள் கழித்து 13 வருட சிறை Published by Rasmila on 2016-02-11 11:03:49 இரு இளைஞர்களுக்கு, 8 வருடங்களுக்கு முன்னர் அவர்கள் 14 வயது மற்றும் 15 வயது சிறுவர்களாக இருந்த போது தமது வகுப்பில் கல்வி கற்கும் சக மாணவன் ஒருவனிடமிருந்து ஐஸ்கிறீம் ஒன்றையும் சூரியகாந்தி விதைகளையும் களவாடிய குற்றச்சாட் டில் தலா 13 வருட சிறைத் தண் டனை விதிக்கப்பட்ட சம்பவம் துருக்கியில் இடம்பெற்றுள்ளது. மேற்படி களவு தொடர்பில் பாதிக் கப்பட்ட சிறுவன் முறைப்பாடு செய்யாத நிலையில் இந்தத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. லொல்கன் குத்லு (தற்போது 22 வயது) மற்றும் ஒகன் சிப்ட்சி (தற்போது 23 வயது) ஆகிய…
-
- 0 replies
- 258 views
-
-
மாத்தறை மிரிஸ்ஸ கடலில் திமிங்கிலங்களை பார்வையிடுவதற்காக படகில் சென்ற இளைஞர் குழுவொன்று வலையில் சிக்குண்டிருந்த திமிங்கிலமொன்றினை காப்பாற்றும் துணிகர செயலில் ஈடுபட்டு இறுதியில் ஆபத்துக்கு முகம் கொடுத்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இளைஞர்கள் சிலர் படகில் கடலுக்குள் சென்றிருந்த போது இவ்வாறு திமிங்கிலமொன்று வலையில் சிக்கியிருந்ததாகவும் அவ்விடத்துக்கு வருகை தந்த மற்றைய படகுகள் ஆபத்திலிருந்த திமிங்கிலத்தை கண்டும் காணாதவாறு சென்றதாகவும் தெரிவித்த இந்த இளைஞர்கள் தங்களோடு படகில் வந்திருந்த அனைவரும் திமிங்கிலத்தை காப்பாற்றுவதற்கு சம்மதம் தெரிவிக்கவே திமிங்கிலத்தை காப்பாற்றும் நோக்கில் அனைவரும…
-
- 0 replies
- 279 views
-
-
[size=4] ஊழித் தொடக்கக் காலத்தில் தயனோசர்(Dinosaur) முதலான விலங்குகள் வாழ்ந்தமையாகக் கண்டறிந்துள்ளனர். அவற்றைத் தமிழில் கூற இயலுமா என்றால் மிகச் சிறப்பாகக் கூற முடியும் என்பதே உண்மை. நீரில் வாழும் உயிரினங்களை நீரி என்றும் ஊர்ந்து வாழும் உயிரினங்களை ஊரி என்றும் வயிற்றால்-அகட்டால் ஊர்ந்து செல்லும் பாம்பினை அகடூரி என்றும் அழைத்துள்ளனர். இவை போல் மிக மிக மிக மூத்தக் காலத்தினைச் சேர்ந்த - அழிந்து ஒழிந்து போன பேரளவிலான ஊரும் உயிரினங்களை - ஊர்வனவற்றை மூஊரி - மூவூரி என்றும் கூறலாம். ஊர்வனவை முதுகுத்தண்டுகள் உள்ள உயிரினங்கள். இவை நுரையீரல் மூலமே மூச்சுவிடுகின்றன.[/size] [size=4] மூத்த பல்லியினம் என்ற வகையில் மூ ஊரி என்னும் பொருளைத்தான் தயனோசர் என்னும் சொல்லும் குறித்தால…
-
- 0 replies
- 3.5k views
-
-
[size=4]வீதிகளில் வகை வகையான வாகனங்கள் செல்கையில் பொது போக்குவரத்து பஸ்களும் வீதிகளில் பயணிக்கையில் சீனாவை சேரந்த ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றமை பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. போக்குவரத்து நெறிசலை தவிர்த்துக்கொள்ளவும் அலுவலகத்திற்கு குறித்த நேரத்திற்கு செல்வதற்காகவும் சீனர் ஒருவர் பரசூட் மார்க்கத்தை பயன்படுத்தி வருகின்றார். சீனரான செங் டெக்ஸியா என்பவரே இத்தகைய விபரீத போக்குவரத்தை மார்க்கத்தை கடைபிடித்து வருகிறார். போக்குவரத்து நெரிசல் காரணமாக இவர் அலுவலகத்திற்கு செல்வதற்காக தினமும் 3 மணித்தியாலங்களை வீதியிலேயே செலவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தன்னுடைய நேரம் அநியாயமாக செலவாவதை தடுப்பதற்கும் அலுவலகத்திற்கு இலகுவில் செல்வதற்கான வழ…
-
- 0 replies
- 643 views
-
-
ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகள் தென்னாப்பிரிக்கப் பெண் உலக சாதனை தென்னாப்பிரிக்கா எகுர்ஹுலேனியைச் சேர்ந்த பெண் ஒருவர் ஒரே நேரத்தில் 10 குழந்தைகளைப் பெற்றெடுத்து உலக சாதனைபடைத்து உள்ளார். பதிவு: ஜூன் 09, 2021 10:23 AM மாற்றம்: ஜூன் 09, 2021 16:01 PM தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண் கோசியம் தாமாரா சித்தோல் (வயது 37) இவரது கணவர் டெபோஹோ சோட்டெட்சி. கர்ப்பமாக இருந்த சித்தோல் பிரிட்டோரியா மருத்துவமனையில் சிசேரியன் மூலம் இவர் குழந்தைகளை பெற்ரார். இவருக்கு 10 குழந்தைகள் உள்ளது. ஏழு ஆண் குழந்தைகளும் மூன்று பெண் குழந்தைகளும் பிறந்து உள்ளது. இதுகுறித்து சோட்டெட்சி கூறும் போது நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் உணர்ச்சிவசப்படுகிறேன். என்னால் அதிகம் பேச …
-
- 0 replies
- 291 views
-
-
லண்டனில் வசித்துவரும் இந்தியரான லக்ஷ்மி நிவாஸ் மிட்டல் எஃகு இரும்புத் தொழிலில் முன்னணியில் இருக்கும் தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் கடந்த 2004 ஆம் வருடம் தனது மகள் வனிஷாவிற்கும், இந்திய கோடீஸ்வரர் அமித் பாட்டியாவிற்கும் நடத்திய திருமணத்தில் 46 மில்லியன் யூரோக்கள் செலவழித்தார். உலகமே அந்தத் திருமணத்தை வியந்து பாராட்டியது. இப்போது அவரது சகோதரர் பிரமோத் மிட்டல் தனது மகள் ஸ்ருஷ்டி மிட்டல் (26) திருமணத்தை ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரத்தில் இந்திய மதிப்பில் 500 கோடி செலவழித்து நடத்தியுள்ளதாகக் கூறப்படுகின்றது. மூன்று நாள் திருமண கோலாகலங்களில் பார்சிலோனா நகரமே ஸ்தம்பித்தது. திருமண விருந்து நிகழ்ச்சியை மிச்சலின் நட்சத்திர சமையல் கலைஞர் செர்கி அரோலா பொறுப்பே…
-
- 0 replies
- 419 views
-
-
ஜப்பானில் அறிமுகப் படுத்தப் பட்ட புதிய வகை வீடியோ கேமான 'லவ் ப்ளஸ்' (Love Plus) இல் வரும் ரிங்கோ (Rinko) என்ற கதாபாத்திரம் தற்போது பிரபலமடைந்து வருகின்றது. இந்த ரிங்கோ வேறு யாருமல்ல. ஜப்பானின் பருவ வயது ஆண்களைக் கவர்ந்திழுக்கும் வேர்ஜுவல் (Virtual) கேர்ள் ஃபிரண்ட் ஆவாள். லவ் பிளஸ் எனும் பெயரில் ஜப்பானில் அறிமுகமாகியது ஒரு வீடியோ கேம். இது அங்குள்ள பருவ வயது ஆண்களை மிகவும் கவர்ந்து வருகின்றது. ஏனெனில் இந்த வீடியோ கேமின் மூலம் பருவ வயது ஆண்கள் தமது வயதை ஒத்த எதிர்ப் பால் இனத்தவருடன் எவ்வாறு நட்பை ஆரம்பிப்பது மற்றும் அதனை விருத்தி செய்வது போன்ற விடயங்களை சிமுலேசன் முறை மூலம் பயிற்சி எடுத்துக் கொள்ள முடியும் என்பதே இதன் பிளஸ் பாயிண்ட். இந்த கேமில் வெவ்வேறு குணாதிசயங்கள் உள்…
-
- 0 replies
- 673 views
-
-
இளம் தாய் ஒருவர் தனது மகளை சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சியொன்று இணையத்தளத்தில் வெளியாகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் தனது இளம் குழந்தையை கடுமையாக திட்டிக்கொண்டு குறித்த குழந்தை அணிந்திருந்த காற்சட்டையை கழற்றிவிட்டு பிரம்பால் தாக்குவதோடு கால்களால் உதைக்கின்றார். மேலும் கைகளால் சரமாரியாக கன்னத்தில் அறைவதோடு கால்களால் தலையில் எட்டி உதைத்தும் கையில் இருந்த தடியால் குழந்தையின் வாயினுள் குத்தியும் தண்டனை வழங்கியுள்ளார். இதனை அப்பகுதியில் இருந்த ஒருவர் வீடியோவாக பதிவு செய்து இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இச்சம்பவத்தை பார்த்த பல மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனங்களை தெரிவித் துள்ளதோடு மனித உரிமை அமைப்புகளும் விமர்சித்துள்ளன. http://ww…
-
- 0 replies
- 549 views
-