செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
நிர்வாண கோலத்துடன் குழப்பம் ஏற்படுத்திய பயணி; அவசரமாக தரையிறக்கப்பட்டது விமானம் !! 2016-11-14 11:58:39 பறந்துகொண்டிருந்த விமானமொன்றில் நபர் ஒருவர் தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக காணப்பட்டதால் அவ் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மெக்ஸிகோவின் கென்குன் நகரிலிருந்து ஜேர்மனியின் பிராங்பர்ட் நகரை நோக்கி சென்றுகொண்டிருந்த விமானமொன்றிலேயே இச் சம்பவம் இடம்பெற்றது. கோண்டோர் நிறுவனத்தின் இவ் விமானம் பறந்துகொண்டிருந்தபோது பயணிகளில் ஒருவரான ஒலிவர் சார்ள்ஸ் ஹாலிடே கீ என்பவர் தனது ஆடைகளை களைந்துகொண்டு நிர்வாணமாக தோன்றியதுடன் பணிக…
-
- 0 replies
- 221 views
-
-
பீர் தயாரிக்க 50 ஆயிரம் லிட்டர் மனித சிறுநீர் டென்மார்க்கை சேர்ந்த மது தயாரிப்பு நிறுவனம் பிஸ்னர் என்ற புது ரக பீரை தயாரித்துள்ளது. இந்த பீரை தயாரிப்பதற்காக ஒரு இசை திருவிழாவில் இருந்து ஐம்பதாயிரம் லிட்டர் சிறுநீர் சேகரிக்கப்பட்டது. மது தயாரிப்பு நிறுவனமான நோர்ப்ரோ, இந்த பீரில் எந்தவித மனிதக் கழிவுகளும் இல்லை என்று உறுதியளிக்கிறது. பிஸ்னர் என்று பெயரிடப்பட்டிருக்கும் இந்த பீரில் பார்லி பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக பார்லி சாகுபடியில், மாட்டுச்சாணம் அல்லது உரத்தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் உரங்களே பயன்படுத்தப்படும். அதற்கு பதிலாக மனித சிறுநீர் உரமாக பயன்படுத்தப்பட்டது. வடக்கு ஐரோப்பாவில் இரண்டு ஆண்ட…
-
- 0 replies
- 2.1k views
-
-
பிறந்து 5 நாளேயான சிசுவை விற்ற தாய் – யாழில் சம்பவம்! பிறந்து ஐந்து நாட்களான சிசுவை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. யாழ்ப்பாணம் – நெல்லியடி பொலிஸார் இதுகுறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நெல்லியடி – மந்திகை மருத்துவமனையில் அதிகாரிகள் வழங்கிய தகவலுக்கமைய இந்த விசாரணை நடத்தப்படுகிறது எவ்வாறாயினும் குறித்த சிசுவின் தாயார் திருமணமாகாதவர் என்றும் அவர் சிசுவை விற்பனை செய்துவிட்டார் என்றும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. https://newuthayan.com/பிறந்து-5-நாளேயான-சிசுவை-வ/
-
- 0 replies
- 306 views
-
-
யாழில்.... தென்னை மரம் விழுந்ததில், முதியவர் உயிரிழப்பு! யாழ்ப்பாணக் குடாநாட்டில் வீசும் கடும் காற்றினால் வீட்டின் முன் நின்ற பட்ட தென்னைமரம் முறிந்து வீழ்ந்ததில் அதன் கீழ் சிக்கிக்கொண்ட முதியவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். வண்ணார்பண்ணை முருகமூர்த்தி வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் ஏகாம்பரநாதன் (வயது-80 ) என்ற 2 பிள்ளையின் தந்தையே உயிரிழந்தார். அவர் தனது வீட்டில் மதியம் சாப்பிட்டுவிட்டு அலைபேசி கதைத்துகொண்டு வீட்டு முற்றத்தில் கதிரையில் இருந்தபோது அவர் மீது பட்ட தென்னை மரம் காற்றுக்கு அடியோடு சரிந்து வீழ்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். https://athavannews.com/2022/12…
-
- 0 replies
- 218 views
-
-
-
திருச்சி: நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் மரணமடைந்த இளம்பெண்ணின் மரணத்தில் மர்மம் இருப்பதாக எழுந்த புகாரையடுத்து, அந்தப் பெண்ணின் உடல் மறு பரிசோதனை செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அர்ஜுன் -ஜான்சிராணி ஆகியோரின் மகள் இளம் பெண் சங்கீதா என்பவர், நித்தியானந்தாவின் பெங்களூரு ஆசிரமத்தில் தங்கி இருந்த நிலையில், கடந்த 28 ஆம் தேதி மர்மமான முறையில் இறந்தார். இவரின் சாவில் மர்மம் இருப்பதாகவும், அதனால் மகளின் உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று அவரது தாயார் ஜான்சிராணி, திருச்சி ராம்ஜி நகர் காவல்நிலையத்திலும், அடுத்து கர்நாடக மாநிலம் ராம்நகர…
-
- 0 replies
- 634 views
-
-
கனடா- மகனை இழந்த துக்கத்தில் இருந்த தாயாருக்கு மீண்டும் ஒரு முறை இதயத்தை நொருக்கும் சம்பவம் வன்கூவர் விமான நிலையத்தில் ஏற்பட்டது. தனது மகனின் சாம்பலை ஒரு பட்டு கேரியருக்குள் வைத்திருந்ததை வெளியே எடுக்குமாறு விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் கோரிக்கை விடுத்தமையே காரணமாகும். மார்நி முட்ச் என்ற இவர் தனது மகன் றெஹெட்டின் அஸ்தியை ஒரு பெரிய அடைத்த கருப்புள்ளி வண்டிற்குள் வைத்திருந்ததுள்ளார். தனக்கு ஆறுதல் தேவைப்படும் போது அணைத்துக்கொள்ள அவ்வாறு வைத்திருக்கின்றார். கடந்த நவம்பர் மாதம் இவரது 20-வயது மகன் றெஹெட் வன்கூவர் பொலிசாரால் சுடப்பட்டு இறந்துள்ளார். இவரது மரணவிசாரனை நடந்து வருகின்றது. முட்ச் வன்கூவர் விமான நிலைய பாதுகாப்பு பகுதிக்கூடாக அந்த கருப்புள்ளி வண்டை கொண்டு வ…
-
- 0 replies
- 277 views
-
-
இராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நாய்கள் கொல்லப்படுவது ஏன் தெரியுமா ? இந்தியாவின் பொலிஸ் பிரிவில் மட்டுமின்றி, இராணுவ படைகளிலும் கூட நாய்கள் இடம் பெற்றுள்ளன. இராணுவ வீரர்கள் போல, இராணுவ நாய்களுக்கும் பணி காலம் மற்றும் ஓய்வு பெறுவதற்கான காலம் இருக்கிறது. இராணுவத்தில் பணியாற்றிய வீரர்களுக்கு அவரவர் படிப்பு மற்றும் ஓய்வு பெறும் காலத்தில் அவர் வகித்த பதவி சார்ந்த வேறு அரசு வேலைகள் தரப்படும். ஆனால், இராணுவத்தில் நாட்டுக்காக பணியாற்றிய நாய்களுக்கு என்ன நிலை ஏற்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா?ஆர்.டி.ஐ’யில் இருந்து கிடைக்கப்பட்டதாக கூறப்படும் பதிலில், ஓய்வு பெறும் இராணுவ நாய்கள் வலியற்ற முறையில் கொலை செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. ஓய்வு பெறும் இராணுவ நாய்க…
-
- 0 replies
- 500 views
-
-
தமிழகச் சிந்தனையாளர் தமிழருவி மணியன் ஏற்பாடு செய்த கருத்தரங்கு பல அடிப்படை விவாதங்களை எழுப்புகிறது. இந்திய அரசியலை மாத்திரமல்ல உலக அரசியலையும் இந்த மேடையில் எழுந்த கருத்துக்கள் விமர்சிக்கின்றன. தெற்கு ஆசியாவில் கணவனுக்குப் பிறகு மனைவி என்ற வாரிசு உரிமையை முதன் முதலாக உருவாக்கிய நாடு இலங்கை தான்.; பிரதமர் எஸ் டபிள்யூ ஆர் டி பண்டார நாயக்கா ஒரு புத்த பிக்குவால் சுட்டுக் கொல்லப்பட்ட பிறகு அவருடைய மனைவி சிறிமாவோ பிரதமரானார். இதே உதாரணம் வங்க தேசத்திலும் பின்பற்றப்பட்டது. இந்தியாவிலும் அது நடைமுறையில் உள்ளது. ராஜீவ் காந்தியின் மனைவி சோனியா இந்தியத் தேசியக் காங்கிரசின் தலைமைப் பதவியைத் தக்க வைத்தபடி மக்களால் தெரிவு செய்யப்படாத பிரதமர் மன்மோகன் சிங் ஊடாக நாட்டின் அதிபதி…
-
- 0 replies
- 396 views
-
-
2016-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்கு பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் கிடைக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இதைப்போன்ற சிறப்பு இன்னும் 823 ஆண்டுகளுக்கு பிறகுதான் மீண்டும் வரும் என்ற நிலையில் அந்த சிறப்புகள் என்னவென்று அறிந்து கொள்வோமா..? மொத்தம் 29 நாட்களே கொண்ட இந்த மாதத்தில் மட்டும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள், ஐந்து திங்கட்கிழமைகள், நான்கு செவ்வாய்க்கிழமைகள், நான்கு புதன்கிழமைகள், நான்கு வியாழக்கிழமைகள், நான்கு வெள்ளிக்கிழமைகள், நான்கு சனிக்கிழமைகள் ஆகியவை இடம்பெறுகின்றன. அடுத்து இதேபோன்றதொரு லீப் ஆண்டின் பிப்ரவரி மாதத்தில் இதைப்போன்ற கிழமைகளின் எண்ணிக்கை அமைய இன்னும் 823 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.seithy.com/breifNews.p…
-
- 0 replies
- 250 views
-
-
வெலிகந்தை முன்னாள் OICஐ கைது செய்ய உத்தரவு! வெலிகந்தை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு பொலன்னறுவை இலக்கம் 02 நீதிவான் பொலிஸாருக்கு நேற்று (18) உத்தரவிட்டுள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெலிகந்தை பொலிஸார் இரு சந்தேக நபர்களை 20 பசுக்களுடன் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் கால்நடைகளை அரசாங்க பண்ணை ஒன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட போதும் கடத்தல்காரர்கள் இருவருக்கு விற்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த பொலிஸ்மா அதிபருக்கும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் வெலிகந்த பொலிஸ் நிலைய பொறுப்பதிகார…
-
- 0 replies
- 124 views
-
-
ஸ்விண்டனில் முன்னாள் மனைவிக்கு எதிரான குற்றச்சாட்டில் கணவன் மீது 56 பாலியல் குற்றச்சாட்டு! தனது முன்னாள் மனைவிக்கு 13 ஆண்டுகளாக போதைப்பொருள் கொடுத்து பாலியல் வன்புணர்வு செய்தமைக்காக முன்னாள் டோரி கவுன்சிலர் ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மேலும் ஐந்து ஆண்கள் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. வழக்கில் தற்போது லண்டன், என்ஃபீல்டில் வசித்து வரும் 49 வயதான பிலிப் யங் என்ற பிரதான சந்தேக நபர் மீது பாலியல் வன்புணர்வு உட்பட குறைந்தது 56 குற்றச்சாடுகள் சுமத்தப்பட்டுள்ளதாக வில்ட்ஷயர் பொலிஸார் தெரிவித்தனர். யங் முன்பு 2007 முதல் 2010 வரை ஸ்விண்டன் பெருநகர உள்ளூராட்சி அமைப்பின் கன்சர்வேடிவ் கவுன்சிலராக இருந்தார். அவர் 2010 ஆம் ஆண்டுக் காலப் பகு…
-
- 0 replies
- 162 views
-
-
கடைவீதியில் உலாவந்த பொப் பிரான்சிஸ் போப் பிரான்சிஸ் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்தார். அவருடன் பொதுமக்கள் போட்டிபோட்டு ‘செல்பி’ படம் எடுத்துக்கொண்டனர். உலக கத்தோலிக்க மத கிறிஸ்தவ தலைவரான போப் ஆண்டவருக்கு எப்போதுமே அச்சுறுத்தல்கள் அதிகமாக இருக்கும். எனவே போப் ஆண்டவராக இருப்பவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் தான் வெளியே வருவது வழக்கம். சாதாரணமாக மற்ற இடங்களில் அவர்களை பார்க்க முடியாது. ஆனால் தற்போது உள்ள போப் ஆண்டவர் பிரான்சிஸ் இதில் வித்தியாசமானவராக இருக்கிறார். அவர் மக்கள் முன்பு சாதாரணமாக தோன்றுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில் போப் ஆண்டவர் வாடிகனில் உள்ள கடை வீதியில் உலா வந்த சம்பவம் நடந்துள்ளது. தனது அரண்மனையில் இருந்து பி…
-
- 0 replies
- 356 views
-
-
இங்கிலாந்திலுள்ள வீடொன்றினுள் 8 அங்குலம் நீளமான அசுர தும்பியொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரும்பச்சை நிறத்திலான இந்தத் தும்பியானது சிறிய வகை ஹெலிகொப்டர் போன்று, பயங்கர சத்தத்துடன் குறித்த வீட்டின் அறையொன்றினுள் சுற்றித் திரிந்ததாக அவ்வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ட்ராகன் ப்ளைஸ் எனப்படும் இந்த அசுர வகை தும்பி இனமானது புவியில் 325 மில்லியன் ஆண்டுகள் வாழ்ந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பூச்சிக்கொல்லி பயன்பாடு மற்றும் நீர் மாசுபாடு ஆகிய காரணங்களால் இந்த இனம் காலப்போக்கில் அழிவடைந்து வருகிறது. http://www.onlineuthayan.com/News_More.php?id=227533274430212451
-
- 0 replies
- 443 views
-
-
ஆஸ்திரேலியாவில் கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற நவ நாகரிக ஆடை கண்காட்சியில் இந்துக்களின் கடவுளர்கள் அவமதிக்கப்பட்டனர். திருமகளின் உருவம் பொறிக்கப்பட்ட நீச்சல் ஆடைகளை லிசா வுளூ என்கிற ஆடை வடிவமைப்பாளர் வடிவமைத்து இருக்கின்றார். இவ்வாடைகளை அணிந்து கொண்டு அழகி ஒருவர் நடை பயின்றார். காளியின் திருவுருவம் மலம் கழிக்கும் இருக்கையின் மேல் தட்டில் பொறிக்கப்பட்டு இருந்தது. ஹெய்டி கிலும் என்கிற அழகியின் காளியின் உருவத்தில் தோன்றி இருந்தார். இந்த ஆடைக் கண்காட்சி உலகு எங்கும் வாழும் இந்துக்களை மிகவும் புண்படுத்தி உள்ளது. http://athirchi.com/?p=4359
-
- 0 replies
- 587 views
-
-
ஈராக்கில் கனேடியப் படையினரின் செயற்பாடுகள் மாற்றமடைந்திருப்பதாக கனேடியப் படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் Tom Lawson கூறினார். ஈராக்கில் உள்ள கனேடிய சிறப்புப் படையினர் குர்திஸ், மற்றும் ஈராக்கிய படைகளுடன் போர்க்களங்களுக்குச் செல்ல மாட்டார்களெனவும், வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைச் செய்ய மாட்டார்களெனவும் ஒக்ரோபர் மாதம் அவர் கூறினார். ஆனால், நொவம்பர் மாதத்தின் பின்னர் கனேடிய சிறப்புப் படையினர் 13 வான் தாக்குதல்களுக்கு வழிகாட்டும் பணியைப் புரிந்தார்களென கனேடிய சிறப்புப் படைகளின் தளபதி திங்கட்கிழமை கூறினார். அத்துடன், கனேடிய சிறப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்திய IS தீவிரவாதிகள் மீது அவர்கள் பதில் தாக்குதல் நடத்தினார்களெனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அறிக்க…
-
- 0 replies
- 231 views
-
-
2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 2024 இற்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான தீர்வு மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடின் படுகொலை அதேநேரேம் ரஷ்ய அதிபர் விளா…
-
- 0 replies
- 671 views
- 1 follower
-
-
Out of media player. Press enter to return or tab to continue. தன்னைத் தானே தபாலில் அனுப்பிய மனிதர் 7 மார்ச் 2015 கடைசியாக தரவேற்றப்பட்டது 10:18 ஜிஎம்டி ரெக் ஸ்பியர்ஸ் 1964-இல் தனது தபால் பயணத்தை தொடங்க முன்னர் லண்டனில்1960-களில் ஆஸ்திரேலிய தடகள வீரர் ரெக் ஸ்பியர்ஸ்லண்டனிலுருந்து விமானத்தில் செல்ல போதிய பணம் இல்லாமல், தன்னைத் தானே ஒரு மரப்பெட்டியில் வைத்து ஆஸ்திரேலியாவிற்கு விமானத்தில் பயணப்பட்டதாக தெரிவித்திருக்கிறார். தனது மகளின் பிறந்த நாளுக்குள் தான் வீட்டுக்குச் செல்லத் தீவிரமாக முயன்றும், அது முடியாமல் போகவே இந்த வழியை தான் தேர்ந்தெடுத்ததாக அவர் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் நடந்து அரை நூற்றாண்டுக்கும் மேல் ஆன நிலையில், தனது இந்த சுவாரஸ்யமான பயண …
-
- 0 replies
- 574 views
-
-
கனடா- பிரிட்டிஷ் கொலம்பியா நீதிமன்றத்தில் பாலியல் விசாரனயில் சாட்சியளித்த ஒரு 10 வயது சிறுமிக்கு அவளின் வலியை தாங்க பொலிஸ் நாய் ஒன்று உதவியுள்ளது. இந்த சம்பவம் பிரிட்டிஷ் கொலம்பிய நீதிமன்றத்தில் ஒரு புதிய பாதையை ஏற்படுத்தியுள்ளது. திரை ஒன்றினால் பாதுகாக்கப்பட்ட சாட்சி கூண்டில் காபர் என்ற ஒரு மஞ்சள் லப்றடோர் பொலிஸ் நாய் கட்டிலில் படுத்திருந்த சிறுமியின் காலடியில் அமைதியாக படுத்திருந்தது. பிரிட்டிஷ் கொலம்பியாவில் சறே மாகாண நீதிமன்றத்தில் இச்சம்பவம் நடந்தது. சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையான பாதிப்பை அவள் முழுமையாக தெளிவாக விபரிக்க கூடியதாக நாய் அவளை அமைதிப்படுத்தியுள்ளது என அரச வழக்கறிஞர் வின்ஸ்ரன் செய்சன் தெரிவித்தார். சிறுமி சாட்சியம் அளிக்கும் போது கீழே குனிந்து ஒரு செல…
-
- 0 replies
- 281 views
-
-
34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி விமானத்தின் தலைமை விமானி மாரடைப்பினால் மரணம்! 2016-03-04 14:41:10 பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானமொன்றின் விமானி, மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் நிறுவனமென்றில் இடம்பெற்றுள்ளது. இவ்விமானம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சவூதி அரேபியாவின் பிஷா நகரிலிருந்து, தலைநகர் றியாத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தது. சுமார் 220 பயணிகள் அவ்விமானத்தில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தலைமை விமானியான வலீத் பின் மொஹம்மத் அல் மொஹம்மத்துக்கு திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்போது அவரே விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 228 views
-
-
நாய் இறைச்சிக்காக உரிக்கப்பட்டு தொங்கிய நிலையில் மீட்பு – பெரியநீலாவணை பகுதியில் சம்பவம்! நாய்கள் கொல்லப்பட்டு இறைச்சிக்காக வெட்டப்பட்டுள்ளமை தொடர்பில் பெரியநீலாவணை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று குறித்த முறைப்பாட்டினை கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினர் மேற்கொண்டுள்ளதுடன் நாய்கள் வெட்டப்பட்டு ஆட்டு இறைச்சியுடன் கலப்பதற்காக கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக அம் முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்தில் உள்ள பனை மரம் ஒன்றில் நாய் ஒன்று கொல்லப்பட்டு கட்டி தொங்கவிடப்பட்டுள்ள நிலையில் உள்ளதுடன் மற்றுமொரு நாய் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளது. மேலும் ரெஜிபோம் …
-
- 0 replies
- 197 views
-
-
85 வயதில் இப்படியொரு காதலா? கரோனா காலத்தில் எவ்வவோ வினோதங்களைப் பார்த்து வருகிறோம். அமெரிக்காவில் பலரும் பல பிரச்னைகளை சந்தித்து வருகிறார்கள். இத்தனை துயரங்களுக்கு மத்தியிலும் மனிதர்கள் மத்தியில் நிலைத்திருக்கும் காதலுக்கும் அன்புக்கும் பாசத்துக்கும் குறைவில்லை! அமெரிக்காவின் நியூயார்க் மாவட்டத் தலைநகரான அல்பானியில் வசித்து வருபவர் 85 வயது ராபர்ட் பாப்பர். அவர் தனது காதல் மனைவிக்கு இப்படியொரு நெருக்கடி வரும் என்று நினைத்திருக்க மாட்டார். அவரது மனைவியான 80 வயது லாரா, அல்சைமர் நோயினால் பாதிக்கப்பட்டு கடந்த ஒரு வருடமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அல்சைமர் நோய் என்பதால் மறதி காரணமாக என்ன செய்வது என்று தடுமாறும் தன் மனைவிக்கு கடந்த ஒரு …
-
- 0 replies
- 436 views
-
-
உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர் என்பவர் பாம்போடு பாம்பாக நடனமாடி அசத்திய நிகழ்வு இன்று காத்தான்குடியில் இடம்பெற்றது. பொல்காவலை அல்-அக்ஷா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் மாணவி பாத்திமா நஜ்லாவின்(வயது 16) முள்ளந்தண்டு சத்திரசிகிச்சைக்காக மேற்படி மாபெரும் நிகழ்வு இடம்பெற்றது. உலக சாதனை வீரர் பரீட் நஸீரின் புதல்வர் றிஜான் நஸீர், 'சமாதானம் என்றால் என்ன? ஒற்றுமை என்றால் என்ன" என்ற அடிப்படையில் மேற்படி நிகழ்வு ஒழுங்கமைக்கப்பட்ருந்தது. காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் இஸ்லாமிய கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், விஷப் பாம்புகளுடன் விபரீதமாக விளையாடும் காட்சி, 10அடி நீளம் கொண்ட 20அடி எடை கொண்ட மலைப்பாம்பை கழுத்தில் சுற்றி நடனமாடுதல், தீப்பந்தங்களினால் …
-
- 0 replies
- 329 views
-
-
வரிசேல நிக்காதைங்கோ! இன்று நான் இலங்கையில் வங்கி ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவருடன் கதைத்த போது அவர் ஒரு தகவலை வெளியிட்டார். அதாவது, தங்களிடம் வைத்திருக்கும் கணக்குகளின் முழு விபரங்களையும் வெளியிடும்படியும் எந்தெந்த கணக்காளர்கள் எவ்வளவுகாலம் பயன்படுத்தப்படாமல் உள்ளனர் என்ற அட்டவணை போன்ற விபரங்களையும் தம்மிடம் கையளிக்குமாறு அரசு கேட்டுள்ளதாகசொன்னார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால், இதற்குமுன் இவ்வாறு தகவல் கேட்ட பொழுது, வங்கி மேலிடத்தார் காரணங்களை வலியுறித்தி அரசிடம் கேட்டதாகவும் அதன்பின் அரசு அதப்பற்றி அழுத்தம் கொடுக்கவில்லையென்றும், ஆனால் தற்பொழுது சில அவசரகால சட்ட நிபந்தனைகளைக்காட்டி அதன் நிமித்தம் கட்டாயமாகத்தகவல் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளதாம்.…
-
- 0 replies
- 626 views
-
-
915 அதிஷ்ட நாணயங்களை விழுங்கிய ஆமை சத்திரசிகிச்சை பலனின்றி உயிரிழப்பு தாய்லாந்தில் 915 நாணயங்களை விழுங்கிய கடலாமையொன்று, சத்திரசிகிச்சையின் பின்னர் உயரிழந்துள்ளது. 25 வயதான இந்த கடலாமை, தாய்லாந்தின் சோன்பூரி மாகாணத்திலுள்ள பூங்காவொன்றின் தடாகத்தில் சுமார் 20 வருடங்களாக வசித்து வந்தது. அத் தடாகத்தில் நாணயங்களை வீசுவது தமக்கு அதிஷ்டத்தை ஏற்படுத்தும் என அங்குள்ள மக்கள் நம்புகின்றனர். இவ்வாறு வீசப்படும் நாணயங்களை மேற்படி ஆமை விழுங்கி வந்ததால் அதற்குப் பாதிப்பு ஏற்பட்டது. தாய்லாந்தின் சூலாலோங்கோர்ன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மிருக வைத்தியர்களால் இம் மாத முற்பகுதியில் மேற்படி ஆமை சத்…
-
- 0 replies
- 310 views
-