செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
திருடிய செல்போனைத் தொலைத்தவரிடமே விற்க முயன்று மாட்டிக்கொண்ட மாணவர்கள் கடந்த திங்கட்கிழமை அன்று பாட்டியாலா பகுதியில் வசித்துவரும் குஷால் பன்சால் என்ற பொறியாளர் டெல்லி கன்னாட் பிளேசில் உள்ள ஏடிஎம் மையம் ஒன்றிற்கு சென்றிருந்தார். பணம் எடுத்துவிட்டுத் திரும்பும்போது தனது செல்போனை பன்சால் மறந்து வைத்துவிட்டு பாலிகா பஜாருக்கு சென்றுவிட்டார். அதன்பின்னரே செல்போனைத் தவறவிட்டது நினைவுக்குவர திரும்பிவந்தபோது அவரது போன் காணவில்லை. எனவே அங்குள்ள காவல்நிலையத்தில் புகார் ஒன்றினை அவர் அளித்திருந்தார். குஷால் வைத்துவிட்டு சென்ற போனை அதன்பின்னர் அங்கு வந்த ரஜத் காந்த் சிங், மகேஷ் குமார் என்ற இரண்டு பி.டெக் மாணவர்கள் எடுத்துள்ளனர். இதனை விற்று பணம் ஆக்க விரும்பிய அந்த இளைஞர்கள் இணையதள…
-
- 0 replies
- 622 views
-
-
பைனான்சியருடன் ஆபாச வீடியோ வெளியானதால் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த மந்தைவெளி பகுதியை சேர்ந்தவர் சிவராஜ் (42). பைனான்ஸ் அதிபர். இவர் வட்டி கட்ட முடியாத பெண்களை மிரட்டி குப்பன்கொட்டாயில் உள்ள தனது பண்ணை வீட்டில் உல்லாசம் அனுபவித்தார். அந்த பெண்களுக்கு தெரியாமல் அதனை செல்போனில் வீடியோ எடுத்துள் ளார். அந்த வீடியோக்கள் முன்னா என்ற செல்போன் கடைக்காரர் மூலம் கடந்த வாரம் வெளிவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். மொத்தம் 27 பெண்களுடன் சிவராஜ் உல்லாசம் அனுபவிக்கும் வீடியோக்கள் இணையதளங்களில் பரவியது. அந்த வீடியோக்கள் சிடிக்களாகவும் விற்பனை செய்யப்பட்டன. போலீசார் தர்மபுரி மாவட்டம் முழுவதும் சிடிக்கடைகளில் சோதனை நடத்தி, சிவராஜீன…
-
- 0 replies
- 5.6k views
-
-
வாஷிங்டன்: அமெரிக்கப் படையினரால் கொல்லப்பட்ட ஒசாமா பின்லேடனின் இறந்த உடல் என்று கூறி இணையத்தளங்களில் வெளியான படம் போலியானது என்று தெரிய வந்துள்ளது. பின்லேடன் போலவே தோற்றம் கொண்ட கொல்லப்பட்ட ஒரு நபரின் படத்தை போட்டோஷாப் மூலம் திரித்து, லேடன் கொல்லப்பட்ட பின் எடுக்கப்பட்ட படம் போல சித்தரித்து வெளியிட்டுள்ளதாகத் தெரிகிறது. பின்லேடன் கொல்லப்பட்ட செய்தி உலகெங்கும் பரவியதுமே அவரது கொல்லப்பட்ட உடலைக் காண அனைவரும் ஆர்வமாக இருந்தனர். ஆனால் எங்குமே புகைப்படம் வெளியாகவில்லை. அமெரிக்காவும் புகைப்படத்தை வெளியிடவில்லை. பாகிஸ்தான் தரப்பிலும் வெளியிடவில்லை. இந்த நிலையில் பாகிஸ்தான் டிவிக்களில்தான் முதல் முதலாக பின்லேடனின் படம் என்று கூறி ஒரு புகைப்படம் வெளியானது. அதில் பின்லேடன…
-
- 0 replies
- 564 views
-
-
இந்தியா – கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் திருவில்வமலை பட்டிப்பரம்ப குன்னத்து வீட்டை சேர்ந்தவர் அசோக்குமார் . இவரது மகள் ஆதித்யஸ்ரீ ( வயது 😎 மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். ஆதித்யஸ்ரீ நேற்று இரவு கைபேசியில் வீடியோ பார்ர்த்துக்கொண்டிருந்தார். அப்போது கைபேசி எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இதில் சிறுமி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மோசமான மின்கலம் (Battery) காரணமாக செல்போன் வெடித்து சிதறியதாக கூறப்படுகிறது. இது குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கவனம் தேவை – பொதுவாக குழந்தைகள் அதிக நேரம் கைபேசி பயன்படுத்துவதால் அதிக பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள் குழந்தைகள் கைபேசி பயன்படுத்தும் நேரத்த…
-
- 0 replies
- 339 views
- 1 follower
-
-
துபாய் வீதிகளில் பிச்சையெடுத்துக்கொண்டு 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த பெண் கைது! துபாயில் 5 நட்சத்திர ஹோட்டலொன்றில் வாடகைக்கு அறை எடுத்து தங்கியிருந்த யாசகரான பெண் ஒருவரை துபாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். வெளிநாடொன்றைச் சேர்ந்த அரேபியரான இப்பெண், தனது 4 பிள்ளைகளுடன் 5 நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தாரெனவும் இப்பிள்ளைகள் 3 முதல் 9 வயதுக்கு இடைப்பட்டவர்களாவர் எனவும் துபாயின் சட்டவிரோதமாக நுழைபவர்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளை கையாளும் திணைக்களத்தின் பணிப்பாளரான லெப்டினன் கேர்ணல் அலி சலேம் தெரிவித்துள்ளார். இப்பெண் வர்த்தக விஸா மூலம் துபாய்க்குள் நுழைந்து, பிச்சையெடுக்கும் நடவடிக்கையில்…
-
- 0 replies
- 387 views
-
-
கனடா- ஒன்ராறியோவின் தென் பகுதியில் சில இடங்களில் குடி தண்ணீரில் கொக்கெயின் உட்பட்ட பல சட்ட விரோத போதை மருந்துகள் காணப்படுவதற்கான தடயங்கள் கிடைத்துள்ளதாக ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.கிரான்ட் றிவர் நீர்வடிநிலத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் இருந்து வெளியேற்றப்பட்ட தண்ணீரில் இருந்து குடி நீரை மாசுபடுத்த சாத்தியமான மார்பின், கொகெயின் மற்றும் ஒக்சிகோடோன் போன்ற போதை மருந்துகள் காணப்படுவதாக McGill-பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.ஆற்று நீரில் குறிப்பிட்ட போதை மருந்துகள் ஒப்பீட்டளவில் ஒரு குறைந்த அளவிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேம்படுத்தப்படும் கழிவு-நீர் சிகிச்சை செயற்பாடுகள் குடிநீரை சுத்தப்படுத்த உதவும் என கூறப்பட்ட…
-
- 0 replies
- 396 views
-
-
தமிழ்த் தேசிய எழுச்சி தினமான மாவீரர் தினத்தைக் குழப்பும் நோக்குடனும், புலம்பெயர் தமிழ் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்குடனும் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளை ஏற்படுத்திப் புலம்பெயர் நாடுகள் எங்கும் குழப்பத்தை உருவாக்கிய அதே தமிழ்த் தேசியச் சிதைவுக் குழுக்கள் எதிர்வரும் மார்ச் 05 ஆம் திகதி ஜெனிவாவில் நடைபெறவுள்ள புலம்பெயர் தமிழர்களது பேரெழுச்சி நிகழ்வைக் குழப்பும் நோக்கோடு லண்டனிலிருந்து ஒரு நடை பயணத்தை ஆரம்பித்துள்ளன. கடந்த வருட இறுதியில் ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத் தொடரின்போது ஜெனிவா முருகதாசன் திடலில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து நடாத்திய பொங்கு தமிழ் எழுச்சி நிகழ்வின்போது, இந்த வருடம் மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா.வின் மனித உரிமைகள் கூட்டத…
-
- 0 replies
- 468 views
-
-
எப்போது திருமணம் என்று அடிக்கடிக் கேட்டுக்கொண்டிருந்த முதியவரை அடித்துக் கொன்ற சம்பவம் தற்போது வைரலாகி வருகின்றது. இந்தோனேசியா, வடக்கு சுமத்திரா பகுதியில் அசிம் இரியான்டோ என்ற ஓய்வுபெற்ற அரசு அதிகாரியொருவர் வசித்து வந்தார். இவரது பக்கத்துக்கு வீட்டில் வசித்து வந்த 45 வயது சிரேகர் மீது அதிக அக்கறைக் கொண்ட இவர் சிரேகரைப் பார்க்கும் போதெல்லாம் ”எப்போது திருமணம்?” என்று கேட்டு வந்துள்ளார். இந்தக் கேள்வியால் அதிகம் மன உளைச்சலுக்கு ஆளான சிரேகர் கடந்த ஜூலை 29 ஆம் திகதி முதியவரின் வீட்டுக் கதவை உடைத்து உள்ளே சென்று மரக்கட்டையால் குறித்த முதியவரைத் தாக்கியுள்ளார். குறித்த முதியவர் வலி தாங்க முடியாமல் சத்தம் போட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வைத்தி…
-
- 0 replies
- 119 views
-
-
-
சிறீலங்கா இனவாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 24 நாடுகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் சிறீலங்காவில் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் நின்றபாடில்லை. அதுதொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றமை தெரிந்ததே. வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வ…
-
- 0 replies
- 351 views
-
-
சீனாவின் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு மனிதன், ஐந்து பெண்களை ஒரே நேரத்தில் ஏமாற்றி பணத்தை மோசடி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜிலின் மாகாணத்தை சேர்ந்த சியாஜுன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தன்னை பணக்காரன் என்று கூறி, 5 பெண்களை ஏமாற்றியுள்ளார். சியாஜுன் பணக்கார பின்புலத்தில் பிறந்திருக்கவில்லை. அவரது தந்தை கட்டுமானத் துறையில் பணிபுரிந்து வந்தார். மேலும் அவரது தாயார் குளியல் இல்லத்தில் உதவியாளராக இருந்து வருகிறார். ஏழ்மையின் காரணமாக படிப்பை விட்டுவிட நேர்ந்தாலும் தன்னை பணக்காரனாக காட்டிக் கொண்டு, ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்திக்கொண்டார். அவரிடம் பெரும் பணக்காரன் போல நடித்து, விலை உயர்ந்த பரிசுப் பொருட்களையும் கொடுத்து வந்தார். …
-
- 0 replies
- 182 views
- 1 follower
-
-
குரோஷிய ஜனாதிபதி கொலின்டாவுடன் போஸ் கொடுத்தபோது மனித உரிமைகள் குழு தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்தது குரோஷியாவின் பிரபல மனித உரிமைகள் குழுவின் தலைவர் அந்நாட்டின் ஜனாதிபதி சகிதம் ஊடகவியலாளர்களுக்கு போஸ் கொடுத்துக்கொண்டிருந்தபோது, மேற்படி மனித உரிமைகள் குழுவின் தலைவரின் காற்சட்டை கழன்று விழுந்த சம்பவம் நேற்றுமுன் முன்தினம் இடம்பெற்றது. நேற்றையதினம் அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு, குரோஷியாவின் ஸக்ரெப் நகரில் நடைபெற்ற வைபவமொன்றில் மனித உரிமைகளுக்கான குரோஷிய ஹெல்சிங்கி குழுவின் தலைவர் ஐவன் ஸ்வானிமிர் சிகெக் பங்குபற்றினார். …
-
- 0 replies
- 317 views
-
-
சவுதியில் வெள்ளப்பெருக்கு – 7 பேர் உயிரிழப்பு 11 பேர் காயம்! மத்தியக் கிழக்கு நாடான, சவுதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக 7 பேர் உயிரிழந்துள்ளனர். சவுதி அரேபியாவில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகின்றது. குறிப்பாக சவுதி அரேபியாவின் ஹாபர் அல் பாஸ்டின் பகுதியில் மழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக அங்குள்ள வீதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதன்போது ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாக இதுவரையில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 11 பேர் காயமடைந்துள்ளனர். 1,176 மக்கள் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், 40 இற்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் உள்ளுார் ஊடகங்கள் செய்தி வெளியிட்ட…
-
- 0 replies
- 256 views
-
-
உலகின் மிகவும் பழங்கால மரம் மாறிவரும் பருவநிலை மாற்றத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். தென் ஆப்பிரிக்காவின் சிடர்பெர்க் மலைப்பகுதியில் கிளான்வில்லியம் சிடார் என்ற மரம் உள்ளது. சுமார் 22 கோடி ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாகக் கருதப்படும் இந்த மரம்தான் உலகிலேயே மிகவும் வயதான மரம் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் காலநிலை மாற்றம், உலகம் முழுவதும் அதிக வெப்பநிலை, குறைந்த மழைப்பொழிவு ஆகிய காரணிகளால் இந்த மரத்தின் விதைகள் பலமிழந்து காணப்படுவதாகவும், இதனால் இந்த மரம் மேலும் பரவும் முறை தடுக்கப்படுவதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உறைபனிக்காலத்தில் தோன்றியதாகக் கருதப்படும் இந்த மரத்தின் பின் வந்த சந்ததி மரங்கள் சுமார் 13 …
-
- 0 replies
- 330 views
-
-
படக்குறிப்பு, சார்லஸ் மெவேசிகா தனது பிரிட்டன் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டினார், மேலும் தான் ஒரு முன்னாள் லண்டன் பேருந்து ஓட்டுநர் என்று கூறினார். கட்டுரை தகவல் ருனாகோ செலினா பிபிசி ஐ இன்வெஸ்டிகேஷன் 16 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் எச்சரிக்கை: இந்த கட்டுரையில் சங்கடத்தை ஏற்படுத்தும் மற்றும் பாலியல் வன்முறை மற்றும் தற்கொலை குறித்த விவரங்கள் உள்ளன துபையின் மிக கவர்ச்சியான பகுதிகளில் செயல்பட்டு, பெண்களை சுரண்டி வரும் ஒரு பாலியல் வர்த்தகக் கும்பலின் தலைவர் பிபிசி புலனாய்வில் அடையாளம் காணப்பட்டுள்ளார். லண்டன் முன்னாள் பேருந்து ஓட்டுநர் என சொல்லிக் கொள்ளும் சார்லஸ் மெவேசிகா, மாறுவேடத்தில் இருந்த எங்களது செய்தியாளரிடம் ஒரு பாலியல் ரீதியான விருந்துக…
-
- 0 replies
- 152 views
- 1 follower
-
-
ஆர். தியாகு இன் புகைப்படம் ஒன்றை பிரபுகண்ணன் முத்தழகன் பகிர்ந்துள்ளார். தவறாக எழுதிய புத்தகத்தை "தீ' யிட்டு கொளுத்தியவன்! எங்கள் பாட்டன் பாண்டித்துரைத் தேவர்!!! ""மதுரையில் வாழ்ந்த ஸ்காட் துரை என்ற ஒரு ஆங்கிலேய வழக்கறிஞர் தமிழ்மொழியில் ஆர்வம் கொண்டு தமிழ் இலக்கணத்தைக் கொஞ்சம் கற்றுக் கொண்டு.மிக அறிவு பெற்றதாய் தானே நினைத்துக்கொண்டு , திருக்குறளில் எதுகை மோனை சரியாக அமையாத இடங்களில் அவற்றைத் திருத்தி இவரே ஒரு புதிய திருக்குறள் பதிப்பை வெளியிட்டார். ""சுகாத்தியரால் (ஸ்காட்டால்) திருத்தியும் புதுக்கியும் பதிப்பிக்கப்பட்ட குறள்"" என்பது அந்த புதிய திருக்குறள் நூலுக்கான தலைப்பு. ஒரு முறை பாண்டித்துரை தேவரை இந்த ஸ்காட் துரை சந்தித்து தாம் செய்த இந்த 'அரிய…
-
- 0 replies
- 630 views
-
-
தமிழர்களுக்குக் கட்டாயக் கருக்கலைப்பு - சீனாவின் வழியில் சிறீலங்கா சீனாவில் மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு குழந்தைத் திட்டத்தைக் கொண்டுவந்து, இரண்டாவது குழந்தை பெற்றவர்களுக்கு பெருந்தொகையாகத் தண்டப்பணம் அறவிடுவதுடன், பலரை வலுக்கட்டாயக் கருக்கலைப்புக்கும் உட்படுத்திவருகின்றது. இதேவேளை, சிறீலங்கா அரசோ இன அழிப்பு நோக்குடன் தமிழர்களுக்கு மட்டும் கட்டாயக் கருக்கலைப்புச் செய்து வருகின்றது. இதில் தமிழர் தாயகம், மலையகம் என்று வேறுபாடு காட்டாமல் இந்தக் கொடூரத்தை அரங்கேற்றி வருகின்றது. கடந்த வாரம் மலையகத்தில் தமிழ்ப் பெண் ஒருவர் கட்டாயக் கருக்கலைப்புக்கு உட்படுத்தப்பட்டு பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெங்கு பரிசோதனை என்ற பெயரில் கந்தப்பள…
-
- 0 replies
- 365 views
-
-
கோத்தாவின் கொலைப்படை சிங்களவர்களையும் பதம்பார்க்குமோ..?! இனந்தெரியாதோர் வேடத்தில் சிங்கள இராணுவம்.. கோத்தா அரசுக்கு எதிரான போராட்டத்திற்குள் நுழைந்து அச்சுறுத்தல். https://fb.watch/cccuSXSa99/
-
- 0 replies
- 241 views
-
-
காத்தான்குடியில்... 15 வயதுடைய தனது மகளை, பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட... தந்தை கைது ! காத்தான்குடியில் 15 வயதுடைய தனது மகளை பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட 44 வயதுடைய தந்தை ஒருவரை நேற்று சனிக்கிழமை கைது செய்துள்ளார். பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி 1921 சிறுவர் பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளது இதனையடுத்து குறித்த வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார் குறித்த சிறுமியின் தந்தையாரை கைது செய்ததுடன் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்தனர். செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2022/1297487
-
- 0 replies
- 260 views
-
-
விண்வெளியிலிருந்து திடீரென வந்த ரேடியோ சிக்னலால் மர்மம் நீடிக்கிறது, வேற்றுகிரகவாசிகள் அனுப்பியதா என்ற கோணத்தில் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர். விண்வெளியிலிருந்து பூமிக்கு அடிக்கடி ரேடியா சிக்னல்கள் வருவதுண்டு. ஆனால் சமீபத்தில் பெறப்பட்ட சிக்னல், முந்தைய ஒலி அலைகளை விட மில்லி நொடிக்கும் குறைவான நேரத்தில் பதிவாகி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த கணநேரத்தில் வெளியான வெளிச்சமானது சூரியனின் மேல் பரப்பில் ஒருநாள் முழுவதும் வெளியாகும் வெளிச்சத்திற்கு சமமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். ஒவ்வொரு ஒலி அலை பூமிக்கு வரும்போது ஒன்றுக்கொன்று வித்தியாசமாக இருப்பதாகவும், கடந்த 2007ஆம் ஆண்டு கிடைத்த ஒலி அலைகள் அதற்கு முந்திய வருடங்களில் கிடைத்த ஒலிகளை வ…
-
- 0 replies
- 2k views
-
-
யு.எஸ்.-உலகில் பல விதமான பழ மரங்கள் உள்ளன. அவற்றில் செரிஸ், பீச்சஸ், பிளம்ஸ், நெக்ரறின், அப்றிகொட்ஸ் ,ஆமன்ஸ் போன்ற பல வகை பழங்கள் வளர்கின்றன. ஆனால் இந்த விசித்திரமான மரத்தில் இவை அனைத்தும் ஒன்றாக வளர்கின்றன. Syracuse University பல்கலைக்கழக பேராசிரியரும் கலைஞருமானSam Van Akenஎன்பவர் ‘மரத்துண்டு ஒட்டுவைத்தல்’ என்ற தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஒரு வகை கலப்பு மரங்களை உருவாக்கியுள்ளார். இந்த மரங்கள் ஒவ்வொன்றும் 40 வித்தியாசமான வகையிலான வித்தியாசமான கொட்டைகள் உள்ள பழங்களை சுமக்கின்றன.ஒரு தனி மரத்தில் விவசாயின் சந்தையில் இருக்க கூடிய சகல பழங்களையும் பெறுவது நினைத்துப்பார்க்க முடியாத ஒரு தன்மையாகும்.சிறுவனாக இருக்கும் போது பண்ணையில் வளர்ந்த தனக்கு இந்த யோசனையால் தான் ஈர்க்கப்பட்…
-
- 0 replies
- 322 views
-
-
மனித உரிமை மீறல்களை விசாரணை செய்யும் அதிகாரம் பெற்ற ஐநா மனித உரிமைக் கவுன்சில் வருடமொன்றுக்கு மூன்று தடவை சுவிற்சர்லாந்தின் ஜெனிவா நகரில் தனது கூட்டத் தொடரை நடத்துகிறது. ஐநா மனித உரிமை ஆணையம் என்ற முன்னாள் அமைப்பு 2005ம் ஆண்டு உலக உச்சி மாநாட்டில் மனித உரிமைக் கவுன்சிலாக பெயர் மாற்றப்பட்டது. இப்போது நடக்கும் 19ம் கூட்டத் தொடரில் சிறிலங்கா போர்க் குற்றங்கள் தொடர்பான காரசாரமான விவாதங்கள் நடக்குமென எதிர்பார்க்கப்டுகிறது. மேற்கு நாடுகள் குறிப்பாக அமெரிக்கா சிறிலங்காவுக்கு எதிரான பிரேரணையை கொண்டு வரலாம் என்ற தகவல் கசியத் தொடங்கியுள்ளது. இப்படியான பிரேரணைகள் கொண்டு வரப்படலாம் என்று உறுதியாகச் சொல்ல முடியாது. இது தொடர்பான கசிவுகளை ஒரு சிறிலங்கா மீதான அழுத்தம் பிரியோகிக்கும் …
-
- 0 replies
- 380 views
-
-
அமெரிக்க அதிபர் டிரம்ப் 24-25 தேதிகளில் வரவிருப்பதையொட்டி,குண்டு துளைக்காத the beast கார் இந்தியா வருகிறது. இக்கார் அதிபருக்காக தனிச்சிறப்புகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. காரின் ஜன்னல்கள் கண்ணாடி மற்றும் பாலி கார்பனோட்டால் செய்யப்பட்ட 5 அடுக்குகள் கொண்டவை. இவை குண்டு துளைக்காமல் தாங்கக்கூடியவை. கார் ஓட்டுனரின் ஜன்னல் மட்டும் 3 அங்குலம் அளவுக்குத் திறக்கக்கூடியது. இந்த காரில் துப்பாக்கித் தோட்டாக்கள், கண்ணீர் புகைக்குண்டுகள், ரத்த பைகள் இணைக்கப்பட்டுள்ளன. தீ எதிர்ப்பு சாதனங்களும் ஸ்மோக் ஸ்க்ரீன் டிஸ்பென்சர்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஓட்டுனர் பகுதியில் தகவல் தொடர்பு சாதனங்களும் ஜிபிஎஸ் கருவியும் பொருத்தப்பட்டுள்ளன. அமெரிக்க ரகசிய சேவை பிரிவின் பயிற்சி பெற…
-
- 0 replies
- 806 views
-
-
வீட்டுக்குள் இருங்கள் இல்லாவிட்டால் சுட்டுத் தள்ளுவோம்- தெலுங்கானா முதலமைச்சர் ஊரடங்கு உத்தரவை மதித்து அனைவரும் வீட்டில் இருங்கள். இல்லாவிடின் சுட்டுத் தள்ளுவோம் என தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் இதன் தீவிரம் புரியாமல் வழக்கமான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக கூறுப்படுகின்றது. இதையடுத்தே பொலிஸாருக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர் சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவை ஏற்படுமெனின் இராணுவத்தை அழைப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://athavannews.com/வீட்டுக்குள்-இருங்கள்-இல/
-
- 0 replies
- 200 views
-
-
குற்றவுணர்வு ஒரு கொடும் வியாதி. தன்னாள்கைக்குட்பட்ட முயற்சியின் மூலம் சாதிக்கக்கூடியதென்று தெரிந்திருந்தவொரு காரியத்தை, தவறவிட்டதனால் ஏற்படும் பாதிப்பு இன்னொருவனின் துன்பத்துக்கு காரணமானதென்று தெரிகின்றபோது எழுகின்ற மனவலி கொடிதினும் கொடிது! தன் மனச்சாட்சியோடு சமரசம் செய்து கொள்ள முடியாத நல்லாத்மாக்கள் குற்றவுணர்வினால் காயப்படுவதில்லை. தவறென்று தெரிந்த பின்பும் திருத்திக் கொள்ளாத மனிதர்களிடம் உணர்வே இருக்காத போது, குற்றவுணர்வு மட்டும் எப்படி வந்துவிடப் போகின்றது. தென்னாபிரிக்காவின் மேற்கு மலைத்தொடரின் பசிய போர்வையின் கதகதப்பினால் செழிப்புற்ற நகரம் ஜொஹானர்ஸ்பேர்க். கிரிக்கெட் பிரியர் நீங்களாயின், உங்களுக்கு இவ்விடம் இலகுவில் மறக்க முடியாத ஒன்று! தென்னாபிரிக்க அணி…
-
- 0 replies
- 394 views
-