Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. Published By: VISHNU 12 FEB, 2024 | 09:36 PM கால்பந்து போட்டியின் போது மின்னல் தாக்கியதில் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள பரிதாப சம்பவம் இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியாவில் உள்ள மேற்கு ஜாவாவின் பாண்டுங்கில் உள்ள சிலிவாங்கி மைதானத்திலேயே இந்த துயரச் சம்பவம் பதிவாகியுள்ளது. கால்பந்துபோட்டி இடம்பெற்றுக்கொண்டிருந்த போது மைதானத்தில் நின்ற 35 வயதான வீரர் மேல் மின்னல் தாக்கியுள்ள நிலையில் குறித்த வீரர் மைதானத்திற்குள் விழுந்ததையடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் கால்பந்துபோட்டியை நேரடியாக ஒளிபரப்புச் செய்துகொண்டிருந்த கமராவில் பதிவாகியுள்ளது. …

  2. இடமாற்றத்தால் உயிரை மாய்த்த பிரதேச செயலக உத்தியோகத்தர்! யாழில் சம்பவம். யாழ்ப்பாணம- சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர் நேற்றைய தினம் தன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூளாய், சுழிபுரம் பகுதியை சேர்ந்த பேரம்பலம் புனிதா என்ற 49 வயதான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவர் தனக்குக் கிடைத்த இடமாற்றத்தை இரத்துச் செய்வதற்கு முயற்சித்துள்ள நிலையில் அது பலனளிக்காததால் மனவிரக்தியில் இவ்வாறு தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது. https://athavannews.com/2024/1369498

  3. 11 NOV, 2023 | 01:09 PM ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் 14 மணி நேரத்தில் சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதில் மிகப்பெரிய நிலநடுக்கமாக கிரைண்டா விக்குக்கு வடக்கே 5.2 ரிச்டர் அளவில் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை வெடிப்புக்கு முன்னோடியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதையடுத்து அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நிலநடுக்கங்கள் காரணமாக உலக புகழ்பெற்ற சுற்றுலா தரமான புளூ லகூன் மூடப்பட்டுள்ளது. நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு காரணமாக மக்கள் பாதுகாப்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஐஸ்லாந்தில் 33 எரிமலைகள் உள்ள…

  4. 10 FEB, 2024 | 03:12 PM வாடகைக்கு பெற்றுக்கொண்ட காரை பல பாகங்களாக பிரித்து விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் எஸ்வெல்ல மற்றும் நெலும்தெனிய ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 38 வயதுடையவர்களாவர். கம்பஹா குற்றப் புலனாய்வு பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் நிட்டம்புவ பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த காரானது அநுராதபுரம் பிரதேசத்தில் உள்ள வாகன வாடகை சேவை நிலையம் ஒன்றில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என விசாரணையில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/176041

  5. கனடாகாரர்களுக்கு நேரம் சரியில்லை போல...

  6. இஸ்ரேலின் கடும் தாக்குதலால் இருளடைந்து கிடக்கும் காசா நகரில் மின்சாரம் தயாரித்து ஒளி ஏற்றி வைத்திருக்கிறான் ஒரு சிறுவன். காசாவில் நடந்து வரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் அங்குள்ள பலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. பெரும் கட்டிடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ள நிலையில் மின்சாரம், குடிநீர் உள்ளிட்டவையும் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசித் தேவைகளுக்கு மக்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர். அப்படி இருளில் மூழ்கி இருக்கும் காசா நகர மக்களின் வாழ்க்கையில் 15 வயதான இளம் விஞ்ஞானி ஹுசாம் அல் – அத்தார் நம்பிக்கை ஒளி ஏற்றி வைத்திருக்கிறார். அவரது கண்டுபிடிப்புகளின் விளைவால் ‘காசாவின் நியூட்டன்’ என அவரை தற்போது மக்கள் அன்புடன் அழைக்க…

  7. தாயின் தகாத உறவால் கர்ப்பமான 15 வயது மகள். யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேசத்தில் 47 வயதுடைய தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரால் 15 வயது பாடசாலை மாணவி கர்ப்பமடைந்துள்ளதாக நேற்று (31) உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சிறுமியின் தாயார் வங்கி ஊழியர் என்பதுடன் திருமணத்திற்கு முன்பிருந்தே இந்த நபருடன் தொடர்பு வைத்திருந்ததாகவும் எனினும், குறித்த நபர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு கனடா சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கனடாவில் இருந்து யாழ்ப்பாணம் வந்த போது இந்த பெண்ணுடன் இருந்த தொடர்பினால் , அந்த பெண்ணின் கணவர் அந்த பெண்ணை விட்டு பிரிந்து சென்றதாகவும் கூறப்படுகின்றது. குறித்த நபர் , சிறுமியின் தாயாருடன் தகாத உறவை ஏற்படுத்திக்…

  8. அலாஸ்காவில் ஏரி ஒன்று உறைந்து காணப்படும் காட்சி இது. ஏரியில் உள்ள தண்ணீர் முழுவதும் உறைந்து சுமார் 3 மீட்டர் அளவுக்கு தண்ணீரில் உள்ளது அப்படியே தெரிகிறது. ஏரி தண்ணீர் கண்ணாடி போன்று காட்சியளிக்கும் இந்த நிகழ்வு அரிதினும் அரிதாக பார்க்கப்படுகிறது.

  9. Published By: DIGITAL DESK 3 05 FEB, 2024 | 10:44 AM யாழ்ப்பாணத்தில் வாய் பேச முடியாத பெண்ணிடம் 21 பவுண் தாலிக்கொடியை இரவலாக வாங்கி மோசடி செய்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் வாய் பேச முடியாத பெண்ணொருவரிடம், அயலவரான யுவதி ஒருவர் கொண்டாட்டங்களுக்கு செல்லும் போது, தாலிக்கொடியை இரவலாக பெற்று அணிந்து சென்ற பின்னர் அதனை மீள அப்பெண்ணிடம் கையளிப்பதனை வழமையாக கொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அண்மையில் வழமை போன்று, தாலிக்கொடியை இரவலாக வாங்கி சென்ற யுவதி, தாலிக்கொடியை திருப்பி கொடுத்த போது, கொடியின் அமைப்பில் வித்தியாசத்தை உணர…

  10. தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியா, கடந்த 1957 ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. அங்கு தேர்தல்கள் நடத்தப்பட்டு பிரதமர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். ஆனாலும் மலேசியாவில் இன்னும் மன்னர் அதிகாரம் நீடித்து வருகிறது. முக்கிய அரசியல் நியமனங்களை மேற்பார்வையிடுவது, இஸ்லாத்தின் அதிகாரப்பூர்வ தலைவராக இருப்பது, மலேசியா நாட்டின் ஆயுதப்படைகளின் தளபதி என பல்வேறு பொறுப்புகளில் மன்னர் இருக்கிறார். நீதிமன்றங்கள், காவல் துறை, சட்டத்துறை ஆகியவற்றால் கொடுக்கப்பட்ட தண்டனையை இரத்து செய்வதற்கும் மன்னருக்கு அதிகாரம் இருக்கிறது. மலேசியாவில் 9 அரச குடும்பங்கள் உள்ளன.இவர்களில் ஒருவர் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னராக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில் முன்னாள் மன்னரான பகாங் ஆ…

  11. Published By: RAJEEBAN 31 JAN, 2024 | 11:44 AM போத்தலில் அடைக்கப்பட்ட தண்ணீர் என நினைத்து தொற்றுநீக்கியை அருந்தியதால் இந்திய அணிவீரர் மயங்அகர்வால் கடும் உடல்நிலை பாதிப்பை எதிர்கொண்டமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. மயங்அகர்வால் ரஞ்சிடிரொபி போட்டிகளிற்காக விமானத்தில் பயணிக்கவிருந்தவேளை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இன்டிகோவிமானசேவையின் விமானத்தில் மயங்அகர்வால் போத்தலில் அடைக்கப்பட்டுள்ள குடிநீர் என நினைத்து அவர் தொற்றுநீக்கியை அருந்தினார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. உடனடியாக அவரின் உடல்நிலை பாதிக்கப்பட்டது அவர் வாந்தியெடுத்தார் இதனை தொடர்ந்து அவரை விமானத்திலிருந்து இறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிரகி…

  12. 30 ஜனவரி 2024 வடக்கு இலங்கையில் உள்ள நீர்த் தேக்கம் ஒன்றில் யானை கூட்டம் நீந்திச் செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. இந்த பெரிய விலங்குகள் உண்மையிலேயே சிறப்பாக நீந்தக் கூடியவை. மனிதன் தவிர்த்து, பெரும்பாலான பாலூட்டிகளைப் போலவே, யானைகளும் இயற்கையிலேயே நீச்சல் திறன் கொண்டவை... அளவில் மிகப்பெரியதாக இருந்தாலும் நீரில் மிதப்பதற்கு போதுமான சக்தி யானைகளிடம் உண்டு. கால்களை துடுப்பாகவும் துதிக்கையை சுவாசிப்பதற்காகவும் யானைகள் பயன்படுத்துகின்றன. வலிமையான கால்கள் மற்றும் துதிக்கையை கொண்டிருப்பதால் யானைகளால் வெகு தூரம் வரை நீந்திச் செல்ல முடியும். 2017-ல் கடலில் 17 கிலோ மீட்டர் தொலைவுக்கு யானைகள் நீந்திச் செல்வதை இலங்கை கப்பற்படை கண்டறிந்தது. அடித்துச…

  13. இந்த உலகம் பல அதிசயங்களை தனக்குள் பூட்டி வைத்திருக்கிறது. ஒரு நாட்டை போல மற்றொரு நாடு இல்லை, ஒரு நிலப்பரப்பை போல மற்றொரு நிலப்பரப்பு இல்லை. அபூர்வமான விஷயங்கள் இன்னும் மனித அறிவை பிரமிக்க வைக்கிறது. அந்த வகையில், `நீரின்றி அமையாது உலகு’ எனக் கேள்விப்பட்டு இருப்போம். ஆனால், மழையின்றி ஒரு கிராமம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? உலகிலேயே அதிக மழை பெய்யும் மேகாலயாவில் உள்ள மவ்சின்ராம் கிராமத்தைப் போல, மழையே பெய்யாத ஒரு கிராமம் இருக்கிறது. அப்படியென்றால் அது பாலைவனமாக இருக்கும் என நினைக்கலாம். அதுதான் இல்லை, இங்கு மக்கள் வசித்து வருகின்றனர். ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுடாய்ப் என்ற கிராமம் உள்ளது. மலைப்பகுதியான இந்த கிராமம் தரை மட்டத்…

  14. உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன. இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண…

  15. போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள…

  16. துருக்கியை சேர்ந்தவர் பிரபல சமையல் கலை நிபுணர் நுஸ்ரெட் கோட்சே என்ற சால்ட் பே. இவர் டுபாயில் ஒரு உணவகம் நடத்தி வருகிறார். அங்கு சமீபத்தில் வாடிக்கையாளர்கள் குழுவாக சென்று உணவு சாப்பிட்டுள்ளனர். அவர்களுக்கு வந்த பில் தொகையை சால்ட் பே தனது வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகப்பெரிய உணவு பில்லான அதில், மொத்தம் ரூ.90 இலட்சம் பில் தொகை இருந்தது. ‘பணம் வரும்… போகும்…’ என்ற தலைப்புடன் அந்த பில்லின் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அந்த பில்லில், பிரெஞ்ச் பொறியல், கோல்டன் பக்லாவா, பழத்தட்டு, துருக்கிய காபி மற்றும் சமையல்காரரின் கையொப்பம் கொண்ட இறைச்சி உணவுகள் உள்ளிட்ட பல உணவு பொருட்கள் ஆர்டர் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது. உணவை தவிர பல விலை உயர்ந்த பானங்களையும்…

  17. பெண்கள் நிர்வாணமாக சில நாட்கள் இருக்கும் கிராமங்கள் பற்றி கேள்வி பட்டிருக்கின்றோம் எனினும், ஆண்களும் நிர்வாணமாக இருக்கும் விசித்திரமான நிகழ்வு பெப்ரவரி 22ஆம் திகதி இடம்பெறவுள்ளது. ஜப்பானில் 1675 ஆண்டுகளாக தொடர்ந்து நடந்து வரும் ‛ஹட்கா மட்சூரி' எனும் ஆண்களின் நிர்வாண திருவிழாவில் பங்கேற்க பெண்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த திருவிழா கொண்டாடப்படுவதன் பின்னணி குறித்த வினோத தகவல் வெளியாகி உள்ளது. இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் பாரம்பரியமாக சில திருவிழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த திருவிழாக்கள் வெறும் பொழுது போக்குகளுக்கு மட்டுமின்றி அந்த பகுதி மக்கள் வைத்துள்ள நம்பிக்கையின் அடையாளமாக இருக்கிறது. அந்த வகையில் ஜப்பானில் ஆண்டுதோ…

  18. இலங்கையின் முன்னணி விருந்தகம் ஒன்றில் தோடம்பழச்சாறு ஒன்றின் விலை 6,000 ரூபா என்று விடயம் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எனினும் பிரசுரிக்கப்பட்டுள்ள பணம் செலுத்தும் சீட்டு உண்மையானதா என்பதை விருந்தகம் இன்னும் முறையாக உறுதிப்படுத்தவில்லை. குறித்த கட்டண சீட்டில் விருந்தகம் ஒரு வாடிக்கையாளரிடம் தோடம்பழச்சாறுக்காக 6, 075 ரூபாயை கட்டணமாக குறிப்பிட்டுள்ளது. அத்துடன் குறித்த கட்டணச்சீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள விலையில் வரி 1,055.80 ரூபா என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையின் விளைவாக இலங்கையில் உள்ள விருந்தகங்கள், பல பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https…

  19. தொலைக் காட்சித் தொடர்பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை! வடகொரியாவில் தென்கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்த்த சிறுவர்களுக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் கடந்த 2022 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ள நிலையிலேயே இதனை பிரபல சர்வதேச ஊடகமொன்று தற்போது அம்பலப்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக குறித்த ஊடகம் பதிவிட்டுள்ள காணொளியில், சீருடை அணிந்த அதிகாரிகள் சிறுவர்களைத் தண்டிப்பதைக் காணக் கூடியதாக உள்ளது. வடகொரியாவில் தென் கொரிய தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், உலகளவில் கோடிக் கணக்கான ரசிகர்களைக் கொண்ட தென…

  20. திருமணமாகாத கில்லாடி ஜோடி சிக்கியது மயக்க மருந்து கலந்த இனிப்பு பானத்தை கொடுத்து மயக்கமடைந்த உடனேயே, அவரது பணப்பையில் இருந்த தங்க நகைகள், தொலைபேசிகள் மற்றும் பணத்தை திருடிச் செல்லும் திருமணமாகாத ஜோடியை பொலிஸார் கைது செய்துள்ளனர். கொத்மலை, தவளந்தன்ன மற்றும் வட்டவளை பிரதேசத்தில் வசிக்கும் திருமணமாகாத தம்பதி (17) பிற்பகல் கைது செய்யப்பட்டதாக நுவரெலியா பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் ஆர்.எஸ்.ராஜசிங்க தெரிவித்தார். கொத்மலை, தவலந்தன்ன பகுதியைச் சேர்ந்த செல்லையா சசிகுமார் (வயது: 46) என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். வத்தளையைச் சேர்ந்த சுபாஷ் செல்வராணி (வயது: 39) என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். …

  21. யாழ் பெண்ணிடம் ஆசை வார்த்தை பேசிய பெண் அழகுகலை நிபுணர் கைது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஆசிரியரை வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதாக கூறி 42 இலட்ச ரூபாய் பணத்தினை மோசடி செய்த கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணரை நேற்றைய தினம் பொலிஸார் கைது செய்துள்ளனர். தன்னை வெளிநாடு ஒன்றுக்கு அனுப்பி வைப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி தன்னிடம் இருந்து 42 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்று , கொழும்பை சேர்ந்த அழகுக்கலை நிபுணர் ஏமாற்றி விட்டார் என யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் ஆசிரியர் முறைப்பாடு செய்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அழகுக்கலை நிபுணரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் நிலையத்தில் தடு…

  22. நான் ஒருமுறை வெளிநாடு ஒன்றுக்கு சென்றிருந்தேன். அந்த நாட்டு விமான நிலையத்தில் இறங்கியதும் நாம் எந்த நாட்டில் இருந்து வருகிறோமோ, அந்த நாட்டு மொழியில் நமக்கு வணக்கம் சொல்வார்கள். நான் இந்தியா என்றதால், என்னிடம் இந்தி மொழியில் வணக்கம் சொல்லி என்னை வரவேற்றார்கள், நான் அதுக்கு பதில் சொல்லவில்லை. அதனால் அந்த நாட்டை சேர்ந்த ஒருவர் என்னிடம் கேட்டார், ஏன் நான் வணக்கம் சொன்னதுக்கு நீங்கள் பதில் சொல்லவில்லை? என்று கேட்டார். நான் சொன்னேன் எல்லா மொழியிலும் வணக்கம் சொல்கின்றீர்கள் என் மொழியில் நீங்கள் வணக்கம் சொல்லவில்லையே, அதுதான் பதில் சொல்லவில்லை என்று, அவர்கள் கேட்டார்கள் நீங்கள் இந்தியன் தானே, ஆம் நான் இந்தியன், ஆனால் என் தாய் மொழி #தமிழ் என்று சொன்னேன். அப்போது அவன் சொ…

  23. Published By: DIGITAL DESK 3 17 JAN, 2024 | 05:26 PM சீனாவில் ஆராய்ச்சியாளர்கள் குளோனிங் முறையில் ஆரோக்கியமான முதலாவது ரீசஸ் குரங்கை உருவாக்கியுள்ளனர். குறித்த ரீசஸ் குரங்கிற்கு வயது இரண்டு எனவும் பெயர் “ரெட்ரோ” எனவும் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட ரீசஸ் குரங்கு உயிருடன் பிறக்கவில்லை அல்லது பிறந்த சில மணி நேரத்தில் உயிரிழந்து விட்டது. ரீசஸ் குரங்கு மூலம் மருந்துவ பரிசோதனை விரைவுபடுத்த முடியும் என்றும், மரபணுவில் மனிதர்களுடன் நெருங்கிய ஒற்றுமை கொண்டு இருப்பதால் பரிசோதனைகளில் மிகச் சிறந்த உறுதி தன்மை கிடைக்கும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ரீசஸ் குர…

  24. நோயாளர் காவுவண்டி கொழும்புக்கு கொண்டு போகும் போது குண்டுகள் கொண்டு போவதாக பிடிபட்ட சதீஸ் 16 வருடங்கள் சிறையில் இருந்து 6 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

  25. https://www.facebook.com/share/v/hYi55bGzpSb4GUvF/?mibextid=gtsPdC யாழ்ப்பாணத்தை என்னிடம் தந்து பாருங்கள். யார் பணமும் தேவையில்லை ,மாற்றுவேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.