Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. El Salvador அதிபர் Nayib Bukele குற்ற கும்பலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் முக்கிய அடையாளமாக இந்த சிறைச்சாலை பார்க்கப்படுகிறது. இந்த சிறை ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுகுறித்த காட்சிகள் வெளியானது. ஆனால் இதற்கு எதிர்ப்புகள் எழவே மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. BBC Mundo சேவை இந்த சிறைச்சாலை குறித்த தகவல்களை சேகரித்தது.

  2. விசா கோரி 50 தொலைபேசி அழைப்பு மேற்கொண்டவர் கைது : மனநிலையை ஆராயவும் உத்தரவு! பிரான்ஸ் தூதரகத்திற்கு 50 முறை தொலைபேசி அழைப்புகளை செய்து அதன் நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் நேற்று (21) உத்தரவிட்டுள்ளது. குருந்துவத்தை பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கொட்டாஞ்சேனை கதிரேசன் தெருவைச் சேர்ந்த தவராஜ் சிங்கம் கிருஷ்ண குமார் என்ற சந்தேக நபரை எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டார். பிரான்ஸ் தூதரகத்தின் எலிசபெத் டெசன் செய்த முறைப்பாட்டின்படி, பிரான்ஸ் தூதரகத்திற்கு தொலைபேசியில் …

  3. விடுதலைப் புலிகளிடம் மட்டுமே அடிவாங்கி, அதிலிருந்து மீண்ட திமிருடன் நிமிர்ந்து நின்ற சிங்கள அரசுக்கு, தற்போது திரும்பும் திசைகளிலெல்லாம் அடி விழுந்து வருகின்றது. அமெரிக்கா வழங்கிய பயங்கரவாதத்திற்கு எதிரான போர்' என்ற அனுமதிச் சீட்டைக் கையில் எடுத்துக்கொண்டு, தமிழீழ மக்கள்மீது பாரிய இனப் படுகொலையை நடாத்தி முடித்த சிங்கள அரசு, அதற்கான பின் விளைவுகளைத் தற்போது எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. மேற்குலகைப் பொறுத்தவரை ஒரு யுத்தத்தின் வெற்றி என்பது தமக்கான தடைக்கல்லை நீக்குதல் அல்லது தமது எதிரியை அழித்தல் என்பதுடன் முற்றுப்பெற்று விடுகின்றது. இரண்டாவது உலகப் போரின் பின்னர் இந்த அணுகுமுறையையே மேற்குலகு கடைப்பிடித்து வருகின்றது. ஜெர்மனியில் கிட்லரின் மரணத்துடன் அந்த…

  4. ஆன்மீக சக்தியால் நோயை குணப்படுத்துவதாக நடத்தப்பட்ட நிகழ்வில் நோயாளர்கள் இருவர் உயிரிழப்பு ஆன்மீக சக்தியால் நோய்களை குணப்படுத்துவதாக கூறி அனுராதபுரம் ஹொரவபொத்தானை பிரதேசத்தில் நடத்தப்பட்ட ஆரோக்கிய முகாமில் கலந்துகொண்டிருந்த நோயாளர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். களுத்துறை பிரதேசத்தை சேர்ந்த 39 வயதுடைய பெண்னொருவரும் காலி பிரதேசத்தை சேர்ந்த 78 வயதுடைய ஆணொருவரும் இவ்வாறாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதேவேளை அந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த மேலும் 18பேர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆன்மீக சக்தியில் நோய்களைக் குணப்படுத்துவதாக கூறப்படும் நபர் ஒருவரால் ஹொரவப்பொத்தானை மத்திய மகா வித்தியாலயத்தின் மைத்தானத…

  5. இருமுறை மண்ணைக் கவ்விய இங்கிலாந்து இளவரசர் (வீடியோ) தென்னாபிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து இளவரசர் ஹரி, அந்நாட்டின் தலை நகரான கேப் டவுனில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய போலோ எனப்படும் குதிரை மீது சவாரி செய்தபடி விளையாடப்படும் விளையாட்டில் கலந்து கொண்டார். போட்டியின் போது, எதிர்பாராத விதமாக அவர் குதிரையிலிருந்து கீழே விழுந்து அவசரமாக மீண்டெழுந்தார். அப்போது கூட்டத்தில் ஆங்காங்கே மெல்லிய சிரிப்பு சத்தம் கேட்டது. ஆனால், மீண்டும் குதிரை மீதேறிய ஹரி திரும்பவும் கீழே விழுந்ததும், கூட்டத்தில் சிரிப்பு சத்தம் சற்று பலமாகவே கேட்டது. இந்நிலையில், இளவரசர் குதிரையிலிருந்து கீழே விழுந்திருப்பது சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருக…

  6. சோவியத் யூனியனை நிர்மானித்தவரான மாபெரும் கம்யூனிச தலைவர் லெனினின் உடல் அவர் இறந்து 88 ஆண்டுகளுக்குப் பிறகு அடக்கம் செய்யப்படவுள்ளது. லெனினின் உடல் பதப்படுத்தப்பட்ட நிலையில் கடந்த 88 ஆண்டுகளாக வைக்கப்பட்டுள்ளது. மாஸ்கோவின் செஞ்சதுக்கத்தில் அமைந்துள்ள நினைவிடத்தில் லெனின் உடல் கடந்த 88 வருடகாலமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் ஏராளமான மக்கள் இந்த உடலைப் பார்வையிட்டு வருகின்றனர். சோவியத் யூனியன் சிதறுண்டு போன பின்னரும் கூட லெனின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தற்போது லெனின் உடலை அடக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது. 1924ம் ஆண்டு 53வது வயதில் லெனின் மரணமடைந்தார். அவரது உடலை இத்தனை காலமாக அடக்கம் செய்யாமல் வைத்திரு…

  7. மதுரை: இளைய ஆதீனமான நித்யானந்தாவை வரவேற்க வேண்டிய அவசியமில்லை. அது ஆதீன மரபும் கிடையாது. கட்டுண்டோம், பொறுத்திருப்போம், காலம் மாறும், என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் கூறியுள்ளார். மதுரை ஆதீன மடத்தின் 293-வது இளைய ஆதீனமாக நித்யானந்தா நியமிக்கப்பட்டார். இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக நித்யானந்தா மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு கைலாய யாத்திரைக்கு புறப்பட்ட நித்யானந்தா, நடிகை ரஞ்சிதா ஆகியோரின் பாஸ்போர்ட்டுக்கள் டெல்லியில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைலாய யாத்திரையை முடித்துவிட்டு நித்யானந்தா, தனது சீடர்களுடன் நேற்று காலை மதுரை திர…

  8. 38 தடவைகள் ஈய குண்டுகளைக் கொண்ட துப்பாக்கியால் சுடப்பட்டு உயிருக்காக போராடிய தனது நண்பனான நாயை 3 நாட்கள் அதனருகே காவலிருந்து மற்றொரு நாய் காப்பாற்றிய நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம் கிரேக்கத்தீவான ஸகின் தோஸில் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கியால் சுடப்பட்டு சாக்கடை கால்வாயொன்றில் போடப்பட்டிருந்த 4 வயதான ஆண் நாயைக் கண்ட 2 வயதான பெண் நாய் அதனருகே 3 நாட்களாக எந்தவித உணவும் உண்ணாது காவலிருந்ததுடன் அந்நாயை காப்பாற்ற அவ்வழியாக செல்வோரின் கவனத்தை ஈர்க்கும் மூலம் குரைத்துக் கொண்டிருந்துள்ளது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற ஒருவர் அந்நாய்க்கு உதவ முன் வந்ததையடுத்து அந்நாய்கள் மீட்கப்பட்டு கிரேக்க மிருக மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் காயமடை…

  9. ஒரே இரவில் மனிதர்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் என மேற்கு ஆபிரிக்காவில் உள்ள கிராமம் ஒன்றில் 37 ஆண்டுகளுக்கு முன்பு அனைவரும் மரணம் அடைந்த சம்பவம் இப்போதும் பீதியை ஏற்படுத்துகிறது. 1986ஆம் ஆண்டு ஒகஸ்ட் 21ஆம் திகதி கேமரூன் நாட்டில் உள்ள சிறிய கிராமமான நியோஸ் பகுதியில் இரவு 9 மணிக்கு தொலைவில் இடி விழுந்தது போன்ற சத்தம் கேட்டது. அடுத்த நாள் காலை அந்த கிராமத்தில் இருந்த அனைவரும் இறந்து போனார்கள். ஒரே இரவில் சுடுகாடான கிராமம்… மனிதர்கள் முதல் பூச்சிகள் வரை எங்கும் மரணம்! ஒருவர் மயக்கமான நிலையில் இருந்தார். அவர் என்ன நடந்தது என்று பார்க்க சென்ற போது, பெண் ஒருவர் சடலங்களுக்கு நடுவே அழுதவாறு கிடந்துள்ளார். பெண்ணின் குடும்பத்தினர், உறவினர்கள் 30 பேர் இறந்த…

  10. அமெரிக்காவில் விமானம் ஒன்று தரையிறங்கிய நேரத்தில் அறையிலிருந்து தீப்பொறிகள் கசிந்ததால், அதிலிருந்த பயணிகளை விமான இறக்கையில் நிற்க வைத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் Los Angeles நகரத்திலிருந்து Allegiant என்ற Flight 330 விமானம் 163 பயணிகள் மற்றும் 6 விமான குழுவினருடன் Idaho நகருக்கு நேற்று புறப்பட்டுள்ளது. மாலை வேளையில் Boise விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முயன்றபோது, விமான அறைகளில் ஒன்றிலிருந்து தீப்புகை மற்றும் தீப்பொறிகள் வெளியேறுவதை விமான குழுவினர் கவனித்துள்ளனர். இருப்பினும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய விமானிகள், பயணிகள் சிலரை அவசர அவசரமாக விமானத்தில் இறக்கைக்கு அருகில் இருந்த கதவு வழியாக வெளியேற்றினர். வெளியே வந்த சுமார் 25 பயணிகளை விமானத்…

    • 0 replies
    • 390 views
  11. அமெரிக்காவில் மில்லியன் கணக்காண டாலர் மதிப்பிலான மோசடி குற்றச்சாட்டில் அமெரிக்கவாழ் இந்திய தொழில்அதிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக இதில் தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. லஞ்சம் வழங்குதல், நிவாரணநிதி மோசடி, அமெரிக்காவை ஏமாற்றுவதற்கு சதி மற்றும் ஆதாரங்கள் சேதப்படுத்துதல் என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் இந்திய தொழில் அதிபர் ஹரேந்திர சிங் மீது சுமத்தப்பட்டு உள்ளது. மோசடி வழக்கு தொடர்பாக ஹரேந்திர சிங் கைது செய்யப்பட்டுஅமெரிக்க மாஜிஸ்திரேட் காத்லீன் தோம்லின்சொன் முன் ஆஜர்படுத்தப்பட்டார். நியூயார்க்கின் நாச்சு கவுண்டியில் ஹரேந்திர சிங் உணவகம் நடத்திவந்து உள்ளார். நாட்டில் உணவகத்தை செயல்படுத்த சலுகைகளை பெற்று உள…

  12. பாட்டியின் வீரம் . Sunday, 16 March, 2008 12:18 PM . நியூயார்க், மார்ச். 16: அமெரிக்காவில் 83 வயது மூதாட்டியிடம் வாலாட்ட நினைத்த வாலிபர்கள் வசமாக வாங்கி கட்டி சென்றிருக்கின்றனராம். . அந்நாட்டில் உள்ள பெட்ரோல் நிலையம் ஒன்றில் தனது வாகனத்திற்கு எரிபொருள் நிரப்பிக் கொண்டிருந்தபோது அந்த மூதாட்டி அருகே வாலிபர் ஒருவர் வந்து நின்று பணத்தை எடுக்குமாறு மிரட்டினாராம். பாட்டி தன்னிடம் பணமில்லை என்று கூறி விடவே, அந்த வாலிபர் பாட்டியின் கைப்பையை பறித்துக் கொண்டு ஓட பார்த்தாராம். ஆனால் பாட்டி கைப்பையை விடாமல் பிடித்துக் கொண்டபடி எரிபொருள் குழாயை வாலிபர் மீது திருப்பி விட்டாராம். இதற்குள் மற்றொரு வாலிபர் ஓடி வந்து பாட்டியின் பையை பறிக்க முற்பட்டாராம். பாட்ட…

    • 0 replies
    • 813 views
  13. எமது இனம் சுதந்திரமாகச் சுவாசிப்பதற்காக, தமது மூச்சைக் காற்றில் கலந்தவர்கள் மாவீரர்கள். அவர்களை நாம் நிதமும் நினைந்துருகினாலும் அவர்களின் தியாகத்தையும் வீரத்தையும் உலகுக்கு எடுத்துக் காட்ட வேண்டிய கட்டாயக் கடமையும் எமக்கு உண்டு. அதற்கான பேரெழுச்சி மிகுந்த ஒரு நாளே தமிழீழத் தேசிய மாவீரர்நாள். நவம்பர் மாதம் மாவீரர் மாதமாகவும,; நவம்பர் 25,முதல் 27ம் திகதிவரை மாவீரர் எழுச்சி நாட்களாகவும், தமிழீழத்தின் தேசிய எழுச்சி நாளாக விடுதலைப்புலி வீரர்களில் முதல் வீரச்சாவெய்திய மாவீரர் சத்தியநாதனின் ( சங்கர் ) நினைவு நாளான நவம்பர் 27ஐ தமிழீழ தேசம் மாவீரர்நாளாக பிரகடனம் செய்துள்ளது. இதனை புலத்தில் வாழும் தமிழீழ மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். மாவீரர் மாதம் முதற்கொண்டு மாவீரர்…

  14. இன்று (05) லண்டனில் சனல் 4 தயாரித்துள்ள புதிய கொலைக்களங்கள் ஆவணப் படம் வெளியிடப்படவுள்ளது. குறித்த இந்த ஆவணப்படத்தை காலம் மக் ரே அவர்கள் வெளியிடவுள்ளார். பிரித்தானியாவில் உள்ள சனல் 4 கின் முக்கிய ஊடகவியலாளர்கள், அதிதிகள், புத்திஜீவிகள் மற்றும் பிற ஊடகவியலாளர்கள் இதில் கலந்துகொள்ள இருக்கிறார்கள். இம் மாதம் ஜெனீவா மனித உரிமைக் கழகத்தில் அமர்வுகள் இடம்பெறவுள்ளது. அதற்கு முன்னதாக இந்த ஆவணப்படத்தை வெளியிட்டு , அதனூடாக ஒரு அதிர்வலைகளை ஏற்படுத்த தற்போது பிரித்தானியா தாயாராகியுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே , இன்றைய தினம் கொலைக்களங்கள் வெளியிடப்படவுள்ளது. இந்த குறிப்பிட்ட ஆவணப்படத்தில் வரும் சில பிரத்தியேகக் காட்சிகளை அதிர்வு இணையமே சனல் 4 தொலைக்காட்சிக்கு வழங்கியுள்ளதும் குறிப்பிடத…

  15. புத்தளம் கொட்டுக்கச்சி தங்கஸ்வெவ பகுதியில் விகாரையொன்றில் அரியவகை உயிரினமான தேவாங்கு குட்டியொன்று உயிருடன் மீட்டு புத்தளம் பிராந்திய வனஜீவராசிகள் அலுவலகத்தில் விகாராதிபதியினால் ஒப்படைக்கப்பட்டது. குறித்த உயிரினமான தேவாங்கு நிகாவெரெட்டிய கால்நடை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். இவ் உயிரினம் அடர்ந்த காடுகளிலே வாழ்ந்து வருவதாகவும் குறித்த உயிரினத்தை மக்களுக்கு எழிதில் காணக்கூடிய வாய்ப்புகள் கிடைப்பதில்லையெனவும் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர். உயிரினமான தேவாங்குகள் அதிகமாக வேட்டையாடப்படுவதால் இவை இயற்கையில் அழிவடைந்து வருகின்றதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர…

  16. பிரபல ஃபோர்ப்ஸ் (Forbes India) இந்தியா இதழின் 2010-ம் ஆண்டின் சிறந்த மனிதர்களுள் ஒருவராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சர்வதேச அளவில் மிகப் புகழ்பெற்ற பத்திரிகை ஃபோர்ப்ஸ். வர்த்தக உலகின் பைபிள் என்று புகழப்படுவது. இந்த பத்திரிகையின் இந்தியப் பதிப்பின் 2010 -ம் ஆண்டு சிறப்பிதழில் இந்தியாவின் சிறந்த மனிதர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, பீகாரின் சாதனை முதல்வர் நிதீஷ்குமார், மத்திய அமைச்சர் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், 3 இடியட்ஸ் தந்த ராஜ்குமார் ஹிராணி என 2010-ம் ஆண்டில் பல துறைகளில் சாதனைப் படைத்தவர்களின் பெயர்கள் அடங்கிய இந்தப் பட்டியலில், எந்திரன் மூலம் இந்திய சினிமாவை உலக அரங்கில் தலைநிமிரச் செய்த சூப்பர் ஸ்டா…

    • 0 replies
    • 684 views
  17. நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் திடீர் மரணம்..!! an hour ago பழமைவாதக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கோர்ட் பிரவுன் நாடாளுமன்ற வளாகத்தில உள்ள அவரது அலுவலகத்தில் திடீரென உயிரிழந்துள்ளார். 57 வயதாக அவர் நீண்ட காலமாக அரசியலில் இருந்து வந்துள்ளதுடன், 2004ஆம் ஆண்டில் முதற்தடவையாக நாடாளுமன்றுக்கு தேர்வு செய்யப்பட்டு, அரசியலில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான நிலையில் இவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து கட்சித் தலைவர்கள் பலரும் தமது அனுதாபங்களைப் பகிர்நது வருகின்றனர். இந்த சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் காலையில் ஹொக்கி விளையாடியதகவும், அதன்பின்னர் நாடாளுமன்றிற்கு வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்ததா…

  18. யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களைத் தீயிட்டுக் கொளுத்தியவர் கைது! யாழில் பெருந்தொகையான நாணயத் தாள்களையும் மோட்டார் சைக்கிளொன்றையும் தீயிட்டுக் கொளுத்தியவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் அராலி பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் நேற்றைய தினம் ஒரு தொகைப்பணத்துடன் தனது மோட்டார் சைக்கிளில் சென்று வட்டுக்கோட்டை பகுதியில் 5ஆயிரம் ரூபாய் தாள்கள் சிலவற்றை வீசியுள்ளார். பின்னர் தனது வீடு நோக்கி திரும்பியவர் வீட்டுக்கு அருகில் இருந்த மோட்டார் சைக்கிளொன்றையும் தன் கைவசம் இருந்த மிகுதி பணத்தினையும் வீதியில் போட்டு தீ வைத்துள்ளார். இச் சம்பவம் தொடர்பில் குறித்த நபரின் மனைவி வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரை…

  19. பெண் சாமியின் ஆறு கொலை... போலிச் சாமியார்களில் ஆணும் பெண்ணுமாக பக்த கோடிகளுக்கு பட்டை நாமம் சாத்திய பலரை நாம் பார்த்துப் பழகியிருக்கிறோம். காம களியாட்டம் தாண்டி கொலை வரை போன சாமியார்களும் புதுசில்லை. ஆனால் பெங்களுரு போலீசின் பிடியில் இப்போது இருக்கிற மல்லிக சாமியாரின் கொள்ளை கொலை பிரதாபங்கள் முதுகெலும்பை உறையவைக்கும் ரகம் அதை படிப்படியாக பார்ப்போம். பெங்களுருக்கு அருகே உள்ள படிக்கட்டே என்ற ஊரைச் சேர்ந்த கனுமாப்பா என்பவரின் மனைவி மல்லிக. இவர்களிற்கு இரண்டு மகள்கள். ஒரு மகன் படிக்கட்டேவில் உள்ள பெண்களை ஒருங்கிணைத்து வாரந்தோறும் ஏலச் சீட்டு நடத்திவந்தார் மல்லிகா. ஒரு கட்டத்தில் ஏலத்தில் சீட்டெடுத்தவர்கள் பணம் கட்டாமல் போக..மல்லிக தலையில் அத்தனை சும…

  20. தொலைந்துபோன 39 ஆண்டுகள் 1980ம் ஆண்டு. அவரது வயது24. அவர்,அவரது பெற்றோருடன் வசிக்கிறார். ஆனால் அவரது உண்மையான வயது 68. லூசியானோ டி அடாமோ திருமணமானவர், ஒரு மகன் இருக்கிறான். பெற்றோரை விட்டு விலகி நீண்ட காலங்களாகி விட்டன. இப்பொழுது அவரைப் பற்றி இத்தாலியின் ஊடகங்கள் தலைப்புச் செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. லூசியானோ டி அடாமோ தனது வாழ்க்கையில் கடந்த 39 ஆண்டுகளை மறந்து விட்டார் என்பதே அந்தச் செய்தி. 2019ம் ஆண்டு, ரோம் நகரில் நடந்த ஒரு கார் விபத்தில் சிக்கி லூசியானோ டி அடாமோ, தனது நினைவுகளை இழந்து கோமா நிலைக்குப் போய்விட்டார். சில நாட்கள் கோமா நிலையில் இருந்த அவர் மீண்டும் விழித்தபோது அவருக்கு எல்லாமே அந்நியமாக இருந்தன. அவரால் தனது மனைவியைய…

  21. ஜாம்பியாவில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி கைது! ஜாம்பியாவில், புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஒரு டஜன் கைதிகளை விடுவித்ததாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். துப்பறியும் இன்ஸ்பெக்டர் டைட்டஸ் ஃபிரி செவ்வாய்க்கிழமை காலை “போதையில் இருந்த நிலையில்” செல் சாவிகளை வலுக்கட்டாயமாக கைப்பற்றினார் என்று ஜாம்பியாவின் பொலிஸ் சேவை புதன்கிழமை செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. பிறகு, அந்த அதிகாரி ஆண் மற்றும் பெண் செல்களை திறந்து, சந்தேக நபர்களை வெளியேறுமாறு அறிவுறுத்தி, அவர்கள் புத்தாண்டை கொண்டாட சுதந்திரமாக இருப்பதாக கூறியதாக பொலிஸ் அறிக்கை தெரிவிக்கிறது. தலைமறைவாக உள்ள 13 கைதிகளுக்கு உண்டான த…

  22. 300 க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்கள் சிறை. பிரான்ஸில் 300 க்கும் மேற்பட்டோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகாலம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஜோஎல் லெ ஸ்குவார்னெக் (Joël Le Scouarnec) என அழைக்கப்படும் 74 வயதான நபருக்கே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 1990களிலிருந்து 2017 வரையிலான காலப்பகுதியில், தன்னிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த சுமார் 300 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த ஜோல் லே? கடந்த 2017ஆம் ஆண்ட…

  23. குறித்த எலும்புக்கூடுகள் கிடைக்கப்பெற்ற இடங்களைப் பார்க்கும் போது பண்டைய மனிதர்கள் அடக்கம் செய்தல், சடங்குகள் செய்வதற்கு போதுமான அதிநவீன அறிவுடையவர்களாக இருந்துள்ளார்களா? என்பது பற்றிய விவாதத்திற்கு தம்மை இட்டுச் செல்வதாக அறிவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஈராக்கின் குறித்த சனிதர் குகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்ட எழும்புக் கூடுகள் போன்று 1950 மற்றும் 1960களில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது 10 நியண்டர்டால் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆகியோரின் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. குறித்த எலும்புக்கூடு இரண்டு தசாப்தங்களின் பின் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நியண்டர்டால் எலும்புக்கூடு ஆகும். இந்த எலும்புகள் அவற்றின் அசல் நிலைகளிலிருந்த…

    • 0 replies
    • 352 views
  24. காசிமேடு, திருவொற்றியூர் பகுதிகளில் கடல் சீற்றம் நேற்றும் அதிகமாக இருந்தது. வீடுகளின் மீது அலைகள் ஆக்ரோஷமாக மோதுகின்றன. சென்னை காசிமேட்டில் கடல் சீற்றம் காரணமாக வீடுகளில் கடல் நீர் புகுந்தது. கரையில் இருந்த கங்கை அம்மன் கோயில் அலையில் சிக்கி தரைமட்டமாகி கிடக்கிறது. கடல் சீற்றத்தால் அரிக்கப்பட்டு, படுமோசமாக காணப்படும் சூரியநாராயணா சாலை. சென்னை, நவ. 16: திருவொற்றியூர், காசிமேடு பகுதிகளில் கடல் சீற்றம் காரணமாக 25 வீடுகளில் நீர் புகுந்தது. 200க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலையோரங்களில் தங்கி பரிதவிக்கின்றனர். கரையோரம் இருந்த கங்கையம்மன் கோயில், அலைகளில் சிக்கி தரைமட்டமானது. திருவொற்றியூர், எண்ணூர், காசிமேடு பகுதிகளில் கடந…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.