செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7127 topics in this forum
-
ஜப்பானில் மீண்டும் 9.0 புள்ளி ரிக்டர் அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் 112 அடி உயரத்துக்கு (34 மீட்டர்) சுனாமி அலைகள் தாக்கும் அபாயம் உள்ளது. அப்படி நடந்தால் டோக்கியோ முதல் தென்மேற்கு பகுதியில் உள்ள குயுஷு தீவு வரை பாதிப்பு இருக்கும். பல நகரங்கள் மூழ்கிவிடும் என்று நிபுணர் குழு எச்சரித்துள்ளது. ஜப்பானில் கடந்த ஆண்டு பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சுனாமி தாக்குதலில் பல நகரங்கள் சேதம் அடைந்தன. அப்போது 9.0 புள்ளி ரிக்டர் அளவில் பூகம்பம் பதிவானது. இதில் 20 ஆயிரம் பேர் பலியாயினர். புகுஷிமா நகரில் இருந்த அணு உலைகள் வெடித்து சிதறின. பயிர்கள், மனிதர்கள் கதிர்வீச்சில் பாதிக்கப்பட்டனர். ஓராண்டு முடிந்த நிலையில், பூகம்பம், சுனாமி பாதிப்பு குறித்து விரிவான ஆய்வு…
-
- 0 replies
- 532 views
-
-
உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரிய, உலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில், ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை அவர்கள் இம்முறை இடம்பிடித்துள்ளார். 71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில் , திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை, நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது. சிரியா மற்றும் சிறிலங்காவில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ்,1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில், றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்…
-
- 0 replies
- 291 views
-
-
மார்ச்சு31ம் நாளன்று கிடைத்த தகவலின்படி தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற் படையின் தாக்குதல்கள் தொடர்வதாக அறியமுடிகிறது. கச்சதீவுக் கடற் பிராந்தியத்தில் நடுக் கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் விரட்டியடிக்கப் பட்டுள்ளனர். ஊமைக் கோட்டான் போன்ற பிரதமரும், ஆயுதக் கொள்வனவில் ஊழல் தொடர்பான விவகாரத்தில் கவனஞ் செலுத்தும் பாதுகாப்பு அமைச்சரும், தெலுங்கானப் பிரச்சனைக்கு தீர்வு காண முடியாமல் தவிக்கும் உள்துறை அமைச்சரும் தமிழக மீனவர்கள் பற்றி கவலைப் படுவதாகத் தெரியவில்லை. வெளிவிவகார அமைச்சரோ இந்த பிரச்சனையைப் பேசித் தீர்க்கப் போவதாக அடிக்கடி கூறுகிறார். ஆனால் கொழும்பு சென்று திரும்பிய பின் இது பற்றிக் கேட்டபோது மீனவர் பிரச்சனை பற்றிப் பேசுவதற்கு அவகாசம் கிடைக்கிவில்ல…
-
- 0 replies
- 364 views
-
-
கொழும்பு: இலங்கையில் தமிழர்கள் வழிபடும் சிவன் கோவிலிலுக்குள் புகுந்து சிங்கள ராணுவ வீரர்கள் ரகளையில் ஈடுபட்டனர். கோவிலுக்கு வரும் பக்தர்களை அவர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வருகின்றனர். இலங்கை கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் பிரசித்தி பெற்ற சிவன் கோவில் ஒன்று உள்ளது. அந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான தமிழர்கள் வருவார்கள். இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட சிங்கள ராணுவ வீரர்கள் அந்த கோவிலுக்குள் அதிரடியாகப் புகுந்து கருவரை அருகே சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த ஆண், பெண் பக்தர்களை அடித்து விரட்டினர். பிறகு அர்ச்சகரிடம் சென்று கோவிலுக்குள் பாரம்பரிய புத்தர் சிலை ஒன்று உள்ளது, அதை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டனர். அவ்வாறு ஒப்படைக்காவிட்டால் கோவிலை இடித்து தர…
-
- 0 replies
- 404 views
-
-
இலங்கைக்கு வந்ததாக சந்தேகிக்கப்படும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களையும் ஏனைய ஆயுதக்குழுக்களையும் சட்டவிரோத ஆயுதங்களையும் கண்டுபிடிக்கும் முகமாக கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் தேடுதல் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிய வருகிறது. திருகோணமலை அன்புவழிபுரம், திருகோணமலை – அநுராதபுரம் சந்தி ஆகிய பகுதிகளில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். ஈ.பி.டி.பி. உறுப்பினர் ஒருவரின் கொலை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் என்று சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர், இந்தியாவிலிருந்து தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இலங்கை வந்திருப்பதாக கூறியதைத் தொடர்ந்து கிழக்கு மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவ…
-
- 0 replies
- 462 views
-
-
இந்தியாவில் பெருமளவில் விற்பனையாகும் தொழிற்சாலை உற்பத்தி உணவுப் பொருட்களில் உப்பும் கொழுப்பும் இனிப்பும் அளவுக்கதிகமாக இருப்பதாகவும், இவற்றை அதிகம் உண்டால் இளைஞர்களுக்கு பெரும் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் என்றும் இந்தியாவில் செய்யப்பட்டுள்ள புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. ஜங்க் புட் என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுகின்ற உடல் நலத்துக்கு தீங்கான உணவு வகைகளில், trance fat என்ற எளிதில் கெட்ட கொழுப்பாக மாறக்கூடிய கொழுப்பும், உப்பும், இனிப்பும் மிக அதிகமாக உள்ளது என்று இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. இவற்றை உண்ணும் வழக்கம் உடையவர்களுக்கு உடல் எடை அளவுக்கதிகமாகக் கூடிப்போகவும், இருதயக் கோளாறு, நீரிழிவு நோய் மற்றும் பிற நோய்கள் வரக்கூடிய ஆபத்து அதிகம் என்றும்…
-
- 0 replies
- 944 views
-
-
2009 ஆண்டு மே-18 இறுதி யுத்தத்தின் போது சிங்கள காட்டுமிராண்டித்தனமான ராணுவத்தினரால் பல உலக வல்லரசு நாடுகளின் துணை கொண்டு பல ஆயிரம் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இறுதி யுத்தத்தின் முடிவு என்று கூறப்படும் 17-18 திகதிகளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி தமிழ் மக்கள் குடும்பம் குடும்பமாகவும் சில சமயங்களில் ஒரு குடும்பத்தின் பரம்பரையே படுகொலை செய்யப்பட்டுள்ளமையும் நடந்தேறியுள்ளது. யுத்த இறுதி நாளில் மட்டும் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் சிங்கள ராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட உலகநாடுகளால் தடைசெய்யப்பட்ட கொத்துக்குண்டுகள்,நச்சு குண்டுகள்,ஒரு வகையான அணு ஆயுதங்களால் அப்பாவி தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு முள்ளிவாய்க்கால் ம…
-
- 0 replies
- 295 views
-
-
சரிதம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் இற்றைவரையில் தேசியத்திற்கான பயணத்தில் பயணிக்கும் தலைவர்களின் பாதைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கின்றது. இதனால் ஆசியர் பிடத்திற்கு நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசியர் பீடத்தினர் துரோகிகள் என்றும் சில கட்சிகளின் எடுபிடிகள் என்றும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் கூட பொது நோக்கம் அறுவடை என்பதால் தனிப்பட்ட விமர்சனங்களைப் பெரிதாக தலைகளில் தூக்கிக் கொண்டு சரியானதைப் பிழை என்றோ, பிழையானதை சரி என்றோ தடம் மாறுவதற்கு சரிதம் ஆசியர் பீடம் தயார் நிலையில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் சரிதம் இணையத்த தளத்தினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு…
-
- 0 replies
- 300 views
-
-
சென்னை தாம்பரத்தில் நேற்று மாலை 6 மணியளவில் பெரியார் திராவிடர் கழகத்தின் கொள்கைவிளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்புரையாற்றிய பெரியார் திராவிடர் கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி தனது உரையில் அமெரிக்காவின் ஐநா தீர்மானம் பற்றியும், இராசீவ் காந்தி ஒப்பந்தத்தால் அழிவை நோக்கியுள்ள கூடங்குளம் நிலை பற்றியும், தனித்தமிழ்நாடு எண்ணத்தை தமிழக மக்களின் மனதில் எண்ண வைக்க்கும் இந்திய அரசின் நிலை பற்றியும் தெளிவாக கூறியுள்ளார். கொளத்தூர் மணி உரையினை கீழ்க்காணும் காணொளியில் காணவும்: www.Tamilkathir.com
-
- 0 replies
- 376 views
-
-
இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்படுகின்றதா என்பதனைக் கண்காணிக்க இலங்கையில் அலுவலகம் அமைக்கிறது மனித உரிமை சபை. ஐக்கிய நாடுகள் அமைப்பிற்கான, இலங்கைக் கிளையின் ஓர் அங்கமாக இந்த கண்காணிப்புக் காரியாலயம் இயங்கும் என சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இந்த காரியாலயத்தின் பணிகளை நேரடியாக கண்காணிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தக் காரியாலயத்தில் கடமையாற்றுவதற்காக விசேட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட உள்ளனர். உலகின் சில நாடுகளைச் சேர்ந்த நிபுணர்கள் இந்த உத்தியோகத்தர் குழுவில் அங்கம் வகிப்பார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. பிரேரணையில் பரிந்துரை செய்யப்பட்ட விடயங…
-
- 2 replies
- 888 views
-
-
இந்திய அரசு அதன் இராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை திரும்பப் பெற வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவுறுத்தி உள்ளது. ஐநா சபைக்கான சிறப்பு பிரதிநிதி கிறிஸ்டோப் ஹைன்ஸ் நேற்று (31) வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளார். மணிப்பூர், காஷ்மீர் மற்றும் சில வட கிழக்கு மாநிலங்களில் இராணுவ சிறப்பு அதிகார சட்டம் நடைமுறையில் உள்ளது. முக்கியமாக எந்தெந்த மாநிலங்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட போராட முனைகிறதோ அந்தந்த மாநிலங்களில் இந்த இராணுவ சிறப்பு சட்டம் நடைமுறையில் இருக்கும். இராணுவத்தின் துணை கொண்டு அரசு மாநில மக்களை அடக்கும். மணிப்பூர் மாநிலத்து மக்கள் அவர்களுக்கு என்று தனி இறையாண்மை உள்ளது என்றும் அவர்களுக்கு என்று இந்தியாவில் இருந்து வேறுபட்ட பண்பாட…
-
- 1 reply
- 526 views
-
-
ஒரு பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலம், அதை மெய்யாக்கிவிட முடியும் என்பதைத் தனது தாரக மந்திரமாகக் கொண்டு இருப்பவர் தி.மு.க. தலைவர் கருணாநிதி. கடந்த பல ஆண்டுகளாகவே ஒரு பொய்யை மீண்டும் மீண்டும் அவர் கூறுவதற்குக் காரணமே, மக்களின் மறதி மீது அவருக்கு இருக்கக் கூடிய அளவுகடந்த நம்பிக்கைதான்! ஐ.நா. மனித உரிமை ஆணையம் நிறைவேற்றியுள்ள தீர்மானத்தைப் பற்றி பேசுகையில், பழைய புழுத்துப்போன பொய்யைத் திரும்பவும் கூறி இருக்கிறார் கருணாநிதி. 'ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை நான் மனம் திறந்து பேச வேண்டுமேயானால், சகோதர யுத்தம்தான் தமிழீழம் உருவாவதைத் தடுத்துவிட்டது என்பது என்னுடைய கருத்து. யார் பெரியவர், இதை சாதிக்கிற முயற்சிகளில் வெல்லக்கூடியவர் யார் என்பதை நிலைநிறுத்துவதற்கா…
-
- 0 replies
- 412 views
-
-
தெருவோர வியாபாரிகள், சில ஓட்டல் ஊழியர்கள் சீனாவின் டாங்யாங் நகரில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் பக்கட்களுடன் அலைகின்றனர். எல்லாம்.. சின்ன பசங்களின் சிறுநீரை பிடித்து செல்வதற்குதான். அந்த சிறுநீரில் முட்டைகளை வேகவைத்து தெருவோரங்களில் விற்கின்றனர். உடல்நலத்துக்கு மிகவும் நல்லது என்று கூறுவதால், விற்பனை அமோகமாக நடக்கிறது. சீனாவின் ஜிஜியாங் மாகாணத்தின் கிழக்கு பகுதியில் உள்ளது டாங்யாங் நகரம். மிகவும் பிரபலமான நகரம். இங்குள்ள தொடக்க பள்ளிகளில் ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமிகள் படிக்கின்றனர். பள்ளி முடியும் நேரத்தில் குழந்தைகளை அழைத்து செல்ல பெற்றோர் கும்பலாக காத்திருக்கின்றனர். அவர்களுடன் தெருவோர வியாபாரிகளும் காத்திருக்கின்றனர். பள்ளி டாய்லெட்டில் வைத்துள்ள பக்கெட்…
-
- 8 replies
- 1.6k views
-
-
எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை ? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது ?இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை ? இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது. மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து,மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது. அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது,அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் ந…
-
- 0 replies
- 2.2k views
-
-
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- துன்னாலையில் புலிகளின் முன்னாள் போராளியின் குழந்தையை கடத்தும் முயற்சி முறியடிப்பு:- குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- வடமராட்சியின் துன்னாலைப் பகுதியியில் விடுதலைப் புலிகளது முன்னாள் பெண் போராளியொருவரது இரண்டரை வயதேயான ஆண் குழந்தையொன்றை கடத்த மேற்கொண்ட முயற்சியொன்று இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் கடற்புலிகளது அமைப்பின் அரசியல் பிரிவு முக்கியஸ்தராக இருந்த குறித்த பெண் போராளி இறுதி யுத்த நடவடிக்கைகளின் போது காயமடைந்து அங்கவீனமுற்றுள்ளார். அவரது கணவரும் உயிரிழந்துள்ளார். இன்று காலை குறித்த கடத்தல்கார சந்தேக நபர்கள் இப்பெண் போராளியின் வீட்டிற்கு சென்று தமிழ் அரசியல் கட்சியொன்றின் பிரமுகர் பெயரினை குறிப்பிட்டு குழந்…
-
- 0 replies
- 364 views
-
-
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கத் தீர்மானம் தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது. இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்த இந்தத் தீர்மானம் வழிவகுக்கும் என அக்கட்சி தெரிவித்துள்ளது. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாரியளவில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் அதுல் அன்ஞான் குறிப்பிட்டுள்ளார். புனர்வாழ்வு நடவடிக்கைகளை மட்டுமன்றி தமிழ் மக்களுக்கு தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் விவகாரத்திலும் இலங்கை அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார். www.eeladhesam.com
-
- 0 replies
- 488 views
-
-
ஒரு விடுதலை இயக்கம் தனது போராட்டத்தை முன்னெடுத்துக்கொண்டுபோகும் பாதையில் அதற்கு முதலில் கரம்கொடுக்ககூடியதும் அதனுடன் பேசக்கூடியதும் உலகின் இன்னொரு திசையில் நடந்துகொண்டிருக்கும் இன்னொரு விடுதலை அமைப்புதான். இவர்களால் புரிந்துகொள்ளக்கூடிய மொழி ஒன்று உண்டு. அதுதான் அடக்குமுறைக்கும் அடிமைத்தனத்துக்கும் எதிரான போராட்டம் என்ற மொழி. ஆனால் வெறுமனே ஒரு விடுதலை அமைப்பு என்ற கடித இலட்சினை மட்டுமே ஒரு விடுதலை இயக்கத்துக்கு நெருக்கமாக மற்றைய விடுதலை அமைப்புகள் வருவதற்கு போதுமானவை அல்ல. தமிழ் புதிய புலிகள் இயக்கத்தையும் அதன் வரலாற்றுப் பாதையில் பெயர் மாற்றம்செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும் ஆரம்பித்த தேசியத் தலைவர் இதனை நன்கு புரிந்திருந்தார். விடுதலைப்புலிகள் இயக்க…
-
- 0 replies
- 447 views
-
-
சிறீலங்கா இனவாத அரசுக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை 24 நாடுகளால் ஆதரிக்கப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையிலும் சிறீலங்காவில் சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான வன்கொடுமைகள் நின்றபாடில்லை. அதுதொடர்கதையாகவே இருந்து வருகின்றது. வலிகாமம் வடக்கில் தொடந்தும் உயர்பாதுகாப்பு வலயங்களாகவுள்ள பகுதிகளை, படையினர் இறுக்கமான முறையில் மேலும் மேலும் பலப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கி உள்ளனர். ஒட்டகப்புலம் பிரதேசத்தில் 23 கிராம சேவகர் பிரிவுகள் உள்ளன. இங்கிருந்து சுமார் இரண்டரைக் கிலோ மீற்றர், அதாவது வசாவிளான் வரைக்கும் கொங்றிட் தூண்கள் நாட்டப்பட்டு முள்ளுக் கம்பி வேலிகளை படையினர் அமைத்து வருகின்றமை தெரிந்ததே. வலிகாமம், வடக்கு உயர்பாதுகாப்பு வ…
-
- 0 replies
- 356 views
-
-
புது வருடம் 02 - 04 - 2012 பொதுவாக தைமாதம் முதாலம் திகதியே ஆங்கில புதுவருடமாக பார்க்கப்படுகின்றது. தமிழர்கள் தை மாதம் 14 ஆம் திகதியை இல்லை சித்திரை 14 ஆம் திகதியை புதுவருடமாக பார்க்கின்றோம். ஆனால், வர்த்தக ரீதியில் 02 -04 -2012 அன்றே புதுவருடமாக பார்க்கப்படுகின்றது. அன்று நாலாவது காலாண்டு முடிவடைந்தது. நிறுவனங்கள் தமது கணக்குப்புத்தகத்தை மூடி புதிய ஆண்டினை திறக்கின்றன. பல நிறுவனங்கள் தமக்குள் உள்ள பொருளாதார நிலைமைகள் காரணமாக பலரை இன்றுடன் வேலையால் நிறுத்தியுள்ளன. அதேவேளை பல நிறுவனங்கள் பலரை புதிதாக வேலைக்கு அன்று அமர்த்தவுள்ளன.
-
- 0 replies
- 467 views
-
-
தற்போது லண்டனில் உள்ள பிரசன்ன டீ சில்வா இலங்கைக்கு தப்பியோடும் நிலை தோன்றியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. இன்று மாலை பிரித்தானிய நேரம் 7.00 மணிக்கு சனல் 4 தொலைக்காட்சி இது தொடர்பான செய்தி ஒன்றை ஒளிபரப்ப உள்ளது. தற்சமயம் இலங்கையின் சிறப்புத் தூதுவராக பிரித்தானியாவில் தங்கியுள்ள பிரசன்ன டி சில்வாவுக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டுள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் பிரசன்ன டீ சில்வா இராணுவ அதிகாரியாகக் கடமையாற்றியவேளை அவர் இன அழிப்பில் ஈடுபட்டார் என்றும் மற்றும் சட்டத்துக்குப் புறம்பான கொலைகளைச் செய்தார் என்றும் அவர்மேல் வழக்குப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. ஊர்ஜிதமற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில், இதனை விசாரிக்க பிரித்தானியப் பொலிசார் ஒத்துக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.…
-
- 2 replies
- 550 views
-
-
யாழ்.கொக்குவில் கலட்டி சந்திப் பகுதியில் இராணுவத்தினர் நிலைகொண்டிருந்த முகாம் காணியினுள் இராணுவத்தினரால் புத்தர் கோவில் நீண்டகாலமாக அமைக்கப்பட்டிருந்தமை தற்போது அம்பலமாகியிருக்கின்றது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சமாதான காலப் பகுதியில் பல்கலைக்கழக மாணவர்களைக் கண்காணிப்பதற்காக யாழ்.பல்கலைக்கழக விடுதிகளை அண்மித்த குறித்த பகுதியில் இராணுவத்தினரால் நிரந்தர முகாம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் அருகாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட அப்பக்கடை பல்கலைக்கழக மாணவர்களால் அடித்துச் சேதமாக்கப்பட்டிருந்தமையும் தெரிந்ததே. இந் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவ முகாமின் ஒருபகுதிக்காணியில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியிருக்கின்றனர். இராணுவத்தினர் வெளியேறியதை அ…
-
- 0 replies
- 345 views
-
-
பொதுவாக நம்மூர்களில் தான் இப்படி கொடூரமான தண்டனைகளை வழங்கும் அப்பாக்கள் இருக்கிறார்கள். ஆனால் மேலை நாடுகளிலும் இவ்வாறு இருக்கின்றார்கள் என்பது தான் ஆச்சரியத்தைத் தருகின்றது. தனது மகனின் கழுத்தில் சங்கிலியால் போட்டு பிணைத்து ஆமைப் பூட்டுப் போட்டு பூட்டி வைத்த தகப்பன் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாடசாலைக்குச் செல்லாமல் கட் அடித்து விட்டு கொம்பியூட்டர் கேம் விளையாடிய தனது 13 வயதேயான மகனை சங்கிலியால் கட்டி வைத்து தண்டனை கொடுத்துள்ளார் குறித்த கோபக்காரத் தந்தை. கம்போடியாவில் தான் மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு மணிநேரங்களுக்கும் மேலாக தண்டனையை அனுபவித்த சிறுவனை அயலவர்கள் பொலிஸாரின் உதவியுடன் மீட்டனர். பொலிஸார் குறித்த சிறுவனின் கழுத்தில் இருந்த ஆமைப்பூட…
-
- 6 replies
- 617 views
-
-
கிழக்கு மாகாணத்தில் உள்ள வறிய மக்களை மேம்படுத்துவதற்காக முன்வந்துள்ள அரசசார்பற்ற நிறுவனங்களை, அச்சுறுத்தி, கிழக்கின் முக்கிய அரசியல்வாதி மற்றும் அவரது சகாக்கள் கோடிக்கணக்கில் கப்பம் கோரி வருவதால், அந்த நிறுவனங்கள் தமது பணிகளை மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. தமக்கு கப்பம் கொடுக்கவில்லை என்றால், கிழக்கில், எந்த பொது வேலைத்திட்டங்களையும் செய்ய அனுமதிக்க போவதில்லை என கூறி, குறித்த அரசியல்வாதியின் சகாக்கள், அரசசார்பற்ற நிறுவனங்களை அச்சுறுத்தி வருகின்றனர். மட்டக்களப்பில் உள்ள அரசசார்பற்ற நிறுவனம் ஒன்றின் அலுவலகத்துடன் அடிக்கடி தொலைபேசியில் தொடர்புக்கொள்ளும் சம்பந்தப்பட்ட அரசியல்வாதியின் சகாக்கள், கப்பம் கோரி அச்சுறுத்தல் விடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 268 views
-
-
நிலையான அமைதியை எட்டுவதற்கு சிறிலங்கா அரசுக்கு கடுமையான சமிக்ஞை ஒன்றை அனைத்துலக சமூகத்துடன் இணைந்து அமெரிக்கா அனுப்பியுள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது. ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் 19வது கூட்டத்தொடர் பற்றி அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் நேற்று வொசிங்டனில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சிறிலங்கா, ஈரான், யேமன், லிபியா, சிரியா, பர்மா உள்ளிட்ட நாடுகள் தொடர்பான கருத்துகளை அமெரிக்கா வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் சிறிலங்கா தொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது- “உண்மையான நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் மூலமே நிலையான அமைதியை எட்டமுடியும் என்ற கடுமையான சமிக்ஞை ஒன்றை சிறிலங்கா அரசுக்கு அனைத்துல…
-
- 0 replies
- 521 views
-
-
ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையில் அமெரிக்கா கொண்டுவந்திருந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படைகளைப் புரிந்து கொள்ளாமல், உள்ளார்ந்த அர்த்தங்களை உணர்ந்து கொள்ளாமல் தாம் அனுபவித்த அவலங்களுக்கான நியாயம் கிடைக்கவேண்டும், கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புக்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழர்கள் மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். நிச்சயமாக ஜ.நாவில் நிறைவேற்றப்பட்டிருக்கும் தீர்மானம் தமிழர்கள் அனுபவித்த அவலங்களுக்கு ஒரு சிறிய ஆறுதலைக்கூட பெற்றுக் கொடுத்திருக்கவில்லை. உண்மையாகவும் வெளிப்படையாகவும் சொல்லப்போனால் தமிழர்களுடைய பெயரைச் சொல்லியே சர்வதேச சதிகாரர்களால் தமிழர்கள் மௌனிகளாக்கப்பட்டிருக்கின்றார்கள். இதற்கு தமிழர்களின் பிரதிநிதிகள் தா…
-
- 0 replies
- 244 views
-