செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
உலகின் முதல் மனிதன் மேற்கு ஆசியாவில் தான் தோன்றினான்‘ என, இஸ்ரேல் நாட்டு விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.இதுநாள் வரையில், கடந்த இரண்டு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஹோமோ சேப்பியன் என்ற இனத்தில் இருந்துதான் நவீன மனிதன் தோன்றினான் என்றும், முதன்முதலில் ஆப்ரிக்காவில் தோன்றிய இந்த ஹோமோ சேப்பியன் இனத்தவர் படிப்படியாக, ஐரோப்பா, மேற்கு ஆசியா மற்றும் இதர ஆசியப் பகுதிகள் நோக்கி இடம் பெயர்ந்தனர் எனவும், வரலாற்று அறிஞர்களால் நம்பப்பட்டு வந்தது. சமீபத்தில், இஸ்ரேல் நாட்டில் உள்ள பென்-குரியான் விமான நிலையம் அருகில் இருக்கும் குகை ஒன்றில் (குசேம்), அந்நாட்டு தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, நான்கு லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆதிமனிதனின் உடல் படிவங்களை கண…
-
- 0 replies
- 1.1k views
-
-
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை சமூக வடிவமைப்பாளர்கள் அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். [சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார்.] அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம்.…
-
- 0 replies
- 514 views
-
-
இலங்கைத் தீவில் எத்தனை இனக்கலவரங்கள், எத்தனை அரசியல் போராட்டங்கள், எத்தனை படுகொலைகள், எத்தனை இடப்பெயர்வுகள், பட்டினிச்சாவுகள், எத்தனை தசாப்தங்களாக நடைபெற்று முடிந்துள்ளன. ஆனால், தற்போதுதான் சர்வதேசத்தின் கண்கள் இவற்றின் மீது பதிந்துள்ளன. சட்ட ரீதியாக வலிமை படைத்த ஐ.நா. அங்கத்துவ நாடுகளினால் மேற்கூறப்பட்டவற்றை கவனத்திற் கொண்டு ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைச் சபையின் 19 ஆவது கூட்டத் தொடரில் கடந்த 22 ஆம் திகதி தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இத் தீர்மானத்தில் எவ்வகையான பாதக, சாதக நிலைமை உள்ளது என்பதை ஆராயும் முன் இத் தீர்மானத்தினால் எந்தப் பாதகம் எவருக்கும் இல்லையென்பதே தெட்டத் தெளிவானது. அரசியலில் வளரத் துடிக்கும் அரசியல்வாதிகளினால் யாவற்றிலும் வலிந்து ப…
-
- 2 replies
- 1.3k views
-
-
-
- 0 replies
- 555 views
-
-
தமிழகத்தில் இருந்து குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:- "ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றிய மனித உரிமைகள் தீர்மானத்தில் வாக்களித்தமைக்காக இலங்கை அதிபர் ராஜபக்சவிடம் எமது நாட்டின் பிரமதர் மன்னிப்புக் கேட்டார் என்பதற்காக நான் வெட்கப்படுகிறேன்" என்று ராஜஸ்தான் ஜெயப்பூரைச் சேர்ந்த மனித உரிமைப் போராளியான கவிதா சிறிவஸ்றவா தெரிவித்தார். மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநில மாநாடு நடைபெற்று வருகிறது. இன்றைய தினம் சட்டமின்மையும் அரசின் தப்பிக்கும் போக்கும் மிதிபடும் ஜனநாகயமும் மனித உரிமைகளும் என்ற தலைப்பில் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் சட்டமின்மையும் சிறுபான்மையனிரும் என்ற தலைப்பில் பேசும் பொழுது ஈழத்து மக்களுக்கு எதிரான இந்தியாவின் இந்த நடவட…
-
- 0 replies
- 403 views
-
-
சால்மியா : ஊனமுற்றவர் போல் நடித்து இரு நாட்களில் இரண்டரை இலட்சம் பிச்சையெடுத்தவர் குவைத் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக குவைத் டைம்ஸ் நாளேடு தெரிவித்துள்ளது. எகிப்திலிருந்து பிச்சை எடுப்பதற்காக குவைத்திற்கு விசிட் விசாவில் வருகை தந்தவர் சால்மியாவில் ஒரு வங்கியின் முன் ஊனமுற்றவர் போல் நடித்து பிச்சை எடுத்து கொண்டிருந்தார். அவரின் செயல்பாடுகளில் சந்தேகம் கொண்ட காவல்துறையினர் அவர் ஏமாற்றுவதை கண்டுபிடித்து கைது செய்தனர். இரண்டு நாட்களில் மாத்திரம் அந்த நபர் ஆயிரத்து முன்னூற்று ஐம்பது குவைத் தீனார்களுக்கு மேல் சம்பாதித்துள்ளது தெரியவந்துள்ளது. இந்திய மதிப்பில் சுமார் இரண்டரை இலட்சம் பணத்தை அவரிடமிருந்து கைப்பற்றிய காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்…
-
- 1 reply
- 622 views
-
-
நெற்றிப்பொட்டில் துப்பாக்கி முனை, மரணம் கொடுக்கக்காத்திருக்கும் போதும் எங்கள் உணர்வுகளை சாகடித்துவிட்டு நடக்கமுடியாது. யாரெல்லாம் எமக்கு மரணம் கொடுத்தார்களோ அவர்களெல்லாம் புனிதர்களாகி வந்தார்கள், நாங்கள் சிந்திய இரத்தம் உறையும் முன்னர் தாய் மண்ணை முத்தமிடுவதாய் கூறிக்கொண்டு எங்கள் இரத்தத்தை சுவை பார்த்தவர்கள் மீட்பர்களாய் மாறி எம்மோடு நின்றபோதும் நிச்சயமாக எங்கள் உணர்வுகளை சாகடித்து விட்டு எம்மால் நடக்கமுடியாது. பூவோடு, காயும் துப்பாக்கிச் சன்னங்களால் கிழிக்கப்பட்டு வீசப்பட்டன, அந்தக் காமுகனின் தாய் வயதுப் பெண்ணும் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாளே. எல்லாவற்றையும் மறந்து விடுங்கள் என்று சொன்னார்கள். ஆனால் இப்போதும் உயிரோடு இருக்கின்றது. நாம் பிரிந்து வாழ தமிழீழம் கேட்ட…
-
- 0 replies
- 451 views
-
-
ஒரு தோல்விக்கு, ஒரு பின்னடைவுக்கு என்ன என்ன காரணங்கள் எல்லாம் அடுக்க முடியுமோ அத்தனை காரணங்களும் சொல்லப்பட்டு முடிந்துவிட்டது. இதற்கு முன்னர் ஆயிரம் ஆண்டுகால உலக வரலாற்றில் சாம்ராஜ்ஜியங்களும், உரிமைப் போராட்டங்களும் தோற்றதற்கான அனைத்து காரணங்களையும் எமது தோல்விக்கும் கொண்டுவந்து காரணங்களாக காட்டியாயிற்று. தோற்றுவிட்டோமே என்ற ஆதங்கங்கத்துடன் கதைக்கும் காரணங்கள் என்ற நிலைமாறி இப்போதெல்லாம் இந்த தோல்விக்கு வித்தியாசமாக மற்றவர்கள் இதுவரை சொல்லாத ஏதும் காரணத்தை சொல்வதன் மூலம் தமது புத்திசீவித்தனத்தை முகவரிப்படுத்தும் தன்மையாகவே மாறிக்கொண்டிருக்கிறது. இப்படியும் சிந்திப்பார்களா என்று மலைக்கும் அளவுக்கு சிலரது காரணங்கள் அமைந்திருக்கும். இதற்கென்றே பிரத்தியேகமாக ‘ரூம்’ …
-
- 0 replies
- 423 views
-
-
'இப்போதும் விடுதலைப் புலிகளே போராடுகின்றார்கள். முன்னர் போர்க்களத்தில் நின்று தமிழீழ விடுதலைக்காகப் போராடினார்கள். இப்போது, தங்களை சிங்கள தேசத்தின் இன அழிப்புக்குத் தங்களை இரையாக்கிவிட்டு, அதன் சாட்சிகளாக இருந்து போராடுகின்றார்கள்' என்று புலம்பெயர்ந்து வாழும் பெண் விடுதலைப் புலி ஒருவர் தெரிவித்திருந்தார். அதுவே உண்மை என்பதைத் தமிழ் மக்களும் நன்றாகவே புரிந்துகொண்டுள்ளார்கள். ஐ.நா. மன்றத்தின் ஆணைக் குழுவுக்கும், சனல் 4 தொலைக்காட்சிக்கும் ஈழப் போரில் தம்மை உருக்கிக்கொண்ட விடுதலைப் புலிகளும், அவர்களது மக்களுமே மௌன சாட்சிகளாக உள்ளார்கள். சிங்கள தேசத்தின் கொடூரங்களை உலகின் மனச்சாட்சிவரை கொண்டு சென்றது அவர்களது விம்பங்களும், ஒளிப் பேழைகளும். ஐ.நா. மனித உரிமைகள் மையத்தின் கத…
-
- 0 replies
- 323 views
-
-
விண்ணில் இருந்து 200 கிலோ எடை கொண்ட மர்மபொருள் சைபீரியாவில் விழுந்ததால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். சைபீரியாவில் உள்ள ஓட்ராட்நெஸ்கி என்ற கிராமத்தின் அடர்ந்த காட்டு பகுதியில், விண்ணில் இருந்து திடீரென மர்ம பொருள் விழுந்தது. அதை பகுதியில் இருந்த கிராமவாசிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அருகில் சென்று பார்த்தனர். முதலில் அது இறந்த பறவையாக இருக்கலாம் என்று எண்ணினர். ஆனால், பறவை எதுவும் இல்லை என்று தெரிந்ததும் போலீசாருக்கு உடனடியாக தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், யு வடிவத்தில் இருந்த அந்த பொருள் ஏதோ ஒரு சாதனத்தின் உடைந்த பொருள் என்பதை அறிந்தனர். இதுகுறித்து ரஷ்ய ஆராய்ச்சியாளர்களுக்கு தகவல் அளித்தனர். வெள்ளியை போல் பளபளப்பாக உள்ள அந்த மர்ம பொரு…
-
- 4 replies
- 611 views
-
-
கள்ளக்காதலை கணவர் நேரில் பார்த்ததால் இளம்பெண் தற்கொலை கோவை, மார்ச். 24- கோவையை அடுத்த தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் இளங்கோ. ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கௌரி(வயது 26). இவர்கள் இருவரும் கடந்த 6 ஆண்டுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருப்பூரில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கௌரியின் தடம் மாறத்தொடங்கியது. அவர் அந்த பகுதியை சேர்ந்த ஒருவருடன் நெருங்கி பழங்கினார். கணவர் வேலைக்கு சென்றதும் தனது கள்ளக்காதலனோடு வாழ்க்கையை உல்லாசமாக அனுபவித்தார். கௌரிய…
-
- 6 replies
- 1.4k views
-
-
சீனாவில் விளையும் தேயிலை வகைகளில் முக்கியமானதாகக் கருதப்படும் லோங்ஜிங் அல்லது ட்ரகன் வெல் தேயிலையின் ஒரு கிலோப விலை ரூபாய் 57,024 டொலராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தற்போதைய தங்கத்தின் கிலோ5 ஒன்றிற்கான விலையை விட அதிகமாகும். தங்கம் ஒரு கிலோவின் தற்பாதைய விலை 53000 டொலர் மட்டும் தான். ஆனால் சீனத் தேயிலையின் விலையே அதைவிட சுமார் 4000 டொலர் அதிகம். உலக வியாபாரிகளால் அதிகமாக விரும்பி வாங்கப்படும் தேயிலை வகைகளில் இது முதலிடத்தை பிடித்துள்ளது. இந்த வகை தேயிலை சீனாவின் பாரம்பரிய திருவிழாவான கிங்மிங் விழா கொண்டாடப்படும் மாதமான ஏப்ரல் மாதத்தில் அறுவடை செய்யப்படு்கிறது. ஸேஜியாங் மாகாணத்தி்ல் உள்ள ஹாங்க்ஜோவ் பகுதியில் விளைவி்க்கப்படுகிறது. ஜூபைசாங் என்ற வி…
-
- 2 replies
- 676 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க அனுசரணையுடன் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணையில் 'சமநிலையான அம்சங்களை' அறிமுகப்படுத்துவதற்கு இந்தியா அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டது என இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்த நிலையில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அனுப்பிய கடிதமொன்றிலேயே மன்மோகன் சிங் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர அரசியல் தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் இந்திய பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தியுள்ளார். "சாத்தியமான முன்னோக்கிய வழியை கண்டறிவதற்காக இலங்கை பிரதிநிதிகளுடன் நெருக்கமாக தொடர்பிலிருக்குமாறு எமது தூதுக்குழுவினருக்கு நான் அறிவுறுத்தியி…
-
- 0 replies
- 350 views
-
-
உலக புகழ்பெற்ற நகைச்சுவை நடிகர் சார்லி சாப்லின். கடந்த 1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி இங்கிலாந்தின் லண்டனில் பிறந்தவர். கடந்த 77ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி இறந்தார். முதல் உலக போரின் போது, தனது பேசும் படங்கள் மூலம் பிரபலமானவர். சர்வாதிகாரி ஹிட்லரை கேலி செய்யும் வகையில் மீசை வைத்து கொண்டு நகைச் சுவையாக நடித்தவர். உலகம் முழுவதும் இன்றளவும் இவரது படங்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரவேற்பு உள்ளது. இவர் லண்டனில் உள்ள வால்வொர்த் பகுதியில் பிறந்தார் என்று கூறி வந்தனர். எனினும், சாப்ளின் எங்கு பிறந்தார் என்பது சரியாக தெரியாமல் மர்மமாக உள்ளது. இங்கிலாந்தின் எம்15 என்கிற உளவு நிறுவனம், அமெரிக்காவின் சிஐஏவால் கூட சாப்ளின் பிறந்த இடம் குறித்த மர்மத்துக்கு விடை காண முடி…
-
- 0 replies
- 396 views
-
-
எந்தவொரு நாடும் சர்வதேசச் சட்டங்களை உள்வாங்கியே உள்நாட்டுச் சட்டங்களை இயற்றுகின்றன. சர்வதேச சட்ட விதிமுறைகளை புறம் தள்ளிவிட்டு உள்நாட்டுச் சட்டங்களைச் சர்வாதிகார நாடுகளே இயற்றுகின்றன. சீனா சர்வாதிகார நாடாக இருந்தாலும் பல சர்வதேசச் சட்ட வரைமுறைகளைப் பின்பற்றியே நடக்கிறது. சர்வதேச நாடுகளுடன் நட்புறவைப் பேண வேண்டுமாயின் பெரும்பாலான சர்வதேச நாடுகள் ஏற்றுக்கொண்ட சர்வதேசச் சட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடந்த முப்பது ஆண்டுகாலப் போரில் சர்வதேசச் சட்ட விதிமுறைகளை மீறியே செயற்பட்டார்கள் சிறிலங்கா அரசுகள். சிறிலங்காவில் வாழும் பலருக்கு சர்வதேச சட்டத்தைப் பற்றிய அறிவு இல்லை. சிறிலங்கா அரசு எதனை செய்கிறதோ அதுவே சட்டம் என்கிற மனநிலையிலேயே பெரும்பான்மையான சிங்கள மக்கள் இருக்க…
-
- 0 replies
- 399 views
-
-
Rohana Wijeweera and Velupillai Prabhakaran - Is structural violence the reason why Wijeweera’s and Prabhakaran’s families were treated differently? “There are theories and there are facts. Theories vary… The facts however cannot be denied. Thousands of Tamils, old and young, and even little children, were assaulted, robbed, killed, bereaved, and made refugees. They saw their homes, possessions, vehicles, shops and factories plundered, burnt or destroyed. These people were humiliated, made to live in fear and rendered helpless…” A Cry From the Heart… What happened at the end of July 1983? (From Bishop Lakshman Wickremasinghe’s Final Pastoral Letter). Channel 4’s…
-
- 0 replies
- 647 views
-
-
சிங்களப் பேரினவாத அரசு நிகழ்த்திய கூட்டுக் கொலைகளின் கோர முகத்தை 'சேனல் 4’ வெளியிட்ட வீடியோ பதிவுகள் அம்பலப்படுத்தி உலகின் இதயத்தை அதிரவைத்திருக்கின்றன. இந்த நிலையில், நந்திக் கடலோரம் நடந்த ஈவிரக்கமற்ற இன அழிப்புக்கு, சுரேன் கார்த்திகேசு என்ற பத்திரிகையாளரும் ஒரு சாட்சியமாக விளங்குகிறார்... இலங்கையில் வெளியான 'ஈழ நாதம்’ பத்திரிகையின் நிருபரும் புகைப்படக்காரருமான இவர், ஏழு வருடங்கள் வன்னிப் பகுதியில் பத்திரிகையாளராக இருந்தவர். இனவாத யுத்தம் மேலும் மேலும் தமிழ் உயிர்களைப் பலிகொண்ட கொடூரங்களை, தொடர்ந்து செய்திகளாகவும் புகைப்படங்களாகவும் பதிவுசெய்தவர். 2009 ஏப்ரல் மாதத்தில் முள்ளி வாய்க்கால் இறுதி யுத்தம் நடந்தபோது, குண்டுவீச்சில் சிக்கி மோசமாகக் காயப்பட்டு மரணத்தில் இ…
-
- 1 reply
- 660 views
-
-
தனது நாட்டு இராணுவம் கொலைகளை செய்தாலும் அவர்களுக்கு மன்னிப்பளிக்க முடியாது என்ற புதிய உலக சட்டவரையறைகளுக்கு அமைவாக அமெரிக்க படை வீரரான றொபேட் பெல்ஸ் மரண தண்டனை அபாயத்தை சந்தித்துள்ளார். இம்மாதம் 11ம் திகதி ஆப்கான் கந்தகாரில் உள்ள ஆறு இலக்குகளில் நுழைந்து சிறுவர், பெண்கள், பெர்து மக்களென 17 பேரை கொன்றொழித்த இவர் மீதான இராணுவ விசாரணைகள் சூடுபிடித்துள்ளன. தனது நண்பன் ஒருவன் கண்ணி வெடியில் காலை இழந்த காரணத்தால் இந்தப் படுகொலைகளை செய்ததாக இவர் தெரிவித்திருந்தார். விசாரணை முடிவில் இவர்தான் சுட்டார் என்பதை நீதிபதி ஊர்ஜிதம் செய்தால் அவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்படும் என்று அமெரிக்கா தீர்க்கமாக அறிவித்துள்ளது. இதே முன்மாதிரியை சிறீலங்கா பின்பற்றி பொது மக்களை கொன்று, பால…
-
- 1 reply
- 596 views
-
-
மே 2009ற்கு பின்னர் சர்வதேச அரங்கத்தில் மீண்டும் தமிழர் பிரச்சினை தொடர்பான விடயங்கள் அதிர்வலைகளை ஏற்ப்படுத்தத் தொடங்கியுள்ளது. வேவ்வேறு நாடுகளில் உள்ள தமிழ் மக்களின் அமைப்புக்களில் ஒருசிலவும், தனி நபர்களும் தனித் தனியாகவும் கூட்டாகவும் முன்னெடுத்த பல்வேறு செயற் திட்டங்கள் இதற்கு காத்திரமான பங்களிப்பினை வகித்தன. எதிர்வரும் கால கட்டத்தில் தமிழ் மக்கள் கொடுமையான இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டார்கள் என்ற விடயம் உலகத்தின் முக்கியமான தளங்களில் முன்னே நகர்த்தப்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பெருமளவு எண்ணிக்கையில் பாரிய அர்ப்பணிப்புக்களுடன் செயற்பட்ட புலம் பெயர் வாழ் தமிழ் மக்களில் பலர், முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்த…
-
- 0 replies
- 348 views
-
-
இரண்டாம் உலகப் போர் முடிவில் ஜக்கிய நாடுகள் சபை எனப்படும் ஜநா 1945ம் ஆண்டு உருவாக்கப்பட்டு இன்று வரை பல ஏற்றத் தாழ்வுகளோடு செயற்படுகிறது. ஜநா அமைப்பில் ஜந்து அடிப்படைப் பிரிவுகள் இருக்கின்றன. 1. ஜநா பொதுச் சபை -General Assembly. உறுப்பு நாடுகளின் விவாத அரங்காகவும் தீர்மானங்கள் நிறைவேற்றும் களமாகவும் இடம்பெறுகிறது. 2. ஜநா பாதுகாப்பு சபை -Security Council உலக அமைதிக்கும் பாதுகாப்பிற்கும் பொறுப்பான அமைப்பு. இதில் ஜந்து நிரந்தர உறுப்பு நாடுகளும் பத்து தற்காலிக உறுப்பு நாடுகளும் உறுப்புரிமை வகிக்கின்றன. 3. பொருளாதார மற்றும் சமூக மன்றம் -Social and Economic Council இதை எக்கோசொக் (Ecosoc) என்றும் அழைப்பார்கள். உலகப் பொருளாதார சமூக ஒத்துழைப்பிற்கான மன்றமாகவும் மேம்…
-
- 0 replies
- 591 views
-
-
ஐநா மனித உரிமைக் கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்த தீர்மானத்தில் இந்தியா தந்திரமான முறையில் செயற்பட்டதன் விளைவாக இரண்டு முக்கிய பரிந்துரைகளில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன என ஆதார பூர்வமாக தெரிவிக்கப்படுகிறது.இந்தியா, இலங்கை போன்ற ஒரு இறையாண்மை உள்ள நாட்டின் செயல்பாட்டில் பாதகத்தை ஏற்படுத்த விரும்பாத காரணத்தினால் இந்த மாற்றத்தை செய்யுமாறு இந்தியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளது. இதற்கு ஐக்கிய அமெரிக்காவும் சம்மதம் தெரிவித்து மாற்றத்தை கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தீர்மானத்தின் 3-வது பிரிவில், பன்னாட்டு மனிதாபிமானச் சட்டங்களின் கீழ் நடத்தப்பட வேண்டிய விசாரணையில் ஐ.நா.மனித உரிமை மன்றத்தின் ஆலோசனையையும், விசாரணையை மேற்கொள்வது தொடர்பான சட…
-
- 0 replies
- 489 views
-
-
கடந்த பல நாட்களாக உலகத்தமிழர்களது நாடித்துடிப்பை ஏற இறங்க வைத்த ஜெனீவாத் தீர்மானம் வெற்றிபெற்று விட்டது. இந்த தீர்மானத்தின் வெற்றி தமிழர்களின் வெற்றியாகவும் சிங்களவர்களின் தோல்வியாகவும் பார்க்குமளவிற்கு உலகத்தமிழர்களிடையே சிறுவர் பெரியவர் ஆண்கள் பெண்கள் என்ற நிலைகள் கடந்து எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருந்தது. இந்த மனித உரிமைகள் அமர்வில் சிறிலங்காவிற்கு எதிரான தீர்மானம் கொண்டுவரப்படுமா இல்லையா என்ற விவாதத்தில் ஆரம்பித்து அதனை எந்த நாடு கொண்டுவரப் போகின்றது எனும் நிலைக்குச் சென்றது முதல் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானத்தில் என்ன இருக்கின்றது என்பதுவரை சென்று அதனை இந்தியா ஆதரிக்குமா இல்லையா என்கின்ற நிலையில் இந்த நிமிடம் வரை தலைகுத்தி நின்றது உண்மை. தமிழ…
-
- 1 reply
- 589 views
-
-
2005ம் ஆண்டு சிறீலங்கா ஜனாதிபதிக்கான தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளே அடுத்த ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் என்ற நிலையிருந்தது. இந்தத் தேர்தலில் விடுதலைப் புலிகள் எடுக்கின்ற முடிவையே அனைத்துத் தமிழ் மக்களும் எடுப்பார்கள் என்பதால், விடுதலைப் புலிகள் என்ன முடிவு எடுக்கப்போகின்றார்கள் என்பதை சிங்களத் தலைமைகளும் சர்வதேசமும் ஆவலோடு எதிர்பார்த்திருந்தன. இதில் தமிழ் மக்களின் வாக்குகளே ரணிலின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிலையும் இருந்தது. இதனால், மகிந்தவின் வருகையைவிட மேற்குலகிற்கு சார்பானவராகக் கருதப்பட்ட ரணிலின் வருகையை விரும்பியது மேற்குலகம். ஆனால், தமிழ் மக்களின் ஒட்டுமொத்த தேர்தல் புறக்கணிப்பினால் ரணில் மட்டுமல்ல மேற்குலகமும் பெரும் ஏமாற்றம் அடைந்தது. தமிழ் மக்களு…
-
- 0 replies
- 493 views
-
-
ஜெனீவாவில் நேற்று என்ன நடந்தது ? சுவாரசியமான தகவல்கள் ! இன்றைய இரு உப நிகழ்வுகளில் இலங்கைக்கெதிராக கடும் குற்றச்சாட்டுக்கள்: முகத்தைசுழிக்க வைக்கும் நாகரிகமற்ற செயற்பாடுகளில் அரச குழுவினர் ஜெனிவாவில் நடைபெற்று வரும் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் இன்று இடம்பெற்ற இரு உப நிகழ்வுகளில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுடன் அங்கு கலந்து கொண்டிருக்கும் அரச குழுவினரின் நாகரிகம் அற்ற செயற்பாடுகள்குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பிரித்தானிய தமிழர் பேரவையின் ஒருங்கிணைப்பில், தொடர்ச்சியாக இந்த கூட்டத் தொடரில் கலந்துகொண்டிருக்கும் கனேடிய தமிழர் காங்கிரஸ் ( Canadian Tamil Congress), அமெரிக்க தமிழ் அரசியல்செயலவை …
-
- 2 replies
- 689 views
-
-
பாவக்கறையை போக்க வேண்டியது இந்தியாவுக்கு அவசியமானது என்கிறார் விக்கிரமபாகு இலங்கைக்கு எதரிரான அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடாது தடுப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருவதாக இடது சாரி முன்னணியின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன தெரிவித்துள்ளார். இந்தியாவின் தேவைக்காகவே பிரபாகரனுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் யுத்தம் மேற் கொள்ளப்பட்டது. எனவே இந்த பாவக்கறையை இந்தியா கழுவ வேண்டிய அவசியம் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்குண்டு. ஏனெனில் இந்தி…
-
- 0 replies
- 465 views
-