செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7082 topics in this forum
-
கனேடிய கன்சவேடிவ் கட்சி சார்பில் பரஞ்சோதியை வேட்பாளராக நியமித்ததில் சர்ச்சை! வெள்ளி, 22 ஏப்ரல் 2011 13:53 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு மரியாதை செலுத்திய ஒருவரை மே 2ஆம் திகதி கனடாவில் இடம்பெறவுள்ள தேர்தலில் கன்சவேடிவ் கட்சியின் சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளது ஏன் என்று அக்கட்சியைச் சேர்ந்த பீட்டர்கென்ட் கேள்வி எழுப்பியுள்ளார். கன்சவேடிவ் கட்சி சார்பாக போட்டியிடும் ராகவன் பரஞ்சோதி சர்ச்சைக்குரிய வேட்பாளர். இவர் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்வில் கலந்து கொண்டு புலிகளுக்கு புகழாரம் சூட்டியவர். மாவீரர் தின யூ டியூப் வீடியோ காட்சிகளைப் பார்த்து விட்டே தான் இந்தக் கேள்விகளை எழுப்ப முடிவு செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளுக்கு…
-
- 0 replies
- 368 views
-
-
குட்டைப் பாவாடை அணிந்த மருமகளுக்கு மாமனார் செய்த கொடூரம் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் நபர் ஒருவர் தனது மருமகளைக் கொடூரமாகத் தாக்கிய சம்பவமொன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது. சம்பவ தினத்தன்று அவரது மருமகள் மிகவும் குட்டையான ஆடைகளை அணிந்திருந்ததாகவும் இதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் எழுந்ததாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் ஆத்திரமடைந்த மாமனார் மருமகளின் மீது சூடான எண்ணெயை ஊற்றியதாகவும் கூறப்படுகின்றது. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து தனது கணவரிடம்தெரிவித்தபோது, அவரும் தந்தையின் செயலை ஆதரித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனது கணவரை விவாகரத்து செய்யத் தான் தி…
-
- 0 replies
- 466 views
-
-
ஆமைகளின் படையெடுப்பால் நிவ்யோர்க் கெனடி விமான நிலையத்தில் பரபரப்பு _ வீரகேசரி இணையம் 7/1/2011 6:09:35 PM Share அமெரிக்க நிவ்யோர்க் நகரில் உள்ள கெனடி விமான நிலையத்தில் நேற்று காலை விமானங்கள் புறப்பட தயாராக இருந்த நிலையில், திடீரென ஆமைகள் விமான ஓடுபாதையை நோக்கி படையெடுத்தமையினால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.. அந்நாட்டு நேரப்படி காலை 6.45 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவை முட்டை இடுவதற்காக கடற்கரை நோக்கி செல்வதற்கு மாறாக, விமான நிலையத்திற்குள் வந்ததமை பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்நாட்டு துறைமுக அதிகாரசபை மற்றும் அமெரிக்க விவசாய துறை ஊழியர்கள் விரைந்து ஆமைகளை அவ்விடத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர். ப…
-
- 0 replies
- 485 views
-
-
யு.எஸ்.- ரென்னிஸ்சி என்ற இடத்தை சேர்ந்த பெண் ஒருவர் கர்பினியாக இருக்கும் போது பயங்கரமான கார் விபத்தில் சிக்கி கோமா நிலைக்கு தள்ளப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் இந்த சம்பவம் நடந்தது. கோமா நிலையில் இருந்த இப்பெண் கடந்த புதன்கிழமை கண்விழித்தார். அப்போது தான் ஆண் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளார் என்பதை தெரிந்து கொண்டார். சரிஸ்டா ஜில்ஸ் என்ற 20-வயதுடைய இவரின் குடும்பத்தினர் இரண்டு அதிசயங்களை கொண்டாடினர். பெற்ற தாய் கண் திறந்ததோடு தனது குழந்தையையும் பார்த்தது என்பனவாகும். நான்கு மாத கர்ப்பினியாக இருக்கும் போது டிசம்பர் மாதம் கார் விபத்து நடந்து கோமா நிலைக்காளானார். வைத்தியர்கள் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் தாங்கள் நம்பிக்கையோடு இருந்ததாகவும் சரிஸ்டாசவின் உறவினர் தெரிவித்…
-
- 0 replies
- 364 views
-
-
கடவுள் தந்த இவ் இயற்கையின் அழகை பார்ப்பதால் மனம் ஒரு வித புத்துணர்ச்சி பெறும் அத்துடன் இயற்கையை நாம் பாதுகாத்துக் கொள்ளமுடியும் என்பதில் ஐயமில்லை. http://youtu.be/6v2L2UGZJAM?hd=1 http://mykathiravan....a-news/?p=18068
-
- 0 replies
- 1k views
-
-
உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு: உணவு பொருட்கள் மீது வரியை கூட்டுகிறதா பிரித்தானிய அரசு?[ திங்கட்கிழமை, 13 யூலை 2015, 06:32.33 மு.ப GMT ] பிரித்தானியாவில் உடல் பருமனால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை தடுக்கும் விதத்தில், சர்க்கரை அதிகம் சேர்க்கப்பட்டுள்ள திரவ உணவுகள் மீது உள்ள வரியை அதிகரிக்க வேண்டும் என மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.பிரித்தானியாவில் ஆரோக்கியமான உணவு பழக்கத்தை மக்கள் பின்பற்றுவதில்லை என மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சர்க்கரையின் அளவு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகமானோர் எடுத்துக்கொள்வதால் ஒபிசிட்டி(Obesity) எனப்படும் உடல் பருமன் நோயிற்கு ஆளாகின்றனர். தரமான மற்றும் ஆரோக்கியமான உணவுகளை உண்ணாததால், பல நோய்களு…
-
- 0 replies
- 309 views
-
-
அமெரிக்க அதிபர் பாரக் ஹுசைன் ஒபாமாவின் தந்தையின் பெயர் பாரக் ஒபாமா. கென்ய நாட்டைச் சேர்ந்த இவர், ஹவாய் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்காக சிறு வயதில் கென்யாவிலிருந்து வெளியேறி அமெரிக்காவில் குடியேறினார். அங்கு கன்சாசைச் சேர்ந்த ஸ்டான்லி ஆன் துன்ஹம் என்ற வெள்ளைக்கார பெண்ணை திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவரே அதிபர் ஒபாமா. ஒபாமாவுக்கு 2 வயதாக இருக்கும்போது ஹவாயிலிருந்து படிப்பை தொடர்வதற்காக ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு சென்றார் அவரது தந்தை. பின்னர் கென்யாவுக்கு திரும்பிவிட்டார். பின்னர் 1982-ல் நிகழ்ந்த கார் விபத்தில் ஒபாமாவின் தந்தை பாரக் இறந்தார்.. இந்நிலையில், அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக பதவியேற்ற பிறகு முதன்முறையாக நேற்று, தனது தந்தையின் சொந்த நாடான கென்யாவுக்கு…
-
- 0 replies
- 229 views
-
-
இலங்கையின் மலையகப் பகுதி ஒன்றைச் சேர்ந்த ரஞ்சித் ஏக்கநாயக்க என்பவரின் 6 கோழிகளில் ஒன்று முட்டை எதுவும் இடாமல் நேரடியாகவே குஞ்சை ஈன்றது என்று பல ஊடகங்கள் பொறுப்பற்ற வகையில் செய்திகளைப் பிரசுரித்துள்ளன. அதுவும் இச் செய்திக்கு மிக மிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் சிறுவயதில், முட்டையில் இருந்து கோழி வந்ததா இல்லை கோழியில் இருந்து முட்டை வந்ததா என்று பள்ளிக்கூடங்களில் விவாதம் நடுத்துவார்களே ! அதேபோல இதனையும் ஒரு பெரும்பொருட்டாக கருதி பல ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளது. முதலில் நாம் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும் ! பாலூட்டிகள், ஊர்வன, பறப்பவை என பலவிடையங்கள் விஞ்ஞானத்தில் உள்ளது. முட்டை இல்லாமல் குஞ்சு வர சாத்தியமே இல்லை என்பதே உண்மையாகும். கடவுளே வந்தாலும் இ…
-
- 0 replies
- 436 views
-
-
யாழ். வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றத்தில் ஒருவர் கைது 20 Dec, 2024 | 10:46 AM யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை காவலாளியை கடித்த குற்றச்சாட்டில் ஒருவர் நேற்று வியாழக்கிழமை (19) கைது செய்யப்பட்டுள்ளார். போதனா வைத்தியசாலை பார்வையாளர் நேரம் முடிவடைந்த பின்னர், நோயாளர் விடுதிக்குள் செல்ல முற்பட்ட நபரை வைத்தியசாலை காவலாளிகள் தடுத்து நிறுத்திய போது, காவலாளிகளுடன் தர்க்கப்பட்டு, அவர்களில் ஒருவரை கடித்துள்ளார். அதனை அடுத்து ஏனைய காவலாளிகள் ஒன்றிணைத்து கடித்த நபரை மடக்கி பிடித்து யாழ்ப்பாண பொலிஸாரிடம் ஒப்படைத்ததை அடுத்து, அவரை கைது செய்த பொலிஸார் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து வி…
-
- 0 replies
- 138 views
-
-
அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு கடிதம் கொண்டு சேர்த்த புறா புறா ஒன்று தனது காலில் தூதுக் கடிதம் ஒன்றை சுமந்து கொண்டு அநுராதபுரத்திலிருந்து வத்தளைக்கு 2 மணித்தியாலம் 14 நிமிடங்களில் வந்தடைந்த சம்பவம் நேற்றுமுன்தினம் நடைபெற்றுள்ளது. புராதன காலத்தில் பறவைகள் மூலம் தூதனுப்பும் நடைமுறை பற்றி பாடசாலை மாணவர்களுக்குத் தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஒன்றை அநுராதபுரம் டி.எஸ்.சேனநாயக்க வித்தியாலயம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிகழ்வில் வந்தளை ‑ ஹெந்தல சந்தியில் உள்ள புறா வளர்ப்பு நிலையத்தை நடத்திச் செல்லும் எம்.லெனரோல் கலந்துகொண்டிருந்ததோடு 12 புறாக்களையும் இதில் ஈடுபடுத்தினா…
-
- 0 replies
- 587 views
-
-
ஆப்பிள் ஐ போனை தூக்கிச் சென்ற குரங்கு..! (பழுலுல்லாஹ் பர்ஹான்) சுற்றுலா பயணி ஒருவரின் ஆப்பிள் ஐ போன் ஒன்றை குரங்கு ஒன்று தூக்கிச் சென்றுள்ள சம்பவம் பொலன்னறுவையில் பதிவாகியுள்ளது. பொலன்னறுவை மாவட்டத்தில் தற்போது குரங்குகளின் அட்டகாசம் காணப்படுவதாகவும் இதனால் பொலன்னறுவைக்கு வருகைத்தரும் சுற்றுலா பயணிகள் அதிகம் சிரமத்தை எதிர்கொள்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சுற்றுலா பயணிகளில் ஒருவரான ஏ.எம்.சப்ரி கருத்து தெரிவிக்கையில், மட்டக்களப்பு, காத்தான்குடி பிரதேசத்தில் இருந்து சுற்றுலாச் சென்ற எங்களுடைய குடும்பம் பொலன்னறுவை கல் விகாரைக்கு முன்பாக அமை…
-
- 0 replies
- 326 views
-
-
இணையத்தில் தேடக்கூடாத ஆபத்தான பெண் பிரபலம் யார்? By Kavinthan Shanmugarajah 2012-09-12 15:18:56 இணையத்தில் தேடக் கூடாத அதிக ஆபத்தான பெண் பிரபலம் யார் என்று தெரியுமா? அவர் வேறுயாரும் அல்ல, ஹெரி பொட்டார் திரைப்படங்களில் நடித்த எமா வெட்சன் ஆவார். இதற்கான காரணம் என்னவெனில் இவரைப் பற்றித்தேடும் போது இணையக் குற்றவாளிகளால் நாம் இலகுவாக தாக்குதலுக்குள்ளாகுவதாகவும் மெகாபி எச்சரித்துள்ளது. பல போலியான தளங்கள் வெட்சனின் தகவல்கள் ஊடாக எம்மை கணனிகளுக்கு தீங்குவிளைவிக்கக் கூடியதும், எமது தகவல்களை திருடக்கூடியதுமான மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய வழிகோலுவதாகவும் மெகாபி சுட்டிக்காட்டியுள்ளது. இவர் தொடர்பாக தேடும்போது இத்தகைய தாக்குதல்களுக்கு உள்ள சாத்திய…
-
- 0 replies
- 959 views
-
-
`மனிதர்களுக்குத்தான் லாக் டெளன்... சாலையில் உறங்கும் சிங்கங்கள்’ -மிரளவைக்கும் புகைப்படங்கள்! கொரோனா ஊரடங்கால் மனித நடமாட்டம் குறைந்துள்ளது. இதனால் தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலையில் உறங்கும் காட்சி வைரலாகிவருகிறது. கொரோனா வைரஸால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. வனப் பகுதிகளில் மனித நடமாட்டம் இல்லாததால், விலங்கினங்களும் பறவைகளும் சுதந்திரமாக வலம் வந்துகொண்டிருக்கும் காட்சி தற்போது வைரலாகி வருகிறது. அந்த வகையில், தென்னாப்பிரிக்காவின் தேசியப் பூங்காக்களில் ஒன்றான, க்ரூகர் தேசியப் பூங்காவில், சிங்கங்கள் சாலைகளில் கூட்டமாகப் படுத்துறங்கும் காட்சி இணையத்தில் பரவ, செம வைரல். …
-
- 0 replies
- 402 views
-
-
இங்கிலாந்தில் அளவுக்கதிகமாக போதைப்பொருள் உட்கொண்ட 25 வயது பெண் ஒருவர், போதையில் தனது 4 மாத குழந்தை மீது டிவியை தூக்கிபோட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருடைய கணவர் மீது போலீஸார் வழக்கு தொடுத்துள்ளனர். 25வயது பெண் ஒருவர் நேற்று காலையில் அளவுக்கதிகமாக ஹெராயின்,வேலியம் மற்றும் ஆல்கஹால் முதலியவற்றை உட்கொண்டு, என்ன செய்கிறோம் என்றே தெரியாமல் வீட்டில் இருந்த பொருட்களையெல்லாம் உடைத்து இருக்கின்றார். ஒரு கட்டத்தில் டிவியை தூக்கி, தனது நான்கு மாத குழந்தையின் தலையில் போட்டு உடைத்திருக்கின்றார். இதில் படுகாயம் அடைந்த குழந்தை சிகிச்சைக்கு பலனளிக்காமல் சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. அளவுக்கு அதிகமான பலவித போதைபோருட்களை ஒன்றுசேர்த்து உட்கொண்ட காரணத்தால்,…
-
- 0 replies
- 452 views
-
-
கொரோனா வைரஸ், முடக்கநிலை காரணமாக... தென்னாபிரிக்காவில் குற்ற வீதம் வீழ்ச்சி முடக்கநிலை அமுலில் இருப்பதன் காரணமாக முதல் மூன்று மாதங்களில் தென்னாபிரிக்காவில் குற்றங்கள் 40% வரை குறைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையில் பாலியல் வன்முறை மற்றும் எரியூட்டல் உள்ளிட்ட பெரும்பாலான குற்றங்கள் குறைந்துவிட்டதாக பொலிஸ்துறை அமைச்சர் கூறியுள்ளார். இருப்பினும் கொரோனா வைரஸ் முடக்கநிலையின் போது மதுபானம் மீதான தடை விதிக்கப்பட்டதால் மதுபானக் கடைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று அவர் தெரிவித்தார். உலகின் மிக அதிகமான குற்ற விகிதங்களில் முன்னிலையில் உள்ள தென்னாபிரிக்காவில் கொரோனா தொற்றினால் 500,000 க்கும்…
-
- 0 replies
- 356 views
-
-
தலைகீழாக டிவி பார்த்து தலைகீழாக பேப்பர் படிக்கும் அதிசய பெண் Posted by: Mayura Akilan Published: Saturday, March 16, 2013, 11:41 [iST] செர்பியா: சாதாரணமாக மனிதர்கள் நேராக பேப்பரை வைத்து படிப்போம் நேராக அமர்ந்து டிவி பார்ப்போம். ஆனால் பெண் ஒருவர் பார்வைத் திறனில் ஏற்பட்ட கோளாறினால் தலைகீழாக பேப்பரை வைத்தும் டிவி பார்த்தும் வருகிறார். சராசரி மனிதர்களின் விழித் திரைகளில் தெரியும் உருவம், தலைகீழாக தான் தோன்றும். அந்த உருவம், மூளைக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் ஓர் தலைகீழ் மாற்றத்துடன் நேரிய உருவமாக நமது மனத்திரையில் பதிவாகிறது. ஆனால், செர்பியா நாட்டைச் சேர்ந்த போஜானா டேனிலோவிக் (28) என்ற பெண்ணின் மூளையில் பதிவாகும் உருவப்பதிவுகளை தலைகீழாக மாற்றும் செயல்பாட்டில் குறைபாடு உள…
-
- 0 replies
- 316 views
-
-
-
- 0 replies
- 306 views
-
-
கோவில் நுழைவு வாயிலில் நித்தியானந்தாவுக்கு சிலை வைத்து கும்பாபிஷேகம்? – பக்தர்கள் அதிர்ச்சி புதுச்சேரி மாநிலம் குருமாம்பேட் அருகே உள்ள பெரம்பையில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில் போல் இங்கு ஒரு கோவிலைக் கட்டி வந்தார். இந்த கோவிலில் 27 அடியில் முருகன் சிலை பிரமாண்டமாக கட்டி முடிக்கப்பட்டு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதேபோன்று கோவிலின் நுழைவு வாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை காணப்பட்டது. இந்த சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்த சிலையை பார்த்ததும் போலீஸ் அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே …
-
- 0 replies
- 172 views
-
-
விபச்சாரம் தண்டனைக்குரிய குற்ற செயல். அதை தடுக்க விபச்சார தடுப்பு பிரிவு என்ற குழுவே காவல் துறையில் இயங்குகிறது. அதை தடுக்க பல்வேறு முயற்சிகளில் இறங்கி நடவடிக்கை எடுத்து தான் வருகின்றனர் ஆனாலும் அரசர்கள் காலத்தில் இருந்து இன்று வரை விபச்சாரம் பல வித டெக்னிக்குகளில் லாட்ஸ், குடில்கள், கணவன் மனைவி போல் கடலில் படகுகளில் என பயணித்து உயிர்காக்கும் வாகனமான ஆம்லென்ஸ்களில் கூட தொடர்கிறதே. தனியார் மருத்துவமனை வாகனங்கள் ஆள் அரவமே இல்லாத நெடுஞ்சாலைகளில் சுமார் 20 கி.மி தூரம் சென்றடைவதற்குள் அவசர அவசரமாக முடித்துக் கொள்ள வேண்டும். இந்த சேவையில் கல்லூரி மாணவ மாணவர்கள் ஈடுபடுத்தல் படுகிறார்கள் என்பது கொடுமையிலும் கொடுமை. ஒரு முறைக்கு சுமார் ரூ 2000 முதல் 7000 ரூபாய் வசூலிக்கிறார்களாம…
-
- 0 replies
- 527 views
-
-
நவராத்திரி விழாவுக்கு பாடசாலை மாணவர்களிடம் வசூல் செய்யப்பட்ட ரூ. 64 ஆயிரம் ரூபாவை அப்படியே ஆட்டையை போட்ட பாடசாலை ஒன்றின் அதிபர் ஒருவர், பூசாரியிடம் முட்டையொன்றை மந்திரித்து பாடசாலை மாணவர்கள் முதல் ஆசிரியர்கள் வரை அனைவரிடமும் சத்தியம் வாங்கிய சம்பவமொன்று அம்பலமாகியுள்ளது. நவராத்திரி விழாவினை முன்னிட்டு ஒரு மாணவரிடம் 150 ரூபாய் அடிப்படையில் 64,000ம் ரூபாய் பணம் குறித்த பாடசாலையின் அதிபரினால் வசூல்செய்யப்பட்டது. இவ்வளவு பணம் வசூல் செய்யப்பட்டு இரண்டு தினங்களில் பாடசாலையின் அதிபரினால் களவாடப்பட்டதாக மாணவர்களும் ஆசிரியர்களும் விசனம் தெரிவிக்கின்றனர். அதனை மூடி மறைப்பதற்கே முட்டையை வைத்து நாடகமாடுகின்றார் என்றும் தெரிவிக்கின்றனர். இந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டைம…
-
- 0 replies
- 193 views
-
-
-
சீனச் சிறுவனின் பூனைக்கண்ணால் இரவை ஊடுருவி பார்க்கலாம் சீனாவில் பிறந்த சிறுவன் ஒருவன் நீல நிறமான புனைக்கண்ணுடன் பிறந்துள்ளான். நொங் யூசி என்ற சிறுவன் இரவு நேரத்தை ஊடறுத்து பகல் போல காட்சிகளை காணும் வல்லமை உள்ளவன் என்று சீனர்கள் இணையம் மூலம் தகவல் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிகழ்வு கடந்த சில வருடங்களாக சூடு பிடித்துள்ளது. தவிட்டு நிற விழிகள் உள்ள சீனர்களிடையே அந்தச் சிறுவன் அதிசயமான ஒருவனாகக் காணப்பட்டான். மனிதனாக பிறந்த ஒருவனால் இரவிற்குள் கிடக்கும் பொருட்களை பகல் போல பார்க்க முடியுமா என்பது உலக சமுதாயத்தை வெகுவாக சிந்திக்க வைத்தது. இது குறித்து கருத்து வெளிட்டுள்ள டென்மார்க் தெற்கு பல்கலைக்கழகத்தை சேர்ந்த கண்களுக்கான சுகயீனப்பிரிவு பேராசிரியர் இதை மறுத்துள்ளார்…
-
- 0 replies
- 414 views
-
-
ஈராக்கில் 9 வயது முதலான சிறுமிகளை ஒரு மணி நேரத்துக்கு வரதட்சணை கொடுத்து இன்பத் திருமணம் செய்துகொள்ள இஸ்லாமிய மதகுருக்கள் அனுமதிப்பதாக பிபிசி துப்பறிந்த ஆவணப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபிசி ஐ பிளேயரில் வெளியிடப்பட்ட ஆவணப்படத்தின் படி, ஈராக்கின் புனிதமான இடங்களில் ஒன்றான கர்பலாவுக்குச் சென்ற பிபிசி பத்திரிக்கையாளர் ஆவணப்படத்தை யாரும் அறியாமல் படம்பிடித்தார். இன்பத் திருமணம் என்பது மனைவியை விட்டு விலகியிருப்பவர், ஏதேனும் சிறுமியை தன் தற்காலிக மனைவியாக்கி சுமார் ஒரு மணி நேரம் முதல் அவருடன் உறவு கொள்வதாகும் என விளக்கமளித்துள்ளார். இதற்காக வரதட்சணையை அச்சிறுமிக்கு வழங்குதையும் சுட்டிக்காட்டினார். ஈராக்கில் தடை செய்யப்பட்ட இன்பத் திருமண முறையை பத்தி…
-
- 0 replies
- 278 views
-
-
தம் அடிக்கும் ஆமை . Friday, 28 March, 2008 02:42 PM . பெய்ஜிங், மார்ச் 28: தம் அடிக்கும் மனிதர்களைப் பார்த் திருக்கிறோம். ஆனால் சீனாவிலோ ஆமை ஒன்று ஜாலியாக தம் அடிக்கிறதாம். . சீனாவில் ஜிலின் மாகாணத்தில் யுன் என்பவர் செல்லப் பிராணியாக ஆமை ஒன்றை வளர்த்து வருகிறா ராம். அந்த ஆமை புகைபிடிப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டுள்ள தாம். ஒருநாள் விளையாட்டாக ஆமை யின் வாயில் சிகரெட்டை வைக்க அது புகையை உள்ளிழுத்து ஹாயாக வெளியேவிட்டதாம். சிகரெட்டில் உள்ள நிகோடினுக்கு அடிமையாகிவிட்ட அந்த ஆமை தற்போது அடிக்கடி தம் அடிக்கிறதாம். malaisudar.com
-
- 0 replies
- 937 views
-
-
சீனாவில் க்ளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட 6 நாய்கள், பெய்ஜிங் நகர காவல்துறை பணியில் சேர்க்கப்பட்டுள்ளன. காவல்துறையினரின் பணிக்கு சிறப்பாக உதவிய 2 நாய்களின் தோல் மாதிரியை சேகரித்து, அவற்றின் மூலம் க்ளோனிங் முறையால் 6 குட்டிகள் உருவாக்கப்பட்டன. கடந்த ஆகஸ்ட் மாதம் பிறந்த அவற்றுக்கு சிறப்பு கவனம் கொடுத்து பராமரித்து, காவல்துறை அதிகாரி மா ஜின்லாய் என்பவர் பயிற்சி அளித்தார். அந்த 6 நாய்களும் பிஜிங் காவல்துறை பணியில் தற்போது சேர்க்கப்பட்டன. பிஜிங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிகாரிகள் முன்னிலையில் 6 நாய்களும் சேர்த்து கொள்ளப்பட்டன. https://www.polimernews.com/dnews/89976/க்ளோனிங்-முறையில்-உருவான-6நாய்கள்
-
- 0 replies
- 463 views
-