செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
தேவாலயத்தின் மேற்கூரையில்... நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள்! இத்தாலியின் புளோரன்ஸ் நகரில் அமைந்துள்ள புகழ்பெற்ற cathedral தேவாலயத்தின் மேற்கூரையில், நூற்றுக்கணக்கான விலங்குகளின் பாத சுவடுகள் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. நூற்றாண்டுகள் பழமையான மேற்கூரையில் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள கட்டுமானப் பொறியாளர்கள் மேலே சென்ற போது குறித்த கால் தடங்கள் இருப்பது தெரியவந்தது. ஓடுகளை தயாரித்து திறந்த வெளியில் உலர வைத்த போது காட்டு மற்றும் வீட்டு விலங்குகள் நடந்து சென்றதால் கால் தடம் பதிந்திருகலாம் என நம்பப்படுகின்றது. http://athavannews.com/தேவாலயத்தின்-மேற்கூரையி/
-
- 0 replies
- 444 views
-
-
த.தே. மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் மீது தாக்குதல் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வடமராட்சி கிழக்கு செயற்பாட்டாளர் ஜெகதீஸ்வரன் சற்குணேஸ்வரி (அருள்மதி) மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று மதியம் 2.00 மணியளவில் கொடுக்கிளாயில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது மூவரால் வழிமறிக்கப்பட்டு தள்ளிவிழுத்தி பனையின் கருக்கு மட்டையால் தாக்கியுள்ளதுடன் கல்லினாலும் தலையை இலக்கு வைத்து தாக்கியுள்ளனர். அருள்மதி எதிர்த்து போராடிய நிலையில் தலை தப்பி அவரது முகத்தின் நாடி பகுதியில் கல்லால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். தாக்குதல் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் …
-
- 0 replies
- 206 views
-
-
மலைப்பாம்பின் உடலுக்குள் பெண்ணின் சடலம் By NANTHINI 26 OCT, 2022 | 05:08 PM இந்தோனேஷியாவில் பெண்ணொருவரை மலைப்பாம்பொன்று கொன்று விழுங்கியுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் அந்த பாம்புக்குள் குறித்த பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக தெரியவருவதாவது, இறப்பர் பால் வெட்டும் தொழிலாளியான ஜஹ்ரா என்கிற பெண், கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஒக் 23) இறப்பர் தோட்டத்தில் வேலைக்காக சென்றுகொண்டிருந்தபோதே இவ்வாறு பாம்பு விழுங்கி உயிரிழந்துள்ளார். இப்பெண் அன்றைய தினம் வீடு திரும்பாததால் அவரை காணவில்லை என பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, அவ…
-
- 0 replies
- 226 views
- 1 follower
-
-
கல்லறை வீரர்கள் மரணத்தின் பின்னர் என்ன நடக்கும்? ஆவிகள் குறித்த நம்பிக்கையை வலுப்படுத்திய 20 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய புதைபொருள் அகழ்வு ரெறக்கோட்டா வீரர்கள் என அழைக்கப்படும் இந்தக் களிமண் பொம்மைகளின் வயது ஏறக்குறைய 2500. இவற்றை சீனாவின் பண்டைய தலைநகராகிய ஷியான் நகரில், 1974 ஆம் ஆண்டு அகழ்ந்தெடுத்தார்கள். வயலொன்றில் கிணறு தோண்டும்போது தற்செயலாக இந்த ரெறக்கோட்டா வீரர்கள் வெளிப்பட்டிருக்கின்றனர். இதுவே சென்ற நூற்றாண்டின் மிகப்பெரும் அகழ்வென்று நம்பப்படுகிறது. கி.மு 210 இல் இறந்த சீனாவின் ஷிஹுவாங் என்னும் பேரரசனின் கல்லறை இது என கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் சீன வரலாற்றைப் பற்றிய பல அரிய தகவல்களையும் இந்தக் கல்லறை பகிரங்கப்படுத்தியுள்ளது. அத்துடன் யுனெஸ்கோ நிறுவனத்த…
-
- 0 replies
- 555 views
-
-
இங்கிலாந்தின்.... முதலாவது போர் விமானத்தின் பெயர் "யாழ்ப்பாணம்!" இங்கிலாந்தின் முதலாவது போர் விமானத்தின் பெயர் யாழ்ப்பாணம் என்பது ஆகும்.இப்போர் விமானத்தை உருவாக்குகின்றமைக்கு யாழ்ப்பாண தமிழர்கள் வழங்கி இருந்த நிதிப் பங்களிப்புக் காரணமாகவே இப்பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. இப்போர் விமானம் குறித்த தகவல்கள் மிகவும் சுவாரசியமானவை. முன்னைய கால விமானங்கள் 100 குதிரை வலு என்ஜின்களுடன் இயங்கி வந்தன. இவை மரம், துணி, வயர்கள் போன்றவற்றால் ஆக்கப்பட்டு இருந்தன. முதலாம் உலகப் போர் நடைபெற்ற காலம். எதிரிகளை வேவு பார்ப்பதற்கும், குண்டு வீசுவதற்கும் சிறந்த பொறியாக விமானம் கண்டு கொள்ளப்பட்டது. ஆனால் மேற்சொன்ன ரக விமானங்கள் அவற்றின் வடிவமைப்புக் காரணமாக எளிதில் தாக்குதல்களுக்கு உள்ளாகி…
-
- 0 replies
- 860 views
-
-
தனி நபரின் வீட்டிலிருந்து பாரிய இராணுவத் தாங்கி, பீரங்கி மீட்பு இரண்டாம் உலக யுத்த கால இராணுவத் தாங்கியொன்றையும் பீரங்கியொன்றையும் தனி நபர் ஒருவரிடமிருந்து ஜேர்மனிய அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். அரிய பொருட்களை சேகரித்து வைக்கும் வழக்கம் கொண்ட 78 வயதான நபர் ஒருவர் தனது வீடொன்றின் அடித்தளத்தில் 45 தொன் எடையுள்ள இராணுவத் தாங்கி, பாரிய பீரங்கி மற்றும் பல ஆயுதங்களை வைத்திருந்தார். கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட முற்றுகையொன்றின்போது இவற்றை ஜேர்மனிய அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் இராணுவ பொறியியலாளர்கள் அழைக்கப்பட்டு, அத்தாங்கியும் ஏனைய ஆயுதங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டன. மேற்படி நபரின் பெயர…
-
- 0 replies
- 336 views
-
-
Published By: DIGITAL DESK 3 10 JUN, 2024 | 04:11 PM அவுஸ்திரேலியாவில் மெல்பேர்ண் நகருக்கு தனது குடும்பத்தாரை பார்க்கச் சென்ற இலங்கையைச் சேர்ந்த வயோதிப பெண் ஒருவர் சதையை உண்ணும் அரியவகை கிருமியின் தாக்கத்திற்கு பாதிக்கப்பட்டு அவரது கையை இழந்துள்ளதாக அவுஸ்திரரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 74 வயதான கார்மெல் ரோட்ரிகோ என்ற வயோதிப பெண் இவ் வருட ஆரம்பத்தில் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணிலுள்ள மகளை பார்ப்பதற்குச் சென்றுள்ளார். இந்த வயோதிப பெண் அங்கு பல மாதங்கள் மகளுடன் தங்கியிருந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு இடது கையில் துப்பாக்கியால் சுடப்பட்டது போல் வலி ஏற்பட்டுள்ளது. அவர் வலியால் கத்தியுள்ளார். அவர் …
-
- 0 replies
- 125 views
- 1 follower
-
-
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மெஜிக் கலைஞர் டேவிட் பிளேய்ன் தனது வித்தை மூலம், ஹொலிவூட் சூப்பர் ஸ்டார் வில் ஸ்மித், அவரது மனைவி மற்றும் அமெரிக்க இசைக் கலைஞர், பாடலாசிரியர் கென்யே ஆகியோரை அலறவைத்துள்ளார். டேவிட் பிளேய்ன் ஒரு கூர்மையான பொருளை தனது கையில் செலுத்துகிறார். ஆனால் ஒரு சொட்டு இரத்தம் கூட வரவில்லை. வலியால் துடிக்கவும் இல்லை. ஆனால் அதை பார்ப்பவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டனர். இதற்காக அந்த மெஜிக் கலைஞர் 13 ஆண்டுகள் ஆய்வு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. http://newsfirst.lk/tamil/2015/09/வில்-ஸ்மித்தை-பிரம்மிக்க/
-
- 0 replies
- 476 views
-
-
எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து யாழ்ப்பாணத்தில் மேதினம் நடத்துவது என சம்பந்தன் முடிவெடுத்துள்ளார். ஆனால் அதனை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை என சிவாஜிலிங்கம் கூறியுள்ளார். ஐக்கியதேசியக்கட்சி ஒன்றும் சுத்த ஞானிகள் கிடையாது. எல்லோரும் எமது இனத்தினை பந்தாடியவர்கள்தான். ஆகவே பேரினவாதிகள் ஆழுங்கட்சியாக இருந்தாலும் சரி எதிர்க்கட்சிகளாக இருந்தாலும் சரி அவர்களுடன் நாம் கூட்டுச்சேரக் கூடாது என வாதிட்டுள்ளார் சிவாஜிலிங்கம். ஆனால் சம்பந்தன் அவர்களோ இதெல்லாம் ஒரு இராஜ தந்திரம் தான் என நியாயப்படுத்தியுள்ளார். http://ttnnews.com
-
- 0 replies
- 424 views
-
-
உலகின் அதி குள்ள மனிதர் காலமானார்! உஅலகிலேயே அதிகம் குள்ளமான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா உலகின் உயரத்தில் மிகவும் குள்ளமானவர் என ‘கின்னஸ்’ சாதனையில் இடம்பெற்றவரான நேபாளத்தைச் சேர்ந்த ககேந்திரா தாபா மகர் சுகவீனம் காரணமாக இன்று மரணமாநதாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர். ககேந்திரா 67.08 செ.மீ. (2′ 2.41″) உயரமும், 6 கி.கி. எடையுமுள்ள இவர் சளி சுரம் காரணமாக, அவர் வாழ்ந்து வந்த பொக்காரா என்னுமிடத்தில், மருத்துவமனையில் காலமானார். இறக்கும்போது இவருக்கு 27 வயது. இவரது மரணம் குறித்து கின்னஸ் உலக சாதனை நிறுவனம் அனுதாபம் தெரிவித்துள்ளது. ககேந்திராவுக்குப் 18 வயது ஆகும்போது, 2010 ம் ஆண்டு,…
-
- 0 replies
- 785 views
-
-
சீன தலைநகர் பெய்ஜிங்கை சேர்ந்தவர் கியூ மின்ஜூன் என்பவர் பிறவியிலேயே பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டார். எனவே, கால் ஊனமுற்ற இவரால் நடக்க முடியாது. இவரை 10 ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விவாகரத்து செய்து விட்டார். கியூ மின்ஜுனுக்கு பான்மெங் (26) என்ற ஒரே மகன் இருக்கிறார். இந்த நிலையில் வீட்டுக்குள்ளேயே சக்கர நாற்காலியில் முடங்கி கிடந்த கியூமின்ஜுனுக்கு ஸ்ஷியாங் பானா என்ற சுற்றுலா நகருக்கு சென்று சுற்றி பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஏனெனில் அந்த நகரை பற்றி பத்திரிகைகள் மற்றும் டி.வி. நிகழ்ச்சிகள் மூலம் அறிந்து வைத்திருந்தார். அந்த ஆசையை தனது மகனிடம் தெரிவித்தார். உடனே பான்மெங் தனது தாயாருக்கு வெளி உலகத்தை காட்ட விரும்பினார். அதற்காக வாகனத்தை பயன்படுத்தாமல…
-
- 0 replies
- 424 views
-
-
பொவந்தலாவ பொலிஸ் நிலையத்தில், இரு பொலிஸார் இடையில் கத்திக்குத்து. பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்திய சம்பவம் நேற்று இரவு இடம் பெற்றதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் அதிகரித்ததன் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தரை கத்தியால் குத்தியுள்ளதாகவும், காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதன் பின் நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிற…
-
- 0 replies
- 98 views
-
-
சாரதி அனுமதிப்பத்திரம் தயாரித்தல் இராணுவ வசமாகிறது சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரிக்கும் நடவடிக்கைகளை இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்படும் என அரச தரப்பிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்ன மற்றும் இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா ஆகியோருடன் நடந்த கலந்துரையாடலின்போது, இந்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டதாக போக்குவரத்து துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். அதற்கமைய எதிர்வரும் வருடம் முதல் இந்த நடவடிக்கை இராணுவத்தினரிடம் ஒப்படைப்படவுள்ளது. வாகனச்சாரதி அனுமதிப்பத்திரத்தை தயாரித்து வழங்கும் நடவடிக்கையை தனியார் நிறுவனத்திடம் வழங்கியுள்ளதால் பெரும் தொகையை செலுத்தப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 365 views
-
-
வேலை செய்யும் இடங்களில்,பல சுவாரசியமான சம்பவங்களை சந்தித்திருப்போம். அவற்றினைப் பகிர்வோமா. £250, 000 செலவு வைத்த ஈமெயில். இரட்டைக் கோபுர தாக்குதலின் பின்னர் மேலை நாடுகளில் ஒரு பதட்டம். குறிப்பாக முஸ்லிம் பெயர் கொண்ட, அதிகமாக தமது மத நம்பிக்கைகள் குறித்து வெளிப்பாடாக பேசுவோர் குறித்த பதட்டம் கூடுதலாக இருந்தது. இங்கிலாந்தில் இருந்த 'Daimilar-Benz' கொம்பனியில் (அதுதான் நம்ம மேர்சீடிஸ் கார் கம்பெனி) ஒரு மத்திய கிழக்கு சேர்ந்த ஒருவர், help desk support ல் வேலை செய்து கொண்டிருந்தார். தமது மத நம்பிக்கைகள் குறித்து பீத்திக் கொண்டிருப்பார். அவரது முகாமையாளருக்கு, HR பகுதியில் இருந்து ஒரு மெயில் வந்து இருந்தது, குறித்த நபர் குறித்து கவனமாக இருக்குமாறும், எதற்கும் ஒரு கண் அவ…
-
- 0 replies
- 565 views
-
-
பறந்துக்கொண்டிருந்த விமானத்துக்குள் பாம்பு : பதற்றத்தில் பயணிகள் (படங்கள்) அலாஸ்காவின் அனியாக் நகரிலிருந்து அன்கோரேஜ் நகருக்கு சென்ற ராவன் அலாஸ்கா விமான சேவைக்கு சொந்தமான விமானமொன்றில் பாம்பொன்று இருந்ததால் விமானத்தில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது. விமானம் புறப்பட்டு 15 நிமிடங்களில் விமானத்துக்குள் பாம்பொன்று இருப்பது பற்றி விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனையடுத்து குறித்த விடயத்தை பயணிகளுக்கு விமான பணியாளர்கள் அறிவித்துள்ளனர். இதன்போது விமானத்தின் இறுதி வரிசையிலிருந்த 7 வயது சிறுவனின் இருக்கைக்கு பின்னால் பாம்பொன்று இருப்பதை அவதானித்துள்ளான். இதனை விமான பணியாளர்களுக்கு கூற அவர்களும் குறித்த பாம்பினை பிளாஸ்டிக்…
-
- 0 replies
- 290 views
-
-
கணவரின் கணினியில் சேமிக்கப்பட்டுள்ள தரவுகள், ஆவணங்கள், செய்திகள் அல்லது வேறேதும் தகவல்களை, கண்காணிப்பு சாதனங்களைக் கொண்டு சேகரிப்பதற்கு, அவரின் மனைவிக்கு தடையுத்தரவு பிறப்பித்து கல்கிஸை மாவட்ட நீமன்றம் கட்டளையிட்டுள்ளது. தான் வீ்ட்டில் இல்லாத சந்தர்ப்பங்களில் சட்டத்துக்குப் புறம்பான வகையில் தனது தனிப்பட்ட கணினியிலுள்ள தகவல்களை தன்னுடைய மனைவி ஆராய்கிறார் என குற்றஞ்சுமத்தி கணவரொருவரால் கல்கிஸை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது மனைவிக்கும் தனக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு இதே நீதிமன்றத்தில் நிலுவவையில் உள்ள நிலையில், தனது பல்வேறுபட்ட தகவல்களையும் தொலைபேசி உரையாடல்ளையும் தனது அறையில் ஒலி கண்காணிப்பு சாதனத்தைப் பொருத்தி, தன்னுடைய மனைவி தரவிறக்கம் செய்து…
-
- 0 replies
- 326 views
-
-
யாழ்.மாவட்டத்தில், மாறு வேடத்தில்... தலைமறைவாக இருந்த, கொலைச் சந்தேகநபர் கைது! யாழ்.மாவட்டத்தில் பல இடங்களில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய கனோஜி என்ற வாள்வெட்டு குழு சந்தேக நபர் 2019ஆம் ஆண்டிலிருந்து தலைமறைவாக இருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும், மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கும் கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுதுமலை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டிருக்கின்றார். குறித்த சந்தேக நபர் கொக்குவிலை சேர்ந்தவரெனவும், தனுறொக் குறுப் என்ற வாள்வெட்டு குழுவை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகின்றது. மேலும் உப்புமடம் – கோண்டாவில் பகுதியில் காட்வெயார்கடை உரிமையாளருக்கு தலையில் அடித்து கொலை செய்த வழக்கி…
-
- 0 replies
- 319 views
-
-
பிரித்தானியாவின் பிரிஸ்டல் பகுதியை சேர்ந்தவர் லூயிஸ் பொல்லார்ட். ஒசாமா பின்லேடனின் மகன் ஓமர் விந்துவும் அவரின் 54 வயது பிரித்தானிய மனைவி ஜைனாவின் முட்டையும் செயற்கை கருவுறுதல் மூலம் சுமக்க ஒப்புக் கொண்டவர் லூயிஸ் பொல்லார்ட். எட்டாவது வாரத்தில் நேற்று மருத்துவ பரிசோதனைக்காக மான்செஸ்டர் தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு சென்ற போது ஸ்கேன் செய்து பார்த்ததில் இரட்டை குழந்தைகள் உருவாகியுள்ளது தெரிய வந்துள்ளது. இரட்டை குழந்தைகள் இருப்பதை கண்டு மிகுந்த ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்துள்ளார் லூயிஸ் பொல்லார்ட். ஓமர் பின் லேடன் தற்போது கத்தார் நாடுகளில் வாழ்ந்து வருகிறார். பிரித்தானியாவில் நுழையும் உரிமை மறுக்கப்பட்டவர் அவர். பிரித்தானியாவில் இருக்கும் அவரின் மனைவி குழ…
-
- 0 replies
- 674 views
-
-
இரும்பு பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்தவர் மின்னல் தாக்கி உயிரிழப்பு : மனைவி காயம்! Published By: NANTHINI 26 FEB, 2023 | 11:25 AM இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் உயிரிழந்தவர் கலவான பபோடுவ பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபராவார். இடி, மின்னலுடன் மழை பெய்துகொண்டிருந்தபோது விசாலமான இரும்பிலான பெரல் ஒன்றில் நீராடிக்கொண்டிருந்த குறித்த நபரை மின்னல் தாக்கி பாதிக்கப்பட்ட நிலையில், கலவான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் உயிரிழந்த…
-
- 0 replies
- 609 views
- 1 follower
-
-
“கோழிக் கால் சாப்பிடுங்கள்” என மக்களிடம் இந்த அரசாங்கம் ஏன் சொல்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,யோலந்தே நெல் பதவி,பிபிசி நியூஸ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "கடவுளே, எங்களை கோழிக்கால் சாப்பிடும் நிலைக்கு தள்ளி விடாதே" என்று கீஸா சந்தையில் கோழிக் கடைக்காரரிடம் ஒரு நபர் கெஞ்சுகிறார். எகிப்து கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. அங்குள்ள மக்கள் தமது குடும்பங்களுக்கு மூன்று வேளை உணவு வழங்கக்கூட கடும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். ஊட்டச்சத்தை அதிகரிக்கும் நோக்கில், நாய், பூனைகளுக்கு உணவாகத் தூக்கி எறியப்படும் கோழிக்…
-
- 0 replies
- 314 views
- 1 follower
-
-
DOCTORS were baffled when a British man told them, "I can hear my eyeballs moving". But they finally diagnosed that Stephen Mabbutt had a rare ear condition, in which sounds inside the body were heard very loudly, The Sun reported. Mr Mabbutt, 57, could also hear his heart beating. When he chewed food, the noise was deafening. The dad of two was experiencing autophony, one of the symptoms of superior canal dehiscence syndrome, an illness that was unknown until 10 years ago. At first, he noticed that the internal sound of his own voice was beginning to drown out everything else around him. Over six years, the condition worsened as other bodily no…
-
- 0 replies
- 610 views
-
-
என்ன இருக்கிறது இந்த மர்ம புத்தகத்தில்? (வீடியோ இணைப்பு) [ புதன்கிழமை, 17 யூன் 2015, 12:17.18 பி.ப GMT ] இத்தாலியில் 1912ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட The Voynich manuscript எனப்படும் கையெழுத்து பிரதியில் என்ன எழுதப்பட்டுள்ளது என்பது இன்று வரை கண்டுபிடிக்கப்பட முடியாத மர்மமாகவே விளங்குகிறது. இத்தாலியில் உள்ள மடமொன்றில் கண்டுபிடிக்கப்பட்ட அந்த கையெழுத்துப் பிரதியில் எழுத்துக்கள் மட்டுமல்லாமல் பல எடுத்துக்காட்டுக்கள் மற்றும் விளக்கப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இடது பக்கத்தில் தொடங்கி வலது பக்கம் வரை செல்லும் வகையில் எழுதப்பட்டுள்ள அந்த கையெழுத்துப் பிரதியில் உள்ள செய்தியை பல்லாண்டுகளாக நிபுணர்கள் புரிந்து கொள்ள முயன்றும் இன்றும் சாத்தியமாகவில்லை. ”கார்பன் டேட்டிங்” என…
-
- 0 replies
- 624 views
-
-
190 ஆண்டுகளுக்கு முந்தைய, மிகச்சிறிய அளவிலான புத்தகமொன்றை, பாரிஸில் நடந்த ஏலத்தில் லண்டன் அருங்காட்சியகம் மிகப்பெரும் விலை கொடுத்து வாங்கியுள்ளது. கிளாசிக் என்று போற்றப்படும் நாவல்களை ஆங்கிலத்தில் எழுதியவர் சார்லட் பிராண்டே. இவர், தன் 14ஆவது வயதில் எழுதிய, மிகச்சிறிய கையெழுத்துப் பிரதியொன்று பாரிஸில் வைக்கப்பட்டிருந்தது. நேற்று, லண்டன் அருங்காட்சியகம் இதனை 6 கோடியே 20 லட்சம் ரூபாய் கொடுத்து வாங்கியது. வெஸ்ட் யார்க் ஷயரில் உள்ள சார்லட்டின் வீட்டில் இது வைக்கப்படவிருக்கிறது. https://www.polimernews.com/dnews/89421/190-ஆண்டுகளுக்கு-முந்தையகையெழுத்து-பிரதி-ரூ.6.20கோடிக்கு-ஏலம் Bronte manuscript sells for 780,000 euros at Paris auction Written …
-
- 0 replies
- 369 views
-
-
மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறம் கண்டுபிடிப்பு! மனிதர்கள் இதுவரை கண்டிராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அறிவியல் உலகில் மாபெரும் சாதனையைப் படைத்துள்ளனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர் உதவியால் மட்டுமே இதை பார்க்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா பல்கலைக்ககழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் குறித்த சாதனையை படைத்துள்ளனர். இது குறித்து அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ‘குறித்த நிறத்தினை வெறும் கண்களால் பார்க்க முடியாது எனவும், கண்களில் லேசர் ஒளியை துல்லியமாக செலுத்தி கண்களுக்கு பின் உள்ள ‘கோன்’ எனும் நிறம் உணரும் செல்களை தூண்டுவதன் மூலம் இந்த நிறத்தினைப் பார்க்க முடியும் எனவும் …
-
- 0 replies
- 225 views
-
-
எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனம் விபத்து! எரிபொருள் ஏற்றிச் சென்ற கனரக வாகனமொன்று நானுஓயாவில் விபத்திற்குள்ளானது. கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த கனரக வாகனத்தில் 2 தாங்கிகளில் பெட்ரோல் மற்றும் டீசல் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விபத்தினையடுத்து வீதியில் வழிந்தோடிய எரிபொருளை பொதுமக்கள் வாளிகள் மற்றும் போத்தல்களில் எடுத்துச்செல்வதைக் காணக்கூடியதாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1431854
-
- 0 replies
- 130 views
-