செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7085 topics in this forum
-
7 காதலர்களை ஏமாற்றி மூன்று காதலர்களை கொலை செய்த 70 வயது காதலிக்கு மரண தண்டனை ஜப்பான் நாட்டில் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது மூன்று காதலர்களை விஷம் வைத்து கொலை செய்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. ஜப்பானின் கியோட்டா பகுதியில் வசிக்கும் 70 வயதான சிசாக்கோ ககெகி என்ற பெண்ணுக்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த பெண் பணத்திற்காக ஆசைப்பட்டு தனது வயதுக்கு ஒத்த பணக்கார ஆண்களை காதலிப்பதாக நடித்து அவர்களது காப்பீடு தொகை மற்றும் சொத்து வாரிசுரிமையையும் கைப்பற்றியுள்ளார். இதுவரை மூன்று நபர்களை காதலிப்பதாக நடித்து அவர்களது சொத்துக்களைக் கைப்பற்றிய பின்னர் விஷம் கொடுத்துக் கொலை செய்துள்ளார். …
-
- 0 replies
- 222 views
-
-
கர்நாடகா: மலை குகையில் 2 குழந்தைகளுடன் ரகசியமாக வசித்த ரஷ்ய பெண் - அங்கு என்ன செய்தார்? படக்குறிப்பு, குகையில் நினா குடினா என்ற ரஷ்யப் பெண்ணும் அவரது குழந்தைகள் பிரேமா (6) மற்றும் அமா (4) ஆகியோரும் இருந்தனர். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசிக்காக 38 நிமிடங்களுக்கு முன்னர் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்யப் பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ரோந்துப் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகள், ஒரு மலைக்குக் கீழே சுமார் 700–800 மீட்டர் தொலைவில் உள்ள ஒரு குகையின் நுழைவாயிலில் துணிகள் தொங்கிக்கொண்டிருப்பதைக் கவனித்தனர். அவர்கள் ஆபத்தான காட்டுப் பாதை வழியாக குகையை நோக்கி…
-
- 2 replies
- 222 views
- 1 follower
-
-
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சி…
-
- 0 replies
- 222 views
- 1 follower
-
-
குறுஞ்செய்திகளை அலட்சியம் செய்த கணவனை விவாகரத்து செய்த மனைவி! படத்தின் காப்புரிமைREUTERS உங்கள் வாழ்க்கைத்துணையின் குறுஞ்செய்திகளை அலட்சியப்படுத்துபவரா நீங்கள்? எச்சரிக்கை! அது நீதிமன்றத்தில் உங்களுக்கு எதிரான சாட்சியாக மாறலாம். தான் அனுப்பிய குறுஞ்செய்திகளை கணவன் படிக்காததை ஆதாரமாக காட்டி, கணவன் தன்னை உதாசீனப்படுத்தனார் என்பதை நிரூபித்து விவாகரத்து பெற்றார் தாய்வானைச் சேர்ந்த ஒரு பெண். குறுஞ்செய்திகளை கணவர் திறந்து பார்த்ததை 'லைன்' செயலி காட்டினாலும், அவர் பதில் அனுப்பவில்லை என்பதையும் காட்டிக் கொடுத்துவிட்டது. மனைவிடம் கணவர் அலட்சியமாக நடந்துகொண்டதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விவாகத்தை ரத்து செய்து உத்தரவிட்டார். …
-
- 0 replies
- 222 views
-
-
Shareவேலை பார்த்துக் கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்கச் சொகுசு கப்பலில் அபார்ட்மென்ட் ஒன்றைக் குத்தகைக்கு எடுத்துள்ளார் ஆஸ்டின் வெல்ஸ். மெட்டா நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்று செய்திருக்கும் செயல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த 28 வயதான ஆஸ்டின் வெல்ஸ் 'Work from Home' அடிப்படையில் மெட்டா நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். பணிபுரிந்து கொண்டே உலகைச் சுற்றிப் பார்க்க வேண்டும் என்ற நோக்கில் MV Narrative என்ற சொகுசுக் கப்பலில் அபார்ட்மென்ட் ஒன்றை 3 லட்சம் அமெரிக்க டாலரை (இந்திய மதிப்பு படி 2 கோடியே 48 ல…
-
- 0 replies
- 222 views
-
-
-
லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் தவிக்கும் ரஷ்யா (வீடியோ இணைப்பு)[ புதன்கிழமை, 05 ஓகஸ்ட் 2015, 12:20.13 மு.ப GMT ] ரஷ்யா நாட்டின் தென் பகுதியில் ஏராளமான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் தென் பகுதியில் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில் இப்பகுதியில் லட்சக்கணக்கான வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளன. இதனால் அப்பகுதி முழுவதுமே வெட்டுக்கிளிகளாக தென்படுகின்றன. மேலும் அவைகள் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள சோளத்தை சேதப்படுத்தியுள்ளன. இதன் காரணமாக சுமார் 800 ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த 30 ஆண்டுகளுக்கு பிறகு ரஷ்யாவின் தென் பகுதியில் அதிகளவு வெட்டுக்கிளிகள் படையெடுத்துள்ளதாக தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 221 views
-
-
பாகிஸ்தானில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. இதனால் பாகிஸ்தானின் பல்வேறு துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால் இந்த மோசமான சூழ்நிலைக்கு மத்தியிலும், கால்நடைத் துறை மற்றும் விவசாயத் துறை மிகப்பெரிய பங்களிப்பையும் லாபத்தையும் கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் கடந்த 2023 நிதியாண்டில் விவசாயத் துறையிலிருந்து 62.68 சதவீதமும், தேசிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 14.36 சதவீதமும், கால்நடைத் துறையின் பங்களிப்பு கடந்த ஆண்டு 2.25 சதவீதத்துடன் ஒப்பிடும்போது 3.78 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கடந்த நிதியாண்டில் 43.7 மில்லியனாக இருந்த எருமைகளின் எண்ணிக்கை 45 மில்லியனை எட்டியுள்ளதாக கணக்கெடுப்பில் குறிப்பிடப்பட்டு…
-
- 1 reply
- 221 views
- 1 follower
-
-
ரூ.9 கோடி செலவில் கட்டப்பட்ட பாலம் திறப்பதற்கு முன்பே இடிந்து விழுந்த அவலம் போபால், மத்திய பிரதேசத்தில் பெய்து வரும் கனமழையால் கரையோர மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பு நிறைந்த இடத்தில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். கடந்த 2 நாட்களாக வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். அவர் நேற்று முன்தினம் ஹோசங்காபாத் மாவட்டத்திற்கும், நேற்று விதிசா பகுதிக்கும் சென்றார். இன்று படகு ஒன்றில் சென்று வெள்ளத்தில் பாதிப்படைந்த மக்களை சந்தித்து அவர் ஆறுதல் கூறினார். மத்திய பிரதேசத்தின் சிய…
-
- 0 replies
- 221 views
-
-
ஜெனிவாவில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் கைலாசா பெண் பிரதிநிதிகள் பங்கேற்பு கர்நாடகா, குஜராத்திலுள்ள வழக்குகளில் தேடப்படும் சாமியார் நித்யானந்தா வெளிநாடு தப்பி ஓடினார். அவர் இந்துக்களுக்காக கைலாசா என்ற நாட்டை உருவாக்கியதாக அறிவித்ததோடு அந்த நாட்டுக்கான தனி கொடி, தனி கடவுச்சீட்டு , ரூபா நாணயங்கள் உள்ளிட்டவற்றையும் அறிமுகப்படுத்தி பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக வீடியோக்கள் வெளியிட்டு பக்தர்கள் மத்தியில் உரையாற்றி வருகிறார். மேலும் சமீபகாலமாக கைலாசா நாடு பல்வேறு வெளிநாடுகளில் உள்ள முக்கிய நகரங்களுடன் வர்த்தக ரீதியாக ஒப்பந்தம் செய்துள்ளதாக அவரது அதிகாரப்பூர்வ இணைதள பக்கங்களில் புகைப்படங்கள் வெளியாகின. அந்த வ…
-
- 2 replies
- 221 views
- 1 follower
-
-
சுரேசின் குழு மீது சித்தார்தனின் குழு தாக்குதல்…. August 11, 20154:36 pm தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற வேட்பாளர் சுரேஸ்பிரேமச்சந்திரனின் ஆதரவாளர் ஒருவர் மீது சித்தார்த்தனின் ஆதரவாளர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்ட சம்பவமொன்று யாழ்ப்பாணம், நீர்வேலி, கரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (09) இரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதேயிடத்தைச் சேர்ந்த என்.நிசாந்தன் (வயது 26) என்பவர் மீதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, தாக்குதலில் காயமடைந்த அவர், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கூட்டமைப்பின் வேட்பாளர் சுரேஸ் பிரேமச்சந்திரனுக்கு ஆதரவான தேர்தல் பிரசாரக் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி, அக்கூட்டம் முடிவடைந்த பின்னர் வீடு திரும்பிக்கொண்டிருந்த இவர் மீ…
-
- 0 replies
- 220 views
-
-
பாலியல் இலஞ்சம் கோரிய பிரதேச செயலாளர்- புலனாய்வு அதிகாரிகள் தீவிர விசாரணை! செங்கலடி பிரதேச செயலாளர் பாலியல் இலஞ்சம் பெற்றமை தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து கொழும்பில் இருந்து வருகைதந்த உள்நாட்டலுவல்கள் அமைச்சின் புலனாய்வு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். செங்கலடி பிரதேச செயலாளர் நல்லையா வில்வரெட்ணம் பிரதேச செயலகத்திற்கு சேவை பெறச் சென்ற பெண் ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் பெற்றமை மற்றும் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் பெண் ஒருவரை தனது பாலியல் இச்சைக்கு பயன்படுத்தியமை தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் கொழும்பு பொலிஸ்மா அதிபர் திணைக்களத்திற்கு பாதிக்கப்பட்ட பெண்ணால் முறைப்பாடு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் நேற்று கொழும்பில் இருந்து சென்…
-
- 0 replies
- 220 views
-
-
பசுக்களுக்கு ஆதார் அட்டை மத்திய அரசு முடிவு - புகைப்படம், ரேகை ஸ்கேனிங் எல்லாம் உண்டாம்...! டெல்லி: முதல்கட்டமாக 50 கோடி செலவில் 4 கோடி பசுக்களுக்கு ஆதார் போன்ற அடையாள அட்டை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. நாட்டில் ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு, அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பான பல்வேறு வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்தியாவில் பெரும்பாலும் பாரதிய ஜனதா ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசு பாதுகாப்பு என்ற பெயரில் வன்முறைகளும், அதனால் உயிரிழப்புகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெருமளவு ஏற்பட்டது. பசு கடத்தல் காரர்கள், இறைச்சிக்காக கொண்டு செல்கின்றனர் என பசுவின் உரிமையாளர்கள் …
-
- 0 replies
- 220 views
-
-
மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் விளக்கமறியலில்! தனது மனைவியின் சகோதரியான பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 26 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரை எதிர்வரும் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டுள்ளார். குறித்த சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில், மன்னார் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வாரம் காணாமல் போனமை தொடர்பில் குறித்த மாணவியின் பெற்றோர் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். இந்த நிலையில் குறித்த மாணவியை தேடி வ…
-
- 0 replies
- 219 views
-
-
டெல்டா எயார்லைன்ஸ் நிறுவன விமானமொன்றை முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் இணைந்து செலுத்தினர் அமெரிக்காவின் டெல்டா எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விமானமொன்றில் முதல் தடவையாக கறுப்பின பெண்கள் இருவர் தலைமை விமானியாகவும் துணை விமானியாகவும் பணியாற்றி புதிய வரலாறு படைத்துள்ளனர். ஸ்டெபானி ஜோன்சன் எனும் தலைமை விமானியும், டோன் குக் எனும் துணை விமானியுமே இப் பெண்களாவர். கடந்த ஞாயிறன்று இவர்கள் முதல் தடவையாக இணைந்து விமானமொன்றை செலுத்தினர். டெல்டா எயார்லைன்ஸ் விமானமொன்றை கறுப்பினப் பெண்கள் இருவர் செலுத்திச் சென்றமை இதுவே முதல் தடவையாகும் http://metronews.lk/?p=2900
-
- 1 reply
- 219 views
-
-
கிளிநொச்சி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழப்பு கிளிநொச்சி ஏ - 9 வீதி பரந்தன் சந்திக்கு அண்மித்த பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளார்கள். பரந்தன் பகுதியில் உள்ள கட்டட உற்பத்தி நிலையத்திற்கு சீமெந்து இறக்கிய பின்னர் பாரவூர்தி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தவேளை, அதே திசையில் வந்த மோட்டார் சைக்கிள் குறித்த பாரவூர்தியின் பின் பக்கத்தில் மோதியதில் விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ம. யூட்பவிஷன் வயது 29 குமரபுரம் பரந்தன் என்ற இளைஞனும் ச.காந்தீபன் வயது 34 இல 61 கண்டி வீதி பரந்தனை சேர்ந்த இருவருமே உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்க…
-
- 1 reply
- 219 views
- 1 follower
-
-
பசுபிக் பெருங்கடலில் 95 நாட்களாக காணாமல் போன பெருவியன் மீனவர் மீட்பு! பசுபிக் பெருங்கடலில் 95 நாட்கள் காணாமல் போய், கரப்பான் பூச்சிகள், பறவைகள் மற்றும் கடல் ஆமைகளை சாப்பிட்டு உயிர் பிழைத்த பெருவியன் மீனவர் ஒருவர், தனது குடும்பத்துடன் மீண்டும் இணைந்துள்ளார். கடந்த டிசம்பர் 7 ஆம் திகதி, தெற்கு பெருவியன் கடற்கரையில் உள்ள மார்கோனா என்ற நகரத்திலிருந்து மீன்பிடிப் பயணத்திற்காக மாக்ஸிமோ நாபா காஸ்ட்ரோ என்ற 61 வயதுடைய நபர் புறப்பட்டார். இரண்டு வார திட்டமிடப்பட்ட பயணத்திற்கான உணவை அவர் கொண்டு சென்றார். ஆனால், பத்து நாட்களுக்குப் பின்னர் புயல் காற்று அவரது படகை திசைதிருப்பியது. இதனால், அவர் பசுபிக் பெருங்கடலில் தத்தளித்ததுடன், காணாமல் போனார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் தேடுத…
-
- 1 reply
- 219 views
-
-
தவிசாளர் பதவிக்காக மண்ணை விற்காதே’ – காத்தான்குடி நகரசபைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் 24 Views மட்டக்களப்பு, மண்முனை பிரதேச சபைக்குச் சொந்தமான விளையாட்டு மைதானத்தில் காத்தான்குடி நகரசபையின் மூலம் சுற்று மதில் அமைக்கும் செயற்பாட்டிற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அச் செயற்பாட்டிற்கு மண்முனை பிரதேச சபையினால் எவ்வித எதிர்ப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் மண்முனை பிரதேச சபையின் உறுப்பினர்களும், ஆரையம்பதி பிரதேச பொது அமைப்புகளின் பிரதிநிதிகளும் இணைந்து இன்றைய தினம் மண்முனை பிரதேச சபைக்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இப் போராட்டத்தில் சபையின் முன்னாள் தவிசாளர் மகேந்திரலிங்கம் உட்ப…
-
- 0 replies
- 219 views
-
-
யாழில் இரண்டு பெண்களை வெட்டிக் காயப்படுத்தியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று (16) அதிகாலை 4 மணியளவில், குடும்பத்தகராறு காரணமாக குறித்த இரண்டு பெண்கள் மீதும் அவர் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். அதன் பின்னர் 37 வயதான தாக்குதல்தாரி தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவரின் அவரது சடலம் யாழ். போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. காயமடைந்த பெண்கள் இருவரும் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://thinakkural.lk/article/299300
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி விமானத்தின் தலைமை விமானி மாரடைப்பினால் மரணம்! 2016-03-04 14:41:10 பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானமொன்றின் விமானி, மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் நிறுவனமென்றில் இடம்பெற்றுள்ளது. இவ்விமானம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சவூதி அரேபியாவின் பிஷா நகரிலிருந்து, தலைநகர் றியாத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தது. சுமார் 220 பயணிகள் அவ்விமானத்தில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தலைமை விமானியான வலீத் பின் மொஹம்மத் அல் மொஹம்மத்துக்கு திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்போது அவரே விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. …
-
- 0 replies
- 219 views
-
-
யுக்ரேன் மீது ரஷ்ய படையெடுப்பு: செல்ல சிறுத்தைகளுடன் சிக்கியிருக்கும் இந்திய மருத்துவர் திரும்பி வர மறுப்பது ஏன்? 8 மார்ச் 2022 பட மூலாதாரம்,GIRIKUMAR PATIL படக்குறிப்பு, கிரிகுமார் பாட்டீல் ரஷ்ய தாக்குதலால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் யுக்ரேனில் பாதுகாப்புக்காக ஒரு அடித்தளத்தில், தனது இரண்டு சிறுத்தைகளுடன் தங்கியிருக்கிறார் ஓர் இந்திய மருத்துவர். இந்த இரண்டில் ஒன்று கருஞ்சிறுத்தை மற்றொன்று ஜாகுவார் வகை சிறுத்தை. சுமார் 20 மாதங்களுக்கு முன்பு கீயவ் விலங்கியல் பூங்காவில் இருந்து இந்த இரண்டு செல்லப்பிராணிகளையும் வாங்கிய கிரிகுமார் பாட்டீல், இப்போது தனது செல்லப்பிராணிகள் இல்லாமல் யுக்…
-
- 0 replies
- 219 views
- 1 follower
-
-
300 க்கும் மேற்பட்டோர் மீது பாலியல் துஷ்பிரயோகம்: சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்கள் சிறை. பிரான்ஸில் 300 க்கும் மேற்பட்டோரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரபல சத்திர சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகாலம் சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. ஜோஎல் லெ ஸ்குவார்னெக் (Joël Le Scouarnec) என அழைக்கப்படும் 74 வயதான நபருக்கே குறித்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த 1990களிலிருந்து 2017 வரையிலான காலப்பகுதியில், தன்னிடம் சிகிச்சை பெறுவதற்காக வந்த சுமார் 300 பேரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார் எனவும், அவர்களில் பெரும்பாலானோர் சிறுவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யார் இந்த ஜோல் லே? கடந்த 2017ஆம் ஆண்ட…
-
- 0 replies
- 219 views
-
-
தொன்மை வாய்ந்த... நல்லூர் மந்திரி மனை யன்னல்கள் திருட்டு! வரலாற்று தொன்மை வாய்ந்த நல்லூர் மந்திரி மனை யன்னல் மற்றும் யன்னல் கம்பிகள் களவாடப்பட்டுள்ளன. மந்திரி மனையின் பின் பக்கமாக காணப்பட்ட யன்னல்களின் கம்பிகள் மற்றும் யன்னல் என்பவையே பெயர்த்தெடுக்கப்பட்டு திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். கட்டிடத்தின் வரலாற்று பின்னணி மந்திரி மனை என்பது இலங்கையின் வட பகுதியில் இருந்த யாழ்ப்பாண மாவட்டத்தின் தலை நகராக இருந்த நல்லூரில் அரச காலத்தோடு சம்மந்தப்படும் ஒரு கட்டிடமாகும். போர்த்துக்கேயரால் யாழ்பாண அரசு கைப்பற்றப்படுவதற்க முன்னுள…
-
- 0 replies
- 219 views
-
-
மட்டக்களப்பில் கூலிக்கு ஆள் வைத்துத் தனது தந்தையை கொலை செய்த மகன் மற்றும் கொலையாளி கைது! AdminMarch 19, 2022 http://www.errimalai.com/wp-content/uploads/2022/03/Father-Murder-Son-Murderer-Arrested-1024x576.jpg மட்டக்களப்பு, கரடியனாறு பிரதேசத்தில் தனது தந்தையைக் கொலைசெய்ய 50 ஆயிரம் ரூபா பணம் கொடுத்து கூலிக்கு ஆள் வைத்து வெட்டிக் கொலைசெய்த 21 வயதுடைய கூலிக்காரன் மற்றும் கொல்லப்பட்டவரின் 22 வயதுடைய மகன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கடந்த (17.03.2021) வியாழக்கிழமை கைதுசெய்துள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கரடியனாறு காவல்துறை பிரிவிலுள்ள ஈரலக்குளம் குடாவெட்டி வய…
-
- 0 replies
- 219 views
-
-
பொலிஸ் உத்தியோதத்தரின் மனைவி உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு! வாழைச்சேனையில் பொலிஸ் உத்தியோதத்தரின், மனைவியான ஆசிரியர் ஒருவர் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள போத்தாளை பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து இன்று (வியாழக்கிழமை) குறித்த பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இவர் கல்குடா பிரதான வீதி போத்தாளையைச் சேர்ந்த 3 பிள்ளைகளின் தாயாரான 52 வயதுடைய சகுந்தலாதேவி என அடையாளக்காணப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியரின் கணவர் யாழ் இளவாளை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவருவதுடன் இவரின் மூன்று பிள்ளைகளும் கொழும்பில் வசித்துவரும் நிலையில் குறித்த ஆசிரியர் தனிமையில் இருந்து வந்துள்ளார் குறித்…
-
- 0 replies
- 219 views
-