Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. போதிய அளவு வீட்டு வேலைகளை செய்யவில்லையென மனைவிக்கு எதிராக கணவர் வழக்கு 2016-02-08 10:47:00 தனது மனைவி போதியளவில் வீட்டிலுள்ள வேலைகளை செய்யவில்லை எனக் கூறி, இத்தாலிய நபர் ஒருவர் தனது மனைவிக்கு எதிராக வழக்குத் தொடுத்துள்ளார். இவ் வழக்கில் மேற்படி பெண் குற்றவாளியாகக் காணப்பட்டால் அவருக்கு 6 வருடங்கள் வரையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. 21 ஆம் நூற்றாண்டில் அதுவும் இத்தாலியில் இத்தகைய வழக்குத் தொடுக்கப்பட்டுள்ளமை பலரையும் வியப்படையச் செய்துள்ளது. சமையல், சலவை மற்றும் சுத்திகரிப்பு பணிகளை செய்யாததன் மூலம், தனது குடும்பத்தை மனைவி மோசமாக நடத்துகிறார் என அந் நபர் குற்ற…

  2. கொரோனா வைரஸை வைத்து "ஏப்ரல் பூல்" ஜோக்ஸை பரப்ப கூடாது.. போலீஸ் எச்சரிக்கை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் நாளை ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கொரோனா வைரஸை வைத்து சமூக ஊடகங்களில் மக்களை முட்டாளாக்கும் நையாண்டி பதிவுகளை பரப்ப கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.ஒவ்வாரு ஆண்டும் ஏப்ரல் 1ம் தேதி முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது இந்த நாளில் நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்களை முட்டாளாக்கும் விதமாக ஏதேனும் இல்லாத ஒரு பொய்யை சொல்லி நம்ப வைத்து பின்னர் அது இல்லை என்று நையாண்டி செய்வது மக்களின் வழக்கம்.காலமாற்றத்தால் சமூக வலைதளங்கள் மூலம் ஒருவருக்கு ஒருவர் முட்டாளாக்கும் விதமாக கிண்டல் பதிவுகள், பொய்யான நையாண்டி பதிவுகளை பரப்புவா…

  3. இறந்தவரின் கழுத்தில், கயிற்றைக் கட்டி... தரதரவென இழுத்துப் போன போலீஸ்! வைஷாலி, பீகார்: பீகார் மாநிலம் வைஷாலி நகரில் ஆற்றில் மூழ்கி இறந்தவரின் உடலை மீட்ட போலீஸார், அந்த நபரின் கழுத்தில் கயிற்றைக் கட்டி தரையோடு தரையாக இழுத்துச் சென்ற செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைஷாலி நகரில் உள்ள கங்கையாற்றில் மூழ்கி ஒருவர் இறந்து விட்டார். அவரது உடலை தீயணைப்புத் துறையினர் உதவியுடன் போலீஸார் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர். அதன் பின்னர் இறந்த நபரின் கழுத்தில் பெரிய கயிற்றைக் கட்டி கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு உடலை இழுத்துச் சென்றனர். இதை அங்கு கூடியிருந்த மக்களும் அதிர்ச்சியுடன் பார்த்தனர். இத்தனைக்கும் ஆற்றில் அந்த நபர் விழுந்ததுமே போலீஸாருக்குத் தகவல் போனது…

  4. ஒரு சிறிய பரிசோதனை மரங்களின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. கீழே இருக்கும் படங்களை பாருங்கள் மரங்களின் அருமையை உணருங்கள் செடிகள் நிறைந்த தொட்டியின் வழியே கீழே இறங்கும் தண்ணீர் வெளியே வரும்போது தெளிவாக இருக்கிறது. அதே வெறும் மண், அல்லது காய்ந்த இலையுடன் கூடிய மண் வழியே வரும் தண்ணீர் கலங்கலாக இருக்கிறது. நாம் காடுகளையும், மரங்களையும் அழித்துவிட்டு ஆற்று நீர் ஏன் கலங்கலாக உள்ளது என்று கவலைபடுகிறோம். நிறைய மரங்களை வளர்ப்போம், காடுகளைக் காப்போம் தூய்மையான தண்ணீரைப் பெறுவோம். http://www.usetamil.net/t34821-topic#axzz2UPPmmgPT

  5. பளுவில் சிக்குண்ட ஆணுறுப்பு ; 3 மணிநேர போராட்டத்தின் பின்னர் நடந்தது தெரியுமா..? உடற்­ப­யிற்சி நிலை­ய­மொன்றிலிருந்து தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு வந்த புதுவித அழைப்பை பற்றியே தற்போது இணையவாசிகள் பேசி வருகின்றனர். ஜேர்மனியில் அமைந்துள்ள ஒரு உடற்பயிற்சி நிலையமொன்றில் உடற்­ப­யிற்­சிக்­காக பயன்­ப­டுத்­தப்­படும் பளுவில் நபர் ஒரு­வரின் ஆணு­றுப்பு சிக்குண்ட நிலையில் தீய­ணைப்புப் பிரி­வி­ன­ருக்கு அழைப்பு விடுக்­கப்­பட்ட சம்­பவம் ஜேர்­ம­னியில் இடம்­பெற்­றுள்­ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. குறித்த சம்பவம் கடந்த 15 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.மேற்­படி நபர் 2.5 கிலோ­கிராம் எடை­யுள்ள இரும்புப் பளு­வுக்­குள்­ளி­லி­ருந்து தனது ஆணு­றுப்பை …

  6. மனைவியை கொலை செய்ய முயற்சி! இத்தாலியில் இலங்கையர் கைது வியாழன், 26 ஆகஸ்ட் 2010 09:14 மின்னஞ்சல் அச்சிடுக PDF சொந்த மனைவி மற்றும் அவர்களின் இரு மாதப் பெண் குழந்தை ஆகியோரை தாக்கினார் என்பதற்காக குடும்ப வன்முறைச் சட்டத்தின் கீழ் இலங்கையர் ஒருவர் இத்தாலியில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார். Porto San Giorgio நகரத்தில் உள்ள இலங்கையரின் வீடு ஒன்றில் குடும்ப வன்முறை இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது என இத்தாலிய பொலிஸாருக்கு இரகசிய தகவல் ஒன்று கிடைத்திருக்கின்றது. அவர்கள் அவ்வீட்டை முற்றுகையிட்டனர். அப்போது மனைவியின் கழுத்தை நெரித்து கணவன் கொலை செய்ய முற்பட்டமையையையும், நையப் புடைத்தமையையும், காயப்படுத்தியமையும் நேரில் கண்டனர் என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். தாய…

  7. இருபதாம் நூற்றாண்டிலும் சிலர் இன்னும் ஒரு ஊசி குத்திக்கொள்ள கூட பயந்து மருத்துவரிடம் போகாமல் தனக்குதானே சிகிச்சை செய்து கொள்வதுண்டு. மருத்துவம் சார்ந்த தொழில்நுட்பத்தில் தற்போது எவ்வளவோ முன்னேற்றங்கள் பெருகிவிட்டன. பூசுமஞ்சள் வாங்க மளிகைக் கடைக்கு போவதுபோல தங்களது இல்லாத அழகை மேம்படுத்திக் கொள்வதற்காக ‘பிளாஸ்டிக் சர்ஜரி’ செய்துகொள்ள இப்போது இளம்வயது பெண்கள் டாக்டர்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர். கோணல் மூக்கை நேராக்குவது, பெருத்துப் போன இடையை குறுக்கி, சுருக்கி ‘இஞ்சி இடுப்பழகி’ ஆவது, செயற்கை மார்பகங்களுக்கு சிலிக்கான் சிகிச்சை அளிப்பது, உள்ளிட்ட சிகிச்சைகளுக்காக இன்று லட்சக்கணக்கான பெண்கள் தகுதியும், திறமையும் வாய்ந்த டாக்டர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில், எல்லா …

    • 0 replies
    • 350 views
  8. அரியானா மாநிலத்தில் 96 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய புத்தகம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவுள்ளது. பரீதாபாத்தில் சமண மதத்தைச் சேர்ந்த புரட்சிகர துறவி முனி ஸ்ரீ தருண் சாகரின் சொற்பொழிவுகள் அடங்கிய புத்தகம் 2,000 கிலோ எடையில், 33 அடி உயரம், 22 அடி அகலத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. 96 மணி நேரத்தில் புத்தகத்தை உருவாக்கும் பணியில் 25 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இதற்கு ஐந்து இலட்சம் ரூபாய் செலவாகியுள்ளது. வரும் ஞாயிறன்று நடைபெறும் விழாவில் உலகின் மிகவும் சிறிய பெண்ணான நாக்பூரைச் சேர்ந்த ஜோதி ஆம்கே இந்த புத்தகத்தை வெளியிடுகிறார். கின்னஸ் உலக சாதனை புத்தகம் மற்றும் லிம்கா சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்காக நிபுணர்கள் குழுவினர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெர…

  9. இணையத்தில் வைரலாகும் மெலனியா ட்ரூடோ புகைப்படம் ஜி 7 உச்சிமாநாட்டில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை மெலனியா டிரம்ப் ஆசையோடு உற்றுநோக்கிய புகைப்படம் மிகவும் வைரலாகியுள்ளது. 2019ஆம் ஆண்டுக்கான G7 உச்சிமாநாடு பிரான்ஸின் பையாரிட்ஸ் நகரில் சனிக்கிழமை (24.08.2019) குறித்த மாநாடு நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிரான்ஸ், அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரிட்டன், கனடா, இத்தாலி ஆகிய நாட்டுத் தலைவர்கள் கலந்துகொள்ள கொண்டனர். கடந்த ஞாயிற்றுகிழமை மாலை உச்சிமாநாட்டில் ஐரோப்பிய பத்திரிகை ஏஜென்சி புகைப்படக் கலைஞரால் உலகத் தலைவர்களும் அவர்களது வாழ்க்கைத் துணைவர்களும் “குடும்ப புகைப்படம்” எடுக்க வந்தனர். அப்போது தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட புகைப்படங்களில்…

  10. கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் கைது வெஸ்ட்மின்ஸ்டரில் நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது குத்திக் கொல்லப்பட்ட பி.சி. கீத் பால்மரின் நினைவிடத்தில் சிறுநீர் கழித்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் பொலிஸ் நிலையத்தில் ஆஜரான பின்னர் எசெக்ஸில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளனர். நேற்று சனிக்கிழமையன்று, லண்டன் மற்றும் நாடு முழுவதும் பல அமைதியான இனவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தப்பட்டன. குறித்த போராட்டத்தின்போது 2017 வெஸ்ட்மின்ஸ்டர் தாக்குதலில் கொல்லப்பட்ட கீத் பால்மரின் நினைவிடத்திற்கு அருகில் ஒருவர் சிறுநீர் கழித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்…

  11. தாயை குப்பையில் வீசியெறிந்த மகள்!! ஈரோடு: பெற்றெடுத்த தாயை குப்பைத் தொட்டியில் வீசிவிட்டுச் சென்றுள்ளார் மகள். ஈரோடு மாவட்டத்தில் தான் இப்படியொரு கொடூரச் செயல் நடந்துள்ளது. ஈரோடு, திண்டலைச் சேர்ந்தவர் சின்னம்மாள் பழனியப்பன் (75). இவருக்கு 3 மகள்கள். இவர்கள் அனைவரும் ஈரோட்டில் நல்ல நிலையில் வாழ்ந்து வருகிறார்கள். சின்னம்மாளின் கணவர் இறந்துவிட்டார். தனி மரமான சின்னம்மாள் தன் மகள்கள் வீட்டில் மாறி மாறி இருந்து வந்தார். பெற்றத் தாய் வீட்டில் இருப்பது தங்களுக்கு பெரிய சுமையாக இருப்பதாக மூவரும் கருதினர். அதனால் அவரை கண் காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட வேண்டும் என திட்டம் தீட்டினர். சின்னம்மாளின் கடைசி மகளான சரசா, கடந்த 14ம் தேதி தனது இரு மக…

  12. தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து விரிவான வகையில்,அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட் ஓ பிளக்குடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன்தெரிவித்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் ரொபர்ட்ஓ பிளக் மற்றும் சிவிலியன் பாதுகாப்பு, மனித உரிமை மற்றும் ஜனநாயகம் தொடர்பானதுணைச் செயலாளர் மாரியா ஒடேரோ ஆகியோருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நேற்றுபேச்சுவார்த்தை நடத்தியிருந்தது. மிகவும் ஆக்கபூர்வமான வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் விரிவானபேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சம்பந்தன் தெரிவித்துள்ளார். உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு அறிக்கை மற்றும் பரிந்துரைகள்உள்ளிட்ட …

  13. சரிதம் இணையத்தளம் தொடங்கப்பட்டது முதல் இற்றைவரையில் தேசியத்திற்கான பயணத்தில் பயணிக்கும் தலைவர்களின் பாதைகள் தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தே வந்திருக்கின்றது. இதனால் ஆசியர் பிடத்திற்கு நெருக்கடிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆசியர் பீடத்தினர் துரோகிகள் என்றும் சில கட்சிகளின் எடுபிடிகள் என்றும் கூட விமர்சிக்கப்பட்டிருக்கின்றார்கள். ஆனாலும் கூட பொது நோக்கம் அறுவடை என்பதால் தனிப்பட்ட விமர்சனங்களைப் பெரிதாக தலைகளில் தூக்கிக் கொண்டு சரியானதைப் பிழை என்றோ, பிழையானதை சரி என்றோ தடம் மாறுவதற்கு சரிதம் ஆசியர் பீடம் தயார் நிலையில் இல்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தொடர்பில் சரிதம் இணையத்த தளத்தினால் முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை ஒரு…

  14. வீட்டில் கழிப்பறை இல்லாததால் வேறொருவரை மணந்த மணப்பெண்! மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்படாததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்ணுக்கு மற்றொருவருடன் திருமணம் முடிந்தது. இந்த வினோத சம்பவம் உத்தரபிரதேசம் மாநிலத்தில் நடந்துள்ளது. கான்பூரை சேர்ந்தவர் நேகா (25). இவருக்கு அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இருவீட்டாரும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாட்டை செய்யத் தொடங்கினர். அப்போது மணப்பெண் சார்பில் மணமகன் வீட்டாருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. மணமகன் வீட்டில் கழிவறை கட்டப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. மணமகன் வீட்டிலும் கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டது. திருமணம் நெருங்கிய நிலையிலும் மணமகன் வீட்டில் கழிவறை கட்டுவதற்க…

  15. பென்சில்வேனியா: கொரோனா பாதித்தவர்களை கண்டுபிடிக்க அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் நாய்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. இது தொடர்பாக வாஷிங்டன்போஸ்ட் நாளிதழில் வெளியான செய்தி: கொரோனா வைரஸ் தொடர்புடைய வாசனையை வைத்து, கொரோனாவை நாயால் கண்டுபிடிக்க முடியுமா என்பது குறித்து லேப்ரடர் இன நாய்களுக்கு பென்சில்வேனியா பல்கலையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதேபோன்ற பயிற்சி, லண்டனில் உள்ள பல்கலை ஒன்றிலும் நடந்து வருகிறது. இதற்கு முன்னர், மனிதர்களுக்கு மலேரியா தொற்று குறித்து அறிய பயிற்சி நடந்தது. இந்த சோதனை வெற்றி பெறும் பட்சத்தில் நாய்கள் கண்காணிக்கும் பணியில் ஈடுபடுத்தப்படும். விமான நிலையங்கள், தொழில் நிறுவனங்கள், மருத்துவமனைகளுக்கு வருபவர்களை கண்காணிக்கும். கொரோனாவை கண்…

    • 0 replies
    • 315 views
  16. ஆயுதங்களுடன் நுழைந்து மூளாயில் கொள்ளை யாழ்ப்பாணம் – மூளாய் பகுதியிலுள்ள வீடு ஒன்றில் இன்று (21) அதிகாலை 1.45 மணியளவில் ஆயுதங்கள் மூலம் அச்சுறுத்தி தங்க அபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளது. இதன்போது சுமார் 16 1/2 பவுன் தங்கம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வாள் மற்றும் கோடரிகளுடன் வீட்டினுள் நுழைந்த 06 பேரே வீட்டில் உள்ளவர்களை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://newuthayan.com/ஆயுதங்களுடன்-நுழைந்து-மூ/

  17. நாட்டின் ஆரோக்கியமான அரசியல் பயணத்துக்கும் இருப்புக்கும் பொருத்தமானதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான சில கருத்துக்கள் மூன்று முக்கியமான தலைவர்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்தக் கருத்துகளை அறிந்து கொள்வதும், ஆராய்ந்து பார்ப்பதும் ஒவ்வொருவரதும் கவனத்துக்கு உட்பட்டதாகும். ஒருபுறத்தில் இந்தத் தலைவர்கள் எந்தத் திசையை நோக்கிப் பயணிக்கின்றனர் என்பதையும் நோக்க முடிகிறது. மறுபுறம் நாட்டு மக்கள் தலைவர்கள் தொடர்பில் கொண்டிருக்கும் நிலைப்பாடுகள் சரியானதுதான் என்பதையும் எண்ணிப்பார்க்க முடிகிறது. முதலாவது கருத்தைச் சொல்லி இருப்பது நாட்டின் முதற் பிரஜையான ஜனாதிபதி. அடுத்த கருத்தை வெளியிட்டிருப்பது இரண்டாவது பிரஜையான பிரதமர். அடு…

  18. உலகிலேயே 5 பேருக்கு மாத்திரம் இருந்த விசித்திர நோய் : சிறுமி ஒருவருக்கும் தொற்றியதால் அதிர்ச்சி உலகில் 5 பேருக்கு மாத்திரமே காணப்பட்ட விசித்திர தோல் நோய், பங்களாதேஷில் உள்ள சிறுமி ஒருவருக்கும் ஏற்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பங்களாதேஷின் வட பகுதியில் உள்ள ஒரு பின் தங்கிய கிராமத்தை சேர்ந்த 10 வயது சிறுமியான சஹானா, இ.வி என அழைக்கப்படும் எபிடெர்மோடிஸ்பிலேசியா வெரிசிபோர்மஸ் (epidermodysplasia verruciformis) எனும் அபூர்வ தோல் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். குறித்த நோய் காரணமாக சிறுமியின் முகம், காது, நாடி மற்றும் மூக்கு உள்ளிட்ட உறுப்புகளில், மரம் போன்று சிறிய அளவில் சதை வளர்ந்து வருகின்றது. …

  19. யாழில், நீண்ட கால குடும்ப பகை காரணமாக காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தமையால், காதலர்கள் தவறான முடிவெடுத்து உயிரை மாய்க்க முனைந்த நிலையில் காதலன் உயிரிழந்துள்ள நிலையில், காதலி அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, உறவு முறையான 19 வயது இளைஞனும் , 17 வயது சிறுமியும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாருக்கும் இடையில் நீண்ட காலமாக குடும்ப பகை நிலவி வந்துள்ளது. இந்நிலையில் தமது பிள்ளைகள் காதலிப்பதனை அறிந்த பெற்றோர் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் காதலர்கள் இருவரும் தவறான முடிவெடுத்து உயிர் மாய்க்க முனைந்துள்ளனர். இந்நிலையில், இருவரையும் மீட்டு…

    • 0 replies
    • 217 views
  20. செத்து மடிவோமே அன்றி இலங்கைக்கு திரும்பப் போக மாட்டோம். துபாயில் சிக்கியுள்ள ஈழ அகதிகளின் கண்ணீர். --------------------------------------------------------------------- சர்வதேச நாடுகளுக்கு துபாய் ஈழ அகதிகளின் வேண்டுகோள். எங்களுக்கு புகலிடக் கோரிக்கை தர மறுக்கும் சர்வதேச குடியேற்ற நாடுகளே.!! எங்களுக்கு வீடு வாசல், வசதி வாய்ப்புக்கள், சுகபோக வாழ்க்கை எதுவும் தர வேண்டாம். உங்கள் நாடுகளில் ஏதாவது ஒரு காட்டுப் பகுதியில் ஒரு சிறிய இடம் தந்தாலே போதும், நாம் உயிரோடும், பாதுகாப்போடும், நிம்மதியோடும் வாழ்வதற்கு! ---------------------------------------------------------------------- இவ்வாறு துபாய் சிறையில் வாடும் ஈழத்து உறவுகள் கோரிக்கை வைத்திருப்பது தமிழ் சமூகத…

  21. ரஷ்யாவின் பெலராஸ் பகுதியில் கடந்த 1887ஆம் ஆண்டில் பிறந்த மார்க் சாகல் என்ற பிரபல ஓவியர் நவீன யுகத்தின் முன்னோடியாகக் கருதப்பட்டவர். இவர் பின்னாளில் பிரான்ஸ் நாட்டில் குடியேறி அங்கு 1985 ஆம் ஆண்டு இறந்தார். இவருடைய ஓவியங்கள் பல மில்லியன் பவுண்டுகள் மதிப்பிற்கு விற்கப்பட்டன. கலை உலகில் இவரது நற்பெயரைக் காப்பற்றும் வண்ணமாக இவரது பேரப்பிள்ளைகளே சாகல் குழு என்ற அமைப்பினை நிர்வகித்து வருகின்றனர். இங்கிலாந்தின் லீட்ஸ் பகுதியைச் சேர்ந்த மார்டின் லங்(63) என்ற தொழிலதிபர் கடந்த 1992 ஆம் ஆண்டு 1,00,000 பவுண்டு கொடுத்து இந்த ரஷ்ய ஓவியரின் ஓவியம் ஒன்றினை வாங்கியிருந்தார். 1909 -10 ஆம் ஆண்டுக்காலத்தில் வரையப்பட்டது என்று வாங்கப்பட்ட இந்த ஓவியம் பற்றித் தெரிந்து கொள்வதற்கா…

  22. “எட்டே கால் இலட்சணமே, எமனேறும் பரியே மட்டில் பெரியம்மை வாகனமே கூரையில்லா வீடே குலராமன் தூதுவனே ஆரையடா சொன்னாய் அது” - ஔவையார் – (எட்டு இலக்கத்தை ‘அ’ எனவும் கால் என்ற கணக்கை ‘வ’ என்றும் தமிழ் எழுத்துக்களில் குறிப்பிடப்படும். அதன் படி எட்டே கால் இலட்சணம் என்றால் எமனுடைய வாகனமான எருமைக்கடாவாகும். பெரியம்மை வாகனம் என்பது மிகவம் அவலட்சணமான யாழி வாகனமாகும். கூரையில்லா வீடு என்பது மூளையில்லாத மனிதனைக் குறிக்கிறது. குரலாமன் தூதுவன் என்றால் இராமாயணத்தில் இராம தூதனாக விளங்கிய அனுமான் என்ற குரங்கைச் சுட்டிக்காட்டுகிறது. இதைத் தமிழில் வசைக் கவி எனக் கூறுவர். இது காளமேகம் செய்தியின் அறிமுகம்) காளமேகம் செய்திகள்: தயாரித்து வழங்குபவர் ‘பொய்யா மொழி’ இனி தலைப்புச் செய்திகள்! …

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.