Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. தடுப்பு முகாமிலுள்ள 'கிம்புலா எலே குணா' உட்பட 9 பேரை அழைத்து வருவதற்கு தமிழகம் விரையும் சிஐடியினர்! By T. Saranya 25 Jan, 2023 | 11:50 AM இந்தியாவின் தமிழகத்தில் உள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 'கிம்புலா எலே குணா' உட்பட 9 பேரை இலங்கைக்கு அழைத்து வருவதற்காக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவொன்று இன்றும் (ஜன 25) நாளையும் (ஜன 26) தமிழகம் செல்கிறது. கிம்புலா எலே குணா என்ற சின்னையா குணசேகரன், அழகப்பெரும என அழைக்கப்படும் கோட்டா காமினி, சுனில் காமினி பொன்சேகா, பம்மா என்ற ஸ்டான்லி கென்னடி பெர்னாண்டோ, அத்துருகிரியவைச் சேர்ந்த நளீன் சதுரங்க என்ற லடியா கெ…

  2. தாதியின் அலட்சியத்தால் 10 பேர் உயிரிழப்பு! தாதியின் அலட்சியதால் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள மெட்ஃபோர்ட் பகுதியில் அமைந்துள்ள ஒரேகான் வைத்திய சாலையிலேயே இச்சம்பவம் இடமபெற்றுள்ளது. குறித்த வைத்திய சாலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 10 பேர் திடீரென ஏற்பட்ட தொற்றுக் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில், குறித்த வைத்திய சாலையில் பணியாற்றும் தாதியொருவர் நோயாளிகளுக்கு செலுத்த வேண்டிய வலி நிவாரிணியான ஃபெண்டானில் (fentanyl) மருந்தைத் திருடி, அ…

  3. உலகத் தமிழர் பேரவை உட்பட 16 அமைப்புக்களையும் பல தனிநபர்களையும் சட்டரீதியாக்கித் தடைசெய்து, கடந்தாண்டு வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானி, மீளாய்வில் இருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு நேற்று தெரிவித்தது. வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சில் நேன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில், அமைச்சின் பேச்சாளர் திருமதி மஹிஷினி கொலன்னே இதைத் தெரிவித்தார். அண்மையில் இலண்டனில் வைத்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் உலகத் தமிழர் பேரவைக்குமிடையில் இடம்பெற்ற சந்திப்பில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் மங்கள சமரவீர கலந்துகொண்டமை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதைத் தெளிவுபடுத்தினார். கடந்த வருடம் வெளியிடப்பட்ட அரசாங்க வர்த்தமானில் சில அமைப்புக்களும் பல தனிநப…

    • 0 replies
    • 492 views
  4. உலகை மிரட்டும் ஐ.எஸ். தீவிரவதிகளை தற்போது எய்ட்ஸ் நோய் விரட்டிவருகிறது. இதனைத் தொடர்ந்து தீவிரவாதிகள் பரிசோதனை செய்துக் கொள்ளவேண்டும் என்று தலைமை உத்தரவிட்டு உள்ளது. ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக கொண்டு ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இயங்கி வருகிறது. அதன் தீவிரவாதிகள், உலகின் பல நாடுகளில் வேரூன்றி உள்ளனர். ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்கா தலைமையிலான கூட்டுப்படை போரிட்டு வருகிறது. உலக நாடுகளின் படையானது, போராடியும் இதுவரையில் அவர்களை அடக்கமுடியவில்லை. தொடர்ந்து இருதரப்பு இடையே சண்டை நடைபெற்று வருகிறது. ஐ.எஸ். தீவிரவாதிகள், தங்களிடம் சிக்கியவர்களை தலையை வெட்டியும், வெடிகுண்டு வைத்து வெடித்தும், தண்ணீருக்கு…

    • 0 replies
    • 397 views
  5. வாழ்நாளில் ஒரு முறையே நிகழக் கூடிய அரிதான நிகழ்வு எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி ஏற்படவுள்ளது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் ஜூன் 6ம் திகதி வெள்ளிக் கிரகம் ஊட றுத்து செல்லவுள்ளது. வானியலில் மிக அரிதாக நிகழும் இது இந்த நூற்றாண்டில் கடைசி முறையாக ஏற்படவுள்ளது. இதன் படி இவ்வாறான ஒரு நிகழ்வை மீண்டும் பார்க்க ஒரு நூற்றாண்டு வரை காத்திருக்க வேண்டி வரும். எதிர்வரும் ஜூன் 6ஆம் திக திக்கு பின்னர் 2117 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் திகதி யிலேயே வெள்ளிக் கிரகம் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் செல்லவுள்ளது. எனினும் இதற்கு முன்னர் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி இவ்வாறு நிகழ்ந்துள்ளது. இதன்போது வெள்ளிக்கிரகம் சூரியனின் மேற்பரப்பில் சிறு புள்ளியாக தோற்றம் பெறும் ஒரு சில மணி நேரங…

  6. பிச்சைக்காரர்களில் 75 ஆயிரம் பேர் பிளஸ் 2 பாஸ்; 3 ஆயிரம் பேர் பட்டதாரிகள்! இந்தியாவில் மொத்தம் 3.72 லட்சம் பிச்சைக்காரர்கள் உள்ளதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. இதில் 21 சதவீதம் பேர் குறைந்த பட்சம் 12-ம் வகுப்பு பாசாகியுள்ளனர். அதாவது கிட்டத்தட்ட 75 ஆயிரம் பேர் 12-ம் வகுப்பு பாஸ் செய்து விட்டு, பிச்சைக்காரர்களாக மாறி பணம் சம்பாதிக்கின்றனராம். இது மட்டுமல்ல, இதில் 3 ஆயிரம் பேர் டிப்ளமோ அல்லது ஏதாவது டிகிரி, போஸ்ட் கிராஜுவேட் பட்டம் பெற்றவர்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. பட்டம் பெற்ற பிறகு, நல்ல வேலை கிடைக்காத காரணத்தினால் பல பட்டதாரிகள் பிச்சை எடுப்பதில் ஈடுபடுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தொழிலை தேர்வு செய்தது குறித்து தினேஷ் என்…

  7. வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டு கொன்ற தந்தை! லாகூர்: பாகிஸ்தானில், வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்று கவுரவக் கொலை செய்து உள்ளார் ஒரு கல்நெஞ்சம் படைத்த தந்தை. பாகிஸ்தானில் கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் அங்கு 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர். கவுரவக் கொலையை மையப்படுத்தி ‘எ கேர்ள் இன் தி ரிவர்’ என்ற ஆவணப் படத்துக்கு நேற்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஷர்மீன் ஒய்த் சினாய் என்ற பெண் தயாரித்து இருந்தார். இதை பாகிஸ்தானில் விழாவாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு ஒரு பெண் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ…

  8. இரண்டாம் உலகப்போரின் போது பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக போரிட்டு இறந்த இந்தியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்த இங்கிலாந்து அரசு தீர்மானித்துள்ளது.உலக வரலாற்றையே உலுக்கிய இரண்டாம் உலகப்போர் கி.பி. 1939 - 1945ம் ஆண்டுகளுக்கிடையே தொடர்ந்து 6 ஆண்டு காலம் நடைபெற்றது.பிரிட்டன், ரஷ்யா, அமெரிக்கா, சீனா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஓரணியாகவும் ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட்ட நாடுகள் எதிரணியாகவும் இந்த போரில் ஈடுபட்டன. இந்த போரில் சுமார் 7 கோடி பேர் பலியானதாக வரலாற்று ஆய்வாளர்கள் பதிவு செய்துள்ளனர். ஒன்றிணைந்த இந்தியா, பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்தபோது, இந்த போரில் சுமார் 12 லட்சம் இந்தியர்களை பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஈடுபடுத்தினர். இவர்களில் 74 ஆயிரம் பேர் பிரிட்டிஷ் ஆட்சியி…

  9. அதிபரின் ட்விட்டர் பதிவு நீக்கம்: ட்விட்டரையே தடை செய்தது நைஜீரியா 31 Views அதிபர் முகமது புஹாரியின் ட்விட்டர் பதிவொன்றை ட்விட்டர் நிறுவனம் நீக்கியதைத் தொடர்ந்து தங்கள் நாட்டில் ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு தடை விதித்துள்ளது நைஜீரியா அரசு. கடந்த 1967 முதல் 1970 வரை நைஜீரியாவில் நடைபெற்ற உள்நாட்டுப் போரில் 10 லட்சம் பேர் உயிரிழந்தனர். இன்றளவும் பல்வேறு குழுக்கள் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி வருகின்றன. இந்நிலையில், நைஜீரியா அதிபர் முகமது புஹாரி தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில், “அரசுக்கு எதிராக செயல்படும் இளைஞர்களுக்கு நைஜீரிய உள்நாட்டுப் போரில் ஏற்பட்ட இழப்புகள், அழிவுகள் தெரிந்திருக்க வாய்ப்…

  10. பேனாவைக் களவெடுத்த செக் நாட்டின் அதிபர் சிலி நாட்டுக்கு விஜயம் செய்த செக் நாட்டின் அதிபர் வக்லேவ் கிளவுஸ் அங்கு நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் கலந்து கொண்டார். அத்தருணம் அவர் தனக்கு முன்னால் வைக்கப்பட்டிருந்த பேனாவை கச்சிதமாக திருடி பாக்கட்டில் மறைத்துக் கொண்டார். இந்தக் காட்சியை அங்கிருந்த படப்பிடிப்பாளர் பதிவு செய்துள்ளார். செக் நாட்டின் தொலைக்காட்சி அதிபரின் திருட்டுப் புத்தியை பகிரங்கமாக வெளியிட்ட பின்னர் இது யூரூப்பில் அறிமுகமானது குறிப்பிடத்தக்கது. சிலி நாட்டின் பிரதமர் செபஸ்டியான் பினிரா அதிபரை மக்களுக்கு அறிமுகம் செய்தபோதே இந்தத்திருட்டு நிகழ்வு இடம் பெற்றது. இந்த ஒளிப்படத்தை இதுவரை அரை மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் பார்த்துவிட்டார்கள். தற்போது 63 வ…

    • 0 replies
    • 392 views
  11. கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் நித்தியானந்தா. இரண்டு முறையும் ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் பல அவ்வப்போது எழுந்தபோதிலும், அதனை பற்றி கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார். அதன் பிறகு சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கு என்று தனி பாஸ்போர்ட், தனி ரூபாய் நோட்டுகள் எல்லாம் தயாரிக்கப்பட்டன. நித்தியானந்தா நேரலை நிகழ…

  12. ரூப்ளிக்கேட் நிலாவில் மக்களுக்கு வெளிச்சம் ! செல்லூர் ராஜூ திட்டம் கொப்பி அடித்த சீனா.! மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் செல்லூர் ராஜூவை வைத்து விண்டு மில் காமெடியை சுதாகரும், கோபியும் அரங்கேயிருப்பது நமக்கு ஞாபகம் வரலாம்.வெயில் காலங்களில் அனைத்து பொது மக்களுக்கு வெட்கை அதிமாக இருக்கும். இதை தடுக்க வானில் ஏசி வைக்கலாம் என்று செல்லூர் ராஜூ செல்வதை போல, சுதாகர் நடித்து இப்பார். இதை கேள்வி கேட்கும் நிருபராக கோபி நடித்து இருப்பார். அதில் உயரமான கம்பம் வைத்து, விண்டு மில்லுக்கு பதிலாக ஏசியை வைத்தால் அனைவரும் வெட்கை இல்லாமல் குளு குளு என்று இருப்பார் என்று செல்லூர்ராஜூ செல்வதை போல இந்த காமெடி இருக்கும்.இதுக்கு பல லட்சம் கோடியாகும் என்று செல்லூர் ராஜூ செல்வதை ப…

  13. அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்தவர் கெல்லி கீக்ஸ். அவர் வடக்கு கரோலினா மாநிலத்தில் உள்ள ராலேவில் இருந்து விமானத்தில் பயண்ம் செய்து உள்ளார். பயணத்தின் போது அவருக்கு அருகே இருந்த இருக்கையில் ஒரு இளம் காதல் ஜோடி இருந்துள்ளது. அந்த பயண நேரத்திலேயே அந்த காதல் ஜோடி விமானத்தில் சண்டை போட்டு கொண்டனர். இதை பார்த்த கெல்லி அதை தனது டுவிட்டரில் லைவ்வாக டுவீட் செய்துள்ளார். ஆண்: இது உண்மையில் ஆச்சரியம் அளிக்கும் ஒன்றா? இந்த தகவலால் நீ அதிக ஆச்சரியம் அடைகிறாயா? ஆண்: எனக்கு கவலை இல்லை. பெண்: உனக்கு கவலை இல்லை எனில் எனக்கு மகிழ்ச்சி. பெண்: இதற்கு நான் தகுதியானவளா? இந்த விசயத்தை ஏன் கொண்டு வந்துள்ளாய்?அந்த பெண் போல் இருக்க நான் விரும்பவில்லை. அவளாக இருக்க எனக்கு விருப்பமில்லை. உன…

    • 0 replies
    • 381 views
  14. [size=4]சில ஆண்டுகளுக்கு முன்பு சார்ஸ் எனும் நோய் உலகம் முழுவதும் பரவி ஏராளமானோரை பலி கொண்டது. இப்போது அதேபோல் ஒருவித வைரஸ் பரவி வருகிறது. சவுதிஅரேபியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் 60 வயது மதிக்கத்தக்க ஒருவர் மர்ம நோயால் இறந்தார். அவரை தாக்கிய நோய் எது என்று ஆய்வு செய்தபோது அது புதிய வகை வைரஸ் தாக்குதலால் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது.[/size] [size=4]இந்த நிலையில் கத்தார் நாட்டை சேர்ந்த ஒருவருக்கும் இதே நோய் தாக்கி இருக்கிறது. அவர் சவுதி அரேபியாவில் சுற்றுப்பயணம் செய்துவிட்டு லண்டன் சென்றார். அங்கு நோயால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். தற்போது அவருடைய சிறுநீரகம் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார். அவரையும் புதிய வகை வைரஸ் தாக்…

  15. டெஸ்லா CEO எலோன் மஸ்க் தன்னுடைய மகனுக்கு வைத்துள்ள பெயர் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது!! டெஸ்லா CEO எலோன் மஸ்க் தன்னுடைய மகனுக்கு வைத்துள்ள பெயர் சமூகவலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது!! டெஸ்லா நிறுவனத்தின் CEO எலோன் மஸ்க், தன் மகனுக்கு X Æ A-12 கஸ்தூரி என்று பெயர் வைத்துள்ளார். இது இணையத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. எலோன் மஸ்க் தனது முதல் குழந்தையை காதலி கிரிம்ஸுடன் மே 5 அன்று வரவேற்றார், மேலும் குழந்தையின் இரண்டு படங்களையும் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். ட்விட்டரில் ரசிகர்களுடனான சாட்டில், எலோன் மஸ்க்கிடம் தனது குழந்தையின் பெயர் குறித்து கேட்கப்பட்டது, மேலும் அவர் "எக்ஸ் Æ ஏ -12 கஸ்தூரி" என்று ட்வீட் செய்துள்ளார். …

    • 0 replies
    • 404 views
  16. காதல் தோல்வி : காதலனை பழிவாங்க ஒரு டன் வெங்காயம் அனுப்பி வைத்த காதலி சீனாவில் நாளை மே 20 ந்தேதி காதலர் தினம் கொண்டாடப்படுகிறது தன்னை ஏமாற்றிய தன் முன்னாள் காதலன் தன்னைப்போலவே அழு வேண்டும் என்பதற்காக அவர் வீட்டுக்கு 1000 கிலோ வெங்காயத்தை அனுப்பி வைத்தார் ஒரு இளம்பெண். சீனா ஷாண்டோங் மாநிலம் ஜிபோ பகுதியை சேர்ந்த பெண் ஜாவோ நீண்ட நாட்களாக ஒருவரை காதலித்து வந்தார். தனது காதலனுடன் காதலர் தினத்தை கொண்டாட மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் அவரது காதலர் அவரை ஏமாற்றி விட்டார். காதலரை பிரிந்தபோது மூன்று நாட்களாக கண்ணீர் விட்டு அழுது உள்ளார். இந்த நிலையில், காதலர் இந்த பிரிவுக்கு வேதனை படவில்லை என்பது தெரியவர, ஜாவோவுக்கு கடும் கோபம் ஏற்பட்ட…

  17. இங்கிலாந்தில் பலரால் பார்க்கப்படும் தொலைகாட்சி நிகழ்ச்சிகளில் Britain's Got Talent ஷோவும் ஓன்று, மறைந்திருக்கும் திறமைகளை வெளிக் கொண்டுவரும் நிகழ்ச்சியாக இது அமைந்திருக்கிறது. இதில் La Quebrada என்பவர் 100அடி உயரத்தில் நின்று உடலில் தீமூட்டி நீர்த் தொட்டியில் குதித்துள்ளார். ******************* AMAZING PICTURES BELOW*********** http://www.puthiyaulakam.com/2013/01/Britains-Got-Talent.html

  18. இரா.சாணக்கியன், நிதி அமைச்சர்?? – மட்டு நகரில் பதாகை ! கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் நிதி அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக தெரிவித்து மட்டக்களப்பு நகரில் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் இலங்கை தமிழரசுக் கட்சியின் வாலிப முன்னணி என்ற பெயரில் குறித்த பதாகை காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதில் புதிய நிதியமைச்சராக பதவியேற்கவுள்ள இராசமாணிக்கம் சாணக்கியனுக்கு வாழ்த்துகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த பதாகை தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2022/1275728

  19. Published on 2022-04-13 17:48:41 கனடாவில் இருந்து யாழ்ப்பாணத்தில் உள்ள வன்முறை கும்பல் ஒன்றுக்கு பணம் வழங்கப்பட்டு , வீடொன்றின் மீது தாக்குதல் நடத்தப்பட்டு , வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் சுன்னாகம் , புனித அந்தோனியார் வீதியில் உள்ள வீடொன்றின் மீதே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் வீட்டின் பிரதான வாயில் கதவை அடித்து உடைத்து நுழைந்து, ஜன்னல் கண்ணாடிகள் என்பவற்றை அடித்து நொருக்கியத்துடன் , வீட்டில் இருந்த உடமைகளையும் அடித்து நொருக்கி அட்டகாசம் புரிந்ததுடன் வீட்டின் உரிமையாளருக்கும் கொலை அச்சுறுத்தல் விடுத்து பின்னர் அங்கிருந்து தப்ப…

  20. ஆப்பிளை வாங்குகிறது கூகுள்: போலி செய்தியால் பரபரப்பு! இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLOIC VENANCE/AFP Image caption"ஆப்பிளின் ஆடம்பரமான தலைமையகத்துக்கு" கூகுள் நிறுவனம் இடம்பெயருமென்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. "$9 பில்லியனுக்கு ஆப்பிளை வாங்குகிறது கூகுள்" என்ற தலைப்புச்செய்தி டவ் ஜோன்ஸின் நிதிநிலை செய்திப்பிரிவின் இணையதளத்தில் செவ்வாய்க்கி…

  21. உலகிலேயே மிகப் பெரிய வாயை கொண்ட. - 21 வயதானபெண் Vhg செப்டம்பர் 13, 2022 அமெ­ரிக்­காவைச் சேர்ந்த சமந்தா ரம்ஸ்டேல் எனும் 21 வய­தான யுவதி, உலகின் மிகப் பெரிய வாயைக் கொண்டவராக காணப்படுகின்றார். இதற்­காக கின்னஸ் சாதனைப் புத்த­கத்­திலும் அவர் இடம்­பெற்­றுள்ளார். இந்த அங்­கீ­கா­ரத்­துடன் சமூக வலைத்தள பிர­ப­ல­மா­கவும் சமந்தா ரம்ஸ்டேல் விளங்­கு­கிறார். 32 லட்சம் பேர் அவரை சமூக வலைதளத்தில் பின்­தொ­டர்­கின்­றனர். அண்­மையில் அவர் பற்­சி­கிச்­சைக்­காக பற்­சி­கிச்சை நிலை­ய­மொன்­றுக்கு சென்றார். மிகப் பெரிய வாயைக் கொண்ட சமந்தா தமது பற்­சி­கிச்சை நிலை­யத்­துக்கு வரு­வதை அறிந்த ஊழி­யர்கள் பெரும் மகிழ்ச்­சி­ய­டைந்­தனர். இதனால், அவர…

  22. உலகிலேயே மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலீஃபாவில், பொதுமக்கள் பார்வையாளர் மாடம் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டதையடுத்து, "மனிதர்களால் உருவாக்கப்பட்ட உலகின் மிக உயர்ந்த பார்வையாளர் மாடம்' என்ற பெருமையைப் பெற்றுள்ளது. "புர்ஜ் கலீஃபா - ஸ்கை' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் பார்வை யாளர் மாடம், தரைமட்டத்திலிருந்து 555 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கோலாகலமாக நடைபெற்ற இந்த பார்வை மாடத்தின் திறப்பு விழாவில், கின்னஸ் சாதனைப் புத்தக நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய கின்னஸ் நிறுவனத்தின் மத்தியக் கிழக்கு, வட ஆப்பிரிக்க நாடுகளுக்கான மண்டல மேலாளர் தலால் ஒமர் கூறுகையில், ""ஏற்கெனவே தனது சாதனை மூலம் உலகை வியக்க வைத்த புர்ஜ் கலீஃபா, மீண்டும் ஒரு சாதனையை நிகழ்த்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.