செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
வாழ்க்கைச் செலவு குறைந்த நாடுகளின் பட்டியலில் இலங்கை 7 ஆவது இடத்தில் உள்ளது. 139 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் இணையத்தளமொன்றினால் இந்த பட்டியல் வௌியிடப்பட்டுள்ளது. வாழ்க்கைச் செலவு மிகவும் குறைந்த நாடாக பாகிஸ்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. வாழ்கைச் செலவு மிகவும் அதிகரித்த நாடாக சுவிட்ஸர்லாந்து பதிவாகியுள்ளது. https://thinakkural.lk/article/265691
-
- 0 replies
- 323 views
- 1 follower
-
-
வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து 5 முதலைகள் பிடிபட்டன யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. தொண்டமனாமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2023/1342097
-
- 0 replies
- 289 views
-
-
யாழில் சிலுவையை உடைத்த இளைஞர் கைது! யாழ் பண்டத்தரிப்பு பற்றிமா தேவாலய வளாகத்தில் இருந்த சிலுவையை உடைத்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவரைப் பொலிஸார் நேற்றைய தினம் (புதன்கிழமை) கைதுசெய்துள்ளனர். குறித்த இளைஞர் மது போதையில் இருந்த நிலையிலேயே இவ்வாறு செய்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வந்த பொலிஸார் குறித்த இளைஞரைக் கைது செய்துள்ளதுடன் இது குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://athavannews.com/2023/1341855
-
- 3 replies
- 665 views
-
-
காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஆனால் இப்படியும் காதல் மலருமா? என கேட்கும் வகையில் ஒரு சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரேசில் நாட்டை சேர்ந்த இமானுவேலா என்ற இளம்பெண் அப்பகுதியில் உள்ள ஒரு தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஒரு வாலிபர் இமானுவேலாவிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் திருடன், திருடன் என கத்தினார். ஆனாலும் கண் இமைக்கும் நேரத்திற்குள் திருடன் தப்பி ஓடி தலைமறைவானார். இந்நிலையில் செல்போனை பறித்த வாலிபர் அதை எடுத்து பார்த்த போது, அதில் இமானுவேலாவின் புகைப்படத்தை பார்த்தார். இவ்வளவு அழகான பெண்ணிடம் செல்போனை பறித்துவிட்டோமே என வருந்திய அவர், இமானுவேலாவை நேரில் சந்தித்து அவர…
-
- 3 replies
- 336 views
- 1 follower
-
-
இலங்கை வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. https://athavannews.com/2023/1339529
-
- 19 replies
- 2k views
-
-
யாழில் மரங்களுக்கு மண்ணெண்ணெய் ஊற்றிய விஷமிகள் யாழ்ப்பாணம், அச்சுவேலி, வளர்மதி சனசமூக சமூக நிலையத்தில் உள்ள பூச்செடிகள், பயன் தரு மரங்களுக்கு அடையாளம் தெரியாத இருவர் மண்ணெண்ணெய் ஊற்றிச் சென்றுள்ளனர். குறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவமானது அப்பகுதியிலுள்ள சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது. இந்நிலையில் குறித்த இருவரும் அப்பகுதி மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது குறித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://athavannews.com/2023/1341818
-
- 0 replies
- 509 views
-
-
சிறிய தந்தையால் சிறுமி துஷ்பிரயோகம் சிறிய தந்தையால் 13 வயதான சிறுமியொருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. யாழ், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பெண்ணொருவர், இரண்டாவது தடவையாக திருமணம் செய்து கொண்டு தனது முதல் தாரத்தின் மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அப் பெண்ணின் இரண்டாவது கணவர், 13 வயதான அப்பெண்ணின் மகளை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, பொலிஸார் சிறுமியை மீட்டு வைத்திய பரிசோதனைக்காக வைத்திய சாலையில் அனுமதித்துள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மேல…
-
- 0 replies
- 322 views
-
-
நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்! நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 பிள்ளைகளை அடைத்து வைத்து பெற்றோர் சித்திரவதை செய்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில், தாம் பெற்ற பிள்ளைகளையே சித்திரவதை செய்த குற்றத்திற்காக டிராவிஸ் டாஸ் (31) மற்றும் அவர் மனைவி அமண்டா ஸ்டாம்பர் (33) ஆகிய இருவரை பொலிஸார் அண்மையில் கைது செய்துள்ளனர். 2 வயது முதல் 11 வயது வரையுள்ள 6 குழந்தைகளுக்கு பெற்றோரான குறித்த இருவரும் தமது பிள்ளைகளை நீண்ட நாட்களாகத் தாக்கி வந்துள்ளதோடு அவர்களுக்கு உணவளிக்காமல் நாய் கூண்டுகளில் அடைத்து வைத்து சித்திரவதை செய்து வந்துள…
-
- 0 replies
- 174 views
-
-
20 JUL, 2023 | 03:45 PM ஜேர்மனி தலைநகரில் சிங்கமொன்று அலைந்து திரிவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். பேர்ளினின் தென்மேற்கு புறநகர் பகுதியில் பெண்சிங்கமொன்று காணப்பட்டதை தொடர்ந்து அந்த பகுதியில் பொலிஸார் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அருகில் உள்ள காட்டுப்பகுதியிலிருந்து சிங்கமொன்று மக்கள் குடியிருப்பிற்குள் வந்துள்ளதை காண்பிக்கும் படம் இன்று டுவிட்டரில் வெளியாகியிருந்தது. இதனை தொடர்ந்து அதனை தேடும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள பொலிஸார் பொதுமக்களை வீடுகளிற்குள் இருக்குமாறு எச்சரித்துள்ளனர். எனினும் உள்ளுர் மிருகக்காட்சி சாலைகளும் சரணாலயங்களும் சிங்கம் எதுவும் தப்பி வெளியேறவில்லை என குறிப்…
-
- 19 replies
- 1.3k views
- 2 followers
-
-
தெற்கு ஐரோப்பா நெருப்பின் நடுவே தவிக்கிறது. கிறீஸ் நாட்டின் ரோடோஸ் தீவில் ஏற்பட்ட தீயை அணைக்க முடியாமல் கிறீஸ் அரசு திண்டாடிக் கொண்டிருக்கிறது. ஆயிரக் கணக்கான உல்லாசப் பயணிகள் தற்போது பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். யேர்மனியில் இருந்து விடுமுறைக்குச் சென்ற பயணிகளைத் திருப்பி அழைத்து வரும் பணியில் TUI விமான சேவை தற்போது ஈடுபட்டிருக்கிறது. திங்கட்கிழமை நான்கு விமானங்கள் இந்த சேவையில் ஈடுபட்டன. இன்றும் அதன் சேவை தொடர்கிறது. மேலும் விடுமுறைக்கு ரோடோஸ்,கோர்பு, ஈபோயே தீவுகளுக்குச் செல்ல இருக்கும் பயணிகள், எந்தவிதக் கட்டணங்களும் இல்லாமல் தங்கள் பயணத்தை இரத்து செய்யலாம் என யேர்மனிய உல்லாசப் பயண நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அத்துடன் ஸ்பானியா, இத்தாலி, …
-
- 0 replies
- 391 views
-
-
இலங்கையில் அதிகரித்துள்ள பேன் தொல்லை. தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளில் 60 வீதமான பேர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. தலையில் பேன்கள் அதிகம் காணப்படுவதால் அவர்களின் படிப்பு, தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ருஹணு பல்கலைக்கழக இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காலி நகரில் உள்ள நானூற்று இருபத்தைந்து மாணவிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதாக சமூக மருத்துவ நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார் . கேள்வித்தாளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 60வீத மாணவ…
-
- 1 reply
- 434 views
-
-
கேர்ள் பிரண்ட் அல்லது பாய் பிரண்ட் இல்லையே என ஏங்கித் தவிக்கும் சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு சகியாத அரசாங்கம், வாடகைக்கு அவர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி அளித்து வருகிறது. அவை எங்கே என்பதற்கு அப்பால், எதனால் என்பதில் நிறைய விஷயங்கள் பொதிந்திருக்கின்றன. உருப்படியான கேர்ள் பிரண்ட் அல்லது போய் பிரண்ட் அமையாது போவதன் துயரத்தை ’2 கே கிட்ஸ்’ வசம் கேட்டுப்பார்த்தால் தெரியும். ஏறெடுத்து பார்க்காதவர்கள் பாதிப்பேர்; அப்படி பார்த்தாலும், பழகினாலும் பாதியிலே முட்டிக்கொண்டு விலகுவோர் மீதிப்பேர். இங்கே என்றில்லை, உலகமெங்கும் நவயுக இளசுகளின் எதிர்பால் ஈர்ப்பு என்பது சதா அக்கப்போரிலேயே இருக்கிறது. ஜப்பான் தேசமும் அதற்கு விதிவிலக்கல்ல. ஒரே வித்தியாசம்; அங்கே சிங்கிள்ஸ் பரிதாபம் கண்டு…
-
- 6 replies
- 523 views
- 1 follower
-
-
ஐரோப்பிய நாடுகளில் இது சாதாரணம். ஆனால் மலேசியாவில் தண்டனைக்குரிய குற்றம். ஓரினச்சேர்க்கை மலேசியாவில் தடைசெய்யப்பட்ட ஒன்று. அதை மீறுவோருக்கு 20 வருடங்கள் அளவிலான சிறைத்தண்டனை அல்லதுகசை அடிகள் வழங்கப்படலாம். பிரித்தானியாவைச் சேர்ந்த ‘1975 இசைக்குழு’ அந்தச் சட்டத்தை இப்பொழுது மீறி இருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை, மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் Good Vibes festival நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியின்ஆரம்பத்திலேயே 1975 இசைக்குழுவின் பாடகரான Matty Healy (34), மலேசியாவில் உள்ள LGBTQ ( Lesbian, Gay, Bisexual, Transgendered and Questioning) சட்டத்தைப் பற்றி தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார். நிகழ்ச்சியின் நடுவே பாடகர் Healy மேடையில் வைத்து Ross MacDonald (34)ஐ முத்தமிட…
-
- 2 replies
- 323 views
-
-
பட மூலாதாரம்,COLUMBUS ZOO / TWITTER கட்டுரை தகவல் எழுதியவர், கிரேம் பேக்கர் பதவி, பிபிசி நியூஸ் 22 ஜூலை 2023, 14:33 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்காவின் ஓஹையோ மிருகக்காட்சி சாலையில் பராமரிக்கப்படும் ஒரு கொரில்லாவை ஆண் என அந்தப் பூங்கா ஊழியர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக நம்பிவந்தனர். ஆனால் அந்த கொரில்லா தற்போது ஒரு குட்டியை ஈன்றுள்ளது. கொலம்பஸ் மிருகக்காட்சி சாலையில் சல்லி என்ற இந்த கொரில்லா கடந்த 2019ம் ஆண்டு முதல் வாழ்ந்து வருகிறது. இந்த கொரில்லா கடந்த வியாழக்கிழமையன்று ஒரு குட்டியை ஈன்றதை ஊழியர்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து ஒரு ப்ளாக…
-
- 1 reply
- 675 views
- 1 follower
-
-
இரண்டு வார்த்தைகள் ஒரு 13 வயதுச் சிறுமியைத் தன்னைத் துன்புறுத்துவனிடம் இருந்து காப்பாற்றி இருக்கிறது. கலிபோர்னியாவிலுள்ள Long Beach நகரத்தில், ஒரு சலவை நிலையத்துக்கு முன்னால் நிறுத்தி இருந்த ஒரு காரில், சில நாட்களுக்கு முன்னால்கடத்தப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்ட சிறுமி ஒருத்தி இருந்தாள். அப்பொழுது அவளைக் கடத்தியவன் சலவை நிலையத்தில் இருந்திருக்கிறான். தனியாகக் காரில் இருந்த அந்தச் சிறுமி ஒரு கிழிந்த பேப்பர்த் துண்டில் „Help me“ என்று எழுதி, அதைக் கார் கண்ணாடியில் அழுத்தி வெளியேதெரியும்படி காட்டினாள். அதைப் பார்த்த பாதசாரிகள் உடனடியாகப் பொலிஸுக்கு தகவல் தந்திருக்கிறார்கள். பொலிஸார் கார் தரித்திருந்த இடத்திற்கு வந்த போது, காரினுள் இருந்து சிறுமி Help me என்ற…
-
- 0 replies
- 208 views
-
-
வெட்டிய தலைமுடியுடன் பொலிஸ் நிலையம் சென்ற பெண் : யாழில் பரபரப்பு! குடும்பத்திற்குள் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தனது தலைமுடியினைக் கத்தரித்த சகோதரிக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் தனது தங்கச் சங்கிலியை ஏமாற்றிக் களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். இதனையடுத்தே தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கனடாவில் வசிக்கும் பெண்ணொருவர் அளவெட்டியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வந்துள்ளார். வீட்டிற்கு வந்தவர், தனது தாலிக்கொடி மற்றும் தங்க சங்கிலி என்பவற்றை தங்கையி…
-
- 3 replies
- 600 views
-
-
அழகி பட்டத்தை வென்ற திருநங்கை மிஸ் நெதர்லாந்து பட்டத்தை இம்முறை நெதர்லாந்து அழகி ரிக்கி வலேரி கோல் வென்றுள்ளார். ரிக்கி ; ஒரு திருநங்கை மாடல் என்பதால் இந்த கிரீடம் தனித்துவமானது. 22 வயதான ரிக்கி வலேரி, நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளதாகவும், உலக அழகி பட்டத்தை வென்றால், அந்த மகுடத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையை பெறுவார் என்றும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த வெற்றியை பெருவதற்கு திருநங்கையாக பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்தது என அவர் தெரிவித்துள்ளார். https://at…
-
- 0 replies
- 256 views
-
-
கனடா, அமெரிக்கா இரண்டையும் இணைக்கும் அம்பாஸ்டர் பாலத்தை பழுது பார்க்கும் வேலையை அவர் செய்து கொண்டிருந்தார். சடுதியாக நிலை தவறி 50 மீற்றர் கீழே இருந்த Detroit ஆற்றில் விழ ஆரம்பித்தார். கனடா ஒன்ராரியோவைச் சேர்ந்த ஸ்பென்சர் கடந்த வாரம் (12.07.2023) பாலத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்த போது தனது பிடி தவறியதால் ஆற்றில் விழுந்து விட்டார். இதைக் கவனித்த அஞ்சல் ஊழியர்கள் உடனடியாகத் தங்களது படகை எடுத்துக் கொண்டு விபத்து நடந்த இடத்துக்குப் பயணித்தார்கள். பூங்காவில் இருந்த சுமார் 20 பேர் ஸ்பென்சர் விழுந்த இடத்தை கரையில் இருந்தே சுட்டிக் காட்டியதால், அஞ்சல் ஊழியர்கள் அவர் ஆற்றில் விழுந்த இடத்தை சுலபமாக அடையாளம் கண்டு அவரைக் காப்பாற்றித் தங்கள் படகில் ஏற்றிக் கொண்டார்கள். …
-
- 0 replies
- 284 views
-
-
யாழில் பதற்றம்; இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலம் கண்டெடுப்பு யாழில் நேற்று இரவு கைகள் வெட்டப்பட்ட நிலையில் இரத்த வெள்ளத்தில் இளைஞனின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் யாழ்.போதனா வைத்தியசாலைக்குச் சொந்தமான விடுதியின் அருகில் உள்ள காணிக்குள் இருந்தே குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சடலமாக மீட்கப்பட்டவர் யாழ்ப்பாணம் தாவடி கிழக்குப் பகுதியைச் சேர்ந்த 22 வயதான தர்மலிங்கம் பவிசன் எனத் தெரிய வந்துள்ளது. மேலும் இளைஞனின் சடலத்துக்கு அருகில் தேசிக்காய், பீடி , தீப்பெட்டி , பியர், ஊசி (சிரிஞ்) உள்ளிட்டவை இருந்துள்ளதால் ”போதையில் அவர் தனது கைகளை வெட்டி…
-
- 0 replies
- 185 views
-
-
உண்மையில் இது அதிசயம்தான். ஒரு ஆங்கிலப் படத்துக்குத் தேவையான கதை ஒன்று அவரிடம் இருக்கிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர் தனது நாயுடன் பாய்மரக் கட்டுமரத்தில் பயணித்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த Tim Shaddock (51) பசிபிக் கடலில் காணாமல் போயிருந்தார். இப்பொழுது அவரும் அவரது பெல்லா என்ற நாயும் கண்டு பிடிக்கப்பட்டு ஆழ்கடலில் இருந்து காப்பாற்றப் பட்டுள்ளனர். சிட்னியை வாழ்விடமாகக் கொண்ட Tim Shaddock (51) பல வாரங்கள் கொண்ட, நீண்ட கட்டுமரக் கடல் பயணம் ஒன்றைத் திட்டமிட்டிருந்தார். அது மெக்ஸிக்கோ La Paz என்ற இடத்தில் இருந்து பிரான்சின் Polynesien வரையான 6000 கிலோ மீற்றர் கடற்பயணம். பயணம் தொடங்கிய சில கிழமைகளிலேயே புயலில் சிக்கி அவரது படகில் இருந்த எலெக்ரோனிக் கருவி…
-
- 6 replies
- 774 views
- 1 follower
-
-
Published By: SETHU 18 JUL, 2023 | 01:29 PM 3 வயது குழந்தையொன்றின் துப்பாக்கிப் பிரயோகத்தில் அக்குழந்தையின் சகோதரியான ஒரு வயதான குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சன் டியாகோ கவுன்ரியில் திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வீட்டில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த கைத்துப்பாக்கியை 3 வயதான குழந்தை எடுத்து, தற்செயலாக துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக தெரியவந்துள்ளது. ஒரு வயதான குழந்தை தலைமையில் காயமடைந்த நிலையில், தீயணைப்புப் படையினர் மூலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அக்குழந்தை இறந்துவிட்டதாக அறிவிக்கப்ப…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
இந்த கருது எவரையும் குறை கூறவோ அல்லது தாழ்த்தவோ இல்லை. proxy இல் - proxy votes, மற்றும் அது போன்ற proxy எனும் பிரயோகத்திற்கு எனது பதிலை வைக்க முதல் நிர்வாகம் திரியை பூட்டி விட்டது. proxy இல் - பௌதிக அடிப்படையிலான பிரிவு - அதை வைத்தே அதுவல்லாத வேறு ஒன்றால் மாற்றீடு செய்யப்படுவது என்று கொள்ளப்பட்டது, அதனால் அவை இரண்டும் (proxy உம் அது மாற்றீடு செய்யும் விடயமும்) வேறுபட்டவைகள் என்று. அனால் proxy votes என்பதற்கு - proxy military force இல் கருத்து எடுத்து போல - மரபு அல்லாத படை என்று.) விளக்க முறை கருது எடுக்க முடியவில்லை. அதாவது, உண்மையானா votes அல்லாத votes -கள்ள votes, அல்லது void, null votes என்று வருகிறது (பின்பு விளக்கம் கொடுக்கப்பட்…
-
- 0 replies
- 291 views
-
-
El Salvador அதிபர் Nayib Bukele குற்ற கும்பலுக்கு எதிராக எடுத்த நடவடிக்கையின் முக்கிய அடையாளமாக இந்த சிறைச்சாலை பார்க்கப்படுகிறது. இந்த சிறை ஜனவரி மாதம் தொடங்கப்பட்டு இதுகுறித்த காட்சிகள் வெளியானது. ஆனால் இதற்கு எதிர்ப்புகள் எழவே மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. BBC Mundo சேவை இந்த சிறைச்சாலை குறித்த தகவல்களை சேகரித்தது.
-
- 0 replies
- 468 views
- 1 follower
-
-
பிரபல பாடசாலை மாணவிகளின் தலைகுனிய வைக்கும் செயல்! யாழ் நகர்ப் பகுதியில் உள்ள பிரபல பாடசாலையில் கற்கும் 18 வயது மாணவனான தடகள வீரனுடன் பாடசாலை மாணவிகள் இருவர் தங்கியிருந்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இரு வெவ்வேறு பாடசாலைகளில் கல்வி கற்கும் 18 வயதான மாணவிகள் நகர்பகுதிக்கு அண்மையில் உள்ள பொதுமக்களால் பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அம் மாணவர்கள் பிடிபடும் போது மாணவனும், மாணவி ஒருவரும் முழு நிர்வாண நிலையிலும் மற்றைய மாணவி அரைகுறையான ஆடைகளுடனும் பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ் கொக்குவில் பகுதியில் இச்சம்பவம் நேற்று மதியம் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொக்குவில் பகுதியில் உள்ள வ…
-
- 1 reply
- 656 views
-
-
2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 2024 இற்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய்க்கான தீர்வு மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புடின் படுகொலை அதேநேரேம் ரஷ்ய அதிபர் விளா…
-
- 0 replies
- 670 views
- 1 follower
-