செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7153 topics in this forum
-
இலங்கை வந்துள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் நடிகர் ரஜினிகாந்த் இன்று (14) இலங்கை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் இலங்கை வழியாக வேறு நாட்டிற்கு செல்லும் போது இலங்கை விமான நிலையத்தில் பல மணி நேரம் செலவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரஜினிகாந்த் இலங்கை வழியாகமாலைதீவிற்குச்சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது இந்த விஜயத்தின் போது எடுக்கப்பட்ட நடிகர் ரஜினிகாந்தின் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. https://athavannews.com/2023/1339529
-
- 19 replies
- 2k views
-
-
அமெரிக்காவில், அலெஜியன்ட் ஏர்லைன்ஸ் எனப்படும் தனியார் நிறுவன விமானம் (எண்: 227) ஒன்று, இரு நாட்களுக்கு முன்பாக வட கரோலினா மாநிலத்திலிருந்து புறப்பட்டு, புளோரிடா மாநிலத்தின் செயின்ட் பீட்-கிளியர்வாட்டர் சர்வதேச விமான நிலையத்திற்கு செல்லும் வழியில் டர்புலன்ஸ் (turbulence) எனப்படும் காற்றின் வலிமையான, திடீர் ஏற்ற இறக்கத்திற்கு உள்ளானது. இந்த சம்பவத்தில், பயணிகள் மற்றும் பணியாளர்கள் பலத்த காயங்களுக்கு ஆளாகினர். விமானத்தில் 179 பயணிகளும் 6 பணியாளர்களும் இருந்தனர். அவர்களில் 4 பேர் காயமடைந்தனர். ஆனால் அந்த விமான நிறுவனம், விமானம் எந்த தடையுமின்றி ஓடுதளத்தில் தரையிறங்கியது எனத் தெரிவித்திருக்கிறது. காயம்பட்டவர்களுக்கு விமான நிலையத்தில் காத்திருந்த மருத்துவ பணியாளர…
-
- 0 replies
- 186 views
- 1 follower
-
-
சக பூசகர்கள் ஐவரின் பெறுமதியான கையடக்க தொலைபேசிகளை திருடினார் எனும் குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் நேற்று புதன்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றில் இடம்பெற்ற உற்சவத்தில் பூசகர்கள் ஐவரின் தொலைபேசிகள் களவாடப்பட்டன. அவற்றின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது. அது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில், பூசகர்கள் முறைப்பாடு செய்திருந்தனர். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், ஆலயத்தில் அன்றைய தினம் நின்ற 25 வயதான பூசகர் ஒருவரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சக பூசகர்கள் ஐவரின் கையடக்க தொலைபேசிகளை திருடிய பூசகர் யாழில் கைது | Virakesari.lk
-
- 0 replies
- 369 views
-
-
யேர்மனியில், சமீபகாலமாகக் காலநிலை ஆர்வலர்களால் ‘கடைசித் தலைமுறை’ என்ற அமைப்பினூடாக வீதிகளில் நடத்தப்படும் போராட்டங்களால், மக்கள் விசனம் அடைந்திருப்பது என்னவோ உண்மைதான். 12.07.2023 புதன்கிழமை Stralsund நகரின் பிரதான வீதியில் கடைசித் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் வீதியை மறித்துப் போராட்டம் நடத்தினார்கள். போராட்டம் நடந்த வீதியில் வாகனம் செலுத்தி வந்த 41 வயதான பார ஊர்தி ஓட்டுனர் ஒருவர் அங்கே அமைதியை இழந்து, கோபம் கொண்டு செய்த செயல் இப்பொழுது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பார ஊர்தி ஓட்டுனர் தனது வாகனத்தில் இருந்து இறங்கி,போராட்டம் நடத்தியவர்களில் ஒருவரை வீதியில் இருந்து இழுத்து நடைபாதையில் போட்டுவிட்டு மற்றொருவரை தாக்க முயன்றிருக்கிறார். அவர் தனது கோபத்தின் உச்சமாக த…
-
- 7 replies
- 1.2k views
-
-
கைலாசா நாட்டின் பிரதமராக நடிகை ரஞ்சிதா பொறுப்பேற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்னர் பாலியல் வன்கொடுமை, ஆள் கடத்தல் பண மோசடிகள் உள்ளிட்ட குற்றங்கள் சாட்டப்பட்டு இரண்டு முறை கைது செய்யப்பட்டவர் நித்தியானந்தா. இரண்டு முறையும் ஜாமின் வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர். நித்தியானந்தா குறித்த சர்ச்சைகள் பல அவ்வப்போது எழுந்தபோதிலும், அதனை பற்றி கவலைக் கொள்ளாமல் தலைமறைவானார். அதன் பிறகு சில நாட்களில் தனி ஒரு நாட்டை தான் உருவாக்கியுள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயரிடுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் அவர் தெரிவித்திருந்தார். கைலாசாவுக்கு என்று தனி பாஸ்போர்ட், தனி ரூபாய் நோட்டுகள் எல்லாம் தயாரிக்கப்பட்டன. நித்தியானந்தா நேரலை நிகழ…
-
- 0 replies
- 386 views
- 1 follower
-
-
உள்ளாடைக்குள் 5 பாம்புகள்: பெண் கைது உள்ளாடைக்குள் 5 பாம்புகளை மறைத்து வைத்து, ஹொங்கொங்கிற்குக் கடத்த முயற்சி செய்த பெண்ணை சீனாவின் சுங்கத்துறை அதிகாரிகள் அண்மையில் கைது செய்துள்ளனர். சீனாவுக்கும் ஹொங்கொங்கிற்கும் இடையிலான எல்லைப் பகுதியான குவாங்டாங் மாகாணம், புக்சியன் துறைமுகத்திலிருந்து ஹொங்கொங்கிற்குச் செல்ல முற்பட்ட போதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ தினத்தன்று குறித்த பெண்ணின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொலிஸார் அவரை சோதனைக்கு உட்படுத்திய போது, அவரது மேல் உள்ளாடையில் மார்பகங்களுக்கு இடையே 5 பாம்பு குட்டிகளை வெவ்வேறு துணிப் பைகளில் கட்டி மறைத்து வைத்திருந்தமை தெரியவந்துள்ளது. இதனையடுத்து அப்பெண்னைக் கைதுசெய…
-
- 2 replies
- 531 views
-
-
ஒரே நாளில் இத்தனை பேருக்குப் பிறந்தநாளா? கின்னஸ்ஸில் இடம்பிடித்த குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்த குடும்பமொன்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் கின்னஸ் சாதனையொன்றைப் படைத்துள்ளது. பாகிஸ்தானின் லர்கானா பகுதியைச் சேர்ந்தவர் அமீர் அலி. இவரது மனைவி குதேஜா. இவர்களுக்கு 19 முதல் 30 வயதுடைய 7 குழந்தைகள் உள்ளனர். இதில் பெண் இரட்டையர்களும், ஆண் இரட்டையர்களும் அடங்குவர். இவர்கள் 9 பேருமே ஓகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி அன்று பிறந்துள்ளனர். இந்நிலையில் இது தற்பொது உலக சாதனையாக மாறி இருப்பதாக கின்னஸ் அமைப்புஅறிவித்துள்ளது. இதற்கு முன்பு அமெரிக்காவில் கம்மின்ஸ் என்பவரது குடும்பத்தைச் சேர்ந்த 5 குழந்தைகள் இச் சாதனையைப் படைத்திருந்தனர். அவர்கள் பெப…
-
- 0 replies
- 240 views
-
-
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்கள் வெளி உலகம் அதிகம் அறியாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. லண்டனில் உள்ள ரஷ்ய துப்பறியும் நிறுவனம் டோசியர் சென்டர் (Dossier Center). நாடு கடத்தப்பட்ட ஒரு முன்னாள் ரஷ்ய எண்ணெய் அதிபரும், தற்போதைய ரஷ்ய விமர்சகருமான மைக்கேல் கோடோர்கோவ்ஸ்கி என்பவரால் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிறுவனம் புட்டினின் ரகசிய தனிப்பட்ட வாழ்க்கை குறித்த சில பல ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களின் தொகுப்பினை தற்போது பகிர்ந்து கொண்டிருக்கிறது. ரஷ்ய ரயில்வேத்துறை, புட்டின் பயணம் செய்யும் ரயிலில் அவர் உபயோகிக்கும் பெட்டியின் வடிவமைப்பு வேலைகளை ஜிர்கான் சர்வீஸ் எனும் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்துள்ளது. இவர்களிடமிருந்து …
-
- 3 replies
- 695 views
- 1 follower
-
-
முடிவுக்கு வரும் முத்தப் போட்டி; ஏன் தெரியுமா? உலகின் மிக நீண்ட முத்தப் போட்டி கடைசியாக கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்றது. இதில் பங்கேற்ற தாய்லாந்தைச் சேர்ந்த ஏக்கச்சாய் லக்ஷனா திரானரத் தம்பதியினர் சுமார் 58 மணி நேரம் முத்தமிட்டு உலக சாதனை படைத்திருந்தனர். இதுவே உலகின் மிக நீண்ட முத்தமென கின்னஸ் உலக சாதனைகள் அமைப்பு தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது இந்த பிரிவில் எந்த போட்டிகளும் நடைபெறாது என கின்னஸ் அமைப்பு அறிவித்துள்ளது. இப்போட்டிகள், போட்டியாளர்களை மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கும் என்பதாலேயே இந்த முடிவுக்கு வந்ததாக கின்னஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இப் போட்டியின் விதிமுறைகள் மிகக் கடுமையாக இருப்பதால் போட்டியாளர்க…
-
- 1 reply
- 200 views
- 1 follower
-
-
Published By: SETHU 11 JUL, 2023 | 11:25 AM 'தம்ஸ் அப்' இமோஜி ஆனது கையெழுத்தாக செல்லுபடியாகும் என கனேடிய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஒப்பந்த படிவமொன்றுக்கு தம்ஸ்அப் இமோஜியை பதிலாக அனுப்பிவிட்டு, ஒப்பந்த்தை நிறைவேற்றாத நபருக்கு 82,000 கனேடிய டொலர் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. சஸ்கட்சேவன் மாகாணத்தின் உயர் நீதிமன்றம் கடந்தவாரம் இத்தீர்ப்பபை அளித்துள்ளது. 2021 மார்ச்சில் கென்ட் மிக்கல்பரோ என்பவர், 86 தொன் ஆளிவிதை எனும் தானியத்தை வாங்குவதற்கு விளம்பரம் செய்திருந்தார். இது தொடர்பாக கிறிஸ் ஆச்சர் எனும் விவசாயியடன் மிகில்பரோ தொலைபேசியில் உரையாடினார். அதன்பின் ஒரு புசல் 17 டொலர்கள் வீதம் நவம்பர் மாதம் ஆ…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
நேபாளத்தில் மத்திய உயிரியல் பூங்காவில் உள்ள 6 புலிகள் சனிக்கிழமையில் பட்டினி போடுகிறார்கள். Tigers on One Day Fasting.
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
டிக்டொக் காதல் விபரீதம் : மனைவியை விபசாரத்தில் தள்ள முயற்சி? டிக்டொக் காதல் மனைவியை விபசாரத்தில் தள்ள முற்பட்டதால், மனைவி தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் கடந்த வருடம் டிக்டொக் ஊடாக சீதுவை பகுதியை சேர்ந்த இளைஞனுடன் காதல் வசப்பட்டுள்ளார். அந்நிலையில் , பாடசாலை கல்வியை கைவிட்டு , வீட்டை விட்டு வெளியேறி சீதுவைக்கு சென்று காதலனை திருமணம் முடித்துள்ளார். திருமணமாகி சில வாரங்களில், சீதுவைச் சேர்ந்த குறித்த இளைஞன் தனது காதல் மனைவியை பணத்துக்காக விபசாரத்தில் தள்ள முயன்றுள்ளார். அதனை அடுத்து மாணவி அங்கிருந்து தப்பித்து யாழ்ப்பாணம் திரும்பி பெற்றோருடன் வ…
-
- 0 replies
- 522 views
-
-
இங்கிலாந்தில் இருந்து விடுமுறைக்கு வந்த குழந்தை கடலில் மூழ்கி உயிரிழப்பு – யாழில் சம்பவம் யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் கடலில் நீராடச் சென்ற ஆறு வயதுக் குழந்தையொன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. உறவினர் ஒருவரின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக குழந்தை உட்பட பெற்றோர் அண்மையில் நாடு திரும்பியதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இறுதிச் சடங்கில் கலந்துகொள்வதற்காக தாயும் தந்தையும் குழந்தையை உறவினர் வீட்டில் விட்டுச் சென்றதாகவும், அங்கு விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குழந்தை தங்கியிருந்த உறவினரின் வீடு கடலுக்கு அருகாமையில் அமைந்துள்ளதாகவும், குழந்தை யாருக்கும் தெரியாமல் கடலுக்கு நீராட…
-
- 0 replies
- 178 views
-
-
10 JUL, 2023 | 10:42 AM யாழ். மட்டுவில் பிரதேசத்தைச் சேர்ந்த 59 வயதான செ.திருச்செல்வம் 7 நிமிடங்கள் 48 செக்கன்களில் 1550 கிலோ கிராம் எடை கொண்ட ஊர்தியை 400 மீற்றர் தூரம் தனது தாடியால் இழுத்து உலக சாதனை படைத்துள்ளார். சோழன் உலக சாதனை புத்தக நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஞாயிற்றுக்கிழமை (09) பிற்பகல் யாழ். மட்டுவில் ஐங்கரன் சன சமூக நிலைய முன்றலில் இந்த சாதனை நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக தொழிலதிபர் அ.கிருபாகரன் கலந்துகொண்டார். மேலும், சிறப்பு அதிதிகளாக சமூக சேவகர் கலாநிதி அகிலன் முத்துக்குமாரசாமி, ஈ.சிற்றி ஆங்கில கல்லூரியைச் சேர்ந்த றஜீபன் ஆகியோரும் அதிதிகளாக பன்னாட்டு எம்.ஜி.ஆர் பேரவைத் தலைவர் ம.விஜயகாந்…
-
- 2 replies
- 753 views
- 1 follower
-
-
அமெரிக்க நாட்டின் டெக்சாசை சேர்ந்தவர் மெல்பா மெபேன் (வயது 90). மெல்பா 16 வயதாக இருந்தபோது தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அந்த நிறுவனத்தின் லிப்ட் ஒபரேட்டர் பணிக்கு சென்றார். அதே நிறுவனத்தில் ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் பிரிவில் 74 ஆண்டுகளாக ஒரு நாள் கூட விடுமுறை எடுக்காமல் வேலை செய்தார். இந்த நிலையில் 90 வயதை கடந்த மெல்பா கடந்த 30ஆம் திகதி பணி நிறைவு பெற்றார். நான் வீட்டில் இருந்ததை விட எனது நிறுவனத்தில் தான் அதிக நேரம் செலவழித்தேன். தற்போது வீட்டில் தனியாக இருப்பது மிகவும் கஷ்டமாக உள்ளது என்றார். மெல்பா தான் வேலை செய்த அனைத்து துறைகளிலும் முத்திரை பதித்ததாக தனியார் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article…
-
- 2 replies
- 298 views
- 1 follower
-
-
நீதிமன்றம் அமைதியாக இருந்தது. கமராக்களின் கிளிக் கிளிக் சத்தங்களுடன் காலில் மாட்டப்பட்டிருந்த சங்கிலியின் சத்தம் மட்டும் இப்போது மன்றில் கேட்கத் தொடங்கியது. தனது முகத்தை நீல நிறக் கோப்பினால் மூடியபடி, குற்றவாளி என்று கருதப்பட்டவன் தனது இருக்கைக்குச் சென்று அமர்ந்தான். சிவப்பு நிற உடை அணிந்திருந்த சிறிய தோற்றம் கொண்ட அந்த இளைஞனை புகைப்படம் எடுப்பவர்கள் சூழ்ந்திருந்தனர். அவனருகே அவனது சட்டத்தரணி அமர்ந்திருந்தார். நீதிமன்றத்தின் இருக்கைகள் நிரம்பி இருந்தன. அங்கிருந்தவர்களில் பெரும்பாலானோர் நிருபர்களாக இருந்தார்கள் என்பதைச் சொல்லும் விதமாக பலரது கைகளில் கணினிகள் இருந்தன. யேர்மனி இல்லர்கியார்ஸ் நகரில் நடந்த கொலையின் தீர்ப்பை அறிந்து கொள்ளவே அவர்கள் வந்திருந்தார்கள். …
-
- 0 replies
- 517 views
-
-
பூனையும் நாயும் வளர்ப்புப் பிராணிகள் பலவும் பலரின் குடும்பத்தில் ஒரு அங்கமாகவே மாறிவிடும். பலரும் தங்களின் வளர்ப்பு பிராணிகளை குழந்தைகளாக பாவித்து உணர்ச்சிப் பெருக்கோடு வளர்ப்பதை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அந்தவகையில் ஹச்சிகோ என்ற ஒரு வளர்ப்பு நாயின் நிஜக்கதை ஏராளமான புத்தகங்கள் தொடங்கி திரைப்படங்கள்-அறிவியல் புனைகதைகள் வரை அனைத்திலும் இடம்பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ஷிபுயா ரயில் நிலையத்திற்கு அருகில் இந்த நாயின் உருவச்சிலையை வெண்கலத்தில் செதுக்கி சிறப்பும் செய்துள்ளனர். இந்த ஹச்சிகோ நாய்க்கு பின்னால் உள்ள கதை மிகவும் சிறப்பு வாய்ந்தது. 1923 ஆம் ஆண்டு, ஜப்பானின் டோக்கியோ பல்கலைக்கழத்தில் பணிபுரிந்த ஹிடெசாபுரோ யுனோ என்ற பே…
-
- 2 replies
- 388 views
- 1 follower
-
-
முதலையை முத்தமிட்டு மணமுடித்த மேயர்: புகைப்படங்கள் உள்ளே மெக்சிகோவின் ஓக்சாகா மாநிலத்தில் உள்ள சான்பெத்ரோ ஹுவாமெலுவா நகரத்தின் மேயரான ஹியூகோ சாசா என்பவர் கடந்த 30 ஆம் திகதி ‘அலிசியா அட்ரியானா‘என்ற முதலையைத் திருமணம் செய்துள்ளார். இவ்விநோதத் திருமணத்தில் குறித்த முதலையானது மணப் பெண் போன்று அலங்கரிக்கப்பட்டிருந்தது. குறித்த நகரத்தில் வசித்து வரும் மக்கள் மழைபெய்யவேண்டும் என்பதற்காக இறைவனைப் பிரார்த்தனை செய்து காலம் காலமாக இச்சடங்கினை மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமணம் முடிந்த பின்னர் மேயர் குறித்த முதலைக்கு முத்தமிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. h…
-
- 1 reply
- 338 views
-
-
மனைவி, குழந்தைகளைக் கொன்ற இந்தியர்; பிரித்தானியப் பொலிஸார் வெளியிட்ட பதபதைக்க வைக்கும் வீடியோ பிரித்தானியாவில் கடந்த ஆண்டு டிசெம்பர் மாதம் மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்ற கேரளாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பிரித்தானிய நீதிமன்றம் அண்மையில் தீர்ப்பளித்திருந்தது. கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த சஜூ சவுலவன் என்ற நபருக்கே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது, சஜூ சவுலவனைக் கைது செய்த வீடியோவை பொலிஸார் வெளியிட்டுள்ள நிலையில் குறித்த வீடியோவானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2023/1337563
-
- 0 replies
- 599 views
-
-
“25 யூன் 2021இல் சோமாலியாவைச் சேர்ந்த அப்டிரஹ்மான் (26) யேர்மனியில் வான் என்ற இடத்தில் ஹோங்ஸ் ஆசிய சிற்றுண்டிக்கு அருகே மூன்று பெண்களை கத்தியால் குத்தியதும் பின்னர் பொதுமக்கள் அவனை மடக்கிப் பிடித்ததும் நினைவுக்கு வந்தது. அப்போது நடந்தது போல் ஒரு அசம்பாவிதம் இப்பொழுது நடந்துவிடக் கூடாது என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது” இப்படிச் சொல்கிறார் 62 வயது நிரம்பிய வியட்னாம் நாட்டை பிறப்பிடமாகக் கொண்ட வான் லோங் கொங். 30ந் திகதி யூன், ஒரு சிரிய நாட்டைச் சேர்ந்த இளைஞன் கையில் கத்தியுடன் நகரத்தில் நடமாடியதை அடுத்து பொது மக்கள் கொடுத்த தகவல்கள் அடிப்படையில் அந்த இளைஞனை கைது செய்வதற்கும் அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுப்பதற்கும் பொலிஸார் வந்திருந்தார்கள். மதியம் 1.40க்கு ஆசிய சிற…
-
- 2 replies
- 678 views
-
-
ஒவ்வொரு நாளும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து போகும் இடம்தான் ரோமில் உள்ள கொலோசியம். கடந்த வெள்ளிக்கிழமை (30.06.2023) அங்கு வந்த ஒரு இளைஞன் ஒருவனுக்கு அந்தப் பழைய காலத்து பிரபலமான கட்டிடத்தைப் பார்த்ததும் ஒரு விசித்திரமான ஆசை வந்தது. பழமை வாய்ந்த அந்தக் கட்டிடத்தின் கல்லில் தனது பெயரையும் தனது காதலியின் பெயரையும் எழுத வேண்டும் என்பதே அவனது ஆசையாக இருந்தது. தன்னிடம் இருந்த திறப்பினால் பழமையான அந்தக் கட்டிடத்தின் ஒரு கல்லில் கிறுக்க ஆரம்பித்தான். இளைஞன் கல்லில் ஏதோ கிறுக்குவதை இன்னும் ஒரு சுற்றுலாப் பயணி கண்டு, அதை வீடியோவில் பதிவு செய்ய ஆரம்பித்தார். பதிவு செய்தவருக்கும் அவசரம் போல், அந்த வீடியோவை அவர் சில நிமிடங்களுக்குள் சமூகவலைத் தளங்களில் பரவ விட அது இ…
-
- 1 reply
- 452 views
-
-
மெக்சிகோவில் உள்ள மாண்டேரி பகுதியில் சுற்றுலா பொழுதுபோக்கு பூங்கா ஒன்று உள்ளது. இங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அங்குள்ள ஜிப்லைனில் சாகச பயணம் செய்து மகிழ்வார்கள். இந்நிலையில் கடந்த 25ஆம் திகதி அங்கு சுற்றுலா சென்றவர்களில் 6 வயது சிறுவன் ஒருவன் ஜிப்லைனில் சாகச பயணத்தை மேற்கொண்டான். அப்போது எதிர்பாராத விதமாக கம்பி அறுந்து சிறுவன் 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தான். அதிர்ஷ்டவசமாக பூங்காவில் இருந்த செயற்கை குளத்தில் அந்த சிறுவன் விழுந்தான். உடனே அங்கிருந்த சுற்றுலா பயணி ஒருவர் நீச்சல் குளத்துக்குள் குதித்து சிறுவனை காப்பாற்றினார். இதில் சிறுவன் லேசான காயங்களுடன் உயிர் தப்பினான். எனினும் அவனுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே அந்த சி…
-
- 0 replies
- 230 views
- 1 follower
-
-
மீனுடன் புகைப்படம் எடுத்த இருவர் கைது நட்சத்திர மீனுடன் செல்பி எடுத்த சீன சுற்றுலா வாசிகள் இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட விநோத சம்பவம் தாய்லாந்தில் இடம்பெற்றுள்ளது. குறித்த சுற்றுலாவாசிகள் நட்சத்திர மீன்களைக் கையில் பிடித்து அதனுடன் புகைப்படம் எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ள நிலையிலேயே இவ்வாறு தாய்லாந்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு பின்னர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் . தாய்லாந்து அரசு இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. குறிப்பாக பவள பாறைகள் மற்றும் அழியக்கூடிய சூழலில் வாழும் கடல் வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக கடுமையான சட்டங்கள…
-
- 0 replies
- 585 views
-
-
தனது வாழ்நாள் முழுவதும் கூண்டிலேயே அடைக்கப்பட்டிருந்த 28 வயதான வனில்லா ( Vanilla ) என்ற சிம்பன்சி, புளோரிடாவில் உள்ள தனது புதிய இருப்பிடமான சேவ் தி சிம்ப்ஸ் சரணாலயத்திற்கு கொண்டு வரப்பட்ட நிலையில், அது கூண்டிலிருந்து வெளியே வந்து முதன்முறையாக வானத்தை பார்த்து அதிசயித்து நின்ற வீடியோ, பார்ப்போரை நெகிழ வைத்துள்ளது. வனில்லா தனது 2 வயது வரை ஒரு மோசமான ஆய்வகத்தில் வாழ்ந்ததாக கூறப்படுகிறது. 1997ம் ஆண்டு அந்த ஆய்வகம் மூடப்பட்டதும், வனில்லா உட்பட சுமார் 30 சிம்பன்சிகளும் கலிபோர்னியாவில் இருந்த மூடப்பட்ட விலங்குகள் சரணாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு, 5 அடி சதுர கூண்டு வடிவிலான இடத்தில்தான் வனில்லா வாழ்ந்து வந்தது. 2019 ஆம் ஆண்டில் ஏற்பட்ட காட்டுத்தீயின் பாதிப்…
-
- 1 reply
- 326 views
- 1 follower
-
-
வியாழக்கிழமை(29.06.2023) மதிய நேரம், சுவீடனுக்கும் போலந்துக்கும் இடையில் பால்ரிக் கடலில் Stena Spirit கப்பல் பயணித்துக் கொண்டிருந்தது. கடல் நீர் 18 பாகை செல்சியஸாக இருந்தது. அந்தக் கப்பலில் இருந்த ஏழு வயதுச் சிறுவன் ஒருவன் கப்பலில் இருந்து தவறிக் கடலில் விழுந்து விட்டான். இதை அவதானித்த அவனின் தாய் எதைப் பற்றியும் யோசிக்காமல் அடுத்த செக்கனே மகனை க் காப்பாற்றுவதற்காக தானும் கடலில் குதித்து விட்டாள். கடலில் இருந்த கடல் நீர் நடுவே இருவரும் காணாமல் போய்விட்டனர். அமெரிக்கக் கரையோரக் காவல் பணியில் இருந்த NATO தகவல் அறிந்து தங்கள் விமானங்கள் மூலம் தேடுதல்களை ஆரம்பித்தார்கள். Stena Sprit நிறுவனத்தின் மீட்புப் படகுகளும், உலங்கு வானூர்திகளும் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப் ப…
-
- 6 replies
- 770 views
-