செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7087 topics in this forum
-
யாழ். – வவுனியா பேருந்தில் பயணித்த யுவதியை பிளேட்டினால் வெட்டிய இளைஞன் பேருந்தில் இளம் பெண்ணொருவரை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்திய இளைஞனை சக பயணிகள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த பேருந்தில் சன நெரிசலில் இளைஞன் தனக்கு முன்னால் நின்ற யுவதியை பிளேட்டினால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். காயத்திற்கு உள்ளான யுவதி சத்தமிடவே சக பயணிகள் சுதாகரித்து பிளேட்டினால் வெட்டிய இளைஞனை பேருந்தினுள் மடக்கி பிடித்தனர். இளைஞனை மடக்கி பிடித்த சக பயணிகள், யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாழ் பொலிஸ் காவலரணில் ஒப்படைத்தனர். https://athavannews.com/2022/1306451
-
- 6 replies
- 380 views
- 1 follower
-
-
கிராமத்திற்குள் புகுந்த இராட்சத முதலை மடக்கிப்பிடிப்பு! மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குபட்ட மகிழூர் கண்ணகிபுரம் பகுதியில் (வியாழக்கிழமை) கிராமத்திற்குப் புகுந்த இராட்சத முதலை ஒன்றை வனஜீவராசிகள் பாதுகாப்பு அதிகாரிகள் அப்பகுதி மக்களின் உதவியுடன் மடக்கிப்பிடித்துக் கொண்டு சென்றுள்ளனர். மட்டக்களப்பு வாவியிலும், அதனை அண்டிய சிறு குளங்களிலும் முதலலைகளின் அட்டகாசங்களும், தாக்குதல்களும், மீனவர்களையும், குளத்தில் மேச்சலுக்குச் செல்லும் கால்நடைகளையும் தாக்கிவரும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் வியாழக்கிழமை அப்பகுதியிலுள்ள குளத்திலிருந்து கிராமத்திற்கு முதலை ஒன்று புகுந்துள்ளது…
-
- 0 replies
- 322 views
-
-
விகாரையில் ஏலம் விடப்பட்ட கசிப்பு போத்தல் ! அநுராதபுரம் மாவட்டத்தின் கெக்கிராவ மற்றும் மடத்துகம பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் அண்மையில் நடைபெற்ற சந்தை மற்றும் பாடல் கச்சேரியில் இரண்டு பியர் போத்தல்களும் ஒரு போத்தல் கசிப்பும் ஏலத்திற்கு விடப்பட்டன. . ஆலயம் அமைந்துள்ள நகரின் பிரதான பாடசாலையொன்றில் ஆசிரியராகப் பணிபுரியும் துறவி மற்றும் இளம் அமைப்பாளர்கள் அடங்கிய குழுவினர் இணைந்து இந்த ஏலத்தை நடத்தியதாகத் தெரிவிக்கப்படுகிறது. அதிக வருமானம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்பாட்டாளர்கள் இவ்வாறு மதுப்போத்தல்களை ஏலத்தில் விட்டதாக தெரிவிக்கப்படுகிறது . இந்நிலையில் குறித்த மதுப்போத்தல்களை கைப்பற்ற பலரு…
-
- 3 replies
- 339 views
-
-
நாய் கௌவிக் கொண்டுவந்த பணப்பையில் தங்கச் சங்கிலி, பணம் ; உரியவரிடம் ஒப்படைப்பு By T. SARANYA 19 OCT, 2022 | 02:01 PM வீட்டிலுள்ள வளர்ப்பு நாய் தங்க சங்கிலி, பணம் இருந்த பணப்பையை கௌவிக் கொண்டுவந்த நிலையில், அதனை உரிய நபரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று அண்மையில் கண்டி அலதெனிய பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. இது பற்றி மேலும் தெரிய வருவதாவது, அலதெனிய பொலிஸ் பிரிவில் உள்ள குருந்துகஹமட என்னுமிடத்தில் நடந்த இச்சமபவத்தில் பணப் பை ஒன்றை நாய் ஒன்று கௌவிக் கொண்டு வந்துள்ளது. அது பாதை ஓரம் விழுந்திருந்த ஒன்று எனக் கருதப்படுகிறது. மேற்படி வளர்ப்பு நாய் அடிக்கடி சப்பாத்துபோன்ற பாதணிகளை இவ்வாறு கௌவிக்கொ…
-
- 2 replies
- 342 views
- 1 follower
-
-
வெறுக்கப்படும் நாள் திங்கள்கிழமை – கின்னஸ் அமைப்பு அறிவிப்பு வார நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை. வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்லாமல், பாடசாலை செல்லும் மாணவர்கள் வரை அனைத்து தரப்பினரும் திங்கள்கிழமையை வெறுக்கின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை முடிந்து திங்கள்கிழமை அலுவலகம், பள்ளிகளுக்கு செல்வோரின் முகங்களில் ‘திங்கள்’ சோகத்தை துல்லியமாகப் பார்க்க முடியும். உலக மக்களின் இந்த சோகத்தை கின்னஸ் உலக சாதனை அமைப்பும் பகிர்ந்து கொண்டுள்ளது. பல்வேறு உலக சாதனைகள் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெறும் நிலையில், அந்த அமைப்பின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த திங்கள்கிழமை அன்று ‘திங்கள்’ சோகம் பகிரப்பட்டது. “வாரத்தின் மிக ம…
-
- 1 reply
- 235 views
-
-
மட்டக்களப்பில் - உயிரிழந்தவருக்கு அஞ்சலி செலுத்திய குரங்கு Vhg அக்டோபர் 19, 2022 மட்டக்களப்பு தாளங்குடா பிரதேசத்தில் குரங்கு ஒன்று ஏஜமான் உயிரிழந்ததையடுத்து அவரின் சடலத்தில் ஏறி அவரை கட்டியணைத்து அழுது புலம்பியதுடன் அவரின் இறுதிகிரிகை நடந்த மயானத்திற்கு சென்று அவருக்கு அஞ்சலி செலுத்திய சம்பவம் நேற்று(18) செவ்வாய்க்கிழமை அனைவரையும் கண்கலங்கவைத்ததுடன் பெரும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தாளங்குடா பிரதேசத்தினைச் சேர்ந்த 56 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையான பீதாம்பரம் ராஜன் காட்டில் இருந்து வந்த குரங்கு ஒன்றிற்கு உணவு வழங்கிவந்துள்ளார் குறித்த குரங்கும் தினமும் அவரது வீட்டிற்கு வந்ததும் அவர் அதற்கு பிஸ்கற்களை வழங்குவது வழக்கம். …
-
- 4 replies
- 441 views
-
-
யாழில். வாகன உதிரிபாக விற்பனை நிலையத்திற்கு தீ வைத்த வன்முறை கும்பல்! வாகன உதிரிபாக விற்பனை நிலையம் ஒன்றின் கதவுகளை உடைத்து உட்புகுந்த வன்முறை கும்பல் அங்கிருந்த பொருட்களுக்கு சேதங்களை ஏற்படுத்தி விட்டு , தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட ஆறுகால்மடம் லோட்டஸ் வீதியில் உள்ள குறித்த விற்பனை நிலையத்தினுள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உட்புகுந்த வன்முறை கும்பலே விற்பனை நிலையத்தினுள் இருந்த பொருட்களுக்கு சேதம் விளைவித்து தீ வைத்துள்ளது. சம்பவம் தொடர்பில் விற்பனை நிலைய உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://athavann…
-
- 0 replies
- 272 views
-
-
மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – தந்தை மற்றும் இரண்டு மகன்கள் உயிரிழப்பு! மினுவாங்கொடையில் இன்று (வியாழக்கிழமை) காலை 7 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளனர். T56 ரக துப்பாக்கியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் தந்தை மற்றும் இரண்டு மகன்களே சம்பவத்தில் உயிரிழந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த சிலர் துப்பாக்கிச் சூட்டை நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இரு மகன்களும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான தந்தை வைத்தியசா…
-
- 3 replies
- 382 views
- 1 follower
-
-
யாழில், கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து.. காயங்களை ஏற்படுத்திய பெண்ணுக்கு விளக்கமறியல் நீடிப்பு கணவனுக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து ஆபத்தான முறையில் தீக்காயங்களை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் முற்படுத்தப்பட்ட குடும்பப் பெண்ணை விளக்கமறியலில் வைக்க யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். பொலிஸ் பிரிவுக்கு உள்பட்ட புறநகர் பகுதியில் இந்தச் சம்பவம் கடந்த நான்காம் திகதி இடம்பெற்றது. “சந்தேக நபரின் வீட்டுக்குள் பாம்பு ஒன்று வந்ததையடுத்து அதனை விரட்ட சந்தேக நபர் பெற்றோலை விசிறியுள்ளார் அது அங்கு ஏற்றப்பட்டிருந்த சாம்பிராணி குச்சியில் பட்டு தீ ஏற்பட்டுள்ளது. கணவன் மீது பெற்றோலை ஊற்றும் எண்ணம் சந்தேக நபரிடம் இல்லை” என்று ச…
-
- 15 replies
- 539 views
-
-
யாழ்.பல்கலை மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் தாக்குதல்! யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் மீது மது போதையில் வந்த கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி விட்டு தப்பி சென்றுள்ளது. பல்கலைக்கழகத்திற்கு முன்பாக உள்ள வீதி வழியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டி ஒன்றில் மது போதையில் வந்த நான்கு பேர் கொண்ட குழுவே மாணவர்களை வழி மறித்து தாக்கி விட்டு அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த இரு மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின…
-
- 1 reply
- 463 views
-
-
ஆளில்லா விமானத்தால் இருளில் தவித்த ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் By T. SARANYA 30 SEP, 2022 | 10:20 PM உணவு விநியோகம் செய்யும் ஆளில்லா விமானம் மின் வலையமைப்பில் மோதியதால் ஆயிரக்கணக்கான அவுஸ்திரேலியர்கள் தங்கள் வீடுகளில் மின்சார தடையால் தவித்துள்ளார்கள். நேற்று வியாழக்கிழமை பிரவுன்ஸ் ப்ளைன்ஸ், குயின்ஸ்லாந்து மற்றும் தெற்கு பிரிஸ்பேனைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளில் வசிப்பவர்கள் இவ்வாறு மின்சார தடையால் பாதிக்கப்பட்டார்கள். குறித்த சம்பவம் முதல் முறை இடம்பெற்றுள்ளதாக மின் வலையமைப்பிற்கு பொறுப்பான குயின்ஸ்லாந்து எரிசக்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மின் வலையமப்பு நிறுவனம் 2,000 பேருக்கு 45 நிமிடங்களில் மின் தடையை…
-
- 0 replies
- 168 views
- 1 follower
-
-
வட்டுக்கோட்டையில் வீடு உடைத்து கவரிங் நகைகளை திருடிய திருடர்கள்! யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வீடொன்றினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த கவரிங் நகைகளை களவாடி சென்றுள்ளனர். வீட்டில் வசிக்கும் கணவனும் மனைவியும் தமது தொழில் நிமிர்த்தம் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்ற சமயம் வீட்டின் கதவினை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் சல்லடை போட்டு தேடி வீட்டில் இருந்த ஒரு தொகை கவரிங் நகைகளை திருடி சென்றுள்ளனர். தமது வேலை முடிந்து வீடு திரும்பியவர்கள் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தமையை அவதனித்து உள்ளே சென்று பார்த்த போது , தமது கவரிங் நகைகள் அனைத்தும் திருட்டு போயுள்ளமையை அறிந்துள்ளனர். வீடு உடைக்…
-
- 0 replies
- 241 views
-
-
யாழில். சுவிஸ் நாட்டவர்கள் தங்கியிருந்த வீடு உடைத்து 12 பவுண் நகைகள் திருட்டு! யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினை உடைத்து வீட்டில் இருந்த 12 பவுண் தங்க நகைகளை திருடர்கள் அபகரித்து சென்றுள்ளனர். சுவிஸ் நாட்டில் இருந்து வந்த குடும்பம் ஒன்று உரும்பிராய் கிழக்கு பகுதியில் வீடொன்றில் தங்கி இருந்துள்ளனர். அவர்கள் நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆலயம் ஒன்றுக்கு சென்று இருந்த வேளை , வீட்டின் கதவுகளை உடைத்து உட்புகுந்த திருடர்கள் வீட்டில் இருந்த 12 பவுண் நகைகளை திருடி சென்றுள்ளனர். https://athavannews.com/2022/1302151
-
- 0 replies
- 202 views
-
-
முகநூல் காதல் ; காதலியின் புதிய காதலனை கொலைசெய்ய திட்டம் ; காதலன் கைது By T. SARANYA 29 SEP, 2022 | 04:14 PM (எம்.எப்.எம்.பஸீர்) தனது முக நூல் காதலியின் புதிய காதலனை குண்டினை வெடிக்கச் செய்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யும் திட்டத்துடன் காத்திருந்த காதலரான இளைஞர் ஒருவர் கைக் குண்டுடன் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் அம்பாறை இறக்காமம் பகுதியில் பதிவாகியுள்ளது. கல்கமுவ - மஹகல்கடவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறிய முடிவதாவது, 28 வயதான குறித்த இளைஞன் காலி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரை முகப்புத்தகத்தின் ஊடா…
-
- 1 reply
- 318 views
- 1 follower
-
-
ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால்.. புகையிரத நிலையத்திற்குள், விபத்து !! தெமட்டகொட புகையிரத நிலையத்திற்குள் புகையிரதம் மோதியதில் பழைய கட்டிடமொன்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெமட்டகொட பொலிஸார் தெரிவித்தனர். பராமரிப்பு நோக்கத்திற்காக கொண்டு வரப்பட்ட ரயில் தண்டவாளத்தில் இருந்து விலகி பழைய கட்டிடத்தின் மீது மோதியதால் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது. ரயில் கட்டுப்பாட்டாளர் தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும் விபத்து தொடர்பாக ரயில்வே திணைக்களம் உள்ளக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. https://athavannews.com/2022/1301576
-
- 0 replies
- 216 views
-
-
உலகத்தின் மிக மோசமான பொதுக் கழிவறை எது? – 91 நாடுகளைச் சுற்றி கண்டுபிடித்த நபர்! நீங்கள் பயணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கு எதாவது காரணம் வேண்டும். எதாவது தேடல் வேண்டும். இந்த தேடல் ஒவ்வொருவருக்கும் வேறுபட்டதாக அமையும். இந்த கட்டுரையில் வரும் நபர் உலகிலேயே மோசமான பொதுக் கழிப்பறையை தேடிச் சென்றுள்ளார். ஆம் சரியாக தான் வாசித்தீர்கள்! இவரது தேடல் எங்கு தொடங்கி எங்கு முடிந்ததெனப் பார்க்கலாம். கர்ஹம் அஸ்கி என்ற பிரிட்டனை சேர்ந்த நபர் பயணங்களில் விருப்பம் கொண்டவர். உலகின் மாறுபட்ட கலாசாரங்களை கண்டறிவதிலும் சர்வதேச விவகாரங்களை மற்ற நாடுகளின் …
-
- 1 reply
- 405 views
-
-
மட்டக்களப்பில்... வைத்தியரின் வீட்டில்... 10 கோழி, 1 நாய் திருடிய... 5 மாணவர்கள் கைது ! மட்டக்களப்பு தமட்டக்களப்பில் வைத்தியரின் வீட்டில் கோழி திருடிய 5 மாணவர்கள் கைது !லைமையக பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்திலுள்ள வைத்தியர் ஒருவரின் வீட்டில் 10 கோழி நாய் என்பற்றை திருடிச்சென்ற உயர் தரத்தில் கல்வி கற்று வரும் 5 பாடசாலை மாணவர்களை கைது செய்து அவர்களது பெற்றோரை வரவழைத்து அவர்களை எச்சரித்து விடுவித்துள்ள சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வைத்தியரின் வீட்டில் சம்பவதினமான வெள்ளிக்கிழமை இரவு உள்நுழைந்த 5 மாணவர்கள் வீட்டின் பின்பகுதியில் அமைந்துள்ள கோழிக் கூட்டில் இருந்த 10 கோழிகளை திருடிக் கொண்டிருந்த போது அங்கு வந…
-
- 0 replies
- 193 views
-
-
யாழில், போதைக்கு அடிமையான... 17 வயது சிறுமி, கர்ப்பம் – மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை. யாழில் போதைக்கு அடிமையான சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ள நிலையில் மறுவாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 17 வயதான சிறுமி உயிர்க்கொல்லி போதைப்பொருளான ஹெரோயின் போதைப் பொருளுக்கு அடிமையான நிலையில் மீட்கப்பட்டார். இதனையடுத்து, அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போது, சிறுமி 08 மாத கர்ப்பமாகவுள்ளார் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தநிலையில் சிறுமி நீதிமன்ற உத்தரவின் பேரில் மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். அதேவேளை குறித்த சிறுமி போதைப்…
-
- 1 reply
- 403 views
- 1 follower
-
-
மகாராஷ்டிரா மாநிலம் அகமதுநகர் தாலுகாவின் ஸ்ரீகொண்டாவில் உள்ள விவசாய நிலத்தில், உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில், சிறுத்தை ஒன்று காணப்பட்டது. மிகவும் சோர்வாக இருந்த அந்த சிறுத்தையைக் கண்ட கிராம மக்கள் அதன் அருகே கூடினர்.
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
யாழில்... 11 வயது மகளை, போதைப் பொருள் விற்பனையில்.. ஈடுபடுத்திய தாய்! தாயாரினால் போதைப்பொருள் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட பதின்ம வயது மகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் மீட்கப்பட்டு நீதிமன்றின் உத்தரவில் சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரைச் சேர்ந்த 11 வயதுச் சிறுமியே நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இவ்வாறு மீட்கப்பட்டுள்ளார். சிறுமி 4 மாதங்களுக்கு மேலாக பாடசாலைக்கு செல்லாத நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர் தாயாரின் பாதுகாப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். சிறுமி யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது…
-
- 0 replies
- 162 views
-
-
நாய் கடிப்பது ஏன்? நாய்கள் மனிதர்களை கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பிபிசி இந்தி குழு ㅤ 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கமாக நடக்கும் பாதையை நாய்க் கடிக்கு பயந்து மாற்றிக்கொண்ட அனுபவம் உண்டா உங்களுக்கு? அப்படியெனில் இந்தக் கட்டுரை உங்களுக்குத்தான். நாய்க்கடிக்கான முதலுதவி குறித்தும் நாய்கள் ஏன் கடிக்கின்றன என்பது குறித்தும் எளிமையாகவும் விரிவாகவும் விளக்குகிறது இந்தக் கட்டுரை. சரி தொடங்கலாமா? கடந்த சில மாதங்களாக சிறுவர்கள், முதியவர்கள் எனப் பலரையும் நாய்கள் கடிக்கும் சம்பவங்கள் நடப்பது மக்களின் கவலையை அதிகரித்துள்ளது. நாய்க்கடியால…
-
- 2 replies
- 491 views
- 1 follower
-
-
பெண்ணின் வயிற்றிலிருந்து 55 பற்றறிகளை அகற்றிய அயர்லாந்து மருத்துவர்கள் By VISHNU 20 SEP, 2022 | 11:57 AM அயர்லாந்தைச் சேர்ந்த பெண்ணொருவரின் உடலிலிருந்து 55 பற்றரிகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். 66 வயதான இப்பெண் வயிற்று வலியினால் பாதிக்கப்பட்ட நிலையில், அயர்லாந்தின் தலைநகர் டப்ளினிலுள்ள செயின்ற் வின்சென்ட்ஸ் பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அப்பெண்ணை எக்ஸ்றே பரிசோதனைக்கு உட்படுத்தியபோது, அவரின் வயிற்றில் 55 பற்றறிகள் இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். ஒருவரின் வயிற்றில் காணப்பட்ட மிக அதிகமன பற்றரிகள…
-
- 0 replies
- 210 views
- 1 follower
-
-
சங்காவுக்கு சிலை அமைப்பதற்கான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை - யாழ். பல்கலைக்கழகம் 19 Sep, 2022 | 04:32 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவுக்கு சிலை நிறுவுவதற்காக யாரும் அனுமதி கோரவில்லை என்றும், அவ்வாறான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை என்றும் யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் வைக்கப்படுவதற்காக துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககாரவின் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக இன்றைய தினம் திங்கட்கிழமை சமூக ஊடகங்கள் உட்பட ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தன. இது குறித்து பல்கலைக்கழக விளையாட்டுத்துறைப் பணிப…
-
- 8 replies
- 854 views
-
-
அழும் குழந்தையை சமாதானப்படுத்துவது எப்படி? - ஆய்வு கூறும் சிறந்த வழி 19 செப்டெம்பர் 2022, 05:04 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES அழும் குழந்தையை சமாதானப்படுத்தும் சிறந்த வழியை விஞ்ஞானிகள்கண்டறிந்துள்ளனர். அவர்களின் அழுகை நிறுத்துவது பற்றியோ, தொட்டிலை ஆட்டுவதைப் பற்றியோ மறந்துவிடுங்கள். ஒரு சிறிய ஆய்வில் சில பெற்றோர்களை கொண்டு பல்வேறு வழிகளை ஆராய்ச்சியாளர்கள் முயற்சி செய்தனர். அப்போது, அந்த குழந்தையை படுக்கையில் தூங்க வைப்பதற்கு முன், ஐந்து நிமிடங்கள் எடுத்துக் கொண்டு நடப்பதும், அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு அவர்களை கைகளில் வைத்துக் கொண்டு உட்…
-
- 0 replies
- 344 views
- 1 follower
-
-
மகாராணியைக் காண உன் மனைவியை அழைத்து வராதே ! ஹாரிக்கு உத்தரவிட்ட சார்லஸ் பிரித்தானிய மகாராணி 2 ஆவது எலிசபெத் தனது 96 ஆவது வயதில் காலமானார். அவரது மறைவுக்கு பின் மகாராணியின் மூத்த மகன் சார்லஸ் அரச பொறுப்பை ஏற்றுள்ளார். இந் நிலையில் மகாராணி மரணப்படுக்கையில் இருந்த போது மகாராணியைக் காண உன் மனைவி மேகன் மார்கல் வரக்கூடாது என சார்லஸ் தன் மகன் ஹாரிக்கு உத்தரவிட்டதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. மகாராணி இறப்பதற்கு முன்பு, அவருடன் இருக்க வேண்டும் என நெருங்கிய உறவினர்கள் பலர் பெல்மோரல் மாளிகைக்கு விரைந்த நிலையில், ஹாரி மட்டும் கடைசியாகத்தான் அங்கு சென்றுள்ளார். அதேபோல, அங்கிருந்து முதல் ஆளாக அங்கிருந்து கிளம்பியச் சென்ற…
-
- 17 replies
- 1.3k views
-